ஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் கண்களுக்குக் கொடுக்கின்றோம்…!

ஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் கண்களுக்குக் கொடுக்கின்றோம்…!

 

இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் மூலம் மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டறிகின்றீர்கள். கூர்ந்து கவனித்தால் இது உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

ஆக… விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை
2.உங்கள் கண்கள் மூலம் நுகர்ந்தெடுக்கும் அந்த உணர்வின் சக்தியாக
3.உங்கள் கண்களை ஆற்றல்மிக்க உணர்வின் ஈர்ப்பு சக்தியாக வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிப்பது.

இந்த உபதேசத்தை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ பதிவாக்குகின்றீர்களோ… அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அப்படிப் பெருகச் செய்து உங்கள் எண்ணத்தால் விண்ணை நோக்கி ஏகும் பொழுது… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் எளிதில் சுவாசிக்க முடியும். அதன் மூலம் உங்களை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்திட முடியும்.

மனிதர்களுக்குள் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிக்கை வாயிலாகப் படிக்கப்படும் போது ஒவ்வொரு நாளும் எங்கெங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டறிகின்றோம்.

நம் எண்ணத்தை அதிலே கூர்ந்து செலுத்தி விட்டால்…
1.எங்கோ விபத்தான நிலைகள் அதனின் உணர்வின் நிலைகளைப் படித்தறியப்படும் போது
2.அதிர்ச்சி… பயம்… வேதனை… இது போன்ற உணர்வுகள் உடலிலே விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள என்று நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கிவிடுகின்றது.

இதுகள் எல்லாம்…
1.சாதாரண ஆண்டென்னாவை உபயோகப்படுத்துவது போல் தான்
2.எதைப் பத்திரிக்கையில் படித்தோமோ… டி.வி.யில் பார்த்தோமோ அந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி
3.அதை நாம் மீண்டும் எண்ணும் போது நம் எண்ணத்தால் படித்து நுகர்ந்து விடுகின்றோம்.

ஆனாலும் நாம் படித்த… பார்த்த அந்த உணர்வலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
1.மீண்டும் (தினசரி) எண்ணும் போது நமக்குள் பதிவான அதே அலைகள் காற்றிலிருந்து குவித்து நம்மை உணரச் செய்கின்றது
2.அதனின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
3.எந்த வேதனைப் பட்டோமோ… எப்படி ஆத்திரப்பட்டோமோ… அதுவே நமக்குள் விளையும் தருணம் வந்து விடுகின்றது
4.உடலில் விளைந்தால் கடும் நோயாக மாறும் சந்தர்ப்பமும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து இதைத் துடைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை எல்லாம் பருகினேன்.
2.அவரைக் கூர்ந்து கவனிக்கும் போது அதனின் உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக எனக்குள் பதிவானது.
3.அவரை நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர்ந்து
4.அதனின் ஆற்றலை எனக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டேன்.

அப்படிப் பெருக்கிய ஆற்றலின் துணை கொண்டு தான் நீங்கள் துயரப்பட்டு வரும் போது “உங்கள் துன்பங்கள் நீங்கிப் போகும்…” என்று வாக்கால் சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கூறுவீர்கள் என்றால் உங்கள் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையத் தொடங்கும்.

1.ஒவ்வொரு நிமிடமும் துன்புறும் உணர்வுகளை எனக்குள் பாய்ச்சி
2.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வின் தன்மையை நீக்குவதற்காக
3.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்து
4.அதனின் அனுபவபூர்வமான செயலைத் தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்.

அந்தப் பக்குவத்தின் தன்மை கொண்டு தான் இருபது வருட காலம் அனுபவரீதியாக உலகம் சுற்றி வந்து… மனிதர்கள் நல்லவராக இருக்கின்றனர் ஆனால் நல்லதைக் காக்க முடியாது சந்தர்ப்பத்தால் எவ்வாறு அவதிப்படுகின்றனர்…? என்று மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்தார்.

அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகிறது….? அந்த நல்லதை எப்படி மீட்டிட வேண்டும்…? என்று அதன் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற ஆற்றல் மிக்க உணர்வுகளைத் தான் உங்களையும் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு)… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மூலச்சக்கரத்தைப் பற்றி ஈஸ்வரபபட்டர் சொன்னது

மூலச்சக்கரத்தைப் பற்றி ஈஸ்வரபபட்டர் சொன்னது

 

மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி… குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.

1.தீய எண்ணங்களின் குணங்களினாலும்
2.நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும்
3.வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில்
4.மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!

எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.

அது போன்ற தீய குணங்களின் செயலைக் கோலமாமகரிஷி மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்று தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.

1.அந்த உயர் ஞான வளர்ப்பினை… மூகமாகச் செயல்படும் திறத்தை…
2.அந்த இரகசியத்தை
3.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
4.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.

கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டினாரப்பா..!

இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!

பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து… தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டு… அதே நிலை தான் அங்கும் உள்ளது என்று உணர்ந்து கொண்டு… தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலை உயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.

சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.

அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

பின் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் இருக்க அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.

மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!

அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.

மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.

லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

ஞான வழியிலும் ஆண் பெண் இணைப்பு சீராக இருந்தால் தான் உயர் ஞானம் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

ஞான வழியிலும் ஆண் பெண் இணைப்பு சீராக இருந்தால் தான் உயர் ஞானம் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

 

தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீமையான எண்ணச் செயலுக்குச் சென்றிடாதபடி ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திக் கொள்ள பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே தியானத்தின் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.

அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி…
1.பாசம் கொண்ட செயல் மூலம்… உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப் படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”

தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.

அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.

ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!

அதாவது
1.POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!

பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?

தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால் போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…” மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.

அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் தாய் சக்தியையும் இழந்து அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான். இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.

ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெறவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.

ஆனால் உயர் நிலை பெறவேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெறவேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.

பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.

சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.

ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால்
1.மௌனம் கொண்டு… ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.உயர் ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது

 

நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. நாம் எதைக் கற்றாலும் உலகை அறிந்து கொள்ள உதவும்… இந்த ஆறாவது அறிவு அல்ல…! மெய் ஞானத்தின் உணர்வு கொண்டு தான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும்.

1.கற்றுணர்ந்தோர் அனைவரும் கரையேறுவதில்லை
2.அவர்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலையும் இல்லை.
3.கற்றவர்கள் பெரும்பகுதி மனக்குழப்பமும் சிந்தனை குறைந்தும் உள்ளனர்.

உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பொருள் தேடும் நிலைகளுக்குக் கற்ற கல்வியைப் பயன்படுத்துகின்றார்களே தவிர அந்தக் கல்வியின் நிலைகளில் வாழும் வாழ்க்கையைப் பண்படுத்த முடியவில்லை.

தேடிய செல்வம் சிறிதாக இருப்பினும் அதைப் பக்குவத்துடன் காத்து… பகைமை உணர்வு உடலுக்குள் சேராது அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.ஆக… வெறும் கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
2.கல்வி கற்றாலும் இந்த மெய் ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.

மனித உடலை உருவாக்கியது உயிர் தான். மனிதான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் உயிர் தான். இந்த ஆறாவது அறிவின் தன்மையால் தான் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக நாம் வளர்க்கும் நிலை பெற முடியும்.

ஆகவே இதை நாம் சீராகப் பயன்படுத்துவோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் ஏங்கித் தியானியுங்கள்.

குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெறவேண்டும்,.. குழந்தைகள் ஞானிகளாக வளர வேண்டும்… விவசாயம் செழிக்க வேண்டும்… வியாபாரம் பெருகி எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்…! என்று நீங்கள் இப்படித் தியானித்துப் பாருங்கள்.

1.அமர்ந்த இடத்தில் வீட்டிலிருந்தே இவ்வாறு தியானித்து
2.எல்லா இடங்களுக்கும் அந்த அருள் சக்திகளைப் பரவச் செய்ய முடியும்… அந்த அலைகள் அங்கே படரும்
3.அதை நுகரும் மற்றவர்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் வரும்.
4.உங்கள் வாழ்க்கையை உயர்த்தவும் முடியும்.
5.இருளை அகற்றும் நிலையும் பண்படும் உணர்வுகளும் நமக்குள் ஒன்றுபட்டு வாழும் அணுக்களும் நம் உடலில் வளரும்.

ஆகவே… இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நடசத்திரத்துடன் இணைந்து வாழ முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

1.எந்த நிமிடம்… எந்த நிலைகள்… எதுவாக இருந்தாலும்… உடலை விட்டு உயிர் சென்றால்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டியிருக்கும்.

ஆகவே அதிலிருந்து விடுபட்டு அருள் உணர்வைப் பெருக்கி அருள் வாழ்க்கை வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற்று என்றுமே ஏகாந்த நிலையை அடைந்திட “எம்முடைய அருளாசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்….”

அண்ணாமலையான் தீபம்

அண்ணாமலையான் தீபம்

 

கார்த்திகை தீபம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காட்டினார்கள் ஞானிகள். அனைத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய நிலைகள் மனிதனின் ஆறாவது அறிவு.

ஒரு விளக்கை ஏற்றினால் அந்த விளக்கின் ஒளி கொண்டு மற்ற பொருள்களைப் பார்க்க நேர்கின்றது… தெரிய முடிகின்றது. அதைப்போல ஆறாவது அறிவால் நாம் தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.

இதை அண்ணாமலை தீபம் என்று சொல்வார்கள்…! அண்ணாமலை தீபம் என்றால்…
1.நமது உடல் மலையாக இருக்கின்றது
2.நம் உயிர் இருக்கும் இடம் ஒளியாக இருக்கின்றது
3.இந்தச் சுடரின் ஒளியைப் போல நம் உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்கி ஒளியாக சுடராக மாற்றிடும்
4.அதை நினைவுபடுத்தும் நாள் தான் இந்த கார்த்திகை ஜோதியின் தன்மைகள்.

அன்றைய தினம் நம் வீட்டு முச்சந்தியில் விளக்குகளைக் கொளுத்தி வைப்போம். எல்லா நாளும் அல்லாது வீட்டு முகப்பில் ஏன் விளக்குகளை வைக்கின்றோம்…?

முகப்பில் ஒளி என்ற உணர்வை வைத்து இருளை அகற்றிடும் தன்மையாக மெய் என்ற உணர்வை நமக்குள் அறிந்துணர்ந்து… எது மெய்…? எது பொய்…? என்று வெளிச்சத்தின் மூலமாக நாம் காண முடிகின்றது.

நமக்குள் எந்தத் தீமைகளும் புகாது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று காட்டுவதற்குத்தான் வீட்டு வாசலின் முகப்பில் விளக்கை வைப்பது.

அந்த சாஸ்திர வழக்கப்படி மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் நாள் தான் இது. நாம் சுவாசிக்கும் உணர்வு (மூக்கிற்கு நேராக உயிர்) முகப்பில் இருக்கின்றது. தெளிவான உணர்வின் தன்மையை அருள் ஒளி என்ற உணர்வை நாம் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்த்து இருளை அகற்றும் தனக்குள் தெளிந்த உணர்வு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்.

இந்த மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்…
1.நாம் சுவாசிக்கும் முகப்பிலே உயிரிலே பட்டுத்தான் உண்மையின் உணர்வை நாம் அறிகின்றோம்.
2.அங்கே ஒளி என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது பொருளைக் காணும் தன்மைகள் வருகின்றது.

ஆகவே தான் இதை நினைவுபடுத்தும் நாளாக “அண்ணாமலை தீபம்” என்று காட்டுகின்றனர். அண்ணாமலையான் என்றால் நம் உயிர் உடலின் உச்சியிலிருந்து கொண்டு அந்த ஒளியின் தன்மையாக நம்மை இயக்குகிறான்.

உடல் சிவம் என்றாலும் சிவனின் ரூபத்தைக் காட்டி அண்ணாமலையான் என்று உயிரான ஈசனைக் காட்டி… உடலை (சிவத்தை) இயக்குகிறது என்று காட்டுகின்றனர்.

ஆனாலும் நாம் சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு எதன் உணர்வைத் தெரிகின்றோமோ அதன் ஒளியின் தன்மை கொண்டு தான் நாம் இயங்குகின்றோம்.

1.கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றும் போது ஒளியின் உணர்வாக நம் உடலே ஒளியாகின்றது
3.நம் சொல்லும் ஒளியாகின்றது… செயலும் ஒளியாகின்றது.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் அண்ணாமலையான் தீபம்.

ஆறாவது அறிவு கொண்டு தெரிந்து… தெளிந்து… நாம் வாழும் இந்த மனித உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை எடுத்து நம் ஆன்மாவை அது மறைத்திடாது அருள் ஒளியைப் பெருக்க வேண்டும்.

உதாரணமாக… தான் சேமிக்கும் நஞ்சினை ஒளியாக மாற்றி வைரங்களாக மாற்றுகின்றது நாகம். விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது அது நாகரத்தினமாக மாறுகின்றது.

அதைப் போன்று தான்…
1.மனிதனின் உணர்வின் தன்மைகளை அணுக்களாக்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
2.மற்றொன்றில் இருக்கும் இருளை மாய்த்து அந்த உணர்ச்சிகளை மாற்றி ஒளி என்ற நிலைகளாகப் பிரகாசிக்கச் செய்யும்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதப்படும் பொழுது “ஒளி” என்ற நிலைகள் வருகின்றது. ஒரு உணர்வுடன் ஒரு உணர்வு மோதும் பொழுது “வெப்பமாகி” உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.

எதன் வழி கொண்டு வருகின்றதோ அதற்குத்தக்க இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றது. இப்படித்தான் உயிர் நம்மை இயக்குகின்றது. நாம் நுகரும் உணர்வை வைத்துத்தான் நம் உயிர் ஆட்சி புரிகின்றது.

ஆகவே இருளை அகற்றி நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை ஏங்கிப் பெறுவோம்.
1.நாம் தெளிந்த மனம் பெறுவோம்… தெளிவான வாழ்க்கை வாழ்வோம்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே இருப்போம்.

புருவ மத்தியில் ஓடும் நாடியின் மூலம் தீமைகளை மாற்றிக் கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்

புருவ மத்தியில் ஓடும் நாடியின் மூலம் தீமைகளை மாற்றிக் கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்

 

ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?

1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லும்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!

மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொள்ளும் பிரித்து அறியும் செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.

அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்துவதைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.

தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீமையான எண்ணத்தின் பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.

இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!

1.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
2.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு “ஃ”
3.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
4.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்

பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனிதச் சரீரம்” என்று உணர்த்தி இந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதத்தை அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.

உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குல சிந்தனையை சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”

அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!