உயிர் அணுக்களின் வீரியத்தைக் கூட்டி “உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்கும் செயல்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

humanbody soul

உயிர் அணுக்களின் வீரியத்தைக் கூட்டி “உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்கும் செயல்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அண்டத்தின் தன்மையை நாம் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்

அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”

தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!

அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.

1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.

சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.

ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.

ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்காத் ஒளித் தன்மையைப் பெற முடியும்.

 

கோபப்பட்டால் உடனே முகம் கறுத்து விடுகின்றது… ஏன்…?

smell and breathing

கோபப்பட்டால் உடனே முகம் கறுத்து விடுகின்றது… ஏன்…?

 

எத்தனையோ கோடி உணார்வுகள் சேர்த்துத் தான் ஒரு நாதமாகின்றது. ஆகவே அணுவின் தன்மை பல கோடி ஆனாலும் இந்த உணர்வின் தன்மைகள் இணைத்து இணைத்து பல கோடி ஆகின்றது கோடி…கோடி… என்று…

இந்தக் “கோடி” என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான்
1.ஒரு சொல் எவ்வாறு வருகின்றது…?
2.அதனுடைய மணம் எவ்வாறு வருகின்றது…?
3.அதனுடைய குணம் எவ்வாறு இயக்குகின்றது…?

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு செடியை எடுத்துக் கொண்டால்
1.அதனுடைய “மணம்” வேறு.
2.அதை நாம் சுவையாகச் சுவைக்கப்படும்போது “குணம்” வேறு.
3.அதுவே நம்முடைய எண்ணத்துடன் சேர்த்து “உணர்வாக” இயக்கும் நிலைகள் வேறு.
4.அதுவே உடலாக இயக்கி உணர்வாக வரும்போது “அமுங்கும்” நிலை வேறு.
5.ஒரு காரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் “கோபமே” அதிகமாகச் சேரும்
6.அதே சமயத்தில் நம்மைப் பார்ப்போருக்கும் உடலில் “எரிச்சல்” வரும்.

இதைப் போல பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது ஒருத்தரைப் பார்த்தவுடனே வெறுப்பு வருகின்றது. அவருடைய மணத்தை நாம் சுவாசிக்கும்போது
1.அந்த உணர்வுகள் நம்மை அறியச் செய்கின்றது
2.இந்த உணர்வின் சத்து சொல்லாக வெளிப்படுகின்றது
3.”அயோக்கியன்” என்று. அந்த உணர்வின் சொல்லாக நாதங்களாக மாறும்.

அதாவது…
1.நாம் நுகர்ந்து பார்க்கும்போது “மணமாகின்றது…”
2.உயிரோடு ஒன்றி இயக்கப்படும்போது “உணர்வாகின்றது..”..
3.இது சொல்லுடன் இணைத்து வரப்படும்பொழுது சுருதி மாறுகின்றது.

இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் என்றால் அதிலே இனிமையானவனைப் பார்க்கப்படும்பொழுது வாடாக் கண்ணு…! என்ற சொல் வருகிறது.

இன்னொருத்தன் மோசமான நிலைகளைப் பேசப்படும்போது அவனைப் பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கும் அவனைப் பார்க்கும்பொழுது என்ன… என்னப்ப்பா…?! என்போம்.

ஏனென்றால் அந்த உணர்வுகள் எதுவோ அதற்குத் தகுந்த “சுருதி” இங்கே வரும். நம்முடன் இணையும் சுருதிகள் எதுவோ அதற்குதகுந்த “நிறங்கள்” வரும். நிறங்கள் எதுவோ அதற்குதகுந்த “மணங்கள்” வரும். மணங்கள் எதுவோ அதற்கு தகுந்த “எண்ணங்கள்” வரும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…?

கோபமாக அடிக்கடி பேசிப் பாருங்கள்…
1.அந்தக் கோபம் வருவோருக்கு அவர்கள் உடல் முதலில் “சிவப்பாக” இருக்கும்.
2.கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் கூடிக் கொண்டே வந்தது என்றால் உடல் “கருத்துவிடும்…”

அப்பொழுது அந்த மணமும் அந்தச் சுவையும் மாறும். எடுத்துக் கொண்ட உணர்வு அதிகமாகக் கோபித்து வரும்போது நிறம் மாறிக் கொண்டே வரும்.

அதைப் போல ஒரு கோபித்தவரை வேகமாகப் பார்க்கின்றீர்கள். அந்தக் கார உணர்வுகள் பட்டவுடன் கண் சிவந்து போகின்றது…. உடலில் நடுக்கமாகின்றது. அந்த உணர்வின் இயக்கம் அதுவாகின்றது.

அந்த மணத்தின் தன்மை… உமிழ் நீர் நாக்கில் சுவை மாறுகின்றது. கோவித்துவிட்டுப் போய் நல்ல சுவையான சாப்பாடைச் சாப்பிட்டோம் என்றால் இந்த கோபத்தின் உணர்வுகள் வரும். நல்ல சுவையை அறிய முடிவதில்லை.

கோபத்தால் நினைவுகள் வரும்பொழுது நல்லதை நாம் அறிய முடியாது… உணர்வால். ஏனென்றால் நாம் மணத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாகப் பேசும்போது பார்த்தால்… முகத்தில் “பளிச்…” என்று நிறம் மாறும். நான் (ஞானகுரு) பேசும் பொழுதே நீங்கள் பார்த்திருக்கலாம்…!
1.ஒவ்வொரு ஞானியின் உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுதும் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே வரும்.
2.அந்தந்தக் குணத்திற்குத் தகுந்த மாதிரி இந்தச் சுருதிகள் மாற மாற சொல்லிலும் மாறிக் கொண்டே வரும்.
3.அதே சமயத்தில் கண்ணில் பார்க்கும்போது ஒளி வேறு விதமாக தெரியும்.
4.தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு வரப்படும் பொழுது “ஒலிகளே” வித்தியாசமாகத் தெரியும்.

அப்பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வு “ஒளிகளாகப் படரப்படும் பொழுது” நீங்கள் உற்றுப் பார்த்தால் இந்த உணர்வே உங்களுக்கு அறிவின் ஞானமாகக் கொடுக்கும்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.

 

மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

Sages world - agastyar

மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

நம் உயிருடைய வேலை அது நெருப்பிற்குச் சமம் தான். அதிலே எப்பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ அதிலே வேக வைத்த பொருளின் மணம்… சுவை… வருவது போல
1.நம் உயிரின் தன்மை நாம் நுகர்ந்தது எதுவோ
2.அதனின் உயிர் அணுக்களாக மாற்றி அது படைத்துவிடுகின்றது.

எதனின் உணர்வின் தன்மையோ அதை நாம் கண்ணால் பார்க்கும்போது உணர்வால் நுகரும் தன்மை வருகின்றது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் நிலையாக உடலின் அமைப்பு வருகின்றது.

நாம் எதனின் நிலைகளை உற்று நோக்கி… அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் பதிவாக்கி அதனின் கணக்கின் பிரகாரமே அடுத்த நிலை.

ஆகவ… அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு
1.நாம் என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலையை
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அவனுடன் இணைந்து இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தனையோ இடையூறுக்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உனர்வை இணைத்து இணைத்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை யாம் கொடுக்கின்றோம்.

தாவர இனங்களுக்கு ஊட்டம் கொடுக்கும் பொழுது முதலில் ஒரு முறை கொடுக்கின்றோம். ஒரு முறை எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை தாவர இனத்தைப் புதுப்பிக்கின்றோம்.

அப்படி… அதற்குத் தக்கவாறு அதனுடன் இணைத்துக் கொண்டு தான் புது வித்தின் தன்மையாக மாற்ற முடியும்.
1.ஏனென்றால் ஒரு வித்தின் தன்மை எடுத்த பின் நேரடியாக அதை மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு சிறுகச் சிறுக இணைத்து இணைத்து
3.அதை மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி இதை சீராக ஒன்றிணைக்கும் நிலைகள் கொண்டுதான் மாற்ற முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்.
2.பகைமையான உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வித்துகள் ஏராளம் ஏராளம்.
3.தன்னைக் காக்க தான் எடுத்துக் கொண்ட கோபத்தின் தன்மை ஏராளம் ஏராளம்.

இதைப்போல நமக்குள் வித்துகள் அதிகமாக பெருக்கி இருக்கும் வேலையில்… இவை அனைத்தும் ஒருக்கிணைந்து….. இதையெல்லாம் இணைத்து… அரவணைத்து… அதை அடக்கி…
1.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய… அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டுதான்..
2.உங்களில் இணைந்து வரும் குணத்துடன் இணைத்து இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை இதைப் போன்று பிணைத்து
4.இந்த உணர்வின் தன்மை உங்கள் குணத்துடன் ஒன்றச் செய்து
5.நினைவு கொண்டு நீங்கள் பெறும் ஆற்றல் பெற அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் (எம்முடைய வேலை)

அது அல்லாது செய்தோம் என்றால் வெறும் பாடப் புத்தகங்களை படித்துவிட்டு ஆகா…! நன்றாக இருக்கிறது என்ற நிலைகள் கொண்டு தூக்கி எறிவது போன்று ஆகிவிடும். அடுத்த நினைவுகள் வராது…!

ஆகையினால்… எந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நினைவாற்றல் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்

இதைப் படிப்பவர் அனைவரும் இதை மனதில் பதிவு செய்யுங்கள்….!

உங்களுக்கு எது சொந்தம்…? அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்குங்கள். இந்த வாழ்க்கையில் அதைச் சொந்தமாக்குங்கள்.

1.அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய குறைகளைச சொந்தமாக்க வேண்டாம்.
2.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

அந்தச் சொந்தத்தைக் கொண்டாடி விட்டால் பகைமை உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும். அதனின் இனப் பெருக்கமாக மாறிவிடும்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்களாகத் தான் பெருகும்.

மான் அதனின் கூட்டமைப்பாக வாழ்கின்றது. அதே சமயம் மற்ற மான்களின் குணங்களுக்கொப்ப வகை வகையான மான்கள் வருகின்றது. பல வகைகள் இருந்தாலும் அதனதன் கூட்டம் அதோடு சேர்ந்து விடுகின்றது.

இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் பெருக்கத்தை அதிகமாகக் கொண்டாருகின்றோமோ நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாறிவிடும்.

அப்படி மாறினால்… அதனுடைய கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அதனுடைய கூட்டமைப்பு எங்கே வாழுகின்றதோ…
1.அங்கே நம் உயிரான்மா சென்று
2.அந்தக் கூட்டமைப்புக்குள் சுற்றி
3.அதனின் உணர்வுக்குள் நுழைந்து
4.அந்த உணர்வின் ஆற்றலாக உடலை மாற்றிவிடும்.

ஆகவே இதையெல்லாம் தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தைப் படித்து விட்டு உங்களிடம் பாடவில்லை.. எனக்குக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் குருநாதர் எம்மை மாட்டுக்குள்ளும் புகுரச் செய்தார்… பாம்புக்குள்ளும் போகச் சொன்னார்… யானைக்குள்ளும் போகச் சொன்னார்… அதை எவ்வாறெல்லாம் பெற வேண்டுமென்று…!

இதை எல்லாம் உங்களிடம் எளிதில் சொல்லவில்லை…! முன்னாடி சொல்லியிருக்க மாட்டேன்…!

வித்தை எல்லாம் தெரிந்து கொண்டு தான் அதற்குள் போகின்றேன். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை பெருகி விட்டால் ஆன்மாவின் தன்மை எப்படி ஆகும்…?
1.அதற்கு முன்னாடியே குருநாதர் என்னை கைவல்யம் செய்து
2.எப்பொழுதுமே கைப் பிடித்து வைத்திருந்தார்.

ஆகவே இதைப்போல அந்த உணர்வை இயக்கச் செய்து உணர்வின் தன்மை கவர்ந்து கொண்ட பின் இந்த உணர்வின் ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.அதிலே எது பெருகுகின்றது…?
2.எதனின் உடலில் ஆன்மாவை அழைக்கின்றது…?
3.மனித உடலில் பெருகிய பின் அந்த உடலுக்குள் போய் எப்படி இயக்குகின்றது..?
4.மீண்டும் நீ வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது…?

மனிதனின் உடலில் இது உருவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகின்றது…?.என்று தெளிவாக்கினார் குருநாடதர்

இதுதான் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை…!

 

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

diamond lights

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது… மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.

சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.

விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.

பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.

பூமிக்கு பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.

சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.

வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.

சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.

இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

spiritual-need

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

எத்தனையோ நிலைகளில் இன்று இருந்தாலும் இந்தச் சரீரத்தை விட்டு ஆன்மா பிரிந்து சென்று விட்டால் நம் அழகையும் அல்லது நாம் போற்றித் துதித்த தருமத்தையும் யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…?

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள்…! என்று தான் சொல்கின்றார்கள்.

அங்கே எரிக்கும் இடத்தில் என்ன செய்கின்றனர்…? நெருப்பிலே இட்டு எரிக்கும் பொழுது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…! என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் உடலைப் போடும்போது அதை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? நம்மைச் சேர்ந்த சொந்தக்காரர்கள் தூக்கிப் போடுகின்றார்களா…? என்றால் இல்லை…!

யாரையாவது வைத்துத் தூக்கி போடுங்கள்…! என்று தான் போடுகின்றோம். அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு “அவர்கள் அதற்குதான்…!” என்கின்றார்கள்.

ஏனென்றால் இவர்களை அது சாடிவிடுமாம்…!

ஆனால் இறந்தவர்களின் சொத்து தேவை… வீடு வாசல் பணம் எல்லாம் தேவ…!. ஆகவே இப்படித்தான் நமது உணர்வு வருகின்றது.

1.இந்த உடலை “நமக்குச் சொந்தம்…!” என்று ஆக்க வேண்டாம்
2.இந்த உடலில் சொந்தம் கொண்டாடி அதிலே அறியாது வளர்த்துக் கொண்ட தீய வினை சாப வினைகள நீக்கி
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி அதிலே நிலை கொள்ள வேண்டும்.

என்றுமே நிலையான சரீரம் நமக்கு வேண்டுமென்றால் நம் பற்று எதிலே வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் உணர்வில் நமக்குப் பற்று வேண்டும். அந்தப் பற்றினை வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் அங்கே மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்கின்றோம்.

இல்லை என்றால்… சாப அலையில் தீய அலையில் சிக்கியவர்கள்… நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற இந்த எண்ணம் கொண்ட உணர்வுகள் வளர்ந்து… தாவர இனத்தை புசித்து வாழும் உடல் நிலை மாறி… மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் உடலாக வரும்.

அப்படிக் கொன்று மற்றொன்றின் உடலுக்குள் புகுந்து…
1.இப்படி பல நிலைகள் மாறி மாறிப் பல நரக லோகத்தைச் சந்தித்த பின்… அ
2.ந்தத் தண்டனைகளை எல்லாம் அனுபவித்த பின் தான்
3.மீண்டும் மனிதனாக வர முடியும்.

சாதரணமாக மனிதனின் கையில் சிக்கி அத்தகைய உயிரினங்கள் சாகாது தன் பசிக்காக ஏங்கி இருக்கும் மிருகங்களின் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி இதை அடித்துக் கொல்கிறதென்றால் அப்பொழுது புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பினத்தில் சிக்கித் தவிக்கிறது என்றால் அடுத்த பிறப்பில் அந்த உயிர் பாம்பாகதான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

1.எமக்கு குருநாதர் அந்த விண்ணுலக ஆற்றலையும்
2.மண்ணுலக நிலையில் உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அவர் காட்டிய அந்த அரும் பெரும் சக்திகளை… உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் வந்த குணங்களும்… நீங்கள் வளர்ந்து வந்த நிலைகளும் அவைகளுடன் இணைத்தே உபதேசிக்கின்றோம் .

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய நிலைகளை
1.அந்த அண்டத்தில் இருக்கும் நிலைகளை
2.பிண்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உணர்வோடு இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளுக்கு உங்களை உருவாக்குவதுதான்…! என்னுடைய வேலை..!

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப்போல உங்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் அந்த மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ardhanareeswara

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இச்சரீரக் கோளம் ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.

எத்தன்மையின் செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும் தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்… பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.

ஆண் இன அமிலச் சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில் இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.

ஆண் உடலிலும் பெண் இன அணுக்கள் உண்டு. பெண் இன அணுத் தன்மை இல்லா விட்டால் உயிர் ஜீவத் துடிப்பணுக்கள் உருநிலை பெறாது.

பெண் சரீரத்தில் ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின் ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ நிலை ஜீவிதம் பெறுகின்றது.

ஆண் பெண் அமிலச் சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப் பெறும்
1.ஆண் அமில… பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில் எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.

மூலத்தின்… ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி… ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண் இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண் எல்லாமே ஒன்றுதான்..!.

இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின் உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.

படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.

உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”

சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம் தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச் சரீர உரு நிலை அமைகின்றது.

மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில் தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.

அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட உயிரணுவின்…
2.வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத் தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின் வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால் (தான்) வளர்க்க முடியும்.

உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போர்… உடலுக்குள் போனால் மகாபாரதப் போர் – விளக்கம்

Inner peace

உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போர்… உடலுக்குள் போனால் மகாபாரதப் போர் – விளக்கம்

 

ஒவ்வொரு நிமிடமும் நாம் நல்ல குணங்கள் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இருந்தாலும் நம் நண்பர் வேதனைப்படுகின்றார் என்றால் அதை நுகர்ந்தால் குருஷேத்திரப்போர் ஆகின்றது.

1.நம் உடலுக்குள் குருவாக இருக்கின்றது உயிர்.
2.உயிரிலே (சுவாசித்தது புருவ மத்தியில்) பட்டபின் குருஷேத்திரப்போர் நடக்கின்றது.

என் நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று ஏங்கிப் பெற்றால் நம் உடலுக்குள் போனால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது மகாபாரதப் போர்.

இப்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் போர்கள் நடந்து கொண்டே இருக்கின்றது.

அதாவது கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருஷேத்திரப் போர்…
1.வேதனைப்படும் உணர்வைக் கண்கள் கவர்ந்து உயிரிலே மோதும் போது
2.அந்த வேதனை என்ற உணர்வுகளைச் சங்கநாதம் ஊதுகின்றது.

ஆனாலும்… வேதனைப்படுகின்றான் என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுடன் கலக்கப்படும்போது இங்கே குருஷேத்திரப் போர் நடக்கின்றது. ஏனென்றால் உடலுக்குள் இருக்கும் அனைத்து நல்ல குணங்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

அதே சமயத்தில்… வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின்…
1.உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் இது தாக்கப்படும் போது
2.பதட்டமும் பயமும் ஏற்பட்டு மகாபாரதப் போர் ஆகின்றது.

இப்படி உடலுக்குள் வேதனை என்ற உணர்வு புகுந்து விட்டால் விஷத்தின் தன்மை நமக்குள் வளர்ச்சியாகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு நொடிக்கு நொடி குருக்ஷேத்திரப் போரும் மகாபாரதப் போரும் நடந்து கொண்டேதான் உள்ளது.

“சந்தோஷம்…” என்ற சீதா ராமனாக.. அதாவது சந்தோஷம் என்ற எண்ணங்கள் (ராமன் எண்ணம்… சீதா மகிழ்ச்சி) கொண்டு வாழ்ந்தாலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்தால் வாலி ஆகின்றது.

அந்த வாலி என்ற உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்லத் தொடங்குகின்றது…இரண்யன்.

நாம் மகிழ்ச்சி என்ற உணர்வைத் தான் தோற்றுவிக்க எண்ணுகின்றோம்.

ஆனால் நண்பனைப் பார்த்து வேதனைப்படும்போது அதை நுகர்ந்தால் வாலியாகி… நமது நல்ல குணங்களை எப்படி அழித்து மாற்றிவிடுகின்றது…? என்று
1.சுவையின் உணர்வுகள் அந்த உணர்ச்சிகள்
2.நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்று இராமயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

அதை யாராவது நாம் மதிக்கின்றோமா…?.

நம் எண்ணங்கள் எப்படிச் செயல் படுகின்றது…? வேதனை என்ற உணர்வை நுகர்ந்த அது நம் நல்ல குணங்களைக் கொன்றிடும் இரண்யனாகின்றது என்பதை ஞானிகள் காட்டுகின்றனர்.

தசரத சக்கரவர்த்தி என்பது பத்தாவது நிலை அடையக்கூடிய உயிர். நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் இரையானாலும் வேதனை என்ற உணர்வு வரும்போது
1.அந்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி
2.மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது கொன்று விடுகின்றது “தசப்பிரியன்…”

அதன் மூலம் நாம் அடிக்கடி வேதனைப்பட்டு இந்த உடலை வளர்ப்பதற்கும்… மற்றொருவரைக் கொன்று புசிப்பதற்கும்… மற்றவருக்குத் தொல்லை கொடுக்கும் நிலையே நமக்குள் வருகின்றது. ஆனால் இதே தொல்லை கொடுக்கும் உணர்வை நுகரும்போது தசப்பிரியன் ஆகின்றது.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிரில் நாம் எடுக்கப்படும்போது இதே உயிர்தான் அதையும் வளர்க்கின்றது. அந்தக் கோபம் என்ற உணர்வு உயிரிலே பட்டபின் அசுர உணர்வை வளர்க்கின்றது. நம் நல்ல குணங்களை கொல்கின்றது.

சீதா – சுவை மகிழ்ச்சி… என்ற நிலை வரப்படும் பொழுது உடலான இந்திரலோகம் நம்மை மகிழச் செய்கிறது. ஆனால் சந்தர்ப்பத்தால் வந்த வேதனை என்ற உணர்வுகள் இந்த இந்திரலோகத்தில் வந்தால் நல்லதை உருவாக்காதபடி தடையாகின்றது.

அதாவது மகிழச் செய்யும் இந்திரலோகத்தைச் சிறைப் பிடித்து விடுகின்றான் இரண்யன். நம் ஆறாவது அறிவு இயக்கமற்ற நிலைகள் மாற்றும் போது அசுர உணர்வுகள் நமக்குள் வரப்படும்பொழுது இந்த உடலில் எப்படி விளைகின்றது…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் அந்தத் தசப்பிரியன் என்ற நிலை வரும்போது அவன் எண்ணும் உணர்வுகள்.. அவனும் விஷ்ணுவை (உயிரை) நோக்கித் தான் தவமிருக்கின்றான்.

1.நான் சொன்னபடிதான் இந்த உயிர் கேட்க வேண்டும்…! என்று
2.விஷ்ணுவை அடிமைப்படுத்தக் கடும் யாகங்களைச் செய்கின்றான்…!
3.என் வழிக்குத் தான் நீ வரவேண்டுமே தவிர உன் வழிக்கு நான் வர முடியாது என்று
4.நம் உணர்வின் தன்மை உயிர் பத்தாவது நிலை அடைந்தாலும் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது
5.நம் உயிரான ஈசனை நமக்குள் நல்லதை உருவாக்காதபடி எப்படித் தடையாகிறது என்று காட்டுகின்றார்கள்.

நெருப்பிலே நீங்கள் எந்தப் பொருளைப் போடுகின்றனரோ அந்த மணம் தான் அதிலிருந்து வரும். நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே வேதனை என்ற விஷத்தின் தன்மையைப் போட்டால் விஷத்தின் தன்மைதான் இயக்கும்.

உயிருடைய வேலை அதுதான்…! என்பதனை இங்கு தெளிவாகக் காட்டப்படுகின்றது

இந்த உடலில் விஷத்தின் தன்மை அதிகமானால் விஷத்தை உடலாக்கிக் கொண்ட மற்ற உயிரினங்கள் எப்படியோ அந்த நிலை அடையச் செய்கின்றது.

இந்த ஐந்தாவது அறிவிலிருந்து ஆறாவது அறிவு வரும்போது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.
1.தீமைகளை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனுக்குள்
2.விஷத்தின் தன்மை தோயப்படும்போது அது மனிதனை எப்படி மாற்றுகின்றது…?
3.இதிலிருந்து எப்படி மனிதன் மீள்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமயாணம்.

ஆகவே தான் கோவில்களிலே நம் மனதைக் குவித்து… பகைமையற்ற நிலைகள் கொண்டு எல்லோரும் பேரின்பம் பெற வேண்டுமென்று காட்டப்பட்டுள்ளது.

1.நல்ல குணத்தை வளர்க்க…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் இணைத்து
2.எப்படி வளர்க்க வேண்டுமென்று கோவில்களில் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

“வைரம்…” பாய்ந்த மரம் போன்று நட்சத்திரங்களின் ஒளியை உயிராத்மா பெற்றுப் “பிரகாசிக்க வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

diamond soul

“வைரம்…” பாய்ந்த மரம் போன்று நட்சத்திரங்களின் ஒளியை உயிராத்மா பெற்றுப் “பிரகாசிக்க வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில் எப்படி தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் வளருகின்றது…? வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?

பூமீயின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.

அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!

அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.

பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால் இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
4.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!

எப்படி…?

உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெபநிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.

அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.

பாம்பு தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.

சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!

இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!

உடலைக் காக்கும் மருத்துவர்கள் போல் தான் “உயிரான்மாவை ஞானிகளும் காத்தார்கள்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

nadi chakkar cleanings

உடலைக் காக்கும் மருத்துவர்கள் போல் தான் “உயிரான்மாவை ஞானிகளும் காத்தார்கள்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எல்லாமில் எல்லாமாய் உள்ள “இறை சக்தி” பொதுவான சக்தியாய்ச் செயல் கொள்ளும் தன்மைக்கு அவரவர்களின் எண்ணச் செயலை ஒவ்வொரு சாராரும் தன் எண்ணத்திற்குகந்த செயலைச் செய்விக்கத் தெய்வத்தின் துணையை நாடுகின்றனர்.

தெய்வத்தின் துணையை எப்படி அவரவர்கள் பெறுகின்றனர்…?

மருத்துவர் தன் மருத்துவத்தில் கற்ற செயலுக்காகவும்… தன் ஜீவாதாரப் பொருளுக்காகவும்… தான் கற்ற மருத்துவத் தொழிலுக்காக வியாதியஸ்தன் வரவேண்டும் என்று எண்ணுபவனும் உண்டு.

தன் தொழில் நடக்க வேண்டும் என்று எண்ணுவதே தன் சுயநல வளர்ப்பிற்காகத்தான்…!

வியாதியஸ்தன் தன் வியாதியைக் குணமாக்க தெய்வத்திடம் எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
1.வைத்தியனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வருவாய்க்காக)
2.வியாதியஸ்தனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வியாதி நீங்க)

இந்த இரு சாரரில் யாருக்கு அந்த இறைவன் சொந்தம்…?

வைத்தியன் மற்றவர்களுக்கு வியாதி வந்து அவதிப்பட வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் தன் ஜீவாதார தேவைக்காகவும் தான் வளர்த்துக் கொண்ட… வழி முறை செயல் வளரவும் தெய்வத்தை வேண்டுகின்றான்.

வைத்தியனின் வைத்திய முறையில் அவன் கற்ற திறமை கொண்டு அந்தத் திறமைக்குகந்த ஜீவ ஆத்மாக்கள் அவனை நாடி வருகின்றன.

நோயாளியின் தன்மையிலும்…
1.தன் வியாதி குணமாக வேண்டுமென்ற உந்தலில் எடுக்கப்படும் எண்ணத்தால் ஆத்ம செயல் உருவாகி
2.அவனுள் உள்ள இறை சக்தியே அவனுக்கு அவன் வியாதியை சொஸ்தப்படுத்துகின்றது.

ஆகவே தெய்வத்தின் செயல்… நன்மை தீமை பார்த்துச் செயல்படவில்லை…!

உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு… சாதாரணத் தலைவலி போன்றவைகளுக்கு தலையில் மட்டும் மருந்தை தேய்க்கின்றோம்.

அதுவே நிற்காமல் அதிகப்படும் பொழுது… மாத்திரைகளாக உட்கொள்கின்றோம். அது ஆகாரமாகி… ஆவியாகி.. அதன் செயலைச் செய்கின்றது.

அதற்கும் முற்றிய நோய்களுக்கு… உதிரமுடன் கலக்கச் செய்யும் வீரிய மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றுகின்றார்கள். அதற்கும் அடுத்தநிலை நரம்புகளிலேயே மருந்துகளை செலுத்துகின்றார்கள்.

அதற்கும் முற்றிய நிலையில்… எலும்புகளில் துவாரமிட்டு அதன் தொடரில் வைத்திய நிலை முற்றியுள்ள விஞ்ஞானச் செயலில் உடல் உபாதையை அகற்ற மருத்துவம் செயல்படுகின்றது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்…!)

இவைகளைப் போன்றே
1.இவ்வுடலில் நாமெடுக்கக் கூடிய மகரிஷிகளின் மின் அலைத் தொடர்பினால்
2.ஊடுருவல் நிலை கொண்டு அதைச் சுவாசமாக்கி
3.அதன் வளர்ச்சியில் உதிரமாகி… நரம்பு கோளங்கள் வலுப் பெற்று
4.உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊன் நிலையில் வலுவாகும் வழி முறையில் தான்
5.உயிரத்மாவிற்கு நாம் வலுக் கூட்ட முடியும்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரத் தியானிக்க வேண்டிய முறை

polaris - north

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரத் தியானிக்க வேண்டிய முறை

 

அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி… அம்மா அப்பா அருளால் நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களையும் “ஒன்றாகச் சேர்த்து”
2.உங்கள் கண்ணின் வழி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வை
3.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கி இருங்கள்.

அதைப் பெற வேண்டும் என்ற இச்சைப் பட வேண்டும். அந்த உணர்வை உங்களுள் கிரியையாக்கி… ஞானத்தின் வழி உங்கள் வாழ்க்கையை வாழ இது உதவும்.

1.உங்கள் உடலுக்குள் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி
3.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த கண்ணின் ஈர்ப்பிற்கே வரும்….!

அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் ஈர்ப்புக்கு வரும்போது உங்கள் கண் “கனமாக” இருக்கும் வெகு தொலைவில் இருந்து வரக்கூடிய உணர்வை… எண்ணி ஏங்கும்போது…! அது நம் பூமியில் படர்ந்து வருவதை எளிதில் பெற முடியும்.

யாம் (ஞானகுரு) பதிவாக்கிய அந்த உணர்வின் தன்மை பெறச் செய்யும்போது.. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் நோக்கத்துடன் ஏங்கித் தியானியுங்கள் ஒரு இரண்டு நிமிடம்.

இப்பொழுது அந்தச் சக்திகள் உங்கள் கண்ணுக்கே வரும்.
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்துங்கள்.
2.கண்ணை மூடுங்கள்….!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களை இயக்கி கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்” இந்த உணர்வைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செலுத்துவதனால் உங்கள் உடலுக்குள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை போன்ற வேண்டாத உணர்வு கொண்ட அணுக்கள் இருந்தால்
1.அவைகளுக்கெல்லாம் ஆகாரம் செல்லாதபடி
2.உங்கள் இரத்தத்தில் மாசுபடும் நிலை வராதபடி தடுக்க இது உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தி வரப்படும்போது இப்பொழுது கனமாக இருக்கும். சிலருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் உங்கள் புருவத்தில் மோதும்போது ஒளிக் கற்றைகள் தெரிய வரும்.

எனக்கு குருநாதர் எப்படிச் செய்தாரோ அதன் வழிப்படியே உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி உங்களுக்கும் அந்த அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அதன் வழியிலேயே நீங்கள் கவருங்கள்.

இப்பொழுது..
1.உயிர் வழி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிலிருந்து வரும் பேரருளை அது கவருகின்றது
2.உங்கள் உயிரின் தன்மை அது வலுப் பெறுகின்றது.
3.தீமைகள் புகாது தடைப்படுகின்றது.

உங்கள் மனதில் அமைதி கிடைக்கும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் நல்லவை எல்லாம் கேட்டறிந்தாலும் இந்த உணர்வுகள் இயக்கணுவாக… உங்கள் இரத்ததில் வந்தவுடனே ஜீவணுவாக மாறுகின்றது.

உங்கள் கண்ணின் நினைவினை அந்த ஜீவணுக்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும்போது இந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த உடலில் உள்ள ஜீவணுக்களும் அதைப் பெறுகின்றது.

“ஜீவான்மா…!” இன்னொரு உடலில் விளைந்தது ஆன்மா…! நீங்கள் பாசத்தோடு பண்போடு பிறருக்கு உதவி செய்தாலும் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அவர் உடலில் விளைய வைத்த அந்த வேதனை விஷத் தன்மை கொண்டு உங்கள் உடலுக்குள் வருகின்றது.

ஆக… அந்த ஆன்மாவுக்கு அது மாற்ற முடியாது…. மாற்றத் தெரியாது.

விஷமாக இருப்பதனால் இந்த இரத்தத்தில் இருந்து இரத்தத்தையே மீண்டும் மாசுப்படுத்தி அதனால் வந்த ஜீவணுக்களுக்கு ஆகாரம் கொடுத்து அதை வளர்க்கும் அதன் உணர்வே உங்கள் செயலில் வரும்.

இதைப்போன்ற நிலைகளை மாற்றி அமைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது உங்கள் உடலில் புது உணர்ச்சி அந்த இரத்த நாளங்களில் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து.,.. எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்

1.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள் அந்தச் சக்தி பெற
2.அந்த அணுக்களை எண்ணி நான் (ஞானகுரு) ஏங்கித் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணி ஏங்கும் பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் சந்தர்ப்பமும்…
2.அதைக் கவரும் சக்தியும்
3.அது வளரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். உங்கள் உடலைச் சுற்றி “ஒரு வெளிச்சம் வரும்…!”