ஞானத்தின் சக்திகளை எப்படித் தொட்டுக் காட்டுகிறோம்…?

Divine blessings

ஞானத்தின் சக்திகளை எப்படித் தொட்டுக் காட்டுகிறோம்…?

ஒரு பயந்தவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் என்ன ஆகும்…? அதாவது இந்த இடத்தில் தான் கோரமான விபத்து ஆனது… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்… பயந்து விட்டேன்…! என்று அவர் சொன்னால் போதும்.

நீங்கள் அந்த இடத்திற்குப் போனால் தன்னாலே அந்தப் பய உணர்வுகள் தூண்டும். அந்த உணர்வு வந்தவுடனே உங்களை அறியமலே கிடு..கிடு…கிடு…! என்று நடுங்கச் செய்யும்.

இந்த உணர்வுகள் இயங்குவதைப் போல் தான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றேன். ஏனென்றால்
1.குருநாதர் எனக்குத் தெரியாமல் தான்
2.எனக்குள் (ஞானகுரு) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அறிமுகப்படுத்தினார்
3.அதைப் போல் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சகதிகளை “நீங்களும் பெறவேண்டும்…” என்ற ஆசையில்
4.தொடர்ந்து இதைக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆக… இனம் இனத்தைத் தான் பெருக்கும். அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளிலே எல்லோரும் பெறவேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகையினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்கு ஊட்டிய அருள் உணர்வுகளை எல்லாம் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் ஒன்றாக இணைய வேண்டும் என்று
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரை ஈசனாக மதித்து
2.உங்களுக்குள்… உங்கள் உணர்வுக்குள் தொட்டுக் காட்டுகின்றோம்.

இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் சொல்வார்கள்…. தன் ஆசையின் நிலை கொண்டு என்ன செய்கிறார்கள்…? இங்கே “தட்டி” அதை எண்ணியவுடன் அவர்கள் உணர்வுகள் எல்லாம் இங்கே வந்துவிடும்.

அந்த ஆசையின் உணர்வுகள் வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த மந்திரத்தின் உணர்வுகள் வந்த பின்
1.இங்கே பார் வந்துவிட்டது… என்று
2.ஆக்கினையைத் தொடு…! என்று காட்டுவார்கள்.

அவர் ஆசையின் உணர்வுகள் இந்த உடலிலும் இயக்கும். இதே போல் சில மனிதரின் உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும். தொட்டவுடன் அவர்களுக்குக் “கிர்…ர்ர்ர்…!” என்று வரும்.

இபப்டித் தொட்டுக் காட்டிவிட்டால் அவர்களுக்கு அந்த உணர்வே தான் பழக்கம் வரும். “கிர்…ர்ர்ர்…!” என்று நெற்றி வலிக்க ஆரம்பித்துவிடும். பல நிலைகள் எல்லாம் ஆரம்பித்துவிடும். இது அல்ல..!

சாதாரணமாக ஒரு சிறிய பையனைத் தொட்டு “உனக்குள் இப்பொழுது மின்சாரம் பாய்கிறதா பார்…!” என்றால் அந்த உடலில் இருப்பதெல்லாம் இங்கே வரும்.

இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் நிலையும் ஆகும். அதைப் போன்ற நிலைகளில் எல்லாம் யாரும் சிக்காதீர்கள்…!

ஆனால் நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காண்பிப்பது என்பது எப்படி…?

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் அந்த உணர்வுகளை இணைக்கும் நிலையாக
1.இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது (படிக்கும் போது)
2.அது எப்படி ஆனது என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் உடல் அணுக்கள் அனைத்துக்கும் இது தொட்டுக் காட்டுவதாகும்.

நான் பேசுவது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாய்கிறது. அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “உங்கள் எண்ணத்தாலேயே…” நீங்கள் அந்தத் துருவ நடசத்திரத்தின் அருள் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை நீங்கள் எண்ணி வளர்க்க வளர்க்க உங்களுக்குள் பேரொளியாக மாறும். நீங்களே அதை உணர முடியும்,

முற்றும் துறந்தவன் முனிவன் என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Spiritual Realities

முற்றும் துறந்தவன் முனிவன் என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற் பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.


கல்கி நிலைக்குச் செல்லச் செய்யும் தியானம்

மின்னல்களைக் கவர்ந்து… துருவ நட்சத்திரமானவன் தான் அகஸ்தியன்..!

agastyan and lightning

மின்னல்களைக் கவர்ந்து… துருவ நட்சத்திரமானவன் தான் அகஸ்தியன்..! 

 

நம் உயிர் ஒரு தனி நட்சத்திரம் அல்ல…!

ஜோதிடம் பார்ப்பவர்கள்… உதாரணமாக நீ கார்த்திகை நட்சத்திரக்காரர்…! என்று “ஒரு” நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அது பிழை.

ரேவதி நட்சத்திரத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ஆண் பெண் என்ற நிலைகளில் கலந்தால் தான் உயிரணு தனக்குள் ஒன்றை நுகர்ந்து உருவாக்க முடியும்.

நட்சத்திரங்கள் ஆண் பெண் என்று ஒன்றுடன் ஒன்று மோதித் துகள்களாக மாறும் பொழுது நம் பூமிக்குள் அவைகள் வரும் பொழுது அதிலே
1.ஆண் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் பாறைகள் அங்கே ஜாஸ்தி “வலுப் பெற்றதாக…!” இருக்கும்.
2.பெண் பால் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் அந்தப் பாறை அங்கே வேகமாக வளரும்… அது “தன் இனத்தைப் பெருக்கும்…!”

இதைப் போல் தான் செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்று உண்டு. ஆண் செடிகள் இல்லை என்றால் பெண் செடிகளில் இராசி பலன் இல்லை.

நெற் பயிர்களில் பார்த்தோம் என்றால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்தால் அங்கே பலன் இருக்காது… நல்ல மகசூல் காண முடியாது.

மரங்களிலும் அதே போல் தான். பனை மரங்களிலும் ஆண் பெண் என்று உண்டு. பப்பாளி மரத்திலும் ஆண் பெண் உண்டு. ஆண் பப்பாளி மரம் இல்லை என்றால் பெண் பப்பாளியில் கருவுறாது… பலன் கிடைக்காது.

ஆகவே இதைப் போல் ஆண் பெண் என்ற நிலையில் தான் எல்லாமே வருகின்றது. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவன் அகஸ்தியன்.

1.கணவனும் மனைவி இருவரும் தனித்து இருந்தாலும் ஒன்றாக இணைக்கும் பருவம்
2.மனிதனான பின் இதைச் செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தவன் அகஸ்தியன்.

மற்ற மிருகங்கள் தன்னத் தப்பி வாழத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்துப் பரிணாம வளர்ச்சியில் வருகின்றது,

மனிதனாக ஆனபின் கணவன் மனைவி இரண்டு உயிரின் நட்சத்திரங்களும் வேறு வேறு ஆக இருந்தாலும்… இந்த நட்சத்திரங்கள் சேர்க்கப்படும் பொழுது ஒரு உருப்பெறும் தன்மை வருகின்றது.

ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்திற்கு ரேவதி நட்சத்திரம் என்ற பெண் பால் நட்சத்திரம் இருந்தாலும் இதே மாதிரிப் பெண்களுக்கு ஆண் பால் நட்சத்திரத்தின் உணர்வும்
1.இப்படி நான்கு நிலை வரப்படும் பொழுது தான் பிரம்மம் என்ற நிலையே உருவாகின்றது.
2.இந்த நான்கு நட்சத்திரங்களும் இரண்டு உயிருடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.எதைக் கவர்ந்தனரோ அந்த ஒளியின் கற்றையாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்த நிலைகளில் தான் நட்சத்திரங்களின் விஷத் தன்மைகளை முறிக்கும் தன்மை பெற்ற அகஸ்தியன்
1.மின்னல்களைக் கண்ட பின் ஆனந்தமான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்டான்
2.அந்த உணர்வின் தன்மையை எடுத்து உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றிக் கொண்டான்
3.அதாவது உயிரைப் போலவே (நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளாக) மாற்றினான்.

இதை வைத்துத் தான் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) என்னிடம் சொன்னார். ஏய்.. மின்னல் பாய்வதைப் பாருடா…! என்பார். அப்பொழுது எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை வரும்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்க்கும் பொழுது என் கண்கள் போனால் யார் சாமி கொடுக்கிறது..? நாம் பிள்ளை குட்டிக்காரன்..! என்பேன்.

அவர் என்ன சொல்வார்…? நான் சொல்வதை எல்லாம் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…!

சாமி… நான் கண் இல்லாமல் போனால் என்ன செய்வேன்…? என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.

அந்த மின்னலின் இயக்கங்கள் வரப்படும் பொழுது அந்தத் துகள் என்ன ஆகின்றது..?
1.நான் இருக்கிறேன் அல்லவா…
2.நான் உன்னைத் தொடுகிறேன் அல்லவா…! என்பார் குருநாதர்.

அதாவது.. அவர் கையால் என்னைத் தொட்டு எர்த் செய்து (ELECTRICAL WIRE EARTH போல) “இப்பொழுது மின்னலைப் பாருடா…!” என்கிறார் குருநாதர்.

அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் இது எந்த நட்சத்திரத்திலிருந்து வந்தது…? இது எதனுடன் மோதும் பொழுது இந்த மின் கதிர்கள் மாறுகிறது எப்படி என்பதையெல்லாம் காட்டுகின்றார்.

அதற்குப் பின் தான் நான் துணிந்து பார்க்க ஆரம்பித்தேன்…!

குருநாதர் என்னைத் தொட்டுக் காண்பித்தது போல் தான் அந்த உணர்வுகளை எல்லாம் உங்கள் எல்லோரிடமும் உணர்வால் தொட்டுக் காண்பிக்கின்றேன்.

இந்த உணர்வுகள் தொடும் பொழுது உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது…? ஊடுருவுகிறது…! ஒளியாக மாற்றும் பருவம் பெறுகின்றீர்கள்,
1.நீங்களும் அந்த உணர்வினைக் கவர்ந்து ஒவ்வொரு அணுக்களையும்
2.இந்த உயிரைப் போல ஆகும் அந்தத் திறன் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கிறேன்.

கடவுளைப் பார்க்க முடியுமா…? உணர முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Inner god

கடவுளைப் பார்க்க முடியுமா…? உணர முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

எதிர்பாராமல் “சூறாவளி.. சுழிக்காற்று…” வருவதன் காரணம் என்ன…?

anger of nature

எதிர்பாராமல் “சூறாவளி.. சுழிக்காற்று…” வருவதன் காரணம் என்ன…?

 

இருபத்தியேழு நட்சத்திரங்களும் அதனதன் துகள்களை (கதிரியக்கங்களை) வெளிப்படுத்துகின்றது. பூமிக்கு வெளிப்புறத்தில் பிரபஞ்சத்தில் பரவினால் அதனதன் உணர்வுகளுக்கொப்பக் கோள்கள் எடுத்துக் கொள்கிறது.

இதைக் கடந்து வரும் துகள்கள் நம் பூமியின் துருவப் பகுதியின் எல்லைக்குள் வந்தால்
1.அதாவது நம் பூமிக்குள் மோதிவிட்டால் அது மின்னலாக மாறுகின்றது.
2.கடும் விஷத் தன்மைகள் பரவுகின்றது.. மின் கதிர்களாக மாறுகின்றது.

இப்படிப் பல மின்னல்கள் கடலிலே தாக்கினால் மணலாக மாறுகின்றது. அதை யுரேனியமாக மாற்றுகின்றான் விஞ்ஞானி. மின்னல் மரத்தில் தாக்கினால் மரங்கள் கருகிவிடுகிறது.

அதே சமயத்தில் மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவி அதீத வேகத்தின் தன்மை கொண்டால் இதைப் போல் எதிர்நிலையான நட்சத்திரங்கள் பூமிக்குள் ஒன்றுக்கொன்று எதிர்மறை ஆகிக் கொதிகலனாக மாறிப் பாறைகளை எல்லாம் உருக்குகின்றது.

உள்ளுக்குள் ஒன்றாகக் குழம்பாக மாற்றுகின்றது. ஆவியாக மாற்றுகின்றது. பூமிக்குள் கடும் உலோகத் தன்மையாக மாற்றுகின்றது. பல நிலைகள் மாறுகின்றது.

அந்த 27 நட்சத்திரங்களின் துகள்களும் நம் பூமிக்குள் வரும் சமயம் மற்ற நட்சத்திரத்தின் துகள் அதாவது ஒன்று அதிகமாக நம் பூமிக்குள் கவரப்பட்டு இதே மாதிரி மின்னலாக மாறித் தூசிகளாகப் படர்ந்தால் இதனுடைய அழுத்தம் அதிகமாகிறது.

அதாவது இந்தப் பக்கம் மின்னலாகிறது என்றால் இந்தப் புவியில் அதிர்வுகள் ஆகி இதற்கு எதிர்நிலையான தூசிகள் படர்ந்திருக்கின்ற பக்கம் மோதப்பட்டுப் பளீர்…ர்ர்…! என்று மின்னல் வருவதைப் பார்க்கலாம்.
1.மின்னல் இலேசாக இருந்தால் அதற்குத்தக்க காற்று வேகமாக வரும்.
2.ஆனால் அதிகமான மோதலானால் இந்தக் காற்றழுத்தம் அதிகமாகிச் சூறாவளியாக மாறி
3.மரத்தையும் வீட்டையும் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு ஓடிப் போகும்.

மின்னல்கள் கடலிலே தாக்கினால் மணலாக மாறியதை மனிதன் செயற்கையில் யுரேனியமாகப் பிரித்து அணு உலைகளுக்கும் மற்றதுக்கும் பயன்படுத்துகின்றான்.

அதிலிருந்த கசிவுகள் இங்கே துகள்களாக மாற்றப்படும் பொழுது இதே போல் 27 நட்சத்திரங்களின் ஓட்டங்கள் அங்கே வந்தால் மோதி சுழிக்காற்றாகவும் சூறாவளியாகவும் வரத் தொடங்கும்.

எங்கெங்கே இந்த அணுக் கதிரியக்கங்களின் கசிந்த கசிவுகள் இருக்கின்றதோ அதனுடன் மோதப்படும் பொழுது பெரிய பெரிய கட்டிடங்களைக் கூடத் தூக்கி அபேஷ் செய்து கொண்டு போகிறது. கார் பஸ் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போகிறது.

ஒரு சமயம் என்னை (ஞானகுரு) டெல்லிப் பக்கமாகப் போகச் சொன்னார் குருநாதர். ரோட்டிலே நடந்து வந்து கொண்டிருக்கின்றேன். ரோடு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஒரு காம்பவுண்டுச் சுவர்.

வந்து கொண்டிருந்த ஒரு கார் என்ன செய்தது என்றால்.. அந்தக் கட்டிடத்தில் நான்காவது மாடி மேல் கிர்..ர்ர்ர்…! என்று சுற்றிக் கொண்டு போய் நிற்கிறது.

ஒரு பஸ் என்ன ஆனது…? நான் நகர்ந்து கொண்டேன். அந்தப் பஸ் என்னைத் தாண்டிக் கொண்டுபோய் காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப் பக்கம் போட்டுவிட்டது. அங்கே விழுந்து விட்டது.
1.நான் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
2.அந்தச் சுழிக் காற்று என் பக்கம் வரவில்லை. ஆனால் எனக்குப் பயமும் வரவில்லை.
3.ஏனென்றால் குருநாதர் அங்கே போய் இதை எல்லாம் பார்க்கச் சொல்லிச் சொன்னதால் பார்க்கிறேன்.
4.எப்படி.. எதனால்… இந்த மாதிரிச் சூழ்நிலைகள் எல்லாம் உருவாகிறது…? என்று காட்டுகிறார்.

ஒரு ஆட்டைப் (ஆடு) பார்த்தோம் என்றால் அதைப் பம்பரம் போல் சுற்ற வைக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.

ஆகவே எதிர் நிலையாகும் பொழுது இயற்கையில் இந்த மாதிரி சீற்றங்கள் ஆகிறது.

27 நட்சத்திரங்கள் தான் இந்தப் பிரபஞ்சத்திற்கே மூலம். 27 நட்சத்திரங்களும் சூரியனாக மாறிவிட்டால் இந்தச் சூரியனுக்கு வேலை இல்லை. 27 நட்சத்திரங்களும் தனித் தனி பிரபஞ்சமாக இப்பொழுது மாறிக் கொண்டுள்ளது.

1.ஆக… நம்முடைய பிரபஞ்சம் முழுமையாக அழியும் தருணம் வந்துவிட்டது.
2.அதற்குள் ஏ.. மனிதா…! நீ அதற்குள் என்ன செய்ய வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் நீ என்னவாக ஆக வேண்டும்..? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.

ஒவ்வொன்றையும் நேரடி அனுபவமாகக் காட்டித் தான் குருநாதர் எனக்குச் சொன்னார். பார்க்கலாம்… அமெரிக்காவில்… சீனாவில்… சூறாவளி என்று…! பத்திரிக்கைகளிலும் டி.வி.யிலும்.

எங்கெங்கெல்லாம் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்கின்றார்களோ அந்த அணுக் கசிவுகளால் சூறாவளி… சுழிக்காற்று எல்லாம் உருவாகும்.

இயற்கையை மனிதன் கைப்பற்றினாலும் அதனின் வீரியங்கள் மீண்டும் இப்படிதான் வரும்…!

இந்தப் பிரபஞ்சத்திலும் இதே போல் இராக்கெட்டுகளையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பியதால் நம் பிரபஞ்சத்திலும் சூறாவளி உண்டு.

இந்த எதிர்நிலைகள் சூரியனின் ஈர்ப்புக்குள் செல்லும் பொழுது அந்தப் பாதையிலும் சூறாவளிகள் உருவாகிறது. அதனால் பல மாற்றங்களும் திசைகளும் மாறுகிறது.

ஆக மொத்தம் நாம் மனிதனாக வாழும் காலம் மிகவும் குறுகியதே…!

1.இந்தக் காலத்திற்குள் கார்த்திகேயா என்று தெரிந்து கொண்ட அறிவை வைத்து
2.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துப் பதிவாக்கி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆத்ம சுத்தி மூலம் அவ்வப் பொழுது நமக்குள் வலிமையாக்கி
4.நம் ஆன்மாவிலும் உயிரிலும் பரப்பி விட்டால்
5.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும்… “நாம் பிறவி இல்லா நிலை அடைவது திண்ணம்…!”

ஞானத்தில் வளர்ச்சி பெற்ற மனித உயிரான்மாக்களின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

eswarapattaya-namaha

ஞானத்தில் வளர்ச்சி பெற்ற மனித உயிரான்மாக்களின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:-
தூளியில் குழந்தையைப் போட்டுத் தாலாட்டித் தாய் தூங்க வைக்கின்றாள். அந்தக் குழந்தை இன்பமாகத் தாயின் தாலாட்டுடன் மகிழ்ந்து உறங்குகிறது நிம்மதியாக…!

தாய் தன் குழந்தையை அன்பாகத் தாலாட்டி உறங்க வைத்தாலும் அந்தத் தூளி உறுதியாக இருக்கிறதா…? அதில் கட்டியுள்ள துணி கெட்டியாக இருக்கின்றதா,,,? குழந்தையின் மேல் பூச்சி புழுக்கள் விழாமல் உள்ளதா…? என்றெல்லாம் பல தற்காப்புகளைப் பார்த்துத்தான்… அந்தக் குழந்தையைத் தாலாட்டும் இன்ப நிலையில் மகிழ்ந்து… குழந்தையின் நிம்மதியான உறக்கத்திற்கு உகந்த பாதுகாப்பைச் செய்கிறாள் அந்தத் தாய்.

இதிலிருந்து எதனைப் புரிந்து கொண்டீர்கள்..?

இன்று அந்தக் குழந்தைக்குத் தாயாகத் தன் சுயநலத்தை மட்டும் எண்ணாது அந்தக் குழந்தையைப் பேணிக் காத்து அதிலே தன் நிறைவைக் காணும் தாய்
1.அதே குழந்தையை வளர்த்து…
2.அது ஒரு குழந்தையை ஈன்று பேணி வளர்க்கும் முறைக்கு
3.அத்தாயே அக்குழந்தையை வழி நடத்திச் செல்கிறாள்.

இதன் தொடர் வழிக் காலங்கள் உருண்டு கொண்டே வருவதைப் போன்று
1.நம் சப்தரிஷிகளால்… அவர்கள் பெற்றெடுத்த உயர் ஞானக் குழந்தைகளை
2.அவர்களின் வழித் தொடர் ஞானங்கள் வழி நடந்தே செயல் கொள்ள
3.அவர்கள் செயல் உலகெங்கும் வழிபட்டுக் கொண்டுள்ளது.

இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இன்றுள்ள ஜென்ம நிலை இந்தக் கலியில் கடைசியாக முடிவுற்று இதன் நிலை முற்றுப் பெறாமல் இருக்கத்தான் நம் சப்தரிஷிகளின் செயல் ஞானத் தொடர் இன்று உள்ளது.

தன் ஆத்மக் குழந்தைகளை இந்தப் பூமியின் ஈர்ப்பு அமிலத்துடன் சூட்சமம் கொள்ள அவர்கள் வழிப்படுத்தினால் தான் கலியில் ஞானம் பெருகும்.

1.கலியின் வட்டத்தில்… ஞான ஜெந்துக்கள் ஜீவன் கொண்டு
2.அஜ்ஜீவ சக்தியிலிருந்து எடுக்கும் ஜெகத்தின் ஜோதி சக்தியிலிருந்து தான்
3.எந்தச் சக்தியும்… எந்தச் சக்தி என்பது… எந்த ஒரு வளர்ச்சி பெறும் அமில குணங்களின் மண்டல சக்திகளே வளர முடியும்.

இன்றுள்ள இந்தக் கலியில் வாழும் மக்களின் நலனை உயர்வாக்கி ஞானத்தின் பால் அவர்களின் எண்ண ஒளியைச் செயலாக்குவது உலக வளர்ச்சி மட்டுமல்லாமல்
1.எம்மண்டலங்களையும் வளர வைக்கும் சக்திக்கு
2.மனித ஞான வழியில் வந்த செயல் ஞானம் வேண்டுமப்பா…!

இது நாள் வரை தந்து வந்த பாடத்தின் பொருள் புரிந்ததா…?

இன்றுள்ள நம் பூமியில் உள்ள மனித ஆத்மாக்களுக்கு எந்த நிமிடத்தில் எந்த ஆத்மா பிரிகிறது…! என்பது தெரியாத ஓர் சூழ்நிலை உலகெங்கும் உருவாகி… உலக மாற்றத்திற்கு நாள் நெருங்க நெருங்க மனித ஆத்மாக்களின் எண்ணங்களும் சிதறிவிட்டன…!

சிதறியுள்ள ஆத்மாக்களின் ஜெபத்தின் ஈர்ப்பால் நாமும் பொறுக்கி எடுக்கின்றோம். ஆகவே மண்டல உரு வளர்ச்சிக்கு உரு தாருங்கள்…!

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

Prtecting force Polaris north star

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

 

உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்… திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் – சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்… இப்படிச் செய்தார்கள்…! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்… மன நோய்… போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெறவேண்டும்…
2.நாடு நலம் பெறவேண்டும்…
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…
4.தெளிந்த மனம் பெறவேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது…! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது…! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ…! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்…! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்…” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெறவேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது… பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி… எப்படி வாழ்வது…? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து… அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்… தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்…! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு…! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.

தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சி அதைத் தட்டத் தட்டத் தான் அதனின் தரம் உயர்கிறது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

thoughts concentrating

தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சி அதைத் தட்டத் தட்டத் தான் அதனின் தரம் உயர்கிறது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இங்கு வந்து எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு… அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு… அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்… அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”

செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து.. சக்தி வாய்ந்த ஆற்றல்களை நுகர்ந்து… “உடல் நோய்களைப் போக்கும் வழி”

hearing excercise

செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து.. சக்தி வாய்ந்த ஆற்றல்களை நுகர்ந்து… “உடல் நோய்களைப் போக்கும் வழி”

 

தீமைகள் இருந்தால் நமக்குள் அந்தத் தீமைகள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். ஆகவே பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ துயரங்களையோ பார்த்தோம் என்றால் நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?

படத்தில் காட்டியபடி உங்கள் காதிலே இப்படிக் கையை வைத்துக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வு அனைத்தையும் உங்கள் வாயிலே சொல்லிக் கொண்டேயிருங்கள்.
4.அதாவது இங்கே பாய்ச்சி… உங்கள் செவிக்குள் கொடுத்து உடலுக்குள் உணர்வலைகளைப் பரப்புங்கள்.

நீங்கள் இப்பொழுது உங்கள் காதில் வைத்து இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். அந்த உணர்வலைகள் வரும்.

உங்கள் உடலில் எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அங்கே எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால்… இதே மாதிரி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இருதயம் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும்…! என்ற இந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதே போல் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒவ்வொரு நிமிடமும்
1.“ஓ…ம் ஓ…ம் ஓ…ம்” என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது (முதலில் சொன்ன மாதிரி)
2.இந்த உணர்வலைகள் நமக்குள் அந்த ஒலி அலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்கலாம்.

இப்பொழுது இருக்கும் இந்த விஞ்ஞான உலகில் பெரும் தொல்லைகளும் துயரங்களும் வந்து கொண்டிருக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுக்குள்… உங்கள் பேச்சே… செவிகளைக் கொண்டு இந்த உணர்வுகளை உந்தச் செய்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் அணுக்களின் வீரிய சக்தியைப் பெருக்க இது உதவும்.

உடலிலே எந்த வலி வந்தாலும் சரி… உங்கள் உயிரைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உடலில் வலி இருக்கும் பக்கம் உங்கள் கண்ணின் நினைவை இங்கிருந்து செலுத்தி… அதை “உங்கள் உடலில் அந்த வலி நீங்க வேண்டும்…!” என்று சொல்லுங்கள். வலி குறையும்.

எங்கள் உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் விஷ நீர் இறங்க வேண்டும் தரையில் இறங்க வேண்டும் எங்கள் உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள். உடலில் உள்ள பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நரம்புத் தளர்ச்சி போன்ற நிலைகளும் குறையும்.

ஏனென்றால்…
1.வெகு தூரம் உங்கள் நினைவுகளை அங்கே துருவ நட்சத்திரத்தில் செலுத்த
2.அந்த உணர்வுகளை நுகர… உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த…
3.அது துரித நிலைகள் கொண்டு இந்தத் தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.

அருள் வாக்குப்படி உங்களுக்குள் இதை இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து நல்லதாகும்.

ஏனென்றால் இது எல்லாம் வாக்குப் பிரசித்தம் தான்…!

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின் இதைச் செய்தால் அதன் வழி உங்களுக்குள் இந்தத் தீமைகளை அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.

எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் இதை எடுத்துப் பழகுங்கள்.

சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

world of sages

சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்… ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்… “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவன்ற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…! அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.