அருள் ஞானக் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்த வேண்டும்

அருள் ஞானக் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்த வேண்டும்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டீர்கள். ஆனாலும் அடுத்தவர்களுக்கு இந்த உண்மையை எடுத்துச் சொல்ல அச்சம் ஏற்படுகின்றது. அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டும் என்ற துணிவும் இருக்கின்றது… சொல்ல முடியாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது.

காரணம்…
1.நம்மைக் கேவலமாக எண்ணுவார்களோ…?
2.அவருடைய பார்வையைப் பார்த்தாலே வித்தியாசமாக இருக்கிறது என்று விலகிச் சென்று விடுவோம்.
3.இந்த உண்மைகள் சொல்லாக வெளி வராது.

நம்முடன் சகோதரர்களாக இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் குறைகளைக் காணும் பொழுது அந்தக் குறையை நிவர்த்திக்கும் உணர்வின் சத்துக்களை நாம் ஊட்ட வேண்டும்.

இதில் அச்சம் என்பது கூடாது… அச்சமென்று வந்து விட்டாலே “உண்மையை மறைக்கிறோம்…” என்று தான் பொருள்.
1.ஞானிகள் காட்டிய உண்மைகள் இவ்வாறு தான் வேறு வேறு நிலைகளுக்கு மாற்றப்பட்டு
2.உண்மைகள் அறிய முடியாதபடி போய்விட்டது காலம் காலமாக…!

இன்று விஞ்ஞான அறிவில் மனிதனின் குணங்கள் அனைத்தும் அழியும் பருவம் பெற்று விட்டது. அசுரனின் நிலைகளுக்குச் செயலாக்கும் உணர்வுகள் வளர்ந்து கொண்டு வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் துணிவுடன்… உபதேசத்தைக் கேட்பதோடு மட்டுமல்லாதபடி
1.தன் குடும்பங்களில் குறைகள் ஏற்பட்டால் அவர்களுக்குத் தெளிவாக ஞானத்தை எடுத்துரைத்து
2.நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற உண்மையினைத் துணிவுடன் எடுத்துச் சொல்ல வேண்டும்.

குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…? குறைகள் நம்மை எவ்வாறு சாடுகின்றது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயங்களைச் சொல்லித்தான் அதை மாற்றுதல் வேண்டும்.

நீ தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றாய். ஆனால் நீ தவறு செய்யாமல் இருக்கின்றாயா…? என்று அவர்கள் நம்மைக் கேட்கும் நிலை வந்து விடுகின்றது.

1.அதாவது… தியானம் செய்து கொண்டிருப்பவர்களிடம் சிறிது குறைகள் வந்தாலும்…
2.பார்…! இவன் எனக்கு அன்றைக்கு உபதேசித்தான் ஆனால் இப்போது இவன் என்ன செய்கிறான்…? என்று சொல்லக்கூடிய நிலை வந்து விடுகின்றது.

உயர்ந்த குணங்கள் இங்கே மறைக்கப்படுகின்றது.

நாம் செய்து வைத்திருக்கும் உணவுப் பொருள்களிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த உணவையே இது கெடுத்து விடும்… செயலற்றதாக மாற்றி விடுகிறது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில்
1.நமக்குள் அறியாது வரும் பிழை உடனே அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.அப்பொழுது நமக்கே புரியும்… நம்மை அறியாமல் இந்த சொல் வந்து விட்டது என்று…!
3.இந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் மனதைப் புண்படுத்தும் என்ற நிலையில் தன்னைத்தான் உணர்தல் வேண்டும்.
4.இதை உணர்ந்த பின் மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அதை நமக்குள் அடக்கிடல் வேண்டும்.

பின்…
1.என்னை அறியாது இயக்கும் இருள்கள் அகல வேண்டும் மெய்ப் பொருள் காணும் திறன் என்னிலே அது வளர வேண்டும் ஈஸ்வரா…!
2.என் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தி பெற வேண்டும்
3.என் சொல் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் செயலாக வர வேண்டும் என்று இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்

குருநாதர் காட்டுக்குள் சில இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போவார். “இங்கே படுடா…!” என்பார்.

இந்தப் பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கின்றது. இன்னொரு பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கிறதில்லை. இந்த மண்ணிலே… காட்டிலே இருந்து தவம் செய்து தன்னைப் பெரிய சித்தனாக்கிக் கொள்ள வேண்டும் என்று தவத்திற்கு வந்தவர்கள் இந்த இடத்தில் பச்சிலை மூலிகைளை வைத்திருப்பார்கள்.
1.அவர்கள் அந்தப் பச்சிலை மூலிகைகளை எடுத்துத் தன் உடலிலே பூசிக் கொள்வார்கள்.
2.தவம் என்ற நிலைகளில் இருக்கப்படும் பொழுது அந்த எல்லை வரையிலும் கொசுக்கள் பாம்புகள் மற்றவை வருவதில்லை.

அங்கே சுத்தமான மனிதன் போனால் தான் போக முடியும். தவறான ஆசையுடன் போனால் அவனைத் தூக்கி எறிந்துவிடும் என்றார்.

நான் போனேன்.

அங்கே உட்காருடா…! என்றார்.

தூக்கி எறியப்பட்டேன்… என்ன சாமி…? பேயோ பிசாசோ இருக்கு போலிருக்கு…! என்றேன்.

பேயுமில்லை பிசாசுமில்லை…! அந்தக் காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தக் குறிப்பிட்ட இடத்திலே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

தவறான ஆட்கள் உட்கார்ந்தார்கள் என்றால் விஷத்தன்மை பரவிவிடும் என்று இந்த உணர்வுகள் உன்னைத் தூக்கி எறிகிறது என்று சொன்னார்.

நான் சொன்ன மாதிரி இப்படிச் செய்…! என்றார். இப்போது போய் உட்கார்… என்றார்.

போய் உட்கார்ந்தால் கொசுவும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. ஆனந்தமாகத் தூக்கம் வந்ததது.
1.அவர் எப்படித் தியானம் பண்ணினாரோ அதே மாதிரி எனக்கும் சக்தி கிடைத்தது.
2.இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தபோவனத்தில் பாய்ச்சப்படும் பொழுது இங்கே பதிவாகின்றது.
3.அதே போல நீங்களும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் வீட்டில் பதிவு செய்து விட்டீர்கள் என்றால்
4.விஷத்தன்மைகளை எல்லாம் போக்கும் நிலைகள் வரும்.

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

 

1.தீமைகளை வென்றவன் அருள் ஞானி.
2.அதை வைத்து நமக்குள் உருவாகும் தீமைகளைக் கொல்ல வேண்டும்.

ஒன்றை ஒன்று புசித்துத் தான் ஒவ்வொன்றும் வாழ்கின்றது. ஆடு சாந்தமாந உணர்வாக இருந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.

இதைப் போல நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும்
1.நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகளால் உடலுக்குள் டி.பி.நோய் வந்து விட்டால்
2.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத் தான் செய்யும்…
3.எலும்புகள் இருக்காது காணாமல் போய்விடும்.

ஆக நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் உடலில் இவ்வாறு உருவாகி விட்டால் அதைக் கொன்று புசித்து விடும்.

மனிதனில் விளைந்த வேதனையான தீமையான மூச்சலைகள் அங்கே தாவர இனங்களில் பட்டு நாம் எதைப் புசித்தோமோ அதைக் கொன்று நமக்கு உணவில்லாத படி செய்து அந்த இனத்தைக் கொன்று விடுகின்றது.

அதாவது நம் உடலுக்குள் மட்டுமல்ல… தாவர இனத்திலும் இதைத்தான் கொல்கிறது.

அக்ரிகல்ச்சரில்… தென்னை மரத்திலே அதனுடைய கருவுலகை எடுத்து அதிலுள்ள சாறை எடுத்து அதிலே தீமை விளைவிக்கும்
1.“ஓலைக் கருகல்” என்ற நிலையில் அந்தச் சத்தினை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களையோ பூச்சிகளையோ கொல்ல
2.விஞ்ஞானிகள் மற்ற உணர்வைச் சேர்த்து அதிலே கருவை உண்டாக்குகின்றார்கள்.

விஞ்ஞான அறிவு கொண்டு மரத்திலே இணைத்த பின் இது படர்ந்து ஓலைகளின் சத்தை எடுக்கும்… ஆனால் அதே சமயத்தில் ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் பூச்சிகளையும் கிருமிகளையும் இது கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.

அது செத்த பிற்பாடு தான் இதுவும் போகும்… பின் மடியும்…!

அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகள் உணர்வின் சத்தை அந்த மெய் ஞானிகள் அருள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டு உடலில் விளைய வைத்த பின்
1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வின் அணுக்களை “எது கொன்று புசிக்கின்றதோ…”
2.அது இருக்கும் வரையிலும் அருள் ஞானிகள் உணர்வு அதைக் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.

விஞ்ஞானத்திற்கு மெய் ஞானத்திற்கும் உள்ள நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உணவுக்காக விஞ்ஞானி அவ்வாறு செய்கின்றான். ஆனால் என்றும் நிலையான சரீரத்தை அதாவது “நம்மை ஒளியின் சரீரமாக…” நிலைக்கச் செய்கின்றான் மெய் ஞானி.

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”

 

இராமன் மனதைக் குவித்து எப்படிச் சிவலிங்கமாகப் பூஜித்தானோ இதே போன்று நாம் எண்ணம் கொண்டு உணர்வின் தன்மைகளை ஒன்று சேர்க்கும் போது “இராமலிங்கம்…” என்று உயிரின் தன்மை எண்ணத்தால் உணர்வை ஒளியாக மாற்றியது என்று சொல்வார்கள்.

ஏனென்றால் எல்லாவற்றிற்கும் காரணப் பெயர் வைத்துத் தான் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
1.இராமலிங்கம் என்று சொன்னாலே நம் எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற “இந்த எண்ணம் தான் இராமன்…”
2.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மை நாம் பெறும் பொழுது தான் இராமன்.

இராமனின் பக்தன் யார்…? ஆஞ்சநேயன். எதனை நாம் எண்ணுகின்றோமோ இந்தச் சொல்லைச் சொல்லும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் உங்களுக்குள் வாயுவாகப் புகுகின்றது.

இராமனின் பக்தன் வாயு புத்திரன்… அவன் ஒரு மந்திரி என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை நீங்கள் சொல்லும் பொழுது பிறருடைய உடலில் இதைப் புகச் செய்தால் அவருடைய அறியாமையைச் நீக்கச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.

1.இவ்வாறு நம் சொல்லுக்குள் தியானம் எடுத்த உணர்வுகள் கேட்போர் செவிகளில் பட்டபின்
2.கண் கவர்கின்றது… அவருடைய ஆன்மாவாக மாற்றுகின்றது
3.உயிரில் உள்ள காந்தம் கவர்கின்றது. இந்த உணர்ச்சி உடல் முழுவதும் படர்கின்றது.

ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் தீமையை நீக்கும் உணர்வுகளைப் பரவச் செய்யும் பொழுது… இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஞானமாக அந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணமும் சரி… நமக்குள் எடுத்துக் கொண்ட அணுக்களும் சரி… நம் உடலும் சரி… அந்த உணர்வுக்கொப்பத் தான் நம்முடைய செயல்களாகும்… சொல்லும் வரும்.

ஆகையினால்
1.இந்த வழியில் நாம் அனைவரும் உலகுக்கே வழிகாட்டியாக
2.குரு வழியில் அகஸ்தியன் சென்ற பாதையில் நாம் சென்று இருளை அகற்றி
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்கி நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாற வேண்டும்.

நமது பேச்சும் மூச்சும் பார்வையும் பிறருடைய தீமைகளை அகற்றச் செய்ய வேண்டும். நம் பேச்சும் மூச்சும் பிறரை நல்ல சிந்தனைகளைச் சிந்திக்கும்படி… நல்ல உணர்வுகள் வளரும்படிச் செய்ய வேண்டும்.

நாம் பார்க்கும் பார்வை அவர்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும். அவர் வாழ்க்கையில் வளம் பெறும் நிலையாகச் செயல்பட வேண்டும்.

நமது பார்வை பிறருடைய தீமைகளையும் நோய்களையும் போக்கும் சக்தியாகப் பெற வேண்டும்.
1.அவருடைய நோயின் உணர்வு சங்கடத்தின் உணர்வு நமக்குள் புகாது
2.”தடுத்து நிறுத்தும்…” அந்த அருள் சக்தியாக நீங்கள் மாற வேண்டும்.

எனக்கு குரு கொடுத்த அருள் சக்தியை உங்களுக்கும் பெறச் செய்கின்றேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வளர்ந்து என்றென்றும் ஏகாந்தமாக எந்த எதிர்ப்பும் இல்லாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அருள் வழிப்படி
1.எனக்குள் அந்த ஞான வித்தை வளர்த்து
2.அந்த ஞானத்தின் வித்தைத் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்தது.
3.நாம் அனைவரும் அதன் வழி நாம் செல்லும் போது பேரருளாக மாறுகின்றோம்.
4.பேரருளாக மாறும் பொழுது பேரொளியாக மாறுகின்றது.
5.பேரொளி என்ற நிலை வரும் போது பேரிருளையும் மாற்றும் சக்தி வருகிறது.

இதை நாம் தொடர்ந்து வழிப்படுவோம்… அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… அருள் வழி வாழ்வோம் என்ற இந்தப் “பிரதிக்ஞையை…” நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி பெறச் செய்யக்கூடிய உணர்வுகளை நாம் பெருக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு தெருவிலும் அமைதி பெறச் செய்ய வேண்டும்… சொல்லால் அல்ல…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
3.அந்த உணர்வலைகளை நாம் மூச்சலைகளாகப் பரப்ப வேண்டும்.

பாச உணர்வின் இயக்கத்தைக் காட்டினார் குருநாதர்

பாச உணர்வின் இயக்கத்தைக் காட்டினார் குருநாதர்

ஒரு சமயம் யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம் எமக்குத் தைரியம் அதிகம் இருந்தது.

அதனால் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை… அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம் இது போன்ற பணிக்கு பயந்து யாரும் வரவில்லை.

அப்போது எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்கள்.

பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டது… அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும் எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.

காலராவில் இறந்த 30 பிணங்களைத் தூக்கிப் போட்டோம்… அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை. எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்து விட்டதே…! என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே எமக்கும் காலரா வந்துவிட்டது.

குருநாதர் இந்தச் சம்பவத்தைப் பின்னாட்களில் எமக்கு நினைவுபடுத்தி…
1.நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய்… உனக்கு ஒன்றும் ஆகவில்லை…!
2.ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது என்று எண்ணியவுடனே “உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது…”
3.மனிதரிடத்தில் உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா…? என்று கேட்டார்.

ஆனால் காலராவால் தாக்கப்பட்ட “பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான்…” எமக்கும் காலரா நோய் வந்தது என்று குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுமே யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.

வாய்க்காலில் கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால், அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால் வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது.

பிறகு ஒருவாறாகச் சமாளித்து ஹோட்டலுக்குச் சென்று “தயிர் சாதம் கொடுங்கள்…” என்று சொல்லித் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். மனதில் யாம் ஒரு பயில்வான் என்று எண்ணித் தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் தயிர் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு விட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்து விட்டது, பிறகு மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசிக் கொண்டிருந்தோம்.

ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குத் தைரியம் சிறிது குறைந்தது. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும் பார்க்கலாம்…” என்று இருந்தோம்.

பசித்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம். ஏனென்றால் தயிர் குளிர்ச்சி…! தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம்.

அதனால் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட்ட சாதம் வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.

எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்று விட்டது. சரி நாம் இந்தத் தண்ணீரிலேயே உள்ளே சென்று விடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றது… என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.

காலரா வியாதி பரவியதால் ஊரை விட்டே நிறையப் பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு தாம் தப்ப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.

வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது அந்தப் பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார்.

அவர் எம்மைப் பார்த்து… “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கின்றாய்…?” என்று கேட்டார்.

காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு வந்தேன்… இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது…! என்று அவரிடம் கூறினோம்.

“அட.. நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து அவருடைய கரும்புக் காட்டிற்கு அழைத்துஅ சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து “நன்றாக மூக்குப் பிடிக்கச் சாப்பிடு” என்று கூறினார்.

அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின் எமக்கிருந்த காலரா நோய், எங்கே போனதென்றே தெரியவில்லை. யாம் பூரண குணம் அடைந்தோம். காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு. இன்னும் கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லிக் குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.

எமது உடல்நிலை குணமானவுடனே… “சும்மா இருக்கவில்லை…” ஊர் முழுவதும் சுற்றி மக்களிடம் யாசகம் கேட்டுப் பெற்றுக் காசு சேர்த்துக் கரும்புச் சாற்றை வாங்கி காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம்.

ஏனென்றால் யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால் பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு “நீ குடி… நீ குடி…” என்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம்.

அதன் பின் காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று.

இது ஒரு சந்தர்ப்பம்…! அப்பொழுது தான் சொன்னார் குருநாதர்.
1.“டேய்…! உன்னைக் காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன்…”
2.நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய், ஆனால் நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்…! என்று கூறினார்.

எமக்கிருந்த காலரா நோய் நீங்கிய பின் ஆசனம் செய்வது பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம் எம்மால் முடியாமல் போய்விட்டது.

யாம் சாதரணமாக மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம்.

ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.

இது போன்று இருந்த யாம் காலரா நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது.

பாட்டியை எண்ணினாய்… என்ன ஆனது உனக்கு…? என்று கேட்டார் குருநாதர்.

1.குருநாதர் சொன்ன பின் தான் உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம். பிறகு தான் எமக்குத் தெரிந்தது.
2.குருநாதர் சொல்லவில்லை என்றால் எமக்கு ஒன்றும் தெரியாது.

இறந்தவர்களை எல்லாம் தைரியமாகத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே…! என்று ஏங்கினாய், உடனே இதன் உணர்வு உன்னிடத்தில் என்ன வேலை செய்தது…? என்று தெரிந்து கொண்டாயல்லவா…! என்று கேட்டார் குருநாதர்.

இது போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர வேண்டும்

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர வேண்டும்

 

நம் உயிர் எப்போது உருவானதோ என்றுமே இருள் சூழாது ஒளி என்ற நிலையாக மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த உணர்வை மனித உடலில் தான் சேர்க்க முடியும். அதைத்தான் குரு எனக்குக் கொடுத்தார்.

துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராகச் சேர்த்தார். அதன்வழி உங்களையும் சேர்த்து விடுகின்றோம்.
1.அந்த மெம்பர் பதவியை நீங்கள் கூடுமான வரையிலும் ஊக்குவித்து
2.உங்கள் உணர்வுகள் இங்கே படரப்படும் பொழுது “விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளை அடக்க முடியும்…”

நியூட்ரான் என்ற நிலையில் ஒரு பக்கம் வந்தாலும் அணுக்கதிரியக்கங்கள் என்று இந்த இரண்டும் கசிவாகி இருக்கின்றது. இரண்டும் மோதலாகும் இடங்களில் தான் புயலாக… சூறாவளியாக மாறுகின்றது.

கதிரியக்கப் பொறி அதற்குள் இருக்கக்கூடிய நிலைகளில் மோதுகின்றது.
1.நியூட்ரான் என்ற காற்றின் அழுத்தத்தைக் கொடுத்த பின் சுழற்சியின் தன்மை அடைந்து
2.அலாக்காகக் கட்டிடங்களை எல்லாம் தூக்கி எறிகின்றது. எவ்வளவு பெரிய காங்கிரீட் கட்டிடமாக இருந்தாலும் தூசியாக மாற்றித் தூக்கி எறிகின்றது.

ஏனென்றால் விஞ்ஞானிகள் செய்த கொடுமை இது…!

அவனை அறியாமலே மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் அவனே அழிந்து போகும் நிலைகளுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கே உருவாக்கினானோ இன்று அங்கெல்லாம் இது நடக்கின்றது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வுகள் தன் வளர்ச்சியிலே தீமைகளை நீக்கி… திருமணமான பின் கணவன் மனைவி இருவருக்குள்ளும் அருள் உணர்வைக் கருவாக்கி… உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருவரும் இருக்கின்றார்கள்.

உடலை விட்டு என் கணவர் பிரிந்து விட்டார் என்று ஒரு சிலர் இருந்தாலும் “அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு…” என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

இந்த உணர்வின் தன்மை எப்பொழுதுமே இணைந்து வாழும் தன்மை. நாம் எதன் பருவத்தைக் கொள்கின்றோமோ அவர் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஒளியாகின்றது.
1.அந்த உயிரின் தன்மை ஒளியாகும் நிலையில் எங்கே சென்றாலும் கவர்ந்து இழுத்துக் கொள்ளும்… ஒளியாக மாறும்…
2.இரு உணர்வும் என்றுமே அந்த அருளைப் பெருக்கும் நிலையாக மாறும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இது யாம் அனுபவ ரீதியிலே தெரிந்து கொண்ட நிலை.

ஆகவே உயிரை நாம் சொந்தமாக வேண்டும். அவனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றால் உயிரோடு இணைந்து ஒளியின் சரீரம் பெறலாம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர் நீங்கள் ஒவ்வொருவரும் உலகிற்கு எடுத்துக்காட்டாக வர வேண்டும். நமது கடமைகளில் தவறக் கூடாது.

அருள் ஒளியின் உணர்வைக் கொடுத்து
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி
2.அது கடமையாக அமைந்து அந்த அருள் ஒளியாக மாற்றும் இந்த உணர்வைப் பெற வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிர் தான் சொந்தம்…! அவன் உணர்வை எடுத்து எல்லாவற்றையுமே ஒளியாக மாற்றினோம் என்றால் தனுசுக் கோடி. கோடி என்று ஆகும் பொழுது அனைத்தும் ஒன்றாகின்றது.

லட்சம் அந்த லட்சம் இந்த லட்சம் என்று சொன்னால் மாறுகின்றது. ஒன்று இரண்டு மூன்று என்று நிலைகள் வருகின்றது… பல லட்சம் என்ற நிலையில் “எல்லாம் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது கோடி…!”

எவ்வளவு அழகாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்…?

நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து
1.அதனுடன் சேர்த்து… உணர்வின் தன்மை ஒன்றாக இணைந்து நீங்கள் விடும் மூச்சலைகளால்
2.விஞ்ஞான அறிவில் வரும் விஷ உணர்வுகளிலிருந்து காக்கப்பட வேண்டும்.

பிரேக் அடித்தது போல் ஒரு பெண்ணின் உதிரப் போக்கை நிறுத்தினார் குருநாதர்

பிரேக் அடித்தது போல் ஒரு பெண்ணின் உதிரப் போக்கை நிறுத்தினார் குருநாதர்

 

ஒரு சமயம் தனது மனைவிக்கு இரத்தப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது அதைக் குணப்படுத்த வேண்டும் என்று எம்மைத் தேடி ஒருவர் வந்தார். அது சமயம் எனக்கு மூல நோய் இருந்தது… உட்கார்ந்தோம் என்றால் கடு…கடு… என்று இருக்கும்.

நோய் பெண்மணிக்கு…! ஆனால் அந்தப் பெண்ணின் கணவர்தான் வந்திருந்தார். அவர் தனது மனைவிக்குத் தொடர்ந்து உதிரப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது… ஆனால் டாக்டர்கள் இதனைக் குணப்படுத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள்.

தனக்குக் கண்ணில்லாத குழந்தை ஒன்றும், மற்றும் ஐந்தாறு குழந்தைகள் இருப்பதாகவும்… இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. ஆகவே நீங்கள் தான் எனது மனைவியைக் குணப்படுத்தித் தரவேண்டும்… “உங்கள் குருநாதரிடம் சொல்லி மருந்து தாருங்கள்…” என்றார்.

அப்பொழுது குருநாதர் எமக்குக் காட்சி கொடுத்து எம்மிடம் பேசிக் கொண்டிருந்தார். யாம் இதன் விவரங்களை குருநாதரிடம் கேட்கப்படும் பொழுது
1.முருகன் வருகின்றார்…! “ஆறாவது அறிவின் தன்மை பெற்று நீ இங்கே வா” என்றார்.
2.இந்த ஆறாவது அறிவைச் சரியாகப் பயன்படுத்தாதினால் உருவான நிலை என்ன…?
3.இவர்கள் சொன்ன குறை மேல் ஆசை வருகின்றது.

குழந்தைகள் சிரமப்படுகின்றார்கள் எனச் சொல்லும் பொழுது குருநாதர் காட்சி தருகின்றார். இப்பொழுது முருகனைக் காண்பித்து அதன் பின் பக்கமாகக் குருநாதர் காட்சியில் வந்து “சிரிக்கின்றார்…”

யாம் குருநாதரிடம் அவர்களுடைய வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் இருக்கின்றன. அவற்றில் குருட்டுக் குழந்தையும் இருக்கின்றது. நாளை அவர்கள் இறந்து போனால் அவர்களுடைய குழந்தைகள் தவிப்பார்களே…! அவர்கள் வருத்தமாகச் சொல்கிறார்கள்… நீங்கள் சிரிக்கின்றீர்கள்…! என்றோம்.

போய் ஓமப்பொடி வாங்கி வா…!” என்று குருநாதர் எம்மிடம் கோபமாகச் சொன்னார்.

எமக்குக் கோபம் வந்து விட்டது. சாமி அவர்கள் வேதனையாக இருக்கிறார்கள்… நீங்கள் ஓமப்பொடி வாங்கிக் கொண்டு வரச் சொல்கிறீர்கள்…!, என்றோம்.

எனக்குத் தெரியாது…! நீ போய் ஐயப்பனைக் கேட்டுக் கொள்…! என்றார். குருநாதர்

காட்சியில் ஐயப்பன் வந்தார். ஐயப்பனிடம் கேட்டால்… அவர் மௌனமாக இருக்கின்றார்.
1.“நீ குருவையே எதிர்த்துப் பேசி விட்டாய்…
2.இனி உன்னிடம் ஒன்றும் பேச மாட்டேன்…!” என்று ஐயப்பன் கூறினார்.

குருநாதரிடம் யாம் கேட்டோம்… ஐயப்பன் ஒன்றும் பேச மாட்டேன் என்கிறாரே…! என்றோம்.

அவர் எப்படிப் பேசுவார்…? என்றார் குருநாதர்.

பின்னே யாரிடம் கேட்பது…? என்றோம். யாம் குருவாகிய உங்களிடம் தானே கேட்க முடியும். யாம் என்ன தவறு செய்தோம்…? தேடி வந்தவர்கள் நலம் பெற வேண்டும் என்று தானே கேட்டோம்…! என உரைத்தோம்.

நீ ஐயப்பனையே கேள்…! என்று குருநாதர் கூறிவிட்டார்.

பாவம்… இந்தப் பெண்மணி இறந்ததென்றால் அவர்களுடைய குழந்தைகளெல்லாம் அனாதைகளாக நிற்கும். கண்ணில்லாத குழந்தையும் இருக்கின்றது, இவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டுமல்லவா…? அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினோம் என்றால் அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால் குருநாதரும் ஐயப்பனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

அதன் பிறகு எமது மகள் மீராவைக் கூப்பிட்டோம். அப்பொழுது மீரா சிறு வயதுப் பெண். மீரா குருநாதரிடம் உரையாடினார்.

மீரா எம்மைப் பார்த்து…
1.நீங்கள் குருநாதரிடம் முறை தவறிக் கேட்டீர்கள்,
2.குருநாதரிடம் கோபமாகப் பேசினால் எப்படி…?
3.நோய் தீரவேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும்… அதை விட்டு விட்டு, குருநாதரை அதிகாரம் பண்ணிக் கேட்கின்றீர்கள்…! என்றது.

அதிகாரம் செய்து வேண்டுமானால் நீ எடுத்துக் கொண்டு போ…! என்று குருநாதர் மீராவுக்குக் காட்சி கொடுத்துக் கூறினார்.

அப்பொழுது நோயாளியின் கணவர் ஓமப்பொடியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அந்தப் பெண்மணியை ஓமப் பொடியைச் சாப்பிடச் சொல்…! என்று மீரா மூலம் குருநாதர் கூறினார்.

அது எப்படிக் குணமாகும்…? என்றோம் யாம்.
1.குருநாதர் தான் சொல்கிறார்,
2.ஆனால் யாம் அது எப்படி ஓமப்பொடி சாப்பிட்டுக் குணமடைய முடியும்…? என்று வாதிக்கின்றோம்.
3.(அதாவது மருந்து சாப்பிட்டால் தானே குணமாகும் என்ற நிலையில்)

இப்படி மறுபடியும் விதண்ட வாதம் செய்தவுடனே குருநாதர் மறுபடியும் மௌனமாகவே இருந்து விட்டார்.
1.நீயே போய்க் காப்பாற்றிக்கொள்… நீ குருவுக்கு மிஞ்சிய ஆளாக ஆகின்றாய்…! என்று கூறிவிட்டார்.
2.அதன் பிறகு நாங்கள் இருவருமே மௌனமாகி விட்டோம். இப்படி நான்கு மணி நேரம் ஆகிவிட்டது.

சாமி…! என் மனைவிக்கு உடலிலிருந்து இரத்தம் முழுவதும் போய்விட்டது. டாக்டர்களும் கைவிரித்து விட்டார்கள். இன்றோ… நாளையோ…! என்று என் மணைவியின் நிலை இருக்கின்றது. நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்பி வந்தால் குருநாதரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றீர்களே…! என்றார் எம்மைத் தேடி வந்தவர்.

குருநாதரிடம்… நோய் நீக்கும் வழியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், அவர் கொஞ்சம் கூடக் கவனிக்க மாட்டேன் என்கிறார்…! என்றோம் யாம்.
1.இது எம்முடைய புத்திசாலித்தனம்.
2.அன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் என்னுடைய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இதனைத் தொடர்ந்து… பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தேவர் அவர் எம்மை “மாப்பிள்ளை… மாப்பிள்ளை…!” என்று அழைத்துக் கொண்டே வந்தார்.

என்னப்பா இது…? நல்லய்ய நாயக்கர் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று நீ ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய். என்னென்னவோ மந்திர வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றாய், இதெல்லாம் உனக்கு எதற்கு…? என்று எம்மிடம் கேட்டார்.

நான் என்ன செய்ய வேண்டும்…? என்று அவரிடம் கேட்டோம்.

நீ இது போன்ற மந்திர தந்திர வேலைகளைச் செய்யக் கூடாது. நீ மறுபடியும் வீட்டிற்கு வந்து வெளி வேலைகளுக்குச் சென்று விறகுக் கடையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து அவர்…
1.நீ பைத்தியத்துடன் சேர்ந்து சுற்றி
2.இதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாய்…! என்று சத்தம் போட்டார்.

அப்பொழுது மீரா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. எனது மகள் மீரா அவரைப் பார்த்துக் “கோபிக்காதீர்கள்…! குருநாதர் உங்களுக்கு லட்டு கொடுக்கின்றார்…” என்று சொன்னது.

அதற்கு அவர்… “என்ன பிள்ளை…! எங்கே கொடுக்கிறார்…?” என்று கேட்டார்.

முகர்ந்து பாருங்கள்… வாசனை தெரியும்…! என்றது மீரா.

பக்கத்து வீட்டுக்காரர்… எனக்கு ஒரு வாசனையும் தெரியாது ஒரு கத்திரிக்காயும் தெரியாது, இதுவெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை…? என்று கூறினார்.

இல்லை…! மறுபடியும் முகர்ந்து பாருங்கள்… லட்டு வாசனை தெரியும்” என்றது மீரா.

எனக்கு மூக்கடைத்து விட்டது வாசனை தெரியவில்லை…! என்று கூறினார் அவர்.

தாத்தா…! குருநாதர் இப்பொழுது ஜிலேபி கொடுக்கின்றார்… கொய்யாப் பழம் கொடுக்கிறார்… என்று மீரா சொல்கிறது.

எதுவும் எனக்கு தெரியாது…! யாரை ஏமாற்றுகிறீர்கள்…? கொய்யாப் பழத்தைக் கொண்டு வரச் சொல்… என் கையில் கொடுக்கச் சொல்…! என்றார் தேவர்.

நீங்கள் முதலில் வாசனையைப் பாருங்கள்… பிறகு கொடுக்கிறேன் என்றார் குருநாதர். இப்படி… இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

ஊரை எமாற்றி எங்களைப் பைத்தியக்காரனாக்க விரும்புகிறார் உனது குருநாதர்…! என்று பேசினார் பக்கத்து வீட்டுக்காரர்.

மூக்கடைத்து விட்டது வாசனை தெரியவில்லை என்றுதானே கூறினீர்கள்… இப்பொழுது நிஜமாகவே வாசனை தெரியும் பாருங்கள் என்று மீரா கூறியது.

அந்தச் சமயத்தில்… நோயாளிப் பெண்மணியின் கணவர் “என்னங்க நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்… எனக்கு ஒரு நல்வழியைக் காண்பியுங்கள்…!” என்று கூறினார்.

அது தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே “ஓமப்பொடியைக் கொடுங்கள் குணமாகும்…!” என்று கோபமாக மீரா மூலம் கூறினார் குருநாதர்.

ஓமப்பொடியைக் கொடுத்தால் நோய் குணமாகுமா…! அது எப்படி…? என்று நோயாளியின் கணவரும் கேட்டார்.

இது நடந்த நிகழ்ச்சி. குருநாதர் எமக்கு ஒவ்வொரு அனுபவத்தையும் நேரடியாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து “முகர்ந்து பாருங்கள் வாசனை தெரியும்” என்று கூறினால்… எனக்கு ஒரு வாசனையும் தெரியாது மூக்கடைத்து விட்டது என்று கூறினால்… திரும்பத் திரும்ப, இதையே கூறுகின்றாயே…! என்று கேட்டார்.

குருநாதர் சிரித்துக் கொண்டே… இப்பொழுது “அழுத்தமாக உறிஞ்சிப் பாருங்கள்…” என்றார்.

பக்கத்து வீட்டுக்காரரும் அது போன்று செய்யவே “நச்… நச்…” என்று பெரிய தும்மலாகத் தும்மினார்.

அவர் வெற்றிலையும் புகையிலையும் எப்பொழுதும் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பவர். இந்தத் தும்மலினால் அவர் வாயில் இருந்த வெற்றிலை அவருடைய வேஷ்டி சட்டையில் எல்லாம் விழுந்து கறை படிந்து விட்டது. எம் மீதும் வெற்றிலைக் கறையாகி விட்டது.

இப்படிச் சிறிது நேரம் தும்மிக் கொண்டே இருந்தார். பக்கத்து வீட்டுக்காரரும் மீராவைப் பார்த்து… ஏய் பிள்ளை…! தும்மலை நிறுத்தச் செய்கின்றாயா இல்லையா…? என்று கேட்டார்.

எனக்கென்ன தெரியும்…? குருநாதரிடம் கேளுங்கள்…! முகர்ந்து பார்க்கச் சொன்னார். வாசனை இல்லை என்று சொன்னீர்கள்… இப்பொழுது வாசனை தெரிந்ததல்லவா…! என்றாள் மீரா.

“இது என்னவோ பெரிய வேலையாக இருக்கின்றது….”
1.உங்கள் குருநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்…
2.தும்மலை நிறுத்தச் செய்…! என்று கேட்டுக் கொண்டார் தேவர்.

அது சமயம் ஓமப்பொடி வாங்கி வந்தவர் இது என்ன…? எல்லோரையும் ஏமாற்றுவது போன்று இருக்கின்றது. உங்களுடைய குருநாதர் பைத்தியக்காரராக இருந்தார். உங்களுடைய வாழ்க்கையும் பைத்தியக்காரர் போன்று இருக்கின்றது. நானும் போயும் போயும் உங்களைத் தேடி வந்தேன்…! என்று கூறினார்.

தேவரும்… என்னால் தும்ம முடியவில்லை…! மாப்பிள்ளை…! உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து…! என்று எம்மிடம் கூறினார்.

யாம் அவரிடம் எமக்கென்ன தெரியும்…? நீங்களே எமது குருநாதரைக் கேட்டுக் கொள்ளுங்கள்…! என்றோம்.

இதற்கு எமது மகள் மீரா… இனிமேல் இது போன்று சொல்ல மாட்டேன் என்று சொல்லுங்கள்…! என்றது.

இனிமேல் அப்படிச் சொல்வேனா…? உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து…! என்றார்.

முக்கால் அல்லது ஒரு மணி நேரம் தும்மிக் கொண்டிருந்தார். எனக்கு வயிற்று வலி ஆகின்றது… உடலெல்லாம் வலிக்கின்றது… என்னை விட்டுவிடு…! என்றார்.

மீரா… சரி… தும்மல் நின்று போகும், குருநாதர் இன்னொரு பொருள் தருகின்றார் வாசனையைப் பாருங்கள் என்றது.

கொடு பிள்ளை… கொடு என்றார் தேவர். உடனே தும்மலும் நின்றது.

தும்மல் நின்றதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓமப்பொடியை வாங்கி வந்தவர் எம்மிடம்…
1.“நைனா…! ஓமப்பொடி கொடுத்தால் குணமாகும் போலத்தான் தெரிகின்றது…
2.“நான் தான் பைத்தியக்காரன்…!” என்றார்.

யாம் ஓமப்பொடியைக் கொண்டு போய் உனது மனைவிக்கு கொடு” என்றோம். கொண்டு போய்க் கொடுத்தவுடனே இரண்டு மூன்று மாதமாக இருந்து கொண்டிருந்த உதிரப் போக்கு
1.“பிரேக் அடித்த்து போல் நின்று போனது…”
2.குணமானவுடனே ஓடி வந்து எங்களிடம் சொன்னார்.

அதன் பிறகு குருநாதர்… எம்மிடம் சொன்னார். ஐயப்பனிடம் எப்படிக் கேட்பது…? நீ அவரையே மிரட்டுகிறாய்… முருகனை மிரட்டுகிறாய்…! அதன் பிறகு நான் என்ன சொல்ல வேண்டியிருக்கின்றது…? என்றார்.

1.நீ எப்படி இருக்க வேண்டும்…?
2.குருநாதரிடம் எப்படிப் பேச வேண்டும்…?
3.நீ என்னென்ன செய்ய வேண்டும்…? என்று எமது மகள் மீராவிற்கு குருநாதர் காட்சி கொடுத்து… மீரா மூலம் எமக்கு உபதேசம் கொடுத்தார்.

இவ்வாறு அனுபவபூர்வமாகத்தான் எமக்குப் பல நிலைகளை உணர்த்தி
1.நாம் எவ்வாறு மெய் வழியில்
2.குரு வழியில் செல்வது…? என்று உபதேசித்தார்.

இதன் வழியில் குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் அனைவரும் அவர்களது வாழ்க்கையில் இருள் நீங்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று நோய் நீங்கி நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவும் என்றென்றும் அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடவும் எமது அருளாசிகள்.

“மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் என்று…” எதற்காக அப்படி உபதேசம் கொடுக்கின்றோம்…?

“மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் என்று…” எதற்காக அப்படி உபதேசம் கொடுக்கின்றோம்…?

 

1.நான் ஏட்டைப் படிக்கவில்லை… குரு அருளை எடுத்து அந்த உணர்வுகளை வளர்த்து அதன் வழி நடந்தேன்.
2.காற்றில் அனைத்துச் சக்திகளும் இருக்கின்றது… நீங்களும் என்னைப் போல் அறியலாம்… அதை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
3.அந்த நல்லதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

தீமை எவ்வாறு வருகின்றது…? அந்தத் தீமையை எப்படி மாற்றுவது…? என்ற உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நீங்கள் அதை நுகர்கின்றீர்கள். உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது.

கூடுமான வரையிலும் உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றேன்.

நேரம் போகின்றதே…! என்று எண்ணக் கூடாது.

இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்த்துக் கொண்ட பின்
1.அந்தத் தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும்.
2.அப்பொழுது சிறுகச் சிறுக அந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்க்க வைக்கின்றேன்.
3.இடைவிடாது பேசிக் கொண்டிருக்கின்றேன்… இடைவிடாது நீங்கள் நுகர்கின்றீர்கள்.
4.உங்கள் ரத்தத்தில் அருள் உணர்வுகள் கலந்து கொண்டே இருக்கின்றது… கலக்கச் செய்கின்றேன்,

எனக்கு குருநாதர் மணிக்கணக்காக உபதேசிப்பார். இரண்டு நாள் மூன்று நாள் கூடப் பட்டினியாக இருக்கும்படி செய்வார். இந்த அருள் சாப்பாட்டைக் கொடுப்பார். என் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அந்த உபதேசக் கருத்துக்களை உணவாகக் கொடுப்பார்.

மற்றவர்கள் அரை மணி நேரத்திலே பேசி விட்டுச் சென்று விடுவார்கள். சாமி மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் “ஜவ்வு மிட்டாய் மாதிரிப் பேசுகின்றார்…” என்று சிலர் எண்ணி விடுவார்கள்.
1.உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் ரத்தங்களிலே கலக்கச் செய்து
3.கெட்ட அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் செய்கின்றோம்.
4.மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்தச் செய்கின்றோம்.

அந்த வழி தெரிந்து தான் இதைச் செய்கிறோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு அலுமினியத்தையோ தங்கத்தையோ அத்தகைய கடினமான உலோகங்களையும்… காற்று அழுத்தத்தை அதிகமாக்கி அதிலே மோதும்படிச் செய்து அதைத் தூசியாக மாற்றுகின்றார்கள்… (ATOMISATION) கரைத்து விடுகின்றார்கள்.

இதைப் போன்று தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களுக்குள் சேர்க்கும்படி செய்து “அது அழுத்தமான பின்… வேக சுழற்சி ஆகும்…”
2.தீமையின் உணர்வுகளுக்குள் அதை ஊடுருவும்படிச் செய்கின்றோம்.

விஷம் எப்படி ஒன்றுக்குள் ஊடுருவி அதன் இயல்பை மாற்றுகின்றதோ இதைப் போல விஷத்தை மாற்றிய உணர்வுகளை உங்கள் ரத்தத்தில் கலக்கும்படிச் செய்கின்றோம்.

1.உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குள் ஊடுருவி
2.அதை மாற்றக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஒரு சிலர் சாமி மணிக்கணக்காகப் பேசுகிறார் நம்மால் உட்கார முடியவில்லை என்று வேறு பக்கம் சென்று விடுவார்கள்… வாழ்க்கையின் நிலைகள் கொண்டு.

1.அப்படிப் போவோர்கள் தவிர மிஞ்சுபவர்கள் தான்
2.”எப்படி இருந்தாலும் அந்தக் குரு அருளைப் பெற வேண்டும்…” என்ற நிலையில் இங்கே நிற்பார்கள்.

பிறகு… நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் பேசப் பேச அவர்களுக்கும் இதிலே கொஞ்சம் பற்று வரும். பின் வரவேண்டும் என்று சொல்லி வருவார்கள்.
1.நீங்கள் வளர்ச்சி அடைந்த நிலைகள் கொண்டு உங்கள் மூச்சு பூமியில் உள்ள தீமைகளை நீக்கும்.
2.உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவரையும் திருந்தும்படிச் செய்யும்.

தெருவிலே ஒருவருக்கொருவர் போக்கிரியாக இருக்கின்றார்கள்… போக்கிரித்தனமாகச் செயல்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வை நுகர்ந்தால் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதே வெறி உணர்வு இயக்கும்.

ஆனால் உங்களுக்குள் அந்த மகரிஷிகள் உணர்வு வளர்ந்த பின் அவருடைய துன்பத்தை மாற்றக்கூடிய சக்தியாக மாறும். இல்லையென்றால் அது ஆட்கொண்டு விடும். அதனால் தான் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

சமையல் செய்யும் பொழுது அவசரப்பட்டுச் சாதத்தை ஆக்கினால் என்ன ஆகும்…?

சில ஓட்டலில் அரிசியை முக்கால் பாகம் வெந்தபின் போட்டு விடுவார்கள். கூட்டமாக இருக்கிறது சீக்கிரம் போட வேண்டும் என்று கல்யாண வீட்டில் கூட… அவசரப்பட்டு வேகுவதற்கு முன்பே சாதத்தைப் போட்டுவிடுவார்கள்.

அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் எனக்கு வயிற்றால் போகின்றது நெஞ்சு வலிக்கிறது என்று சிலர் திட்டுவார்கள்.

ஆக… அது போன்று அவசரப்பட்டு மெய் உணர்வுகளைச் சமைத்துக் கொடுத்தால் என்ன ஆகும்…? வித்தியாசமாக நினைப்பீர்கள். அப்படி நீங்கள் வித்தியாசமாக நினைத்துவிடக் கூடாது என்பதற்குத் தான் உங்களுக்குப் “பொறுமையாக உபதேசத்தைக் கொடுக்கின்றேன்…”

ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுக்குத் தக்க பதிவாகும். ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் தீமைகள் வந்தது என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அனைத்திலும் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.
2.அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் அந்தப் பருவத்தைச் செயல்படுத்துவது தான் இத்தகைய உபதேசங்கள்.

குழம்பு வைக்கும் போது அதிலே ஒரு பொருளுடன் ஒரு பொருளைச் சேர்த்து ருசியாக மாற்றுகின்றோம் அல்லவா… அது போல் தான்…!

நாம் வேதனையான குணங்களை எடுத்து விட்டால் நல்ல அணுக்களை மாற்றும்படிச் செய்து விடுகின்றது. அந்த அணுக்களை மீண்டும் நல்லதாக மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைச் சேர்த்து இதற்கு மேல் இதை மாற்ற வேண்டும். அந்தத் தீமையை அடிமையாக்க வேண்டும்.

வெங்காயச் சருகு உருவாவது போன்று ஒவ்வொரு உணர்வின் தன்மை வரும் போதும்…
1.அணுவுக்குள் அணு… அணுவுக்குள் அணு… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓம்… ஓம்…! என்று இணைத்து
2.ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரணவத் தத்துவமாகக் கொண்டு வரும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுக்களிலும் அந்த நுண்ணிய அணுக்களாக மாறி மாறி அதைச் சேர்த்துத் தான் உடலாக மாறியது.

அதே போன்று நாமும் இந்த அருள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வளர்த்துக் கொண்டு வர முடியும்.

சினிமா படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்

சினிமா படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும்
1.சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தெந்த நேரத்தில் எது எது இயக்குகின்றது…? என்பதையும்
2.அவரவர் வாழ எதைச் செய்கின்றனர்…? என்பதையும் நமது குருநாதர் எமக்குத் தினம் தினம் அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.

ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மை எப்படிப் பெருகுகின்றது…? பெருகியபின் அவ்வுடல் என்ன நிலையாகின்றது…? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாக உபதேசித்து அருளினார்.

குருநாதர் எமக்கு எழுத்து வடிவில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அருள் வழியில் எமக்குக் கற்றுக் கொடுத்தார்.
1.பார்த்தால் சின்ன விஷயமாகத் தோன்றும்.
2.ஆனால் அதனுள் விஷயம் ஏராளமாக இருக்கும்.

எமது சொந்தக்காரர்கள் எல்லாம் எம்மைப் பார்த்துப் பைத்தியத்துடன் சேர்ந்து அலைந்து கொண்டிருக்கின்றேன் என்று எம்மைத் திட்டுவதற்குதான் வந்தார்களே தவிர “குருநாதருக்கும் எமக்கும் இடையே உள்ள உண்மை நிலை என்ன…?” என்பதை அறிந்து கொள்ள முன் வரவில்லை.

நண்பர்களாக இருந்தவர்களும் எம்மைப் பைத்தியத்துடன் சேர்ந்து பைத்தியமாகி விட்டார் என்றுதான் பேசினார்கள். ஏன்…! எமது வீட்டில் சாமி அம்மாவும் அப்படித்தான் பேசினார்கள். வீட்டில் இருந்த மாமா அத்தை எமது குழந்தைகள் என்று அனைவரும் எம்மை அப்படித்தான் நினைத்தார்கள்.

அருள் உணர்வின் தன்மையை சாமி அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால் நாங்கள் வைத்திருக்கும் விறகுக் கடைக்குக் குருநாதர் வந்து ஹாயாகப் படுத்துக் கொள்வார்.

சாமி அம்மாவிடம்… இவர்களைப் பார் அவர்களைப் பார் என்று தனது உள்ளங்கையைக் காண்பிப்பார். இப்படியெல்லாம் பல நிலைகளைச் செய்து உலகம் எப்படி இருக்கிறது…? என்று உணர்த்தினார் குருநாதர்.

பிறகு… சினிமாத் தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன…? என்று குருநாதர் கேட்பார். சினிமாத் தியேட்டர்களில் ஓடும் படங்களைச் சொன்னால் எந்தச் சினிமாப் படம் பார்க்க விரும்புகின்றாய்…? அதை இங்கேயே பார்க்கலாம்…! என்று கூறுவார்.

அது எப்படித் தியேட்டரில் ஓடும் சினிமாப் படத்தை இங்கிருந்து பார்க்க முடியும்…? என்று யாம் கேட்போம்.

இப்பொழுது பார்…! என்று கூறுவார். சினிமாப் படத்தை அப்படியே நாங்கள் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. எமது மகள் மீராவிடம் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று கேட்பார் குருநாதர். மீராவிடம் கேட்டு மீரா விரும்பிய படத்தை அங்கே காண்பிப்பார்.

யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த உணர்வுகளை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று குழந்தைகளிடம் கேட்டு அதைப் பாருங்கள் என்று கூறி “யாமும் மற்றவர்களுக்குச் சினிமாப் படம் காண்பிக்க ஆரம்பித்தோம்…”

இதனால் எம்மைப் பார்த்தால் போதும், குழந்தைகள் கூட்டம் கூடிவிடும். நைனா… நைனா…. என்று குழந்தைகள் எம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். இந்தந்தச் சினிமாப் படங்களைக் காண்பியுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட சினிமாவைக் காண்பித்தால் உடனே குழந்தைகளுக்குக் குஷியாகும்.

அதன் பிறகு குருநாதர் எம்மைத் திட்டுவார். உன்னைச் சினிமா பார்க்கச் சொன்னேனா…? என்று கேட்டார்.
1.ஒவ்வொருவரும், சினிமாவில் நடிப்பதைப் போன்று வாழ்க்கையில் எப்படி நடிக்கின்றார்கள்…?
2.இதனின் உணர்வு எப்படி வருகின்றது…?
3.ஒருவருக்கு நடிப்பு எப்படி வருகின்றது…?
4.ஒரு உணர்வை நுகர்ந்தபின் எப்படி நடிக்கின்றார்கள்…?
5.நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? என்று
6.அதைத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன்…! என்றார் குருநாதர்.

ஒருவருடைய உணர்வுக்குத் தக்க அவருடைய வாழ்க்கையில் வீட்டில் ஒருவருடன் சண்டைக்குச் செல்கின்றார். ஒரு பக்கம் அரவணைக்கின்றார் மறு பக்கம் வெறுக்கின்றார்… இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கின்றார்.

அதனின் உணர்வுகள் அவருக்குள் எப்படி அங்கே இயங்குகின்றது…? என்று உபதேசித்தார்.

நீ குழந்தைகளுக்குச் சினிமாப் படம் காண்பிக்கின்றாய். அதனால் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன. ஆனால் பெரியவர்களிடம் சொன்னால், அவர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்…?

ஏதாவது, புதையல் கிடைக்குமா…? புதையல் இருக்கும் இடம் தெரியுமா…? என்று கேட்டு வருகின்றார்கள். புதையல் கிடைத்தால் நான் நன்றாக ஆகிவிடுவேன்… குபேரனாக வாழலாம் என்பது பெரியவர்களுடைய ஆசை.

1.ஆனால் அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் இருளைப் போக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் அருள் ஆற்றலை உனக்குக் கொடுத்தேன்.
2.நீ மற்றவர்களுடைய ஆசைகளைப் பெருக்கவா போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகையினால் எந்த ஆசையினைப் பெருக்க வேண்டும்…? அருளை ஆசைபட்டால் இருளைப் போக்கும். உடலின் ஆசையை வளர்த்தால் இருள் சூழும். ஆக
1.உயிர் ஆசை
2.உடல் ஆசை என்பதற்கு விளக்கம் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால்… விஞ்ஞான அறிவில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது கம்ப்யூடர் போன்ற சாதனங்களை உருவாக்குகின்றனர்.

கெமிக்கல் கலந்த நிலைகளில் நாம் எப்படி
1.“சிக்கி முக்கி” கல்லைத் தட்டுகின்ற பொழுது அதில் உணர்வின் அதிர்வும் ஒளியும் வருவதைப் போன்று
2.கெமிக்கல் கலந்த பொருள்களில் அதிர்வைக் கொடுத்து உணர்வின் ரூபத்தை விஞ்ஞான அறிவால் காட்டுகின்றனர்.

நாம் கோபம் என்ற நிலையை எடுத்துக் கொண்டபின் கோபத்தின் உணர்வுகள் எலெக்ட்ரானிக் கோப உணர்வின் உணர்ச்சிகள் அழுத்தங்கள் வரப்படும் பொழுது நமது கண் எப்படிச் சிவக்கின்றது…? நரம்புகள் எப்படி முறுக்குகின்றது…? எதன் வழி செயல்படுகின்றது…? என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலையில் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலக்கப்படும் பொழுது அதனின் கலவையின் நிலைகள் எப்படிச் செயல்படுகின்றன…? செடி கொடிகள் எப்படி வளர்கின்றன…? எப்படி ரூபம் மாற்றமடைகின்றன…? என்பதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.

இப்படி…
1.எங்களுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்கள் வேறு யாருக்கும் தெரியாது.
2.அனுபவரீதியாக ஒவ்வொன்றையும் சினிமாப் படம் போன்று காண்பித்தார்.
3.இந்த உண்மையின் இயக்கத்தை நமது அகத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைகளில்
4.குருநாதர் எமக்கு உபதேசித்த அருள் வழி கொண்டுதான் இப்பொழுது யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் இயல்பு

துருவ நட்சத்திரத்தின் இயல்பு

 

மனிதனாகப் பிறந்து வளர்ச்சி பெற்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறிதொரு தீமைகளையோ பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளையோ வேதனை உணர்வுகளையோ எடுத்துக் கொண்டால் உடலில் அது விளைந்து “விஷமான அணுக்களாகப் பெருகுகின்றது…”

அதனால் இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்று விடுகின்றது.

ஆக இந்த உயிர் எத்தகைய விஷத்தின் தன்மையைச் சேமித்து வைத்ததோ இதைப் போல விஷத்தைக் கொண்டு ஜீரணித்து வாழக்கூடிய உயிரினங்களுக்கு அழைத்துச் சென்று விடும்.

1.மாடு ஆடு யானை எல்லா உயிரினங்களிலும் பார்க்கலாம்… நாமும் சரி பித்தப்பை என்பது கடுமையான விஷம்.
2.பழுவிலிருந்து எல்லா வகையிலும் எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
3.அந்தப் பித்தம் சிறிதளவு மனித உடலில் இல்லை என்றால் “ஜீரணிக்கும் சக்தி குறையும்…”

ஒரு சிலர் பித்தப்பையை எடுத்தே வாழ்வார்கள். சேமிக்கும் தன்மை கொண்டு வடிகட்டும் நிலை… அதாவது இரத்தத்திலிருந்து மீண்டும் பித்த சுரப்பிகள் சேமிக்கும் நிலை இல்லை என்றால் அது நம் உடலிலேயே கவர்ந்து கொள்ளும்.
1.ஆனால் பித்தப் பையில் கல் உருவாவதால் தான் அதை நீக்குகிறார்கள்.
2.காரணம் அந்த நஞ்சு உறைந்து கல்லாகிறது.

ஆனால் விஷத்தை அதிகமாக எடுக்கும் பாம்பினங்களுக்கோ அதிலே உறைந்து நாகரத்தினமாக மாறுகிறது. இதே போல் பித்தப்பை உள்ள மற்ற உயிரினங்களிலும் இது போல் விஷத்தின் சேமிப்பு அதிகமானால் அந்தக் கற்கள் வைரக் கல்லாக மாறும்.

பித்தம் அதிகரிக்கும் போது அந்த உணர்வுகளைச் சேமிக்க என்று ஒரு தனிப் பை இருக்கும்.
1.பாம்பினங்களுக்கு வைரக்கல்லாக மாறுகின்றது.
2.அந்த விஷம் ஒடுங்கி ஒளியாக மாறுகின்றது

ஏனென்றால் விஷம் தாக்கித் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு ஒளியாகின்றது. இது இயற்கையின் நியதிகள். இதைப் போன்று… “விஷத்தின் ஆற்றல்…” மிகச் சக்தி வாய்ந்தது.

இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்றால் புழுவில் இருந்து மனிதனாக நாம் வளர்ச்சி பெற்று வந்த நிலையை இந்த சரித்திரத்தை சிறிதளவாவது இந்த மனித உடலில் ஏற்றுக் கொண்டு அதை நீக்குவதற்குத் தான்…!

ஆக இதையெல்லாம் நீக்கியவன் யார்…?

அகஸ்தியன் என்று பின் கூறும் அந்த ஞானி இந்த நஞ்சை எல்லாம் மாற்றி அமைத்து
1.கணவன் மனைவி இருவரும் ஒன்றாகி அந்த விஷத்தை அடக்கி
2.ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.உங்களை அதனுடன் இணைத்துக் கொண்டு வரப்படும் பொழுது
4.“உங்கள் உடலில் உள்ள அணுக்களும்…” நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்ச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்ளும்.

குருநாதர் இப்படித்தான் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் சொல்லிக்
1.கடைசியில் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் கொண்டு வருவார்.
2.அதைத்தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.