தங்கமாக்கச் செய்யும் கொங்கணவமாமகரிஷி

Konganar -tirupathi

தங்கமாக்கச் செய்யும் கொங்கணவமாமகரிஷி

அன்று மெய்ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வுகளை அரசர்கள் மந்திர ஒலி கொண்டு மனித உடலுக்குள் ஊடுருவச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றல் மிக்கதாகப் பெருக்கிக் கொண்டார்கள்.

1.ஆயிரம் தரம்… ஒரு இலட்சம்… இரண்டு இலட்சம்… தடவை ஜெபித்தால்
2.ஆற்றல்மிக்க சக்தி வருகிறது என்று சொல்லி
3.ஒரே உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது மந்திர சக்திகள் கூடுகின்றது.
4.இதற்கென்று ஒரு மூலத்தை முன் வைத்திருப்பார்கள்.

மூலம் என்பது ஒவ்வொரு அரசனும் ஒவ்வொரு நிலை கொண்டு மந்திரம் செய்வார்கள். இன்று நாடி சாஸ்திரங்களைப் பார்க்கலாம். இந்த நாடிகள் என்றோ எழுதியது இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாடிகள் அனைத்தும் அரசர்களால் எழுதப்பட்டதுதான்…! (ஞானிகளும் மகரிஷிகளும் நாடிகளை உருவாக்கவில்லை)

அரசனாக இருக்கப்படும் பொழுது அவன் தன் உடலை விட்டுச் சென்றபின் இன்னொரு உடலுக்குள் போக வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த நாடியை எழுதினார்கள்.

அதை எழுதி இன்னொரு உடலுக்குள் மாறவேண்டும் என்று கூடு விட்டுக் கூடு பாயும் தந்திரத்திலே செயல்படுத்தி அடுத்தவர் உடலுக்குள்ளே புகுந்து விடுவார்கள்.

புகுந்த உடலுக்குள் தன் உணர்வின் தன்மையை அங்கு செயலாக்கி மற்ற அரசர்களின் போர் முறையிலிருந்து தப்பித்துத் தன் உணர்வின் நிலையை இன்னொரு நிலைகளுக்கு நிலைப்படுத்தச் செய்தார்கள். இப்படித்தான் நாடி சாஸ்திரத்தின் நிலைகள் வந்தது.

இவ்வாறு வந்த நிலைகளில்தான் அரசனாக இருந்த பிருகு ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவர் உடலுக்குள் வந்தது.

பிருகு பல உடல்கள் மாறி மாறி இதைப் போன்று நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர்.

அப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலிருந்து எடுத்து வந்தார்.

பிருகு முந்தைய நிலைகளில் அரசனாக இருக்கும் பொழுது மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அதில் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.

1.போர் முறைகளினுடைய நிலைகளாலும் பிறிதொரு நிலைகளாலும்
2.தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான்
3.கொங்கணவரின் உடலுக்குள் வந்து தான் விண் செல்வதற்காக
4.ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றிய அவர்கள் எண்ணும் நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே தன்னை அந்த ஒளிச் சரீரம் பெற வைக்கும் என்று உணர்ந்து கொண்டார்.

அதை உணர்ந்த நிலையில் தன் “மனதைத் தங்கமாக்குவதற்காக…” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
1.மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.
2.கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்…” இன்றும் திருப்பதியில் உண்டு.

மெய்யை உணர்ந்து ஞான ஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் – முருகனின் சிலை. வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.

அந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

பின் வந்த அரசர்கள்தான் இதைப் பல நிலைகளுக்கு மாற்றி விட்டார்கள். திருப்பதியிலே பொருளாசையைத்தான் காட்டிச் சென்று விட்டார்கள். திருப்பதிக்குச் சென்றால் நாம் என்ன செய்கின்றோம்…?

தங்கத்தைக் கொண்டு போய் திருப்பதியிலே அபிஷேகம் செய்துவிட்டு எனக்குத் தங்கத்தைக் கொடு…! என்கிறோம். தங்கத்தை உண்டியலிலும் போடுகின்றோம். வியாபாரத்திற்கு வருபவரிடம் திருப்பதிக்குப் போகிறோம் என்று காணிக்கையாகக் காசு வாங்கிவிட்டு அங்கே கொண்டு போய்ச் செலவழித்துவிட்டு வருகின்றோம்.

லாபம் ஜாஸ்தி வந்துவிட்டால் உனக்குக் கொஞ்சம் பங்கு கொடுக்கின்றேன் என்று கொண்டு சொல்கிறோம்.
1.இந்த மன சுத்தத்தைப் பங்கு போடுவதற்கோ
2.இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனமோ அங்கே வருவதில்லை.
3.காரணம் மனிதன் தன் வாழ்க்கைக்குத்தான் இவையெல்லாம் பயன்படுத்த முடிந்ததே தவிர
4.மெய் ஒளியை யாரும் காண முடியவில்லை.

கொங்கணவ மாமகரிஷி மனதைத் தங்கமாக்கினார். ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் செலுத்தப்படும் பொழுது அந்தப் பாசத்தினாலே எல்லாமே கூட்டமைப்பாக வருகின்றது என்று உணர்ந்து கொண்டார்.

1.ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கிவிட்டால் மனம் தங்கமாகின்றது.
2.மனம் தங்கமாகும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது.
3.ஆகவே நாம் அனைவரும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
4.தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறுவோம்.

ஆதிசங்கரர் யாகங்களையும் வேள்விகளையும் பற்றித் தெளிவாக உணர்த்தியது என்ன…?

sri-adi-shankarar

ஆதிசங்கரர் யாகங்களையும் வேள்விகளையும் பற்றித் தெளிவாக உணர்த்தியது என்ன…?

மசூதிகளுக்கு ஒரு நல்லவருடைய பேரை வைத்து இன்னார் இன்ன மசூதி என்று வைக்கின்றார்கள். சர்ச்சுகளை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஒவ்வொரு பேரை வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு கோயிலுக்கு நாம் ஒரு பெயரை வைப்பது போன்று ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு சர்ச்சுகளிலேயும் மசூதிகளிலும் பெயரை வைக்கின்றார்கள்.

அன்று ஞானிகள் வகுத்துக் கொடுத்த நிலைகள் வேறு. ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகளை அவர்களுக்கு மாறான நிலைகளில் அரசர்கள் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். அரசர்கள் எதைச் சாங்கிய சாஸ்திரங்களாக உருவாக்கினார்களோ அதைத்தான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எந்தக் கோயிலை எடுத்துக் கொண்டாலும் கண ஹோமம் செய்ய வேண்டும் என்ற நிலைகளில் பல பொருள்களை நெருப்பிலிட்டுப் அதை ஆவியாக மாற்றப்பட்டு மந்திரங்களைச் சொல்வார்கள்.

யாகங்கள் செய்தால் நோய்கள் போகும்… என்றும் ஆயுள் ஹோமம் செய்தால் உனக்கு ஆயுள் கூடும்… என்றும் இப்படித் தவறான நிலைகள் கொண்டு செயல்படுத்தி விட்டார்கள்.

யாருக்குமே… ஆயுள்…
1.இந்த உடலுக்கு ஆயுளா…?
2.இந்த உணர்வுக்கு ஆயுளா…?
3.நம் உயிரின் தன்மையே நீடித்த ஆயுள்…!
4.ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதற்குத்தக்க உடலின் உறுப்பின் செயல்கள் ஆகின்றன.

காசைக் கொடுத்து அடுத்தவர்களை வைத்து யாகத்தை வளர்க்கின்றோம். எல்லாம் செய்த பின் நான் யாகத்தைச் செய்து விட்டேன் இதனால் எனக்கு நல்லதாகும் என்றால் ஒன்றும் கிடைக்காது. ஏனென்றால் அப்படி ஒரு எண்ணத்தை நமக்குள் ஆசையாக ஊட்டி விட்டார்கள்.

துன்பத்தைப் போக்குவதற்காக வேண்டிச் செல்வத்தைச் செலவழித்து யாகத் தீயிலே பல பொருளைப் போட்டு எரிப்பதால் எந்தச் சக்தியும் வருவதில்லை என்ற இந்த நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் தெளிவாகக் காட்டினார்.

ஆண்டவன் தனித்து இயங்குகின்றான். ஒவ்வொரு தெய்வமும் தனித்து இயங்குகின்றது. வேள்விகள் செய்து அதை நிறைவேற்றினால் தான் உனக்கு நல்லது நடக்கும் என்று காசி கங்கைக் கரையில் அன்று துவைதவாதிகளுக்கும் ஆதிசங்கரருக்கும் சர்ச்சையாகி வாதிட்டுக் கொள்கிறார்கள்.

கடைசியில் அந்தத் துவைதவாதிகள் ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வர வைத்து விட்டார்கள். வயிற்று வலியை நிவர்த்திக்க வேண்டும் என்றால் இந்த யாகத்தை நீ செய்து தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள்.

அப்போது ஆதிசங்கரர்
1.ஒவ்வொரு நிமிடமும் தனக்குள் இருக்கக்கூடிய ஈசனை எண்ணி
2.அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளி வரக்கூடிய மெய் ஒளியைச் சுவாசித்து
3.இவர்கள் செய்த தீய வினையின் நிலையே அந்த ஏவலை மாய்த்துத் தன் வயிற்று வலியை நீக்கிக் காட்டினார்.
4.இப்படித் தெளிவுபடுத்திக் காட்டியபின் தான் அங்கே போர்க்களமாக மாறுகின்றது.

ஏனென்றால் அன்றைய அரசர்கள் தன் அரசை நிலை நாட்டுவதற்காகப் பக்தியின் மார்க்கங்களிலே மதத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் யாகங்களையும் வேள்விகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அப்படி இல்லாமல் உயிரான ஈசனை எண்ணி மெய் ஒளியை ஒவ்வொருவரும் ஏங்கிப் பெறும் நிலை வந்துவிட்டால் அரசனை யாரும் மதிக்க மாட்டார்கள்.

மனிதன் அவன் ஞானியானாலும் அரசர் காலங்களில் இத்தகைய பேருண்மைகளைச் சொன்னால் அவன் தலை நிற்காது. ஏற்கும் நிலை இருக்காது. அதை வெளிப்படுத்தாத வண்ணம் தடுத்து விடுவார்கள்.

அதைப் போன்ற நிலையில் தான் எதிர்ப்பு நிலையாகி காசியில் கங்கைக் கரைக்குப் பின் ஆதிசங்கரர் என்ன ஆனார்…? என்றே தெரியாது. இங்கே கேரளாவில் காலடியிலே இருக்கிறார்.

ஆதிசங்கரர் சிலையை வைத்து அதன் வழிகளிலே இன்று வந்த பீடாதிபதிகள் பலர். அன்று ஆதிசங்கரர் சொன்னது…
1.உன் எண்ணத்திலே சூட்சம நிலைகள் அனைத்தும் இருக்கின்றது
2.அந்தச் சக்தியின் சொரூபத்தை நீ சுவாசித்து உன் உடலுக்குள் நல்லதை உருவாக்கு…! என்று தான் சொன்னார்.

ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்திதே…!
மனித உடலுக்குள் ஆயிரத்தெட்டு குணங்கள் உண்டு. அதில் எந்தக் குணத்தின் தன்மை நாம் ஒலிபரப்பு செய்கின்றோமோ அதே குணத்தை எடுக்கப்படும் போது அந்த உணர்வுகள் இங்கே வருகின்றது.

எந்தக் குணத்தின் அடிப்படையில் நாம் ஒலிபரப்பு செய்து பேசியிருக்கின்றோமோ அதே குணத்தை எடுத்துப் பேசும் போது அந்த உணர்வுகள் தான் நமக்குள் வருகின்றது.

ஆக நாம் எந்தக் குணத்தை எடுக்க வேண்டும்…? எந்தக் குணத்தின் அடிப்படையில் பேச வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நிலையாகத்தான் கோவிலில் தெய்வச் சிலையை உருவமாக்கி வைத்துள்ளார்கள் ஞானிகள்.

அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு பார்த்த பின்
1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.இதை அருளிய அந்த மகரிஷியின் அருள்சக்தி் நாங்கள் பெற வேண்டும் என்ற
3.அந்த உணர்வின் தன்மை சுவாசிப்பதற்கு அன்று மெய் ஞானிகள் கொடுத்தனர்.

மகரிஷிகள் தங்கள் உடலிலே வந்த தீமைகள் அனைத்தையும் மாய்த்துத் தங்கள் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள். துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இருக்கின்றார்கள்.

ஆகவே தியானம் எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள் தியானிக்க வேண்டியது எது…? எந்தக் கோயிலுக்குச் சென்றாலும்
1.அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.அந்தத் தெய்வ குணத்தை நமக்கு உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்.
3.இது எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்த வேண்டும்

வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகைய சம்பவங்களாக இருந்தாலும் அதைப் பார்த்த அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் செலுத்தும் போது பயமோ ஆத்திரமோ கோபமோ வேதனையோ போன்ற உணர்வுகள் இயங்காத வண்ணம் தடைப்படுத்தி உடலுக்குள் தீமைகள் உருவாகாதபடி அதைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆலயத்தின் பண்புகளே அது தான்…!

இளம் வயதில் அனாதையாக இருந்த போகர் மெய் ஞானத்தைப் பெற்று போகமாமகரிஷியாக எப்படி மாறினார்…!

Bhogar

இளம் வயதில் அனாதையாக இருந்த போகர் மெய் ஞானத்தைப் பெற்று போகமாமகரிஷியாக எப்படி மாறினார்…!

5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த போகன் அவன் அனாதையான நிலைகளாக இருக்கப்படும் போதுதான் மெய் ஒளியின் தன்மையைப் பெறும் சந்தர்ப்பமே அவனுக்கு ஏற்படுகிறது.

ஏனென்றால் தாய் தான் இருக்கின்றது. தந்தை இல்லை. ஆனால் தாயும் விஷமான பாம்பால் தீண்டபட்டு அதுவும் மரணமடைகின்றது.

தாய் மரணமடையப் போகும் போதுதான்
1.அந்த விஷத்தின் நிலைகள் கொண்டு… “தன் எண்ணத்தை ஓங்கி வலுவாகச் செலுத்தி…”
3.அவன் எண்ணிய ஏக்கத்தின் நிலைகள் கொண்டு
3.அவன் சுவாசத்திற்குள் சிக்கப்பட்டது தான் பல ஆற்றல்மிக்க சக்திகள்.

தாயின் பாசமும் இவனுடைய எண்ணமும் கூடித் தன் தாய் மேலே இருக்கக்கூடிய பாசத்தின் ஆற்றலால் அன்று ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு அவன் எண்ணத்தைச் செலுத்தும் போது
1.அதன் வழி அவனுக்குள் ஈர்க்கப்பட்டது தான்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு ஆற்றலான அணு.

பாம்பு தீண்டியதும் தாயின் உடலிலே இருக்கக்கூடிய அந்த நஞ்சை நீக்க
1.அவன் எடுத்துக் கொண்ட வேகமும்
2.விஷத்தின் தன்மையை நீக்குவதற்கு எடுத்துக் கொண்ட சுவாசமும்
3.அவன் சுவாசித்த உணர்வுகள் ஆற்றல்மிக்கதாகப் பெருகி
4.அவனுடைய சந்தர்ப்பம் அதை அறிவதற்காகச் செல்கின்றான்.

அந்த உணர்வின் வேகத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலையில் பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து விஷத்தின் தன்மையை நீக்குவதற்குண்டான முயற்சிகள் எடுத்தான்.

அன்று காட்டிய நிலைகள் கொண்டு தன் ஏக்கத்தை விண்ணை நோக்கிச் சூரியனுக்குள் செலுத்தும் போது இவனை அறியாமலே சூரியனின் காந்த அலைகள் இவனுக்குள் கூடி இவன் எண்ணத்திற்கும் வலு கூட்டி இவன் எந்தெந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டானோ அதன் வழி கொண்டே விஷத்தின் தன்மைகள் ஒவ்வொன்றையும் தனக்குள் அறிந்துணர்ந்தான்.

நன்றாகக் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஆனால் போகனைப் பற்றிய சரித்திரத்தைப் பார்த்தோம் என்றால் அவர் சட்டி பானை செய்து கொண்டிருந்தார். குயவர் குலத்தில் பிறந்தவர் என்று ஒன்று சொல்வார்கள்.
1.குயவர் என்றால் “பிரம்மம்…!” ஒரு பொருளை உருவாக்குவது.
2.பிரம்மத்தின் தன்மை அடைந்தவன் போகன் என்று அவர்கள் சுட்டிக் காட்டுவதற்கு அந்தப் பெயரை வைத்தார்கள்.
3.பிற்காலத்தில் அதை எல்லாம் அழித்து விட்டார்கள்.

தான் நுகர்ந்த உணர்வின் தன்மைகளைச் சுவாசிக்கும் போது தன் உயிரான நிலைகள் கொண்டு அந்தச் சக்தியைப் பிரம்மமாக்குகின்றான். அந்தப் பிரம்மத்தின் தன்மை தனக்குள் ஞானமாக்கி அந்தச் சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

ஒரு குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டானேயானால் அது பெற வேண்டும் என்று
1.தன் எண்ணத்தை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும்
2.அதே ஒரு குணத்தின் சக்தியை தான் உணர்கிற வரையிலும் அதையே தியானித்தான்.

அந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு சூரியனின் காந்த சக்தி கொண்டு விண்ணை நோக்கி ஏகி ஒவ்வொரு நிலையும் தனக்குள் உணர்ந்தறிந்து அந்த உணர்வின் நுண்ணிய நிலைகளைத் தனக்குள் கண்டறிந்து விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினான்.

தாயைத் தீண்டிய விஷத்தின் தன்மையை நீக்க போகர் சிறு வயதில் எடுத்த அந்த வலிமையான உணர்வே அவர் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக் காரணமாக அமைந்தது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் சில கடினமான சந்தர்ப்பங்களாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடும் வேகத்தை நாம் கூட்டி அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறவேண்டும் என்று முயற்சி செய்தால் அதுவே நமக்கு மெய் ஞானம் பெறச் செய்யும் நல் சந்தர்ப்பமாக அமையும்.

எந்த ஞானியை எடுத்துக் கொண்டாலும் தன் வாழ்க்கையில் வந்த கடுமையான நிலைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தின் வலுவைக் கூட்டும் பொழுது தான் அந்த விஷத்தை வென்றிடும் நுண்ணிய அறிவின் ஞானமும் பேராற்றலையும் அவர்களால் பெற முடிந்தது.

அந்த ஞானிகள் சென்ற வழியில் நாமும் செல்வோம்…! போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற்று நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ்வோம்.

சாகாக்கலைக்கும் வேகா நிலைக்கும் என்ன வித்தியாசம்…?

ramalinga-adigal-vallalar

சாகாக்கலைக்கும் வேகா நிலைக்கும் என்ன வித்தியாசம்…?

நஞ்சின் இயக்கத் தொடர் கொண்டது தான் ஒவ்வொரு உயிருமே…!

அதாவது நட்சத்திரங்களில் வெளிப்படும் கதிரியக்கங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றை ஒன்று வென்றிடும் நிலைகள் கொண்டு எதிர் கொண்டு தாக்கிடும் பொழுது நஞ்சின் தன்மை உச்சகட்டம் அடைகின்றது.

அப்பொழுது அதனால் துடிப்பின் நிலைகள் ஆகி வெப்பம் உருவாகின்றது. வெப்பத்தினால் உண்டாகும் அதனுடன் இணைந்த ஈர்ப்பு சக்தியான காந்தம் தன் அருகிலே இருக்கும் ஒரு கோளின் சத்தைக் கவரப்படும் போது அது ஒரு உயிரணுவின் தோற்றமாக உருவாகின்றது.

இவ்வாறு உயிரணுவாகத் தோன்றிய பின் எந்த நெருப்பில் பட்டாலும் அந்த உயிர் வேகாது. (அழியாது)

ஒரு உயிரணு பூமிக்குள் வந்த பின் தான் எடுத்துக் கொண்ட ஒரு தாவர இனத்தின் சத்தைத் தனக்குள் சமைத்து அந்த உணர்வுக்கொப்ப உடலாக மாற்றி மாற்றி மனிதன் வரை வந்தது தான் இந்த உயிர்.

மனிதனாக இருக்கும் நிலையில் எந்த உயிரானாலும் நெருப்பிலே போட்டால் அது வேகுவதில்லை. ஆனால் உடல்கள் அனைத்தும் கருகிவிடும்.

அதாவது ஆதியிலே விஷத்தின் தாக்குதல் கொண்டுதான் நெருப்பாக உருவானது. ஆனால் நெருப்பிற்குள் நஞ்சைப் போட்டால் அந்த நஞ்சு கரைந்து விடுகிறது. நெருப்பின் தன்மை அடையப்படும் போது அந்த நஞ்சினைப் பொசுக்கி விடுகின்றது.
1.நஞ்சால் தான் நெருப்பானது.
2.ஆனால் நெருப்பால் அந்த நஞ்சினைக் கொல்லும் செயலும் உண்டு.

அருள் ஞானிகள் தங்கள் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியாக்கி ஒளியின் சரீரம் ஆன பின் எந்த நஞ்சும் தன்னைக் கொல்லாது நஞ்சினையே தனக்குள் அடக்கி அதனின் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றித்தான் விண்ணுலகம் சென்றார்கள்.

1.விண்ணுலக ஆற்றல் எப்படிப்பட்டது…?
2.அதிலே உயிரணுக்களின் தோற்றங்கள் எவ்வாறு ஆனது…?
3.உயிர் அணுக்களின் தோற்றமான பின் அதனின் வளர்ச்சியில் மனித உருக்கள் எப்படி வந்தது…?
4.மனிதனான பின் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக எப்படி ஆனார்கள்..? என்பதை
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாக்கினார்.

அந்த மகரிஷிகள் அவர்கள் எப்படி ஒளியின் சுடராக ஆனார்களோ அந்த உணர்வின் தன்மையை இப்போது நீங்கள் கேட்டுணரும் போது உங்கள் உடலுக்குள்ளும் அது பதிவாகின்றது.

அதே சமயத்தில் மகரிஷிகள் ஞானத்தின் தன்மை கொண்டு தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஒளி அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படிப் படர்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வுகளை ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி ஏங்கி நுகரப்படும் பொழுது உங்கள் கண்ணுக்கு முன்னாடியும்… அது “மின்னிக் கொண்டு…” வருவதைப் பார்க்கலாம்.

அந்த மின் அணுக்களின் தன்மையில் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

1.நீங்கள் கூர்ந்து கவனித்த உணர்வின் தன்மை கொண்டு
2.இதைப் பதிவு செய்து கொண்ட நிலைகளுக்கொப்ப
3.அந்த ஈர்ப்பின் நிலைகளில் விண்ணின் ஆற்றலை நீங்களும் நுகர்ந்தறியும் நிலையாக
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று உமிழ்த்திக் கொண்டு இருக்கும்
5.பேரருள் பேரொளி உணர்வுகளை எல்லோரும் நுகரும் ஆற்றல் பெறவேண்டும்
6.”வேகா நிலையை…!” நீங்கள் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

சமீபத்தில் வாழ்ந்த இராமலிங்க அடிகள் அவர்களும் சாகாக்கலை நீக்கி வேகா நிலை பெறவேண்டும்…! என்றும் அதே சமயத்தில் போகாப்புனல்… அதாவது இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் “நான் பிறவிக்கு வரக் கூடாது…!” என்று தெளிவாக்கியுள்ளார்.

 

மகரிஷிகளைப் பற்றிய உண்மை நிலைகள்

Inner eye awakening

மகரிஷிகளைப் பற்றிய உண்மை நிலைகள் 

உதாரணமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்தி அது மின் அணுவின் தன்மை கொண்டது. அது மிகவும் நஞ்சு கொண்டது.

நம் பிரபஞ்சம் சுழன்று வரப்படும் போது அந்தச் சுழற்சியின் நிலைகளில் முன்னணியில் இருப்பது இந்த 27 நட்சத்திரங்கள் தான்.

அகண்ட பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளை இந்த நட்சத்திரங்கள் கவர்ந்து தன் கதிரியக்கச் சக்திகளை அதிலே பாய்ச்சி அதை நம் சூரியக் குடும்பத்திற்குப் பாதுகாப்புக் கவசமாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதாவது 27 நட்சத்திரங்களும் தனக்குள் எடுத்து கொள்ளும் அந்தப் பேரண்டத்தின் ஆற்றல்களைத் தன் நஞ்சின் தன்மையால் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றதாக மாற்றுகின்றது.

மாற்றிய நிலைகள் சிறுகச் சிறுகப் பிரபஞ்சத்தின் ஈர்ப்புக்குள் வரும் போது அது படர்ந்து… தேய்ந்து… தூசுகளாகப் படர்ந்து வருவதை… மற்ற கோள்கள் நுகர்ந்து உணவாக எடுத்துப் பாறைகளாக மாற்றுகின்றது.

அந்தக் கோள்கள் உமிழ்த்தும் சக்திகளைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்து ஒளியாக மாற்றுகின்றது. (நம் பூமியில் அதை வெயிலாகக் காணுகின்றோம்)

ஆனால் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் தூசிகள் துகள்கள் வேறு எதிலும் சிக்காது நம் புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் நம் பூமிக்குள் (மண்ணுக்குள்) பதிந்துவிடுகின்றது,

பின் விண்ணில் இருந்து வரும் எந்த நஞ்சின் தன்மையை எந்த நட்சத்திரத்தின் தன்மையால் அது உருவானதோ அதனின்று வெளிப்படும் உணர்வின் சத்தை இது வலு கொண்டு கவர்ந்து கருக்களாக உருவாகின்றது.

கருவான பின் அதே நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசித்து வளர்ச்சி அடைந்து அதனுடைய அளவுகோல் (பருவம்) வந்த பின் வெடித்துத் தனித்த வைரமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஒரு நஞ்சு கொண்ட பாம்பினமும் மற்ற உயிரினங்களைத் தாக்கி அதற்குள் நஞ்சைப் பாய்ச்சி அதனின் சத்தை உணவாக எடுத்துக் கொள்கிறது. கவர்ந்த உயிரினத்தின் நஞ்சின் விளைவுகள் பாம்புக்குள் அதிகரிக்கின்றது. இவ்வாறு
1.எத்தனை உயிரினங்களின் மேல் தன் நஞ்சினைப் பாய்ச்சிப் பாய்ச்சி உணவாக எடுத்ததோ
2.அது (உணவு) தன் உடலுக்குள் வந்த பின் திரும்பத் திரும்ப அதை வடிகட்டி
3.ஆகாரத்துடன் கலந்து உடலிலே நஞ்சின் தன்மை அதிகமாக விளைந்து விளைந்து
4.பின் அந்த நஞ்சே உறைந்து “நாகரத்தினமாக…!” உருவாகின்றது.

யானைகளுக்கும் இதைப் போல ஒரு முத்து வளரும். சிறுகச் சிறுகத் தான் சிந்தித்த உணர்வின் தன்மை சுவாசித்த பின் யானையின் சிரசிலே இதைப்போல விளையும். அதை யானை மதக்கல் என்பார்கள்.

200 வருடம் 300 வருடம் ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் அத்தகைய மனிதனுக்குள்ளும் (புருவ மத்தியில்) இதைப்போல விளையும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

ஆனால் மகரிஷிகளோ விண்ணின் ஆற்றலைத் தனக்குள் சுவாசித்துத் தன் உணர்வுள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தாக ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.

எந்த நஞ்சின் தன்மையும் தன்னைத் தாக்காது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டு இருப்பவன் அகஸ்தியன். நம் பூமியிலிருந்து விண் சென்ற முதல் மனிதன் அவன் தான்…!

ஒரு நட்சத்திரத்தின் துகள் மண்ணுக்குள் கருவான பின் மற்ற நிலைகளைப் பிரித்துத் தன் உணர்வின் சத்தைக் கவர்ந்து ஒளியாக எடுத்து ஒளியின் சுடராக… “வைரமாக…!” விளைகின்றது.

அதைப்போல மனிதனாக வாழ்ந்த காலத்தில் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விளைந்தவர்கள் மகரிஷிகள்.

அதாவது விண்ணிலிருந்து வரக்கூடிய நிலையை நட்சத்திரங்கள் தன் கதிரியக்கச் சக்தியைப் பாய்ச்சி அதனைச் செயலற்றதாக்கி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றதாக அதை உணவாக எப்படி மாற்றுகின்றதோ இதைப்போல
1.மகரிஷிகள் அந்த விண்ணின் ஆற்றல்களைக் கவர்ந்து தனக்குள் தெளிந்த நிலையாகப் பெற்று
2.இதைக் காட்டிலும் நஞ்சான நிலைகள் எதுவும் இல்லை என்ற நிலையில்
3.அந்த நஞ்சின் தன்மையைத் தனக்குள் உணவாக எடுத்து
4.அதனின் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி
5.என்றும் எதுவும் தன்னை அசைத்திடாத நிலைகள் கொண்டு
6..”என்றும் பதினாறு” என்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

அந்த எல்லையை அடையும் மார்க்கத்தைத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். அதைத் தான் உங்களிடமும் சொல்லிக் கொண்டே வருகின்றோம்…!

மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் எளிதில் அதைப் பெற முடியும்

Arul Gnanigal

மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் பதிவாக்க வேண்டிய முறையும்… பதிவாக்க வேண்டியதன் அவசியமும்…!

எத்தனையோ கோயிலுக்குப் போகின்றோம். உதாரணமாகத் திருப்பதிக்கு போனால் நான்கு நாட்கள் வரிசையில் நின்று காத்திருந்தாலும் அவனைப் போய்ப் பார்த்து அர்ச்சனை செய்து விட்டு வந்தால் தான் “நல்லது” என்று செய்கிறோம்.

நான்கு நாளாகச் சரியான சாப்பாடு இல்லை என்றாலும் மற்ற வசதிகள் நாம் நினைப்பது போல் இல்லை என்றாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு “சாமியைப் பார்க்க வேண்டும்…!’ என்று காத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் யாம் உங்களுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வுகள் நீங்கள் அனைவரும் பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்களுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உபதேசித்து நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறப் பழகும் நிலையாகச் சிறிது நேரம் தியானிக்க வேண்டும் என்றால் “தியானம் செய்ய எங்களுக்கு நேரம் இல்லை…!” என்று ஓடும் நிலையே வருகிறது.

ஆனால் அங்கே திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்றால் நேரத்தை எல்லாம் ஒதுக்கி விட்டு அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அதைப் போன்று தான் மற்ற நேரத்தை ஒதுக்கி விட்டு…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
2.நேரத்தைக் கூட்டி நீங்கள் வந்தீர்கள் என்றால் இது உங்களுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.

ஏதோ வந்தோம்…! பார்த்தோம்…! ஆசீர்வாதம் வாங்கிவிட்டுப் போகிறோம் என்று சொன்னால் நிலைத்திருக்கும் அந்தச் சக்தியைப் பெறாதபடி நீங்களே தடைப்படுத்திக் கொள்கிறீர்கள்…! என்று தான் அர்த்தம்.

எழுத்துக்களை எழுதும் பொழுது பொறுமை கொண்டு எழுதுதல் வேண்டும். எழுதும் வேகத்தைக் கூட்டினால் பொருள் தெரியாது. நீட்டமாகச் செல்லும். அதனுடைய கருத்தின் நிலை அறியாது கோடாகத் தான் இருக்கும்.

அதைப் போன்று தான் இந்த வாழ்க்கையில் நாம் போகும் வேகத்தில் என் தொழிலைப் பார்க்க வேண்டும்… அதைக் கவனிக்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்..! என்ற பல எண்ணங்களை எண்ணி அந்த ஏக்கத்தில் இருந்தால் யாம் உபதேசிக்கும் ஞானிகளின் வித்துக்கள் உங்களுக்குள் ஆழமாகப் பதியாது.

ஆழமாகப் பதியவில்லை என்றால் மீண்டும் நீங்கள் நினைவின் ஆற்றல் கொண்டு எண்ணினாலும் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெற முடியாத நிலைகள் ஆகிவிடும்.

ஆனால் அதே சமயத்தில் ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படிக்கும் பொழுது
1.ஒரு நிலை கொண்டு இதை எப்படியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்து கொண்டால்
2.அந்தப் பதிந்த உணர்வின் வலுவால்
3.நீங்கள் எண்ணும் போதெல்லாம் அது மீண்டும் குருவாக இருந்து
4.உங்களுக்குள் நல் வழி காட்டும் குருவாக அது இயக்கும்.

உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும். பொருள் கண்டு உணர்ந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும். அருள் ஞானம் பெறவேண்டும் அருள் வழி வாழ வேண்டும். மலரைப் போன்ற மணம் நீங்கள் பெறவேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும். மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

உங்களுக்குள் எது எது ஆழமாகப் பதிவாகின்றதோ அது தான் உங்களை இயக்கும். அதன் வழி தான் உங்கள் வாழ்க்கையும் அமையும்.

ஆகவே
1.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால்
2.தியானிக்கும் பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்
3.பின் அது உங்களை ஞானப் பாதையில் தன்னாலே அழைத்துச் செல்லும்.

ஞானிகளை எப்படி அணுகுவது…?

Power to Meditate

ஞானிகளை எப்படி அணுகுவது…?

மனித வாழ்விலே புனிதம் பெறும் இந்த உணர்வின் சக்தியை நமக்குள் விளையச் செய்யும் தன்மையை அன்று மெய் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நம் உடலின் தன்மை பிரபஞ்சமாகவும் நம் எண்ணத்தின் தன்மை நட்சத்திரமாகவும் அதில் விளைந்த உணர்வின் சக்திகள் உடலாகவும் உடலுக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்கள் அனைத்தையும் (சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளியாக மாற்றுவது போல்) ஒளியாக மாற்றும் தன்மையை அகஸ்தியன் காட்டினான்.

அகஸ்தியனுக்குப் பின் வந்த எல்லா ஞானிகளுடைய நிலைகளையும் உணர்ந்தறிந்த நமது குருநாதர் எமக்குள் அதை உபதேசித்தார்.

உணர்வை ஒளியாக மாற்றிடும் சக்தியை எனக்குள் வளர்த்துக் கொண்டேன். அப்படி வளர்த்த நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதைப் பேசுகின்றேன்.

அதன் வழியில்
1.நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற வரையிலும் எனக்கு லாபம்
2.நீங்கள் வாழ்ந்து மகிழ்ச்சியாகச் சொல்கிற வரையிலும் எனக்கு லாபம்.
3.நாம் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும் என்று
4.நாம் என்ற நிலைகளிலே தான் இதைப் பேசுகின்றேனே தவிர
5.”நான்…!” என்ற நிலையே எனக்கு (ஞானகுரு) இல்லை.
6.நாம் என்ற நிலைகள் தான் நாம் அனைவரும் சேர்ந்தால் தான் அதை இயக்க முடியும்.

ஏனென்றால் சக்தி வாய்ந்த ஞானிகள் அருளாற்றல் மிக்க சக்தியை அணுக வேண்டும் என்றால் அதற்குண்டான வலு வேண்டும்.

ஒரு கனமான பொருளைத் தூக்க வேண்டும் என்றால் ஒரு நூலால் தூக்க முடியாது. பல நூல்களை ஒன்றாகத் திரித்து அதனுடைய தன்மை கொண்டு தூக்கப்படும் போது தான் கனமான பொருளைத் தூக்க முடிகின்றது.

அது போல் நாம் எல்லோரும் சேர்ந்து அந்த வலு கொண்ட எண்ணத்தால் இழுக்கும் போது ஞானிகள் அருளை எளிதில் நுகர முடியும்.

1.பிறவா நிலை எய்திய அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க நிலைகள்
2.நெருப்புக்குச் சமம். நெருப்பென்றாலும் பரவாயில்லை.
3.அதைக் காட்டிலும் கடினமான நெருப்பு (ஆற்றல் மிக்க கதிரியக்கச் சக்திக்கு ஒப்பானவர்கள்)

அணுவைப் பிளந்து அணுவின் தன்மையை அது வெடிக்கச் செய்யும் போது அதனுள் இருக்கக்கூடிய ஆற்றல் கடினமான இரும்பு உலோகத்தையும் உருக்கிவிட்டுத் தன் அணுவின் தன்மை அது வளர்த்துக் கொள்கின்றது (அதைப் போல பல மடங்கு ஆற்றல் கொண்டவர்கள் ஞானிகள்)

சாதாரண மனிதராக இருக்கும் நாம் நம்முடைய எண்ணங்கள் கொண்டு அந்த ஞானிகளின் உணர்வலைகளை எடுப்போம் என்றால் என்ன ஆகும்…?
1.அந்த ஞானிகளின் உணர்வுகள் பட்டவுடன் நம்முடைய எண்ணம் சுக்கு நூறாகி
2.நம்முடைய உணர்வின் ஒலிக்குள் இருப்பதை அது கவர்ந்து அது தான் வளருமே தவிர
3.அதை நுகர்ந்து நமக்குள் சேர்த்து நமக்குள் இருளை நீக்கும் சக்தியாக அதைக் கவர
4.நம் எண்ணத்திற்கு வலு கிடையாது.

அந்த வலு கிடைக்கச் செய்வதற்குத் தான் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்களுக்குள் இந்த நினைவின் தன்மை சிறுகச் சிறுகக் கூட்டி அந்த ஆற்றலைப் பெருக்கும் நிலைக்காக உபதேசிக்கின்றோம்.

எந்த அளவிற்கு இதைப் பெறவேண்டும் என்ற ஏக்க நிலைகள் கொண்டு நீங்கள் வருகின்றீர்களோ
1.உங்களுக்குள் விளைந்திடும்… விளைந்திட்ட அந்த உணர்வின் எண்ண அலைகள் ஒவ்வொன்றுக்குள்ளும்
2.ஒவ்வொரு குணத்தின் செயலையும் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் போது
3,அந்த ஞானியின் உணர்வுகளைப் பிணைக்கச் செய்து கொண்டடேயிருக்கின்றோம்.
4.அப்படிப் பிணைத்த உணர்வின் நிலைகள் கொண்டு அதிலேயும் தொட்டுக் காண்பித்து
5.அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறு பதிந்த நிலைகள் கொண்டு நீங்கள் ஞானிகளை எண்ணும் போது அது விளைந்து உங்களுக்குள் சேர்ந்த தீய உணர்வுகளைப் பிளந்து உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.

நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அந்த மெய் ஞானியின் உணர்வலைகளை யாம் உங்களுடன் சேர்த்து… (நாம் அனைவரும் சேர்த்து…!) ஏக்க உணர்வுடன் கொண்டு அந்த உணர்வின் தன்மை நாம் கவரப்படும் போது இங்கே பெரும் அலைகளாகக் குவிகின்றது.

சிறு துளி பெரு வெள்ளம் போன்ற நிலைகளில் அனைவரது வலுவின் தன்மை வரப்படும் போது அந்த ஞானிகளின் ஒத்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு நாம் எத்தனை குணங்கள் கொண்டு இருந்தாலும் அதை மறந்து மெய் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைக் கூட்டி அந்த உணர்வின் தன்மை விளையச் செய்கின்றோம்.

1.யாம் சொன்ன முறைப்படி இந்தத் தியானத்தை மேற்கொண்டு
2.தீயவை எவையானாலும் அது நினைவில் வராது
3.மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குள் பெற வேண்டும் என்று ஏங்கும் போதெல்லாம் அதைப் பெறச் செய்து
4.அருள் உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையச் செய்து
5.உங்களை ஆட்டிப் படைக்கும் உணர்வைச் சிறுக்கச் செய்து
6.அந்த மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள் வளரச் செய்வதற்கே இதைச் செய்கின்றேன் (ஞானகுரு).

ஆகவே உங்களுக்குள் இருக்கும் ஈசனிடம் எந்த எண்ணத்தைக் கொடுக்கின்றீர்களோ அதைத்தான் உங்களுக்குள் படைக்கின்றான். ஆகவே உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.

அனைத்துக்கும் பாத்திரமாகி அனைத்தையும் அணைத்துக் கொண்டு நினைவு கொண்டு இயக்கும் சக்தியாக நம் கண்கள் (கண்ணன்) இருக்கின்றது.

உங்கள் கண்ணின் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அவர்கள் ஆற்றல்களை உயிர் வழியாகக் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது உடலுக்குள் ஒளி பெறும் உணர்வின் அணுக்களாக விளைகின்றது.

ஈசனுடன் ஒத்த நிலையாக அந்த உணர்வின் ஒளிச் சரீரமாக மாறுகின்றீர்கள். அதைப் போன்ற நிலைகள் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்க்கின்றேன்.

கம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE) அதைச் சீராக இயக்குகின்றது – அதுபோல் மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் “மெய் ஒளியைச் சீராக உங்களுக்குள் காணலாம்”

Image

Computer

கம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE) அதைச் சீராக இயக்குகின்றது – அதுபோல் மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் “மெய் ஒளியைச் சீராக உங்களுக்குள் காணலாம்”

மனிதர்கள் தனக்கு வேண்டியதை டைப் (TYPING) செய்து ஒரு கம்ப்யூட்டரில் ஆணையிட்டு (COMMAND) விடுகின்றார்கள். இன்னென்ன நிலைகள் தான் என்று ஆணையிட்டவுடனே அந்த உணர்வலைகள பதிவாகி (RECORD) விடுகின்றது.

உதாரணமாக குளிரூட்டக் கூடிய ஒரு இயந்திரத்தில் இவ்வாறு ரெக்கார்ட் செய்து வைத்து இயக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அங்கிருக்கும் சீதோஷ்ண நிலை (CLIMATE) மாறுகின்றது… “வெயில் அதிகமாகிறது” என்ற இந்த உணர்வின் அலைகள் வந்தவுடனே அந்த மாற்றத்திற்குத் தகுந்த மாதிரி உடனே அந்தக் கம்ப்யூட்டர் என்ன செய்கின்றது…?

அதைச் சமப்படுத்துவதற்கு உடனே ஒரு சுவிட்சை மாற்றுகின்றது. அலை வரிசை மாறி அந்தக் குளிர்ச்சியாக்கும் (COOLING) நிலையைத் தட்டி விட்டுவிடுகின்றது. தானாக அவ்வாறு இயக்கிக் காட்டுகிறது.

மனிதன் அவன் கண்டுபிடித்த இயந்திரத்தில் எது பதிவு செய்யப்பட்டதோ அதற்குத் தகுந்த மாதிரி அது இயங்கி சீராக (AUTOMOATIC) வேலை செய்கிறது. ஆக எது பதிவோ அது தான் இயக்குகின்றது.
1.இயந்திரத்தில் எப்படியோ அது போல் தான்
2.மனிதருக்குள்ளும் நாம் எதைப் பதிவாக்குகின்றோமோ அது தான் நம்மை இயக்கும்.
3.இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உதாரணமாக அண்ணனும் தம்பியும் ஒரு கல்லூரியில் படிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அண்ணன் பொறியியல் படிக்கின்றார். தம்பி வேறு ஒரு துறையைப் படிக்கின்றார்.

அப்பா… தம்பிக்கு மட்டும் பணம் அதிகமாகக் கொடுக்கின்றார். எனக்கு மட்டும் கொடுக்க மாட்டேன் என்கிறார். நான் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டி இருக்கின்றது. ஏதாவது அவசரத்திற்குக் கேட்டால் கொடுக்க மாட்டார் என்று அண்ணன் கொஞ்சம் முறைத்துக் கொண்டு வந்தால் போதும்.

இந்த உணர்வு உடலுக்குள் அதிகமாகக் கலந்துவிடும். அப்புறம் இன்ஜினியர் படிப்பு என்ன ஆகிறது…? என்று பார்த்துக் கொள்ளலாம். பணம் தரவில்லை என்கிற பொழுது அதனால் சண்டையாகிவிடும்.

ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்றார் என்று இதையே அண்ணன் வளர்த்துக் கொண்டு வருவார். தம்பிக்குப் பணம் கொடுக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் விளைந்து கொண்டே வரும்.

வெறுப்பின் தன்மை அதிகமாகும் பொழுது கடைசியில் படிப்பில் மட்டம் ஆகிவிடுவார். அப்புறம் பரீட்சைக்குப் போனால் எல்லாம் கோட்டை விட்டுக் கொண்டே இருப்பார். இன்ஜினியராகத் தேறி வர முடியாது.

ஆனால் தம்பியோ அப்பா சொல்லைக் கேட்டு… “எப்படியும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த உணர்வின் தன்மை பதிவாகி அது அவருக்குள் விளையும் பொழுது அவர் தேர்ச்சி ஆகி வந்து விடுவார்.

அதைப் போன்று தான் யாம் (ஞானகுரு) மெய் ஞானிகளைப் பற்றி உபதேச வாயிலாகச் சொல்லிக் கொண்டு வரும்போது நீங்கள் இதைக் கூர்ந்து கவனித்து ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது அந்த ஞானிகள் உணர்வு இயக்கி உங்களை நல்லதாக்கும்.

1.என்னமோ சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டு இருக்கின்றார் என்கிற வகையில் சாதாரணமாக எண்ணிக் கொண்டோ…
2.அவசர வேலையாகப் போக வேண்டும் என்ற நிலையிலோ…
3.யாராவது தவறு செய்கின்றார்கள் என்றால் அவர்களைப் பற்றி எண்ணிக் கொண்டோ…
4.கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே “நேரமாகி விட்டதே…!” சீக்கிரம் முடித்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இருந்தால்
5.”பரவாயில்லை…!” என்கிற நிலையில் அது தான் முன்னணியில் நிற்கும்.
6.அதாவது அந்த ஞானியின் அருள் சக்தியைப் பெற விடாமல் “உங்கள் உணர்வு அதைத் தடுக்கின்றது…!” என்று பொருள்.

யாம் கொடுக்கும் உபதேச உணர்வை எந்த எண்ணத்தில் எண்ணி உங்களுக்குள் கலக்கின்றீர்களோ அந்த நிலை தான் உங்களுக்குள் பதிவாகும். ஏனென்றால்
1.பதிவு இல்லை என்றால் “எதையுமே” நினைவுக்குக் கொண்டு வர முடியாது.
2.நினைவு இல்லை என்றால் நாம் சக்தியைப் பெற்று வளர்க்க முடியாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக ஒவ்வொன்றையும் எமக்குள் பதிவாக்கித் தான் மெய் ஞானிகளின் ஆற்றலைப் பெறச் செய்தார். அதை எம்மால் வளர்த்து உங்களுக்கும் தெளிவாகச் சொல்ல முடிகின்றது.

உங்களுக்குள் அர்த்தமாகவில்லை என்றாலும் கூட யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஆழமாகப் பதிவாக வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தாலே போதுமானது.

பதிவான உணர்வுகள் (COMMAND) கொண்டு ஒரு கம்ப்யூட்டர் இயங்குவது போல் நீங்கள் நினைவுபடுத்தியவுடன் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குத் தக்க சமயத்தில் ஞானத்தின் அறிவை ஊட்டும்.
1.உங்களை அந்த மெய் வழியில் அழைத்துச் செல்லும்.
2.மெய் ஞானிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்ல ஏதுவாகும்.
3.பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்.

“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக (FREQUENCY) எடுத்துக் கொடுக்கின்றோம் – ஆன்டென்னாவை அவர்கள் பால் திருப்பி மகரிஷிகள் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

Image

sage-station

“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக (FREQUENCY) எடுத்துக் கொடுக்கின்றோம் – ஆன்டென்னாவை (ANTENNA) அவர்கள் பால் திருப்பி மகரிஷிகள் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

இப்போது நாம் சாதாரண மனிதர்களுடன் பேசுகிறோம். பழகுகின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால் பகைமையாகி விடுகின்றது.

ஒருவருக்கொருவர் திட்டி ஏசிப் பேசியிருப்போம். இது நடந்து பத்து வருடம் இருக்கும். அவர்களும் மறந்திருப்பார்கள். நாமும் கூட மறந்து போயிருப்போம்.

பிறகு நாம் இங்கே இருக்கும் போது யாராவது ஒருவர் வந்து பத்து வருடத்திற்கு முன்னாடி உன்னுடன் பழகிய அந்த நண்பரை அங்கே அமெரிக்காவில் பார்த்தேன். ஜெக ஜோதியாக இருக்கின்றார் என்று சொன்னால் என்ன நடக்கின்றது.

அவனா…? அயோக்கியப் பயல்…! அவன் பேச்சை இந்த நேரம் பேசாதே ஐயா…! என் குடும்பத்தைக் கெடுத்தவன்…! என்று கோபமும் ஆத்திரமும் ஜிர்…ர்ர்ர்” என்று வரும். ஏனென்றால்
1.பத்து வருடத்திற்கு முன்னாடி நமக்குள் பதிவானது
2.இந்த செல்களை (உடலுக்குள்) நினைவுபடுத்தியவுடனே இது இயங்க ஆரம்பித்துவிடும்.
3.ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

இதைப்போல மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே இந்த உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் இதை நாம் துடைக்கவில்லை என்றால் மன நோயாகி உடல் நோயாக மாறுகின்றது.

அதி விரைவாகக் கணக்கிடும் சூப்பர் கம்ப்யூட்டர் (SUPER COMPUTER) என்று இன்றைக்குக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள். அதைப் போன்று தான்
1.நமக்குள் என்றோ பதிவு செய்ததை நம் உயிர் என்ன செய்கிறது..?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் (உணர்ச்சிகள்) பூராம் எலக்ட்ரானிக் (ELECTRONIC) இயக்கங்களாக மாறுகின்றது.

அந்தந்தச் செல்களில் மோதியவுடனே ஜீவன் பெற்று அதனின் இயக்கமாக உடனடியாக நம்மை இயக்குகின்றது. அதுவாகவே நம்மை மாற்றிவிடுகின்றது.

சூப்பர் கம்ப்யூட்டருக்கு எப்படி ஆற்றல் வந்தது…? நாம் டி.வி ரேடியோ இதையெல்லாம் தினசரி பார்க்கின்றோம்… கேட்கின்றோம் அல்லவா…!

விஞ்ஞான ஆராய்ச்சிப் பிரகாரம் கண்டுபிடித்து அதற்குள் (டி.வி. ரேடியோ) கெமிக்கல் கலந்ததை முலாமாகப் பூசியிருப்பார்கள். முலாமாகப் பூசியதிலிருந்து வெளி வரும் ஒலி… ஒளிகளைத்தான் நாம் நுகர்ந்து அதைக் கூர்ந்து கவனித்து நமக்குள் பதிவாக்குகின்றோம்.

ஒரு மனிதனைப் பேசச் செய்து அதை இயந்திரத்தில் பதிவு செய்து மீண்டும் இந்த டேப்பை (TAPE) இயந்திரத்தில் போட்டு அந்த அலை வரிசையாக (FREQUENCY) வெளியில் அனுப்புகின்றார்கள்.
1.அந்த அலைகள் வெளி வரும் போது மனிதனுடைய தொடர்பு அல்லாதபடி
2.மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வின் அமில சத்தை
3.இயந்திரத்தில் இருக்கும் கெமிக்கல் கலந்த உணர்வுடன் போகும்போது
4.அதை “ஜீவனற்றதாக…” ஆக்கிவிடுகின்றது.

அந்த உணர்வின் இயக்கத்தின் தன்மை வளர்ச்சி அற்ற நிலையானாலும் கெமிக்கல் கலந்த நிலையாக (செயற்கையாக) மாறி அந்த உணர்வின் சக்தியினுடைய நிலைகலைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொள்கின்றது.

பரப்பிய அலைகளைக் கவருவதற்காக ஒரு ஆன்டென்னாவை (ANTENNA) வைத்திருப்பார்கள். அது எந்தப் பக்கம் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்களோ அந்தத் திசைப் பக்கம் அதைத் திருப்பினவுடனே அந்த ஸ்டேஷன் வருகின்றது.

சென்னையோ திருச்சியோ டெல்லியோ அல்லது மற்ற எங்கிருந்து ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்களோ இந்த ஆன்டென்னாவை அதற்கு நேராக வைக்க வேண்டும். அப்போதுதான் அது எடுத்துக் கொடுக்கும். கொஞ்சம் மாறிப் போனதென்றால் என்ன செய்யும்…? ஒன்றும் வராது.

இதே மாதிரித் தான் நம் உடலில் பதிவு செய்த இந்த நிலையை அவர் அமெரிக்காவில் இருக்கின்றார்…! என்று இவர் சொன்னவுடனே
1.இவர் நினைவின் அலைகள் கண்ணில் வந்து
2.ஆன்டென்னாவில் (கண்களில்) பவர் கூட்டும்போது
3.ஆ…! அப்படியா…! என்று இந்த உணர்வை இழுத்து
4.அந்த உணர்வின் அலையை இங்கே இயக்கச் செய்து அவனை “அயோக்கியன்…!” என்று பேச வைக்கின்றது.

அதே உணர்ச்சியின் வேகத்தில் அயோக்கியன் என்று பேசினாலும் இந்த உணர்வின் தன்மை ஏற்கனவே எந்தச் சண்டை முறைகளைச் செய்தார்களோ அந்த உணர்வின் சக்தி உடலில் விளைந்துவிடும்.

இதைத் தடுப்பதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்த மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகளை இந்த உபதேச வாயிலாக “ஒரு ஸ்டேசனாக (FREQUENCY) உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
1.அதைத் திரும்பத் திரும்ப உபதேசித்து
உங்கள் உடலிலுள்ள எல்லா செல்களிலும் பதிவாக்கி விடுகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிரமங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்களின் நினைவை (ANTENNA) விண்ணிலே நினைவினைச் செலுத்துங்கள்.
1.சப்தரிஷி மண்டலம் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வின் அலைகள்
2.இப்பொழுது உங்கள் ஈர்ப்புக்குள் வரும்.

உங்கள் உயிரிலே பட்டவுடன் அந்த ஞானிகள் தீமையை நீக்கிய உணர்ச்சிகள் உங்களுக்குள் இயக்கி உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் சேரும் பொழுது ஏற்கனவே உருவான தீமையான உணர்வின் இயக்கங்களை அடக்கி அதை நன்மை செய்யும் ஆக்க பூர்வமான சக்தியாக அதை மாற்றிவிடும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் ஞானத் தொடர்பை
1.அந்த ஸ்டேசனை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
2.இருந்த இடத்திலிருந்தே எத்தகைய தீமைகளையும் உங்களால் நீக்க முடியும்.
3.மற்றவர்களுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்ட முடியும்.
4.மெய்ப் பொருள் காண்பீர்கள். மெய் ஒளி பெறுவீர்கள்…!

எமது அருளாசிகள்.

மெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும் தெரியாதவர்களே…! – ஒன்றும் தெரியாதவர்களே மெய் ஞானியாகும் பொழுது நம்மால் ஆக முடியாதா……?

Image

Kumara guru

மெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும் தெரியாதவர்களே…! – ஒன்றும் தெரியாதவர்களே மெய் ஞானியாகும் பொழுது நம்மால் ஆக முடியாதா……?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகளின் அருள் வித்தாக உங்கள் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே இதைக் கேட்ட அன்பர்கள் அனைவருக்குள்ளும் உங்கள் உடல்களில் வீரிய சத்தாகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். அதே சமயத்தில் புதிதாக இதைப் படிப்போர் உள்ளத்திலேயும் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இதையெல்லாம்… “நாம் என்றைக்குத் தெரிந்து எடுக்கப் போகின்றோம்…? நம்மாலே முடியுமா…! என்று விரக்தியான எண்ணங்களை எடுத்து விட்டால் அவர்கள் உள்ளங்களிலே இது பதிவு ஆவது மிகவும் கடினம்.

1.சாமிகள் (ஞானகுரு) சொல்லும் தத்துவம்… அது மிக மிகப் பெரியது..!.
2.அதை எப்படி நாம் முழுவதும் அறிவது…? என்ற நிலையை எண்ணினால்
3.அதனுடைய நிலைகள் தனக்குள் “கதவடைத்த நிலையும்”
4.தன்னை அறியாத நிலையையும் தான் உருவாக்கச் செய்கின்றது.

விஞ்ஞானத்தில் இன்று வெறும் காகிதத்தில் (நாடா) காந்தப் புலனின் அறிவைக் கூட்டி மற்றதை ஈர்த்துப் பதிவாக்கும் தன்மையை ஏற்படுத்தி கம்ப்யூட்டர் (ELECTRONIC) மூலம் படத்தையோ ஒலிகளையோ மற்றவைகளையோ இணைக்கப்படும் பொழுது அதிலே பதிவாகின்றது.

மீண்டும் அதிலே காந்த ஊசியை வைத்த பின் அதிலே பதிவான உணர்வின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

நாம் படித்துணர்ந்து அறிந்தவர்கள் ஒரு பாடலை நாம் பாட வேண்டும் என்றால் நம்மால் உடனே முடிவதில்லை. ஆனால் ஒன்றுமறியாத இரண்டு வயதுக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்மையாக இரண்டு தரம் மூன்று தரம் கவனித்தால் போதும்.
1.அந்தப் பாடல்கள் பதிந்துவிடும்.
2.பின் அந்தப் பாடலைப் பாடு…! என்றால் அது அதன் வழியே தெளிவாகப் பாடும்.

குழந்தைகளிடம் வேறு சிந்தனை இல்லாததால் அறியாத பிஞ்சு உள்ளங்களிடம் இருக்கக்கூடிய அந்தக் காந்தப் புலனின் அறிவுகள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகளை அப்படியே கவர்ந்து பதிவாக்கி விடுகின்றது.

அத்தகைய குழந்தைகள் உள்ளங்களில் மெய் ஞானியின் அருள் வித்துகள் சுலப நிலைகளில் பதிவாகின்றது.

ஆனால் வளர்ந்து பெரிய மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் பல புத்தகங்களைப் படிக்கின்றோம். படித்துணர்ந்த நிலைகள் கொண்டு
1.நாம் இதைப் பெற முடியுமா…?
2.இது மிகப் பெரிய விஷயமாயிற்றே…!
3.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இதை எப்படிப் பெற முடியும்…? என்ற உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
4.அந்த உணர்வின் செயலாக்கத்தில் தான் நாம் செல்ல முடியும் – இந்த எண்ணமே நம்மைத் தடைப்படுத்திக் கொண்டிருக்கும்…!

படிப்பது எதற்கு…? மெய் உணர்வைக் காணுவதற்குத்தான். ஆனாலும் மெய் ஞானிகள் அனைத்தும் “ஒன்றுமறியாதவர்கள் தான்…!” அவர்கள் உடலிலே பதிவான உணர்வுகளே அவர்களை இயக்கி மெய்யை அறியும்படியும் உணரும்படியும் செய்தது.

ஆகவே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வேட்கையின் நிலைகள் கொண்டு பல புத்தகங்களைப் படித்தோர் உள்ளங்களில் இது பதிவது மிகக் கடினம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தாலும் அதைத் தகர்த்துவிட்டு குழந்தை உள்ளங்கள் போன்று உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
1.மெய் ஒளி பெறவேண்டும் என்ற ஏக்கத்தைச் செலுத்துங்கள்.
2.மெய் ஒளியின் தன்மையைச் சமத்துவப்படுத்துங்கள்
3.மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் பதியச் செய்யுங்கள்.

பதிந்த அந்த உணர்வின் தன்மை கொண்டு மகரிஷிகளின் அருளாற்றலைப் பெருக்குங்கள். மெய் ஞானிகள் காட்டிய அருள் வித்தின் ஞானத்தை நீங்கள் காணலாம்.

உங்கள் சொல்லுக்குள் இனிமை காணலாம். உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய துன்பத்தைப் போக்க இது உதவும். “உங்களை நீங்கள் நம்புங்கள்…!”

ஆகவே மெய் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கும் ஒவ்வொரு நிலையையும் உங்களுக்குள் பதிவு செய்யும் ஏட்டாக நினைத்துப் பதிவாக்கிக் கொண்டால்
1.மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
2.அந்த ஆற்றல் மிக்க சக்திகளை உடனுக்குடன் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
3.அதனின் வளர்ச்சியில் நீங்கள் மெய் ஞானியாகின்றீர்கள்.

இது மனிதனால் சாத்தியமாகக்கூடியது தான்…!