“உணர்வு… உணர்வு…” என்று எண்ணிலடங்காத தடவை சொல்கிறோம்… அதனின் சூட்சமம்

“உணர்வு… உணர்வு…” என்று எண்ணிலடங்காத தடவை சொல்கிறோம்… அதனின் சூட்சமம்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டினை உற்பத்தி செய்கிறோம் என்றால் அதிலே எத்தகைய நிலைகளை நாம் இணைக்கின்றோமோ…
1.வண்ண விளக்குகள் என்றால் அந்தக் கலர் வெளிச்சம் வருகின்றது.
2.மற்ற கருவிகளுக்குள் எதிலே இணைத்து இயக்குகின்றோமோ அதற்குத் தக்கவாறு இயந்திரங்கள் இயங்குகின்றது.

இதைப் போன்றது தான் நமது உயிரின் வேலையும்.

இயக்கச் சக்தி கொண்டு கரண்டை உற்பத்தி செய்தாலும் நாம் எண்ணிய உணர்வின் சத்தை உயிர் தனக்குள் எடுத்து ஜீவ அணுக்களாக அதை உருவாக்கும் தன்மை வருகின்றது.

இவ்வாறு நமது உயிர் நம் உடலுக்குள் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிலையில்
1.நம்மை அறியாதபடி சூட்சுமத்தில் மறைந்திருக்கும் நிலைகளைக் கண் கொண்டு பார்க்க முடிவதில்லை.
2.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… நாம் சுவாசித்து உயிரிலே உராயப்படும் பொழுது தான் அந்த உணர்வின் தன்மையை “உடலில் காண்பிக்கின்றது…”

கண் கொண்டு திடப்பொருளைக் காணுகின்றோம்… அதனை அறிகின்றோம். ஆனால் கண்ணின் காந்தப்புலனறிவோ… ஒரு மனிதன் தவறு செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் யாரை உற்று நோக்குகின்றோமோ அவனின்று வெளிப்படும் உணர்வின் தன்மையை நம்மை நுகரச் செய்கின்றது.

1.நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் அகக்கண்ணாக உடலுக்குள் பரப்பி நம்மை அறியச் செய்கின்றது.
2.கண்ணால் திடப்பொருளைக் கண்டாலும்… உணர்வால் உடலுக்குள் அது சென்று அதை உணரும் தன்மை வருகின்றது.

அத்தகைய உணரும் தன்மை வந்தாலும் நாம் சுவாசித்த உணர்வின் தன்மை நம் உயிர் அதை இயக்கியே காட்டுகின்றது. இயக்கிய உணர்வின் தன்மை உடலில் அதை இணைத்து விடுகின்றது.

இவ்வாறு தான்
1.சூட்சமத்தில் இருப்பதைப் பார்க்க முடியவில்லை என்றாலும்
2.உடலாக திடமான பின்… அதைக் காண முடிகின்றது.

எப்படி…?

இன்று நல்ல மனிதர்களாக நாம் காணுகின்றோம் அடிக்கடி வேதனை சோகம் என்று வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் பாய்ந்து… அந்த உணர்வின் இயக்கத்தால் அவர்கள் உடல்கள் சோர்வடைவதும்… நோயால் வேதனைப்படுவதையும் நாம் காணுகின்றோம்.

இது திடப்பொருளில் காணும் நிலைகள் தான். அதாவது
1.வேதனையான உணர்வு என்பது கண்ணுக்குத் தெரியாத சூட்சமம் என்றாலும்
2.உடலுக்குள் விளைந்த பின் நோயாக அதைக் காண முடிகிறது.

ஒரு சிலர் நன்றாக இருப்பார்கள்… உடல் நலமாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தான் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் அதிகரிக்க தான் சுவாசித்த நிலைகள் அவர் உடலிலே நிம்மதியற்ற நிலைகளாக அது ஓடிக்கொண்டே இருக்கும்.

காரணம்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எந்த வித்தின் தன்மையாக அடைகின்றதோ இந்த வேதனை என்ற நஞ்சு கொண்ட வித்து
1.குழம்பைச் சீராக வைத்து அதில் நஞ்சான நிலைகள் கலந்தால் அதனின் சுவைகள் மறைந்து விடுவது போல
2.நம் உடலில் எத்தனையோ உணர்வுகள் இந்த எண்ணங்களாகப் பதியச் செய்து அது உடலாக சதாசிவமாக்கி கொண்டிருக்கும் இந்த நிலையில்
3.எந்தெந்த குணங்கள் எண்ணங்கள் அதிகரிக்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாக முன் நிற்கின்றது.
4.காரணம் அது எல்லா குணத்தையும் அடைக்கிடும் நிலைகள்.

பூர்வ புண்ணியம்

பூர்வ புண்ணியம்

 

ஆடு மாடுகளுக்கு அந்தந்தக் காலங்களில் இரை போடுகின்றோம். 3 மணிக்கு இரை போட்டுப் பழக்கினால் மணி 3 என்று தெரிந்து கொள்ளும்.
1.அந்த உணர்வுப்படி அது சத்தம் போட ஆரம்பித்துவிடும்.
2.யார் இரை போட்டாரோ அவர்களை எண்ணி உணர்வை வெளிப்படுத்துகின்றது.

இரை போடும் பொழுது சொல்வதையெல்லாம் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றது. அவர்களை அணுகி வருகின்றது. ஆனால் ஒருவர் இதை மிரட்டி இருந்தார்களென்றால் அவர்கள் வரும் பொழுதே இது மிரளுகின்றது. இந்த உணர்வுகள் அவர்களை இயக்குகின்றது. யார் மேல் பாசமாக இருக்கின்றதோ அந்த உடலுக்குள் பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது.

ஆனால் மனிதனாகி இருக்கும் நாம் ஒரு மனிதனின் நிலைகளில் பாசமாக இருக்கின்றோமென்றால் இந்த உடலை விட்டுச் சென்றபின் அவர்கள் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் யார் மேல் பாசமாக உள்ளோமோ அவர்கள் உடலுக்குள் தான் செல்லும்.

மனித உடலில் இருக்கும் போது எந்த நோய் இருந்ததோ அந்த நோயை அங்கே உருவாக்கத் தொடங்கிவிடும். மனிதனின் முதிர்ச்சி பெற்ற இயக்கங்கள் அதை இயக்கி அதை மாற்றியமைக்கச் செய்கின்றது. ஏனென்றால் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த நிலை அடைந்தவர்கள்.

ஆடு மாடுகளுக்கு எப்படி நாம் சொல்லும் போது உணர்வின் தன்மை பதிவாகின்றதோ அதைப் போல
1.தாய் கருவிலே இருக்கப்படும் போது பாசத்தால் அன்பால் பிறர் படும் கஷ்டங்களை
2.நோய்வாய்ப்பட்டவர்கள் உணர்வுகளை சண்டை போடுகின்றவர்கள் உணர்வுகளை வெறுப்பான உணர்வுகளை
3.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள் அந்தக் கரு வளர்ச்சியாகும் பொழுது தாய் கண்ணால் பார்க்கப்படும் பொழுது
4.கருவின் உயிரணு தாய் எதை உற்றுப் பார்த்ததோ அதனின் ரூபமாக அது கவரத் தொடங்கிவிடும்.

அது அதனுடன் இணைந்து விட்டால் அதில் ஒருவருக்குப் புற்று நோய் இருந்ததென்றால் அவருக்கு 40 வயது இருந்தது என்றால் “அதிலே விளைந்த இந்த செல்…” கருவிலே இருக்கும். குழந்தைக்கு அதே 40வது வயதில் புற்று நோய் வரும்.

ஆஸ்துமா நோயை உள்ளவரைத் தாய் பார்த்திருந்தால் அந்த உணர்வின் தன்மை கருவிலே பதிவாகி 40 வயது வரையிலும் ஆஸ்துமா இருக்காது. 40 வயதுக்கு மேல் ஆஸ்துமா வரும்.

அதே மாதிரிக் குடும்பத்தில் என்னென்ன சண்டை போட்டார்களோ அதைக் கேட்டிருந்தால் இந்தக் குழந்தையின் கருவிலே பதிந்து அதனுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதனுடைய வளர்ச்சியில் அதே சண்டை போடும் உணர்வுகள் வரும்.

ஒரு கண்ணில்லாத குழந்தையை அதனுடைய உணர்வுகளை நுகர்ந்து குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் அதே உணர்வுகள் குழந்தையின் உடலிலே கருவிலே இருக்கும் போது விளையாடப்படும் போது அதன் வளர்ச்சியைத் தடைப்படுத்திக் கண்ணுக்குண்டான சத்தைத் தடைப்படுத்தும்.

மனிதனின் வளர்ச்சியில் இப்படியெல்லாம் பல உண்டு.

முடமாக இருப்பவனை அதிகமாக நேசித்தாரென்றால் அதே உணர்வுகள் கருவிலே சேர்ந்து அணுக்கள் விளையத் தொடங்கி அந்தக் காலம் வரும் போது உணர்ச்சியைத் தூண்டும்.

நாம் செடி கொடிகளுக்கு உரமிடும் போது அதனுடன் இணைந்து எவ்வாறு விளைகின்றதோ இதைப் போலத்தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு வருகின்றது.

குடும்பத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் அந்தக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் அதிகமாக இருக்கும். இருந்தாலும்…
1.கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது யாராவது ஒருவர் உயர்ந்த குணங்கள் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது
2.கடைவீதிகளிலோ மற்றவைகளிலோ வேடிக்கை பார்க்கச் செல்கின்றது.
3.அந்த உயர்ந்த சொல்களைக் கர்ப்பமாக இருக்கும் தாய் கேட்டது என்றால் அந்தக் குழந்தை கருவிலே விளைந்த பின்
4.வீட்டிலே மிகவும் தரித்திரமாக இருப்பார்கள்… ஆனால் இது ஞானக் குழந்தையாக வளரும்.

சில குடும்பங்களில் மிகவும் ஏழையாக இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் உயர்ந்த உணர்வுகள் அதற்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அந்தக் குழந்தை ஞானியாக உருவாகும்.

1.நமது வாழ்க்கையில் இன்றைக்கு எவ்வளவு திறமை உள்ளவராக நாம் இருந்தாலும்
2.தாய் கருவிலிருக்கும் போது பெற்ற பூர்வபுண்ணியமும் இணைந்தே வருகின்றது.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

In the universe each and everything has got life

In the universe each and everything has got life

In our life today the food that we eat and the air that we breathe bring poisonous, we get several diseases.

Besides these we are subject to the influence of the souls that lived in this world sometime ago and are now roaming about round us without a physical body in the astral world.

We have to save ourselves from the thoughts and deeds of those that live among us.
1.We should not allow ourselves to be influenced by any of the above
2.and remain steady in our own state progressing in the spiritual path.

The God that saves us from all the above is our spiritualism. Realise that there is no such God, any single God in physical form which knows everything and acts.

1.The power that controls everything lies in all of us
2.likewise is this world and all other worlds.
3.In the same way as every living being acts with the power that it has in its body
4.this world also acts with the power that lies within her.

In the same way as we live in this world with life in us, the world itself lives, protects, maintains and allows all the powers to grow in her. Mother earth lives in the same way as life-atoms live in this world with their feelings.

The energy that this world absorbs from the Sun and other planets in the form of water vapour and other atoms is the food by which mother earth maintains herself.

1.It is this water and other atoms that the world consumes as her food and supplies the same to us also.
2.There will be no life in this world or for the world if there is no water.

Without water no mineral like coal, copper, diamond, iron and no trees, vegetation and all that grows on this earth can grow. The earth itself cannot live without water.

The world which lives with water as its life has all the feelings. In this world volcanoes erupt in some places, whereas in other places there are snow hills and sandy deserts.
1.Do not think that deserts have no power in them.
2.They are the pulse of life for forests.

The earth is not uniform in all places. There are hills, vallies, sea and groves in different places which mother earth grows by her absorption and emission of energy.

1.There are several powers in the air around us.
2.Just as man inhales and exhales mother earth also absorbs and emits energy.

From the food that we take for our body, the body absorbs what is required and rejects that which it does not want. The body absorbs the food that we take and converts it into blood, urine faeces, air sweat etc. Out of all these the body absorbs only the blood and rejects all the others.

Whatever the earth absorbs in the form of water, acids and other atoms it gives them to the various things that grow in the earth as per their requirements.

In some cases the acids emitted by the earth on account of the rotation of the earth does not agree with the conditions that exist there and it is in such cases that earthquakes occur.

The scientists of today have found out ways by which they are able to predict where earthquakes are going to take place. If they can know the reason for the earth tremor and valcano they can know something more.

1.Every living being in this world has got that power by which the earth absorbs energy and emits it out.
2.But the power is not constant with all the living beings but vary in every one as per their capacity to absorb it.

This is similar to the specific heat of materials. One will not have the same power as another just as all the fruits from one tree are not of the same size and their power and taste also vary.

The same is the case with flowers that grow in one plant. The state of the world is also similar.

How many changes are there in this world which absorbs and emits energy while it keeps rotating all the time…? The same is the case with other planets also.

1.The universe is also alive and is rotating.
2.People talk about galaxy, vacuum and voids… where is vacuum…?
3.There is no region which is void… the galaxy has got life.

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”

 

1.ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் மனிதன் எவ்வாறு தன் நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்…?
2.தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதற்குத் தான் ஆடிப் பெருக்கு.

வருடத்திற்கு 12 மாதம் என்றால் அந்த 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள். 12 மாதங்களையும் 12 ராசிகளாகப் பிரித்தனர் ஞானிகள்.

ஒவ்வொரு மாதத்திலும் அந்த மாதத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்கள் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளையும் மற்ற நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் “ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொகுதி… தொகுப்பு…” என்ற நிலையில் கொண்டு வருகிறது.

12 மாதங்களிலும் இதே போன்று தான்.

1.எந்தெந்த நட்சத்திரங்கள் அந்தந்த மாதங்களில் அருகிலே ஒன்றாகக் கலந்து
2.அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து அது நமது பூமிக்கு எவ்வாறு கிடைக்கின்றது…? என்ற நிலையும்
3.அதே உணர்வின் சக்தியை நாம் எவ்வாறு நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்ற நிலைப்படுத்தித் தான் மாதங்களை 12 ராசிகளாகப் பிரித்தனர்.

12 ராசிகள் என்றாலும் அதிலே ஒவ்வொரு ராசிக்கும்… இரண்டு நட்சத்திரம் மூன்று நட்சத்திரம் நான்கு நட்சத்திரம் என்ற அந்த அலைவரிசைகளில் அது கலந்து அது மற்றொரு நிலைகளில் கலந்து ஒவ்வொரு கோள்களும் தனக்குள் அதை கவர்ந்து வரும்.

அப்படித் தனித்தனியாக (தொகுப்பு) வரும் நேரத்தில் நமது பூமி அந்தந்த மாதத்தில் 12 மாதங்களிலும் அதை எவ்வாறு கவர்கிறது…? என்ற நிலையைத் தான் ராசி என்று பிரித்தனர்.

அவ்வாறு பூமிக்குள் வரும் அந்த அணுக்களின் தன்மையை தாவர இனங்கள் தனக்குள் எதைச் சேர்த்துக் கொண்டதோ
1.அதனதன் வளர்ச்சிகள் அந்த மாதங்களில் வரும் பொழுது அதனுடைய பெருக்குகள் பெருகி வருகின்றது.
2.தான் கவர்ந்து கொண்ட சக்திகளைப் பெருக்கிக் கொள்கிறது என்ற நிலையை நிலைப்படுத்துவதற்குத் தான்
3.12 விதமான ராசிகளாகப் பிரித்து காட்டினார்கள்.

27 நட்சத்திரங்களும் அதற்குள் ஒன்பது கோளின் நிலைகளையும் இப்படிப் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு… நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒன்பது கோள்களும் அதை எடுத்து வெளிப்படுத்தும் போது சூரியன் தனக்குள் கவர்ந்து அதனுடைய ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது.

அவ்வாறு கலந்து அது வெளிப்படுத்தியதை
1.நமது பூமி சுழலும் போது பூமியின் துருவப் பகுதி (வடக்கு) எந்தெந்த நட்சத்திரத்திற்கு நேர்முகமாக இருக்கின்றதோ
2.அந்தச் சக்திகளை அதன்வழி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகிறது.

அதிலே வளர்த்துக் கொண்ட நிலைகள் தான் தாவர இனங்களுக்கு ராசியாகப் பெறுகின்றது.

நட்சத்திரங்களின் சத்தை மற்ற கோள்கள் எடுத்தது ஒவ்வொரு தொகுதியும் தொகுப்புகளுக்கு எவ்வாறு…
1.அதாவது எல்லை வகுப்பு… மத்திய கோடு என்ற கோடு வரிசையில் வைத்து
2.இன்னென்ன பகுதிகளில் இன்னென்ன ராசிகள் இவ்வளவு வருகின்றது…
3.இன்னென்ன வகைகளில் இன்னன்ன நட்சத்திரங்களின் சக்திகளும் கோள்களின் சக்திகளும் இந்த அளவுக்குப் பெறும் தகுதியாகப் பரவுகின்றது என்று
4.கோள்களின் சக்தியும் நட்சத்திரங்கள் சக்தியும் அது கலந்து வந்து நமது பூமியில் தாவர இனங்களில் கலவை ஆகி
5.அதே சமயத்தில் பூமிக்குள் கலவைகளாகி பாறைகளும் மற்ற கல்களும் உருவாகி… பற்பல உலோகங்களாகி
6.உலோக சக்தியிலிருந்து பூமியிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஆவியாக வெளியாகி
7.அப்படி வெளிப்படும் உணர்வுகளை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
8.நமது பூமியில் எவ்வாறு அதனுடைய பெருக்கங்கள் வருகிறது…? என்ற நிலையே “ஆடி பதினெட்டு…”

இப்படி… பூமி முழுவதிலுமே எல்லா வகைகளிலும் இசைந்து ஆடி வருகின்றது.

ஆக… இயக்கத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று அசைந்து சென்று… ஒன்றுடன் ஒன்று மோதி… மோதலுக்குத் தக்க இசைகள் ஒவ்வொன்றும் மாறுகின்றது.

ஐக்கிய மனோபாவத்தை உருவாக்கத் தான் கூட்டுக் குடும்ப தியானம்

ஐக்கிய மனோபாவத்தை உருவாக்கத் தான் கூட்டுக் குடும்ப தியானம்

பெண்கள் நீங்கள் சமையல் செய்யும் பொழுதெல்லாம் உங்களுக்குச் சந்தர்ப்பம் உண்டு. நீங்கள் ஆத்ம சுத்தி செய்து
1.நான் செய்யும் சமயல் அனைத்தும் அதை உணவாக உட்கொள்வோர் அனைவருமே
2.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அவர்கள் புனித நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் உணவு பரிமாறுங்கள்.

பெண்களுக்கு இந்த நினைவலைகள் ஈர்ப்பலைகள் அதிகமாக உண்டு.

ஆகவே தாய்மார்கள் ஒவ்வொருவரும் இதை நினைவில் கொண்டு உங்களையறியாமல் துக்கப்படச் செய்யும் உணர்ச்சி வசப்படச் செய்யும் சங்கடப்படச் செய்யும் இந்த உணர்வுகளை மாய்க்க ஒரே வழி இதுதான்.

நீங்கள் சமையல் செய்யும் சமையல் அறையில் ஆத்ம சுத்தி செய்யுங்கள். உங்களுக்குத் துன்பமூட்டும் நிலைகள் இருந்தாலும் உங்கள் குடுமபத்திற்குள் துன்பமூட்டும் நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நினைவில் வைக்காதபடி, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஆத்ம சுத்தி செய்துவிட்டு சமையலைச் செய்யுங்கள். ஆகாரம் சாப்பிடும் பொழுதெல்லாம் இதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து
1.நம் வீட்டில் மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.நம் வீட்டில் இருப்போர் அனைவரும் மகரிஷியின் அருளாலே சொல்லாலும் செயலாலும் இனிமை பெறும் ஆற்றல் பெற வேண்டும் என்று
4.வீட்டிலிருந்து ஏங்கி எடுத்தாலே புவியின் ஈர்ப்பிற்குள் வீட்டிற்குள் உங்கள் மூச்சலைகள் படருகின்றது… சுவர்களிலே படர்கின்றது.

அங்கு எவ்வளவு பெரிய நிலைகள் இருந்தாலும் உங்கள் சொல்லாலே குடும்பத்தில் புனித நிலைகள பெறச் செய்ய உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு.

இந்த முறையில் செய்தீர்களென்றால் ஆச்சரியமான நிலைகளில் உங்கள் வீட்டிலே மகிழ்ச்சியின் நிலைகள் தோற்றுவிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

1.நீங்கள் இட்ட மூச்சலைகள் உங்களுக்குள் நல்ல நறுமணங்களாக வளர்ந்து எப்பொழுதும் மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்க்கலாம்.
2.உங்கள் வீட்டில் நல்ல நறுமணங்கள் அடிக்கடி சுழன்று வருவதை நீங்கள் பார்க்கலாம்.

யாம் தியானத்தைச் சொல்கிறோம் நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் போல நீங்களும் ஒவ்வொருவராகச் சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கும் இது பதிவாகின்றது. அவர்களுடைய உணர்வுகள் அங்கே பதிவாகி எண்ணத் தொடருடன் நல்லதாகின்றது.

இதைப் போன்று ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சரி… தியான வழி அன்பர்கள் கூட்டுத் தியானமிருக்கும் பொழுதும் சரி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்குச் சொல்லிப் பழக வேண்டும்.

1.வீட்டிலிருக்கும் நம் குழந்தைகளையும் தியானத்தை அவர்களைச் சொல்லச் சொல்லிப் பழக்க வேண்டும்…
2.அத்தகைய பக்குவத்திற்கு வரவேண்டும். தியானத்தை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
3.அப்படிச் சொல்லும்போது, கேட்போருடைய செவிகளிலும் அது பதிவாகின்றது.
3.இவருடைய (ஒவ்வொருவருடைய) நல்ல எண்ணம் மற்றவருக்குள் உருவாகும்போது அந்த நல்ல எண்ணம் இவர் மேல் அன்பைப் பாய்ச்சுகின்றது.

இப்படி நாம் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருக்கப்படும் பொழுது, ஒவ்வொரு மெம்பர்களும் இன்று ஒருவர் சொன்னாலும், நாளை ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும். நான்கு பேர் தான் என்று இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும் செய்து பழக வேண்டும்.

இதைப் போன்று ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்யும் பொழுதும் ஒருவரே செய்ய வேண்டுமென்பது அல்ல. ஒவ்வொருத்தரும் அதைச் செய்து பழக வேண்டும்.

1.இப்படி ஒருவருக்கொருவர் அந்தக் கலப்பு உணர்வினுடைய நிலைகளில் ஒன்று சேர்ந்தோமென்றால்
2.அந்தப் பிரியத்துடன் நாம் சொல்லப்படும் பொழுது அந்தப் பாசம் இங்கே வளர்கின்றது.
3.ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்வதற்கும் அந்த ஐக்கிய மனோபாவத்தின் நிலைகளும்
4.இந்தப் பற்றுதலுடன் ஒன்று சேர்வதற்கு இதைப் போல் நாம் முறைப்படி செய்ய வேண்டும்… அனவருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

State of current world

State of current world

Even after getting good children and living a balanced life there are bad atoms in the air around us which come and attack us and our good state changes.

1.At the present moment in quality of the poisonous atoms in the air predominate.
2.We have to save ourselves from their efforts of by meditation.

When we breathe the air some sick atoms enter into your body and to overcome that we have to take some medicines. On account of the change that take place in the climate and change that take in our body… there takes place a change in our state.

To get cured from these average man has to take some medicines.

1.Siddhas, Gnanies and sages absorb through their breath
2.the medicines they require in the form of atoms that are mixed in the air.

Since the average men cannot do this I am giving out through these lessons, my disciple and others, some of the medicines to be used by them.

Our elders have shown us ways by which we give some medicines to the child… right from the very day the child has come out of this world.

The people of today are in such a state that they have to take medicines as they take food. The impurities in the air does not allow vegetation to grow properly. We have to use artificial manures to grow our food grains.

The time in which we used natural manures have gone and we have to depend upon artificial manures to grow the food-grains required for our food. We eat the food grains grown with the use of artificial manures and the essence of these manures come and attack us.

1.Since it is not possible in these days to grow food grains with natural manures we are compelled to resort to artificial ones.
2.In order to overcome the changes that take place in our body as a result of taking the food grains produced by using artificial manures
3.we have to consume several new medicines.

Our elders have shown us the use of several herbs as medicines but we have
forgotten all of them. Today we are not in a position to have treatment by these herbs and our mentality also is not to do so.

In the present state man wants to get done everything in a haste and he has not got the patience to procure the various herbs shown to him by the Siddas. This is the evil that has made these herbs to disappear from this land.

1.Man who is proceeding fast in science to excel knowledge, meditation and godliness
2.knows only about the present time, does not know about his soul which is God.

If the man of today who is proceeding fast in artificial ways and has been a slave of it knows about the spiritual ways and meditation “he can know where his entire life rests…”

உன்னைப் போலவே ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும் ஈஸ்வரா…!

உன்னைப் போலவே ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும் ஈஸ்வரா…!

 

நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்… இந்த வியாபாரம் செய்தேன்… எத்தனையோ தொழில் செய்தேன் என்றெல்லாம் அடிக்கடி நாம் எண்ணுகிறோம். இருந்தாலும் அதிலே சிறு தடைப்பட்டால் என்ன நினைக்கின்றோம்…? வேதனையைத்தான் எண்ணுகின்றோம்.

நல்லதை நினைக்கின்றோம்… நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். பையனுக்கு நல்லது செய்கிறோம் சொன்னபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

கடன் கொடுக்கின்றோம்… கொடுத்தவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எந்த ஆசை வருகிறது…? வேதனை தான் வருகிறது… அதுவே இயக்குகிறது.

1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு.
2.நீ உயிராக இருக்கின்றாய்… ஒளியாக இருக்கின்றாய்… இருளை அகற்றுகின்றாய்… பொருளைக் காண செய்கின்றாய்.
3.நீ எப்படி உயிராக இருக்கின்றாயோ ஒளியாக இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக இருக்க வேண்டும்.
4.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தியாக இருக்க வேண்டும்
5.உன்னைப் போல் நான் ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும்.

நீ உயிராக இருக்கின்றாய் என் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக வேண்டும். அந்த ஒளியின் சரீரம் தான் நான் பெற வேண்டும்… கடைசி நிலையாக.

தட்டான் பூச்சி இருக்கின்றது பூவிலே முட்டையிடுகின்றது. முட்டையிட்ட பின் பட்டாம் பூச்சியாக வளர்கின்றது. பூச்சி வளர்ந்த பின் பூவைப் போன்றே மாறுகின்றது.

பட்டாம் பூச்சியாக ஆன பின் அதில் இருக்கும் தேனை உட்கொண்டு வேறு ஒரு இலை மீது உட்கார்கிறது. வெயில் காலத்தில் அந்த இலையிலே வெயில் அடித்த பின் இந்த வெயிலின் கடுமை அதற்குள் படுகின்றது. அதை அதிகமாகச் சுவாசிக்கின்றது.

1.சுவாசித்த பின் அதே உணர்வாகி அந்த இலையிலேயே ஒட்டிக் கொள்கின்றது… பார்க்கலாம்.
2.அந்த இலைகளுடன் ஒட்டியபின் இந்த உணர்வுகள் சேர்த்து அதனுடைய துடிப்பும் எல்லாம் சேர்ந்த பிற்பாடு அது ஒரு வண்டாக உருவாகின்றது.

அந்த உடலே பாம்பு சட்டையை உறித்த மாதிரி அதற்குள் இருந்தே கருவாகிறது. வேறு ஒரு பூச்சியாக மாறுகிறது.

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்துச் சேர்த்து
2.இந்த உடலில் உயிர் எப்படி ஒளியாக இருந்ததோ அதைப் போன்று நாமும் ஒளியாக ஆக வேண்டும்.

அதனால் தான் என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்து விடு ஈஸ்வரா என்று பாடுகிறோம். நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக வேண்டும்.

பூச்சிகளைக் குருவி கொத்தித் தின்றது என்றால் குருவின் உடலுக்குள் சென்று குருவியாக மாறுகின்றது.

உணவுக்காக நாம் ஆட்டின் மாமிசத்தை உட்கொண்டோம் என்றால் ஆட்டின் உணர்வு நமக்குள் வருகின்றது.. ஆட்டின் மணமே வரும். உடலை விட்டுச் சென்றால் ஆட்டின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். நாம் எதை எதைச் சாப்பிடுகின்றோமோ அதற்குத்தக்க அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இந்த உயிரின் வேலை அது தான்.நாம் சேர்க்கக்கூடிய உணர்வுக்குத் தக்கவாறு அடுத்த உடலை மாற்றிக் கொண்டே இருக்கும். ஆகவே நாம் எதை மாற்ற வேண்டும்…?

1.பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஒளியை நாம் பெற வேண்டும்
2.அந்த அருள் ஒளி பெற நமக்குப் பொறுமை தேவை.

உங்கள் வீட்டை மகாலட்சுமி குடிபுகும் வீடாக மாற்றுங்கள்

உங்கள் வீட்டை மகாலட்சுமி குடிபுகும் வீடாக மாற்றுங்கள்

எத்தனையோ பேர் நம் குருநாதருடன் பழகினார்கள். அவர் ரசமணி செய்து கொடுத்தால் சக்தி கிடைக்கும்…. அவரிடம் சித்துகள் பெற்றால் நானும் சக்தி பெறுவேன் என்று அந்த ஆசையில்தான் வந்தார்கள்.

அவர் யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்களெல்லாம் சாமி எங்கள் வீட்டில் தான் படுத்திருந்தார்… நான் சோறு போட்டேன்…! என்று சொல்லுவார்கள்.

அதே சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தால் மலம் இருந்து வைத்து விடுவார்… துணியைக் கிழித்து வைத்து விடுவார்…! என்று சொல்கிறவர்களும் உண்டு.

எங்கள் வீட்டிற்கு வந்தாலும் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரில் தவிடை எடுத்துப் போட்டு “அனைத்தும் அசிங்கமாயிடுச்சு…” என்று சொல்லி அனைத்தையும் கொட்டிவிடச் சொல்வார்.

குடத்தில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் ஊற்றிவிட்டு “வீடு அசிங்கமாக இருக்கு… அதைக் கழுவுகின்றேன்…” என்று சொல்வார். வீட்டிற்குள் சின்ன ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு எவனோ அசிங்கம் பண்ணி வைத்திருக்கான்… அதைக் கழுவ வேண்டும்…! என்பார்.

சாமி அம்மாவோட அம்மா… அதாவது எனது மாமியார் “பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டு இந்த மாதிரிச் செய்கின்றான்…” என்று சொல்லி என்னைத் திட்டும்.

ஒரு நாள் இங்கே வந்து… இந்தச் சொத்து போய்விடும்… இந்த வீடு போய்விடும்… எல்லாமே போய்விடும்…” என்று குருநாதர் சொல்கிறார்.

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அந்த அம்மா அருளாட ஆரம்பித்து விட்டது. உடம்பெல்லாம் எரிகிறது… தண்ணீர் ஊற்று…! என்று சொல்கிறது.

குருநாதர்… எனக்குத் தெரியாமல் எப்படி இந்தச் சாமி வருகிறது…? என்று சொல்கிறார். எரியுதா…? உனக்கு இன்னும் எரியும் பார்…! என்கின்றார். அக்கினியாகின்றது…!

அந்தக் கிழவனை போகச் சொல்…! என்கிறது அந்த அம்மா.

குருநாதர் என்னிடம்… தண்ணீரை எடுத்து அடி…! என்றார். அடித்தவுடன் கீழே விழுந்துவிட்டது. அது உடலில் இருந்த பேய் போய்விட்டது .

1.கழுவிவிட வேண்டும் என்று குருநாதர் சொன்ன நிலைகள்… இந்த வீட்டில் அந்த அம்மா பாதங்களால் பதிவானது.
2.சாமி அம்மாவோட சின்னம்மா அது சாபமிட்ட அலைகள் இங்கு இருக்கின்றது…!
3.அதனால்தான் தண்ணீரை ஊற்றிக் கழுவச் சொன்னேன் என்றார் குருதேவர். துணியைப் போட்டுத் தேய்க்கின்றார்,

எல்லாம் போய்விட்டது என்றேன்.

உன் கண்களுக்குத் தெரியவில்லை நீ முட்டாள்டா…! என்கிறார். உற்றுப் பார்…! என்றார்.
1.பார்க்கும் பொழுது அந்தம்மா திட்டியது பேசியது எல்லாம்
2.டேப் ரிக்கார்டரில் பதிவான மாதிரிச் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

வீட்டில் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று நாம் நினைக்கிறோம்.
1.அவர்கள் உடலில் எந்தெந்த எண்ணங்களை வேகமாக எண்ணினார்களோ
2.பூமியில் இருக்கின்ற காந்தம் அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.

சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுகாரர் நம் வீட்டிற்குள் வந்து… குடும்பக் கஷ்டங்களைப் பேசினால் நிம்மதியாக இருக்கின்றது என்று சொல்லிப் பேசிக் கொண்டிருப்பார்.

அவர் எந்த இடத்தில் உட்கார்ந்து பேசினாரோ அந்த இடத்தில் பதிவாகி விடும். அந்த அலைகள் எல்லாம் சேர்ந்துவிடும்.
1.நிம்மதியாக இருந்த வீட்டிற்குள் அடுத்தாற்போல் சண்டையும் சச்சரவுமாக வந்து விடும்.
2.நாங்கள் என்ன பாவம் செய்தோமோ…? என்பார்கள்.

காரணம்… இரண்டு பேரும் கலந்து உறவாடிய உணர்வுகள் சுவரிலும் பதிவாகி விடுகின்றது. சங்கடமாக இருந்தால் வேறு எங்கும் போக மாட்டார்கள்… சங்கடமாக எங்கு பேசினார்களோ அங்கு போய்த் தான் உட்காருவார்கள்.

சாதரணமாக சுற்றுலா மையங்களில் பார்த்தால் சில பேர் ஒதுங்கித் தனியாகப் போவார்கள். உட்காருவதற்கே இடமிருக்காத இடங்களில் ஒற்றைக் காலில் நிற்பார்கள். ஊரில் இருக்கின்ற குறைகளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவை அனைத்தும் அந்த இடங்களில் பதிவாகும்.

குறைகளைப் பேசப் பேச அவர்கள் தொழில் நலிந்துவிடும். உலகத்தில் எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள்… ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்… நம் தொழில் மட்டும் நலிந்து கொண்டே இருக்கின்றது…! என்று சொல்வார்கள்.

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் செல்லும் பொழுது பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டு அந்த உணர்வாலே நல்லவரின் எண்ணங்களையும் மாற்றி அது நம் குடும்பத்திற்குள் ஊடுருவி நமக்குள் பாய்ச்சும் பொழுது தீய வினைகளை உண்டாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றியபின் இந்த உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது சுவர்களிலும் பதிவு செய்து கொள்ளும்.

அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பூமியிலேயும் பதிந்து விடுகின்றது. அப்படிப் பதிந்தபின்
1.நம் உடலிலிருந்து வரும் இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு
2.அந்தக் கடுகடுப்பும் வெறுப்பான எண்ணங்களையும் ஒருவருக்கொருவர் தோற்றுவித்து விடுகிறோம்.
3.அதனாலே நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைப்பட்டு வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் குடிகொண்டு இருப்போம்.

ஆகவே… நாம் எதற்குள்ளே இருக்கின்றோம்…? இந்த விஷத்தின் அறைக்குள்ளே நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வை நாம் சுவாசித்து நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.

நம் உடலுக்குள்ளும் சேருகின்றது… நம் உடலுக்குள்ளும் இயக்கி விடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமென்றால்
1.வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுத் தியானமிருந்து
2.உங்களின் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்யுங்கள்.
3.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை வீட்டிற்குள் பாய்ச்சிச் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபடுங்கள்.

Pregnancy should be blessed spiritually

Pregnancy should be blessed spiritually

Kamban is a famous tamil poet. The saying is, that a post for tying a bull in Kamban’s house will sing poems.
1.The meaning is that all things in his house will have the influence
2.and take the same kind of breath that he was taking when he wrote the poems.
3.Whatever thought waves are in a house the same will have influence on the persons and the actions they perform.

This is applicable to all the houses.

The state of the members in a house will be as per the thought waves filled in the house. Some of the children born in a family are intelligent while some others are dull.

All the children are not born as per the effects of their life in their previous births. From the time the world started from Kalki Yuga the state of life-atoms in the beginning and the current life atoms have changed several crores of times.

For those life-atoms that have come in the new state how can their states in their previous births continue…? New life-atoms are being formed every day.

I have already told that when a person dies and the corpse is buried in the ground, several life-atoms are formed out of that dead body and they are circulating in the air.

When such life atoms enter into the wombs of mothers they do not have the working experience of thoughts and acts.
1.These cause abortions and undeveloped babies when they are born.
2.These life-atoms in their eagerness to be born, enter into any womb.

All the life-atoms formed out of the dead body of a human being take the same breath as that of the person and are born as human beings.

The same is applicable to animals also.

1.The life atoms that have not had proper growth and have taken human birth in a hurry are responsible for
2.abortions, pre-mature birth and undeveloped babies.

When such atoms enter into the wombs of mothers and grow, if the state of the mother is one of calmness without any agitation and her health is also normal, the life-atom takes the breath of the mother and other people in that family, get their intelligence and is born in a good State.

Some others when they are in the mother’s womb get the thought of the mother and by this they get into them some of the sick atoms of the mother enter into them when they are born.

1.To get good intelligent children
2.every mother when she is pregnant should cherish good thoughts, love and desire for the child and live with peace of mind.
3.Meditate on God during pregnancy.

God does not come and give the children. If we train ourselves in the right way we will get good children. So the pregnant mother should meditate on God praying for intelligent children and they will be blessed accordingly.

எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!

எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!

 

தீமையை விளைவிக்கும் சக்திகள் உங்களை அடிபணியும் நிலையாக உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்றே ஆசீர்வதிக்கின்றேன்.

உங்கள் தாய் தந்தையரைத் தாள் பணிந்து அவருடைய அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.என்றைக்கும் உங்களுக்குக் குரு அவர்களே தெய்வமும் அவர்களே தாயின் உயிரே கடவுள்
2.ஒருக்கிணைந்து அவர்களை அடிபணிந்தால் உங்களுக்கு வழிகாட்டிய உணர்வின் தன்மை அவர்கள் சொல்லும் வாக்கை நாம் ஏற்றிடும் நிலையும்
3.நம்மைக் காத்திடும் உணர்வுகள் பதிவு செய்தது ஓங்கி வளர்ந்து தீமைகளை அடிபணியச் செய்து
4.மெய் உணர்வைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.

குருவிடம் கேட்பதெல்லாம்… உபதேசித்த உணர்வுகள் எனக்குள் ஓங்கி வளர்ந்து என்னை அறியாது இருள் சூழ்ந்த நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் அந்தத் தீமைகள் அடிபணிந்து
1.மெய் உணர்வைக் காணும் நிலையாகக் குரு அருள் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்து
2.நான் ஆசி கொடுக்கும் போது நீங்கள் என்னை நேர்முகமாகப் பார்ப்பதுதான் முறை.

கொடுக்கும் அருள் வாக்கின் நிலையை “நேரடியாகக் கண்கொண்டு பார்த்தால்…” கண்ணின் காந்தப் புலன் என்னைப் படம் எடுத்தாலும் கண்ணின் கருவிழி அதனுடன் இணைந்த காந்தப்புலன் யாம் வெளிப்படுத்தும் அலைகளைக் கவர்ந்து உங்களுக்குள் சுவாசிக்கச் செய்து அருள் மகரிஷிகளின் சக்தியைப் பெறச் செய்யும்.

இந்த முறைப்படி தான் நீங்கள் ஆசி பெற வேண்டும்.

ஆனால் பெரியவரை நாம் வணங்காது எப்படி இருப்பது…? என்ற தவறான வழிகள் காட்டப்பட்டதை விடாது பிடித்துக் கொண்டுள்ளார்கள். பாத நமஸ்காரம் செய்யத் தான் வருகிறார்கள். அதை விடுத்துவிடுங்கள்.

யாம் உபதேசம் கொடுக்கும் பொழுதெல்லாம்
1.யாம் கொடுக்கும் அந்த அருள் சக்திகளை
2.கண் கொண்டு பாய்ச்சும் உணர்வலைகளை
3.உபதேச வாயிலாகச் சொல்லாகச் சொல்வதை நீங்கள் உற்று நோக்கி
4.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
5.கூர்ந்து கவனித்து எடுத்தால் தான் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

ஆகவே தயவு செய்து அதன் வழி செயல்படுத்துங்கள்.

யாம் கொடுக்கும் வாக்குகள் அந்தச் சக்தி வாய்ந்த எண்ண வித்தாக விளைந்து… உங்கள் எண்ணத்தால் தீமைகளை அகற்றி… உங்களுக்குள் நன்மை பெறும் நிலையும்… அருள் ஞானம் பெறும் தகுதியையும் பெறுகின்றீர்கள்.

அந்தத் தகுதியை நீங்கள் இழந்து விடக்கூடாது என்பதற்குத் தான் படிப்படியாகச் சொல்கின்றேன்.

உபதேசிக்கும்போது அதை ஏங்கிப் பெற வேண்டும் என்ற நினைவுடன் வரும் பொழுது தான்
1.என்னுடைய ஆசீர்வாதம் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்து உயர்ந்த ஆற்றலாகப் பெருகும்
2.மறவாது நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று பிராத்தித்துக் கொள்கின்றேன்.