நம்மைப் படைத்தவனின் நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

நம்மைப் படைத்தவனின் நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரின் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்..” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (CINEMA, TV, SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.

தீமையான அணுக்கள் உருவான பின் அதை நீக்குவதற்குப் பதில் அதை உருவாகாதபடியே நாம் செய்ய முடியும்

தீமையான அணுக்கள் உருவான பின் அதை நீக்குவதற்குப் பதில் அதை உருவாகாதபடியே நாம் செய்ய முடியும்

 

தீமைகளைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களில் பதிவு செய்யும் போது நீங்கள் எப்போது எண்ணினாலும் அதைப் பெற முடியும்.

உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைப் பிளந்து காற்றிலிருக்கும் அந்தத் தீமையைப் பிளக்கவும்… நல்ல உணர்வை நுகரவும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளைப் பற்றற்றதாக மாற்றவும் முடியும்.

பற்றற்றது என்றால் வெறுப்பு வேதனை கோபம் பாசம் போன்ற உணர்வுகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் அதாவது…
1.பாசத்தாலும் கூட வேதனையைத் தான் நாம் அதிகமாக நுகர்கின்றோம்.
2.பாசம் எவர் மேல் அதிகமாகிறதோ வேதனை என்ற அந்த நஞ்சு கூடவே வந்து நல்ல குணங்களைச் சாப்பிடும்.

எப்படி…?

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் தனக்குள் கலந்து விடுகிறது.

இப்படி இருக்கின்றானே…! என்று அவனை எண்ணியே நமக்குள் வேதனையை எடுக்கும் போது நம் உடலே கிறங்கிப் போகிறது. விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ அந்த உணர்வு நோயாக மாறுகிறது. நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே… என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பேயாகப் போய் அடுத்த உடலுக்குள் சென்று மீண்டும் நோயாகவே அங்கேயும் உருவாக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு எந்த நிமிடமானாலும் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் ஒன்றினால் போதும்.
1.அப்போது அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.இதை விரயமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
3.அதற்குத்தான் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு)

இங்கே கொடுக்கக் கூடிய சக்தியை இந்த வாழ்க்கையிலேயே நீங்கள் பெற்று உங்களைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

1.உங்கள் பார்வை… உங்கள் சொல்… உங்கள் மூச்சு… அனைத்தும் புனிதம் பெற்று
2அந்த மூச்சலைகள் காற்றிலே பரவினாலும்
3.நீங்கள் யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று
4.இந்த எண்ணத்தை எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது இருந்தால் “தன் இனத்தின் சக்தி பெருகி” அந்தக் குவிந்த சக்தி கொண்டு அந்தச் செடி செழிப்பாக ஓங்கி வளரும். இது எல்லாத் தாவர இனங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் களைகள் முளைத்து விட்டால் அது வளர்வதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் அந்தத் தீமை என்ற களைகள் முளைக்காது இருக்க வேண்டுமென்றால் நாம் யாரைப் பார்த்தாலும்…
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும்
3.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று எண்ணி
6.அவர்களுக்கு இந்த உணர்வின் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அப்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த உணர்வின் சக்தி நமக்குள்ளும் வருகின்றது.

ஆனால்… எல்லாம் நல்லதாகத்தான் நினைக்கின்றேன்… என்னை ஆண்டவன் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்…! என்ற இந்த பழைய பழக்கம் நம்மிடம் வந்து விடுகின்றது.

அதற்கு முக்கியத்துவம் இல்லாதபடி யாம் சொன்ன நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

மனித குலத்தை மேம்படுத்த ஞானிகளின் செயல் இருந்த போதிலும் அதை எல்லாம் அரசர்களும் அரசியல் தலைவர்களும் மாற்றி அமைத்து விட்டனர் – ஈஸ்வரபட்டர்

மனித குலத்தை மேம்படுத்த ஞானிகளின் செயல் இருந்த போதிலும் அதை எல்லாம் அரசர்களும் அரசியல் தலைவர்களும் மாற்றி அமைத்து விட்டனர் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய சமுதாய மக்களின் நிலையில் குணங்கள் அவர்களால் ஏற்பட்டதல்ல. அவர்களை மாற்றியமைக்க
1.விஞ்ஞான ரீதியில் செயல்படுத்திய “இயந்திர மனிதர்கள் தான்”
2.இன்று இராணுவம் என்று செயல்படுத்தப்பட்ட மனிதர்கள்…!

மனிதனையே… அவன் உணர்வின் அலையையே… (புத்தியை) நாட்டின் இன வெறி உணர்வு கொண்ட செயலுக்காகப் பேராசையில் தன் நாடு என்ற உணர்விற்காகத் தன் நாட்டையும் தன் பலத்தையும் கூட்டிக் கொள்ளப் பல தவறான பழக்கங்களை அன்று ஏற்படுத்தினர்.

இராணுவ முறையினால் மனித ஆத்மாவின் உணர்வின் எண்ணத்தை மாற்றப் “போதை வஸ்துக்களை” உண்ணச் செய்தனர்.

அப்போதையின் உணர்ச்சியுடன் மனிதன் உள்ள நிலையில் அவன் எண்ணத்துடன் குரோத வெறி சக்தியான இராணுவப் பயிற்சி முறைகளை ஊட்டி வழிப்படுத்தினர்.

அதே உணர்வலையின் சுற்றலில் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை மாற்றியதில்… அன்றாண்ட அரசியல் வீரர்களில் சிலரால் வழிப்படுத்திய நிலை இன்றளவும் உள்ளன.

“சர்ச்சில்” ஆண்ட காலத்திலும் “ஹிட்லர்” ஆண்ட காலத்திலும் அவர்களின் ஆட்களின் உணர்வுடன் இப்போதை வஸ்துக்களைச் செலுத்தப்பட்டுப் போதை உணர்வுடன் மனிதன் உள்ள பொழுது அவனுக்குப் பல பயிற்சிகளைக் கொடுத்தனர்.

எந்த உணர்வின் பயிற்சி அலையைப் புகட்டினார்களோ… அதே உணர்வின் செயலைச் செய்யத்தக்க மனித ஆத்மாக்களை இப்படி உருவாக்கி விட்டனர் அன்றிருந்த அரசியல் தலைவர்கள்…! இன்றும் இதன் வழித் தொடர் சில நிலைகளில் உழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதனை மனிதனே உண்ணும் உணர்வலை கொண்ட வெறிக் குணங்களின் செயல்கள் சில பாகத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது.
1.விஞ்ஞான ரீதியிலும் சில மந்திரவாதிகளின் நிலையிலும்
2.தன் இன வர்க்க உணவையே உண்டால் தனக்கு வீரிய சக்தி கிடைக்கும் என்ற உணர்வில்
3.பல செயல்கள் நடக்கின்றன இந்த உலகின் பல பாகங்களில்.

இயேசு கிறிஸ்து அக்காலத்தில் தோன்றிச் சில ஒளி அலைகளைச் செயலாக்கிச் சென்றார். முகமது நபியின் காலத்திலும் அவர் எடுத்த அலையின் தொடர் அவர் வாழ்ந்த அவரின் எண்ணமுடன் செயல்பட்டவர்களுக்குத் தன் சக்தி அலையைப் பரப்பித்தான் சென்றார்.

1.இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் நபிகளின் காலத்திலும்
2.மனிதர்களின் எண்ணத்தை நல் உணர்வின் வழியில் சுழற்சிப்படுத்தி…
3.ஒளி அலைகளை அவர்கள் பால் செலுத்தி அவர்கள் ஆத்மாவை வளர்க்கச் செய்து
4.ஒன்றைப் பலவாக நல் ஒளியின் அலையைப் பரப்பச் செய்த செயலில்
5.அவ்வுணர்விற்கு உகந்த ஆத்மாக்களைச் செயல்படுத்துவது என்பது கடினமாகிவிட்டது.

அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் ஞானிகளைப் பற்றியும் சித்தர்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே வருகின்றேன்.

நற்குணங்களின் வடிவாக முருகா என்ற ஆறு குணங்களைத் தெய்வமாக்கி அன்பு பண்பு பாசம் பரிவு வீரம் சாந்தம் என்ற நற்குணங்களை முருகனாக வடிவம் படைத்து மலை உச்சியிலும் மலைக்கு நடுவில் இடும்பன் என்ற தீய குணங்களைப் படைத்து இடும்பன் என்ற நிலையையும் உணர்த்தினார் போகர்.

ஒவ்வொரு மனித ஆத்மாவும் அவர்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் உயர்வான நிலை பெற வேண்டியதன் அவசியத்தைக் குறிக்க
1.மலை மேல் முருகனின் சிலையை அறுகுணங்களாக ஆறுமுகனாகப் படைத்து
2.சிலையை வணங்கும் முறையைப் போகர் ஏற்படுத்தினார்.

இடும்பனான குணங்களை அகற்றித் தெய்வ குணத்தை ஒவ்வொரு ஆன்மாவும் பெறவேண்டும் என்பதற்கே முருகன் சிலையை வைத்தார் போகர்.

அந்தச் சிலையை வணங்கும் ஆன்மாக்களுக்கு எல்லாம் நல் ஒளியின் அலையை இன்றும் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றார்.

நினைப்பதையும் எண்ணுவதையும் தாண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழக வேண்டும்

நினைப்பதையும் எண்ணுவதையும் தாண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழக வேண்டும்

 

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.

அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

ஆனால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே அதிலுள்ள செம்பு பித்தளை வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு “நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன்…” என்றால் எப்படி முடியும்…?

அது முடியாது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.

நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது. பின்
1.இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து
2.எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ
3.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.
4.அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும்
5.பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…?

சாமி செய்யுமா…! சாமியார் செய்வாரா…! ஜாதகம் காப்பாற்றுமா…! சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது…”

ஆகவே
1.நம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.
1.துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும்
2.அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆகையினால் எந்தச் சந்தர்ப்பத்திலும்…
1.ஈஸ்வரா என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணுவதும்
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தியைச் சேர்க்கும் எண்ணமும்
3.நமக்குள் இது வந்து கொண்டே இருக்க வேண்டும்.

சிறிது நாள் பழகினால் தன்னாலே எல்லாம் வரும்.

இந்தக் கலியில் ஞானம் பெறுபவகள் தப்புவார்கள் – ஈஸ்வரபட்டர்

இந்தக் கலியில் ஞானம் பெறுபவகள் தப்புவார்கள் – ஈஸ்வரபட்டர்

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால் மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.

அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.

இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் பல மகான்கள் தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து… “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் மீண்டும் மனித ஜனனம் தேவை.

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

அழியாச் சொத்து வேண்டுமா… அழியும் சொத்து வேண்டுமா…! என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்

அழியாச் சொத்து வேண்டுமா… அழியும் சொத்து வேண்டுமா…! என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்

 

இன்றைய மனித வாழ்க்கையில் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை நமக்குள் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் அழியா பேரின்பச் சொத்து.

தொழில் செய்து அல்லது வேலை செய்து சொத்தைச் சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிற போது
1.அது அழியக் கூடிய சொத்து தான்… இந்த உடல் வாழ்க்கைக்கு உதவும்.
2.ஆனால் அதுவும் நாம் சீரான நிலைகள் இல்லை என்றால் அதைக் காக்க முடியாது.

சொத்தைச் சம்பாரித்து வைத்திருப்போம். வேதனை… வேதனை… என்று சந்தர்ப்பத்தால் ஏதாவது வந்தால் அடுத்தாற்போல் இந்தச் சொத்தைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தால் இது எதற்கப்பா…? என்பார்கள்.

எல்லாம் சம்பாரித்து வைத்திருப்பார்கள்…! அதை விரிவாக்கி இது அங்கே இவ்வளவு இருக்கிறது… இந்த இடத்தில் உள்ள சொத்துகள் இந்த மாதிரி இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்கிறது…? என்று கேட்டால்
1.எங்கேயோ தொலைந்து போகட்டும்
2.இதை ஏம்ப்பா என்னிடம் சொல்கிறீர்கள்…! என்பார்கள்.

சம்பாரிக்கும் போது எல்லாம் வாங்கி இருப்பார்கள். ஆனால் இந்த வேதனை வந்த பின் இந்தச் சொத்துக் கணக்கைச் சொல்லும் போது என்ன ஆகிறது…?

எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வருகிறது.

காரணம் செல்வத்தின் தன்மை சேர்த்துக் கொண்டிருக்கும் போது “எனக்கு இப்படி வந்துவிட்டதே…” என்று வேதனை எடுக்கும் போது இந்த உடலின் பற்று தான் வருகிறது.

உடலின் பற்று வரும் போது யார் மீது (தன் குழந்தையோ… நண்பரோ…) நமக்குப் பற்று வருகின்றதோ அவரைப் பற்றிக் கொள்கிறோம். அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். உடலுக்குப் பின் அங்கே வந்து விடுகிறோம்.

அந்த உடலுக்குள் சென்ற பின் குழந்தையாகப் பிறப்பதில்லை.
1.தன் உடலில் விளைந்த உணர்வை அங்கே சாகாக்கலையாக உருவாக்கி
2.அந்த ஆசையைத் தூண்டி அதன் வழிகளிலே அங்கே அவர்களையும் மடியச் செய்கிறோம்.

அதன் உணர்வுகள் அங்கே பேய் மணமாக வளர்ச்சியாகி… பூதகணமாக விளைகிறது… அது தான் பூதங்கள் என்று சொல்வது. ஆனால் உணர்வின் தன்மை விளைவித்த பின் எதனை அடக்கி அதற்குள் வந்ததோ அந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

அந்த உடலிலிருந்து வெளி வந்தபின் இந்த உணர்வை ஒத்த உயிரினங்கள் எது வளர்ச்சிக்கு வருகிறதோ… அங்கே போய் இந்தப் பூதகணங்கள் அதுவாக உருவாக்கி அதன் செயலாகவே உருவாக்கிவிடும்.

புலியோ நரியோ பாம்போ இவைகள் எல்லாம் தன் இரை தேடும் போது மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. தன் உணர்வு கொண்டு தாக்கித் தான் அதை உணவாக எடுக்கும்.

இந்த மனித வாழ்க்கையில் இது போன்ற நிலையைச் செய்வோர் எவரோ அப்படிப்பட்ட மிருகமாகத் தான் உயிர் உருவாக்கும். அதனால் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்..! என்று சொல்வது.

பிறர்படும் வேதனையான உணர்வை எடுத்துக் கொண்டால் அதைத் தூய்மைப்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த நிலை வருகிறது.

நம் குழந்தை சிரமப்பட்டால் அதைப் பார்த்துப் பாசத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். ஆனால் நமக்குப் பிடிக்காதவர் ஏதோ ஒரு செயலால் வேதனைப்பட்டார் என்றால் வெறுப்பால் என்ன செய்கிறோம்…?

அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… என்று அதை ரசிக்கின்றோம்.

1.தன் குழந்தைக்கு உடல் சரியில்லை என்றால் நாம் வேதனைப்படுகின்றோம்.
2.ஆனால் நமக்குப் பிடிக்காதவருக்கு என்றால் நான் நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…! என்ற
3.இந்த விஷத்தை நமக்குள் உருவாக்குகின்றோம்.

ஏனென்றால் எது இந்த உடலில் அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும். அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.

ஆக
1.எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ
2.அது அவதார புருஷனாக மாற்றிவிடுகின்றது.
3.கலியா… கல்கியா…? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஞானத்தை எப்படிப் பெற வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும்…? – ஈஸ்வரபட்டர்

ஞானத்தை எப்படிப் பெற வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும்…? – ஈஸ்வரபட்டர்

 

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்னத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”

சாந்தமான நிலை பெற ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான் நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

குறைகளைச் சொல்லி முறையிடுவதை விடுத்துவிட்டு “நல்லது நடக்க வேண்டும்…” என்று வேண்டி உருவாக்க வேண்டும்

குறைகளைச் சொல்லி முறையிடுவதை விடுத்துவிட்டு “நல்லது நடக்க வேண்டும்…” என்று வேண்டி உருவாக்க வேண்டும்

 

தீமையை நீக்க வேண்டும்… தீமையை நீக்க வேண்டும்… என்று தன் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றியவன் தான் கல்கியின் அவதாரமாக விண்ணிலே உள்ளான்.

ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

அவர்களைப் போன்று நாமும் இருளைப் போக்கிடும் அருள் சக்தியைப் பெற்றுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச வேண்டும்.

ஆனால் வெறுமனே இப்படிச் சொன்னால் மற்றவர்கள் உணர்வு நமக்குள் புகுந்து விடும்.

1.ஈஸ்வரா… என்று நம் உயிரிடம் வேண்டி
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.கேட்டறிந்த தீமையான உணர்வு ஆன்மாவில் இருப்பதைப் பிளக்க வேண்டும்.. அது தான் நரசிம்மா.

அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் இதன் வழி சேர்க்க வேண்டும். நரசிம்மா…! என்று அந்தத் தீமையைப் பிளக்கும் உணர்வின் தன்மை எடுத்தால் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றும்… மற்றோருக்கும் வழிகாட்டும். நஞ்சினை வென்றிடும் உணர்வின் சக்தியாக இதைக் கொண்டு வர வேண்டும்.

இப்படி இல்லை என்றால் நாம் எதிலே போய் மூழ்குவோம்…?

பிறருடைய பாசத்தால் நாம் அந்த வேதனையை உருவாக்கப்படும் போது அந்த உணர்வின் தன்மையே இங்கே மாற்றி அமைக்கும். அப்போது நாம் எதை உருவாக்குகின்றோம்…?

கலி…!

1.தீமையின் நிலையைத் தனக்குள் உருவாக்கி
2.அந்தத் தீமையையே செயல்படுத்தச் செய்து
3.தீமையையே ரசித்திடும் உணர்வுகள் வரும்.

பாசத்தால் தன் பிள்ளைகளை எண்ணி அவர்கள் செய்யும் தவறுகளினால் வேதனைப்பட்டு அந்த உணர்வுகள் உடலிலே வளர்ச்சி ஆகி விட்டால் “அவர்களைப் பற்றி அடிக்கடி நாம் வேதனைப்பட்டால் தான்… நமக்கு ஏற்றுக் கொள்ளும்…!”

யாராவது வந்தால் அதைச் சொல்லி… இப்படி எல்லாம் வளர்த்தேனே… தப்பு செய்து கொண்டே இருக்கின்றார்களே….! என்று வேதனப்படுவோம்.

1.நம்மை அறியாமலே அந்தச் சொல்லைச் சொன்னால் தான் இங்கே மகிழ்ச்சி… நிம்மதி…!
2.அடுத்தவர்களிடம் சொன்னால் தான் நிம்மதி…!

ஆனால் அந்த நிம்மதி எப்படி வருகிறது..?
1.வேதனைப்படும் உணர்வின் தன்மை வரும் போது அதைச் சொல்லும் போது
2.நம் உடலில் உருவான அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

ஆனால் நாம் நினைக்கின்றோம் அடுத்தவரிடம் சொன்னால் தான் நம் பாரம் குறையும்… நிம்மதி கிடைக்கும் என்று. அந்த வேதனை உடலுக்குள் வளரும் போது அதே வழியில் தனக்குள் நோயாக மாறுகிறது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. நம்மை அறியாமல் இயக்கும் நிலைகள் இது. இருந்தாலும் இதை எல்லாம் மாற்றி நம் நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் ஆலயத்தைக் கட்டியுள்ளார்கள் ஞானிகள்.

1.சிலையைக் கல்லாக நினைக்கின்றோம்… தெய்வமாகவும் மதிக்கின்றோம்.
2.ஆனால் அந்தச் சிலை (தெய்வம்) நமக்குச் செய்யும் என்ற நிலையில் தான் நம் எண்ணம் பூராம் இருக்கிறது.

எப்படி…?

தன் மனக் குறைகளை எல்லாம் சொன்னால் அந்தத் தெய்வம் பார்த்துக் கொள்ளும்.
1.இந்தக் குறைகளைச் சொல்லிச் சொல்லி… அதே உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கின்றோம்
2.ஆக நம்மை அறியாமலே தீமையைத் தான் வளர்க்கின்றோம் என்று நமக்குத் தெரியவில்லை.

கீதையில் சொன்னது… நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்ற நிலைகள் தான். ஆகையினால் நாம் எதை எண்ண வேண்டும்… எதுவாக ஆக வேண்டும்…?

சந்தர்ப்பத்தில் வரும் பகைமையான உணர்வுகள் நமக்குள் வளரக்கூடாது என்பதற்குத் தான் கோவிலை உருவாக்கி வைத்தனர்.

கோவிலுக்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்… மலரைப் போன்ற மணம் பெறவேண்டும்… மகிழ்ச்சி பெறும் தன்மை வர வேண்டும் என்று
1.நான் உங்களை வேண்டுகின்றேன்
2.நீங்கள் என்னை வேண்டுகின்றீர்கள்.

இப்படி ஒவ்வொருவரும் செய்தால் தெய்வ குணத்தைப் பெறுகின்றோம்… நாம் தெய்வமாகின்றோம்… மகரிஷிகள் ஞானிகளுடன் ஒன்றுகின்றோம்.

ஆண்டவனைத் தேடிக் கொண்டே தான் உள்ளார்கள்…! ஈஸ்வரபட்டர்

ஆண்டவனைத் தேடிக் கொண்டே தான் உள்ளார்கள்…! ஈஸ்வரபட்டர்

1.அமிலத்தின் கூட்டால் சிவ பிம்பம் (உடல்கள்) பெற்று
2.சக்தி ஒளி ஈர்ப்பில் ஜீவன் கொண்ட ஜீவத் துடிப்பு அனைத்துமே
3.ஆண்டவனுக்குப் பொதுவானது தான்.

ஆண்டவனின் சக்தி என்று ஆண்டவனை வேண்டி… இறைஞ்சிப் பணிந்து பல பாடல்களைப் பாடி… ஆண்டவனைப் பெண்ணாகவும் ஆணாகவும் ஒளியாகவும் தாயாகவும் சகோதரர்களாகவும் அவரவர்கள் வழி வந்த மதக் கோட்பாட்டின் முறைப்படியெல்லாம் இறைஞ்சித் துதி பாடுகின்றனர்.

இந்த ஆறறிவு படைத்த மனித ஜெந்துக்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் சொந்தமா…?

1.சிறு அணுவும் “அவனன்றி அசையாது…!” என்று உணர்த்துபவனும் மனிதன் தான்.
2.ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அவ்வணுவையே உயிராகக் கொண்ட ஆடு மாடுகளையும்…
3.தன்னை ஒத்த மனித இனத்தையே கூட நரபலி தருபவனும்
4.ஆண்டவனுக்குச் சமர்ப்பித்துத் தன் வேண்டுதலை நிவர்த்திக்கடன் செய்து ஆண்டவனை வணங்குபவனும் இதே மனிதன் தான்…!

ஆடு மாடுகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அந்த ஆண்டவன் சொந்தமில்லையா…?
1.மனிதனுக்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் சொந்தம் என்றால்
2.மற்ற ஜீவராசிகளும் ஆண்டவன் படைப்பே…! என்று துதிபாடும் அந்த ஆண்டவன் எங்குள்ளான்…?

தவறான வாழ்க்கை நெறியில் உள்ளவனும் வாழ்கின்றான். நல் ஒழுக்கக் கோட்பாட்டில் உள்ளவனும் வாழ்கின்றான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஆண்டவன் உள்ளான் என்று உணர்த்தும் எல்லா மதத்தினரும் தன் சுவை உணவிற்காகத் தன்னை ஒத்த ஜீவ பிராணிகளை உண்டு தான் வாழ்கின்றார்கள்.

இவனுக்குச் சொந்தமான அந்த ஆண்டவன் வந்து மற்ற ஜீவ பிராணிகளைப் பலியிட்டு உண்ணாதே…! என்று உணர்த்தியிருக்கலாம். அஜ்ஜீவன் பிரியும் நேரத்தில்… அதன் ஓலத்தைக் கேட்டு… ஏன் அந்த ஆண்டவன் வந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கக் கூடாது..?

ஆண்டவனைச் சொந்தம் பாராட்டி ஆண்டவனைத் துதித்து வணங்குபவனுக்கு அந்த ஆண்டவன் சொந்தம் என்றால் மற்ற பிராணிகளுக்கு ஆண்டவனின் சக்தி சொந்தமில்லையா…?

அப்படிப்பட்ட ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…?

1.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்…
2.நீரிலும் இருப்பான் நெருப்பிலும் இருப்பான்…
3.நினைத்த நினைப்பிலும் இருப்பான்… என்னும் ஆண்டவன்
4.எப்படி மனிதனுக்கு மட்டும் சொந்தமாகின்றான்…?

மதத்தவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுவதாக எண்ணி யாரையும் சாடுவதாக நினைக்க வேண்டாம்..! உள்ள உண்மையை உணர்த்துகின்றோம்.

எல்லா மதங்களிலுமே கடவுள் அன்பானவன் என்று சொன்னாலும் பிற பிராணிகளை அடித்து உணவாக உட்கொள்ளும் நிலை தான் உள்ளது.

ஆண்டவனின் செயலை இந்த மாமிசம் புசிப்பவர்கள் செய்யும் முறையில் மட்டும் குற்றம் காணவில்லை. மாமிசம் புசிக்காதவரின் செயல் என்ன…?

1.ஆண்டவனைப் பக்தித் துதி பாடி பஜனைகள் பல செய்து
2.ஆண்டவனாகக் கோவிலில் உள்ள கர்ப்பச் சிலைக்கு நீராலும் பாலாலும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் ஆராதனை செய்து
3.சுத்தமாக ஆச்சாரமுடன் கோடி அர்ச்சனைகளையும் பல கோடிப் புஷ்பங்களைச் சாத்தி வணங்கி
4.அந்த ஆண்டவனின் அருள் பரிபூரணமாகப் பெற்றுவிட்ட உவகையுடன் வருபவனுக்கு
5.அவன் வரும் வழியில் அவன் ஜாதிப் பிணைப்பு என்ற இனத்தவரன்றி
6.மற்றவரின் உடலோ சில கழிவுகளோ தன் மேல் பட்டுவிட்டாலும் உடனே பெரும் கோபம் கொண்டு
7.அந்த ஆண்டவனுக்குத் தான் செய்த பூஜை முறையிலேயே அபசாரம் நடந்து விட்டதாக உள்ளம் உலைந்து…
8.நீ வணங்கும் ஆண்டவன் என்பவன் யார்…? அந்த ஆண்டவனுக்கு உள்ள சக்தி யாவை…? என்று வினவினாலும்
9.உடனே கோப அலையைத் தன்னுள் ஏற்றிப் பெரிய தவறு நடந்து விட்டதாகச் செயல்படும் ஒரு சாராரும் உள்ளனர்.

என் (ஈஸ்வரபட்டர்) வினாவில் ஆண்டவன் யார் என்பது யாரென்றே புரியவில்லை.
1.ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்
2.எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை.

மரக்கறியும் அணு தான்.. மற்ற பிராணிகளின் உடலும் அணு தான்…! எல்லாமே அணுவாக உள்ள பொழுது… “அணுவின் அணுவாக” அக்காந்த மின் அலையின் ஜீவ சக்தியில் கலந்துள்ள அனைத்துமே ஆண்டவனின் சக்தி தான்.

1.ஒன்றின் துணையுடன் ஒன்று வாழ
2.ஒன்றை அழித்துத்தான் மற்றொன்று வாழ முடிகின்றது.
3.ஆவியாகி அமிலமாகி ஜீவனாகிப் பிம்பமாகி..
4.பிம்பம் ஆவியாகி அமிலமாகி ஜீவனாகி பிம்பமாகி ஆவியாகி…
5.மீண்டும் மீண்டும் சுழன்று ஓடும் சுழற்சி கதியின் சக்திக் கூட்டிற்கு
6.எல்லாமில் எல்லாமாக நிறைந்துள்ள ஆண்டவனின் சக்தி பிறந்து… வளர்ந்து… மடிந்து… பிறந்து… சுழன்று கொண்டே உள்ளது.

கண்ணன் காட்டிய திருட்டு வழி

கண்ணன் காட்டிய திருட்டு வழி

 

1.ஒரு தீமை செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தாலே
2.அடுத்த கணம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இந்த உணர்வை ஆன்மாவிலிருந்து நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்… யார் எதைச் சொன்னாரோ மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

நமக்குள் இதைப் போன்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் குழம்பு ருசி இல்லை என்றால் என்ன செய்கிறோம்..? அதிலே பல சரக்குகளைப் போட்டு மீண்டும் அதை ருசியாக மாற்றிக் கொண்டு வருகின்றோம் அல்லவா.

அதைப் போன்று தான் மற்றவர்கள் பட்ட வேதனையை எடுக்கப்படும் போது இரவிலே தூங்கும் போது அதே அறிவு தான் நமக்குள் வருகிறது. ஏனென்றால்
1.யாம் (ஞானகுரு) சொல்லும் தியான முறைப்படி எடுத்தால் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு நீங்கள் உணர முடிகின்றது.
2.இது சாதாரணமாக எல்லோருக்கும் தெரியாது.

இப்படி அதைத் தெரிந்து கொண்டாலும் உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடம் உணர்வைச் செலுத்தும் போது இது உடலுக்குள் செல்கிறது.
2.எப்போதுமே இந்த உயிரில் எண்ணி உணர்வை இப்படிக் கொண்டு போக வேண்டும்… அதைப் பழக வேண்டும்.

அதாவது வழக்கமாக மூக்கு வழி சுவாசித்து உயிரிலே பட்டு உடலுக்குள்ளே போகும். அப்படி இல்லாதபடி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அதன் வழி உடலுக்குள் செலுத்த வேண்டும்

இது தான் கண்ணன் காட்டிய திருட்டு வழி என்பது…!

சாதாரணமாக “எதிரி இருக்கின்றான்” என்று சொன்னவுடனே பார்க்கின்றோம். பார்த்த பின்… எங்கே இடம் இருக்கின்றது என்று ஒளிவதற்கு இடத்தைத் தேடி உணர்வை வெளியிலே செலுத்துகின்றோம்.

அந்த உணர்வு வந்த பிற்பாடு அதற்கு வேண்டிய வேலையைச் செய்கிறோம்.

ஒரு எதிரி நமக்குத் தொந்திரவு செய்கிறான் என்றால் அதைப் பார்க்கின்றோம். அதற்கு யார் “மூலகர்த்தா…?” எப்படி அவனை அடக்குவது…? என்ற எண்ணத்தை எண்ணுகின்றோம்.

அப்போது இந்தக் கண் வழி காட்டுகிறது. பழகியவர்களின் வலு கிடைக்கின்றது. அங்கே போய் இதைப் பற்ற வைத்தால் இவருக்குச் சரியான தண்டனை கிடைக்கின்றது என்று அதைச் செய்கிறோம்.

இந்த உணர்வு இயக்க்கப்பட்டுத் தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம். மனித வாழ்க்கையில் இந்த வழியில் தான் செயல்படுத்துகின்றோம்.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழிகளில் தீமையை நீக்க
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணச் சொல்கிறோம்
2.அதே சமயத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கச் சக்தியும் கொடுக்கின்றோம்.

நீங்கள் எடுத்துப் பழக வேண்டுமல்லவா…!

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வரும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே வேண்டி அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இது வலுபெற்ற பின் தீமைகளைப் பிளக்கின்றது. உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது..

ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதமான அணுக்கள் நமக்குள் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதைத் தான் பிரம்மா உருவாக்குகின்றான் என்பது.

அதாவது விஷ்ணுவின் மகன் பிரம்மா…
1.உயிரால் (துடிப்பால் ஏற்படும் வெப்பத்தால்) உருவாக்கப்பட்ட அந்த அணு
2.மீண்டும் தன் இனத்தை விருத்தி செய்ய அந்தந்த ஆகாரத்தைக் கேட்கும்.
3.பின் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

இந்த உணர்வுகள் எது அதிகமோ சிவத்திற்குள் இருந்து அந்த உணர்வின் செயலாகவே இது மாற்றும். ஆனால் சிவத்திற்குள் அது சக்தியாக இருந்து அந்தச் சக்தியின் செயல் ரூபம் எதுவோ அதன் செயலாகத் தான் இது மாறும்.

அது தான் சக்தி சிவமாகின்றது. சிவத்திற்குள் சக்தியாக இயக்குகின்றது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை… சிவம் இல்லையேல் சக்தி இல்லை…!

இந்தச் சிவம் உருவாகவில்லை என்றால் சக்தியின் செயல் இல்லை. அதனால் தான் நம் சாஸ்திரங்களில் இது முறைப்படி தெளிவாக்கப்பட்டிருக்கின்றது.

ஞானிகள் தனக்குள் தன்னைக் கண்டுணர்ந்தவர்கள்… உயிருடன் ஒன்றி ஒளியாக ஆனவர்கள். அவர்கள் சென்ற பாதையில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.