விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரத்தில் “அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது”

விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரத்தில் “அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது”

 

“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று பாடலைப் பாடுகின்றோம். இந்த உலகமே விஷத்தன்மையில் சிக்கினாலும்
1.அகஸ்தியன் உணர்வு கலந்த இந்தத் தமிழ் நாட்டில் விஷத்தை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றோம்.
2.நான் இதைப் பேசுகின்றேன் உங்களைப் பெறச் செய்கிறேன் என்றால் நான் அல்ல
3.நமது குருநாதர் காட்டிய வழியில் அந்த அகஸ்தியன் உணர்வையும்
4.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரியஷியாகித் துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் பெருக்கப்படும் பொழுது
5.விஞ்ஞான அறிவால் எத்தகைய பேரழிவுகள் வந்தாலும் “நம் தமிழ்நாடு காக்கக்கூடிய சக்தியாக வரும்… விஷத்தை வெல்லும் சக்தியாக வரும்…”

நீங்கள் இதைச் சாதாரணமாகக் கேட்கிறீர்கள் என்று எண்ண வேண்டாம்…!

அருள் உணர்வுகளைப் பெருக்கப்பட்டு இருளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே… குரு எனக்குக் கொடுத்த அந்த அருள் உணர்வுகளை நீங்களும் பெருக்கி… அதை நீங்கள் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது நம்மைக் காக்க நம் உணர்வுகள் பாதுகாப்பாக வரும்.

நியூட்ரான் என்ற குண்டின் சக்தி அதிகமாகும் பொழுது அது அழுத்தமான நிலையில் மற்றதை எப்படி விரட்டிச் செல்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் தன்மையாக அது உருவாக்குகின்றது.

1.அந்த உணர்வை நமக்குள் பெருக்கினோம் என்றால் நாளை வரும் விஞ்ஞானப் பேரழிவிலிருந்து தமிழ்நாடு தப்பும்.
2.பெரிய பெரிய தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறுகின்றனர்.
3.அகஸ்தியனின் உணர்வு தான் இதையெல்லாம் வெளிப்படுத்துகின்றது.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அகஸ்தியனுடைய தத்துவங்கள் வரும். ஆனால் முழுமையாக யாரும் அதை விளக்க உரையாகக் கொடுக்கவில்லை. அரசர்களுக்கு உகந்ததாக மட்டுமே மாற்றி விட்டார்கள். உண்மையின் உணர்வை அறிய முடியாது மறைத்து விட்டார்கள்.

இனி வரக்கூடிய எதிர்காலம் மிகவும் சிக்கலாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் தமிழ் மண்ணைக் காக்க வேண்டும். அதன் வழி கொண்டு உலகைக் காக்க வேண்டும்.

உலக மக்களைக் காக்கும் உணர்வு வர வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தை எடுத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி இங்கே பரவச் செய்து இதன் வழி கொண்டு ஒவ்வொரு நிலையிலும்… அறியாத இருளை நீக்கும் சக்திகள் பரவி அந்த ஞானிகள் காட்டிய பண்புகள் “இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலைகளாக வர வேண்டும்…”

அன்று ஒரு சமயம் அகஸ்தியன் இந்தப் பூமியைத் திசை திருப்பினான். அதைக் காவியங்களாகப் படைத்துள்ளார்கள். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகின்றது. அப்போது அனைவரும் அங்கே திரண்டு வரும் பொழுது பூமி தாங்காது என்பதற்காக அகஸ்தியனை… “நீ தெற்கில் போ…” என்று சிவன் சொன்னார்.

தெற்கிலே அவன் சென்ற பிற்பாடு… தன் எண்ணத்தால் இந்த பூமியைக் கவிழும் நிலையில் இருந்து திசை திருப்பினான்… ஒரு நிலையில் நிலைப்படுத்தினான் அகஸ்தியன்.

விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரங்களில் அதே அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது. அதாவது உணர்வுகள் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அகஸ்தியன் உணர்வைப் பெருக்கி… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாமும் பெருக்கி
2.இந்த நாட்டைக் காத்திடும் நிலை பெறுதல் வேண்டும்.
3.நாட்டைக் காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்க முடியும்
4.மற்றவரை காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்

ஆனால் நம்மை மட்டும் நம் வீட்டை மட்டும் தனித்துக் காக்க வேண்டும் என்றால் பிறரின் வெறுப்பின் தன்மையைத் தான் கவர நேரும்.

பிறர் காக்கப்பட வேண்டும் என்ற தெளிவான நிலையில் பெற வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்… வீட்டையும் காக்கின்றோம்… நாட்டையும் காக்கின்றோம்.

இதைப் போன்று அகஸ்தியன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது அவன் வாழ்ந்த வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும். ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

தவறாதீர்கள்… என்னமோ ஏதோ என்று இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

“தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை” நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்

“தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை” நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்

 

ஒரு சமயம் குருநாதர் எம்மை ஒரு மலை மீது போகச் சொன்னார்.
1.அது அகஸ்தியன் அன்று இருந்த இடம்… அவன் நீர் சக்தியைத் தனக்குள் பெற்றவன்.
2.அவன் பாதம் பட்ட இடங்களில் எல்லாம் மேகங்களைக் குவிக்கின்றது உச்சியிலே தண்ணீர் உருவாகின்றது.

ஆனால் மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை. மேலே உருவாகின்றது… அங்கே தண்ணீர் உருவாகி ஒரு பக்கம் போகிறது. ஆனால் அடிவாரத்தில் தண்ணீர் இல்லை.

அதே சமயத்தில் ஒரு இடத்திலே குருநாதர் என்னை உட்காரும்படி சொல்கின்றார். அந்த இடத்தில் அமர்ந்து சங்கடமாக வெறுப்பாகப் பேசச் சொல்கிறார்.

அவன் இப்படிச் செய்கின்றான் இவன் மோசம் செய்கின்றான் இவன் இப்படித் தவறு செய்கின்றான் நீ தீமையான நிலைகளை நினைத்துச் சொல்லிக் கொண்டிரு…! என்று சொன்னார்.

சொல்ல ஆரம்பித்ததும் அந்த இடத்திலே மேகங்கள் குவிவது அப்படியே விலகிச் செல்கின்றது… அங்கிருக்கும் ஈரப்பசையே காணாமல் போய் விடுகிறது.

1.மனிதனுடைய உணர்வுகளால் மேகக் கூட்டங்கள் எப்படி விலகுகிறது…? மேகத்தை எவ்வாறு கலைக்கின்றது…?
2.மனிதரின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து உண்மைகளை அறிந்துணர்ந்து அதை நீங்களும் அறிய வேண்டும் என்று சொல்கின்றோம். காரணம் விஞ்ஞான உலகம் கடும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

கூடுமான வரையிலும்
1.நீங்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.
3.நீங்கள் எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.

அத்தகைய உணர்வுகள் விளைந்து ஒவ்வொருவருமே அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்ப நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்கள் உடலும் நன்றாக இருக்கும்… குடும்பமும் நன்றாக இருக்கும்… தொழிலும் நன்றாக இருக்கும்.

1.நாம் வாழும் தெரு ஊர் நாடு எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
2.தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும்
3.தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய சக்தியாக
4.உயர்ந்த பண்புகளுடன் வளர வேண்டும் என்று நாம் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் அதற்காக வேண்டித் தென் இந்தியா வட இந்தியா மற்ற நாடு என்று பிரித்து விடக்கூடாது. நம் நாட்டு மக்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று படிப்படியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.

உலகத்தையே காக்க முடியும். தமிழ்நாடு தான் உலகைக் காக்கப் போகின்றது.
1.இங்கே தருமத்திற்கும் நியாயத்திற்கும் செயல்பட்ட பூமி இது… அதர்ம வழிகளில் அதிகமாக இங்கே செயல்படவில்லை.
2.அதர்ம வழிகள் அதிகமாக இல்லாததால் கூடுமானவரை இங்கே மற்றவரைப் பாதுகாக்க கூடிய நிலைகள் வளர்கின்றது.

ஒருவர் திட்டினாலும் கூட இரக்கம் ஈகை என்ற பண்புகள் இங்கே அதிகமாக உண்டு. மற்ற இடங்களில் இரக்கம் என்ற நிலை இல்லை.

ஆகவே…
1.தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை
2.நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்.
3.நம் உடலிலே முதலிலே பெருக்கினால் தான் நம்முடைய உணர்வுகள் இங்கே பரவும்.

நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

கஷ்டம் என்பதைத் தூக்கி எறிந்து விட்டு அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் ஊர் நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தால் “அருள் உணர்வுகளை நல்ல முறையில் பெருக்க முடியும்…”

1.இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்… இந்த வழியை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்
2.ஒவ்வொருவரும் உண்மையின் உணர்வுகளை உணர்ந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

கணவன் மனைவி என்ற நிலை இல்லாது ரிஷித் தன்மை அடைய முடியாது

கணவன் மனைவி என்ற நிலை இல்லாது ரிஷித் தன்மை அடைய முடியாது

 

பூரண நிலவாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.ஏனென்றால் அதிலே எதுவும் இருள் சூழாது… எதுவும் அதை அடக்கிட முடியாது.
2.எத்தகைய விஷத்தன்மை வந்தாலும் அது ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே இருக்கும்.

அதன் அரவணைப்பில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற சப்தரிஷி மண்டலம்… அதைக் கவர்ந்து உணவாக எடுத்து என்றும் பதினாறாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதன் ஆன பின் கடைசி நிலை பூரண நிலா என்ற நிலைகள் கொண்டு பூரண ஒளிச்சுடராக மாறுவது என்பது… மனிதன் எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலை. அந்த நிலையை நாம் பெறுதல் வேண்டும்… அனைவரும் அதைப் பெற முடியும்…!

அகண்ட அண்டத்தில் எல்லையே இல்லாத இடத்தில் விரிவடைந்த நிலையில் ஏகாந்த நிலைகள் கொண்டு எதனையும் அடக்கி உணர்வினை மகிழ்ந்து செயல்படும் நிலையாக நாம் பெற முடியும்.

அது தான் ஏகாதசி என்பது. ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை என்ற ஒளியின் உணர்வாக நிலையான சரீரமாக நாம் இருக்க முடியும்.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று நாமும் வாழ முடியும். அகஸ்தியன் தான் பெற்ற சக்தி எல்லாம் தன் மனைவிக்குக் கொடுப்பதும்… மனைவி அதனை ஏற்று கணவன் வழி நடப்பதும்… கணவனால் பெற்ற சக்தி மீண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும்… கணவன் மேலும் உயர வேண்டும் என்று அது ஏங்குகின்றது.

1.எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும்… அந்த உணர்வின் ஒளியை உருவாக்க வேண்டும் என்று இருவருமே இணைந்த நிலையில் செயல்பட்டார்கள்.
2.ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தவன் அவன் (ஆகஸ்தியன்). அது இல்லை என்றால் எதுவும் உருப்பெறாது என்ற உண்மையை உணர்ந்தவன்.

கல்லானாலும் தாவர இனங்கள் ஆனாலும் ஆண் நட்சத்திரத்தின் இயக்கமும் பெண் நட்சத்திரத்தின் இயக்கமும் இணைந்தால் தான் உருப் பெற முடியும் என்று இதையெல்லாம் அகஸ்தியன் உணர்ந்தவன்.

1.கணவன் மனைவியும் இரண்டறக் கலக்க வேண்டும்… பேரொளியைத் தனக்குள் பெற வேண்டும் என்று
2.27 நட்சத்திரங்களின் மின்னலின் சக்தியைத் தனக்குள் கூட்டி
3.மின்னல் தாக்கப்படும் பொழுது எப்படி இருள்கள் மாய்கின்றதோ ஒளியின் மின் அணுக்களாகப் பரவுகின்றதோ இதைப் போல
4.உடலின் உணர்வுகள் அனைத்தையும் அவன் தனக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து
5.இந்த உணர்வினை ஒன்றாக இணைத்து “மின்னணுக்களாக உடலில் உள்ள அணுக்களை மாற்றிடும் சக்தி பெற்றான்…”
6.துருவத்தை உற்று நோக்கித் தனக்குள் அந்த உணர்வுகளை நுகர்ந்து
7.மின் அணுக்களைத் தனக்குள் மாற்றி துருவ மகரிஷி ஆனான். தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான்.

ஆனால் கணவன் மனைவி ஒன்று சேராது தனித்த நிலையில் கடும் தவம் இருந்து சக்தி பெறுவேன் என்றால் முனி என்ற நிலையைத் தான் அடைய முடியும்… மனைவி என்ற நிலை இல்லாது ரிஷி என்ற நிலைக்கு வர முடியாது.

திருமணமாகாத பெண்களும் கடும் தவம் இருக்கிறேன் என்று சொன்னால் உருப் பெறும் தன்மையைக் கருவாக உருவாக்க முடியாது.

1.கணவன் மனைவி எவர் ஒருவர் ஒன்று சேர்ந்து இந்த அருள் உணர்வுகளைப் பெருக்குகிறார்களோ
2.அவர்களே ஒளித் தன்மையாக உருவாக்க முடியும்.

உயிர் எப்படி உருவானதோ… அதே போல தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்றே உணர்வின் ஒளியாக அது மடியாது… தனக்குள் ஒளியாக மாற்றிடும் தன்மை பெற முடியும்.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

 

பூமிக்குள் உருவாகும் தாவர இனங்கள் அனைத்திற்கும் உணவு எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறது…? என்பதை அறிய முற்படுகின்றான் அகஸ்தியன். அப்பொழுதுதான் பூமி துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது என்று உணர்ச்சியால் அறிகின்றான்.
1.துருவத்தினை நோக்கி உணர்வினைச் செலுத்துகின்றான்
2.அது தாவர இனங்களுக்குப் போவதற்கு முன் இவன் நேரடியாக நுகரும் தன்மை வருகிறது.
3.இவனுக்குள் இருக்கும் சக்தியின் தன்மை அதை மாற்றி அமைக்கின்றான்.

மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி அதிலிருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னல்களாக மாறி ஒளிக்கற்றைகளாகப் பரவி மற்றதுடன் இணைந்து விடுகின்றது… பல மாற்றங்கள் ஆகின்றது.
1.அகஸ்தியன் துருவத்தை உற்று நோக்கும் பொழுது அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பார்க்க நேருகின்றது.
2.அதை அவன் நுகர நேர்கின்றது. அவன் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் பெருக நேர்கின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ரேவதி நட்சத்திரத்தின் சக்தியும் அதிலிருந்து வரக்கூடிய துகள்கள் தூசியாக வரப்படும் பொழுது… வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கமும் சந்திக்கும் பொழுது… அதைக் கண்ட பின் தாக்கி ஓடும் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து மோதி… அதிலே சிக்குண்ட நிலைகள் கொண்டு தான் துடிப்பு என்ற நிலையில் “ஒரு உயிரணு உண்டாகிறது…”

இந்த நட்சத்திரத்தின் இயக்கத்தில் தான் உயிர் உருவாகின்றது.
1.மின்னணு போன்று அது துடித்துக் கொண்டே இருக்கும் நமது உயிர்.
2.நுகரும் உணர்வைத் தான் அதே துடிப்பின் நிலை கொண்டு உடலாக மாற்றுகின்றது.

ஏனென்றால் எல்லாவற்றிலும்… செடி கொடிகள் அனைத்திலும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் உண்டு நட்சத்திரங்கள் இல்லாது எதுவும் இல்லை கல்லானாலும் மண்ணானாலும் அதிலே அது உண்டு.

கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால்… ரேவதி நட்சத்திரம் பெண்பால். ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாகப் பெற்றிருந்தால் அந்த பாறைகள் வளரும் பெண்பால் என்று அந்தப் பாறைகள் வளர்ச்சியாகும்.

கார்த்திகை நட்சத்திரம் என்ற ஆண்பால் உணர்வுகள் பெற்றிருந்தால் அதனின் வளர்ச்சி குன்றியே தான் இருக்கும். செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்ற நிலையில் உருவாகின்றது.

நமது உயிருக்குள்ளும் அத்தகைய நிலை உண்டு. கார்த்திகை நட்சத்திரம் ஆண் பால் என்றால் ரேவதி நட்சத்திரம் பெண்பால் ரேவதி நட்சத்திரத்தின் துகள்கள் அதிகமாக இருந்தால் பெண்ணாக உருவாக்கி மற்றொன்றைத் தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம் என்றால் அதில் ஆண் என்ற நிலையில் தான் இருக்கும். இவ்வாறு நட்சத்திரங்களின் உணர்வு கொண்டு ஆண் பெண் என்ற உணர்வுகள் உருப்பெறுகிறது. பெண்ணாக இருந்தால் கருவாக்கி தன் இனத்தை அதன் ரூபமாக உருவாக்கும் நிலை பெறுகின்றது.

இவையெல்லாம் இயற்கையின் நியதிகள் என்று நமது குருநாதர் தெளிவாக்குகின்றார்.
1.உங்களுக்குச் சுருங்கச் சொல்கின்றேன் பார்த்த நிலையோ ஏராளம்.
2.அதையெல்லாம் வடித்து உங்களிடம் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்குப் பொறுமை பத்தாது…
3.அவ்வளவு காலம் உங்களால் உட்கார்ந்து இருக்கவும் முடியாது.

கேட்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். அதே சமயத்தில் சிலருக்கு உடல் வலியும் இருக்கும்.
1.ஆனாலும் இதையெல்லாம் கேட்டு நுகரப்படும் பொழுது அவருடைய உடல் வேதனைகள் குறையும்.
2.முதலில் உட்கார முடியவில்லை என்று நினைத்திருப்பார்கள். இதை நுகர நுகர அந்த உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்குவதைக் காண முடியும்.
3.இருதய ஓட்டத்தின் துடிப்பு அதிலே அடைப்புகள் இருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கக் கேட்க
4.இருதய ஓட்டத்தின் அடைப்புகளும் நீங்கும்… இதயம் சீராக இயங்கும்.

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

அகஸ்தியன் கண்டதை நமது குருநாதர் காட்டிய நிலையில் அதைக் கவர்ந்து உணர்வின் ஒலியாக வெளிப்படுத்தும் போது கேட்போர் செவிகளில் பட்டு இந்த உணர்வைக் கவர வேண்டும் என்று கண்ணின் பார்வையைச் செலுத்தப்படும் பொழுது நுகர்ந்து உயிரிலே பட்டு தான் உணர்வின் தன்மையே வருகின்றது.

அந்த உணர்வுகள் உங்கள் உடலில் சேர்க்கப்படும் பொழுது உடல் முழுவதும் சுழல்கின்றது. இதைச் சுழலச் செய்து
1.ஆதியும் அண்டத்தையும் அறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நீங்கள் எப்படியும் பெற வேண்டும்.
2.நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக அவன் எப்படிப் பெற்றானோ அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இதை உங்களிடம் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் அடிக்கடி.

ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில வித்தியாசம் இருக்கும் முழுமையும் சொல்ல முடியாது.
1.இன்று சொன்னதை நாளை அதனுடன் சிறிதளவே இணைத்து அதைச் சேர்க்க முடியும்.
2.கண்ட உண்மையின் உணர்வினை அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தான் உபதேசிக்க முடியும்… உங்களை நுகரச் செய்ய முடியும்
3.உயிர் உங்களுக்குள் ஜீவணுவாக மாற்றும் திறன் எதுவோ அதன் அளவு அங்கே மாறும்.

அகஸ்தியன் அருளாற்றலைப் பெற செய்வதற்குத் தான் இதைச் செய்வது.

“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”

“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”

 

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி தூசிகளாகக் கலந்து வரப்படும் பொழுது உராயும் நிலையில் அதிர்வுகளாகி மற்றதோடு கலந்து தூசிகளாக மாற்றி விடுகின்றது.

பல பல வர்ணங்களும் பல பல நிலைகளை உருவாக்கும் துகள்களாக மாற்றி விடுகின்றது.
1.அதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது என்பதையும்
2.அதை அகஸ்தியன் எப்படி கண்டான் என்பதையும் “நீ உற்றுப் பார்” என்றார் குருநாதர்.

அடிக்கடி மின்னலைப் பார் என்று சொல்வார்… பார்த்தால் கண் போய்விடுமே என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும். பின் அந்த மின் அதிர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது மற்றதுடன் எப்படி ஊடுருகின்றது…? என்பதனை அறிந்தேன்.

முதலிலே பயந்தேன்…
1.பின் அவர் சொன்ன முறைப்படி எடுக்கப்படும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
2.உன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் எப்படி அதைப் பெறுகின்றது…? அதைப் பெறக்கூடிய தகுதி நாளடைவில் வரும் பொழுது
3.நீ அதை பெற முடிகின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

துருவ நட்சத்திரமாக இருப்பதும் இதன் வழி தான்.

பல மின்னலின் ஒளிக்கற்றைகளைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி உயிரின் துடிப்பு எப்படி மின்னலால் நட்சத்திரங்களால் உருவானதோ அதைப் போன்று
1.பல நட்சத்திரங்களின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக் கதிர்களாக மாற்றிய அகஸ்தியன்
2.உயிருடன் ஒன்றி அவன் நிலை கொண்டு உள்ளான் துருவ நட்சத்திரமாக.

அந்த எல்லை அடைய வேண்டும் என்றால் அகஸ்தியன் தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் அவன் எவ்வாறு பெற்றான்…? அதன் வழியில் எப்படி வளர்ந்தான்…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றார்.

ஏனென்றால் தாவர இனங்கள் மாறுவதும் உடலான பிற்பாடு வளர்ச்சிகள் எப்படி வருகிறது…? என்பதையும் ஒவ்வொரு இடங்களுக்கும் அது அழைத்துச் சென்று அந்த உணர்வைக் காணும்படி செய்தார்.

விஷத்தை ஒடுக்கும் சக்தி உடல் பெற்ற பின் தாவர இனங்களுக்குக் கிடைத்து அதே தாவர இனம் மனிதனைக் காக்கும் நிலை வருகின்றது மனிதனை காக்கும் நிலையானாலும் அந்த உணர்வுக்குள் நுகர்ந்தது அனைத்தும் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குக் (அகஸ்தியனுக்கு) கிடைக்கின்றது.

1.உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன் என்றால் எனக்கு குருநாதர் இதையெல்லாம் காட்சியாகக் காட்டினார்.
2.நாம் இப்போது சொன்னதை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும் பொழுது
3.அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண முடியும். அது விளையும் போது பிறவி இல்லா நிலையும் அடையலாம்.

அதற்கே உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்

நீங்கள் நினைவு கொண்டு அதனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதைப் பெற்று மனிதனுக்கு பின் பிறவியில்லா நிலை அடைந்த அருள் மகரிஷியின் உணர்வை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும்.

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இவன் உற்றுப் பார்த்த நிலையில் அந்த நட்சத்திரங்களில் வெளிப்படும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது
1.அந்த ஒளிக் கதிர்களை இந்தக் குழந்தையும் பார்க்கின்றது நுகர்கின்றது
2.உடல்களிலே சேர்த்துச் சேர்த்து அந்த அணுக்களின் தன்மை விஷத்தை ஒடுக்கிடும் அணுக்களாக மாறுகின்றது.

அந்த வழியில் வளர்ந்தவன் தான் மூன்று வயதாகும் பொழுது காட்டிற்குள் நடந்து சென்றாலே இவன் பின் ஒரு கூட்டமே செல்கின்றது. அவன் எண்ணத்தால் செல்லும் பொழுது இளமைப் பருவத்தில் பாம்போ தேளோ மற்ற விஷ ஜந்துகளோ யானைகளோ, புலிகளோ மற்ற கொடூர மிருகங்களோ இவனைக் கண்ட பின் அப்படியே நின்று விடுகின்றது.

ஏனென்றால் அதில் உள்ள விஷத்தின் இயக்கம் தடைப்படுவதனால் செயலற்ற நிலையாகின்றது.

1.அகஸ்தியன் உடலிலிருந்து வரக்கூடிய விஷத்தை ஒடுக்கிடும் மணங்களை நுகர்ந்தால் அந்த மிருகங்களின் அணுக்கள் ஒடுங்கி
2.இவனைத் தாக்குவதிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் நிலைகளிலேயே அமிழ்ந்து விடுகின்றது.
3.இவன் அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரம் கழித்துத் தான் மூச்சுகளை எடுத்து… பின் செல்கின்றது என்பதனை
4.அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டான் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நமது குரு இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்தார். பின் எனக்குள் அதைப் பாய்ச்சி நீ எதைச் செய்ய வேண்டும் என்று எம்மைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

அகஸ்தியன் சென்ற பாதைகளில் அவன் பாத நிலைகள் கீழே படிந்துள்ளது…
1.அந்த உணர்வுகளைப் பூமியில் இழுத்து வைத்துள்ளது.
2.அவன் எந்தெந்தப் பாதையில் எப்பொழுது சென்றானோ
3.அந்தப் பாதையில் செல்வோருடைய நிலைகளிலும் சிலருக்கு அந்த அற்புத சக்திகளும் கிடைத்துள்ளது.
4.அதன் உணர்வை நீ நுகர்ந்து காட்டுக்குள் செல்லும் பொழுது
5.அகஸ்தியன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றதோ
6.அதே உணர்வுடன் நீ செல்லப்படும் பொழுது அந்த அருளை நீ பெறலாம்.

இப்படி அகஸ்தியன் சென்ற காட்டுப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையும்படி செய்தார் குருநாதர்.

ஒரு கம்ப்யூட்டருக்குள் இயக்கத்தை ஊட்டியபின் அதனுடைய அலை வரிசையில் சென்ற பின் அதனுடன் தொடர்பு கொண்ட இயந்திரங்களை எப்படி எல்லாம் இயக்குகின்றதோ இதைப் போல குரு காட்டிய அருள் வழியில் என் உடலுக்குள் பதிவான பின் அகஸ்தியன் சென்ற பாதையில் என்னை அதே பாதையில் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி என்னை அங்கே போகும்படி செயல்படுத்துகின்றார்.

அந்த பகுதிகளுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அகஸ்தியன் எதை எதையெல்லாம் செய்தான் என்று காட்டுகின்றார் குருநாதர்

அகஸ்தியன் பெற்ற தீமைகளைக் கருக்கும் ஆற்றல்

அகஸ்தியன் பெற்ற தீமைகளைக் கருக்கும் ஆற்றல்

 

ஒரு புழுவை எடுத்து வந்து குளவி தன் விஷத்தை அதன் மீது பாய்ச்சினால்… விஷம் புழுவின் உடலில் பரவி… புழுவின் உயிர் இந்த விஷத்தின் நிலைகள் கொண்டு உடலில் உள்ள அணுக்களை மாற்றி அமைத்து விடுகின்றது. ஆனால் அது குளவியாக அடுத்து மாறுகிறது.

புழுவின் உடலுக்குள் சென்று அந்தப் புழு குளவியாக மாறிய பின் அதே உணர்ச்சியின் தன்மை அதற்கு வருகின்றது. முதல் குளவி எதைச் செய்ததோ இதுவும் அதே வேலையைச் செய்கின்றது. இதைப் போன்று தான்
1.தாய் கருவிலே விளைந்த அகஸ்தியன்
2.தன் உடலிலே கடும் விஷத்தின் தன்மையையும் அடக்கிடும் வல்லமை பெறுகின்றான்.

இயற்கையில் விளையும் சத்தினை வேக வைத்து உணவாக உட்கொள்ளும் பயிரினங்களையும் உருவாக்குகின்றான் ஐந்தாவது வயதிலேயே…!

இன்றும் பார்க்கலாம்…! தத்துவஞானியின் உணர்வைப் பெற்ற பின் தாய் கருவிலே கர்ப்பமாக இருக்கப்படும் போது அந்தத் தத்துவத்தை நுகர்ந்தறிந்தால் அந்த குழந்தையாகப் பிறந்த பின் இளமையிலிருந்து அவன் அறியாதபடி பல வேதங்களையும் பாடுகின்றான் படிக்கின்றான் தத்துவத்தை எடுத்துச் சொல்கின்றான்.

கணக்கிடும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் கணக்குகளைச் செய்து முடிப்பதற்கு முன் ஒரு நொடிக்குள் இவன் விடைகளைச் சொல்லி விடுகிறான் என்று பார்க்கலாம்.

உலகில் நடக்கக்கூடிய இதைப் போன்ற சம்பவங்களைப் பத்திரிகைகளில் பார்க்கலாம். இப்படிப் பெரிய மேதையானவர்களும் உண்டு. இது எல்லாம் “தாய் கருவிலே பெற்ற நிலைகளைக்கொப்பத் தான்” உருப்பெறுகின்றது.

இயற்கையின் நிலைகள்
1.இந்த உயிர் எதை நுகர்கின்றதோ அதை அணுவாக மாற்றுகின்றது என்பதை
2.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் ஐந்தாவது வயது ஆகும்பொழுது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எவ்வாறு உணவு கிடைக்கின்றது…? எதன் வழி கிடைக்கின்றது…? என்பதனைச் சிந்திக்கும் தன்மை பெறுகின்றான்.

விண்ணை நோக்கிப் பார்க்கின்றான்… பிரபஞ்சத்தில் உருவாகும் பல நிலைகளையும்…!
1.இந்த பிரபஞ்சத்திற்குச் சக்திகளை நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதையும்
2.பால்வெளி மண்டலங்களாக அதை அமைப்பதையும் தூசிகளாகப் பரவுவதையும்
3.ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர்மறை ஆகும் பொழுது ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது
4.மின் கதிர்களாகப் பரவுவதையும் ஒலி அலைகள் பரவுவதையும் மற்றதோடு இணைவதையும்
5.அது எவ்வாறு…? என்பதனை அகஸ்தியன் அறிகின்றான்.

இப்படி அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை தான் மின்னல்கள் எவ்வாறு உருப்பெறுகிறது என்று உணரும் போது
1.தன் இளமைப்பருவத்திலேயே அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளை அவன் நுகர்ந்ததினால்
2.அவன் உடலுக்குள் அந்த மின் அணுக்களின் நிலை உருவாக்குவதும்
3.ஒன்றை உற்று நோக்கினால் பகைமை உணர்வுகளை… தீய உணர்வுகளைக் கருக்கிடும் சக்தியைப் பெறுகின்றான் அகஸ்தியன்.
4.அவன் பெற்ற அந்த ஆற்றல்களை நாமும் பெறுதல் வேண்டும்.

இராமலிங்கம்

இராமலிங்கம்

 

உயிரான ஈசன் தான் கவரும் உணர்வுகளை… “உருவமாக்கி அருவத்தின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…?” என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நமது அகஸ்தியன் காட்டிய அறநெறி வழி கொண்டு “அவனில் பெற்ற உணர்வின் செயல்…” அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிரணு தோன்றி எத்தனையோ வகை உருவங்கள் பெற்று… உணர்வுக்கொப்ப அணுக்கள் விளைந்து உடலை விட்டுச் சென்ற பின் அதன் இணைப்பு கொண்டு அடுத்த உடலைப் பெறுகின்றது.

இப்படித்தான்
1.பல கோடி உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று இறையாகி
2.அதனின்றி மீள வேண்டும் என்ற உணர்வைப் பெருக்கிப் பெருக்கி எண்ணிலடங்காத உடல்களுக்கு இரையாகி
3.அதன் உணர்வைக் கவர்ந்து உடலின் உருவங்களை மாற்றி மாற்றி மனிதனாக நம்மை உருவாக்கி உள்ளது உயிர்.

மனிதன் தான் உயிரை ஈசன் என்று மதிக்கும் தன்மை பெறுகின்றான்.
1.தனக்குள் உருவாக்கியது யார்…? என்றும் உணர்வை இயக்குவது யார்…? என்றும்
2.தன்னில் இயக்கும் உயிரை முதல் மனிதன் அகஸ்தியன் காணுகின்றான்.
3.அதன் உணர்வின் செயலாக்கத்தைக் காணுகின்றான்.
4.கண்டபின் தான் நுகரும் உணர்வுகள் தான் தனக்குள் உருவாகின்றது என்பதை உணர்ந்தான்
5.உயர்ந்த நிலைகள் கொண்ட உணர்வினை அவன் நுகர்கின்றான்
6.தீமைகளை அகற்றும் உணர்வை நுகர்கின்றான்
7.அதன் உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் அணுக்களை உருவாக்குகின்றான்
8.இருளை வென்றிடும் உணர்வினை நுகர்கின்றான். இருளை அகற்றிடும் அணுக்களைப் பெருக்குகின்றான்.
9.இப்படிப் பெருக்கித் தான் விண்ணின் ஆற்றலை நுகர்கின்றான்
10.அதனில் வரும் நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றுகின்றான்.
11.அறிவின் ஞானமாக இயக்குகின்றான்… அருள் ஒளி என்ற உணர்வினைப் பெருக்குகின்றான்.

பெருக்கிய நிலைகள் கொண்டு அதை எல்லாம் தன் மனைவிக்கே ஓதுகின்றான். இவை இவை…! என்றும் இதனின் உணர்வுகள் இவ்வாறு…! என்றும் செவி வழி கூட்டும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அதன் வழி
1.மனைவியும் கணவனுடன் ஒன்றிணைந்து தான் கண்ட உணர்வுகளை இருவரும் ஒன்றென இணைந்து
2.இரு உணர்வும் ஒன்றென இணைந்து இரு மனமும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து ஒளி என்ற உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனானான்
4.துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக ஆனான்… அவர்கள் வளர்ச்சியில்.

எண்ணத்தால் உணர்வால் ஒளியின் சரீரமாக… “எண்ணம் கொண்டு” உயிருடன் ஒளியின் சரீரமானதால் இராமலிங்கம் என்ற காரணப் பெயரை வைத்து அழைத்தனர்.

“அகஸ்தியனின் சகாக்கள்” சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

“அகஸ்தியனின் சகாக்கள்” சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

 

1.அகஸ்தியன் தன் இளமைப் பருவத்தில் பல விஷம் கொண்ட தாவர இனங்களை நுகர்ந்தாலும் உணவாக உட்கொண்டாலும்
2.அவை அனைத்தும் இவனுக்குள் விஷத்தை ஒடுக்கி… உணர்வின் தன்மை மாற்றும் நிலை வருகின்றது.

உதாரணமாக ஒரு தட்டான் பூச்சி எதன் மேல் தன் முட்டைகளை இட்டதோ அந்த உணர்வுக்கொப்ப அதிலுள்ள மணத்தைத் தாங்கி அந்த உணர்வுக்கொப்ப பல வித வர்ணங்கள் கொண்டு பல பல வகையில் பூச்சிகளாக வருகின்றது.
1.ஒரே தட்டான் பூச்சி தான் முட்டைகளை இட்டது
2.ஆனால் முட்டைகளை இட்ட செடிகளுக்கொப்ப அந்த கருக்களில் நுகரப்பட்டு
3.பல வண்ணங்களில் பல விதமான பூச்சிகள் உருவாகின்றது.

இது எல்லாம் இயற்கையில் விளைவது.

இதைப் போல தான் இயற்கையில்
1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது விளைந்த உணர்வுகள்
2.பல பல இயக்கத்தின் உணர்வுகளையும் நஞ்சினை அடக்கிடும் தன்மையும் உணர்கின்றான் அகஸ்தியன்.

“அவனில் இணைந்த உணர்வுகள்” நஞ்சினை வென்றிடும் உணர்வுகளாக நுகர்ந்ததனால் அதை அவனின் எண்ண ஒலி கொண்டு வெளிப்படுத்துகின்றான். அதனைச் சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
1.அவனுடன் பழகியோர் அவன் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அவன் உணர்வைப் பதிந்தோர்
2அவர்களுக்கும் அது கிடைக்கப் பெறுகின்றது

அகஸ்தியன் தாய் கருவில் பெற்றான். அவனுக்குக் கிடைத்த உணர்வுகள் தன் சகாக்கள் கேட்டறியப்படும் போது அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் விளையத் தொடங்குகிறது

இவனில் விளைந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஜீவனுக்களாகப் பெற்று அந்தச் சகாத் தோழர்களும் இவனைப் போன்றே அவனை ஒட்டி வாழும் நிலைகள் வருகின்றது

காரணம்… அவரவர்கள் சந்தர்ப்பம் இயற்கையில் எதை எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் உயிர் உடலில் அணுக்களாக உருமாற்றிக் கொண்டே உள்ளது.

இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். பல கோடி இன்னல்களைக் கடந்து அதனைத் தான் அறிந்து தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து தீமையை அகற்றிடும் அருள் சக்தி பெற்றான் அகஸ்தியன்.
1.அவன் நிலையை நாமும் காண முடியும் காண வேண்டும் என்பதற்கே
2.குரு வழியில் இதை வெளிப்படுத்துகின்றேன்

அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அகஸ்தியன் உணர்கிறான்.

அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.

இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள அவன் சகாக்களுக்கும் சொல்கிறான்.

அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நடந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.

அகஸ்தியன் கண்டது அனைத்தையும் “நீங்கள் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”

அகஸ்தியன் கண்டது அனைத்தையும் “நீங்கள் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”

 

“அகஸ்தியன் என்று சொல்லும் அக்காலத்தில் வாழ்ந்த அந்தச் சிசு” தன் தாயின் கருவில் இருக்கப்படும் பொழுதே பல உன்னதமான சக்திகளைப் பெறுகின்றது. அவை அனைத்தும் அதற்குப் “பூர்வ புண்ணியமாக” அமைகின்றது

பிறந்து… அந்தக் குழந்தை தனிமையிலே கிடந்தாலும் நஞ்சு கொண்ட உயிரினங்களோ பாம்புகளோ மற்ற பூச்சிகளோ இவனைக் கண்டாலே விலகிச் செல்லும் நிலையே ஏற்படுகின்றது.
1.சூரியனை வணங்கி வந்த அக்காலத்தில் இது கடவுளின் பிள்ளை கடவுளால் கொடுக்கப்பட்டது என்று
2.அவருடைய தாய் தந்தையரே அவனைக் கடவுள் என்றே வணங்கத் தொடங்குகின்றார்கள்.

பல அற்புத நிகழ்ச்சிகள் நடக்கின்றது காட்டு விலங்குகள் அனைத்தும் இவனை அணுகாது விலகிச் செல்கின்றது.

ஆனால் அகஸ்தியனுடைய தாய் தந்தையர் மிருக ஜந்துக்களிடமிருந்து தப்பிப்பதற்கு தாவர இனங்களின் விழுதுகளை அரைத்து உடலில் மூலமாகப் பூசினார்கள்.

அந்த முலாமின் உணர்வுகள் தான் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைத்தது.
1.சூரியனின் உணர்வின் ஆற்றலே இவனுக்குள் பெருகிப் பெருகி அதை இவன் நேரடியாகப் பார்க்கின்றான்
2.அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளையும் காணுகின்றான்.

விஞ்ஞான அறிவுப்படி வலிமையான தொலைநோக்கிகளை வைத்து விண்வெளியில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைக் காணுவது போன்று
1.அவனின் உணர்வின் செல்களுக்கும் மற்றதை ஒளி கொண்டு வெகு தூரம் நினைவலைகள் பாய்ச்சப்பட்டு
2.அணுவின் ஆற்றலை அறியும் தன்மையும் இவனுக்குத் தாய் தந்தையினுடைய வடிவிலே கருவிலேயே பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

இது அவனுடைய சந்தர்ப்பம்.

பிறந்து ஐந்தே வயது ஆகும் பொழுது விண்ணை நோக்கிப் பார்ப்பதும் மற்ற விஷம் கொண்ட மிருகங்கள் இவனைக் கண்டு விலகிச் செல்வதும் பல அற்புத நிகழ்ச்சிகளை அணுவின் சிதைவும்… அணுவின் கூட்டமைப்பும்… அணுவின் ஆற்றலையும்… அவன் நேரடியாக்க் கண் கொண்டு அறியத் தொடங்குகின்றான்.

1.ஒரு உயிரினம் முட்டை இடுக்கிறது என்றால் அது என்ன முட்டை என்றும்
2.அதற்குள் அணுவின் தன்மை எப்படி உருப்பெறுகிறது என்பதையும் அவன் கண்டுணர்கின்றான்.

நமது பூமியிலே மணங்களைக் காணும் (நுகர்ந்து) பொழுது இந்தச் செடியில் இருந்து வந்த மணம் என்று அதைப் பிரித்துச் சொல்லும் தன்மை ஐந்து வயதிலேயே அவனுக்கு வருகின்றது.

இது போன்ற வளர்ச்சி வந்தபின் தாய் தந்தையருக்கு பேரானந்த நிலை வருகின்றது.

இருப்பினும் இந்தக் குழந்தை தன்னிச்சையாக எங்கே சென்றாலும் அச்சமின்றி அவன் செல்கின்றான். மற்றவைகள் தான் இவனைக் கண்டு அஞ்சுகின்றது. ஆனால் அவருடைய தாய் தந்தையரோ தாவர இனத்தின் முலாம்களைப் பூசாமல் சென்றால் மிருகங்கள் அவர்களைக் கொன்றுவிடும்.

இப்படி நடக்கப்படும் பொழுது இவர்கள் பூசிய முலாம்கள் உடலில் அதனின் நஞ்சுகள் பெருகி அது அதிகரித்து நோயாகி மடிகின்றார்கள். அவனுக்கு ஐந்து வயது முடிவதற்கு முன் இருவரும் இறந்து விடுகின்றார்கள்.

இரண்டு பேருமே தன் குழந்தை மீது… இளம் பிஞ்சு உள்ளத்தை எண்ணியே காட்டுக்குள் அவனைத் தனித்து விட்டுச் செல்கிறோமே என்ற ஏக்க உணர்வு அதிகரித்து இருவரும் செயலற்ற நிலை வரும் பொழுது
1.குழந்தையை ஏங்கி அந்த உயிரான்மாக்களும் ஒருமித்த நிலைகள் வெளி வருகின்றது.
2.வெளிவந்த பின் எந்தக் குழந்தை மீது பற்று வைத்தார்களோ அகஸ்தியனின் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
3.அவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் வளர்ச்சி பெற்று வந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல்கள்
4.”இந்தக் குழந்தையைக் காத்திடும் உணர்வாக” அந்த உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

அதற்குப்பின் அந்த குழந்தைக்கோ தன் தாய் தந்தை மடிந்ததை எண்ணி அதுவும் ஏக்கத்தால் எண்ணுகின்றது. “அன்னை தந்தையைப் பார்க்க வேண்டும்” என்ற ஏக்கத்திலேயே சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

ஏனென்றால் சூரியனைக் கடவுள் என்று காண்பித்த நிலைகளில் இவன் உற்று நோக்கும் போது விண்ணிலே நடக்கும் அதிசயங்களைக் கண்டுணர்கின்றான்.

1.இவன் உடலில் விளைய வைத்த அவை ஒவ்வொன்றும் அறிவின் தன்மையாக விண்ணின் ஆற்றலை அறியும் நிலையாக
2.இவனின்று உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது.

அதை எல்லாம் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால்…
1.என் குருநாதர் அதை எடுக்கும் வழியை உணர்த்தியதனால்
2.அதனின் உணர்வின் துணை கொண்டு தான் அறியும் ஆற்றலைப் பெற்று
3.அறிந்த பின் உங்களுக்கும் அதைச் சொல்ல முடிகிறது.

ஏனென்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதை இன்று நம்மால் பார்க்க முடியும்.
1.நீங்கள் அனைவருமே அதைக் காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
2.எனது குருநாதர் எனக்கு எப்படி அதைக் காண்பித்தாரோ அதைப் போல விண்ணுலக ஆற்றலை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டுணர முடியும்.

மனிதனான பின் முழுமை அடையும் நிலைகளாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் நீங்கள் பெற முடியும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.

துருவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரம் அனைத்துமே அகஸ்தியன் தான்…!

துருவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரம் அனைத்துமே அகஸ்தியன் தான்…!

விஞ்ஞான அறிவால் வரப்படும் பொழுது மதத்தின் நிலைகள் கொண்டு தன் இனத்தையே அழித்துவிடும் உணர்வுகள் மனிதனுக்குள் விளைந்து விளைந்து
1.இன்று மனிதனின் உணர்வின் நினைவுகள் இழந்து
2.மனித உணர்வே இல்லாது அழியும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது.

மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இந்த விண்ணுலகில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள்… “சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்…”

விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து தன் உணர்வின் தன்மை உயிரைப் போன்று உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

முதல் துருவ மகரிஷி துருவனாக இருந்தாலும் அது துருவ நட்சத்திரமாகி இன்றும் சுழன்று கொண்டிருக்கும் “இந்த வேளை…”

எப்படி நாகம் தன்னுடைய நஞ்சை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அவைகளை உணவாக எடுத்தாலும் அந்த உணர்வின் சத்து தனக்குள் விளைந்து விளைந்து “அந்த நஞ்சே வைரமாக விளைகின்றது..”

இதைப் போல அகஸ்தியன் துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையை அடைந்து துருவ நட்சத்திரம் ஆகும்பொழுது
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அவன் ஆனாலும்
2.உலகிலேயே நஞ்சைத் தனக்குள் உள்ளடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும்
3.மிக சக்தி வாய்ந்த நட்சத்திரமாக அங்கே அமைந்து விட்டது… அகஸ்தியன் தான்…!
4.அவனைத் துருவ மகரிஷி துருவன் என்றும் சொல்வார்கள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலை அடைந்தவர்கள் சப்தரிஷி… சிருஷ்டித்துக் கொண்ட ரிஷியின் தன்மை அடைகின்றது.

அதனின்றி விளைந்த உணர்வுகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை
1.”எவரெவர் அவர்கள் அணுகி அதை நுகர்கின்றார்களோ”
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலில் உள்ள உணர்வுகளைப் பிளந்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொண்டார்கள்.
3.உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
4.அது நமக்கு முன் பரவிக் கொண்டுதான் உள்ளது அனுதினமும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன். ஆகவே நாம் அடைய வேண்டிய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.