நாம் பேசும் பேச்சுக்கள் “தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி” என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

Remote action

நாம் பேசும் பேச்சுக்கள் “தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி” என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

எத்தனையோ பேர் குருநாதரோடு (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) பழகினார்கள்.

அவர் ரசமணி செய்து கொடுத்தால் சக்தி கிடைக்கும். அவரிடம் சித்துகள் பெற்றால் நானும் சக்தி பெறுவேன் என்று அந்த ஆசையில்தான் வந்தார்கள்.

அவர் யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்களெல்லாம் சாமி எங்கள் வீட்டில் தான் படுத்திருந்தார். நான் சோறு போட்டேன் என்று சொல்லுவார்கள்.

அதே சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தால் மலம் இருந்து வைத்து விடுவார். துணியைக் கிழித்து வைத்து விடுவார் என்று சொல்லுகிறவர்களும் உண்டு.

நம் வீட்டிற்கு வந்தாலும் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரில் தவிடை எடுத்துப் போட்டு “அனைத்தும் அசிங்கமாயிடுச்சு”என்று சொல்லி அனைத்தையும் கொட்டிவிடச் சொல்வார்.

குடத்தில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் ஊற்றிவிட்டு “வீடு அசிங்கமாக இருக்கு, அதைக் கழுவுகின்றேன்”என்று சொல்வார். வீட்டிற்குள் சின்ன ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு “எவனோ அசிங்கம் பண்ணி வைத்திருக்கான். அதைக் கழுவ வேண்டும்” என்பார்.

எனது (ஞானகுரு) மாமியார் “பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டு இந்த மாதிரி செய்கின்றான்”என்று சொல்லி என்னைத் திட்டும்.

ஒரு நாள் இங்கே வந்து “இந்தச் சொத்து போய்விடும்.., இந்த வீடு போய்விடும், எல்லாமே போய்விடும்..”என்று குருநாதர் சொல்கிறார்.

இது சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது மாமியார் அருளாட ஆரம்பித்து விட்டது. “உடம்பெல்லாம் எரியுது தண்ணீர் ஊற்று” என்று சொல்கிறது.

குருநாதர், “எனக்குத் தெரியாமல் எப்படி இந்தச் சாமி வருகிறது” என்று சொல்கிறார். “எரியுதா…!” “உனக்கு இன்னும் எரியும் பார்” என்கின்றார். அக்கினியாகின்றது.

“அந்தக் கிழவனை போகச் சொல்”என்கிறது அந்த அம்மா.

என்னிடம்“தண்ணீர் எடுத்து அடி”என்றார், அடித்தவுடன் கீழே விழுந்துவிட்டது. அது உடலில் இருந்த பேய் போய்விட்டது.

கழுவிவிட வேண்டும் என்று சொன்ன நிலைகள்
1.இந்த வீட்டில் “அந்த அம்மா பாதங்களால் பதிவானது”
2.என் மனைவியின் சின்னம்மா அது சாபமிட்ட அலைகள் இங்கு இருக்கின்றது
3.அதனால் தான் தண்ணீரை ஊற்றி கழுவச் சொன்னேன் என்றார் குருநாதர்.

துணியைப் போட்டுத் தேய்க்கின்றார் குருநாதர்.

எல்லாம் போய்விட்டது என்றேன் நான்.

உன் கண்களுக்குத் தெரியவில்லை, நீ முட்டாள்டா என்கிறார். “உற்றுப் பார்…” என்றார்.

“பார்க்கும் பொழுது” அந்தம்மா திட்டியது…, பேசியது…, எல்லாம் டேப் ரிக்கார்டரில் பதிவான மாதிரி.., சுழன்று கொண்டு இருக்கின்றது.

இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

நாம் வீட்டில் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று நினைக்கிறோம். அவர்கள் உடலில் எந்தெந்த எண்ணங்களை வேகமாக எண்ணினார்களோ
1.பூமியில் (தரையில்) இருக்கின்ற காந்தம்
2.அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.

சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுகாரர் என்ன செய்வார்?

குடும்பக் கஷ்டங்களை எல்லாம் உங்களிடம் பேசினால் நிம்மதியாக இருக்கின்றது என்று சொல்லி உட்கார்ந்து இரண்டு பேரும் பேசுவார்கள்.

1.எந்த இடத்தில் உட்கார்ந்து பேசினார்களோ
2.அந்த இடத்தில் பதிவாகிவிடும். அந்த அலைகள் எல்லாம் சேர்ந்து விடும்.
3.அடுத்து நிம்மதியாக இருந்த வீட்டிற்குள் சண்டையும் சச்சரவுமாக வந்து விடும்.
4.நாங்கள் என்ன பாவம் செய்தோமோ… தெரியவில்லையே…! என்பார்கள்.

காரணம் இரண்டு பேரும் கலந்து உறவாடிய உணர்வுகள் தரையிலும் அடுத்து அந்த வீட்டின் சுவரிலும் பதிவாகி விடுகின்றது.

சங்கடமாக இருந்தால் “வேறு எங்கும்” போக மாட்டார்கள்,
1.சங்கடமாக எங்கு பேசினார்களோ..,
2.அங்கு போய்த் தான் உட்காருவார்கள்.

இதே மாதிரி நீங்கள் வெளி இடங்களிலும் பார்க்கலாம்.

சாதரணமாக சுற்றுலா மையங்களில் பார்த்தால் சில பேர் ஒதுங்கித் தனியாகப் போவார்கள். உட்காருவதற்கே இடமிருக்காத அந்த இடங்களில், ஒற்றைக் காலில் நிற்பார்கள்.
1.ஊரில் இருக்கின்ற குறைகளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள்.
2.இவை அனைத்தும் அந்த இடங்களில் பதிவாகும்.

அந்த இடத்திற்கு வந்தவுடனே ஊரில் உள்ள குறைகளைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். குறைகளைப் பேசப் பேச, அவர்கள் தொழில் நலிந்துவிடும்.

1.உலகத்தில் எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள்,
2.ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்
3.நம் தொழில் மட்டும் நலிந்து கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்கள்.

நான் குமாரபாளையத்தில் இருக்கும்பொழுது தலையில் உருமா கட்டிக் கொண்டு சுற்றுலா செல்வார்கள். சின்ன ஒற்றைக் கல்லில் ஒரு காலில் நின்றுகொண்டு பேசுவார்கள். அதைப் போய் பார்க்கச் சொல்வார் குருநாதர்.

அங்கு சென்று பார்த்தால் பேசியது எல்லாம் அங்கு பதிவாகி இருக்கும், அதெல்லாம் டேப் செய்யப்பட்டு இருக்கும், அந்த உணர்வலைகளைக் கவனித்தால் அவர்கள் பேசியதெல்லாம் இருக்கும்.

நமது உயிர் எலெக்ட்ரிக். நாம் நுகர்வதை (சுவாசிப்பதை) எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் கரண்டை உற்பத்தி செய்கின்றது. எடுத்துக் கொண்ட உணர்வை அலைகளாக இயக்குகின்றது.

இந்த உண்மையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலைய வைத்தார். மெய்ஞானியின் உணர்வைப் பெறக்கூடிய நிலைகளை உணர்த்தினார்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வை வளர்த்து அதைப் பெற வேண்டுமென்று அவர்கள் பெற்ற உணர்வை வளர்த்தால் நாம் அங்கே போகலாம்.

நமது எல்லை துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வாழும் சப்தரிஷி மண்டலமாகத்தான் இருக்க வேண்டும். அந்த உணர்வை வளர்த்து அங்கே செல்வதுதான் “மனிதனின் கடைசி எல்லை”.

அந்த எல்லையை அடையும் அருள் வாழ்க்கையை நீங்கள் அனைவரும் வாழ குரு அருளும் எமது அருளும் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

தங்கம் செய்யும் வித்தை

Image

Golden heart.JPG

தங்கம் செய்யும் வித்தை 

குருநாதர் என்னை பழனிக்கு அருகில் இருக்கும் மலைக்கு அழைத்துச் சென்று ஒரு கரண்டியும் ஈயமும் எடுத்து வரச் சொல்லிச் சொன்னார்.

அங்கு அவர் சொன்ன இடத்தில் இருக்கும் செத்தைளை எல்லாம் எடுத்து வரச்சொல்லி “இந்த இடத்தில்.., இந்த மாதிரி செத்தைகள் இருக்கும், எடுத்துக் கொண்டு வா…” என்று எனக்கே தெரியாமல் அவர் இதையெல்லாம் செய்கிறார்.

நான் அதையெல்லாம் எடுத்து வந்தவுடன் அந்தக் கரண்டியை வைத்து அந்த ஈயத்தையும் வைத்து இந்தச் செத்தைகளெல்லாம் போட்டுத் “தீயை வைத்து எரிடா…” என்றார்.

அது எரிந்து வந்தவுடன் இந்த ஈயம் உருகியது. உருகியவுடன் அது தங்கம் போன்ற நிறமாக மாறியது. அது அப்படியே எரிந்து கொதிக்கிறது.

கொதித்தவுடன்.., “எப்படி இருக்கிறது?” என்று எம்மிடம் கேட்டார் குருநாதர்.

நான் “ஜக…ஜக…ஜக…” என்று இருக்கிறது சாமி என்றேன்.

என்னடா ஜக…ஜக…ஜக…! என்று இரண்டு அடியும் கொடுத்தார். மறுபடியும் எப்படி இருக்கிறது? என்றார்.

ஜக ஜக ஜக என்றேன் நான்.

திரும்பவும் என்னடா ஜக ஜக ஜக என்று சொல்கிறாய்? என்று, இரண்டாவது தடவையும் ஒரு அடி கொடுத்தார் குருநாதர்.

மீண்டும் நான் என்ன செய்தேன்? ஜக ஜக ஜக என்று சொன்னேன்.

அப்புறமும் எப்படி இருக்கிறது? என்று கேட்டார் குருநாதர்.

“தங்கம்…” மாதிரி மின்னுகிறது சாமி.., என்றேன்.

குருநாதர் அப்படிச் சொல்லுடா…, “தூ” என்று சொல்லி அவர் உமிழ் நீரை அதில் துப்புகிறார். துப்பியவுடன்.., மூடுடா என்றார்.

பின் அதை எடுத்துப் பார்த்தால், உறைந்து இருக்கிறது. “பார்த்தால் தங்கக்கட்டி”. அலுங்காமல் கொண்டு போய் அதை விற்றுவிட்டு வா என்றார்.

இது உண்மையா… பொய்யா…? என்பதைத் தெரிந்து கொள்ள இரண்டு பேரும் தங்க வேலை செய்பவரிடம் கொண்டு சென்று கொடுத்தோம்.

அவர் உரசிப் பார்த்து விட்டு..,  “அட..அட..அடடடா., என்ன இது…! சாமியிடம் நீங்கள் கற்றுக் கொண்டதைக் கொண்டு வாருங்கள். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

இங்கு நகைக் கடையில் கொடுத்தால், நீ ஏன் பைத்தியம் கூடச் சேர்ந்து சுற்றினாய்…! என்று “இப்பொழுதுதான்” தெரிகின்றது. ஏதோ விஷயத்தோடு தான் சுற்றியிருக்கிறாய் என்கிறார்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவா, உனக்கு நான் காசு தருகிறேன். இருவரும் லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்ளலாம். நீ சும்மா செய்கிறாய். ஆனாலும், நான் இன்றைக்கு உள்ள தங்க விலையில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள், யாரிடமும்  சொல்ல வேண்டாம் என்கிறார்.

இன்னொருவர் வாத்தியார் இராமகிருஷ்ணன் என்பவர் பாதரசத்தைச் செய்கிறேன் என்று அந்த ரசத்தைக் கூட்டி, எனக்குத் தங்கம் செய்வதைக் கொஞ்சம் சொல்லிக் கொடு.

நான் பாதரசத்தைக் கட்டிக் கட்டி முடியவில்லை. நீ தங்கத்தைச் செய்யும் வித்தையை, எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடு என்கிறார்.

நீ செய்ய வேண்டாம், நானே செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதைச் சொல் நான் கட்டித் தருகிறேன் என்று கூறி என் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தார். பின் கடைசியில் அவர் செத்தும் போனார்.

இப்படி எல்லாம் மனிதனுடைய ஆசைகள். எப்படியெல்லாம் மனிதருக்கு ஆசைகள் வருகிறது? எமக்கே (ஞானகுரு) இதைச் செய்தபின் கடைகளில் பணத்தை வாங்கி வந்து என் பிள்ளைகளுக்குச் செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது.

குருநாதர், தங்கத்தை விற்ற அந்தக் காசை வாங்கிக் கொண்டார். “பார், எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டமெல்லாம் எப்படி இருக்கிறது? அதை நிவர்த்தி செய்ய வேண்டுமா இல்லையா?” என்று கூறி அந்தப் பணம் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, எமக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

இத்தனை தூரம் செய்த பிற்பாடு, இந்த ஒரு ரூபாயை எம்மிடம்  கொடுத்து உன் பிள்ளைகளுக்கு, “மிட்டாய் திண்பண்டங்கள் வாங்கிக் கொடு” என்கிறார், குருநாதர்.

ஆக இப்படிச் செய்தவுடன் எமக்கு என்ன ஆசை வருகின்றது?

குருநாதருக்குத் தெரியாமல், அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் சென்று அந்த செத்தைகளையெல்லாம் போட்டு ஈயக் கரண்டியும் கொண்டு வந்து அவர் செய்த மாதிரியே யாமும் செய்தோம்.

அதே மாதிரி தங்கமாக மாறியது.

இரண்டாவது முறையாகத் தங்கம் ஆனவுடன் இரண்டு பேரிடம் தங்கம் பதம் பார்ப்பவர்களிடம் கொடுத்து, அது எப்படி இருக்கிறது என்றேன்?

“அட..அட..அட., நைனா.., உனக்கு இன்றைக்கு உனக்கு கோடீஸ்வரன் ஆவதற்கு நேரம் வந்துவிட்டது”. உங்களைத் தேடி எத்தன பேர் வருவார்கள்? என்று இதில் பெருமை பேசுகின்றார்கள்.

இவர் இப்படிச் சொன்னவுடன்…, அங்கிருந்து குருநாதர் வருகிறார். ரோட்டில் திட்டிக் கொண்டே.., “ஏய்.. திருட்டுப் பயலே.., திருடா.., டேய்.. தெலுங்கு ராஜ்யம்..,” என்று எம்மைத் திட்டிக் கொண்டு வருகிறார்.

ஒரு சைக்கிள் செயினையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். இப்படி யாம் ரகசியமாகத் தங்கம் செய்தோம் என்று “டேய்.. திருடா” என்று சொல்லிக் கொண்டே வருகின்றார் குருநாதர்.

நான் என்ன செய்தேன்? எழுந்து விழுந்தடித்து சந்துப் பக்கம் ஓடி ஒளிந்து கொன்டேன். அங்கேயும் பின்னாடி என்னைத் துரத்திக் கொண்டே வந்து விட்டார் குருநாதர்.

அவர் எங்கேயோ இருந்து கத்திக் கொண்டே வருகிறார். “ஏய்.., திருடா”. தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் திட்டுவார் என்னைத் திட்ட மட்டார், தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் சொல்லித் திட்டிக் கொண்டே வந்தார்.

அப்பொழுது தங்கத்தை எடுத்துக் கொண்டு “ஓடி.., ஓடிப் பார்க்கிறேன்”. இருந்தாலும் என்னால் முடியவில்லை கடைசியில் என்னைச் சுற்றி வளைத்துவிட்டார்.

“இங்கே வாடா” என்றார் குருநாதர். எவ்வளவு தங்கம் செய்தாய்? என்று பிடித்துக் கொண்டார்

அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. தங்கத்தை அவர் வாங்கிக் கொண்டார். போய் விற்றுவிட்டு வாடா என்றார். விற்றுவிட்டு வந்தவுடன், பணத்தை அவரே வாங்கிக் கொண்டார்.

ஏன்டா உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி? என்றார் குருநாதர்.

1.உன் மனதைத்தான் தங்கமாக்கும்படி நான் சொன்னேன். இதில் எத்தனை நிலைகள் இருக்கின்றது?

2.உன் மனதைத் தங்கமாக்கினால் எத்தனை தங்கம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஏன்டா உனக்கு இந்தப் புத்தி வருகிறது? என்றார்.

அந்த நிலையில் தங்கம் செய்யும் ஆசை எனக்கு வரப்போகும் போது, இதே போல் நான் செய்த மாதிரி அடுத்தவர்களுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.

நான் குருநாதரிடம் பழகிக் கொண்டு இருக்கும் போதே அவருக்குத் தெரியாமல் காசு சம்பாதித்துவிடலாம். வீட்டுக் கஷ்டத்தையும் போக்கி விடலாம் என்று இந்த உணர்வுதான் வருகின்றது.

ஏனென்றால், மனிதனுடைய மனங்கள் எப்படி இருக்கிறது? என்று சோதிக்கிறார், குருநாதர்.

பின் தங்கம் செய்து விற்றார் என்று சொல்லிக் கொண்டு எமக்குப் பின்னால் எல்லோரும் தேடி வருவதற்கு ஆரம்பித்தார்கள்.

கொஞ்சம் சொல்லிக் கொடு, நாங்கள் செய்து கொள்கிறோம் நீ செய்ய வேண்டாம்.. நீ செய்தால் தானே குருநாதர் உன்னை விடமாட்டார். நீ சொல்லிக்கொடு, நான் எல்லாம் செய்துகொள்கிறேன். உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன். பாதிப் பங்கு கொடுக்கிறேன் என்று சேர்ந்து எம்மைச் சுற்றிக் கொண்டு வந்தவர்கள் ஏராளமானோர்.

ஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு ஆசையின் தன்மைகளை எமக்குக் காட்டி, காட்டுக்குள் அழைத்துச் சென்று இதையெல்லாம் தெளிவுபடுத்தினார்.

“மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டும்” என்று இங்கு தெளிவாகக் காட்டுகிறார்.

ஆக சூரியன் எப்படிப் பல உணர்வை எடுத்துப் பாதரசமாக மாற்றி உலகத்தின் தன்மையை எப்படி உருவாக்கும் தன்மை பெறுகின்றதோ அதே மாதிரித்தான் எல்லா மனிதனுடைய உணர்வும் இந்த பாதரசத்தின் தன்மை அடைந்தது அதன் உணர்வின் தன்மை பெற்றது தான் அந்த உயிர்.

ஆக மொத்தம் உன்னுடைய உயிரையும் இதே போல ரசமாக்குதல் வேண்டும் உணர்வின் தன்மையை ஒன்றாக்குதல் வேண்டும்.

எப்படிப் பாதரசம் சுக்கு நூறாக ஆனாலும் அது மீண்டும் ஒன்று சேர்ந்து ஆகின்றதோ அதன் வழியில் நீ செயல்படுதல் வேண்டும் என்பதைத்தான் இப்படி அங்கே காட்டினார்.

உயிருடன் ஒன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கி “உயிரை மணியாக்கும்” நிலைக்கு இத்தகைய அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்.

தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்க “முன் சிந்தனை” வேண்டும் – நடந்த நிகழ்ச்சி

Divine master

தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்க “முன் சிந்தனை” வேண்டும் -நடந்த நிகழ்ச்சி

“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?

கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே…, எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?

ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.

தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.

இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.

என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?

“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்”. அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது…, பயம் வருகின்றது.

1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால்
2.அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
3.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
4.உள்ளுக்குள் போய் உன்னைப்  பயப்படச் செய்வது யார்…?
5.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள்  போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
6.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.

திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.

என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…,” என்கிறார் குருநாதர்.

போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்துவிட்டது.

அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.., “அந்தச் சந்தர்ப்பம்”. அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.

அப்புறம் என்ன செய்தேன்…?

“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.

அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.

மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.

அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.

ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.

அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.

குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.

விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன். திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது?

விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது..? அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.

விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.

1.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது?
2.பயம்.., என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது?3.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?

இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

அப்புறம் என்னாகிவிட்டது? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.

நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நல்லா திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை” வந்தது.

அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.

அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.

முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்? ஆபத்து தான்.

இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்பதற்குத்தான் இந்த அனுபவம்.

ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…! என்று  காட்டுகிறார்.

அதன் வழியில் நான் போகின்றேன்.

முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.

அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில்  நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.

விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது? அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாகப் இப்படி சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி இருக்கும்?

குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்?

குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் அவரை எண்ணி இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.

இது தான் என்னுடைய அனுபவம்.

அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.

பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.

அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.

ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார்” என்று காட்டுகின்றார்.

ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.

நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.

ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.

அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.

ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய  தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.

காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.

ஆனால், அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.

சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.

தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.

காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

நல்ல நேரம்… கடவுள் காப்பாற்றினார் என்று சொல்கிறோம்…  நடந்த நிகழ்ச்சி

spiritual-path

நல்ல நேரம்… கடவுள் காப்பாற்றினார் என்று சொல்கிறோம்…  நடந்த நிகழ்ச்சி

யாம் (ஞானகுரு) எப்பொழுதோ இரயிலில் அடிபட்டு இறந்து போக வேண்டிய ஆள்.

எமக்குக் கல்யாணமாகி இருந்த சமயம் அது. மதுரையில் மீனாட்சி மில் கேட்டிலிருந்து வெங்கடாசலபுரத்திற்குப் போக வேண்டுமென்றால் ஒரு இரயில் பாதையைத் தாண்டித்தான் போகவேண்டும்.

இரயில் பாதை பாலத்துடன் கூடியதாக இருந்தது. எமது மனைவியை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.

நாங்கள் இரயில் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்தப் பாதையில் இரயில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் நாங்கள் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கிப் போக முயன்றோம்.

கீழே இறங்கிப் போகலாம் என்றால் அங்கே கால் வைக்க முடியாதபடி அளவிற்கு அதிகமாக அசூசையாக இருந்தது.

உடனே என் மனைவி, “அய்யய்யே..,” என்று மூக்கைப் பொத்திக்கொண்டு எம்மையும் சேர்த்து இரயில் தண்டவாளத்திற்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

எமக்கு யோசிக்க நேரமில்லை, இரயில் அருகில் வந்துவிட்டது.

உடனே என் மனைவியை இரயில் பாதையின் மறுபக்கம் தள்ளிவிட்டு யாம் இந்தப் பக்கம் தாவிக் குதித்து வந்துவிட்டோம். ஒரு நொடிப்பொழுது தாமதித்திருந்தால் இரயிலில் அடிபட்டு இறந்திருக்க வேண்டியதுதான்.

இது நடந்த நிகழ்ச்சி.

இது போன்று ஒரு சமயம் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சர்பத் தயாரித்து விற்று வந்தோம். அப்பொழுது வியாபாரத்திற்குச் செல்ல யாம் இரயில் பாதையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

ஒரு ஆளை வேலைக்கு வைத்து தள்ளு வண்டியில் சர்பத் தயாரிப்பதற்குண்டான சரக்குகளை ஏற்றி அவரை முன்னால் செல்லும்படி செய்தோம். யாம் பின்னால் வந்துகொண்டிருந்தோம்.

அப்படி வரும் பொழுது இன்றைக்கு இத்தனை பாட்டில் விற்றால் இவ்வளவு இலாபம், அவ்வளவு இலாபம் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்டு வந்தோம்.

அது சமயம் “இரயில் பாதையில்.., இரயில் வந்துகொண்டிருந்தது” எமக்குத் தெரியவில்லை.

ஆனால், சர்பத் வண்டியைத் தள்ளிச் சென்றவர் இரயில் பாதையைக் கடந்து சென்றுவிட்டார்.

யாம் மனதில் கணக்குப் போட்டுக் கொண்டே.., “இரயில் வருவது தெரியாமல்” இரயில் பாதையில் தண்டவாளத்தில் கால் வைக்கச் சென்றோம்.

அப்பொழுது எமது முதுகின் மேல்.., “ஒரு கல்” வந்து விழுந்தது.

“யாரடா.., என் மீது கல் வீசுவது?” என்று வேகமாகத் திரும்பிப் பார்த்தோம். அங்கே ஒருவரையும் காணவில்லை.

“என் மீது யார் கல் வீசியது?” என்று திரும்பிப் பார்த்த சமயத்தில் இரயில் வேகமாகச் செல்கிறது. அது சமயம கல் என் மீது விழுந்திருக்கவில்லை என்றால் அன்றைக்கே யாம் இரயிலில் அடிபட்டு இறந்திருப்போம்.

பின்னாளில் குருநாதர் என்னிடம், “அன்று உன் மீது நான் கல் வீசவில்லையென்றால்.., நீ இரயிலில் சிக்கி நசுங்கியிருப்பாய்” என்று கூறினார்.

இது நடந்த நிகழ்ச்சி.

குருநாதர் “என்னை எப்படி எப்படியோ.., கண்காணித்துக் காப்பாற்றி வந்து.., என்னை அவர்பால் ஈர்த்துக் கொண்டார்”.

குருநாதர் என்னை எப்படி எப்படியோ காப்பாற்றி வந்தார் என்று யாம் உங்களிடம் கூறுகின்றோம். ஆனால், அதே சமயம் எம்மைக் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்.

ஒவ்வொரு சமயமும் எமக்குக் கஷ்டங்களைக் கொடுத்துத்தான் “உண்மைகளை.., யாம் அறியும்படி செய்தார்”.

ஆனால், யாம் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கஷ்டங்களை நீக்குவதற்கு “உபாயங்களைக் கூறி வருகிறோம்”.

நமது அன்பர்கள் குரு காண்பித்த அருள்வழியில் தியானம் செய்வார்கள்.

“நன்றாக இருக்கிறது” என்றும் கூறுவார்கள், சில நன்மைகளும் பெறுவார்கள் பிறகு, தியானம் செய்வதை விட்டுவிடுவார்கள்.

ஒருவர் தியானத்தில் வளர்ந்தால் அவருடைய குடும்பத்திற்கு நன்மைகள் கிடைக்கும். அவருடைய குடும்பத்தார் அனைவரும் நலம் பெறுவார்கள். அவரால் அவர் வசிக்கும் தெருவிலுள்ளோர் நலம் பெறுவார்கள் என்று “யாம் ஆசைப்பட்டுச் செய்தாலும் கூட.., அதை மறந்து” எமக்கு எதிரியாகத் திரும்புபவர்களும் இருக்கின்றார்கள்.

யானைகள், புலிகள் வாழும் காடுகளில் கூட இது போன்ற நிலை இல்லை. “மனிதர்களின் மத்தியில்தான்..,” இதுபோன்ற நிலைகள் இருக்கின்றன.

நீங்கள் தியானம் செய்கின்ற பொழுது உங்களைப் பார்த்து, “என்ன.., பெரிய தியானம்.., செய்கின்றார்” என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்தால் போதும்.

பிறகு நீங்கள் “ஒளிந்து ஒளிந்துதான்” தியானம் செய்யவேண்டி வரும். மற்றவர்கள் செய்யும் கேலியும் கிண்டலையும் நீங்கள் “ஏற்றுக் கொண்டால்” பிறகு நீங்கள் தியானத்தையே விட்டுவிடவேண்டியதுதான்.

விஷத்தின் தன்மை என்பது “வாலி”, வலிமை அதிகம்.

வாழ்க்கையில் எத்தனையோ தீமைகள் உண்டு. அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் மீள்வதற்குண்டான சக்தியை யாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் யாம் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

உங்களுக்குக் கொடுத்துள்ள அருள் சக்தியின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கிட வேண்டும்.

யாம் உபதேசிக்கும் முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அதைப் பற்றுடன் பற்ற வேண்டும். அப்பொழுது நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

“இது மிகவும் சுலபமான வழி”. ஒன்றும் கஷ்டமில்லை. “சிறிது காலம்.., கடைப்பிடித்து வந்தால்” பிறகு எல்லாம் சீராக வரும்.

KIDNEY எடுப்பதற்காகக் கடத்தப்பட்ட பையன் தப்பி வந்த நிகழ்ச்சி

power-of-thoughts

KIDNEY எடுப்பதற்காகக் கடத்தப்பட்ட பையன் தப்பி வந்த நிகழ்ச்சி

 

நம் அன்பர் பழனிச்சாமி அவருடைய சொந்தக்காரர் பையன் ஒருவன் வியாபாரத்திற்காக போயிருக்கின்றான். பெங்களூருக்கு அவனைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள்.

அங்கே என்ன செய்கின்றார்கள்? ஒரு ஏழெட்டுக் குழந்தைகளைப் படுக்க வைத்திருக்கின்றார்கள். ஆக, சுய நினைவு இல்லாதபடி kidney எடுப்பதற்காக கடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

யார் யாருக்கு எந்தெந்த குழந்தைகளின் உடலில் இருந்து அதை எடுத்து அதை அனுப்ப வேண்டும்? என்று பெங்களூரில் Kidney வியாபாரம் நடந்து கொண்டிருக்கின்றது.

அப்பொழுதுதான், என்னைத் தேடி வந்து இந்த மாதிரி என்னுடய அக்கா பையன் ஓசூருக்கு வேலைக்குப் போனவனைக் காணவில்லை. “ஆளையே காணோம்..,” என்று சொல்கின்றார்கள். வந்து பழனிச்சாமி சொல்கிறார்.

அவரிடம் நான் இந்த மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், “அந்தப் பையனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்..,” என்று எண்ணித் தியானம் செய்யச் சொன்னேன்.

உடனே அங்கே அந்தப் பையனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. எழுந்தவுடனே, அவனுக்கு வயிற்றால் வரவும் டாய்லெட் போகவேண்டும் என்று சொல்லி போயிருக்கின்றான்.

அங்கே போனவுடன் அவனுக்கு ஒரு யுக்தி தோன்றியிருக்கின்றது. டாய்லெட் மேலே சுவர் ஏறிக் குதித்து வெளியில் வருகின்றான்.

இங்கே டாய்லட்டுக்குள் போனவன் வரவில்லையே.., என்று தேட ஆரம்பிக்கின்றனர். அவனைத் துரத்திக் கொண்டு வருகின்றனர்.

பார்த்தால் ஒரு underground  பாதை வழியாகத் தப்பி ஓடுகின்றான். கடைசியில் பார்த்தால் ஒரு சினிமா கொட்டகைக்குள் போகின்றான். அங்கே இருப்பவர்கள் “இவனைத் திருடன்” என்று உதைப்பதற்கு வருகின்றார்கள்.

அப்புறம் இந்தப் பையன் ஒரு போலீஸ்காரரிடம் இந்த விவரங்களையெல்லாம் சொல்லியிருக்கின்றான்.

 இந்த இடத்தில் ஒரு ஏழெட்டுக் குழந்தைகளைப் kidney எடுப்பதற்காகப் படுக்க வைத்திருக்கின்றார்கள். என்னைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். “நீங்கள் அங்கே போய்ப் பாருங்கள்..,” என்று சொல்கின்றான்.

அதே மாதிரி போய்ப்பார்த்தவுடன் இவன் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைகள் அங்கே இருக்கின்றது. அந்தப் பையன் SSLC படித்திருக்கின்றான்.

Kidneyஐ எடுப்பதற்காக வேண்டி இப்படிப் புத்தியை மாற்றிக் கொண்டு போகின்றார்கள்.

எனக்குக் கன்னடம் தெரியும். கன்னடத்தில் அவர்கள் பேசுகின்றார்கள். இன்ன இன்ன ஊருக்கு இந்தக் குழந்தைகளின் உறுப்புகளை எடுத்து அனுப்ப வேண்டும் என்று “நம்பர் போட்டு” வைத்திருக்கின்றார்கள் என்று அந்தப் பையன் சொல்கின்றான்.

எனக்கு வயிற்றால் போனது. “திடீர் என்று.., ஒரு யுக்தி வந்தது”. தப்பிப் போவதற்கு யோசனை கிடைத்தது.

“சாமி..” உங்கள் காட்சி கிடைத்தது. அதனால் தான் தப்பி வந்தேன் என்று அந்தப் பையன் பிற்பாடு இங்கே வந்து சொல்கின்றான்.

இதெல்லாம் இந்த உணர்வு கொண்டு எப்படி இயக்குகின்றது என்று சில நேரங்களில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்” செய்தோம்.

ஏனென்றால் அவன் என்னைச் (ஞானகுரு) சந்தித்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு ஓசூருக்கு வேலைக்குச் சென்ற பையன்.

இன்றைய விஞ்ஞான உலகில் இப்படிப்பட்ட தவறான வழியில் மனித உறுப்புகளை எடுத்து வியாபாரம் பண்ணுகின்றார்கள்.

இன்னும் ஏராளமான நிலைகள் இருக்கின்றது, அதையெல்லாம் சொன்னால் பயந்துவிடுவீர்கள்.

எங்கே சென்றாலும் ஒரு நிமிடம் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

பின் “எங்கே செல்கின்றீர்களோ அந்த இடத்தில் அல்லது யாரைச் சந்திக்கின்றீர்களோ” அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், அங்கே அந்தச் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நலம் பெறச் செய்யவேண்டும் என்ற இந்த உணர்வுடன் நீங்கள் சென்றால் எந்தத் தீமையான உணர்வாக இருந்தாலும் உங்கள் மூச்சலைகள் அதை “ரிமோட்” செய்து விலக்கித் தள்ளிவிடும்.

இதையெல்லாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”. செய்து பாருங்கள்.

பிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை நிலை”

Image

Beware of Black Magic

பிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை நிலை”

 

“நல்ல காலம் வருகின்றது, நல்ல காலம் வருகின்றது” என்று சொல்லி குடுகுடுப்பையை அடித்துக் கொண்டு நடு இரவு வருவார்கள்

அப்படி வரும் பொழுது, உங்களுக்குச் செய்வினை செய்திருக்கிறார்கள், தோஷம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருவான்.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார்? ஒரு கம்பளித் துணியை என் உடலில் சுற்றிக் கொள்ளச் செய்தார். மரத்தின் மேல் ஏறி நின்று கொள் என்றார்.

“குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது, அப்படியே மரத்திலிருந்து குதிடா” என்றார்.

குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது அதே மாதிரி சொல்லிக் கொண்டு நான் குதித்தேன்.

அவன் என்ன செய்தான்?

“கத்துகின்றான்.., சீ பிசாசு, சீ பிசாசு போ.., போ..,” என்று ஓடுகின்றான். கையிலிருந்த பொருளை எல்லாம் போட்டுவிட்டு

அப்படியே கிடு கிடு என்று நடுக்கமாகி, கீழே மயக்கம் போட்டு விழுந்துவிட்டான்.

அப்புறம் மறுநாள் அதே இடத்திற்குச் செல்லச் சொன்னார் குருநாதர். ஒன்றும் தெரியாத மாதிரி குடுகுடுப்பைக்காரனிடம் “என்னப்பா..,” என்று கேட்டேன்.

“இந்த ஊரில் பெரிய பிசாசு இருக்கின்றது” என்று பிசாசு ஓட்டுபவன் சொல்கின்றான். அதனால், இந்த ஊருக்குள் வருவது மிகவும் ஆபத்தானது. இந்த ஊருக்குள் நான் இனிமேல் வரவே மாட்டேன் என்றான்.

ஆக, குடுகுடுப்பைக்காரனிடம் என்ன இருக்கிறது? அவனுக்கு முன்னால் குதிக்கும் பொழுது எதெல்லாம் அவனுக்குள் இயக்குகின்றது? என்ற இந்த உண்மைகளை அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை இந்த வேஷம் போடச் சொன்னார்.

குருநாதர் பிறகு என்ன செய்தார்? இந்த விபூதியைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்து குடுகுடுப்பைக்காரனைக் காப்பாற்றிவிடு, இதே பயம் வந்தது என்றால் செத்துப் போவான், இந்தப் பாவத்தை நீ ஏற்றுக் கொள்ளாதே, கொண்டு போய் கொடுத்து வா என்று எம்மிடம் சொன்னார்.

அதே மாதிரி அவனிடம் சொன்னவுடன், சாமி என்னைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுதுதான் எனக்குத் தெளிவாகின்றது என்றான்.

இதெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் எப்படியெல்லாம் செய்கின்றார்கள்? மனித உடலிலிருந்து மந்திரத்தால் கவர்ந்து என்னென்ன வேலையெல்லாம் செய்கின்றார்கள் என்று உணர்த்துகின்றார்.