இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை நாம் அவசியம் பெற்றுப் பழக வேண்டும்…!

Solar bliss

 இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை நாம் அவசியம் பெற்றுப் பழக வேண்டும்…! 

நம் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளும் எப்படிச் சூரியனைச் சுழன்று வருகின்றதோ இதைப் போல பேரண்டத்தில் ஒவ்வொரு நிலையும் இயங்கிக் கொண்டுள்ளது.
1.ஆதியிலே ஆரம்ப நிலைகள் சூரியனாகத் தோன்றிய அந்த நிலையை மையமாக வைத்துத்தான்
2.நமது பிரபஞ்சம் சுழன்று கொண்டு வருகின்றது.

அப்படிச் சுழன்று வந்தாலும் மற்ற பேரண்டத்தில் இருந்து வரக்கூடிய விஷத் தன்மையை நம் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் இருபத்தியேழும் இருபத்தியேழு குணம் கொண்டிருந்தாலும் அந்த விஷத்தை வீழ்த்தி நமது பிரபஞ்சத்திற்குச் சமமான நிலைகளாக அது இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

அதாவது நம் எண்ணத்தால் மற்றொன்று தன்னை அணுகாதபடி செயல்படுத்துகின்றோம் அல்லவா…! இதைப் போல இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களும் தன்னுடைய கதிரியக்கச் சக்தி கொண்டு பேரண்டத்திலிருந்து வரக்கூடிய விஷத் தன்மையை முறித்து நம் சூரியக் குடும்பத்திற்குப் பாதுகாப்பானதாக மாற்றி அனுப்புகின்றது.

அதை எல்லாம் கோள்கள் கவர்ந்து எடுத்து அந்த உணர்வின் சத்தைக் கலக்கி மற்ற சத்துக்களைத் தனக்குள் கலந்து அது வெளிப்படுத்தும் நிலையைச் சூரியன் தனக்குள் எடுக்கின்றது.

அவ்வாறு எடுக்கும் அந்த உணர்வின் சக்திக்குள் இருக்கும் விஷத் தன்மையைச் சூரியன் பிரித்து வெப்ப காந்தங்களாக மாற்றிச் சக்தி வாய்ந்த நிலையாக ஒரு இயக்கத் தன்மையாகப் பெறுகின்றது.

1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் “நட்சத்திரங்கள்…”
2.நாம் எண்ணக்கூடிய எண்ணம் எதை எதையெல்லாம் எண்ணி நுகர்கின்றோமோ எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும் அதையெல்லாம் நம் உடலாக அது “கோளாக…” மாறிவிடுகின்றது.
3.அந்தக் கோளிலிருந்து விளைந்த சத்தை நம் உயிர் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்களாக மற்றதை இயக்கும் உணர்ச்சியின் தன்மையை அது பெறச் செய்கின்றது. உடலுக்கு நம் உயிர் “சூரியன்…”

பிரபஞ்சம் எவ்வாறோ அதே போலத்தான் நம் உடலின் தன்மையும் இயங்குகின்றது. விண்வெளியிலிருந்து வரக்கூடிய நிலையை இருபத்தியேழு நட்சத்திரங்களும் மாற்றிக் கோள்களுக்கு அதை உணவாகக் கொடுத்துக் கோள்கள் படைத்து வெளிப்படுத்துவதை சூரியன் தனக்குள் அது இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது. அதைப்போலத்தான் நம் உயிரின் தன்மையும் மாற்றுகின்றது.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் நமக்குள் எடுத்துச்
3.சமப்படுத்தும் நிலையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நவக்கோள்கள் என்பது நவக்கிரகமாகக் காண்பித்து ஒன்றையொன்று பார்ப்பதில்லை என்று வைத்திருப்பார்கள். ஏனென்றால் ஒவ்வொரு கோளின் சக்திக்கும் அது தனக்குள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது. ஆனாலும் அப்படிப்பட்ட எதிர்நிலையான நிலைகளைச் சூரியன் தனக்குள் சமப்படுத்தி அதை இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

ஒவ்வொரு குணங்களின் நிலையும் நமக்குள் ஒத்துக் கொள்ளாத நிலை வரும் போது தான் எதிர்மறையான நிலைகளாகி நமக்குள் மனக் கலக்கமும் பல நோய்களும் உருவாகின்றது.
1.அதை எல்லாம் நமக்குள் சமப்படுத்துவதற்கு
2.நவக் கோள்களின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்றைய மகரிஷிகள் அனைவருமே அவர்கள் உடலிலே இதையெல்லாம் சமப்படுத்தி சூரியன் எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப்போல தன் உடலுக்குள் வரக்கூடிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலையாக ஒளியாகச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் இருக்கின்றனர்.

அந்த இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் எடுத்துத் தன் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியினை வளர்த்து ஒளியாக மாற்றியவர்களை நாம் அறிந்து கொள்வதற்காகச் “சப்தரிஷி – ஏழாவது நிலை” என்று உருவகப்படுத்திக் காட்டினார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதனுடன் இணைத்து இந்த உணர்வின் தன்மையை நாம் உயிருடன் சுவாசிக்கச் செய்யப்படும்போது இவை அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக நம்மை மாற்றுகின்றது.

அவ்வாறு மாற்றச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

ஒரு பலகாரம் சுடும் பொழுது பல பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையின் தன்மையாக உருவாக்குகின்றோம். இதைப்போல இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும் நவக் கோளின் சக்தியையும் எடுத்து
1.சமப்படுத்தும் நிலையாகச் சுவையாக மாற்றி
2.அதை அறியும் ஆற்றலாகவும் ஒளியாக மாற்றும் நிலையாகவும்
3.மெய் ஞானிகள் கற்றுணர்ந்த அதே உணர்வின் தன்மையை நாமும் பெறவேண்டும்.

யாம் (ஞானகுரு) இதை உபதேசிக்கும் போது நீங்கள் எந்த அளவுக்கு ஈர்ப்பு கொண்டு இதைச் சுவாசிக்கின்றீர்களோ இது அனைத்தையுமே உயிரான குருவின் நிலைகள் கொண்டு குருக்ஷேத்திரப் போராக மாற்றுகின்றது.

அதாவது நம் உடலுக்குள் இருக்கின்ற நிலையும் நாம் சுவாசித்த அந்த மகா ஞானிகளின் உணர்வு இரண்டையும் கலக்கச் செய்து
1.அதனின் ஜீவ சத்தியாக நமக்குள் ரசமாக வடித்து
2.ஒளியின் சுடராகப் பேரொளியாக நம் உடலிலே விளையச் செய்கின்றது.

சகோதர உணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் விண்ணிலே வாழ்வாங்கு வாழலாம்…!

Image

religion

சகோதர உணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் விண்ணிலே வாழ்வாங்கு வாழலாம்…!

 

மக்கள் அனைவரும் நன்மையைக் கருதி ஏங்கினாலும் மதங்கள் அனைத்தும் நன்மையைப் பற்றிச் சொல்லி இருந்தாலும் தன் மதத்தை மட்டும் காக்கும் நிலையாகவும் தன் இனத்தை மட்டும் காக்கும் நிலையாகத்தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தன்னைக் காத்திடும் நிலைகளைத்தான் உருவாக்கியதே தவிர பிறருடைய நிலைகளைத் தன் சகோதரன் என்ற நிலைகள் உருவாக்கவில்லை. வாயளவிலே “சகோதரர்” என்று பேசிக் கொள்கின்றோம் அவ்வளவு தான்…!

ஆனால் இந்தப் பூமியிலே ஒருவருக்கொருவர் இணைந்து தான் நாம் வாழுகின்றோம். யாரும் இணையில்லாது வாழ்வது இல்லை.

ஒரு தொழிலைச் செய்தாலும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை கொண்டுதான் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றோம். நட்பில்லை என்றால் வியாபாரம் இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் தொடர் கொண்டு தான் இந்த வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

ஒருவருக்கொருவர் பகைமை கொண்டால் மனித வாழ்க்கையை ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தம். இதைப்போன்ற நிலைகள் இல்லாதபடி நாம் மாற்றிட வேண்டும்.

கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அதனுடைய வாசம் சிறிது நேரமே இருக்கும். அடுத்த நிமிடம் அந்த மணம் மறைந்து விடுகின்றது.

இதைப்போல உயர்ந்த நிலைகளை நாம் பேசினாலும் கடலைப்போல ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனையும் வெறுப்பும் உப்புக் கரிப்பது போல நமக்குள் கைப்பான வாழ்க்கையாகத்தான் மனித வாழ்க்கையில் அதிகம் இருக்கின்றது.

நாம் நல்லதை எண்ணினாலும் கடலிலே கரைத்த பெருங்காயத்தைப் போன்றே சிறிது நேரமே அந்த நறுமணங்கள் இருக்கின்றது. அடுத்த கணம் அந்த நறுமணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

1.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல எண்ணங்கள் அனைத்தும் சிறிது நேரத்தில் மறைந்து
2.அடுத்துக் கவலையும் சோர்வும் வெறுப்பும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளே நமக்குள் தூண்டி
3.நாளை என்ன செய்வது…? என்ற நிலைக்கே ஆளாகிவிடுகின்றோம்.

நல்லது செய்ய வேண்டும் என்று சிறிது நேரம் சிந்திக்கின்றோம். ஆனால் அடுத்த கணம் எப்படி நடக்குமோ…? இது எப்படி நடக்கப் போகின்றது…? என்று தனக்குத் தானே பலவீனமாகி சந்தேக உணர்வுகள் தோன்றி விடுகின்றது.

இதைப்போன்று தான் மனித வாழ்க்கையில் நஞ்சிற்குள் சிக்கப்பட்டு நம்முடைய எதிர்காலத்தையும் அது நசியச் செய்து கொண்டிருக்கின்றது.

இயற்கையில் விளைந்த நெல் மற்ற தானியங்களில் உருவாகும் மணி முத்துக்கள் பயிரிலே இணைந்து வளர்வதற்கு நஞ்சு உதவியாக இருந்தாலும் அதை நம் ஆறாவது அறிவு கொண்டு அகற்றிவிட்டு வேக வைத்துச் சமைத்துச் சுவைமிக்கதாக உருவாக்கி உட்கொள்கின்றோம்.

உதாரணமாக நாம் பொங்கல் வைக்கப்படும் போது அதை வேக வைத்து அந்தப் பொருள்களில் உள்ள நஞ்சினை நீக்கி அதிலே பல நல்ல பொருளைக் கலக்கப்படும் பொழுது மிகுந்த சுவையாகின்றது.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் நம்மை அறியாது ஒரு தொழிலின் நிமித்தம் சிறிது குறைகள் ஏற்பட்டு அதனால் வேதனையான உணர்வை நாம் கவர்ந்தாலும் பொங்கலை எப்படிச் சுவையாக உருவாக்குகின்றோமோ அதைப் போல நமக்குள் பொங்க வைக்க வேண்டும்.
1.அந்த மகிழ்ச்சியின் தன்மை பொங்கி வழிந்து
2.நாம் பிறரைக் காணும் போதெல்லாம் அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.
3.நாம் இடும் மூச்சலைகள் இந்த நாட்டிலே அது படர்ந்து தீமை விளைவிக்கும் நிலைகள் அனைத்தும் அகன்றிட வேண்டும்.
4.ஏனென்றால் நஞ்சின் தன்மை நீக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு.

நஞ்சினை நீக்கிடும் உணர்வைத் வளர்த்துக் கொண்ட அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கலக்கச் செய்யும் போது அந்த உணர்வு ஆற்றல் மிக்க நிலையாக நமக்குள் விளைகின்றது. இத்தகைய உணர்வின் எண்ண அலைகள் படரப்படும் போது தீமைகள் அகற்றிடும் நிலையே இங்கே வருகின்றது.

இன்று எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மதத்தோராக இருந்தாலும் அவர்கள் கடை வைத்தால் நாம் அங்கே சென்று நமக்கு வேண்டிய பொருள்களை அங்கு வாங்குகின்றோம். அவர்களுக்கு வேண்டியது இருந்தால் நம்மிடம் வந்து வாங்குகிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை.
2.இவ்வாறு நாம் வேற்றுமையற்ற நிலைகள் வாழப்படும் போது
3.மற்ற நிலைகளில் ஏன் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும்…?

எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு பகைமை உணர்வை ஓங்கச் செய்யாது அதைத் தாளச் செய்ய வேண்டும்.

சகோதர உணர்வுகளையும் சகோதரப் பாசங்களையும் ஏற்படுத்தும் நிலைக்குத்தான் மகரிஷிகள் நமக்குப் பல பண்டிகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

ஒட்டு மொத்த நாட்டு மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் தன்னை அறியாத பகைமை வேற்றுமைகளை அகற்றி தெய்வீகப் பண்பை வளர்க்கவும் பண்பின் பெருக்கமாகச் சகோதர உணர்வுகளை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு மாதத்திலும் உருவாக்கப்பட்டது தான் பண்டிகைகள்.

அகண்ட அண்டங்களும் பிரபஞ்சங்கள் எல்லாமே ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.
1.தனித்த சக்தி ஒன்று தான் என்ற நிலையில்
2.அப்படிப்பட்ட ஒரு சக்தி எங்கேயும் இல்லை.
3.ஆகவே சகோதரத்துவத்தை நாம் அனைவரும் வளர்ப்போம்.
4.பகைமையில்லாது எதிர்ப்பில்லாது மகிழ்ந்து வாழ்வோம்.
5.மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று ஏகாந்த நிலை பெறுவோம்.

அன்னை தந்தையர் என்பவர்கள் சூரிய சந்திரர் போன்றவர்கள்…! சூரியனையும் சந்திரனையும் ஒதுக்கித் தள்ளி விட்டால் அங்கே சூனியம் தான்…!

Sun moon - father mother

அன்னை தந்தையர் என்பவர்கள் சூரிய சந்திரர் போன்றவர்கள்…! சூரியனையும் சந்திரனையும் ஒதுக்கித் தள்ளி விட்டால் அங்கே சூனியம் தான்…!

 

நீ என்ன சொல்வது…? நீ சொல்லி நான் என்ன கேட்பது…? அவனுக்கு அப்படிச் செய்கிறார்கள்… இவனுக்கு இப்படிச் செய்கிறார்கள்…! என்று வீட்டிற்குள் ஒருவருக்கொருவர் பேசும் நிலையில் குடும்ப ஒற்றுமையே இன்று சிதறிக் கொண்டிருக்கிறது.

அன்னை தந்தையர் பல சிரமங்கள் பட்டுக் குழந்தைகளை வளர்த்தாலும் அந்தக் குழந்தைகள் அன்னை தந்தையை மதிக்கும் நிலையை இழந்து விட்டது.

சூரியனையும் பூமியையும் மறந்து விட்டால் அந்த உணர்வின் சக்தியில்லாமல் எப்படிப் பிறக்க முடியும்…?
1.இந்த இரண்டையும் மறந்து விட்டால் தற்கொலை தான் ஆகும்.
2.தற்கொலை ஆனால்…. எதை அழித்திடும் உணர்வு கொண்டோமோ
3.அந்த உணர்வின் தன்மை தான் நமக்குள்ளும் இங்கே விளையும்.

ஆகவே நம் அன்னை தந்தையரை நாம் மதித்து நடக்க வேண்டும். அவர்கள் நம்மை உருவாக்கியவர்கள். அவர்களே நமக்குக் கடவுள். நம் குருவும் அவர்கள் தான்… தெய்வமும் அவர்கள் தான்…! என்ற இந்த எண்ணத்தை நமக்குள் பொங்கச் செய்ய வேண்டும்.

உயர்ந்த எண்ணங்கள் நமக்குள் பொங்கி வழியும் நிலையாக அந்த மகிழ்ச்சியின் தன்மையாக அன்னை தந்தையரை மதிக்கும் நிலையாக நாம் இருக்க வேண்டும்.

அதே போன்று தொழிலும் சரி… வாழ்க்கையின் எந்த நிலையாக இருந்தாலும் சரி… இந்தக் குறைகள் நமக்குள் நிலைக்கவே கூடாது. அதை நீக்கிட வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கி அதை நமக்குள் வலுப்படுத்திக் கொண்டபின்
1.நாம் யார் யாரிடமெல்லாம் பகைமை கொண்டோமோ
2.எந்தப் பகைமையான உணர்வு நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றதோ
3.அது நம் உடலிலிருந்து… நம் நினைவின் பதிவிலிருந்து… அகற்றிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

குடும்பத்திலும் தொழிலிலும் மற்ற இடங்களில் இவ்வாறு வரக்கூடிய பகைமையை அகற்றுவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உபதேச வாயிலாக ஓர் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

நினைவு கூர்ந்து நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் ஒவ்வொரு எண்ணமும் ஒரு வித்தாகின்றது. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அது முழுமை பெற்றால் அது ஒரு வித்தாகின்றது.

ஒரு வித்தைப் பூமியில் விதைத்தால் தனக்குள் இருக்கக்கூடிய உணர்வின் சத்தைக் கவர்ந்து அது செடியாக வளர்ந்து தன் இனமான வித்தை மீண்டும் உருவாக்குகின்றது. அதைப் போன்றது தான் இந்த உபதேச வாயிலாக யாம் (ஞானகுரு) கூறும் உணர்வுகள்,

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படி அவர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சக்தியை அருள் வித்தாக எனக்கு உபதேசித்து அருளினார்.

அந்த உணர்வின் நினைவலைகள் கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பருகும் நிலையாகப் பெறும் நிலையாகப் பெருகும் நிலையாக
1.எமக்குள் உருவாக்கிய அந்தச் சக்தியை நீங்களும் பெற முடியும்.
2..உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்க முடியும்
3.அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழலாம்.

மரண பயத்தையும்… பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள்

Polaris protection

மரண பயத்தையும்.. பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள் 

பாம்போ மற்ற உயிரினங்களோ ஒரு தரம் ஒன்று எதிர்த்துத் தாக்கி விட்டால் அதைக் கண்டு அஞ்சும்.

ஒரு நாய் குரைத்துக் கொண்டு கடிக்க வருகிறதென்றால் ஒரு கல்லை எடுத்து அதை நீங்கள் எறிந்தீர்கள் என்றால் அடுத்த முறை உங்களைக் கண்டாலே அது குரைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விடும்.

ஆனால் அதே சமயத்தில் அந்த நாய் வரும் போது எதிர்த்துத் தாக்குமோ…? என்ற எண்ணத்தில் நீங்கள் ஐய்யய்யோ… ஐய்யய்யோ…! என்று ஓடினால் விரட்டி கொண்டு வரும். நம் உணர்வுக்குத்தக்க நுகர்ந்த பின் அது தாக்கும் நிலைகள் வருகின்றது.

கல்லைக் கொண்டு அடித்தால் இந்த உணர்வு வலியான பின் “நம்மைத் தாக்குபவன்” என்ற உணர்வு கொண்டு அஞ்சி ஓடுகிறது.

இதைப்போன்ற இயற்கையின் நியதிகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் வலுவான உணர்வை எடுக்கப்படும் போது தீமையான உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

தீமைகள் வரும் சமயம் பயமானால்… “ஈஸ்வரா…!” புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே புருவ மத்தியில் சேர்த்து அடைத்துப் பழக வேண்டும்.

1.அப்படிச் சேர்த்து விட்டால்
2.உயிரில் பட்டு அந்தப் பய உணர்வு நமக்குள் உள் செல்லாதபடி
3.மன உறுதி கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று
4.சிந்தித்துச் செயல்படும் சக்தி வலுவாக வரும்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லும்போது வழியில் நரி இருக்கிறது என்று நாம் அதைக் கண்டு பயந்து ஓடினால் துரத்தும். அப்படித் துரத்தும் சமயம் நாம் வேகமாக ஓடி வரும் பொழுது ஒரு மரத்தின் அருகில் வந்து “சடார்…!” என்று விலகி விட்டால் போதும்.

குருநாதர் சொன்ன முறைப்படி நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது இதே போல ஒரு சமயம் யானை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. மற்றொரு சமயம் புலி என்னை துரத்திக் கொண்டு வருகிறது. இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

புலி வேகமாக வந்த பின் “நேராக… மரத்தை நோக்கி ஓடு…” என்றார் குருநாதர். நேராக ஓடிய பின் “டப்…” என்று திரும்பிக் கொள்…! என்றார். அவர் சொன்ன மாதிரி நான் செய்ததும் வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்டது புலி.

அதே மாதிரி இன்னொரு சமயம் யானை எம்மைக் குறி வைத்துத் துரத்துகிறது. நேராக மரத்தை நோக்கி நேராக ஓடி “டபக்..” என்று விலகி நான் அடுத்த மரத்தின் பக்கம் ஓடியவுடனே யானை வந்த வேகத்தில் பிரேக் (BRAKE) போட முடியாதபடி மரத்தில் போய் முட்டுகிறது.

இதே போல பல நிலைகள். இவையெல்லாம் மனிதனால் செய்யக் கூடிய நிலைகள்.

மரத்திலே இரண்டு முறை முட்டிய உடனே யானை சோர்ந்து போகிறது. விரட்டிப் பார்க்கிறது… இரண்டு அடி பட்ட உடனே தன்னாலே விலகி விடுகிறது. இந்த உணர்வின் இயக்கங்கள் மனிதனானவன் தன்னைக் கொன்று விடுவான்…! என்று எண்ணுகிறது.

தனி ஒரு யானையாக இருந்தால் மனிதனை விரட்டுகிறது. யானை கூட்டமாக இருந்தால் மனிதனை விரட்டாது. ஆனால் அது பயமில்லை. பயத்தால் தாக்குவது தான் யானை.

அதிலிருந்து வந்தவர்கள் தான் நாம். ஆகையினால் “மனிதன் அனைத்தும் அறிந்தவன்…!” என்று உணர்வின் அலையால் மற்ற உயிரினங்கள் அறிந்து கொள்ளும் சக்தி வருகின்றது.

1.ஒரு உயிரினம் மற்றதை எப்படித் துரத்துகிறது…?
2.நாம் எப்படி அஞ்சி ஓடுகின்றோம்…?
3.நுகர்ந்து விட்டால் அந்தப் பயமான அதிர்ச்சியான உணர்வுகள் நம் உடலுக்குள் என்ன செய்கிறது…?
4.இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…? என்று
அதையெல்லாம் அனுபவத்தில் அறிந்து கொள்வதற்காகத்தான் நமது குருநாதர் காடு மேடு மலைகளிலெல்லாம் அலையச் செய்து இயற்கையின் உணர்வுகளை அறிந்துணரும்படி செய்தார்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

1.இவையெல்லாம் அறிவால் அறிந்து…
2.உணர்வால் பதிவாக்கி…
3.அந்த உணர்வின் தன்மையை மீண்டும் எண்ணும்போது அந்த உணர்ச்சிள் கிளர்ந்து
4.நம்மைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்க நம்மைச் செயல்படுத்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

 

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஆத்ம சுத்தி மூலம் பெறும் வழி

Serene cleaning of soul

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஆத்ம சுத்தி மூலம் பெறும் வழி

உலக அனுபவங்கள் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டுக்குள்ளும் பல மலைப் பகுதிகளுக்குள்ளும் அலைந்து திரியச் செய்தார். அப்பொழுது பல வகைகளிலும் யாம் சிரமப்பட நேர்ந்தது.

சிரமங்கள் ஏற்படும் பொழுது துயரப்படும் நிலையே வருகின்றது. பின் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது குருவை நினைக்கின்றேன்.

அவரை நினைத்து அவர் உபதேசித்து அருளிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் விளைய வைக்கும் பொழுது என் வாழ்க்கையில் வந்த தீய வினைகளிலிருந்து நான் விடுபட முடிந்தது.

அதைப் போன்று தான் உங்களுக்குள் வரக்கூடிய துன்ப வினைகளை நீக்குவதற்கு எம்மை நாடி வருகின்றீர்கள்.

நீங்கள் எத்தனையோ நன்மைகள் செய்திருந்தாலும் பிறருடைய துன்பமான உணர்வுகளை நீங்கள் கேட்டறிந்த நிலையில் அந்தத் துன்பத்தை அறிந்த உணர்வுகள் உங்களை இயக்காத வண்ணம் தடுக்க
1.மெய் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட
2.தீமைகளை வென்றிடும் ஆற்றல் மிக்க சக்திகளை ஊழ்வினையாகப் பதியச் செய்து
3.உங்கள் எண்ணத்தால் அதை நுகரச் செய்கின்றோம்.

ஆகவே யாம் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது உங்களை அறியாது உங்களுக்குள் வரும் தீமைகளை மாற்றியமைக்க இது உதவும்.

சாமி (ஞானகுரு) ஏதோ செய்வார்..! என்ற நிலைக்குப் பதில்
1.நான் கண்டுணர்ந்த இந்த மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில்
2.சாமி சொன்னார்…! என்ற நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை
3.நிச்சயம் பெற முடியும்…! என்ற ஏக்கத்துடன் ஆத்ம சுத்தி செய்து கொண்டால் போதும்.

உங்கள் வாழ்க்கையில் நன்மை செய்யும் பொழுது எதிர் நிலையான உணர்வை நீங்கள் சுவாசிக்க நேருகின்றது. அத்தகைய துன்புறுத்தும் உணர்வுகளிலிருந்து மீள
1.நீங்கள் சாமி சொன்னார்…! என்ற இந்த நிலையை எண்ணத்தில் வைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகர்ந்து அது உங்கள் உடலுக்குள் சென்று
4.உங்களை அறியாது வேதனைப்படச் செய்யும் அந்த நிலையைத் துடைக்கச் செய்கின்றது.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை எண்ணி வேகமான உணர்வுடன் அதை உங்கள் உடலுக்குள் ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் செலுத்தும் பொழுது உங்கள் உடலுக்குள் இந்த வீரியத் தன்மைகள் பிறக்கின்றது.

எப்படி வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போல உங்கள் வாழ்க்கையில் உங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும் சாக்கடையான உணர்வைப் பிளந்து அந்த ஞானியின் ஆற்றலை உங்களுக்குள் முழுமையாக வளர்த்துக் கொள்ள இது உதவும்.

மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் நல்ல எண்ணத்தைக் காத்து அந்த மெய் ஒளி காணும் நிலையை ஏற்படுத்தத்தான் இதைச் சொல்கிறோம்.

மெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்

Image

spiritual-unity

மெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்

 

மாமரத்தில் விளைந்த உணர்வின் சத்து மாங்காயாக இருக்கும் போது புளிப்பின் தன்மையாக இருந்து அந்த மணத்தையே வெளிப்படுத்தும். ஆனால் அது மாங்கனியாகும் பொழுது நல்ல மணமாக வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் வந்த வெறுப்பின் சத்தையும் புளிப்பின் சத்தையும் மெய் ஞானிகள் கனிவாக்கிக் கனியின் தன்மை அடைந்து ஒளியின் சரீரம் பெற்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த உணர்வினை எண்ணும் போது அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய். அதே சமயத்தில் அதைப் பருகும் நிலை அடைந்த நீ
1.உனக்குள் விளைந்த மணமாக அந்த மெய் ஞானிகளின் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கும் போது
2.அந்த உணர்வின் சக்தி உனக்குள் கனிவாகும் – கனியின் தன்மையைப் பெறும் தகுதியாக நீ பெறுகின்றாய்…! என்று குருநாதர் இதைச் சொன்னார்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வின் சக்திகளை “நாம் அனைவரும் பெற வேண்டும்…!” என்ற நிலையிலேயே என்றும் வளர வேண்டும்.
1.“நாம்…!” என்ற ஒருக்கிணைந்த நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலுக் கொண்ட நிலையாக ஆகின்றோம்.
2.”நான்…!” என்ற நிலையில் தனித்துச் சென்றோம் என்றால்
3.மற்றவர்களின் உணர்வின் வலு நமக்குக் கிடைக்காது இழக்கப்படுகின்றது.
4..அப்பொழுது நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது என்று குருநாதர் என்னை எச்சரித்தார்.

எந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பருகினோமோ எதை நாம் கலந்து உறவாடினோமோ அந்த உணர்வின் சத்தை நீ பெற வேண்டும் என்று… நான் எப்படி எண்ணினேனோ…!
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகிறேன். அப்பொழுது நாம் ஆகின்றோம்.

இதைப்போல அனைவருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணும்போது
1.அவர்களுடன் இணைந்தே நீயும் அவர்களாகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்தே உன் தன்மை பெறுகின்றார்கள்.

விண்ணிலிருந்து விஷத் தன்மைகள் பல வந்தாலும் சூரியன் அதையெல்லாம் ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளியின் சுடராக இயக்குவது போல் உனது உணர்வும் செயல்பட வேண்டும்.
1.மெய் ஞானிகளின் உணர்வை நீ பருகி
2.பருகிய அந்தச் சத்தை அனைவரையும் நீ பெறச் செய்ய வேண்டும்
3.அதனின்று தான் நீ இதைப் பெறுகின்றாய்…! என்று தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை இந்த உலகில் வாழும் அனைத்து மக்களையும் பெறச் செய்வோம்.

கனியின் தன்மையை அடைந்த அந்த மெய் ஞானிகள் பெற்ற அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற வேண்டும் என்ற நிலைக்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

சில மலைப் பகுதிகளில் வளரும் செடிகளுக்கு உண்டான “விசித்திரமான ஆற்றல்கள்…!”

Image

Mountain mist

சில மலைப் பகுதிகளில் வளரும் செடிகளுக்கு உண்டான “விசித்திரமான ஆற்றல்கள்…!”

 

பெரிய பெரிய மலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அதிலே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைத் தான் பருகி அதன் அருகிலே எந்த மலை இருக்கின்றதோ அதறகுள் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது. சில பகுதிகள் அவ்வாறு உண்டு.

அந்தப் பகுதிகளுக்கு மேலே மேகங்கள் படர்ந்து சென்றால் உச்சி மலையாக இருப்பது தனது காந்தப்புலனால் அந்த மேகங்களைக் கவர்ந்து அதற்குள் நீராகச் சுரக்கச் செய்கின்றது.

மலைக்குக் கீழே நீர் இருக்காது. ஆனால் அத்தகைய மலை உச்சிகளில் நாம் நீரைப் பார்க்கலாம். ஏனென்றால்
1.இவையெல்லாம் இந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும்
2.அதனுள் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்களுக்கொப்ப
3.அதனின் துணை கொண்டு தான் அந்தப் பாறையை அது வளர்க்கின்றது.

அதே சமயத்தில் அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து பாறை மீது நீர் ஓடினாலும் அதனின் தன்மை ஆவியாகப் பறந்து வரப்படும் போது அதைப் போல மற்ற செடிகளின் தாவர இனச் சத்துகளின் ஆவிகளும் இது இரண்டும் ஒருக்கிணைந்து அதனின் தன்மை கொண்டு ஓர் செடியாக ஒரு வித்தாக ஒரு கருவாக உருவாகின்றது.

1.அத்தகைய செடிகளை நாம் வேறு எங்கேயாவது ஊன்றினால்
2.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
3.விண்ணிலே நுண் அணுக்களாகக் கலந்து கொண்டு இருக்கும் நிலையில்
4.துருவப் பகுதியில் இருந்து வரும் அல்லது கடல் நீர்களிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளை
5.சூரியனின் காந்த சக்தி அது கவர்ந்து வைத்திருப்பதைத் தனக்குள் குவித்து
6.மேகங்களாக கூடச் செய்து நீராக வடியச் செய்து அந்த நீரின் சத்தை எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.

இயற்கையில் சந்தர்ப்பத்தால் பல உணர்வின் அலைகள் மோதி மோதி பல உணர்வின் சக்திகள் கருவாகி இப்படித்தான் பல பல தாவர இனங்களாக உருவாகின்றது.

அன்றைய மெய் ஞானிகள் இதைப் போன்ற தாவர இனத்தின் சத்தை அறிந்துணர்ந்து அந்தச் செடிக்குள்
1.மனிதனைக் காத்திடும் நிலை எவ்வளவு இருக்கின்றது…?
2.மனிதனுடைய நல்ல உணர்வினுடைய வளர்த்திடும் நிலைகள் எப்படி இருக்கின்றது…?
3.மனிதனுடைய சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் உணர்வின் சத்து செடியிலே எப்படி இருக்கிறது என்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்து
4.அதை நாம் பக்குவப்படுத்திப் பயன்படுத்தும் நிலைகளுக்குக் கொடுத்தனர்.

ஆனால் செடியிலிருந்து வித்தா…? வித்திலிருந்து செடியா…? என்று கேள்விக் குறி போட்டு இன்றும் விஞ்ஞான அறிவில் கண்டு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

சில பொருள்களை இணைத்து மனிதனுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு புதுச் செடிகளை மனிதனால் உருவாக்க முடிகின்றது. உருவாக்கியதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
1.ஒவ்வொரு செடியிலும் என்னென்ன உலோகச் சத்துகள் (கால்சியம் இரும்பு) அது எந்த இவ்வளவு இருக்கின்றது…?
2.அதில் மற்ற சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றது…?
3.அதே போல மனித உடலின் தசைகளில் கொழுப்புச் சத்து எவ்வளவு இருக்கின்றது…?
4.உடலில் தாதுக்களும் மற்ற உப்புகளும் எவ்வளவு இருக்கின்றது என்று இதை எல்லாம் அறிந்து கொள்கின்றது இன்றைய விஞ்ஞான அறிவு.

இருந்தாலும் இயற்கையாக உருவாகும் தாவரங்களிலிருந்து நாம் பெறக் கூடிய உணவு வகைகளை அன்று ஞானிகள் நமக்குக் காட்டியிருந்தாலும் அதை விடுத்துவிட்டு செயற்கையாக விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட உணவு வகைகளைத்தான் நாம் இன்று அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்.

அதனால் இயற்கையின் அந்த மெய் ஞானத்தின் அறிவின் வளர்ச்சிகள் குன்றப்பட்டு மனிதன் சிந்தனைகள் குறைந்து இயந்திரத்தைப் போல இயங்கும் நிலையாக
1.விஞ்ஞானத்தின் வீரியத்தின் செயலாகத்தான் வளர முடிகின்றதே
2.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மை பெற முடியவில்லை.
3.இன்றைய மனிதன் தன்னைக் காக்கும் நிலையும் இல்லை.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.

சாக்கடை அருகில் உன்னை அமரச் செய்து நான் உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…? என்பதைத் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்

Image

bhoovarahar

சாக்கடை அருகில் உன்னை அமரச் செய்து நான் உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…? என்பதைத் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகம் எவ்வளவோ சாக்கடையான நிலைகள் கொண்ட காற்று மண்டலமாக இருக்கின்றது.
1.மனித வாழ்க்கையில் அதை நுகர்ந்து நுகர்ந்து
2.உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நாம் நுகரும் தன்மை அடைந்துள்ளோம்.

ஏனென்றால் விருப்பு வெறுப்பு கோபம் ஆத்திரம் குரோதம் வேதனை என்று பிறர் மேல் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவே இல்லை.

பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் துணை கொண்டு பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வருகின்றது.

நாற்றத்தை எண்ணாது நாற்றத்தை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து நல்லதை நுகரும் நிலையாகப் பெற்ற பின் தான் மனிதனாக உருப் பெறுகின்றது பன்றி.

இதை உணர்த்துவதற்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடைக்கு அருகிலே அமரச் செய்தார்.
1.இந்தச் சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே.
2.நஞ்சை நீக்கிய அருள் ஞானி உணர்வை இங்கிருந்து நீ பெறு…! என்றார்.
3.அருள் ஞானியின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.சாக்கடையை நுகர்ந்தாலும் அது அறியத்தான் உதவும்.
5.சாக்கடையின் நாற்றம் உனக்குள் விளையும் சக்தியாக விளையாது.

அதாவது அருள் ஞானிகளின் உணர்வுகள் உனக்குள் வரும் போது இந்தச் வாழ்க்கையில் இருக்கும் சாக்கடையான உணர்வினை நீக்கி மெய்ப் பொருள் கண்டுணரும் சக்தியை நீ பெறுவாய். அதைப் பெறச் செய்வதற்கே நான் உன்னை இங்கே அழைத்தேன் என்றார் குருநாதர்.

சாக்கடைக்கு அருகில் வந்ததும் நீ எதை நுகர்கின்றாய்..? கண்ணால் பார்த்ததும் அந்தச் சாக்கடையை நுகர்ந்து ஐய்யய்ய… ஐய்யய்ய…! என்று எண்ணுகின்றாய். அடுத்து அதை நினைக்கும் போதெல்லாம் உனக்குள் சாக்கடையிம் மணமே வருகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த மணத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணும் போது அதனுடைய உணர்வு உனக்குள் அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணமாக வருகின்றது.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த அந்த வராகனைப் போன்று வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும்
1.அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று
2.குறைகளை நீக்கிடும் உணர்வாக நாம் வளர்க்க வேண்டும்.

தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வளர்க்கும் போது உடலுக்குள் இது விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அவர்களுக்குள் செலுத்தப்படும்போது அங்கே குறைகளை நீக்கிடும் சக்திகளாகத் தோன்றுகின்றது.

ஆகவே யாரைக் கண்டாலும் எவரைக் கண்டாலும் அங்கு குறைகள் எதுவாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும்…?

மகரிஷிகளில் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணுவோம் என்றால் நமக்குள் அறிவித்த (குறையான) அந்த உணர்வுகள் மெய்ப் பொருள் காணும் நிலையாக வரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டாலும் அதை அறிவிக்க மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து நாம் பயன்படுத்தக்கூடாது.

ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி… “இப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்…!” என்று எண்ணும் போது நமக்குள் எதைத் தவறென்று காட்டியதோ அதே தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாக வளர்த்துவிடும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது யாரும் நடந்ததில்லை. மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் போது அந்த குறையின் உணர்வாக இயக்கப்படும் போது அதில் இருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?

டி.வி,யோ மற்றதோ மூடி மறைத்திருப்பதை நாம் அந்த சுவிட்சைப் போடும் போது அது இயக்கி அங்கே அந்தப் படங்களைத் தெளிவாக நம்மைத் தெரிந்துணரச் செய்கிறது.

அதைப் போல தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தை நாம் செலுத்தப்படும் போது
1.அது நமக்குள் மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகளாக இயக்கி
2.ரிமோட் கண்ட்ரோலாக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.நம்முடைய சொல்லைக் கேட்போருக்கும் அவர்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
4.மற்ற தீமைகள் வராதபடி நமக்குள் நல்ல உணர்வைத் தெரிந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

நமக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த நிலையையும் தீமைகள் நமக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்கே குருநாதர் எமக்குச் சாக்கடை அருகே அமரச் செய்து கொடுத்த அந்த உபதேசத்தை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

மந்திரத்தால் மாங்காய் காய்ப்பது போல் என்பார்கள்…!

Gnaana seeds

மந்திரத்தால் மாங்காய் காய்ப்பது போல் என்பார்கள்…! 

இன்றைய வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகையான அலைகளில் மோதிக் கொண்டிருக்கின்றோம். பாச அலை… பண்பு அலை… பரிவு அலை… வெறுப்பலை… வேதனை அலை… சங்கட அலை…! என்று இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதிக் கொண்டிருக்கின்றது.

நமக்குள் அவைகள் பதிவாகி இருக்கிறது. “கொஞ்சம் சோர்வடைந்தோம்…!” என்றால் வெறுப்பான அலை தான் இங்கே வரும்.

அந்த வெறுப்பான உணர்வு வந்ததும் நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் தாங்க முடியாதபடி “வேதனை” என்ற உணர்வு வரும். இப்படி மாறி… மாறி… மாறி… மாறி… நமக்குள் அலைகள் மோதிக் கொண்டு இருக்கிறது.

கடலில் அலைகள் தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது…! அதில் படகில் போகின்றோம் என்றால் ஒரு எல்லையை வைத்துத் தான் நாம் போகின்றோம்.

எல்லையை வைத்துப் போகும் போது எதிரில் எத்தனை அலைகள் வந்தாலும் துடுப்பை வைத்துத் தள்ளி நாம் போக வேண்டிய எல்லையை அடைய வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆகவே கடலில் அலைகள் மாறி மாறி வருவது போல் நமது மனித வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை எல்லாம் வந்த பிற்பாடு
1.என்ன வாழ்க்கை இது…? என்ற
2.இந்த வெறுப்பான உணர்வில் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

வேதனை என்ற விஷமான உணர்வை எடுத்தால் இன்றைக்கு மனிதனாக இருப்போம். ஆனால் அடுத்தாற்போல இன்னொரு உயிரினத்தின் உடலுக்குள் தான் போக முடியும். மனித உடல் கூடப் பெற முடியாது.

ஆகவே வாழ்க்கையில் நம்மை வந்து மோதும் அத்தகைய அலையில் இருந்து தப்ப வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த துடிப்பை வைத்து எல்லா அலைகளையும் பிளந்து நம்மிடமிருந்து தீமைகளை விலக்கித் தள்ளிவிடலாம்.

அவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வளர வளர அருள் ஞானத்தின் சக்திகள் பெருகிப் பிறவியில்லா நிலை அடைய முடியும். ஆக இயற்கையின் நிலைகளை ஞானிகள் கண்டுணர்ந்ததை உணர்த்துகின்றோம்.

ஏனென்றால் யானையைச் செய்கிறோம் பூனையைச் செய்கிறோம் என்று சொன்னவர்கள் இன்று இருக்கிறார்களா…! என்றால் இல்லை. யாரும் இந்த உடலுடன் இருந்ததில்லை.
1.நமது குருநாதர் இவ்வளவும் சொல்லிக் கொடுத்தார்.
2.அவர் உடலுடன் இங்கே இருக்கின்றாரா…? என்றால் இல்லை.
3.அவர் உயிரோடு சேர்த்து ஒளியாக இருக்கின்றார் நமது குருநாதர்.
4.அவர் வழியைக் கடைப்பிடித்தவர்கள் எல்லாம் ஒளியின் உடலாக அவருடன் ஐக்கியமாகி இருக்கின்றார்கள்.

நான் (ஞானகுரு) யானையைப் பண்ணித் தருகிறேன் பூனையைப் பண்ணித் தருகிறேன் என்று சொன்னால் உங்களை ஏமாற்றத்தான் அது உதவும்.

மாய ஜாலங்களைப் போல விளைய வைத்து வெள்ளாமை செய்து உங்களுக்கு அந்தச் சக்திகளைக் கொடுக்கலாம். அதற்காக இறந்த ஆவியின் தன்மையை எடுத்துக் கொடுக்கலாம்.
1.அந்த ஆவி கெட்ட வேலையைச் செய்யும்.
2.மந்திர ஜாலங்களை வைத்துக் கெட்டது தான் செய்ய முடியுமே தவிர அது நல்லது செய்யாது.

ஏனென்றால் அதைப் போன்ற ஆவியின் தொடர்பு கொண்டு சொத்தையும் சுகத்தையும் தேடியவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள்.
1.ஆரமபத்தில் பணம் எல்லாம் நிறைய வரும்.
2.இருக்கிற மாதிரித் தெரிகின்ற அந்தப் பணம் எல்லாம் கடைசியில்
3.எங்கே போனது..? எப்படிப் போனது…? என்ன…? ஏது…? என்று ஒன்றும் தெரியாது
4.வீடே சூனியமாகும்….! அத்தனை பேரும் நாஸ்தி ஆகி விடுவார்கள்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வாழ்க்கையில் வரக்கூடிய இடைஞ்சலை நீக்குவதற்கு உங்களுக்குச் சக்தி தேவை. துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே பரவி இருக்கின்றது. அவ்வப் பொழுது எடுத்து உங்களுக்குள் அந்தச் சக்தியைக் கூட்டிக் கொள்ள முடியும்.

மெய் ஞானிகள் அருள் உணர்வுகளை நான் எண்ணும் பொழுது என் உயிர் கடவுளாக இருந்து அதை எனக்குள் உருவாக்குகிறது. அப்படி விளைய வைத்த வித்தைத்தான் உங்களிடம் பதிவு செய்கிறேன்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் தான் எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல வித்தைக் கொடுத்தோம் என்றால் அதைப் பக்குவமாக வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் நல்ல முறையில் விளையும்.

1.வித்தை ஊன்றிய பின் இருபது நாள் அப்படியே விட்டு விட்டு
2.எங்கே முளைக்கக் காணோம்…! என்று அதற்கப்புறம் தண்ணீர் ஊற்றினால் என்ன செய்யும்…? முளைக்காது…!
3. நான் (ஞானகுரு) செய்து (வளர்த்துத்) தருவேன் என்றால் நானல்ல.
4.ஞான வித்தைத் தொடர்ந்து நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
5..இந்த நிலையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஒருவர் பலகாரம் செய்து கொடுக்கின்றார் என்றால் அதை வாங்கி உட்கொள்ளலாம். தீரத் தீர அதை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தானே அதைச் செய்வது என்றால் எப்படிச் செய்வது…?

பலகாரம் செய்யத் தெரியவில்லை என்றால் இரவல் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும். இல்லையா…! அப்போது நீங்கள் என்றைக்குச் சமைக்கப் பழகுவது…?

ஆகவே வாழ்க்கையில் வரும் தீமைகளை உங்களுக்குள் சேராதபடி நீங்களே தான் தடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லாமல் போனால் யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.
1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.அதை மிகவும் முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

Image

Group meditation powers

மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

 

மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் உடலிலே வந்த தீமைகளை நீக்கி உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைத்தான் உனக்குள் (ஞானகுரு) பதியச் செய்கிறேன் என்றார் குருநாதர்.

அவ்வாறு பதியச் செய்த நிலைகள் கொண்டு
1.மனித வாழ்க்கையில் உன்னை அறியாது சோர்வடையச் செய்யும்
2.இருளான உணர்வுகளுக்குள் மெய் ஞானியின் உணர்வை இணைத்து
3.மெய் ஞானிகளை நினைவுக்குக் கொண்டு வந்து கவருவேயானால்
4.அந்த மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை நீ பெறுகின்றாய்.

அந்த உணர்வுகள் உனக்குள் விளைய விளைய உன்னிடமிருந்து வெளிப்படும் அந்த எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் அனைவரது உணர்வுகளில் “ஓ…” என்று ஜீவனாகி “ம்…” என்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

பிறர் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்…! என்ற ஏக்க உணர்வுடன் வரும் போது
1.அனைத்து உணர்வின் சத்தும் உனக்குள் கிடைத்து நீ வலு பெற்றவனாக ஆகின்றாய்.
2.எத்தனை பேருக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகின்றயோ
3.அத்தனை பேருடைய எண்ண வலுவும் உனக்குள் கிடைக்கின்றது.

அவர்களுக்குள் மெய் உணர்வுகள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் போது அந்த உணர்வுகள் அவர் உடலுடன் இரண்டறக் கலந்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் அவருக்குள்ளும் விளைகின்றது.

அந்த ஞானிகளின் உணர்வை அவர்கள் பெற்ற பின் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதை நீ பார்க்கும் போது அந்த உணர்வின் சத்து கொண்டு உனக்குள் ஒளியாக மாற்றும் நிலை பெறுகின்றாய். அந்த அருள் ஞானிகளின் ஒத்த உணர்வாக அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய்.

ஆகவே கூட்டமைப்பாக எல்லோருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வுகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

அந்தத் தெளிந்திடும் நிலை பெற்ற மெய் ஞானியின் நிலைகளை ஒவ்வொருவரும் உடலுக்குள் செலுத்தும் போது அவர்கள் ஒளிச் சரீரம் பெற்றது போல அனைவரது உணர்வும் அது ஒளி பெறும் தகுதியாக விளைகின்றது.