மிகவும் சக்திவாய்ந்த சக்தி

மிகவும் சக்திவாய்ந்த சக்தி

 

நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் அணுவின் தன்மை நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாற்றும் பொழுது உயிர் எவ்வாறு கடவுளாக இருக்கின்றதோ அதே குணத்தை நமக்குள் கடவுளாக இருந்து இயக்கும் சக்தி பெறுகின்றது.

இதுதான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் என்பது. நம் உயிரின் தன்மை ஓ…ம் என்று இயக்கினாலும் நாம் எண்ணும் குணங்கள் ஓம் என்று அதே ஜீவ அணுவாக வளர்வதைத்தான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் என்பது.

ஜீவ அணுவிற்குள் அணுவாக மாறி அணுவின் தன்மை அணுவாக மாறிக் கொண்டே உள்ளது என்பது ஞானிகளால் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ அதை நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி விட்டால் அது நமக்குள் இருந்து கடவுளாக அந்தக் குணத்தை அது வளர்த்துக் கொண்டே இருக்கும்.

உயிரும் கடவுள் தான். நாம் எண்ணிய உணர்வுகள் ஜீவ அணுவாக மாறி விட்டால் அதுவும் கடவுள் தான்.

கடவுள் என்ற தனித்தன்மை எங்கும் இல்லை இன்றும் இல்லை. தனித்து… தனியாக ஒரு கடவுள் இருக்கின்றான் என்றால் அப்படி இல்லை.

இந்தப் பிரபஞ்சமும் மற்ற உலகங்களோ உருவாவதற்கு முன் சக்தியின் தொடராக உருவாவதைச் சக்தி என்று பொருள்படும்படி அன்றைய ஞானிகள் காரணப் பெயர்களை இட்டுள்ளார்கள்.

சக்திகளில் எத்தனையோ வகையான சக்திகள் உண்டு. அவைகளில் விஷமே மிகவும் சக்தி வாய்ந்த சக்தி.

ஒரு கட்டுப் பீடி… 10 சிகரெட்டை வைத்து நோயை நீக்கும் சக்தி கொடுத்தார் குரு – சூடு போட்ட பூச்சியினிடம் அனுபவம்

ஒரு கட்டுப் பீடி… 10 சிகரெட்டை வைத்து நோயை நீக்கும் சக்தி கொடுத்தார் குரு – சூடு போட்ட பூச்சியினிடம் அனுபவம்

 

குருநாதர் எமக்குக் கொடுத்ததை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் குரு காட்டிய அருள் ஒளிகள் அந்த ஒளி பெறும் உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பெருக வேண்டும்.

நீங்கள் செய்த நன்மையின் தன்மை இருள் சூழச் செய்யும் விஷத்தின் தன்மை அகல வேண்டும். நீங்கள் இடும் மூச்சுலைகள் இங்கே படர்ந்துள்ள நஞ்சின் தன்மையை அகற்ற வேண்டும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் உள்ளங்களிலும் இந்த அரும்பெரும் சக்தி ஊடுருவி அவர் அறியாது இருள் சூழச் செய்யும் நிலைகள் விலக வேண்டும்… மெய்ப்பொருள் காண வேண்டும்.

அந்த மெய்ப்பொருளை அறிய வேண்டும் என்ற உணர்வினை நீ எப்படிப் பருக வேண்டும் என்று தான் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

வேஷ்டி தான் கட்டி இருக்கின்றேன். ஆனால் காட்டிற்குள் கொசு அதிகமாக உண்டு. யானையே அந்த இடத்தில் நிற்காது. அது போன்ற கொசுக்களை எம்மீது தாக்க வைக்கின்றார்.

அது மட்டுமல்லாதபடி அங்கே ஒரு எறும்பு இருக்கின்றது. ஊறிக்கொண்டே செல்லும்/ பேசாமல் விட்டால் அது பாட்டுக்குப் போகும். ஆனால் தொட்டு விட்டால் போதும்… லபக் என்று அப்படியே கடிக்கும்.

விஷமான எறும்பு கடித்த பின் அந்த இடத்திலே தடிப்பாகிவிடும். பத்து இருபது எறும்பு கடித்தால் போதும் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவோம்.

அத்தகைய எறும்புகள் ஊறி வரும் பொழுது அது எம்மைக் கடிக்கின்றது கை கால் எல்லாம் வீங்குகிறது. இப்படிச் செய்து விட்டாரே என்று குருவை எண்ணி ஏங்குகிறேன்.

வேதனை பொறுக்காதபடி என்ன வாழ்க்கை…? என்று உடலில் எல்லை கடந்த துன்பம் வரப்படும் பொழுது சிந்தனையற்ற நிலைகள் வருகின்றது.

இதைக் காட்டிலும் இன்னொரு பூச்சி இருக்கின்றது. அது மேலே பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். அந்தப் பூச்சியில் இருக்கும் விஷத்தின் தன்மை உடலில் பட்டால் சூடு கோலால் சுட்டது போன்று வார் வாராக அச்சு விழுகின்றது..

எரிச்சல்… நெருப்பு மேலே பட்டால் எப்படி எரியுமோ அப்படி எரிகின்றது. அந்த இடத்திலே எம்மை அமரச் செய்து போகனைப் பற்றியும் காட்டுகின்றார். அந்தச் சித்தர்கள் அதைப் போக்க ஆற்றல்மிக்க நிலைகள் எடுப்பதையும் காட்டுகின்றார்.

சிறு பூச்சி தான்… அது உன் மீது ஊர்ந்து செல்லப்படும் பொழுது உன்னுடைய உணர்வின் ஆற்றலுக்கும் அந்தப் பூச்சியின் உணர்வுக்கும் எதிர் நிலையாகும் பொழுது அது எப்படிச் சூடாகி… நெருப்பில் இட்டால் எப்படியோ அது போல மேலே பட்டால் கருகுகின்றது.

அப்படி என்னைச் சுடும்படி வைக்கின்றார். ஒன்றல்ல பல…! அது மேலே ஊறுகின்றது… என்னை இம்சிக்கின்றது… அலறுகின்றேன். குருநாதர் அதற்கு முன் உபதேசித்த உணர்வுகளை எல்லாம் மறந்து விட்டேன்… உடலில் இருந்து இதைத்தான் எண்ணுகின்றேன்.

போகன் இதையெல்லாம் எப்படி மாற்றி அமைத்தான்…? தனக்கு வரும் துன்பங்களை நீக்க வலுக்கொண்ட உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அந்தத் துன்பத்தை நீக்கி அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துப் பிறர் துன்பத்தை எப்படிப் போக்கினான்…?

சீதா ராமா சுவை கொண்ட சொல்லாக வெளிவரும் பொழுது அந்த உணர்வுகள் அம்பாகப் பாய்ந்து அவர் உடலில் உள்ள தீய விளைவுகளை எப்படி மாற்றுகின்றது…? காட்டுக்குள் அமர வைத்து இத்தகைய தொல்லைகளுக்கு மத்தியில் காட்டுகின்றார்.

இந்த நினைவை நான் ஏற்கப்படும் பொழுது… நீ இப்படி வேதனைப்படுகின்றாய். ஆனால் அது போன்ற பூச்சிகளாகவும் நீ இருந்திருந்தாய… அந்த எறும்பாகவும் நீ இருந்தாய்.

உன் உயிர் தான் அதிலிருந்து படிப்படியாக வளர்த்தது. அந்தந்த உடல்களில் தன்னைக் காத்துக் கொள்ள அந்த உணர்வின் ஆற்றல் வருகின்றது. காத்துக் கொண்ட உணர்வின் தன்மை அதற்குள் கலந்து உணர்வின் சத்தாக விளைந்து மனிதனாக வரப்படும் பொழுது இவை அனைத்திலிருந்தும் மீட்டிடும் உணர்வே எண்ணங்களாக உனக்குள் எப்படி விளைந்தது…? என்று காட்டுகின்றார்.

ஏனென்றால் இதெல்லாம் பாட நூல்களுக்கு வராது.

குரு காட்டிய அருள் வழியில் ஒரு மனிதனின் உடலுக்குள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையில் ஒரு கட்டுப் பீடிகட்டைக் கொடுக்கின்றார்… தொப்பி சிகரெட் பத்தை ஒன்றாக வைத்து வாயில் வைத்து ஊது என்றார்.

அவர் சொன்ன முறைப்படி குடிக்கப்படும் பொழுது அருள் மணங்களை எவ்வாறு சுவாசிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார்…? காற்றிலிருந்து இப்பொழுது எப்படிச் சுவாசிக்கின்றாயோ…? இதை எப்படி ரசிக்கின்றாயோ… இதை எப்படி வெறுக்கின்றாயோ…? இதைப் போல அது எந்தெந்த நிலைகளுக்கு எப்படி எப்படி என்று நுகரும்படிச் செய்கின்றார்.

அந்த வாசனைகளை நுகர்ந்த பின் என் உடலிலே அந்த சூடு போன்ற இருந்த நிலைகள் மாறுகிறது. அந்தச் சூடு மாறும் பொழுது இதே உணர்வு கொண்டு அந்தப் பூச்சியினையும் நேர்கொண்டு பார் என்றார் குருநாதர்.

அப்போது அந்தப் பூச்சி என்ன ஆகிறது…? அதை முறிக்கும் உணர்வை உனக்குள் எடுத்து உன் பார்வையை நீ அங்கே செலுத்தப்படும் பொழுது அதனுடைய விஷத்தன்மைகள் எப்படிச் செயல் இழக்கின்றது…?

விஷம் செயலிழந்த பின் பூச்சி என்னாகின்றது…? என்று காட்டிற்குள் அமைத்து இத்தனையும் காட்டுகின்றார் குருநாதர்.

என்னிடமிருந்து உயர்ந்த சக்தியைப் பெறும் சரியான முறை

என்னிடமிருந்து உயர்ந்த சக்தியைப் பெறும் சரியான முறை

 

அருள் ஞானத்தின் உணர்வை நீங்கள் எடுத்தால் உங்களுக்குள் தீமை விளைவிக்கும் நிலைகளை அது தூய்மைப்படுத்தும். இது தான் விநாயகர் சதுர்த்தி.

1.உங்களை அறியாது வந்த தீமையான உணர்வுகளை நீக்கும் ஆற்றல் – நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உணர்வுகளை நான் பெற வேண்டும் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து
3.அந்த உணர்வின் எண்ணங்களை இரவிலும் சரி இன்றும் சரி இப்போதும் சரி அந்த நினைவு கொண்டு தான் அலைகளைப் பரப்புகின்றேன்.
4.எல்லா நேரத்திலும் இரவிலும் இன்றும் அதைத் தான் செயல்படுத்துகின்றேன்.

பல ஆயிரம் பேர் எம்மைச் சந்திக்க வருகின்றீர்கள்… சாமி எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்றெல்லாம் உணர்வைப் பாய்ச்சுவீர்கள்.

என் உணர்வு உங்களிடம் இருப்பதால் எந்த வகையில் நீங்கள் எம்மை பதிவுப் செய்கின்றீர்களோ அந்த வகையில் தான் உங்களிடம் வரும்.

சாமி கஷ்டத்தை எல்லாம் தீர்ப்பார் என்று எண்ணிப் பதிவு செய்து விட்டால் அதைத்தான் நீங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவீர்கள்.

1.சாமி…! நாங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்த உயர்ந்த சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.என்னிடம் இருந்து அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கும்… அது வளரும்.

ஆனால் அதற்கு மாறாக… என் கஷ்டம் எல்லாம் இப்படி இருக்கிறது… தலைவலி எனக்கு இப்படியே தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது என்றால் அதைத் தான் வளர்க்கின்றீர்கள் என்று பொருள்.

அதே சமயத்தில் என்னிடம் பேசி இதே வேதனையான உணர்வைப் பதிவு செய்து விட்டால்… நீங்கள் எண்ணும் போதெல்லாம் “என் ஆன்மாவிலே அந்த உணர்வுகள் வந்து மோதும்…”

இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு அந்த
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.கொஞ்சம் ஏமாந்தால் உங்களை மாதிரி என்னையும் கொண்டு வந்து விடும்.
3.24 மணி நேரமும் மகரிஷிகளின் அருள் வட்ட்த்திலேயே என் நினைவுகளைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சிறிது ஏமாந்தாலும் போய்விடும். ஒரு நாளைக்கு அந்த மாதிரி ஆகிவிட்டால் அதைக் கழி[ப்பதற்கு நான் படும் சிரமம் எனக்குத் தான் தெரியும்.

குருநாதரிடம் கூட… அவர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது கூட அத்தகைய சிரமம் எனக்குத் தெரியவில்லை முதலில் ஏதேதோ சொல்வார். அப்போது அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தீமையிலிருந்து விடுபடும் சந்தோஷம் வரும்.

1.கொஞ்ச நேரத்திற்குக் கஷ்டமாக இருக்கும் அதற்குப் பின் சந்தோசம் தான் வரும்.
2.எவ்வளவு நேரம் வருத்தப்பட்டேனோ அந்த அளவிற்கு சந்தோஷத்தை உருவாக்கும்.

குருநாதர் எம்மை அப்படித்தான் வளர்த்தார்.

“முன் சிந்தனை” நமக்கு அவசியம் வேண்டும்

“முன் சிந்தனை” நமக்கு அவசியம் வேண்டும்

“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்…? என்னை அவன் இப்படிப் பேசினானே… அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?

கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே… எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?

ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.. உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.

தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.

இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.

என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?

“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்…” அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது… பயம் வருகின்றது.

1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால் அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
2.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
3.உள்ளுக்குள் போய் உன்னைப் பயப்படச் செய்வது யார்…?
4.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள் போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
5.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை…?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.

திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

இந்தக் குகைக்குள் போக வேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.

என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…” என்கிறார் குருநாதர்.

போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! முதலில் ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது…? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்து விட்டது.

அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.. “அந்தச் சந்தர்ப்பம்…” அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.

அப்புறம் என்ன செய்தேன்…?

“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.

அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.

மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.

அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.

ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.

அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.

குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.

1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது…?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது…. இதை எப்படிப் பிடிப்பது…?
4.அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
5.விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
5.”நொடிக்கு நொடி…” மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது…?
6.பயம்.. என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது…?
7.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?

இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

அப்புறம் என்னாகிவிட்டது…? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.

நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நன்றாகத் திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “அப்படி ஒரு சிந்தனை” வந்தது.

அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.

அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.

முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்…? ஆபத்து தான்.

இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதற்குத்தான் இந்த அனுபவம்.

ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…!” என்று காட்டுகிறார்.

அதன் வழியில் நான் போகின்றேன்.

முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.

அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
1.விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது…?
2.அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி “வசமாகப் இப்படிச் சிக்க வைத்து விட்டார்…” என்று எண்ணினால் எப்படி இருக்கும்…?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்…?
4.குரு தான் வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையில்
5.அவரை எண்ணி… “இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்…” அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.

இது தான் என்னுடைய அனுபவம்.

அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.

பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார்.

இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.

அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.

ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள்…? என்று “பார்” என்று காட்டுகின்றார்.

ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.

நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.

ஆறு பக்கத்தில் இருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.

அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.

ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு இப்படி ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.

காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.

ஆனால் அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.

சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.

தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.

காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வைத்து குருநாதர் நேரடியாகக் காட்டியது – நடந்த நிகழ்ச்சி

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வைத்து குருநாதர் நேரடியாகக் காட்டியது – நடந்த நிகழ்ச்சி

 

பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி. மூலமாகவோ ஒருவர் பஸ்ஸிலே சென்று கொண்டிருக்கும் போது “இத்தகைய ஆக்சிடன்ட் ஆனார்…” என்று அதனின் உணர்வினைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

பதிவு செய்து கொண்ட பின் நாம் பஸ்ஸிலே செல்லும்போது இதனுடைய உணர்வே அதிகரிக்கிறது. அதிகரித்த உணர்வு கொண்டு நாம் டிரைவரை உற்று நோக்குகின்றோம்.

அப்படி உற்று நோக்கினோம் என்றால் அவரின் எண்ணத்தில் அதிகரித்து நாம் டிரைவரை உற்று நோக்க நமக்குத் தக்கவாறு டிரைவரின் உணர்வின் தன்மை “தன்னுடைய ஸ்டியரிங்கைத் திருப்ப வைத்துவிடும்…”

பின் நாம் எதை எண்ணி அஞ்சி இருந்தோமோ நாம் எண்ணியது போல அங்கே நிறைவேற்றி ஆக்சிடண்ட் ஆகும்.

அந்த ஆக்சிடண்ட் ஆகும்போது நாம் எதை எண்ணி வலுப் பெற்றோமோ அதன் நிலை கொண்டு
1.மற்றவர்களுக்கு அடி இருக்காது.
2.நாம் எதைப் படித்து அல்லது பார்த்து… இப்படி ஆக்சிடென்ட் ஆனது என்று பயந்தோமோ
3.அப்பொழுது நுகர்நது கொண்ட அந்தப் பய உணர்வு அதற்குத் தக்கவாறு விபத்து ஏற்படுவதும்
4.நமக்குக் காயங்கள் ஏற்படுவதும் இருக்கும்.

குழந்தைகள் ஓன்றும் அறியாத நிலையில் இருக்கும்போது எத்தகைய ஆக்சிடண்ட் நடந்தாலும் “குழந்தைகள் தப்பி விட்டது” என்று சொல்வார்கள் இதைப் பார்க்கலாம்.

ஒரு சமயம் திண்டுக்கலில் இரயில்வே நிலையத்தில் நான் (ஞானகுரு) நின்று கொண்டிருக்கும் போது அங்கே ஒரு அம்மா ஒரு குழந்தையை எடுத்து தண்டவாளத்தைத் தாண்டுகின்றது.

கண்ணிலே பார்க்கிறேன்.

அப்போது குருவும் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கூட இருக்கின்றார். இரண்டு பேரும் சேர்ந்து நடந்தே தான் அங்கே வருகின்றோம்.

அப்பொழுது குருநாதர் காட்டுகின்றார். இந்தப் பெண்ணின் இயல்பின் வழி
1.இதனின் உடலில்… “விபத்தால் இறந்த ஆன்மா உண்டு…”
2.அது அழைத்துச் செல்வதைப் “பார்” என்றார்.
3.இதைக் கண்ணுற்றுப் பார்…! என்று காண்பிக்கின்றார்.

அதாவது ஒரு அச்சத்தால் ஆக்சிடண்ட் ஆனதைப் பார்த்தபின் இது உடலிலே பட்டபின்
1.இதற்கு இரயில் வருவது தெரிகின்றது.
2.இரயிலைக் கடந்து செல்ல அதே ஈர்ப்பின் தன்மைக்குக் கொண்டு வருகின்றது (அந்த விபத்தால் இறந்த ஆன்மா).
3.கொண்டு வந்த பின் அது எவ்வாறு அடிப்பட்டதோ அதே நிலையில் கொண்டு சுக்கு நூறாக அந்த அம்மாவின் தசைகள் சிதைந்து விட்டது.
4.இது சிதைந்த நிலையில் இது உடலில் இருந்த இது நுகர்ந்த உணர்வுகள் “அதனுடைய சரீரத்தையும்…” காட்டுகின்றார் எமது குருநாதர்.

அதற்கு முன் அடிபட்ட இந்த உணர்வுகள் இதற்குள் பட்டபின் அது எப்படி அஞ்சி உடல் பதறியதோ…? ஏனென்றால் வண்டி வருவதும் தெரிகின்றது. பதட்டத்தின் விபத்தின் ஈர்ப்பு நிலைகள் எப்படி ஊடுருவிச் செல்கின்றது பார்…? என்றார்.

ஆனாலும் அது கையில் வைத்திருக்கும் அதன் குழந்தை தண்டவாளத்தின் நடுவிலே விழுந்து விடுகின்றது. இதைக் கண்ணுற்றுப் பார்க்கச் சொன்னார்.

காரணம் இதனுடைய பிழையின் நிலைகள் இவ்வாறு இருக்கும். அதன் உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது…? என்ற நிலையை உற்றுக் காண்பிக்கின்றார்.

ஏனென்றால் இது உங்களுக்கு
1.குருநாதர் உற்று நோக்கி…
2.உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்று
3.எனக்குத் தெளிவாகக் காட்டியதைத்தான் உங்களிடம் அப்படியே நான் சொல்கின்றேன்.

குருநாதர் இதை நான் கண்டுணர வேண்டும் என்பதற்காக… என்னை வேக வேகமாக… அவசரமாக… அழைத்துக் கொண்டு வருகிறார்.

அதைப் பார்க்கப்படும் போது இதனுடைய உணர்வுகள் எப்படி இயங்குகிறது…? என்ற காண்பிக்கின்றார். அது எவ்வாறு அந்த உணர்வுகளை இயக்குகிறது…? என்ற நிலையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நான் குருநாதரிடம் கேட்டேன். அதே நிலையில் “அந்த அம்மாவைக் காக்கக் கூடாதா…?” என்று கேட்கிறேன்.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார்.
1.அதனின் உணர்வின் செயலாக அது செல்கின்றது.
2.இருப்பினும் அதனுடைய உயிரான்மா வெளிச் செல்கின்றது.
3.எதைச் செய்தாலும் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் புகத்தான் செய்யும்.
4.அந்த ஆன்மா இந்த உடலில் புகுந்தது போல இன்னொரு உடலில் புகுந்து அதையே செய்யும்.

ஆனால் அந்த உடலில் இருக்கும்போதே அந்த ஆன்மா அந்த உடலின் தன்மை “எந்த ஆன்மாவைத் தனக்குள் மாற்றிக் கொள்கின்றதோ… அதைத்தான் அது மாற்ற முடியுமே தவிர… நான் மாற்றுவேன்… நீ மாற்றுவாய்….” என்று இல்லை.

அது தாயின் கருவில் இருக்கும்போது இத்தகைய மாற்றத்தின் நிலைகள் கொண்டு
1.தாய் தன் எண்ணத்தால் “காத்திட வேண்டும்…” என்று உயர்ந்த ஞானியின் தத்துவத்தை அது எடுத்திருந்தால்
2.அதன் உடலிலே இந்த உணர்வின் தன்மை உடலிலே பதிவாகி இருந்தால் “இன்று அதைக் காக்கும்…”
3.இன்று நீ அதைச் செய்ய முடியாது என்ற இந்த உண்மையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே… அப்படியே நீ இன்று செய்ய வேண்டும் என்றாலும் அது உனக்கு முன் இது காத்து இந்த உணர்வின் செயலாகப்படும் போது எதிர்மறையாகி இதைக் காத்திடும் நிலையும் வரும்.

1.அது உன்னிடம் கேட்டிருந்தாலோ
2.அல்லது என்னிடம் பேசியிருந்தாலோ
3.உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கியிருந்தாலோ
4.இந்தப் “பதிவின் தன்மை” இருந்தால் தான்… அதைக் காக்க முடியும்.

இதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

இன்று நம்மில் அதிக பேருக்கு நாம் விபத்தில் சிக்குவது ஏன்…? ஏன் அதைக் காப்பாற்ற முடியாதா…? தடுக்க முடியாதா…! நீங்கள் கேள்விகள் கேட்பது போன்று தான் நானும் குருநாதரிடத்தில் அந்த இடத்தில் கேள்வியைக் கேட்டேன்.

விபத்தாகிறது என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உணர்வின் தன்மையைக் காட்டுகின்றீர்கள். இதை ஏன் நீங்கள் காக்கக் கூடாது…? “காக்க வேண்டும் அல்லவா…!” என்று குருநாதரிடம் கேட்டேன்.

1.காப்பது நாம் அல்ல…
2.அறிந்து கொள்ளும் நிலைகள் வரும்… தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.
3.அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் அந்த உணர்வின் தன்மை அதற்குள் “அவர்கள்… பதிவாக்கியிருக்க வேண்டும்…”
4.தாயின் நிலையிலே அது பதிவாகியிருக்க வேண்டும்.
5.வாழ்க்கையில் இது போல் ஞானிகளுடன் யாராவது நல்ல வாக்கினை கொடுத்தால் “அந்த வாக்கு” காக்கும்.

இதைத்தான் அங்கே தெளிவாகக் காட்டினார்.

அந்தக் குழந்தை அறியாத தன்மையிலிருப்பதால் இதனுடைய நிலைகளும் அதற்குத் தெரியாது. நடுத் தண்டவாளத்தில் கடந்து சென்ற பின் அந்த உணர்வின் தோற்றமும் மற்ற நிலைகளும் அதற்கு எந்த ஆபத்துமில்லை.

ஏனென்றால் அந்தக் குழந்தை… அடிபட்டு இறந்த அதன் தாயின் கருவிலே இருக்கப்படும் போது ஞானிகளுடைய நிலைகளை அது கேட்டுணர்ந்த உணர்வுகளில் அந்தக் குழந்தைக்குள் பதிவானது.

சிறிது யாசகத்திற்காக வேண்டி ஒரு மந்திரவாதி தான் ஆனாலும்… (அவர்) நான் மந்திரவாதி என்று சொல்ல முடியாது.

சாது என்ற நிலைகள் அவர் வரப்படும் போது இந்தத் தாயும் அப்படி எண்ணியதால் தக்க தருணத்தில் குழந்தை கருவாக இருக்கப்படும்போது அவர் யாசிக்கும் போது அதைக் கொடுத்தது.

அப்படிக் கொடுத்த உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்கு உதவியிருக்கின்றது. ஆக குழந்தை காப்பாற்றப்பட்டது.

ஆனால் அதே சமயத்தில்
1.அந்த மந்திரவாதி எந்தக் கருவின் தன்மை உருவாக்கினாரோ
2.அந்த உணர்வின் தன்மை “தனக்கு வேண்டிய உணர்வை” அது எடுத்துக் கொண்டது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா….?

ஒரு உடலின் நஞ்சைப் பிரித்தெடுத்து உணர்வின் தன்மை சக்தி பெற்றதோ அந்தச் சக்தியின் தன்மை கொண்டு இவர் ஆசிர்வாதம் கொடுத்தது தாயிற்கு ஊழ்வினையாகின்றது. ஆனால் அவர் கொடுத்த சக்தி கருவுக்குள் இருந்து குழந்தையைக் காத்தது.

அதே சமயம் இதனை எடுத்துக் கொண்ட நிலைகள் “எதை… மந்திர ஒலிகள் கொண்டு எடுத்தாரோ… இது மந்திரவாதியைப் போய்ச் சேரும்…”

இது “அலறிய உணர்வுகள்” கொண்டு இங்கே எடுத்துத் தன் வலுவின் தன்மை கொண்டு “எவ்வாறு செய்கிறார்…?” என்ற நிலையும் இதையும் விவரித்துக் காட்டினார்.

1.ஒரே செயலில்… “எத்தனை நிலைகள் பொருந்தியுள்ளது…?” என்பதை
2.எமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டுதான் சொல்கின்றோம். நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாம் யாரும் தீங்கு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் பிறரைப் பார்க்கும் உணர்வுகள் நமக்குள் எவ்வாறு பதிவாகின்றது. பதிவான உணர்வின் தன்மை அந்தந்தப் பதிவுக்குத் தக்கவாறு தான் இயக்கம் இருக்கும்.

1.குழம்பில் அதிகம் காரமாகி விட்டால் காரத்தின் சுவையாகவும்,
2.உப்பு அதிகரித்து விட்டால் உப்பின் சுவையாகவும் மாறுவது போன்றுதான்
3.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வுகள் (அதனின் பதிவு) “முன்னிலையில்…” அதிகரிக்கின்றதோ
4.அதனின் செயலாக நம் உணர்வின் தன்மையை மாற்றி அதனின் இயக்கமாக நம்மை இயக்கிவிடுன்றது.
5.இதிலிருந்து மனிதர்கள் ஒவ்வொருவரும்… “எவ்வாறு மீள வேண்டும்…” என்றுதான் இதைக் காட்டினார்.

குருநாதர் அவருடனே என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு நிலைகளிலும் தெளிவாகக் காட்டியதைத்தான் இங்கே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்

 

ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் என்று பாடுகின்றோம். அந்த கணேசன் எங்கே இருக்கின்றான்…? நம்மை எவ்வாறு இயக்குகிறான்…? என்ற தத்துவத்தை ஞானிகள் கொடுத்திருந்தாலும்… புகழ் பாடும் நிலைகள் கொண்டு பொருள் காண முடியாத நிலைகள் நாம் திரிந்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ப் பொருள் கண்டறிந்த அருள் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டே இருக்கின்றது. இதையெல்லாம் பித்தனாக இருந்த குருநாதர் உணர்த்துகிறார்.

எல்லோரும் உங்களைப் பைத்தியமாக எண்ணுகின்றார்கள். நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள்…? என்று கேட்கப்படும் பொழுது அவர் சொல்கின்றார்.

1.உலக மக்கள் என்னைப் பித்தனாக எண்ணுகிறார்கள்.
2.ஆனால் அவர்கள் எத்தகைய பித்துப் பிடித்து வாழுகின்றார்கள்…? என்பதை நீ உணர்ந்து கொள்.
3.அவர்கள் உணர்வைப் பற்றாதே அருள் உணர்வைப் பற்றிக் கொள்.
4.மற்றவர்களைப் பற்றி எண்ணாதே,.. நான் கொடுத்த அந்த அருள் ஞானிகள் உணர்வை நீ பற்று.

வாழ்க்கையில் உன்னை அசுத்தப்படுத்தும் நிலைகளைப் பற்றற்றதாக்கு.

யார் உன்னைக் கேவலமாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் கோபமாகப் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும் அதையெல்லாம் பற்றற்றதாக்கு.

அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு மெய் உலகம் சென்ற அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பற்று. தீமைகளைப் பற்றற்றதாக்கு.

1.அருள் ஞானிகள் உணர்வுகளை மக்கள் மத்தியிலே அதைப் பற்றும்படிச் செய்…!
2.அருள் உணர்வுகளை நேசித்துத் தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்டு
3.தீமைகளைப் பற்றற்றதாக உருவாக்கிவிடு என்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகிறோம்.

ஒரு சிலர் இதைப் பற்றற்றதாகவும் இருக்கலாம். ஆனால்
1.அருள் ஞானிகளைப் பற்றிடும் நிலையாகத் தீமைகளைப் பற்றற்றதாக்க முடியும் என்று
2.எமது குருவின் ஆணைப்படி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் சொல்கின்றேன்.

“என்றும் மாறாத நிலையில்” வாழ்பவர்களே மகரிஷிகள்

“என்றும் மாறாத நிலையில்” வாழ்பவர்களே மகரிஷிகள்

 

மனிதனாக வாழும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அருள் ஞானப் பற்றுடன் வாழ வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் நுகர வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரும் பெற வேண்டும்.
2.அனைவரது வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்… அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி இந்தப் பூமியில் வாழும் அனைவரும் பெற வேண்டும் என்று
6.நானும் நினைக்கின்றேன்… நீங்களும் அது போன்று நினையுங்கள்.

இது அனைத்தும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?

சூரியனுடைய காந்த சக்தியால் வளர்க்கப்பட்ட தீமையான உணர்வுகளை பூமியில் வாழும் மனிதர்கள் அதை ஈர்க்கும் சக்தி இழக்கப்பட்டால் காலை 6 மணிக்கெல்லாம் அந்தத் தீமைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அங்கே கரைத்து விடும்… கருக்கி ஒளியாக மாற்றிவிடும்.

விறகை அடுப்பிலே வைத்து எரிக்கின்றோம். அது எரிந்து நெருப்பாகின்றது ஒளியாக. அதனுடைய உணர்வின் சத்துக்கள் பிரிகின்றது. ஆனால் விறகு கருகி விடுகின்றது.

சூரியன் கவர்ந்து ஆவியாக மாற்றுகின்றது.
1.ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ செடி புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு
2.எந்த வித்து இங்கே படுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக அந்தச் சத்தை எடுத்து விளைகின்றது.
3.எதனெதன் உணர்வின் தன்மை எது எது எடுத்து வளர்கின்றதோ.. இப்படி இயற்கையில் (மறுசுழற்சியாக) மாற்றிக் கொண்டே வருகின்றது.

ஆனால் நாம் மாறாத நிலைகள் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆறாவது அறிவு பெற்றவன்… என்றும் நிலையான …என்றும் 16 என்ற நிலை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து பழக வேண்டும்.
1.நம் உடலுக்குள் அதைப் பெருக்க வேண்டும்.
2.இதை அழியாச் சொத்தாக அழியாச் செல்வமாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

குருநாதர் எனக்கு நேரடியாகக் காட்டியதைத் தான் உங்களிடம் சொல்கிறேன்

குருநாதர் எனக்கு நேரடியாகக் காட்டியதைத் தான் உங்களிடம் சொல்கிறேன்

 

எந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக ஆனானோ அதிலிருந்து வரும் சக்திகள் இந்தப் பூமியிலே படர்ந்துள்ளது. அதை நுகரும் திறன் நாம் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் நுகர்ந்து அதை வளர்க்க வேண்டும். அனைவரையும் பெறச் செய்ய வேண்டும்.

பின் அதனின் உணர்வை வலுவாக இயக்கப்படும் பொழுது தீமைகளை அது கரைத்து விடும்.

விறகுக் கட்டைக்குள் இருக்கும் எண்ணெய்ச் சத்து நெருப்பை வைத்து எரிக்கப்படும் பொழுது கட்டையைக் கருக்கிவிட்டு ஒளியாக மாற்றுகின்றது.

இதைப் போல
1.தீமையை உருவாக்கும் வீரியச் சத்தை மகரிஷிகள் ஒளி கொண்டு எரித்து ஒளியாக மாற்ற வேண்டும்.
2.ஏனென்றால் அப்படி ஒளியாக மாற்றியவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகவே எந்தத் தீமை வந்தாலும் அந்தத் தீமைகளை மகரிஷிகளின் உணர்வு கொண்டு கருக்கி விட்டு ஒளியின் தன்மையாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி மாற்றப்பட்ட நிலைகள் அருள் ஞானிகள் உணர்வை இணைத்து விட்டால்
1.தன்னிச்சையாக நமக்குள் இருக்கும் தீமைகளை எரிபொருளாக மாற்றி
2.அதனை ஒளியின் சக்தியாக மாற்றும் தன்மை வருகின்றது.
3.இதையெல்லாம் குருநாதர் எமக்கு நேரடியாகக் காட்டுகின்றார்.

நான் சொல்வதெல்லாம் உங்களுக்கு அதிசயமாகத் தெரியலாம். ஆனால் இதையெல்லாம் நீங்கள் பார்க்கும் பொழுது என்னிடம் சொல்வீர்கள். சாமி… இதையெல்லாம் என்னால் பார்க்க முடிந்தது… என்னால் தீமைகளைப் போக்க முடிந்தது என்ற அந்த மகிழ்ச்சியான நிலைகள் உங்களுக்குள் வரும்.

நான் ஒன்றும் அறியாதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். எங்கிருந்து பேசுகின்றேன்…? குருநாதர் பதிய வைத்தது எனக்குள் விளந்தது தான் அவ்வாறு இயக்குகிறது.

1.நான் புத்தகங்களைப் படித்ததும் இல்லை… படிக்க விரும்பவும் இல்லை
2.படித்தாலும் அர்த்தம் புரிவதில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதி இருப்பார்கள். திருவள்ளுவர் திருக்குறளைப் பாடியிருக்கிறார் என்றால் படித்தவர்களுக்கு அதனுடைய விளக்கம் தெரியும். நான் படித்தால் எனக்கு என்ன அர்த்தம் தெரியும்…?

இராமாயணத்தைக் கவியாகப் பாடி உள்ளார்கள். எனக்கு என்ன அர்த்தம் தெரியும்…? கவி தெரிந்தவர்கள் விளக்கம் சொன்னால் சரியாக இருக்கும்.

ஆனாலும் அவரவர்கள் உணர்வுகளை இணைத்துக் கொள்ளும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள்.
1.வேறு விதமாக அமைந்து விடுகிறது.
2.படித்ததன் உணர்வுகள் அதனுடன் ஒன்றிச் செயல்படும் பொழுது
3.அதற்கொப்பத் தான் அவர்கள் உணர்வின் எண்ணங்களும் செயல்களும் வருகின்றது
4.அந்தக் கருத்தைக் கேட்பவர்களுக்கும் உணர்வுகள் மாறுகின்றது.

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

 

மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ
2.இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…!
3.நமக்கு ஒன்றும் புரியவில்லையே..! என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.
4.”புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும்.
5.புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.

முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் “நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.

முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது
1.அந்த எழுத்துக்களில் என்ன கருத்து உள்ளது…? என்று அறிய
2.அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.

இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அ… ஆ… என்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அ… ஆ… என்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.

1.ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச் சொன்னது பதிவாகி…
2.அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.

ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.

வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.

1.வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை.
2.உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை… அறிவின் ஞானம் இல்லை.
3.அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன்… அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.

எவரும் தெரிந்து வரவில்லை.

1.அறியாத நிலைகள்…
2.“சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…”
3.தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.

அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை
1.அறிந்திடும் நிலை கொண்டு செல்லும் போதுதான்
2.அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எழுத்து வடிவில் புதிதாக ஒருவர் எழுதி இருந்தால் அதை மீண்டும் அவர் சொல்லும் உபாயத்தை வைத்து அதை எடுக்கும் போது தான் அந்த எழுத்தின் தன்மை கொண்டு மற்றதை அறிய உதவுகின்றது.

எத்தனையோ மொழிகள் இருக்கிறது நாம் பார்க்கின்றோம். இதைப் போன்று தான் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள்.
1.அவர்களுக்கு எழுத்தறிவு இல்லை என்றாலும்
2.தன் உணர்வால் இயக்கப்பட்டு அறிந்தனர்.
3.ஒன்றின் இயக்கச் சக்தியைத் தனக்குள் கவர்ந்து
4.அதனின் தன்மைகளை முழுமையாக அந்த மெய்யை உணர்ந்து கொண்டார்கள்.

மெய்யை உணர்ந்த அந்த மெய் ஞானிகளிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நமது பூமியில் மகா சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

அதை உங்களுக்குள் நினைவுபடுத்திக் கூர்மையாகப் பதிவு செய்கிறோம். பதிந்ததை நீங்களும் எண்ணி எடுக்க முடியும்.

ஒரு மரத்தில் விளைந்த ஒரு வித்தினை நாம் எங்கே கொண்டு போய் ஊன்றினாலும் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து செடியாகி மரமாகி தன் இனமான வித்துக்களை அது மீண்டும் விருத்தி செய்கின்றது.

மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்தார்கள். அந்த விண்ணின் ஆற்றலை எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்யும் பொழுது (அவ்வப்போது) அறிந்த உணர்வுகள்
1.ஆற்றல் மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைந்தது
2.அலைகளாக இன்றும் நமக்கு முன் படர்ந்துள்ளது.

அதனை குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாகக் கேட்க வைத்துப் பதிவாக்குகின்றோம்.

ஒரு வித்து தன் தாய் மரத்தின் உணர்வின் துணை கொண்டு அது எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ அது போல் ஞானிகள் கண்டுணர்ந்த அறிவின் ஞானத்தை பதியச் செய்யும் போது ஆழமாக நீங்கள் பதிந்து கொண்டால் போதும்.

ஞானத்தின் வித்து விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மையை நிச்சயம் உங்களுக்குள் விளையும். ஆகவே ஞானிகளின் உணர்வுகள் விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நான் கல்வி அறிவற்றவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் கல்வியறிவு அற்றவர் தான்.

இருப்பினும் அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில்
1.நான் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகிச் சென்றாலும்
2.அதைப் புரியும்படி செய்வற்காக வேண்டி என்னை அடிக்கடி உதைப்பார்.
3.உதைக்கும் போது அவரைப் பற்றி அதிகமாக எண்ணுவேன்.
4.அவர் சொல்வதைத் திருப்பி “என்ன..?” என்று கேட்கும்படி வைப்பார்.
5.அப்போது அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப திரும்ப எண்ணும் போது
6.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது.

அவர் என்னை அடித்து உணர்த்தினார். உங்களுக்குச் சொல்லாகச் சொல்லுகின்றேன். உங்கள் கவனம் “இதை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்…” என்ற ஏக்கம் இருந்தால்
1.மெய் ஞானிகள் கண்டதை நான் உணர்ந்தது போல்
2.நீங்களும் உணர முடியும்… காண முடியும்.

“நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற வேண்டும்…” என்று சொல்வதன் முக்கிய காரணம்

“நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற வேண்டும்…” என்று சொல்வதன் முக்கிய காரணம்

 

பாம்பு தன் நஞ்சினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதை உணவாக எடுத்து அது தனக்குள் விளைந்து விளைந்து “உயிருடன் உணர்வுகள் அமில சுரப்பியாக ஆனாலும்…” மற்றதைக் கொன்று புசித்திட்ட உணர்வுகளும்… மற்றது தன்னைக் கொல்ல வரும் நிலைகளிலும்… நினைவின் ஆற்றல் கொண்டு உணர்வின் சக்தி வெளி வந்த பின் நஞ்சை உணவாக எடுத்துக் கொண்ட நிலைகள் அது நாகரத்தினமாக மாறுகின்றது.

அதைப் போல் யானையும் வலுக் கொண்ட உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அது முதிர்ந்த நிலைகள் கொண்டு அதற்குள் வைரம் போன்ற முத்தாக விளைகின்றது.

பாம்பிற்குள் நாகரத்தினமாக எப்படி விளைந்ததோ இதைப் போல்
1.மனிதன் மற்ற நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தனக்குள் செயலாற்றதாக ஆக்கி
2.அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நஞ்சினை ஒடுக்கி
3.துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் இயக்கம் ஒளியாக மாறினான் மனிதன். ஆனால் நாகமோ நஞ்சினை உறையச் செய்து ஒளியின் சுடராக விளைகின்றது.

தன் உணர்வின் நிலைகளுக்காக முதிர்ந்த நாகம் நாகரத்தினமாக ஆனாலும் உமிழ்த்தி ஒளியின் சுடரிலே… கண் ஒளிகள் மங்கினால் இந்த உணர்வின் அலைகள் கொண்டு உணவைத் தேடும் நிலையாகச் செல்கின்றது உடலின் நிலைகளுக்கு…!

ஆனால் நஞ்சு கொண்ட உணர்வுகள் மற்றது தாக்கப்படும் பொழுது வேதனை கொண்டு கவர்ந்த உணர்வுகள்… எதனை உற்று நோக்கியதோ அதனின் உணர்வின் துணை கொண்டு உயிரான்மா வெளி சென்ற பின்… எதைக் கொன்று புசிக்க வேண்டும் என்று விரும்பியதோ அதன் உடலுக்குள் சென்று விடுகின்றது.

1.இதனில் விளைந்த நஞ்சு தன் உணவுக்குத் தான் உதவ முடிந்தது.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகவில்லை.

ஆனால்
1.மனிதனுக்குள் எத்தனையோ வேதனை போன்ற உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வுகளை இணைக்கச் செய்து
2.நஞ்சை அடக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சிகரமாக மாற்றிச் சென்ற அவனின் உணர்வுகளை நமக்குள் எடுத்தோம் என்றால்
3.என்றும் பதினாறு என்ற நிலையில் பெரு வீடு பெருநிலை என்ற அழியா நிலைகள் கொண்டு வேகாக் கலை ஆகின்றது… வேகா நிலை ஆகின்றது.
4.எந்த நெருப்பும் எந்த நஞ்சும் இந்த உணர்வை வெல்ல முடியாது.

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவும் மாய்த்திடாது.

சூரியனோ கோள்களோ மிகச் சக்தி வாய்ந்த கதிரியக்கத்தை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ இவை அனைத்துமே மடிந்திடும் நிலைகள் கொண்டது தான்.

நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாகிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலையிலிருந்து மாறி மனிதன் முதுமை அடைந்தது போல் சூரியனும் முதுமை அடைந்து விடும்.

பிரபஞ்சத்திற்குள் உயிரணுவின் தோற்றமாகி மற்ற ஏனைய உடலில் இருந்து பெற்று மனிதனான நாம்
1.மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால் வேகா நிலையாக என்றும் நிலைத்திருக்க முடியும்.
2.என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதற்குத்தான் மார்க்கண்டேயன் கதையைக் காட்டுகின்றார்கள். மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்…? கீழிருக்கும் ஆவடையப் பற்றவில்லை. (ஆவடை என்பது உடல்).

1.உயிர் தன்னை இயக்கிய நிலைகள் கொண்டு தாவி அந்த லிங்கத்தைத் தான் ஆலிங்கனம் செய்கின்றான்… அது ஜீவன் உள்ளது
2.உயிரின் தன்மை வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி
3.அதனுடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றினான் என்ற நிலையை நினைவுபடுத்துவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.

அவ்வாறு மார்க்கண்டேயன் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது “எமனால் அவனைக் கவர முடியவில்லை…” என்று சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஞானிகள் இதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.