நட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…!

cosmos-galaxy

நட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…!

1.27 நட்சத்திரங்களின் நிலைகளை அகஸ்தியன் நுகர்ந்து… தீமைகளை வென்று..
2.பேரருள் உணர்வை வளர்த்து… பேரொளியாக மாறி துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அகஸ்தியன் ஆதியிலே வானஇயல்… புவிஇயல்… உயிரியல்… அடிப்படையில் அகண்ட் அண்டத்தைக் கண்டாலும் அவன் உணர்வுகள் வெளிப்படுத்தியதைப் பிற்காலத்தில் வியாசகன் நுகர்ந்தான்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானாலும் அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இந்தச் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் உள்ளது.

வியாசகன் தான் மீன் பிடிக்கச் செல்லும் பொழுது அவன் சந்தர்ப்பம் புயலில் சிக்கிக் கடலில் விழுந்து விடுகின்றான். அப்பொழுது அதிலிருந்து அவன் எப்படியும் மீள வேண்டுமென்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.

அப்பொழுது கடல் வாழ் மீன் இனம் இவனைத் தன் முதுகில் சுமந்து இவனைக் காப்பாற்றுகின்றது. கடல் வாழ் மீன் இனம் காப்பாற்றிய பின் அவன் சிந்திக்கின்றான்.
1.நாம் எந்த மீனைக் கொன்றோமோ…
2.அந்த மீன் இனமே தன்னைக் காப்பாற்றுகின்றது என்று
3.திரும்பி பார்க்கும் போது தன் தவறை உணர்கின்றான்
4.அதனின் உயர்ந்த குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.

அன்றைய காலங்களில் பெரும்பாலானோர் எல்லா மக்களும் சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி..
1.நான் இப்படித் தவறு செய்தேன்…
2.ஆனல் அந்த மீன் இனமே என்னைக் காத்தது…! என்ற ஏக்க உணர்வுடன் மேலே ஏங்குகின்றான்.

கடலின் பகுதியில் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம். அதிலிருந்து வரும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து விடுகின்றது.

அப்போது இவன் மேல் நோக்கி ஏங்கி எண்ணும்போது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைத் தனக்குள் நுகர நேருகின்றது. அப்படி அவன் நுகரும்போதுதான்
1.அகஸ்தியன் தன் வாழ் நாளில் அகண்ட அண்டம் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கின்றது என்று
2.அவன் உணர்ந்து வெளியிட்ட உணர்வுகளை எல்லாம் வியாசகன் நுகர்கின்றான்.

வான வீதியில் இருந்து வந்து உருவான உயிர் முதலில் கடலில் தான் விழுகின்றது. வான வீதியிலிருந்து பல உணர்வுகள் இங்கு ஆகும் பொழுது சூரியனின் ஒளிக்கற்றைகள் அது சிறுகச் சிறுக விளைந்து பாஷாணமாக மாறுகின்றது.

அந்த பாஷாணத்தில் சேர்க்கையாக மற்ற மின்னல்கள் தாக்கப்படும்போது 27 நட்சத்திரங்களில் எதன் எதன் உணர்வு அதிகமாகின்றதோ அதற்குத்தகுந்த செடியின் கருக்கள் உருவாகின்றது

இவ்வாறு கடல் வாழ் நிலைகளில் பல விதமான செடி கொடிகள் உருவாகின்றது. அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள் பல உயிரினங்கள் உண்டு.

எதை எதை எடுத்து… எதன் வழியில் உருவானதோ… அதை அதை எடுத்து அதன் நிலைகள் உணவாக உட்கொள்ளும் சக்தி வருகின்றது. இப்படித்தான் கடல் வாழ் நிலைகள் உருவானது…! என்று முதன் முதலில் கண்டது அகஸ்தியன்.

அவன் கண்ட உண்மையின் உணர்வை வியாசகன் காண்கின்றான். அவன் செம்படவன் தான்….!
1.இவன் கடலில் தத்தளித்து வருவதை ஒரு மீன் காக்கப்படும் போதுதான்
2.அந்த அகஸ்தியன் உணர்வுகள் எல்லாம் இவனுக்குள் வருகின்றது.
3.அப்பொழுது தான் அவன் “தன் நிலையை” உணர்கின்றான்…. ஞானியாகின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடியதை நாமும் பெற்றால் அவன் வழியிலே நமக்குள் இது பெருகப் பெருக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைகின்றோம்.

அகஸ்தியன் எப்படி நட்சத்திரங்களின் ஒளி அலைகளைப் பெற்றானோ… அதைப் போல நாமும் பெற்று.. நஞ்சினை வென்று.. ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

 

உடலை இயக்கித் தொழிலுக்குகந்த வேலை செய்வது போல்… “தன் எண்ணத்தின் உணர்வால்… பெற வேண்டிய உயர் ஞானம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

galaxy near ursa major

உடலை இயக்கித் தொழிலுக்குகந்த வேலை செய்வது போல்.. “தன் எண்ணத்தின் உணர்வால்… பெற வேண்டிய உயர் ஞானம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.

முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது…
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி…
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்

4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ… எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ…
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.

உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்… அச்சம்… நாணம்… என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.

எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ… அவ்வுணர்வின் குணமும்… செயலும்… கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.

அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக…
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்… வாழ்க்கையின் செயலுக்கும்…
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.

“முக்காலமும் அறியும் சக்தியை” எப்படிப் பெறலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual-stiffnesses

“முக்காலமும் அறியும் சக்தியை” எப்படிப் பெறலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.

மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.

அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியை கேட்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.

இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.

அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.

இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.

ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.

அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.

 

குருநாதர் கொடுக்கும் “கோடி…கோடி..” என்ற ஒளியான உணர்வின் ஆற்றல் எபப்டிப்பட்டது…?

Eswarpattar blessings

குருநாதர் கொடுக்கும் “கோடி…கோடி..” என்ற ஒளியான உணர்வின் ஆற்றல் எபப்டிப்பட்டது…?

நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்குக் கொடுத்த கோடி…கோடி… என்ற உணர்வுகளை உங்களுக்கும் கொடுக்கின்றோம். அதாவது…
1.தீமையை நீக்கி ஒளியின் தன்மையாக ஆக்கிய அந்தக் கோடி…கோடி என்ற உணர்வின் தன்மையைத்தான்
2.உங்களிடமும் இணைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு)

அந்த உணர்வுகளை நீங்கள் இணைத்துக் கொண்டபின் மற்றவர்களை நீங்கள் பார்த்தால் சில உணர்வுகளை உணர்த்தும். அவர்களைக் கேட்டறிந்து நீங்கள் திருப்பிச் சொல்ல வேண்டியதில்லை.

அப்படிக் கேட்டறிந்து திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்… நானே திருப்பிச் சொல்ல முடியாது. அப்படித் திருப்பிச் சொல்லும் நிலை வந்து விட்டால் அது வெறும் “பாட நிலைதான்” ஆகும்.

ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும்போதே அவருடைய நிலைகளை நமக்குள் உணர்த்தும்.
1.அப்பொழுது அங்குள்ள தீமை நமக்குத் தெரிய வரும்.
2.அந்தத் தீமை நீக்குவதற்கு என்ன வழி…? என்ற நிலைகளை நாம் எடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று இந்த உணர்வை எடுத்து விட்டால் நமக்குள் தீமை சேராது
1.அந்தத் தீமையை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.
2.அத்தகைய சொல்லை அங்கே பதிவு செய்து விட்டால்…
3.அவர்கள் அதைக் கேட்டுணர்ந்தால்… அவர்கள் அதைத் திருப்பி எண்ணினீர்கள் என்றால்….
4.அவர்கள் தீமையை அவர்கள் போக்க முடியும்.

நமக்கு அந்த “அறிதல்…” என்ற நிலையில் வரும். அதே போல் யார் நம்மைப் பார்த்தாலும்… அவர்கள் பேச ஆரம்பித்தாலே போதும்…
1.இப்படித்தான்…! என்று நமக்குத் தெரியும்.
2.தெரிந்தவுடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
3.தெரிந்ததை அவர்களிடம் சொல்லக் கூடாது.

வர வர (அவர்கள் பேசப் பேச) நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்…! என்ற அந்த நினைவினைக் கண்ணை வைத்து உற்றுப் பார்க்க வேண்டும்.

சொல்லவே வேண்டியதில்லை. கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள் அவர் சொல்லும்போது நமக்குக் கோபம் வரும்.. உடனே சிந்தனையில் “அருளை எடுத்துப் பாருங்கள்…!”

சரி… அப்படியா…! என்று சொல்லிவிட்டு நீங்கள் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பாருங்கள். இவ்வாறு செய்தாலே…. யாராவது தப்பு சொல்பவர்கள் வந்தாலும் திருப்பித் திருப்பிச் சொல்ல முடியாது

பிரேக்காகும்…! வேண்டுமென்றால் பாருங்கள். இது போய் இடைமறிக்கும். குறைகளைச் சிந்தித்துப் பார்க்கும் பொழுது அங்கே தடையாகும்.
1.அவர்கள் உணர்வு நம்மிடம் வராது
2.நமது உணர்வு என்ன செய்யும்…? அந்தத் தப்பை அடக்கும்…!
3.இது கண்டிப்பாக வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் எங்கே குறை கண்டாலும்… அவர்கள் தவறு செய்யவில்லை… அவர்களை அறியாத நிலைகளில் தான் அது வருகின்றது. ஆகவே அங்கே குறைகள் வளரக் கூடாது.

மகரிஷிகளின் அருள் ஒளி அங்கு பெற வேண்டும்…. அங்கு மெய்ப் பொருள் காணும் நிலை வரவேண்டும் என்று எப்படொ எண்ணிப் பாருங்கள்.

ஆனால் தப்பாகப் பேசினார்… என்ற குற்றம் சாட்டும் நிலை வந்தால்…
1.அவர் உணர்வு தான் உங்களுக்குள்ளேயும் சேர்ந்து வளர்ந்துவிடும்.
2.உடனே இரண்டு பேருக்கும் சண்டை வரும் நீ பெரியவனா… நான் பெரியவனா…? என்று

தியான வழியில் இருக்கின்றவர்கள் இதை எல்லாம் முதலில் சொன்ன மாதிரி மாற்றி அமைத்துப் பழக வேண்டும். ஏனென்றால் நாம் பேசக்கூடிய இந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பச் செய்கின்றது.

ரேடியோ டி.வி.யில் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதைப் போல ஞான வித்துகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அவ்வப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த எண்ணம் வரும். அப்பொழுது உங்கள் ஆன்மா வலுப் பெறும்.

இருந்தாலும்…
1.தீமைகளை நீங்கள் உணர முடியும். ஆனால் உள்ளுக்குள் விடாது.
2.யாம் சொன்ன முறைப்படி எண்ணி நீங்கள் செய்து பாருங்கள்
3.அந்த அருள் உணர்வுடன் உங்கள் பார்வையை மட்டும் மற்றவருக்குச் செலுத்திப் பாருங்கள்.

பிறரின் குறைகள் நமக்குள் வளராது… அவர்களின் உணர்ச்சிகள் நம்மை இயக்காது… நமது உணர்ச்சிகள் அங்கே ஒடுங்கச் செய்யும்.
1.இல்லை என்றால் கொதிக்கச் செய்யும்
2.இல்லை என்றால் விட்டு விட்டு ஓடி விடுவார்கள்… பயமாகும்…!

 

ரிஷிகள் செயல்படும் ஞான மலை தான் இமயமலை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Sages of Himalayas

ரிஷிகள் செயல்படும் ஞான மலை தான் இமயமலை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

போகர் தன் உயிராத்மாவின் வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை… இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி… முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து வைத்துள்ளார்.

1.எச்சிலையை நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில் அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால் இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.

இப்பூமியின் இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!

“ரிஷிகளின் ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில் இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின் பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.

அந்நீர் கொப்பளிக்கும் தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

1.போகர் எப்படி நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம் ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.

அதற்குச் சுற்றிலும் அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆக சப்தரிஷிகள் செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!

1.இயற்கையின் மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த சரீரத்தில் ஒளிக் காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப் படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.

உயிர் துடிப்பு மாறும் போது நம் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

polaris and soul pulse

உயிர் துடிப்பு மாறும் போது நம் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

இன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.

இதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…!

நாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின் துடிப்பு கம்மியாகின்றது.

அப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.

ஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.

இந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால் இதை “அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.

உங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.

அதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.

அதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.

அதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…!”

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுவார்.

வாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.

1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.

ஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.

அச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!

இது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!

 

மனிதப் பிறப்புக்கு அடுத்த வளர் நிலையான “சத்தியத்தின் சக்தி நிலை” பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

light worlds

மனிதப் பிறப்புக்கு அடுத்த வளர் நிலையான “சத்தியத்தின் சக்தி நிலை” பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.

இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளி தருகின்றது.

ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.

இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்பு தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால் வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகி பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே நாளை கனவாகி விடுகின்றது.

இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?

சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?

ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!

உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!

உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!

உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!

 

நம் முன்னோர்களை விண் செலுத்தும் பயிற்சி

eternal heaven

நம் முன்னோர்களை விண் செலுத்தும் பயிற்சி

 

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து… சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துத் தியானித்ததனால் அதனின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை விண் செலுத்த முடியும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
1.நம் குலதெய்வங்களான உயிராத்மாக்களும் சரி
2.நண்பர்களின் உயிரான்மாவும் சரி
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ளினால்
4.அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது.

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளுடன் இந்த ஆன்மாக்கள் பட்டபின் இந்த உடலில் பெற்ற நஞ்சு என்ற உணர்வை கரைத்துவிட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழத் தொடங்கும்.

1.துருவ நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வை உணவாக எடுத்துக் கொள்கின்றது.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை உணவாக உட்கொண்டு தான்
3.சப்தரிஷி மண்டலம் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டு உள்ளார்கள்.

நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலங்களில் அவர் உடலில் பெற்ற உணர்வு நமக்குள் இருப்பதனால்… நாம் தியானத்தை வலுக்கூட்டி இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களை விண் செலுத்தினால் அது பிறவியில்லா நிலை அடையும்.

இதை மனிதன் ஒருவன் தான் செய்ய முடியும்…!

நண்பர்களுடன் பழகுகின்றோம்… நம் குடும்பத்தில் பழகுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்பத்தால் நண்பர் வேதனையோடு அவதிப்படும்போது அவர் மேல் இருக்கும் பற்றால் அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் நம் உடலுக்குள் அது வளர்கின்றது.

வேதனை வரும் பொழுதெல்லாம் நாம் எந்த உடலில் இருந்து வேதனையை எடுத்தோமோ அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்து அவர் பெற்ற அவதியெல்லாம் நாமும் பெறுகின்றோம்.

அல்லது… ஒருவரிடத்தில் அந்த ஆன்மா சென்றாலும் மற்றவர்கள் கேட்டறிந்த அந்த உணர்வுகளில் அவர்கள் பட்ட உண்ர்வுகளை நாம் நுகர்ந்தறியும்போது அதை அடுத்து “மரபணுக்கள்” நமக்குள் விளைய தொடங்கி விடுகின்றது.

இது போன்ற நிலைகள் நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

ஆகவே கூட்டு தியானத்தின் மூலம் நாம் அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அது அங்கே கரைந்து விடுகின்றது.

சப்தரிஷிகளுடன் ரிஷிகளாக அவர்கள் வாழப்படும்போது…
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் நாம் எளிதில் பெற்று
3.நம் உடலில் ஏற்படும் தீமைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள முடியும்

இப்பொழுது விஞ்ஞானி செய்கின்றான்…! அதாவது கண்ணாடி மூலம் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் வானில் உள்ள கோள்களைப் பதிவாக்கி அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.

அந்த உணர்வு அதற்குள் பதிவானபின் அதை நாடாக்களில் பதிவாக்கி அதை ராக்கெட்டில் வைத்து விண்ணிலே பூமியைக் கடந்து வெளியே வீசச் செய்கின்றான்.

1.எந்த கோள்களில் இருந்து அலைகள் வருகின்றதோ
2.அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு வீசப்படும்போது
3.அந்த நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ராக்கெட்
4.கோள்களின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.

அங்கே சென்ற பின் அந்த உணர்வுகளைக் கலந்து அதைக் கவர்ந்து மீண்டும் நாடாக்களில் பதிவாக்கி அலைகளாக மாற்றித் தரையில் இருக்கும் அந்த நிலைகளுக்கு மாற்றுகின்றது.

இதைப் போலத்தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்காளையும் நண்பர்களின் ஆன்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்தினுள் செலுத்தி விட்டால் இந்த உடலில் பெற்ற நஞ்சுகளை கரைத்துவிட்டு
1.அந்த உணர்வின் தன்மை அதற்குள் பதிவாக்கப்படும்போது
2.அவர் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் நம்முடைய எண்ணம் அவர் ஒளியான உணர்வை எளிதில் கவர்ந்து
3.நாம் அந்த பேரருள் என்ற உணர்வை நமக்குள் வளர்க்கவும்
4.பிறவியில்லா நிலை அடையவும் உதவும்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலுக்குள் இருக்கும் தீமையின் உணர்வுகள் அதாவது.. அவர் உடலில் நோய்வாய்ப்பட்ட உணர்வுகள் நமக்குள் வளராது தூய்மைப்படுத்த முடிகின்றது. (இது முக்கியம்)

அதே சமயத்தில் அவர் விண் சென்ற உணர்வின் பால் நம் பற்று வரப்படும்போது இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் பிறவியில்லா நிலைகள் அடையவும் முடிகின்றது.

இல்லையென்றால் இந்த வாழ்க்கையில் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொண்டால் மீண்டும் பிறவியின் நிலைக்கே நம்மை அழைத்து வருகின்றது.

ஆகவே பிறவியில்லா நிலை என்ற அந்த ஏகாந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதைச் சொல்கின்றோம். இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தத் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் எஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் நினைவைச் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்து அதை உங்கள் உடலில் உருவாக்குங்கள்.

அந்த வலுவின் துணை கொண்டு… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் மூதாதையரான அந்தக் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் அந்த உடலில் பெற்ற உணர்வுகள் நஞ்சுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உந்தித் தள்ளுவோம்.

எங்களுடன் நண்பர்களாகப் பழகி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி

POLARIS

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி

அகஸ்தியன் தனது தாய் கருவில் இருக்கப்படும் பொழுது
1.விஷத்தினை வென்று
2.மெய் என்ற உணர்வை அறிந்து
3.தனது வாழ்க்கையில் இருளை அகற்றி
4.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற்ற
5.”அந்த அகஸ்தியன் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள்” நம் பூமியில் படர்ந்துள்ளது.

அகஸ்தியன் பெற்ற… அவனில் விளைந்த அந்த அருள் சக்தி கொண்டு துருவனாக ஆனான்.
1.துருவனாகும் பொழுது அணுவின் இயக்கத்தை உணர்ந்து
2.துருவத்தை உற்று நோக்கி
3.துருவத்தின் வழியாக நம் பூமிக்கு வரும் அந்த அரும் பெரும் சக்தியை நுகர்ந்து
4.அதன் உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

அவ்வாறு அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் அவனுக்குத் திருமணம் ஆகும் போது தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான்.

கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை தங்கள் உடலுக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.

ஆண் பெண் என்ற நிலைகள் வரும் பொழுதுதான் தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இங்கே கரு என்ற நிலைகள் உருவாகின்றது.

கணவன் மனைவி இருவருமே… அந்த அருள் ஒளி தன் கணவன் பெற வேண்டும் என்று மனைவியும்… தன் மனைவி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று கணவனும் அந்த உணர்வினை இருவரும் ஒன்றப்படும் பொழுது அது ஜீவன் பெறும் அணுவாக மாறுகின்றது.

வேதனைப்படும் ஒரு மனிதனின் உணர்வை எடுத்தால் அது முனியாகின்றது. அதன் உணர்வின் தன்மை தான் அது செயலாக்குகின்றது. வேதனையை நீக்கிடும் அருள் ஒளி என்ற உணர்வினை…
1.தன் மனைவி பெற வேண்டுமென்று கணவனும்
2.தன் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்
3.இருவரும் இவ்வாறு எண்ணி எடுத்தால் ஞானத்தைச் சிருஷ்டிக்கும் “ரிஷியாகின்றது..”

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் பூமியின் துருவப் பாதையின் வழியாக இந்தப் பூமிக்குள் வருகின்றது. அதை உற்று நோக்கி… அதையே எல்லையாக வைத்து… அகஸ்தியனும் அவர் மனைவியும் நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அந்த உணர்வின் தன்மைகளை
1.உயிரைப் போல தங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும்
2.ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றனர்
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலைத்து வாழ்கின்றனர்.

இருளை அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் நினைத்து
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.உங்கள் நினைவு அனைத்தையும் இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.
6.உங்களுள் அந்த பேரருளை உருவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி
1.உங்கள் உடல் முழுவதும் ஊடுருவிப் பாய்வதையும்
2.அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பரவுவதை நீங்கள் உணரலாம்.
3.நீங்கள் நுகர்வது அணுவாக உருவாக்கும் அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பெறுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெண்கள் தங்கள் கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற ஏங்கித் தியானியுங்கள்.

ஆண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தங்கள் மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கணவன் மனைவிக்குப் பெற வேண்டுமென்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டுமென்றும் ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியனும் அவர் மனைவவியும் பெற்ற உணர்வை நீங்களும் (கணவன் மனைவி) பெற்று… இருளை அகற்றும் வல்லமை பெற்று… இந்த பிறவியில்… பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியை நீங்களும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று… பேரருள் என்ற நிலைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்கே… “ஊழ்வினை என்ற ஞானவித்தாக” பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது…!

 

எண்ணத்தின் வலுவை எப்படிப் பெற முடியும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul and body - thoughts

எண்ணத்தின் வலுவை எப்படிப் பெற முடியும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!