நம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

Vaikundam

நம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்பவர்கள்… “என்னமோ சாமி சொன்னார்… நன்றாக இருந்தது…!” என்பார்கள். அதற்கப்புறம் வழக்கம் போல் மற்றவர்கள் (இவர்களைப்) பேசுவதைப் பார்த்து
1.அவர்கள் என்னை இப்படிச் சொன்னால் அது எப்படி…!
2.நான் சும்மா விடுவேனா…? என்று பிடித்துக் கொள்வார்கள்.

அதே சமயத்தில் “நல்ல மனிதன்… கஷ்டம்…!” என்று சொன்னால் அதை எப்படி நான் கேட்காமல் இருக்க முடியும்…? கேட்டுவிட்டு உதவி செய்யாமல் நான் சும்மா இருக்க முடியுமா…? என்பார்கள்.

அவர்கள் கஷ்டப்பட்டது துயரப்பட்டது சங்கடப்பட்டது அது பூராமே இங்கே வந்துவிடுகின்றது. இப்படி நமக்குள் அந்தப் பாசத்தால் ஒன்றைக் கவர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை இயக்கும்.

காரணம் ஒரு செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்தத் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தான் தீரும். இதே மாதிரித்தான்
1.ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிட்டால்
2.அது உணர்ச்சியைத் தூண்டி அதன் உணர்வைத்தான் அது வளர்க்கும்.
3.ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

மாமிசம் சாப்பிட்டுப் பழகி விட்டோம். சாப்பிடக்கூடாது என்று சொன்னால் மாமிசத்தைச் சாப்பிடுவதில்லை. அதே சமயத்தில் சிந்தனை இழந்து விடுகின்றது.

நீங்கள் மாமிசம் சாப்பிடாமல் போனாலும் கறியைச் சமைத்துச் சாப்பிட எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே இந்த உணர்வு வரும். மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தால் நமக்கும் அந்த உணர்வு வரும்.
1.ஆனால் இதை மறுத்து… நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இருந்தால்
2.அதைப் பார்த்தவுடன் விலகிப் போகச் சொல்லும்.
3.தியான வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்டால்
4.அதைப் பார்த்ததும்… உடனே அந்த உணர்வை நுகருவதை விட்டு விலகிப் போகச் சொல்லும்.

இல்லாமல் போனால் என்ன நடக்கும்…? நான் அதைச் சாப்பிடவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்க்கின்றேன்… என்று சொன்னால்
1.கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்…!
2.அப்புறம் அந்த அணுக்கள் விளைந்தவுடன் “சாப்பிடலாமா…! என்ற அந்த ருசி இழுக்கும்.
3.பிறகு தன்னாலே அங்கே தான் போய்க் கொண்டிருப்போம்.
(எல்லாப் பழக்க வழக்கங்களுக்கும் இப்படித்தான்)
4.அந்த வலு வரும். ஆனால் சிந்திக்கும் தன்மை இழக்கும்.

மற்ற உயிரினங்களுக்கு அந்தச் சிந்தனை கிடையாது. தன் உடலை வளர்த்துக் கொள்ளும் உணர்வு தான் உண்டு. அதைப் போன்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் தன் உடலை வளர்த்துக் கொள்ளும் நிலையில் சிந்திக்கும் தன்மையை இழக்கத்தான் செய்யும்.

ஏனென்றால் நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டே வருகின்றது. அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எடுப்பதற்காக வேண்டி உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். “சாமி மிகவும் நன்றாகப் பேசுகின்றார்…!” என்று சொல்லிவிட்டு அப்படியே போய்விடாதீர்கள்.

இருபது வருடம் எவ்வளவோ கஷ்டப்பட்டேன் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். அது எப்படி என்று உங்களிடம் வந்து சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் பதிவு செய்தார். அவர் சொன்னதை எல்லாம் எடுத்தேன்.
1.எடுத்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
2.உங்களுக்கும் அந்தக் காக்கும் சக்தியைக் கொடுக்க முடிகின்றது.

ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல…!

Image

Jothilinga - divine light

ஆண்டவன் அருள் என்பது “ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல…!”

காட்சி:-
நிலத்திலிருந்து ஒரு ஆத்ம லிங்கம் வளர்ந்து வருகின்றது. அதுவே ஒரு மகரிஷியாகக் காட்சி அளித்து மேடான இடத்தில் நின்று கொண்டு அவர் கையில் இருக்கும் ஒரு ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றார்.

அவர் நிற்கும் மேடான இடத்திற்குக் கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அந்த ஒளியான லிங்கம் கொடுக்கப்படும் என்று கையேந்தி நிற்கின்றனர்.

ஆனால் அவரோ அந்த ஒளியான லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி அந்த ஒளியைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றார். யாருக்கும் தனித்து அந்த லிங்கத்தைத் தரவில்லை.

1.அவர் உருட்டிய ஒளியான அலைகள் பாயப் பெற்ற அந்த ஒளியை ஈர்த்து
2.தன் ஒளியை அந்த ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம்
3.அந்த ஒளியான லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
4.அந்த மகரிஷியின் கையில் உள்ள ஒளி லிங்கம்
5.முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளியைப் பரப்பிக் கொண்டேயுள்ளது.

அந்த லிங்கமே கையில் கிடைக்கும் கிடைக்கும் என்று கையேந்தி நின்று கொண்டேயிருப்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கின்றார்கள். அந்த மகரிஷியும் தான் பெற்ற அந்த ஒளியான லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்.

விளக்கம்:-
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாக ஒன்று போல் தான் ஒளி வீசுகின்றான்.

அந்தப் பேரருளை நாம் பெற்று அந்த ஒளியுடன் ஒன்றும் ஒளியாகத்தான் நம் செயல் இருக்க வேண்டுமே தவிர ஆண்டவனே வந்து நமக்களிக்கட்டும்…! என்று ஏங்கிக் கொண்டிருந்தால் காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும்…… அந்த ஒளியை ஆண்டவன் வந்து நமக்கு அருளப் போவதில்லை.

1.அவன் தந்த ஒளியை அவனதாக்கி
2.அவனுடன் ஐக்கியப்படுவது தான்
3.மெய் ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி.
4.அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.

இதன் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு ஆண்டவனின் அருளை வேண்டி நிற்காமல் ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை பெற ஒவ்வொருவரும் செயலாக்குங்கள்.

மனிதனாகப் பிறப்பது அபூர்வம்…! பிறந்தாலும் மெய் ஞானத்தைப் பெறுவது மிகவும் அரிது…!

frozen earth.png

மனிதனாகப் பிறப்பது அபூர்வம்…! பிறந்தாலும் மெய் ஞானத்தைப் பெறுவது மிகவும் அரிது…! 

விஞ்ஞான அறிவால் வந்த நிலைகளால் பூமி முழுவதுமே அநேகமாக நச்சுத் தன்மைகளாகப் படர்ந்து விட்டது. நீர் நிலைகளும் பூமிக்குள் மாறிவிட்டது.

வான் வெளியிலேயும் அதே மாதிரி பிரபஞ்சத்திலும் மிக ஆற்றல் மிக்க நிலைகள் பரீச்சாந்திரமாக விண்ணிலே ஏவப்பட்டு அணு குண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்கப்பட்டு விஷத் தன்மைகள் படர்ந்து விட்டது.

நம் பூமியும் இந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் சுழன்று கொண்டு இருக்கின்றது.
1.பூமிக்குள் வெடித்தாலும் சரி
2.பிரபஞ்சத்திற்குள் வெடித்தாலும் சரி
3.சூரியன் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் இந்த நஞ்சின் தன்மை படர்கின்றது.

வான மண்டலமும் மற்றதும் மாறுபடப் போகும் போது இந்த உணர்வின் தன்மை மனிதன் சிந்திக்கும் செயல் இழந்து “மனிதனின் சிந்தனையே… கூண்டுடன் அழியப் போகின்றது…!”

ஆரம்பக் காலங்களில் மனிதன் மிருகத்தைப் போன்று இருந்தது போல இந்த உலகம் பூராமே அப்படி ஆகப் போகின்றது. மீண்டும் பூமி சுத்தமாக வேண்டும் என்றால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

அன்று காட்டு மனிதர்களுக்குள் சிறுகச் சிறுக சிந்தனைகள் உருவாகி மீண்டும் மனிதருடைய அறிவின் நிலைகள் வந்ததோ இதைப்போல மீண்டும் பல சுற்றுக்கள் ஆகி…ஆகி மாறி…மாறி அடுத்த நிலையான சரீரத்தைப் பெறும் தகுதி வரும்.

நம் பூமியும் சீக்கிரம் வியாழன் கோள் போன்று பரிமணம் பெறும் நிலை பெறப் போகின்றது.

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட விஷத் தன்மைகள் அனைத்தும் பிரபஞ்சத்திலே சேர்க்கப்பட்டு சூரியனுடைய ஒளிக் கதிர்கள் பூமிக்கு வருவதைத் தடைபடுத்தும் நிலைகள் வரப்போகின்றது. அவ்வாறு தடைபடுத்தும் போது
1.பூமியில் நீர் நிலைகள் அதிகமாகி
2.எடை கூடிச் சுழற்சியின் வேகம் அதிகமாகிவிடும்.

அப்பொழுது ஈர்க்கும் தன்மையான சூரியனுடைய காந்தப்புலன்கள் தடைப்படும் போது பூமி இறங்கும் நிலை (சூரியனை விட்டு விலகும்) வருகின்றது.

அவ்வாறு இறங்கும் நிலைகள் வந்து விட்டால் பூமி குளிர்ச்சியாகிப் பனிப் பாறைகளாகி விடும். எந்த நிமிடத்தில் இது ஏற்படும்…? என்று சொல்ல முடியாது.

நம்மிடம் ஒருவர் நன்றாகத்தான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். திடீரென்று கீழே விழுந்து விடுவார். பரிசோதித்தால் உடலில் “இரத்தமே இல்லை…!” என்று சொல்வார்கள்.

அதாவது உடலுக்குள் சில விஷத்தின் தன்மைகள் வளர்ந்தவுடனே
1.இரத்தத்திற்குள் இருக்கக்கூடிய செவ்வணுக்கள் எல்லாம் மடிந்து
2.வெள்ளணுக்களின் இயக்கங்கள் அதிகமாகப் படர்ந்து
3.அதனுடைய சத்துக்களை இது உறிஞ்சி விடுகின்றது.

இதைப் போன்று தான் பூமியின் தன்மையும் பெரும் கோளாக மாறி வியாழனைப் போல வெகு வேகமாக தன்னைத் தானே பிரிந்து செல்லும் நிலை வரும்.

இதனுடன் சேர்ந்து சுற்றும் சந்திரனும் அருகில் இருக்கக்கூடிய செவ்வாய்க் கோளும் மற்றவைகளும் இதிலிருந்து பிரிக்கப்பட்டுவிடும். ஏனென்றால் சூரியனின் ஆற்றல்கள் கிடைக்காமல் தடைபடப் போகும் போது சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்ள வேண்டும் என்றால் பல வெகு காலம் ஆகும்.

இந்த உணர்வின் இயக்கங்கள் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் காட்டியதனாலே அதை உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அதற்குள் கூடுமான வரையிலும் நம் நினைவலைகளை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லை என்றால் நம்முடைய சிந்தனைகள் அழிந்துவிடும்.

மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். மனித வாழ்க்கையில் இப்பொழுது நாம் வாழ்ந்தாலும் மெய் ஞானிகள் பெற்ற சக்திகளைப் பெறுவது அரிதான (நல்ல) சந்தர்ப்பம் தான்.

ஆனால் எனக்குச் (ஞானகுரு) சந்தர்ப்பம் என் மனைவி உடல் நிலை சரியில்லாத போது ஏற்பட்ட சந்தர்ப்பம் தான் இத்தகைய பேருண்மையைக் கண்டறியும் சந்தர்ப்பம் வந்தது.

1.எனக்குக் கல்வி அறிவு இல்லாவிட்டாலும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பதிவாக்கிய அருள் வித்துக்கள் எனக்குள் விளைந்து
3.அதை வளர்க்கும் தன்மையும் வந்தது.

அதே போன்று பல ஞான வித்துக்களை உருவாக்கும் நிலையும் குருநாதர் உருபெறச் செய்ததனால் இத்தகைய நிலையை நீங்களும் பெறும் வாய்ப்பாக இப்பொழுது அமைகின்றது.

இந்த ஆற்றல் மிக்க நிலையை உங்களுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு நல்ல குணங்களுக்குள்ளும் பதியச் செய்து உரமாகக் கொடுத்து ஊட்டமாக்குகின்றோம்.

இதன் துணை கொண்டு அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நீங்களும் வளர்த்துக் கொள்ளுங்கள். நாளை வரும் விஷத் தன்மைகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும். அதற்குத் தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

இதை வளர்த்துக் கொள்வோர் சிறிது பேர் இருந்தாலும் உங்கள் மூலம் இந்தக் காற்று மண்டலத்தில் மெய் ஞானிகள் உணர்வுகள் பரவி மற்றவர்களையும் காத்திடும் சக்தியாகப் பரவும்.

நமக்குள் தினசரி நடக்கும் போராட்டம்

Gita upadesam Kannan

நமக்குள் தினசரி நடக்கும் போராட்டம்

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் அது மகாபாரதப் போர் என்று வியாசகர் காட்டியுள்ளார்.

சூரியனிலிருந்து வரக்கூடியது
1.வெப்பம்
2.காந்தம்
3.விஷம்.
அது மூன்று என்றாலும் உதாரணமாக புலியை ஒரு மாடு சந்திக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். புலியின் உணர்வை அது எடுத்துக் கொண்டால் அதன் வலிமையை எடுத்துக் கொள்கின்றது.

கண்ணன் (கண்கள்) அந்த உணர்வைப் பார்த்து வலிமையைக் கொடுத்து அர்ச்சுனனுக்கு தாக்கும் உணர்ச்சிகளைக் கொடுக்கின்றது. அதுதான் “அர்ச்சுனன்…!”

அந்த வலிமையை எடுத்துக்கொண்டால் அதனுடைய இயக்க உணர்ச்சிகள் – “நகுலன்…” இந்த மூன்றுக்குள் (வெப்பம் காந்தம் விஷம்) இது வருகின்றது நகுலன்.

இந்த உணர்ச்சிகள் ஒரு உடலுக்குள் சேர்த்து அதன் உணர்வை உருவாக்க இந்த உணர்ச்சியின் அமைப்புகள் அமைகின்றது, அதுதான் “சகாதேவன்…!”

இந்தப் புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் அது உருவாக்கி விட்டால் பீமன். புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் சேர்ந்து விட்டால் பீமன்.

அப்பொழுது அந்த வலிமை கொண்டு அந்த உடலில் மற்றவைகளை அடக்கும் சக்தி பெறுகின்றது. மிக வலிமையானது “பீமன்…”

வலிமையாகிவிட்டதென்றால் அதன் வழி இயக்கச் சக்தியாக அடுத்த உடலை உருவாக்கி அதன் வழி சாந்தமாக இயக்கும் தன்மை வருகின்றது “தர்மன்…!”

உடலிலே உருவாக்கிய உணர்வுகள் எல்லாம் கௌரவர்கள். எந்தெந்த உணர்வுகள் கொண்டு அந்த உடல்களை வளர்த்துக்கொண்டதோ அந்த உடலைக் காக்கும் அந்த கௌரவப் பிரச்சினைகள் வரும், அந்த உணர்வின் தன்மை தான் காக்கின்றது.

கௌரவர்கள் நூறு பேர். நூறு விதமான குணங்கள் ஒவ்வொரு நிலைகளிலேயும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒற்றுமையுடன் அவர்கள் இருப்பார்கள்.

எல்லாம் சேர்ந்து உடலுக்குள் ஒற்றுமையாக இருக்கும்போது பஞ்ச பாண்டவர்கள் நாம் நல்லவைகளை நுகர்ந்து நல்லவைகளைச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையில் செயல்படுகின்றோம்.

அப்பொழுது இந்த நூறு பேரும் உடலுக்குள் இருக்கும் அந்த நூறு விதமான உணர்வுகள் அந்த நல்ல உணர்வுகளை உள்ளே விடாது தடுக்கின்றது. நம் உடலிலே வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரித்தால் அது கௌரவர்கள்.

1.எப்படியும் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
2.உள்ளுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கௌரவர்கள்
3.அவர்களுடைய அழுத்தத்தால் விடுவதில்லை.

காரணம் நமது கண் கண்ணனாக இருப்பினும் நமது உயிர் கண்ணனின் சகோதரி திரௌபதை.

இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஆசையில் நல்லதைச் செய்ய வேண்டும் என்று இந்த உடலில் உள்ள ஆறாவது அறிவால் மாற்றி அமைக்க வேண்டும் என்று எண்ணினாலும்
1.உடலுக்குள் முன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது கௌரவர்கள்.
2.உடலில் நோயாக இருந்தால் அதுவும் கௌரவர்கள்.
3.ஆசை கொண்டு பொருளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதுவும் கௌரவர்கள் தான்.

நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். “இப்படிப் பண்ணுகிறானே..” என்ற கோபம் வந்து உயிரிலே படுகின்றது, குரு.

இந்தச் க்ஷேத்திரத்தில் அவன் செய்த தவறின் உணர்வு போர் முறையாக நடக்கின்றது. அதனின் உணர்வு கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ இந்தக் கண் என்ன செய்கின்றது..? வழி… காட்டுகின்றது.

அவனிடம் போய் “நீ எப்படி இப்படிச் செய்யலாம்..?” என்று இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று கேட்கும் நிலைகளுக்கு வழி காட்டுகின்றது. அப்பொழுது இங்கே போர் நடக்கின்றது.

ஆனால் நடந்தாலும் நாம் இதில் தப்புவதற்கு வழி இல்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்தவுடன் உடலுக்குள் போய் என்ன செய்கின்றது…? அவன் செய்த வேதனைப்படும் உணர்வுகள் அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்கி விடுகின்றான்.

நம் இரத்தத்தில் போனவுடன் என்ன செய்கின்றது? நகுலன். அவனின் வேகமான உணர்ச்சிகள் என்ன செய்கின்றது…? ஒரு மிளகாயை வாயில் போட்டவுடன் “ஆ..!” என்று நம்மை அலறச் செய்கின்றது. நகுலன், விரிந்து உள்ளுக்குள் போகின்றது.

சகாதேவன் அதிலுள்ள காந்தம் இரண்டற இணைக்கின்றது. இணைத்தவுடன் என்ன செய்கின்றது…? அதன் பின் கோபமான உணர்வு வரும்போது பீமன். நமக்குக் கோபம் வந்துவிடுகின்றது. பயங்கரமான கோபம் வருகின்றது.

அப்படிப் பீமனாகும் பொழுது அடிக்கடி கோபம் வந்து வலுவாகும் போது நமக்குள் இரத்தக் கொதிப்பாகின்றது.
1.எப்படி ஒரு வேப்பமரத்திற்குப் பக்கம் ரோஜாப்பூவின் மணத்தை விடுவதில்லையோ
2.இதைப்போல நல்ல சுவாசத்தையும் நல்ல உணர்வுகளையும் உள்ளே விடாதபடி
3.இதைத் தடுத்து விடுகின்றது எதிர் நிலை…!

ஆனால் திரௌபதை (உயிர்) என்ன செய்கின்றது?

பஞ்ச பாண்டவர்கள் அதாவது ஐந்து புலனறிவை இயக்கி நீங்கள் நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணிணாலும் உள்ளுக்குள் (உடலுக்குள்) உள்ள கௌரவர்கள் இதை அவமதிக்கின்றனர். திரௌபதை (உயிர்) அப்பொழுது படாத துயர்படுகின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தோம் என்றால் “எனக்கு ஒரே மனக் கலக்கமாக இருக்கின்றது.. அப்படி இருக்கின்றது.. என் வீட்டுக்காரர் இப்படிச் செய்கின்றார்…! என் பையன் இப்படிச் செய்கின்றான்..!” என்று இந்தப் போர் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

நல்லவைகளைச் செயல்படுத்துவதற்காக உடலுக்குள் எப்படிப் போர் முறைகள் நடக்கிறது…? என்பதனைத் தெளிவாக்கத்தான் மகாபாரதப் போரைக் காட்டினார் வியாசகர்.

நம் சாஸ்திரங்களில் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதில் தவறு எதுவும் இல்லை. நாம் புரிந்து கொண்டோமா…?

மழை பெய்ய வைக்கும் சக்தி எது…?

raining-003

மழை பெய்ய வைக்கும் சக்தி எது…?

இன்று நாம் வாழும் இடங்களில் மழை எப்படிப் பெய்கின்றது…? ஒரு இடத்தில் பெய்து இன்னொரு இடத்தில் மழை பெய்யாமல் போவதன் காரணம் என்ன…?

எந்தெந்த அளவுக்கு மக்களின் நல்ல எண்ணங்கள் இருக்கின்றதோ அதற்கொப்பதான் அங்கே மழை பெய்யும்.
1.நாம் நல்ல உணர்வுகளை எடுத்தோம் என்றால்
2.அந்த இடத்தில் “நிச்சயம்” மழை பெய்யும்.

வெறுப்பும் சண்டையும் குரோதமும் இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எண்ணினார்கள் என்றால் அந்த அந்த உணர்வுகள் பரவி அங்கே மழை மேகங்களைக் கலைத்து மழை பெய்வதைத் தடுத்துவிடும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் மோதல் ஏற்படுகின்றது என்றால் அந்தப் பக்கத்தில் மழை இல்லாது போகும்.

அன்பு கலந்த உணர்வுடன் நாம் ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷியின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரவச் செய்து மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் அப்பகுதியில் உங்களால் நிச்சயம் மழை பெய்ய வைக்க முடியும்.
1.உங்களை நம்புங்கள்.
2.ஒரு மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.

ஒரு பாடலை இனிமையாகப் பாடி இந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பி அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.

மழை இல்லை என்றால் பெண்கள் தண்ணீர் குடத்தைத் தூக்கிக் கொண்டு போவார்கள். காட்டுப் பக்கம் போய் பக்தி கொண்டு இரண்டு பாடலைப் பாடியவுடனே கொஞ்ச நேரத்தில் மேகம் கூடும்.

மழையை நேராக வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வருவார்கள். அப்படியே மழை பெய்யும். அந்தக் காலத்தில அதைச் செய்தார்கள்.

இன்றைக்கு அதெல்லாம் போய்விட்டது. நம்முடைய அந்த நாகரீகம் எல்லாம் போய்விட்டது. நமது பண்பாடு எல்லாம் போனது. அநாகரிகம் தான் வந்து விட்டது.

இன்றைக்குப் பெண்கள் நாகரீகமான உடைகள் எல்லாவற்றையும் போட்டு வித்தியாசமாக நம்முடைய பண்புகளை இழக்கச் செய்து எங்கேயோ இருந்த நாகரீகத்தை இங்கே கொண்டு வந்து விட்டோம்.

மேலை நாட்டு நாகரீகத்தினால் அநாகரீகத்தை நாம் வளர்த்துக் கொண்டு இருக்கின்றோமே தவிர நாகரீகம் என்ற பெயரில் “அநாகரீகத்தை” வளர்க்கின்றோம். இதன் உணர்வு கொண்டு வெறுப்பின் உணர்வை நாம் பரப்புகின்றோம்.
1.வெறுப்பு உணர்வுகள் இருந்தால்
2.இந்தப் பெண்கள் மழையை எங்கே கூட்டிக் கொண்டு வரப்போகின்றார்கள்…?

முந்தி எல்லாம் மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். நான் (ஞானகுரு) சிறு பிள்ளையாக இருக்கும் போது தண்ணீருக்காக வேண்டி எல்லாரும் குடத்தை எடுத்துக் கொண்டு போவோம். வரும் போது நனைந்து கொண்டு தான் வருவோம்.

இன்னும் கூட சில பகுதிகளில் இது உண்டு….! “பழமைவாதிகள்” அங்கே இருந்தார்கள் என்றால் மழையைக் கூட்டிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இப்பொழுது நாம் மழை இல்லை என்றால் வறண்டு போய்விட்டது வறண்டு போய்விட்டது என்று எல்லோரும் பேசுவது போல நாமும் பேசுவோம்.

ஆனால் தப்பித் தவறி மழை பெய்யும் போது என்ன சொல்வோம்…? தொலைந்து போன மழை இந்த நேரத்திற்குத்தான் வர வேண்டுமா…? என்று இப்படித்தான் நாம் பேசுகின்றோம்.

இதை எல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி வான மண்டலம் முழுவதும் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்

இந்த உணர்வுகளுடன் நம் பார்வையும் அதிலே சேருகின்றது. அந்த மழை நீருடன் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது அங்கே மழை பெய்யும். அப்போது நல்ல நிலைகள் ஏற்படும்.

“எல்லோரையும் காக்க வேண்டும்” என்ற எண்ணமே மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யும் தகுதியாகும்

meditation-14643615474iA

“எல்லோரையும் காக்க வேண்டும்” என்ற எண்ணமே மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யும் தகுதியாகும்

நாம் தீங்கே செய்ய வேண்டாம். ஒருவன் ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டு அதை நாம் வேடிக்கையாகப் பார்க்கின்றோம். நமக்குள் பதிவாகின்றது. பின்… எப்படி ஆக்ஸிடென்ட் ஆனான்…? என்று நாம் கேட்கின்றோம்.

இதை எல்லாம் கேட்டறிந்த பின் நாம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து ஒரு இடத்திற்குப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பஸ் வேகமாகப் போனதென்றால் போதும். ஆக்ஸிடென்ட் ஆன அந்த நினைவு வரும்.

அந்த உணர்வின் தன்மை வந்தவுடன் நாம் டிரைவரைப் பார்ப்போம். ரிமோட் கண்ட்ரோல் REMOTE CONTROL மாதிரி டிரைவரை என்ன செய்யும்…? அதற்குத் தகுந்த மாதிரி ஒதுங்கி நாம் பாய்ச்சிய உணர்வு இயக்கி நாம் இருக்கின்ற பக்கமே உராசுகின்ற மாதிரி ஆக்ஸிடென்ட் ஆகும்.

அதே போல ஒருவன் ரோட்டிலே அஞ்சி விழுந்தான்… அடிபடுகின்றான். தரையில் ஆக்ஸிடென்ட் ஆனது என்று அதைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிகளைப் பதிவாக்கி விட்டோம் என்றால் என்ன செய்யும்…?

நாம் ரோட்டில் நடந்து போகும் போது பஸ் ஹார்ன் அடித்தால்
1.நாம் இந்தப் பக்கம் விலகிப் போவதற்குப் பதில்
2.பஸ் வருகின்ற பக்கம் போய் அடிபடுவோம்.
3.ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படித்தான் இயங்குகின்றது.

சந்தர்ப்ப பேதங்கள் எது எதுவோ உருவாக்குவதனால் நம் நல்ல சிந்தனையைத் தடைப்படுத்தி இவ்வாறு ஆகின்றது. நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் மனிதனின் நல்ல உயர்ந்த உள்ளங்களை மாற்றி விடுகின்றது.

இதைப் போன்றவைகளை மாற்றியமைக்கக்கூடிய வழியாகத்தான் அக்காலங்களில் இராமயாணம் மகாபாரதம் சிவ புராணம் விநாயக புராணம் போன்ற காவியங்களை நமக்கு ஞானிகள் கொடுத்தனர்.

அவைகளைச் சீராகப் படித்திருந்தால்… அதன் வழி நாம் நடந்திருந்தால்…! இத்தகைய நிலைகளைத் தவிர்த்து மெய்ப் பொருளை வளர்த்துப் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

ஏனென்றால் அது எல்லாம் இப்போது காலத்தால் போய்விட்டது. உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குருநாதர் காட்டிய அருள் வழியை உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

வராகன் (பன்றி) சாக்கடையைப் பிளந்து நல்ல பொருளை நுகர்ந்து அது வளர்ந்து நாற்றமான அந்த உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கும் நிலைகள் பெற்றது. அதைப் போன்று
1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைப் பிளந்து
2.தீமைகளைப் பிளந்திடும் உணர்வைத் தனக்குள் எடுத்து
3.நம் அறிவைத் தெளிந்திடச் செய்யும் அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்க்கப்படும் போது
4.இந்தத் தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரம் பெறுவோம்.

பரிணாம வளர்ச்சியில் நாம் மனிதனாக வளர்ந்த முறை இதுதான். அதன் வழியில் நாம் எளிதில் விண் செல்ல முடியும்.

அதைப் பெறுவதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம். அந்த முறைப்படி நீங்கள் எல்லோரும் செய்யுங்கள்.

எப்போது தீமையைக் கண்டாலும் அந்தத் தீமை செய்வோரை
1.”தீமை… தீயவர்கள்…” என்ற வார்த்தை சொல்லாது
2.மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.
3.அவர்கள் அருள் ஞானம் பெற்றுத் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
4.(முதலில் தீமையைச் சொல்லி விடாதீர்கள்..! – இது மிகவும் முக்கியம்)
5.மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் (இந்த எண்ணம் தான் முதலில் வர வேண்டும்)
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் எதிர் காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று இதைச் சொல்லிப் பழக வேண்டும்.

இப்படிச் செய்யாமல் அவர் தீமையை நமக்குள் பதிவு செய்து கொண்டு அதையே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் அந்தத் தீமை நமக்குள் விளைந்து “இது தான் முன்னாடி வரும்….!” நல்ல உணர்வுகளில் தீமை தான் கலக்கும். நல்லதைப் பாதுகாக்க முடியாது.

அதனால் “தீமையை மறந்து…” அருள் ஒளியை எடுத்து அதனின் உணர்வைப் பாய்ச்சப் பழகிக் கொள்ள வேண்டும். சிறிது காலத்திற்குப் பழகிக் கொண்டால் மிகவும் நல்லதாகும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலமாக நான் (ஞானகுரு) கண்டறிந்ததில் கால்வாசியில் ஒரு பாகத்தைத்தான் உங்களுக்குத் துணுக்குத் துணுக்காகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இதெல்லாம் நீங்கள் பூரணமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து அதை நீங்கள் பெறக்கூடிய தகுதியே ஏற்படுத்துகின்றோம்.

அடுத்து…
1.இனி வரும் காலத்தில் நாம் எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வை வளர்க்க வேண்டும்.
2.”எல்லோரையும் காக்க வேண்டும்…” என்ற எண்ணத்தில்
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இறந்தபின் உடல் அழுகி நாற்றமாகின்றது…! நாம் யார்…! அந்த உடலா அல்லது உயிரா..?

Kalyana Teertham Papanasam

இறந்தபின் உடல் அழுகி நாற்றமாகின்றது…! நாம் யார்…! அந்த உடலா அல்லது உயிரா..?

நமது உடல்…! என் உடல்…! என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் நமது உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளின் அணுக்கள் நமக்குள் உண்டு. அதனின் மலமே நமது உடல்.

இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய் விட்டால் இந்த உடலான சிவம் “சவமாகி விடுகின்றது…!”

நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் ஓ…ம் நமச் சிவாய… ஓ…ம் நமச் சிவாய…! என்று நமது உடலாக சிவமாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்
2.அந்த உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலில் உள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.

நாம் எத்தகைய குணங்கள் கொண்ட உணர்வின் தன்மைகளை இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்கள் எல்லாம் இந்த உடலை விட்டு உயிர் சென்று விட்டால் இந்த உடலையே தின்னும் அணுக்களாக மாறிவிடுகின்றது.

முதலிலே உயிரின் இயக்கத்தில் நாம் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப உடலாகின்றது.
1.உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”
2.அது நுகர்ந்த உணர்வின் மலம் உடலாகும் போது சிவமாகின்றது.
3.ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது.

அதாவது உடலை உருவாக்கிய அணுக்கள் நம் உடலையே உணவாக உட்கொள்ளும் உயிரணுவாக மாறி விடுகின்றது. இப்படி அணுவான பின் அந்த அணுவின் மலம் வெளிப்படும் போதுதான் “நாற்றமாகின்றது…!”

நாம் எந்தெந்தக் குணத்தை எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் நல்ல மணங்களாக இருக்கின்றது. ஆனால் (உயிர் போன பின்) அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றம் சகிக்க முடியாது.

எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மை நம் உயிர் நுகர்ந்து ஜீவ அணுக்களாக மாற்றியதோ இந்த உயிர் சென்றபின் ஜீவணுக்கள் உயிரணுவாக மாறி உடல் பெற்றுப் புழுக்களாகி விடுகின்றது.

இறந்த சரீரம் அழுகிப் போய்விட்டது என்றும் நாற்றமாகின்றது என்றும் சொல்கின்றோம் அல்லவா…!

1.மனிதனுக்குள் எத்தனை விதமான வேதனைகளைப்பட்டோமோ
2.எத்தனை வேதனைப்படுத்தினோமோ… எத்தனை துயர்படுத்தினோமோ…
3.இந்த உணர்வின் மலம் நம் உடலாக ஆனாலும்
4.உயிர் வெளியேறிய பின் அந்த அணுக்கள் புழுவாகி அதனின் மலத்தை வெளிப்படுத்தும் பொழுது நாற்றமாக வெளிப்படுகின்றது.

மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகத்தான் நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம். பலவிதமான ஆசைகளையும் வளர்க்கின்றோம்.

கடைசியில் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி வேதனையுடனே உடலை விட்டுப் பிரிகின்றோம்.

ஆனால் ஞானிகளோ மகரிஷிகளோ “தான் யார்…?” என்ற நிலையில் தன்னை அறிந்து உயிரின் இயக்கதையும்… உயிரால் உருவாக்கப்பட்ட உடலின் நிலைகளையும்… அறிந்து கொண்டவர்கள்.

அவர்கள் இந்த உடல் பற்றை வளர்க்காது உயிர் பற்றை வளர்த்தவர்கள். உயிருடன் ஒன்றி நிலைத்ததாக… ஒளியின் சரீரமாக… மரணமில்லாப் பெரு வாழ்க்கையாக… “விண்ணிலே வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்…!”
1.அந்த உயிர் பற்றை நாம் வளர்த்தால்
2.அவர்களைப் போன்று நாமும் அழியாத வாழ்க்கை வாழலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய உண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். இதில் அவரவர்களுக்கு “எது பிரியமோ” அதை எடுத்துக் கொள்ளலாம்.

பல புத்தகங்களைப் படித்தவர்கள் எதனின் அடிப்படையில் எண்ணுகின்றார்கள்…?

Saamigal upadesam

“பல புத்தகங்களைப் படித்தவர்கள்” எதனின் அடிப்படையில் எண்ணுகின்றார்கள்…?

உபதேசத்தைப் படித்துவிட்டு எனக்கு அர்த்தம் தெரியவில்லையே என்று இருக்கவே வேண்டாம். என்ன சொல்கிறோம் என்று அந்த உணர்வை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே இருந்தால் போதும்.

டேப்பிற்கு (TAPE) ஒன்றுமே தெரியாது. அந்த நாடாவில் முலாம் தான் பூசி இருக்கிறார்கள். நாம் பேசுவதையெல்லாம் பதிவாக்கி விடுகின்றது. ஏனென்றால் அதற்கு வேறு எண்ணம் இல்லை.

வயதில் சிறிய குழந்தைகளுக்கு அங்கே போக வேண்டும் இங்கே போக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை.

ஒரு டேப்பில் பாடல் பாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதை அந்தக் குழந்தைகள் சும்மா கவனித்துக் கொண்டிருந்தால் போதும். அந்தப் பாட்டைக் கவனித்த பின் அதே பாட்டை அதே மெட்டில் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

பெரியவர்கள் ஆயிரம் தரம் கேட்டாலும்… அந்தப் பாடலை அதே மெட்டில் பாடத் தெரியுமா…? என்றால் தெரியாது…!
1.நாம் பல எண்ணங்களில் இருப்போம்…..
2.கூர்ந்து பதிவாக்கிக் கொள்வதில்லை அது தான் காரணம்…!

அதைப்போல நாம் குழந்தை உள்ளங்களாக இருந்து மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் நமக்குள் அது பதிவாகும்.

பல ஆயிரம் புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்வது அர்த்தமில்லை என்று எண்ணி
1.படித்த புத்தகங்களில் உள்ள நிலைக்கு ஒப்பிட்டுப் (TALLY பண்ணி) பார்த்தால்
2.யாம் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் இவை எல்லாம் எல்லாவற்றையும் சொல்வார்கள்.

ஆனால் மெய் ஞானத்தின் தன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன். ஒரு சில விஷயங்களை முழுமையாகவும் சொல்கிறேன்.

இராமாயணமோ மகாபாரதமோ ஏதோ ஒரு பாஷையில் தான் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார்.
1.எல்லாவற்றையும் “பாடல்களாகத் தான்” எழுதி வைத்திருக்கிறார்கள்.
2.கதையாக அவர்கள் உரை நடையில் எழுதவில்லை.

“புத்தகத்தைப் படிப்பவர்கள்” அவர்கள் பாடலாகப் பாடியது எல்லாம் தெளிவாக அர்த்தமாகின்றது என்று சொல்கின்றார்களா…? அல்லது அர்த்தமாகவில்லை என்று சொல்கின்றார்களா…! என்று எனக்குத் தெரியவில்லை.

அர்த்தம் தெரிந்து எல்லோரும் வருவதில்லை…..!

ஏனென்றால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பாடம் படிக்கின்றோம் என்றால்
1.நாம் தெரிந்து கொண்டு அங்கே போன பின் நமக்குப் பள்ளியில் அதைச் சொல்லிக் கொடுப்பதில்லை.
2.ஆரம்பப் பள்ளியில் படித்த பிற்பாடு அடுத்த உயர் கல்விக்கு நாம் சென்றாலும்
3.ஆரம்பப் பள்ளியில் படித்த பாடத்தை அங்கே சொல்லிக் கொடுப்பதில்லை.
4.உயர் கல்வியாக இத்தனையும் படித்து முடித்தாலும் அடுத்து…
5.நீ இன்ஜினியருக்குப் படிக்கின்றாயா அல்லது டாக்டருக்குப் போகின்றாயா…? என்று கேட்கின்றார்கள்.
6.படித்ததற்குத் தகுந்த மாதிரி அங்கே தேர்வு வைத்து..
7.நீ இன்ஜினியராகப் போகலாம்… டாக்டராகப் போகலாம்…! என்று அங்கே பிரிக்கின்றார்கள்.

அப்படிப் பிரித்த பிற்பாடு மீண்டும் இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர
1.ஏற்கனவே நான் பல புத்தங்களைப் படித்திருக்கிறேன் என்று சொல்லி
2.அதனால் இதை எல்லாம் நான் படிப்பதற்கில்லை என்று இப்படிச் சொன்னால் அந்தப் பாடம் இங்கே ஏறாது.

ஆக படித்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நிறையப் படித்துவிட்டு வருபவர்கள்…,
1.”என்னமோ…!” இந்தச் சாமி சொல்கிறார்….
2.என்னமோ… “கேட்டுக் கொண்டு போவோம்…! என்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.
3.படித்த நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்படித்தான் வரும்.

தன் வாழ்க்கையில்… இயற்கையில்… அது என்ன நிகழ்கின்றது..? என்ற நிலையைத் தெளிவாகத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் பதிவு செய்து விட்டு அந்த வழியில் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் நீங்கள் இருந்தால் இது பதிவாகும். உங்களுக்குள் வளரவும் செய்யும்.

அந்தப் பதிவான நிலைகளை நீங்கள் தியானத்தில் அமர்ந்து எடுத்தால்
1.ஆயிரம் புத்தங்களில் நீங்கள் படித்து விட்டு வந்ததற்கு “விடை…!”
2.உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும். (நிச்சயம் வரும்)

இந்தத் தியானத்தை முறைப்படி எடுத்து நீங்கள் நெறிப்படுத்தி விட்டீர்கள் என்றால் “எல்லாமே அர்த்தம் காண முடியும்…!”

இறப்பை யாரும் தடுக்க முடியாது…! – துருவ நட்சத்திரத்தின் உணர்வை “வாழும் இந்தச் சிறிது காலத்தில்” எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்

Destiny of Life

இறப்பை யாரும் தடுக்க முடியாது…! – துருவ நட்சத்திரத்தின் உணர்வை “வாழும் இந்தச் சிறிது காலத்தில்” எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரது இரத்த நாளங்களில் கலந்து உடல்களிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று அவர்களது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவனும் மனைவியும் பெற்று வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் பெற்று கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் பெற்று உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரது உடல்களிலும் படர்ந்து மன நோய் நீங்கி மனபலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கூட்டுத் தியானங்களில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்று போலச் இதைச் சொல்ல வேண்டும்.
1.எல்லாருடைய செவிகளிலும் இது படர்கின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.அந்த நினைவலைகள் கண்ணுக்கு வருகின்றது.
4.கண்ணின் கருவிழி பதிவாக்குகின்றது.
5.கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் இந்த உணர்வை இழுக்கின்றது.
6.நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது. உயிரிலே மோதுகின்றது.
7.இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
8.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வு வலுப் பெறுகின்றது.
9.நாம் சொன்ன உணர்வெல்லாம் பூமியில் பரவி படர்கின்றது.

எல்லோரும் நன்றாக ஆகும் போது எல்லா உணர்வும் நமக்கும் நல்லதாகின்றது. இதைப்போல கூட்டமைப்பில் நாம் சொல்லப்படும் போது மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

குடும்பத்தில் சிரமங்கள் நீங்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்கள் வைத்து இந்தக் குடும்பத்தைப் பரிசுத்தப்படுத்தலாம். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒரு நோய் உள்ளவருக்குக் கூட இந்த மாதிரி கூட்டாகச் சொல்லித் தியானித்தால் நோய் எல்லாம் நீங்கிப் போய்விடும்.

எந்த நோயாக இருந்தாலும் அதனுடைய வலிமையைக் குறைக்கலாம். ஆனால் “இறப்பவர்கள் யாரையும்… தடுக்க முடியாது…!”

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உடலை விட்டுச் சென்றாலும் அந்த உயிராத்மாவைக் கூட்டுத் தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பிறவியில்லா நிலை பெறச் செய்யலாம்.

1.ஆயுள் காலம் முழுவதும் நோயெல்லாம் நீக்கி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால்
2.முழுமையாக இருக்கப் போவது யாரும் இல்லை.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களைப் பெறச் செய்வதற்காக வேண்டி
4.சிறிது காலம் வாழ வைக்க முடியுமே தவிர
5.முழுமையாக யாரையும் நாம் காப்பாற்ற முடியாது.
6.நம்மையே நாம் காப்பாற்றப் போவதில்லை… யாரை நாம் காப்பாற்ற முடியும்..!
7.முழுமை என்பது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் முழுமையாகப் பெறுவதற்குத் தான்.

“நல்லது… கெட்டது…” இயற்கையில் எப்படி உள்ளது…?

Good and bad

“நல்லது… கெட்டது…” இயற்கையில் எப்படி உள்ளது…?

 

குழம்பு வைக்க காரம் புளிப்பு உப்பு எல்லாம் தேவைதான். ஆனால் சமப்படுத்துதல் வேண்டும். நமக்குள் அனைத்து உணர்வுகளும் இருந்தால்தான் அனைத்தையும் பெருகின்றேன்.

தீமை என்ற உணர்வு நமக்குள் இருந்தால் எதையும் அறிய முடியாது. வெறுப்பான நிலைகள் நமகுள் இல்லை என்றால் வெறுப்பின் தன்மை வராது. ஏனென்றால் நமக்கு அது தெரியாது.

ஆனால் தெரியப்படுத்தும் வெறுப்பு இருந்தாலும் அந்த வெறுப்பின் தன்மை தெரிவித்து வெறுப்பின் தன்மைகளையே வளர்த்துக் கொண்டால், வெறுப்பின் தன்மையே வரும். வெறுப்பை விலக்க வேண்டும்.

உப்பு கைப்பு என்ற நிலை இருந்தாலும் சுவையைக் கூட்ட உப்பைக் கலக்க வேண்டும். உணர்ச்சியைத் தூண்டும் காரத்தைக் குறைக்க வேண்டும். காரத்தை அதிகமாகக் கலந்தால் ஆபத்தை உருவாக்கும்.

இதைப் போன்ற நிலைகளில் எதுவும் கெட்டது அல்ல.

நல்லது நல்லதும் அல்ல. கெட்டது கெட்டதும் அல்ல. ஆறாவது அறிவு கொண்ட நாம் நமக்குள் அறிந்து
1.தவறு என்று உணர்ந்துவிட்டால்
2.நாமே திருத்தி அதை மாற்றி அமைக்க வேண்டும்.

பிறருடைய நிலைகளைக் குறை கூறுவது போல் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுக்குள் குறைகள் வராது நீக்கிப் பழக வேண்டும்.

நம்மை அறியாது குறைகள் வந்தாலும் நமக்கு நாமே நீக்க வேண்டுமே தவிர
1.நம்மால் பிறருக்குத் தீங்கு வரக் கூடாது.
2.நம்மால் பிறரது மனம் உடையக் கூடாது என்ற இந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

ஒரு சொல்லைச் சொல்லும்போது அது ஒருவரை புண்படச் செய்யும் நிலையாக வந்துவிடலாம். அப்பொழுது பகைமை ஆகிவிடும். எதனால் வந்ததோ அதுவே நமக்குள்ளும் விளைந்துவிடும்.

அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது? இந்தத் தீமைகளை எப்படி அடக்குவது? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுக்கின்றோம்.

அதைப் பயன்படுத்தி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வரும் தீமைகளை அவ்வப்பொழுது அகற்றப் பழகிக்  கொள்ளுங்கள்.

என் (ஞானகுரு) சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களை உயர்த்திக் காட்டினால்தான் எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும். உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்.

எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம். எமது அருளாசிகள்.