உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்”

divine-oneness-people-circle

உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்” 

இன்றைய விஞ்ஞான அறிவு மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்குப் பயன்படுகிறது.

ஆனாலும், இதே விஞ்ஞான அறிவு மாற்று மத இன மொழி கொண்ட மக்களை அழிப்பதையும் பகைவர்களின் உணர்வுகளைச் செயலற்றதாக ஆக்குவதையும் அதிகப்படியான நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் இது போன்ற தீமையான நிலைகள் “தம்மையும் பாதிக்கும்” என்ற நிலையில் எண்ணுவது இல்லை.

இன்று இங்கே ஒவ்வொருவரும் கொடி பிடித்துக் கொண்டு தனக்குப் பிடித்தது என்றால் “வாழ்க.., என்றும் பிடிக்கவில்லை என்றால் ஒழிக..,” என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவன் அங்கிருந்து ஒரு அணுகுண்டைப் போட்டால் இவர்கள் தப்புவார்களா…? எல்லோரையும் பாதிக்கத்தான் செய்யும்.

ஆக மொத்தம்.., தான் பிறந்த மண் என்ற நிலைகளை மறந்து மதம் இனம் மொழி என்ற நிலைகளில் செயல்பட்டோம் என்றால் நம்மை “ஆண்டவன் காப்பாற்றுவான்” என்று எண்ணுகின்றனர்.

மாற்று மதத்தினர் “பிசாசை வணங்கக்கூடியவர்கள்” என்றும் பிசாசு ஒழிந்துவிட்டால் ஆண்டவனுக்கு நல்லதாகிறது என்கிறார்கள்.

இதனால் பிசாசுத் தன்மை கொண்ட நூறு பேரை அழித்தான் என்றால் ஆண்டவன் அவனுக்கென்று தனி இடத்தைச் சொர்க்கத்தைத் தருகிறான் எனறும் கூறுகின்றனர்.

தீவிரவாதிகள் என்ற நிலையில் ஒரு இனத்தில் மட்டுமல்ல இன்று எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருப்பது இதுதான்.

இந்தத் தீவிரவாதத்தின் தன்மையை ஆண்டவனுக்குச் செய்யும் சேவையாகச் செய்கின்றார்கள்.

ஒருவன் நூறு பேரைக் கொல்வதனால் தவறில்லை. வயிற்றுக்கு உணவோ மற்றவைகளுக்கோ நீ என்ன சுகம் வேண்டுமோ அனுபவித்துக்கொள்.

உனது குடும்பத்திற்குத் தேவையான வசதி வாய்ப்பைக் கொடுத்துவிடுகின்றோம் என்று இப்படித்தான் மூளைச் சலவை செய்துள்ளார்கள்.

எல்லோரும் தீயவர்கள். சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களைக் கொன்றுவிடு. உனக்கு ஆண்டவன் சொர்க்கத்தில் இடம் தருவான் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஒரு மதத்திற்குள் இன்னொரு மதம், இன்னொரு இனம் என்று இருந்தால் அவன் ஆண்டவனுக்கு விரோதமாகச் செய்கிறான். அதனால் அவனைக் கொல்வதனால் தவறில்லை என்ற நிலை உலகம் முழுவதற்கும் பரவியுள்ளது.

இது வளர்ந்து வளர்ந்து இன்று பழிதீர்க்கும் உணர்வுகள் தான் சாதாரண மனிதன் உடலிலும் உருவாகிவிட்டது. எதிரி என்ற நிலைகளில் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகள்தான் வருகின்றது.

யானை புலி போன்ற மிருகங்களிடமிருந்து தப்பிப்பதற்குச் சில உபாயங்கள் உண்டு. ஆனால், நாட்டிற்குள் இது போன்ற மோசமான நிலைகள் இருக்கின்றன.

இதிலிருந்து தப்புவது எப்படி?

காட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியும். நாட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. நீங்கள் நன்மையே செய்தாலும் உங்களுக்கு என்ன இடைஞ்சல் செய்ய வேண்டுமோ அதைச் செய்தேதான் ஆகும்.

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள். அவர்.., “சிறிது நிமிர்ந்தவுடனே (முன்னேறியவுடன்).., நீங்கள் அவரிடம் தாழ்ந்துதான் போகவேண்டும்”.

இத்தகைய நிலைகள்தான் காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்து பரவி இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் அனைத்து நிலைகளிலும் அது வளர்ந்து வந்திருக்கின்றது. இதிலிருந்தெல்லாம் தப்ப நீங்கள் வாழும் இடத்தில் கூட்டுத் தியானத்தை வலுப்படுத்துங்கள்.

“அனைவரும் ஒன்று சேர்ந்து” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அந்த அருள் ஒளியின் சுடரை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் வசிக்கும்
1.வீடு முழுவதும் படரவேண்டும்,
2.தெரு முழுவதும் படரவேண்டும்,
3.ஊர் முழுவதும் படரவேண்டும்,
4.இந்த உலகம் முழுவதும் படரவேண்டும் என்று நீங்கள் ஏகோபித்த நிலையில் அந்த மூச்சலைகளைப் பரப்புங்கள்.

“கூட்டமைப்பாகப் பரவச் செய்யும்” அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும்.

அதன் வழியில் நாம் வாழும் இடங்களில் இத்தகையை தீமைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

 

1.”உங்கள் எண்ணம்” உங்களைக் காக்கட்டும்.
2.”உங்கள் மூச்சலைகள்” இந்த உலகை அமைதி பெறச் செய்யும் சக்தியாக மலரட்டும்.

விஷ்ணு தத்துவம் – 5

Image

Lord-Rama and goddess Sita

விஷ்ணு தத்துவம் – 5

கடவுளின் அவதாரம் பத்து – 3. இராமன்

கடவுளின் அவதாரத்தில் மூன்றாவது அவதாரம் இராமன்.

உயிரணு பெறும் சரீரத்தின் தோற்றமான விதத்தையும் “எண்ணங்களின் தோற்றத்தையும்” அதனின் இயக்கங்களை நமக்கு உணர்த்துவதற்காக அன்று ஞானிகள் இராமன் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து இதிகாசம் மற்றும் புராணங்களை உருவாக்கினார்கள்.

  1. இராமன் – எண்ணம்

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் விஷம் காந்தம் புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது ஒரு செடியிலிருந்து வெளிப்படக்கூடிய சுவையான சத்தினைக் கவரப்படும்பொழுது அது “சீதாலக்ஷ்மியாக” மாறுகின்றது.

சீதா என்றால் சுவை. அதே உணர்வை ஒரு உயிரணு நுகர்ந்தால் அந்த உணர்வின் சத்து உடலாக மாறுகின்றது.

“சீதா” என்ற இந்தச் சுவை உயிருடன் ஒன்றி அதன் உணர்வின் உடலாக சிவமாக மாறுகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இயங்குகின்றது.

இதைத்தான், “திரேதாயுகத்தில்” நாராயணன் சீதாராமனாக அவதரித்தார் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டது.

அதில் “திரேதா.., என்பது சரீரம்.., உயிரணு உடல் பெறும் நிலை”. இதற்குள் “சீதாராமன்” தான் எடுத்துக் கொண்ட சுவை எதுவோ.., “அந்த எண்ணமாக” இயக்குகின்றது.

ஒரு உயிரணு கடலைச் செடியின் மணத்தை நுகர்ந்து புழுவின் உடலைப் பெற்றபின் “கடலைச் செடியைச் சாப்பிடவேண்டும்” என்ற “எண்ணம்” அந்தப் புழுவிற்கு வருகின்றது.

அதாவது எந்தச் செடியின் சத்தைப் புழு நுகர்ந்ததோ அந்தச் சத்தின் தன்மைக்கொப்பத்தான் எண்ணம் வருகின்றது.

உயிரணு ஒரு செடியிலிருந்து சத்தினை நுகர்ந்து தன்னுள் இணைத்து உடலாக மாறும் பொழுது “சீதாராமா” எண்ணங்கள் தோன்றி.., இதைச் சாப்பிட வேண்டும்.., என்ற எண்ணம் உண்டாகின்றது.

“உணர்ச்சியை வைத்து.., உணர்வை இயக்கி” அதற்கு வேண்டிய உறுப்புகளை இயக்கத் தொடங்குகின்றது.

“எண்ணம்” இல்லை என்றால் “இயங்காமல்தான்” இருக்கும்.

எந்த நினைவினை எண்ணுகின்றோமோ அது இராமனின் “அம்பு போன்று பாய்ந்து..,” உணர்வின் அணுக்கள் ஒவ்வொன்றையும் இயக்கி அதன் தொடர் கொண்டு நமது உடலை இயக்கும்.

எண்ணம் உருவாகவில்லை என்றால் உடலை இயக்காது.

இதைத்தான் நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டுள்ளது.

  1. கல்யாணராமன்

மனிதரிடத்திலும், உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தை உணர்ந்த இராமாயணத்தில், “கல்யாணராமா” என்று பாடினார்கள்.

கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான்?

சீதையை மணக்க வேண்டுமென்றால் அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறிக்க வேண்டும்.

அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ அவரே சீதையை மணக்கும் தகுதியுடையவர் என்ற நிலையைக் காண்பித்தனர்.

ஏனெனில், வில்லிலே பொருத்தி எய்யப்படும் அம்பு “பிறரைத் துன்புறுத்தும்” தன்மை கொண்டது.

துன்புறுத்தும் உணர்வை வென்றவர் எவரோ அவரே சீதாவைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவர் எனும் நிலையைக் காண்பித்தனர்.

வீர தீரம் காட்டிய பலரும் வில்லின் வலிமையை உணர்ந்தனரே தவிர வில்லைத் தூக்கக்கூட அவர்களால் முடியவில்லை.

ஆனால் இராமனோ.., “தீமை விளைவிக்கும் நிலைகளிலிருந்து.., தீமையில்லாத நிலையை உருவாக்குகின்றான்” என்பதை உணர்த்தும் பொருட்டு இராமன் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறித்துவிடுகின்றான்.

அதன்பின் சீதையை மணந்து கொள்கின்றான் என்று காண்பித்து “தீமையை அடக்கும் சக்தியினை” தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத்தான் “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர்.

மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி அந்தத் தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”.

துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் என்னும் நிலையை அடைந்தார்கள்.

பல கோடித் தீமைகளைக் கேட்டுப் பார்த்து உணர்ந்தாலும் மகரிஷிகள் அதனைத் தமது அரவணைப்பாக தமக்குள் சுவையாக ஒளியாக மாற்றிக்கொண்டவர்கள்.

துருவ மகரிஷியும் சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு மற்றவர்களுடைய எண்ணங்களை தம்முள் வளர்த்திடாது ஒளி பெறும் உணர்வினை தம்முடன் இணைத்து “ஒளியின் சரீரமாக மாறியவர்கள்”.

இதுதான் ‘’கல்யாணராமா” என்பது.

Image

god-vishnu-image

  1. விஷ்ணு தத்துவம்

சங்கு சக்கரதாரி விஷ்ணு (உயிரின் இயக்கம்)

வேதங்கள் என்றாலே.., “நாதங்கள்”. வேதங்கள் என்ற முறையில் எது எது எதனில் மோதுகின்றதோ அந்த நாதங்கள் வரும்.

அதாவது ஒரு உயிரணு எந்த உணர்வின் தன்மையை எடுத்ததோ எந்த ஆசையின் தன்மையப் பெற்றதோ அதற்கு “எதிர்நிலையான” உணர்வுகளைச் சுவாசிக்கும்போது அந்த உணர்வுகள் உயிரிலே மோதி நாதங்களாகிறது.

இதைத்தான் சங்கு சக்கரதாரி என்பது.

1. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே மோதும்போது.., “சப்தம்” வருகின்றது சங்கு.

2. நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் “சுழன்று” வரும் பொழுது.., சக்கரம்.

ஞானிகள் உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும் இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி” என்றும் காரணப்பெயரை வைக்கின்றனர்.

காந்தம் இழுத்து உயிரிலே மோதப்படும் பொழுது அந்தச் சப்தம் வருகின்றது. அதைத் தான் “சங்கு” என்றும் அந்த உணர்ச்சிகள் நம் எண்ணம் சொல் செயலாக இயக்கப்படும் பொழுது “சக்கரம்” என்றும் உணர்த்தினர்.

வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் என்ற நிலைகளை நாம் எடுத்தால் அதற்குத்தக்க சூரியனிலிருந்து வரக்கூடிய இயக்க அணு எடுத்துக் கொண்டதை நாம் நுகர்ந்தால் உயிரிலே பட்டு மோதி உணர்ச்சிக்கொப்ப (அதுதான் சங்கு) அந்த உணர்ச்சிகள் (சக்கரம்) நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக, ஒருவன் கோபப்படுகிறான் என்றால் அந்த உணர்வை வெப்பம், காந்தம் விஷம் என்ற நிலையில் சூரியனிலிருந்து வெளிப்படுகின்றது.

கோபமான உணர்ச்சிகளை நாம் உற்றுப்பார்த்து, அதை நமக்குள் நுகர்ந்தால் காரமான சுவையாக, காரத்தின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

ஆனால், வலிமை மிக்கது. காரம் என்ற நிலையும், அந்தக் காரம் என்ற நிலையை இணைத்தால் இதனுடைய செயல்கள் அடிமைப்படுத்திவிடும்.., மாற்றிவிடும்.., மாறிவிடும்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை நாம் எளிதில் புரிந்து “நம் வாழ்க்கை எவ்வாறு நடத்த வேண்டும்?” என்று காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

அந்தக் கோபமான உணர்வை நுகரப்படப் போகும் பொழுது நம் உயிரிலே பட்டபிறகு சப்தங்கள் வருகின்றது. உணர்ச்சிகள் இந்த சப்தமாகி, இதே உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றன.

அந்த உணர்வுதான் சப்தம். உணர்ச்சிகள் இயக்குகின்றது, “சக்கரம்” இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் கார உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? கோபமாகின்றது.

ஒருவர் வேதனையான உணர்வுடன் பேசுகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம், நுகர்கின்றோம்.

அந்த வேதனையான உணர்வுகள் நம் சாந்தமான குணத்தை அழிக்கின்றது. நமக்குள் சிந்தனையற்ற நிலைகள் ஏற்பட்டு நாம் சோர்ந்து விடுகின்றோம்.

“விஷ்ணுவின் கையில் என்ன இருக்கின்றது? சங்கும், சக்கரமும்” நம்முள் வேதனைப்படும் உணர்வின் ஒலி ஆனபின் இந்த உணர்வின் அதிர்வுகள் நமது உடல் முழுவதும் சக்கரம் போன்று சுழல்கின்றது.

இதுபோல நுகர்ந்தால் என்ன ஆகின்றது? வேதனையான உணர்ச்சிகள் தூண்டப்பட்டு  நம் உடலைப் பலவீனமடையச் செய்கின்றது. இதையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

“சங்கு – சக்கரம்” நமது உயிரின் தெளிவான நிலைகள் கொண்டு நாம் எப்படி இயக்குகின்றோம்?

நமது உயிர் நமது உடலுக்குள் எவ்வழியில் இந்த உணர்வுகளை இயக்குகின்றது என்பதனை அறிவதற்குத்தான் நம் உயிரின் இயக்கத்தை “உருவம் அமைத்து.., அருவ நிலைகளில்.., அது எப்படி இயங்குகின்றது?” என்பதனைக் காட்டினார்கள் ஞானிகள்.

1.எது இயக்குகின்றது?

2. நாம் எங்கிருந்து வந்தோம்?

3 நமது உயிர் எப்படி இயக்குகின்றது? என்பதை அங்கே தெளிவாகக் காண்பிக்கிறார்கள்.

நாம் நம் உயிரை அறிந்து “தீமைகளை நீக்கி” எவ்வாறு செயல்பட வேண்டும் என்று உணர்த்துகின்றனர் ஞானிகள்.

“மகரிஷிகளை எண்ண வேண்டிய சரியான முறை”

ம்கரிஷி

“மகரிஷிகளை எண்ண வேண்டிய சரியான முறை”

ஒரு வேப்ப மரம் தன் கசப்பின் வலுவைக் காட்டப்படும்போது தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அந்தக் கசப்பின் உணர்வு கொண்டு மற்றவைகளைத் தன் அருகிலே வராதபடி வெளியே தள்ளுகிறது.

இதைப் போல நாம் நமக்குள் எத்தகைய உணர்வின் தன்மைகளை இணைத்துக் கொண்டுள்ளோமோ அதனின் செயலாக்கமாகத் தன்னைப் பாதுகாக்கும் நிலைக்கு அது இயக்கும்.

ஆக, நாம் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து இன்று மனிதனாக உருவாகியுள்ளோம்.

அப்படித் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் பெற்ற நாம் நஞ்சை ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது அதிகமாக நமக்குள் கூட்ட வேண்டும்.

இந்தக் கணக்கைக் கூட்டினால் இந்த மனித வாழ்க்கையில் தீமைகள் அகலும். இதில் உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லை.

எத்தகையை தீமையான நிலைகள் வந்தாலும் அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று பல முறை செலுத்திக் கொள்ளுங்கள்.

“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்..,” என்ற இந்தப் பாசத்தை வளர்த்துவிடுங்கள். இந்தப் பாசத்தால் தீமைகளை அகற்றிடும் உணர்வாக அந்தக் கணக்கின் பிரகாரம் உங்கள் உயிருடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.

ஆக, இந்தச் சக்திகளை எங்கிருந்து பெற்றீர்களோ அதன் அரவணைப்பில் தீமைகளை அகற்றிய உணர்வின் செயலாக உங்கள் உயிரின் தன்மையில் என்றுமே உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அது இயங்கத் தொடங்கும்.

இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். “கோடி கோடி..,, கோடி கோடி..,” என்று சொல்லைச் சொல்லி “விண்ணிலே” அந்த உணர்வைப் பரப்பினார்.

அந்த உணர்வுகள் எவ்வாறு செயலாக்குகிறது என்ற “சில உண்மை நிலைகளை” உணர்த்தினார். அதை நீங்கள் பெறுதல் வேண்டும்.

அவர் உணர்த்திய அந்த ஆற்றல்களை உங்களை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் முதலிலே “ரிஷிகளின் அருள் சக்தி” என்று சொல்லி உங்களுக்குள் பதிவு செய்தேன்.

அடுத்துச் “சப்தரிஷிகள்” என்று இணைத்தேன். அதைக் காட்டிலும் நீங்கள் வலு பெறுகின்றீர்கள்.

அந்த வலுப் பெற்ற நிலைகள் கொண்டு “சப்தரிஷி மண்டலம்” என்றேன். அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அங்கே உங்களை இணைக்கின்றோம்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அது படிப்படியாகக் கொண்டு போக வேண்டும்.

ஏனென்றால், “முதலில் இப்படிச் சொன்னார்.., இப்பொழுது இப்படி என்று எதைச் சொல்வது?” என்ற சந்தேகக் குறிகள் ஏற்பட்டுவிடும்

சப்தரிஷிகள் ஆனாலும் அவர்களும் “சாதாரண வாழ்க்கையின்” நிலைகளில் பெற்றவர்கள் தான்.

இன்று எடுத்துக் கொண்டால் இது இந்த ரிஷி கட்டிய ஆலயம், அந்த ரிஷி கட்டிய ஆலயம் என்று சொல்வார்கள். இதுவெல்லாம் ஒவ்வொரு ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைகளே.

அவரின் புனை பெயராக வைத்து இவர்கள் “ஓர் ரிஷி என்றும்.., ரிஷி வம்சம் என்றும்.., இந்தக் குலம் இந்தக் குல வழி என்றும்.., ரிஷியின் குலங்கள்” என்று இப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், அந்தக் குல வழியில் ரிஷிகள் என்றாலும் “இந்த மனித உணர்வுடன்” இது ஒன்றிவிடும். இது எளிதில் கிடைக்கும்.

ஆனால், “விண் சென்ற மகரிஷியின் ஆற்றல்” எளிதில் கிடைக்காது.

ஏனென்றால், நம்முடைய கூர்மை அனைத்தும் முழுமை பெற்ற நிலையில் சித்ரன் (கண்ணின்) நினைவின் ஆற்றல் அங்கே விண்ணிலே இருக்க வேண்டும்.

“விண்ணிலிருந்து.., அதைப் பருக வேண்டும்..,” என்று எண்ண வேண்டும்.

“வெறும் வார்த்தையில்” அந்த ரிஷிகள்.., இந்த ரிஷிகள்.., என்று எண்ணினால் அதற்குண்டான.., “மனித உணர்வுகள் கலந்த நிலைதான்” நம் ஈர்ப்புக்கு வரும்.

“அகஸ்தியன் பெயரை வைத்து” அந்தக் குல வழியில் தான் வளர்த்து கொண்டு நம்முடன் உறவாடிய (மனிதனின்) உணர்வுகள் தான் அதிகமாகப் பதிவாகின்றது.

இதன் மேல் இச்சைப்பட்டால் இதுதான் வரும்.

பின், “நான் அகஸ்தியரையும் மற்ற ரிஷிகளையும் நினைக்கின்றேன்.., ஆனால் எனக்கு இப்படி வருகிறதே..,” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

“விண் சென்று” ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் அருளாற்றல்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் யாம் பதிவு செய்கின்றோம்.

பதிவான அந்த உணர்வு கொண்டு நீங்கள் விண்ணை நோக்கி ஏகி சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதைப் பெறவேண்டும்.

இந்த உணர்வின் வழிப்படி விண்ணின் நிலைகளில் ஏகும்போது தான் அதனுடைய இயக்கத் தொடர் இங்கே பரவியிருக்கும் ஆற்றல்கள் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள்” கிடைக்கும்.

இல்லையென்றால், இன்று மதத்தின் அடிப்படையில் குலத்தின் நிலை கொண்டு பதிவு செய்த இந்த ரிஷிகள் உங்களுக்குள் இதுவும் கலந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மாறுபடவேண்டும்.

1.உங்களுக்குள் தெளிவாக்குவதற்குத்தான் இதையெல்லாம் உணர்த்துகின்றோம்.
2.நீங்கள் தெளிந்திட வேண்டும்.
3.தெளிந்த உணர்வுகள் தெளிவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்
4.பிறருடைய மனங்களையும் தெளிந்திடும் நிலையாக்க வேண்டும்.

ஏனென்றால் உலகம் அனைத்தும் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.

ஆனால், நன்மை பெறவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் உணர்வின் அலைகளை எவ்வாறு பெருக்குகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டே வரும்.

ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.“கோடி… கோடி…” என்று விண்ணின் ஆற்றலைப் பெறுங்கள்.
2.அருள் வழி வாழுங்கள்.
3.மெய் ஞானம் பெறுங்கள்.

என்றுமே அழியாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாகப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து அவர்களைப் போன்றுமெய்ஞானிகளாக நீங்கள் உருவாகுங்கள்.

எமது அருளாசிகள்.

 

நல்ல நேரம்… கடவுள் காப்பாற்றினார் என்று சொல்கிறோம்…  நடந்த நிகழ்ச்சி

spiritual-path

நல்ல நேரம்… கடவுள் காப்பாற்றினார் என்று சொல்கிறோம்…  நடந்த நிகழ்ச்சி

யாம் (ஞானகுரு) எப்பொழுதோ இரயிலில் அடிபட்டு இறந்து போக வேண்டிய ஆள்.

எமக்குக் கல்யாணமாகி இருந்த சமயம் அது. மதுரையில் மீனாட்சி மில் கேட்டிலிருந்து வெங்கடாசலபுரத்திற்குப் போக வேண்டுமென்றால் ஒரு இரயில் பாதையைத் தாண்டித்தான் போகவேண்டும்.

இரயில் பாதை பாலத்துடன் கூடியதாக இருந்தது. எமது மனைவியை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.

நாங்கள் இரயில் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்தப் பாதையில் இரயில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் நாங்கள் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கிப் போக முயன்றோம்.

கீழே இறங்கிப் போகலாம் என்றால் அங்கே கால் வைக்க முடியாதபடி அளவிற்கு அதிகமாக அசூசையாக இருந்தது.

உடனே என் மனைவி, “அய்யய்யே..,” என்று மூக்கைப் பொத்திக்கொண்டு எம்மையும் சேர்த்து இரயில் தண்டவாளத்திற்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

எமக்கு யோசிக்க நேரமில்லை, இரயில் அருகில் வந்துவிட்டது.

உடனே என் மனைவியை இரயில் பாதையின் மறுபக்கம் தள்ளிவிட்டு யாம் இந்தப் பக்கம் தாவிக் குதித்து வந்துவிட்டோம். ஒரு நொடிப்பொழுது தாமதித்திருந்தால் இரயிலில் அடிபட்டு இறந்திருக்க வேண்டியதுதான்.

இது நடந்த நிகழ்ச்சி.

இது போன்று ஒரு சமயம் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சர்பத் தயாரித்து விற்று வந்தோம். அப்பொழுது வியாபாரத்திற்குச் செல்ல யாம் இரயில் பாதையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

ஒரு ஆளை வேலைக்கு வைத்து தள்ளு வண்டியில் சர்பத் தயாரிப்பதற்குண்டான சரக்குகளை ஏற்றி அவரை முன்னால் செல்லும்படி செய்தோம். யாம் பின்னால் வந்துகொண்டிருந்தோம்.

அப்படி வரும் பொழுது இன்றைக்கு இத்தனை பாட்டில் விற்றால் இவ்வளவு இலாபம், அவ்வளவு இலாபம் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்டு வந்தோம்.

அது சமயம் “இரயில் பாதையில்.., இரயில் வந்துகொண்டிருந்தது” எமக்குத் தெரியவில்லை.

ஆனால், சர்பத் வண்டியைத் தள்ளிச் சென்றவர் இரயில் பாதையைக் கடந்து சென்றுவிட்டார்.

யாம் மனதில் கணக்குப் போட்டுக் கொண்டே.., “இரயில் வருவது தெரியாமல்” இரயில் பாதையில் தண்டவாளத்தில் கால் வைக்கச் சென்றோம்.

அப்பொழுது எமது முதுகின் மேல்.., “ஒரு கல்” வந்து விழுந்தது.

“யாரடா.., என் மீது கல் வீசுவது?” என்று வேகமாகத் திரும்பிப் பார்த்தோம். அங்கே ஒருவரையும் காணவில்லை.

“என் மீது யார் கல் வீசியது?” என்று திரும்பிப் பார்த்த சமயத்தில் இரயில் வேகமாகச் செல்கிறது. அது சமயம கல் என் மீது விழுந்திருக்கவில்லை என்றால் அன்றைக்கே யாம் இரயிலில் அடிபட்டு இறந்திருப்போம்.

பின்னாளில் குருநாதர் என்னிடம், “அன்று உன் மீது நான் கல் வீசவில்லையென்றால்.., நீ இரயிலில் சிக்கி நசுங்கியிருப்பாய்” என்று கூறினார்.

இது நடந்த நிகழ்ச்சி.

குருநாதர் “என்னை எப்படி எப்படியோ.., கண்காணித்துக் காப்பாற்றி வந்து.., என்னை அவர்பால் ஈர்த்துக் கொண்டார்”.

குருநாதர் என்னை எப்படி எப்படியோ காப்பாற்றி வந்தார் என்று யாம் உங்களிடம் கூறுகின்றோம். ஆனால், அதே சமயம் எம்மைக் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்.

ஒவ்வொரு சமயமும் எமக்குக் கஷ்டங்களைக் கொடுத்துத்தான் “உண்மைகளை.., யாம் அறியும்படி செய்தார்”.

ஆனால், யாம் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கஷ்டங்களை நீக்குவதற்கு “உபாயங்களைக் கூறி வருகிறோம்”.

நமது அன்பர்கள் குரு காண்பித்த அருள்வழியில் தியானம் செய்வார்கள்.

“நன்றாக இருக்கிறது” என்றும் கூறுவார்கள், சில நன்மைகளும் பெறுவார்கள் பிறகு, தியானம் செய்வதை விட்டுவிடுவார்கள்.

ஒருவர் தியானத்தில் வளர்ந்தால் அவருடைய குடும்பத்திற்கு நன்மைகள் கிடைக்கும். அவருடைய குடும்பத்தார் அனைவரும் நலம் பெறுவார்கள். அவரால் அவர் வசிக்கும் தெருவிலுள்ளோர் நலம் பெறுவார்கள் என்று “யாம் ஆசைப்பட்டுச் செய்தாலும் கூட.., அதை மறந்து” எமக்கு எதிரியாகத் திரும்புபவர்களும் இருக்கின்றார்கள்.

யானைகள், புலிகள் வாழும் காடுகளில் கூட இது போன்ற நிலை இல்லை. “மனிதர்களின் மத்தியில்தான்..,” இதுபோன்ற நிலைகள் இருக்கின்றன.

நீங்கள் தியானம் செய்கின்ற பொழுது உங்களைப் பார்த்து, “என்ன.., பெரிய தியானம்.., செய்கின்றார்” என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்தால் போதும்.

பிறகு நீங்கள் “ஒளிந்து ஒளிந்துதான்” தியானம் செய்யவேண்டி வரும். மற்றவர்கள் செய்யும் கேலியும் கிண்டலையும் நீங்கள் “ஏற்றுக் கொண்டால்” பிறகு நீங்கள் தியானத்தையே விட்டுவிடவேண்டியதுதான்.

விஷத்தின் தன்மை என்பது “வாலி”, வலிமை அதிகம்.

வாழ்க்கையில் எத்தனையோ தீமைகள் உண்டு. அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் மீள்வதற்குண்டான சக்தியை யாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் யாம் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

உங்களுக்குக் கொடுத்துள்ள அருள் சக்தியின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கிட வேண்டும்.

யாம் உபதேசிக்கும் முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அதைப் பற்றுடன் பற்ற வேண்டும். அப்பொழுது நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

“இது மிகவும் சுலபமான வழி”. ஒன்றும் கஷ்டமில்லை. “சிறிது காலம்.., கடைப்பிடித்து வந்தால்” பிறகு எல்லாம் சீராக வரும்.

Image

vishnu brahma

விஷ்ணு தத்துவம் – 3

கடவுளின் அவதாரம் பத்து – 2. விஷ்ணு

  1. வெப்பம், காந்தம், விஷம் – மூன்று புலனறிவு

சூரியன் தன்னுள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட சத்தை வெப்ப காந்தமாக வெளிப்படுத்துகின்றது. அது தன் தளவாயில் விஷத்தைப் பிரித்தாலும் வெளிப்படும் பொழுது விஷத்தைக் கவர்ந்துதான் வெப்ப காந்தம் வெளிப்படுகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படும் நிலைகள்

1. விஷம்.

2. வெப்பம்,

3. காந்தம் என மூன்று நிலைகள் கொண்டு வெளிப்படுகின்றது.

வெப்பம் – உருவாக்கும் சக்தி,

2. காந்தம் – அரவணைக்கும் சக்தி,

3. விஷம் – இயக்கும் சக்தி

என மூன்று நிலைகள் கொண்டு இயங்குகின்றது.

காந்தம் தன் அருகிலே வருவதைக் கவர்ந்து தனக்குள் இணைக்கின்றது.

இணைத்ததின் நிலைகொண்டு வெப்பம் அதனைச் சமைத்துத் தனதாக உருவாக்குகின்றது.

விஷமோ இதனில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

இத்தகைய இயக்கத்தின் தன்மை கொண்ட மூன்று புலன் கொண்ட அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்பட்டுப் பிரபஞ்சத்தில் பரவி வருகின்றது.

இதே பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள் அணுக்களாக மாறிப் பரவி வருகின்றது.

வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அணுக்களாக வரப்படும் பொழுது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள் அருகிலே வந்தால் இதைக் கண்டு உணர்வின் உந்து விசையால் ஓடுகின்றது.

அப்படி ஓடும் நிலைகளில் கார்த்திகை நட்சத்திரத்தின் அணுக்களில் மோதப்படும் பொழுது அது சுழற்சியின் தன்மை அடைந்து அந்த சுழற்சியில் வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்த்து ஒன்றுடன் மோதும் நிலைகள் வருகின்றது.

மோதும் நிலை வரும்பொழுது அதில் வெப்பமும் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது.

ஈர்க்கும் சக்தி வரப்படும் பொழுது எந்தக் கோள் உமிழ்த்திய அணு அடைப்படுகின்றதோ அதன் அடைப்பிற்குள் உருவாகும் நிலை கொண்டு மற்ற அணுக்களைக் கவர்ந்து அடைபடுகின்றது.

ஒரு “உயிரணுவாக..,” உருவாக்குகின்றது.

  1. துடிப்பால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு

உயிரணுவில் ஏற்படும் துடிப்பால் உருவாகும் “வெப்பத்தை.., விஷ்ணு”  என்று ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

வெப்பத்தால் ஈர்க்கும் தன்மை உருவாவதை லட்சுமி என்றும் விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும் காரணப்பெயரைக் கொடுத்தனர்.

“நாராயணனின்.., மறு அவதாரம் விஷ்ணு” என்று உரைத்து “உயிரணுவின் தோற்றத்தை” நமக்கு ஞானிகள் உணர்த்தினார்கள்.

லட்சுமி தனக்குள் ஈர்ப்பதை, விஷ்ணு (வெப்பம்) உருவாக்கி, ஜீவ அணுவாக விளையச் செய்கின்றது.

ஒரு உயிரணு தன்னில் ஜீவ அணுவை உருவாக்கும் போது அந்த ஜீவ அணு எந்த உணர்வின் சத்தினால் உருவானதோ “அதன் இனத்தை அது பெருக்கும்”.

  1. விஷ்ணுவின் மகன் பிரம்மா

உதாரணமாக ஒரு விஷச் செடியில் உருவான ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்து காற்றில் உள்ள தன் சத்தை எடுத்து அதே செடியாக விளையும்.

அதே போன்று ஒரு உயிரணு ஒன்றை நுகர்ந்து அதனின் உணர்வின் அணுவாக உருவானால் அந்த அணு தன் இன சத்தைக் கவர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.

ஆக, இதைத்தான் விஷ்ணுவின் மகன் “பிரம்மா” என்று உரைத்தார்கள் ஞானிகள்.

ஒரு உயிரணு ஒரு உணர்வின் தன்மையினை நுகர்ந்து அதனில் உருப்பெறும் அணுக்களாக வரும்பொழுது “பிரம்மம்” என்று காட்டினார்கள்.

அப்படிப் பிரம்மமான அந்த உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி இயங்கத் தொடங்கிவிட்டால் அதற்குச் “சிவம்” என்றும் காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.

ஞானிகள் நமக்கு உரைத்தது எல்லாம் “காரண.., காரியப் பெயர்கள்”. அதையெல்லாம் சாஸ்திரங்களாக  நமக்கு வகுத்துக் கொடுத்தனர்.

ஆனால், இன்று அதெல்லாம் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள். “தெய்வம் எங்கேயோ இருக்கின்றது” என்று தான் எண்ணிக் கொண்டிருக்கின்றொமே தவிர சாஸ்திரப்படி அந்த ஞானிகள் சொன்ன நிலைகளை நாம் அறியமுடியவில்லை.

தெய்வம் எந்த நிலையில் இருக்கின்றது? தெய்வத்தின் செயல் என்ன? என்பதைத்தான் இங்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

நம்மிடம் இருக்கும் சக்திகளைப் பற்றி அறிந்திருக்கின்றோமா…?

trust-yourself

நம்மிடம் இருக்கும் சக்திகளைப் பற்றி அறிந்திருக்கின்றோமா…?

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு அதிகமாக வளர்ந்திருந்தாலும் அதிகமாக என்ன நடக்கின்றது…? இன்னமும்

  1. சாமி தருவார்,
  2. சாமியார் தருவார்
  3. ஜோசியம் தரும்
  4. ஜாதகம் தரும் என்ற நிலைகளை ஏமாந்து செல்லும் நிலைதான் உள்ளது.

ஜாதகப்படி உனக்குள் இருள் உள்ளது தோஷம் இருக்கிறது என்று சொல்வார்கள். அதைப் போக்குவற்காக வேண்டி யாகத்தைப் பெருக்கித் தவறுகள் செய்வோர் ஏராளம்.

“சாமி, தெய்வம் என்ற பெயரைச் சொல்லி..,” மக்களை ஏமாற்றித் தவறுகள் செய்வோர் பலரும் உண்டு. இதற்குக் காரணம் என்ன?

“நமது ஆசையின் நிமித்தம் தான்..,” ஏமாற்றும் சாமியார்கள் அதிகமாகத் தோன்றுகின்றார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவதும் “நான் ஏமாந்துவிட்டேன்” என்ற நிலையும் வருகின்றது.

ஆனால், “எல்லாச் சக்திகளும் உங்களுக்குள்ளே உண்டு..,” என்பதை நம்பிப் பழகுங்கள்.

இன்று எங்கே எடுத்தாலும் சாமி பெயரையும் தெய்வத்தின் பெயரையும் சொல்லி “ஏதோ அருளைப் பெற்றேன்..,” என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.

இதைப் போன்ற தவறுகளைச் செய்தே இன்று உலகம் “நம் ஆசையைக் கண்டு.., அந்த ஆசையில்.., அவர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்”. ஆக அவர்களுக்குள் நாம் அடிமையாகிவிடுகின்றோம்.

ஒரு விட்டில் பூச்சி என்ன செய்கின்றது?

ஒளி இருக்கிறது என்று வருகின்றது. அந்த ஒளியிலே வந்தபின் நெருப்பிலே விழுந்து கருகுகின்றது. இதைப் போன்று தான் நம் வாழ்க்கையின் நிலைகளும்.

1. யாரோ தருவார்
2. சாமியார் தருவார்
3.ஜோதிடம் தரும்
4.மந்திரம் தரும்
5.யாகம் தரும் என்ற நிலைகளில் நாம் செல்கின்றோமே தவிர 6.நம்மை நம்புகின்றோமா என்றால் இல்லை.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளை உங்கள் உடலுக்குள் ஏங்கிப் பெற்றுப் பழகுங்கள். உங்கள் அறியாத இருளைப் போக்க இது உதவும்.

“நீங்கள் எதை நுகர்கின்றீர்களோ” அதையே தான் உங்கள் “உயிர்” இயக்கிக் காட்டுகின்றது. இருளைப் போக்குகின்றது. மெய்ப் பொருளைக் காணவும் செய்கின்றது.

இப்பொழுது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற்றேன். அதை நீங்களும் பெறவேண்டும் என்றுதான் அவர் காட்டிய அருள் வழியில்

  1. உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.
  2. உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன்.
  3. உங்கள் உடலை உயர்ந்த குணங்கள் கொண்ட ஒரு ஆலயமாக மதிக்கின்றேன்.
  4. உங்கள் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
  5. உங்கள் சொல்லை இராமனாக மதிக்கின்றேன்.

இராமன் என்றால்.., வேதனை என்ற சொல் வரும் பொழுது வாலியாகின்றது. மகிழ்ச்சி என்ற சொல்லைச் சொல்லும்பொழுது சீதா இராமனாகின்றது.

ஆகவே, “நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்..,?” என்பதற்குத்தான் உங்களுக்குள் கூறுவது.

ஏனென்றால். இந்தப் பிரபஞ்சத்திற்குள் விஷத் தன்மைகள் எது பரவினாலும் துருவ நட்சத்திரம் அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

அதன் உணர்வை நமக்குள் சேர்த்தால் நமக்குள் இருக்கும் நுகரும் அல்லது ஏற்கனவே இருக்கும் இந்த விஷத் தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியின் தன்மையாக மாற்றிக் கொள்ள முடியும். “அந்த நம்பிக்கை கொள்ளுங்கள்”.

 

Trust yourself

KIDNEY எடுப்பதற்காகக் கடத்தப்பட்ட பையன் தப்பி வந்த நிகழ்ச்சி

power-of-thoughts

KIDNEY எடுப்பதற்காகக் கடத்தப்பட்ட பையன் தப்பி வந்த நிகழ்ச்சி

 

நம் அன்பர் பழனிச்சாமி அவருடைய சொந்தக்காரர் பையன் ஒருவன் வியாபாரத்திற்காக போயிருக்கின்றான். பெங்களூருக்கு அவனைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள்.

அங்கே என்ன செய்கின்றார்கள்? ஒரு ஏழெட்டுக் குழந்தைகளைப் படுக்க வைத்திருக்கின்றார்கள். ஆக, சுய நினைவு இல்லாதபடி kidney எடுப்பதற்காக கடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

யார் யாருக்கு எந்தெந்த குழந்தைகளின் உடலில் இருந்து அதை எடுத்து அதை அனுப்ப வேண்டும்? என்று பெங்களூரில் Kidney வியாபாரம் நடந்து கொண்டிருக்கின்றது.

அப்பொழுதுதான், என்னைத் தேடி வந்து இந்த மாதிரி என்னுடய அக்கா பையன் ஓசூருக்கு வேலைக்குப் போனவனைக் காணவில்லை. “ஆளையே காணோம்..,” என்று சொல்கின்றார்கள். வந்து பழனிச்சாமி சொல்கிறார்.

அவரிடம் நான் இந்த மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், “அந்தப் பையனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்..,” என்று எண்ணித் தியானம் செய்யச் சொன்னேன்.

உடனே அங்கே அந்தப் பையனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. எழுந்தவுடனே, அவனுக்கு வயிற்றால் வரவும் டாய்லெட் போகவேண்டும் என்று சொல்லி போயிருக்கின்றான்.

அங்கே போனவுடன் அவனுக்கு ஒரு யுக்தி தோன்றியிருக்கின்றது. டாய்லெட் மேலே சுவர் ஏறிக் குதித்து வெளியில் வருகின்றான்.

இங்கே டாய்லட்டுக்குள் போனவன் வரவில்லையே.., என்று தேட ஆரம்பிக்கின்றனர். அவனைத் துரத்திக் கொண்டு வருகின்றனர்.

பார்த்தால் ஒரு underground  பாதை வழியாகத் தப்பி ஓடுகின்றான். கடைசியில் பார்த்தால் ஒரு சினிமா கொட்டகைக்குள் போகின்றான். அங்கே இருப்பவர்கள் “இவனைத் திருடன்” என்று உதைப்பதற்கு வருகின்றார்கள்.

அப்புறம் இந்தப் பையன் ஒரு போலீஸ்காரரிடம் இந்த விவரங்களையெல்லாம் சொல்லியிருக்கின்றான்.

 இந்த இடத்தில் ஒரு ஏழெட்டுக் குழந்தைகளைப் kidney எடுப்பதற்காகப் படுக்க வைத்திருக்கின்றார்கள். என்னைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். “நீங்கள் அங்கே போய்ப் பாருங்கள்..,” என்று சொல்கின்றான்.

அதே மாதிரி போய்ப்பார்த்தவுடன் இவன் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைகள் அங்கே இருக்கின்றது. அந்தப் பையன் SSLC படித்திருக்கின்றான்.

Kidneyஐ எடுப்பதற்காக வேண்டி இப்படிப் புத்தியை மாற்றிக் கொண்டு போகின்றார்கள்.

எனக்குக் கன்னடம் தெரியும். கன்னடத்தில் அவர்கள் பேசுகின்றார்கள். இன்ன இன்ன ஊருக்கு இந்தக் குழந்தைகளின் உறுப்புகளை எடுத்து அனுப்ப வேண்டும் என்று “நம்பர் போட்டு” வைத்திருக்கின்றார்கள் என்று அந்தப் பையன் சொல்கின்றான்.

எனக்கு வயிற்றால் போனது. “திடீர் என்று.., ஒரு யுக்தி வந்தது”. தப்பிப் போவதற்கு யோசனை கிடைத்தது.

“சாமி..” உங்கள் காட்சி கிடைத்தது. அதனால் தான் தப்பி வந்தேன் என்று அந்தப் பையன் பிற்பாடு இங்கே வந்து சொல்கின்றான்.

இதெல்லாம் இந்த உணர்வு கொண்டு எப்படி இயக்குகின்றது என்று சில நேரங்களில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்” செய்தோம்.

ஏனென்றால் அவன் என்னைச் (ஞானகுரு) சந்தித்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு ஓசூருக்கு வேலைக்குச் சென்ற பையன்.

இன்றைய விஞ்ஞான உலகில் இப்படிப்பட்ட தவறான வழியில் மனித உறுப்புகளை எடுத்து வியாபாரம் பண்ணுகின்றார்கள்.

இன்னும் ஏராளமான நிலைகள் இருக்கின்றது, அதையெல்லாம் சொன்னால் பயந்துவிடுவீர்கள்.

எங்கே சென்றாலும் ஒரு நிமிடம் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

பின் “எங்கே செல்கின்றீர்களோ அந்த இடத்தில் அல்லது யாரைச் சந்திக்கின்றீர்களோ” அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், அங்கே அந்தச் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நலம் பெறச் செய்யவேண்டும் என்ற இந்த உணர்வுடன் நீங்கள் சென்றால் எந்தத் தீமையான உணர்வாக இருந்தாலும் உங்கள் மூச்சலைகள் அதை “ரிமோட்” செய்து விலக்கித் தள்ளிவிடும்.

இதையெல்லாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”. செய்து பாருங்கள்.

1. விஷ்ணு தத்துவம் – கடவுளின் அவதாரம் பத்து

Image

maxresdefault

விஷ்ணு தத்துவம் – கடவுளின் அவதாரம் பத்து

1.நாராயணன்

உயிரணுவின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும் மனிதர் தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை எது? என்பதையும் நமக்கு உணர்த்துவதற்காக ஒரு உயிரணுவின் உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.

உயிரணு தம்முள் உள்ள வெப்பத்தின் தன்மை கொண்டு, உணர்வினைக் கவர்ந்து தன்னுள் இணைத்துக் கொண்ட உணர்வுக்கேற்ப எவ்வாறு தன் வளர்ச்சி பெறுகின்றது என்பதை ஞானிகள் நமக்குத் தெளிவாக்கினர்.

நம்மை நல்வழிப்படுத்துவதற்காக உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியைக் கடவுளின் அவதாரங்களாக வகைப்படுத்தி “உயிரணுவின் தோற்றுவாயான சூரியனுக்கு.., நாராயணன்” என்று பெயரிட்டனர்.

சூரியனைக் கடவுளின் முதல் அவதாரம் என்று நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள்.

ஆதியின் வான்வீதியில் ரூபங்கள் இல்லாத நிலையில் ரூபமாக திடப்பொருளாக உருவாவதை பரம்பொருள் என்று பெயரிட்டனர் ஞானிகள் பரம்பொருள் தன் அருகில் காந்தப் புலன் மோதும் பொழுது சுழற்சியின் தன்மை அடைகின்றது.

தன் ஓடு பாதையில் சுழற்சியால் ஈர்ப்பாவதும் தனது துருவப் பகுதியில் தனக்கு எதிர் முனையில் வருவதைக் கவர்வதும் கவர்ந்து கொண்ட உணர்வை வெப்பம் தனக்குள் உருவாக்கும் திறன் பெறுகின்றது.

பரம்பொருள் தன் சுழற்சியாகும் பொழுது, மேற்பரப்பில் விழும் அணுக்களின் தன்மை, அது நடுப்பாகத்தில் வெப்பத்தின் தன்மை கூடி, தன் அருகிலே இருப்பதை உருகச் செய்து, அதன் உணர்வுகள் கீழே இறங்குவதும், பாம்பொருள் சமமாக இருப்பது மேடு பள்ளமாக மாறுவதும், தான் கவர்ந்து கொண்ட சக்தி, இந்த வெப்பத்தில் கலவைகளாக மாறுவதும், உலோகத் தன்மைகளாக மாறுவதும், கல் மண் பாறைகளாக ஆவதும் இதைப் போன்ற உருமாற்றங்கள் ஏற்படுகின்றது.

இவ்வாறு தனது வளர்ச்சியில் கவர்ந்து கொண்ட நிலைகள் சிறு பொருளாக இருந்தது பெரிய பொருளாக மாறுகின்றது. அப்படி உருப்பெற்ற பொருள்கள் பெரும் கோளாக மாறுகின்றது.

பெரும் பொருளாக மாறும் பொழுது, அதனின் வளர்ச்சியும் அதிகரித்துச் சுழற்சியின் வேகமும் கூடுகின்றது. சுழற்சியின் தன்மையால் வெப்பத்தின் தன்மையும், ஈர்ப்பின் தன்மையும் அதிகரிக்கின்றது.

முதலில் நீராக இருந்தது, அதனில் ஒன்றாகப் பல உணர்வின் அணுக்கள் இணைந்தது. அதனில் நீர் ஆவியாகி ஒன்றாக இணைந்த அணுக்கள் இரண்டறக் கலந்து ஒரு பொருளாக மாறியது.

அதே சமயம் அதனின் சுழற்சி வேகத்தில் வெப்பம் உருவானது. அதனில் இணைந்த உணர்வுகள் உருகும் தன்மை அடைந்து, அதனில் உருமாற்றங்கள் ஏற்படும் நிலைகள் பெற்றது.

இந்த நிலைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் உருவான நிலைகள். கடவுள் என்ற தனித்தன்மை இல்லை.

இயற்கையில் சந்தர்ப்பத்தால் இணைந்த சக்தியின் நிலைகள் எதிர்மறை கொண்டு இயக்கும் நிலைகளால்தான் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுடன் ஒன்று இணையும் நிலை உருவானது.

கடவுள் என்பது வெப்பமாக உள் நின்று தனது இயக்கத்தின் தொடர் கொண்டு தனக்குள் வருவதை உருமாற்றி உணர்வை மாற்றி பல நிலைகளை உருவாக்குகின்றது உள் நின்று இயக்கும் வெப்பத்திற்குத்தான் கடவுள் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

பிரபஞ்சம் உருவாகும் நிலையை சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஞானிகள் தெளிவாகக் காவியங்கள் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

இப்படி, ஞானிகள் ஆதியில் கோள்களும், நட்சத்திரமும், சூரியனும், பிரபஞ்சமும் எப்படி உருவானது என்று நமக்கு உணர்த்தினார்கள்.

ஸ்ரீதேவி, பூதேவி

பாற்கடலில், “ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு.., நாராயணன் இந்த உலகை இரட்சிக்கின்றான்..,” என்று காட்டுகின்றார்கள்.

சூரியன் “தான் வளர்த்துக் கொண்ட சக்தியை.., ஸ்ரீதேவி” என்றும் அடுத்து அது “திடப்பொருளாகும் பொழுது.., பூதேவி” என்றும் நாராயணன் இரு சக்தியின் துணை கொண்டு இயங்குகின்றான் என்றும் உணர்த்தினார்கள்.

சிவ தத்துவத்தில் கங்கை ஒரு மனைவி என்றும் அதனுடன் சேர்ந்த வெப்பம் இன்னொரு மனைவி என்றும் சிவனுக்கு இரண்டு மனைவி என்றுரைத்து நீரின் சக்தியும் வெப்ப சக்தியும் இல்லையென்றால் உருப்பெரும் சக்தி இல்லை. இது சிவசக்தி.

ஆனாலும், சூரியன் காந்தத்தால் இழுத்து உறையச் செய்யும் பொழுது உடலாக மாற்றப்படும் பொழுது.., “ஸ்ரீதேவி” என்று காட்டுகின்றார்கள்.

இப்படி உடலின் தன்மை அடைந்தபின் சுழற்சியின் தன்மை பெற்று தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலை உருவாகின்றது. இதை ஞானிகள் “பூதேவி” என்றும் தெளிவாக்கியுள்ளார்கள்.

நாராயணன் ஒரு கடவுள். அவன் எங்கேயோ இருந்து கொண்டு நம்மை இரட்சிக்கின்றான் என்று எண்ணுகின்றோம்.

ஆனால், நாம் வேதங்கள் நமக்கு உணர்த்திய மூலத்தின் உண்மையை ஞானிகள் காட்டிய வழியில் உணர்ந்திடல் வேண்டும்.

அப்படி உணர்ந்து அந்தக் கருத்தின் உணர்வாக இயங்கத் தொடங்கினால் அதனின் உணர்வை நாம் பெற்று “சூரியன் ஒளிச்சுடரானது போன்று” ஆக முடியும்.

மனிதர் தம் ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் உணர்வின் தன்மையினை வளர்க்க முடியும்.

அகஸ்தியன் தன் இன மக்கள் பெறவேண்டும் வெளிப்படுத்தியதை நாம் தியானத்தில் நுகர்தல் வேண்டும்

Sage Agastiya

அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளைத் தன் இன மக்கள் பெறவேண்டும் என்று “உணர்வாக… மூச்சலைகளாக வெளிப்படுத்தியதை…” நாம் நுகர்தல் வேண்டும்

மனிதர்களான நாம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை பெற்றவர்கள். எதனையுமே நமக்குள் எளிதில் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள்.

விஞ்ஞானி விண்ணிலே அண்டத்தின் நிலைகளையும் பூமிக்கடியில் உள்ள நிலைகளையும் ஊடுருவிப் பார்த்துப் பல பொருகளை அறிகின்றான். அதை எல்லாம் இணைத்து எத்தனையோ புதுப் புது இயந்திரங்களை உருவாக்குகின்றான்.

“ஒலி.., ஒளி..,” அலைகளைப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அங்கே விஞ்ஞானத்தின் நிலைகளில் இயக்குகின்றது.

கடந்த காலத்தில் ஞானிகள் இதைப் போன்று சப்தமிடுவதில்லை. மனதிற்குள் ஒடுக்கி வைத்துள்ளார்கள்.

“தான் பெற்ற ஆற்றல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உள் நின்று பாய்ச்சப்படும் பொழுது மற்றவர்கள் ஏங்கி நிற்கும் பொழுது அந்த உணர்வலைகளை நுகர நேர்கின்றது,

இவன் எண்ணி வெளிவிடும் உணர்வுகளை “மௌனமாக இருந்து..,” உணர்வினை நுகர்ந்து இந்த ஞானியின் உணர்வுகளை அவர்கள் சீடர்களும் உருவாக்கும் தன்மை பெற்றார்கள்.

இப்படித்தான்… “அகஸ்தியன் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை..” சொல் என்ற நிலைகள் வராதபடி.. “உணர்வென்ற நிலையில்” தான் நுகர்ந்த உணர்வுகளைத் தன் இன மக்கள் பெறவேண்டும் என்று உணர்வுகளை “மூச்சலைகளாக…!” வெளியிட்டுள்ளான்.

அதே மாதிரி அகஸ்தியனை உயர்ந்த நிலைகள் கொண்டு எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அகஸ்தியனின் சகாக்களுக்குள்ளும் வளரப்பட்டு தீமைகளை அகற்றும் நிலை பெற்றார்கள்.

அருள் உணர்வை அவன் பெற்றது இந்த வழியில் தான்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தில் வளர்ந்திட வேண்டும்,

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவுகள்.., “சூறாவளி புயல்” போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல.., நாம் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமல்ல.., என்பதை நாம் உணர்தல் வேண்டும்

நாம் சொந்தமாக்கப்பட வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலைகளில் வாழவேண்டும்.., என்ற “இந்த உணர்வை” நமக்குள் சொந்தமாக்க வேண்டும்.

உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைத் தான் பெற்று ஒவ்வொருவரும் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று எண்ணினால் அதனுடன் கலந்து நமக்குள் தெளிவான நிலையும் பெறுதல் வேண்டும்.

பேரன்பைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

சிலர் தவறு செய்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்காத நிலையும் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி வாழ்தல் வேண்டும். ஏனென்றால், குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம்.

இனி எதிர்காலம் மிகவும் சிந்தனையற்ற காலமாகவே மனிதனின் செயல்கள் இருக்கும். மனிதன் மனிதனாகத்தான் இருப்பான்.

ஆனால், மனிதன் பல கொடூரமான செயல்கள் செய்வதும், கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் ஏமாற்றும் நிலைகளில் செல்வம் வைத்திருந்தாலும் வீடு புகுந்து அடித்துக் கொன்று விட்டு பொருளை அபகரித்துச் செல்லும் நிலை வந்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் தேடிய செல்வம் எங்கே இருக்கின்றது?

நாம் எடுக்கும் மூச்சின் அலைகள் கொண்டு எந்தத் தீமையான உணர்வுகளும் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும். இதைப் போன்ற நிலைகளில் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தான் வேண்டுகின்றோம்.

குருநாதர் எம்மை எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தரோ அதே போன்றுதான் “உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம்”.

  1. உலகில் இன்று நடக்கும் தீமையின் உணர்வுகளும்..,
  2. அதை நீக்கிடும் அருள் உணர்வுகள் பெற்றதையும் இணைத்து..
  3. இரண்டையும் கலக்கப்படும் பொழுது இணைத்து..,

“தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகள்.., உங்களுக்குள் வலுப்பெறவேண்டும்” என்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றோம்.

அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம். எமது அருளாசிகள்.