நம் உடலுக்குள் இருக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…?

நம் உடலுக்குள் இருக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…?

 

உதாரணமாக பெரும் கொண்ட மிளகாயைப் பார்க்கலாம்…. செக்கச்செவேல் என்று இருக்கும். ஆனால் அதற்குள் விஷத்தின் தன்மை கம்மியாக இருக்கும். இந்த மிளகாய்க்குக் காரம் இருக்காது.

அதே சமயத்தில் இன்னொரு மிளகாயை எடுத்துக் கொண்டால் வாயில் வைத்தவுடன் சுரீர் என்று உடல் முழுவதும் ஊடுருவும். அதில் விஷம் அதிகமாக இருக்கும். அந்த மணத்தை வேகமாகத் தூக்கிச் சென்று அதை இயக்கவல்ல ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொன்றிலும்.

நாம் சாதாரணமாக சாந்த குணத்தை எண்ணுகின்றோம். அதிலே விஷம் குறைவு. கோபமான குணத்தை எண்ணுகின்றோம். அதிலே விஷத்தின் ஆற்றல் அதிகம்.

பயத்தை அதிகமாக எடுக்கின்றோம். அதில் விஷம் அதிகம். அதிகமாக எண்ணி அதைச் சுவாசிக்கும் போது… இந்த விஷத்தை நாம் சுவாசித்துத் தான் உடலை வேகமாக இயக்கச் செய்து ஆபத்திலிருந்து நம்மைக் காக்கச் செய்கின்றது.

ஆபத்திலிருந்து காத்தாலும் உடலில் சக்தி கொண்டு அதிகமாக இயக்கும் போது நாம் எடுக்கும் குணத்தை ஈர்க்கும் நிலைகள் நம் உடலில் இருக்கும் காந்தத்தின் சக்தி அது பலவீனம் அடைகின்றது.

உதாரணமாக மோட்டாரில் மேக்னெட் இருக்கின்றது மோட்டாரை வைத்துச் சுழலச் செய்து தான் ரைஸ் மில்லை இயக்குகின்றார்கள். அதிலே நெல்லை அதிகமாகப் போட்டால் அரைக்கும் திறன் குறைகின்றது.

அப்போது மோட்டார் சூடாகின்றது… சூடாகும் பொழுது அதில் இருக்கக்கூடிய காந்த சக்தி குறைகின்றது. காந்தம் குறைந்து விட்டால் அடுத்த சமயம் சிறிதளவு நெல்லைப் போட்டாலே அது அரைக்கும் திறன் குறைகின்றது.

இதைப் போன்று ஆற்றல்மிக்க விஷத்தை முறியடிக்கும் உணர்வின் சத்து நமக்குள் இருந்தாலும்… அடிக்கடி கோபமும் வெறுப்பும் பயமும் அதிகமானால் நமக்குள் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி குறைந்து நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் இருக்கும் விஷத்த்தின் சத்தை வடிக்கும் திறன் இழக்கப்படும் பொழுது… நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் அது கலந்து விடுகின்றது.

பாலின் சத்து ஆற்றல் மிக்கதாக ஊட்டினாலும் சுவைமிக்க சத்தான ஆகாரத்தை நாம் சாப்பிட்டாலும்… சாப்பிடும் ஆகாரத்திற்குள் ஒரு துளி விஷம் தெரியாமல் பட்டுவிட்டால் அந்த விஷம் அதிகமானால் உட்கொள்வோரை மாய்த்துவிடும்.

அது போல
1.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் காந்தப்புலன் குறைக்கப்படும்போது
2.விஷத்தை வடிக்கும் திறன் இழந்து விட்டால்
3.சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் மனிதனாக இயக்கச் செய்யும் அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல்மிக்க நிலைகள் அனைத்தும் குறைந்து
4.ஆரம்ப நிலைகளில் மிருகங்கள் எப்படி விஷத்தை உடலாக மாற்றிக் கொண்டதோ அது போல்
5.நம் நல்ல குணங்களுக்குள் விஷங்கள் புகுந்து விடும்… அந்த விஷம் ஆக்கிரமித்து விடும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.