மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவருடன் உங்களை இணைப்பதே எமது வேலை

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவருடன் உங்களை இணைப்பதே எமது வேலை

 

ஆயிரம் தான் சொல்லுங்கள் மீண்டும் ஜாதகத்தைத் தேடி நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்ற நிலையில் தான் தேடிச் செல்ல முடியும். நேரத்தை உங்களால் மாற்ற முடியாது.
1.இந்த உடலுக்காக நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகளால் ஆசை ஓங்கிக் கொண்டேயிருக்கும்.
3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டே வரும்.
4.வேதனை கூடித் தன்னை அழிக்கும் உணர்வுகள் விளைந்து விடும்\
5.பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைக்கும் தன்மையாகத் தான் வரும்.

மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஏழாக இருப்பினும் ஏழாவது நிலையான ஒளி நிலை பெறவில்லை என்றால் அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளைச் சேர்ப்பது அல்ல.

ஏழாவது அறிவு கொண்டு பொருளைக் காண முடியும். மனிதனால். பொருளைக் கண்டபின் இருளை நீக்கிட வேண்டும்.

மனிதரான நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் பிளக்கின்றது… நல்ல உணர்வினை வலுவாக மாற்றுகின்றது. நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.

1.அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்கும் இருளை நீக்க வேண்டும்.
2.இருளை நீக்கி ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற வேண்டும் என்பதுதான் ஞானிகள் காட்டி அறநெறிகள்.

அதனை நீங்கள் பெற வேண்டும்.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால் செடிகளுக்கு என்று ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உரம் உண்டு..

நாம் இங்கே கூடி உள்ளோம் என்றால் பல கோடித் தாவர இனங்களுடைய சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சத்தே உடலாக ஆனது… ஜீவ அணுக்களாக மாற்றியது… அதனின் மலம் கொண்டு சரீரம் பெற்றவர்கள் நாம்.

அதைப் போன்ற உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு.

1.அருள் ஞானிகள் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைத்து
2.இணைத்திடும் உணர்வின் தன்மை கொண்டு வாடிய பயிரை நீக்கி
3.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு உங்களைச் செழிக்கச் செய்கின்றோம்.

அக்ரிகல்ச்சரில் பல வீரிய உணர்வின் சக்தி கொண்ட உணர்வை இணைத்து புதுப் புது வித்துக்களை எப்படி உருவாக்குகின்றார்களோ இதைப் போலத் தான் ஞானிகள் உணர்வின் தன்மையை உங்களுடன் இணைக்கின்றோம்.

அன்றைய மகரிஷிகள் காட்டிய நிலைகளில்
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு பேரண்டத்தின் நிலைகளை அறிந்து
2.அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வைத் தன்னுள் விளைய வைத்து
3.விளைந்த உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றி நிலை கொண்டிருக்கும் அவரின் உணர்வை
4.நினைவு கொண்டு உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து… உங்களுக்குள் அதை உரமாக இணைப்பதே எமது வேலை.

குரு காட்டும் நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்

குரு காட்டும் நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்

 

உங்களுக்குள் தெளிவான நிலைகள் உபதேசித்து வந்தாலும் இதை ஏற்றுக் கொண்ட சீடர்கள் அந்த ஒருக்கிணைந்த உணர்வின் தன்மை இணைத்து இந்த நிலைகள் கொண்டால் “நிலை கொண்டதாக” மாறும்.

இன்றைய நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அவரவர்கள் சுயநலங்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது
1.குருவைப் பற்றிப் பார்க்கும் பொழுது குருவின் பெயரைச் சொல்லித் தவறுகள் செய்து கொண்டிருப்போர் பலர்.
2.தான் தவறு செய்தே பிழைக்க வேண்டும் என்று எப்படி ஆனாலும் தான் வாழ வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்கள்
3.அந்தத் தவறு செய்வோரின் நிலை வேறு.

தான் தவறு செய்து… எப்படியும் வாழ வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அதே குருவின் நாமத்தைச் சொல்லப்படும் பொழுது
1.தவறு செய்தே… தான் வாழ வேண்டும் என்னும் பொழுது
2.தவறு செய்தே… தான் வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் ஒன்று சேரும்.
3.அதைப் போற்றும் நிலைகளே வரும்…. இப்படி இணை சேரும் நிலைகள் இது.

ஆனால் அப்படி இல்லாது குரு காட்டிய நெறியில் நாம் செல்வோம் என்றால் தீமைகளைப் பிளந்திடும் நிலைகளும் தீமைகளை அடக்கி ஒளியின் அறிவாக நாம் வாழ்வதும் ஆக ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றி வாழ்ந்திடும் நிலைகள் என்றும் நிலை கொண்ட நிலைகள் நாம் பெற முடியும்.

ஓர் விஷத்தின் தாக்குதல் ஏற்படும் பொழுது தான் வெப்பத்தின் தன்மையாகி வெப்பத்தின் தன்மை வரும் போது தான் மற்ற உணர்வுகள் சேர்த்து அது படைக்கும் சக்தியாக மாறுகின்றது.

ஆகவே விஷத்தின் தன்மை கொண்டாலும் விஷ உலகை இன்று மனிதனிலிருந்து இயக்கும் நிலைகள் பெற்றாலும் அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு இதை அடக்கி மனிதனின் உணர்வலைகளைத் தெளிந்ததாக மாற்ற முடியும்.

1.நம் குரு வழியில் குரு காட்டிய அறநெறிகளை நாம் கடைப்பிடிக்கும் பொழுது தான்
2.தக்க நேரத்தில் இந்த உபதேசித்த உணர்வுகள் நம்மைக் காக்கும்
3.அந்த உணர்வின் வலுகள் நீங்களும் அதைப் பெற முடியும்.

ஏனென்றால் குரு வழியில் நாம் செல்லப்படும் பொழுது நமக்குள் தீமையை அடக்கி விடுவதும்… நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகள் இயக்கினாலும் அதை அடக்கிடும் நிலைகள் வரவேண்டும்.

அதே சமயத்தில் நாம் வெளிப்படுத்தும் உணர்வின் தன்மையைச் சூரியனின் காந்த சக்தி இது கவர்ந்திருந்தாலும்
1இந்த உணர்வலைகள் தீமையற்றதாக மாற்றும் நிலைகள் மோதுண்டு மோதுண்டு மோதுண்டு ஒவ்வொன்றையும் அடக்கிடும் உணர்வுகளாக
2.இந்தக் காற்று மண்டலமும் இந்தப் பிரபஞ்சமும் மாற்றிடும் நிலையாக வர வேண்டும்.

ஏனென்றால் இத்தகைய நிலைகள் நமக்குள் அந்த ஞானியின் உணர்வுகளாக மலரப்படும் பொழுது அதர்வண…! தீமைகளை அடக்கி சாம…! இசையின் தன்மைகள் மாற்றப்பட்டு.. ஒளியின் தன்மை கொண்டு விண்ணில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… இந்த உடல் நமக்குச் சதம் அல்ல.

குருதேவரின் காட்சி

குருதேவரின் காட்சி

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்கள் பெற்று அந்த அருளைப் பெறச் செய்து ,அந்த குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெறுவோம்;

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான நிலையில் நமது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கிப் பெறுங்கள்.

கண்ணைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிங்கள்.

கண்ணைத் திறந்து நீங்கள் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த அருளைப் பெற குரு அருளைப் பெற குரு அருளின் துணை கொண்டு அகஸ்தியன் அருளப் பெற அகஸ்தியன் துருவனான அந்த அருளைப் பெற துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற ஏங்கித் தியானிங்கள்.

இப்போது நம் குருவின் அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் அருளும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களில் காட்சி கிடைப்போர் அதிர்ஷ்டசாலிகளே…!

இப்போது தபோவன குரு பீடத்தில்… சூரியன் வடிவில் இருப்பதை நேராக உற்றுப் பாருங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்போது அங்கே வடிக்கப்பட்டிருக்கும் சூரியனின் படத்தைப் பாருங்கள்… ஏங்கித் தியானிங்கள்.

அதிலே அற்புதக் காட்சிகளைக் கொடுப்பார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து இப்போது அந்த அருளைப் பெற வேண்டும் என்று சூரியனிலிருந்து பெறும் போது “குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை” நீங்கள் உணர முடியும்…

அந்தக் காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது நீங்கள் சுவாசித்து உங்கள் உடலுக்குள்ளும் மகிழ்ச்சி ஊட்டும் நல்ல உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருவாகும்.

உங்களது ஈரத்த நாளங்களில் அந்த அரும் பெரும் சக்தி உள்ளுக்கே அது சுழன்று வரும். அந்த உணர்ச்சிகள் உங்களிலே தோன்றும்.

கண்ணை மூடுங்கள். உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் கேளுங்கள்… வேண்டுங்கள்.

குரு வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும் பெரும் சக்தி குரு வழியில் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, உங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிங்கள்.

1.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்… குரு அருளும்…
2.உங்கள் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதை இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.
3.உங்கள் ஆன்மாவில் அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம்

உங்கள் ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும் போது டிவி.யில் எப்படி அது கவர்ந்ததைப் படமாகப் பார்க்கின்றோமோ, இதைப் போல் உங்கள் உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அந்தக் காட்சியாகவும் அறிய முடியும்.

பல நிகழ்ச்சிகளை எனக்குள்ளேயே நடத்திக் காட்டித் தான் எம்மைத் தெளிவாக்கினார் குருநாதர்

பல நிகழ்ச்சிகளை எனக்குள்ளேயே நடத்திக் காட்டித் தான் எம்மைத் தெளிவாக்கினார் குருநாதர்

 

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருப்பெற்றுள்ளோம்.

மனிதரான பின் வேதனைப்படுபவரை நுகர்ந்தால் அந்த வேதனை உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்ட மனித உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது. அந்த உணர்வையே மீண்டும் வளர்க்கின்றது… இந்த உடலை வீழ்த்துகின்றது.

வேதனை உணர்வுகள் அணுக்களாக ஆன பின் அந்த மனிதன் உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தின் தன்மை கொண்ட உடலாக அவனை உருமாற்றி விடுகின்றது அந்த உயிர்.

இதிலிருந்தெல்லாம் எவ்வாறு நீ மீளப் போகின்றாய் என்று பல வினாக்களை குருநாதர் எழுப்பி எம்மைத் தெளிவாக்கினார்.

அதன் பின் இதை மாற்றுவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று காலையில் 4:00 மணிக்கு விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார். விண்ணிலே துருவ நட்சத்திரம் அந்த நான்கு மணி அளவில் தான் பூமியின் நிலையில் இருந்து துருவப் பகுதியில் நம்மை அறியும் படிச் செய்கின்றது.

காரணம்… துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் ஒளிக் கதிர்கள் கவர்ந்து அலைகளாக மாற்றப்படும் பொழுது ஒளி அலைகள் அங்கே பிறக்கின்றது.

அதனின் உணர்வுகள் பரவி வரும் பொழுது நம் பூமியின் சுழற்சி வட்டத்தில் துருவப் பகுதி வழி நம் பூமி எவ்வாறு அதை இழுக்கிறது…? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார்.

இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பித்து
1.அந்தந்தக் காலங்களில் விஷத்தை எவ்வாறு முறியடிப்பது…? என்ற நிலைகளையும்
2.அதை உற்று நோக்கிக் காலையில் நான்கில் இருந்து ஆறுக்குள் இதை வழக்கமாக வைத்துக்
3.காலையிலிருந்து இரவு வரையிலும் பல பல தீமைகளைச் சந்திக்கச் செய்தும் நுகரச் செய்தும் உடலுக்குள் உபாதைகளை உருவாக்குவதும்
4.காலையில் 4:00 மணிக்கு எல்லாம் குருவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
5/இந்த விஷத்தன்மைகள் ஒடுங்குவதையும் காட்டுகின்றார்.
6.இதை அடுத்து அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு சுழல்கின்றது…?
7.அதனின்று உமிழ்த்தும் உணர்வுகள் எவ்வாறு பரவுகின்றது…?
8.அதனை நீ எவ்வாறு நுகர வேண்டும்…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்.

அவ்வாறு தெளிவாக்கிய பின் நுகர்ந்த உணர்வுகள் நாம் இந்த வாழ்க்கையில் இதை அறிவதற்காகச் சில சில நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுகின்றார்.

அந்த மண்டலங்களின் சக்திகளை நுகர்ந்தறிந்து இந்த உடலுக்குள் அதைச் சேர்க்கும் போது விஷத் தன்மைகள் எவ்வாறு ஒடுங்குகின்றது…? இதிலிருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்.

இப்படித்தான் அனுபவரீதியில் மனிதன் தீமைகளிலிருந்து விஷத்தை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்று சப்தரிஷி மண்டலமாக நிலைத்து வாழ்கின்றான்…? வளர்ந்து கொண்டே உள்ளான்…? என்றும் 16 என்ற நிலைகளை அடைந்து கொண்டுள்ளான்…?
1.அதை நீ பெறுகின்றாயா…? அல்லது
2.இன்றைய நிலையில் கொண்டு பல மூலிகைகளைக் கொண்டு பிறருடைய துன்பங்களைப் போக்குகின்றேன் என்று வைத்தியன் என்ற நிலைகளை அடைகின்றாயா…? அல்லது
3.பல தாவர இனங்களை பச்சிலைகளைம்க் கையில் எடுத்துக் கொண்டு தேளிடம் அதைக் காட்டப்படும் பொழுது அது ஒடுங்குவதும் விஷப்பூச்சிகளிடம் அதைக் காட்டப்படும் பொழுது பம்முவதும் இது போன்ற கடுமையான மிருகங்களிடம் அதைக் காட்டிய பின் அவை எல்லாம் அஞ்சி ஓடுவதும் அதிலே பெருமை சாற்றி உன் வலிமையைக் காட்டி உன்னுடைய திறமையைக் காட்டிப் பொருளையும் புகழையும் தேடிச் செல்கின்றாயா…? அல்லது
4.அந்த புகழின் தன்மையால் நீ எடுத்துக் கொண்ட உணர்வுகள் மீண்டும் விஷத்தின் தன்மை அடைந்து மடிகின்றாயா…? அல்லது
5.மனித உணர்வுகளை மாற்றி உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரம் பெறுகின்றாயா…? என்று
6.பல பல வினாக்களை எழுப்பித்தான் எம்மைத் தெளிவாக்கினார் குருநாதர்.

குரு காட்டிய அருள் நெறிகளை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்

குரு காட்டிய அருள் நெறிகளை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்

 

குருநாதரிடம் அணுகியவர்கள் தன் உடலின் இச்சைக்கும் ஏதோ சாம்ராஜ்யத்தை ஆள்வது போன்றும் தவறான வழிகளில் சென்று கொண்டுள்ளார்கள்.

கவிண்ணுலகில் பேரானந்தப் பெரு நிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குருநாதரின் துணை கொண்டு அவர் பெற்ற உணர்வினை உபதேசத்தின் வாயிலாக அமர்ந்துள்ள உங்களிடம் இதைப் பதிவு செய்கிறோம்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் பொழுது உங்கள் நினைவாற்றல் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் பால் சென்று அவர்கள் ஆற்றலை நீங்களும் பருகி உங்களில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற உதவும்.

இயற்கையில்… ஒவ்வொரு அணுவின் தன்மையும் எவ்வாறு செயல்படுகிறது…? என்பதை குருநாதர் எமக்குக் காட்டினார்.

எனக்கு எதை எல்லாம் அவர் போதித்து…? அதை எப்படிப் பதிவு செய்தாரோ…? அவை அனைதையுமே அவர் காட்டிய அருள் வழியில் உங்களிடம் தொடர்ந்து சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

எனக்கு ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் காட்டி விட்டார். அதே போல் அப்படி ஆறு மாதத்திற்குள் உங்களுக்கு அதைப் பதிவு செய்ய வேண்டும் என்றால்… நீங்கள் எங்கே…?

என் வீட்டில் இப்படி இருக்கின்றது… என் மனைவி இப்படி இருக்கின்றது… என் பையன் இப்படிப் பேசுகிறான்… என்ற எத்தனையோ எண்ணங்கள் வருகின்றது.

தியானம் செய்வதற்காகச் சென்றால் நீ சாமியாராகப் போய் விடுவாய் என்று மனைவி விரட்டுகிறது. உட்கார்ந்து தியானம் செய்தால்… என் அப்பனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று பிள்ளை பேசுகிறது என்று இப்படித் தான் சொல்கிறார்கள்.

ஆகையினால் நீங்கள் இவ்வளவும் சொன்னீர்கள் சாமி கேட்டேன்…! இருந்தாலும் என்னால் முடியவில்லை…! என்று இப்படித் தான் நம் வாழ்க்கை செல்கிறது.

ஏனென்றால் கோவிலில் தெய்வத்திற்குத் தேங்காய் பழத்தை வைத்து அதற்குண்டான காசைக் கொடுத்து நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் பாவம் போய்விடும்.

அர்ச்சனை செய்யும் உணர்வுகள் நேராக ஆண்டவனுக்குப் போய் நமக்காக வேண்டி பணத்தைக் கொடுத்திருக்கின்றார்… அர்ச்சனை செய்கின்றார். ஆகையினால் இந்த்த் தெய்வம் மனமிரங்கி வந்து கஷ்டத்தையெல்லாம் போக்குவார் என்ற இந்த நம்பிக்கையைத் தான் நமக்கு ஊட்டி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் நம்மை ஆள்பவன் யார்…? என்று குருநாதர் காட்டுகின்றார். பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான நிலையில் இந்த உடலுக்குள் பல கோடி உணர்வுகள் வந்திருந்தாலும் இதை ஆண்டு கொண்டிருப்பவன் நமது உயிரே ஆண்டவன்.

நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இறையாகி உணர்வின் செயலாக உடலாகி அதனின் உணர்வின் செயலாகத்தான் நம்மை இயக்குகின்றார். இது கீதையிலே தெளிவாகக் காட்டப்படுகின்றது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று…!

“முன் சிந்தனை” நமக்கு அவசியம் வேண்டும்

“முன் சிந்தனை” நமக்கு அவசியம் வேண்டும்

“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்…? என்னை அவன் இப்படிப் பேசினானே… அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?

கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே… எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?

ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.. உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.

தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.

இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.

என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?

“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்…” அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது… பயம் வருகின்றது.

1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால் அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
2.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
3.உள்ளுக்குள் போய் உன்னைப் பயப்படச் செய்வது யார்…?
4.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள் போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
5.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை…?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.

திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

இந்தக் குகைக்குள் போக வேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.

என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…” என்கிறார் குருநாதர்.

போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! முதலில் ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது…? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்து விட்டது.

அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.. “அந்தச் சந்தர்ப்பம்…” அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.

அப்புறம் என்ன செய்தேன்…?

“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.

அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.

மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.

அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.

ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.

அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.

குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.

1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது…?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது…. இதை எப்படிப் பிடிப்பது…?
4.அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
5.விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
5.”நொடிக்கு நொடி…” மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது…?
6.பயம்.. என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது…?
7.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?

இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

அப்புறம் என்னாகிவிட்டது…? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.

நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நன்றாகத் திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “அப்படி ஒரு சிந்தனை” வந்தது.

அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.

அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.

முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்…? ஆபத்து தான்.

இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதற்குத்தான் இந்த அனுபவம்.

ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…!” என்று காட்டுகிறார்.

அதன் வழியில் நான் போகின்றேன்.

முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.

அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
1.விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது…?
2.அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி “வசமாகப் இப்படிச் சிக்க வைத்து விட்டார்…” என்று எண்ணினால் எப்படி இருக்கும்…?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்…?
4.குரு தான் வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையில்
5.அவரை எண்ணி… “இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்…” அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.

இது தான் என்னுடைய அனுபவம்.

அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.

பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார்.

இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.

அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.

ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள்…? என்று “பார்” என்று காட்டுகின்றார்.

ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.

நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.

ஆறு பக்கத்தில் இருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.

அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.

ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு இப்படி ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.

காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.

ஆனால் அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.

சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.

தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.

காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்

 

ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் என்று பாடுகின்றோம். அந்த கணேசன் எங்கே இருக்கின்றான்…? நம்மை எவ்வாறு இயக்குகிறான்…? என்ற தத்துவத்தை ஞானிகள் கொடுத்திருந்தாலும்… புகழ் பாடும் நிலைகள் கொண்டு பொருள் காண முடியாத நிலைகள் நாம் திரிந்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ப் பொருள் கண்டறிந்த அருள் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டே இருக்கின்றது. இதையெல்லாம் பித்தனாக இருந்த குருநாதர் உணர்த்துகிறார்.

எல்லோரும் உங்களைப் பைத்தியமாக எண்ணுகின்றார்கள். நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள்…? என்று கேட்கப்படும் பொழுது அவர் சொல்கின்றார்.

1.உலக மக்கள் என்னைப் பித்தனாக எண்ணுகிறார்கள்.
2.ஆனால் அவர்கள் எத்தகைய பித்துப் பிடித்து வாழுகின்றார்கள்…? என்பதை நீ உணர்ந்து கொள்.
3.அவர்கள் உணர்வைப் பற்றாதே அருள் உணர்வைப் பற்றிக் கொள்.
4.மற்றவர்களைப் பற்றி எண்ணாதே,.. நான் கொடுத்த அந்த அருள் ஞானிகள் உணர்வை நீ பற்று.

வாழ்க்கையில் உன்னை அசுத்தப்படுத்தும் நிலைகளைப் பற்றற்றதாக்கு.

யார் உன்னைக் கேவலமாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் கோபமாகப் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும் அதையெல்லாம் பற்றற்றதாக்கு.

அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு மெய் உலகம் சென்ற அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பற்று. தீமைகளைப் பற்றற்றதாக்கு.

1.அருள் ஞானிகள் உணர்வுகளை மக்கள் மத்தியிலே அதைப் பற்றும்படிச் செய்…!
2.அருள் உணர்வுகளை நேசித்துத் தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்டு
3.தீமைகளைப் பற்றற்றதாக உருவாக்கிவிடு என்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகிறோம்.

ஒரு சிலர் இதைப் பற்றற்றதாகவும் இருக்கலாம். ஆனால்
1.அருள் ஞானிகளைப் பற்றிடும் நிலையாகத் தீமைகளைப் பற்றற்றதாக்க முடியும் என்று
2.எமது குருவின் ஆணைப்படி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் சொல்கின்றேன்.

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

 

மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ
2.இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…!
3.நமக்கு ஒன்றும் புரியவில்லையே..! என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.
4.”புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும்.
5.புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.

முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் “நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.

முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது
1.அந்த எழுத்துக்களில் என்ன கருத்து உள்ளது…? என்று அறிய
2.அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.

இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அ… ஆ… என்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அ… ஆ… என்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.

1.ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச் சொன்னது பதிவாகி…
2.அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.

ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.

வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.

1.வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை.
2.உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை… அறிவின் ஞானம் இல்லை.
3.அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன்… அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.

எவரும் தெரிந்து வரவில்லை.

1.அறியாத நிலைகள்…
2.“சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…”
3.தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.

அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை
1.அறிந்திடும் நிலை கொண்டு செல்லும் போதுதான்
2.அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எழுத்து வடிவில் புதிதாக ஒருவர் எழுதி இருந்தால் அதை மீண்டும் அவர் சொல்லும் உபாயத்தை வைத்து அதை எடுக்கும் போது தான் அந்த எழுத்தின் தன்மை கொண்டு மற்றதை அறிய உதவுகின்றது.

எத்தனையோ மொழிகள் இருக்கிறது நாம் பார்க்கின்றோம். இதைப் போன்று தான் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள்.
1.அவர்களுக்கு எழுத்தறிவு இல்லை என்றாலும்
2.தன் உணர்வால் இயக்கப்பட்டு அறிந்தனர்.
3.ஒன்றின் இயக்கச் சக்தியைத் தனக்குள் கவர்ந்து
4.அதனின் தன்மைகளை முழுமையாக அந்த மெய்யை உணர்ந்து கொண்டார்கள்.

மெய்யை உணர்ந்த அந்த மெய் ஞானிகளிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நமது பூமியில் மகா சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

அதை உங்களுக்குள் நினைவுபடுத்திக் கூர்மையாகப் பதிவு செய்கிறோம். பதிந்ததை நீங்களும் எண்ணி எடுக்க முடியும்.

ஒரு மரத்தில் விளைந்த ஒரு வித்தினை நாம் எங்கே கொண்டு போய் ஊன்றினாலும் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து செடியாகி மரமாகி தன் இனமான வித்துக்களை அது மீண்டும் விருத்தி செய்கின்றது.

மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்தார்கள். அந்த விண்ணின் ஆற்றலை எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்யும் பொழுது (அவ்வப்போது) அறிந்த உணர்வுகள்
1.ஆற்றல் மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைந்தது
2.அலைகளாக இன்றும் நமக்கு முன் படர்ந்துள்ளது.

அதனை குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாகக் கேட்க வைத்துப் பதிவாக்குகின்றோம்.

ஒரு வித்து தன் தாய் மரத்தின் உணர்வின் துணை கொண்டு அது எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ அது போல் ஞானிகள் கண்டுணர்ந்த அறிவின் ஞானத்தை பதியச் செய்யும் போது ஆழமாக நீங்கள் பதிந்து கொண்டால் போதும்.

ஞானத்தின் வித்து விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மையை நிச்சயம் உங்களுக்குள் விளையும். ஆகவே ஞானிகளின் உணர்வுகள் விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நான் கல்வி அறிவற்றவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் கல்வியறிவு அற்றவர் தான்.

இருப்பினும் அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில்
1.நான் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகிச் சென்றாலும்
2.அதைப் புரியும்படி செய்வற்காக வேண்டி என்னை அடிக்கடி உதைப்பார்.
3.உதைக்கும் போது அவரைப் பற்றி அதிகமாக எண்ணுவேன்.
4.அவர் சொல்வதைத் திருப்பி “என்ன..?” என்று கேட்கும்படி வைப்பார்.
5.அப்போது அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப திரும்ப எண்ணும் போது
6.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது.

அவர் என்னை அடித்து உணர்த்தினார். உங்களுக்குச் சொல்லாகச் சொல்லுகின்றேன். உங்கள் கவனம் “இதை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்…” என்ற ஏக்கம் இருந்தால்
1.மெய் ஞானிகள் கண்டதை நான் உணர்ந்தது போல்
2.நீங்களும் உணர முடியும்… காண முடியும்.

நம் குருநாதர் ஜோராகச் சமையல் செய்வார்

நம் குருநாதர் ஜோராகச் சமையல் செய்வார்

 

எப்பொழுது துயரம் என்று வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தீமைகள் புகாது தடுத்து நிறுத்துங்கள்… அந்தச் சக்தி பெற ஏங்குங்கள்.

அது வேதனையை உடனே அடக்கிச் சிந்தனையைக் கொடுக்கும்.
1.உங்கள் உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…? என்ற பொறுமையும் அதற்கு என்ன உபாயம்…? என்ற உணர்ச்சிகளும் உங்கள் கூட வரும்.
2.வாழ்க்கையில் வரக்கூடிய ஒவ்வொன்றையும் சமாளிக்கக் கூடிய தன்மையும்
3.நல்ல உணர்வுகளை நமக்குள் விளைய வைக்கும் சக்தியும் நாம் பெற முடியும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

சீக்கிரமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அரிசி பருப்பு காய் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டால் சுவை வருமா…?

கூடுமானவரை அரிசியை வேக வைத்த பின்பு மற்ற பொருள்களைச் சேர்த்தால் சுவையாக இருக்கும். ஆனால் அரிசி வேகுவதற்கு முன் மற்ற பொருள்களைப் போட்டால் அரிசி ஒரு பக்கம் வேகாதபடி இருக்கும்.

ஏனென்றால் சமையலில் பக்குவம் மிகவும் அவசியம் தேவை.

1.சில காய்கறிகள் உப்பை எடுத்துக் கொள்ளும்… சிலது எடுக்காது… அதற்கு நாம் போடும் உப்பு பத்தாது.
2.அந்தப் பக்குவம் தெரியாதபடி உப்பைச் சேர்த்தால் ருசி கெட்டுவிடும்.

காயாக இருந்தாலும் குழம்பாக இருந்தாலும் அது அது ஈர்க்கும் சமமான பருவம் பார்த்து உப்பைப் போட வேண்டும். சமைக்கத் தெரிந்தவர்கள் அந்தப் பக்குவத்தை அறிந்து செயல்படுத்துவார்கள்.

சில பேர் காயைப் போட்ட பின் உப்பையும் சேர்த்துப் போட்டு விடுவார்கள் வெந்த பின் பார்த்தால் உப்பை எல்லாம் காய் எடுத்துக் கொள்ளும்… குழம்பு சப் என்று இருக்கும். காரணம் சில காய்கறிகளில் உப்பை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கும்.

ஆகவே அந்தப் பருவம் தெரிந்து உப்பை இணைத்தால் தான் இரண்டும் ஒன்று போல இருக்கும்.
1.சமையல் வேலையெல்லாம் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.
2.எந்தெந்த நேரத்தில் எப்பொழுது எதைச் சேர்க்க வேண்டும் ஜோராகச் சமையல் செய்வார் குருநாதர்.
3.நீ இப்படிச் சமைத்துக் கொள்ளடா என்று சொல்வார்.

அதாவது… நீ உன் உடலுக்குள் சுவை மிக்க உணர்வுகளைச் சேர்த்துச் சமைத்துக் கொள் என்பார்.

சமையல் கலையைப் பற்றிச் சொல்லும் பொழுது இன்னென்ன பருவத்தில் எதை எதைச் சேர்த்தால் அது எப்படி ருசி கொடுக்கின்றதோ இதைப் போல உன் உயிர் ஒரு நெருப்பு.
1.அதிலே எந்தெந்த உணர்வுகளைப் போட்டு எந்தெந்த நேரத்தில் அதைச் சேர்க்க வேண்டும்…? என்று இணைத்தால்
2.அந்த உணர்வுப்படி சுவை மிக்க உணர்வுகளை உனக்கு ஊட்டும்.
3.அந்தச் சுவை கொண்ட நிலையில் எல்லோரையும் மகிழக்கூடிய சொல்லாகச் செயல்படும் என்று சொல்வார்.

இதற்கும் அதற்கும் சொல்லி அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

இயற்கை எவ்வாறு செயலாக்குகின்றது…? செயற்கை எப்படி உருமாறுகின்றது…? மனிதனான பின் எதை உருமாற்றுகின்றோம்…? என்று இப்படி குருநாதர் தெளிந்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

 

ஞானத்தின் வழித்தொடரை நமக்குள் விளைய வைத்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தகைய கடும் நஞ்சாக இருப்பினும்
2.அது தன்னை அணுகாது அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான் இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள். இந்தப் பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள்.

இந்தப் பிரபஞ்சம் செயலிழந்தாலும் இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டுத் தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.
2.இந்த அகண்ட பேரண்டத்தில் இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு.
3.மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதனின் நிலைகள் நாம் இன்று அதிலே இணைந்தால்தான் நல்லது.

பேரண்டம் முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது, ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து உணர்வின் தன்மை உடல் பெற்று
1.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.
3.இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்
4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள்தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாப்பு நிலையைப் பிளக்காது… அதிலே இந்த மகரிஷிகளின் உணர்வுடன் பாதுகாக்கும் அரணாக நாம் அமைத்திடல் வேண்டும்.

நமக்குள் நம் ஆறாவது அறிவை இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது மற்ற தீமைகள் நமக்குள் படர்ந்திடாது
1.அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும்… அமைக்க முடியும்.
2.அத்தகைய நிலைகளைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
3.விண்ணின் ஆற்றலைக் காண அந்த உணர்வைப் பெற
4.அவர் அருளியதைப் பெறும் பாக்கியத்தை நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். நம்மால் நிச்சயம் முடியும். எமது அருளாசிகள்…!