ஒரு சிறு விஷயத்தைக் கூடத் தாங்கக்கூடிய மன வலிமை இன்று நம்மிடம் கிடையாது… ஏன்…?

ஒரு சிறு விஷயத்தைக் கூடத் தாங்கக்கூடிய மன வலிமை இன்று நம்மிடம் கிடையாது… ஏன்…?

 

இன்று எங்கு சென்றாலும்… ஒரு குறையைச் சொன்னோம் என்றால் அடுத்தாற்போல் ஆயிரம் குறைகளைச் சொல்லி அவன் அப்படித்தான்… இவன் இப்படித்தான்… என்று சொல்லிச் சொல்லி வேதனைகளை எல்லாம் ஜாஸ்தி கூட்டிக் கொள்கிறோம்.

நமக்குள் இது அதிகமான பின்
1.அன்றைக்கு இருக்கிற வேலையையும் கெடுத்து விட்டு உட்கார்ந்து கொண்டே இருப்போம்.
2.இந்தக் கதையைப் பேசிய நிலையிலேயே அன்றைக்கு முழுவதும் பொழுது போய்விடும்.

அதற்குப் பின் என்ன ஆகிறது…?

நம் குழந்தைகள் சில்லென்று அழுதால் இரண்டு உதை உதைப்போம். யாராவது பெரியவர்கள் கூப்பிட்டால் “இதோ வரேனே…” என்று சொல்வோம்.. உடனே என்ன…? நான் கூப்பிடுகிறேன் இப்படிச் சொல்கின்றாய்…! என்று வீட்டில் எல்லாம் வம்பு வந்துவிடும்.

அந்த சொல்லுக்குள் என்ன செய்யும்…? இந்தத் தொனிகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் அல்ல. ஆனால் இந்த உணர்வுகள் அதைச் செய்கின்றது. இதைப் போன்ற நிலைகள் வருவதைப் பற்றி நம்மை அறியாமல் இருக்கின்றோம்.

காரணம்…
1.நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்தில் நஞ்சு
2.நாம் தண்ணீர் குடிப்பதிலும் நஞ்சு
3.நாம் சுவாசிக்கின்ற காந்த அலைகளில் நஞ்சு
4.மழை பெய்தாலும் நஞ்சு.

இன்றைக்கு நாம் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் போட்டுப் பூச்சிகளைக் கொன்று நல்ல உணவுப் பொருளை விளைய வைத்துக் கொண்டு வரலாம் என்று நாம் நினைக்கின்றோம்.

பூச்சிகள் சாகின்றது. ஆனால் அந்த மருந்தின் விஷமோ அதற்குள் படுகின்றது அது சாகும்போது அந்த விஷம் பூச்சிகள் உடலில் பட்டு அதன் சுவாசத்தில் பட்டு பூச்சி செத்தாலும் இந்த நஞ்சு அந்த உயிரில் போய்ச் சேர்ந்து விடுகின்றது.

அடுத்தாற் போல் என்ன செய்கின்றது….?

அதே இலையின் சத்தை, அந்த உயிர் எடுத்து அதிலிருந்தே மீண்டும் அது உயிர் பெறுகின்றது. வேறு எங்கும் உயிர் பெறுவது இல்லை.
1.எந்தச் சத்தோடு கலந்து விஷத்தின் தன்மை இணைந்த நிலையில் இந்த உயிரான காந்தம் அந்த உடலின் தன்மை பெற்றதோ
2.இந்த விஷத்தின் தன்மையைப் பெற்ற பிற்பாடு அடுத்தாற்படி வேறு எந்த விஷத்தைப் போட்டாலும்… அதை ஒன்றும் பாதிப்பது இல்லை.
3.“நீ வா தம்பி, நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று சொல்கின்றது.

புகையிலையோ மிகவும் காரமானது. அதற்குக் கடும் நஞ்சைப் போட்டாலும் கூட அது சாவது இல்லை. ஏனென்றால் பூச்சிகள் புழுக்கள் எல்லாமே பரிணாம வளர்ச்சியில் வருவது.

ஆனால் அதே சமயத்தில் மனிதனோ வளர்ச்சி பெற்றவன். நமக்குள் உயர்ந்த குணங்கள் உண்டு.

உதாரணமாக பால் சத்து ஊட்டக்கூடியது. அதிலே விஷத்தைப் போட்டுக் குடித்தால் என்ன செய்கின்றது…? நம்மைக் கொல்கின்றது. இதைப் போல நம் நல்ல குணத்தில் வேதனையை நாம் அடிக்கடி எடுக்கப்படும் பொழுது அந்த நல்ல குணத்தை முழுவதும் அது கொன்று விடுகின்றது. விஷத்திற்குள் நம்முடைய அந்த நல்ல குணம் சிக்கிக் கொண்டால் அப்படி ஆகிவிடுறது.

இன்று நாம் சாப்பிடுகின்ற ஆகாரம் முழுவதுமே நஞ்சு கலந்த்தாக இருப்பதால்… நல்ல குணத்திற்குள் நல்லதை நீங்கள் எண்ணினாலும் கூட அந்தக் கடுகடுப்பாகத்தான் பதில் வருகின்றது. கடுகடுப்பாகத்தான் நாம் இருக்கின்றோம்.

ஆனால் அந்தக் கடுகடுப்பான வேதனையை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலில் உள்ள கிட்னி நம்முடைய ரத்தத்தில் வரக்கூடிய இந்த விஷங்களைச் சரியான முறையில் வடிகட்ட முடிவதில்லை.

சரியான நிலைகளில் வடிகட்ட முடியவில்லை என்றால் ரத்தத்துடன் சேர்த்துக் கை, கால் குடைச்சல், போன்ற விஷ நிலைகள் ஊடுருவுகின்றது.

இது அதிகமாகப் போனது என்றால் உப்பு சத்தைப் பிரிக்க முடியாமல் போய்விடுகின்றது. அதே போல் சர்க்கரையைப் பிரிக்க முடியாமல் போனது என்றால் சர்க்கரைச் சத்து அதிகமாகி விடுகின்றது… உப்புச் சத்து அதிகமாகி விடுகின்றது.

இப்படி ஆகும் நிலையில்… சர்க்கரை மற்றொன்றுடன் கலந்து அது ருசி கொடுக்கும். மற்றதோடு சேர்ந்து அது இனிமை கொடுக்கவில்லை என்று சொன்னால் தனித்து அதிகமாகும் பொழுது அதனுடைய சுவை என்ன செய்கின்றது…?

1.நாம் வாயில் சர்க்கரையை அதிகமாகப் போட்டால் உமட்டல்…!
2.உடலில் சர்க்கரை அதிகமாகி விட்டால் மயக்கம் நிச்சயமாக வரும்.

சர்க்கரையை நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டுப் பாருங்கள். உமட்டல் ஓ என்று வாந்தி எடுக்கின்ற மாதிரி வரும். இனிப்பு தான்… ஆனால் அதிகமானால் மயக்க நிலை வரும்.

ஏனென்றால் இந்தச் சத்து சேர்த்தால் சுவை கொடுக்கும்.. வலு கொடுக்கின்றது. ஆனால் அது இல்லை என்கிறபோது இப்படி மாறி விடுகின்றது.

ஆனால் நம் உறுப்புகளிலேயே நாம் சாப்பிடக்கூடியதை வைத்து உயிர் உணர்வை ஊட்டினாலும்… ரத்தத்திற்குள் ஆகாரத்துடன் கலந்து பல நிலைகள் ஆனாலும் ரத்தத்திற்குள் கலந்த உடனே இந்த ரத்தம் என்ன செய்கின்றது…? வடிகட்டி அடுத்த திசுக்களுக்குள் மாற்றுவதற்கு வடிகட்டி கொண்டே வரும்.

நாம் ருசியாகச் சாப்பிடக்கூடிய ஆகாரம்… நாம் சுவாசிக்கக்கூடிய வாசனைக்குள் இருக்கக்கூடிய சுவாசிக்கக்கூடிய விஷத்தை எல்லாம் மலமாக மாற்றி விட்டு உடலை நல்லதாக மாற்றுகின்றது.

உடல் முழுவதும் இப்படி நல்லதாக இருக்கும் பொழுது..
1.பூச்சிக் கொல்லி மருந்தால் வரும் அந்த நஞ்சை நாம் நல்லதாக மாற்ற முடியவில்லை என்கிற பொழுது
2.இந்தக் கிட்னி சரியான முறையில் வேலை செய்யாது.
3.நஞ்சை வடிகட்ட முடியாதபடி மற்ற நல்ல அணுக்களுடன் சேர்த்த உடனே உடலில் அது சீக்காக மாறுகின்றது…
4.நஞ்சு எல்லாவற்றிலும் ஊடுருவி விடுகின்றது.

ஆடு மாடு எல்லாம் என்ன செய்கின்றது…? விஷத்தைச் சாப்பிடுகின்றது. அதைத் தன் உடலாக ஏற்றுக் கொள்கின்றது. உடலுக்குள் வலுவாக இருக்கின்றது. ஆனால் சாணத்தை நல்லதாகப் போடுகின்றது. நல்லதை முழுவதும் கழித்து விடுகின்றது.

ஆனால் மனிதர்கள் நாம் கெட்டதை முழுவதும் கழித்துவிட்டு நல்லதாக்கவும் அதனால் நல்ல எண்ணங்களும் நமக்குள் வருகின்றது.

இருந்தாலும் நம்முடைய கிட்னி சரியான முறையில் வேலை செய்யவில்லை என்றால் நாம் மூச்சில் எடுக்கக்கூடிய நிலைகள் எல்லாம் விஷமாக மாறிவிடுகின்றது.

இன்றைக்கு இயற்கையில் எடுத்துக் கொண்ட விஷங்கள் முழுவதும் மாறி விடுகின்றது. நல்ல எண்ணங்கள் கொண்டு நாம் பேச முடியாமல் போய்விடுகின்றது.

1.இனம் புரியாமல் எதற்கு…? ஏன்…? என்று என்கிற வகையில் மனம் சோர்வடைந்து
2.இன்றைக்குப் பெரும்பகுதி என்ன வாழ்க்கை…? என்கிற வெறுப்பே வருகின்றது.

பெரும்பகுதியான வீடுகளில் எடுத்துக் கொண்டால் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி “ஒரு சிறு விஷயத்தைத் தாங்கக் கூடிய சக்தி கிடையாது…”

ஒரு தேள் கொட்டி விட்டால் நாம் எப்படித் துடிக்கின்றோமோ இதைப் போல இந்த வேதனையான எண்ணங்கள் சிறிதளவு அந்த உயிரிலே பட்டவுடன் தான் சிந்திக்கும் செயலை இழந்துவிட்டு மன விரக்தி அடைந்து தன்னையே மாய்த்துக் கொள்ளக்கூடிய உணர்வைத் தூண்டக்கூடிய நிலைகள் இந்தக் காற்றிலே அதிகமாகி விட்டது.

வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டுமென்று இருந்தாலும் கூட அந்த விரக்தியின் தன்மை அடைந்தால்… சில முக்கியமான நேரத்தில் ஒரு பொருளை நாம் உற்பத்தி செய்கின்றோம் என்றால் இந்த உற்பத்தியைச் சரியான முறையில் செயல்படுத்த முடியாத நிலைகளில் நம் எண்ணங்கள் வந்து அதை அழித்து விடுகின்றது.

அதே மாதிரி நம்முடைய உடல் மோசமாக இருக்கின்றது… அதற்காக மருந்தைச் சாப்பிட்டாலும் கூட அடுத்த கணம் ஒரு வேதனையான நிலைகள் வந்தது என்றால்
1.அந்த மருந்தையே அது நஞ்சாக மாற்றி நமக்குள் எதிர் நிலையான நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
2.அந்த நோயையும் தீர்க்க முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகள் வந்தது என்றால் அதை மாற்றி அமைக்கத் தான் அக்காலங்களில் ஞானிகள் ஆலயங்களை உருவாக்கிச் சிலையாக வடித்தார்கள். கோவிலில் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று காட்டினார்கள்.

அவர்கள் காட்டிய நிலைகளில் தெய்வத்தை வணங்கினால் அவன் பெற்ற சக்தியை நாமும் பெற்று “எத்தகைய தீமையிலிருந்தும் விடுபட முடியும்…”

மெய் ஞானிகள் சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உபதேசமே கொடுக்கின்றோம்

மெய் ஞானிகள் சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உபதேசமே கொடுக்கின்றோம்

 

வெளியிலே மற்றவரிடம் பழகி நாம் என்ன செய்கின்றோம்…?. ஒருவருக்கு இரக்கப்பட்டு உதவி செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்ட பின் அந்தக் கஷ்டமான நேரத்தில் நாம் பணத்தை எடுத்து அவருக்குக் கொடுத்து விடுகின்றோம்.

ஆனால்
1.ஐயோ பாவமே…! ஏதோ இருக்கட்டும்…! என்று அப்பொழுது பணத்தைக் கொடுத்தாலும்
2.அவர்கள் கஷ்டப்படுகின்ற அந்த வேதனையான நிலைகள் எல்லாம் என் உடலிலே வந்து விடுகின்றது.
3.அப்பொழுது நான் கொடுத்த உடனே. என்னை அறியாமலேயே உடலில் சோர்வடைகின்றது
4.(பிறர் கஷ்டத்தைக் கேட்டால் நமக்கு நிச்சயம் சோர்வு வரும்)
5.ஆனால் அதே சமயத்தில் அப்படி சோர்வாகக் கொடுத்த பணத்தை அவர்கள் வாங்கிக் கொண்டு போனாலும் அங்கு அவர்களுக்கும் பயனில்லை.

ஏதோ நீங்கள் மகராசன் கொடுத்தீர்கள். இருந்தாலும் இந்த மாதிரி ஆகிப் போச்சே…! என்று அவர்கள் சொல்வார்கள். நாம் கொடுத்த காசும் நாளைக்கு வருவதற்குச் சரியாக இல்லை.

கஷ்டப்பட்டார் என்று பணத்தைக் கொடுத்தோம் கொடுத்தும் விட்டு நாம் அடுத்து இப்படி வேதனையும் படுவோம். ஆனால்
1.அவரின் வேதனையால் நாம் காசைக் கொடுக்கப்படும் போது
2.அந்த வேதனையான நிலைகளால் அவர்கள் எண்ணிய காரியமும் செயலாவது இல்லை.

இரண்டுக்கும் மத்தியில் பயனில்லாமல் போய்விடுகின்றது.

ஆக நாம் ஒரு தடவை வேதனைப்பட்டோம் என்றால் அது பல முறை நமக்குள் வந்து இதை எண்ணியே நமக்குள் வேதனையாகி நம்முடைய நல்ல குணங்களை எல்லாம் மூடி மறைத்து விடுகின்றது.

இதைப் போக்குவது எப்படி…?

பெண்களில் பெரும்பகுதியானவர்கள் எல்லாம் இது போன்று இரக்கப்பட்டு நல்லதைச் செய்வார்கள். ஆனால் அவர்களிடம் பார்த்தோம் என்றால்
1.வேதனை வேதனை வேதனை…! என்று
2.இப்படிச் செய்து விட்டானே…! இவர்கள் இப்படி…! அவர்கள் அப்படிச் செய்தார்கள்…!
3.இவங்க இப்படி… அவங்க அப்படி…! என் பிள்ளைக்கு இந்த மாதிரி இருக்கின்றது…! என்று
4.இந்த வேதனையை எடுத்தால் என்ன செய்கின்றது…? கை, கால் குடைச்சல் ஆகின்றது.

பெரும்பகுதியாக 90% எடுத்தோம் என்றால் பெண்களுக்கு கை கால் குடைச்சல், பிடரி வலி, இடுப்பு வலி நிச்சயம் இருந்து கொண்டே இருக்கும்.

காரணம் என்ன…? என்று கேட்டோம் என்றால் எதை எடுத்தாலும் இந்த வேதனை வேதனை வேதனை வேதனை வேதனை என்ற இந்த நிலையையே உருவாக்கி விடுகின்றார்கள்.

ஏனென்றால் இந்த மாதிரி எல்லாம் குருநாதர் எனக்குக் காட்டுக்குள்ளே பல அனுபவங்களைக் கொடுத்து
1.இந்த இந்த நிலைகளில் எதை எதை நீ செய்ய வேண்டும்;..? எப்படி எடுக்க வேண்டும் என்று…?
2.தர்மம் என்று சொல்வதற்கும்… தர்மம் கொடுப்பதனால் என்னென்ன நிலைகள் ஆகும்…? என்றும்
4.ஆனால் பிறருக்கு உதவி செய்யும் போது அதை எப்படிச் செய்ய வேண்டும்…? நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும் என்று காட்டினார்.

அவர் எனக்குக் காட்டியதைத் தான் உங்களுக்கும் தொட்டுக் காண்பித்து விட்டு
1.உங்களுக்குள் அந்தக் கெட்டது அண்டாத வண்ணமும் அதே சமயத்தில் கெட்டது வரப்படும் போது நீங்கள் சுதாரித்து
2.இந்த நினைவு கொண்டு சமாளிக்கக் கூடிய அந்த எண்ணமும் உங்களுக்குள் வரச் செய்வதற்குத் தான் இப்பொழுது யாம் இதைச் சொல்வது.

இதைச் சொல்லி உங்களிடம் பதிவாக்குகிறோம் என்றால் நீங்கள் திட்டியவர்களை நினைக்கும் போது எப்படி உங்களுக்குச் சங்கடம் வருகின்றதோ இதே மாதிரி சங்கடம் வரப்படும் பொழுது
1,சாமி சொன்னார் என்ற நினைவை எடுக்கப்படும் பொழுது
2.அதன் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயர்ந்த சக்திகளை நீங்கள் எண்ணி எடுக்க எடுக்க
3.உங்கள் சங்கடத்தை மாற்றக்கூடிய எண்ணம் (உபயாமும் ஞானமும்) உங்களுக்கு நிச்சயம் வரும்.

அப்படி அந்த மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குப் பெறச் செய்வதற்குத் தான் இப்பொழுது யாம் உங்களுக்கு இந்த உபதேசம் பண்ணுவதே…!

உயிருக்குள் அடிக்கடி நடக்கும் குருச்சேத்திரப் போர்…! – பேருண்மைகள்

உயிருக்குள் அடிக்கடி நடக்கும் குருச்சேத்திரப் போர்…! – பேருண்மைகள்

 

தாவர இனங்கள் உருவாவதை அந்த இலையின் ரூபங்கள் அதிலே சுவைகள் எவ்வாறு மாறி இருக்கின்றது…? உயிரணுக்கள் அதை நுகரப்படும் பொழுது எப்படி ரூபமாகிறது…?

பல உணர்வுகள் கொண்டு… பல பல தாவர இனச் சத்தைக் கொண்டு அதனின் நிலைகள் கொண்டு உடலானாலும் அந்தத் தாவர இனச் சத்தின் மணத்தின் தன்மையால் அதனின் மணம் எண்ணமாகி அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து உடலாக மாற்றி அது இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி இயங்கினாலும்
1.அடுத்து இதைப் போல மற்றொரு புது நிலைகளை அது நுகரப்படும் பொழுது
2.உயிரான குருசேத்திரத்தில் தன் உடலுக்குள் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு அது எதிர்மறையாகிப் போர் நடக்கின்றது.

நமது பூமியில் எவ்வாறு மற்ற தாவர இனங்கள் வரும் பொழுது ஓர் நஞ்சு கொண்ட உணர்வு பட்டவுடனே எப்படிச் சுழிக் காற்றாக மாறுகின்றதோ அதைப் போல
1.இந்த உணர்வின் தன்மை புதிய நிலைகளைச் சேர்த்தால் கலக்க உணர்வுகளாக மாறிக் கலக்குகின்றது.
2.இது குருச்சேத்திரப் போராக மாறுகின்றது.

இவ்வாறு நமக்குள் பழமையான எண்ணங்கள் இருப்பினும் அந்த உணர்வின் சத்தை நமக்குள் இது கவர்ந்து உள் செல்லுகின்றது.

நம் உயிரின் தன்மை துடிப்பாக இருக்கும் பொழுது முந்திய தாவர இனங்களுடைய சத்தை உணவாக உட்கொண்டு அதை நுகர்ந்து அது உணவாக மாறும் நிலைகள் கொண்டு இலைகள் எவ்வாறு ரூபங்கள் ஆகின்றதோ அதே போல உயிரணு அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்த பின் அதே உருக் கொண்ட “ஜீவணுவாக…” நமக்குள் மாறுகின்றது.

அந்த ஜீவ அணு மீண்டும் இதைப் போல உணவாக உட்கொண்டாலும் அதன் சத்து ரத்தமாக மாறினாலும் அதனின் உணர்வின் செல்களே அதனின் வெப்பத்தால் ஆவியாகச் சுவாசித்து அந்த அணுவின் தன்மை எதனின் ரூபமோ அதனின் அமைப்பாக மலம் வரும் பொழுது மனித உடலுக்குள் உறுப்புகள் வருகின்றது.

மிருகங்களுக்கு உறுப்புகள் வேறாக இருக்கும். தேள் இனங்களுக்கு உறுப்புகள் வேறு… புழுக்களுக்கு உண்டான உடல் அமைப்புகள் வேறு… பட்சிகளுக்கு உடல் உறுப்புகள் வேறு… அது உட்கொண்ட உணர்வின் தன்மைக்கொப்ப ஜீவணுக்கள் உருவாகி அதனின் மலமாக உமிழ்த்தும் உணர்வுகள் அது உறைந்து அதனின் ரூபமாக அமைகின்றது.

தேன் கூட்டைத் தேனீக்கள் எவ்வாறு அமைக்கின்றதோ… ஒவ்வொரு குளவியும் மண்ணை எடுத்து அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எவ்வாறு கூட்டை அமைக்கின்றதோ இதைப் போல குருவி இனங்கள் கூடு கட்டுவதும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்த உணர்வுகளின் இயல்புகளுக்கு ஒப்ப அதனின் இயக்கச் சக்தியும் அது உருவாகும்.

இதைப் போல் தான்
1.நுகர்ந்த நிலைகள் ஜீவணுக்களாக மாறுவதும் அதனின் உணர்வுகள் இயங்குவதும்
2.இவ்வாறு தான் நாம் மாறி மாறி உறுப்புகளின் தன்மை அடைந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

உயிரின் நிலைகள் கொண்டு நினைவின் அலைகள் வரப்படும் பொழுது கண்ணின் பார்வையில் படுகின்றது. கண்ணுக்குள் பார்க்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ
1.எதிர்மறையாக நாம் காணும் நிலைகளில் அது படம் எடுத்து…
2.கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் பார்த்திடும் உணர்வை இழுத்துக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி
3.நாம் சுவாசித்து உயிருக்குள் நினைவுடன் இயக்கப்படும் பொழுது குருச்சேத்திரப் போராக மாறுகின்றது.

எப்படி சுழிக் காற்று மாறுகின்றதோ அது போல்
1.நமக்குள் உணர்வின் தன்மை சீராக ஒன்றாக இணைந்தால் முகம் சுழிக்காது.
2.ஆனால் பிறரின் நிலைகள் மாறுபட்ட நிலைகள் வரும் பொழுது முகம் சுழிப்பதும் வெறுப்பின் உணர்வுகளும் உடலுக்குள் தோன்றுகின்றது…
3.உணர்வின் அலைகளாக மாற்றுகின்றது… குருசேத்திரப் போராக இது மாறி இந்த உணர்வின் நிலைகள் நமக்குள் அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
4.அதனின் உணர்வுகள் உறுப்பாக விளையப்படும் பொழுது எத்தனையோ மாற்றங்கள் வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும் சக்தி

என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும் சக்தி

 

பூமியிலிருந்து வெளிப்பட்ட எல்லா உணர்வுகளும் சூரியனால் கவரப்பட்டுப் பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக (காற்று மண்டலத்தில்) இருக்கின்றது.

மனிதர்கள்
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் ஒருவரை நாம் நினைக்கப்படும் போது
2.நம் கண்ணின் கருவிழி பதிவாக்கியதைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவு பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.நம் ஆன்மாவாக மாற்றி இங்கே சேர்த்த பின்
3.உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கொப்ப உயிர் அதை உள்ளே இழுத்து
4.அது அதற்கு உணவாகக் கொடுக்கின்றது… ஜீவான்மாவிற்கு அது போய்ச் சேருகின்றது.
5.இரத்தத்தின் வழி கொண்டு உடல் முழுவதும் பாய்ச்சுகின்றது.
6.இது உடலில் உள்ள ஜீவான்மாக்களுக்கு உணவாகப் போய்ச் சேருகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் ராமன் குகனை முதலில் தன் சகோதரனாக ஆக்கிக் கொள்கின்றான். குகன் படகிலே செல்பவன். நம் உடலில் ரத்தங்கள் தான் ஆறாகவும் ஓடையாகவும் ஓடுகின்றது உடலான குகைக்குள்.

அருள் ஒளியின் சுடரை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கப்படும் பொழுது
1.பகைமையற்ற நிலைகள் கொண்டு நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்த அருள் சக்திகளைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மைகள் நம் உடலுக்குள் நட்பாக உருவாக்குகின்றது.

அதனால் தான் ராமன் முதலில் குகனை நடப்பாக்கிக் கொள்கின்றான் என்று காட்டியுள்ளார்கள.

சீதா… அந்த உயர்ந்த குணத்தின் சத்தை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது இரத்தத்தில் உயர்ந்த குணங்களைக் கொண்டால் “என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும்…” என்று என்பதுதான் இதனுடைய பொருள்.

காடு வனாந்தரங்களுக்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அதனால்தான் முதலில் குகனை நண்பனாக்க வேண்டும் என்று நம் இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் முறையைக் கொடுக்கின்றார்கள்.

அருள் மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்தச் சக்தி செல்கின்றது.
1.உறுப்பில் எங்கெங்கெல்லாம் தீங்கு விளைவிக்கின்றதோ அதை இந்த சக்திகள் அடக்குகின்றது.
2.நமக்கு மன அமைதி கிடைக்கிறது.

எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது

எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது

 

நரகாசுரனைக் கொல்கிறான் என்றால்… மோட்சத்தைக் கொடுக்கின்றான்
1.அதாவது மறுபடியும் இயக்குவதற்கு அதைக் கொண்டாருகின்றார்கள்.
2.காவியங்களில் இப்படித் தான் எழுதி உள்ளார்கள். அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமே…!

கொடுத்த வரப்படி எதுவுமே மடிவதில்லை… மடியச் செய்கிறது.
1.உணர்வை எடுத்தவுடன் இங்கே இயக்கச் செய்கிறது.
2.இங்கேயும் காக்கச் செய்கின்றது மற்றொன்றையும் காக்கச் செய்கின்றது.

வரப்படி எவரையும் கொல்வதில்லை… நாராயணன் யாரையாவது கொல்கின்றானா…? விஷ்ணு யாரையாவது கொகின்றானா…? கடைசியில் எந்த முடிவுக்கு வருகின்றார்கள்…?

காவியத்தினுடைய பொருளை இவ்வளவு அழகான நிலைகளில் காட்டியுள்ளார்கள்.
1.நஞ்சு அகன்றாலும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்கிறது.
2.எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது.

அதைத்தான் கீதையிலே… உடல் மடிகின்றது உணர்வுகள் வளர்கின்றது அந்த உணர்வுக்கொப்ப உருப் பெற்றது. இன்றைய நிலை நாளை இல்லை. இன்றைய செயல் நாளையச் சரீரம் என்று தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

உயிரே கடவுள்…! இவ்வளவு பெரிய தத்துவத்திற்கு எவ்வளவு நாள் அலைந்து தெரிந்து கொண்டு வந்தது. இதை தெரிந்து கொண்ட நாம் இந்தத் தியான வழியில் உள்ளோர் எத்தனை பேர் இதைச் சீராகக் கடைபிடிக்கின்றோம்.

தீபாவளி அன்று விடிய விடிய முழிக்கின்றோம். அந்த வழக்கத்திற்குத் தான் அடிமையாகி உள்ளோம். ஆனால் தீமைகளை அடிமையாக்குவதற்கு உங்களுக்குச் சக்தி கொடுகின்றோம்.

வேதனை என்ற வித்து உடலில் உருவாவதும்… உயிர் அதற்கு உணவு கொடுக்கும் நிலையும்

வேதனை என்ற வித்து உடலில் உருவாவதும்… உயிர் அதற்கு உணவு கொடுக்கும் நிலையும்

 

செடி வளர்ச்சி அடைந்து அதிலே வித்து உருவாகிவிட்டது என்றால் அதை மண்ணிலே மேலே போட்டு விட்டால் முளைக்காது. காரணம்… மழை பெய்தாலும்… பதிவானால் தான் முளைக்கும்… அப்படியே மேலிருந்து முளைத்தாலும் கருகிவிடும்.

சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் (அது ஒரு வித்து) உடலில் சுழல்கிறது.
1.எந்த நேரத்தில் எந்த உறுப்பின் பாகம் செல்கின்றதோ…
2.வேதனைப்படுபவரைப் பற்றி நாம் அப்போது நினைத்தால் அந்த உறுப்பிலே ஒட்டிக் கொள்ளும்
3.ஒட்டிய உடனே துடிப்பு நிலை வரும்… அந்த நேரத்தில் நமக்குப் பட…பட…பட…பட… என்று அடிக்கும்.
4.அந்த அணு என்ன செய்யும்…? சாப்பாடு கிடைத்த பின் குஞ்சு வெளி வந்து விடும்.

முட்டை பொரிந்து குஞ்சு வெளிவந்த பின் அந்தக் குஞ்சு எப்படிக் கத்துகின்றதோ தாய்க் கோழி கொக்கோக்கோ… என்று அதற்கு இரையைக் கூப்பிட்டுக் கொடுக்கும். குஞ்சு பின்னாடியே போகும்.

அதைப் போன்று தான்
1.வேதனையான உணர்வின் அணுக்கள் குஞ்சாகி வெளி வந்தால் சிறுமூளைக்கு. எட்டும்.
2.உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகிறது.
3.ஆணையிட்ட பின் காற்றிலிருந்து அந்த உணர்வின் சத்தை இழுக்கும்.
4.சுவாசித்து இதே உயிர் உருவாக்குகிறது… அந்த அணுவிற்குச் சாப்பாடு கொடுக்கும்.
5.ஏன் சாப்பாடு கொடுக்கின்றாய்…? என்று உயிரிடம் கேட்க முடியுமா…!

ஆறாவது அறிவால் அதைத் தடுக்க வேண்டும் தடுத்துப் பழக வேண்டும் இல்லையென்றால் அடக்கி[ பழக வேண்டும். அது தான் அங்குசபாசவா…!

ஆறாவது அறிவு பெற்றவன் அடக்கும் வல்லமை கொண்டவன். நாம் எதைக் கொண்டு அடக்க வேண்டும்…? மகரிஷிகள் அருள் சக்தி கொண்டு அடக்க வேண்டும்.

அவ்வளவு பெரிய யானையை அங்குசத்தை வைத்து அடக்குகின்றார்கள் அல்லவா. அது போல் எவ்வளவு பெரிய நிலையாக இருந்தாலும் அருள் மகரிஷியின் அருள் சக்திகளைப் பாய்ச்சினால் அது அடங்குகிறது.

ஆறாவது அறிவால் அடக்கும் வல்லமை பெற்றவன் என்று காவியங்களை இப்படித்தான் கொடுத்திருக்கின்றார்கள்.
1.ஆனால் நாம் அதைப் படித்துவிட்டுக் கதையாக எங்கெங்கோ கொண்டு செல்கின்றோம்.
2.ஒரு சிலையை வைத்து இவ்வளவு விரிவுரைகளை ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.

நான் பேசுவதில்லை… குரு கொடுத்த அருள் தான் இயங்குகிறது… இயக்குகிறது

நான் பேசுவதில்லை… குரு கொடுத்த அருள் தான் இயங்குகிறது… இயக்குகிறது

 

உதாரணமாக… கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டால் எதை நாம் அதிலே பதிவாக்கி வைத்திருக்கின்றோமோ அதற்குத் தக்கவாறு அந்த உணர்வை எடுத்து உடனே இயக்கிக் காட்டும்.

1.கம்ப்யூட்டரை வைத்து எந்தப் பொருளைப் பாதுகாக்க வேண்டும் என்று நாம் பதிவாக்கி வைத்திருக்கிறோமா
2/அந்தப் பொருளைப் பாதுகாத்தே தீரும்… ஆணையிட்டு வைத்திருப்பதற்குத் தக்க அந்தப் பொருளை அந்தக் கம்ப்யூட்டர் இயக்கச் செய்யும்.

ஆக கம்ப்யூட்டரில் பதிவு செய்தது போன்று எம்முடைய உபதேசங்களை நீங்கள் அறிய வேண்டும் என்று பதிவு செய்யும் நிலைக்கொப்ப அந்த அருள் உணர்வு உங்களுக்குள் இயக்கும்.

ஏனென்றால்
1.எத்தனையோ கோடி உணர்வுகளை குருநாதர் எனக்குள் பதிவு செய்து வைத்திருக்கின்றார்… கொஞ்ச நஞ்சமல்ல.
2.குருநாதர் எனக்குள் பதிவு வைத்தது எண்ணிலிடங்காதது.
3.அதையெல்லாம் தனித்து… பிரித்து உங்களுக்கு எல்லாவற்றையும் “ஒன்று போலச் சொல்ல வேண்டும்…” என்றால் எனக்கு ஆயுளும் பத்தாது.

அந்தந்தக் கால நிலைக்கொப்ப அது அதைக் குறித்துத் தெளிவுபடுத்திச் செய்ய வேண்டும். அந்த உணர்வுக்கொப்பத் தான் என்னுடைய சொல்லும் வரும்… பேச்சும் வரும்.

ஆகையினால் எதை எண்ணி எடுக்கின்றிர்களோ அதற்கு மேல் எனக்கும் மீண்டும் அந்த உயர்ந்த சக்தியை வளர்ப்பதற்கு உதவுகிறது. சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

எனக்குள் அதை மீண்டும் நினைவு கொண்டு ஜீவன் ஊட்ட முடிகின்றது.

திருமூலர் காட்டிய ஆலயத் திருப்பணி எது…?

திருமூலர் காட்டிய ஆலயத் திருப்பணி எது…?

 

ரோட்டில் போகும் பொழுது எதிர்பாராதது நடக்கிறது என்றால் அதைப் பார்க்கும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ… இப்படி ஆகிப்போச்சே…!” என்று நினைக்கின்றீர்கள்.

குடும்பத்தில் வந்து சொன்னவுடன் மனிதனை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்கள் கொண்டு அடுத்தவர்களிடம் கேட்கின்றீர்கள்.

அதைக் கேட்கும் பொழுது நல்ல குணத்துடன் சேர்த்து உங்களிடம் வடித்து அந்தக் நல்ல குணம் ரிப்பேர் ஆகிப் போய்விடுகின்றது. அடுத்து நல்ல குணத்தை எண்ணும் பொழுது வேதனை வந்து விடுகின்றது.

நீங்கள் தப்புப் பண்ணவில்லை.

இப்படிப் பிறருடைய எண்ணங்களைப் பார்க்கின்றோம். பத்திரிக்கையைப் பார்க்கின்றோம். இன்று உலகம் எப்படி இருக்கின்றது…? நாளை எப்படி இருக்கும்…? என்று அதிலே வர்ணனை பண்ணியிருப்பார்கள்.

பேப்பரைப் பார்த்தவுடன்… அங்கே கதவைத் தட்டி எடுத்துப் போய் விட்டான். வீட்டிலேயே சம்பாதித்து வைத்திருந்தார்கள்… மண்டையிலே அடித்தான் காசை எடுத்துக் கொண்டு போய் விட்டான் என்று சொன்னவுடனே உங்களிடம் நல்ல குணத்தை எல்லாம் பதட்டத்திற்குக் கொண்டு வந்து விடுகின்றீர்கள்.

இப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்றால் நல்ல குணங்கள் எல்லாம் ரிப்பேர் ஆகிப் போய் விடுகின்றது. எப்படி…?

நாம் ரேடியோவை வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். மின்னல் தாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை எரியல் வழி எடுக்கப்படும் பொழுது இதிலே வந்து மற்ற எர்த் இதிலே பட்ட உடனே கரகரப்பாக ஆகின்றது.

எடுத்து ஒலியைக் கொடுப்பது என்ன செய்கின்றது…? மைக்கில் ஓட்டையைப் போட்டு விடுகின்றது. இங்கே கரகரப்பாக இருக்கின்றது எந்தப் பாட்டும் கேட்க முடியவில்லை.

ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்தும் எடுத்து வடிகட்டிக் கொடுக்கக்கூடிய நுண்ணிய அலைகளில்.. பரவி வரக்கூடிய இந்த அலைவரிசையை எடுப்பதில்
1.அது கொஞ்சம் அதிகமாகிப் போய்விட்டால் சூடாகிப் போகும்… பத்து (வெல்டிங்) விட்டுவிடும். அப்புறம் இதை எடுத்துக் கொடுக்காது.
2.இதைப்போல உங்களுடைய மூளைக்கும் இந்த உணர்வின் தன்மை எடுக்கும் போது
3.பட்ட உடனே… பொறிகளை இழுக்கும் நிலைகள் அது உடனே நின்று போகும்.
4.அப்புறம் என்ன செய்கின்றது…? ஒன்றும் செய்ய முடியவில்லை.
5.அப்போது உங்கள் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்களில் இப்படி ரிப்பேர் ஆகிப் போய் விடுகின்றது.

ரிப்பேர் ஆன பிற்பாடு நீங்களே சரி பண்ண வேண்டும் என்றால் முடியவில்லை.
1.ரிப்பேரான குரலில் தான் நீங்கள் பேச முடியும்.
2.ரிப்பேரான நிலைகளைத்தான் நீங்கள் சுவாசிக்க முடியும்.
3.ரிப்பேரான நிலைகளில் தான் நீங்கள் இருக்க முடியும்.

அதிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு அன்றைய ஞானிகள் என்ன செய்தார்கள்…? கோவிலைக் கட்டி வைத்தார்கள்.

இப்படி வாழ்க்கையின் இடையிலே ரிப்பேர் ஆகி விட்டதென்றால் உன் உடலில் நல்ல குணங்கள் இப்படி மறைந்து இருக்கின்றது. ஆலயத்தில் சாமி மீது போட்டிருப்பதைப் பார்த்து… அந்தப் பூவைப்போல வாசனையை உன் உயிருக்குள் போடு…. இந்த மலரைப் போல மணத்தைப் போடு… மல்லிகை மணத்தைப் போடு. கனியைப் போன்று சுவையான நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணு.
1.இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணு என்று
2.அங்கே உருவத்தைப் போட்டுக் காண்பித்திருக்கின்றார்கள்… கதையாகவும் எழுதி இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில்.. “விநாயகனைக் கும்பிடாமல் நீ கோவிலுக்குள் போனால் பலன் ஏதும் இல்லை” என்று சொல்லும் பொழுது நாம் மிருக நிலைகளில் இருந்து உயர்ந்த நிலைகளைத் தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளை எடுத்து மனித உடலைப் பெற்றோம் என்று விநாயகருக்கு முன் போன உடனே பார்க்கின்றோம்.

எனக்குள் நல்ல வினைகளாக இருந்தாலும் சந்தர்ப்பத்தால் எனக்குள் சீக்காக வந்து வினை தடுமாறிக் கொண்டு இருக்கின்றது. நாம் தப்பு செய்யவில்லை. நல்வழியைத் தேடுவதற்கு என்ன வழி…? என்று ஞானி சொன்னான்.

விநாயகரைப் பார்த்த உடனே இந்த உண்மையான நிலைகளை எனக்குக் காட்டியது…! நான் மிருக நிலைகளில் இருந்து மனிதனாக வந்தேன் மிருக குணத்திலிருந்து விடுபட்டேன். மனிதன் என்ற பண்புடன் வந்தேன் இந்த மனிதப் பண்பு கொண்டு அறிந்துணர்ந்து செயல்படும் ஒளியின் தன்மை நான் பெற்றேன்.

ஆனால் முழுமையும் பெற்று ஒளியான சரீரம் பெற்றால்… அதிலிருந்து விடுபட முடியும் என்று நமக்கு உணர்த்திய… அதாவது
1.தனக்குள் தானே அறிந்து… தனக்குள் வெளிப்படுத்திய
2.அந்த மெய் ஞானியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறார்கள்.
3.வாழ்க்கையில் வரும் இன்னல்கள் அனைத்தையும் மறந்து விட்டுத் தனக்குள் இருக்கும் ஈசனை வேண்டச் சொல்கிறார்கள்.

வாழ்க்கையில்.. இங்கே இவர் என்ன செய்தார்…? அங்கே அவர் என்ன செய்தார்…? இவர் இப்படிச் செய்தார் அவர் அப்படிச் செய்தார் என்று கண்ணிலே பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும் பொழுது நமக்குள் எத்தனை தொல்லைகள் வருகின்றது…?

நான் இப்பொழுது திருடப் போக வேண்டும் என்று எண்ணும் பொழுது அடுத்து நல்லதாக வேண்டும் என்று எண்ணினாலும் கூட அந்த நினைவுக்குத் தகுந்த மாதிரி என் கண் என்ன செய்கின்றது…? அதற்குத் தகுந்த மாதிரி வழிகாட்டுகின்றது

அந்த வீட்டுக்காரர் இருந்தார் என்றால் வீட்டுக்காரர் இருக்கிறார்… நீ இப்படிப் போய்த் திருடப் போ என்று நினைப்பதற்கெல்லாம் வழி காட்டுகின்றது. யார்…? கண்ணன்.

ஆனால் அந்த வீட்டுக்காரனை என்ன செய்கின்றது…? அவன் திருட வருகின்றான்… அவனை இப்படிப் போய் பிடித்துக் கொள் என்று அவன் நினைப்புக்கு அந்த உணர்வுக்குத் தகுந்த மாதிரி அந்தக் கண் வேலை செய்கின்றது.

அதனால் தான்
1.இந்த உடலின் உணர்வுக்கும்… எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் கொண்டு உனக்கு உடலாக
2.இந்த உடலினை உனக்குப் படைத்துக் கொடுத்தவன் உன் உயிர்.
3.அங்கே அவனை நினைக்கச் சொல்கின்றான் இந்த நினைவின் தன்மையை.

காரணம்…
1.நீ எண்ணும் அந்த உணர்வின் எண்ண அலையை உனக்குள் படைத்து
2.இங்கு படைப்பு எப்படி ஆனதோ…? அவனுடன் ஒன்றிய… உன்னுடன் ஒன்றி
3.உனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரான அவனிடத்திலே
4.குரு அது – உனக்குள் படைத்தான்… வழி காட்டினான்… சிருஷ்டித்தான்
5.நீ எண்ணிய உணர்வு எதுவோ அந்த உணர்வுக்குத் தக்கவாறெல்லாம் அந்த உணர்வின் மணங்கள்
6.நீ நினைப்பதை எல்லாம் கண்ணின் வழி கொண்டு உனக்கு வழிகாட்டுகின்றான்.

அதைப் போல் மெய் உணர்வின் தன்மை மெய்யைக் காணும் நிலைகள் கொண்டு ஒளி கொண்டு இது தீயது… இது நல்லது என்று இணைக்கும் பொருளான எண்ணத்தின் தன்மை தனக்குள் குருவாக இங்கே உண்டு.

மனித உடலில் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள. விஷத்தை மலமாக மாற்றி… தீயதை நீக்கி நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்ற இந்த உடலில் உள்ள ஆறாவது அறிவின் தன்மை குருவாக.. குருபரனே என்கிற பொழுது… பரந்து கிடக்கும் பரத்தின் அலையின் தன்மையை… காரம் இனிப்பு புளிப்பு துவர்ப்பு இதை ஒன்று சேர்த்து ஒரு குழம்பாக நாம் எப்படிச் சுவையாக்குகின்றோமோ இதைப் போல
1.இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுக்க வேண்டியது
2.ஒளியின் சரீரமாக மாற்றிய அந்த மெய் ஞானியின் அருளாற்றல்கள் தான்
3.அந்த உணர்வின் தன்மை நீ பெறு… அந்த உணர்வின் ஆற்றலை உனக்குள் எடு.

இன்று நீ மனிதனாக வந்தாலும் இந்த மனித உடல் விஷத்தை மலமாக மாற்றிய பின் இந்தப் பேரண்டத்தின் உண்மையை உணர்ந்து விஷத்தின் தன்மை வந்தாலும்
1.தனக்குள் உணர்வின் ஒளியாக… ஒளிச் சுடராக… ஒளியின் நிலையாக
2.உடலை விட்டுச் சென்ற பின் எந்த விஷ உடலும் தன்னைக் கவராத நிலையில்
3.நிலையான சரீரமாக இன்றும் சுழன்று கொண்டிருக்கும் அந்த மெய் மெய் ஞானிகள் காட்டிய வினையைச் சேர்த்துக் கொள்ள
4.இந்த விநாயகனைக் காட்டி… மனித உடலுக்குள் பேரண்டத்தைத் தனக்குள் உணர்த்தி
5.இந்த உண்மையை எனக்கு ஊட்டி… அந்த உணர்வினை எனக்குள் வளரச் செய்த மெய்ஞானியின் அருள் ஒளியை பெற வேண்டும் ஈஸ்வரா என்று
6.தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருக்கக் கூடிய உயிருக்குள் அதை ஊட்டச் செய்து
7.அந்த உணர்வின் அலையைத் தனக்குள் அது இறுகச் செய்து அந்த அலையின் தன்மை கொண்டு இவ்வினையைச் சேர்த்து
8.தனக்குள் நல்வழி காட்டிய குணத்திற்குள் நல்லதைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
9.எண்ணிய வேதனையான உணர்வின் தன்மை தனக்குள் அது வராது தடுத்து
10.அந்த ஆற்றல் மிக்க மெய் ஞானிகளின் சக்தியினைப் பெற்று இந்த வினையை… அந்த மெய் ஒளியைச் சுவாசிக்க வேண்டும்

கோவிலுக்குள் சென்ற உடனே இந்தத் தெய்வ குணத்தை நான் பெற வேண்டும் என் மூச்சும் பேச்சும் இந்த நிலையாக நிலை பெற வேண்டும்.

எனக்குள் வெளி வந்த இந்த உணர்வின் தன்மை அறிந்துணர்ந்து பக்குவப்படுத்தும் இந்த உணர்வின் தன்மையை மகிழ்ச்சி ஊட்டும் இந்த மலரைப் போல மணம் பெற வேண்டும்.

சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் இனிமை பெற வேண்டும் என்று உணர்த்திய ஆலயத்திற்குள் நாம் சுழன்று வரப்படும் பொழுது தூப ஸ்தூபிக்கு முன் நின்று சன்னதியைப் பார்க்கப்படும் பொழுது… இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்… இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… இது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் படர வேண்டும்… எங்கள் மூச்சும் பேச்சும் சொல்லும் செயலும் அனைத்தும் இந்தத் தெய்வ நிலைகள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.தனக்குள் இந்த நினைவின் தன்மையை விண்ணில் எட்டாத தூரம் கொண்டு செலுத்தி
2.அங்கிருக்கக்கூடிய ஓங்காரத்தைத் தன் உணர்வுகளுக்குள் ஏற்றி விண்ணை நோக்கி ஏகி
3.மெய் ஞானிகளின் அருள் ஒளியை இங்கே ஈர்த்து இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்ப்பிக்கும் நிலையே ஆலயம்.

ஆக… நம்மை அறியாது நமக்குள் வந்த தீமையை மாய்க்கும் உணர்வினை… விஷத்தன்மையை முறியடிக்கும் ஆற்றல் மிக்க சக்தியைக் காட்டினான் ஆலயத் திருப்பணியிலே “அன்று திருமூலர்…”

இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிருக்குள் இயங்கும் ஒலியின் சூட்சமம்

உயிருக்குள் இயங்கும் ஒலியின் சூட்சமம்

 

திருமூலர் உணர்த்திய நடராஜா என்றால் எது…? நமக்குத் தெரியவே தெரியாது. அதற்கு உருவம் கிடையாது. ஆனால் நடராஜாவை வைத்திருக்கின்றார்கள். ஆனால் அந்த நடராஜாவினுடைய தன்மை என்ன…?

நம்முடைய பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது. இதற்குப் பெயர் நடராஜா.
1.நடராஜா என்கிற பொழுது…
2.இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…”

இந்தப் பூமி நடராஜா நிற்காமல் ஓடுகின்றது. அதற்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மையும் எடுத்துக் கொண்ட பின்.. அந்த பூமியின் சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.

அதே சமயத்தில்
1.அது மோதும் நிலைகள் கொண்டு ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல் எப்படி…?
2.இது ஒலி ஒளி என்ற நிலைக்கு… பூமியின் தன்மை மாறிய பின் அது மனித உடலாக வருவதற்குள்
3.பல ஆயிரம் உடல்கள் எடுத்து ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி
4.அதாவது புலிக்குக் கோபம்; மானுக்குச் சாந்தம்; மாடு எருமைக்கு அசுர குணங்கள் என்று இதைப் போல
5.ஒவ்வொரு குணத்தையும் தனக்குள் வளர்த்துக் கொண்ட நிலையை அது 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு
6.1008 நடனங்களைக் காட்டுகின்றான் திருமூலர்.

எது…? சிவ நடனத்தைப் பற்றி நடராஜா என்கிற பொழுது… பூமி என்ன செய்கிறது…? ஓங்கார நடனம். அதாவது அது சுற்றும் பொழுது… சுற்றும் வேகத்திலேயே ஓங்காரக் காளி.

தீய சக்திகள் அனைத்தையும் அது என்ன செய்கின்றது…? அழிப்பதாக… தனக்குள் அசுரனைக் காலில் போட்டு மிதிப்பதாக அது தான் அந்த ஓங்காரக் காளி என்பது.

பூமி சுழலும் பொழுது ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி தனக்குள் வருவதை அது நசுக்கித் தீயதை அது மிதிக்கும் நிலைகள் கொண்டு அசுரனைக் காலில் மிதிப்பதாகக் காட்டப்பட்டிருக்கின்றது அங்கே.

அதைப் போல மனிதர்கள் நாம் கோபப்படும் பொழுது சுவாசித்த உடனே உயிருக்குள் பட்டு எரிச்சலாகின்றது. ஆனால் அதே சமயம் அந்த உணர்வின் சக்தி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தும் அது தனக்குள் எரிச்சலான உடனே இந்த உடலான சிவம் என்ன செய்கின்றது…?
1.ஓங்கார நடனம் இரு உன்னை நான் அழித்து விடுகின்றேன் என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.எது…? சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகின்றான் என்றால் இந்த உணர்வின் சக்தியான நிலைகள் – இந்த ஒலி ஒளி.

தாவர இனங்களின் மணம்… அதனுடைய குணம்… ஆனால் அதனுடைய உணர்வு, இயக்கம். மிளகாயை வாயில் போட்டால் என்ன செய்யும்…? காரம் ஆ…ஆ.. என்று அலறுகின்றோம். கசப்பை வாயிலே போட்டால் நமக்கு உமட்டல் என்ற நிலை வருகின்றது.

இதைப் போலத் தான் இந்த உணர்வின் சக்தி பூமி நடராஜா நிற்காமல் அது சுழல்வதினால் அதனின் உணர்வைக் கொண்ட ஜீவன் கொண்ட நாம்… அது எப்படி இருக்கின்றோம் என்பதே இந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.

ஆனால் இந்த ஸ்தல புராணத்தின் தத்துவத்தை… இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை. இங்கே தான் இருக்கின்றோம்.

அன்று ஓர் மந்திரத்தைக் கற்றுக் கொண்டான். கற்றுக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு ஓர் ஏழ்மையின் உடலுக்குள் வரும் பொழுது இங்கே பார்க்கும் மன மகிழ்ச்சியின் தன்மை கொண்டு மெய்யுணர்வினுடைய நிலைகள்.பெறும் சந்தர்ப்பமாகிறது.

அரசனாக இருக்கும் போது தன் சுகபோகங்களுக்கு எத்தனை பாவங்கள் செய்தாலும்… பாவ நிலைகள் கொண்ட ஒருவனைத் தீண்டி அந்த உடலுக்குள் உட்புகுந்தாலும்… இந்த ஏழ்மையின் உணர்வுக்குள்… “மகிழ்ச்சியான ஆடம்பரமான உணர்வுகள் கற்றுக் கொண்ட நாம் இப்படி இருக்கின்றோமே…” என்ற நிலைகள் கொண்டுதான் அவன் மீண்டும் தான் இந்த உடலில் இருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று அதனின்று அந்த உடலில் இருந்து உயிரை விஷத்தின் தன்மை கொண்டு தீண்டி வெளியேற்றினாலும் தன் அருகிலே அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மையைத் தான் செயலாக்கி வந்தது தான்… இந்த நடராஜனுடைய சிவபுராணம் திருச்சிற்றம்பலம்.

நம் உடலுக்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு நாம் எந்தெந்த குணங்கள் கொண்டு உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்.

1.இந்த உடல் திருச்சிற்றம்பலம் என்று… சிறு உடலுக்குள் இருந்து இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினான்.
2.இந்தச் சிற்றம்பலத்தின் தன்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.

அதைப் போல அன்று உண்மையினுடைய நிலைகள் நடராஜா என்கிற பொழுது நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை இயக்குகின்றது.

இது தான் விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா. நீ எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றாயோ அந்த உணர்வின் தன்மை இந்த உடலை அந்த நிலைகளுக்கு ஆளாக்குகின்றது.

கீதையினுடைய தத்துவமே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.

நாம் மாம்பழம் வாங்க வேண்டும் என்று ருசிக்கும் தன்மை கொண்டு அங்கே நடந்து செல்கின்றேன். ஒருவனை அடிக்க வேண்டுமென்று உணர்வைத் தூண்டும்போது அவனை அழித்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

அந்த அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் தன்மையை எனக்குள் இந்த உணர்வின் தன்மையை (அழிக்கும் உணர்வை) எனக்குள் எடுத்துத்தான் அங்கே அவனை அழித்து விடுகின்றேன் முன் பகுதியில். பின் பகுதி இந்த உணர்வே என்னை அழித்து விடுகின்றது.

இப்பொருளைக் காட்டுவதற்குத் தான்… கண்ணன் கீதா உபதேசம் சொன்னான் என்றால் நாம் ரோட்டிலே போகும் போது இது பள்ளம் இது மேடு இது தீயது இது கெட்டது என்று கண் நமக்கு வழிகாட்டுகின்றது.

கீதையிலே கண்ணன் அர்ஜுனனுக்கு வழிகாட்டிச் செல்கின்றான் என்று சொன்னது. நமது கண் இன்று நமக்கு உபதேசம் எப்படிச் சொல்கின்றான். மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான் அவன் தகாதது செய்கின்றான்.

கார் ஒட்டிக் கொண்டு போகும் போது எத்தனை வேலை நடக்கின்றது…? இங்கே வந்துவிட்டால் அவன் மோதி விடுவான் என்று இந்தக் கண்தான் அங்கே உபதேசிக்கின்றது.

உன்னை வண்டியை இப்படி ஓட்டு… “உன்னை இப்படி ஓட்டு…” என்கின்ற இந்த உணர்வினுடைய நிலைகள் அங்கங்களை இயக்குவது எது…?
1.நம் கண் பார்க்கின்றது,.. அந்த உணர்வு இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் இயங்குகின்றது.
3.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இயங்கினாலும் இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகின்றது.

இதைப் போல நாம் கொடுக்கும் உபதேசத்தின் தன்மையை… தன்னைக் காக்கும் உணர்வை நாம் எடுக்கும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு வருகின்றது.

ஆனால் அதே சமயம் ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வின் நிலையே… அவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.

அவனை அழிக்கும் வேதனையைச் சிந்திக்க முடியாத நிலையை எடுக்கும் பொழுது அந்த வேதனை உணர்வுடைய எனக்கு அந்த வேதனையான உணர்வே எனக்குள்ளும் நல்ல குணங்களை அழிக்கின்றது.

அதனால்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். விநாயகர் தத்துவத்தில் நீ எதை சுவாசிக்கின்றாயோ அதுவாகின்றாய். இது தான் ருத்ரதாண்டவம்.

1/தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இங்கு எப்படி அங்கங்கள் துடிக்கின்றதோ இதைப் போல
2.எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை இந்த எண்ண அங்கங்கள் எப்படிப் பாசமாக அணைக்கின்றதோ
3.எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படி,,,? என்று… நடனத்தைப் பற்றி அபிநயம்.
4.எடுத்துக் கொண்ட இனிமையின் நிலைகளுக்கொப்பத் தன் அங்கங்களினுடைய அசைவுகள்
5.இந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது…? என்பது தான் – அது உணர்வின் ஒளி ஒலி என்ற நிலை

ஒரு தாவர இனத்திற்குள் எடுத்துக் கொண்ட மணமும் அந்த உணர்வின் தன்மை மோதும் பொழுது இலையின் ரூபங்களும்… இந்த நாதத்தைப் பற்றி அன்று எழுதிய… அதே நாதத்தின் இயக்கத்தின் தன்மையை திருமூலர் காட்டி இருக்கின்றார் என்றால் இந்த ஒலி ஒளி என்ற நிலைகள் உட்பொருள் எவ்வளவோ அடங்கி இருக்கின்றது.

1.ஒலி பற்றி இன்று நாம் பல வியாக்கியானங்கள் செய்யலாம்.
2.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்ற அந்த மெய் ஒளியைக் காட்டியது இந்த ஸ்தலம் தான்.

விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது அங்கு ஓங்காரமாகி பல நிலைகளாகிப் பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கினாலும்…
1.ஒவ்வொரு தாவர இனத்துக்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்
2.அந்த உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
3.அதை உயிரினங்கள் சுவாசிக்கும் உணர்வு கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்…
4.அது எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு உடலின் அமைப்பும்…
5.இந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருவமும் உருமாற்றமும்
6.அந்த உணர்வுக்குள் ஒளியின் மகிழ்ச்சியும் அந்த ஒளியின் தன்மை கொண்டு ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று
7.திருமூலர் பாடிய இந்த ஸ்தலத்தினுடைய உண்மைப் பொருளை நாம் இன்றும் காண முடியாத நிலைகள் இருக்கின்றோம்.

ஏனென்றால் நாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்…
1.இந்த மூலஸ்தானத்தில் நாம் எதை அறிந்து கொள்ள வேண்டும்…? என்பதைப் பற்றித்தான் இப்பொழுது யாம் சொல்வது
2.இதையெல்லாம் ஏன் பேசுகின்றேன் என்றால் நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிடமிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத்தான்.

பதஞ்சலி திருமூலரான சந்தர்ப்பம்

பதஞ்சலி திருமூலரான சந்தர்ப்பம்

 

கோயிலில் இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்பதே ஞானிகள் காட்டிய வழி. நடராஜா என்று நடராஜரினுடைய தத்துவத்தைக் கொடுத்தது யார்…? திருமூலர்.

அந்தத் திருமூலர் என்ன செய்தார்…?

அதற்கு முன்னாடி ஒரு அரசனாகப் பதஞ்சலியாக இருந்தார். அரசனாக இருந்து அவர் கற்றுக் கொண்ட நிலைகள் கொண்டு மந்திரங்களை ஜெபித்தார்.

அரசர்கள் படையெடுத்து வரப்படும் பொழுது உடனே கூடு விட்டுக் கூடு பாயும் நிலையாகப் பாம்பு உடலில் புகுகின்றார். அந்தப் பாம்பு உடலில் இருந்து தப்பித்து வந்து விடுகின்றார்.

ஆனால் இவர்களிடம் இருந்த சேனாதிபதி என்ன செய்கின்றார்…? இந்த உடலை ஒரு மறைவிடத்தில் கொண்டு வைத்து விடுகின்றார்கள். காரணம்… படையெடுத்து வந்த பிற்பாடு அந்த உடலுக்குள் வந்து மீண்டும் தான் தப்பிப்பதற்கு.

ஒரு குகைக்குள் ஒளித்து வைத்து விடுகின்றார்கள். தான் உடலின் தன்மை எடுத்துப் பாம்பு ரூபம் எடுத்து வெளியில் வந்தாயிற்று.

ஆனால் அவர் தப்பித்து வருவதற்கு இந்த உடலுக்குப் பாதுகாப்பான கவசம் கட்டி அது வைக்கப்படும் பொழுது அந்த உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்குச் சில வேலைகளைச் செய்கின்றார்கள்.

1.படையெடுத்து வரும் பொழுது அதற்கு உண்மையான ஒருவர் காவலுக்கு இருக்க வேண்டும்.
2.ஆனால் எதிரி படையெடுத்து வரப்படும் போது இந்த உடலினை (அரசனை) அழித்துவிட்டு
3.எதிரி அரசனுக்கு அங்கிருக்கக்கூடிய சேனாதிபதி இதை வழிகாட்டி விடுகின்றான்.

இந்தப் பாம்பு உடலுக்குள் பதஞ்சலி வந்த பிற்பாடு தப்பித் தவறி வந்து மாடு மேய்ப்பவனை விஷத்தால் தீண்டி அந்த உடலுக்குள் புகுகின்றான்.

1.இங்கே அந்த மாடு மேய்ப்பவன் உடலுக்குள் வந்து அவன் வீட்டிற்குள் சென்ற உடனே
2.வரவேற்பும் பல நிலைகள் வந்த உடனே இங்கே அதிசயத்தைக் காண்கின்றான்.

ஆனால் முதலில் அரசனாக இருந்த ஆத்மா இந்த எளிய உடலுக்குள் வந்து
1.இந்தக் குடும்பத்திற்குள் வந்த உடனே அது எப்படி…? என்ற நிலையைப் பார்த்த உடனே அந்த வீட்டில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியும்
2.ஏழ்மையாக இருந்தாலும் எப்படி இருக்கின்றார்கள்…? அந்த வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று எண்ணுகிறான்.

காரணம் தான் அரச போகங்களில் இருந்தாலும் தன் மனைவியும் ஒரு அரசனின் மகள். அதனால் அங்கேயும் பயப்பட வேண்டும். சேனாதிபதிக்கு அதிகாரம் கொடுத்தாலோ அவனிடம் சிறு மாற்றம் ஆனாலோ எதிர்நிலையை உண்டாக்குகின்றான். அதே சமயத்தில் மக்களின் நிலைகளிலும் ஒரு மாற்றமானாலும் இது எப்படி ஆகின்றது…?

1.அழித்தல் ஏவல் காத்தல் என்ற நிலைகளில் மந்திரங்களை நாம் கற்றுக் கொண்டாலும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
2.”அரசனாக இருந்தாலும்…” ஒவ்வொரு நிமிடமும் தான் பயந்தே வாழ வேண்டி இருக்கின்றது என்று இந்த நிலையை எண்ணிச் சிந்திக்கின்றான்.

இந்த ஏழ்மையின் நிலையில் இருந்த திருமூலரின் உடலில் புகுந்த்து பதஞ்சலி என்ற அந்த அரசனுடைய உயிராத்மா தான்.

அரசனாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட மந்திரம் ஏவல் பில்லி சூனியம் அதன் மூலம் எல்லாவற்றையும் தனக்குள் அறிதல் காத்தல் அழித்தல் என்ற நிலையினை வளர்த்துக் கொண்ட அந்த ஆத்மா இந்த உடலுக்குள் வந்த பிற்பாடு இந்த உண்மையை அறிகின்றது.

உண்மையை அறிந்த பிற்பாடு தான் “நடராஜா…” என்ற இந்தப் பெயரை வைத்தான்.