நஞ்சாக எது வந்தாலும்… அது எனக்குள் ஒளியின் அறிவாக மாற வேண்டும் ஈஸ்வரா

நஞ்சாக எது வந்தாலும்… அது எனக்குள் ஒளியின் அறிவாக மாற வேண்டும் ஈஸ்வரா

 

“ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…” என்றால் ஆதியில் விஷத்தின் தன்மை வலிமையாகும் பொழுது… தாக்குதலில் வெப்பமும் காந்தமும் உருவாகி ஒரு இயக்கச் சக்தியாக மாறியது.

நமது உயிரும் அவ்வழியிலே சக்தியாக உருவானாலும்
1.நமது உயிரின் இயக்கம் எதிர் நிலையாகி
2.ஆதி சக்தியின் அருள் பெற்று அனைத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா…!

எல்லாவற்றையும் உணர்வின் அறிவாகத் தெரிந்து நடக்கும் அறிவின் உணர்வாக எனக்குள் நீ எப்படி அறிவிக்கின்றாயோ அதைப்போல இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

1.நஞ்சன்ற நிலைகள் வரப்படும் பொழுது அதன் தாக்குதலால் ஒளியான பின்
2.எந்த நஞ்சு என்றாலும் உணர்வின் தன்மை எனக்குள் ஒளியின் அறிவாக மாறுதல் வேண்டும்.

விஷத்தின் தன்மை தாக்கினாலும் சூரியன் தனது பாதரசத்தால் மோதி வெப்பத்தின் தன்மை கொண்டு அந்த விஷத்தை எப்படிப் பிரிக்கின்றதோ இதைப் போல உணர்வின் தன்மை கொண்டு “இருளை நீக்கி உணர்வின் அறிவாக நான் தெளிவாக வர வேண்டும்…” என்பதுதான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா.

இப்படி ஏங்கி அந்த அருள் உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வின் அறிவாக நம் உயிர் நம்மை இயக்கும்.

ஆனால் வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் வேதனை உணர்வின் அறிவாக வேதனைப்படுபவனாக நம்மை மாற்றிவிடும்… வேதனைப்படும் தன்மையைத் தான் உடலில் உருவாக்கும்.

வேதனையான அணுக்கள் உடலில் உருவான பின் இந்த உடலைச் சிறுக்கச் செய்யும். உடல் சிறுத்த பின் உறுப்புகள் சிறுக்கின்றது. உறுப்புகள் சிறுத்த உணர்வு கொண்டு மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் அத்தகைய உடலாக உயிர் உருவாக்கி விடும்.

ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா.
1.நீ ஒளியாக இருக்கின்றாய்… அதைப்போல என் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக ஒளியின் மயமாக
2.இருளை விலக்கிச் செல்லும் சக்தி நான் பெற வேண்டும் என்பது தான் இந்தப் பாடலின் உள்நோக்கம்.

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…!

நான் எதை எண்ணுகின்றேனோ அந்த உணர்வின் செயலாக என்னை இயக்குகின்றாய். எப்போதுமே நீ அறிவாக இயக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் உயிராக நீ இருப்பதனால்
1.உன் நினைவு எப்படி இருக்கின்றதோ எதனின் உணர்வை நீ அறிவிக்கின்றாயோ
2.அதைப் போல தெளிந்த மனம் பெறும் “அந்த உணர்வின் இசை” எனக்குள் வரவேண்டும்.

என் சொல்லைப் பிறர் கேட்கப்படும் பொழுது இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெறுதல் வேண்டும். எதன் உணர்வை நான் நுகர்கின்றேனோ இருளை நீக்கிடும் அருளைப் பெறும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

அது தான் என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்.

நீ எப்படி ஒளியாக இருந்து உணர்வின் தன்மை அறிவாக அறியும் ஆற்றலை எனக்குள் தெளிவாக்குகின்றாய அதன் வழி…
1.என் உணர்வு
2.என் நினைவுகள் அனைத்தும்
3.என் உடலின் அணுக்களும் அவ்வழியே
4.உன்னைப் போன்றே ஒளியாக மாற வேண்டும் என்பதுதான்
5.என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய் உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்து விட்டேன் என்பதன் பொருள்.

எப்படி உலகையெல்லாம் அறியும் தன்மையாக நீ அறிவிக்கின்றாயோ இதைப் போல
1.உலக இருளை நீக்கிடும் ஒளியின் உணர்வாகப் பெறப்படும் அனைத்தையும் “உன்னிடமே விட்டு விடுகின்றேன்…”
2.அந்த அருளால் நீ என்னை இயக்குவாய்… இருளை அகற்றிடும் அரும்பெரும் சக்தியாக மாற்றுவாய்.

அந்த நிலை தான் எனக்கு வேண்டும்.

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா. நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் என்றால் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் நான் ஏது…? உயிர் இல்லாத உலகில் நாம் வாழவே முடியாது… உடல் நிலையாக இருப்பதில்லை.

எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்றால் இந்த உயிர் எத்தனை வகை உடல்களைப் பெற்றதோ உடலைக் காக்கும் சக்தியினைப் பெற்றுத் தான் வளர்ந்து வந்தது.

அந்தந்த உடலைக் காக்க வேண்டும் என்று உணர்வின் தன்மை கொண்டு மனிதனான நிலையில் இந்த உடலைக் காக்கும் சக்தி பெற்றுள்ளது.

தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மை பெற்ற பின் தீமையை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். ஒவ்வொரு உடலிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை நுகர்ந்தோம்.

1.அந்தத் தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக அமைத்தாய்.
2.இதைப்போல எல்லா உடல்களில் இருந்தும் தீமைகளை நீக்கிய அந்த அரும் பெரும் சக்தி எனக்கு வேண்டும்.

காரணம்… இந்த வாழ்க்கையில் எல்லாவிதமான உணர்வுகளும் வருகின்றது அந்தத் தீமைகள் நம்மைத் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து விடுபடும் இந்த அருள் சக்தி பெற வேண்டும்.

ஒவ்வொரு உடலிலும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்து உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி எப்படி அடைந்ததோ… தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை முழுமை அடைந்த நான் “கடந்த கால நினைவுகள் கொண்டு… தீமைகள் வராது தடுக்கும் அந்தப் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…”

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

நம் குழந்தையைச் செல்லமாக வளர்ப்போம். செல்லமாக வளர்க்கும் போது அந்த உணர்வுக்குத் தக்க அவன் தவறு செய்வான். அப்பொழுது அவனைப் பரிபக்குவமான நிலைகள் கொண்டு திருந்தி வாழச் செய்ய வேண்டும்.

ஆனால் பக்குவம் தவறினால்… அவனுடைய தீமை நமக்குள் விளைந்து அவனைத் “தொலைந்து போடா…” என்று தான் சொல்ல வரும். அவனைக் காப்பதற்கு மாறாகச் சாபமிட்டு அவன் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்யும் தன்மையும்… அதனால் வெறுக்கும் தன்மை தான் வருகின்றது.

என் பையனுக்கு அப்படிச் செய்தேன்… இப்படிச் செய்தேன்… ஆனால் இப்படி இருக்கின்றானே…! என்போம். கோவிலுக்குச் சென்று உனக்கு இத்தனையும் செய்தேனே… உன்னை நான் தினமும் வணங்கிக் கொண்டு வருகின்றேனே… என் குழந்தை தவறு செய்கின்றானே…! என்று தான் எண்ணுகின்றோம்.

ஆனால் அந்தக் கோவிலில் காட்டப்பட்ட நல்ல குணங்களை… அந்தத் தெய்வீக பண்புகளை என் குழந்தை பெற வேண்டும் என்ற இந்த உணர்வு மட்டும் நமக்கு வருவதில்லை.

1.சாமியிடம் முறையிட்டுக் குறைகளைச் சொல்லி நீ செய் என்று தான் சொல்கின்றோமே தவிர
2.அவன் அறியாமல் செய்யும் தீமை நமக்குள் வராதபடி அவனும் திருந்தி வாழ வேண்டும் என்ற நிலை வருவதில்லை.

ஒருவர் நம்மிடம் பணம் கேட்டிருப்பார்… நாம் கடன் கொடுத்து உதவி செய்திருப்போம். ஆனால் அவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்றால் எல்லா வகையிலும் அவன் தீமை செய்கின்றான் என்று தான் சொல்ல முடிகிறது.

சரி… ஏதோ சந்தர்ப்பத்தால் அவனால் கொடுக்க முடியவில்லை…! அவனுக்கு அந்த வலுவான நிலையில் வருமானம் வர வேண்டும். தெளிந்த மனம் பெற்று தொழிலில் முன்னேற்றம் அடையும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு அவனை ஊக்குவிக்கும்.

அவன் சோர்வு வேதனையாக நமக்குள் வராதபடி அப்போது தடுக்கப்படுகிறது. அவன் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நல்ல வளர்ச்சி பெறும் தன்மை வந்தால்
1.நமக்குள்ளும் நல்லது நடக்கின்றது.
2.இந்த உணர்வுகள் அவரைச் சிந்திக்கவும் செய்கின்றது.

நல்ல நிலையில் வாழ வேண்டும்… அந்த அன்பு பெருக வேண்டும்… தொழில் முன்னேற்றம் அடைவீர்கள் என்று சொல்லிப் பாருங்கள். இந்த ஊக்கத்தால் பணம் திரும்ப வரும்.

ஆனால் சகஜ வாழ்க்கையில் கடன்காரனைப் பார்த்த பின் வாங்கிய பணத்தை இவன் கொடுப்பானா…? என்று எண்ணும் பொழுது அவன் நம்மைப் பார்த்த பின் உடனே பொய் பேசத் தொடங்குவான்.

பணத்தைத் திரும்பக் கொடுக்கலாம் என்று தான் வந்தேன்… ஆனால் அதற்குள் பையன் பணத்தை வாங்கிச் சென்று விட்டான். எனக்கு வர வேண்டிய பணத்தைத் தருகிறேன் என்று சொன்னார்கள்… ஆனால் அவர்கள் தரவில்லை என்று தான் பொய் சொல்வார்கள்.

காரணம்… இந்தப் பக்குவம் தவறும் பொழுது நமது வாழ்க்கையும் யாருக்கு நாம் பணத்தைக் கொடுத்தோமோ அவர்கள் வளர்ச்சியும் நம்மால் தடைப்படுத்தப்படுகின்றது.

அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்… என்று சொல்கிறோம்.

நான் எல்லோருக்கும் நன்மை செய்தேன். பார்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்று நிலையைத்தான் நாம் சொல்ல முடிகின்றது.
1.ஆக சோதிப்பது யார்…?
2.நமது எண்ணம்தான்.

எதன் உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றதோ அந்த உணர்வின் தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த வாழ்க்கையில் எந்த நிலையைச் செய்தாலும் பக்குவமாக நடந்து கொள்ளும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் தப்பு என்ற நிலைகள் வந்தால் உடனே அதைத் திருத்தும் நிலை அங்கே வருகின்றது.

இதைப் போன்று தான் நம் உயிரிலே படும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். உயிரிலே பட்ட பின் அந்த உணர்வு தவறு என்ற நிலைகளை உணர்த்துகின்றது.
1.ஆனால் அந்தத் தவறிலிருந்து திருந்தி நல்ல வழி வர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வை எடுத்தால்
2.நமக்குள்ளும் நன்மையாகின்றது அவர்களையும் நல்லதாக்கச் செய்கிறது.

இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா.

இந்த உடல் ஆசை எனக்குள் வளராதபடி என்னுள்ளே இருந்து விடு ஈஸ்வரா.
1.நீ ஒளியாக இருக்கிறாய் இந்த உணர்வின் தன்மை என் உணர்வெல்லாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
2.நீ ஒளியாக இருப்பது போன்று என் உணர்வெல்லாம் ஒளியாக இருத்தல் வேண்டும்.

உடல் ஆசை வராதபடி உயிர் ஆசை வேண்டும் என்று… உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்த ஒளி என்ற தன்மை வரப்படும் பொழுது இருள் அண்டிடாது ஒளியின் உணர்வாகப் பெருக முடியும்.

ஆக மொத்தம் உயிர் நாம் எண்ணியதைத்தான் உருவாக்குகின்றது. நாம் இப்பொழுது எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த எண்ணங்கள் அனைத்தையும் கருவாக்கி அதுவாக நம்மை உருவாக்குகின்றது.

“உயிரான ஈசனிடம் வேண்டியபடி…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியின் தன்மை பெற்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றோம் என்றால்… அகஸ்தியன் அகண்ட அண்டத்தின் உணர்வைக் கண்டறிந்து இருண்ட உலகை நீக்கி ஒளி என்ற அறிவாக அந்தத் தெளிந்த நிலைகள் அவன் மனைவிக்கு ஊட்டியதை…
1.இருவருமே அதைக் கருவாக்கி ஒன்றென இணைந்து அந்த ஒளியான உணர்வுகளை
2.துருவத்தில் இருந்து வரும் ஒளியின் கதிர்களை நாம் அனைவரும் பெறுவோம்.

உன்னைப் போலவே ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும் ஈஸ்வரா…!

உன்னைப் போலவே ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும் ஈஸ்வரா…!

 

நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்… இந்த வியாபாரம் செய்தேன்… எத்தனையோ தொழில் செய்தேன் என்றெல்லாம் அடிக்கடி நாம் எண்ணுகிறோம். இருந்தாலும் அதிலே சிறு தடைப்பட்டால் என்ன நினைக்கின்றோம்…? வேதனையைத்தான் எண்ணுகின்றோம்.

நல்லதை நினைக்கின்றோம்… நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். பையனுக்கு நல்லது செய்கிறோம் சொன்னபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

கடன் கொடுக்கின்றோம்… கொடுத்தவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எந்த ஆசை வருகிறது…? வேதனை தான் வருகிறது… அதுவே இயக்குகிறது.

1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு.
2.நீ உயிராக இருக்கின்றாய்… ஒளியாக இருக்கின்றாய்… இருளை அகற்றுகின்றாய்… பொருளைக் காண செய்கின்றாய்.
3.நீ எப்படி உயிராக இருக்கின்றாயோ ஒளியாக இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக இருக்க வேண்டும்.
4.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தியாக இருக்க வேண்டும்
5.உன்னைப் போல் நான் ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும்.

நீ உயிராக இருக்கின்றாய் என் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக வேண்டும். அந்த ஒளியின் சரீரம் தான் நான் பெற வேண்டும்… கடைசி நிலையாக.

தட்டான் பூச்சி இருக்கின்றது பூவிலே முட்டையிடுகின்றது. முட்டையிட்ட பின் பட்டாம் பூச்சியாக வளர்கின்றது. பூச்சி வளர்ந்த பின் பூவைப் போன்றே மாறுகின்றது.

பட்டாம் பூச்சியாக ஆன பின் அதில் இருக்கும் தேனை உட்கொண்டு வேறு ஒரு இலை மீது உட்கார்கிறது. வெயில் காலத்தில் அந்த இலையிலே வெயில் அடித்த பின் இந்த வெயிலின் கடுமை அதற்குள் படுகின்றது. அதை அதிகமாகச் சுவாசிக்கின்றது.

1.சுவாசித்த பின் அதே உணர்வாகி அந்த இலையிலேயே ஒட்டிக் கொள்கின்றது… பார்க்கலாம்.
2.அந்த இலைகளுடன் ஒட்டியபின் இந்த உணர்வுகள் சேர்த்து அதனுடைய துடிப்பும் எல்லாம் சேர்ந்த பிற்பாடு அது ஒரு வண்டாக உருவாகின்றது.

அந்த உடலே பாம்பு சட்டையை உறித்த மாதிரி அதற்குள் இருந்தே கருவாகிறது. வேறு ஒரு பூச்சியாக மாறுகிறது.

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்துச் சேர்த்து
2.இந்த உடலில் உயிர் எப்படி ஒளியாக இருந்ததோ அதைப் போன்று நாமும் ஒளியாக ஆக வேண்டும்.

அதனால் தான் என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்து விடு ஈஸ்வரா என்று பாடுகிறோம். நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக வேண்டும்.

பூச்சிகளைக் குருவி கொத்தித் தின்றது என்றால் குருவின் உடலுக்குள் சென்று குருவியாக மாறுகின்றது.

உணவுக்காக நாம் ஆட்டின் மாமிசத்தை உட்கொண்டோம் என்றால் ஆட்டின் உணர்வு நமக்குள் வருகின்றது.. ஆட்டின் மணமே வரும். உடலை விட்டுச் சென்றால் ஆட்டின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். நாம் எதை எதைச் சாப்பிடுகின்றோமோ அதற்குத்தக்க அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இந்த உயிரின் வேலை அது தான்.நாம் சேர்க்கக்கூடிய உணர்வுக்குத் தக்கவாறு அடுத்த உடலை மாற்றிக் கொண்டே இருக்கும். ஆகவே நாம் எதை மாற்ற வேண்டும்…?

1.பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஒளியை நாம் பெற வேண்டும்
2.அந்த அருள் ஒளி பெற நமக்குப் பொறுமை தேவை.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்ற ஒலிக்குள் இருக்கும் உட்பொருள்

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்ற ஒலிக்குள் இருக்கும் உட்பொருள்

 

ஒருவர் திட்டுகின்றார்… அதைக் கூர்மையாகக் கேட்டால் அவர் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்ட உடனே வேதனையான உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

வேதனையைத் தூண்டும் போது அதன் வழி தான் நாம் நடக்கின்றோம். இதைப் போன்ற நிலையில் இருந்து அடுத்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகள் நம் உடலில் மற்ற உணர்வுடன் அது பரவும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் சரியாக இயக்க முடியாதபடி தடைப்படுத்துகின்றது.

1.நல்லதை இயக்கவிடாமல் தடுக்கும் அந்தச் சக்தியைத் தடைப்படுத்த வேண்டுமல்லவா…!
2.அதற்கு என்ன வழி…?

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி சொல்கின்றோம். நாம் அனைவரும் அப்படி ஏகமாகச் சொல்லும் பொழுது சிலருடைய குரல்கள் வித்தியாசப்பட்டாலும் மற்றவர்களுடன் அது இணைந்து… தனித்துப் பிரித்துக் காட்டாது.

ஒருவருக்கு சப்தம் அதிகமாக இருந்தது… ஒருவருடைய குரல் வீச்சாக இருந்தது என்றாலும் தொனியைக் குறைத்து விட்டால் ஒன்று போல் இனிமையாக இருக்கும்.

உதாரணமாக வாத்தியங்கள் வாசிக்கப்படும் பொழுது அதிலே ஒருவர் பாடுகின்றார். அதிலே பல விதமான நாதங்கள் உண்டு. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.

அதைப் போல பல விதமான எண்ணங்கள் கொண்டு நாம் வந்திருந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது நாம் எழுப்பும் குரல் எல்லோருடைய குரலும் ஒன்றி இருக்க வேண்டும்.

1.ஓ…ம் என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்.
2.நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர்.
3.ஜீவன் ஆனபின் உடலாக இணையச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா…!
4.ஈஸ்வரா என்றால் இயக்கச் சக்தி.
5.குருதேவா…! நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் குருவாக இருக்கின்றது.

எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஒவ்வொரு சமயமும் இதைத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம். இதைக் கேட்டாலும் கூட ஓ…ம் என்ற பிரணவத்திற்கு என்ன பொருள்…? என்று திரும்பியும் கேட்பார்கள்.

ஓ…ம் என்றால் எங்கேயோ பிரணவம் இருக்கிறது என்று எண்ணியே பழக்கப்பட்டு விட்டோம். ஆகவே தெளிவாகத் தெரிந்து மனதில் பதிய வைக்கத் தான் திரும்பவும் ஞாபகப்படுத்துகின்றோம்.

உபதேசம் ஆரம்பிப்பதற்கு முன் இந்த மைக்கை எப்படிச் சரி செய்து கொள்கின்றோமோ இதைப் போன்று
1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போது
2.நம் உயிரின் இயக்கம் மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
3.அந்த நிலைகள் நமக்குள் இயங்காத வண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
4.நம்முடைய எண்ண ஏக்க அலைகள் இப்போது உபதேசிப்பதை அது ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே… புருவ மத்தியிலே எண்ணும் போது
1.அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம்… அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.
2.புருவ மத்தியில் அடிக்கடி எண்ண எண்ண நம் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

ஆக்ஞை

ஆக்ஞை

சில சமயங்களில் நாம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் நம்முடைய பையன் அடம் பிடித்தால் போதும், இந்தப் பற்று இங்கே வந்து விடுகின்றது. அது நம் எண்ணத்தை ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது. இந்த உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.

இந்த நஞ்சான உணர்வு வந்து ஊடுருவப்படும் பொழுது இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது. இந்த உடல் பற்றின் உணர்வுகள் அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு அவ்வப்பொழுது எண்ண வலுவைக் கொண்டு வரவேண்டும்.

அதற்குத்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும்
1.“ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும்… கண்ணின் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும்.
2.கூட்டுத் தியானத்தில் நாம் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வை கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைக்க வேண்டும்.

இவ்வாறு காட்டியதைத்தான் இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் “ஆக்ஞை” இடப்பட்டு என்று சொல்வார்கள்.
1.நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ அது “மூலாதாரத்தில்” உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
2.உடலின் உறுப்புக்களுக்கு மூலம் அணுக்களின் தன்மை… இங்கே உயிர் மூலாதாரம்.

இதைத்தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து” என்கிற பொழுது நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு. அதற்கு வளர்ச்சி இல்லாதபடி… மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்துடன் செயல்பட வேண்டும் என்று தான் அந்த இடத்தில் காட்டப்பட்டது.

இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் அங்கே கட்டளை இடப்படும் பொழுது தான் ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள். அப்பொழுது ஆக்ஞை இட்டுப் பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய் இதன் வழி கொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ என்று சொல்கின்றார்கள்.

மூலாதாரம்… இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே இழுக்கப்பட்டு இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். மூலாதாரம் கீழே இருக்கின்றது என்று இவர்கள் கொண்டு போகின்றார்கள்.

1.ஆனால் நமக்கு மூலம் உயிர்… நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
2.இந்த ஆதாரத்தை நமக்குள் மறைந்திருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்… இதுதான் குண்டலினி.

கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி உணர்வினை உடலுக்குள் பரப்புதல் வேண்டும். அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது தீமைகளைப் பிளக்கின்றது.

ஏனென்றால் நமக்குள் பதிவான குணங்கள் பல கோடி. அது அது சாப்பாட்டிற்குக் கிளர்ந்தெழத்தான் செய்யும். பூமிக்குள் என்னென்ன விதை மறைந்திருக்கின்றதோ மழைக் காலம் வந்து விட்டதென்றால் துணிந்து ஆகாரத்தை எடுத்துத் தழைக்க ஆரம்பித்துவிடும்.

அதே மாதிரி அந்தந்தக் காலப் பருவத்தில் அது அதை எடுத்துக் கொள்கின்றது.

ஒருவர் கோபப்படுவதைப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் சண்டை போடுவதைப் பார்த்தால் அந்தக் காலப்பருவம் வந்துவிட்டது. உடனே ஆன்மாவில் சேர்ந்துவிடும்.
1.உடனே சண்டை போடுகிற மாதிரிதான் வரும்.
2.சண்டையை வேடிக்கை பார்த்தால் வீட்டில் சண்டை போடுவீர்கள்.
3.அந்தக் காலப்பருவத்தில் அது வளர ஆரம்பித்து விடுகின்றது.

நமக்குள் விளைய வைத்த வித்துகள் அந்தந்தக் காலப்பருவம் வந்து விட்டால் அது அது விளைய ஆரம்பித்து விடுகின்றது. எந்தக் காலப்பருவத்தில் விளைந்தாலும் நமக்குத் தேவைப்பட்டதை விளையச் செய்யக் களையை நீக்குகின்றோம். அதை நீக்குவதற்குச் சக்தி கொடுக்கின்றோம்.

1.எந்தக் காலப்பருவமானாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அந்த உணர்வை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி வலுப் பெறச் செய்து அதற்குச் சாப்பாடு இல்லாமல் செய்ய வேண்டும்.

இந்தக் களையை நீக்க வேண்டும். இதை நீக்கினால்தான் அதற்குச் சாப்பாடு கிடைக்காது. இல்லையென்றால் சண்டை போட்ட அணுவெல்லாம் சாப்பாடு எடுத்துவிடும்.

ஓரு குடும்பத்தில் வேதனைப்படுகிறார்கள். அந்த வேதனையான சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்தோமென்றால் அந்தக் காலப்பருவம் என்ன செய்யும்…? அந்த வேதனையான அணுக்கள் நம்மிடம் வந்து வளர்ச்சி அடைய ஆரம்பித்து விடுகின்றது.

இப்படிப் பெரும்பகுதி எங்கு திரும்பினாலும்… ரயிலில் போகும் பொழுது… அடுத்தவர்கள் செய்யும் தவறைப் பார்த்தால் வேதனை. கடையில் இருக்கும் போது ஒருத்தருக்குக் கடன் கொடுத்துவிட்டு அவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனை கோபம் குரோதம் வெறுப்பு.

1.இதுவெல்லாம் சந்தர்ப்பத்தால் விளையப்படும் போது உள்ளுக்குள் ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்கும்… அது அது வளரும்.
2.மனிதருடைய மனநிலை காலையில் ஒரு மனதாக இருக்கும்.
3.இதை விட்டு வெளியே போகின்றோம் என்றால் மனது வேறு விதமாக மாறும்.

தொழிலில் அமர்ந்தவுடன் என்ன ஆகும்…?

ஒருவன் நம் சொல்லைக் கேட்காமல் இருப்பான். நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருப்பான். நாம் இங்கே இருக்கும் வரையில் இதையெல்லாம் மறந்து இருப்போம். ரோட்டில் போகும் பொழுது மறந்திருப்போம். தொழிலில் உட்கார்ந்தவுடனே அவனைப் பார்த்தவுடனே மீண்டும் அந்தக் களை முளைக்க ஆரம்பித்துவிடும்.

வேதனை வெறுப்பு வந்து விட்டால் நல்லவர்களையும் வெறுத்துப் பேச ஆரம்பித்துவிடும். ஒரு நல்ல அமைப்பை அமைக்க வேண்டுமென்றால் வெறுப்பாகத்தான் வரும். அந்தந்தக் காலப்பருவத்தில் அது அது விளைகின்றது.

நாம் ஒவ்வொரு நிமிடத்திலும் மனிதன் காலப்பருவத்தை மாற்றுகின்றோம். அதே போல
1.மாற்றியமைத்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி
2.அந்தந்தப் பருவங்கள் வரப்படும் பொழுது களைகளை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதுதான் ஆத்ம சுத்தி என்பது.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பல முறை எண்ண வேண்டும்.

இதைத்தான் அன்று ஞானிகள் சொன்னது ஆக்ஞை..! இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உயிருடன் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை இயக்கும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வைப் புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் கொண்டு போக வேண்டும்.

சிறிது நாட்களுக்குப் பழக்கம் வந்து விட்டதென்றால் இது உள்ளுக்குள் கொண்டு போகும். அப்பொழுது இந்த உணர்வின் செல்களை வளர்க்கப்படும் பொழுது எதை அங்கு பற்றினோமோ இந்த நினைவு துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போகும்.

நீசமாகும் உடலுக்கு நாம் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை

நீசமாகும் உடலுக்கு நாம் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை

 

உதாரணமாக நாம் நமது நண்பர் ஒருவர் வீட்டிற்குச் செல்வோம். அப்பொழுது அவர் ஏதோ ஒரு சங்கடத்தில் இருந்திருப்பார். அவர் தன் சங்கட நிலையில் நம்மை “வாங்க…!” என்று அழைக்காது விட்டு விட்டால் போதும்.

நமது மனதில் “இவனுக்கு வந்த கௌரவத்தைப் பார்… வீடு தேடி வந்திருக்கிறேன்… கொஞ்சமாவது மதிக்கிறானா…?” என்ற வெறுப்பு உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. “நம்மை மதிக்கவில்லையே…” என்று எண்ணும் பொழுது, வேதனை உணர்வுள் நம்மிடத்தில் வருகின்றது.

1.“வாங்க…” என்று எந்த மனிதர் நம்மை அழைக்கவில்லையோ
2.அந்த மனிதருடைய நல்ல குணங்களை நல்ல பண்புகளை நாம் அறிய முடியாதபடி
3.நம்முடைய வேதனையான உணர்வுகள் மறைத்து விடுகின்றன.

நண்பராக இருந்து அன்புடன் பழகிய அவரின் நல்ல உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு நம்முடைய சிந்தனைத் திறனும் தெளிந்த மனமும் குறைந்து கொண்டே வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அத்தகைய தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் யாம் அருள் ஞானத்தை உங்களுள் பதிவாக்குகின்றோம்.

நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை. நாம் எத்தனை கௌரவம்… எத்தனை துணி… எத்தனை அலங்காரம்… எத்தனை சுகமான நிலை… எத்தனை பஞ்சு மெத்தை…? போட்டு வைத்திருந்தாலும் இந்த ஈசன் போய்விட்டால் குப்பையில் போட்டு எரித்துவிடுவார்கள்.

நடைமுறையில் நாம் பார்க்கும் கௌரவம் எல்லாம்… இப்படியெல்லாம் இருந்தார்கள் என்று பார்க்கிறோமோ…?
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும் போதும் மண்ணைக் கொட்டும் போதும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
2.ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…? என்று கேட்கின்றோமோ…!
3.ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் நாற்றம் அடிக்கும் என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே ஈசன் இருக்கும் போழுதே நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த மெய் ஞானியின் உணர்வை எடுத்து அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி அந்த மெய் ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்தக் கௌரவப் பிரச்சனை நமக்குள் நிறையவே உண்டு. ஏனென்றால் நாம் அல்ல.

அரசனுக்கு… கௌரவத்தில் என்ன செய்கிறான்…? யார்… என்ன தப்புப் பண்ணினாலும் சரி…? உடனே போர் தான். நான் சொன்னேன் கேட்கவில்லை… உடனே போர் முறை.

இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன்.
1.நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிடு.
2.என்னை எதிர்த்துப் பழகி விட்டால் அதே உணர்வு என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.
3.இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டே தான் இருக்கும்.

ஆக எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்காகத் தான் உங்களுக்கு இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். இதை வைத்து வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அப்பொழுது நிவர்த்தி செய்து பழக வேண்டும்.

இன்று நாம் நமது மனித வாழ்க்கையில் உடல் பற்று கொண்டு உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடி அலைகின்றோம். அதே சமயம் தேடிச் சேர்த்த செல்வம் நாம் இறந்தபின் நம்முடன் வருமா…? வருவதில்லை. நமது உடல் கூட வருவதில்லை.

ஆனால் நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை எண்ணி அந்தச் செல்வத்தைத் தன் மகன் காப்பானா…? அடுத்தவர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்களா…? என்ற அச்சமும் வேதனையும் கொள்கின்றோம்.

தன் மகனைக் காக்க வேண்டுமென்றுதான் எண்ணுகிறோம்.
1.அவனை எப்படிக் காக்கப் போகிறேன்…? என்று அவனை நினைத்து வேதனையை நமக்குள் வளர்த்து விட்டால்
2.நமது உடலில் விஷ அணுக்கள் பரவி நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது…
3.கடும் நோயினை நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

நோயானபின் உடல் நலிந்து மனித உடலை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அழிந்து விஷம் கொண்ட உணர்வுகள் உடலில் பெருகிய நிலையில் உடலை விட்டு உயிரான்மா வெளியில் வருகின்றது.

எந்த மகன் மீது பற்று வைத்தோமோ அவனுடைய உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும்
1.பத்துப் பேரில் யார் மீது அதிகப் பாச உணர்வைச் செலுத்தினோமோ
2.இந்த உயிரான்மா இதன் தொடர் கொண்டு பற்று கொண்ட உடலுக்குள் தான் செல்கின்றது.

இது போன்றே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நீங்கள்… நான் அவனுக்கு உதவி செய்தேன். ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை. உதவி வேண்டும் போது மட்டும் என்னை அணுகினான் அவனுக்கு வசதி சேர்ந்தபின் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து எந்த மனிதனை எண்ணி வேதனையின் உணர்வுகளை வளர்த்தார்களோ அதனின் உணர்வுகள் உங்கள் உடலில் பெருகி இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எந்த உணர்வின் தன்மையைத் தன்னுள் வளர்த்தீர்களோ உயிராத்மா அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.

1.அங்கே சென்று தன்னுள் வளர்த்த வேதனையை அவரிடத்திலும் உருவாக்கி
2.வேதனையின் உணர்வுகளை அதிகமாக வளர்த்த நிலையில் தான் புகுந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வந்தபின்
3.உயிரான்மா… பாம்பாகவோ தேளாகவோ தான் அடுத்த உடலைப் பெறும்.

ஆகவே நல்ல நினைவு இருக்கும் போதே உயிரை மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிரான்மாவுக்குச் சேர்க்கும் அழியாச் சொத்தாக ஆக்க வேண்டும்.

இச்சை… கிரியை… ஞானம்…!

இச்சை… கிரியை… ஞானம்…!

 

ரோட்டிலே சண்டை போடுகின்றார்கள்… ஏன் சண்டை போடுகின்றார்கள்…? என்று இச்சைப்படுகின்றோம். நுகர்கின்றீர்கள்… கிரியை ஆகின்றது. பார் நடு ரோட்டில் சண்டை செய்கின்றான் பார்…! என்பீர்கள்

அப்போது யார் பேசுவது…? அந்த உணர்வு உங்களை இயக்குகின்றது. அது கிரியை ஆகி அதன் ஞானப்படித் தான் நீங்கள் பேச ஆரம்பிக்கின்றீர்கள்.

நான் இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.அந்த அருளைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று பதிவு செய்து விட்டால்
2.இதை நீங்கள் எண்ணும் பொழுது அந்தச் சண்டை போட்ட உணர்வுகள் இயங்காதபடி அதை அமுக்கித் தடைப்படுத்தி விடும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை இச்சைப்படும் பொழுது இது முதலில் புகுந்து விடுகின்றது.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று யார் முந்திப் புகார் (COMPLAINT) செய்கின்றார்களோ அவர்களுடைய உணர்வுகள் தான் எடுபடும்.

ஆக நம் உயிர் இருக்கும் இடம் போலீஸ் ஸ்டேஷன்…! இவர்கள் உணர்வை உள்ளே விட்ட பின் என்ன ஆகின்றது.
1.உள்ளுக்கே சென்று அந்த உணர்ச்சியைத் தூண்டுவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தடுத்து விட்டால்
3.இங்கே உயிரிடம் ரிப்போர்ட் கொடுத்து விடுகின்றோம்.
4.கெட்டது உள்ளே வராதபடி அதை துரத்துகின்றது… உள்ளே போகாதபடி தடுக்கப்படுகிறது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

உங்கள் நண்பனைக் காண வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆளைக் காணோமே…? எங்கே…? என்று கேட்பீர்கள்.

ஐயோ…! உங்களுக்குத் தெரியாதுங்களா…? அவர் உடல் நிலை சரியில்லாதபடி படுத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.

இதைக் கேட்ட பின் பதிவாகின்றது… அந்த உணர்வைச் சுவாசிக்கின்றீர்கள் மூஷிகவாகனா.
1.அடுத்த கணம் நண்பரைப் பார்க்க அந்த உணர்வு இங்கிருந்து நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாக எண்ணங்களாக சொல்லாக வந்து இழுத்துச் செல்கின்றது.

இச்சை… கிரியை… ஞானம்…! அவனைக் காண வேண்டும் என்று ஞானத்தை ஊட்டுகின்றது.

வாழ்க்கையில் இதையெல்லாம் புரிந்து கொள்வதற்குக் காவியங்களைப் படைத்து நம் உடலுக்குள் ஒவ்வொரு உணர்வும் என்ன செய்கின்றது…? நம்மை எப்படி இயக்குகின்றது…? நாம் இந்த வாழ்க்கையில் எப்படிச் செல்ல வேண்டும்…? என்று தான் கோவிலில் வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.

நண்பனைப் பார்க்கின்றோம். அவர் என்னால் முடியவில்லை என்று சொல்லும் பொழுது.. பாசத்தால் நாம் கேட்கப்படும் போது என்ன நடக்கிறது…? அதைக் கவர்கின்றீர்கள்… இச்சைப்படுகின்றீர்கள்… நீங்களும் சேர்ந்து அழுக ஆரம்பிக்கின்றீர்கள்.

அந்த ஞானத்தின் தன்மை கொண்டு இப்படி ஆகிவிட்டதா…? நேற்று நன்றாகத் தானே இருந்தாய் இன்று இப்படி ஆகி விட்டாயா…? என்ற ஞானத்தைத் தான் பேசுகின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையின் நிலைகளில்
1.நம் ஆறாவது அறிவை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.இதுபோன்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் வரும் தீமைகளை உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாறாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அடிக்கடி எடுத்து அதை உயிரிலே நிலை நிறுத்த வேண்டும்.

அவனுக்குள் ஒன்றி… அவனாக… அவனாகவே ஆக வேண்டும்

அவனுக்குள் ஒன்றி… அவனாக… அவனாகவே ஆக வேண்டும்

 

ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று. நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது. அவன் அமைத்த கோட்டை இந்த உடல். இந்தக் கோட்டையை நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.

1.அவனுக்குள் ஒன்றி அவனாகவே ஆகவேண்டும்.
2.“என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா” என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள் ஒலி ஒளி என்ற நிலையில் உயிர் என்று ஆகின்றது.
3.“நீயே தான் நான்… நானே தான் நீ…!” என்று உயிரோடு ஒன்றி ஒளியென்ற நிலை நாம் என்றும் பெற்றிடுவோம்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனாகி உள்ளோம்.

இந்த உடலில் உயிர் நம்மை உருவாக்கியது என்று எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

உயிரின் உணர்வில் எக்காரணம் கொண்டும் நஞ்சு அணுகாது காத்துக் கொண்டவர்கள் ஞானிகள்.
1.இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது அதைத் தடுக்கும் ஞானம் தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

ஆகையால் நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.

1.நாம் இந்த உடலை விட்டு எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் (சப்தரிஷி மண்டலம்) நாம் இணைந்திடல் வேண்டும்.

அங்கே இணைந்து விட்டால் நமக்கு அழிவே இல்லை.

அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது இந்த மனித உடலில் தான். ஆனால்
1.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால்
2.நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.

நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது.
1.நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
2.ஆகவே தான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.

நாம் ஒவ்வொரு நாளும் உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று
1.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை குரு எமக்கு எப்படி ஈர்க்கச் செய்தாரோ
3.அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய் ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். எமது அருளாசிகள்.

நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை… அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை

நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை… அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை

 

நாம் ரத்தப் பரிசோதனைக்குச் செல்கிறோம். பார்த்த நிலையில் ரத்தங்கள் அனைத்தும் சீராக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

தொழிலின் நிமித்தம் செயல்படும் போது அதில் மிகவும் நஷ்டமாகின்றது. கடன் வாங்கியிருக்கின்றோம்… அதைத் திரும்பக் கொடுக்க வேண்டி வருகிறது. குடும்பத்திலோ பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை… வருமானமும் வருவதில்லை.

இப்படி எல்லாம் எதிர்மறையாக நடக்கப்படும் பொழுது
1.அந்த அதிர்ச்சி தரும் உணர்வுகளைச் சுவாசித்து எடுத்துக் கொண்ட பின் அடுத்த ரத்தப் பரிசோதனைக்குச் சென்றால்
2.சிவப்பு அணுக்கள் குறைந்திருக்கும்… வெள்ளை அணுக்கள் அதிகமாக உருவாகி இருக்கும்.
3.ரத்தம் காணாமல் போகின்றது… சிவப்பு அணுக்களை உருவாக்கும் சக்தி குறைந்து விடுகின்றது…
4.அந்த அணுக்கள் மடிந்து விடுகின்றது… ரத்த சோகை வருகின்றது… பலவீனம் அடைகின்றது… ரத்தக் கொதிப்பு ஆகிறது.

தீமையான உணர்வுகள் அதிகமாகும் பொழுது ரத்தக் கொதிப்பாகி உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதற்குரிய உணவு இல்லாது போய் விடுகின்றது. சரியான உணவு கொடுக்கவில்லை என்றால் சுருங்கத் தொடங்கும். கை கால்களைச் சுருங்க வைத்துவிடும்.

நேற்று வரை நன்றாக இருந்தோம்…! என்றாலும் இப்படி எல்லாம் உடலுக்குள் ஆவதைப் பார்க்கலாம்.

வேறு ஒன்றும் வேண்டாம். சப்… என்று இருக்கக்கூடிய பொருளைச் சாப்பிட்டாலும் சர்க்கரைச் சத்து உள்ளவருக்கு திடீரென்று கவலையோ சோர்வையோ நுகர்ந்து விட்டால் இந்த உணர்வுகள் அதிகரித்து சர்க்கரைச் சத்து கூடி விடும். சர்க்கரையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகின்றது.

அதே சமயத்தில் அதிகமாகச் சந்தோஷப்பட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விடுகின்றது.

இப்படி… சோர்வு சஞ்சலம் சலிப்பு என்று நாம் எண்ணும் போதெல்லாம் அது அணுக்கருக்களாக ரத்தத்திலே உருப்பெற்றுச் சுழலத் தொடங்குகிறது.

உதாரணமாக… நாம் பூமியில் காற்று மண்டலததில் கலந்து வரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருமே என்றால் அது அலைகளாக மாறும். அலைகளாக வரப்படும் பொழுது தாவர இனங்கள் அதனதன் இனமான சக்தியை அதிலிருந்து கவர்ந்து தன் இனமாக வளர்கின்றது.

இதைப் போன்று
1.நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட வேதனை சஞ்சலம் சலிப்பு என்ற உணர்வுகள் அணுக்களாக உடலில் வளர்ந்து விடடால்
2.தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது உயிர் அந்தந்த உணர்வைக் கவர்ந்து உணவாகக் கொடுக்கின்றது.

சூரியன் தாவரங்களின் சத்தினை எடுத்துக் கொண்டால்… தாவர இனத்தில் விளைந்த வித்தைப் பூமியிலே ஊன்றி விட்டால் பூமியின் துணை கொண்டு அதை ஈர்க்கும் போது அதனாதான் இனமாக வளர்ந்து விளைகின்றது. அது அது தன் இன வித்தை மீண்டும் வளர்க்கின்றது.

இது இயற்கையின் நிலைகள்.

இதைப் போல
1.வேதனைப்பட்ட மனிதரின் உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் நமது உயிர் உடலில் அணுக்களாக மாற்றுகின்றது.
2.அணுக்கள் ஆன பின் அதனுடைய பசிக்கு… எந்த குணத்தால் அது உருவானதோ அந்த உணர்வுகள் கிளர்ச்சிகளை உண்டாக்கும்.

அதே உணர்வின் தன்மையை உயிர்
1.நம் முன் பாகம் கண்கள் வழியாகவோ தசைகள் வழியாகவோ செவிப் புலன் வழியாகவோ எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி
2.உயிர் வழி நுகரப்பட்டு உடலுக்குள் பரப்பச் செய்கின்றது.
3.எந்த வழியிலும் அதற்கு உணவைக் கொடுத்து அதைக் காக்கும்.

சூரியன் தாவரங்களுக்கு உதவுவது போன்று நமது உயிர் உடலில் விளையும் அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்தே தீரும்.
1.அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை.
2.நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை.

உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. சுவாசத்திற்கொப்ப நம் எண்ணங்கள் இயங்குகிறது. அந்தச் சத்து ஈர்க்கப்பட்டு அணுக்கள் விளைகின்றது… இயக்குகின்றது. ஆக இந்த வாழ்க்கையில் எந்தக் குணததை அதிகரிக்கின்றோமோ அதன் வழி ரத்தத்தில் கருக்களாக உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்… உயிரை ஈசனாக மதிக்க வேண்டும். உடலை அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று மதிக்க வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
1.தீமைகள் புகாது… தீமையான அணுக்களாக உருவாகாது
2.அருள் ஒளியின் அணுக்களாக நாம் நமக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

 

இன்று உலகில் போர்கள் நடந்து கொண்டுள்ளது. சிந்திக்கும் ஆற்றல் மறைந்து கொண்டுள்ளது.
1.நல்ல செய்திகளைக் கேட்க முடியவில்லை.
2.அன்பும் பண்பும் அரவணைப்பும் மறைந்து வருகிறது.

பண்டைய கால மனிதர்கள் விலங்குகளைப் போல் வாழ்ந்தது போன்று இன்று நாம் நகரில் வாழ்ந்தாலும் “காட்டில் வாழ்வது போல் தான் இருக்கிறது…”

ஒருவருக்கொருவர் கொல்லும் உணர்வே வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய தீமையான நிலைகளை அகற்றிடும் சக்தி எங்குமில்லை.
1.எந்த மதக் கடவுளும் அதைக் காக்கவில்லை.
2.இன்றைய உலகில் கடவுளாக வணங்கி வரும் எந்தக் கடவுளும் தீமை செய்பவர்களுக்கு நல்ல போதனையைக் கொடுக்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலே தான் நமக்குள் நடக்கின்றதே தவிர “மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகிறது…”

எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது… அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கிறது.

தனித்து ஒரு கடவுள் இல்லை…!

1.நாம் எண்ணும் உணர்வுகளில் எத்தகைய தீமைகளை நாம் செய்கிறோம் என்று நம் உயிர் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கும்.
2.அதே சமயத்தில் எந்த வகையில் எந்தெந்தத் தீமைகளை நீக்கினோம் என்று அந்தக் கணக்கையும் உயிர் வைத்துக் கொண்டே இருக்கும்.

ஆக மொத்தம் முடிவில் நமக்கு ஜட்ஜ்மெண்ட் – தீர்ப்பு கூறுவது நம் உயிர் தான். எதன் கணக்காகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை நீ பெறுவாய்… அதனை நீ அனுபவித்துப் பார்…! என்று தீர்ப்புக் கூறி
2.அதன் வழி அடுத்த வாழ்க்கை தொடர்கின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம் தீமையை அகற்றிடும் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய கஷ்டமோ துன்பமோ துயரமோ அதை உற்றுப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டு நுகர்ந்திருந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இயக்கிடாது தடைப்படுத்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி இப் பிறவியில் வரும் இருளை அகற்றி… “உயிருடன் ஒன்றி ஒளி என்ற உடலைத் தான் பெறுவோம்…” என்று உறுதிப்படுத்துங்கள்.

1.எந்த நிலையிலும் இந்த உடலை விட்டுத் தான் உயிர் செல்கிறது.
2.செல்லும் பொழுது இந்த உடலில் எதைச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க மாற்று உடலை உருவாக்குகின்றது உயிர்.
3.உணர்வுக்கொப்ப உடலை உயிர் மாற்றுகின்றது என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளேன்.

ஆகவே குரு வழியில் நமக்குள் அருள் சக்தியினைக் கூட்டித் தீமை புகாது தடுத்து… நாம் பார்ப்போருக்குத் தீமை என்று உணர்ந்தால் அது வராது தடுத்து வேதனைப்படும் உணர்வுகளிலிருந்து அவரை நாம் மீட்டு… அவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானத்தை நாம் பெறவே இந்தத் தியானத்தை அமைத்துள்ளோம்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கும் பொழுது “நீங்களும் அதன் வழியில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்…”

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தியைப் பெற்று அதன் வழியில் உங்கள் உடலில் தீமை அகற்றிடும் சக்தியாக அத்தகைய உறுப்புகளாக மாற்றி ஓர் தெளிந்த மனம் பெறும் சக்தி பெறுவீர்கள்.

1.வரும் இருளை அகற்றி… இந்த வாழ்க்கையை ஒரு புனிதப் பயணமாக வைத்து
2.இந்த வாழ்க்கைக்குப் பின் என்றும் ஏகாந்த நிலையாகப் பகைமையற்ற நிலையில்
3.பிறிதொன்று நம்மைக் கவர்ந்திடாத நிலையை அடையச் செய்யும் மார்க்கம் தான் “நமது குருநாதர் காட்டிய அருள் வழி…”

இந்தப் பிள்ளை யார்…?

இந்தப் பிள்ளை யார்…?

 

ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்பதை உணர வேண்டும்.

1.அவர்கள் விண்ணுலகம் சென்ற உணர்வை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி
3.அருள் மகரிஷிகள் உணர்வுகளை அரும்பெரும் சக்தியாக மாற்றச் செய்வது தான் விநாயகர் தத்துவம்.

இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியிட்டு அங்கே காட்டியிருப்பார்கள்.

புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் மனிதனாக ஆனபின் மற்ற தீமைகளை அடக்கி விட்டு உயர்ந்த ஒளியின் உணர்வாக தனக்குள் அரசாட்சி பரிந்து அதையே ஒளியாக மாற்றி
1.விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.அவனுடன் ஒன்றிய அவனாக நாம் மாறுகின்றோம்.

நாம் எண்ணிய உணர்வு அனைத்தும் “நான்” என்றாலும் உயிரின் தன்மை கொண்டு தனித்த நிலையில் உயிரே இயக்குகின்றது. அதிலே நாம் எண்ணிய உணர்வு எதுவோ அதனுடன் இணைந்து செயல்படும் போது “தான்” ஆகின்றது.

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது… அதாவது நான் தானாகி… தான் நானாகின்றது.

உயிரின் தன்மை தனக்குள் ஒளியின் சிகரமாக மாறினாலும்… உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி இது மறைத்தாலும்
1.தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதை
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறிய பின்… ஒளிச் சரீரமாக மாறிய பின் “நான் ஆகின்றது…”

நான் தானாகி… தான் நானாகிறது என்பதைத் தான் இந்தப் பிள்ளை யார்…? என்ற நிலையை நிலைப்படுத்தி அதை அறிந்திடும் நிலையாக இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைக் கார்த்திகேயா என்று அழைக்கின்றார்கள்.

அந்த ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி “மகரிஷிகளுடன் என்றும் ஒன்றியே வாழ்வோம்…”