
முன்னோர்களை விண் செலுத்திவருக்கே மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
1.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை உங்களுக்குள் வலுப் பெறச் செய்து
2.நம்மைச் சார்ந்து… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை
3.அனைவரும் ஒன்று சேர்ந்து உந்தித் தள்ளி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் விண்வெளியிலே இணைக்க வேண்டும்.
அங்கே இணைக்கப்படும் பொழுது அந்த ஆன்மாக்கள் உடலில் பட்ட நஞ்சுகள் கரைகின்றது. உயிரால் வளர்க்கப்பட்ட உணர்வின் அறிவு உயிருடன் ஒன்றி நிலைக்கின்றது.
பின் அந்த அறிவு கொண்டு சப்தரிஷிகளின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் சரீரமாக அவர்கள் பெருவீடு பெருநிலை அடைகிறார்கள்.
முன்னோரின் உணர்வுகள் நமக்குள் உண்டு. அவர்களை நாம் விண்ணுக்கு உந்தி வீசிய உணர்வுகள் விண்ணிலே இணைக்கப்படும் பொழுது அவர்களின் துணை கொண்டு…
1.அந்த ரிஷியுடன் ரிஷியாக ஒன்றிய உணர்வின் துணை கொண்டு
2.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணும் பொழுதெல்லாம் நாம் பெற முடியும்.
இந்த வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே தவறு செய்பவர்களை உற்றுப் பார்த்தாலும் அந்த்த் தவறான உணர்வு நமக்குள் நுழையாதபடி… அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணினால் அதைத் தூய்மைப்படுத்த முடியும்.
யார் தவறு செய்கிராரோ அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் காணும் திறன் அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் அந்தத் தவறுகள் நமக்குள் வராது. இப்படி அந்த உணர்வால் நம்மைக் காத்துக் கொள்கின்றோம்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் உந்தித் தள்ளினால் தான் அந்த ஆற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.
1.இல்லை என்றால் பெற முடியாது.
2.அதைப் பெறுவோம் என்று சொன்னாலும் “அது தவறான வழி தான்…”
ஆஅகவே.. குருநாதர் காட்டிய அருள் வழியில் முன்னோர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தினால்தான் அவரின் துணை கொண்டு அந்தச் சக்தியையே பெற முடியும்.
அதற்குத் தான் எமது குருநாதர் காட்டிய அருள் வழியினை மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.
நம்முடன் வாழ்ந்தவர்கள் எந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சரி… அல்லது துர்மரணமே அடைந்திருந்தாலும் அவர்கள் யார் மீது பற்று கொண்டார்களோ அந்த உடலுக்குள் இந்த உயிரான்மா அங்கே சென்று விடும்.
அவ்வாறு சென்று விட்டால் இந்த மரணம் அடைந்த உணர்வின் செயல் எதுவோ அந்த உடலிலிருந்து அது இயக்கும்.
அவ்வாறு இருந்தாலும் கூட்டுத் தியானங்கள் மூலமாகச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் அடிக்கடி செயல்படுத்தி வந்தால்
1.துர்மரணம் அடைந்த உணர்வுகள் செயலற்றதாக மாறி
2.சப்தரிஷிகளுடன் இணைத்து இணைத்து நம் உணர்வுகளை நல்லதாக்கவும்
3.அவர்களையும் நாம் ஒளியாக்க முடியும்.
இந்த உடலை விட்டுச் சென்றாலும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது நம்முடன் உறுதுணையாக இருந்த அவரும் பிறவா நிலை பெற முடியும்.
இது தான் ஞானிகள் காட்டிய நிலைகள்.
இம்முறைப்படி செய்தால்… சொந்தமோ பந்தமோ நம்மிடம் பாச நிலைகள் கொண்டிருந்தாலும் அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் இயங்காது அந்த வேதனையாக நமக்குள் உருவாகாதபடி இன்னொரு உடல் பெறும் நிலைகளைத் தடைப்படுத்தும்.
நம் உடலில் அந்த ஆன்மக்கள் புகுந்திருந்தாலும் இவ்வாறு முன்னோர்களை விண் செலுத்தினால் அந்த உணர்வின் துணை கொண்டு
1.அந்த ஜீவான்மாக்களுக்கும் நல்ல வழி கிடைக்கின்றது.
2.நமக்குள் இருக்கும் ஜீவ அணுக்களுக்கும் அந்த சப்தரிஷிகளின் அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்ய முடிகின்றது.
ஒவ்வொரு நாளும் தலையாயக் கடமையாக இதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.