இரக்கப்படும் குணத்தைப் பற்றிய உண்மை – “நன்றிக் கடன்”

இரக்கப்படும் குணத்தைப் பற்றிய உண்மை –  “நன்றிக்கடன்”

 

உதாரணமாக நாம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பொழுது பக்கத்திலே ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார்… பார்க்கின்றோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள்.

இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அவரிடம் அதிகமான பழக்கமில்லை. இரயிலில் போகும் பொழுது தான் அவரிடம் நாம் யதார்த்தமாகப் பழகுகின்றோம்.
1.அவர் படும் வேதனையை நாம் மிகுந்த இரக்கத்துடன் பார்க்கின்றோம்.
2.ஆனால் அவருடன் கூட வந்தவர்கள் சலிப்பாக சஞ்சலமாகத் தான் பேசுவார்கள்.
3.ஏனென்றால் அடிக்கடி அவர்களிடம் துயரப்பட்டுப் பழகியதால் அந்த நிலை.

இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இந்த மாதிரி அடிக்கடி அது வேண்டும்… இது வேண்டும்… என்று கேட்கிறாய்…? என்பார்கள்.

ஆனால் நாம் இரக்க மனம் கொண்டு ஏனம்மா…! என்ன செய்கிறது…? உனக்கு என்ன வேண்டும்…? என்று இரக்கத்துடன் கேட்கின்றோம். ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே நாம் பழகியது…!
1.அது அவருக்குள் பதிவாகிறது.
2.அவருக்கு ஆதரவாக நாம் அப்படிப் பேசுகின்றோம்.
3.பண்புடன் நாம் அங்கே சொல்லப்படும் பொழுது அவர்களுக்குக் கொஞ்சம் தணிவாகின்றது.
4.இந்த உணர்வு “அவருடைய உடலில் வலுப்பெற்று விடுகின்றது…”

நாம் என்ன நினைக்கின்றோம்…? அந்த அம்மா இவ்வளவு தூரம் சிரமப்படுகின்றது ஆனால் கூட வந்தவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதபடி இப்படிப் பேசுகிறார்கள்… சமுதாயம் இப்படி இருக்கின்றதே…! என்று “அவர்கள் உணர்வை நமக்குள் பதிவு செய்கிறோம்…”

ஆனால் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரை சார்ந்தவர்கள் வரப்படும் பொழுது நோயாளிக்குள் எண்ணங்கள் அதிகமாகிறது.

பார்…! ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தோம்… எத்தனை வசதிகள் செய்தோம்… நல்லது செய்தோம்…! நம்மை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை…!

ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த மகாராசி எனக்கு அவ்வளவு ஆதரவாக உதவி செய்தார்… எந்த அளவுக்கு உபசாரம் செய்தார்…! என்று இந்த உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

நாம் அவர்கள் பட்ட வேதனையை வலுப்பெற்று வைத்திருக்கின்றோம்
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…
2.நம்முடைய உணர்வுகள் பதிவானது அங்கே….
3.அவர் வீட்டில் அவரைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் போது தனக்கு இரயில் பிரயாணத்தில் உதவி செய்த நல்லவர் மீது… அதாவது நம் மீது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது.

விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்…!

அப்படி எண்ணிய உடனே அந்த உயிரான்மா
1.நாம் இங்கே இருந்தாலும் எதனின் வலுப்பெற்றதோ இங்கே இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.
2.நம் உடலில் புகுந்து விடுகிறது… நமக்குத் தெரியாது… ஒன்றுமே தெரியாது.

ஆனால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்படைந்த உணர்வைப் பதிவு செய்தது… “எல்லோரும் பாவிகள்” என்று அங்கே அந்த எண்ண அலைகளைப் பரப்புகின்றது.

அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பத்தையே சாடுகின்றது. இந்த உடலில் விளைந்தது அங்கே போகின்றது

தன் மீது பற்று கொண்ட உணர்வின் நினைவுடன் “மகராசி எனக்கு உதவி செய்தார்…” என்று அவர் உடலில் விளைந்தது இங்கே வந்து… விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்குமோ அது போன்று அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

கடைசி நேரத்தில்
1.என்னென்ன வேதனைப்பட்டுப் புலம்பல் ஆனதோ
2.தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாவிகள் என்று வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.அது எல்லாம் இங்கே வந்து அவர் செயல்படுத்தியது போன்றே தன் குடும்பத்தில் வெறுப்பாகப் பேசும்.

குடும்பத்தில் சிலருடைய நடவடிக்கைளைப் பார்க்கலாம்…! நேற்று வரை எல்லாம் செய்தார்… இப்பொழுது என்னமோ தெரியவில்லை “கண்டபடி வெறுத்துப் பேசுகின்றார்…! நல்லது செய்தவர்தான்… ஆனால் வெறுத்துப் பேசுகின்றார் என்று அவருடைய செயலாக்கங்கள் திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே ஏற்படக்கூடிய சில தீங்கான நிலைகள்…!

இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.
1.அறியாமல் வரக்கூடிய தீங்குகளை… அதனின் உண்மையை உணர்ந்து
2.ஞானிகள் காட்டிய வழியில் அதை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

பிறருக்கு நாம் எப்படி உதவி செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் அவர் பட்ட துன்பங்கள வேதனைகளும் நமக்குள் வராதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்…?

1.நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தியாக
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்பதற்குத்தான்
3.இதை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

இராமாயணம் சாதாரணமானது அல்ல

இராமாயணம் சாதாரணமானது அல்ல

 

சந்தர்ப்பத்தால் நமக்குள் பதிவான உணர்வுகள்… அது எதன் வலுவோ அதனைக் கொண்டு நம்மை இயக்குகின்றது. எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ “உள் நின்று இயக்குவது தான்…” அதன் தன்மை.

அதனைத் தான் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால்
1.அது என்ன…? என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்துகின்றோம்…
2.அதனை நாம் கவர்கின்றோம்… அது தான் வசிஷ்டர்.

எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை கவருகின்றோமோ… கவர்ந்த உணர்வுகள்
1.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்…
2.இந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மமாகி (சிருஷ்டியாகி) விடுகின்றது

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பது தான் வசிஷ்டர் பிரம்மகுரு. பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு.

ஒருவனின் செயலை நாம் பார்க்கும் போது
1.அவன் என்ன செய்கின்றான்… ஏது செய்கின்றான்…?
2.தவறு செய்கின்றானா…? குற்றங்கள் செய்கின்றானா…?
3.ரொம்பவும் பிழைகள் செய்கின்றானா…? பிறரை வேதனைப்படுத்துகின்றானா…? என்று உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டபின் வசிஷ்டர் பிரம்மமாகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடியது வெப்பம் காந்தம் விஷம். அதிலே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்… ஆண்பாலாக மாறுகின்றது.

ஆண்பாலாக மாறும் பொழுது பிரம்மம் என்று பெயர். பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்தச் சத்தின் தன்மை அது இயக்குகின்றதோ “அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…” என்று பொருள்.

1.இந்த உலகம் எப்படி இயக்குகின்றது…? இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…?
2.எதன் வழி நாம் செல்கின்றோம்…?
3.நாம் குற்றவாளியா… குற்றமற்றவர்களா…? குற்றங்கள் செய்வதன் காரணம் என்ன…?
4.குற்றத்தின் இயல்பை உண்டாக்குவது எது…? என்ற நிலையில்
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை முதலிலே உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்.

இந்த உண்மையின் இயக்கங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

உடலில் தூசி பட்டால் பிசு…பிசு… என்று ஆகிறது. ஒரு பக்கம் மிளகாய் தூற்றுகின்றனர் என்றால் அது நம் மீது பட்டால் எரிகின்றது விஷத்தன்மையான பொருள்கள் நம் மீது பட்டு விட்டால் அரிக்கின்றது.
1.நாம் தவறு செய்கின்றோமா…? இல்லை.
2.ஆனால் காற்றுடன் காற்று கலந்து வந்து நம் மீது மோதும் பொழுது இத்தகைய உணர்ச்சிகளைத் தருகிறது.

இதே போல் தான் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் செல்லப்படும் போது “தீமை என்ற உணர்வுகளும்” நமக்குள் வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு முன்
1.அந்தக் குற்றங்கள் எப்படி எதனால் செயல்படுத்தப்படுகிறது…?
2.அவரா…? சந்தர்ப்பமா… சூழ்நிலையா…? என்று இந்த உணர்வுகளைத் தெரிந்து
3.அந்தக் குற்றத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான நிலை பெற வேண்டும் என்று உணர்வினை நுகர்ந்து பழக வேண்டும்.

அப்படி அல்லாதபடி அவர் குற்ற இயல்புகள் நமக்குள் வந்துவிட்டால் அதன் உணர்வு நம்மை இயக்கி… அதன் உணர்வினை நாம் அறிந்து… அதன் உணர்ச்சியின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது நாம் கவர்ந்தது அனைத்தும் வசிஷ்டர்.

இரத்தத்தில் கலந்து கொண்ட பின் இந்திரலோகம் என்றாலும்… அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பிரம்மமாகி உடலுடன் ஐக்கியமாகி விடுகிறது.

பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…! இராமாயணத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. காரணம் இராமாயணம் சாதாரணமானது அல்ல.

1.நாம் நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகின்றது…?
2.எண்ணத்தின் உணர்ச்சிகள் உடலை எப்படி இயக்குகின்றது…?
3.அந்த உணர்ச்சியின் உணர்வுகள் நம் உடலில் எப்படி விளைகின்றது…? என்பதை
4.இராமாயணக் காவியத்தில் வான்மீகி உணர்த்தியுள்ளார்.

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

 

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

ஒரு மிருகம் முன்னாடி சென்றால் அதன் பின் மிருகக்கூட்டம் செல்வது போல் தான் இன்றைய மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது

ஒரு மிருகம் முன்னாடி சென்றால் அதன் பின் மிருகக்கூட்டம் செல்வது போல் தான் இன்றைய மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது

 

இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரீகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.

அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு…!” என்பதை அறியவில்லை… உணரவும் இல்லை.

இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.

எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன்… எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
1.குணங்களிலும்…
2.செயல்களிலும்…
3.உருவ மாற்றத்திலும்…
4.வண்ணத்திலும்…
5.ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.

இதை முதலில் உணர்ந்து கொண்டு… மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை…” உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து… தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ… அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.

அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்…!”

ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.

இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.

பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.

அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்…?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.

ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு

ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு

 

தியானம் செய்யும் அன்பர்களுக்குள் கொஞ்சம் குறையாக வந்து விட்டால் குறையை வளர்த்துக் கொள்ளத்தான் முடியுமே தவிர “மகரிஷிகள் உணர்வை எடுக்க முடியாது…”

1.கூட்டமைப்பாக இருக்கும் ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்ற நிலை வரும் ஆனால் குறைகள் தான் வளரும்…
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்பது முதலில் வராது.

தன்னுடைய நிலைகள் முன்னணியில் எது போகும்…?

எதன் வளர்ச்சி வந்ததோ நம்மை அறியாமலே ஸ்தாபனத்தின் உணர்வுகள் குரு கொடுத்த உணர்வுகளை பெறாதபடி தடுக்கும் நிலை தான் வருமே தவிர இதை வளர்க்க முடியாது. காப்பதாக நினைப்போம்… அதைக் காக்க முடியாது.

காப்பதாக நினைத்துக் கொண்ட பற்று என்ன செய்யும்…?
1.உயர வேண்டும் என்று ஆசை இருக்கும்
2.ஆனால் காக்க வேண்டும் என்ற நிலை இருக்காது
3.நம்மை அறியாமலே காக்கும் நிலைகள் தவறிவிடும்.

காக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் ஆனால் அந்தப் பற்றின் தன்மை என்ன செய்யும்…? அறியாதபடி “பிழைகளாக” வந்துவிடும்.

எப்படி…?

நான் (ஞானகுரு) ஸ்பின்னிங் மில்லுக்குள் இயந்திரம் எவ்வாறு ஓடுகின்றது என்று பார்ப்பதற்குச் செல்கிறேன். அப்பொழுது என்ன நடந்தது…?

வழியில் இருந்த சாக்கடையைத்தான் நான் கவனித்தேன் தலைக்கு மேல் உயர்ந்த இடத்தில் இருக்கும் கம்பியை நான் பார்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு நான் எல்லாவற்றையும் உபதேசிக்கின்றேன் அதே சமயத்தில் அந்த அவசர காலம் அதில் மோதுகின்றது மோதும் பொழுது மண்டையில் இடித்து விட்டது.
1.தவறிப் போய் இடித்து இருந்தால் ஆள் அவுட் ஆயிருக்கும் (நான் இறந்திருப்பேன்). அந்த மாதிரியான இடத்தில் தான் மோதி இருக்கின்றது.
2.ஆகவே… தவறுகள் யார் எதைச் செய்தாலும் அந்த சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…?
3.அதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செல்லும் பாதைகளில் அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது அந்த தீமை நம்மை இயக்கி விடாதபடி அந்த நேரத்தில் “நம்மைப் பாதுகாக்கும் உணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்…”

ஒரு சந்தர்ப்பம் இப்படி நடந்து விட்டது என்றால் உடனே
1.ஈஸ்வரா…! என்று அந்த உணர்வை நுகர வேண்டும். உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நாம் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

உதாராணமாக சமையலே செய்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலே வைத்திருக்கின்றோம்… அதிலே வேறு ஒரு பொருள் தவறி விழுந்து விட்டால் என்ன ஆகும்…? ஒரு பல்லியே விழுந்து விட்டால் சமைத்த பொருள் அனைத்தும் விஷமாக மாறிவிடும்.

நல்ல குழம்பை வைக்கின்றோம் அதிலே கசப்பை அதிகமாகப் போட்டு விட்டால் குழம்பின் ருசி கேட்டுவிடும் அதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா…?

இதைப் போன்று நாம் நல்ல செயல்கள் செயல்படும் பொழுது
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் “வந்தே தீரும்…!”
2.அப்படி வரும் பொழுது அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அதை நீக்குவதற்கு வழி…?

அதற்குத் தான் “குரு வழி” என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடனுக்குடன் தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்வது…!

இதை இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள். இராமன் குகை மீது இருக்கும் பாறையைத் தட்டி வாலி வெளியே வர முடியாதபடி பாதையை மூடி விடுகின்றான். வாலி செயல் இழந்து விடுகிறான்.

குகை மேல் என்கிற பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இங்கே நம் புருவ மத்தியில் வைத்து மூடி விட்டால்
2.தீமை உள்ளே புகுவதற்கு வாய்ப்பு இல்லை… புறத்தால் தடுக்கப்படுகிறது.

உடலுக்குள் வாலி என்ற (தீமை செய்யும்) உணர்வுகள் அதிகமாகி விட்டால் இரண்யன் நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும் ஆகவே தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து அதை நிறுத்த வேண்டும் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “சுக்ரீவன்” என்று காரணப் பெயராக வைக்கிறார்கள்.

“கலியும்… கல்கியும்”

“கலியும்… கல்கியும்”

 

அன்றைய மெய் ஞானிகளின் செயலால்… மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சி இன்றும் உள்ளது.

இருந்தாலும் இன்று… இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை…
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.

பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.

ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான் இன்றைய “கலியின் மாற்று நிலை…!”

ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும் இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்

இத்தனை விபரீத பாதிப்புகளால்… மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி… மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்… அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்… குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.

இத்தகைய தருணத்தில்…
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.

நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு வர வேண்டும்.

இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.

1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.

இந்த உடலுடன் வாழும் நிலையில்… உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு…
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்… அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

நம் மீது மோதும் தீமைகளைத் தூய்மைப்படுத்தி ஆன்மாவிற்குக் கொடுக்க வேண்டும்

நம் மீது மோதும் தீமைகளைத் தூய்மைப்படுத்தி ஆன்மாவிற்குக் கொடுக்க வேண்டும்

 

இச்சரீர இயக்கத்தில் இன்று வாழக் கூடிய காலங்களில்… உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையில்… நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தின் உணர்வு மற்ற எந்த உணர்வின் அலையுடன் மோதினாலும் அதைச் சீராக ஆக்க வேண்டும்.

இச்சரீரத்தில் பதிவாகக் கூடிய எண்ண அலைகளை…
1.நாம் வண்ணானிடத்தில் அழுக்குத் துணிகளைப் போடும் பொழுது
2.அழுக்கை நீக்கித் தூய்மையான துணிகளை நமக்கு எப்படித் தருகின்றானோ அதைப் போன்று
3.நம்மை எதிர்படும் தீய உணர்வுகளை நம் எண்ணத்தில் எடுத்தாலும்
4.அதை உடனே உணர்வுடன் கலக்க விடாமல் அவ்வழுக்கை நீக்கி
5.தூய்மையான அலையை இச்சரீரத்தில் பதியக் கூடிய நிலைக்குப் பக்குவமாக்கி
6.அழுக்கை நீக்கித் தூய்மையான உடையை வண்ணான் தருவதைப் போன்று
7.நம் உணர்வுடன் மோதக்கூடிய தீய அலைகளைத் தூய்மையாக்கி
8.நம் ஆத்மாவின் ஒளிக்குத் தர வேண்டும்.

இருந்தாலும் வாழ்க்கை என்னும் பொழுது உணர்வுகளில் மாற்றமில்லாத் தன்மை ஏற்படாமல் இருக்காது.

ஆகவே… வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு நொடிப் பொழுதின் உணர்வையும்
1.சரீர எண்ணத்தில் நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தைக் கொண்டு
2.செயலாக்கத்தக்க அணு வளர்ச்சியின் காந்த ஒளி அலையால்
3.நாம் எடுக்கக்கூடிய சாந்த நற்குணத்தின் சம அலையால்
4.உயர் காந்த மின்காந்த சக்தியால் பெறவல்ல பக்குவத்தில்
5.இவ்வாத்மாவின் ஒளியைக் கூட்டிக் கூட்டி ஆத்மாவின் வீரியத் தன்மை பெற்று
6.வாழ்க்கையில் உள்ள பொழுதும் இச்சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும்
6.தன்னைத் தானே தான் உணர்ந்து தன் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டே இருக்க முடியும்…!

அப்படி வலுப் பெற்ற ஆத்ம ஒளிகள் தானப்பா… இன்று நாம் வாழும் பூமியும்… நம்மை வாழ வைக்கும் சூரியனும்… மற்ற பல கோடி ஜீவ ஒளி மண்டலங்கள் யாவையுமே…!

ஆனால் அப்படிப்பட்ட உணர்வின் எண்ணத்தின்… ஜீவ வளர்ச்சியின் உண்மையை மனிதன் உணராமல்…
1.இன்றைய மனிதனின் எண்ணம் செயல் எல்லாம்
2.தன்னுள் இருக்கும் ஆத்மாவின் உண்மையை அறியாமல்
3.உடலின் சுகத்தின் உணர்வின் உந்தலின் வாழ்க்கையிலேயே
4.தன்னைத்தானே – இச்சரீரத்தையே உண்மை என்று நம்பி அழித்துக் கொள்கின்றான்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமே இச்சரீரம் தான். இந்தப் பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்பதைத்தான் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்

அதைத் தான் தொடர்ந்து இங்கே பாடநிலையாகக் கொடுத்துக் கொண்டுள்ளேன் (ஈஸ்வரபட்டர்).

கடிந்துரைக்க எண்ணாதே…!
கடுமையின் உணர்வு உன்னையும் சுடும்

கனிந்துரைப்பாய்…!
காரியத்தின் வெற்றியைச் சுவைக்கலாம்

மனதின் மமதைக்கு மருந்துண்டால்
மங்கிடும் மமதை மறைந்தே…!

மகரிஷிகளை நாம் எண்ண வேண்டிய வரிசைக்கிரமம்

மகரிஷிகளை நாம் எண்ண வேண்டிய வரிசைக்கிரமம்

 

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியரும்… அவரைப் பின்பற்றிய நமது குருவும்… சப்தரிஷிகளின் அருளும் அதன் பின் 4000 ஆண்டுகளுக்குள் வியாசகர் பெற்ற நிலையும் தான்.

1.அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் எடுத்து உணர்வின் ஒளியாகப் பெற்றவர் வியாசகர்
2.அவரிடமிருந்து வெளிப்பட்டதை பிருகு அத்திரி இதைப் போன்ற மகரிஷிகள் அந்த உணர்வை தனக்குள் வளர்த்து
3.அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டு எழுத்து வடிவில் பதிவு செய்தனர்
4.எழுத்து வடிவில் இல்லை என்றாலும் கூட சுருதி வடிவிலே தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்
5.அதன் வழியில் அவர்களுக்குள் விளைந்ததும் பின் அவர்கள் பிறர் பெற வேண்டும் என்று எண்ணியதும்
6.மற்றவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் நன்மை பெற வேண்டும் என்று அவர்கள் செயல்படுத்தினார்கள்.

ஆனால் பின் வந்தோர் அதை மாற்றி விட்டார்கள் இது எல்லாமே உங்களுக்குத் தெரிய வரும். உபதேசத்தின் மூலக்கூறுகளை அந்தந்தக் காலகட்டத்தில் உங்களுக்குள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

நீங்கள் வளர… பிறரைத் தெளிவாக்க தெளிந்த பூமியாக தெளியச் செய்யும் உணர்வாக நமக்குள் வளர்க்க… என்றும் பேரானந்தப் பெருநிலை என்று நிலை அடைய இது உதவும். நாம் எல்லோரும் அதைப் பெறுவோம்.

உதாரணமாக பலசரக்குக் கடையிலே பொருள்களை வாங்குகின்றார்கள். பொருள்களை எல்லாம் விற்றால் வியாபாரம் நன்றாக இருக்கும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அதே மாதிரித் தான்
1.அந்த அருள் ஞானிகளின் சக்திகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தால்
2.அவர்கள் அதைப் பெறும்பொழுது மகிழ்ச்சி நிலைகள் உங்களுக்குள் வளரும்.

புறப்பொருளை விற்றுப் பணத்தை வாங்குகின்றீர்கள் ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் எடுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று செலுத்தும் போது
2.அதை அவர்கள் பெற்று மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும் போது பேரானந்தச் செல்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகையினால் “எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்யுங்கள். அந்த மகிழ்ச்சியான அரும்பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது பேரானந்தப் பெரும் செல்வம்.

ஆகையினால் அதைப் பெறுவதற்கு முயற்சிப்போம் குரு அருளை நாம் என்றுமே பெறுவோம். அவருடைய அருளால் எல்லா நிலைகளையும் நாம் பெறுவோம் எல்லோரையும் நாம் மகிழ்வடையச் செய்ய முடியும்.

நம்மை மனிதனாக உருவாக்கிய நம் அன்னை தந்தை உயிரைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய நிலையும் மனிதன் நல் ஒழுக்கத்தையும் நல் நிலைகள் பெறுவதற்குக் குருவாக வழிகாட்டிய முதல் குருவின் ஆசியை நாம் பெறுவோம். அவர்கள் துணை கொண்டு
1.மெய் உலகின் உணர்வின் தன்மையை வழிகாட்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளும்
2.அவரின் அருள் துணை கொண்டு மெய் ஞானிகள் அருளும்
3.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வையும்
4.அதிலிருந்து வளர்ச்சி பெற்ற சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளையும் நாம் பெறுவோம்.

உலக இருளை மாய்ப்போம்… மெய்ப்பொருள் காணும் அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம்.

உடலுடன் உள்ள போதே ஆன்மாவை உயர்வடையச் செய்ய வேண்டும்

உடலுடன் உள்ள போதே ஆன்மாவை உயர்வடையச் செய்ய வேண்டும்

 

இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.

மகரிஷிகளுடன் நாம் ஒன்றும் வழி

மகரிஷிகளுடன் நாம் ஒன்றும் வழி

 

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.