
செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து.. சக்தி வாய்ந்த ஆற்றல்களை நுகர்ந்து… “உடல் நோய்களைப் போக்கும் வழி”
தீமைகள் இருந்தால் நமக்குள் அந்தத் தீமைகள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். ஆகவே பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ துயரங்களையோ பார்த்தோம் என்றால் நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?
படத்தில் காட்டியபடி உங்கள் காதிலே இப்படிக் கையை வைத்துக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வு அனைத்தையும் உங்கள் வாயிலே சொல்லிக் கொண்டேயிருங்கள்.
4.அதாவது இங்கே பாய்ச்சி… உங்கள் செவிக்குள் கொடுத்து உடலுக்குள் உணர்வலைகளைப் பரப்புங்கள்.
நீங்கள் இப்பொழுது உங்கள் காதில் வைத்து இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். அந்த உணர்வலைகள் வரும்.
உங்கள் உடலில் எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அங்கே எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால்… இதே மாதிரி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இருதயம் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும்…! என்ற இந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதே போல் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒவ்வொரு நிமிடமும்
1.“ஓ…ம் ஓ…ம் ஓ…ம்” என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது (முதலில் சொன்ன மாதிரி)
2.இந்த உணர்வலைகள் நமக்குள் அந்த ஒலி அலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.
இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்கலாம்.
இப்பொழுது இருக்கும் இந்த விஞ்ஞான உலகில் பெரும் தொல்லைகளும் துயரங்களும் வந்து கொண்டிருக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுக்குள்… உங்கள் பேச்சே… செவிகளைக் கொண்டு இந்த உணர்வுகளை உந்தச் செய்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் அணுக்களின் வீரிய சக்தியைப் பெருக்க இது உதவும்.
உடலிலே எந்த வலி வந்தாலும் சரி… உங்கள் உயிரைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உடலில் வலி இருக்கும் பக்கம் உங்கள் கண்ணின் நினைவை இங்கிருந்து செலுத்தி… அதை “உங்கள் உடலில் அந்த வலி நீங்க வேண்டும்…!” என்று சொல்லுங்கள். வலி குறையும்.
எங்கள் உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் விஷ நீர் இறங்க வேண்டும் தரையில் இறங்க வேண்டும் எங்கள் உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள். உடலில் உள்ள பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நரம்புத் தளர்ச்சி போன்ற நிலைகளும் குறையும்.
ஏனென்றால்…
1.வெகு தூரம் உங்கள் நினைவுகளை அங்கே துருவ நட்சத்திரத்தில் செலுத்த
2.அந்த உணர்வுகளை நுகர… உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த…
3.அது துரித நிலைகள் கொண்டு இந்தத் தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.
அருள் வாக்குப்படி உங்களுக்குள் இதை இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து நல்லதாகும்.
ஏனென்றால் இது எல்லாம் வாக்குப் பிரசித்தம் தான்…!
இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின் இதைச் செய்தால் அதன் வழி உங்களுக்குள் இந்தத் தீமைகளை அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் இதை எடுத்துப் பழகுங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.