“உணர்வு… உணர்வு…” என்று எண்ணிலடங்காத தடவை சொல்கிறோம்… அதனின் சூட்சமம்

“உணர்வு… உணர்வு…” என்று எண்ணிலடங்காத தடவை சொல்கிறோம்… அதனின் சூட்சமம்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டினை உற்பத்தி செய்கிறோம் என்றால் அதிலே எத்தகைய நிலைகளை நாம் இணைக்கின்றோமோ…
1.வண்ண விளக்குகள் என்றால் அந்தக் கலர் வெளிச்சம் வருகின்றது.
2.மற்ற கருவிகளுக்குள் எதிலே இணைத்து இயக்குகின்றோமோ அதற்குத் தக்கவாறு இயந்திரங்கள் இயங்குகின்றது.

இதைப் போன்றது தான் நமது உயிரின் வேலையும்.

இயக்கச் சக்தி கொண்டு கரண்டை உற்பத்தி செய்தாலும் நாம் எண்ணிய உணர்வின் சத்தை உயிர் தனக்குள் எடுத்து ஜீவ அணுக்களாக அதை உருவாக்கும் தன்மை வருகின்றது.

இவ்வாறு நமது உயிர் நம் உடலுக்குள் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிலையில்
1.நம்மை அறியாதபடி சூட்சுமத்தில் மறைந்திருக்கும் நிலைகளைக் கண் கொண்டு பார்க்க முடிவதில்லை.
2.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… நாம் சுவாசித்து உயிரிலே உராயப்படும் பொழுது தான் அந்த உணர்வின் தன்மையை “உடலில் காண்பிக்கின்றது…”

கண் கொண்டு திடப்பொருளைக் காணுகின்றோம்… அதனை அறிகின்றோம். ஆனால் கண்ணின் காந்தப்புலனறிவோ… ஒரு மனிதன் தவறு செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் யாரை உற்று நோக்குகின்றோமோ அவனின்று வெளிப்படும் உணர்வின் தன்மையை நம்மை நுகரச் செய்கின்றது.

1.நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் அகக்கண்ணாக உடலுக்குள் பரப்பி நம்மை அறியச் செய்கின்றது.
2.கண்ணால் திடப்பொருளைக் கண்டாலும்… உணர்வால் உடலுக்குள் அது சென்று அதை உணரும் தன்மை வருகின்றது.

அத்தகைய உணரும் தன்மை வந்தாலும் நாம் சுவாசித்த உணர்வின் தன்மை நம் உயிர் அதை இயக்கியே காட்டுகின்றது. இயக்கிய உணர்வின் தன்மை உடலில் அதை இணைத்து விடுகின்றது.

இவ்வாறு தான்
1.சூட்சமத்தில் இருப்பதைப் பார்க்க முடியவில்லை என்றாலும்
2.உடலாக திடமான பின்… அதைக் காண முடிகின்றது.

எப்படி…?

இன்று நல்ல மனிதர்களாக நாம் காணுகின்றோம் அடிக்கடி வேதனை சோகம் என்று வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் பாய்ந்து… அந்த உணர்வின் இயக்கத்தால் அவர்கள் உடல்கள் சோர்வடைவதும்… நோயால் வேதனைப்படுவதையும் நாம் காணுகின்றோம்.

இது திடப்பொருளில் காணும் நிலைகள் தான். அதாவது
1.வேதனையான உணர்வு என்பது கண்ணுக்குத் தெரியாத சூட்சமம் என்றாலும்
2.உடலுக்குள் விளைந்த பின் நோயாக அதைக் காண முடிகிறது.

ஒரு சிலர் நன்றாக இருப்பார்கள்… உடல் நலமாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தான் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் அதிகரிக்க தான் சுவாசித்த நிலைகள் அவர் உடலிலே நிம்மதியற்ற நிலைகளாக அது ஓடிக்கொண்டே இருக்கும்.

காரணம்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எந்த வித்தின் தன்மையாக அடைகின்றதோ இந்த வேதனை என்ற நஞ்சு கொண்ட வித்து
1.குழம்பைச் சீராக வைத்து அதில் நஞ்சான நிலைகள் கலந்தால் அதனின் சுவைகள் மறைந்து விடுவது போல
2.நம் உடலில் எத்தனையோ உணர்வுகள் இந்த எண்ணங்களாகப் பதியச் செய்து அது உடலாக சதாசிவமாக்கி கொண்டிருக்கும் இந்த நிலையில்
3.எந்தெந்த குணங்கள் எண்ணங்கள் அதிகரிக்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாக முன் நிற்கின்றது.
4.காரணம் அது எல்லா குணத்தையும் அடைக்கிடும் நிலைகள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply