நம் உடல் உறுப்புகள் முழுவதற்கும் ஆற்றல் மிக்க சக்தியை உடனுக்குடன் எப்படி ஏற்றிக் கொடுப்பது…?

pranayama

இரண்டு நிமிடத்திற்குள் நம் உடல் உறுப்புகள் முழுவதற்கும் ஆற்றல் மிக்க சக்தியை உடனுக்குடன் எப்படி ஏற்றிக் கொடுப்பது…?

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் உதாரணமாக வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் உங்களுடன் நண்பராகப் பழகுபவர்கள் அவர்கள் கஷ்டங்களை எல்லாம் வந்து சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

என் பையன் அப்படிச் செய்கிறான்.. இப்படிச் செய்கிறான்…! என்று அவர் சொல்வதை எல்லாம் நீங்கள் உம்…! கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். உங்கள் மனதில் என்னவெல்லாம் ஓடுகிறது…! என்று பாருங்கள். முந்தி தெரியாது. இப்போது நம்மை எது இயக்குகின்றது…? என்று உணரலாம்.

ரோட்டில் போகிறோம். தூசி படுகிறது. துணிகளைத் துவைத்துக் கொள்கிறோம். மேலே குளித்துக் கொள்கின்றோம். கையைக் கழுவி கொள்கின்றோம்.

இதை மாதிரி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்திப் பழக வேண்டும். அது இல்லை என்று சொன்னால் “நம் உடலும் கெடும்… நம் மனமும் கெடும்…!”

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சு என்று தெரிந்து கொண்ட பின் ஆறாவது அறிவால் அதை மாற்றி அமைக்கின்றது. இது தான் “முருகு…!”

குழம்பு வைக்கும் போது காய்களில் உள்ள காரலை எல்லாம் அகற்றிவிட்டு பல சரக்குகளை இணைத்து அதைச் சுவையாக மாற்றுவது போல
1.எத்தனை கடுமையான உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைத்து
3.நம் உடல் நன்றாக இருக்க வேண்டும்
4.நல்ல பண்புகளும் நல்ல அறிவான நிலைகளும் வர வேண்டும் என்று
5.இதைச் சேர்த்து இணைத்து விட்டோம் என்றால் மற்றவரின் தீமைகளோ துயரங்களோ நமக்குள் விளையாது.

அப்படி உடனுக்குடன் நல்லதாக்க வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளுக்கெல்லாம் அந்தச் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலுவாக ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

1.கணையங்கள்:-
நம் உடலில் உள்ள கணையங்கள் கொழுப்புச் சத்து சர்க்கரைச் சத்து உப்புச் சத்து அவைகளைச் சீராகப் பிரிக்கும் சக்தி பெற்றது. கொழுப்புச் சத்தைச் சீராகப் பிரிக்கவில்லை என்றால் இரத்தத்துடன் சேர்ந்து குழாய்களில் அடைத்துக் கொள்ளும். மற்ற விஷத்தின் தன்மைகளை பிரிக்கவில்லை என்றாலும் அதனால் பாதகம் ஏற்படும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்களில் படர்ந்து எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இவ்வாறு கணையங்களில் சேர்க்கப்படும் பொழுது நாம் சாப்பிடுகிற ஆகாரத்திலிருந்து ரசத்தை எடுத்துப் பிரித்து அதை எல்லாம் வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றும். கொழுப்பு சர்க்கரை உப்பு போன்ற நிலைகளைச் சரியான நிலைகள் அது பிரிக்கும்.

2.நுரையீரல்:-
கல்லீரலில் எது படுகிறதோ அந்த மூச்சு அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் வந்து இழுக்கிறது. வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் வந்து கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்து விட்டது என்றால் என்ன செய்கிறது…?
1.அந்த வேதனை என்ற உணர்வானவுடனே
2.இங்கே படக்… படக்… படக்… என்று அடிக்கிறது. மூச்சுத் திணறல் ஆகிறது.

நுரையீரலில் இத்தகைய தொல்லைகள் இருந்தது என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் சுவாசித்து வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாகக் கூட அந்த மூச்சுத் திணறல் குறையும். அதே போல மண்ணீரலில் குறைபாடுகள் எது இருந்தாலும் இதைப் போல மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

3.சிறுநீரகங்கள்:-
சிறுநீரகத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தது என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சிறுநீரகங்களில் படர்ந்து எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியம் பெற வேண்டும் என்று இப்படிச் சேர்த்து அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

4.கண்கள்:-
உதாரணமாக ஒரு கெட்டதைப் பார்க்கின்றோம். அல்லது சங்கடமானதை ஒருவர் சொல்லும் பொழுது அதைக் காது கொடுத்துக் கேட்கின்றோம்.

கண்களில் உள்ள கருமணியில் பட்டுத்தான் உடலுக்குள் போகிறது.
1.கருமணியில் பட்டு இழுத்து
2.அதனுடன் இணைந்த நரம்பு (WIRE) மூலமாக
3.உடல் எல்லாவற்றிற்கும் அந்தச் செய்தியை அனுப்புகிறது.

ஆனாலும் அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணியில் படர்ந்து விடுகிறது. அடுத்தாற்போல் எதைச் சொன்னாலும் அந்த வேதனையான எண்ணமே நமக்கு வரத் தொடங்குகிறது.

ஆகவே வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இந்த மாதிரி உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் கூடக் கொஞ்சம் நேரம் “ஈஸ்வரா…!” என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கருமணிகளில் படர வேண்டும் என்று எண்ணியவுடனே அங்கேயே பதிவாகிக் கொள்கின்றது. கருமணிகள் சுத்தமாகின்றது.
1.உங்கள் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணினால்
2.ஒளிப் படலங்கள் படர்ந்து தூய்மைப்படுத்துவதைப் பார்க்கலாம்.

5.இருதயம்:-
அதே மாதிரி வாழ்க்கையில் நாம் நல்ல வளர்ச்சி அடைந்து வரும் பொழுது ஒரு நான்கு பேர் வந்து அது இது என்று ஆசை காட்டி அந்த வழியில் சென்ற பின் அது சரி வர நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அந்தச் சந்தர்ப்பம்…
1.நம் எண்ணம் பூராம் அவன் மேல் செல்கின்றது.
2.அவன் மேல் கோபமும் வெறுப்பும் உண்டாக்குகிறது.
3.நம் காரியங்களைப் பார்க்க முடியாமல் தடைப்படுத்துகின்றது.
4.நம் தொழிலைப் பார்க்க முடியாமல் போகிறது.
5.நம் நல்ல குணங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றது.

அதனால் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அதிகமாக அதிகமாக நல்ல அணுக்கள் மயக்கம் ஆகிறது. சிந்திக்கும் வலிமை இழந்து விடுகிறது. அதே உணர்வாக இருந்தால் இருதயமும் பலவீனம் அடைந்து விடுகிறது.

இந்த மாதிரி ஆகாதபடி தடுப்பதற்குத்தான் தினமும் அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளுக்குள் அந்த வலிமையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை இரத்தங்களில செலுத்தி இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படித் தனித்தனியாக
1.எந்தெந்த நேரத்தில் எந்தெந்த உறுப்புக்களுக்குச் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டுமோ கொடுத்து
2.நம் உடலையும் நம் ஆன்மாவையும் தூய்மையாக்கும் அந்தப் பழக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
3.அதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி…! ஒரு நிமிடத்தில் அல்லது இரண்டு நிமிடத்தில் இதை எடுத்துக் கொள்ள முடியும்…!

 

நம் உயிரையும்… ஈஸ்வரபட்டரையும்… “நேரடியாக இணைக்கும் பாடல்…!”

Eswar

நம் உயிரையும்… ஈஸ்வரபட்டரையும்… “நேரடியாக இணைக்கும் பாடல்…!”

 

யாரெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வுகளை ஞானகுரு மூலம் உபதேச வாயிலாகப் பதிவு செய்துள்ளார்களோ இன்றும் பதிவு செய்து கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு இந்தப் பாடல் மிகப் பெரிய வரப்பிராசதம்.

என்னுள் நிறைந்திருந்து…
என்னை ஆள்பவனே குருதேவா… குருதேவா…!

என்னுள் ஆத்ம பேரொளி கண்டிடவே…
எனக்கருள் செய்வாய் குருவே…!
எனக்கருள் செய்வாய் குருவே… குருவே…!
எனக்கருள் செய்வாய் குருவே… குருவே…!

என்னுள் அனைத்து அணுவும் குருவே
என்னுள் அனைத்து அணுவும் குருவே…!

நின்னருள் பெறவே எனக்கருள் செய்வாய் குருவே…! குருவே…….!

தினம் தினம் உன்னை மறவாதிருக்க…
தினம் தினம் உன்னை மறவாதிருக்க…
எனக்கருள் செய்வாய் குருதேவா…! குருதேவா…!

நின்னருள் என்றும் எனக்குள் நிலைத்திருக்க…
அருள்வாய் குருவே…! அருள்வாய் குருவே…! அருள்வாய் குருவே…!

உடல் உள்ளவரை… உனை மறந்திடாதிருக்க அருள்வாய் குருவே…
உனை மறந்திடாதிருக்க அருள்வாய் குருவே… குருவே…!

கோள்கள் மாறினாலும்…
கோள்கள் மாறினாலும்…
என் உணர்வுகள் அனைத்தும் உன்னை மறவாதிருக்க…
அருள்வாய் குருதேவா… குருதேவா…! குருதேவா…!

புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரையும் விண்ணிலே சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் நம்மிடம் நேரடியாக இணைக்கச் செய்யும் பாடல் இது.

நம் எல்லோருடைய உயிரிலும் விண் சென்ற அந்த மாமகரிஷியின் அருள் உணர்வுகள் இணைய வேண்டும் என்பதற்குத்தான் ஞானகுரு இந்தப் பாடலைப் பாடுகிறார்.

பெரும் பகுதி இந்தப் பாடலை அவருடன் (AUDIO) சேர்ந்து பாடும் பொழுது என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வருவதைப் பல தடவை அனுபவித்திருக்கின்றேன்.

அப்பொழுது மனதிற்குள் இருக்கும் அனைத்தும் இறுக்கமான உணர்வுகளும் அகன்று
1.“நான் உன்னுடன் என்றும் இருக்கின்றேன்…” என்று
2.உயிருடன் கலந்த உணர்வாக குருவின் உணர்வுகள்
3.மன பலம் ஊட்டியதைப் பல முறை அனுபவித்திருக்கின்றேன்.

இது என்னுடைய அனுபவம்

கீழ்க்கண்ட இணைப்பை (LINK) உபயோகித்து ஞானகுரு பாடிய பாடலைக் கேட்கலாம். பதிவிறக்கமும் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.
https://app.box.com/s/pesao7meu6y6en5bs7q1

இந்தத் தியானம் செய்தால் “நஷ்டம்” என்ற வார்த்தை வராது…!

souls-cleaning

இந்தத் தியானம் செய்தால் தொழிலில் நஷ்டம் என்ற வார்த்தை வராது…!

 

ஒருவன் நமக்குக் கெடுதல் செய்கிறான். அதைக் கண்ணில் பார்க்கின்றோம். அவன் உணர்வு நுகர்ந்த பின் அந்த இயக்க அணு ஜீவ அணுவாக நம் இரத்தத்தில் கலந்து விடுகின்றது.

அவன் உணர்வு நமக்குள் இருக்கப்படும் போது அவன் எனக்குத் துரோகம் செய்தானே…! உருப்படுவானா…? என்று அவனைப் பற்றி எண்ணுகின்றோம்.

அப்போது இந்த உணர்வலைகள் அந்த உடலில் பாய்ச்சி புரை ஓடுகிறது. சாப்பிட முடியாமல் செய்கிறது. வாகனம் ஓட்டிக் கொண்டு போனான் என்றால் அந்த வாகனத்தை ஓட்ட முடியாமல் தடைப்படுத்துகிறது. ஆக்சிடென்ட் ஆகிறது.

இதையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

1.நீங்கள் ஏதாவது முக்கியமான ஒரு வேலை செய்து கொண்டு இருக்கும் போது
2.உங்களுக்கு ஆகாதவர்கள் ஏதாவது அங்கே பேசினார்கள் என்றால்
3.உங்கள் ஞாபக சக்தி திடீரென்று மறையும்.
4.இது “புரை…!” என்ற நிலைகள்.

ஞாபக சக்தி குறைந்தது என்றால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை இல்லாமல் போய் விடும். அப்போது அந்த இடத்தில் தொழிலில் நஷ்டத்தை உண்டாக்கிவிடும்

இந்த மாதிரி ஒருவருக்கு ஒருவர் இயக்கக்கூடிய இந்த உணர்வுகள் இப்படி இருக்கின்றது. மற்றவர்கள் உணர்வு நம் உடலில் இருக்கிறது.

ஆகவே இந்தத் தியானத்தில் வந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் நிலைகள் என்ன என்றால் தியானம் எடுத்துத் “தொழிலில் நஷ்டம்…!” என்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்கள் முழுவதும் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று கொஞ்ச நேரம் சிந்தித்தீர்கள் என்றால்…
1.ஏன்…? எதனால்…? என்ற அந்த ஞானம் வரும்.
2.அப்போது அதில் எந்தக் குறைபாடு என்று அறிந்து அதைத் திருத்தி அமைக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

ஆனல் எல்லாம் நஷ்டம் ஆகிப் போய்விட்டது…! நாளை என்ன செய்வது…? என்று பலத்தை அங்கே கொடுத்து விட்டோம் என்றால் அடுத்து நல்ல சிந்தனை வராது.

தொழிலில் நாம் வளர வேண்டும் என்றாலும் கூட சில நேரங்களில் நஷ்டம் ஆகும் பொழுது அதை வளர்த்து விட்டால் அது வலுவாகி விடும். பின் அது தான் நம்மை இயக்கும்.

அதை மாற்றுவதற்கு எந்தச் சந்தர்ப்பமாக வந்தாலும் நாம் ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொள்ள வேண்டும். அதைத் (நஷ்டம்) தூக்கி எறிந்து விட வேண்டும்.

காரணம் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி அதை இழுத்துச் சுவாசிக்கும் பொழுது மூக்கின் வழி நுகரப்பட்டு உயிரில் படுகின்றது.

அதாவது நம் கண்ணின் நினைவு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றது. கண் வழியாகக் கவர்ந்த உணர்வை உயிரில் இணைத்திட வேண்டும். இணைத்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப் பெறுகிறது.

நமக்குள் சங்கடம் வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தாலும் அதை இங்கே தடைபடுத்தி உள்ளுக்குள் (உடலுக்குள்) போகாமல் தடைப்படுத்தி விடுகின்றது.
1.முதலில் அதை நிறுத்திப் பழக வேண்டும்.
2.ஏனென்றால் அது நம்மை இயக்கி விடக்கூடாது.
3.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி விட வேண்டும்.
4.சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…!

அடுத்த நிமிடம் அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இந்தத் தியானத்தின் முறைப்படி நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் (தலையிலிருந்து கால வரை) வரிசைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி பழக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தில் துன்பமோ தீமையோ வரும் போது உடனே நம் உடலை எச்சரிக்கை செய்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அது வலு ஏற்றிய பிற்பாடு நம் உடலுக்குள் போவது இல்லை.

ஏனென்றால் வேதனை வெறுப்பு என்கிறது எல்லாம் வாலி. அது சக்தி வாய்ந்தது. ஆனால் அதை வென்றது துருவ நட்சத்திரம். அப்போது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது சேர்க்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இச்சைப்படும் பொழுது இச்சாசக்தி. நம் உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் சென்று கிரியை ஆகின்றது.

அந்த மெய் ஞானியான அகஸ்தியன் அவன் எப்படித் தீமையை நீக்கினானோ அதே உணர்வு அந்த ஞானமாக நம்மை இயக்கும். ஞான சக்தி. வேதனையான உணர்வை நமக்குள் வராதபடி… நம்மை இயக்காதபடி தடுக்கும்.

இது ஒரு பழக்ககத்திற்கு வந்து விட்டது என்றால் எல்லாம் சரியாகப் போகும். தையல் மிஷினில் தைத்துப் பழகியவர்கள் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே “ஜர்..ர்ர்…!” என்று தைத்து விடுகின்றார்கள்.

பின்னல் ஆடையைக் கையில் பின்னுகின்றவர்களைப் பார்த்தாலும் பேசிக் கொண்டே பின்னுகின்றார்கள். அதைப் பழகாதவர்களோ பார்த்துப் பார்த்துப் பின்னினாலும் கூட ஒழுங்காக வருவது இல்லை.

அதே மாதிரித் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டோம் என்றால் சர்வ சாதாரணமானது. “டக்…!” என்று மாற்றிக் கொள்ளலாம்.

தியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…!

Eswaraya Gurudevar Tapovana Guru Peedam

தியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் எத்தனையோ அவஸ்தைப்பட்டு (ஞானகுரு) மெய் ஞானத்தைப் பெற்று வந்தோம். அப்படிப் பெற்ற நிலையை நான் உங்களைத் தேடி வந்து சொல்லும் போது எத்தனை பேர் கேட்டுப் பின்பற்றுகின்றீர்கள்…?
1.எத்தனையோ பேருக்கு அருள் சக்திகளைப் பாய்ச்சி நோய்களையும் நீக்கி விட்டேன்.
2.அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்து ஞான வழியில் வளர்ந்திருக்கின்றார்கள்…!

கடுமையான நோய்களுடன் வந்தாலும் அது நீங்கிய பின் அடுத்து நான்கு பேருக்கு இவர்கள் சொன்னால் “அது மற்ற எல்லோருக்கும் நல்லதாகுமே…!” என்ற எண்ணத்தில் தான் யாம் அதைச் செய்தோம்.

ஆனால் அப்படி நோயை நீக்கிக் கொடுத்தபின் இங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியிடம் போய் ஐம்பதாயிரம் காணிக்கை செலுத்தி விட்டு வந்து எனக்குச் பலவிதமான சாப்பாட்டைக் கொடுத்து தபோவனத்திற்கு இரண்டு தென்னை மரக்கன்றையும் வைத்து விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

ஆக அவர்கள் செய்த வேண்டுதலின் படி அந்த வெங்கடாஜலபதி தான் நோயை நீக்கிக் கொடுத்ததாகக் காணிக்கை செய்து விட்டு வருகிறார்கள்.

ஆனால் யாம் சொல்வது
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணிப் பெறுங்கள்.
2.அது உங்கள் உடலுக்குள் விளைந்த பின் உங்கள் துன்பங்களையும் நோய்களையும் அகற்றும்.
3.நீங்கள் நன்றாக ஆவீர்கள்.
4.நீங்கள் நன்றாக ஆனதும் உங்களுக்குள் விளைந்த உணர்வு கொண்டு அடுத்தவருக்கும் இதைச் சொல்லுங்கள்.
5.உங்கள் உணர்வு அவர்களுக்குள் பாய்ந்து அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பொழுது
6.அவர்களும் உடல் நலம் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் தான் யாம் எல்லாவற்றையும் செய்தோம்.

ஆனால் அதை எல்லாம் சரியாகப் பின்பற்றாதபடி அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். எதை..?

கொஞ்சம் சக்திகளைக் கொடுத்து விஷயத்தைக் காட்ட ஆரம்பித்த பின் அதை எல்லாம் தன் வசதிக்குதான் கொண்டு போய் விட்டார்களே தவிர மனமாற மக்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை.

இது ஏதோ பெரிய அபூர்வ சக்தி…! நான் தான் கடவுள். எனக்குள் எல்லாமே இருக்கிறது. இதை நான் செய்கிறேன். ஏதாவது ஒன்றைச் செய்தால்
1.“நான் செய்தேன்…” என்று நீ போய்ச் சொல்…!
2.என்னால் நல்லதாக ஆனது என்று என்று சொல்
3.பெரும்பகுதி இப்படி விளம்பரம்படுத்திக் கொள்கிறார்கள்…!

அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்கள் கிடைக்கப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அந்த தனித்தன்மை வைத்துப் பலருக்கும் யாம் செய்து கொடுத்தோம்.

ஆனால் அதன் வழி வந்தவர்கள் எல்லாம் தோல்வி (FAILURE) ஆனதால் தான் “சரி… இனி நேரம் இல்லை…!” என்ற காரணத்தால் இப்போது எல்லோருக்குமே நேரடியாகத் தெரியும்படி (OPEN) இப்பொழுது கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளின் அருளாற்றல்களை எல்லோருக்கும் வேகமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அந்தத் துணிவிலே தான் இருந்து கொண்டு இருக்கிறேன்.

1.நீங்கள் மகரிஷிகளை எண்ணி உங்கள் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் வேண்டித் தியானத்தைச் செய்யுங்கள்.
2.உங்களுக்கு நல்லாகும் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம்.
3.தியானத்தைச் செய்யாதபடி நல்லது ஆகாது.
4.அந்த ஆசையிலேயாவது “மெய் ஞானத்தைப் பெற வரட்டும்…!” என்பதற்காகச் சொல்கிறோம்.

ஏனென்றால் நீங்கள் ஒரு ஆள் அந்த ஆற்றல்களைப் பெற்றால் தொழிலில் நீங்கள் நூறு பேரை பார்த்தாலும் உங்கள் சொல் அந்த நூறு பேருக்கும் நன்மை தரும்.

ஆனால் (சாதாரணமாக) இப்பொழுது நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். அந்த நூறு பேர் கஷ்டம் என்று உங்களிடம் வந்து சொல்லும் பொழுது நூறு பேர் உணர்வும் உங்களுக்குள் வந்து விடும்.
1.ஆக முதலில் நன்றாக இருப்பீர்கள்.
2.பிறர் கஷ்டத்தைக் கேட்ட பின் அந்தக் கஷ்டம் எல்லாம் உங்களுக்கு வந்து விடுகிறது.

இந்த மாதிரிச் சில சூழ்நிலைகளில் இருந்து உங்களை மீட்டுவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம். நீங்கள் ஒவ்வொருவரும் இதை எண்ணி வளர்த்துக் கொண்டால் உங்கலுக்கும் நல்லதாகின்றது. உங்கள் சொல் மற்றவருக்கும் நல்லதாகும்.

பிறரின் தீமைகளைப் பார்க்கும் போது உடலில் நோய் வருகிறது. ஆனால் அந்த மகரிஷிகளின் உணர்வை வலுவாக்கிய நிலைகள் கொண்டு நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்கள் நோய் குறைகிறது. அந்தளவுக்கு இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் “நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்…!”

நான் செய்து கொடுப்பேன் என்று என்னை (ஞானகுரு) எண்ணுவதற்குப் பதில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தின் “குருபீடத்தை நினைத்து… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…!” என்று நீங்கள் தியானியுங்கள்.

உங்கள் உடல் நலமாகும். அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் தொழிலும் நன்றாக இருக்கும். இந்த மாதிரி எடுத்துக் கொண்டால் எல்லோரும் பொதுவாக தபோவனத்தின் ஈர்ப்புக்கு வருகின்றனர். யாரையுமே போற்றுவது இல்லை.

நான் எடுத்த பங்குக்கு அந்த உயர்ந்த நிலையை நான் அடைகிறேன். அது போல அவரவர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கொப்ப அந்தப் பலனை நிச்சயம் அடைய முடியும்.

எல்லோரையும் மெய் ஞானிகளாகத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. அந்த ஆசையிலேயே போகிறது. (ஞானகுரு உபதேசித்த வருடம் 2002)

ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தியை எத்தனையோ வருடம் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் இத்தனை சிரமத்திலேயும் மீட்டி வரும் போது “எல்லோரும் இதைப்பெற வேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான்…” இதை மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்.

தபோவனம் வளர்கிறது என்றால் அது மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரால் தான், அவருடைய உணர்வு தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம். அத்தனை பேருக்கும் சந்தர்ப்பம் அது தான்.

நான் செய்தேன் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது…! நான் எதைத் தேடி வைத்திருக்கின்றேன்…? என்னிடம் எந்தப் பொருளும் கிடையாது. அருளைத் தான் நான் தேடி வைத்திருக்கிறேன்.

அந்த அருளால் என்ன செய்கிறேன்…? உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணினீர்கள் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறலாம். அந்தச் சக்திகளை உணர முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும் கம்ப்யூட்டரின் ஆற்றலும் மனித உடலிலிருக்கும் உயிர் உணர்வுகளைப் பிரித்தாளும் ஆற்றலும்

Image

powers-of-human

பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும் கம்ப்யூட்டரின் ஆற்றலும் மனித உடலிலிருக்கும் உயிர் உணர்வுகளைப் பிரித்தாளும் ஆற்றலும்

 

ஒரு கம்ப்யூட்டரில் எந்தெந்த மொழிகளில் அதிலே பதிவு செய்கின்றனரோ அந்தக் கணக்கீடுகள் (CALCULATION) எதுவோ அதற்குத் தக்கவாறு மொழி பெயர்ப்புகளைப் பதிவாக்கி (OPERATING LANGUAGE) ஆணையிடப்படும் பொழுது அது இயக்கிக் காட்டுகின்றது.

பதிவாக்கிய நிலைகளைத் திருப்பி அவர்கள் இயக்கப்படும் போது அந்தந்த மொழி வரிசையில் கம்ப்யூட்டரை இயக்குகின்றது.

அதே சமயத்தில் மொழி மாற்றத்தைத் தனக்குள் உணர்வதற்காக (TRANSLATION)
1.ஒரு மொழியின் அதிர்வை இன்னொரு மொழியின் நிலைகள் மீது ஏற்றி
2.அதிர்வொலியைச் சிறிது… பெரிது…! என்ற அழுத்தத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைத்து…!
3.நூறு மொழிகள் இருப்பினும் ஒரு மொழியை வைத்து அந்த நூறையும் மொழி பெயர்த்து விடுகின்றார்கள் இன்றைய விஞ்ஞான அறிவு கொண்டு.

இதைப் போல விஞ்ஞான அறிவில் எழுத்துச் “சுருக்கம்…” என்ற நிலையில் ஒருவர் ஒரு சொல்லைச் சொன்னாலும் சொல்லி முடிப்பதற்குள் முதலும் கடைசியும் சேர்த்து இரண்டு எழுத்திற்குள் சுருக்கெழுத்தாக (SHORT HAND) செயல்படுத்துகின்றார்கள்.

பத்து எழுத்தாக இருப்பினும் இடைமறித்து ப்ளஸ்(+) அதாவது குறுக்கு எழுத்துகளில் அதனுடைய உணர்வினை நீக்குப் போக்கு என்ற நிலைகள் நான்கெழுத்து ஐந்தெழுத்து என்று வரிசையில் வரப்படும் போது பிளஸ்… ஒரு இண்டு(X)… ஒரு புள்ளி… அதற்கப்புறம் இந்த முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் கொண்டு வந்து ஒருவர் பேசப் பேச அந்த மொழிகளை (TRANSACTION) எடுத்து எழுதிக் கொள்கின்றார்கள்.

ஒரு மனிதன் அவன் பேசும் சொல்கள் எதுவோ அதை அர்த்தம் புரிந்து கொள்ளும்படியாக அந்த உணர்வுகளைச் சுருக்கெழுத்தாக எழுதுகின்றார்கள் தன் அறிவு கொண்டு.

அப்படிச் சுருக்கெழுத்தாகப் பதிவு செய்ததை மீண்டும் படிக்கப்படும் போது அங்கே ஒரு மணி நேரம் பேசினாலும் ஒரு பத்து நிமிடத்திற்குள் அந்த மொழிகளைச் சுருக்கெழுத்துக்களில் கண்டு கொள்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

அதைப் போன்று தான் கம்ப்யூட்டரின் மூலமாகவும்
1.அதாவது அழுத்தத்தின் உணர்வுகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது
2.மற்ற மற்ற எத்தனையோ மொழிகளின் தன்மையையும்
3.அவர்கள் ஆணையிடும் அழுத்தத்திற்குத் தக்கவாறு அந்த மொழி பெயர்ப்புகளாக மாற்றுகின்றார்கள்.

ஒருவர் பேசியதை எப்படிச் சுருக்கெழுத்தாக எழுதினோமோ இதைப்போல அழுத்தங்களை மாற்றி அமைத்த பின் அந்தக் கம்ப்யூட்டர் விடை கொடுத்து அந்த மொழியின் சாரங்களை உடனுக்குடன் எடுத்துக் கொடுக்கின்றது,

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றுமே சூரியனில் இருந்து வரக்கூடியது. அதைத் தான் நாம் வெயில் (ஒளிக் கதிர்கள்) என்று சொல்கிறோம். வெப்பம் உருவாகும் சக்தி. காந்தம் அரவணைக்கும் சக்தி. விஷம் இயக்கும் சக்தி.

ஒரு மனிதனால் பேசப்பட்டதை ஒரு இயந்திரத்தின் மூலமாகப் பதிவாக்கினாலும் அதே மற்றொரு இயந்திரத்தின் துணை கொண்டு அலை வரிசைகளாகப் பரப்பப்படும் போது அதைச் சூரியனுடைய காந்தப்புலன் அறிவு கவர்ந்து (அதே வெப்பம் காந்தம் விஷம்) தாங்கி அலைகளாகப் பரவி வருகின்றது.

அந்த அலைகளை மீண்டும் அறிவதற்கு ஒரு இயந்திரத்தின் மூலம் பல அலை வரிசைகளில் வைத்து (FREQUENCY) அந்த ஒலி ஒளி அலைகளை கவரச் செய்து நாம் வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டரிலோ டி.வி.யிலோ காண்பதற்கு விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துகின்றார்கள்.

இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் ஊன் என்று உண்டு. நாம் கண்களால் உற்றுப் பார்த்துக் கவர்ந்து கொண்ட உணர்வின் நினைவலைகள் அதற்குள் பதிவாகின்றது.

அப்படிப் பதிவாக்கியதன் துணை கொண்டு அதே நினைவலைகளைக் கொண்டு வரும் பொழுது நாம் மீண்டும் அந்த அலைகளைக் காற்றிலிருந்து இழுத்துச் சுவாசித்து நாம் செயல்பட முடிகின்றது,
1.இது இத்தனையும் பிரித்து
2.நம்மை உணரச் செய்வது
3.அந்த உணர்ச்சிகளை ஊட்டுவது
4.அந்த உணர்ச்சிகளால் இயக்கச் செய்வது (TRANSACTION) நம் உயிர் தான்,

நாம் சுவாசிக்கும் உணர்வலைகள் உயிரில் பட்டு இயங்கும் நிலையும் அதே போல் உணர்வின் அலைகள் ஒரு இயந்திரத்தின் மூலம் எப்படி மாற்றப்பட்டு அது இயக்கும் நிலையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக விஞ்ஞான அறிவினை இணைத்து மெய் ஞானிகள் கண்ட மெய் உணர்வை உணர்த்துகின்றோம்,

நமக்கு வேண்டிய சுதந்திரம்

independence day

நமக்கு வேண்டிய சுதந்திரம்

உதாரணமாக… வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாவரத்தின் வேரினை நாம் அறுத்து விட்டால் இதற்கு நீர் கொடுக்கும் ஜீவ சக்தி இழந்த பின் அந்த மரம் தன் இனத்தைக் கவரும் தன்மையை இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நண்பர் என்ற நிலையில் ஒருவருடன் பழகி அவரின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டாலும் சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் பகைமையாகிவிட்டால்
1.அதனின் நினைவாற்றல் வராதபடி தடுக்கும் நிலையாக
2.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அதனுடைய விழுதுகளும் தடைப்படுகின்றது.
3.அவரைப் பற்றிய பகைமையான நினைவுகள் மீண்டும் நமக்குள் எழுவதில்லை.

இப்படி இந்தப் புவியில் வாழும் அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுடன் வளரப்படும் பொழுது
1.ஒருவருக்கொருவர் வெளியிட்ட பகைமை (தீமை செய்யும்) உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்திலே நிலைக்காது
2.அது நகர்ந்து சென்று கடலின் ஈர்ப்புக்குள் அது சென்று மறைந்து விடுகின்றது
3.நம்முடைய ஆன்மாவும் இந்தப் பரமான்மாவும் (காற்று மண்டலமும்) தூய்மையாகின்றது.

இவ்வாறு பூமியின் நிலைகளில் பரிசுத்தப்படுத்தும் உணர்வலைகள் பெருகும் பொழுது பேரன்பு கொண்ட நல்ல சிந்தனைகள் மக்களின் மத்தியிலும் தூண்டப்படுகின்றது.

ஞானிகளால் காட்டப்பட்ட நெறிகளை அவர்கள் உணர்த்திய பேருண்மைகளை நாம் இவ்வாறு பயன்படுத்துதல் வேண்டும்.

மதத்தின் பெயராலேயோ அரசியலின் பேராலேயோ இனத்தின் பேரால் நமக்குள் பதிவு செய்த தீமையின் உணர்வுகளை அகற்றிவிட்டு
1.உலகில் உள்ள அனைத்து மக்களும் நாம் ஓர் இனம்.
2.நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகள்
3.அவனின் இயக்கத்தால் தான் இயங்குகிறது ஒவ்வொரு உடலும்…! என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.

உயிராக நின்று ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு வெறுப்பின் தன்மையோ வேதனையான உணர்வுகளையோ கொடுக்காது நாம் அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

நம் உயிரான ஈசனுக்கு நாம் செய்யக் கூடிய கடமைகள் எது…? என்று உணர்ந்து
1.நமது வாழ்க்கையிலும் சரி… நம் உடலுக்குள்ளும் சரி…
2.நம் நல்ல குணங்களைச் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும்.

அப்படி நம் நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பாதுகாப்புக் கவசமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து தீமையான உணர்வின் இயக்கங்களிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட்டு இந்த மனித வாழ்க்கையில் சுதந்திரமாக அனைவரும் வாழ வேண்டும் என்று தியானிப்போம் தவமிருப்போம்…!

குழந்தைகள் தாய் தந்தையருக்குக் கொடுக்க வேண்டிய பேரானந்தப் பெரு மகிழ்ச்சி..!

Image

School children

குழந்தைகள் தாய் தந்தையருக்குக் கொடுக்க வேண்டிய பேரானந்தப் பெரு மகிழ்ச்சி..!

 

தாய் தந்தையர் எத்தனையோ சிரமத்திற்கு மத்தியில் உங்களைப் பள்ளியில் சேர்த்து நல் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நிலையையும் எதிர்காலத்தைச் சிந்தித்து செயல்படும் கல்வி அறிவினையும் புகட்டும் நிலையாக அனுப்பி உள்ளார்கள்.

உங்கள் அன்னை தந்தை உங்களுக்கு உடையும் உணவும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதியும் செய்து கொடுக்கின்றார்கள்.

ஆகவே பள்ளியிலே படிக்கும் குழந்தைகளாக இருப்போர் நீங்கள் அனைவரும் உங்கள் அன்னை தந்தை கொடுக்கும் வாக்கினை மதித்து நடந்து அவர்களை மகிழச் செய்யும் நிலையாக வளர்ந்து காட்ட வேண்டும்.

1.அந்தத் தாய் தந்தையரை நினைவில் கொண்டு அவர்களை மகிழச் செய்தால்
2.உங்கள் ஊர் மக்களை மகிழ்ந்திடும் நிலையாக உருவாக்குவீர்கள்.
3.உங்கள் ஊர் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றால்
4.இந்த உலக மக்களும் மகிழ்ந்திடும் நிலையாக உங்கள் செயல்கள் அமையும்.

தாய் தந்தையரை மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்றால் குழந்தைகளாக இருக்கும் உங்களுக்குள் பகைமை உணர்வை ஊட்டும் தீமையான உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் அடக்கிட வேண்டும்.

1.தீமைகளை அடக்க வேண்டும் என்றால் உங்கள் தாயின் பேரன்பை நீங்கள் பெற வேண்டும்.
2.தாயின் பேரன்பைப் பெற்றால் மகரிஷிகளின் அரும் பெரும் சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி மெய் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து
1.உங்கள் அன்னை தந்தையரைப் பேரானந்த நிலை பெறச் செய்யும் நிலையையும்
2.உங்கள் அன்னை தந்தையரைப் பேரின்ப நிலைகள் பெறச் செய்யும் நிலையையும்
3.பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நீங்கள் செயல்படுத்துதல் வேண்டும்.

உங்கள் அன்னை தந்தை பேரானந்தம் கொண்டு மகிழ்ந்திட்டால் அவர்கள் விடும் நல்ல மூச்சலைகளும் இந்த பூமியில் படர்கின்றது.

நமது தாய் தந்தையருக்கு எவ்வளவு அன்புடன் சேவை செய்கின்றோமோ அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றனரோ
1.அந்த மகிழ்ச்சி அடையும் உணர்வுகளும் நாம் மகிழ்ந்திடச் செய்த உணர்வுகளும் இதே சூரிய பகவானால் கவரப்பட்டு
2.நமது பூமித் தாய்க்கு மகிழ்ந்திடும் உணர்வாகப் பரப்புகின்றது.
3.குழந்தைகளாகிய நீங்கள் அவ்வாறு செய்வீர்கள். இந்த உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக வளர்வீர்கள்.
4.நிச்சயம் நீங்கள் செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஆகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊரையும் உலகையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் வளர வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

நம்மை வாழச் செய்த பூமிக்கு ஏதாவது சேவை செய்திருக்கின்றோமா…..?!

mother earth day

நம்மை வாழச் செய்த பூமிக்கு ஏதாவது சேவை செய்திருக்கின்றோமா…..?! 

ஓர் விஷக் குண்டைத் தூவினால் தூவிய அந்த நச்சுத் தன்மைகள் பூமிக்குள் பரவப்படும் போது அதைச் சுவாசிப்போர் அனைவரும் மடிகின்றனர்.

அவர்கள் மடிவது மட்டுமல்லாதபடி அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் வீசப்படும் போது பூமியில் எல்லாப் பகுதிலும் பரவுகின்றது. மற்றவர்கள் அதை நுகரப்படும் போது அவர்கள் நல்ல சிந்தனைகளை இழக்கச் செய்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிடும் உணர்வுகளே வளர்ச்சியாகின்றது.

ஆகவே நாம் வாழும் இந்தத் தாய் பூமிக்குச் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்…? என்ற நிலைகளில் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி நமக்குள் நின்று தீமையை விளைவிக்கும் தீமையான உணர்வுகளை அடக்கி அந்த உலக மக்கள் அனைவரும் நாம் ஒன்றென்ற நிலையில் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நாம் பிறந்த தாய் நாட்டைக் காக்க எண்ணுகின்றோம். தாய் நாடாக இருப்பினும் இந்த நாட்டில்தான் நாம் வளர்ந்தோம் என்று இருப்பினும்
1.இந்தப் பூமி தான் நமக்குத் தாய்…!
2.எந்தெந்த நாட்டிலே… ஊரிலே… நாம் பிறந்திருந்தாலும் நமக்குத் தாய் இந்தப் பூமியே…!

நாம் மகிழ்ச்சியூட்டும் நல்ல செயல்களைச் செயல்படுத்தினால் நம்மைப் பெற்றெடுத்த தாய் அதை நுகர்ந்தறியப்படும் போது அந்தத் தாயின் உடலிலும் மகிழ்ச்சி தோன்றுகினறது. அதைப் போன்று தான்
1.நாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான மூச்சலைகள் அனைத்தும்
2.நம் தாய் பூமியில் படரப்படும் போது நம் தாய் நாடும் மகிழ்ந்திருக்கும்.
3.நம் பூமித் தாயும் மகிழ்ந்து இருக்கும்.

ஒரு குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் அனைத்தும் ஒருக்கிணைந்து ஒற்றுமையான உணர்வுடன் தாயுடன் நாம் அரவணைத்துச் செல்லும் போது அதைக் காணும் நம் தாய் நம்மை வாழ்த்துகின்றது… வளர்க்கின்து…!

அதைப் போன்று நாம் வாழும் இந்தப் பூமித் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு இதிலே வாழும் மக்கள் நாம் அனைவரும் சகோதரர்கள் என்று எத்தகைய பேதமில்லாது வாழ்ந்திடலே எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

1.எண்ணில் அடங்காத மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பூமியில்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடித்து
3.நாம் வெளிப்படுத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் நறுமணங்களாகப் படர்ந்து
4.நம் எல்லோரையும் மகிழச் செய்யும்.

அனைவரும் சகோதரர்கள் என்று ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும் சாம்ராஜ்யமே… “இராம ராஜ்யம்…!”

Image

Rama Rajyam

அனைவரும் சகோதரர்கள் என்று ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும் சாம்ராஜ்யமே… “இராம ராஜ்யம்…!”

 

மனிதனுக்குள் கோப குணம் குரோத குணம் சலிப்பு குணம் சஞ்சல குணங்கள் இப்படி எத்தனையோ குணங்கள் இருப்பினும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவன் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குத் தக்கவாறு அது அது முன்னணியில் இருக்கும்.

1.ஒவ்வொரு மனிதனுக்கும் அப்படிப்பட்ட குணங்கள் முன்னணியில் இருந்தாலும்
2.அதை எல்லாம் தணிக்க சாந்தம் என்ற நிலைகள் கொண்டு அனைத்தையும் சாந்தமாக்கி
3.”சகோதர உணர்வுகள் வளர வேண்டும்…!” என்று அந்த உணர்வின் வேட்கையைக் கூட்டிவர் தான் மகாத்மா காந்திஜி.

இந்த உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அடிமைப்படாது ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உடலில் உள்ள அந்த நல்ல உணர்வின் தன்மையைச் சகோதர உணர்வுடன் வாழ்ந்திடச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் “இராம ராஜ்யம்…!” என்றார் காந்திஜி.

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் கோபமோ குரோதமோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வேதனையோ கோபமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்வுகள் அனைத்தும் நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ அவை அனைத்தும் மகிழ்ந்திடும் செயலாகச் செயல்படுத்தும் போது அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை எண்ணும் போது நமக்குள் ஒருக்கிணைந்நு நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது. இதான் இராம ராஜ்யம் என்பது.

(இராமன் என்றால் எண்ணங்கள். நம் எண்ணங்கள் மாறுபட்ட நிலையில் இல்லாது ஒன்றுக்கொன்று இணைந்த நிலையில் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது மன அமைதியும் மன மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது)

1.ஆகவே அப்பொழுது நம்முடைய எண்ணமே (இராமன்)
2.நமக்குள் இருக்கும் தீமைகளை அடக்கி
3.மகிழ்ந்திடும் செயல்களைச் செயல்படுத்துகின்றது என்ற நிலையை
4.அன்று மகாத்மாஜி தெளிவாக எடுத்துரைத்தார்.

ஏனென்றால் நமக்குள் எத்தனையோ கோடிக்கணக்கான எண்ணங்கள் உண்டு. பகைமை உணர்வுகள் உண்டு. தீமைகள் செய்விக்கும் உணர்வுகள் உண்டு.

ஆனால் அதைப் போன்ற தீமை செய்யும் உணர்வுகளை வளர விடாது உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அனைவரையும் மகிழ்ச்சி என்ற நிலைகள் பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் செயல்பட்டால் அந்த எண்ணம் தான் ராம ராஜ்யம் என்பது.

ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சிப்படுத்தும் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து வளர்க்கப்படும் போது பகைமை உணர்வு இல்லாது “மகிழ்ந்திடும் சாம்ராஜ்யமாக…!” அத்தகைய உணர்வுகள் வருகின்றது.

1.மத பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் இல்லாத நிலைகள் கொண்டு
2.நாம் அனைவருமே சகோதரர்கள் என்ற ஒருக்கிணைந்த வலு கொண்டு
3.மகிழ்ந்திடும் உணர்வின் சொல்லாக நாம் சொல்லும் பொழுதும் அதை நினைவாக எண்ணும்போதும்
4.உலக மக்கள் அனைவரும் நாம் அந்த சாம்ராஜ்யமாக “இராம ராஜ்யமாக…!” வாழ்ந்திட முடியும்.

ஈஸ்வரபட்டரின் அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெற வேண்டும்…

eternal-sages-world

ஈஸ்வரபட்டரின் அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெற வேண்டும்… 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்த மெய் ஞானத்தின் உணர்வுகள் எண்ணிலடங்காதது. அதை எல்லாம் சொல் வடிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றால் இந்த மனித உடலுக்கே ஆயுள் பத்தாது.

அதை எல்லாம் படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலம் இல்லை. நேரமும் இல்லை.

ஆகவே அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வைப் பதிவு செய்த
1.குருநாதரின் அத்தனை ஆற்றல்களையும் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று
2.அவ்வப்பொழுது அந்தத் துணுக்குகளை எடுத்து
3.அவரின் நினைவைக் கூட்டி உணர்வை ஒளியாக்கி
4.ஒளியான உணர்வின் தன்மையை எண்ணமாக்கி அதைத்தான் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு ரூபத்திலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அவர் எனக்குள் பதிய வைத்த உணர்வின் தன்மைகளை நான் மீண்டும் நினைவு கொள்ளும் போது
1.எதை அவர் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் தன்மையை
2.இந்த உடலையும் அவரே வழி நடத்துகின்றார்.
3.என் உடலுக்குள் வந்தல்ல.

விஞ்ஞான முறைப்படி நாடாக்களில் பதிவு செய்ததை மீண்டும் இயக்கச் செய்வது போல் குருநாதர் மூலம் எனக்குள் பதிவானதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகளே என்னை அது இயக்குகின்றது அந்த மெய் ஞானத்தின் உணர்வுகளையும் என்னைப் பெறச் செய்கின்றது.

அவர் எனக்குச் செய்தது போல்…
1.நீங்கள் எல்லோரும் மெய் ஞானம் பெற வேண்டும் என்று
2.அவர் செய்த உணர்வின் இயக்கத்தைத்தான் நானும் செய்கின்றேன்…!
3.அந்த உணர்வே தான் என்னை அவ்வாறு செய்விக்க வைக்கின்றது…!
4.ஆகவே குரு அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய வழியில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். நம் உடலையும் மனதையும் மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம்.

இந்த வாழ்க்கையில் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம். பேரானந்த நிலை என்ற பெரு நிலைகளுடன் ஒன்றி வாழ்ந்திடும் நிலையை உருவாக்குவோம்.

அந்த மகா ஞானிகளுடன் ஒன்றி வாழும் நிலையை நாம் அனைவரும் பெறுவோம்.