“துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்…!”

Image

sages-station

“துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்…!”

கண்ணன் கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று அன்று ஞானிகள் காட்டினார்கள். வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்தத் துன்பத்தை நீக்க
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரை வேண்டி
2.மனித வாழ்க்கையிலே துன்பத்தை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற நினைவை
4.நம் கண்ணான ஆன்டெனாவிற்கும் கண்ணனாக உபதேசித்த நம் கண்ணிற்குள்ளும் அதைச் செலுத்தி
5.விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளிலும் படர வேண்டும் என்று ஏங்கிடல் வேண்டும்.

எப்படி…?

சாதாரணமாக ரேடியோவோ டி.வி.யோ பார்க்க வேண்டும் என்றால் ஆன்டெனா என்று ஒரு சாதனத்தை அதனுடன் இணைத்து வெளியிலே வைத்திருப்பார்கள். அந்த ஆன்டெனாவிற்குள் காந்தத்தை பரப்பச் செய்திருப்பார்கள்.

வெளியிலிருந்து வரக்கூடிய காந்த அலைகளை இந்த ஆன்டெனா கவர்ந்து டி.வி.க்குள் மோதியவுடன் அந்தந்த அலை வரிசையின் உணர்வுகளைப் படமாகக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் எண்ண அலைகளைக் கண்ணான ஆன்டெனா மூலமாக விண்ணிலே பாய்ச்சச் செய்கின்றோம்.

எதை எண்ணி ஏங்குகின்றமோ அந்த உணர்வின் அலைகளை இந்தக் காற்றிலிருந்து கவர்ந்து நேரடியாக நம் உடலுக்குள் சென்று அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பி அந்த உணர்வின் நிலையை நமக்குள் செயலாக்கும்.

மனித வாழ்க்கையில் வரும் வேதனைகளையும் இன்னல்களையும் தடுக்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
1.எல்லோருடைய நினைவையும் கூட்டி
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏக காலத்தில் ஏங்கும் பொழுது
3.உங்கள் அனைவருக்கும் அந்த நேரடித் தொடர்பு கிடைக்கின்றது.

அதாவது தீமையை நீக்கி மெய் ஒளி பெறும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்தும் போது
1.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மைக்கும் அது உபதேசிக்கப்பட்டு
2.மெய் உணர்வின் வழியில் அதன் உணர்வுகள் நமக்குள் செயலாக்கத்திற்கு வரும்.
3.என்றுமே அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் அலைகளை துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்வதற்கே இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

இதைப் பதிவு செய்தாலே… கண்களால் பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

hare-krishna-hare-krishna

இதைப் பதிவு செய்தாலே… கண்களால் பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்லது செய்வதாக எண்ணி ஒரு மனிதன் வேதனைப்படுபதைப் பார்த்து நுகர்ந்து அறிந்து கொள்கின்றீர்கள். அதன் பிறகு அவருக்கு நீங்கள் நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள்.

ஆனாலும் உங்கள் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவர் வேதனைப்பட்ட அந்த வேதனையான விஷமான உணர்வுகள் இணைந்து
1.உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது.
2.இதான் சிறு திரை… சித்திரை…!
3.அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும்.

நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி
2.இந்த உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நம் நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக அறிந்திடும் தெரிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

இல்லையென்றால் வேதனையான விஷத்தின் தன்மை நல்ல அறிவில் கலந்து விட்டால்
1.மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது.
2.நுகர்ந்தாலும் உங்கள் வேதனையை நிவர்த்திக்க முடியாது.

ஒரு வேதனைப்பட்ட மனிதனின் உணர்வுகள் நம் நல்ல அறிவை மறைத்த பிற்பாடு இன்னொரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து இதை மாற்ற முடியாது.

அப்படி அதை மாற்ற வேண்டும் என்றால் வேதனையான நஞ்சினை நீக்கிய அந்த மகரிஷியின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று இதனுடன் இணைக்க வேண்டும். இணைத்தால் அந்த நஞ்சு ஒடுங்கும்..!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தவும் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு செல்வதற்கும் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

இப்பொழுது இதை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போதே
1.உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளுடன் இணைத்துக் கொண்டால்
2.அந்த வேதனையான உணர்வுகளை நுகர்வதைத் தவிர்த்து
3.அருள் உணர்வை நுகர முடியும். மகிழ்ச்சியை உண்டாக்க முடியும்.

தீமைகளை வென்று நஞ்சினை வெல்லும் ஆற்றலை வலு பெறச் செய்வதற்காகத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக மகரிஷிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கின்றோம்.

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும். இதைப் படித்துப் பதிவு செய்த பின் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள் சென்று உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டு இருக்கும் அந்த நஞ்சான இருளை நீக்கி ஒளியாக மாற்றும்.

திரும்பத் திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம். மீண்டும் உங்களை ஞாபகப்படுத்தி அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றோம். திருப்பித் திருப்பிச் சொன்னால் தான் உங்களுக்குள் அந்த அர்த்தத்தை உணர முடியும்.

அதாவது தீமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் கண் கொண்டு பார்த்ததும் உங்கள் நல்ல அறிவு இருண்டு விடுகின்றது. உங்கள் செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அது எப்படிக் கண்கள் வழியாக உங்களுக்குள் புகுகின்றதோ அதே போல இந்த உபதேசத்தின் வாயிலாக
1.மகரிஷிகளின் உணர்வலைகளை உங்கள் கண்ணின் நினைவலைகளுக்குக் கொண்டு வரச் செய்து
2.உங்கள் கண்ணின் வாயிலாகவே பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.உங்களை அறியாமலே பதியச் செய்கின்றோம்.
4.மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே உங்களுக்குள் பல அற்பதங்கள் நடக்கும்.
5.தீமைகளை அடக்கும் அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் நீங்கள் பெறுகின்றீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட் கட்டளைப்படி உங்களுக்குள் மெய் ஞானிகளின் உணர்வைத் தூண்டச் செய்து அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். அதை நீங்கள் ஏங்கிப் பெற்று ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.

அவ்வாறு தெளிவாக்கிக் கொண்ட பின் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் பூரண நிலாவாக இருப்பது போல் உங்கள் உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியின் சிகரமாக மாறி பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஆகவே
1.அந்த நிலையைப் பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றி
3.தீமையற்ற செயலாக உடலுக்குள் வளர்த்து
4.நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி தடுத்து
5.நம்மை அது செயலாக்காதபடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு)…!

நம் கண்களில் உள்ள கருமணிகள் (CAMERA & AERIAL) பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

Eye antenna

நம் கண்களில் உள்ள கருமணிகள் (CAMERA & AERIAL) பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

நாம் பார்க்கும் அனைத்தும் கண்களில் உள்ள
1.கருமணி வழி தான் படமாகப் பதிவாகின்றது.
2.கருமணி வழிதான் உணர்வைப் பதிவாக்குகின்றது.
3.கருமணி வழிதான் உணரச்செய்கின்றது.

கண்களில் உள்ள அந்தக் கருமணிகளில் வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் என்ற உணர்வுள் பட்டு அந்த மணிகளில் அழுக்காகச் சேர்ந்தால் அதில் எது முன்னணியில் இருக்கின்றதோ அதன் உணர்வைத் தான் கவரும்.

ஒரு டம்ளரில் ஒரு காரத்தைப் போட்டு உபயோகப்படுத்திவிட்டுக் கொட்டிய பின் அதில் தொக்கியது கொஞ்சம் இருந்தால் அடுத்து அந்த டம்ளரில் எதை ஊற்றினாலும் “காரமாகத்தான்” இருக்கும்.

ஒரு விஷத்தின் தன்மையை அதில் வைத்துச் சுத்தப்படுத்தாதபடி இருந்தால் விஷத்தின் தன்மைதான் அதில் தொக்கி இருக்கும். அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் “விஷமாகும்….!”

அதைப் போல நம் கருமணிகளில் கோப உணர்வுகள் அதிகமாகப் படர்ந்திருந்தால் அந்த உணர்ச்சியையே அது மீண்டும் ஊட்டும். கண்ணில் பார்க்கும் பொழுதே “ஜிர்…” என்று அந்தக் கோபம் வரும்.

வேதனை வேதனை என்று வேதனைப்படுவதையே பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்து எந்த நல்லதையும் கிரகித்துப் பார்க்க முடியாது. உண்மைகளை அறிய முடியாது.

நாம் கோபமாக இருந்தாலும் சரி… அல்லது வேதனையாக இருந்தாலும் சரி…! அப்பொழுது யாராவது வந்து மகிழ்ச்சியான செய்திகளைப் பற்றிச் சொன்னால்
1.அதை நம்மால் தாங்க முடியாது.
2.அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
3.அதை அறியக் கால தாமதமாகும்.

ஏனென்றால் கருமணிகளில் படர்ந்த அந்த கோபமான வேதனயான உணர்வின் சத்துக்கள் அவ்வாறு தான் நம்மை இயக்கும். இதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…? அதற்கு எப்படித் தியானிக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்பொழுது அந்தக் கருமணிகளில் உள்ள அழுக்குகள் நீங்கி ஒரு தெளிவான உணர்வை ஊட்டும் அருள் கருமணியாக அந்த உணர்வுகள் பெறும்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கருமணிகளில் படரப்படும் போது
1.ரசம் பூசிய கண்ணாடியில் எப்படி ஒளி அலைகள் பட்டபின் அதிலிருந்து மின் கதிர்கள் எதிர்த்து வருகின்றதோ
2.இதைப் போல உங்கள் கண்ணிற்குள் இருக்கும் கருமணிகளில் பட்டு
3.அந்த உணர்வின் ஒளி அலைகள் உங்கள் உடலுக்குள் பரவும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் கருமணியிலிருந்து நரம்பு மண்டலத்தின் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுகின்றது. உடல் உறுப்புகளில் படர்ந்துள்ள தீமைகளை நீக்கும் ஆற்றல் பெறப்படுகின்றது.

நஞ்சை வென்று ஒளியின் தன்மையாக உருவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கண்களில் உள்ள கருமணிகளில் உருவாக வேண்டும் என்று எண்ணி உங்கள் கண்ணில் உள்ள கருமணிகளில் அந்த வீரிய உணர்வைச் செலுத்துங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எண்ணியவுடன் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வுகளைப் பெறும் தகுதியையும் பெறுகின்றோம்.

வாழ்க்கையில் வரும் இருள்களை நீக்கி பொருள் காணும் சக்தி பெறுகின்றோம். சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் பெறுகின்றோம். சாந்தமும் விவேகமும் ஞானமும் பெறுகின்றோம்…!

விண்ணின் ஆற்றலை நீங்கள் பெறுவதற்காகச் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர் (ANTENNA POWER)” கொடுக்கின்றோம்

 

ganakan

விண்ணின் ஆற்றலை நீங்கள் பெறுவதற்காகச் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர் (ANTENNA POWER)” கொடுக்கின்றோம்

விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது?

எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.

1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.

இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன?

ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.

அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.

அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து
ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.

இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.

அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது.

இதைப் போல மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும் நாம் பார்க்க முடியும் நுகர முடியும் அறிய முடியும்.

அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்தளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.

சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே இதை உபதேசிக்கின்றோம்.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.

அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ் வினையாகப் பதிவானது.

அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.

நீங்களும் அவ்வாறு பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம். இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.

சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்  சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம்.

மனிதர்களுக்குள் நாம் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிகை வாயிலாக எங்கோ ஆக்ஸிடன்ட் ஆன நிலைகளைப் படிக்கும் பொழுது எண்ணத்தைக் கூர்ந்து செலுத்திவிட்டால் அதிர்ச்சி வேதனை பயம் போன்ற தீமைகளை நமக்குள் விளைவிக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் வந்து இயக்கி விடுகின்றது.

பத்திரிக்கை வாயிலாக நாம் படித்துணர்ந்த அந்த எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை மீண்டும் எண்ணும் பொழுது பதிவான அதே எண்ண அலைகளைக் குவித்து நம்மை உணரச் செய்கின்றது. அதன் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
1.எப்படியெல்லாம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ
2.அதே வேதனை நமக்குள் விளையும் தருணமும் வந்து விடுகின்றது.

இதே போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் தடுத்து நிறுத்த முடியும்.

சலிப்பு சோர்வு கோபம் வேதனை வெறுப்பு ஆத்திரம் இத்தகைய உணர்வுகள் எல்லாம் சாதாரண ஆண்டெனாவில் கவருவது போல நமக்குள் வந்து விடுகின்றது.

அவைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மெய் ஞானிகளின் உணர்வு தேவை. அதைக் கவர நமக்கு அந்த அதீத ஈர்க்கும் சக்தியும் தேவை.

குருநாதர் எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகினேன். அவரைக் கூர்ந்து நான் கவனிக்கும் பொழுது அதனின் தன்மை ஊழ் வினையாகப் பதிவாகியது.

மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து எனக்குள் பெருக்கி அறியாது சேர்ந்த தீமைகளையும் துன்பங்களையும் நீக்கினேன்.

குருநாதர் காட்டிய வழியில் அதைக் கடைப்பிடித்தேன். தீமைகளை நீக்கிய அந்த அருள் உணர்வுகளைச் சொல்லால் சொல்லி உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிய வைக்கின்றேன்.

இதை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணிணீர்கள் என்றால் அந்த மெய்ஞான உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்கள் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கச் செய்யும்.

குருநாதர் ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறுத்தும் உணர்வுகளை செயற்கையாக எனக்குள் பாய்ச்சி
1.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக
2.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருகப் போகின்றாய் என்று கேள்வி எழுப்பினார்.

பின் அந்த விண்ணின் ஆற்றலை எனக்குள் எடுக்க வேண்டிய முறைகளை உபதேசித்து செய்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை அவர் ஊட்டினார். அவர் ஊட்டிய பக்குவ நிலைகளை நான் எடுத்துக் கொண்டேன்.

மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது என்று இருபது வருட காலம் அனுபவ ரீதியாக  உணர்ந்தேன்.

அதிலே மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பவசத்தால் நுகரும் உணர்வால் அவர்கள் எப்படி அவதிப்படுகின்றார்கள் என்று அனுபவத்தில் காட்டுகின்றார் குருநாதர்.

அதில் தேர்ந்தெடுத்துத் தீமைகளை நீக்கிய ஆற்றல்களையும் உபாயங்களையும் தான் இங்கே திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

“நல்லதை எண்ணி ஏங்குபவர்களைக் காக்க வேண்டும்…!” என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

நம் கண்களுக்குள் இருக்கும் “எக்ஸ்ரே” ஆற்றலை அறிந்திருக்கின்றோமோ…?

X rays - divine rays

நம் கண்களுக்குள் இருக்கும் “எக்ஸ்ரே” ஆற்றலை அறிந்திருக்கின்றோமோ…?

1.விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை ஊடுருவி
3.தசைகளைத் தாண்டி எலும்புகளைப் படமாக்கி
4.எலும்பிற்குள் உறைந்து இருக்கும் சளியைக் காணுகின்றார்கள்.

எலும்பிற்குள் இருக்கும் சளியின் விளைவால் ஏற்படும் அணுக்களின் சிதைவின் தன்மையும் அது எலும்புகளை எப்படி அரிக்கின்றது (டி.பி. நோய்) என்பதையும் எக்ஸ்ரே மூலம் மருத்துவர்கள் காணுகின்றனர்.

அதைப் போல உடலின் உறுப்புகளில் உள்ள பாகங்களில் இந்தத் தசை மண்டலங்களில் விஷத்தின் ஆற்றல் அளவு கோல் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளில் வீக்கமோ அல்லது சீராக இயங்க முடியாமல் ஏதாவது அடைப்பாகிவிடும்.

இவ்வாறு அந்தந்த உறுப்புகள் செயலற்றதாக ஆகின்றது என்பதனை  விஞ்ஞானிகள் எக்ஸ்ரே மூலம்  கண்டறிகின்றனர். கருவி கொண்டு அவன் அறிகின்றான்.

எக்ஸ்ரே என்றால்
1.உணர்வின் ஒளிகளை ஒன்றிலே (ஊடுருவிப்) பாய்ச்சி
2.அதன் உணர்வின் அதிர்வுகளை வெளியாக்கி
3.அதைப் படமாக்கி எடுத்துக் கொள்வது.

எக்ஸ்ரே என்று அதற்குக் காரணப் பெயர் வைக்கின்றனர்.

உடலுக்குள் இருக்கும் நிலையை இந்த விஞ்ஞான அறிவால் நம்மை அறிந்திடச் செய்கின்றனர். இதைக் கண்டறிந்தது மனிதன் தான்.

ஆக உடலிலுள்ள உணர்வைக் கூர்மையான நிலையில் கண்டறிந்து எக்ஸ்ரே என்று படமாக எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று நாம் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். அவர்களுடன் பழகுகின்றோம். அவர்களை அறிந்து கொள்கின்றோம். அவ்வாறு அவர்கள் உணர்வுகள்
1.நமக்குள் பதிவான உணர்வுகளில்
2.மீண்டும் மீண்டும் பதிவானதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.எந்த  மனிதனின் உணர்வோ அது நுகரப்படும் போது
4.இதுவும் எக்ஸ்ரே தான்.

அடுத்தவர்களைப் பற்றி ஊடுருவி அதன் வழி அவர்கள் உணர்வலைகளை நாம் நுகரப்படும்போது அந்த (அவர்) உணர்வுகள் அதன் வழிப்படி நமக்குள் இயக்குகின்றது.

டி.பி. நோய் வந்தது என்றால் எலும்புகளையோ தசைகளையோ கரைக்கும் அணுக்களுக்கு அதற்கு மாற்றான அணுக்களை நம் உடலிலே உருவாக்குகின்றார்கள்.

மற்ற மருந்தின் துணை கொண்டு அதாவது இவன் எடுக்கும் உணர்வுகளை உள் செலுத்திப் புது விதமான அணுக்களை எலும்புக்குள்  உருவாக்குகின்றார்கள். நோயை நீக்குகிறார்கள்.

இது விஞ்ஞான அறிவால் கண்டறிந்து செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்த மருந்தின் அளவு கோல் உடலுக்குள் அதிகமாகும் பொழுது
1.நம் உயிரான்மாவில் நஞ்சு அதிகமாகின்றது.
2,அதற்குத்தக்கத்தான் அடுத்த உடல் நாம் பெறுவோம்.
3.விஞ்ஞான அறிவு கொண்டு உடலைக் காக்கலாம்.
4.உயிரான்மாவை ஒளியாக ஆக்க முடியாது.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் வழிப்படி அவர்கள் தங்கள் கண்ணின் புலனறிவை விண்ணிலே செலுத்தி அந்த ஆற்றல்களைத் தங்கள் உடல்களிலே வளர்த்து வாழ்க்கையில் வந்த நஞ்சை வென்று உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சுடராக மாற்றினார்கள்.

அந்த மெய்ஞானிகள் விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எக்ஸ்ரே போன்று நம் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உறுப்புகளில் உள்ள தீமையான அணுக்களை அடக்கி அருள் ஒளியின் அணுக்களாக உருவாக்கும்.

தீமைகளையும் அகற்றுகின்றோம். நோயையும் அகற்றுகின்றோம். அதே சமயத்தில் ஞானிகள் உணர்வுகள் நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக விளையத் தொடங்கும்.

விளைந்தது உயிரான்மாவில் சேர்ந்து ஒளியின் சுடராகும். இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அவர்கள் இருக்கும் எல்லையை நாம் அடையலாம். ஒளியின் சரீரம் பெற முடியும்.

கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்யும் “ஞானக்கண்”

கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்யும் “ஞானக்கண்”

கர்ப்பமாக இருக்கும் ஒரு தாயை எடுத்துக் கொண்டால் கருவுற்ற தொண்ணூறு நாட்களுக்குள் அந்தத் தாய் எடுக்கும் உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.

பொதுவாக பெண்கள் இரக்கமும் பண்பும் கொண்டவர்கள்.

பிறர்படும் நோயினை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே..,” என்ற எண்ணத்தில் சிலர் (கர்ப்பமான தாய்) நுகர்ந்துவிட்டால் அதைத் தன் உடலுக்குள் பரப்பி கருவிலிருக்ககூடிய சிசுவிற்கும் இத்தகைய உணர்வுகள் கலந்துவிடுகின்றது.

இன்று பல அணுக்களின் கருக்களை விஞ்ஞான அறிவுப்படி இணை சேர்த்து புதுப் புது செடிகளை எப்படி உருவாக்குகின்றனரோ இதைப் போல (தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்) அது தாயின் கருவிற்குள் உருப்பெற்றுவிடுகின்றது.

ஒரு வீரியம் குறைந்த செடியில் வீரியமுள்ள செடியின் அணுக்களை நாம் எடுத்து அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது வீரியம் குறைந்த செடியும் வீரியமான செடியாக உருவாகின்றது.

இது மனிதனால் இணைக்கச் செய்யப்பட்ட நிலைகள், அது வீரியமான செடியாக உருவாகின்றது

இதைப் போன்றுதான் தாய் கருவிலே சிசு வளரப்படும் பொழுது பல கொடிய நோய்களையோ, அல்லது துன்புறுத்தும் நிலைகளையோ, சண்டை போடும் நிலைகளையோ எதையெல்லாம் தாய் நுகர்கின்றதோ அந்த உணர்வின் அணுக்கள் கருவிலிருக்கக்கூடிய அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் சிசுவில் அது பதிந்துவிடுகின்றது.

இப்படிப் பதிந்து கொண்டபின் அதனுடைய வளர்ச்சியில் வரப்படும் பொழுது, தாயிற்குத் தான் பார்த்தது “ஊழ்வினை ஆகின்றது”. குழந்தைக்கோ அது “பூர்வ புண்ணியம் ஆகின்றது”.

இவ்வாறு கருவிலே விளைந்துவிட்டால் கருவில் உருவான குழந்தையும் அந்த உணர்வின் தன்மை இயங்கப்படும் பொழுது அந்த உணர்ச்சியை அதிகமாகக் கூட்டிவிடுகின்றது.

தாய் உற்று பார்த்தவர்கள் எந்தெந்த நோய்வாய்ப்பட்டனரோ அதைப் போல இவர்கள் சுணங்கிவிடுவதும் சண்டையிட்டவரைப் பார்த்திருந்தால் அதே உணர்வுகள் இனம் புரியாதபடி தான் வெறுப்படைவதும் சண்டை போடுவதும் இந்தக் கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது அந்தத் தாயிற்கு இனம் புரியாத இன்னலும் இனம் புரியாத சங்கடமும், இனம் புரியாத வருத்தமும் வரும்.

சில குழந்தைகளில் இப்படி ஆகும்.

ஏனென்றால், சில உணர்வுகள் பதிந்து கொண்டபின் அதன் உணர்வின் அணுக்கள் அந்த வளர்ச்சியைப் பெறும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தி தாய் வழி அது பெறும் தகுதி பெறுகின்றது.

முதலிலே பதிந்தது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது. தாய் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாகின்றது. ஒரு உணர்வின் தன்மை வித்தாகி வித்தின் தன்மை கொண்டு அது வளர்கின்றது.

இதைப் போன்று “சூட்சம நிலைகளில்” பல நிலைகள் மாறிக் கொண்டேயுள்ளது. எவ்வாறெல்லாம் இது நடக்கின்றது என்ற நிலையை நம் குருநாதர் காட்டினார்.

பல உண்மையின் உணர்வுகளை அலைகளாக எப்படிப் படர்கின்றது? அது நுகரும் தன்மைகள் உடலுக்குள் எப்படி ஊடுருவுகின்றது? என்ற நிலையையும் காட்டினார்.

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு கேமராவை வைத்து நம் உடல் உறுப்புகளையும் உடலின் இயக்கங்களையும் இன்று காணுகின்றனர்.

இதைப் போல குருவின் உணர்வின் துணை கொண்டு இந்த உணர்வுகள் எனக்குள் அதைப் பாய்ச்சி குருநாதருக்குள் அதைப் பாய்ச்சி என்னை நீ பார் எனக்குள் அது எப்படி இயங்குகின்றது? உணர்வின் செயலாக்கங்கள் அணுக்கள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையைக் காட்டினார்.

அதைப் போல் எனக்குள் பாய்ச்சி இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி மாறுகின்றது? இந்த எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது என்ற நிலையும் முறைப்படுத்திக் காட்டினார்.

இயற்கையின் நியதிகளை குருநாதர் எமக்குக் காட்டியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதைச் சொல்கிறோம். உங்களாலும் இதைக் காண முடியும் உணர முடியும். 

அண்டத்த்தின் ஆற்றல் இந்தப் பிண்டத்திற்குள்ளும் உண்டு. உங்களை நீங்கள் நம்புங்கள்.