பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்வதால் தான் நம்முடைய மகிழ்ச்சி அடிக்கடி பறிபோகிறது

பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்வதால் தான் நம்முடைய மகிழ்ச்சி அடிக்கடி பறிபோகிறது

 

சாமிக்கு குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார்…! நாம் எங்கே பார்க்கப் போகின்றோம்…? என்று எண்ணினால் யாம் சொல்லக்கூடிய அந்த உயர்ந்த உணர்வுகளைப் பெற முடியாது.

யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே…
1.என்னமோ அவர் குருநாதரிடம் சக்தி பெற்றார்
2.நாம் என்றைக்கு எதைப் பெறப் போகின்றோம்…? என்று எண்ணி விட்டுவிட்டால்
3.எம்முடைய உபதேசங்கள் உங்களுக்குள் பதிவும் ஆவதில்லை… உதறிவிடுகிறோம் என்று அர்த்தம்.

குருநாதர் எனக்குக் கொடுத்ததை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… பெற முடியும் என்ற அந்த ஆசையிலே தான் இதைச் சொல்கின்றேன். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

தீமைகள் உங்களைத் தாக்குகிறது என்றால் அதை எடுக்கக் கூடாது… “அதைத் தான் உதற வேண்டும்….”

ஏனென்றால் நம்முடைய உடலில் எத்தனையோ விதமான குணங்கள் உண்டு. அந்தந்தக் குணங்கள் வரப்படும் பொழுது அதனால் ஏற்பட்ட அணுக்களும் உண்டு.

நீங்கள் சங்கடப்படவே வேண்டாம். சங்கடப்பட்டதைக் கேட்டு அத்தகைய அணுக்கள் உடலில் விளைந்திருந்தால்
1.குடும்பத்தில் கன்னா…பின்னா… என்று ஒருவர் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்
2.அதைக் கேட்ட பின் அவரைப் பார்த்தபின் நம் உடலில் விளைந்த அணுக்கள் அதை உணவாக எடுத்து இங்கே வந்துவிடும்.
3.அறியாமலே நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தும்… குடும்பத்தில் சங்கடமான சொல்லைச் சொல்ல வைத்துவிடும்.

அந்த நேரத்தில் அணுக்கள் மீண்டும் தன் உணர்வை உணவை எடுக்காதபடி அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலக்க வேண்டும் என்று பல முறை அதை எண்ண வேண்டும்.

அவ்வாறு எண்ணிவிட்டு மகரிஷிகள் அருள் சக்தி சங்கடப்பட்டவர்கள் பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையிலே நலம் பெறும் சக்தி உருவாக வேண்டும்… என்று இந்த எண்ணத்தை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இதை எண்ணினால் அவர்களுக்கு அது கிடைக்கும்.
1.ஆனால் அவர்கள் எண்ணவில்லை என்றாலும் அவருடைய சங்கட உணர்வு நமக்குள் விளையாதபடி நாம் மாற்றிக் கொள்கின்றோம்.
2.இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும் அடிக்கடி நான் இதை சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

ஏனென்றால் நாம் எண்ணியது எதுவோ அதை உருவாக்குவது தான் உயிருடைய வேலை.
1.எண்ணியதைத் தான் வாழ்க்கையில் வளர்க்க முடியுமே தவிர
2.ஒருவருடைய நிலைகளை நாம் பிரதிபலன் எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது.

ஆனால் அந்தப் “பிரதிபலன்… எதிர்பார்ப்பு…” எதுவாக இருக்க வேண்டும்…?

நாம் பார்த்த குடும்பம் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அனைத்தும் நலம் பெற வேண்டும் அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும் இந்த குடும்பம் பேரானந்தம் பெற வேண்டும் நாம் எண்ணி அதை அவர்களுக்குப் பாய்ச்சும் போது
1.அதன் வழி அவர்கள் வாழ்க்கையில் செயல்பட்டு அங்கே நல்லதனால்
2.அதைக் கண்டு நாம் மகிழ வேண்டும் அதைத் தான் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

மற்றவர்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்ற நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும் என்று அதை “நம்முடைய எதிர்பார்ப்பாக” வளர்க்க வேண்டும்.

1.அந்த எதிர்பார்ப்பு நல்ல உணர்வின் அணுக்களாக நமக்குள் உருவாக்கும்…
2.அத்தகைய அணுக்களாக உடலில் விளையும் தீமைகள் நமக்குள் புகாது தடுக்கச் செய்யும்

ஆனால் பற்றை வேறு பக்கம் வைத்து. எதிர்பார்ப்பை அதிலே வைத்தோம் என்றால் என்ன ஆகும்…?

ஒருவர் மீது நமக்குப் பற்று அதிகமாக இருந்தால் அவர் என்ன தப்பு செய்தாலும் “சரி” என்று சொல்வோம்

அதே சமயத்தில் பிடிக்காதவர்களாக இருந்து என்னதான் நல்லதைச் செய்தாலும் உடனே “குறை கூறும் நிலைகள் தான்” நமக்குள் வரும். அவர்களைப் பார்த்த உடனே இந்த மாதிரி எண்ணங்கள் தான் வரும்.

இதைப் போன்ற நிலையில் இருந்து அந்த விஷத்தை ஒடுக்கும் ஆற்றலை நாம் பெற வேண்டும்
1.ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
2.நமக்குள் அந்தத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.

உடலின் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் “மனிதன் – தன் உயர்வை அறிய முடியவில்லை”

உடலின் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் “மனிதன் – தன் உயர்வை அறிய முடியவில்லை”

 

இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை… மனிதன் பெற வேண்டிய உண்மை சக்தியின் வளர்ச்சி நிலையை… ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்…!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய… சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி.. ஒளி… நீரைக் கொண்டு…
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி… உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய்ப் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி… தாழ்த்தி… வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது…? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்… மருத்துவம்… யாவையுமே உண்ண… உடுக்க… இருக்க… உடலின் தேவைக்குச் சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய…
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா…?

இந்த உடலுக்கு என்று சுகம் காண… மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு… அதனால் விபரீத சுகமாக அல்லவா… இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை…!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்… இன்ப வாழ்க்கை இனிது நடக்க… மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது…” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ… அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை… மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்… தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான… “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க… இன்பமாய் இருக்க…வேண்டும் என்றால் அது… மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்…!

வேதனை என்ற விஷத்தின் இயக்கமும் விஷத்தை வென்ற துருவ நட்சத்திரத்தின் இயக்கமும்

வேதனை என்ற விஷத்தின் இயக்கமும் விஷத்தை வென்ற துருவ நட்சத்திரத்தின் இயக்கமும்

 

ஒருவருக்கு நன்மைகளைச் செய்கின்றோம்… அதனால் நாம் சந்தோஷப்படுகின்றோம். ஆனால் நம்மிடம் உதவி பெற்ற அந்த மனிதனோ அவருடைய சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார் அல்லது வேதனைப்படும்படியாக ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

வேதனை என்பதே விஷம். விஷத்தை உட்கொண்டால் எப்படி மயங்கச் செய்யுமோ இருளடையச் செய்கின்றதோ சிந்திக்கும் தன்மையையும் இழக்கச் செய்கின்றதோ இதைப் போன்று நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் சிந்தனை குறைகின்றது… நம் சொல்லின் தன்மையும் மறைந்து விடுகின்றது.
1.மறைந்த பின் எவ்வளவு தான் நல்ல உபதேசங்களைக் கொடுத்தாலும்
2.சரியான வழியைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

பாலில் விஷம் பட்டால் குடிப்போரை அது மயங்கச் செய்யும். நல்ல பாலை அதிலே அதிகமாக ஊற்றும் பொழுது அந்த விஷத்தின் தன்மை குறையும்.

அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ள பால் அனைத்தும் வீணாகி விடுகிறது. அந்தப் பால் முழுவதுமே விஷம் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.
1.ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்றினால் விஷம் சிறுத்து விடுகிறது
2.அந்த விஷம் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது

அது போல் ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் ஒரு தடவை வேதனைப்பட்ட நிலைகளை நல்லதாக்க முடியும்.

இல்லை என்றால் வேதனை தாங்காது… தாங்குமோ…? அதற்குண்டான மனமில்லை. வேதனையே ஆக்கிரமிக்கும் சக்தியாக மாறுகின்றது வேதனை என்ற விஷத்தை நுகரப்படும் பொழுது கண்களைப் பார்த்தால் கரு நீலமாகத் தெரியும்… ஒளி மங்கியே தெரியும்.

இத்தகைய வேதனைப்பட்டு விட்டால் ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு கணக்கையோ பார்த்துப் படிக்க வேண்டும் என்று
1.அந்த எழுத்துக்களைப் பார்த்தாலும் அந்த எழுத்துக்கள் சீராகத் தெரியாது
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்புத் தப்பாகத் தான் படிக்க வேண்டி வரும்.

இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலிமைப்படுத்த வேண்டும்

ஆக… ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தாலும் அவர் தவறான வழியில் செயல்படும்பொழுது அதைக் கண்டு நாம் வேதனைப்படுகின்றோம்.

சந்தர்ப்பம் அதை நுகரப்படும் பொழுது வேதனை உருவாக்கும் அணுவாக உடலில் உருவாகின்றது அந்த வேதனையான அணு உருவாவதற்கு முன்
1.பிறர் படும் வேதனைகளைப் பார்த்த உடனே
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.புருவ மத்தியில் இடைமறித்து உயிருடன் ஒன்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று சிறிது நேரம் அதை ஈர்க்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா பெற வேண்டும் என்று நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்திய பின்… நம்மை வேதனைப்படும்படி யார் செய்தார்களோ அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும் என்று
1.நாம் அவனைப் பற்றி எண்ணி வேதனைப்பட்ட உணர்வை
2.இவ்வழியில் நமக்குள் இணைத்து அந்த அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய… நமது உயிர் “ஓ” என்ற ஜீவ அணுவாக மாற்றுகின்றது ஆனால் உற்றுப் பார்த்து வேதனை என்ற உணர்வு வந்தவுடனே விஷத்தின் தன்மை அதிகம்.

ஆனால் அந்த விஷத்தை முறிக்கும் வல்லமை பெற்றது நட்சத்திரத்தின் ஆற்றல்.

உதாரணமாக விஷத்தின் தன்மை ஒரு மனிதனுக்குள் சாடி விட்டால் எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து அதன் மீது இரண்டு கால் பாதங்களை வைத்தால் உடலுக்குள் சென்ற விஷத்தை முறித்து விடுகின்றது.

ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷத் தன்மை ஜாஸ்தி. விஷத்தைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு நல்லதை அதனுடைய சாணமாக மாற்றுகிறது.

இது எல்லாம் வைத்தியர்கள் தான் கொடுக்கும் மருந்துகளில் பேதிக்கோ மற்ற நிலைகள் அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த நிலை ஆகிவிடும்
1.அப்பொழுது எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து அதில் சிறிது நேரம் பாதத்தை வைக்கும்படி செய்வார்கள்… அதை முறித்து விடும்.
2.உள்ளுக்குள் சாப்பிட வேண்டியதில்லை… பாதத்தில் வைக்கப்படும் பொழுது அதை முறிக்கும் ஆற்றல் வருகிறது
3.எருமை மாட்டு சாணத்திற்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு
4.நஞ்சினை மாற்றிடும் சக்தியாக அதனுடைய சாணம் வெளிப்படுகிறது

வேதனைப்படும் உணர்வுகளை நாம் எப்போது நுகர்கின்றோமோ அல்லது செவிகளில் கேட்கின்றோமோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தி கண்கள் உற்று நோக்கும்… அதே வேதனை உணர்வை நுகரச் செய்யும்

உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் சுழலத் தொடங்கும். உடல் முழுவதும் அந்த வேதனை சுழலப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகின்றது.

விஷம் ஊடுருவி எதிலும் கலந்துவிடும்
1.நல்ல குணங்களை அதற்குப்பின் என்னதான் எண்ணி எடுத்தாலும் இந்த விஷம் அந்த நல்ல குணங்களை அடக்கிவிடும்.
2.நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சரி வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்லி விட்டால்
3.அடுத்தாற்போல் “அவர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்… விட்டு விடுங்கள்… என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா…!
4.உங்களுக்கு என்ன தெரியும்…? என்பீர்கள்.

இது எல்லாம் இயற்கையின் நியதிப் பிரகாரம் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இப்படித் தான் இயக்கும். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இத்தனை விளக்கங்களையும் சொல்கிறோம்.

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…”

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…”

 

ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.

1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.

உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.

ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.

சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.

செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…?

இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று…
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை…! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.

உணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”

திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.

சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.

1.ஏகாந்த நிலைக்கும்…
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.

ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.

தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.

சித்து நிலையின் அஷ்டமா சித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.

இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்

இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே…!

இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்.

நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!

நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!

 

வாழ்க்கையில் எத்தனையோ அழுக்குகளை (தீமைகளையும் கஷ்டங்களையும்) பார்க்கின்றோம்… வருகிறது. “அது வந்து கொண்டே இருக்கும்…”

வீட்டையும் உடலையும் உடையையும் சமையல் செய்வதையும் மீண்டும் மீண்டும் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. அது போல் அதை நாம் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத் தான் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க எடுக்க உங்கள் பற்று துருவ நட்சத்திரத்துடனே இணைகின்றது… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது
3.பற்று துருவ நட்சத்திரத்தின் மீது வரப்படும் பொழுது பூமியில் பற்றற்றுப் போகின்றது.

இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். ஏனென்றால் இப்படிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலை வைத்து நாம் நிரந்தரமான சொந்தத்தை உருவாக்க வேண்டும். பிறவி இல்லா நிலை என்னும் அந்தச் சொந்தத்தை நாம் கொண்டாட வேண்டும்.

பகைமை அகற்றும் அருள் உணர்வுகளைச் சேர்த்து விட்டால் என்றென்றும் நமக்கு அது உறுதுணையாக இருக்கும்.

1.விண்ணிலிருந்து வரும் நஞ்சினை அகற்றி அதை ஒளியாக மாற்றிடும் திறன்
2.இந்த உடலை வைத்துத் தான் நாம் அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இன்றைய செயல் நாளைய சரீரம்… நேற்றைய செயல் இன்றைய சரீரம். ஒவ்வொன்றும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் தீமைகள் அகற்றிடும் உணர்வாக… நல்லதையே வளர்த்து நல்லதையே எண்ணிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.

இதை எதற்காகச் சொல்கிறொம் என்றால்
1,இந்தக் காற்று மண்டலம் ஒரு சாக்கடையாக இருக்கின்றது
2.இதற்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கின்றது
3.அதை வலு கொண்டு நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வரும் தீமையைப் பிளக்க வேண்டும்
4.தீமையான உடலைப் பிளக்கும் சக்தி பெற வேண்டும்

உடலை விட்டுப் பிரிந்து சென்றால் தீமையைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் அருள் சக்தி கொண்டு பிறவி இல்லா நிலை அடைய உதவும். ஒவ்வொருவரும் இதைப் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

ஆகவே யாம் (ஞானகுரு) கொடுத்த சக்தியை விரயமாக்காதபடி செயல்படுத்த வேண்டும் டிவி ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள்.

அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைத்தால் அது வேலை செய்கிறது. இது போன்று நாம் தொழில் வியாபாரத்தில் எத்தனையோ பதிவுகளை நமக்குள் வளர்த்து வைத்திருக்கின்றோம்

அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் கொடுக்கல் வாங்கலில்…
1.சரியானபடி நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்தவருடைய நினைவு தான் அதிகம் வரும்
3.பாவிப் பயல் இந்த மாதிரிச் செய்தான்… என்னை ஏமாற்றுகின்றான்… என்ற “அந்த ஸ்டேஷனைத்தான் நாம் அடிக்கடி திருப்பி வைப்போம்…”

இதற்கு தகுந்தாற் போல் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதாவது செய்தால் அவர்கள் மீது நினைவு வரும். சொந்த பந்தங்கள் மீது ஏதாவது குறைபாடுகள் இருந்தால்… அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட குறைபாடுகளைத் தான் எண்ணிக் கொண்டிருப்போம்.

இதுவே வரிசையில் வந்து கொண்டிருக்கும்.

உதாரணமாக ஏதாவது குறைகளைப் பற்றி மட்டும் சிறிது பேசிப் பாருங்கள்…
1.அந்தக் குறை… இந்தக் குறை… என்று எல்லாக் குறையும் வரிசையில் வரும்… நல்லது நினைக்கவே வராது
2.குறையைப் பேசிப் பேசி… “என்ன உலகம் போ…!” என்று கடைசியில் இப்படித்தான் பேசுவோம்
3.இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இப்படித்தான் வரும்.

நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது பாருங்கள். ஒருவரை மோசமானவன்… மிகவும் மோசமானவன்…! என்று சொல்லிப் பாருங்கள். யாரிடம் சொன்னோமோ நம் சொன்னதைக் கேட்ட பின் அடுத்து அவரும் இதே போன்று மோசம் என்று சொல்ல ஆரம்பிப்பார்.

கடைசியில் “எல்லாவற்றையுமே மோசம்…” என்று சொல்ல ஆரம்பிப்போம். இது வரிசையில் வரும்… இந்த உணர்வுகளின் தொடர்வரிசை இப்படித்தான் வரும்.

இப்படி வரும் போது
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் உயிரிடம் வேண்டி அவனிடம் சொல்லி அந்தத் தீமைகளை நீக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது… உருவாக்கிக் கொண்டிருப்பது அவன் தான். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒலி கொண்டு தான் ஒளியை வளர்க்க முடியும்

ஒலி கொண்டு தான் ஒளியை வளர்க்க முடியும்

 

நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.

சூரியனும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்… பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்… சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு… பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.

இயற்கையின் தொடர்களை…
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே… மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.

மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்… வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.

பூமியின் தொடரிலேயே… நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று… சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்பு பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.

ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.

சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா…?

சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன…?

சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து…!
(சிவன் படமும் விளக்கமும்)

இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒலி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.

இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.

அத்தொடரில் இயற்கையை ஒன்றி… கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா… நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்… இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று… வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்…”

ஆனால்… மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை…!”

சக்கரம் சுழல்வது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “ஒரு ரவுண்டு” உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்

சக்கரம் சுழல்வது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “ஒரு ரவுண்டு” உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் செலுத்தினால் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நீங்கள் நுகர்ந்தறிய நேரும்.
1.உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலத்தில் சென்றிருக்கும்
2.ஒரு மத்தாப்பைக் கொளுத்தும் போது பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ அது போன்று
3.வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தோற்றம் அளித்திருக்கும்.

உங்கள் உடலுக்குள் அதைப் பெற்றிருப்பீர்கள்…!

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அனைத்தும் வைரத்தைப் போன்று இளம் நீல நிறமாக இருக்கும்.
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வந்தது அனைத்தும் பலவித வர்ணங்களில் இருந்திருக்கும்

ஏனெனில் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கலந்தது பல வர்ணங்களில் இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது மத்தாப்பு போன்று உங்களுக்கு அந்த உணர்வுகள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும்
1.இந்த உணர்வலைகள் சுழன்று கொண்டு வந்தது உங்கள் உடலுக்குள் பாய்ந்து… சக்கரம் போன்று சுழன்று வருவதை உணர்ந்து இருக்கலாம்.
2.ஏனென்றால் சுவாசித்து… உடல் முழுவதற்கும் ஒரு ரவுண்ட் வரும்.
3.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் இணையும்.

செடிகளுக்கு எப்படி உரம் போடுகின்றோமோ அதைப் போன்று அந்த அணுக்களின் முகப்புகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் போய்ச் சேரும்.

இந்த வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்கள் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்கள் உடலில் உண்டு.

நாம் நல்ல குணங்கள் கொண்டிருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து கேள்வியுற்றிருந்தால் அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நல்ல குணங்களின் முகப்புகளில் இது அடைப்பட்டிருக்கும்
2.அந்த நல்ல குணங்கள் செயல்படாத நிலையில் தடைப்பட்டு அது நலிந்து கொண்டிருக்கும்.
3.நல்ல குணங்கள் வளர்வதற்கு ஈர்ப்பு சக்தி குறைந்திருக்கும்.
4.வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட உடலில் சோர்வு உண்டாகும்.

நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணித் தான் பிறருடைய தீமைகளைக் கேட்டு உணர்கின்றோம்.

ஏனென்றால் உயிரிலே பட்ட பின் தீமை என்று உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலில் பரவி நாம் எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதனுடன் சேர்ந்து விடுகின்றது. தீமை என்று அறிவித்தாலும் நல்ல குணத்தை அப்போது இயங்கவிடாது அடைத்து விடுகிறது.

ஒரு மாவை எடுத்து நாம் பிசைந்தாலும் மாவு சுவை உள்ளது தான். இருந்தாலும் அதிலே வேறு ஒரு பொருளைப் போட்டுக் கலக்கினால் அது மேலோட்டமாக இருந்தால் அதனின் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

இதைப் போன்று தான் நாம் நல்ல குணங்களில் மற்ற தீமையான உணர்வு சேர்ந்த பின் அது செயலற்றதாக ஆகிவிடுகிறது.
1.இதை அகற்றிய அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும்
2.ஏனென்றால் அது வலு கொண்டு ஊடுருவிச் செல்லும் ஆற்றல் பெற்றது
3.அது சுழன்று வரும் பொழுது செடிகளுக்கு உரம் போட்டது போன்று நல்ல அணுக்களில் ஊடுருவிப் பாய்ந்து
4.கேட்டறிந்த தீமைகள் நல்ல அணுக்களில் கலந்ததைச் செயலிழக்கச் செய்கிறது.

இவ்வாறு நல்ல அணுக்களைத் தூய்மைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்புகளிலும் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறோம்.

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்…!

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்…!

 

மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”

வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.

இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.

1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.

பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”

தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!

சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.

அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.

இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.

இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்க உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.

“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.

இருதய அடைப்பு… சிறுநீரகம் பழுதடைதல்… இன்று அதிகமாக வருவதற்குக் காரணம் என்ன…?

இருதய அடைப்பு… சிறுநீரகம் பழுதடைதல்… இன்று அதிகமாக வருவதற்குக் காரணம் என்ன…?

 

வான் வீதியிலே முதலில் உருவானது உயிரணு. மனிதர்கள் நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அது அணுவாக மாற்றுகின்றது நம்முடன் சேர்ந்து நம் உடலில் அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது ஜீவ அணுவாக மாறுகின்றது.

வான் வீதியில் இருந்து வரப்படும் பொழுது
1.மற்ற கோள்களின் சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு
2.அந்த அணுவை உயிரணுக்கள் (உயிரினங்கள்) சுவாசித்து நுகர்ந்தால் ஜீவ அணுவாக மாறுகின்றது… ஜீவ அணு அடுத்து ஜீவான்மா.

ஒருவன் நோய்வாய்ப்பட்டிருக்கின்றான் என்றால் அந்த உணர்வுகள் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலிலே விளைந்ததை கூர்மையாக உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தன்மை நம் உடலில் எடுத்துக் கொள்ளும்

நோய்வாய்ப்பட்ட மனிதன் உடலை விட்டுப் பிரிந்தான் என்றால்
1.அவன் உடலில் விளைந்த சக்தி நமக்குள் இருப்பதால்
2.அதன் வலிமை கொண்டு அந்த ஆன்மா நமக்குள் வந்து விடும்.
3.நம் உடலில் வந்த பின் ஜீவான்மாவாக மாறும்… நமக்குள் வட்டமிடும்

ஜீவான்மா எங்கே இருக்கிறது என்றால் இரத்தத்திற்குள் தான் இருக்கும். சில ஆவி பிடித்தவர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அதனுடைய வேகத் துடிப்புகள் இருக்கும் பொழுது… இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைக் காணலாம்.

மூளை பாகம் அந்த ஆன்மா வரப்படும் பொழுது தன் எண்ணங்களைஅது இயக்கும். மறுபடி நகர்ந்து ரிட்டன் ஆகும். வெளியே வந்த பின் சாந்தமாகிவிடும்

1.தன் உணர்வின் எண்ணங்களை அது எதை எதை எடுத்து இருக்கின்றதோ அதை எல்லாம் அங்கே பேசும்.
2.அந்த உணர்வுக்குத் தக்கவாறு வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.

இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மா என்பது இது தான்.

நமக்குள் வந்து அதற்கு வேண்டிய உற்பத்திகளை செய்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோன்றப்படும் பொழுது நாம் சுவாசிக்கின்றோம்… உடலுடன் சேர்கின்றது… உணர்வின் அணுக்களாகிறது.

ஜீவணுக்கள் என்பது தசைகளில் போய்ச் சேர்ந்து கொள்கின்றது. எந்தெந்த குணங்களை எடுத்தோமோ வெளியில் இருந்து அந்த உணர்வுகளை எடுத்து விளையும்.

செடியிலே வித்து விளைகின்றது அதே போன்றுதான் ஒரு மனித உடலில் எண்ணங்கள் உருவாகி ஊழ் வினை என்று வித்துக்களாக உருவாகின்றது. பின் உடலில் இருந்து அலைகளாகப் பாய்கின்றது.

நான் பேசுகிறேன் என்றால் சூரியனின் காந்த சக்தி அதை அணுக்களாகக் கவர்கின்றது. சுவாசித்து அந்த உணர்வு உடலுக்குள் வரும் பொழுது ஜீவணுக்கள்.

நான் இறந்து விட்டால் அந்த உணர்வை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது இரத்தத்திலே தான் இருக்கும் இரத்தத்திலே சில மாற்றங்களை எடுத்து… உணவை எடுத்து வாழும்.

பேய் பிடித்தது… ஆவி பிடித்தது… ராட்சச உணர்வு வருகிறது என்றெல்லாம் சொல்வார்கள். பல் நீட்டிக் கொண்டிருப்பது போன்று எந்தெந்தக் கொடூரமான சிலைகளை உருவாக்கினார்களோ அதையே வணங்கி அந்த உணர்வினை எடுத்து அந்த அலைகள் பதிவான பிற்பாடு இறந்து விட்டார்கள் என்றால் அதே உருவமும் இயக்கமும் வரும்.
1.அது எப்படி அடக்கி ஆட்சி புரியும் தன்மை வந்ததோ
2.உடலுக்குள் வந்த பின் வாய் பேச விடாது.

(ஆவி பிடித்தவர்கள் பேசாத நிலைகள் எத்தனையோ உண்டு).

அது நம் இரத்தத்திற்குள் தான் இருக்கும். இந்த அணுக்கள் உடலுடன் ஒட்டி வரும். தீமையின் உணர்வு வரப்படும் பொழுது அணுக்களாக மாற்றாது.

இரத்தத்தில் தான் அணுக்கள் பெருகும். இந்த அணுக்கள் பரப்பப்படும் பொழுதுதான்
1.சில சமயம் இருதயத்திற்கு அந்த ஆன்மா வரப்படும் பொழுது இருதயத்தின் துடிப்புகள் குறையும்… அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
2.இரத்தத்துடன் கழிவுகளாக வரும் பொழுது கிட்னிக்குள் வந்தால் கிட்னி ரிப்பேர் ஆகும்
3.அதை வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது விஷத்தன்மை பாய்ந்து சிறுநீரகங்கள் பழுதடைந்து விடும்.

மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம்

மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம்

 

1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு…
2.வண்ணத்தில் ஏழும்… இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்…
3.“சப்தரிஷிகளின் ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான்…!”
4.இப்பூமியின் உண்மை நிலை.

ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை…” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது… வாழுகின்றது.

உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்… தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.

ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி… ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்… “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான்… இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்… ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்… இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.

இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை…!
1.அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமா சித்து நிலையை அடையும் நிலை.

இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்று தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.

இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்… தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.

வளர்ச்சியின் தொடர் வளர… மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு… கேட்டு… நுகர்ந்து… சுவைத்து… உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.

இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது… மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை… வளர்ச்சி நிலை…
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை… சிவசக்தி நிலை…
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்… சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.

மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான… மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.

ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும். சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.

பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே…
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)

மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலை பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை… ஆத்மாவின் இனிமையாய்…
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆகவே இச்சரீர வாழ்க்கையில்… மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யுங்கள் ஒவ்வொருவரும்.