சாப அலைகளின் இயக்கம்

சாப அலைகளின் இயக்கம்

 

நாம் உதாரணமாக, எல்லோருடனும் பழகுகின்றோம். மிகவும் நெருங்கி ஒருத்தருக்கு நீங்கள் உதவி செய்கின்றீர்கள். அவர்களுடைய குடும்பத்தில் எத்தனையோ சிக்கல்கள் வருகின்றது. என்னடா வாழ்க்கை…? என்று அவர்கள் தற்கொலை பண்ணுகின்றார்கள்.

அவர்கள் குடும்பத்தின் மேல் “இந்த குடும்பம் தொலைந்து போகும்…! உருப்படுமா…?” என்று இந்த சொல்களைச் சொல்லி அங்கே விட்டுவிடுகின்றார்கள். அதை இழுக்கிறது இல்லை. இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் சாப அலைகளாக மாறுகின்றது.

அந்தச் சாப அலைகளாக மாறும் பொழுது என்ன செய்கின்றது…?

1.இவர்கள் எப்படி எல்லாம் இந்த குடும்பம் “நாசமாகப் போக வேண்டும்” என்று சொன்னார்களோ
2.இந்த உணர்வெல்லாம் அந்த உடலுக்குள் சேர்த்து அந்தக் குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

சாப அலைகள் உள்ள குடும்பங்களைப் பாருங்கள்.. எப்படிச் சம்பாதித்தாலும் கடைசியில் எந்தக் காசையும் பாதுகாக்க முடியாது. எதை எடுத்தாலும் எங்கு பார்த்தாலும் முட்டுக்கட்டை…! இப்படிப் பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.

வீட்டில்… அவர்கள் குடும்பம் நாசமாக போக வேண்டும் இன்னொருத்தர் சாபங்களைச் சொல்லப்படும் பொழுது அங்கு நின்று வேடிக்கை பார்த்தாலும் அந்த உணர்வுகளை நாமும் நுகர்கின்றோம்.

இப்படிச் சொல்கிறார்கள் என்று எண்ணும் பொழுது
1.அதே சாப அலைகள் நமக்குள் அணுவாகி அவன் சொன்ன முறைப்படி நம் உடல்களில் தவறுகள் நிறையச் செய்து
2.நமக்கும் தொல்லைகள் அதிகமாக வருகின்றது, வேடிக்கையாகப் பார்த்தாலும் கூட.

ஒரு சாக்கடைத் தண்ணீரைத் தூக்கி வீசப்படும் பொழுது அந்த இடத்தில் ஒரு நல்லவர் வந்தால் நல்லவராக இருந்தாலும் அந்த நல்லவர் மீது படாமல் இருக்குமா…?

தூக்கி வீசும் போது கெட்டவன் மேலே ஊற்றுகின்றோம். பக்கத்திலே நல்லவன் இருந்தால் அவன் மேலேயும் நிச்சயம் விழுகத்தான் செய்யும். இவன் உடலிலும் நாற்றம் ஆகின்றது; அந்த நல்லவன் உடலிலும் நாற்றம் ஆகின்றது. நல்லவன் என்றா பார்க்கின்றது சாக்கடை…? இல்லை…!

சாக்கடை விழுந்தால் அதை நாம் துடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்…? இந்த நாற்றம் இருக்கத்தானே செய்யும். இதே மாதிரித் தான்
1.நாம் நல்லவனாக இருந்து வேடிக்கையாகப் பார்த்த ஒருத்தன் சாபமிட்டாலும்
2.நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள்… “சாபம் இடுகின்றான்…” என்று தெரியச் செய்கின்றது.
3.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழலத் தொடங்கி விடுகின்றது. நமது ரத்தங்களில் தேங்கி விடுகின்றது.
4.பின் அந்தச் சாப அலைகள் ஒவ்வொரு நிமிடமும் “அவன் கெட்டுப் போக வேண்டும்…” என்று உணர்ச்சிகளே நமக்குள் எண்ணங்களாகத் தோன்றுகின்றது.
5.யாராக இருந்தாலும் “நீ நாசமாகப் போ…!” என்று நாமும் சொல்வதற்கு ஆரம்பித்து விடுகின்றோம்.

தொலைந்து போகின்றவனே என்று சொல்லட்டும் நாசமாக போகட்டும் என்று இந்த உணர்வுகளைத் தான் நமக்குள் ஊட்டி அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலேயே நமக்குள் இந்த சாப அலைகள் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

தெரிகிறது நமக்கு…! கோபப்படுகின்றோம் சாபம் விடுகின்றோம் அவன் சாபமிட்டான் என்று தெரிகின்றது… நாமும் சாபம் விடுவோம்.

ஏன் ஐயா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னால் உனக்கு என்னையா தெரியும்…? அவன் செய்வது என்று அப்படிச் சொல்கிறவர்களுடனும் வம்புக்குத் தான் போவோம்.

ஏனென்றால் அந்த உணர்வு தானே நம்மை இயக்குகின்றது என்று தெரிகின்றோம். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்வது…? என்கிற வகையில் தான் இப்போது யாம் சொல்ல வருவது.

இப்படி நமது வாழ்க்கையில் அந்தச் சாப அலைகள் ஆனாலும் நமக்குள் அந்த உணர்வுகள் நம்முடைய வாழ்க்கையேல் சின்னாபின்னமாக்கும். தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடியவில்லை.

கல்வி எல்லாம் கற்று உலகத்தில் விஞ்ஞானத்தின் தன்மை கூட அவர்கள் பெற்றிருக்கலாம். புதுப் புதுப் பொருள்களையும் தேடி இருக்கலாம். செல்வத்தைத் தேடக்கூடிய அந்த சக்தியும் இருக்கலாம்.

ஆனால்
1.இந்த மாதிரி சாப அலைகள் விடுபவர்களை நாம் பார்த்தோம் என்றால்
2,நல்ல குணம் கொண்டு பார்த்தபின் அந்த சாப அலைகளின் உணர்ச்சிகள் நல்ல அணுக்களில் சேர்ந்த பின்
3.இதுவும் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றது.

நாம் தேடிய செல்வத்தையும் பார்க்க முடியவில்லை. நம்மை அறியாமல் “யாரோ என்னவோ செய்துவிட்டார்கள்… நாம் வளர்ந்து வருவதில் பொறாமையில் ஏதோ என்னமோ பண்ணி விட்டார்கள் என்றுதான் தூண்டும்.
1.இந்த உணர்வுகள் அந்த சாப அலைகளுக்குச் ஜீவன் ஊட்டச் செய்து
2.அந்தச் சாபத்தையும் நமக்குள் நிறைவேற்றியே கொடுக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மிளகாய் நெடி எந்தப் பொருளில் பட்டாலும் அந்த உணர்ச்சியை ஊட்டத்தான் செய்யும். ஒரு விஷம் எதிலே பட்டாலும் அந்த விஷத்தின் தன்மையைத் தான் அதை மாற்றும்.

அதே போல நம் உடலிலேயே இத்தகைய உணர்வுகள் மாறும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

சாங்கியத்தை விட்டுவிடுங்கள்… சாஸ்திரங்களைக் கடைப்பிடியுங்கள்

சாங்கியத்தை விட்டுவிடுங்கள்… சாஸ்திரங்களைக் கடைப்பிடியுங்கள்

 

கூட்டுத் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வலுப்பெற்று நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

நம் எண்ணம் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த உணர்வுகள் நமக்குள் உண்டு.
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா எடையற்றது… அவரின் உணர்வு நமக்குள் கடினம் கொண்டது.
2.எந்திரத்தின் மூலமாக விண்ணிலே ராக்கெட்டை வீசி அந்த உணர்வின் அலைகளால் விஞ்ஞானிகள் எப்படிச் செயல்படுத்துகின்றார்களோ
3.இதைப் போல புவியின் ஈர்ப்புக்குள் இருக்கும் அந்த உயிரான்மாக்களை புவியின் ஈர்ப்பைக் கடந்த அந்த ஞானிகள் உணர்வை நமக்குள் வலு சேர்த்து
4.அதனின் துணை கொண்டு அந்த உயிரான்மாக்களை விண் செலுத்துவது தான் பௌர்ணமி நாள்,
5.எப்படிப் பூரண நிலவாக அது ஆனதோ அதைப் போன்று… ஆனால் தேய்பிறை இல்லாது என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெறச் செய்யும் நாள் இது.

ஆகவே அனைவரும் இதைக் கடைப்பிடித்து எண்ணத்தால் கவர்ந்த எமது உபதேசத்தின் உணர்வுகள் கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதி பெற்று அதனின் துணைகொண்டு பெற நாம் ஏங்கித் தியானிப்போம்.

மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறுவோம் இதனின் துணை கொண்டு முன்னோர்களின் உயிரான்மாக்களை நம்மைக் காத்திட நம் குலதெய்வங்களை அவர்கள் பெற்ற உணர்வின் தன்மையை விண்ணிலே வீசி சப்தரிஷி மண்டலங்களுடன் கலக்கச் செய்வோம்.
1.நஞ்சு கொண்ட உணர்வை அங்கே கரைத்து விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை நிலைக்கச் செய்து
2.சப்தரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தின் உணர்வுகளை உணவாக்கி அங்கே சுழலச் செய்யும்போது
3.அந்தக் குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் பதிந்ததை நினைவு கொண்டு வந்து
4.சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் ஏங்கிப் பெறுகின்றோமோ
5.அதை எளிதில் நாம் அனைவரும் பெற முடியும்.

அந்தத் தகுதி ஏற்படுத்தும் நிலை தான் இந்த உபதேசம். கூட்டுத் தியானத்தின் அமைப்பால் சப்தரிஷிகள் அருள் சக்திகளை ஏங்கிப் பெற்று தியானித்து அதைச் செயல்படுத்துவோம்.

அவரவர்கள் தாய் தந்தையரை எண்ணி அம்மா அப்பா அருளால் சப்தரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம். அதன் துணை கொண்டு முன்னோர்களை நாம் விண் செலுத்துவோம்.

1.சாமி சொல்லிக் கொண்டே போகின்றார் எனக்கு அர்த்தமாகவில்லையே என்று விட்டுவிடாதீர்கள்.
2.யாம் படிக்கவில்லை… இருந்தாலும் குருநாதர் சொன்னதைப் பதிய வைத்திருக்கின்றேன்.

படித்த நூல்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் இது வித்தியாசமாக இருக்கிறது என்ற இந்த எண்ணத்தை ஊடே விட்டு கொண்டு இருந்தால் போய்க்கொண்டே இருக்கும்… எமது உபதேசத்தைக் கேட்டறிந்தும் பயனில்லை.

சாஸ்திரங்களில் உண்மை உண்டு. ஆனால் சாங்கிய நாட்டத்தில் சென்றவர்கள் நாம் சாங்கியத்தின் தொடரில் வரப்படும் பொழுது சாஸ்திரங்களை மறந்து விட்டோம். சாஸ்திர விதிகளைத் தவிர்த்து விட்டோம்.

சாஸ்திரத்தில் ஞானிகள் காட்டிய அந்த விதிகளைக் கடைபிடித்து இருந்தால் இன்று நமக்குள் மதம் இல்லை இனம் இல்லை பேதம் இல்லை.

1.என்றும் ஒளி ஒளியுடன் கூடும் இருள் இருளுடன் கூடும்
2.இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு இருளுடன் ஒன்றி இருளின் தன்மையைக் காட்டும்.
3.ஆனால் ஒளியின் தன்மை தனக்குள் வரும் பொழுது இருளைப் போக்கிக் காட்டும்.
4.மெய் ஞானிகள் என்றுமே இருளைப் போக்கியவர்கள்.
5.நாம் இருளைப் போக்கும் அந்த ஞானிகள் உணர்வைக் கூட்டும் பொழுது இருள்கள் நீங்கும்.

நமக்குள் புகுந்த இருளைப் போக்கி பொருள் காணும் உணர்வுகள் விளையும். ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம். அருள் ஞானத்தைப் பெறுவோம் இருளை போக்குவோம்.

1.நம்மை வளர்த்த மூதாதையர்களின் உணர்வுகளில் சேர்ந்த இருளைக் கருக்குவோம்.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அவர்களை நிலைக்கச் செய்வோம்.
3.அதற்காக வேண்டி நாம் அனுதினமும் தியானிப்போம்… பிரார்த்திப்போம்.

நாம் வெளிவிட வேண்டிய மூச்சலைகளும் அதனின் ஆற்றல்களும்

நாம் வெளிவிட வேண்டிய மூச்சலைகளும் அதனின் ஆற்றல்களும்

 

விவசாயம் செய்வோர் உங்கள் பயிரினங்கள் வளர்ச்சியில் வாடியிருந்தால் சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் பயிரினங்களில் படர்ந்து அங்கே தீமையான உயிரணுக்கள் நீங்கி சப்தரிஷிகளின் அருள் சக்தியால் உருவாகும் அணுக்கள் விளைந்து அதனின் சத்தாக விளைந்து தாவர இனங்கள் செழித்து ஓங்க வேண்டும் என்று உங்கள் உணர்வினைப் பாய்ச்சுங்கள்.

ஏனென்றால்
1.இன்று மனிதன் இடும் மூச்சலைகளும்
2.உடலில் இருந்து வரக்கூடிய இந்த நினைவும்
3.உடலில் இருந்து வெளிவரும் கழிவும் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால்
4.அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் கொசுவாக… மூட்டைப் பூச்சியாக… வண்டுகளாக… தேள்களாக… புழுக்களாக… கிருமிகளாக உருவாகின்றது.

இதைப் போன்று நாம் எதை உணவாக உட்கொண்டோமோ அந்த உணவால் எடுத்துக் கொண்ட மணமும் உணர்வின் எண்ணமும் நமக்குள் விளையப்படும் போது இந்த உடலுக்குள் விளைந்த உணர்வின் சோர்வும் நாம் பயிரிடும் பயிர்களைப் பார்க்கப்படும் பொழுது
1.நம்மில் விளைந்த எண்ணமும் சோர்வடைந்த உணர்வும்
2.நம் உடலில் இருந்து எண்ணிய அந்த மணமும்
3.அந்தத் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது கிருமிகளாக உருவாகி அந்தப் பயிர் இனத்தையே அழித்து விடுகின்றது.

அதை மாற்றியமைக்க… தியானத்தின் மூலம் சப்தரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வலுவாக்கி சப்தரிஷிகளின் அருள் சக்தி பயிரினங்களிலே படர வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நல்ல அணுக்கள் உருவாக வேண்டும்; அதனின் மலத்தின் சக்தி இந்தத் தாவர இனத்திற்கு உரமாக வேண்டும் ;தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும் என்று உங்கள் நினைவினைப் பாய்ச்ச வேண்டும்.
1.விவசாய நிலங்களில் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லி என்று மருந்துகளை தூவுவதற்குப் பதில்
2.நீங்கள் எடுக்கும் அந்தச் சப்தரிஷிகளின் உணர்வின் தன்மையைத் தூவுங்கள்.

மேலும் சப்தரிஷிகளின் அருள் சக்தி மேக மண்டலங்களில் கூடி மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து இந்த ஊரும் உலகமும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தினை உங்கள் நினைவினை மேகக் கூட்டங்களில் செலுத்துங்கள்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த உணர்வு மேகங்களில் கலந்து அந்த நீர் துளியாகப் பரவும் போது அதன் வழி கொண்டு தாவர இனங்களில் பரவி தீமைகளை அகற்றும் சக்திகள் பெறும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.ஆறாவது அறிவால் பிறந்த நாம் கடவுளின் அவதாரத்தில் முழுமை பெற்றவன்.
2.மிருக நிலைகளில் இருந்து என்று மனிதனாகப் பிறந்தோமோ இவை அனைத்தும் முழு முதற்கடவுள் என்று சொல்வார்கள்.

அதனால் தான் விநாயகரின் சிரசில் மிருகத்தின் தலையைப் போட்டு மனிதனின் உடலைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். முழு முதற் கடவுளாகப் பெறும் நாம் எதனையுமே சிருஷ்டிக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த விண்ணின் ஆற்றலைப் பருகி ஒளியின் சரீரமாக நம்மில் வளர்த்திட முடியும்.

ஏனென்றால் தன்னைக் காத்திடும் உணர்வுகள் கொண்டு உயிர் நம்மை மனிதனாக உருவாக்கியது. அதே காத்திடும் உணர்வின் எண்ணம் கொண்டு… தீமையை அகற்றிய அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் புகுத்தி… தீமையற்ற உலகமான உடலை அமைத்து உயிருடன் ஒன்றி… என்றும் நிலையான ஒளிச் சரீரமாக நாம் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையில் இன்று வாழ்ந்திட வேண்டும் .

காரணம்…
1.இன்றும் போர்க்காலங்களில் மனிதனின் விளைந்த பழி தீர்க்கும் உணர்வுகள் இந்தப் பூமியிலே படர்ந்து
2.இதனின் நினைவலைகள் நமக்குள் பரவிப் பரவி நம்மை அறியாது நல்ல குணங்களைச் செயலற்றதாக இன்று இயக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்
3.நாம் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம்மை அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற வேண்டும் என்றும் ,
4.நாம் பார்ப்போர் அனைவருக்கும் சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
5.அதன் மூலம் பகைமைகளை நீக்கி பகைமையற்ற உணர்வை நாம் சிருஷ்டிக்க முடியும்…
6.நம் உடலிலும் அந்த நிலையை உருவாக்க முடியும்.

இதைப்போல நாம் பார்ப்போர் நிலைகளிலும், இதைக் கேட்டுணர்ந்தோர் நிலைகளிலும் தீமையை அகற்றும் சக்தியை பெறச் செய்ய முடியும் என்ற இந்த தன்னம்பிக்கையில் வாழ்ந்திட வேண்டும்” என்று பிரார்த்திக்கின்றேன்.

நாம் அனைவரும் கூட்டமைப்பாகத் தியானித்த இந்த சக்தி தியானத்தில் உள்ளோர் அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்குவோம்.

கூட்டுத் தியானத்தை வழி நடத்துவோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

கூட்டுத் தியானத்தை வழி நடத்துவோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்திச் சப்தரிஷி மண்டலத்திலே இணையச் செய்யும் பொழுது உடல் பெறும் உணர்வுகள் கரைந்து உயிருடன் ஒன்றிய அறிவின் தன்மை நிலைத்து என்றும் அழியா சரீரம் என்ற நிலையை பெறச் செய்வதே மகரிஷிகள் காட்டி அருள் வழி.

அதற்காக… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கூறிய வழிப்படி இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் உணர்ச்சிகளை உந்தச் செய்து மகரிஷிகள் சக்திகளைப் பெற உங்களுக்கு அந்தத் தகுதியை ஏற்படுத்துகிறோம்.

1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் வணங்கி
2.அந்த விநாயகர் தத்துவப் பிரகாரம் வினையைச் சேர்த்திருந்தால்
3.முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்துவது இக்காலத்தில் எளிதாக இருக்கும்.
4.ஆனால் அரசர்களால் பல போர் முறைகள் கொண்டு இந்தத் தத்துவங்கள் மறைந்தே விட்டது;.. எவருடைய குறையும் இல்லை.

அப்படி மறைந்து வரும் நிலைகளில் இருந்து மகரிஷிகள் காட்டிய உணர்வின் அருள் வழியில் நாம் நமது மூதாதையர்களை விண் செலுத்தி அதனின் துணை கொண்டு அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று நமது வாழ்க்கையில் அறியாது வந்த தீவினைகளை அகற்றும் முறை தான் இந்த வழி.

சப்தரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்றுத் தீமைகளை அகற்றி அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களில் இருந்து விடுபட்டு இன்னலற்ற உலகான சப்தரிஷி மண்டலத்தை நாம் அடைவதே நமது கடைசி எல்லை. மனிதன் முழுமை அடைவது தான் கல்கி.

கூட்டுத் தியானத்தின் மூலம் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தால் நரசிம்மா. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையின் உணர்வுகளை அழித்துத் தீமையற்ற உணர்வின் தன்மையை நமக்குள் விளையச் செய்வது தான் நரசிம்ம அவதாரம் என்பது.

ஞானிகள் தெளிவாக எடுத்துரைத்த இந்த முறையை நாம் வாழ்க்கையில் கடைப்பிடித்தோம் என்றால்
1.இந்த உடலே நமக்கு சொந்தமற்ற நிலையில் இருந்தாலும்
2.இந்த உடலுக்குள் அறிவின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி என்றும் அழியா சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

இது தான் அழியாப் பெருவாழ்வு… அந்த முழுமை நிலை அடைவது தான் நமது கடைசி எல்லை. இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் பெற்றாலும் இதுதான்

கோடிச்சாமி என்பவரிடம் சென்று அவரிடம் வேண்டி… தனக்கு இந்த உடல் சுகத்திற்குத் தான் வேண்டினார்கள். ஆக இந்த உடல் வாழ்க்கையின் இச்சைகளைத் தான் அங்கேயும் சென்று வளர்க்க முடிந்தது.

கோடிச்சாமி என்பவரும் இதற்கு முன் அரசனின் நிலைகளில் ஒரு ஆட்சி புரிந்த மகன் தான் அவர். பல மந்திர ஒலிகள் பெற்றாலும்… அதனின் நிலை அடையாது இன்னொரு உடலுக்குள் புகுந்து இந்த உடலில் நின்று அதைப் பெற வேண்டும் என்று ஏகாந்த நிலைகள் கொண்டு எவரிடமும் பேசாது “மௌனமாக இருந்தார்…”

1.கோடி கோடி என்று பேசிய நிலைகள் கொண்டு விண்ணிலிருக்கும் எண்ணிலடங்காத…
2.கோடிக்கணக்கான அந்த உணர்வின் அலைகளை நான் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அந்த தவக்கோலத்தில் இருந்தார்.

இருப்பினும் கோடிச்சாமியிடம் நாம் சென்று எனக்கு இந்த உடல் இச்சைக்கு கிடைக்குமா…? பொருள் கிடைக்குமா…? என்று தான் ஏங்கினார்கள்.

அந்த அருள் ஞானி தான் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற தவத்தின் நிலைகளில் பெற்றாலும் முழுமையின் நிலைகள் அறியாது இன்னொரு உடலுக்குள் புகுந்து அதனின் நிலைகளில் மௌனம் சாதித்து இந்த உடலை விட்டு அகன்றாலும் இன்னொரு உடலுக்குள் இதே நிலைகளை தான் செய்யும்.

அத்தகைய ஆன்மாக்கள் பிறருக்குத் துன்பம் இல்லாத நிலைகள் கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட உண்மையின் தன்மை நல் பாதையைப் பெற வேண்டும் என்றாலும் காலத்தால் அவர் அறிய முடியாத நிலைகள் இருந்த்து.

1.பிறருக்குத் தீங்கில்லாத நிலை கொண்டு செயல்பட்ட இந்த உயிரான்மாவிற்கு…
2.அது நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்ற பெருநிலை அடையட்டும் என்ற இந்த நிலையை நாம் அனைவரும் எண்ணலாம்.

யார் யார் எல்லாம் அவரைப் போய்ச் சென்று பார்த்தார்களோ அவர்களெல்லாம் இந்த உணர்வை வளர்த்தால் அவர் விண் சென்றால் நாமும் அந்த நல்ல நிலைகளை அடைய முடியும்.

அப்படி அல்லாது அவர் மகான் என்ற நிலைகள் அவரிடம் சென்று நம் இச்சையின் நிலைகளை வளர்த்துக் கொண்டால்… அது தான் அங்கேயும் வளருமே தவிர அந்த அருள் ஞானி விண் செல்லவும் முடியாது. அதை நாம் பெறவும் முடியாது.

ஆகவே உடலை விட்டுப் பிரிந்து சென்ற இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தால் அதனின் துணை கொண்டு நாமும் அந்த நல்ல நிலைகள் அடைய இது உதவும்.

இதைப் போன்று
1.எவர் எவரேனும் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்
2.கூட்டுத் தியானத்தில் அமைந்துள்ளவர்கள் அவர்களை விண் செலுத்தினால்தான்
3.விண்ணின் ஆற்றலை நமக்குள் பெருக்கும் நிலை வருகின்றது.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை… எந்த நிலையிலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா பிரிய முடியும். அப்படிப் பிரிந்தாலும் அந்த சப்தரிஷிகளின் உணர்வின் சக்தியைப் பற்றுடன் பற்றி விட்டால் நாம் அங்கே சென்றடையலாம்.

ஆனால் புவியின் பற்றை வளர்த்துக் கொண்டால் இந்தப் பற்றின் துணை கொண்டு இன்னொரு மனிதனுக்குள் சென்றாலும் மனிதனாகப் பிறக்காது. இந்த உடலில் விளைவித்த உணர்வின் தன்மை கொண்டு தான் இன்னொரு உடலில் புகுந்து தீமையைத் தான் மீண்டும் விளைவிக்கும்.
1..மீண்டும் அந்த உடலையும் மாய்த்து விட்டு
2.மீண்டும் மனித உடலே பெற முடியாத நிலையைத் தான் உருவாக்கும்.

ஜமீனின் நிலைகளில் இருந்து வந்த மகா கோடிச்சாமி என்பவர் அவரின் உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு கூடு தான் புக முடியும். ஆனால் அவரை விண் செலுத்தி விட்டால் அந்த விண்ணின் ஆற்றல் வெளிவரும் போது அவரின் துணையால் விண்ணின் ஆற்றலை நாம் பருக முடியும்.

ஆகவே இனி நமது எல்லை எதுவாக இருக்க வேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள்.

கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டோர் அனைவரும் இந்த வாழ்க்கையில் எந்த நிலையில் எவரிடத்திலும் எந்தச் சூழ்நிலையில் நாம் கற்றுக் கொண்டாலும் பார்த்து உணர்ந்தாலும் கஷ்டமோ நஷ்டமோ, வேதனையோ, துயரமோ இதையெல்லாம் கேட்டு அறிந்தாலும் அதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இப்போது கொடுக்கும் இந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணி… சப்தரிஷிகளின் அருள் சக்தியை எண்ணி உங்கள் உடலுக்குள் அதை உட்செலுத்துங்கள்.

இந்த வாழ்க்கையில் கேட்டு அறிந்த தீமைகளைத் தூய்மைப்படுத்திவிட்டு இதைப் பற்றற்றதாக ஆக்கி அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பற்றுடன் பற்றி… என்றுமே அந்தச் சப்தரிஷிகள் வாழ்ந்திடும் அருள் வட்டத்தில் நாம் இணைவோம்.

இந்த வாழ்க்கையில் அந்த அழியாச் செல்வத்தை நாம் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் வாழ்வோம்.

இந்த உடல் என்றும் நமக்கு சதம் இல்லை இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா சென்று விட்டால் இந்த உடலிலே விளைய வைத்த உணர்வு தான் அடுத்த உடலை உருவாக்குகின்றது.

1.அடுத்து இன்னொரு உடல் அற்ற நிலைகளில் இந்த உடலிலிருந்தே ஒளியின் சரீரமாக நிலை பெற்றோம் என்றால்
2.பிறவா நிலை என்ற பெருவீடு பெருநிலை அடைந்து என்றும் துன்பம் இல்லாத நிலையாக
3.தூங்காமல் தூங்குவது என்ற பேரானந்தப் பெருநிலை அடைய முடியும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நிலைகள் இது. அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் சப்தரிஷிகளின் அருள் சக்தியை இந்த உடலிலே உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு என்றும் அழியா சரீரமாக நாம் பெறும் நிலை தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.

அவர் வழியில் அருள் ஞானம் பெறுவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

ஒவ்வொரு நிமிடத்திலும் உங்கள் குடும்பத்தில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலை வரினும்…
1.சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்.
2.எங்கள் குடும்பத்தில் சிரமங்கள் நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்;
3.எங்கள் குடும்பத்தில் உடல் நலம் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்;
4.எங்கள் தொழில்கள் ஓங்கி வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஒரு சிறு விஷயத்தைக் கூடத் தாங்கக்கூடிய மன வலிமை இன்று நம்மிடம் கிடையாது… ஏன்…?

ஒரு சிறு விஷயத்தைக் கூடத் தாங்கக்கூடிய மன வலிமை இன்று நம்மிடம் கிடையாது… ஏன்…?

 

இன்று எங்கு சென்றாலும்… ஒரு குறையைச் சொன்னோம் என்றால் அடுத்தாற்போல் ஆயிரம் குறைகளைச் சொல்லி அவன் அப்படித்தான்… இவன் இப்படித்தான்… என்று சொல்லிச் சொல்லி வேதனைகளை எல்லாம் ஜாஸ்தி கூட்டிக் கொள்கிறோம்.

நமக்குள் இது அதிகமான பின்
1.அன்றைக்கு இருக்கிற வேலையையும் கெடுத்து விட்டு உட்கார்ந்து கொண்டே இருப்போம்.
2.இந்தக் கதையைப் பேசிய நிலையிலேயே அன்றைக்கு முழுவதும் பொழுது போய்விடும்.

அதற்குப் பின் என்ன ஆகிறது…?

நம் குழந்தைகள் சில்லென்று அழுதால் இரண்டு உதை உதைப்போம். யாராவது பெரியவர்கள் கூப்பிட்டால் “இதோ வரேனே…” என்று சொல்வோம்.. உடனே என்ன…? நான் கூப்பிடுகிறேன் இப்படிச் சொல்கின்றாய்…! என்று வீட்டில் எல்லாம் வம்பு வந்துவிடும்.

அந்த சொல்லுக்குள் என்ன செய்யும்…? இந்தத் தொனிகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் அல்ல. ஆனால் இந்த உணர்வுகள் அதைச் செய்கின்றது. இதைப் போன்ற நிலைகள் வருவதைப் பற்றி நம்மை அறியாமல் இருக்கின்றோம்.

காரணம்…
1.நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்தில் நஞ்சு
2.நாம் தண்ணீர் குடிப்பதிலும் நஞ்சு
3.நாம் சுவாசிக்கின்ற காந்த அலைகளில் நஞ்சு
4.மழை பெய்தாலும் நஞ்சு.

இன்றைக்கு நாம் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் போட்டுப் பூச்சிகளைக் கொன்று நல்ல உணவுப் பொருளை விளைய வைத்துக் கொண்டு வரலாம் என்று நாம் நினைக்கின்றோம்.

பூச்சிகள் சாகின்றது. ஆனால் அந்த மருந்தின் விஷமோ அதற்குள் படுகின்றது அது சாகும்போது அந்த விஷம் பூச்சிகள் உடலில் பட்டு அதன் சுவாசத்தில் பட்டு பூச்சி செத்தாலும் இந்த நஞ்சு அந்த உயிரில் போய்ச் சேர்ந்து விடுகின்றது.

அடுத்தாற் போல் என்ன செய்கின்றது….?

அதே இலையின் சத்தை, அந்த உயிர் எடுத்து அதிலிருந்தே மீண்டும் அது உயிர் பெறுகின்றது. வேறு எங்கும் உயிர் பெறுவது இல்லை.
1.எந்தச் சத்தோடு கலந்து விஷத்தின் தன்மை இணைந்த நிலையில் இந்த உயிரான காந்தம் அந்த உடலின் தன்மை பெற்றதோ
2.இந்த விஷத்தின் தன்மையைப் பெற்ற பிற்பாடு அடுத்தாற்படி வேறு எந்த விஷத்தைப் போட்டாலும்… அதை ஒன்றும் பாதிப்பது இல்லை.
3.“நீ வா தம்பி, நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று சொல்கின்றது.

புகையிலையோ மிகவும் காரமானது. அதற்குக் கடும் நஞ்சைப் போட்டாலும் கூட அது சாவது இல்லை. ஏனென்றால் பூச்சிகள் புழுக்கள் எல்லாமே பரிணாம வளர்ச்சியில் வருவது.

ஆனால் அதே சமயத்தில் மனிதனோ வளர்ச்சி பெற்றவன். நமக்குள் உயர்ந்த குணங்கள் உண்டு.

உதாரணமாக பால் சத்து ஊட்டக்கூடியது. அதிலே விஷத்தைப் போட்டுக் குடித்தால் என்ன செய்கின்றது…? நம்மைக் கொல்கின்றது. இதைப் போல நம் நல்ல குணத்தில் வேதனையை நாம் அடிக்கடி எடுக்கப்படும் பொழுது அந்த நல்ல குணத்தை முழுவதும் அது கொன்று விடுகின்றது. விஷத்திற்குள் நம்முடைய அந்த நல்ல குணம் சிக்கிக் கொண்டால் அப்படி ஆகிவிடுறது.

இன்று நாம் சாப்பிடுகின்ற ஆகாரம் முழுவதுமே நஞ்சு கலந்த்தாக இருப்பதால்… நல்ல குணத்திற்குள் நல்லதை நீங்கள் எண்ணினாலும் கூட அந்தக் கடுகடுப்பாகத்தான் பதில் வருகின்றது. கடுகடுப்பாகத்தான் நாம் இருக்கின்றோம்.

ஆனால் அந்தக் கடுகடுப்பான வேதனையை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலில் உள்ள கிட்னி நம்முடைய ரத்தத்தில் வரக்கூடிய இந்த விஷங்களைச் சரியான முறையில் வடிகட்ட முடிவதில்லை.

சரியான நிலைகளில் வடிகட்ட முடியவில்லை என்றால் ரத்தத்துடன் சேர்த்துக் கை, கால் குடைச்சல், போன்ற விஷ நிலைகள் ஊடுருவுகின்றது.

இது அதிகமாகப் போனது என்றால் உப்பு சத்தைப் பிரிக்க முடியாமல் போய்விடுகின்றது. அதே போல் சர்க்கரையைப் பிரிக்க முடியாமல் போனது என்றால் சர்க்கரைச் சத்து அதிகமாகி விடுகின்றது… உப்புச் சத்து அதிகமாகி விடுகின்றது.

இப்படி ஆகும் நிலையில்… சர்க்கரை மற்றொன்றுடன் கலந்து அது ருசி கொடுக்கும். மற்றதோடு சேர்ந்து அது இனிமை கொடுக்கவில்லை என்று சொன்னால் தனித்து அதிகமாகும் பொழுது அதனுடைய சுவை என்ன செய்கின்றது…?

1.நாம் வாயில் சர்க்கரையை அதிகமாகப் போட்டால் உமட்டல்…!
2.உடலில் சர்க்கரை அதிகமாகி விட்டால் மயக்கம் நிச்சயமாக வரும்.

சர்க்கரையை நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டுப் பாருங்கள். உமட்டல் ஓ என்று வாந்தி எடுக்கின்ற மாதிரி வரும். இனிப்பு தான்… ஆனால் அதிகமானால் மயக்க நிலை வரும்.

ஏனென்றால் இந்தச் சத்து சேர்த்தால் சுவை கொடுக்கும்.. வலு கொடுக்கின்றது. ஆனால் அது இல்லை என்கிறபோது இப்படி மாறி விடுகின்றது.

ஆனால் நம் உறுப்புகளிலேயே நாம் சாப்பிடக்கூடியதை வைத்து உயிர் உணர்வை ஊட்டினாலும்… ரத்தத்திற்குள் ஆகாரத்துடன் கலந்து பல நிலைகள் ஆனாலும் ரத்தத்திற்குள் கலந்த உடனே இந்த ரத்தம் என்ன செய்கின்றது…? வடிகட்டி அடுத்த திசுக்களுக்குள் மாற்றுவதற்கு வடிகட்டி கொண்டே வரும்.

நாம் ருசியாகச் சாப்பிடக்கூடிய ஆகாரம்… நாம் சுவாசிக்கக்கூடிய வாசனைக்குள் இருக்கக்கூடிய சுவாசிக்கக்கூடிய விஷத்தை எல்லாம் மலமாக மாற்றி விட்டு உடலை நல்லதாக மாற்றுகின்றது.

உடல் முழுவதும் இப்படி நல்லதாக இருக்கும் பொழுது..
1.பூச்சிக் கொல்லி மருந்தால் வரும் அந்த நஞ்சை நாம் நல்லதாக மாற்ற முடியவில்லை என்கிற பொழுது
2.இந்தக் கிட்னி சரியான முறையில் வேலை செய்யாது.
3.நஞ்சை வடிகட்ட முடியாதபடி மற்ற நல்ல அணுக்களுடன் சேர்த்த உடனே உடலில் அது சீக்காக மாறுகின்றது…
4.நஞ்சு எல்லாவற்றிலும் ஊடுருவி விடுகின்றது.

ஆடு மாடு எல்லாம் என்ன செய்கின்றது…? விஷத்தைச் சாப்பிடுகின்றது. அதைத் தன் உடலாக ஏற்றுக் கொள்கின்றது. உடலுக்குள் வலுவாக இருக்கின்றது. ஆனால் சாணத்தை நல்லதாகப் போடுகின்றது. நல்லதை முழுவதும் கழித்து விடுகின்றது.

ஆனால் மனிதர்கள் நாம் கெட்டதை முழுவதும் கழித்துவிட்டு நல்லதாக்கவும் அதனால் நல்ல எண்ணங்களும் நமக்குள் வருகின்றது.

இருந்தாலும் நம்முடைய கிட்னி சரியான முறையில் வேலை செய்யவில்லை என்றால் நாம் மூச்சில் எடுக்கக்கூடிய நிலைகள் எல்லாம் விஷமாக மாறிவிடுகின்றது.

இன்றைக்கு இயற்கையில் எடுத்துக் கொண்ட விஷங்கள் முழுவதும் மாறி விடுகின்றது. நல்ல எண்ணங்கள் கொண்டு நாம் பேச முடியாமல் போய்விடுகின்றது.

1.இனம் புரியாமல் எதற்கு…? ஏன்…? என்று என்கிற வகையில் மனம் சோர்வடைந்து
2.இன்றைக்குப் பெரும்பகுதி என்ன வாழ்க்கை…? என்கிற வெறுப்பே வருகின்றது.

பெரும்பகுதியான வீடுகளில் எடுத்துக் கொண்டால் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி “ஒரு சிறு விஷயத்தைத் தாங்கக் கூடிய சக்தி கிடையாது…”

ஒரு தேள் கொட்டி விட்டால் நாம் எப்படித் துடிக்கின்றோமோ இதைப் போல இந்த வேதனையான எண்ணங்கள் சிறிதளவு அந்த உயிரிலே பட்டவுடன் தான் சிந்திக்கும் செயலை இழந்துவிட்டு மன விரக்தி அடைந்து தன்னையே மாய்த்துக் கொள்ளக்கூடிய உணர்வைத் தூண்டக்கூடிய நிலைகள் இந்தக் காற்றிலே அதிகமாகி விட்டது.

வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டுமென்று இருந்தாலும் கூட அந்த விரக்தியின் தன்மை அடைந்தால்… சில முக்கியமான நேரத்தில் ஒரு பொருளை நாம் உற்பத்தி செய்கின்றோம் என்றால் இந்த உற்பத்தியைச் சரியான முறையில் செயல்படுத்த முடியாத நிலைகளில் நம் எண்ணங்கள் வந்து அதை அழித்து விடுகின்றது.

அதே மாதிரி நம்முடைய உடல் மோசமாக இருக்கின்றது… அதற்காக மருந்தைச் சாப்பிட்டாலும் கூட அடுத்த கணம் ஒரு வேதனையான நிலைகள் வந்தது என்றால்
1.அந்த மருந்தையே அது நஞ்சாக மாற்றி நமக்குள் எதிர் நிலையான நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
2.அந்த நோயையும் தீர்க்க முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகள் வந்தது என்றால் அதை மாற்றி அமைக்கத் தான் அக்காலங்களில் ஞானிகள் ஆலயங்களை உருவாக்கிச் சிலையாக வடித்தார்கள். கோவிலில் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று காட்டினார்கள்.

அவர்கள் காட்டிய நிலைகளில் தெய்வத்தை வணங்கினால் அவன் பெற்ற சக்தியை நாமும் பெற்று “எத்தகைய தீமையிலிருந்தும் விடுபட முடியும்…”

மெய் ஞானிகள் சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உபதேசமே கொடுக்கின்றோம்

மெய் ஞானிகள் சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உபதேசமே கொடுக்கின்றோம்

 

வெளியிலே மற்றவரிடம் பழகி நாம் என்ன செய்கின்றோம்…?. ஒருவருக்கு இரக்கப்பட்டு உதவி செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்ட பின் அந்தக் கஷ்டமான நேரத்தில் நாம் பணத்தை எடுத்து அவருக்குக் கொடுத்து விடுகின்றோம்.

ஆனால்
1.ஐயோ பாவமே…! ஏதோ இருக்கட்டும்…! என்று அப்பொழுது பணத்தைக் கொடுத்தாலும்
2.அவர்கள் கஷ்டப்படுகின்ற அந்த வேதனையான நிலைகள் எல்லாம் என் உடலிலே வந்து விடுகின்றது.
3.அப்பொழுது நான் கொடுத்த உடனே. என்னை அறியாமலேயே உடலில் சோர்வடைகின்றது
4.(பிறர் கஷ்டத்தைக் கேட்டால் நமக்கு நிச்சயம் சோர்வு வரும்)
5.ஆனால் அதே சமயத்தில் அப்படி சோர்வாகக் கொடுத்த பணத்தை அவர்கள் வாங்கிக் கொண்டு போனாலும் அங்கு அவர்களுக்கும் பயனில்லை.

ஏதோ நீங்கள் மகராசன் கொடுத்தீர்கள். இருந்தாலும் இந்த மாதிரி ஆகிப் போச்சே…! என்று அவர்கள் சொல்வார்கள். நாம் கொடுத்த காசும் நாளைக்கு வருவதற்குச் சரியாக இல்லை.

கஷ்டப்பட்டார் என்று பணத்தைக் கொடுத்தோம் கொடுத்தும் விட்டு நாம் அடுத்து இப்படி வேதனையும் படுவோம். ஆனால்
1.அவரின் வேதனையால் நாம் காசைக் கொடுக்கப்படும் போது
2.அந்த வேதனையான நிலைகளால் அவர்கள் எண்ணிய காரியமும் செயலாவது இல்லை.

இரண்டுக்கும் மத்தியில் பயனில்லாமல் போய்விடுகின்றது.

ஆக நாம் ஒரு தடவை வேதனைப்பட்டோம் என்றால் அது பல முறை நமக்குள் வந்து இதை எண்ணியே நமக்குள் வேதனையாகி நம்முடைய நல்ல குணங்களை எல்லாம் மூடி மறைத்து விடுகின்றது.

இதைப் போக்குவது எப்படி…?

பெண்களில் பெரும்பகுதியானவர்கள் எல்லாம் இது போன்று இரக்கப்பட்டு நல்லதைச் செய்வார்கள். ஆனால் அவர்களிடம் பார்த்தோம் என்றால்
1.வேதனை வேதனை வேதனை…! என்று
2.இப்படிச் செய்து விட்டானே…! இவர்கள் இப்படி…! அவர்கள் அப்படிச் செய்தார்கள்…!
3.இவங்க இப்படி… அவங்க அப்படி…! என் பிள்ளைக்கு இந்த மாதிரி இருக்கின்றது…! என்று
4.இந்த வேதனையை எடுத்தால் என்ன செய்கின்றது…? கை, கால் குடைச்சல் ஆகின்றது.

பெரும்பகுதியாக 90% எடுத்தோம் என்றால் பெண்களுக்கு கை கால் குடைச்சல், பிடரி வலி, இடுப்பு வலி நிச்சயம் இருந்து கொண்டே இருக்கும்.

காரணம் என்ன…? என்று கேட்டோம் என்றால் எதை எடுத்தாலும் இந்த வேதனை வேதனை வேதனை வேதனை வேதனை என்ற இந்த நிலையையே உருவாக்கி விடுகின்றார்கள்.

ஏனென்றால் இந்த மாதிரி எல்லாம் குருநாதர் எனக்குக் காட்டுக்குள்ளே பல அனுபவங்களைக் கொடுத்து
1.இந்த இந்த நிலைகளில் எதை எதை நீ செய்ய வேண்டும்;..? எப்படி எடுக்க வேண்டும் என்று…?
2.தர்மம் என்று சொல்வதற்கும்… தர்மம் கொடுப்பதனால் என்னென்ன நிலைகள் ஆகும்…? என்றும்
4.ஆனால் பிறருக்கு உதவி செய்யும் போது அதை எப்படிச் செய்ய வேண்டும்…? நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும் என்று காட்டினார்.

அவர் எனக்குக் காட்டியதைத் தான் உங்களுக்கும் தொட்டுக் காண்பித்து விட்டு
1.உங்களுக்குள் அந்தக் கெட்டது அண்டாத வண்ணமும் அதே சமயத்தில் கெட்டது வரப்படும் போது நீங்கள் சுதாரித்து
2.இந்த நினைவு கொண்டு சமாளிக்கக் கூடிய அந்த எண்ணமும் உங்களுக்குள் வரச் செய்வதற்குத் தான் இப்பொழுது யாம் இதைச் சொல்வது.

இதைச் சொல்லி உங்களிடம் பதிவாக்குகிறோம் என்றால் நீங்கள் திட்டியவர்களை நினைக்கும் போது எப்படி உங்களுக்குச் சங்கடம் வருகின்றதோ இதே மாதிரி சங்கடம் வரப்படும் பொழுது
1,சாமி சொன்னார் என்ற நினைவை எடுக்கப்படும் பொழுது
2.அதன் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயர்ந்த சக்திகளை நீங்கள் எண்ணி எடுக்க எடுக்க
3.உங்கள் சங்கடத்தை மாற்றக்கூடிய எண்ணம் (உபயாமும் ஞானமும்) உங்களுக்கு நிச்சயம் வரும்.

அப்படி அந்த மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குப் பெறச் செய்வதற்குத் தான் இப்பொழுது யாம் உங்களுக்கு இந்த உபதேசம் பண்ணுவதே…!

உயிருக்குள் அடிக்கடி நடக்கும் குருச்சேத்திரப் போர்…! – பேருண்மைகள்

உயிருக்குள் அடிக்கடி நடக்கும் குருச்சேத்திரப் போர்…! – பேருண்மைகள்

 

தாவர இனங்கள் உருவாவதை அந்த இலையின் ரூபங்கள் அதிலே சுவைகள் எவ்வாறு மாறி இருக்கின்றது…? உயிரணுக்கள் அதை நுகரப்படும் பொழுது எப்படி ரூபமாகிறது…?

பல உணர்வுகள் கொண்டு… பல பல தாவர இனச் சத்தைக் கொண்டு அதனின் நிலைகள் கொண்டு உடலானாலும் அந்தத் தாவர இனச் சத்தின் மணத்தின் தன்மையால் அதனின் மணம் எண்ணமாகி அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து உடலாக மாற்றி அது இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி இயங்கினாலும்
1.அடுத்து இதைப் போல மற்றொரு புது நிலைகளை அது நுகரப்படும் பொழுது
2.உயிரான குருசேத்திரத்தில் தன் உடலுக்குள் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு அது எதிர்மறையாகிப் போர் நடக்கின்றது.

நமது பூமியில் எவ்வாறு மற்ற தாவர இனங்கள் வரும் பொழுது ஓர் நஞ்சு கொண்ட உணர்வு பட்டவுடனே எப்படிச் சுழிக் காற்றாக மாறுகின்றதோ அதைப் போல
1.இந்த உணர்வின் தன்மை புதிய நிலைகளைச் சேர்த்தால் கலக்க உணர்வுகளாக மாறிக் கலக்குகின்றது.
2.இது குருச்சேத்திரப் போராக மாறுகின்றது.

இவ்வாறு நமக்குள் பழமையான எண்ணங்கள் இருப்பினும் அந்த உணர்வின் சத்தை நமக்குள் இது கவர்ந்து உள் செல்லுகின்றது.

நம் உயிரின் தன்மை துடிப்பாக இருக்கும் பொழுது முந்திய தாவர இனங்களுடைய சத்தை உணவாக உட்கொண்டு அதை நுகர்ந்து அது உணவாக மாறும் நிலைகள் கொண்டு இலைகள் எவ்வாறு ரூபங்கள் ஆகின்றதோ அதே போல உயிரணு அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்த பின் அதே உருக் கொண்ட “ஜீவணுவாக…” நமக்குள் மாறுகின்றது.

அந்த ஜீவ அணு மீண்டும் இதைப் போல உணவாக உட்கொண்டாலும் அதன் சத்து ரத்தமாக மாறினாலும் அதனின் உணர்வின் செல்களே அதனின் வெப்பத்தால் ஆவியாகச் சுவாசித்து அந்த அணுவின் தன்மை எதனின் ரூபமோ அதனின் அமைப்பாக மலம் வரும் பொழுது மனித உடலுக்குள் உறுப்புகள் வருகின்றது.

மிருகங்களுக்கு உறுப்புகள் வேறாக இருக்கும். தேள் இனங்களுக்கு உறுப்புகள் வேறு… புழுக்களுக்கு உண்டான உடல் அமைப்புகள் வேறு… பட்சிகளுக்கு உடல் உறுப்புகள் வேறு… அது உட்கொண்ட உணர்வின் தன்மைக்கொப்ப ஜீவணுக்கள் உருவாகி அதனின் மலமாக உமிழ்த்தும் உணர்வுகள் அது உறைந்து அதனின் ரூபமாக அமைகின்றது.

தேன் கூட்டைத் தேனீக்கள் எவ்வாறு அமைக்கின்றதோ… ஒவ்வொரு குளவியும் மண்ணை எடுத்து அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எவ்வாறு கூட்டை அமைக்கின்றதோ இதைப் போல குருவி இனங்கள் கூடு கட்டுவதும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்த உணர்வுகளின் இயல்புகளுக்கு ஒப்ப அதனின் இயக்கச் சக்தியும் அது உருவாகும்.

இதைப் போல் தான்
1.நுகர்ந்த நிலைகள் ஜீவணுக்களாக மாறுவதும் அதனின் உணர்வுகள் இயங்குவதும்
2.இவ்வாறு தான் நாம் மாறி மாறி உறுப்புகளின் தன்மை அடைந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

உயிரின் நிலைகள் கொண்டு நினைவின் அலைகள் வரப்படும் பொழுது கண்ணின் பார்வையில் படுகின்றது. கண்ணுக்குள் பார்க்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ
1.எதிர்மறையாக நாம் காணும் நிலைகளில் அது படம் எடுத்து…
2.கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் பார்த்திடும் உணர்வை இழுத்துக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி
3.நாம் சுவாசித்து உயிருக்குள் நினைவுடன் இயக்கப்படும் பொழுது குருச்சேத்திரப் போராக மாறுகின்றது.

எப்படி சுழிக் காற்று மாறுகின்றதோ அது போல்
1.நமக்குள் உணர்வின் தன்மை சீராக ஒன்றாக இணைந்தால் முகம் சுழிக்காது.
2.ஆனால் பிறரின் நிலைகள் மாறுபட்ட நிலைகள் வரும் பொழுது முகம் சுழிப்பதும் வெறுப்பின் உணர்வுகளும் உடலுக்குள் தோன்றுகின்றது…
3.உணர்வின் அலைகளாக மாற்றுகின்றது… குருசேத்திரப் போராக இது மாறி இந்த உணர்வின் நிலைகள் நமக்குள் அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
4.அதனின் உணர்வுகள் உறுப்பாக விளையப்படும் பொழுது எத்தனையோ மாற்றங்கள் வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும் சக்தி

என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும் சக்தி

 

பூமியிலிருந்து வெளிப்பட்ட எல்லா உணர்வுகளும் சூரியனால் கவரப்பட்டுப் பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக (காற்று மண்டலத்தில்) இருக்கின்றது.

மனிதர்கள்
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் ஒருவரை நாம் நினைக்கப்படும் போது
2.நம் கண்ணின் கருவிழி பதிவாக்கியதைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவு பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.நம் ஆன்மாவாக மாற்றி இங்கே சேர்த்த பின்
3.உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கொப்ப உயிர் அதை உள்ளே இழுத்து
4.அது அதற்கு உணவாகக் கொடுக்கின்றது… ஜீவான்மாவிற்கு அது போய்ச் சேருகின்றது.
5.இரத்தத்தின் வழி கொண்டு உடல் முழுவதும் பாய்ச்சுகின்றது.
6.இது உடலில் உள்ள ஜீவான்மாக்களுக்கு உணவாகப் போய்ச் சேருகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் ராமன் குகனை முதலில் தன் சகோதரனாக ஆக்கிக் கொள்கின்றான். குகன் படகிலே செல்பவன். நம் உடலில் ரத்தங்கள் தான் ஆறாகவும் ஓடையாகவும் ஓடுகின்றது உடலான குகைக்குள்.

அருள் ஒளியின் சுடரை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கப்படும் பொழுது
1.பகைமையற்ற நிலைகள் கொண்டு நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்த அருள் சக்திகளைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மைகள் நம் உடலுக்குள் நட்பாக உருவாக்குகின்றது.

அதனால் தான் ராமன் முதலில் குகனை நடப்பாக்கிக் கொள்கின்றான் என்று காட்டியுள்ளார்கள.

சீதா… அந்த உயர்ந்த குணத்தின் சத்தை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது இரத்தத்தில் உயர்ந்த குணங்களைக் கொண்டால் “என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும்…” என்று என்பதுதான் இதனுடைய பொருள்.

காடு வனாந்தரங்களுக்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அதனால்தான் முதலில் குகனை நண்பனாக்க வேண்டும் என்று நம் இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் முறையைக் கொடுக்கின்றார்கள்.

அருள் மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்தச் சக்தி செல்கின்றது.
1.உறுப்பில் எங்கெங்கெல்லாம் தீங்கு விளைவிக்கின்றதோ அதை இந்த சக்திகள் அடக்குகின்றது.
2.நமக்கு மன அமைதி கிடைக்கிறது.

எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது

எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது

 

நரகாசுரனைக் கொல்கிறான் என்றால்… மோட்சத்தைக் கொடுக்கின்றான்
1.அதாவது மறுபடியும் இயக்குவதற்கு அதைக் கொண்டாருகின்றார்கள்.
2.காவியங்களில் இப்படித் தான் எழுதி உள்ளார்கள். அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமே…!

கொடுத்த வரப்படி எதுவுமே மடிவதில்லை… மடியச் செய்கிறது.
1.உணர்வை எடுத்தவுடன் இங்கே இயக்கச் செய்கிறது.
2.இங்கேயும் காக்கச் செய்கின்றது மற்றொன்றையும் காக்கச் செய்கின்றது.

வரப்படி எவரையும் கொல்வதில்லை… நாராயணன் யாரையாவது கொல்கின்றானா…? விஷ்ணு யாரையாவது கொகின்றானா…? கடைசியில் எந்த முடிவுக்கு வருகின்றார்கள்…?

காவியத்தினுடைய பொருளை இவ்வளவு அழகான நிலைகளில் காட்டியுள்ளார்கள்.
1.நஞ்சு அகன்றாலும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்கிறது.
2.எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது.

அதைத்தான் கீதையிலே… உடல் மடிகின்றது உணர்வுகள் வளர்கின்றது அந்த உணர்வுக்கொப்ப உருப் பெற்றது. இன்றைய நிலை நாளை இல்லை. இன்றைய செயல் நாளையச் சரீரம் என்று தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

உயிரே கடவுள்…! இவ்வளவு பெரிய தத்துவத்திற்கு எவ்வளவு நாள் அலைந்து தெரிந்து கொண்டு வந்தது. இதை தெரிந்து கொண்ட நாம் இந்தத் தியான வழியில் உள்ளோர் எத்தனை பேர் இதைச் சீராகக் கடைபிடிக்கின்றோம்.

தீபாவளி அன்று விடிய விடிய முழிக்கின்றோம். அந்த வழக்கத்திற்குத் தான் அடிமையாகி உள்ளோம். ஆனால் தீமைகளை அடிமையாக்குவதற்கு உங்களுக்குச் சக்தி கொடுகின்றோம்.

வேதனை என்ற வித்து உடலில் உருவாவதும்… உயிர் அதற்கு உணவு கொடுக்கும் நிலையும்

வேதனை என்ற வித்து உடலில் உருவாவதும்… உயிர் அதற்கு உணவு கொடுக்கும் நிலையும்

 

செடி வளர்ச்சி அடைந்து அதிலே வித்து உருவாகிவிட்டது என்றால் அதை மண்ணிலே மேலே போட்டு விட்டால் முளைக்காது. காரணம்… மழை பெய்தாலும்… பதிவானால் தான் முளைக்கும்… அப்படியே மேலிருந்து முளைத்தாலும் கருகிவிடும்.

சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் (அது ஒரு வித்து) உடலில் சுழல்கிறது.
1.எந்த நேரத்தில் எந்த உறுப்பின் பாகம் செல்கின்றதோ…
2.வேதனைப்படுபவரைப் பற்றி நாம் அப்போது நினைத்தால் அந்த உறுப்பிலே ஒட்டிக் கொள்ளும்
3.ஒட்டிய உடனே துடிப்பு நிலை வரும்… அந்த நேரத்தில் நமக்குப் பட…பட…பட…பட… என்று அடிக்கும்.
4.அந்த அணு என்ன செய்யும்…? சாப்பாடு கிடைத்த பின் குஞ்சு வெளி வந்து விடும்.

முட்டை பொரிந்து குஞ்சு வெளிவந்த பின் அந்தக் குஞ்சு எப்படிக் கத்துகின்றதோ தாய்க் கோழி கொக்கோக்கோ… என்று அதற்கு இரையைக் கூப்பிட்டுக் கொடுக்கும். குஞ்சு பின்னாடியே போகும்.

அதைப் போன்று தான்
1.வேதனையான உணர்வின் அணுக்கள் குஞ்சாகி வெளி வந்தால் சிறுமூளைக்கு. எட்டும்.
2.உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகிறது.
3.ஆணையிட்ட பின் காற்றிலிருந்து அந்த உணர்வின் சத்தை இழுக்கும்.
4.சுவாசித்து இதே உயிர் உருவாக்குகிறது… அந்த அணுவிற்குச் சாப்பாடு கொடுக்கும்.
5.ஏன் சாப்பாடு கொடுக்கின்றாய்…? என்று உயிரிடம் கேட்க முடியுமா…!

ஆறாவது அறிவால் அதைத் தடுக்க வேண்டும் தடுத்துப் பழக வேண்டும் இல்லையென்றால் அடக்கி[ பழக வேண்டும். அது தான் அங்குசபாசவா…!

ஆறாவது அறிவு பெற்றவன் அடக்கும் வல்லமை கொண்டவன். நாம் எதைக் கொண்டு அடக்க வேண்டும்…? மகரிஷிகள் அருள் சக்தி கொண்டு அடக்க வேண்டும்.

அவ்வளவு பெரிய யானையை அங்குசத்தை வைத்து அடக்குகின்றார்கள் அல்லவா. அது போல் எவ்வளவு பெரிய நிலையாக இருந்தாலும் அருள் மகரிஷியின் அருள் சக்திகளைப் பாய்ச்சினால் அது அடங்குகிறது.

ஆறாவது அறிவால் அடக்கும் வல்லமை பெற்றவன் என்று காவியங்களை இப்படித்தான் கொடுத்திருக்கின்றார்கள்.
1.ஆனால் நாம் அதைப் படித்துவிட்டுக் கதையாக எங்கெங்கோ கொண்டு செல்கின்றோம்.
2.ஒரு சிலையை வைத்து இவ்வளவு விரிவுரைகளை ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.