KIDNEY எடுப்பதற்காகக் கடத்தப்பட்ட பையன் தப்பி வந்த நிகழ்ச்சி

power-of-thoughts

KIDNEY எடுப்பதற்காகக் கடத்தப்பட்ட பையன் தப்பி வந்த நிகழ்ச்சி

 

நம் அன்பர் பழனிச்சாமி அவருடைய சொந்தக்காரர் பையன் ஒருவன் வியாபாரத்திற்காக போயிருக்கின்றான். பெங்களூருக்கு அவனைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள்.

அங்கே என்ன செய்கின்றார்கள்? ஒரு ஏழெட்டுக் குழந்தைகளைப் படுக்க வைத்திருக்கின்றார்கள். ஆக, சுய நினைவு இல்லாதபடி kidney எடுப்பதற்காக கடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

யார் யாருக்கு எந்தெந்த குழந்தைகளின் உடலில் இருந்து அதை எடுத்து அதை அனுப்ப வேண்டும்? என்று பெங்களூரில் Kidney வியாபாரம் நடந்து கொண்டிருக்கின்றது.

அப்பொழுதுதான், என்னைத் தேடி வந்து இந்த மாதிரி என்னுடய அக்கா பையன் ஓசூருக்கு வேலைக்குப் போனவனைக் காணவில்லை. “ஆளையே காணோம்..,” என்று சொல்கின்றார்கள். வந்து பழனிச்சாமி சொல்கிறார்.

அவரிடம் நான் இந்த மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், “அந்தப் பையனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்..,” என்று எண்ணித் தியானம் செய்யச் சொன்னேன்.

உடனே அங்கே அந்தப் பையனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. எழுந்தவுடனே, அவனுக்கு வயிற்றால் வரவும் டாய்லெட் போகவேண்டும் என்று சொல்லி போயிருக்கின்றான்.

அங்கே போனவுடன் அவனுக்கு ஒரு யுக்தி தோன்றியிருக்கின்றது. டாய்லெட் மேலே சுவர் ஏறிக் குதித்து வெளியில் வருகின்றான்.

இங்கே டாய்லட்டுக்குள் போனவன் வரவில்லையே.., என்று தேட ஆரம்பிக்கின்றனர். அவனைத் துரத்திக் கொண்டு வருகின்றனர்.

பார்த்தால் ஒரு underground  பாதை வழியாகத் தப்பி ஓடுகின்றான். கடைசியில் பார்த்தால் ஒரு சினிமா கொட்டகைக்குள் போகின்றான். அங்கே இருப்பவர்கள் “இவனைத் திருடன்” என்று உதைப்பதற்கு வருகின்றார்கள்.

அப்புறம் இந்தப் பையன் ஒரு போலீஸ்காரரிடம் இந்த விவரங்களையெல்லாம் சொல்லியிருக்கின்றான்.

 இந்த இடத்தில் ஒரு ஏழெட்டுக் குழந்தைகளைப் kidney எடுப்பதற்காகப் படுக்க வைத்திருக்கின்றார்கள். என்னைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். “நீங்கள் அங்கே போய்ப் பாருங்கள்..,” என்று சொல்கின்றான்.

அதே மாதிரி போய்ப்பார்த்தவுடன் இவன் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைகள் அங்கே இருக்கின்றது. அந்தப் பையன் SSLC படித்திருக்கின்றான்.

Kidneyஐ எடுப்பதற்காக வேண்டி இப்படிப் புத்தியை மாற்றிக் கொண்டு போகின்றார்கள்.

எனக்குக் கன்னடம் தெரியும். கன்னடத்தில் அவர்கள் பேசுகின்றார்கள். இன்ன இன்ன ஊருக்கு இந்தக் குழந்தைகளின் உறுப்புகளை எடுத்து அனுப்ப வேண்டும் என்று “நம்பர் போட்டு” வைத்திருக்கின்றார்கள் என்று அந்தப் பையன் சொல்கின்றான்.

எனக்கு வயிற்றால் போனது. “திடீர் என்று.., ஒரு யுக்தி வந்தது”. தப்பிப் போவதற்கு யோசனை கிடைத்தது.

“சாமி..” உங்கள் காட்சி கிடைத்தது. அதனால் தான் தப்பி வந்தேன் என்று அந்தப் பையன் பிற்பாடு இங்கே வந்து சொல்கின்றான்.

இதெல்லாம் இந்த உணர்வு கொண்டு எப்படி இயக்குகின்றது என்று சில நேரங்களில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்” செய்தோம்.

ஏனென்றால் அவன் என்னைச் (ஞானகுரு) சந்தித்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு ஓசூருக்கு வேலைக்குச் சென்ற பையன்.

இன்றைய விஞ்ஞான உலகில் இப்படிப்பட்ட தவறான வழியில் மனித உறுப்புகளை எடுத்து வியாபாரம் பண்ணுகின்றார்கள்.

இன்னும் ஏராளமான நிலைகள் இருக்கின்றது, அதையெல்லாம் சொன்னால் பயந்துவிடுவீர்கள்.

எங்கே சென்றாலும் ஒரு நிமிடம் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

பின் “எங்கே செல்கின்றீர்களோ அந்த இடத்தில் அல்லது யாரைச் சந்திக்கின்றீர்களோ” அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், அங்கே அந்தச் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நலம் பெறச் செய்யவேண்டும் என்ற இந்த உணர்வுடன் நீங்கள் சென்றால் எந்தத் தீமையான உணர்வாக இருந்தாலும் உங்கள் மூச்சலைகள் அதை “ரிமோட்” செய்து விலக்கித் தள்ளிவிடும்.

இதையெல்லாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”. செய்து பாருங்கள்.

Leave a Reply