“அகஸ்தியனாக நீங்கள் மாறுவதற்கு” முதல் நிலையாக உங்களுக்கு இதைக் கொடுக்கின்றேன்

“அகஸ்தியனாக நீங்கள் மாறுவதற்கு” முதல் நிலையாக உங்களுக்கு இதைக் கொடுக்கின்றேன்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
1.வெறும் சொல்லாக இல்லாது உயிருடன் ஒன்றி ஒலிகளை எழுப்ப வேண்டும்
2.நமது நினைவை “உயிருக்குள் செலுத்தி” அதை ஏங்குதல் வேண்டும்.

யாம் உபதேசிப்பதைக் கூர்மையாக நீங்கள் கேட்கின்றீர்கள்… பதிவாகின்றது. அதை உடலுக்குள் உருவாக்க… தனக்குள் இயக்கச் சக்தியாக மாற்ற… ஓ…ம் ஈஸ்வரா என்று நாம் உயிரோடு ஒன்றி அதைக் கவர்தல் வேண்டும்.

ஓ…ம் ஈஸ்வரா என்றால் அது நமக்குள் இயங்குகிறது என்று பொருள். என்னை ஜீவனுள்ளவனாக இயக்கிக் கொண்டுள்ளாய்… நான் எண்ணுவதை எனக்குள் இயக்குகின்றாய் எனக்குள் உருவாக்குகின்றாய்…! என்பது.

குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் “புருவ மத்தியிலே… துடிப்பின் நிலைகள் வலு அதிகமாகும்…”

ஆகையினால் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிருடன் நினைவைச் செலுத்தி இந்தக் குரலை நாம் எழுப்புதல் வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்த நினைவோடு நாம் அருள் சக்திகளை எண்ணி எடுக்க வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வின் ஒலி அலையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது “அந்த அதிர்வின் நிலைகள்” செயலாகும்.

எத்தனை பேர் சேர்ந்து நாம் இதைச் சேர்ந்து சொல்கின்றோமோ எத்தனை வகையான குணங்கள் இருந்தாலும்… நம்முடைய நினைவில் இந்த ஆற்றல் பெருகும்.

அகஸ்தியன் தாய் கருவிலே உருப்பெற்ற உணர்வுகளையும் குழந்தைப் பருவத்திலே பெற்ற உணர்வுகளையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.அதை நினைவாக்கி மீண்டும் சுவாசிப்பதற்கு முதல் படியாக இதைக் கொண்டு வருகின்றோம்.
2.இதற்கு முன் பரவலாகச் சொல்லி இருந்தாலும் அந்த உண்மை உணர்வுகளைச் சொல்லி
3.இதிலிருந்து உங்களை வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

அணுவின் ஆற்றலை அறிந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற சக்தியும் பிறந்த பின் அவர் பெற்ற உணர்வலைகளையும்
2.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாக தனக்குள் உருப்பெற்றதையும்
3.நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகித் தன் உணர்வலைகளை தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த “அந்த முதல் நிலையை…”
4.புருவ மத்தியில் எண்ணி ஏங்கிப் பெறுங்கள்.

அகஸ்திய மாமகரிஷி முதல் நிலைகளில் குழந்தைப் பருவத்தில் தாய் கருவில் பெற்ற உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கிப் பார்க்கும் பொழுது… சூரியனை உற்றுப் பார்த்து அதன் இயக்கத்தைக் காணுகின்றார்… உணர்கின்றார்.
1.அதை நாம் பார்க்க வேண்டும்… உணர வேண்டும்… நுகர வேண்டும்
2.அகஸ்தியன் கண்ட சூரியனின் செயலாக்கங்களைக் காண வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் சூரியனின் மின் அணுக்களின் கதிர்களைப் பார்க்கலாம். உயிரிலே மோதும் பொழுது புருவ மத்தியிலே கனமும்… அந்த ஒளிக்கதிர்களும்… அதை உணரும் சக்தியும் கிடைக்கும்.

நமது பிரபஞ்சத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மற்ற இருண்ட கோள்களின் மீது பட்டு அந்தக் கோள்களும் மின்னணுக்களைப் போன்று தோன்றுவதைக் காணலாம்.

உங்கள் நினைவின் ஆற்றல் இப்போது விண்ணிலே இருக்கின்றது. வானத்தில் நாம் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம் அல்லவா. அதைப் போன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் கோள்களில் தாக்கப்படும் பொழுது அது மின் அணுக்களாக உங்களுக்குத் தோற்றமளிக்கும்.
1.அன்று அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணை நோக்கிப் பார்த்தான் அல்லவா…
2.அதே உணர்வுகள் உங்களில் இப்பொழுது தெரியும்.

மறந்திடாது உங்கள் உயிருடன் ஒன்றி… உயிர் வழியாக விண்ணிலே நினைவைச் செலுத்தி… வான் வீதியிலே பரவி வரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தாக்கி அது மின்னுவதை… இப்பொழுது உங்கள் உடலுக்குள்… நினைவுக்குள்… அந்த உணர்வின் அலைகள் பாயும் பொழுது “காட்சிகளாக…” அதை உணரலாம்.

இரவிலே நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் எப்படி மின்னுகின்றதோ அதே உணர்வுகள் உங்களுக்குக் காட்சிகளாக அந்த மின்னணுவின் தன்மையைக் காண முடியும்.

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு
1.அவன் தனக்குள் பெற்ற மகிழ்ச்சி பெறும் உணர்வுகள்
2.உங்கள் உடலுக்குள் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று மகிழ்ச்சியான உணர்வுகள் தோன்றும்
3.உங்கள் உடல்களில் ஊடுருவி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகத் தோன்றும்.
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

இப்பொழுது அகண்ட வெளியைப் பார்த்தது போன்று உங்கள் உடலுக்குள் இந்த உணர்வலைகள் படர்ந்து வருவதை உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் ஒளியின் சுடராக ஊடுருவதை உணர முடியும்.

சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் எப்படி மற்ற கோள்களில் படும் பொழுது அது மின்னுகின்றதோ உங்கள் உயிரின் உணர்வுகள் இதன் வழி கொண்டு உங்கள் உடலுக்குள் அது மின்னுவதைக் காண முடியும். உங்கள் உடலுக்குள் அந்த ஒளியின் சுடர் தெரியும்.

இப்பொழுது
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… தனக்குள் விளையச் செய்து அந்த உணர்வின் அலையை எமக்குள் பாயச் செய்து
2.நம் குருவின் உணர்வலைகள் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருப்பதை
3.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளைப் பெறும் அந்த தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அந்த உணர்வின் அறிவு உங்கள் உடலுக்குள் பதிவாகி அதனின் நினைவாக
1.நீங்கள் எண்ணும் போதெல்லாம் மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் உடலுக்குள் பரவுவதை உணர முடியும்… ஒளியின் சரீரம் ஆவது போன்று…!

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் பொழுது தாய் தந்தையரைப் பார்த்து நுகர்ந்த…
1.அவர்கள் உடல்களிலிருந்து வெளி வந்த அந்த பச்சிலை வாசனைகளை இப்பொழுது நீங்கள் நுகர்வீர்கள்… நுகரும் ஆற்றல் பெறுவீர்கள்.
2.இது உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க உதவும்.

அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தையர் பால் செலுத்தும் பொழுது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் பொழுது
1.அவன் மகிழ்ச்சி பெற்ற உணர்வுகள் அது எவ்வாறோ அதைப் போன்று
2.அந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று “கடும் தீமைகளை அடக்கி…”
3.மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக… அந்த மகிழ்ச்சியின் பெருக்காகப் பெருகுவதை உணரலாம்.

நாம் மலைப் பகுதிகளுக்குச் சென்றால் ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று
1.நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் இப்பொழுது அந்த நஞ்சை வெல்லக்கூடிய மூலிகை மணங்கள் சென்று
2.பல அற்புத மணங்களாக உங்கள் உடல் முழுவதும் படரும்
3.உங்கள் நினைவுகள் அனைத்து மகிழ்ச்சி பெறும்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த அண்டத்தினை… அதன் அறிவின் தொடராக அறிந்துணரும் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ளோர் அனைவரும் பெற்று… அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

இது அனைத்துமே முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்பட்டது…! பதிவாக்கி இருக்கின்றேன்…! ஈர்க்கும் சக்தி வரும் பொழுது நினைவுபடுத்தி அதை ஏங்கிப் பெறுகின்றீர்கள்… அதை உணர்கின்றீர்கள்.

பாடநூல்களைப் படித்த பின் இன்னதுதான் என்ற நிலையில் ஒரு பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில் காண்பது போன்று
1.அகஸ்தியன் கண்டதை எல்லாம் நீங்கள் காணும் நிலை பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்… மாறுவதற்குத் தான் முதல் நிலையாக இதை உங்களுக்குள் கொடுக்கின்றேன்…!

உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

 

தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளைக் கூர்மையாக வலிமை கொண்டு பதிவாக்கி அதைப் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணப்படும் பொழுது அது நம் உடலுக்குள் செல்கின்றது.

தீமையை வென்றவன் சுக்ரீவன்… அவன் வாலியின் சகோதரன்… இளையவன்.

விஷத்தின் தன்மை கொண்டு வளர்ச்சி பெற்றுத் தான்
1.பல கோடிச் சரீரங்களில் அது எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு,,, பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக உருவாக்கியது.
2.மனிதனான பின் விஷத்தின் தன்மை ஒடுக்கி அந்த உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவன் துருவ மகரிஷி.
3.ஆகையினால்… பின் தான் இதனுடைய வளர்ச்சியின் தன்மை பெற்றவன் என்றும் சுக்ரீவன் வாலியின் சகோதரன் என்றும் இளையவன் என்றும்
4.பின் வந்த நிலையை நாம் அறிவதற்காக நமக்குக் காட்டியுள்ளார்கள் இராமாயணக் காவியத்தில்.

கடும் வேதனைகளை அடக்கியவன் சுக்ரீவன். பல கோடிச் சரீரங்களில் உருவான இந்த உணர்வைத் துருவன் அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றுகின்றான்.

உதாரணமாக ஒரு விஷமான பாம்பு உணவுக்காகத் தனக்குள் விளையும் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதனை உட்கொள்ளும் பொழுது இந்த விஷமே அந்த உடலைக் கரைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

துரித நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பாக இந்த விஷம் விளைந்தாலும் எதை உட்கொள்கின்றதோ அந்த உடலிலும் விஷம் உண்டு. அந்த விஷத்தையும் தன்னுடன் கலந்து அதை ஜீரணிக்கும் சக்தி வரப்படும் பொழுது
1.மீண்டும் விஷத்தினை வளர்த்து விஷம் உருவாக்கும் அந்தப் பையில் (பாம்பின் உடலில்) அதை நிரப்பும்.
2.பையில் நிரப்பப்படும் பொழுது அதில் சிறுகச் சிறுகச் சேர்த்து வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.
3.விஷப் பைகளில் வளர்ச்சியின் தன்மை பெறும் பொழுது ஒளியின் சுடராக மாறுகின்றது.

அதே போல் தான்
1.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வினைப் பெற்று ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ மகரிஷி.
2.அந்தத் துருவ மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்வோமென்றால் அது உடலுக்குள் சென்று நம்மை அறியாது சேர்ந்த வேதனைகளை அடக்குகின்றது.

எந்த உணர்வு நம்மைச் சோர்வடையச் செய்ததோ… அந்த உணர்வுகள் விஷத்தின் தன்மையை மீண்டும் நுகர்ந்து சோர்வடையாதபடி… அந்தத் துருவனின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது… அந்த விஷத்தினை ஒடுக்குகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் “சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான்…” என்று சொல்வது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வே எண்ணங்களாக இயக்குகின்றது என்றும் “அருள் ஒளியின் உணர்வாக இயக்கப்பட வேண்டும்” என்றும் காட்டுகின்றார்கள்.

அதாவது பிராணயாமம் என்று சொல்வார்கள்.

ஆனால்… மூக்கு வழி கூடிச் சுவாசித்து உணர்வினை உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வை ஜீவனாக்குவது அல்ல பிராணயாமம்.

1.புருவ மத்தியில் உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி
2.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் ஊடுருவச் செய்து
3.அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்து… அதனின் இயக்கமாக நமக்குள் இயக்கச் செய்வதே பிராணயாமம் என்பது.

ஏனென்றால் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வு நம் உடலுக்குள் சென்று… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது எதனின் வலுப் பெறுகின்றதோ அதன் இயக்கமாக அது நம்மை “ஒளியான நிலைகளாக…” மாற்றி அமைக்கும்.

அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்

அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்

 

அகஸ்தியரும் அவர் மனைவியும் தனக்குள் அறிந்த உணர்வுகளை இருவருமே ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற நிலையில் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்தனர்.

1.உயிர் எவ்வாறு மின்னல் போன்ற மின்னிக் கொண்டிருந்ததோ இதைப் போல
2.தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்து எதனின் ஈர்ப்பிலும் சிக்காது
3.இரு உயிரும் ஒன்றாகி இரு உடலில் விளைந்த உணர்வுகளும் ஒன்றாகி
4.இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் அனைத்தும் நம் பூமிக்குள் வரும் அந்தத் துருவதிலே நின்று அதனை ஒளியின் கருவாக உருவாக்கி
5.இன்றும் தங்கள் வாழ்க்கையில் அழியாத நிலைகள் கொண்டு “துருவ மகரிஷியாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

அந்தத் துருவ மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம். துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி நாம் ஏங்கித் தியானிப்போம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வலைகள்
1.உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்பட்டு உங்கள் உடலுக்குள் ஊடுருவதும்
2.அதனைப் பின் தொடர்ந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியும் உங்கள் புலனறிவிலே ஈர்க்கப்பட்டு
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது இணையும்.

அந்த உணர்வின் ஒளிகள் இணைந்து வருவதை உங்கள் நினைவிலே உணர முடியும். உங்களுடன் இணை சேர்க்கும் பொழுது அதன் உணர்ச்சிகளை உங்கள் உடலில் உணர முடியும்.

உங்கள் எண்ண உணர்வுகள் அனைத்தும் இணைந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்தி உங்கள் ஈர்ப்பிற்குள் வருவதும்… உங்கள் நினைவலைகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வருவதையும்… அங்கிருந்து உங்கள் உடலுக்குள் பாய்வதையும் உணரலாம்.

1.மீண்டும் மீண்டும் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்திற்குள் சுழன்று வருவதும்
2.அந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் சுவாசங்களில் பல ஆற்றல்கள் உயிரிலே ஈர்க்கப்பட்டு
3.நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்தி உங்கள் உடலுக்குள் ஊடுருவி அனைத்து அணுக்களிலும் அது கவரப்படும் பொழுது
4.துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை விண்ணிலே எப்படிக் காண முடிகின்றதோ அதைப்போல
5.உங்கள் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஒளியாகப் பரவுவதைக் காணலாம்… காட்சியாகவும் தெரிய வரும்.
5.இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியும் காட்சிகளாக உங்கள் உணர்வுகளிலே தென்படும்.

வான மண்டலத்தில் வெளிப்படும் பல வர்ணங்களைக் காட்சியாகவும் உங்கள் உணர்வுகளில் நுகர்ந்து அது மாற்றி அமைக்கும் சக்திகளை உங்களுக்குள் உணரலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய நிலையில்… அண்டத்தில் நமது பிரபஞ்சம் நட்சத்திர இயக்கங்களுடன் சுழன்று தனிப் பிரிவாகச் சுழல்வதை இப்பொழுது நுகர முடியும். உங்களுக்குள் அந்த உணர்வு தென்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.

பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் ஈர்த்து ஒளிப்பிளம்புகளாக வெளிப்படுத்தும் போது பல வித வர்ணங்களாக வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உமிழ்த்தித் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வுகள் மோதப்படும் பொழுது பல பல வண்ணங்கள் உருமாறி பல பல வண்ணங்களாக மாற்றமடைந்து
1.அணுத்தன்மையாகப் பிரபஞ்சத்தில் மிதந்து வருவதையும் அதைக் கோள்கள் நுகர்வதையும்
2.கோள்கள் நுகர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவருவதையும்
3.சூரியன் கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டுத் தன் ஒளிப்பிளம்பாக மாற்றும் நிலைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

வான மண்டலங்களில் நட்சத்திரப் பொறிகளின் இயக்கத்தையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பல வர்ணங்களில் வெளி வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
1.அந்த வர்ணங்கள் பூமிக்குள் புகுந்து பாறைகளுக்குள் ஊடுருவதையும்
2.பிளந்து… அதாவது ஒரு குகைக்குள் நாம் நுழைவது போன்று நினைவாற்றல் வந்திருக்கும்.

அதே சமயத்தில் பூமிக்குள் கொதிகலனாகச் சேர்ந்து மாற்றம் அடைந்து இருப்பதையும் பூமியில் எதிரொலிகள் உள்ளே நிலநடுக்கங்கள் வருவதையும் உணர்ந்திருக்கலாம்.

அதனின் விரிவாக்கங்கள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
1.அண்டத்தில் இருப்பது பிண்டத்திற்குள் அணுக்களாக மாற்றமாகி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது பளீர்ர்… என்று வெளிச்சமாக உங்கள் உடலுக்குள் தெரிந்திருக்கும்.

இது எல்லாம் தெரியவில்லை என்று யாரும் சோர்வடைய வேண்டாம். எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள முடியும் எல்லோருக்கும் இந்த உணர்வுகள் கிடைக்கும்படி அதை இணைத்து அந்த வளர்ச்சிக்குக் கொண்டு வருகின்றோம்.

செடிக்கு உரமிடும் பொழுது அதைத் தன்னுடன் இணைத்துத் தன் இனமான சக்தியைக் கவரும் பொழுது அது சீராக வளர்கின்றது. அதைப் போல்
1.அனைவரும் அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.அந்த நம்பிக்கையில் தான் சொல்கிறேன்.

எமது குருநாதர் அண்டத்தின் ஆற்றலைப் பெற எமக்குப் பயிற்சியாகக் கொடுத்தார். அவர் காட்டிய வழியில் அண்டத்தையும்… பிரபஞ்சத்தையும்… புவியின் ஈர்ப்பையும்…
1.அண்டத்தில் இருப்பது இந்தப் பிண்டத்திற்குள் அணுக்களாக எப்படி மாற்றம் அடைகின்றது என்பதையும்…
2.துருவ மகரிஷி தனக்குள் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றியதையும்
3.அதன் உணர்வைப் பின் வந்த மனிதர்கள் ஏழாவது நிலையாகப் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழண்று கொண்டிருப்பதையும்…
4.இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனி சுழற்சியாக அது சுழன்று கொண்டிருப்பதையும் காண முடியும்.

நாளுக்கு நாள் உங்களுக்குள் தெளிவடையும் நிலையாக இது வளர்ச்சியடையும். அதை அறிந்திடும் அறிவும் வளரும்.

தியானமிருக்கும் பொழுது உங்கள் அனைவருக்குமே ஒரு மிதப்பது போன்ற உணர்ச்சி தோன்றி இருக்கும் வான மண்டலத்தை நோக்கி மேலே மிதப்பது போன்று தோன்றியிருக்கும். புவியீர்ப்பின் பிடிப்பைக் கடந்து எடை குறைந்ததாகத் தெரியவரும்.

அகஸ்தியன் தான் பெற்ற சக்திகளைத் தன் மனைவிக்கு எப்படிப் பெறச் செய்தாரோ மனைவி பெற்ற நிலையை மீண்டும் அவர் பெற்று இருவரும் ஒன்றாக இணைத்து மாற்றமடையச் செய்த அந்த அருள் சக்தியைத்
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவருமே பெற்று நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த முடியும்.
3.விண் செலுத்தி அந்த ஆற்றலைப் பெறும் பொழுது கணவன் ஒளிச் சரீரம் பெற்றதும் அதே போல் மனைவி ஒளிச் சரீரம் பெற்றதும் தெரிய வரும்.

ஏனென்றால் கணவன் உணர்வுகள் மனைவியிடம் உண்டு மனைவியின் உணர்வுகள் கணவனிடம் உண்டு. யாரும் பிரிந்தில்லை.

அதன் வழி எடுக்கும் அந்த ஆற்றல் பெருகும் போது அதன் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து மனித வாழ்க்கையில் கணவன் மனைவி எவ்வாறு ஒன்றி வாழ்ந்தார்களோ அதைப் போன்று “இரு உயிரும் ஒன்றாகிப் பெரு வாழ்வு வாழும் ஒளியின் சரீரமாக வாழும் நிலையாக மாற்றிக் கொள்ள முடியும்…”

இந்தத் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு இரவு முழுவதும் வான மண்டலத்தில் உங்கள் நினைவுகள் சஞ்சரித்து
1.வானஇயல் புவியியல் உயிரியல் என்ற அடிப்படையில் நினைவு கொள்ளும் பொழுது பல அற்புதங்கள் விளையும்.
2.உங்கள் உடலில் உள்ள பிணிகள் குறையும்… மன பலம் பெறுவீர்கள்… அருள் ஞான உணர்வுகள் வளர்ச்சி பெறும்

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்

 

செடி கொடிகள் வாடிவிட்டால் அதற்குத் தக்க உரங்களை இடும் பொழுது அது வலுவாகி அது தன் இனத்தின் சத்தைச் செழிப்பாக உருவாக்குகின்றது.

இதைப் போல
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உரமாக அறிவின் தெளிவாக இணைத்து விட்டால்
2.மனித வாழ்க்கையில் தீமையை வென்றிடும் உணர்வின் சத்தாக அது விளைந்து அதன் வித்தாக நமக்குள் உருவாகி
3.அந்த அருள் ஞானிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ்கின்றார்களோ அதைப் போல
4.அவர்கள் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் சென்று பேரானந்தப் பெரு நிலை என்று அழியா ஒளிச் சரீரம் பெற்று நாம் வாழ முடியும்.
5.”அவன் எந்த வழியில் சென்றானோ அவ்வழியில் நாம் செல்வதற்குத் தான்”
6.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னார்கள்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கும் அந்தத் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் தன்னை அறிந்து விண்ணுலகை அறிந்து நம் பூமி நுகரும் அந்தத் துருவப் பகுதியிலே அமைந்து துருவப் பகுதியிலிருந்து ஆற்றல்களை நுகர்ந்தான்.

நமது பூமி பல தாவர இனங்களாக அதனின் சத்தை மாற்றி உயிரணுக்கள் அதை நுகர்ந்து அதில் வரக்கூடிய எண்ணங்கள் கொண்டு பல கோடிச் சரீரங்கள் ஆகி “மனிதனாக நம்மை உருவாக்கியது உயிர்” என்ற நிலையில் தன்னை அறிந்தவன் அகஸ்தியன்.

1.வட துருவத்தில் உருவாகும் உணர்வினை இடைமறித்துத் தனக்குள் அதை நுகர்ந்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக அமைக்கின்றது. பின் சூரியனின் சுழற்சி வட்டத்தில் அது சுழலப்படும் போது தூசிகளாக மாறுகின்றது.

தூசியின் தன்மைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது நம் பூமியின் அருகில் வரப்படும் பொழுது துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து சூரியனின் வெப்பக் கதிர்களையும் கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை
1.துருவப் பகுதி வழியாக நுழைவதை… இந்த வாயில் வழியாக அதை அகஸ்தியன் கவர்ந்து தனக்குள் சிருஷ்டித்து
2.உடலில் உள்ள தீய அணுக்கள் அனைத்தையும் கருக்கி விட்டு ஒளிச் சுடராக மாறும் உணர்வின் ஒளியின் கூறாக இந்த உடலிலே விளைய வைத்து
3.எந்தத் துருவத்தின் வழி தன் எண்ணத்தால் எடுத்தானோ அந்த உணர்வின் வலிமை கொண்டு
4.உடலை விட்டுச் சென்ற பின் இன்றும் துருவ நட்சத்திரமாக துருவ மகரிஷி அமர்ந்துள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தியினைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அந்தச் சக்தியினை நம் பூமி தனக்குள் கவர்ந்து வந்து கொண்டுள்ளது.

இதைத் தான் நாம் கிழக்கே பார்த்து வணங்கும்படி செய்து… மேற்கே பார்க்க விநாயகரை வைத்து நாம் வணங்கும் முறைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

ஏனென்றால் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஏற்றால் அதன் வழியில் எந்த நாட்டவராக இருந்தாலும் ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று தான் கருத்தினை அக்காலங்களில் இப்படிப் பதிவு செய்துள்ளார்கள்.

புலஸ்தியர் அகஸ்தியர்

புலஸ்தியர் அகஸ்தியர்

 

தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அவன் வளர்ச்சி அடையும் பொழுது காரணப்பெயராக “அகஸ்தியன்” என்று வைக்கின்றார்கள்.

அவருடைய தாய் தந்தையர் செடி கொடியின் மணத்தைப் புலனறிவால் நுகர்ந்து அறிந்ததனால் “புலஸ்தியர்” வம்சத்தில் வந்தவர்கள் அவர்கள்.

ஆனால் தாய் கருவிலே சக்தி பெற்றுப் பிறந்ததால்
1.அணுவின் இயக்கத்தை அறியும் ஆற்றல் பெறுகின்றான்
2.அகத்தின் இயக்கங்களை அறிந்ததனால் அகஸ்தியன்.

செடியின் மணத்தை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்… “இந்தச் செடி இன்னது தான் செய்யும் என்று…” அதனுடைய விஷத்திற்கு எல்லா விஷத்தையும் இயக்கத் தெரிந்தாலும் “உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்…”

மனிதனின் சிறுநீரை எடுத்து அதிலே சில கெமிக்கல்களைப் போட்டால் அதில் இரத்தத்தில் இருக்கக்கூடிய பலவிதமான சத்துக்களை விஞ்ஞான அறிவு கொண்டு இன்று அறிகின்றார்கள்.

இரத்தக் கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றதா…? சளி இருகின்றதா…? உப்புச் சத்து இருக்கின்றதா…? சர்க்கரைச் சத்து இருக்கின்றதா…? என்று பிரித்துக் காணுகின்றார்கள்.

ஆனால் அகஸ்தியன் எல்லாவற்றையும் கடந்து தாய் கருவிலேயே ஆற்றல்களைப் பெற்றதனால் ஒவ்வொரு தாவர இனத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றான்.

அப்படிப் பெற்ற ஆற்றல் தான் அவன் வாழ்நாளில் அவன் வளர வளர
1.நோய் வந்தவர்களுக்கு ஒரு பச்சிலையைக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்கின்றான்…
2.நோய் நீங்குகிறது. அகஸ்தியன் குழம்பு என்று சொல்வார்கள்.
3.அவன் அறிந்த உணர்வு கொண்டு அக்காலங்களில் பல நோய்களைப் போக்கவும் காரணமாகின்றான்.
4.அதே சமயத்தில் இவனைக் கண்டாலே மற்ற மிருக இனங்கள் இவன் அருகில் வராது விலகிச் சென்று விடுகிறது.

பச்சையாக வேப்பிலைகளைச் சாப்பிட்டால் உடலில் கசப்பின் மணம் வரும். வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் உடலில் வெங்காய வாசனை வரும். கத்திரிக்காயைச் சாப்பிட்டால் அந்தக் காரல் வாசனை வரும்.

இது எல்லாம் இயற்கையின் உண்மையின் உணர்வுகள். உயிரின் இயக்கத்தால் அறியும் ஆற்றல் வந்து விடுகின்றது.

இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்ததனால் அன்று மனிதனுக்குகந்த புதுப்புது தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
1.உருவாக்கினாலும் அதை வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றான்.
2.வேக வைக்கப்படும் பொழுது “அதனின் இயக்கங்கள் மாறுகின்றது” என்று உணர்கின்றான்.

அதே சமயத்தில் மற்ற பொருள்களை இணைத்து அதைச் சுவையாகவும் உருவாக்க முடியும் என்றும் காணுகின்றான். அத்தகைய சக்தி பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் “உணவை எப்படிச் சமைக்க வேண்டும்…?” என்று தெரிந்து கொள்கின்றான்.

இன்றைய விஞ்ஞானிகள் செய்வது போன்று அக்காலத்திலே மனிதனுக்குகந்த பல பயிரினங்களையும் அகஸ்தியன் உருவாக்குகின்றான்.

இப்படி அவன் வாழ் நாளில் அவன் வளர்ச்சி அடையப் படும்போது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எப்படி உணவு கிடைக்கின்றது…? என்று அவன் அறிகின்றான்.

பிரபஞ்சத்திற்குள் இருந்து வரும் சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து… பூமிக்குள் பரவச் செய்து நீராகவும் மண்ணாகவும் கல்லாகவும் வளர்ந்து அதனுடைய கலவை கொண்டு தாவர இயல்கள் உருவாகி… தாவரவியல் உருவாக்கப்படும் பொழுது அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு உடல்கள் பெற்று மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்று இந்த பூமிக்குள் வளர்ச்சியான சகலத்தையும் அறிகின்றான்.

இதையெல்லாம் அறிந்து கொண்ட முதல் மனிதன் அகஸ்தியன் மனிதனான பின்
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று பழகியவனும் அவனே.
2.இந்த உண்மைகளை எல்லாம் தனக்குள் அறிந்து பூமிக்குள் வரும் விஷத்தை அடக்கும் தன்மையும் பெறுகின்றான்.

பிரபஞ்சத்தில் இருக்கும் விஷத்தன்மைகள் துருவத்தின் வழி பூமிக்குள் வந்தாலும் தாவர இனங்களில் அது இணைந்து விடுகின்றது. ஆனால் மனிதனாகி விஷத்தை ஒடுக்கியதால் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் போது விஷத்தின் இயக்கத்தையும் அறிந்து கொண்டான்.

அவனுடைய வளர்ச்சியில் காலப்பருவம் வரும் பொழுது திருமணம் ஆகின்றது. தான் கண்ட அனைத்தையுமே தன் மனைவிக்கு எடுத்து உணர்த்துகின்றான்.

மனைவிக்குள் இது பதிவான பின் கணவன் தெரிந்து கொண்ட நிலையைத் தானும் அறிய வேண்டும் என்று அதன் வழி பெற்று
1.மேலும் தன் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
2.அதே போன்று அகஸ்தியனும் தன் மனைவி அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றான்.

அவர்கள் இருவரும் வசிஷ்டர் அருந்த்தியும் போன்று வாழ்ந்து தான் தெரிந்த உண்மையை மனைவிக்கும் மனைவி தெரிந்த உண்மையைக் கணவனுக்கும் இருவரும் ஒன்றாக இணைந்து வானுலக ஆற்றலை அறியும் பருவம் பெறுகின்றனர்.
1.எதை எல்லையாகக் குறி வைத்து அந்த ஆற்றல்களை எல்லாம் வளர்த்துக் கொண்டார்களோ
2.அங்கேயே அவர்கள் சென்று துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள்… வளர்கின்றார்கள்… அழியாத நிலைகள் கொண்டு…!

அதிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

 

மனித உடலில் இருந்து தீமையான உணர்வுகளை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள் மெய் ஞானிகள். அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இந்த உணர்வின் அலைகளை நமக்கு முன் பரவச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.

உதாரணமாக நெருப்பின் அருகில் நாம் சென்றால் நெருப்பின் தணல் அருகில் வராதபடி நம்மை ஒதுக்கிவிடும். அதைப் போல
1.நெருப்பை ஒத்த மனிதர்கள்…
2.நெருப்பை ஒத்த அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டவர்கள் மெய் ஞானிகள்.

ஏனென்றால் இன்னொரு உடலின் ஈர்ப்பிற்குள் செல்லாதபடி உயிரின் ஈர்ப்புடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் அவர்கள் நிலையாக இருந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

பிறவியற்ற நிலைகள் அடையும் அந்த ஆற்றல்களை நுகர்ந்திருந்தார்கள்.
1.அதை நாம் பருக வேண்டும் என்றால் “நமக்கு அந்தச் சக்தி வேண்டும்…”
2.அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கடந்த காலங்களில் அன்று ஆண்ட அரசர்கள் என்ன செய்தார்கள்…? மாற்று அரசர்கள் இந்த அரசைக் கைப்பற்ற… அந்த அரசனுடைய குழந்தைகளை அது அரசனாகும் நிலைகளுக்கு வரும் பொழுது… சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொன்றிடும் நிலை வந்துவிடும் என்று தெரிந்த பின்பு…
1.அந்தக் குழந்தை… தாயின் கருவிலே கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே
2.விஷத்தை சிறுக சிறுக சிறுகச் சிறுக தலைமுடியில் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்க்குக் கொடுத்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றுவார்கள்…”
3.பிறந்த பின்னும் பாலூட்டும் பொழுதும் சிறுகச் சிறுக விஷத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையைச் செய்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றி விடுவார்கள்…”
4.அப்படி ஏற்றி விட்டால் மற்றவர்கள் வேறு எந்த விஷத்தைக் கொடுத்தாலும் இவர்களை மாய்த்து விட முடியாது.

அதே சமயத்தில் இந்த விஷத்தை உணவாகக் கொண்டபின் இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தையின் உடலிலே வீரியம் கொண்டதாக மாறி விடுகின்றது. அதனால் தான் கடந்த கால அரசர்களுக்கு வலு மிகவும் அதிகம்.

1.அந்த விஷத்தின் தன்மை கொண்டு இவர்கள் வளர்ச்சி பெற்றது போன்று
2.ஞானிகளும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட சக்தியை குருநாதர் வளர்த்துக் கொண்டார்.

குருநாதர் எனக்கு இதை நேரடியாகக் கொடுக்காதபடி அதைப் புரிந்து கொள்வதற்காக பைத்தியம் போன்று அவர் இருக்கப்படும் பொழுது அவருடைய காலிலே வேஷ்டிகளைக் கிழித்துக் கட்டுவார்… வேறு நிறம் கொண்ட சில துணிகளையும் கட்டிக் கொள்வார்.

ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறார்…? என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் பைத்தியம் போன்று தான் நடித்துக் கொண்டிருந்தார்.

எதை எடுத்தாலும் ஒரு நிமிடம் என்னிடம் நன்றாகப் பேசுவார்… ஒரு நிமிடம் பைத்தியக்காரர் போன்று பேசுவார். அப்போது என்னுடைய எண்ணமும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் காலிலே கட்டிக் கொண்டு ஒவ்வொரு செடிக்கும் சென்று ஒவ்வொரு விதமான நிறம் கொண்ட துணிகளை அங்கேயும் கட்டுவார்.
1.அப்பொழுது பரிபாஷையிலே அங்கே ஒன்று சொல்வார்.
2.ஆனால் அந்த பரிபாஷையில் சொல்வது எனக்கு விளங்காது…!

துணியைச் செடியில் கட்டி விடுவார். அதை என்னிடம் காட்டி இவைகளுக்கு யார் சோறு போடுவது…? என்று கேட்பார். யார் சோறு போடுவது…? என்று எனக்குத் தெரியாது… அது சோறு சாப்பிடாது சாமி…! என்று நான் சொல்வேன்.

சோறு சாப்பிடாமல் அது எப்படி வளரும்…? என்று என்னென்னமோ பேசுவார். எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியாது இப்படி அவர் சொல்லிக் கொண்டே வந்தபின்… மீண்டும் என்னிடம் தெரியுமா…? என்று கேட்பார்.

தெரியவில்லை…! என்று நான் சொன்னவுடன் இரண்டு உதை கொடுப்பார்.
1.அடி வாங்கும் பொழுது அவருடைய நினைவு வரும்.
2.இப்படித்தான் அவருடைய எண்ணத்தை எனக்குள் செருகச் செய்தார்.

அவர் உடலை விட்டுச் சென்றார். அவர் காட்டிய உணர்வின்படி அகஸ்தியர் வாழ்ந்த இடங்கள்… முதலில் தலைக்காவிரிக்குச் சென்றேன். அங்கே அகஸ்தியருடைய உணர்வுகள் இருக்கின்றது.

பாகமண்டலம் என்று உண்டு. அங்கே மலை உச்சியிலே தண்ணீரை எவ்வளவு எடுத்தாலும் குறையாது. உயரமான மலை… அதற்குக் கீழ் தான் மற்ற எல்லாம் தணிந்து இருக்கின்றது.

ஆனால் மலை உச்சியிலே அந்த நீர் இருக்கக்கூடிய பள்ளம் இருக்கின்றது. அதிலே தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் குறைவதில்லை.

எங்கிருந்து நீர் அங்கே வருகின்றது…? என்பதை முதன் முதலில் அறிவதற்காக என்னை அங்கே செல்லும்படி செய்தார் குருநாதர்.

அங்கே தியானத்தில் இருக்கப்படும் பொழுது உயரமான அந்த இடத்தில் மேலே மேகங்கள் செல்கின்றது. மேகங்கள் செல்லும் பொழுது
1.மலையில் இருக்கக்கூடிய காந்தம் நீர் பசை உள்ள அந்த மேகங்களைக் கவரும் சக்தி பெறுகின்றது.
2.இதே போன்று சில மரங்களுக்கும் அந்த மேகங்களை இழுத்துக் கவரும் சக்தி வருகின்றது.
3.மேகங்கள் மரத்தால் இழுக்கப்படும் பொழுது நீரை அது உணவாக எடுத்துக் கொண்டாலும் மரத்தில் இருந்து மீண்டும் நீர் வடிந்து நீராக ஓடுகின்றது.

அதனுடைய தன்மைகள் வேறு.

மலையில் அகஸ்தியன் உட்கார்ந்து அவர் ஜெபித்த உணர்வின் சக்தி காற்றாகப் படர்ந்து செல்லும் அந்த மேகத்தை இழுத்து
1.அதை நுகரச் செய்யும் அந்தச் சக்தி அகஸ்தியன் உட்கார்ந்த இடத்திலே அந்தப் பாறைகளில் பட்டிருக்கின்றது.
2.ஆகையினால் மேகங்கள் மேலே செல்லும் பொழுது கவர்ந்து நீராக வடிந்து செல்கின்றது.

நாம் இங்கே வீட்டில் சமையல் செய்கிறோம் நீர் ஆவியாகப் போகின்றது. அதன் மீது ஒரு தட்டை வைத்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றினால் அந்த ஆவி நீராகக் கொட்டுகின்றது.

எந்தச் சத்தின் தன்மையை ஆவியாக மாற்றினோமோ… தட்டை வைத்துக் குறுக்காட்டப்படும் பொழுது நீரை ஊற்றிய பின் ஆவியாகச் செல்வதை நீராக வடியச் செய்கின்றது.

அந்த இடத்திலே மேகமே இல்லை என்றாலும் அந்த ஞானியின் அருள் சக்திகள்… மணங்கள் பட்டவுடன் குவித்து மேகங்களாக மாறுகின்றது. மேகங்களாக மாறிய பின் தன் உணர்வின் சக்தியை இழுத்து இதற்குள் உறைந்த பின் நீராக மாறுகின்றது.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்தாலும் அந்த இடங்களுக்கு நான் சென்ற பின்
1.குருநாதருடைய உருவம் தெரிகின்றது… அவர் காலில் கட்டிய துணிகள் தெரிகின்றது…
2.அங்கிருக்கக்கூடிய மரங்களிலும் இவர் கட்டிய துணிகள் தெரிகின்றது.
3.அப்பொழுது குருவின் நினைவு வருகின்றது.
4.முதலில் உடலுடன் அவர் இருக்கும் போது சொன்ன பரிபாஷையின் நிலைகள் அந்த இடத்திலே எனக்குப் புரியும் நிலை வருகிறது.
5.இந்த நீராக வடியக்கூடிய ஆற்றல் எப்படி…? என்று அங்கே அப்பொழுது நான் அறிய முடிந்தது.

உயிருடன் இருக்கும் பொழுது எனக்கு இதை உணர்த்தவில்லை.

இருந்தாலும் அடி கொடுத்தார். அந்த உணர்வின் நினைவலைகள் வரப்படும் பொழுது “அந்த எண்ணத்தில் வரும் பொழுது புரிகின்றது…” அன்று வாழ்ந்த அகஸ்தியன் ஆரம்ப காலங்களில் விண்ணினுடைய ஆற்றல் எப்படி நுகர்ந்து எப்படி அவன் பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார்.

அகஸ்தியன் எங்கெல்லாம் சென்றானோ அந்த மலை இருக்கக்கூடிய பகுதிகளில் இது போன்ற நீர்கள் உற்பத்தி ஆகின்றது. மைசூரிலும் இதே போன்று நீர் நிலைகள் உண்டு… நாழிக் கிணறு என்று சொல்வார்கள்.

மற்ற இடங்களில் நீர் இருப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் மட்டும் நீர் இருக்கின்றது. எடுக்க எடுக்க அங்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்த அளவுக்கு நீர் வந்து மீண்டும் நிரம்பிவிடும். அது உச்சிமலை… பாறை தான்… வேறு ஒன்றும் இல்லை…!

அன்று அகஸ்தியன் அவன் சென்ற இடங்களில் எல்லாம்… நான் எடுத்துக் கொண்ட ஜெப நிலைகளில்
1.ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகள் எப்படி விண்ணிலிருந்து வருகின்றது…? என்ற நிலையை நேர் பார்வை கொண்டு
2.அந்த அட்சரேகையின் சுழற்சி வட்டத்திற்குள் அது வெளிப்படுத்தும் நிலையும்… அதற்கு மத்தியிலே கோள்கள் எவ்வாறு செல்கிறது…? என்றும்
3.நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தினை அது முறியடித்து பிரபஞ்சத்திற்குள் தணிந்த அலைகளாக வரும் பொழுது
4.மத்தியிலே செல்லும் பொழுது ஒவ்வொரு கோளும் இந்த சக்தியை தனக்குள் நுகர்ந்து எப்படிச் செயல்படுகின்றது…?
5.செயல்பட்ட பின் ஓன்றுடன் ஒன்று கலந்து இந்த உணர்வின் சக்தி எப்படி மாறுகின்றது…?
6.அது வெளிப்படுத்தும் சக்தியை அதற்கடுத்துக் கீழ் வட்டங்களில் இருக்கும் மற்ற கோள்கள் இதிலிருந்து வருவதை அது எப்படிக் கவர்கின்றது…?

அதைப் போல சூரியனுக்குள் வரப்படும் பொழுது ஒன்று இங்கேயும்… ஒன்று அங்கேயும்… ஒன்று இங்கேயும் என்று இதே மாதிரி நட்சத்திரத்தின் நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி இருக்கும் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை அவர் உணர்ந்தார்.

அவர் அமர்ந்த இடத்தில் குருநாதர் காட்டிய நிலையில் நானும் அங்கே அமரப்படும்போது விண்வெளியின் ஆற்றலும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கமும் எல்லாமே அறிய முடிந்தது.

ஆதியிலே இதையெல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அவன் நுகர்ந்த உணர்வின் தன்மையை அங்கே அமர்ந்து நானும் கண்டேன். அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வரப்படும் பொழுது குரு பலத்தால் அறிய முடிந்தது.

அன்றைய அரசர்கள் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகச் சேர்த்து அதற்குப்பின் மற்ற விஷங்களை எடுத்துக் கொண்டாலும் அது பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்பட்டார்களோ… அதைப் போன்று தான்
1.மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளை அவருடைய சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது.
2.காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண்ணுலகம் சென்றவர்கள்.
3.அவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் விஷம் மற்றொன்றை எப்படி வீழ்த்துகின்றதோ அதைப் போன்று
4.மகா ஞானிகள் தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள்.

அவர்களுடைய உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்றால் இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் பொழுது
1.நம்முடைய நினைவலைகளைச் சுத்தமாகவே மாற்றிவிடும்.
2.நம்மைச் செயலற்றதாக ஆக்குமே தவிர அதிலிருந்து பருகும் நிலையும் அற்றுப் போய்விடும்.
3.ஆகையினால் மனித வாழ்க்கையில் நாம் சிறுகச் சிறுக அதை எடுத்து வளர்க்க வேண்டும்.

எப்படி அரசர்களுக்கு விஷத்தைச் சிறுக சிறுகக் கொடுத்து அதைத் தனக்குள் சேர்க்கும் படி செய்து பெரும் கொண்ட விஷங்களைக் குடித்தாலும் தன்னைப் பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போலத் தான் குரு காட்டிய நிலையில் அதைச் செயல்படுத்த முடியும்.

முதலிலே அவர் எனக்கு இதை உணர்த்தும் பொழுது “வேறொரு நிலைகளாகத் தான்” உணர்த்தினார். பின் சிறுகச் சிறுக எண்ணத்தின் ஏக்கத்தை அதை நிலைப்படுத்தச் செய்து அகஸ்தியன் சென்ற மலைப் பகுதிகளுக்குச் சுற்றச் செய்தார்.

அங்கே சுற்றும் போது பல கஷ்டங்களும் இன்னல்களும் என்னைத் தாக்கும் நிலை வரும் பொழுது அங்கே அமைதி கொண்டு அமர்ந்து அந்த ஞானிகள் உணர்வை நான் எடுக்கப்படும் பொழுது தான் விஷத்தின் தன்மை முறிக்கும் அகஸ்தியன் உணர்வை நான் நுகர்ந்து “துன்பத்தைத் துடைக்கும் உணர்வுகளாக வேதனைகள் அகற்றப்பட்டு… மெய் ஒளியைக் காணும் ஆற்றலாக எனக்குள் பெருகி வந்தது…”

அப்படி எனக்குள் பெருகிய நிலைகளைத் தான்
1.நீங்கள் துன்பம் என்று வரும் பொழுதெல்லாம் உங்களுக்குள் உபதேசமாகச் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றேன்
2.அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு ஏக்கத்தில் இருக்கின்றீர்களோ அதன் வழி தான் உங்களைச் சுவாசிக்கச் செய்வது.
3.சுவாசித்த உணர்வுகள் சிறுகச் சிறுக உங்கள் உடலில் வளரத் தொடர்கின்றது.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

பாக மண்டலத்தில் அமர்ந்து தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக இயக்கங்களை நான் அறிய முடிந்தது

பாக மண்டலத்தில் அமர்ந்து தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக இயக்கங்களை நான் அறிய முடிந்தது

 

“ஆதியிலே” உருவான உருவின் (உணர்வின்) தன்மையை அது எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்டவன். அதை எல்லாம் அவன் பாக மண்டலத்தில் (கர்நாடகா காவிரி ஆறு உருவாகும் இடம்) இருக்கப்படும் பொழுது கண்டது.

உணர்வின் அணுக்களின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அதாவது
1.ஒரு உணர்வின் தன்மை “எதனின் பாகம்… எதனுடன் இணைந்து கலந்து செல்கின்றது…?” என்பதை அறிகின்றான்
2.அதனால் தான் அந்த இடத்திற்குப் பெயர் “பாக மண்டலம்” என்ற பெயரே வந்தது.

பிரபஞ்சம் எப்படி உருவானது…? தனித்தனித் தன்மையாக (கோள்கள் நட்சத்திரங்கள்) இருந்தாலும் சுழற்சி வட்டத்திற்குள் அது எப்படி இயங்குகின்றது…? கூட்டமைப்பாக பிரபஞ்சம் என்ற நிலையை அது எப்படி அடைகின்றது…? என்பதையும் அகஸ்தியன் அறிகின்றான்.

இதே போன்று தான் நம் உயிரின் தன்மையின் இயக்கமும்…!
1.உடலுக்கு அது சூரியனாக இருக்கின்றது.
2.நம் உடலுக்குள் பல கோடி உணர்வுகள் சேர்த்து இது ஒரு பிரபஞ்சம் ஆகிறது.

நம் சூரியக் குடும்பத்தைப் போல அண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. அதே போல் பல ஆயிரம் குடும்பங்கள் வளர்ச்சி பெற்றதும் உண்டு. அவை எல்லாம் தனித்தனியாக அகண்ட அண்டமாகச் சுழன்று கொண்டுள்ளது.

சில இடங்களில் பார்த்தோம் என்றால் வான மண்டலத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக அடர்த்தியாகத் தெரியும். அது எல்லாம் இன்னொரு பிரபஞ்சத்தில் உள்ளதைத்தான் நாம் அவ்வாறு காண முடிகிறது.

இது எல்லாம் “பாக மண்டலத்தில் என்னை அமர வைத்து குருநாதர் காட்டிய நிலைகள்…!”

அது ஒன்றுடன் ஒன்று இணைந்து சுழற்சியாகும் நிலை இங்கிருந்து பார்க்கப்படும் பொழுது வித்தியாசங்களாகத் தெரிய வரும்.

இதையெல்லாம் விஞ்ஞானிகளும் படம் எடுக்கின்றார்கள். எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிகின்றார்கள். அது எங்கே சுழலுகின்றது…? எங்கெங்கு நகர்ந்து செல்கிறது…? என்பதையும் பார்க்கின்றார்கள்.

எப்போதோ ஓர் காலத்தில் கோள்கள் அனைத்தும் சந்தர்ப்பத்தில் ஒரே நேர்கோட்டில் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
1.அப்படி வந்தால் பூமிக்கு அதனுடைய ஈர்ப்பு சக்தி குறைகின்றது.
2.ஒன்று நகர்ந்து ஓடலாம்… அது எப்படிப் போகும்…? என்று சொல்ல முடியாது.
3.ஒரு நொடிக்குள் இது நடக்கும். சூரியனுடைய ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் டபக்… என்று கீழே இறங்கிவிடும்.

இன்று இருப்பது நாளை இல்லை…! இது போன்று எத்தனையோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது.

வான்வீதியில் உருவாகும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் இயக்கத்தினால் தான் உயிரணுவிற்குள் துடிப்பு வருகின்றது. இரண்டும் சண்டை இட்டுக் கொண்டே இருக்கும்.

எது…?

ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் அதைக் கண்டவுடன் அஞ்சி ஓடுகின்றது.

இப்படி இது இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்ற நிலை வரும் பொழுது
1.வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகள் தாக்கிய உடனே மூன்றும் சேர்த்து ஒன்றாக இணைந்து
2.இரண்டு என்ற நிலை இல்லாது மூன்று என்ற நிலை அடைகின்றது.
3.அப்பொழுது அங்கே துடிப்பு ஏற்படுகின்றது.

அத்தகைய துடிப்பின் ஈர்ப்பினால் அதற்கு அருகில் இருக்கக்கூடியது சிக்கப்படும் பொழுது மற்ற உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்து “உயிரணுவின் தோற்றமாகின்றது…”

உயிரணுவின் துடிப்பினால் வெப்பம் (உயிர்) உருவாகிறது. ஆனால் கோள்கள் அனைத்தும் சுழற்சியினால் வெப்பமடைகிறது. அதனால் தான் சூரியனைச் சர்வேஸ்வரன் என்றும் பூமியைப் பரமேஸ்வரன் என்றும் உயிரை ஈஸ்வரன் என்றும் ஞானிகள் காரணப் பெயரிட்டு அழைத்தார்கள்.

உயிர் மற்ற ஜீவணுக்களை உருவாக்கும் சூரியன் அணுக்களை உருவாக்கும். சூரிய பிரபஞ்சத்தில் தான் உயிர் அணுக்கள் துடிப்பின் நிலைகள் கொண்டு உருவாகின்றது.

அந்தத் துடிப்பினால் மற்ற உணர்வோடு சேர்த்து இரண்டும் மோதலான பின் அணுவின் துடிப்புகளாகி அந்த அணுவின் மலம் தான் இந்த உடலாகின்றது.
1.இந்த அணுக்களின் மலத்திற்கு… இந்த உடலைப் பாதுகாக்கத் தான் இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றோம்.
2.பல கோடி அணுக்களின் மலம் நம் உடல்.
3.இதைத் தான் மும்மலம் மும்மலம் மும்மலம் என்று சொல்வார்கள்.

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றினால் உருவாகும் அந்த அணுக்களின் மலம் தான் இந்த உடல் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஆக…நாம் இந்த உடலை… நமது… எனது… எனக்குச் சொந்தம்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்… அதைத் தான் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
1.ஆனால் நமக்கு சொந்தமானது உயிர் தான்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றும் அத்தகைய பருவத்தைத் தான் உங்களுக்கு இப்போது ஏற்படுத்துகின்றோம்.

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்

 

அன்று புலையர்கள் என்று மலைவாழ் மக்களாக காடுகளில் விலங்குகளுடன் வாழ்ந்தவர்கள் விஷத்தன்மைகளை முறிக்கும் ஆற்றல்களையும் தான் நுகரும் வேதனை கொண்ட சக்திகளிலிருந்தும் விடுபடும் சக்தி பெற்றிருந்தார்கள்.
1.மற்ற எதிர் நிலையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது…? என்றும்
2.மூலிகைகளின் மணத்தை நுகர்ந்து அதன் இயக்கம் எவ்வாறு…? என்றும் அறிந்துணர்ந்து
3.அதை வைத்து நோய்களை மாற்றி அமைத்தார்கள்.

ஆபரேஷன் செய்வதற்கு இன்று மனிதனை நினைவிழக்கச் செய்வது போன்று ஒரு பச்சிலையை எடுத்து உடலின் அந்தப் பாகத்தில் வைத்து தடவி விட்டால் அந்த இடத்தில் உணர்ச்சிகள் இருக்காது.

அதைக் கிழித்து அவன் எலும்பை இணைத்துக் கொண்டு வரும் வரையிலும் இப்படித் தப்பிக் கொண்டார்கள்.

காடுகளின் விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்தவர்கள் மிக விபத்தான நிலைகள் ஏற்பட்டாலும் சில பச்சிலைகளின் சாறுகளை எடுக்கின்றார்கள்.
1.பெரிய எறும்புகளை எடுத்துப் பிண்ணை (PIN) வைத்துத் தைப்பது போன்று
2.இரண்டு குடலையும் வைத்து எறும்பை வைத்துக் கடிக்க வைக்கின்றார்கள்
3.அதற்குப் பின் எறும்பின் தலையைக் கிள்ளி விடுவார்கள்.
4.இது இறுக்கிப் பிடித்த பின் சேர்ந்து விடுகின்றது.
5.இன்று தையல் போடுகின்றோம்… ஆனால் அக்காலங்களில் இந்த முறைப்படி செய்தார்கள்.
6.அந்த எறும்பின் உடலின் விஷத்தின் அமிலங்கள் இதனுடன் கலந்த பின் இரண்டறக் கலந்து விடுகின்றது.
7.இதனின் உணர்வுகள் அதனை இணைத்துக் கொண்டு பச்சிலை என்ற மூலிகைகள் ஒன்றுடன் ஒன்று தசைகளை இணைத்து விடும்.

இன்று அபூர்வமாகப் பல ஆபரேஷன்களைச் செய்கின்றேன் என்று சொல்கின்றார்கள். இதைக் காட்டிலும் அன்றே நுணுக்கமாகச் செய்துள்ளார்கள்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அதற்கு இதே பச்சிலைகளை எடுத்து கேன்சர் உண்டான இடங்களில் அதை நேராக பாய்ச்சப்படும் பொழுது
1.எங்கே அந்த விஷத்தின் வேர்கள் வருகின்றதோ அங்கே கறுக்கப்படுகின்றது.
2.இது சென்றபின் அந்த விஷத்தை முறித்து விடுகின்றது… கேன்சர் நோயையும் நீக்கினார்கள்.

அந்தக் காலத்தில் ராஜ வைத்தியம் செய்தவர்கள் எல்லாம் அரசர்களுக்கு மட்டும் செய்வார்கள். மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள். இப்படித்தான் அன்று செயல்படுத்தினார்கள்.

இதை எல்லாம் கண்டுணர்ந்த புலஸ்தியர்கள் அதைச் செய்தார்கள்.
1.ஆனால் நானும் பார்த்தேன் குருநாதர் உணர்வால்…!
2.அன்றைய மலைப் பகுதி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…?
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் துணை கொண்டு எப்படித் தீமைகளை நீக்கினார்கள்…?
4.எப்படி நோய்களைப் போக்கினார்கள்…? என்று அறிந்து கொண்டேன்.

ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு தன் நாடு நான் அரசன் என்ற நிலை வரும் பொழுது இருப்பதை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டும் என்று போர் முறைகள் வந்தது. அரசர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

தன் ஆசையின் உணர்வால் மற்றொன்றை அழித்து மிருகங்களைப் போன்று “மற்றவர்களுடைய நிலையைப் பறித்துத் தான் சுகமாக வாழ வேண்டும்” என்று செயல்படுத்தினார்கள்.

அதன் வழிப்படித் தான் இந்த உலகமே இன்றும் மாயையில் சிக்கிக் கொண்டு மனித உடலின் இச்சைக்கே வருகின்றது. அரசன் தான் வாழப் பல முறைகளைக் கையாண்டான்.

அதன் வழிகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞானத்தால் பூமிக்குள் பல நச்சுத்தன்மைகள் அடைந்து விட்டது. சாக்கடையின் கழிவிற்குள் பன்றி தன் உணர்வைப் பாய்ச்சி நஞ்சினைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்ல உணர்வினை எவ்வாறு நுகர்கின்றதோ அதைப்போல
1.நீங்களும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நஞ்சினைப் பிளந்து தீமைகளிலிருந்து விடுபட்டு
2.நல்ல உணர்வுகளை நுகரும் சக்தி பெற்று பேரருள் என்ற உணர்வுகளை உருவாக்கி
3.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் ஒளியின் சரீரமாக வேண்டும்.

பன்றி நஞ்சினை நீக்கி நஞ்சற்ற நிலைகளைச் சுவாசித்து நல்ல உணர்வுகளான பின்… நஞ்சால் உடலான நிலைகளைப் பிளந்து விட்டு நஞ்சினைப் பிளந்திடும் உணர்வுகள் கொண்டு மனிதனாகப் பிறக்கச் செய்தது. மனிதனான பின்… உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது மனித உடல்.

அதைப்போல நமக்குள் வரும் நஞ்சினை நீக்கும் ஆற்றலை “நம் எண்ணத்தால்” எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி நீக்கிப் பழகியவர்கள் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதன் வழியைப் பெற… உங்களுக்குள் பதிவாக்கும் உபதேசத்தின் நிலை கொண்டு
1.இந்தப் பிரபஞ்சத்தில் கலந்த நஞ்சினை உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு பிளந்து
2.நஞ்சிற்குள் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து… உங்களுக்குள் அதைச் சேர்த்து
3.நஞ்சால் கவர்ந்த உடலை நீக்கிய பின்… உயிரான ஒளி கொண்டு ஒளியின் சரீரமாக இணைந்து வாழ்ந்திடவும் வளர்ந்திடவும் முடியும்.

கணவன் மனைவி இருவரும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து… யார் ஒருவர் இந்த உணர்வினை வளர்க்கின்றார்களோ… அவர்கள் முழுமையான வளர்ச்சி அடைய முடியும். அத்தகைய நிலையை நீங்கள் எல்லோருமே பெற மகரிஷிகளை வேண்டுகின்றோம்.

ஆதியும் அந்தமும் அறிந்துணர்ந்த அகஸ்தியன்

ஆதியும் அந்தமும் அறிந்துணர்ந்த அகஸ்தியன்

 

நாம் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதைத்தான் விநாய புராணம் கந்த புராணம் மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

1.அகஸ்தியன் தனக்குள் இது எல்லாம் எப்படி…? என்று பல வினாக்களை எழுப்பித் துருவத்தின் ஆற்றலை எண்ணி
2.சூரியன் எப்படி உருவானது…? சூரியன் உருவாகுவதற்கு முன் என்னவாக இருந்தது…? என்று
3.இவனுக்குள் பட்ட… இடி மின்னல்கள் கலந்து செல்லும் உணர்வுகளை இவன் தாய் கருவிலேயே பெற்றதனால்
4.பூர்வ புண்ணியமாக அறியும் தன்மை கொண்டு… அவனுக்குள் அறியும் ஞானமும் அதை வளர்த்துக் கொள்ளும் சக்தியும் பெறுகின்றான்.

அதன் வழி வசிஷ்டர்…!
1.“தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால்” அவனுக்குள் நுகர்ந்தான்… உணர்ந்தான்…!
2.அவன் உடலில் விளைந்தது அதன் வழி விளைந்தது தான் துருவனான பின்
3.“இந்த அகண்ட அண்டத்தையும் எப்படி அறிந்து கொள்ள வேண்டும்…? என்று “மேலும்” அவனுடைய உணர்வுகளை விரிவடையச் செய்கின்றான்.

அப்படி விரிவடைந்த நிலையில் தான் சூரியன்களும் கோள்களும் இல்லாத பொழுது எப்படி உருவானது…? என்ற நிலையை அறிய அவனுடைய உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

ஏனென்றால் அகண்ட அண்டத்திலிருந்து கவர்ந்து தான் சூரியன் தனது சக்திகளை எடுக்கின்றது. பிரபஞ்சத்தில் உருவான கருவின் தன்மை தான் வான இயல் புவியியலாகி தாவரவியலாகி உயிரியலாக அந்த உணர்வுகளைக் கவர்ந்து மனித உடலாகி உணர்வுகள் எண்ணங்களாகி எண்ணத்தின் தன்மை வலுப் பெற்றது. அப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.

இந்த உண்மையின் நிலையைப் படித்தவர்கள் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். படிக்காதவர்களுக்குள் பதிவானால் நினைவு வருகின்றது.

ஆனாலும் படித்தவர்கள் பெரும் பகுதி என்ன செய்கின்றார்கள்…? இதற்கும் அதற்கும் எப்படி…? இது உண்மையா அது பொய்யா…? என்று கலக்கப்பட்டு உண்மையை அறியும் நிலையை தனக்குள்ளேயே தடைப்படுத்திக் கொள்ளும் நிலையே வருகின்றது.
1.இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு
2.உங்களுக்குள் பேருண்மைகளைப் பதிவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம்.

அன்று தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அகஸ்தியன் உண்மைகளை அறிகின்றான்.

மாமிசங்கள் உண்பதையும் மற்ற நிலைகளையும் விடுத்து விட்டு வேகவைத்துப் பல பொருள்களைச் சுவையாகச் சேர்த்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வை உருவாக்கி அத்தகைய உணர்வின் எண்ணங்களைத் தனக்குள் தோற்றுவித்து உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவைகளின் இயக்கங்களைத் தெளிவாக அறிகின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் ஒன்றுக்கொன்று இணைந்து எவ்வாறெல்லாம் இயக்குகின்றது…? என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்.
1.துருவனான பின் அகண்ட அண்டத்தையும் அவன் அறிய ஆரம்பிக்கின்றான்.
2.சூரியக் குடும்பம் ஆவதற்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது…? என்பதையும் தனக்குள் கண்டறிந்து மூச்சலைகளாக வெளிப்படுத்தியுள்ளான்
3.இதையெல்லாம் நாமும் கவர்ந்தோம் என்றால் அவன் கண்ட பேருண்மைகளை நாமும் காண முடியும்… உணர முடியும்.

கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து

கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து

 

உங்கள் வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும் என்றால் நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்தும் மனைவி கணவனை மதித்தும் நடக்க வேண்டும். சாவித்திரியைப் போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிட வேண்டும் இரு உணர்வும் ஒன்ற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் போன்று எண்ணினால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்.

அப்படி என்றால் எமன் யார்…?
1.பிறருடைய வேதனையான உணர்வுகளை எடுத்து அதை நுகர்ந்து கொண்டால் வெறுப்பு வேதனை நோய் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
2.அப்படி நுகர்ந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது பல நோய்கள் வருகின்றது… அவர் உணர்வே நமக்குள் வலுவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு எப்போதுமே கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் தன் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அந்த அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருந்து
2.அந்த ஆசி கொடுத்தல் வேண்டும் என்று எண்ணிக் கணவன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.

அதே சமயத்தில் மனைவியும் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அவரைப் பார்ப்பவருக்கு எல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எப்போதுமே மனைவி வாழ்த்துதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் என் கணவருக்கு அந்த அருள் மணம் பெற வேண்டும் தொழிலில் செழித்திருக்க வேண்டும் அவர் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

. இதே மாதிரி எண்ணி இருவரும் வாழ்தல் வேண்டும்.

ஒருவன் தனக்குத் தீங்கு செய்தான் என்ற நிலையில்… அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தீங்கு செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இதே மாதிரி எண்ணினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

வாகனம் ஓட்டும்போது எண்ணினால் விபத்தாகின்றது. தொழிலில் இதே போன்று எண்ணினால் சிந்தனை குறைகின்றது… எந்திரங்களில் சிக்கி விடுகின்றார்கள்.

ஒரு கணக்கோ பொருளோ நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிந்தனை குறைந்து முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் அவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மனைவி வாழ்த்துக் கூறுதல் வேண்டும்.

அதே சமயத்தில் வெளியில் செல்லக்கூடிய கணவனும்
1.என் அன்னை தந்தையின் அருளால் மனைவியின் அருள் துணை எனக்குக் கிடைக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கணவனும் செல்லுதல் வேண்டும்.

இருவருமே இதைப் போன்று எண்ணி வாழ்ந்து வந்தால் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணைந்து வாழ்கின்றோம் என்று பொருள்.

ரோட்டில் செல்கின்றோம். எதிர்பாராது எங்கிருந்தோ ஒரு பஸ் தறி கேட்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சந்தர்ப்பத்திலே “மனைவியின் உணர்வுகள் கணவனை அங்கே போக விடாது தடுக்கும்…”

அல்லது பஸ்ஸிலே ஏறப்போகின்றோம் என்றாலும் இதே நிலைகள் வளரப்படும் பொழுது “மனைவியின் உணர்வுகள் அந்தப் பஸ்ஸில் ஏற விடாது தாயின் உணர்வுகள் அங்கே தடுக்கும்…”

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக நாம் நடந்து செல்லப்படும் பொழுது நமக்கு எதிரியாக இருப்பவர்கள்… “எனக்குத் துரோகம் செய்தான் அல்லது இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது மேடு பள்ளம் தெரியாதபடி விபத்தாகி விடும்.

அல்லது ஒரு வாகனம் வந்தாலும் தெரியாதபடி புரையோடுவது போன்று சிந்தனைகள் இழந்து விடும். இனம் புரியாதபடி விபத்தாகி விடும். இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள்.

ஆனால் இதை மாற்ற அன்னை தந்தையரை எண்ணி… “அவருடைய அருள் துணை எனக்கு என்றும் இருக்க வேண்டும்…” என்று எண்ணிச் சென்றால் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

தாய் எப்போதுமே தன் பிள்ளைகள் வாழ்க்கையிலே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆசி கொடுத்துக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் மனைவியின் எண்ணங்கள் வரும் பொழுது அந்த அன்பான எண்ணங்கள் மகிழ்ச்சியான உணர்வு கொண்டு எங்கே சென்றாலும் காக்கும் சக்தியாக வரும்.

தீமை என்று வரப்படும் பொழுது “அந்த எண்ணமே எமன்…”
1.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்… இணைந்து வாழ்வதே சாவித்திரி.
2.ஆகையினால் மனைவி அருள் உணர்வு கொண்டு எண்ணப்படும் பொழுது அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே தாய் தந்தையரை வணங்கி மனைவியின் அருள் பெற வேண்டும் என்று கணவன் வெளி செல்வதும் கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் மனதில் நினைத்து ஆசீர்வதித்து மனைவி அனுப்புதல் வேண்டும்.

தொழிலுக்குச் சென்றாலும் சரி அவர் செய்யும் தொழில் எல்லாம் உற்பத்தியாகும் பொருள்களிலும் அதை வாங்குவோர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே “மனைவி கணவனை வாழ்த்திக் கொண்டிருத்தல் வேண்டும்…”

கணவன் மீது மனைவி பிரியமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களோ நாத்தனாரோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி பேசி விடுகின்றார்கள்.

அந்த வேதனையால்… கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் “பாவிகள் இப்படிப் பேசுகின்றார்களே…” என்று இந்த உணர்வுகளைச் சேர்த்துத் தன் கணவனை எண்ணும் பொழுது இதே உணர்வுகள் அவர் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் தடைப்படும்.

அவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி எண்ணினால் அவருடைய சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.சாதாரண மனிதனுடைய உணர்வுகள் எண்ணும்பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் கணவரை எண்ணினால் அங்கே தடையாகின்றது.

இதை எல்லாம் தடைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று குறை கூறுவோர் நிலைகளை இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

என் கணவருக்கு அந்த அருள் உணர்வு பெற வேண்டும். பேரானந்த நிலைபெறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி கணவனை உயர்ந்த நிலை பெற எண்ணுதல் வேண்டும்.

இதே மாதிரிக் கணவனும் எங்கே சென்றாலும் மனைவியை எண்ணி மனைவிக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி எண்ணினால் அன்று அகஸ்தியன் எப்படி வாழ்ந்தானோ
2.அதைப்போல வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க முடியும்.