வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்

வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்

நம் பிள்ளை படித்து நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம். அவன் படிக்கவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே… இப்படிப் பண்ணுகிறானே” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்து விடுகிறோம்.

வீட்டுக்காரர் வந்தவுடன் பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்துக் கெடுத்து விட்டீர்களே…! என்று ஜெபம். அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். போனபின் தியானம்… என்ன தியானம்…?
1.அவன் இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்… இவன் அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்… படிக்க மாட்டேன் என்கிறான்.
2.இவரும் கேட்க மாட்டேன் என்கிறார்…! என்று மனதிலே எண்ணித் தியானம்.

அந்த நேரத்தில் அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால் “தொலைந்து போ…” என்று அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும். இந்த ஜெபம் என்ன செய்யும்…?

அந்தச் சாபம் வந்தவுடன் கோபம் வந்துவிடும். இரவு நேரத்தில் கை கால் குடைச்சல் மேல் வலி உடல் வலி என்று எல்லாமே வந்துவிடும்… சகிக்க முடியாது. ஏனென்றால் அவன் செயலையும் அதனால் வேதனையையும் எடுத்தவுடன் கை கால் குடைச்சல் வரும். இந்தத் தியானம் செய்கிறோம்.

ஆனால் இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

இரவில் படுக்கப்படும்போது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று “ஆத்ம சுத்தி” செய்யுங்கள்.

நீங்கள் யாம் கொடுத்த சக்திக்காக வேண்டித் தியானமிருக்கும் போது
1.ஒரு நாளில் பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.
2.அந்தச் சக்தியை எடுக்கும் போது அந்த ஞானியரின் சக்தியைப் பிரித்துக் கொடுக்கும்.
3.அதை உங்களுக்குச் செய்து கொடுக்கிறோம்.

சாமி வந்தவுடன் எல்லாம் நன்றாகி விட்டது… நன்றாகி விட்டது என்கிறோம். அடுத்ததாக இரண்டு தரம் வந்து நல்லதாக ஆகிவிட்டது என்பார்கள். மூன்றாவது தடவை என்ன செய்கிறார்கள்…?

யாம் எத்தனை தடவை செய்து கொடுப்பது…? ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம் கூடச் செய்து கொடுக்கலாம். நான்காவது தரமும் யாமே செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஒன்றும் பலனில்லையென்றால் “சாமி என்னத்தைச் செய்துவிட்டார்…?” என்று உடனே ஜோசியக்காரனிடம் சென்று நல்ல நேரம் வருகிறதா…? கெட்ட நேரம் வருகிறதா…? என்று பார்த்து அதற்கு யாகத்தைச் செய்து விட்டால் அல்லது எந்திரத்தைக் கொண்டு வைத்தால் நல்ல நேரம் வருமா…? என்றிருப்பார்கள்.

உங்கள் எண்ணத்திற்குள் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றால் செயல்படுத்த மாட்டார்கள். ஆகையினால்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுப்பது.

மனித வாழ்க்கையில் இன்று குடும்பத்தில் ஒரு பிரச்சனையால் பையன் தவறு செய்கிறான் என்றால்
1.அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் பட்டவுடன் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
2.ஆனால் அதே கோபத்தால் நாம் சாபமிடும் நிலைகளுக்கெல்லாம் நாம் வாக்கைக் கொடுத்து விடுவோம்.
3.அந்தக் கெட்டது உடனடியாக வேலை செய்யும்.

நாம் குழந்தை மேல் பாசமாக இருப்போம். நம்மையறியாமலே இந்த உணர்வைப் பாய்ச்சியவுடன் நம் எண்ணமே துரித நிலைகளில் வேலை செய்து அவர்களுக்கு இடைஞ்சலாகும். அதனால் அவர்கள் சங்கடப்படும் போது அதை எண்ணி மீண்டும் வேதனைப்படுவோம்.

இதைப் போன்று
1.நம்மை அறியாமலேயே பின்னிப் பிணைத்துத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதத்தை
2.“மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்.

அதைப் பயன்படுத்தினால் இருள் சூழும் நிலையை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.

உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்

உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்

 

எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாக வருவதில்லை. ஆனால்
1.அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால் இருளை வென்று ஒளியின் உணர்வாக ஆக்கும் தன்மை பெறுகின்றோம்.
2.அதையே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக்கிப் பயன்படுத்த வேண்டும்.

எந்த நிலையில் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தம் ஆவதில்லை. இந்த உடலால் சம்பாதித்த செல்வமும் நிலைத்ததில்லை.

கோடிக் கோடிச் செல்வங்களைப் பெற்றாலும் பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்து நான் சுகமாக வாழ்வேன் என்றாலும் அப்படிப்பட்ட அரசனும் இன்று இருந்ததில்லை.

பேய் மனமாக அவன் சென்று விட்டான். அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறி விட்டது.
1.அவன் ஆசையைப் பின்பற்றிய அனைவரும் அவன் வழியிலே சென்று மதம் என்ற வெறி கொண்டு
2.மனிதனை மனிதனே அழித்துக் கொண்டு கொன்று குவித்து அதைக் கண்டு மகிழும் நிலையை இன்று உருவாகிவிட்டது.

அரசன் சென்ற நிலையை இன்று உருவானது. அதன் உணர்வு கொன்று குவிக்கும் உணர்வாக வளர்ந்து விட்டது. மதம் என்ற போர்வையை அவன் உருவாக்கினான்.

அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனமென்று வளர்ந்து விட்டது. தன் இனமே பெரிது என்றும் மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். பழி தீர்க்கும் உணர்வுகளே இங்கு வளர்ந்தது.

மனிதனுக்கு மனிதனே உருக்குலையச் செய்யும் நிலையாகச் சிந்தித்து வாழும் நிலைகள் செயலிழந்து சிந்தனையற்ற செயலாகவே செயல்பட்டு… சிந்தனையற்ற செயல்களை நாம் நுகரும் பொழுது நஞ்சான உணர்வுகளை வளர்த்து நஞ்சை உணவாக உட்கொள்ளும் நஞ்சின் செயலாக்கங்களாக உருப் பெற்றுவிட்டது.

நஞ்சை வளர்த்திடும் நிலையே நமக்குள் வளர்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.
1.அதற்குத்தான் எனது குரு அருளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… நமது குரு என்ற நிலையில் அனைவரும் வாழ வேண்டும்.
2.முதலில் எமது குருவாக இருந்தார். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் வழி சென்றால்
3.”நமது குரு…” என்று நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் நிலை வரும்.

சாமியையும் குருவையும் பிரித்து விடாதீர்கள்…! நமது குரு என்று அருள் வழியில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

இந்த உணர்வின் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும். அருள் ஞானம் பெறுதல் வேண்டும். இந்த உணர்வைத் தியானித்து அதை நாம் பெருக்க வேண்டும்.

பகைமை கொண்ட உணர்வுகள் இங்கே வந்தாலும் இந்தப் பகைமை வளராது தடுக்க அருள் ஒளியைப் பெற்று உலக மக்கள் அருள் ஞானத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பூமியை அருள் ஞானத்தை வளர்த்திடும் பூமியாக ஆக்கிட வேண்டும்.
2.அருள் ஞானிகள் பிறந்த பூமியில் அருள் ஒளியின் சுடரை எண்ணி வளர்த்து
3.இந்த இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம் உலக மக்கள் மனம் மாறி
4.அருள் ஒளியின் சுடராக மாறும் நிலைக்கு வர வேண்டும்.

The sky

The sky

We see several crores of stars, comet, burning star etc. in plenty in the sky on some days and a few only on some other days. What is the state in which you see all these things…?

All the states that we see in the sky are not like planets.

We see some of them come and fall as burning star. Just as several atoms come from the Sun and other planets and drops on this earth there are also burning stars coming and falling on this earth.

The earth is growing every day. It is on the rapidity of the growth that some changes take place on this earth.

In what state do these burning stars grow and come to the earth…? Just as this earth, other planets also get them.

1.When we burn fire in our house we find that the smoke coming out from the fire
2.strike with one another and they settle like cakes on the roof tiles.

What happens to them…? They become earth and get mixed with earth.

When the Sun and all other Suns rotate very fast in the sky the hot waves coming from them become vapour. They go on absorbing such vapour and go on circulating in the sky growing in size.

Every star that has life goes on absorbing energy, grows into a small planet and grows in its size.

1.As they grow living beings are also created in them and water spreads are also formed in them.
2.These become bigger planets and go on circulating in the sky as new planets.

The astronomers announce now and then that they have sighted new planets. New planets are going round this Sun and other Suns also. These planets which grow from the Sun with their force grow quickly with life.

Several states are created from the acids that come out from the 48 planets that are round the sun. Those stars that grow by absorbing the acids from other planets can survive by absorbing energy from those planets only.

Since the sun rotates much faster than other planets the energy that it gives out is much more than others. The new planets which grow absorbing power from the Sun grow much faster than the others.

The planets that absorb energy from the Sun for their growth, get less power than those which get energy directly from the sun. The energy absorbed by such planets not being sufficient to keep them growing some of them become dead and they return to that planet from which they absorbed energy.

1.In this milky way there are many planets without life.
2.It is these that we see falling as burning stars.
3.Just as all living beings have birth, death and life-time all planets also have their life time.

What we say for man namely that he may live for six or sixty years holds good to planets also. All the human beings, all living beings in this world, all planets, moons, this sun and all other suns are the adopted children of Paramathma the Sakthi.

We get energy from each other. Let us pray to the Sun that see as our God. There are several suns as God that preserve our sun. Those suns can live only when they
get some energy from outside.

1.Let us pray to the soul of the life-atom that created our life-atom without our knowledge
2.and the Universal Soul that has created all these souls from its soul.

“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்

“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்

 

பிராணயாமம் என்று சொல்லி மூச்சை எடுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது உடலில் எதன் வேக உணர்வுகள் அதிகமாகின்றதோ அதைக் கவர்ந்து விடும்.

சுவாசித்த உணர்வுகள் உயிரிலே ஃபில்டர் பண்ணக்கூடிய சளி அதை வடிகட்டும்… அதிகமானால் வெளியே தள்ளிவிடும். வடிகட்டிய நிலையில் தான் வருகின்றது.

ஆனால் சுவாசித்து உள்ளே செலுத்தும் போது உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது சுவாசப் பைகள் மூலம் உடலுக்குள் அதிகமாகச் சென்று விட்டால் ஒரு பக்கம் உணர்த்தச் செய்து… செயல்படும் போது நாளடைவில் இந்த உறுப்புகளில் பலவிதமான இருமல்கள் வரும்.

1.இதே உணர்வு நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது
2.வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றவுடன்
3.இவர்கள் எதை எடுத்தார்களோ அதன் உணர்வின் தன்மை விஷத்தன்மையாக மாறிக் கடு கடு… கிடு கிடு.. என்று ஓடும்.

பிராணயாமம் செய்பவர்களைக் கடைசியில் கேட்டால் இதையெல்லாம் சொல்வார்கள்.

பிராணயாமம் செய்வதை இவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் வேதனைப்படும் நேரங்களில் என்ன செய்கிறது…? என்று எடுத்துச் சுவாசித்துப் பார்ப்பார்கள். அந்த உணர்வு உடலுக்குள் வரும் பொழுது வேதனையை உருவாக்கும் உணர்வின் தன்மை வந்து விடும்.

பிராணயாமத்தின்படி இதை எடுத்துப் பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்ப்பது சரம்.
1.அவர் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
2.அவர் என்ன நினைக்கின்றார்…? அவர் உடலில் என்ன இருக்கின்றது…? என்ற நிலையைச் சுவாசித்துப் பிராணயாமம்
3.உயிரிலே பட்டு உணர்ந்து கொண்டாலும் பிறருடைய எண்ணங்களைக் கவர்கின்றது.

இதைக் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத்தன்மையாகிக் கை கால் குடைச்சல் என்ற நிலையாகிவிடும்.

இதே உணர்வுகள் வாயுவாக நேரடியாகச் சென்று ரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் சுவாசப்பை வழி சென்று உடலுக்குள் விஷத்தைப் பரப்புவது தான் இதெல்லாம்.

குருநாதர் இதை எல்லாம் தெளிவாகக் காட்டுகின்றார்.

நேரடியாகச் சுவாசித்து (வழக்கமான வழி) உமிழ் நீராகி அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணவுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இரத்தமாக மாறி
1.அந்த ரத்தத்தின் தன்மை வரப்படும் பொழுது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வு வழி பிராணயாமம்.
2.அந்த உணர்வுகள் பிராணனை உருவாக்கி அதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பதுதான் முறைகள்.

இவர்கள் சொன்ன மாதிரி வடகிளை தென்கிளை என்று சுவாசித்து வடிகட்டும் திறனை இழந்து சூரிய கலை சந்திர கலை என்று அல்ல.

நுரையீரலில் பம்ப் ஒரு பக்கம் பிஸ்டன் இருக்கின்றது இன்னொரு பகுதியில் அடைக்கின்றது. சுவாசப்பைகளில் ஒன்று இழுத்துத் தள்ளியபின் அடைக்கும். மீண்டும் அது இழுத்து அதைத் தள்ளும்.

ஆகவே நமக்குள் பம்ப் செய்யும் முறைகளைப் பற்றி அந்த ஞானிகள் சொல்லி இருந்தாலும் அடைத்து இழுக்கிறது என்றால் “இவர்கள் மூக்கை அடைத்து இப்படிச் செய்கின்றார்கள்…”

கீதா உபதேசத்தினைக் கண்ணன் கூறுகின்றான் என்பார்கள். கண்களால் பார்க்கும் பொழுது எதன் உணர்வை நுகர்கின்றோமோ உயிரிலே படுகிறது. அப்போது கண்ணன் குருச்சேத்திரப் போரை வழிநடத்துகின்றான்.

உதாரணமாக…
1.ஒரு தீமையான உணர்வை நுகர்ந்தால் நம் கண் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது.
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் தீமையான உணர்வைக் கவர்கின்றது.

அது கவர்ந்து கொண்ட பின் உயிரிலே பட்ட பின் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வலு குறைகின்றது. தீமையான உணர்வு உயிரிலே மோதியபின் உடலுக்குள் இருக்கும் உயிரே அதற்குக் குருவாக இருக்கின்றது.

அதைத்தான்
1.கண்கள் தீமை என்ற உணர்வை எடுத்து உயிரிலே பட்டுத் தீமை என்று அறிவிக்கச் செய்கின்றது.
2.கண்ணால் பார்த்தாலும் உணர்வால் உயிரிலே மோதும் பொழுது தான் கண்ணனின் சகோதரி திரௌபதை.

எதைக் கொடுத்தாலும் அதை வழிநடத்திச் செல்லக்கூடிய உயிர்… திரௌபதை என்று ஏனென்றால் கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம் என்பதைக் கண்ணனின் சகோதரி… திரௌபதை.

கண்கள் பார்ப்பதால்… அதை உணர்வால் நமக்குள் அறிவிக்கின்றது என்பதை நாம் உணர்வதற்காக இவ்வாறு செய்தனர்.

எல்லாவற்றிற்குமே காரணப் பெயரை வைத்து ஒவ்வொரு நிலைகளிலும் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?
1.உயிரின் இயக்கமும் கண்களின் இயக்கமும் உடலின் இயக்கமும் என்ற நிலைகளில்
2.இந்த உணர்ச்சிகளால் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குச் சாஸ்திரங்கள் பல உண்டு.

ஆனால் அதைத் தவறான வழிகளில் இன்று மனிதனின் வாழ்க்கைக்காக “எத்தனையோ நீடித்த நாள் வாழலாம்…” என்று பிராணயாமம் செய்து தீமையின் நிலைகள் கொண்டு மீண்டும் எதை வளர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க “இன்னொரு உடல் பெறுவது திண்ணம்…”

அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை

அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை

தியானம் செய்யக் கற்றுக் கொண்டவர்கள் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் “ஓ…ம் ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின்
1.கருவிலிருக்கும் அந்தக் குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அந்தக் குழந்தையைச் சிறிது நேரம் நினைத்து அதைத் தியானியுங்கள்.
3.கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் தான் ஞானப் பாலை ஊட்ட வேண்டும்.
4.அப்படி ஞானப் பாலை ஊட்டி அந்தக் குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.

உலகிற்கு அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சொல்லும் மிளிரும் தன்மையாக அது பெற்ற உணர்வின் சக்தி பேரண்டத்தின் பேருண்மைகளைச் சுலபமாகப் பெற்றுத் தனக்குள் விளைய வைத்து அந்த மூச்சு “அம்மா…” என்ற மழலைச் சொல்லின் நிலைகள் உங்களுக்குள் இனிமையூட்டும்.

அந்த மெய் ஒளியின் தன்மைகள் உங்களுக்குள்ளும் வளரச் செய்யும். அதுவும் வளரும்… அந்தக் குழந்தை இடும் மூச்சலைகள் இந்த நாட்டுக்கும் உதவும் மற்றவர்களுக்கும் உதவும்.

1.ஆகவே எதிர்கால சிசுக்களை இப்படி உருவாக்குங்கள். அதற்காக வேண்டி வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.
2.ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் கர்ப்பமுற்ற பின் அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் தெய்வீகக் குடும்பமாக மாற்ற வேண்டும்.

அது சமயம் ரோஜாப்பூவும் குங்குமப்பூவும் கல்கண்டும் தேனும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற வைக்க வேண்டும். அதைப் பத்து மாதமும் கர்ப்பமுற்ற தாய்க்குக் கொடுத்து பழகுதல் வேண்டும்.

அதிகாலையில் குடும்பத்துடன் துருவ தியானத்தை எடுத்து அகஸ்தியர் துருவனாகி அணுவின் இயக்கத்தை அறிந்து துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ மகரிஷியாகிக் கணவனும், மனைவியும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமான அவர்களின் பேரருளைக் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும், என்று தியானிக்க வேண்டும்.

கருவிலிருக்கும் குழந்தை உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானியாக உருவாகிட வேண்டும். உலகைக் காத்திடும் பேரருள் ஞானியாக ஆக வேண்டும் என்று குடும்பத்துடன் அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.இதனின் உணர்வுகளைக் கருவுற்றிருக்கும் தாய் தன் செவி வழி கவர்ந்து தன் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
2.இதனின் உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கிடைக்கின்றது.

இப்படிச் செய்தோமென்றால் நமது குடும்பத்தில் சாப அலைகள் இருப்பினும் தீய அலைகள் இருப்பினும் பாவ அலைகள் இருப்பினும் பூர்வ ஜென்ம அலைகள் இருப்பினும் “இதையெல்லாம் தகர்த்தெறியும் பெரிய ஞானியாக அவன் உருவாகுகின்றான்…”

அவன் வளர வளர குடும்பத்திலுள்ள சர்வ தோஷங்களையும் சர்வ ரோகங்களையும் நீக்கிடும் தன்மையும் பேரருள் என்ற உணர்வை வளர்க்கும் தன்மையும் பெறுகின்றான்.

1.இதனால் அந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல… அவர்களுடைய ஊரிலும் தெருவிலும் அருள் ஞானியின் உணர்வுகள் படர்கின்றன.
2.இப்படி இதன் வழியில் குழந்தைகளை உருவாக்கினால் அவர்கள் பிறந்தபின் இருளை அகற்றி மெய்யுணர்வை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.

நாமும் இந்த நிலை பெற்றால் அந்தக் குழந்தைகள் நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வதும் நமக்குள் இருக்கும் சாப அலைகளை மாற்றிடும் அருள் ஞானியாகவும் ஆகின்றான்.

பண்டைய காலங்களில் அரசர்களின் மனைவிமார்கள் கர்ப்பமுற்றால் அரசர்கள் கர்ப்பமுற்ற தங்கள் மனைவிமார்களை அமர வைத்துத் தங்களுடைய நாட்டின் பெருமைகளையும் பிற நாடுகளை எப்படி வெல்ல வேண்டும்…? என்றும் எதிரிகளை வெல்ல எந்த நிலை பெற வேண்டும்…? என்றும் மற்ற பிற நிலைகளையும் குருகுலமாக வைத்து ஓதிக் கருவில் வளரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள்.

மிக பலசாலியாகவும் அதே சமயத்தில் தன் தாய்நாட்டைக் காக்கும் நிலைகளிலும் அந்தக் குழந்தை வளரும். இப்படி அரசர்கள் தங்கள் நாட்டைக் காப்பதற்காக வேண்டித் தங்கள் குழந்தைகளை இது போன்று உருவாக்குவார்கள்.

அன்று அரசர்கள் எடுத்துப் பயன்படுத்திய கத்தி வாள் போன்ற ஆயுதங்களை நாம் இரண்டு கையாலும் தூக்க முடியாது ஆனால் அவைகளை அரசர்கள் ஒரு கையாலே தூக்கி விளையாடுவார்கள். ஏனென்றால் மிருக தசைகளை அதிகமாகக் கொடுத்து மிருகங்களுக்குண்டான வலுவை உடலிலே ஏற்றியிருப்பார்கள்.

1.ஆனால் நீங்கள் குடும்பத்துடன் துருவ தியானத்தில் அமர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இல்லம் முழுவதும் படரச் செய்து
3.குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த சக்தியைக் கிடைக்கச் செய்து தெய்வீகக் குடும்பமாக
4.சஞ்சலங்களும் குறைகளும் இல்லாது நிறை கொண்டவர்களாக வாழ்ந்து
5.கர்ப்பமுற்ற பெண்ணிற்குக் குங்குமப்பூவும் தேனும் கலகண்டும் ரோஜாவும் கலந்த பாகை குடும்பத்துள் உள்ளோர் அனைவரும் கொடுங்கள்.

இது சமயம் கருவில் வளரும் குழந்தை மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று அருள் மகரிஷியாக வளர வேண்டும். அவனுடைய பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் சர்வ நோய்களைப் போக்கிடும் அருள் சக்தியும் அவன் பெற வேண்டும்.

விஞ்ஞான உலகால் வரும் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத்தைப் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தியும் அவன் பெற வேண்டும் என்று எண்ணித் “தேன் கலந்த பாகைக் கருவுற்ற பெண்ணிற்குக் கொடுங்கள்…”

இதைப் போன்று 10 மாதமும் கொடுத்து உருவாக்கி விட்டால் இன்று விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞானத்தை அகற்றிடும் உங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப அலைகளை நீக்கிடும் பாவ அலைகளைப் போக்கிடும் எத்தகைய நிலைகளையும் மாற்றும் அரும் பெரும் சக்தி கொண்ட ஞானியாக, அந்தக் குழந்தை வளரும்.

நாம் ஒருவருடன் அன்புடன் பண்புடன் பழகியிருந்தால் அவர் இறந்தபின் அவருடைய ஆன்மா பற்று கொண்ட நமது உடலுக்குள் வந்து விடுகின்றது. பின் அந்த ஆவியின் உணர்வே உங்களுக்குள் இயக்கச் செய்கின்றது.

இப்படி குடும்பத்தில் அறியாது தீய வினைகளைச் சேர்த்த ஒருவர் சாபம் விடும் பொழுது உற்று நோக்கினால் அந்தச் சாப அலைகள் உங்களுக்குள் வந்து உங்களுடைய குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

1.உங்களுக்குச் சாபம் விடவேண்டாம். வேறு யாருக்கோ விடும் சாபம் கூட, உங்களில் இணைந்து உங்களைச் சீரழிக்கும்.
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த இந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே நமது குடும்பத்திலும் உடலிலும் ஆட்டிப்படைக்கும் நிலை வருகின்றது.

இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால் உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை அருள் ஞான நூல்களைப் படிக்கச் செய்யுங்கள். அருள் ஞானவழி வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

தபோவனத்தில் வெளியிடப்பட்ட நூல்களையும் வாங்கிப் படிக்கச் செய்யுங்கள். பிறரைப் படிக்கச் சொல்லிச் செவி கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். இதனால் பிறக்கும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாகப் பிறக்கும்.

குடும்பத்தில் சாப அலைகளை நீக்கும் அருள் சக்தியும் உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும் குடும்பத்தில் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும் கருவில் உள்ள குழந்தைப் பெற்று அருள் ஞானியாக உருவாவான்.

இதைப் படிக்கும் அனைத்து மக்களும்
1.தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று அறியாது சேர்த்த இருளை அகற்றி நஞ்சினை வென்று
2.பேரருள் உணர்வுகளை தம்முள் பெருக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞானம் பெற்று
4.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் சக்தி பெற்று
5.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞான வாழ்க்கை அமைந்து
6.இவ்வாழ்க்கையில் பேரின்ப்ப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

Lightning

Lightning

The milky way is also absorbing energy from many planets and is rotating. They say that the milky way is a void. When there is rain how do thunder and lightning come from the milky way…?

This is caused when the rain drops fall on the different kinds of acids that are circulating there and they react on each other.

This is similar to the tremour that happens inside the earth while rotating and emits the acids that it has absorbed in a place where the existing acids have a quality opposing this and they do not agree with one another and reaction is produced.

When there is thunder and lightning due to the reaction of two different kinds of acids in the milky way one of them is attracted and it goes and strikes on the earth where the same kind or any other kind of acid which has got affinity with it.

1.There are some trees which possess some kinds of acids and they attract the acids for which they haye affinity.
2.Those trees absorb the atoms that are agreeable to them.

Just as trees and plants absorb from the air only those atoms that are suitable to them… the acids in the milky way keep moving with the same type of acids that are there.

When water drops fall on them, they react and there is lightning and thunder. 1.When the reaction starts in one place it continues in a stream in the places adjacent to it
2.where the same kind of acids exist and we see the lightning stretching to nearby places.

This reaction continues till there are those opposing acids and the lightning goes to the earth and mixes with trees and plants that have affinity to those acids.

This is the truth that lies behind our elders telling that we should not stand under trees when there is heavy rain with lightning and thunder.

Today our scientists have found out ways to absorb the lightning and lead them to the earth and saving people from it.

Some plants have the power to attract lightning. If the lightning strikes on human beings, or any living being like horse bull etc. or on houses they cannot withstand its effects.

But there are some trees and plants which absorb the lightning and grow well while many others turn to ashes when struck by lightning.

1.Just like the formation of lightning and thunder
2.there are other forces moving about in the milky-way.

யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்

யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்

 

உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.
1.யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
2.அந்த நேரத்தில் உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வுகள் வளர்ச்சியாகும்.

யாம் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். எது தீமை…? எது நன்மை…? என்பதை அறிந்து கொண்டீர்கள். எல்லோருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். கோவிலுக்குச் சென்றால் எப்படி வணங்க வேண்டும் என்று வழிகாட்டுங்கள்…?

தாய் தந்தையரைத் தெய்வமாக வணங்குங்கள். குறைகள் இருந்தால் அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் ஞானியாக வேண்டும்… நல்லவனாக வேண்டும் என்ற உணர்வைச் சொல்லிப் பழகுங்கள்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்டால் அது உங்களுக்குள் வளராதபடி அவர்களுக்கு ஞானத்தை ஊட்டித் தெளிவாக்குதல் வேண்டும்.

ஆகவே தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள்
1.உங்களை யாம் எப்படிக் குரு வழியில் சீர்திருத்தம் செய்கின்றோமோ இதைப் போல
2.மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கையின் உண்மை நிலைகளை எடுத்துக் கூறி அவர்களைத் தெளிவானவர்களாக நீங்கள் மாற்ற வேண்டும்.
3.ஞானிகளைப் போன்று மாற்றும் சக்தி உங்களுக்குள் வந்தால் தீமைகளை மாற்றி அமைத்து
4.நன்மையின் நிலைகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்ய முடியும்.

கஷ்டம் என்று மீண்டும் மற்றவர்கள் சொன்னால் “நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லையே…” என்று வாதத்திற்கும் போக வேண்டாம் வேதனைக்கும் போக வேண்டாம்.

1.எப்படியும் அவர்கள் பெறுவார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2.சந்தர்ப்பம் வரும் பொழுது அவர்களும் அதைப் பெறுவார்கள்.
3.அவர்கள் அதைப் பெறும் பொழுது அந்த மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.

நான் சொல்லியிருந்தோம்… இன்று அவர்கள் அதை உணர்ந்து வந்து விட்டார்கள். அந்தச் சந்தர்ப்பங்கள் கஷ்டம் என்று வரும் பொழுது நல்வழியில் வழி நடத்தும்.

ஆக மொத்தம் கடவுள் செய்வார் சாமி செய்வார் சாமியார் செய்வார் என்று மற்றவர்களை எண்ணாதபடி உங்களை நீங்கள் நம்புங்கள்.

நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ அந்த உணர்வினை உங்கள் உயிர் உருவாக்கும். மற்ற யாரும் செய்து கொடுக்க மாட்டார்கள். நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் செயல்படுத்திக் கொடுக்கும்.

1.நான் (ஞானகுரு) செய்வேன் என்றால்… நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எனக்குள் அந்த நன்மையின் தன்மை உருவாகின்றது.
2.அதே போல் நல்லது பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் உங்கள் உயிர் தான் அதை உருவாக்கிக் கொடுக்கின்றது.

வேறு யாரும் உருவாக்குவதில்லை…!

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

உதாரணமாக தாய் ஒருவர் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்திருப்பார்கள். இங்கே வீட்டிற்கு வந்து தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும். கொஞ்ச நேரத்தில் குழந்தை “வீல்… வீல்…” என்று கதறும்.

உடனே அந்தத் தாய் யார் கண் பட்டு விட்டதோ…? “சில்… சில்…” என்று குழந்தை அழுகின்றது என்பார்.
1.தாய்க்குத் “தன் பார்வை பட்டது தான்…!” என்று தெரியாது.
2.ஏனென்றால் சண்டை போடுபவர்களைப் பார்த்த அந்த உணர்வுகள் தாய் உடலில் பதிவாகி விடுகிறது.
3.அந்த நினைவுடன்… பாசத்தால் குழந்தையைத் தாய் அரவணைக்கிறது.
4.ஆனால் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது…. அதைத் தாங்கக்கூடிய சக்தி குழந்தைக்கு இல்லை.
5.இப்பொழுது குழந்தைக்குச் சீக்காகிவிட்டது என்பார்கள்.

அப்படி வேதனையினுடைய நிலைகள் அதிகமானவுடன் மிகக் கஷ்டமாக இருக்கின்றது என்று பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டு வந்த உணர்வுகள் அந்தக் குழந்தைக்குத் தாங்காதபடி வயிற்றுப் போக்கு போய்க் கொண்டே இருக்கும். அந்தச் சங்கடமான உணர்வையே மேலும் மேலும் நினைத்துப் பாய்ச்சிக் கொண்டே இருப்பார்கள்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
1.பின் உங்கள் பார்வையால் உங்கள் எண்ணத்தைக் குழந்தை மேல் செலுத்துங்கள்.
2.“இனி உனக்கு வயிற்றால் போகாது… நன்றாகிவிடும்…!” என்று குழந்தையின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
3.உங்கள் எண்ணத்தால் பார்வையால் குழந்தைக்கு நன்றாகிவிடும்.

இதை நீங்கள் அனுபவத்தில் கொண்டு வாருங்கள்.

உங்கள் மனதை வலுப்படுத்துங்கள். உங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் போக்கக் கூடிய சக்தி உங்களுக்குள் வரும். இதை நீங்கள் அனுபவபூர்வமாக பார்க்கலாம்.

அடுத்தடுத்து இவ்வாறு நீங்கள் பெறும் அனுபவத்தால் உங்கள் வாக்கினைச் சொல்லும் பொழுது
1.அடுத்தவர்கள் எண்ணங்களில் இது பதிய வேண்டும்.
2.அவர்கள் நோய் “நான் போகிறேன்…” என்று ஓட வேண்டும்.

நான் இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து தீமைகளை நீக்கினேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன்
1.எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக இனிமேல் விலகிவிடும்
2.எங்களுக்கு நன்றாக இருக்கும்…! என்ற எண்ணங்கள் அங்கே அவர்களுக்குத் தோன்ற வேண்டும்.

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

 

குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது…? உயிரணுக்கள் உயிரினங்கள் எவ்வாறு விளைகின்றது…? கோள்கள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு வளர்கின்றது…? என்ற நிலையைச் சாப்பாடு இல்லாதபடி காட்டிலே அமர்த்தி அதை எல்லாம் அறியும்படி செய்தார்.

விஞ்ஞானிகள் இயந்திரத்தின் துணை கொண்டு பல நிலைகளைக் கண்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையும் அவர்கள் காணவில்லை.

அன்று மெய் ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு
1.நம் குருநாதரும் அதை அறிந்து… அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்கின்றார்.
2.பதிந்த உணர்வினை நினைவு கொண்டு நான் விண்ணை நோக்கும் பொழுது விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை உணரும்படி செய்கின்றார்.
3.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்கின்றார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு ரூபத்திலும் அவர் பதிய வைத்த உணர்வை… ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது இதை உணர்த்தி
2.அவரே தான் இந்த உடலை வழி நடத்துகின்றார்… ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

நாடாக்களில் பதிவு செய்தது போன்று அவர் உணர்வுகள் எனக்குள் பதிவானது…!

1.அதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு
2.அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று அவர் செய்த உணர்வைத் தான் நான் செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னை இவ்வாறு செயல்படுத்த வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். அவர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்வோம். இந்த உடல் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம். மகிழ்ந்த உணர்வுடனே வாழ்வோம்.

1.என்றும் பேரானந்த நிலை பெற்ற அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்
2.அவர்களுடன் ஒன்றி வாழும் நிலையை உருவாக்குவோம்… அவர்களுடனே வாழ்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

உங்களிடம் இதற்கு முன்பு படிப்படியாகச் சிறுகச் சிறுக சொல்லிக் கொண்டு வந்தேன்… இப்பொழுது விளக்க உரைகளைக் கொடுக்கின்றேன். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான கால நேரம் இல்லை.

1.குருநாதர் பதிவு செய்தது எண்ணிலடங்காதது.
2.அனைத்தையும் நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். அதை எல்லோரும் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது துணுக்குத் துணுக்காகக் கொடுத்து அந்த நினைவுகளை உங்களுக்குள் ஊட்டுகின்றோம்.

1.அவ்வாறு ஊட்டி உங்கள் உணர்வை ஒளியாக்கி அதனை எண்ணமாக்கி
2.உங்களுக்குள் இயக்கும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்.

கருவுற்ற தாய் அறியாமல் நுகரும் தீமைகள் குழந்தையை எப்படிப் பாதிக்கும்…?

கருவுற்ற தாய் அறியாமல் நுகரும் தீமைகள் குழந்தையை எப்படிப் பாதிக்கும்…?

இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் கருவில் வளரும் குழந்தைக்கு எதைக் கொடுக்கின்றார்கள்…?

T.V. அல்லது ஃபோனைப் பார்க்கின்றார்கள். “டமார்… டமார்…” என்று பந்து அடிப்பதைப் பார்த்து அந்த உணர்வைத் தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையிடம் பெருக்குகின்றார்கள். அதே போல் கராத்தே விளையாடுவதைக் கண்டால் அதையும் வேடிக்கைப் பார்ப்பார்கள். அதன் வலிமையைப் பார்ப்பார்கள்.

இதனால் என்ன ஆகின்றது…?

1.அவன் பிறந்தவுடனே கிரிக்கெட் பார்க்க ஓடிவிடுகின்றான்.
2.அதே போல் கராத்தே போன்று தாக்கிக் கொண்டே விளையாடுவான்.
3.இருப்பவர்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்துவிடுவான்.

மனிதர்கள் தங்களிடத்திலும் தங்கள் குழந்தைகளிடத்திலும் வளர்க்க வேண்டியது எது…? நீக்க வேண்டியது எது…? என்பதை, ஞானிகள் தங்களது காவியத் தொகுப்புகள் மூலம் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி உள்ளார்கள்.

இதை யாரும் சிந்திப்பதில்லை.

உதாரணமாக ஒரு கருவுற்றிருக்கும் பெண்மணி ஊனமுற்ற குழந்தையைப் பார்க்குமேயானால் அந்தக் குழந்தையின் உடலிலிருந்து வரக்கூடிய மூச்சலையும் உடலின் அலைகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொள்கின்றது.

இந்த உணர்வின் சக்தியை அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது “அந்தக் குழந்தைக்கு இப்படியாகி விட்டதே…!” என்று சோர்வும் வேதனையும் அடைகின்றது… சஞ்சலமும் படுகின்றது.

அந்த உணர்வின் நிலைகள் வரும் பொழுது அத்தகைய உணர்வைப் பார்வையால் நுகரச் செய்து அந்த எண்ணத்தால் உடல் இயங்கி அது எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து
1.அதாவது அந்த ஊனமுற்ற குழந்தையின் உடலில் இருந்து வரும் உணர்வின் சத்தைக் கர்ப்பிணிப் பெண் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இந்த உணர்வின் அலைகள் பதிவாகி விடுகின்றது.

கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று கதையைச் சொல்வார்கள். நமது கண் ஊனமுற்றிருக்கும் குழந்தையைக் கண்டு இரக்கப்பட்டு பரிதாபப்பட்டு வேதனைப்படும் அதனின் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து உயிரை இயக்கச் செய்கின்றது.

உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வின் அலைகள் இரத்தத்துடன் கலந்து தாயின் இரத்தத்தில் இருக்கக்கூடியதைத் தான் கருவில் இருக்கக்கூடிய குழந்தை உணவாக எடுத்து அதனின் தசைகள் வளர்கின்றது.

1.தாயின் கண் அந்த ஊனமுற்ற குழந்தையின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்கின்றது.
2.ஊழ்வினையான அந்த வினைதான் இந்தக் குழந்தையிடமிருந்து வெளிப்படும் உணர்வை மீண்டும் சுவாசிக்கச் செய்கின்றது.
3.ஏனென்றால் தாயின் கருவிலே அந்த உணர்வுகள் பதிவாகவில்லை என்றால் எடுக்காது.

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மையை
1.“சாமி என்ன சொல்கிறார்…?” என்று கேட்டு உணர்ந்து கொண்டு இருந்தால் இது பதிவாகும்.
2.சொல்லும் உணர்வுகளும் தெளிவாகக் கேட்கும்.
3.மற்றவர்கள் அருகிலே பேசினாலும் அது செவிப்புலனுக்கு ஏறாது.

ஆனால் இங்கே யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது “வீட்டுக்கு அவசரமாகப் போக வேண்டும் எப்பொழுது முடிப்பார்…?” என்று எண்ணினால் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் பதியாது… எண்ணிய உணர்வுதான் இயக்கும். யாம் சொல்லும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகாது.

அதே போல்… வீட்டில் என்ன நடக்கிறதோ என்ற உணர்வினைப் பதியச் செய்து விட்டால் அது பதட்டத்தையும் பயத்தையும் ஊட்டி நல்ல உணர்வுகளைக் கெடுக்கச் செய்து… நம்முடைய கண்ணின் நினைவலைகள் எங்கே செல்கின்றதோ அதனின் நிலைதான் பதிவாகி அதனையே இயக்கும்….!

இதைப் போல அந்தக் கர்ப்பமுற்ற தாய் தான் பார்த்த ஊனமுற்ற உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அது உடலிலே பதிவாக்கும் பொழுது தாய்க்கு ஊழ் வினை.

ஊழ் என்பது… நமது எலும்புக்குள் மேக்னட் – காந்த சக்தி உண்டு. இந்த உடலிலே பதிவு செய்த அனைத்தும் நமது எலும்புக்குள் ஊழ் வினையாக அது ஊழாக இருக்கின்றது.
1.நாம் எப்படி டேப்புகளிலே முலாம் பூசுகின்றோமோ அதைப் போல நமக்குள் உருவான இந்த நிலை
2.நாம் வளர்ச்சி பெறும் வண்ணம் நமது எலும்புக்குள் இந்த ஊண்.
3.நாம் கண்ணால் பார்த்த உணர்வின் தன்மையை அந்த ஊணுக்குள் பதிவு செய்துவிடும்.

இவ்வாறு தாய் சந்தித்த (ஊனமுற்ற குழந்தையைப் பார்த்த) சந்தர்ப்பத்தின் உணர்வுகள் தாய்க்கு ஊழ் வினையாகி சுவாசிக்கும் உணர்வுகள் தாயின் இரத்தத்திலே கலந்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஆகவே இந்தக் குறையான உணர்வை… அதாவது ஊனமான குழந்தையின் உணர்வுகள் கருவுற்ற தாய்க்குள் பட்டபின் வேதனை என்ற நஞ்சு வரப்படும் பொழுது… அதனால் அந்தக் கருவிலே வளரும் சிசுவிற்குச் சிந்திக்கும் திறன் இழந்து மூளையின் வளர்ச்சி குறையாக இருக்கும்.

அவ்வாறு அந்த மூளையின் வளர்ச்சி குறையாக இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே வளர்ச்சியின் தன்மை குறைவாக ஆகி எதனின் உணர்வுடன் அந்தக் குழந்தையைப் பார்த்ததோ அதே நிலைகள் கொண்டு கருவிலே இருக்கக்கூடிய “குழந்தை உடலும் ஊனமாகும்…”

இதுதான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

நமது கண்ணின் நினவலைகள் அங்கே இருப்பதைக் கவர்ந்து உடலுக்குள் அது செல்லப்படும் பொழுது குழந்தைக்கு அந்த உணர்வின் சக்தி கிடைக்கின்றது என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

ஆஅகவே கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அனைவரும் கருவிலிருக்கும் தன் குழந்தையை எண்ணி
1.அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

அந்த ஏக்கத்துடன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கருவுக்குள் இருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று கண்ணின் நினைவலைகளைக் கருவுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது, கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசிப்பது போல
1.கண்ணால் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவலைகளை
2.கருவிலே பாய்ச்சப்படும் பொழுது அது ஞானக் குழந்தையாக வளருகின்றது.
3.அது வளர வளர நமக்குள் தெளிவான நிலைகள் வளருகின்றது… அது நம்மைக் காத்திடும் நிலையாக வருகின்றது.
4.அந்தக் குழந்தை அகஸ்தியனைப் போன்ற ஞானக் குழந்தையாக உருவாகும்.
5.இந்த உலகைக் காத்திடும் உத்தம ஞானக் குழந்தையாக வளரும்.