போர் முறை கொண்டு மற்றவரைத் தாக்குவதைக் காட்டிலும் “எண்ணத்தின் வலிமை கொண்டு செயல்படுத்துவதே மிகவும் வலிமையானது…!”

THOUGHT POWER OF MAN

போர் முறை கொண்டு மற்றவரைத் தாக்குவதைக் காட்டிலும் “எண்ணத்தின் வலிமை கொண்டு செயல்படுத்துவதே மிகவும் வலிமையானது…!”

 

வான்மீகியினுடைய உணர்வைத் தனக்குள் பதிவு செய்த காந்திஜி சாந்ந குணத்தின் வலிமை பெற்றார். சாந்தத்தின் வலிமை கொண்டே நம் நாட்டின் சுதந்திரத்திற்காகச் செயல்பட்டார்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட வேண்டும். நாடு காக்கப்பட வேண்டும். மக்கள் காக்கப்பட வேண்டும். மனிதப் பண்புகள் வளர வேண்டும். நாட்டை ஆளும் அரசுக்குள் பகைமை வரக் கூடாது. உயர்ந்த பண்புகளினுடைய நிலைகள் அரசியலில் வளர வேண்டும் என்று தான் எடுத்துரைத்தார்.

1.இவரின் வலிமையான உணர்வுகள் தான் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் எண்ணத்திற்குள் ஊடுருவி
2.பகைமை உணர்வை மறக்கச் செய்து
3,இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

அன்று பட்சியின் பாச உணர்வுகள் வான்மீகியின் உடலுக்குள் ஊடுருவி அந்தப் பாச உணர்ச்சியைத் தூண்டி அவன் செய்யும் கணைகளை எய்ய முடியாது தடுத்து தவறு செய்யும் கொலைகாரனையும் கொலையற்றவனாக மாற்றியது.

அதைப் போல இளம் வயதில் தவறான வழியில் நடந்த காந்திஜியும் சந்தர்ப்பத்தால் (தென்னாப்பிரிக்காவில் தீமையால் வாடும் மக்களைக் கண்டபின்) வான்மீகியின் உணர்வை நுகரப்படும் பொழுது தனது உடலுக்குள் வந்த தீமையின் விளைவிலிருந்து மீட்டினார்.

அரசியல் நிலைகளில் மக்களை வாட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டிடும் உணர்வுகள் பெறவேண்டும் என்று வான்மீகியின் உணர்வுகள் கொண்டு சாந்த குணத்தின் வலுவை ஒவ்வொருவருக்கும் உணர்த்தினார்.
1.பகைமை கொண்ட குணங்களை நாம் ஏன் வளர்க்க வேண்டும்…?
2.பண்பு கொண்ட உணர்வுகளைத்தான் வளர்க்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைத்தான் எல்லோருக்குள்ளும் வளர்த்தார்.

இவரின் நினைவின் நிலைகள் இவ்வாறு வளர வளர ஆங்கிலேயர்களுக்கும் இதை உணரத் தொடங்கினார்கள். அவர்கள் இந்த யுத்தம் முடிந்தால் உனக்குச் சுதந்திரம் கொடுக்கிறேன் என்றனர். யுத்தமும் முடிந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றது.

காந்திஜி தன்னம்பிக்கை கொண்டு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார். தன் உடலையும் அர்ப்பணித்தார். உலகையே சிந்திக்கும்படி செய்தார்.

ஆனால் சுபாஷ் சந்திர போஸ் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற முடியும் என்று செயல்பட்டார். இவர் போர் முறைகள் எடுக்கப்படும் போது பிரிட்டனின் ஐந்தாம் படைகள் அவரைச் சூழ்கின்றது. அதிலிருந்து தப்பித்து ஜப்பான் சென்றார்.

அன்று ஜப்பானும் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று முயற்சித்தார்.

அந்தச் சமயத்தில் பிரிட்டனுக்கு எதிரியாக இருக்கக்கூடிய ஜெர்மனியும் அதை வரவேற்றது. படைகளையும் ஆயுதங்களையும் கொடுத்து உதவியது. மீட்ட முடிந்ததா…? சுதந்திரம் பெற முடிந்ததா…? என்றால் இல்லை.

இவ்வாறு சுபாஷ் சந்திர போஸ் நாட்டின் நிலைகள் வலிமை கொள்ள வேண்டும் என்று அவர் தன் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.காந்திஜி அவருடைய நிலைகள் திருந்த வேண்டும்…
2.பண்பு கொண்டு உணர்வுகள் அங்கே வளர வேண்டும்.
3.போர் செய்து மற்றோரை மடக்கி விடக்கூடாது.
4.போர் என்ற நிலையில் “எதிரி…” என்ற நிலையைத் தனக்குள் வளராதபடி
5.பண்பு கொண்ட.உணர்வுகள் வளர வேண்டும் என்றார்.
6.அவருடைய உணர்வின் வலிமையால் நாடு சுதந்திரம் பெற்றது.

ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று இருக்கிறதா…? இது அறியாத மக்கள் இன்று நாம் என்ன செய்கின்றோம்…?

சுக போகத்தை அனுபவிக்கும் நிலைகளும் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்யும் நிலைகளும் உண்மையின் உணர்வுகளை உணராது மக்களின் பண்புகளை அறியாது ஞானிகள் காட்டிய பண்புகளை இழந்து செயல்படும் நிலை தான் உள்ளது.

1.வலிமை கொண்டு மற்றோரை அடக்கி ஆட்சி புரியும் நிலையாக அன்று பிரிட்டன் எதைச் செய்ததோ
2.அதே உணர்வின் தன்மை தான் இன்று மக்கள் மத்தியில் வந்து
3.மக்கள் ஆட்சி என்ற நிலைகள் கொண்டாலும் மக்களை அடக்கும் மக்களாக வந்து
4.அசுர உணர்வு கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளது.

தன் அருகிலே இருப்பவர்களை இரக்கமற்றுப் பண்பு கெட்டவர்களாக மாற்றுகின்றோம் பண்புள்ளவராக இருந்தாலும். பண்பு கொண்ட நிலைகளை மாற்றி விட்டுப் பகைமையை ஊட்டுகின்றோம்.

அன்று காந்திஜி எப்படி வான்மீகியின் உணர்வைத் தனக்குள் எடுத்து எதை எடுத்தாலும் ஹரே ராம்… ஹரே ராம்…! என்றார். ராமா… ராமா… என்றால் நம்முடைய எண்ணங்கள் தான் அவ்வாறு வருகின்றது.

ஆகவே அத்தகைய சாந்த குணங்களை நாம் சுவாசித்தோம் என்றால் சீதாராமா. இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். அதாவது
1.எந்த குணத்துடன் நாம் பேசுகிறோமோ
2.அந்த உணர்வே நமக்குப் பதிலாக வரும்.
3.மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் வந்தால்
4.அந்த உயரும் எண்ணமே நமக்குத் திருப்பி வரும்.
5.பண்பின் தன்மையாக அந்த பேரன்பின் தன்மை வளரும்.

ஆகவே இன்று நாம் வாழும் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீள காந்திஜியின் நினைவு கொண்டு மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்…!

கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

Image

God exists

கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

 

இன்று சினிமாக்களில் காட்சிப் பொருளாக வேஷமிட்டு அதன் உணர்வை நிஜமாக நடப்பது போல் காட்டுகின்றார்கள். நாமும் பார்க்கின்றோம். அந்த உணர்வை வளர்க்கவும் செய்கின்றோம்.

அதைப் பெறுவது போல மதங்களின் அடிப்படையில் தெய்வங்களை வணங்கி அதற்குண்டான சாங்கியங்கள் சாஸ்திரங்கள் செய்து அதை வளர்த்துக் கொண்ட பின் மனிதன் மடிந்தால் என்ன ஆகின்றது…?

மனித உணர்விற்குள் மதத்தால் இனத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் தன்மைகள் கொண்டு
1.உருவமாகத் தெரிவதைக் கவரப்படும் பொழுது
2.அது அருவ நிலைகளாக மனிதனுக்குள் விளைந்து
3.அதே உணர்வின் இயக்கமாகக் கடவுளாகக் காட்டுகின்றது.

எந்தெந்த குணத்தின் உருவமாக அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் பூஜித்து வணங்கினார்களோ அந்த உணர்வின் செயலாகவே செயல்படுகின்றது. மற்றவர்களுக்குள் அந்த உணர்வின் அலைகள் வந்து காட்சியாகவும் தெரிகின்றது. அது உண்மையான கடவுள் அல்ல.

ஆகவே மனிதனைப் பேணிக் காக்கும் உணர்வின் தன்மையை அந்த உயர்ந்த குணங்களை எடுத்து அவன் உயர வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால் அதன் உணர்வே உன்னைத் தெளிவாக்கும் என்று இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.

அவர் சீடரான விவேகானந்தரும் அதைத் தான் செய்தார். நீ தெய்வமாக வேண்டும் என்றால் உயர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்கள் – அவர்கள் உயர்ந்து வாழ வேண்டும் என்று நீ எப்பொழுது எண்ணுகின்றாயோ அன்று நீ மனிதன் என்ற நிலையை அடைகின்றாய்.

அதுவே உன்னை உயர்வாக்கும் உணர்வின் நற்குணங்களாக உனக்குள் வளரும். உன் சொல்லும் பிறரை உயர்வாக்கும் நிலைகள் பெறும். ஆகவே
1.ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக நீ மதி
2.கடவுள் வீற்றிருக்கும் அந்த உடலில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நீ எடுத்து வளர்த்துக் கொள்
3.அந்த எண்ணமே உனக்குள் தெய்வ சக்தியாகச் செயல்படும்
4.அப்பொழுது அங்கே கடவுளாகின்றாய்…! என்ற உணர்வினை விவேகானந்தர் தெளிவாக்கியுள்ளார்.

ஒருவருக்கொருவர் பண்புடன் ஈகையுடன் மற்றவர்களுக்கும் உணவருந்தச் செய். அந்தப் பண்பினை வளர்த்தால் அதுவே உயர்ந்த நிலைகளாக உனக்குள் கடவுளாக வளர்கின்றது. அப்பொழுது நீயே அவனைக் காப்பவனாக ஆகின்றாய்.

அன்பு கொண்டு பிறரை உயர்த்தும் மார்க்கத்தில் ஒருவருக்கு இல்லை என்றால் “கொடுத்து உதவு…!” என்று தான் இயேசுவோ நபிகளோ ஏனைய மகான்கள் அனைவரும் சொல்லியுள்ளார்கள்.

உயர்ந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்து பகைமையிலிருந்து மீள வேண்டும். எல்லோருக்கும் சேவை செய்யும் பண்புகள் வர வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் கொண்டு ஏழ்மையில் வாடுகின்றவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும். அவர்களையும் உயர்த்திடும் நிலைகள் கொண்டு வளர்க்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கி விட்டால் அதுவே கடவுளாக நின்று செயல்படும்…! என்று குருநானக் சொன்னார்.

ஆனால் இவை எல்லாமே பின்னாடி மதமாக்கப்பட்டு மதத்தின் நிலைமை கொண்டு பகைமைகளை உணர்த்தி அதற்குள் மதப் பித்து கொண்டு அந்த மகான்களின் தத்துவத்தையே மாற்றிவிட்டு மதப்போர் இனப்போர் என்று நடந்து கொண்டுள்ளது.

ஆனால்
1.உயர்ந்த குணங்களே மனிதர்களை ஆளுகின்றது.
2.அதை நீ ஆண்டவனாக வணங்கு…! என்று தான்
3.அன்று தோன்றிய மகான்கள் அனைவருமே சொல்லியுள்ளார்கள்.
4.யாரும் மதத்தை உருவாக்கவில்லை.

உயர்ந்த குணம் கொண்டு ஒருவொருக்கொருவர் காக்கும் நிலையைத்தான் “கடவுள்…!” என்று அந்த நிலையை உருவாக்கினார்களே தவிர அதை அரசியலாகவோ மதமாகவோ இனமாகவோ ஆக்கவில்லை.

இதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…!

ஞானிகள் சொன்ன சிரச்சேதமும்… அரசர்கள் செய்த சிரச்சேதமும்…!

Image

Punhment by rishis

ஞானிகள் சொன்ன சிரச்சேதமும்… அரசர்கள் செய்த சிரச்சேதமும்…!

1.மனிதனுக்குள் பண்பற்ற நிலைகள் செயல்படுவதை நிறுத்திவிட்டுப் பண்புடன் இயக்கப்பட வேண்டும்.
2,சகோதர உணர்வுகள் உருபெற வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இரக்கமான செயல்கள் கொண்டு வர வேண்டும்
4.மனிதன் என்ற பண்பில் இயங்க வேண்டும் என்று தான் மதங்கள் அனைத்துமே கூறுகின்றது. எதிலும் குறை இல்லை.
5.ஆனாலும் அன்று மகான்கள் கூறிய இந்தத் தத்துவங்களை அரசர்கள் தனித்தன்மை வாய்ந்ததாகக் கொண்டு சென்றார்கள்.

மகான்கள் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி இருந்தார்கள். அந்த மகான்கள் காட்டிய நிலைகளை அரசர்கள் தன் மதம் என்ற நிலைகளில் உருவாக்கிக் கொண்டார்கள்.

அதே சமயத்தில் அந்த மகான்கள் செய்ததைக் (சொன்ன தத்துவங்கள்) காக்கப்பட வேண்டும் என்பதற்காக அதைத் தவறுவோர் எவரோ அவர்களுக்குக் “கடும் சிரச்சேதம்…! என்று உலக மதங்கள் எல்லாமே கூறுகின்றது.

“சிரச்சேதம்…” என்ற ஒரு தண்டனையை அன்று ஆண்ட அரசர்கள் பிறருக்குக் கொடுத்தார்கள் ஏன்…? ஞானிகள் சொன்ன சிரச்சேதம் எது…?

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைத் தடுப்பதற்காக
2.மகான்கள் காட்டிய அறநெறியின் உணர்வை நமக்குள் உட்புகுத்தி
3.அந்தத் தீமைகளைச் செயலற்றதாக மாற்றுதல் வேண்டும்.
4.அந்தத் தீமைகள் நம்மை இயக்காது தடுத்தல் வேண்டும் என்று தான் சொன்னார்கள்.
5.இது தான் அந்த மகான்கள் கூறிய உண்மை நிலைகள். (அதாவது தீமையான உணர்வுகளுக்குள் மகானின் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சி அதைச் செயலற்றதாக – சிரச்சேதம் செய்யச் சொன்னார்கள்)

ஆனால் அவர்கள் சொன்னதை அரசர்கள் தனக்குள் பிடிவாதமாக வைத்துக் கொண்டு மகான்களின் செயலை மாற்றித் தன்னைச் சுகபோகவாசியாக அமைத்துக் கொள்ள அரசர்கள் பெரும் பிழைகளைச் செய்து விட்டார்கள்.
1..மக்களை நல்ல வழியில் வழி நடத்தும் அந்த ஞானத்தை அவர்கள் காக்கும் வழி அற்று
2.மற்றதைப் பழி தீர்க்கும் உணர்வாகக் கொண்டு சென்று அதைச் செயலாக்கினார்கள்.

மாற்று மதங்கள் (மதத்தினர்) வந்தால் அவர்கள் கடவுள் வேறு… நமது கடவுள் வேறு…! என்று இப்படித் திரிபு பண்ணி விட்டார்கள். சரித்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்
1.மதத்தின் அடிப்படை வைத்துத் தான்
2.உலகப் போர்கள் அனைத்தும் நடந்து உள்ளது.

மதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்த (எங்கள்) மதத்தில் நல்ல ஒழுக்கங்கள் உண்டு. இந்தக் கடவுள் எங்களுக்குச் சரியான உத்தரவு கொடுத்துள்ளார். அதன் வழிகளில் தான் நாங்கள் நடக்கின்றோம் என்று சொல்வார்கள்.

இப்படிச் சொல்லி அடுத்த நாட்டின் மக்களை எல்லாம் போர் முறையில் அடிமையாக்கிக் கொண்டு தன்னுடன் இணைந்து செயல்படுவதற்காக அந்தத் தத்துவத்தை அங்கே புகுத்துகின்றார்கள்.

இன்றைய உலகம் அந்த அரசர்கள் முன் மொழிந்த தத்துவத்தில் தான் அடிமைப்பட்டுக் கொண்டுள்ளது. ஞானிகள் சொன்ன தத்துவப்படி நல்ல பண்புகளை வளர்க்காதபடி மற்றவரை அடிமைப்படுத்தும் நிலையாகவே சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமா இல்லையா…? மகான்கள் காட்டிய வழியில் தெய்வீகப் பண்புகளை வளர்க்க வேண்டுமா… இல்லையா… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஐயப்பன் உரைத்த பதினெட்டாம்படியின் தத்துவம்

Image

Lord Ayyappa

ஐயப்பன் உரைத்த பதினெட்டாம்படியின் தத்துவம்

 

பதினெட்டாம் படி என்றால் வழுக்கி விடும் நிலைகள் பெற்றது.
1.உயர்ந்த குணத்தை எவ்வாறு சிரசில் ஏற்றி
2.பொறுமையாக அந்தப் பதினெட்டாம்படியில் எவ்வாறு ஏற வேண்டும் என்ற தத்துவத்தைக் காட்டுவது தான் “ஐயப்பன் கோவிலின் தத்துவமே…!”

ஐயப்பன் ஒரு தவயோகி. தவயோகி என்று சொல்வதற்கு முன் அவர் ஒரு அரசன். பல அரச போர்களைச் செய்து அதனின் நிலைகளிலிருந்து விடுபட்டவர். இருப்பினும் கூடுவிட்டுக் கூடு பாயும் நிலைகளைத் தனக்குள் கற்றுணர்ந்தவர்.

அன்று முகமதியர் படையெடுத்து வரும் போது உடலின் தன்மைகள் மடியப்படும் போது அவர்களுடைய பெருக்கம் இந்த நாட்டிலிருப்பதைத் தடைபடுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு குழந்தையிந் உடலுக்குள் செல்கிறார்.

ஏனென்றால் அக்காலங்களில் இனத்திற்குள் இனம் பல போர் முறைகள் ஆகித் தன் தன் சுயநல்னுக்காகச் செயல்படும் பொழுதுதான் அரசுகள் சீர்குலைந்தது. ஆகவே
1.எது எது பெருகுகின்றதோ… அப்படிப் பெருகும் நிலைகள் கொண்டு
2.எது எது விளைகின்றது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் நல்லது (அதற்குத்தான் இதைச் சொல்வது)

குழந்தையின் கூட்டுக்குள் சென்று நீரிலே மிதந்து வந்து… குழந்தையில்லாத அரசன் கையிலே சிக்கி அங்கே பல சித்துக்களைச் செயல்படுத்துகின்றார் ஐயப்பன்,

தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டும் என்ற உணர்வின் தன்மை கொண்டு தன் இனம் எதுவோ அதைக் காத்துக் கொள்ளவும்… தன் அரசை நிலைத்துக் கொள்ளச் செய்வதற்காகவும்… கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினார்.

உதாரணமாக ஓர் சினிமா நடிகராக இருக்கிறேன் என்றால் ஐயப்பனுக்காக நான் சில பொருள்களைக் காணிக்கை செய்யப் போகிறேன்…! என்று அங்கே போகின்றார்கள். ஆனால்
1.அவர் செய்த பிழைகள் எதுவாக இருப்பினும்
2.மற்றவர் மத்தியிலே புகழ் தேடும் நிலைகளுக்காக
3.ஐயப்பனுக்குக் காணிக்கை செலுத்தப் போகின்றேன் என்று பறைசாற்றுகின்றார்கள்.

உடனே புகழ் பெற்ற ஒரு நடிகர் “ஐயப்பனைத் தரிசிக்கச் செல்கிறார்…!” என்று சொல்லிக் கொண்டு அவருக்குப் பின் பலரும் அங்கே செல்லத் தொடங்குகிறார்கள். அந்த நடிகர் செய்த அதே இச்சையைத் தான் மற்றவர்களும் கவர நேர்கின்றது.

நடிகர் செல்கிறார்…..! என்றால் அதன் வழிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் அதன் தொடர் வரிசையில் இருக்கக்கூடிய தொழில் செய்வோரும் பின்னாடி சென்று அவருக்கு இணக்கமாக நடந்தால் அதன் வழிகளில் “நமக்கும் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும்…!” என்று இதைப் பெருக்க எண்ணுகின்றார்கள்.

ஆனால் அன்று அந்தத் தத்துவ ஞானி பல போர் முறைகளின் தன்மை கொண்டாலும்
1.அஷ்ட திக்கிலிருந்து வரக்கூடிய இருள் சூழும் நிலைகள் எதனை அழித்துக் கொண்டு உள்ளது…?
2.மனிதனின் உயர்ந்த குணத்தை அது எவ்வாறு இழக்கச் செய்கின்றது…?
3.அஷ்ட திக்கிலும் பல நிலைகளில் பல முறைகளில் பல கோணங்களில் மனிதனை அது எப்படி மாற்றுகின்றது…?
4.அத்தகைய உணர்விலிருந்து ஒவ்வொருவரும் எவ்வாறு விடுபட வேண்டும்…?
5.தன் மக்களை எவ்வாறு மீட்ட வேண்டும்…? என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மையை எவ்வாறு அது பெருக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

ஏனென்றால் அநாகரிக நிலைகள் கொண்டு மற்ற மதத்தின் தன்மை நம் நாட்டிலே படையெடுத்து வந்தது. “அதற்குள் நாம் அடிமையாகி விடக்கூடாது…!” என்பதற்காக மன வலுவைக் கொடுப்பதற்காகவும் ஒழுக்க நெறியைக் கூட்டுவதற்கும் அந்தக் குழந்தை வடிவில் அரசனின் குழந்தையாக நிலைத்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு தீமைகளை அடக்கும் சக்தியைக் கொண்டு வந்தார்.

1.மனித வாழ்க்கையில் எந்தத் தீமைகளும் நுழையாது தனக்குள் வலுபெற்ற அந்த நிலைகள் பெருக்க வேண்டும் என்றும்
2.அஷ்ட திக்கிலிருந்து தாக்கும் உணர்வுகளை அடக்கி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியாகப் பெருக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையாக விண் செல்ல வேண்டும் என்பதே அவர் உரைத்த உண்மைகள்.

அகத்தியரைப் போன்று அகத்தின் ஆற்றலை நாமும் அறிய வேண்டும்

Inner strength

அகத்தியரைப் போன்று அகத்தின் ஆற்றலை நாமும் அறிய வேண்டும் 

ஆரம்பத்தில் விமானத்தைப் புதிதாக உருவாக்கி அதைக் கண்டுபிடித்தவன் அதை வைத்து வானிலே பறக்க முயற்சி செய்த போது அவன் தற்கொலை செய்வதற்காகத்தான் இதை எல்லாம் செய்கிறான் என்று மற்றவர்கள் சொன்னார்கள்.

அவன் கண்டுபிடித்த நிலைகளை எண்ணிப் பார்த்து அவனின் அறிவின் தன்மையை அவர்கள் அப்பொழுது எண்ணவில்லை. அவனுடைய யுக்திகளையும் அறிய முற்படவில்லை.

ஆகவே ஒரு மனிதன் ஒரு உயரிய தன்மைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அவன் சொல்லும் உயர்ந்த தன்மைக்குள் இருக்கும் உட்பொருள் என்ன…? என்று அறிந்து
2.அந்த உயர்வின் சிந்தனைக்கு நாமும் சென்று வந்தால்
3.அந்தச் சிந்தனைக்கொப்ப நம் சொல்லின் தன்மை அமையும்.

ஆனால் அப்படி எண்ணாதபடி குறையான உணர்வை நமக்குள் எடுத்து விட்டால் அந்தக் குறையின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலையே நம் சொல்லுக்குள்ளும் செயலுக்குள்ளும் கலந்து நம் சிந்தனையையே பிரித்துக் காட்டும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு நாம் ஒரு கம்ப்யூட்டரைச் செயல்படுத்துகிறோம் என்றால் ஒரே நிமிடத்தில் நூறு பாஷைகளில் மொழி பெயர்ப்பு செய்கிறது.

அதனுடைய காந்தப்புலன் இயக்க ஓட்டத்தில் அழுத்தத்தை அது செயல்படுத்தும் போது எந்தெந்தப் பாஷை இருக்கின்றதோ அந்த ஒலிக்குத் தக்கவாறு எழுத்துகளை முதலில் உருவமைத்துக் கொள்கின்றது.

அப்போது ஒரே வரிசையில் செல்லப்படும் போது இதனின் அழுத்தத்திற்குத் தக்கவாறு அதை மொழி பெயர்ப்புச் செய்வதும் அதற்கடுத்து
1.அதே எழுத்திற்கு இதனுடைய நிலைகள் இன்னது தான் என்று ஒலி அலைகளைப் பதிவு செய்வதும்
2.ஒரு நிமிடத்திற்குள் அங்கே போய்ப் பாய்வதற்கு முன் மொழி பெயர்ப்பு செய்து நம் கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துகின்றது.

ஆனால் அதை ஒரு மனிதன் மொழி பெயர்ப்பு செய்து அதனின் அர்த்தத்தைக் காண வேண்டும் என்றால் ஒவ்வொன்றாக எடுத்து அத்தனை மொழிக்கும் தனித் தனியாகப் பல தடவைகள் செய்ய வேண்டும்.

ஆனால் பதிவு செய்யும் உணர்வைக் கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்காக அது பதிவு செய்து கொள்கின்றது. ஆணையிட்ட பின் அதன் வரிசையிலே இதனுடைய நிலைகளைத் தெளிவாக்கிக் கொண்டு ஒரு நிமிடத்தில் நாம் அந்தப் பாஷைகளைப் புரிந்து மொழி பெயர்ப்பு செய்து காட்டுகின்றது.

அதே போல வான மண்டலத்தில் சுழலும் கோள்களைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் மற்ற சூரியக் குடும்பங்களையும் இன்று காணுகின்றார்கள். புதிது புதிதாக விண் கற்கள் வருவதையும் பூமிக்கு அருகில் வருகிறது என்றும் பல இயந்திரங்களையும் கருவிகளையும் வைத்துப் பார்த்துச் சொல்கிறார்கள்.

விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு ஒலி/ஒளி அலைகள் அங்கே வரப்படும் போது
1.எத்தனை டிகிரியில் இதனுடைய அலைகள் வருகின்றது…?
2.இதனின் வேக அழுத்தம் எவ்வாறு இருக்கின்றது…?
3.கோள்களின் சுழற்சியின் வேகம் எவ்வாறு இருக்கிறது…?
4.இது நடு மையத்தில் ஊடுருவி நம் சூரியனின் ஈர்ப்பிற்கு வரும் போது இடைமறித்து எந்தக் கோள்களின் பக்கம் சாய்கின்றது…? என்று
5.அதன் நிலைகளைத் தெளிவாகக் கண்டுணர்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் எத்தகைய புறப் பொருளின் உதவிகள் இல்லாமலே அன்றைய மெய் ஞானிகள் வான இயல் சாஸ்திரத்தைக் கண்டார்கள். அதையெல்லாம் மற்றவர்களுக்கும் உணர்த்தவும் செய்தார்கள். அப்படி மெய் ஞான அறிவால் காணக் கூடியதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இப்போது உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

யாம் பதிவு செய்யும் உணர்வுகள் கொண்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் நீங்கள் ஒன்றினால் அதே உணர்வு உங்களுக்குள் பெருகி
1.விஞ்ஞானிகள் கருவியின் நிலைகள் கொண்டு பார்த்துச் சொல்வதை
2.நீங்கள் கருவியின் துணை இல்லாதபடி உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு செல்லும் போது
3.அந்த விண்ணின் அதிர்வலைகளை நீங்களும் நுகர்ந்துணர்ந்து அதன் உணர்வலைகளைக் குவித்து உங்களாலும் சொல்ல முடியும்.

விண்ணிலிருந்து வரும் கற்கள் (ASTEROIDS) நம் பூமியில் விழுந்து விடுமோ…! இன்று விஞ்ஞானிகள் பயத்தால் வெளிப்படுத்தினாலும்
1.அந்த மெய் ஞானி உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளை அங்கே பாய்ச்சி
2.அத்தகைய பாறை திசை திரும்ப வேண்டும்…! என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு ஒரு ஆயிரம் பேர் சொல்வார்கள் என்றால்
3.நாம் பாய்ச்சும் ஒலி அலைகள் “அங்கே குறுக்காட்டி…!” (இடைமறித்து) அதைத் திசை மாற்றவும் உதவும்
4.நம் பூமியில் விழுகாது செய்ய முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்வது உங்களுக்கு எளிதாகத் தெரியும். ஆனால் உங்களுக்குள் அத்தகைய ஆற்றல் உண்டு. அந்த மெய் ஞானிகள் பெற்ற பேராற்றல்களை உங்களாலும் பெற முடியும்… அவர்களைப் போல அனைத்தையும் காண முடியும்…! என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

Image

asdadik balagarkal

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

 

ஆற்றிலே வெள்ளம் செல்கிறதென்றால் அந்த வெள்ளத்தை நாம் விவசாயம் செய்யும் வயல்களிலே பாய்ச்சினால் என்னவாகும்…? வயல்களிலுள்ள பயிர் பச்சைகளை அழித்துச் சென்று விடும்.

அதைப் போல் தான் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆசைகளை நாம் வெள்ளமாகக் கொண்டு சென்றால் அது என்ன செய்யும்…?

நீரினால் ஏற்படும் வெள்ளம் மற்றதை அடித்துச் செல்வது போல்
1.மற்ற எந்தச் சிந்தனைகளும் சீராக வராதபடி
2.எந்த ஆசையை முன்னாடி வைத்தோமோ அந்த வழிக்கே நம்மை
3.மீண்டும் மீண்டும் அதிலேயே ஒரு நிலைப்படுத்திக் கொண்டு போகும்.
4.மற்ற எதையும் சீராக அறியவிடாது தள்ளிவிடும்.

ஆனால் அருள் மகரிஷிகளுடைய உணர்வுகளை நாம் இச்சைப்பட்டு நமக்குள் பெருக்கிக் கொண்டு வந்தால் நம்மை அறியாது சேர்த்த தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

உதாரணமாக ஓர் வெளிச்சத்தை நாம் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கி மறைந்த பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

அது போல் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைப்போமென்றால் நமக்குள் அது பெருகி நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி விடும். மெய்ப் பொருளைக் காணச் செய்யும்.

ஆகவே
1.மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி
2.நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
3.மெய் உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் பெருக்கிடல் வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரின் துணை கொண்டு பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது மனிதனாக உருப்பெற்ற நம்முடைய இந்தத் தருணம்.

அஷ்ட திக்கையும் எட்டிப் பிடித்து… அதை உணரும் தகுதி பெற்றவன் தான் மனிதன்…! அஷ்ட திக்கும் என்றால் எந்தத் திசையிலிருந்து எது வந்தாலும் அது அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவன் ஆறாவது அறிவு பெற்ற இந்த மனிதன்.

எந்தத் திக்கிலிருந்து எது வந்தாலும் அஷ்ட திக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது சப்தரிஷி மண்டலம். தீமைகள் வந்தாலும் இருள் சூழ்ந்தாலும் அது எல்லாவற்றையும் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகின்றது.

அதே போன்று தான் துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது. இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் வெள்ளமாகப் பெருக்கி
2.அஷ்ட திக்கிலிருந்து வரும் இருள்களை எல்லாம் மாய்த்து
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக பத்தாவது நிலையை அடைவதே பதினெட்டாம் பெருக்கு,..!

காந்திஜிக்கு ஞானமும் மக்களைக் காக்கும் மன பலமும் கிடைத்தது எப்படி…?

Image

mahatma-gandhi

காந்திஜிக்கு ஞானமும் மக்களைக் காக்கும் மன பலமும் கிடைத்தது எப்படி…?

 

உலகம் முழுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் தன்மை கொண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் காந்திஜி தன் பிழைப்பிற்காகத் தென்னாப்பிரிக்காவிற்குச் செல்கின்றார்.

தான் கற்ற சட்டக் கல்வியை வைத்து அந்த நாட்டிலே தான் உயர்வு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் செல்கின்றார். ஆனால் அங்கே செல்லப்படும் போது
1.இந்திய மக்கள் வாடுவதையும் கருப்பு இன மக்கள் துடிப்பதையும்
2.ஆங்கிலேயருடைய அதிகாரத்தின் நிலைகள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…? என்பதையும் கண்டுணர்கின்றார்.

ஆங்கிலயேரின் செயல்பாடுகளை வக்கீலாக வாதாடி அந்த உண்மைகளைச் சொல்லப்படும் போது அவர் மேல் முட்டையை வீசுகின்றார்கள். அவரை அசிங்கப்படுத்துகின்றார்கள்.

அப்போது தான் அவர் சிந்திக்கின்றார்…!

அங்கே இருக்கும் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது…? என்ற நிலையில் அவர்கள் படும் துன்பங்களையும் துயரமான உணர்வுகளையும் சந்திக்கப்படும் பொழுது ஈவும் இரக்கமும் அவருக்குள் வருகின்றது.

இவர் தன்னுடைய சிறிய வயதில் செய்த தவறுகளை எல்லாம் அப்பொழுது உணர்கின்றார். அப்படி உணரப்படும் போது தான் “சேவை…!” என்ற உணர்வுகள் அங்கே அவருக்குள் வருகின்றது.

ஏனென்றால் அன்று வேடுவனாக இருந்த வான்மீகி தான் இரு பட்சிகள் ஆனந்தமாக இருக்கப்படும் பொழுது ஒரு பட்சியைத் தன் அம்பால் வீழ்த்துகின்றான். அது துடிதுடித்துக் கீழே விழுந்து இறக்கின்றது.

கூட வந்த மற்றொரு பட்சியோ தன் பாச உணர்வுகள் கொண்டு ஏங்கிப் பார்க்கின்றது. அந்த பட்சியிடமிருந்து வெளி வரும் பாசமான உணவலைகள் அலைகளாகப் படரப்படும் போது அதையும் இவன் குறி வைத்துத் தாக்க எண்ணுகின்றான்.

இருந்தாலும் அந்தப் பட்சி… தன்னுடைய எல்லை கடந்த பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது
1.அந்தப் பட்சி எண்ணிய உணர்வுகள் வேடுவனுக்குள் ஊடுருவி
2.இவன் உடலுக்குள் இருக்கும் பாச உணர்வுகளைத் தூண்டச் செய்து
3.தன் மனைவி குழந்தைகள் மீது வரும் “தன் இனத்தின்…!” பாச உணர்வுகளை உந்தச் செய்கின்றது.

அதன் பின் தான் வேடுவனான வான்மீகி பட்சியைக் கொல்வதை விடுத்து வானை நோக்கி ஏகுகின்றான். அப்படி வானிலே ஏகும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவன் சுவாசத்தில் சிக்கப்பட்டுத் தன் தவறை உணர்ந்து திருந்துகின்றான்.

பட்சியிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பும் பொழுது அதை நுகர்ந்து சுவாசிக்கும் பொழுது
1.அது எப்படித் தனக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது…? என்றும்
2.அந்த எண்ணத்தின் தோற்றமும் இயக்கங்களும் எப்படிச் செயல்படுகின்றது என்பதையும்
3.இராமனாக உருவகப்படுத்தி இராமாயணமாக எழுதுகின்றான்.

அந்த வான்மீகியைப் போன்றுதான் தன் இளமைப் பருவத்தில் சிற்றின்பமும் மற்றவருடைய நிலைகள் தவறான நிலைகளையும் செய்து வந்தர்தான் காந்திஜியும்.

ஆனாலும் தென்னாப்பிரிக்காவில் மக்கள் துயர் படும் உணர்வினைக் கண்டார். அவர்களைப் பழித்துப் பேசுவதைக் காணப்படும் போது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலையில் நன்மையைப் பற்றிச் சிந்திக்கின்றார்.

ஆங்கிலேயர்கள் காந்திஜியைப் பழித்துப் பேசுகின்றார்கள். இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை மாற்றமடையப்படும் போது “ஏழ்மையில் வாடும் மக்களை மீட்ட வேண்டும்…!” என்ற உணர்வு கொண்டு தான் கல்வி கற்ற உணர்வின் அறிவைப் பயன்படுத்தத் தொடங்குகின்றார்.

காந்திஜி வான்மீகியின் இராமாயணக் காவியத்தைப் படித்த அந்த உணர்வின் தொடர்கள் அவருக்குள் இயக்கமாகின்றது.
1.அன்று வேடுவனான வான்மீகிக்குள் எப்படித் திருத்தமானதோ
2.அதே போல இவருக்குள்ளும் இந்த நினைவுகள் திருத்தமாகி
3.உலக மக்களைக் காக்க வேண்டும்…! என்ற எண்ணம் வலுவாகின்றது.

தீமை செய்வோர் உணர்வுகள் தனக்குள் வரப்படும் போது அந்தத் தீமையின் உணர்வுகள் வளர்ச்சியாகி “நம்மையும் எப்படித் தீமை செய்ய வைக்கின்றது…?” என்று உணர்கின்றார்.

1.தீமையிலிருந்து மீள வேண்டும் என்றும் தன் இனத்தைக் காக்க வேண்டும் என்று
2.அன்று அந்தப் பட்சி எடுத்துக் கொண்ட “தன் இனத்தைக் காக்கும் உணர்வுகள்”
3.வான்மீகிக்குத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வை அந்தப் பட்சி ஊட்டியது போன்று
4.தீமை என்ற உணர்வுடன் வருவோரிடமிருந்து மக்களை ஏன் மீட்கக் கூடாது…? என்ற உணர்வினைக் காந்திஜி எடுத்துக் கொள்கிறார்.

இராம காவியத்தைப் படைத்த வான்மீகியின் நிலைகள் கொண்டு இந்த எண்ணங்கள் எப்படி…? என்ற நிலையைத் தெரிந்தோ தெரியாமலேயோ அதனின் உண்மை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் வழியில் கடைப்பிடித்துத்தான்
1.நாம் பெற வேண்டியது எதை…?
2.நாம் சாந்தமாகச் செயல்பட வேண்டியது எவ்வாறு…? என்ற
3.அந்த அருள் உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தக் காந்தி மகான்
4.எத்தனையோ துயர்களிலிருந்து எல்லா மக்களையும் மீட்டிக் கொடுத்தார்.
5.இந்தியாவிலும் மக்களை மீட்ட வேண்டும் என்ற நிலையில் நம்மையும் மீட்டிக் கொடுத்தார்.

காந்திஜியை நாம் எண்ணி அவர் பெற்ற சாந்தமும் ஞானமும் விவேகமும் பெறவேண்டும் என்று எடுத்தால் நம்மை அறியாது இயக்கும் கடுமையான பகைமைகளிலிருந்து விடுபட முடியும்.

அதே போல மற்றவர்களைக் காக்கும் சக்தியும் ஆற்றலும் அந்த மன வலிமையையும் நாம் நிச்சயம் பெற முடியும்…!

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு எல்லை கடந்த துன்பம் ஏற்படும் பொழுது தான் ஒவ்வொருவரும் ஞானியாகின்றார்கள்… எப்படி…?

mentors

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு எல்லை கடந்த துன்பம் ஏற்படும் பொழுது தான் ஒவ்வொருவரும் ஞானியாகின்றார்கள்… எப்படி…? 

உடலில் வலியோ அல்லது வயிற்று வலியோ இருந்தால் உடனே ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

எங்கே வலி எடுக்கிறதோ மகரிஷிகளின் அருள் ஒளியாலே அந்த வலி நீங்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். போகிறதா இல்லையா…? என்று பார்க்கலாம். இதெல்லாம் வாக்குகள். உங்களுக்குள் அதைப் பதியச் செய்கின்றோம்.

யாம் (ஞானகுரு) காட்டுக்குள் சென்றோம். குருநாதர் பல கஷ்டங்களைக் கொடுத்தார். எப்படியெல்லாம் கஷ்டம் உண்டாகின்றது…? அதை எப்படி நீக்குவது…? கஷ்டத்தை நீக்க எந்த மாதிரிச் சக்தியை எடுக்க வேண்டும்…? அதே மாதிரி
1.எல்லோருடைய சந்தர்ப்பம் எப்படி…? என்பதையும்
2.மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெறும் சந்தர்ப்பத்தை “மற்றவர்களுக்கு எப்படி ஊட்டுவது…?” என்பதையும்
3.அனுபவப்பூர்வமாக யாம் உணர்வதற்காக எமக்குப் பல கஷ்டத்தைக் கொடுத்து
4.அதை நீக்கும் முறைகளை குருநாதர் எமக்கு உணர்த்திக் காட்டினார்.

ஆகவே இப்பொழுது என்ன செய்கிறோம்…? நீங்கள் கஷ்டம் என்று வருகின்றீர்கள். அந்தக் கஷ்டமான நேரத்திலே என்ன செய்கிறோம்…? தீமைகளை நீக்கிய அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை உபதேசிக்கின்றோம்.

உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்காக நீங்கள் இதை எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மிக வேகமாக உங்களுடைய கஷ்டம் நீங்குகிறது…!

உதாரணமாக அன்று அருணகிரிநாதருக்குச் சொத்து சுகம் எல்லாம் இருந்தது. கடைசியிலே அவருக்கு கஷ்டம் வரப்படும் பொழுது உடல் முழுவதும் நோயாகி வேதனைப்பட்டார்.

1.என்ன வாழ்க்கை…? என்று நினைத்தார்
2.இனி என்ன…? சாகப் போகிறோம் இன்றைக்கு
3.இது வரை செய்த… “கெட்டது அனைத்தும் போகட்டும்..!”
4.இனிமேல் அடுத்து நல்ல சரீரம் பெறவேண்டும்…! என்று கோபுரத்தின் மேல் ஏறி விழப்போனார்.
5.அந்த ஏக்கத்திலே இருக்கும் பொழுது அந்த சந்தர்ப்பம் என்ன செய்கின்றது…?
6,ஒரு நிமிடத்திற்குள் உயர்ந்த சக்தி உள்ளே வந்துவிடுகின்றது.
7.கீழே விழுகாமல் காப்பாற்றி உண்மையை உணரும் ஞானியாக ஆனார்.

இதே மாதிரித்தான் இப்பொழுது உடலில் கஷ்டம்… குடும்பத்தில் கஷ்டம்… என்று இப்படி எத்தனையோ கஷ்டத்தில் நீங்கள் வருகிறீர்கள்.

உங்கள் கஷ்டம் நீங்கவேண்டும் என்று யாம் சொல்கிறோம். கஷ்டம் நீங்குவதற்காக வேண்டி நீங்கள் இப்பொழுது வருவது இது ஒரு சந்தர்ப்பம். அந்தக் கஷ்டம் இல்லாமலிருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கவே மாட்டீர்கள்.

இராமலிங்க அடிகளுக்குத் தன் அண்ணியை அண்ணன் உதைக்கிறார் என்று
1.தன்னால் தான் அண்ணிக்கு அடி விழுகிறது… ஐயோ இப்படி ஆகிவிட்டதே…! என்று
2.அங்கே ஒரு மூலையில் (பூஜை ரூமில்) உட்கார்ந்து நல்லதுக்காக ஏங்கும் பொழுது
3.ஒரு ஞானியின் அருள் அவருக்குள் வந்து எத்தனையோ ஞானத்தின் சக்திகளைச் சொன்னார்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன செய்தார்…? மந்திரக்காரர்கள் காளி கோவிலுக்கு வந்து அடுத்தவர்களுக்கு ஏவல் செய்யும் போது “அடப்பாவிகளா…! காளி கோவிலில் வந்து ஆட்டையும் மாட்டையும் கொல்கிறீர்களே…!” என்று எண்ணுகின்றார்.

1.தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் செய்கிறார்களே…! என்று
2.நல்லதை எண்ணி ஏக்கத்திலே இருக்கும்போது
3.ஒரு நல்ல உணர்வான “ஆத்மா…” இவர் உடலிலே சேர்ந்து
4.அத்தனை பெரிய ஞானத்தைப் பேசினார் – இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தெரியாது.

விவேகானந்தர் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று பிடியாகப் பிடித்தார். அவர் தான் படித்த நிலைகள் கொண்டு அரசியல் பண்பைத் தெரிந்தார். உலகத்தையே அறிந்தார்.

தான் அறிய வேண்டும் என்ற வேட்கையிலே படிப்பறிவு இல்லாத இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்திலே வந்தவுடன் என்னவாயிற்று…?
1.வந்தவுடனே அவர் தொட்டவுடனே ஒரு கரண்ட் ஷாக்…! போன்று அவருக்குள் பாய்கின்றது
2.ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்ற நிலைகள் உண்மையை உணர்கின்றார்.

இவருடைய படித்த அறிவின் தன்மையை மற்றவர்களுடன் இணைக்கும் தன்மை வருகின்றது. ஆனால் இணைக்கும் தன்மை வந்தாலும் சக்தியின் தன்மையை அவர் காட்டிய அந்தப் படித்த வர்க்கத்தின் நிலைகள் கொண்டு பிராணாயமத்தினுடைய தத்துவத்தை அரசர்கள் காட்டிய நெறியில் உட்புகுந்துதான பாட நிலைகளில்தான் வந்தார்.

இராமகிருஷ்ண பரமஹம்சரோ கோவில் பூசாரியாக இருந்தாலும் பாட நிலையற்ற நிலைகள் கொண்டு
1.பூஜை என்பது மெய் ஒளியைத் தனக்குள் சுவாசித்து
2.நம் உயிரான ஈசனிடத்திலே நாம் பாய்ச்சும் இந்த ஆராதனைதான்…! என்று
3.இராமகிருஷ்ண பரமஹம்சர் பலமுறை சொல்லியிருக்கிறார்.

அதே போன்று ஆதிசங்கர் வெளிப்படுத்தியது, காற்றிலிருக்கக்கூடிய சக்தியை நீ சுவாசிக்கும் பொழுது உனக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு இந்தச் சுவாசமே அபிஷேகமாகின்றது.

நீ எந்த குணத்தை எண்ணுகின்றாயோ அந்த குணத்தின் தன்மை உயிரான நிலைகளில் அபிஷேகம் ஆகின்றது.
1.பாலைப் போன்ற மணம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது உன் உடலுக்குள் மகிழ்ச்சியாகின்றது.
2.தேனைப் போன்ற சுவையான நிலைகள் பெற வேண்டும் என்று சுவாசிக்கும்போது உன் உடலிலுள்ள அணுக்கள் இனிமை நிறைந்ததாக மலர்கின்றது என்ற தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.

ஒரு ரோஜா மலர் என்றால் அதன் மணத்தின் தன்மையை எடுத்துத்தான் மலரின் தன்மை வருகின்றது. அந்த ரோஜா மலரை நாம் பார்த்து அந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்தால் அந்த மணம் நமக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு செருகேருகின்றது.

ஆகவே துவைதம் என்பது அந்தப் பொருளை எண்ணி எடுப்பதே தவிர யாகங்களைச் செய்து வேள்விகளைச் செய்து மந்திரத்தினாலே எடுப்பது அல்ல…! அன்று அரசன் காட்டிய அந்த நிலைகள் கொண்டு அதிலிருந்து விடுபடும் நிலையே இல்லாது இன்றும் நாம் இருக்கின்றோம்.

வேள்விகள் செய்தால்தான் நம் பாவம் போகும் என்றும் வேள்விகள் செய்தால்தான் அம்மா அப்பா மோட்சம் போக முடியும் என்ற நிலைகளில்தான் இருக்கின்றோம்.

ஆனால் அதைச் செய்யவில்லை என்றால் பிழை வந்துவிடுமோ என்று எண்ணுகின்றோம். ஏனென்றால் அந்த அளவுக்கு விஷத்தை நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

இவையெல்லாம் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் நெறிகள். இங்கே இதை உபதேசிப்பது நான் அல்ல….! மெய்யை உணர்ந்த பல மகரிஷிகளின் உணர்வலைகள் அவர்களுடன் நான் தொடர்பு கொள்ளப்படும் பொழுது அவர்களின் உணர்வலைகள்தான் உணர்த்தியது.

1.நீங்கள் இப்பொழுது கேட்பது சுவாசித்தது அனைத்துமே அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைத்தான்.
2.அந்த உணர்வலைகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.
3.அந்தப் பதிவின் நினைவு கொண்டு ஆதிசங்கரர் சொன்னது போல்
4.காற்றிலிருக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எங்கிருந்தும் நீங்கள் பெறமுடியும்.
5.அதே சமயத்தில் விண்ணின் ஆற்றலையும், இந்தப் புவிக்குள் இருக்கும் சக்தியையும் நீங்கள் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

பாடல்கள் மூலம் சித்தர்கள் உணர்த்திய விஷத்தை நீக்கும் சூட்சமங்கள்

siddhargal rajiyam

பாடல்கள் மூலம் சித்தர்கள் உணர்த்திய விஷத்தை நீக்கும் சூட்சமங்கள்

பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்களை அது காரணமாகக் காட்டி அதனின் ஆக்கமும் உணர்வின் செயல்களும் எவ்வாறு ஆகிறதென்று எளிய மக்களுக்கும் காட்டுவதற்காகச் சித்தர்கள் தங்கள் பாடல்கள் மூலம் உண்மைகளை உணர்த்தியுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வரும் போது தனது வளர்ச்சியில் அந்த உயிரினங்கள் அசுத்தங்களை எப்படி நீக்கியது…? அதன் வழியில் எவ்வாறு பெற்றது…? என்ற பொருள் பட அவர்கள் கவிப் புலமைகளை ஒரு சொல்லிற்குள் பல விளக்க உரைகளை அறியும் வண்ணம் கொடுத்தார்கள்.

இயற்கையில் ஒவ்வொறு உணர்வின் இயக்கங்களும் எது எதனுடன் சேருகின்றது…? அது எப்படி மாறுகின்றது…? என்று உணர்ந்தறிந்தே அந்த சித்தர்கள் செயல்பட்டார்கள்.

அவர்கள் பாடிய பாடல்களைப் படிக்கும் நிலையில் ஞானத்தின் வழித் தொடரிலே செல்லும் போது அவர்கள் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகளை அறியும் அறிவு வரும்.

1.சித்தர்கள் கூறிய நியாயத்தை ஏற்றுக் கொள்ளும் போது
2.அந்த உட்பிரிவின் மூலத்தை அறியும் தன்மை வருகிறது.
3.அவர்கள் வழிகளில் அதைச் செயல்படுத்த எண்ணினால் படிப்பவர்களுக்கு அது உதவும்.

இல்லையென்றால் சித்தர்களின் புலமையை நாங்கள் அறிந்து கொண்டோம் என்று அவரவர் உடலின் இச்சைக்கு மாற்றினால் தப்பான வழியைக் காட்டும். ஒரு தரம் தப்பைக் காட்டி விட்டால் பின் அந்தத் தப்பின் வழியே தான் செல்லும்.

குழம்பு வைக்கின்றோம் என்றால் ஒரு சிலருக்கு உப்பின் தன்மை அதிகமாக இருந்தால் சுவையாக இருக்கிறது என்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு உப்பின் தன்மை அதிகரித்தால் வெறுப்பின் தன்மை வருகிறது.

இதைப்போல தான் அவரவர் உடலிலே எடுத்துக் கொண்ட உணர்வின் சேர்க்கைக்கொப்ப உணர்வின் இயக்கங்களும் அறிதலும் தனக்குள் சுவைத்தலும் சுவையின் உணர்வு கொண்டு மகிழ்தலும் என்று இவ்வாறெல்லாம் உணர்வுகள் உணர்ச்சியாக மாறி உணர்ச்சிகள் மணங்களாக மாறி மணத்தின் ஞானமாகி இயற்கையில் இது விளைகின்றது.

சித்தர்களும் – தான் அறிதல் என்ற நிலைகளுக்குச் செல்லும் போது தான் கற்றுணர்ந்த நிலைகளைப் கவிப் புலமைகளாகப் பாடுவதும் அவர்கள் கற்றுணர்ந்த உணர்வுகளைப் பிறருக்கு விளக்க உரையாகவும் மனிதன் வாழ்க்கையில் எவ்வாறு மீள வேண்டும் என்ற நிலைக்கே பாடல்கள் அமைந்திருக்கும்.

அந்தப் பாடலின் அர்த்தத்தை எல்லோரும் காணுவது கடினம். ஒரு சிலருக்கே அது புரியும். புரிந்தவர்கள் அவர்கள் மனத்தின் அளவுகோல் எப்படியோ அதைத் தன் அருகிலே வருவோருக்கு உபதேசிப்பதும் விளக்கத்தைக் கொடுப்பதும் இதைப் போன்ற நிலைகள் அமைகின்றது.

உயிரினங்கள் அனைத்தும் தான் உணவாக உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினைத் தன் உணர்விற்குள் இணைத்து வலு கொண்ட உணர்வைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.

ஆனால் அதனின் கழிவாக வெளிப்படுத்தும் மலங்கள் அனைத்தும் நல்லவைகளாக மாறுகின்றது. அது ஒவ்வொரு சரீரத்திற்குத் தக்கவாறு அது மாறுபாடு பெறுகின்றது.

இதைப்போல சிறுகச் சிறுக சிறுகச் சிறுக நஞ்சினை மாற்றிடும் நிலைகள் வரப்படும் போது அதனின் மலத்திலும் மணம் மாற்றம் இருக்கும். ஆடு மாடுகள் வெளிப்படுத்தும் மலத்தில் நாற்றம் இல்லை. நறுமணம் இருக்கின்றது.

குதிரையை எடுத்துக் கொண்டால் மனிதனை ஒத்த நிலைகள் கொண்டு மலத்தில் நாற்றம் இருக்கும். ஆனால் குதிரையின் எண்ணத்தில் வலு இருக்கும். அதனின் வேகத் தன்மையும் சிந்திக்கும் திறனும் அதிகம் இருக்கும். ஏனென்றால்
1.அது நஞ்சின் தன்மையைக் கழித்து விட்டு
2.நல்ல உணர்வு கொண்டு அதனின் துணையால் உடல் வலுவானது.
3.மனிதனுக்கு எண்ண வேகம் எதுவோ அதைப் போல
4.குதிரைகளும் எண்ணத்தின் வேகம் கொண்டது
5.தன் எண்ணத்தின் வேகத் துடிப்பின் தன்மை கொண்டு இயக்குகின்றது.

அதே சமயத்தில் மனிதனுக்கு வரக்கூடிய நோயெல்லாம் குதிரைக்கு வரும். குதிரைக்கும் சளி பிடிக்கும். ஏனென்றால் அது நஞ்சினை மாற்றி வெளியேற்றுகின்றது. ஆனால் கழுதையின் மலம் நாறாது. ஏனென்றால் அது நஞ்சான உணர்வுகளைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.

கழுதைப் பாலைக் குடித்தால் கடும் நோய்களை நீக்கும். ஆனால் அதிகமாகக் குடித்தால் பத்தியம் தவறினால் மனிதனை வீழ்த்திடும் நிலை வந்து விடுகின்றது. அந்தக் கழுதைப் பாலை வைத்துக் குளித்தால் மனித உடலில் உள்ள அசுத்தமான சக்திகளை அது நீக்குகின்றது.

இப்படி ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் எடுத்தாலும் அந்தந்த உணர்விற்கொப்ப
1.அதனுடைய மலத்தில் காணலாம். மனதில் காணலாம்.
2.உணர்வின் இயக்கத்தில் காணலாம்.
3.இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உணர்த்துகின்றோம்.

என்றுமே அழியாமல் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரமும்… சப்தரிஷி மண்டலங்களுமே நம் எல்லை…!

pipal tree ganesha

என்றுமே அழியாமல் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரமும்… சப்தரிஷி மண்டலங்களுமே நம் எல்லை…!

அரச மரத்தின் பழத்தை ஒரு குருவியோ மற்ற பட்சிகளோ உணவாக உட்கொண்டாலும் அது பறந்து செல்லும் நிலைகளில் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை இட்டால் அந்த மலத்துக்குள் மறைந்திருக்க கூடிய வித்து அங்கே பதிந்துவிடுகின்றது.
1.நீரே இல்லாது வறட்சியாக இருந்தாலும் வித்து அங்கே பதிந்த பின்
2.இரவிலே வரும் குளிரைக் கொண்டு அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதம் கொண்டு
3.அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் அந்த வித்து ஜீவன் பெறுகின்றது.

ஜீவன் பெற்றுத் தன் இனத்தின் தன்மை எதுவோ அதைக் காற்றுக்குள்ளிருந்து நுகர்ந்து அந்த உணர்வின் சத்தாகச் செடியாக மலர்கின்றது.

அது வளர வளரத் தன் விழுதுகளைப் பரப்பி தன் உணர்வின் சக்தியால் ஊடுருவி… “அந்தக் கட்டிடத்தையே பிளந்து…!” பூமியில் நிலத்தின் தன்மையை நோக்கிக் கீழே கொண்டு வந்து தன் உணர்வின் ஆகாரத்தைத் தேடும் நிலை பெறுகிறது.

விண் சென்ற ஞானியர்கள் அனைவரும் இதைப் போன்ற பேராற்றல் பெற்றவர்கள் தான்…!
விண்ணிலே சுழன்று கொண்டு வருவது விஷத்தின் தன்மைகளாக இருந்தாலும் இந்த மனித உடலிலே அந்த விஷத்தை முறித்து விஷத்தை அடக்கி உயிருடன் ஒன்றிய உணர்வின் நிலையை ஒளியாக மாற்றி விண் சென்ற நிலைகள் அது பாழடைந்த இடம் தான்.

அதாவது விண்ணிலிருந்து வரும் பல பல விஷத்தின் தன்மைகளும் பல கோள்களிலிருந்து வரும் நிலைகளும் பேரண்டத்திலிருந்து வரும் விஷத்தின் துகள்களும்
1.அங்கே வரும் போது எதுவுமே உற்பத்தி ஆகாது.
2.விஷத்தின் தாக்குதலால் பல நிலைகள் மாறிக் கொண்டிருக்கும்.
3.அப்பேர்பட்ட பாழடைந்த இடத்தில் இருளை நீக்கி விஷத்தை முறுக்கி
4.தன் உணர்வின் தன்மையை “ஒளியாக மாற்றி…!” மண்டலமாகவும் நட்சத்திரமாகவும் ஆனவர்கள் மகரிஷிகள்.

பாழடைந்த இருள் சூழ்ந்த அந்த விஷத்தின் தன்மைக்குள் இந்த உயிராத்மா அங்கே சென்றடைந்து அங்கே வரும் விஷத்தின் தன்மையை ஒடுக்கி ஒளியின் சுடராக இன்றும்… என்றும்… வாழ்ந்து கொண்டுள்ளவர்கள் மகரிஷிகள்.

வைரம் எவ்வாறு விஷத்தை உள்ளடக்கி அது எப்படி ஒளிச் சுடராக வெளிப்படுத்துகின்றதோ அதுபோல ஜீவன் கொண்ட இந்த ஒளியான உயிராத்மாக்கள் (மகரிஷிகள்) விண்ணிலே இருந்து வரக்கூடிய விஷத்தை ஒடுக்கி அந்த உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

1.அந்தப் பாழடைந்த இடத்திலே சூரியனின் ஒளிகளே இல்லை என்றாலும்
2.தனக்கு வேண்டிய ஒளியின் சுடராக
3.தனக்குள் இருக்கும் உணர்வின் ஒளி கொண்டு பிற நிலைகளை ஒளியாக்கும் நிலை பெற்றவர்கள் பேரண்ட மகரிஷிகள்
4.நம் பூமியிலிருந்து அப்படிச் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் “துருவ மகரிஷியாக…” உள்ளான்.

அந்தத் துருவ மகரிஷியைப் பின்பற்றி சென்றவர்கள் அனைவருமே அவனைப் போன்றே ஒளியின் சுடராகச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள். இந்தப் பேருண்மையை உணர்த்துவதற்குத்தான் விநாயகருக்கு அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.

பாழடைந்த கட்டிடத்தில் அரச மரம் அது எப்படித் தன் விழுதுகளை ஊன்றி காற்றிலே மறைந்திருக்க கூடிய ஜீவ சக்தியின் தன்மையையும் தன் உணவையும் நுகர்ந்து அது தனக்குள் விளைவித்துக் கொள்கிறதோ அதைப்போல
1.இன்று மனிதர்களாக இருக்கும் நாமும்
2.அந்தப் பேரண்ட மகரிஷிகள் எப்படி விண் சென்றனரோ
3.அவர்கள் வழியிலே… அவர்கள் காட்டிய அந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு
4.விநாயகரை நாம் பூஜித்து அணுகினால் அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவருமே அடைய முடியும்.

முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்ற அந்த நந்நாளே “விநாயகர் சதுர்த்தி…!’