“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

Gnanaguru - Venugopalswami

“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள். நம்மைக் காக்கின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும். மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வள்வுதான் குடிக்க வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது. எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு கழன்று விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும்.

“எவ்வளவு நாள்…” இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்? சந்தோஷம் நீடித்து இருக்கின்றதா…! காசையும் செலவழித்துச் சிறிது நாள் வாழ்வதற்குள் எவ்வளவோ வேதனைகளைச் சந்திக்க நேர்கின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறச் செய்து அதை உற்சாகப்படுத்தி நல்ல உறுப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
2.சுவாசித்த அந்த உணர்வலைகளை
3.கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி
4.நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் வலு பெற்று உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.

அந்த ஆற்றலைப் பெற துருவ தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் பூமியின் வட துருவப் பகுதி வழியாக வந்து கொண்டிருக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியான
3.“அருள் ஞானப் பொக்கிஷத்தை” நமக்குள் கவரும் அந்த அதிகாலை நேரமே “துருவ தியானம்”.

துருவ தியானத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் உயிர் நேராக அந்தத் துருவ நட்சத்திரத்திலேயே “உங்களைக் கொண்டு போய் நிறுத்தும்”.

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி

POLARIS

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி 

நாம் மனிதரான பிற்பாடு பிறர் சொல்லும் கவலைகளையும் சங்கடங்களையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்குள் கவலையையும் சஞ்சலத்தையும் வேதனையையும் உண்டாக்கும் சந்தர்ப்பம் தன்னாலேயே வந்து விடுகின்றது.

ஆகவே கவலை வேதனை போன்ற உணர்வுகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்களுடைய தொழில் நன்றாக இருக்கும்”
என்ற இது போன்ற வார்த்தைகளைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்.

இது போன்ற வார்த்தைகளை அந்தக் கவலையாகச் சொன்னவர்களிடம்… “நீங்கள் கோபமாகச் சொன்னாலும் சரி”.

“இந்த உணர்வின் அழுத்தம்..,” நஞ்சான உணர்வுகள் உங்களிடம் வராது தடுத்துவிடும்.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும், நீங்கள் நலமாக இருப்பீர்கள், உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவர்களைப் பார்த்துக் கோபமான உணர்வுடன் “அழுத்தத்துடன் சொன்னால்” நஞ்சான உணர்வுகள் அவர்களிடமிருந்து விலகும்.

“நம்மிடம் அது வராது…!”

இல்லையென்றால் அவர்களுடைய கவலைகளை சஞ்சலங்களை “உம்… ம்…” என்று நீங்கள் காது கொடுத்துக் கேட்டால் உங்களிடம் சோர்வு வந்துவிடும். சிந்தனைத் திறனும் குறையும்.

ஒரு நண்பர் மேல் பாசமாக இருக்கிறோம். திடீரென்று… அந்த நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

“நேற்று வரை நன்மைகள் செய்தாரே…! இன்று விபத்தில் சிக்கி இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணுவோம்.

“ஆத்ம சுத்தி செய்வதை மறந்துவிடுவோம்…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணுவதை மறந்துவிடுவோம்.

அடிபட்ட நண்பரை ஆஸ்பத்திரியில் பார்த்து எப்படி இருந்தவர் “இப்படி இருக்கின்றாரே…” என்று எண்ணினால் இதன் உணர்வுகள்தான் வரும். நமக்குள் அது வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி உடனே நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் இருளான உணர்வுகள் நம்மை “இயக்கவிடாதபடி…” தடுத்துவிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பரின் உடல் முழுவதும் படர்ந்து அவருடைய வேதனைகள் நீங்கி நல் உணர்வைப் பெறக்கூடிய சக்தி பெறவேண்டும்.

அவர் பூரண குணமடைய வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

“இது சாதாரணமானதல்ல…” நீங்கள் இதன் உணர்வுகளைச் சொல்வதை.. “நண்பர் தம் காதால் கேட்டால்.. அவர் நுகர நேர்ந்தால்..” நீங்கள் எண்ணிய உணர்வுகள் நண்பரிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

சீக்கிரமே நண்பர் நலம் பெறுவார். இது போன்று நீங்கள் செய்து பாருங்கள்.

ஒருவர் எவ்வளவு கடிமான நோயில் இருந்தாலும் கூட நீங்கள் கூடுதலாகச் சில நிமிடம் அவருக்காகத் தியானம் செய்யும்போது அவர் சீக்கிரமே நோயிலிருந்து விடுபட்டு நலம் பெறுவார்.

“உங்களுக்கு… அந்தச் சக்தி உண்டு…!” என்று யாம் கூறுகின்றோம்.

மற்றவர்களுடைய வேதனைகளை நோய்களை உங்களால் நீக்க முடியும். ஆனால், தவறிப் போய் நோயாளியின் வேதனை உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நண்பருடைய உடல் முழுவதும் படரவேண்டும், நண்பருடைய இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், அவர் வேதனையிலிருந்து விடுபட வேண்டும். அருள் சக்தி அவர் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் நண்பரையும்.., “இது போன்று எண்ணச் சொல்லுங்கள்”. இதை உங்கள் பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால், மற்றவர்கள் சொல்கிற கஷ்டங்களை நாம் கேட்கிறோம். கேட்டவுடன் நாம் சோர்வடைகின்றோம்.

ஆத்ம சுத்தியையும் அருள் உணர்வுகளையும் சொல்லும்போது சோர்வை நீக்குகின்றோம்.

“அந்த அருள் சக்தியைத்தான்” யாம் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

உடல் வலி… நோய்கள்.. இவைகளெல்லாம் நமக்கு ஏன் வருகின்றது…?

health bliss (2)

1.பயம்

நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சிரமத்தில் ஆழ்ந்துள்ளவர்கள். பல இன்னல்கள், சங்கடம், சலிப்பு, வேதனை, இதைப் போன்று எத்தனையோ வேதனைகள்படுகின்றோம்.

பண வசதி இருந்தாலும், பணமற்று இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒருவர் செய்யக்கூடிய தவறுகளை, அந்த உணர்வை நாம் சுவாசிக்கும் பொழுது, அந்த ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்குள் இயக்கிவிடுகின்றது. இந்த ஆற்றல்மிக்க நிலைகள் இருப்பதனாலே, பயம் என்று நாம் நினைத்தவுடன் ஆற்றல் அதிகமாகின்றது.

வேகமாக வரக்கூடிய பஸ், நம் மீது மோதிவிடுமோ” என்ற உயிரின் துடிப்பின் நிலைகள் நம் உணர்வின் உச்ச நிலைகளில் தூண்டுவதனால் தான், நாம் வேகத் துடிப்புடன் நாம் நம் உடலை இயக்கி, நாம் உடனடியாக நகர்ந்து செல்ல முடிகின்றது.

2. கோபம் – பிறர் செய்யும் தவறைப் பார்க்கும் நிலை

அதைப் போல ஒரு குற்றம் ஏற்படுகின்றதென்றால், அந்தக் காரமான உணர்வுகள் நமக்குள் தூண்டப்படும் பொழுதுதான், அந்தக் குற்றத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, உடனே தவறு செய்வதை நிறுத்தக் கூடிய நிலைகளும் ஏற்படுகின்றது. ஏனென்றால், இது உணர்த்தும் ஆற்றல்.

ஆகையினாலே, நாம் சாந்தமான நிலையில் இருந்தாலும், நல்லதைச் செய்தாலும் “இந்த நல்லதைக் காப்பதற்கு” கோபம், அவசரம், ஆத்திரம் இவையெல்லாம் தேவையுள்ளவை தான்.

ஆனால், நாம் எப்படி ஒரு மிளகாயை ஒரு குழம்பிற்குள் பக்குவப்படுத்துகின்றோமோ, அதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் அதிகமான நிலைகளை நாம் சுவாசித்து விட்டாலும் நம் உடலுக்குள் சென்றபின், அந்தக் காரத்தின் அளவைக் குறைக்கச் செய்வதுதான், நாம் செய்யும் இந்த தியானம்.

அந்தக் காரத்தைக் குறைக்கவில்லை என்றால், நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் கலந்து, அதுவும் கலந்து தீமையான அணுக்கள் விளையும் தன்மை பெற்றுவிடும்.

நாம் இன்று எப்படி மரங்களுக்கு, சத்தான பல உணர்வை ஏற்றியவுடன், அந்தச் சத்தின் தன்மை பெற்றவுடன், கனியினுடைய வர்க்கங்கள் மாறுகின்றது, மரத்தின் வித்தின் தன்மைகளும் மாறுகின்றது.

அதைப் போன்று, நாம் நல்ல குணங்கள் கொண்டு நம் உடலை வளர்த்திருந்தாலும், நல்ல குணங்கள் சீரிய பண்புகள், நம் உடலில் வளர்த்திருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் நாம் வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்ட பயம், அவசரம், ஆத்திரம், கோபம், குரோதம், இவை அனைத்துமே நமக்கு அவசியம்.

3. குரோதம்

கோபம் என்பது ஒரு தவறின் உணர்வை நமக்குள் சுட்டிக் காட்டுகின்றது. அந்தக் கோபத்தை அதிகமான நிலைகள வளர்த்துக் கொண்டால், இங்கு குரோதமாக அதையே திரும்ப, திரும்ப, இந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டி நாம் எந்த உணர்வின் தன்மை வளர்ந்ததோ, அந்தக் குற்றத்தையேதான் நாம் பேசிக் கொண்டிருப்போம்.

குரோதம் என்பது, நமக்குள் வளர்ந்த பருவமான நிலைகள். தன் முதிர்ந்த நிலைகள் பெறுவதனால், குரோதம். நாம் திரும்பத் திரும்ப எண்ணுகின்றோம். இதைப் போன்ற நிலைகள்தான் நமக்குள் வளர்ந்து வருகின்றது.

4. வெறுப்பு

மரம் செடி கொடிகளுக்குச் சத்தான நிலைகளை நாம் விஞ்ஞான அறிவு கொண்டு நாம் சேர்த்தவுடன், அதனுடைய நிலைகள் சேர்த்துக் கொண்டு, அந்த மரத்தின் தன்மை வருகின்றது.

நமக்குள் நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், சந்தர்ப்பவசத்தாலே நாம் ஒரு சமயம் அதீதக் கோபப்பட்டுவிட்டால், அல்லது ஒருவர் மேலே வெறுப்புப் பட்டுவிட்டால்,

வெறுப்பின் உணர்வுகளை அவர் மேலே பதித்தபின், அவரைப் பார்த்தவுடன் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும். நமக்குக் கோபம் வரும். அவர் எவ்வளவுதான் நல்லது செய்திருந்தாலும் அந்த நல்லதைப் பற்றி நாம் சிந்திக்கக் கூட முடியாது.

ஆக, நல்லது செய்தாலும், குற்றத்துடன் அவர் செய்வது நல்லதல்ல என்றும், அந்தக் குற்றத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய நிலை சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. அதையேதான் ஏற்படுத்தும்.

இதையேதான், நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை நம் புலனறிவிலே நாம் ஒரு முறை ஒன்றைப் பார்த்து பயந்துவிட்ட்டாலோ, அதைக் கண்டவுடன் நமக்குப் பயம் வரும்.

ஏனென்றால், நாம் எந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ, அந்த உணர்வின் தன்மை அதில் பட்டவுடன், அந்த நினைவலைகள் தூண்டப்பட்டு, அந்த உணர்ச்சிகளை நாம் சுவாசிக்கப்பட்டு, அதன் நிலைகளில் நாம் செயல்படுகின்றோம்.

இது இயற்கையின் நியதிகள். இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திலும், நமக்குள் பல நிலைகள் ஓடிக் கொண்டே, மாறிக் கொண்டே இருக்கின்றது. நாம் இவற்றையெல்லாம் அறிந்துகொள்வது மிகவும் நல்லது.

5. வேதனை

வேதனை என்பது அதிக விஷம். நாம் எவ்வளவோ பந்த பாசத்துடன் இருந்தாலும், குழந்தை படிப்பிலே கொஞ்சம் குறை ஏற்பட்டால், அதிகம் வேதனைப்படுகின்றோம். நாம் வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டால், வேதனைப்படுகின்றோம்.

ஒருவரின் நிலைகளில் நாம் நல்லது செய்திருந்தாலும், அவர்கள் சிறிது குறைகள் செய்துவிட்டால், எனக்கு இப்படிச் செய்கிறார்களே என்று வேதனப்படுகின்றோம். இந்த வேதனை என்பது அனைத்துமே விஷம். விஷம் கலந்தது.

இதைப் போன்று நாம் ஒவ்வொரு நிமிடமும், நம்மையறியாமேலே நல்லதை எண்ணிவிட்டு, அதனால் சில குறைகள் ஏற்பட்டால் அந்தக் குறையின் உணர்வுகள் தென்பட்டவுடன், அவர்களை எண்ணி நம் காரியங்கள் தடைப்பட்டால், நாம் வேதனைப்பட்டு, வேதனையான உணர்வுகளை நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்குள், இந்த விஷமான சத்தை ஏற்றிவிடுகின்றோம்.

நீங்கள் நல்லதை எண்ணினாலும், அந்த வேதனையுடன்தான் பேச முடியும். ஏதாவது ஒரு கோவிலுக்குப் போனாலும், நல்லதைச் சொன்னாலும், நல்லதைப் பெறவேண்டும் என்றாலும், ஒரு பொருளை வாங்கப் போகவேண்டும் என்றாலும் கூட, அந்த வேதனை கலந்த பலவீனமான குரலில்தான் பேச முடியும். காரணம், இந்த நல்ல குணங்களைத் தூண்டினாலும், அதற்குள் விஷம் கலந்திருக்கும்.

6. மனித நிலைகளை நாம் எப்படிப் பெற்றோம்?

பாலுக்குள் விஷத்தைக் கலந்து, நாம் குடித்தால் சோர்வடையச் செய்கின்றது. அதைப் போலத்தான், உயிர் முதலில் புழுவாகத் தோன்றி, பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொன்றிலும் உடல்கள் தன் விஷமாக மாற்றிக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ள, தனக்குள் எடுத்துக் கொண்ட விஷத்தின் நிலைகள் நற்குணங்களாக, “தன்னைப் பாதுகாக்கும் உணர்வின் சத்துக்களாக” அதிகமாகக் கூட்டி, மனித நிலைகளுக்கு வந்திருக்கின்றோம்.

மனிதனாக உருவாவதற்கு, நமக்குள் விஷத்தைக் கழிவாக்கி, நல்லதை உடலாக்கும் தன்மை பெற்று, இன்று மனிதனாக நாம் வந்துள்ளோம்.

மிருகங்கள் அனைத்துமே, விஷத்தைத் தன் உடலாக மாற்றி, தான் உட்கொள்ளும் உணர்வின் சத்துகள் அனைத்திலும் கலந்துள்ள விஷத்தை, தன் உடலாக மாற்றிக்கொள்ளும். அதற்குள் மலத்தை நல்லதாக மாற்றிவிடும்.

ஆனால், அதே சமயம் அதனுடைய எண்ணத்திலேயே, அந்த விஷத்தின் தன்மையை தனக்குள் தாங்கக்கூடிய சக்தி இருந்தாலும், தனக்கு ஒரு விபத்து ஏற்படும் பொழுது, அதற்கு வேதனைப்படக்கூடிய, துன்பப்படக்கூடிய நிலைகளில் இம்சைகள் கொடுத்தாலும் அது இம்சையைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், அதே சமயம்,

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்ச்சியின் வேதத்தை, மிருகங்கள் அதிகமாகக் கூட்டுகின்றது.

நமக்கு பயம் வந்து, அது அதிகமான துடிப்புகளை ஏற்படுத்தியவுடன், தனக்குள் தப்பிக்கும் உணர்வுகளைச் சிலர் எண்ணுவார்கள். இல்லையென்றால், “இறந்துவிடுவோமோ” என்ற எண்ணத்தைத்தான், இந்த மனித நிலைகளிலே அதிகமாகக் கூட்டும். தன்னைப் பலவீனப்படுத்திக் கொள்ளும்.

ஆனால், உயிரினங்களோ, தனக்குள் எவ்வளவு வேதனை வந்தாலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்ச்சியின் வேகத்தை உந்தி, அதற்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் அலைகள் தான், பல கோடிச் சரீரங்களை உருமாற்றி, இன்று நம்மை, மனிதனாகப் பிறக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.

7. உடல்வலி, நோய்கள், இவைகளெல்லாம் மனிதனுக்கு ஏன் வருகின்றது?

ஆக, நாம் இவ்வளவு நல்ல அணுக்களை உடலுக்குள் சேர்த்து, மனிதனாக உருப்பெறச் செய்தபின், ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கையிலே பல சந்தர்ப்பங்களில் நாம் இம்சைகள் பட்டு, அதன்வழியில் எடுத்துக் கொண்ட விஷத்தை, நல்ல குணங்களுக்குள் படரச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

இதனால்தான், நம் உடலுக்குள் கை, கால் குடைச்சல், வேதனை, தலைவலி, மேல்வலி, இதைப் போன்ற நிலைகள் நமக்குள் அடிக்கடி வருகின்றது. அதைப் போன்று, உடலில் நோவும், நரம்புகளிலே நோவும், தசைகளிலே நோயும் வருகின்றது.

இவையெல்லாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அணுக்களின் தன்மை கொண்டு, விஷங்களாக விளைந்தாலும், தசைகளில் அந்த அணுக்கள் கலந்தவுடன் தசை நோவு வரும்.

அது அமில சக்தியாக மாறி, நரம்புகளில் அது சேர்க்கப்பட்டால், அது உடம்பு வலிகள் ஏற்படும். அதனுடைய நிலைகள் எலும்புடன் ஒட்டிய உணர்வின் அலைகள் அதீதமான நிலைகள் சேர்ந்துவிட்டால், எலும்புக்குள் இந்த வேதனை தோன்றிவிடும்.

எலும்புக்குள்ளும் இந்த வேதனைகள் கலந்து, சதா மேல்வலிக்கும். இவையெல்லாம் எலும்புக்குள் தோன்றும் நிலையை இன்று டாக்டர்களால் கண்டு கொள்ள இயலாது.

எலும்புக்குள் கலந்த காந்த அலைகள், அது வீசிக் கொண்டே இருக்கும் பொழுது, அது தசைகளிலே படும் பொழுது, வேதனைகள் தெரியும்.

ஆனால், தசைகளிலே இருக்கக் கூடிய வேதனையை நிவர்த்திப்பதற்குத்தான் டாக்டர்களால் முடியும்.

எலும்புக்குள் இருக்கக் கூடிய நிலைகளை விஞ்ஞானம் இதுவரையில் கண்டுகொள்ளவில்லை. எலும்பினுள் அந்த அலைவரிசைகள் பாய்வது அவர்களுக்குத் தெரியாது. இது மெய்ஞானிகளுக்குத் தான் தெரியும்.

8. உங்களை நீங்களே காத்துக்கொள்ள, யாம் கொடுக்கும் வலிமையான ஆயுதம்

ஆகவே, அத்தகையை கடுமையான நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடுவதற்குத்தான், வலிமையான ஆயுதமாக, யாரும் செய்யாததை, “ஆத்ம சுத்தி” என்ற அந்த ஆயுதத்தை, யாம் உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

அதைக் கொண்டு, வரும் விஷமான நிலைகளை அடக்கி, உங்களுக்குள் புனிதம் பெறமுடியும். பேரொளியாக மாற்ற முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

9. ஆத்ம சுத்தி

“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.

பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், ஞானகுரு,  சற்குரு,  சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,  நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

இவ்வாறு, வலுக்கூட்டிய  இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவி செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால்,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
1.உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து
2.“உயிர் வழி நுகர வேண்டும்”.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா,  ஜீவ அணுக்கள்,  என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று  எண்ணி,

நம் உடலுக்குள், அலை அலையாகப் படரச் செய்யவேண்டும். இதுவே ஆத்ம சுத்தி.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு “ஆழமாக” பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெறமுடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் படரவிடும் பொழுது, நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.

நலம் பெறுக, வளம் பெறுக, மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுக.

வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

 

பல காலம் எண்ணி பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது. ஏனென்றால்
1.நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது.
2,அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுதுதான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது.

வலித்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.

இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும். ஆனால் சிலர் என்ன சொல்வார்கள்…?
1.இப்படித்தான் நான் எண்ணினேன்.
2.,இன்னும் வலி குறையவில்லை… வலி நிற்கவில்லையே…! என்பார்கள்.
3.வலி நிற்கவில்லையே…! என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஒரு இடத்தில் (நிறுத்திய பின்)
1.“FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… வலி நீங்க வேண்டும்… என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ… அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…!” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி “வலி நிற்கவில்லையே…
2.வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இப்படித்தான் அதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகி சுழன்று வரப்படும் பொழுது தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது.

அப்பொழுது நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது. அதனால் அது சோர்வடைகின்றது. அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்யவேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். “எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்..?” என்ற நிலைக்கு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி
2.உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால்
3.வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் வல்லமை நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!