
மகரிஷிகளின் அருள் சக்தி 24 மணி நேரமும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்
தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று தான் தெளிவாக எடுத்துச் சொல்கின்றோம். நமக்கு என்ன வேலை..? இந்த உடல் புவி ஈர்ப்பிலே தானே இருக்கிறது. இதை விடுத்து நாம் மகரிஷிகள் உணர்வைப் பற்றோடு பற்ற வேண்டும். அந்தப் பற்றை நமக்குள் வளர்க்க வேண்டும்.
1.மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பிளக்க வேண்டும்.
2.அந்தச் சக்தியை நீங்கள் பெறுவதற்கு இரவும் பகலும் டி.வி.யில் எப்படி ஒளிபரப்பு செய்கிறார்களோ அது போல்
3.24 ஹவர்ஸ் (மணி நேரமும்) தியானிக்கின்றேன் (ஞானகுரு).
4.”அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற நீங்கள் வேண்டும்” என்ற ஒரே நோக்கம்தான் எனக்கு… வேறு எதுவும் இல்லை.
அதாவது
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும்.
2.இங்கு வருபவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
3.அந்த சக்தியினால் அவர்கள் கஷ்டங்களை அவர்களே நீக்கக்கூடிய பலம் பெற வேண்டும்.
4.அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
5.அவர்களைப் பார்க்கிறவர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
6.பிறர் கஷ்டத்தை நீங்கள் கேட்டால் அந்தக் கஷ்டம் எப்படி உங்களை வந்து சாடுகின்றதோ… இதைப் போல
7.உங்கள் பார்வையிலே மற்றவர் கஷ்டங்கள் போக வேண்டும்.
8.அவர்கள் கஷ்டம் போகப்படும் போது “உங்களைக் கஷ்டங்கள் நாடாது… அந்த மாதிரி நிலைகளை உருவாக்க வேண்டும்” என்று தான்
9.நான் இப்போது தியானத்தைப் பெரும் பகுதி வளர்த்துக் கொண்டு வருகின்றேன்.
10.அதை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.
கஷ்டத்தை நினைத்துக் கொண்டே வராதீர்கள். கஷ்டம் போக வேண்டும் என்று நினையுங்கள். நோயைப் பற்றி நினைத்துக் கொண்டே வராதீர்கள்… நோய் போக வேண்டும் என்று நினையுங்கள்.
என் பிள்ளைக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும். அதனுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நன்றாக இருப்பார்கள்.
என் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாருங்கள். அதே பிரகாரம் இந்த வாக்கை வாங்குங்கள். நிச்சயம் இது பதிவாகும்.
“ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். அடிக்கடி நீங்கள் எதை எதை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் உங்கள் எண்ணம் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டும்.
சாமியை நம்புகின்றோம். சாமியாரை நம்புகின்றோம். ஜோசியத்தை நம்புகின்றோம். யாகங்களை நம்புகின்றோம். இவையெல்லாம் நாம் வழி வழியாக வளர்த்தது தான்.
ஆனால் நாம் ஆயிரம் பேர் சேர்ந்து ஞானிகளின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் தான் அது உண்மையான யாகம். ஏனென்றால் இந்த உயிரின் நெருப்பிலே அந்த ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கின்றோம். அதனால் தயவு செய்து அதை ஏற்று நடந்து கொள்ளுங்கள்.
1.எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
2.எமது பூரண ஆசிர்வாதம் இருக்கின்றது.
“எனக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். என் உடம்பு நன்றாக இருக்க வேண்டும்” என்று கேளுங்கள். பிள்ளைக்கு எது எது வேண்டுமோ அதை மனதில் நினைத்தே கேளுங்கள்.
”நீங்கள் நன்றாக இருப்பீர்கள்…” என்று யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது மற்றவைகளைக் கேட்காதீர்கள். “என் பிள்ளைக்குத் திருமணம் நடக்க வேண்டும். அதன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல ஆசி வேண்டும்” என்று மனதில் வேண்டுங்கள்.
அது ஒன்று கொடுத்து விடுகின்றோம். அடுத்தாற் போல் வரும்போது வேறொன்றைக் கேட்கலாம்.
“சரி…” என்று வாக்கைக் கொடுத்த பின் மறுபடியும்… என் பையன் சொன்னபடி கேட்கவில்லைங்க… குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறதுங்க… வைத்த பணம் போய்க்கொண்டே இருக்கின்றதுங்க… வியாபாரம் விற்றதெல்லாம் போய்க்கொண்டே இருக்குதுங்க… என்று வரிசையில் அடுக்கிக் கொண்டே இருப்பார்கள். நான் எதற்குப் பதில் சொல்வது…? என்று தெரியாது.
ஒரு தரம் ஒன்றைக் கேளுங்கள். என் குடும்பத்துக்கு “என் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” அப்படியென்று நினையுங்கள். எங்கள் தொழிலெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். அதற்கு நல்ல ஆசி வேண்டும் என்று கேளுங்கள். இந்த வாக்கு தான்,
திட்டுபவர்களைப் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் அவர்களைத் திருப்பி எண்ணும் பொழுது அது வருகின்றது.
இப்போது உங்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்று பதிவு செய்கின்றோம். திரும்பி நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அதே பதிவு உங்களுக்கு வேலை செய்யும்.
ஏனென்றால் நான் சதா தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்.
ஒருத்தர் திட்டி விட்டார்கள் என்றால் அவர்கள் என்ன செய்கின்றார்கள்…? திருப்பி உங்களைத் திட்டிக் கொண்டே இருப்பார்கள் யாருடன் பேசினாலும் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் அடிக்கடி அவர்களையும் திட்டிக் கொண்டே இருப்பீர்கள். இங்கே நீங்கள் அந்த எண்ணங்களைப் பரப்பிக் கொண்டே இருப்பீர்கள். அவர்கள் நினைப்பு உங்களிடம் வரும். இரண்டும் கலந்து பேசிக் கொண்டே இருப்பீர்கள்.
இதே போலத்தான்
1.உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்தெந்த வகையிலோ தந்திரமாக உங்களிடம் நுழைய வைக்கின்றேன்.
2.அதைத் திரும்ப எண்ணி விட்டீர்கள் என்றால் உங்களிடம் அதை நீங்கள் பெருக்குகின்றீர்கள்.
3.உங்களிடம் இருக்கும் கோபப்படச் செய்யும் உணர்வைக் கொஞ்சம் அடக்கும்.
4.உங்கள் சொல் என்ன செய்யும்…? உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
சந்தர்ப்பம் உங்களுக்குத் தெரியாமல் கஷ்டத்தை எப்படி உண்டாக்குகின்றதோ அதே போல் உங்களுக்குள் தெரியாமல் கஷ்டத்தை நீக்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்றோம்.
தியானத்தில் இருக்கும் நீங்கள் யாரைப் பார்த்தாலும் உங்கள் பார்வையால் அவர்கள் கஷ்டம் விலக வேண்டும் என்ற அந்தச் சக்தியைத் தான் உங்களிடம் நான் பரப்புகின்றேன்.
1.ஆகையினாலே அடுத்தவர்களின் கஷ்டங்களையும் குறைகளையும் எடுத்துப் பேசாதீர்கள்.
2.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் குறைகள் நீங்க வேண்டும் என்று நினையுங்கள்.
ஒருத்தரிடம் குறைகளைப் பற்றி ஏதாவது நடந்தது என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். ஏனென்றால் முந்திப் பதிவு செய்த குறைகள் இருக்கும். அது எல்லாம் நீங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் மனது நிறைவு பெற வேண்டும். அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
இதைத்தான் நாம் பெருக்க வேண்டும்.
ஒருத்தரை நான் குறை கண்டு பேசி அதை வளர்த்துக் கொண்டே போய் விடக்கூடாது. அது நமக்குள் குறைகளை வளர்த்துக் கொண்டே இருக்கும். குறைக்குண்டான தூண்டுகோலாக நமக்குள் வளரும்.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். ஏனென்றால் நாம் ஒவ்வொரு நிமிடமும் இதை நீக்க “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லி அதை நமக்குள் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதைப் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.