பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றி இங்கே உபதேசிக்கும் பொழுது… அவன் கண்ட உணர்வுகளை நீங்கள் நுகர நுகர… அந்த அணுக்கருக்களாகப் படிப்படியாக உங்கள் உடலுக்குள் மாற்றம் ஆகும்.

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தாக உங்களுக்குள் மாறி அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றிடும் அணுக்கள் பெருகும்.

அத்தகைய அணுக்கள் பெருகினால்…
1.பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லும்
2,அடுத்து நாம் பிறவியில்லா நிலையை அடையலாம்.

உதாரணமாக ஒரு நண்பர் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை அதிகமாக நாம் நேசித்து விட்டால் அவரின் உனர்வு நமக்குள் விளையத் தொடங்குகிரது.

ஆனால் நண்பர் உடலில் வேதனை அணுக்கள் பெருகி வளர்ந்த நிலையில் நோயை விளைய வைத்த அந்த உயிரான்மா வெளி வந்துவிடுகிறது.

வெளி வந்தபின் நம் உடலில் புகுந்து விடும். ஏனென்றால் அவருடைய உணர்வு நம் உடல் வலிமையாக இருக்கும் பொழுது நமக்குள் வந்துவிடுகின்றது

உதாரணமாக ஒரு ஆடு நரியைப் பார்த்து அதனுடைய வேக உணர்வைக் கண்டு அஞ்சி… அதையே சுவாசித்தது என்றால் நரியின் உணர்வை ஆடு நுகர… நுகர… அந்த நரியின் வலுவான உணர்வு ஆட்டின் உடலுக்குள் வந்த பின் நோயாக மாறுகின்றது.

பின் நரியை எண்ணி எண்ணி இந்த உடலின் தன்மை வலுப் பெற்று விட்டால் ஆடு மடிந்த பின் உடலை விட்டு வெளி வரும் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சியில் நரியாக விளைகின்றது.

இப்படித் தான் நாம் பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக இன்று வந்துள்ளோம். ஆனால் நோயுற்றவரின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகப் பெருக்கிய பின் அதே நோயின் தன்மை நமக்குள்ளும் வளர்கிறது.

நோயினால்…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றி… விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி
2.எந்த மனிதன் பாசத்துடன் நம்மை அதிகமாக நேசித்தானோ
3.நாம் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் செல்வோம்… நம் இருப்பிடம் அதுதான்

ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஞானிகளும் மகரிஷிகளும் பிறவியில்லா நிலையை அடைந்து அகண்ட அண்டத்தில் இன்றும் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என்று முடிவடைந்த அந்த உயிர்கள்
2.அகண்ட அண்டத்தில் எங்கே… எது… உருவானாலும்
3.அதனின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
3.இப்படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒளியாக ஆனவர்கள் உண்டு.

நம் சூரியக் குடும்பம் மட்டும் இந்த அண்டத்தில் வாழவில்லை. எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் உண்டு ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் நம் பூமியைப் போன்று ஒரு பூமி உண்டு.

அதிலே வடித்த உணர்வுகள்… அதிலே உருவான உயிர்களுக்கு ஒளியாக மாறும் ஆற்றலும் உண்டு, அத்தகைய நிலையை நாமும் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

பல கோடி அகஸ்தியர்களை இந்தத் தென்னாட்டிலே நாம் உருவாக்குவோம்

பல கோடி அகஸ்தியர்களை இந்தத் தென்னாட்டிலே நாம் உருவாக்குவோம்

 

நமக்கு யாரும் எதிரி இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்துவோம். நாம் நுகரும் உணர்வே நமக்குள் எதிரி ஆகின்றது. நாம் நுகர்ந்த உணர்வே நமக்குள் எதிரியாக நம்மை இயக்குகின்றது.

பகைமை கொண்ட உணர்வோ வெறுப்பு கொண்ட உணர்வோ நுகர்ந்தால் நமக்குள்ளே எதிரி இருக்கின்றது… நமக்குள் எதிரியாக இருந்து நம்மைக் கீழான நிலையில் வாழச் செய்யும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவோம் என்று உறுதி கொள்வோம்.

1.தாய்மார்கள் இங்கே வந்தோர் அனைவரும் நீங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகாலட்சுமியாக
2.சர்வ ஞானத்தையும் வளர்த்திடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… மகாலட்சுமியாக வாழ வேண்டும்.

சர்வத்தையும் ஒவ்வொரு குடும்பத்திலும் பேணிக்காக்கும் நிலைகளை இங்கே வளர்த்துக் கருவுறும் குழந்தைகளுக்கு இதைப் போன்றே அந்தக் குடும்பத்தில் பற்றுடன் இருங்கள்.

சில குடும்பங்களில் பார்த்தால் வரதட்சனை என்று குறைகளை வளர்த்துக் கருவுறும் போது சண்டைகள் இட்டுக் கொண்டு இந்த உணர்வின் தன்மை கருவிலே வளர்ந்தால் அவன் பிறந்ததிலிருந்து வளர்கின்ற வரை குடும்பத்தில் இன்னல்களைத் தான் உருவாக்கும்… நன்மைகள் தருவதில்லை.

ஆகவே ஒவ்வொரு நிமிடத்திலும் கருவில் வளரும் குழந்தைகளை நீங்கள் மகா ஞானிகளாகவும் சர்வ சக்தியைப் பெறக்கூடிய உத்தமனாகவும் உருவாக்க வேண்டும்.

விஞ்ஞானி செய்கின்றான்… மற்ற உணர்வின் தன்மையை மற்ற உடலுக்குள் பதியச் செய்து உணர்வை மாற்றுகின்றான். அதே சமயத்தில் எலும்பில் உள்ள அணுக்களை எடுத்து அதிலே மற்ற பக்குவப்படுத்தி இன்னொரு மனித உடலில் ட்யூபில் அதன் உடலுக்குள் இணைத்து விட்டால் அதன் தொடர்பு கொண்டு அந்த எலும்பே உருவாகின்றது. அந்த எலும்பை உருவாக்கும் தன்மையும் கற்றுக் கொண்டுள்ளார்.

ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் நோயாக வருகின்றது என்று தெரிகின்றோம். நோயை நீக்கிச் சர்வத்தையும் வென்றிடும் அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

நம் குடும்பத்தில் குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டாலே போதும்.
1.அந்த ஒன்றில் இருந்து தொண்ணூறுக்குள் ரொம்ப சர்வ ஜாக்கிரதையாக ரொம்ப வலிமை மிக்க உணர்வை நமக்குள் எடுத்து
2.அந்தக் கருவில் வளரும் குழந்தை எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையினை நாம் உபதேசிக்கும் உணர்வினை எடுத்து ஓதச் செய்யுங்கள்…
3.அதை உணரச் செய்யுங்கள்… அதைக் கருவில் வளரச் செய்யுங்கள்… ஞானியாக்குங்கள்.

உலகையே காத்திடும் அருள் ஞானிகளை நாம் இன்று உருவாக்க வேண்டும். உலகம் எத்தனையோ சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றது. ஆகவே இதிலிருந்து நாம் மீட்டுதல் வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் எல்லா நாட்டிற்கும் இதனைத் தொடர் வரிசையில் இன்றும் துருவ நட்சத்திரத்தில் இருந்து இயங்கும் அளவிற்கு அவனுடைய தீமையை அகற்றும் சக்தி பெறுகின்றது.

1.ஆகையால் மீண்டும் தென்னாட்டிலே ஞானிகளை உருவாக்க வேண்டும்.
2.உலகில் உள்ள தீமைகளை அகற்றுங்கள்.
3.விஞ்ஞான அறிவால் பூமியில் வரும் இந்த ஓசோன் திரை கிழிந்து விஷத்தன்மை நம் பூமியில் பரவி இருப்பதை அகற்ற
4.நாம் அந்த ஞானிகளை உருவாக்க வேண்டும்.

நம்மால் முடியவில்லை என்றால் நம் எண்ணத்தின் தன்மை கொண்டு நல்ல உணர்வுகளை ஊட்டி ஒற்றுமையாக இருந்து பக்குவப்படுத்தி நாம் கோயில்களில் எப்படி ஆலயங்களில் எண்ணுகின்றோமோ இதைப் போன்ற ஞானத்தின் உணர்வை அந்தக் கர்ப்பமான தாயைக் கேட்கச் செயுங்கள்.

தாயின் கருவில் அது ஞானத்தை வளர்க்கச் செய்யும்… உலக ஞானத்தைப் பெறச் செய்யும். அவன் வளர நாட்டையும் ஊரையும் உலகையும் நம்மையும் காக்கும் அந்த அரும்பெரும் சக்தியாக நாம் உருவாக்கிப் பழகுவோம்.

பத்தாவது நிலையை நாம் பெற நம் குழந்தைகளை அருள் ஞானிகளாக ஆக்குவோம்.
1.உலகைக் காக்கச் செய்வோம்
2.தென்னாட்டிலே தோன்றினான் அகஸ்தியன்… மீண்டும் அதே தென்னாட்டிலே அதே ஞானியாக நாம் உருவாக்குவோம்.
3.உலக ஞானத்தை உலகிற்கே எடுத்துக்காட்டும் உணர்வை நாம் வளர்ப்போம் என்று பிரார்த்தித்து இதை நிறைவு செய்கின்றேன்.

நம் வாழ்க்கையில் இருள் என்பது எது…?

நம் வாழ்க்கையில் இருள் என்பது எது…?

 

அங்கிருந்து ‘வாருங்கள்..’ என்று கூப்பிடுகிறேன்.
1.ஆனால் அதே சமயம் ‘வாங்க…!’ என்று சொன்னால்
2.என்ன இப்படி வெடுக்… என்று கேட்கின்றார்…? அதே சொல் தானே…!
3.அந்தஸ் சொல்லுக்குள் இந்த உணர்ச்சிகள் வித்தியாசமாக இயக்குகிறது..

கண்ணாடி தெளிவாகத் தெரிகிறது… தட்டினால் உடைந்து விடும் என்று தெரிகின்றது. அதிலே பெயர் அடிக்க வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த அடி கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அதில் எழுத முடியாது. பேனா உடைந்து விட்டால் அதை வைத்து எழுத முடியுமா… என்ன செய்வது…?

இதே மாதிரி நமது ஆன்மா ஒரு கண்ணாடிக்குச் சமம் அதிலே அந்த வேதனை என்ற அழுக்கானால் படிந்து விடும் நல்ல குணத்துடன் வெறுப்பின் தன்மை அழுக்கு அடைந்துவிடும்.

அதற்குப் பிறகு சிந்திக்கும் தன்மை இழந்து விடும். அவன் பார்வையில் இருக்கும் அந்த மனது என்ன செய்கிறது…?

நாம் சொன்னவுடன் அவன் பார்க்கும் அந்த நிலை அழுக்கடைந்து விடும். அப்போது நாம் மீண்டும் அழுக்கைத் தான் சேர்க்கின்றோமே தவிர அதை துடைத்துப் பழக வேண்டும்.

நாம் சொல்லும் உணர்வு கொண்டு இப்படி இருக்கிறதப்பா என்று சொல்லித் துடைத்து விட்டோம் என்றால் தன்னை உணரக்கூடிய சக்தி வரும்.

இப்பொழுது நம் கடையில் வந்து ஒரு கடன்காரன் வந்து கேட்டுச் செல்கின்றான். உடனே அந்த வெறுப்பு என்ற வேதனை வருகின்றது… விஷம் என்ற நிலையை உணர்த்துகின்றது. அதைப்போல் நம்மிடம் சுருக் என்று கேட்டுச் செல்கின்றான் பார்…!

அடுத்தாற்படி வந்து கடன்காரன் வந்து கேட்கின்றான் என்றால் கொடுத்துப் பாருங்கள். இந்த மாதிரிக் கடன் கொடுத்திருக்கின்றது என்று இவனிடம் வெறுப்பாகச் சொல்வோம். உனக்குக் கடனும் இல்லை ஒன்றும் இல்லை என்று சொல்வோம்.

முதலில் கொடுத்துப் பழகிவிட்டோம். கடன் கொடுத்துப் பழகியதை வெறுப்பாகச் சொல்லும் பொழுது அடுத்த பக்கத்தில் கடன் தரத் தயாராக இருப்பார்கள்… அங்கே போகின்றார்கள்.

அங்கு சென்றவுடன் வாங்கிய கடனைச் சரியாகக் கொடுப்பார்கள். அன்றைக்கு நம்மை வெறுத்தார்கள்… அவருக்கு என்ன திருப்பிக் கொடுப்பது என்று நம்மை எண்ணுவார்கள்.

வெறுப்பின் தன்மையால் இப்படி ஆகிறது. இது இயற்கை சில சந்தர்ப்பங்களில் நுகரும் உணர்வுகள் இப்படி இயக்குகிறது.

அடுத்தாற்படி நல்ல காசு கொடுத்து வாங்குபவர்கள் வருகின்றார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது நம் சொல் சரியாக வருவதில்லை. சரக்கை எடுத்துக் கொடுக்கப்படும் பொழுது சரியான பதில் வராது.

அவர்கள் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் நாம் வெறுப்படைந்த நிலைக்குத் தகுந்த மாதிரி சாமானை எடுத்துக் கொடுப்போம்.

பார்க்கலாம்… சில நேரங்களில் வெறுப்பாக இருந்தால் உப்பிற்கு பதிலாக பப்பு என்று சொன்ன மாதிரி எதையாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்போம்.

என்னங்க நான் எதை கேட்கின்றேன்.. நீங்கள் எதைக் கொடுக்கின்றீர்கள் என்பார்கள். இரண்டு முறை நமது உணர்வுகள் இப்படி மாறி வந்தவுடன் என்ன ஆகிறது.

எதையாவது ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லாதபடி எதையாவது கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி என்ற இந்த வம்பு வரும். அவர்கள் சொல்வது நம் காதில் சரியாகக் கேட்காது குற்றவாளியாக நம்மை மாற்றும். அப்பொழுது எது செய்கிற…?

இதே மாதிரித் தான் தறி நெய்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் கொஞ்சம் வெறுப்பாகிவிட்டால் போதும். நிச்சயம் நாடா ஒரு பக்கம் சென்று நூலை அற்றுக்கொண்டே போகும்.

அதே சமயத்தில் முன்னாடி எதிரில் தெரிந்துள்ள நூல் அறுந்திருக்கும். அப்பொழுது என்ன செய்யும்…? அறுந்தது நமக்குத் தெரியாதபடி இருப்போம்.

அதை எடுத்தவுடன் இங்கே சிக்கலாகி வந்துவிடும். அப்பொழுது என்ன செய்யும்…? இங்கே வெறுப்பாக இருப்பதனால் எதிரில் இருக்கக்கூடிய நூல் அறுந்ததைக் காண முடியாது.

உதாரணமாக ஒரு காரியத்திற்கு நீங்கள் அவசரமாகப் போக வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பாருங்கள். கையிலே சாமானை வைத்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால் அதைக் காணோம் காணோம் என்று… எங்கே…? இங்கே தானே வைத்தேன் என்று வீட்டில் சண்டைக்குச் செல்வீர்கள். ஆனால் அவர்களும் இந்தப் பதட்டத்தில் கையில் தான் இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள்.

இவர்களும் சேர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடைசியில் இருவரும் அமைதியான பிற்பாடு ஐய்யய்யோ நான் கையிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…?

இந்த மாதிரி அப்பொழுது நம் கண்ணிற்கு முன்னாடி இருளச் செய்வது எது…? இந்த உணர்வுதான். நம்மை அறியாமல் ஆக்குவதும் அறிந்த நிலையில் செயல்படுத்துவதும் நாம் நுகர்ந்த உணர்வு தான்.

ஆகவே நம் வாழ்க்கையில் இதையெல்லாம் துடைக்க வேண்டும். இந்த ஆயுட்கால மெம்பர் என்றால் எப்படி அகஸ்தியன் ஒவ்வொரு இருளையும் மாற்றி ஒளியின் தன்மை பெற்றானோ அந்தத் துருவ நட்சத்திரமாக ஆனானோ அதை எடுக்கும் பொழுது இந்த இருளை அகற்ர முடியும்.

உயிரோடு சேர்த்து உணர்வை ஒளியாக்க முடியும்… அது தான் தனுஷ்கோடி.

உடல் எனக்குத் தேவையில்லை… துருவ மகரிஷியின் ஆற்றலே எனக்குப் போதுமானது என்றார் ஆதிசங்கரர்

உடல் எனக்குத் தேவையில்லை… துருவ மகரிஷியின் ஆற்றலே எனக்குப் போதுமானது என்றார் ஆதிசங்கரர்

 

அன்று ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் இருந்த துவைதவாதிகள் அரசனுக்குக் கீழ் எவ்வாறு நடந்து கொண்டார்கள்…?

மந்திர ஒலிகளைப் பாய்ச்சி அதற்கு வேண்டிய உணர்வுகளை ஊட்டி அதன் வழி கொண்டு மனிதனை ஏங்கச் செய்து
1.தன் வாழ்க்கையில் நல்லதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தால் அவன் ஏங்கி அது உணர்வை ஏங்கிக் கிடைக்காத நிலைகளில் அவன் மடிந்து விட்டால்
2.அதே மடிந்த மனிதனை அந்த ஏக்கத்தால் எந்த நோய்வாய்ப்பட்டு இறந்தானோ
3.மீண்டும் அந்த மந்திரத்தால் அவனின் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி
4.அதை மற்றவர்களுக்குப் பாய்ச்சுவார்கள்… இவன் உடலில் வந்த நோய்கள் அங்கே வரும்.
5.இதை நிவர்த்தி செய்வதற்கு யாக வேள்விகளைச் செய்தால் உனக்கு இந்த நோய்கள் நீங்கும் என்று செய்பவர்களே துவைதவாதிகள்.

காசி கங்கைக் கரையில் துவைதத்திற்கும் அத்வைதம் என்ற தத்துவத்திற்கும் அன்று சர்ச்சையான நிலையில் ஆதிசங்கரருக்கும் அவர்களுக்கும் நடந்த போர் முறையைக் குருநாதர் காட்டுகின்றார்.

காசியில் கங்கைக் கரை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமாக இருக்கின்றது ஒரு அரசருடைய அரண்மனைக்கு அருகிலே இருக்கின்றது விநாயகன் சிலை.

எந்த மனிதன் எந்த நோயின் தன்மை கொண்டானோ அதே மந்திர ஒலிகளை இங்கே ஆதிசங்கரர் உடலிலே ஏவல் செய்து துவைதவாதிகளால் பாய்ச்சப்படுகின்றது.

அவ்வாறு பாய்ச்சிய பின் அவருக்கு வயிற்று வலி வருகின்றது. அப்போது தான் அவர்கள் சொல்கின்றார்கள். நீ இந்த விநாயகருக்கு கண ஹோமம் செய்து இன்னென்ன பொருட்கள் இட்டு இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் உனது வலி தீரும் என்று சொல்கின்றார்கள்.

அப்போது ஆதிசங்கரர் சிரிக்கின்றார்.

நீ சொல்வதில் உண்மை உண்டு. இந்தச் சிலையின் தத்துவம் என்ன தெரியுமா…?. இந்த விநாயகர் தத்துவத்தில் சிலையின் உண்மை என்ன என்று தெரியுமா…? என்று வினாக்களை எழுப்புகின்றார்

நீ சிலையை வடித்து இந்த ஹோமங்களைச் செய்தால் என் வயிற்று வலி நீங்கும் என்று நீ உன்னால் என்னை ஏவப்பட்டு என்னை நீ அடிமைப்படுத்தும் இந்த நிலைகளில் இருந்து நீ வெற்றி பெறுவாய் என்று எண்ணுகின்றாய்.

நீ எண்ணிய உணர்வுகள் எதுவோ அது உனக்குள் விளைந்து இதன் விளைவாகத் தான் நீ செல்வாயே தவிர உண்மையின் உணர்வை அறியும் ஆற்றல் உனக்குள் வராது.

1.உனது ஆசை எதுவோ அதன் உணர்வின் தன்மையை உன் உயிர் உருவாக்கிவிடும்.
2.இந்த விஷத்தின் தன்மை தான் உனக்குள் உருவாகும் என்று தெளிவாக்குகிறார்.
3.நாம் எண்ணுவதை உயிர் எப்படி உருவாக்குகிறது என்பதை நீ பார்…!
4.நீ ஏவிய ஏவல்கள் எப்படி மடிகின்றது…? என்று பார் என்ற நிலைகளை அப்போது சொல்கின்றார்.

ஆதிமூலம் என்ற உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்பப் பல கோடி மிருக நிலைகளைக் கடந்து பல கோடி நிலைகளிலிருந்து தப்பிக்கும் உணர்வை எடுத்து மனிதனாக உருவாக்கிய பின் கணங்களுக்கு அதிபதியாகிக் கடும் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலைக் கணபதி என்றும், பல கோடி உணர்வுகளை வென்ற இந்த கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர் என்றும் அந்த உணர்வின் துணை கொண்டு எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலை தான் “ஐகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவிநோதினி..” என்று அந்த நேரத்தில் பாடுகின்றார்.

ஐகிரி நந்தினி என்கிற பொழுது ஐந்து புலனறிவால்… தான் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள் எவ்வாறு இந்த உயிரால் உருவாக்கப்படுகின்றது…? என்ற நிலையில் பாடலைப் பாடி அந்த இடத்தில் அவர்களுக்கு உபதேசிக்கின்றார்.

1.நீ சுவாசிக்கும் உணர்வு எதுவோ அது உயிரிலே பட்டபின் அதன் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று உணர்ந்து பார்.
2.இந்த உணர்வின் அறிவினை நீ இழந்து விடாதே…!
3.நீ எதை எண்ணுகின்றாயோ அதைத்தான் உன் உயிர் உருவாக்குகின்றது.
4.உன் ஆசையின் உணர்வுகள் நீ எதை எண்ணுகின்றாயோ அதை உருவாக்குகின்றது.

இப்பொழுது நான் எண்ணுவதெல்லாம் எது…?

மனிதனின் வாழ்க்கையில் இத்தகைய தீமைகளை வென்றவன் துருவ மகரிஷி… நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக அவன் திகழ்ந்து கொண்டிருக்கும் அவனின்று வரும் அந்த உணர்வின் சத்தை எனக்குள் வினையாக்கி இந்த உடலிலே கணங்களுக்கு அதிபதி ஆக்கும்போது அவன் எந்த நஞ்சினை வென்றானோ அதை வைத்து நீ ஏவிய உணர்வின் நஞ்சினை வெல்ல முடியும் என்ற உணர்வை சொல்கிறார்.

உயிரான நெருப்பில் அருள் ஞானியின் உணர்வை இங்கே இடுதல் வேண்டும். அதன் உணர்வின் தன்மையை உருவாக்கும் பொழுது அந்த உணர்வின் அணுவாக எவ்வாறு விளைகின்றது…? என்பதைப் பார் என்ற உணர்வை வைத்து அவன் ஏவல் ஏவிய அந்த வயிற்று வலியை நீக்கினார்.

நீக்கிய பின் அதற்குத்தான் இப்பொழுது வயிற்று வலி இல்லை என்று சொன்ன பின் இதற்கு உபாயத்தைத் தேடினார்கள் அன்று. அந்த கங்கைக் கரையில் இதைக் கடந்து சென்று விடுவோம் என்று நயவஞ்சகத்துடன் கங்கைக்கரையின் இக்கரைகளுக்குச் செல்லலாம் என்று அழைத்துச் சென்று கல்லால் கட்டி அவருடைய உடலை நீர் சமாதி ஆக்கிவிட்டார்கள்… மடியச் செய்த பின் அது மடிந்து விடும் என்று.

அவர் எத்தனையோ இடங்களுக்குச் சென்றாலும் உண்மையின் உணர்வை உணர்த்தும் போது அன்று அரசர்களால் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்கள் ஞானிகளால் கொடுக்கப்பட்ட கடவுள் என்ற நிலைகளை உருவாக்கினாலும்
1.இதை மற்ற மக்களுக்குத் தெரியாத நிலைகளில் மறைக்கும் வண்ணம் வந்த நிலைகளை எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக
2.இவர்கள் தன்னை மடியச் செய்வார் என்று உணர்ந்தார் ஆதிசங்கர்ர்.
3.இந்த உடல் பற்று அவர்களுக்குத் தேவை… எனக்கு இந்த உடல் பற்று தேவை இல்லாதது.
4.நீ எதை வேண்டுமென்றாலும் எண்ணு… அந்த அருள் ஞானியின் உணர்வே எனக்குப் போதுமானது.

ஆகவே… இந்த உடல் எனக்குத் தேவையில்லை… எது வேண்டுமானாலும் செய் என்று உடலைக் கொடுத்துவிட்டு ஆன்மா எதன் கூர்மையாக எண்ணியதோ அதன் வலிமை கொண்டு உடலை விட்டு அகன்ற பின் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக இணைந்தே வாழ்கின்றார்… வாழ்ந்து வருகின்றார்.

ஆனாலும் அவரின் நிலைகள் கொண்டு அவர் எதன் தொடரில் வளர்ந்தார் என்றால்…? இவருக்கு மனைவி இல்லை… திருமணம் ஆகவில்லை.

தாயின் தன்மை கொண்டு தான் வாழ்ந்து வந்தார். சந்தர்ப்பத்தால் நோயால் மடிந்த அந்தத் தாயை எண்ணி அவர் பெற்ற இந்த உணர்வுகள் அவர் உடலுக்குள் அரவணைத்திடும் சக்தியாக வந்தது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் அரவணைத்த இனத்தின் தன்மை கொண்டு அந்தத் தாயின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக அதன் அரவணைப்பிலேயே இன்றும் அந்த ஆதிசங்கரர் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.

அன்றைய காலங்களில் திருமணம் ஆகாது மனைவி இல்லாத நிலைகளில் இருப்போரைச் சன்னியாசம் வாங்கச் சொல்லும் நிலையில்… இவருக்குள் இருக்கும் அபூர்வ சக்தி கொண்டு அவரை வெளிவிடக் கூடாது என்பதற்காக துவைதவாதிகள் ஆதிசங்கரரைச் சன்னியாசத்தை வாங்கச் சொல்லி அவர்களின் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று பல முயற்சி செய்தாலும் அவர் எப்படித் தப்பினார்…? என்று நமது குருநாதர் இதைத் தெளிவாக்குகின்றார்.

இதையெல்லாம் யாம் புத்தகத்தில் படிக்கவில்லை. இந்த ஸ்தலங்களுக்குச் செல்லப்படும்போது தான் இதை உணர்த்தினார். இன்றும் அந்த அலைகள் உண்டு… அதை நீ நுகர்ந்து பார் என்று சொன்னார் குருநாதர்.

ஆதிசங்கரருக்கு உடல் பற்று இல்லை… அவர் தாயின் உணர்வுகள் அங்கே இருந்தது. ஏனென்றால் அனாதையாக இருக்கும் பொழுது சோற்றுக்காக அவர் தாய் பெற்ற அவஸ்தை எத்தனையோ.

நோய்வாய்ப்பட்டு அந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது அந்தத் தாயின் எண்ணத்தால் தனக்குள் அரவணைக்கப்பட்டு தன் குழந்தையின் மேல் பாசத்தால் அந்தத் தாயின் ஆன்மா இந்த ஆதிசங்கரர் உடலுக்குள் வரும் பொழுது அருள் ஞானத்தின் உணர்வுகள் அங்கே தொடர்கின்றது.
1.அதன் வழியே தான் கோலமாமகரிஷியின் உணர்வுகள் இவர் உடலிலே சேர்க்கப்பட்டு அருள் ஞானம் பெறப்பட்டு
2.இந்த உலகின் நிலைகள் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிகின்றார் ஆதிசங்கரர்.

ஆகவே அவருக்குத் திருமணம் ஆகவில்லை. இருப்பினும் தாயின் உணர்வுகள் அவர் உடலில் உண்டு. இதன் வளர்ச்சியின் தன்மை கொண்டு அவர் எவ்வாறு அவர் விண் சென்றார்…? என்ற நிலையை இன்றும் தாயின் அரவணைப்பில் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளார் என்ற நிலையைத் தெளிவாக காட்டுகின்றார் நமது குருநாதர்.

அவரைக் கங்கையில் கல்லைக் கட்டி மூழ்கச் செய்யும் பொழுது அவர் சொல்கின்றார்.
1.இந்தச் சரீரம் எனக்குத் தேவையில்லை
2.அருள் ஞானியான அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் நான் பெற வேண்டும்… நஞ்சினை வென்றவர்கள் அவர்கள்
3.அதன் உணர்வே எனக்குள் இருளை நீக்கும்… அதன்வழி தியானிக்கும் பொழுது நீங்கள் ஏவல் செய்த நஞ்சு என்னை ஒன்றும் செய்யாது.

ஆகவே இதிலிருந்து நீங்கள் இனியாவது இதைத் தெரிந்து செயல்படுங்கள் என்று சொல்லும் பொழுது அவருடைய தத்துவங்கள் ஏறவில்லை என்பதற்காக இவரை எப்படியும் மடியச் செய்ய வேண்டும் என்று தான் கங்கையில் நீர் சமாதி வைத்தார்கள்.

நீங்கள் ஆதிசங்கரருடைய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் காசி கங்கைக் கரைக்குச் சென்றார். அதற்குப் பின் என்ன ஆனார்…? என்று கேள்விக்குறியாக தான் இருக்கும்.

இதைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.

குரு காட்டும் நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்

குரு காட்டும் நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்

 

உங்களுக்குள் தெளிவான நிலைகள் உபதேசித்து வந்தாலும் இதை ஏற்றுக் கொண்ட சீடர்கள் அந்த ஒருக்கிணைந்த உணர்வின் தன்மை இணைத்து இந்த நிலைகள் கொண்டால் “நிலை கொண்டதாக” மாறும்.

இன்றைய நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அவரவர்கள் சுயநலங்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது
1.குருவைப் பற்றிப் பார்க்கும் பொழுது குருவின் பெயரைச் சொல்லித் தவறுகள் செய்து கொண்டிருப்போர் பலர்.
2.தான் தவறு செய்தே பிழைக்க வேண்டும் என்று எப்படி ஆனாலும் தான் வாழ வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்கள்
3.அந்தத் தவறு செய்வோரின் நிலை வேறு.

தான் தவறு செய்து… எப்படியும் வாழ வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அதே குருவின் நாமத்தைச் சொல்லப்படும் பொழுது
1.தவறு செய்தே… தான் வாழ வேண்டும் என்னும் பொழுது
2.தவறு செய்தே… தான் வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் ஒன்று சேரும்.
3.அதைப் போற்றும் நிலைகளே வரும்…. இப்படி இணை சேரும் நிலைகள் இது.

ஆனால் அப்படி இல்லாது குரு காட்டிய நெறியில் நாம் செல்வோம் என்றால் தீமைகளைப் பிளந்திடும் நிலைகளும் தீமைகளை அடக்கி ஒளியின் அறிவாக நாம் வாழ்வதும் ஆக ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றி வாழ்ந்திடும் நிலைகள் என்றும் நிலை கொண்ட நிலைகள் நாம் பெற முடியும்.

ஓர் விஷத்தின் தாக்குதல் ஏற்படும் பொழுது தான் வெப்பத்தின் தன்மையாகி வெப்பத்தின் தன்மை வரும் போது தான் மற்ற உணர்வுகள் சேர்த்து அது படைக்கும் சக்தியாக மாறுகின்றது.

ஆகவே விஷத்தின் தன்மை கொண்டாலும் விஷ உலகை இன்று மனிதனிலிருந்து இயக்கும் நிலைகள் பெற்றாலும் அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு இதை அடக்கி மனிதனின் உணர்வலைகளைத் தெளிந்ததாக மாற்ற முடியும்.

1.நம் குரு வழியில் குரு காட்டிய அறநெறிகளை நாம் கடைப்பிடிக்கும் பொழுது தான்
2.தக்க நேரத்தில் இந்த உபதேசித்த உணர்வுகள் நம்மைக் காக்கும்
3.அந்த உணர்வின் வலுகள் நீங்களும் அதைப் பெற முடியும்.

ஏனென்றால் குரு வழியில் நாம் செல்லப்படும் பொழுது நமக்குள் தீமையை அடக்கி விடுவதும்… நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகள் இயக்கினாலும் அதை அடக்கிடும் நிலைகள் வரவேண்டும்.

அதே சமயத்தில் நாம் வெளிப்படுத்தும் உணர்வின் தன்மையைச் சூரியனின் காந்த சக்தி இது கவர்ந்திருந்தாலும்
1இந்த உணர்வலைகள் தீமையற்றதாக மாற்றும் நிலைகள் மோதுண்டு மோதுண்டு மோதுண்டு ஒவ்வொன்றையும் அடக்கிடும் உணர்வுகளாக
2.இந்தக் காற்று மண்டலமும் இந்தப் பிரபஞ்சமும் மாற்றிடும் நிலையாக வர வேண்டும்.

ஏனென்றால் இத்தகைய நிலைகள் நமக்குள் அந்த ஞானியின் உணர்வுகளாக மலரப்படும் பொழுது அதர்வண…! தீமைகளை அடக்கி சாம…! இசையின் தன்மைகள் மாற்றப்பட்டு.. ஒளியின் தன்மை கொண்டு விண்ணில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… இந்த உடல் நமக்குச் சதம் அல்ல.

குருநாதர் வழியில் புதிய பூமி

குருநாதர் வழியில் புதிய பூமி

 

புதிய பூமி என்று வைத்துள்ளோம்.
1.புதிய பூமியில் உள்ளோர்கள் குரு வழியினைக் கடைபிடித்து உலகிற்கு எடுத்துக்காட்டாக வருதல் வேண்டும்
2.நாம் மட்டும் அதைப் பெற வேண்டும் என்று இல்லாது அனைவரும் பெற வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்
3.நமக்குள் விளைய வைத்த அருள் உணர்வை… நாம் சமைத்த நிலைகளை அனைவரும் பெறுவதற்கு
4.பிறர் அந்த எண்ணங்களை எண்ணும் பொழுது அவர்கள் அதைச் சுவைத்து அதன் வழியினைப் பெற முடியும்.

ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் புதிய பூமி என்ற நிலைகள் அமைத்ததும்… புதிய உணர்வின் தன்மையை அங்கு வளர்ப்பதும் அங்கே இன பேதம் மொழி பேதம் மத பேதம் வரக்கூடாது… அருள் ஞானத்தின் நிலைகளே ஒளிச்சுடராக அங்கே வளர வேண்டும்.

புதிய பூமிக்குள் நுழைவோருக்குள் மகிழ்ச்சியின் தன்மை பெருக வேண்டும். அங்கே அருள் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் உணர்வுகள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்வது.

நானாகச் செய்யவில்லை… நான் செய்வதற்கும் அந்த வலுவும் இல்லை. அருள் ஞானியின் உணர்வுகள் ஒலிக்கின்றது… உணர்வின் அலைகள் படர்கின்றது. உங்கள் மனங்கள் உருவாகின்றது.

அந்த உணர்வின் செயலைத் தான் உருவாக்குகின்றீர்களே தவிர அது நானல்ல. குருவின் உணர்வு கொண்டு உங்களுக்குள் ஊடுருவி அந்த உணர்வின் தன்மை ஐக்கியமான உணர்வைக் கொண்டு அதனை நீங்கள் இந்த மண்டபம் ஆனாலும் சரி… தபோவனம் ஆனாலும் சரி நானல்ல. நான் செய்வதற்கு உரியவனும் அல்ல.

அருள் ஞானியின் உணர்வே நமக்குள் ஆகும் பொழுது அவர் உணர்வே உங்களில் படர்ந்து அதனின் செயலாக்கமாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றார்.

ஏனென்றால் இசையின் தன்மை பதிவு செய்த நாடாக்களை மீண்டும் அந்த இசைத் தட்டைப் போடும் பொழுது அதைக் கேட்டு எப்படி நாம் மகிழ்ந்து வாழ்கின்றோமோ அதைப் போல
1.மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்த நாடாவாகத் தான் நான் இருக்கின்றேன்.
2.அந்த நாடாவில் இருந்து வரும் ஒலியை நானும் நுகர்கின்றேன்… எனக்குள் மகிழும் நிலையைப் பெருக்குகின்றேன்.
3.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்ற நிலையைத்தான் உருவாக்குகின்றேன்.

அந்த நாடாவைப் போட்டு நீங்கள் எல்லாரும் கேட்க வேண்டும் என்ற நிலையில்… கேட்கும் நிலைக்கு நீங்கள் எப்படி எப்படி எல்லாம் இசைந்து வருகிறீர்கள் என்பதைப் பார்த்து நான் சந்தோஷப்பட வேண்டும்.

இதைத் தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

ஆகையினால் புதிய பூமியில் இருப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தத் துயரத்திற்கும் இடம் தராதீர்கள். குறையின் உணர்வையே உங்களுக்குள் புக விடாதீர்கள்.

மாமகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று வசிஷ்டரும் அருந்ததியும் போன்று கவர்ந்து… எல்லோருக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று உங்கள் மனதை உயர்த்துங்கள்.

புதிய பூமிக்குள் நுழையும் பொழுது அது சொர்க்க பூமியாக இருக்க வேண்டும். மக்கள் தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞான நிலைகளில் வளர்வதற்கே அதை உருவாக்கிக் கொண்டுள்ளோம்.
1.அதனின் உணர்வின் தன்மையை இந்த உலகம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே அருள் ஞானம் பேச வேண்டும்.
2.அருள் ஞானத்தின் உணர்வை அங்கே பரப்ப வேண்டும். அருள் ஞானம் வளர வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் அங்கே வருவோர் ஒவ்வொருவரும் தன்னை அறிதல் வேண்டும் என்ற நிலைகளில் அனைவரும் தன்னை அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

அனைவரும் வாழ வேண்டும் என்ற உணர்வுகள் வர வேண்டும். அனைவரும் மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று புதிய பூமிக்குள் சென்ற பின் “உலக மக்கள் அருள் வழியில் வாழ வேண்டும்” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

அந்த நிலையை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

1.அருள் ஞானிகள் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும்… அவர்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும்…
3.மெய்ப்பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்.
4.உலக மக்கள் ஒன்றி வாழும் நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணங்களை அன்பர்கள் அனைவரும் வளர்த்தல் வேண்டும்

புதிய பூமியில் இருப்போர் அனைவரும் இதைக் காட்டிலும் அதிலே அதிக பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஊண் உடம்பு ஆலயம்

ஊண் உடம்பு ஆலயம்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் பெற்று நாமும் அவர் வழிகளில் பின்பற்றிப் பேரானந்தப் பெருநிலையை நாமும் பெறுவோம். அதை நாம் பெற வேண்டும் என்றால்
1.நாம் பார்ப்போர் எல்லாம் பேரானந்த பெருநிலை பெற வைக்க வேண்டும்.
2.அவர்கள் பேரானந்த பெருநிலை பெறும் உணர்வின் அலைகளை நாம் நுகர வேண்டும்.
3.நமக்குள் பேரானந்தத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

ஒரு நெல் பயிரை நாம் எப்படி விளைய வைத்து அடுத்து அதை நாமும் உட்கொண்டு இதை யாராவது வாங்கிச் சாப்பிட வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று தான் விளைய வைக்கின்றீர்கள்.

யாரும் சாப்பிடக்கூடாது என்றா விளைய வைக்கின்றீர்கள்…?

இதைப் போல குரு அருளை நமக்குள் வளர்ப்போம். ஈஸ்வரபட்டாய குருதேவர் நமக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷத்தைக் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் அதை எண்ணுங்கள்.

1.குறைகளை அகற்றுங்கள்… மெய்ப்பொருளைக் காணும் உணர்வை உயர்த்துங்கள்.
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்குங்கள் அதையே தவமாக்குங்கள்…!
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் தியானம் என்பது நமக்குள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த உயர்ந்த சக்தியை நாம் பெற வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நாம் பல பொருள்களை எடுத்துச் சமைத்தால் அந்த போட்டுச் சமைத்த பொருள்களின் வாசனை தான் வரும்.

நாம் எல்லாவற்றையும் நன்றாகப் போட்டுச் சமைத்துவிட்டு சிறிதளவு உப்பைப் போட்டு பார்க்கலாம் என்று தன் இஷ்டத்திற்குச் சேர்த்துப் பார்த்தால் உப்பு மட்டும் அதிகமாகி விட்டால் சாப்பிட்டவர்கள் எல்லாம் நன்றாக இல்லை என்று தான் சொல்வார்கள் அல்லவா…!

இதைப் போல இல்லாதபடி… நாம் சமைக்கும் உணர்வின் சுவையை அதைச் சுவைப்போர் மனம் மகிழும் அளவுக்குக் கொண்டு வர வேண்டும்.

நமக்குள் அருள் ஞானியின் உணர்வுகளைத் தியானத்தால் படைத்து அனைவரும் பெற வேண்டும் என்று அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதுதான்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று தியானிப்போம்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் அனைவரும் பெற வேண்டும் என்று தவம் இருப்போம்.
3.கோவிலுக்குச் சென்று இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
4.இந்த கோவிலுக்கு வருவோரெல்லாம் அந்தத் தெய்வ குணங்கள் பெற வேண்டும் என்று தவம் இருக்க வேண்டும்.

அங்கே வைத்திருக்கக்கூடிய கனியைப் போன்று மலரைப் போன்று பாலைப் போன்று பன்னீரைப் போன்று சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். மலரைப் போல மகிழ்ந்திடும் மணம் எங்கள் உடலில் பெற வேண்டும். சந்தனத்தைப் போன்று எங்களுக்குள் நறுமணங்கள் வளர வேண்டும் என்று நமக்குள் இதைப் பெருக்குதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி மலரைப் போன்ற மனமும் மகிழ்ந்திடும் நிலைகளும் எனக்குள் வளர வேண்டும் என்று இதைப் பெற்று விட்டு இந்தக் கோவிலுக்குள் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று தவம் இருக்க வேண்டுமே தவிர நான் கோவிலுக்குச் சென்று இந்தத் தெய்வத்தைத் தவமிருந்து பெறப் போகின்றேன் என்று இருப்பது… இது தவமல்ல…!

1.இந்த உடலான கோவிலுக்குள் அருள் ஞானங்கள் பெருகி அனைவருடைய அன்பையும் இங்கே பெருக்க வேண்டும்
2.அனைவரும் மகிழ்ந்திட வேண்டும் என்று இங்கே கூட்டிட வேண்டும் இது தான் கோவில்… அதுதான் நம் உடலே கோவில்

இதைத் தான் ஊண் உடம்பு ஆலயமடா என்று திருமூலர் பாடியது.

கோபம் தேவை…! கட்டுப்படுத்தவில்லை என்றால் மனிதனாக இருக்க மாட்டோம்

கோபம் தேவை…! கட்டுப்படுத்தவில்லை என்றால் மனிதனாக இருக்க மாட்டோம்

 

சப்… என்று இருக்கும் ஒரு பொருளில் கொஞ்சம் போல் காரத்தைப் போட்டு உப்பை இணைத்தால் ருசியாக வரும். ஆனால் சப் என்ற பொருளில் காரத்தைச் சேர்த்து உப்பைச் சேர்க்காமல் விட்டு விட்டால் ருசி இருக்காது.

எதை எதனுடன் இப்படி இணை சேர்க்கின்றோமா அது உணர்ச்சியைத் தூண்டுகின்றது… உணர்வின் தன்மை செயலாக்குகின்றது.
1.காரணம் மிளகாய் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை வெகு வீரியமாக வெளிப்படுத்தும் சக்தி பெற்றது.
2.அதனால் தான் ஒரு மனிதனுக்குக் கோபம் அவசியம் தேவை என்று சொல்வது… உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை.
3.ஆனால் அந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது நம்மை விழுங்கிவிடும்.

காரம் அதிகமாகி விட்டால் நாம் என்ன செய்கின்றோம்…? ஸ்ஸ்,,,ஆஆ…! என்று சொல்கின்றோம்.
1.காரத்தைச் சமப்படுத்தும் போது ருசி ஆஹாஹா…! என்று வருகின்றது…
2.நம் தலையை ஆட்டுகின்றோம்…. அந்த உணர்ச்சியைத் தூண்டும் சக்தி தேவை

ஆனால் காரத்தின் தனித்தன்மையை மாற்றிக் கோபத்தை உருவாக்கி விடக்கூடாது. அப்படிக் கோபம் என்ற உணர்ச்சியை ஊட்டி விட்டால் அந்த உணர்வின் உணர்ச்சியை ஊட்டும் அணுக்கள் நமக்குள் பெருக்கிவிடும். அதுதான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை என்று சொல்வது.

அடிக்கடி அவன் இப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான் என்ற இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது வேதனை கலந்து சிந்திக்கும் தன்மை எர்த் ஆகும் பொழுது கோபம் அதிகமாகிவிடும். நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

நம்மை அறியாமலே உடம்பெல்லாம் கிடு…கிடு… என்று நடுங்கும்… சிலருக்கு அப்படி வரும். எனக்கும் கூட சில நேரங்களில் கோபம் வந்தால் கிடு…கிடு.. என்று இப்பொழுதும் உடல் நடுங்கும்.

1.ஏனென்றால் ஊழ்வினை என்ற அணுக்கள் பதிவு இங்கே இருக்கிறது.
2.ஒட்டு மொத்தமாகக் கூட்டும் போது அது வளர்ந்து விட்டால் தீமையின் செயல் ஆகிவிடும்

ஆகையினால் அப்படி வந்தாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று இதை அடக்கி இதைத் தணித்து நமக்குள் தெளிவு என்ற நிலையினைக் கொண்டு வருதல் வேண்டும்.

அன்புடன் பண்புடன் நண்பர்களுடன் பழகினாலும் செயல்பட்டாலும் உதவி செய்கின்றோம்.

பாலுக்கு பாதாம் நல்ல சத்துதான். அது போல் நாம் அன்பான நிலைகள் கொண்டு பண்பாகத்தான் உதவி செய்கிறோம். ஆனால் அவன் சந்தர்ப்பத்தால் வேதனையை உருவாகி விட்டால் அந்த அன்பு நாம் நுகர்ந்து நம் நிலைகளும் வேதனையை உருவாக்கி விடுகின்றது.

அந்த வேதனை நமக்குள் வராது பாதுகாக்க வேண்டும்.

யாம் கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற ஏக்கத்தினைக் கொடுத்து உயிரிடம் அதை உற்பத்தி செய்ய ஏங்கினோம் என்றால் அவன் உருவாக்குவான்.

நாம் அடுப்பை வைத்து நெருப்பைக் கூட்டி அதில் எந்தப் பொருளை வைக்கின்றோமோ அந்த ருசிதான் அங்கே வரும் உயிரின் வேலை நுகர்வதை உருவாக்குவது தான்.

அதுதான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… எனக்கு வரம் கொடுப்பதுதான் வேலை என்று அவன் சொல்வான். பிரம்மாவோ என் வேலை உருவாக்குவது தான் என்று சொல்வான்.

அப்படி அந்த அணுவின் கருவாகிவிட்டால் எந்த ஞானமோ பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. எந்தக் குணத்தின் தன்மை அது அணுவாகின்றதோ அந்த ஞானத்தின் வழி அந்த உணர்ச்சிகளை ஊட்டுவதும் அதைச் செயலாக்குவதும் அதனுடைய வேலை.

இந்த உணர்வின் தன்மை வந்தால் உடலான சிவனோ அரவணைத்துக் கொள்கின்றான். விருந்தாளியைப் போன்று “வாங்க…” என்று இந்த உடல் வருவதை அரவணைத்துக் கொள்கிறேன் என்று செயல்படுத்துகிறது.
1.நாம் எப்படி எண்ணினாலும் இந்த உடல் அதையெல்லாம் வரவேற்று வைத்துக் கொள்கின்றது என்று
2.ஞானிகள் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

மெய் ஞானியாக ஆக வேண்டும் என்று எவர் விரும்புகிறாரோ அவரே அந்நிலை பெற முடியும்

மெய் ஞானியாக ஆக வேண்டும் என்று எவர் விரும்புகிறாரோ அவரே அந்நிலை பெற முடியும்

 

வானியல் தத்துவத்தை நமது பூமி விண்ணிலிருந்து கவரப்படும் பொழுது… நம் பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் புவியியல் மாற்றங்கள் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு.

பூமிக்குள் நடக்கும் மாற்றங்களில் “நீருடன் கலந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து…” சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து மற்ற மற்ற பொருள்களை இணையச் செய்கின்றது.

இருப்பினும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடல்களில் ஒன்றுடன் ஒன்று மோதி அழுக்கின் தன்மை பல நிலைகள் உருவாகின்றது.

இருப்பினும் நட்சத்திரங்கள் மோதும்…
1.அதாவது ஒரு நட்சத்திரத்தின் சக்தியும் மற்ற நட்சத்திரங்களின் சக்தியும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகப் போர் செய்யப்படும் பொழுது
2.மற்ற கோள்கள் அதை ஈர்க்கும் தன்மை அடைந்து இரண்டும் மோதும் நிலை வந்து
3.ஒன்றுடன் ஒன்று போர் செய்து கொண்டிருக்கும் பொழுது ஈர்க்கும் தன்மை வந்து மோதலில் ஓர் உயிரணுவாக மாறுகின்றது.

இப்படி உயிரணுக்கள் மாறும் பொழுது மற்ற புவியியலின் ஈர்ப்புக்குச் சென்றால் அங்கே தாவர இனச் சத்து இல்லை என்றால் அங்கே விளையும் விஷத்தினை உணவாக உட்கொள்கின்றது.

அல்லது இத்தகைய அணுக்கள் அந்தப் பூமியில் படர்ந்திருந்தால்… சிறுகச் சிறுக நிலநடுக்கங்களும் கொதிகலனாகிக் கீழ்நிலைக்குச் செல்லப்படும் பொழுது இந்த அணுக்கள் இதனுடன் குவிக்கப்பட்டு மீண்டும் அதனுடன் உறையப்படும் பொழுது பாறைகளுக்கு இடையில் சிக்கிப் பாறைகளுக்குள் அணுக்களாக மாறுகின்றது.

நம் பூமியில் ஆதியிலே இதே போன்று ஏற்பட்ட அணுவின் தன்மைகள் பாறைக்குள் தேரையும்… பாறைக்குள் வண்டுகளும்… பாறைகளுக்குள் பல விஷத் தன்மைகளும் உண்டு.

இது போன்று மற்ற எல்லாக் கோள்களிலும் தான் எடுத்துக் கொண்ட உயிரணுக்கள் அதிலே சிக்குண்டு வளர்ச்சியற்ற தன்மையில் விஷத் தன்மை கொண்டதாக அங்கே வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் நட்சத்திரங்களில் இவை இல்லை. சூரியனில் உண்டு.
1.விஷ அணுக்களாக உருவாக்கி இருந்தாலும் அதிலே கதிரியக்கப் பொறிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் தன்மைகள் உண்டு.
2.ஏனென்றால் சிலவற்றை உங்களுக்குத் தொட்டுத்தான் காட்ட முடியும்.

இதை ஏன் முழுமையாகச் சொல்லவில்லை…? என்று நீங்கள் எண்ணலாம்.

உங்களுக்குப் பாட நிலைகள் கொடுக்கப்படும் பொழுது முழுமையாக விஞ்ஞானியாக வரும் பொழுது தான் முழுமை வரும். .

1.முதலிலே கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பார்த்து அதனுடன் இணை சேர்த்து அதைப் பதிவு செய்து
2.பின் ஒவ்வொரு பாட நிலைகளையும் ஒவ்வொரு ஸ்டேஜுக்குக் கூட்டமைப்பிற்கு வரும் பொழுது தான்
3.அதனின் மாற்றங்களைக் கல்வி அறிவில் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதைப் போன்று தான் அந்த மெய் உணர்வுகளின் அணுக்களை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது
1.நீங்களும் அந்த மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி வளரலாம்.
2.புவியில் வரும் தீமைகளை மாற்றிடும் சக்தியை நீங்கள் பெற வேண்டும்
3.பெறலாம்.. பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிப்பது.

குருநாதர் எமக்கு எவ்வாறு பயன்படுத்தினாரோ… அதே போன்றுதான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

நீங்கள் அமர்ந்து கேட்கின்றீர்கள் நான் காட்டிற்குள் சென்று அவதிப்பட்டுத் தான் பெற்றேன்.

அதை வளர்க்கும் முறைகளில் பல இன்னல்களில் இருந்து எப்படி மீள வேண்டும்…? என்று எனக்குள் அது எத்தனையோ இன்னல்கள் உருவாக்கப்பட்டு என் உடலுக்குள் அது ஊடுருவி… என் உடலிலே பெற்ற அந்த அணுக்கள் அதனால் எவ்வாறு மாற்றம் அடைகின்றது…? என்று தன்னுள் தன்னை உணரும்படி செய்தார் குருநாதர்.

உங்களுக்கு அதையெல்லாம் நான் செய்யவில்லை.

1.உயர்ந்த ஞானத்தின் சக்தியை உங்களுக்குள் பாய்ச்சப்பட்டு ஒவ்வொரு அணுக்களுக்கும் இணைத்து
2.தாவர இனங்களுக்கு எப்படி உரத்தை இட்டு அதன் வளர்ச்சியைப் பெறச் செய்வது போல்
3.ஒவ்வொரு ஜீவ அணுக்களிலும் அருள் மகரிஷிகளின் உணர்வை உரமாக்கப்பட்டு
4.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை நுகரும் ஆற்றலைப் பெறச் செய்வதற்கு
5.அதனின் உணர்வின் வழிப் பாதையில் நீங்கள் செல்லப்படும் பொழுது
6.பேரண்டத்தின் பேருண்மைகளை நீங்கள் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

இப்பொழுது இல்லை என்றாலும் இதன் வரிசையில் “எவர் ஒருவர் பின்பற்றுகின்றாரோ…” அவர் நிச்சயம் அந்த அண்டத்தின் நிலைகளைப் உங்கள் பிண்டத்திற்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை உணர முடியும்.

வானியல் தத்துவம் புவிஇயலுக்குள் வந்தாலும்.. உயிரியலுக்குள் வரும் நிலைகளில் அகஸ்தியன் துருவத்தின் உணர்வைத் தனக்குள் கண்டுணர்ந்து அதனின் ஆற்றலைப் பெற்று வானஇயல் தத்துவத்தைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றுவது போல நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பெற முடியும்.

துன்பத்தில் தான் இன்பத்தைப் பெறும் அணுக்களை உருவாக்க முடியும்

துன்பத்தில் தான் இன்பத்தைப் பெறும் அணுக்களை உருவாக்க முடியும்

 

காட்டுப் பகுதிகளுக்கு நான் (குருதேவர்) உன்னை அழைத்துச் செள்லும் போது உனக்குள் துன்பப்படுத்தும் உணர்வுகளும் ஏன் வருகின்றது…?
1.நானும் இதைத்தான் பெற்றேன்… துன்பத்தில் தான் இன்பத்தைக் கண்டேன்…
2.துன்பத்தில் தான் இன்பத்தைப் பெறும் அணுக்களை நீ உருவாக்குகின்றாய்…!

ஏமது உபதேசங்களை இப்போது நீங்கள் அமர்ந்து கேட்கும் பொழுது வீட்டின் நினைவோ நமக்கு வீட்டில் சங்கடம் என்றோ உணர்வினைத் தூண்டி அதிலே நினைவினைச் செலுத்திடாது அருள் ஒளியின் உணர்வை நீங்கள் பெற்றால் துன்பத்தை நீக்கிடும் அருள் ஒளி என்ற உணர்வினை உங்கள் உயிரான ஈசன் அதனின் கருவாக உருவாக்கி அருள் உணர்வினை உங்களுக்குள் வளர்க்கச் செய்யும் இச்சக்தி பெறுகின்றது.

அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

உட்கார்ந்திருக்கும் பொழுது எனக்குக் கால் வலிக்கிறது… என்னால் முடியவில்லை என்ற எண்ணத்தைச் செலுத்தாதீர்கள். நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் இருக்கும் துன்பத்தைப் போக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்குள் பெறும்.

இப்பொழுது கால் வலியாக இருப்பினும் சரி உடல் வலியாக இருப்பினும் சரி எத்தகைய நோய் கொண்டவராக இருப்பினும் சரி…
1.நமது குரு காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் பெற்ற உணர்வை அதை நுகர்ந்து உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது
2.அந்த உணர்வுகளை செவி கொண்டு உணர்ச்சிகளை உந்தி கண் கொண்டு நுகரப்படும் பொழுது இந்த உணர்வுகள்
3.உங்கள் உடலில் இப்போதே இந்தத் தீமைகளை நீக்கிடும் அருள் சக்தியாகப் படர்ந்து அதை அடக்கிடும் நிலை வரும் பொழுது
4.அதை அடக்கிடும் அணுத் தன்மைகள் உங்களுக்குள் உருப்பெறும்… இது உறுதி.

ஆகவே இதை நீங்கள் பெற வேண்டும் என்றுதான் மணிக்கணக்கில் சொல்லி உங்களை அதை நுகரச் செய்வதும் அந்த உணர்வினை உங்களுக்குள் உருபெறச் செய்வதற்கு இதைச் செயல்படுத்துகிறேன்..