இந்த மனித வாழ்க்கை (உடல்) சதமில்லை என்றால் சதமானது எது…?

Astral powers of human soul

இந்த மனித வாழ்க்கை (உடல்) சதமில்லை என்றால் சதமானது எது…?

இந்த மனித உடலில் நாம் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? வாழப் போகின்றோம்…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு நெல் அந்தக் குறுகிய காலத்திலேயே வளர்ந்து விடுகின்றது.
1.நெல் விளைந்து விடுகின்றது.
2.ஆனால் அந்தச் செடியோ பட்டு (காய்ந்து) விடுகின்றது.

மரங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரு குறித்த காலத்தில் விளைகின்றது. தன் இன வித்துக்களைப் பெருக்கி விட்டு அதுவும் பட்டுவிடுகின்றது.

இதைப் போன்று தான் மற்ற உயிரினங்களும் அதனுடய ஆயுள் காலம் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் பின் அந்தச் சரீரத்தில் வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப அந்த உடலை விட்டே பிரிகின்றது.

அந்தச் சரீரத்தில் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அடுத்த உடலைப் பெறுகின்றது.
1.அதைப் போன்று தான் நமது உடல் “இது சதமல்ல…!”
2.சதமான (நிலையான) உடலை நாம் தேட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்த உணர்வை நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்தத் தீமைகள் நம்மை அணுகாது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி நாம் இதைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்,

அப்படிக் கூட்டினால் அடுத்து ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருக்கலாம். இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய இன்னலையும் நீக்கிடலாம். ஆகவே மனித சரீரத்தைப் பற்றி நாம் எதுவுமே எண்ண வேண்டாம்.

எத்தகைய சக்திகளை நாம் பெற்றாலும்
1.மலர்களோ மற்ற மரம் செடிகளோ உயிரினங்களோ பட்டுவிடுவது போல் தான் இந்த மனித உடலும் ஒரு நாள் மடிவது திண்ணம்.
2.ஆனால் நாம் என்றும் அழியாத நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றியே நாம் வாழ வேண்டும்.

தீயிலே குதித்து விட்டால் உடல் கருகிவிடுகின்றது. உயிர் கருகுவதில்லை. இந்த உடலில் வேகும் பொழுது எந்த அலறல்கள் இருந்ததோ அந்த உணர்வினை வளர்த்துக் கொண்டு இன்னொரு உடலுக்குள் சென்ற பின் ஐய்யய்யோ.. எரிகிறதே.., எரிகிறதே…! என்ற உணர்வைத்தான் அந்த உடலில் உருவாக்குகின்றது.

ஆகவே இந்த உடலில் நாம் சேர்க்கும் உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உடலில் நல்ல நிலையிலிருக்கும் பொழுதே நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து இதிலே விளைய வைத்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட அழியாத ஒளிச் சரீரத்தைப் பெறவேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் வந்தாலும்
2.எத்தகைய கஷ்டம் வந்தாலும்
3.பிறரால் துயரங்கள் வந்தாலும்
4.எத்தனை வெறுக்கும் நிலைகள் இருந்தாலும்
5.நாம் அந்த மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றி
6.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி
7.அந்த அருள் ஒளி உணர்வுடனே வாழ்வோம் வளர்வோம் என்று நாம் அனைவரும் தியானிப்போம்.

அழியாத ஒளிச் சரீரம் பெறுவோம். சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் இணைவோம்.

 

பூமிக்கடியில் மறைந்து வாழும் எதிரிகளை எப்படிக் கண்டுபிடிக்கின்றார்கள்…?

Gnana and education

பூமிக்கடியில் மறைந்து வாழும் எதிரிகளை எப்படிக் கண்டுபிடிக்கின்றார்கள்…?

இன்று அமெரிக்காவிலோ அல்லது வேறு நாடுகளிலோ விளையாடுகிறார்கள் என்றால் என்றால் அதனின் ஒலி/ஒளி அலைகளை அங்கிருந்து பரப்பப்படும் போது நேரடி வர்ணனையாக உலகம் முழுவதும் காண முடியும் என்ற நிலைகளுக்கு இன்றைய விஞ்ஞான அறிவில் செய்துள்ளார்கள்.

அதைப் போல உங்கள் வீட்டில் ஒரு சிறு வயரை (WIRE) நுழைய வைத்து விட்டால் போதும். உங்கள் வீட்டில் என்னென்ன சப்தங்கள் நடக்கின்றதோ அங்கே இருக்கக்கூடிய உருவங்கள் எதுவோ அதைக் காண முடியும். கேட்க முடியும். எலிகளோ அல்லது தூசிகளோ அவைகள் மூலமாகப் பார்க்க முடியும்.

ஏனென்றால் உலகப் போர் நடந்த காலங்களில் மற்ற நாட்டு நிலைகளை அறிவதற்காகச் செய்தார்கள். பெரிய மகாநாடுகள் நடக்கிறது என்றால் அதாவது ரகசிய ஆயுதங்களாக அங்கே இதனுடைய நிலைகளை அமைத்து விடுவார்கள்.

பறந்து செல்லும் “ஈ…!” போன்ற உயிரினத்தில் அதற்குள் ரேடியத்தைப் பாய்ச்சி உள்ளே அனுப்பி வைத்து விடுவார்கள். உள்ளே சென்ற பின் அங்கிருக்கும் அதனின் உணர்வலைகளைக் கவர்ந்து என்ன பேசுகின்றார்கள்…? யார் பேசுகின்றார்கள்…? என்ற நிலையில் அந்த உருவத்தையே அங்கு படமெடுக்கும் அளவிற்கு இதைக் கண்டுணர்ந்தார்கள்.

மேலை நாடுகளில் ஒவ்வொரு நாட்டின் ரகசியங்களையும் ஒவ்வொரு நாட்டினுடைய நிலைகளையும் இப்படித் தான் கண்டுணர்ந்தார்கள்.
1.இப்போது அதெல்லாம் இல்லை.
2.அதைக் காட்டிலும் மிகவும் நுட்பமாக வந்துவிட்டார்கள்.

ரேடியோ அலைகளைப் போன்று லேசர் (LASER) என்ற நுண்ணிய அலைகளை விண்ணிலிருந்து அந்த ஒலி/ஒளி அலைகளைப் பரப்பப்படும் போது சூரியன் காந்த சக்தி அதை அணுக்களாக படரச் செய்கிறது.
1.எங்கே எதனை அறிய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ
2.அங்கே இந்த அலைகளைப் பாய்ச்சுகின்றார்கள்.
3.ஒரு இடத்தில் பேசுகிறார்கள் என்றால் அந்த ஒலி அலைகளின் காந்தப் புலன்கள்
4.சுவர்களிலே படப்படும் போது அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அதைப் பதிவாக்கிக் கொள்கிறார்கள்.
5.அதை மீண்டும் ஆயிரம் மடங்கு பெருக்கப்பட்டு
6.என்ன பேசினார்கள்..? எந்த உருவம் அதைப் பேசியது…? என்று விஞ்ஞான அறிவில் தெளிவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அன்றைய மெய் ஞானி என்ன செய்தான்…? மெய் ஞான அறிவால் தன் உணர்வின் எண்ண அலைகளை விண்ணிலே பாயச்சி அதைத் தனக்குள் பெருக்கிக் கொண்டான்.

தன்னுடைய கூர்மையான எண்ணத்தைக் கோடி (எண்ணிலடங்காத) என்ற நிலைகள் அந்த உணர்வின் தன்மைகளைப் பெருக்கிப் பெருக்கி
1.விண்ணிலே என்ன செயல்கள் நடக்கிறது என்று தன்னுள் அறிந்தான் மெய் ஞானி.
2.அவன் ஆக்கத்தை ஊடுருவி அது எங்கிருந்து தோன்றியது…? என்ற நிலையை அறிய
3.விண்ணிலே தன் எண்ணத்தைப் பரப்பி அது உருவான காலத்தையும் அறிந்து கொண்டான்.
4.அதே சமயத்தில் அந்த உணர்வின் செயலாக்கங்கள் எதன் வழிகளில் மனிதனுக்குள் வந்தது..?
5.எதன் வழியில் மனிதனுக்குள் அது இயக்குகின்றது…? என்பதையும் மெய் ஞானி கண்டுணர்ந்தான்.

இதைப் போன்று தான் இன்றைய விஞ்ஞான அறிவின் தன்மையும் அது வளர வளர சூரியன் காந்த சக்தி ஒலிபரப்பும் ஒலி/ஒளிக்குள் சக்தி வாய்ந்த அலைகளைப் பாய்ச்சி
1.காற்றே புகாதபடி ஒரு அறை (ROOM) இருப்பினும்
2.தான் பாய்ச்சும் காந்தப் புலனறிவுகளை அந்த அறையின் மாடிகளில் (உச்சியி) உராய்ந்த பின்
3.அறைக்குள் இருக்கும் உணர்வலைகளை எல்லாம் அறிகின்றான்.
4.ஈராக்கில் சதாம் ஹுசேனைப் பிடிக்க இவ்வாறு தான் செய்தான்.

அவன் (சதாம் ஹுசேன்) கண்டு கொள்ள முடியாத இந்த உணர்வின் தன்மையை மேலே ஒலி/ஒளி அலைகளைப் பரப்பி அதற்குள் என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்ற நிலையும் அவன் முழுமையாக அறிந்து கொண்டான். விஞ்ஞான அறிவைக் கொண்டு தன் எதிரிகளை வீழ்த்திட அவன் இப்படிக் கண்டுணர்ந்தான்.

எந்தக் குண்டினாலேயும் தன்னை யாரும் தாக்காதபடி அவன் பூமிக்கடியில் கட்டடத்தைக் கட்டி (UNDER GROUND) வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவன் இருக்கும் இடத்தைக் கண்டு அதற்குள் ஊடுருவிக் குறி தவறாது பாய்ச்சி நொறுக்கி அவனைப் பிடித்தான். ஏனென்றால் இது இவனுடைய பரிச்சாந்தரம்.

இதே போல் தான் விண்ணிலே சுழன்று கொண்டிருக்கும் கோள்களின் இயக்கங்களையும் சில பாறைகள் (ASTEROIDS) அது போகும் பாதைகளையும் காணுகின்றார்கள். அதனின் உருவத்தையும் படமாக்குகின்றார்கள் விஞ்ஞானக் கருவிகள் கொண்டு.

அதனின் வேகத்தையும் அது மற்ற எந்தக் கோளில் போய் விழுகும் என்பதையும் அளந்தறிந்து சொல்கிறார்கள். ஏற்கனவே இருபத்தைந்து வருடத்திற்கு முன் பெரும் பாறை (கோளின் சிதைந்த பகுதிகள்) வியாழன் கோளில் விழுகும் என்று கணக்கிட்டார்கள்.

ஆனால் இதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளில் அந்தப் பாறைகள் வியாழனில் விழுகும் என்று இவர்கள் சொல்வதற்கு முன்னாடியே யாம் சொல்லியிருக்கின்றோம்.

ஆரம்ப உபதேசங்களை (1980களில்) எம்மிடம் கேட்டுப் பதிய வைத்தவர்களுக்கு இது ஞாபகம் இருக்கும். இதற்கு முன் அது நம் பூமியைத் தொட்டே அது சென்றிருக்கின்றது. ஆனால் இங்கே விழுகவில்லை.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு இவர்கள் ஒவ்வொன்றாக அறிந்து கொள்வதற்கு வெகு நாளாகும். ஆனால் நமது குருநாதர் அவர் கண்டுணர்ந்த அறிவால் அதனை எமக்குள் பதிவாக்கித் தெளிவாக எனக்கு எடுத்துக் (ஞானகுரு) காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்கு ஏன் சொல்கிறேன் என்றால் “இவருக்கு என்ன தெரியும்…?’ என்று நினைத்து லேசாக விட்டுவிடாதீர்கள் என்பதற்குத்தான்.

ஞானத்தின் வளர்ச்சியைக் கொண்டவனால் எதைப் பெருக்க முடிந்தது…? ஞானத்தை அறியாதவர்கள் (சூனியமாக) எதைப் பெருக்கினார்கள்…?

Image

wisdom-light

ஞானத்தின் வளர்ச்சியைக் கொண்டவனால் எதைப் பெருக்க முடிந்தது…? ஞானத்தை அறியாதவர்கள் (சூனியமாக) எதைப் பெருக்கினார்கள்…?

 

ரைட் சகோதரர்கள் (WRIGHT BROTHERS) இரண்டு பேரும் சேர்த்து அன்று ஒரு விமானத்தைச் செய்யத் தொடங்கினார்கள். பறவைகள் பறப்பதை ஊன்றிப் பார்த்து “அதைப் போல எப்படியும் பறக்க வேண்டும்…!” என்று முயற்சி செய்தார்கள்.

பறவைகள் அதன் இறக்கைகள் வீசும் நிலைகள் கொண்டு அதற்குள் ஏற்படும் காற்றின் இயக்கத்தைக் கண்டுணர்ந்த பின்
1.“ரேடர்” (RUDDER) அதனுடைய வேகமான நிலைகள் சுழற்சியாகி
2.மறுபடியும் தனக்குள்ளேயே சுழலச் செய்து
3.அந்த உணர்வின் ஈர்ப்பலையால் உந்தச் செய்வதும்
4.அது ஈர்க்கும் நிலைகள் கொண்டு மிதக்கும் நிலைகளையும் கண்டுபிடித்தான்…! (இரண்டு ரெக்கைகளை வைத்து.)

அதன் மூலம் இடைமறித்து வரும் காற்றின் நிலைகளை ஊடுருவிச் செல்வதும் அதனின் சுழலும் வேகத்தில் தனக்குள் அந்தக் காற்றை ஈர்க்கும்படிச் செய்து “தானாகவே மிதக்கச் செய்ய முடியும்” என்று விமானமாக அன்று கண்டுபிடித்தான்.

அதைக் கண்டுபிடித்து அவன் பறப்பதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தான். ஆனால் மற்ற அனைவரும் என்ன செய்தார்கள்…?
1.தற்கொலை செய்வதற்கு தயார் ஆகிவிட்டார்கள்…
2.இந்த இரண்டு பேரும் மரணமடைவதற்கு எதுவோ அதற்காக வழிவகுத்துக் கொண்டு உள்ளார்கள் என்று
3.அந்நாட்டு மக்கள் அந்த இருவருடைய நிலைகளை எண்ணிப் பரிதாபப்படுகின்றார்கள்.

ஆனால் தன் எண்ணத்தால் வெற்றிகரமாகப் பறந்தும் காட்டினான். அத்தகையை வலுவான சிந்தனை கொண்டு அதைச் செயல்படுத்திக் காட்டினான்.

அவன் கண்டுபிடிப்பைப் பின் தொடர்ந்தவர்கள் அவர்களைப் போன்ற சிந்தனையைக் கொண்டு இன்று புவி ஈர்ப்பைக் கடந்து செல்லும் இராக்கெட்டுகளைக் கண்டுபிடித்தார்கள்.

மேலே சென்று மீண்டும் புவி ஈர்ப்பிற்குள் வரும் போது உராயும் தன்மை கொண்டு அது சூடாகாமல் தணிந்து பூமிக்குள் இறங்கும் நிலையையும் கண்டுபிடித்தான் அதன் வரிசையில் வரக்கூடியவன்.

1.ரைட் சகோதரர்கள் விஞ்ஞானத்தின் அறிவை அங்கே பெருக்கினார்கள்… “விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்…!”
2.ஆனால் அதன் அருகிலே இருந்தவர்கள் அவர்களுடைய செயலைப் பார்த்து
3.பாவம்.. சாகப் போகிறார்கள்…! என்ற நிலையில் வேதனையத் தான் பெருக்கிக் கொண்டார்கள்.

இதைப் போன்று தான் முதலில் டி,வி.யைக் கண்டுபிடிக்கும் பொழுது புவி ஈர்ப்பின் நிலைகள் கொண்டு மனிதன் தன் எண்ணத்தால் எதைக் கவர்கின்றான் என்று அவன் உணர்ந்தான்.

அதை வைத்துத் தன் உணர்விற்குள் அவன் சிந்தனையை உயர்த்தினான்… பெருக்கினான்…! அந்தப் பெருக்கத்தின் தன்மை கொண்டு
1.ஒரு காந்தப்புலன் கவரும் நிலையும்
2.கவர்ந்திட்ட உணர்வின் தன்மை எதிலே உறைகின்றதோ
3.”அது நிழல் படமாகத் தெரிகின்றது…!” என்றும் அறிந்துணர்கின்றான்.

நீங்கள் வீட்டை அடைத்துக் கொண்டு பாருங்கள். அல்லது வீட்டில் ஜன்னலை அடைத்து விடுங்கள். அதன் வழியாகச் சிறிதளவு ஒளி வீட்டுக்குள் பட்டால் போதும்.
1.வெளியிலே யாராவது ரோட்டிலே நடந்து சென்றால்
2.அந்த ஒளி அலைகள் – “அவர்களின் நிழல்”
3.நம் வீட்டிலே தலை கீழாக நடந்து போவதைப் பார்க்கலாம்.

அதாவது அடைத்திருக்கும் வீட்டிற்குள் வெளிச்சம் புகும் இடத்தின் அருகிலே செல்லப்படும் போது தலை கீழாக நடந்து போகிற மாதிரித் தெரியும். (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

கேமராக்களின் மூலம் நேர்முகமாக எடுத்த படங்களைத் தலை கீழாகப் போட்டால் தான் நேராகத் தெரியும். ஆரம்ப காலச் சினிமாப் படங்கள் எல்லாம் அப்படித்தான்.

விஞ்ஞான அறிவால் “எதிர் மறையின் இயக்கங்கள்” எவ்வாறு இயக்குகின்றது என்று அவன் அந்த அறிவைப் பெருக்கினான். பெருக்கிக் கொண்ட பின் அது எவ்வாறு ஒலி/ஒளியாக உணர்வலைகளை எவ்வாறு கவருகின்றது என்று டி.வி.யைக் கண்டுபிடித்த பின் அவன் பேரானந்தப் பெரு மகிழ்ச்சியைப் பெருக்கினான்.

அவன் டி.வி.யை உருவாக்கி மற்றவர்களிடம் அதைச் செய்து காண்பிக்கப்படும் போது பெண்களெல்லாம் சேர்த்து கோழி முட்டையால் அவனை அடித்துக் கொல்வதற்காக ஆரம்பித்தார்கள். அவன் போலீஸ் ஸ்டேஷனில போய்ச் சரணடைந்தான்.

புதிதாகக் கண்டுபிடித்தவன் விஞ்ஞான அறிவு கொண்டு சந்தோஷத்தைப் பெருக்கினான். ஆனால் இவர்கள் அவனைத் தாக்கும் உணர்வைப் பெருக்கினார்கள்.

காரணம்… நாங்கள் வீட்டிலே குளிப்போம். பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதற்காக வேண்டி இந்த மாதிரிச் செய்திருக்கின்றான் என்பது அவர்கள் குறுகிய எண்ணம்.
1.எதனின் இணைப்பின் நிலைகள் கொண்டு எது இயங்குகிறது என்ற நிலையை அவர்கள் அறியாது
2.அந்தத் தீமையின் நிலையைப் பெருக்கிக் கொண்டார்கள் அவர்கள்,

ஏனென்றால் அவர்கள் கண்களால் அவன் கண்டுபிடிப்பைப் பார்க்கப்படும் போது அந்தக் குறையான உணர்வுகளை அவர்கள் உயிர் பிரம்மமாக்கி அதனின் குழந்தையாகச் சிருஷ்டித்து அதனின் செயலாக்கமாக அவனைத் தாக்கும்படிச் செய்கின்றது.

ஆனால் அவனோ உயர்ந்த நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவைக் காணும் நிலைகளில் அவனுக்குள் அதைப் பெருக்கினான். அவனைப் போன்ற எண்ணம் கொண்டவர்கள் இன்று எத்தனை மடங்கு பெருக்கி உள்ளார்கள்…!

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் மற்றவர்கள் செயல்களை எல்லாம் உற்றுப் பார்த்தாலும் பார்த்த நிலையில் நாம் நமக்குள் எதைப் பெருக்குகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

1.நமக்குள் வேதனையையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் கொதிப்பையும் பெருக்க வேண்டியதில்லை.
2.மாறாக மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு வர வேண்டும்.
3.இந்த மனித வாழ்க்கையில் நாம் முழுமை அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

தன்னை அறிந்தவன் இந்த மண்ணை அறிந்தவன் விண்ணை அறிந்தவன் அவர்கள் எல்லாம் இன்றும் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி ஒளியின் சுடராகப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக மாற்றி அந்த எல்லையை அடைதல் வேண்டும். அது தான் கடைசி எல்லை…!

சீதா பொய் மானைக் கண்டு ஆசைப்படுகின்றாள் – இலட்சுமணன் கோபப்படுகின்றான் ஏன்…?

Image

Sita and fake deer

சீதா பொய் மானைக் கண்டு ஆசைப்படுகின்றாள் – இலட்சுமணன் கோபப்படுகின்றான் ஏன்…?

இராமனிடம் வில்லும் அம்பும் உண்டு. அந்த அம்பை எய்வது போல மனிதன் ஒரு சொல்லைச் சொன்னவுடனே
1.இந்தச் சொல்லின் உணர்வலைகள் அங்கே அம்பாகப் பாய்ந்து
2.அந்த உணர்வின் அலைகள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.இதனால் தான் சீதா இராமா என்பது. (சீதா என்பது சுவை. இராமன் என்பது எண்ணம்)

நாம் எந்தெந்த வகையான குணங்களை எடுத்து அதற்குரிய எண்ணங்களைச் சொல் வழியாக எப்படிப் பாய்ச்சுகின்றோமோ அந்த உணர்வின் நிலையே “இயக்கம்” என்று இராமாயணத்தில் காட்டப்பட்டது.

தன்னுடைய எண்ணத்தால் கவர்ந்து சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈசனிடம் பட்டு இந்த உணர்வின் அலைகள் உடலுக்குள் வித்தாக விளைந்து விளைந்த வித்தின் தன்மை உயிருடன் இணைந்து அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பச் செய்யும்… இயக்கச் செய்யும்… நிலையைத்தான் “சீதா இராமா…!” என்பது.

இதைப் போல நமக்குள் எத்தனையோ இராமன்கள் உண்டு. எந்தெந்தக் குணங்களை எடுக்கிறோமோ அவை ஒவ்வொன்றும் இராமன்களே.
1.சீதாராமா (சுவைக்கொப்ப எண்ணம்)
2.ஜானகிராமா (உணர்வின் சக்தி இணையும் நிலை)
3.பலராமா (பல பல எண்ணங்கள்)
4.பரசுராமா (உழுது பயிரிடும் நிலை… சமப்படுத்தும் எண்ணங்கள்)
5.கோதண்டராமா (வில்லை முறித்தது – தீமைகளை ஒடுக்கும் தன்மை)

ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் இராமன் என்ற சொல்லாக வைத்து அழைக்கிறோம். அதாவது நாம் சுவாசிக்கும் நிலைகளில் நாம் எண்ணும் எண்ணங்களே அந்தந்த உணர்வின் சக்தியாக இயக்கச் செய்கிறது என்ற தத்துவத்தைத்தான் அன்று வான்மீகி எழுதினார்.

ஆஞ்சநேயன் என்பது குரங்கு, பரிணாம வளர்ச்சியில் குரங்கு என்ன செய்கின்றது…? தனது பிடிப்பின் நிலைகள் கொண்டு அது செயல்படுத்துகிறது.
1.கோபம் வந்துவிட்டால் யார் நல்லது சொன்னாலும் நாம் கேட்போமா…?
2.அட போய்யா… உனக்கு என்ன தெரியும்…? என்று சொல்வோம்.
3.சந்தோஷமாக இருக்கும் போது வெறுப்பான விஷயங்களைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா…? மாட்டோம்.
4.அது போல ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு இயல்பு உண்டு.
5.”குரங்குப்பிடி…!” என்று சொல்வதுபோல நாம் எந்தக் குணத்தை எடுத்துக் கொண்டோமோ
6.அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் நம்முடைய செயல்கள் இருக்கின்றது.

சகல சக்திகளையும் இந்த உடலான நிலைகளைக் கொண்டு இயக்கும் நிலையைத்தான் இராவணன் என்பது. அதாவது நம் உடல் தான் இராவணன்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனித உடலாக வரும் வரையிலும் சர்வ சக்தியும் நமக்குள் சேர்க்கப்படுகிறது. அதிலே அசுர சக்திகளும் உண்டு. அந்த அசுர சக்திகளைக் கொண்டு இராவணன் என்ன செய்கின்றான்…?
1.சிவனை நேசிக்கின்றான்… சிவன் என்பது நம் உடல் (திடப்பொருள்)
2.நாம் அனைவருமே உடலின் ஆசை கொண்ட நிலையில் இராவணனாக இருக்கின்றோமே தவிர இராமனாக அல்ல.

சீதா… தான் கவர்ந்து கொண்ட சக்தி நாம் எந்தெந்தக் குணங்களைக் கவர்ந்து கொண்டோமோ அந்தச் சக்தியை இராவணன் கவர்ந்து கொண்டு இலங்கைக்குள் வைத்திருக்கின்றான். (இலங்கை என்றால் உடல்)

1.ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு எல்லை உண்டு
2.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் பெரும் கடலாக இருந்தாலும்
3.நாம் எண்ணிய நிலைகள் ஒவ்வொன்றும் (தனித் தனியாக) தீவு போன்று இருந்தாலும்
4.இந்த உடலுக்குள் அது அனைத்துமே “அடங்கி இருக்கிறது…” என்ற நிலையைத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

வான்மீகி ஒன்றும் அறியாதவன் தான். காட்டிலே பல உயிரினங்களைக் கொன்று குவித்தவன். அவனுடைய சந்தர்ப்பம் பட்சிகள் மூலம் மெய் ஞானத்தை நுகரும் ஆற்றல் பெற்றான். இராமாயணக் காவியத்தையே படைத்தான்.

விண்ணுலகச் சக்தியின் ஆற்றல் அந்த உணர்வின் சொல் வடிவாக எண்ணங்களின் ரூபத்தைக் கொண்டு எவ்வாறு இயக்குகிறது…? என்பது தான் இராமாயணத்தின் தத்துவமே.

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்று சொல்கின்றார்கள்.
1.சீதையினுடைய ஆசையைக் கொண்டு
2.அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான்.
3.அதவது நாம் எண்ணும் ஆசைகள் அனைத்தும் பொய்.
4.நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு
5.ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம்மைத் திசை திருப்புகிறது…? என்ற நிலையை
6.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் முன் பகுதியிலே நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்… “பொய் மான்…!” என்று
7.அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் பேசிய பேச்சும் மற்றவர்கள் பேசிய பேச்சும் இந்த உணர்வின் மூச்சலைகள் இவை அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.

நாம் எதை நினைக்கின்றோமோ அதை இழுத்து நமக்குள் சுவாசித்து அந்த உணர்வுடன் மோதி இயக்கச் செய்யும் போது இலட்சுமணன். அதாவது
1.நாம் நினைப்பதைத் தூண்டி எழுந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணர்த்துகிறது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுவதால்தான் இலட்சுமணன் கோபம் உள்ளவன் என்கிறார்கள்.
3.நாம் நினைத்துச் சுவாசித்த சுவாசம் மோதியவுடன் இது பொய்யான ஆசை…! இதனால் உனக்கு விபத்து…! என்ற நிலையில்
4.இலட்சுமணனாக இருந்து இயக்கி நமக்குள் அந்த உண்மையைச் சொல்கின்றான்.

நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த உண்மையைச் செய்கின்றது. ஆனால் ஆசைப்படும் போது இருள் சூழ்ந்த நிலைகளுக்குள் நாம் செல்கின்றோம்.

சைக்கிள் வேலை தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சைக்கிள் கடையை ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சூழ்நிலையைப் பார்த்து “நீ சைக்கிள் கடை வைத்து நடத்தினால் நஷ்டமாகிவிடும்…!” என்று ஒருவர் சொன்னால் போதும்,

இங்கு கடை வைப்பது அவருக்குப் பிடிக்கவில்லை அந்தப் பொறாமையினால் தான் அவ்வாறு சொல்கிறார்…! என்று இப்படித்தான் நினைப்போம்.
1.எண்ணிய ஆசையானது சீதா… அது கவர்ந்து கொண்ட சக்தி
2.அடுத்தவர்கள் சொல்லும் உணர்வினுடைய நிலைகளை நாம் சுவாசித்துச் சிந்திக்கும் போது வருவது இலட்சுமணன்

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது… நம்மை இயக்குகிறது…? என்ற நிலையை அன்று வான்மீகி இத்தகைய உணர்வின் தன்மையாக இராமாயணக் காவியத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் சொன்ன மூலக் கருத்து இது தான்.

ஆனால் இன்று எத்தனையோ நிலைகளில் அந்தக் காவியம் திருத்தப்பட்டுள்ளது.

நம்முடைய குருநாதரின் பலம் எப்படிப்பட்டது…?

meignanam

நம்முடைய குருநாதரின் பலம் எப்படிப்பட்டது…?

நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…!” – ஈஸ்வரப்பட்டரைப் போன்று (தற்சமயத்தில்) நம் பூமிக்குள் மனிதன் என்ற நிலையில் மனிதச் சரீரம் பெற்ற நிலையில் பித்தனைப் போன்றுதான் பல சரீரங்களிலும் இருந்துள்ளார்.

பித்தனைப் போன்று ஒவ்வாரு சரீரத்திலும் வாழ்ந்தார்…! என்றால் என்ன அர்த்தம்…?

1.புற வாழ்க்கையினுடைய நிலைகளை (நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கையை) அப்புறப்படுத்தி விட்டு
2.மெய் ஒளியையே காண வேண்டும்…! என்ற உணர்வுடன்தான்
3.கடந்த காலங்களில் அவர் செயல்பட்டிருக்கிறார்.

மெய் உணர்வின் தன்மையில் தான் (அவர்) செயல்பட வேண்டும் என்று எண்ணி இருந்தார் என்றால் அதனின் உண்மை நிலை என்ன…?

அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் அவருக்குள் விளைந்த ஆற்றல்கள் அனைத்தையும்
1.அக்காலங்களில் வாழ்ந்தோருக்குள்ளும் சரி…
2.இக்காலத்தில் வாழ்வோரின் நிலைகளுக்குள்ளும் சரி…
3.அந்த மெய் ஒலிகளைப் பதிவு செய்து
4.அவரவர் எண்ணங்களில் அதை விளைய வைக்கும் ஆற்றலாக அதை வெளிப்படுத்திச் சென்றார்.

ஒவ்வொரு சரீரத்திலும் பித்தனாக இருந்து அப்படி வெளிப்படுத்திச் சென்றாலும் தற்சமயத்தில் ஈஸ்வரப்பட்டர் என்ற இந்த உணர்வின் உடலிலே இருக்கப்படும் போது அவரைச் சந்தித்தோர் அனைவருமே அவருடன் அணுகிய நிலைகளில் எதைப் பெற்றார்கள்…?

1.எனக்குச் சொத்து வேண்டும் சுகம் வேண்டும்…
2.என்னுடைய நோய்கள் எல்லாம் போக வேண்டும்…
3.நான் நன்றாக வைத்தியம் பார்க்க வேண்டும் அதன் மூலம் பணம் சம்பாரிக்க வேண்டும்
4.குருநாதர் அருளாசி இருந்தது என்றால் இன்னும் இரண்டு வயல்களை வாங்க வேண்டும்… வீடு கட்ட வேண்டும்…!
5.பேரும் புகழும் பெற வேண்டும்…! என்ற இது போன்ற ஆசை கொண்டு தான் அவரைச் சூழ்ந்தார்கள்.

ஆனால் நானோ (ஞானகுரு) அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் என்னைக் கூப்பிடும் போதெல்லாம்… இவர் பெரிய மந்திரக்காரராகத் தெரிகின்றார்…! இவரைப் பார்த்தால் பித்துப் பிடித்தது போலிருக்கிறது என்று நினைத்து விழுந்து அடித்து ஓடிக் கொண்டிருந்தேன்.

நான் அவரை விட்டு நகர்ந்து செல்லும்போதெல்லாம்
1.”உன்னை விட்டேனா பார்…!’ என்று சொல்லிக் கொச்சையாகத் திட்டி என்னை விரட்டிக் கொண்டு வந்தார்
2.ஆனால் விரட்டும் போது நான் தப்பித்துச் சென்றாலும் என்னை விடாமல்
3.அவர் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மையை எனக்குள் உணர்த்தினார்.
4.பல உணர்வின் சக்திகளைப் பதியச் செய்து மெய் ஒளியைக் காணச் செய்தார்.
5.ஒவ்வொரு நொடியிலும் பல இன்னல்களை எனக்குக் கொடுத்துத் தான்
6.பல மெய் உணர்வுகளையும் பல பல சக்திகளையும் பல வகையிலும்
7.அதை எல்லாம் என்னை அறியாமலேயே எனக்குள் பதிவு செய்து வைத்துவிட்டார்.

இதைப் போன்று தான் இப்பொழுது உபதேசிக்கும் போது நீங்கள் சாமி என்னமோ செய்கிறார்…! ஏதோ செய்கிறார்…! என்று நினைக்கக் கூடாது.

குருநாதர் மெய் ஒளியின் ஆற்றலை எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதைப் போல செவி வழி உங்களுக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உங்கள் புலனறிவால் ஈர்க்கச் செய்து ஞானிகளின் உணர்வின் சத்தை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்குண்டான நிலைகளைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

அது மட்டுமல்ல…! எந்த மெய் ஞானி எனக்கு உணர்த்தினாரோ அதை உங்களுக்குள் உணர்த்தச் செய்து அவரின் நினைவை நீங்கள் கூட்டும் போது காற்றிலே மறைந்திருக்கும் நல்ல சக்திகளைப் பெற தியானமாகக் கொடுக்கின்றோம்.

1.அந்தத் தியானத்தின் மூலம் உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து
2.அதன் வழி கொண்டு காற்றிலே மிதந்து கொண்டிருக்கும்
3.மெய் ஞானிகளின் அருள் வித்தையும் மெய் ஞானிகளின் அருள் சக்தியையும்
4.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேராற்றல் மிக்க சக்தியையும்
5.உங்களைப் பெறச் செய்வதற்காக இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றேன்.

உங்களை அறியாமலே நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்…!

பசி உள்ளவர்களுக்குத்தான் உணவு கொடுக்க முடியும்…!” ஏன்…?

eswarapattaya-namaha

பசி உள்ளவர்களுக்குத்தான் உணவு கொடுக்க முடியும்…!” ஏன்…?

மெய் ஞானிகளின் சக்தியை எடுத்ததால் “அது கிடைத்தது…! இது கிடைத்தது…!” என்று நாம் மற்றவர்களிடம் வெளிப்படுத்தி அதன் மூலம் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி மெய் வழிக்கு வருவதைக் காட்டிலும்
1.மெய் ஒளியைத் தான் பெற வேண்டும் என்ற ஆசை
2.அவர்களுக்குள் அது தூண்டப்பட்டு இங்கே வருவது தான் முக்கியம்.

பெரும் விளம்பரங்களைச் செய்து ஆசைகளையும் பேராசைகளையும் ஊட்டுவதைக் காட்டிலும்
1.”தான் மெய் ஞானம் பெற வேண்டும்…!” என்ற ஆசை
2.அவரவர்களுக்கு அந்த உந்துதல் வரும் போது தான்
3.மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகள் அங்கே கிடைக்கும்.

ஏதோ இந்தச் சாமி (ஞானகுரு) சொல்கிறார். அவரிடம் போய் வரலாம் என்று இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வினுடைய வேட்கைகளில் வரும் போது அது நிலைத்திருக்காது. குட்பை…! (GOOD BYE) போட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள்.

1.தன் உள்ளத்தாலே மெய் உணர்வுகளைப் பெறவேண்டும்
2.மெய்ப் பொருளைக் காண வேண்டும்
3.இயற்கையின் பேருண்மைகளை உணர வேண்டும் என்ற வேட்கைகள் உருவாகி
4.அந்த வேட்கையின் அடிப்படையில் வரும் போது தான்
5.யாம் உபதேசிக்கும் இந்த ஆற்றலையும்
6.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஒளியைப் பெறக் கூடிய தகுதியும் வருகிறது.

ஆகையினால் தான் அதிகமாக விளம்பரம் செய்வதோ மற்ற நிலைகளையோ யாம் கூடுமான வரை தவிர்ப்பது. காரணம் ஒவ்வொரு உள்ளத்திலும் அந்த ஆசை தோன்ற வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற வேட்கையை ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டச் செய்வதற்காகத்தான் அடிக்கடி இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் பதிய செய்கின்றோம்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வின் எண்ண அலைகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்கின்றோம்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் வெகு தொலைவில் எட்டாத தூரத்தில் இருந்தாலும்
1.உங்கள் எண்ணங்களை எங்கே எட்டும்படிச் செய்து
2.அங்கிருந்து வரும் சக்தியினை பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

அந்த ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி வளர்ச்சி அடைந்து வரும் பொழுது அதனின் உண்மையின் நிலைகளை நீங்கள் நிச்சயம் உணரலாம்.

தனித்த நிலையில் சக்தி பெற முடியுமா…?

eternal-sages-world

தனித்த நிலையில் சக்தி பெற முடியுமா…? 

நம் உடலுக்கு என்ன தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?
1.இன்று நம் உடலை எத்தனையோ அழகு படுத்துகின்றோம்.
2.நாளைக்குச் செத்த பிற்பாடு தூக்கிப் போட்டு விடுகிறார்கள்…!
3.இந்த ஈசன் வெளியிலே போய்விட்டது என்றால் உடலான நீசனுக்கு என்ன மதிப்பு…?

தூக்கி இழுத்து வெளியே போட்டு விடுகின்றார்கள். யாராவது சீந்துகின்றார்களா…? அதனை இழுத்து இங்கேயும் அங்கேயுமாகத்தான் போடுகின்றார்கள்.

நம் உடலை எத்தனையோ அழகாகத்தான் வளர்த்தோம்…! ஆனால் செத்த பிற்பாடு யாராவது கவனிக்கின்றோமா…?

இந்த உடலை முக்கியமாக நினையுங்கள். ஆனால் இந்த உடலுக்காக வேண்டி இந்த உணர்வை (என்னை) இப்படிப் பேசுகின்றானே அப்படிப் பேசுகின்றானே… அது பேசுகின்றானே… இது பேசுகின்றானே… என்ற அந்த வேதனை நமக்கு வேண்டவே வேண்டாம்…!

யாராவது நம்மைக் குறையாகப் பேசினால் உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

நாளைக்கு அவர்களுக்கு நல்லது பேசக்கூடிய எண்ணம் வரட்டும். நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரட்டும்.
1.இதைச் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.
2.இது நமக்குத் தான்…!

நுகர்ந்த உணர்வு தப்பு என்று தெரிவதற்கே நான் தப்பு பண்ணினேன் என்பது தனக்குத் தெரிந்தால் தானே…!
1.அவன் தப்பு செய்கின்றான் என்று தெரிய வேண்டும்.
2.எனக்குத் தெரியாமலே விட்டால் தப்பை நான் கண்டுபிடிக்க முடியாது.

உதாரணமாக வழக்கமாக நாம் செல்லும் ரோட்டிலே பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். நேற்றைக்கு… அதற்கு முந்திய நாள்… அதற்கு முன்னாடி… எல்லாம் நன்றாகத் தானே இருந்தது,
1.பள்ளமாக எப்படி இருக்கப் போகின்றது…! என்று கண் மூடித்தனமாக
2.நானே குருட்டுத்தனமாகப் போய்க் கொண்டிருந்தால் பள்ளத்தில் போய் “லபக்…” என்று விழுந்து விடுகின்றேன் அல்லவா…!

முன்னாடி பார்த்து நான் உஷாராகப் போக வேண்டும் அல்லவா…? நேற்று இந்தப் பாதையில் தானே வந்தேன்… அதனால் ஒன்றும் இருக்காது…! என்று போனால் என்ன ஆகும்.

இதைத்தான் ஆறாவது அறிவின் தன்மையைச் சேவற்கோடியோன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். “சேவற் கொடியோனே…!” என்று சொன்னால் நாளை வரக்கூடிய நிலைகளை தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது நம் ஆறாவது அறிவு.

காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப் போன்று ஆறாவது அறிவு பெற்றவர்கள் உண்மையின் உணர்வை அறியக் கூடியவர் என்று “சேவற் கொடியோனே” என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அந்த முன் சிந்தனை வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாம் பெறுகின்ற அந்த மகரிஷிகளின் சக்திகள் எல்லோருக்கும் கிடைக்க வெண்டும் என்று நாம் அதற்காக வேண்டித் தவமிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன். அதனால் கல்கி யுகத்திற்கு நான் தனியாகப் போவேன் என்று சொன்னால் எங்கேயும் போக முடியாது.

ஒரு அரிசியை வைத்துப் பசியைத் தீர்த்து விடுவேன் என்று நினைத்தால் அது ஏமாளித்தனம். ஒரு நெல்லை வைத்து வேண்டுமானால் பல நெல்களை உருவாக்கலாம். பல நெல்களாக்கி மொத்தமாகக் குவித்துச் சமைத்து ஆக்கிச் சாப்பிட்டோமானால் எல்லோருக்கும் கொஞ்சம் பசி தீரும்.

ஒன்றை வைத்து நான் சமைத்துச் சாப்பிடுவேன் என்று சொன்னால் எப்படி முடியும்…? அதோடு போய்விடும். அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும்
1.இந்தக் கௌரவம் அந்தக் கௌரவம் என்று கௌரவம் பார்த்தோமென்றால் போய்விடும்.
2.எல்லாம் மண் தின்று விடும்.
3.அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
4.அந்த மெய் ஒளியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்து
5.நமக்குள் மெய் ஒளியை வளர்த்து நாம் பறக்க (கல்கி) வேண்டும்.

மூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…?

third-eye-

மூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…?

இரும்பு எவ்வளவு கடினமானது. இந்த இரும்பு உருவாவதற்குக் கதிரியக்கச் சக்தியே முக்கிய காரணம், நட்சத்திரங்களிலிருந்து வருவது தான் கதிரியக்கச் சக்திகள்.

சாதாரண நெருப்பிலே இரும்பை எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அது உருகாது. அந்தக் கதிரியக்கச் சக்தியினுடைய வெப்பம் (அழுத்தத்தால்) அதிகமாகும் போது தான் இரும்பு உருகத் தொடங்குகிறது. ஆனாலும் அந்தக் கதிரியக்கச் சக்தியிலிருந்து அது தான் மாறுவதில்லை.

அதே சமயம் இந்த அணுக் கதிரியக்கங்களைக் குவித்து அதை இரும்பிலே மோதச் செய்தால் இரும்பு அப்படியே ஆவியாக மாறிவிடும்.

அணு ஆயுதங்களை (ATOM BOMB) வெடிக்கச் செய்தால் பெரும் புயலாக மாறி இங்கே இருக்கக்கூடிய இடமே தெரியாத நிலைகளில் ஒவ்வொரு பொருளையும் மாய்த்துவிடும். ஏனென்றால் அணு சக்தியின் வீரியமடைந்த நிலைகள் அது.

இதைப் போன்று தான் எவ்வளவு கடினமான பொருளாக இருந்தாலும் பெரும் மலையாக இருந்தாலும் அதீதமான அழுத்தம் கொண்டு அதை அழுத்தப்படும் போது அப்படியே ஆவியாக மாற்ற முடியும்.

1.அன்று மெய் ஞானிகள் சாதாரண மனிதராக வாழும் காலத்தில்
2.தன் உடலில் எடுத்து கொண்ட விண்ணின் ஆற்றல்கள் கொண்டு
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு தன் மூச்சலைகளைப் பாய்ச்சி
4.பெரும் குகைகளை உருவாக்கித் தவம் இருந்தார்கள்.
5.அன்று அப்படிச் செய்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்னாடி வந்த பெரும் பகுதியானவர்கள் மனித இனத்திலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக இதே அழுத்த நிலைகளை எடுத்துக் கொண்டு தனக்குச் சாதகமான நிலைகளைச் செயல்படுத்திச் சென்றார்கள்.

ஆனால் அவ்வாறு சாதகப்படுத்தினாலும்
1.பல மனிதர்களின் உடலிலிருந்து கதிரியக்கப் பொறியின் சக்திகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
2.சில காலம் கழித்து மனித ஈர்ப்புக்குள்ளேயே வந்து சிக்கிக் கொண்டான்.
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு பல அதிசயங்களைச் செய்த நிலைகள் எல்லாம் அரசர்கள் செய்த நிலைகள்.

நாம் சொல்லும் சித்தன் முனிவன் இவர்கள் எல்லாம் மாற்று அரசர்கள் போர் செய்து வரும் போது தான் தப்பிப்பதற்காகத் தன்னுடைய மூச்சலைகள் கொண்டு சில குகைகளை ஏற்படுத்தினார்கள். அது உண்மைதான்.

இப்படி இந்தப் புற நிலைகள் கொண்டு மனித உணர்விற்குள் வருவதுபோல
1.புறப் பொருளில் இருந்து எடுக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகள் (RADIOACTIVE MATERIALS) கொண்டு
2.எந்த ஒரு பொருளையும் அழுத்தி ஆவியாக மாற்ற முடியும் என்பதை
3.இன்று விஞ்ஞானிகள் கண்டுணர்நதிருக்கிறார்கள்.

அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்த சில நிலைகளை விஞ்ஞானிகள் இன்று இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ற சாதனங்களை உருவாக்கி அலைவரிசைகளில் வைத்து அளந்து அளந்து ஆராய்ந்து அறிந்து கொண்டார்கள்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க பேரருள் உணர்வுகளைக் கவர்ந்து
1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் அழுத்தமாக எண்ணினால் அது உடலுக்குள் சென்று
2.நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமையான உணர்வுகளை ஆவியாக மாற்றி
3.நம்மையும் நம் உடலையும் நம் உயிரான்மாவையும் ஒளியாக மாற்றச் செய்யும்.

கருவில் வளரும் குழந்தையின் பூர்வ புண்ணியத்தை நிர்ணயிக்கும் தாய் தந்தையரின் சந்தர்ப்பங்கள்…!

thirugnana-sambandhar-thevaaram

கருவில் வளரும் குழந்தையின் பூர்வ புண்ணியத்தை நிர்ணயிக்கும் “தாய் தந்தையரின் சந்தர்ப்பங்கள்…!” – குணாதிசயங்கள்

உதாரணமாக ஒரு தாய் ஒரு கெமிக்கல் (இரசாயணம்) தொழிற்சாலையில் வேலை செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கே வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதில் உள்ள விஷத் தன்மைகளை அந்தத் தாய் நுகர நேர்கின்றது.

அதே சமயத்தில் அந்தத் தாய் கருவுற்றால் கருவில் இருக்கும் குழந்தைக்கு தாய் நுகரும் விஷங்கள் இணைந்தாலும் அந்தக் குழந்தை விஷத் தன்மையைத் தாங்கும் குழந்தையாக வளர்கின்றது.

ஆனால் அந்தத் தாய் வேலை செய்யும் போது அதிகமாக அந்தக் கெமிக்கலை நுகர்ந்து விட்டால் உடலில் கடும் நோயாகி அது மடியும் தன்மை வருகின்றது.

அதே சமயம் தந்தை… அந்தக் கெமிக்கல் தொழிற்சாலையில் வேலை பார்த்து இந்த விஷத்தின் தன்மை அதிகமாக நுகர்ந்து அதிலே உருபெறும் கருவின் தன்மை பெண்பாலின் நிலைகள் கொண்ட இந்த. சுக்கிலத்துடன் கலக்கப்படும் போது என்ன ஆகின்றது…? (ஆனால் தாய் அங்கே வேலை செய்யவில்லை)

ஆணில் விளைந்த விஷத் தன்மை சுக்கிலத்திலும் கலந்து இரண்டும் கருமுட்டையாக உறைந்து இணைக்கப்படும் போது கருவிலே இருக்கும் குழந்தையின் உடல்களிலே விஷத் தன்மையான நிலைகள் கலந்து கடும் நோயாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.

1.தாயுடன் இணைந்த உணர்வுகள் (முதலிலே சொன்னது) கருவாக வளர்க்கப்படுவதற்கு
2.இதை உணவாகக் கொடுக்கின்றது. குழந்தை உரு பெறும் தன்மை சீராக்குகின்றது.
3.ஆனால் தந்தையின் உடலில் விளைந்த விஷத்தின் தன்மை
4.திடப்பொருளாகவும் உடலாக மாற்றப்படும் போது
5.குழந்தை உடலில் நோயாக மாறுகின்றது.

தாய் அந்தக் கெமிக்கலைத் தன் உணர்வாகச் சுவாசிக்கும் போது தாயிற்கு நோயாக மாறுகின்றது. கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வுகள் பட்டபின் அது நோயாக மாறுவதில்லை.

அதே சமயம் மற்றொரு குழந்தை கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்படிச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் குழந்தையை கருவுற்ற தாய் நுகர்ந்தது என்றால் என்ன ஆகின்றது…?

நோயினால் அவதிப்படும் அந்த உணர்வுகளை அந்தத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்து கருவிலே இணையப்படும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாகின்றது.

1.தாய் உற்றுப் பார்த்த குழந்தை உடலில் எந்த நோய் உருவானதோ
2.அதே நோய் இங்கே கருவில் விளையும் குழந்தைக்கும் உருவாகின்றது.
3.இதற்குண்டான வித்தியாசங்களைச் சொல்கிறேன்.

மற்ற விஷத் தன்மைகளைப் பார்க்கும் போது தான் சுவாசித்த உணர்வுகள் அணுக்களில் வளரப்பட்டுத் தாய்க் கருவிலே விளையப்படும் போது “விஷத்தை வெல்லும் சக்தியாகக் குழந்தை பெறுகின்றது…!”

உதாரணமாக ஒரு கருவுற்ற தாயைத் தேள் கொட்டி விட்டால் அந்த விஷத் தன்மை கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஊடுருவி விடுகின்றது. மருந்து கொடுத்ததும் தாய் பிழைக்கின்றது.

ஆனால் அதே சமயம் அந்தக் குழந்தை பிறந்த பின் அதன் மீது தேளை வைத்திருந்தாலும் தேளின் விஷம் அந்தக் குழந்தையைப் பாதிக்காது.

அதே போல் ஒரு விஷப் பாம்பு கருவுற்ற தாயைத் தீண்டிவிட்டால் இந்த விஷத்தின் தன்மைகள் உடலுக்குள் போகின்றது. மருத்துவம் செய்த பின் தாய் மீண்டு விடுகின்றது.

ஆனால் பாம்பின் விஷம் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு ஊடுருவப்பட்டு விஷத்தை வெல்லும் அந்தச் சக்தியைப் பூர்வ புண்ணியமாகப் பெறுகின்றது.

இந்த மாதிரிப் பலவிதமான உணர்வுகள் மாறி அந்தக் கருவில் விளையும் சிசுகளுக்கு உருவாகின்றது. இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

பரிணாம வளர்ச்சியில் வளரக்கூடியது மற்ற உயிர் இனங்கள். ஆனால்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த மனிதன் உணர்விற்குள் விளைந்தது
2.இன்னொரு உடலுக்குள் புகுந்த உடனே
3..அங்கே வளர்ச்சி அடைந்த நிலைகள் இங்கே மீண்டும் வளர்ச்சி அடையும் தொடருக்கு வந்து விடுகின்றது – விஷத்தின் தன்மையாக…!

இந்த இரண்டிற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

ஏனென்றால் மனிதனாக வளர்ச்சி அடைந்த நாம் இன்றைய வாழ்க்கையில் வரும் தீமைகளையும் வேதனைகளையும் நீக்கத் தவறினால் நம் உயிரான்மாவில் நஞ்சு பெருகி மீண்டும் மனிதனல்லாத உருவைத்தான் பெற முடியும்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து தீமைகளை மாற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.ஒளியான உணர்வுகளை நம் உடலில் பெருக்கி ஒளியான அணுக்களாகப் பெருக்க வேண்டும்.
3.நம் உயிராத்மாவை ஒளியாக ஆக்க வேண்டும்.
4.நமக்கு அழியாச் சொத்து அது தான்…!

இன்றைய உலகில் எது மெய்…? எது பொய்…? என்று நாம் உணரும் வழி

vedavyasa

இன்றைய உலகில் எது மெய்…? எது பொய்…? என்று நாம் உணரும் வழி 

அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை…! இல்லை… இது தான் உண்மை…! என்று.

அடுத்துப் பார்த்தால் அத்வைதம் தான் உண்மை…! இல்லை… துவைதம் தான் உண்மை….! என்று இதிலேயும் சண்டை.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அந்த மெய்ப் பொருள் காணும் நிலைகளை அன்று ஞானிகள் காட்டி இருந்தாலும்
1.இன்று நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…
2.இல்லை இல்லை…! நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…! என்று
3.ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலைகளில் தான் ஆன்மீகம் உள்ளது.

இதில் வல்லமை எப்படி வருகிறது…? வாய் வன்மை (சொல் வலிமை) இருந்தது என்றால் அவர் சொல்வது தான் பெரிது.
1.வாய்மையின் தன்மையை வன்மையாக்கி
2.வன்மையின் தன்மையைத் தான் நாம் பெரிதாக்கி விடுகின்றோம்.
3.இன்று உலகில் இருக்கக்கூடிய தன்மைகள் இது தான்.

ஒருவர் தவறு செய்து விட்டார் என்றால் அவர் தவறு செய்தார் என்று கற்பனை பண்ணியே போகும்.
1.தவறு செய்தவர்ககள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று
2.நாம் அதைத் திருப்பியே சொல்லி விடுவோம்.
3.அவன் தான் பொய் சொன்னான்…!
4.இல்லை இல்லை…! நீ தான் இப்படிச் சொன்னாய் என்று
5.இப்படி இரண்டும் ஒன்றாகிப் போய்விடும்…!
6.குற்றமில்லாதவரைக் குற்றமாக்கி விடுகிறோம்
7.குற்றம் செய்தவரைக் குற்றம் செய்யவில்லை என்கிறோம்.

இன்றைக்கு….. வேறு ஒன்றுமே வேண்டியதில்லை. ஒருவர் மோசமான போக்கிரியாக இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பல தவறுகளையும் செய்கிறார்.

தவறையெல்லாம் செய்துவிட்டு இங்கே உங்களுக்கு முன்னாடி வந்து
1.என்னைப் பார்…!
2.யாரிடமாவது கேள்…? நான் தவறு செய்தேனா….? என்று மட்டும் சொல்லச் சொல்லு பார்க்கலாம்….! என்று சொன்னால்
3.அவர் தவறு செய்தார்… என்று நீங்கள் சொல்வீர்களா….?
4.இந்த மாதிரி எல்லாம் நீ தவறு செய்திருக்கிறாய்… என்று அவருக்கு முன்னாடி நீங்கள் சொல்ல முடியுமா…?
5.உங்களால் முடியாது (ஏனென்றால் சொன்னால் அடுத்து நமக்குப் பல தொல்லைகள் கொடுப்பான் என்ற பயம் கண்டிப்பாக வரும்)

ஏனென்றால் நம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அதற்கென்று ஒரு உணர்வுக்கு உணர்வு அஞ்சும் உணர்வுகள் வரும் – “நேரடியாக இருக்கும் போது…!” (ஆள் இல்லாத போது எல்லாம் பேசுவோம்…!)

ஒருவரிடம் நண்பராகப் பழகுகிறீர்கள். அவர் தன் வாழ்க்கையில் வரும் சிக்கல்களால் சங்கடப்படும் பொழுது அதை உங்களிடம் சொல்கிறார். அதைக் கேட்டு நீங்களும் சங்கடப்படுகின்றீர்கள். நண்பராக இருப்பதால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்தச் சங்கடம் வரும்.

ஆனால் அதே சமயம் இன்னொரு நண்பர் நம்மிடம் வருகிறார். முதலில் சொன்ன நண்பரைப் பற்றிச் சொல்லத் தொடங்குவார். பார்..! அவர் ரொம்ப மோசமான ஆள். உன்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்.. என்று சொல்வார்.

இல்லை…! அவர் அப்படிப்பட்டவர் இல்லை நல்லவர் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் திருப்பித் திருப்பி அவர் மோசமான ஆள் மோசமான ஆள்…! நீங்கள் நினைப்பது போல் நல்லவரில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

இதை இப்படி இரண்டு தரம் பதிய வைத்துக் கொண்ட பின் அடுத்தாற்போல் ஏதாவது சிறு குறை ஏற்பட்டால் போதும்.

ஆஹா…! அன்றைக்கு இதனால் தான் “மோசமான ஆள்…!” என்று அவர் சொன்னார் போல.. என்று அந்த நண்பர் பதிவாக்கியது நினைவுக்கு வரும்.
1.அப்புறம் இந்த நண்பரைக் குறையான உணர்வுடனே தான் பார்க்கச் சொல்லும்.
2.அதற்குத் தகுந்த மாதிரியான சொல்லும் வரும்.
3.குறையின் உணர்வு அதிகமாகி நம்முடைய பார்வைகள் அவர் குறையாக்கும்.
4.நாமே இதை உற்பத்தி செய்து விடுகின்றோம்.

ஆக நம்மை அறியாதபடியே இந்தக் குறையை உருவாக்கி நமக்குள் குறைகளை வளர்த்து பல நிலைகளைச் செய்து விடுகின்றோம். நல்லதைப் பொல்லாததாக மாற்றி விடுகின்றோம். பொல்லாததை நல்லதாக்கிக் கொள்கின்றோம்…!

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இதைப்போல நிலைகளில் இருந்து நாம் மீள்வது எப்போது…? எப்படி…? எது மெய் எது பொய் என்று எப்படி அறிவது…?

நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ உணர்வுகள் நம் நல்ல எண்ணத்தை இருளாக்குகின்றது. அந்த இருளிலிருந்து விடுபடும் சக்திகளை நாம் பெறுவதற்காகத்தான் ஆலயங்களில் விளைக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.

தீப ஆராதனை காட்டியதும் அங்கே மறைந்த பொருள்களை நாம் தெளிவாகப் பார்க்க முடிகின்றது.

1.தீபத்தைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது துவைதம்…!
2.தீபத்தின் வெளிச்சத்தால் இருள் மறைந்து அங்கே பொருள் தெரிவது போல எங்கள் வாழ்க்கையிலே பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி “அந்தச் சக்தியை” நமக்குள் சுவாசிக்க வேண்டும். – இது அத்வைதம்…!
3.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் இந்த ஆலயம வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இதை எண்ணி எண்ணி நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் விளைந்து… “உயிருடன் சேரும் பொழுது” விசிஷ்டாத்வைதம்…!

கண்ணுக்குப் புலப்படுவது துவைதம். சூட்சமமாக இருப்பது அத்வைதம். சூட்சமாக இருப்பதைக் கவரும் பொழுது அது உறைந்து உயிருடன் இணைந்து அதன் அறிவாக இயக்கப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.
1.அதாவது, அந்தச் சக்தியாக… “அதுவாகவே நாம் ஆகின்றோம்…!
2.ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இது.
3.ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தை ஒவ்வொருவரும் வளர்ப்போம்
4.மெய் வழி சென்று மெய் ஞானம் பெற்று அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.