ஆத்ம ஜோதி ஜொலிக்கும் சந்தர்ப்பம் – ஈஸ்வரபட்டர்

ஆத்ம ஜோதி ஜொலிக்கும் சந்தர்ப்பம் – ஈஸ்வரபட்டர்

கர்ம காரிய இருளிலிருந்து ஒளியான ஞானம் பெற உணர்வின் எண்ணத்தைக் கர்ம காரிய வாழ்க்கை இருளிலிருந்து உண்மையை… “ஒளி பாய்ச்சி” அறிதல் வேண்டும்.

சூரியனின் மோதல் பூமியின் மேல் நேர் பார்வையில் மோதும் பொழுது தான் இருளான இப்பூமியின் ஒளி வெளிப்படுகின்றது. அதைப் போன்று…
1.உணர்வின் எண்ணத்தை… “அறிவோம்” என்ற ஞான வழிக்கு இவ்வெண்ணத்தைக் கூட்டும் பொழுதுதான்
2.வாழ்க்கையில் ஏற்படும் கர்ம காரியச் செயலில் இருந்தெல்லாம்
3.நம் ஆத்ம ஒளிக்கு ஒளி பெற முடியும்.

பூமியின் நீர் நிலை உப்புக் கலந்ததாய் உள்ளது. கடல் நீரும் உப்பு. இப்பூமியில் கடல் மட்டத்திற்கு மேல் பல ஆயிரம் அடிகள் உயர்வாக உள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீரும் உப்பாய் உள்ளது.

ஆனால்…
1.ஆழ் கடலிலும் ஆங்காங்கு பல இடங்களில் உப்பில்லாமல் “நல்ல நீர்” கிடைக்கின்றது.
2.அதே போல் இப்பூமியிலிருந்து வெளிப்படும் ஆவி அலையின் சத்தில் பெய்யும் மழை நீரும் உப்புக் கரிப்பதில்லை.

மழை நீர் குணம் கொண்டதாக… இப்பூமி சுழற்சியில் பெய்யும் மழை நீர் எல்லாமே சுவை கொண்டதாகத்தான் பெய்கின்றது. பூமியுடன் கலந்து செயல்படும்போது அந்த நீர் உப்பாகி விடுகின்றது.

அதைப் போன்று…
1.இவ்வாழ்க்கை கர்ம காரிய உடலில் இருந்து வெளிப்படும் இருளான உண்மையிலிருந்து
2.ஒளி கண்டு… காணும் அறியும் நிலையை…! நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அதாவது… கடல் நீரும் கிணறுகளில் உள்ள நீரும் உப்பாயிருந்தாலும் கடலின் மத்தியிலே சுவை கொண்ட நல்ல நீரை நாம் காண்பது போன்று
1.இவ்வுடலில் ஏற்படக்கூடிய உணர்வின் எண்ணச் செயலில் மோதும் எச்செயலையும்
2.இருளான நிலைப்படுத்தி மோதும் அந்தச் செயலிலுள்ள உண்மை ஒளியை
3.நமக்குகந்த சத்தாக… “ஒளி” பெற வேண்டும்.

பூமியில் பல கோடி மண் வள கனி வள சத்து நிலைகள் மாறி மாறிப் படர்ந்திருந்தாலும் அச்சத்தின் சத்தாய் அங்கங்கு… சில இடங்களில்… வைரத்தின் ஒளிக் கற்கள் (வைரங்கள்) வளர்கின்றதல்லவா..!

அதைப் போன்று இவ்வுடலின் உணர்வு எண்ணக் கோள கர்ம காரிய சரீர இயக்கத்தில் உள்ள உண்மை வெளிப்பட…
1.ஞானமென்ற ஒளியை…
2.காரிய சிந்தையை…
3.காரிய சித்தாய்
4.“நம் ஒளி ஞானம்” செயல்படல் வேண்டும்.

பிறர் பால் உள்ள குறைவினாலேயே… உயர்வினாலேயே… நம்மை உயர்த்தியும்… குறைத்தும்… எண்ணத்தைச் செலுத்தாமல்…
1.அறியும் ஞான ஒளித் தொடரில் மோதப்படும் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு ஜீவ காந்த வளர்ப்புக்குகந்த சத்து நிலை உணர்வில்
3.நாம் கூட்டும் ஒளி நிலை கொண்டு தான்… ஆத்ம ஜோதி ஜொலிக்க வேண்டும்.

எண்ணமுடன் கூடிய உணர்வினால்தான்… ஒளி நிலையான ஜோதி நிலைக்கு… “இவ்வாத்ம உயிரை” ஜீவ காந்த மின் அலையைக் கொண்டு… வலு கூட்ட முடியும்.

இஜ்ஜீவ காந்தமின் அலை உணர்வு சரீரத்தைக் கர்ம காரியத்தில் சுழலும் மாய வாழ்க்கை இருளிலிருந்து எண்ணத்தை அறியும் ஞான ஒளி பாய்ச்சி… உண்மையை உயிராத்மா வலுக் கூட்டிக் கொள்ள வளர் ஞானம் கொள்ள வேண்டும்.

அந்த வளர் ஞானம் கொண்டோமானால்… இன்றெப்படி வாழ்க்கையில் சுவை… மணம்… உணர்வு… உறக்கம்… போன்றவற்றில் இன்ப நிலையை உணர்கின்றோமோ…
1;இவற்றிற்கு மேல் பேரின்ப நிலையான ஒளி சக்தியைக் கொண்டு
2.மனித பிம்பத்தில் உணர முடியாத உன்னதமான… இனிமையான…
3.சுவை கலந்த இன்ப நிலையைப் பெற முடியும்.

பல எண்ண மோதல்கள் வந்தாலும் அதிலிருந்து ஞானம் பெறுவது எப்படி…? – ஈஸ்வரபட்டர்

பல எண்ண மோதல்கள் வந்தாலும் அதிலிருந்து ஞானம் பெறுவது எப்படி…? – ஈஸ்வரபட்டர்

 

நீந்தத் தெரியாதவன் நீரில் சிக்குண்டு தவிக்கும் பொழுது… தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவியை நாடுவதைப் போன்று தான் வாழ்க்கையின் கர்ம காரியக் கடலில் ஏற்படக்கூடிய இன்னலிலிருந்து தப்ப எண்ணும் நிலையும்….!

நீந்தத் தெரிந்தவன்… ஆயிரம் அடி (ஆழம்) கடல் நீரிலும் தன்னைப் பாதுகாக்கும் சாதனைத் திறன் பெற்ற நீச்சலினால் தத்தளிக்கும் நிலையோ… பாதுகாப்பை நாடும் நிலையோ இன்றி… தன்னைக் காத்து கொள்கிறான்.

அதைப் போன்று தான்..
1.உணர்வின் எண்ணத்தைச் சமமாக்கி… ஆத்ம பலம் பெற்று
2.உடல் என்ற இக்கோளத்தில் உருவாக்கும் உயிரணுவின் வளர்ப்பைக் கொண்டு
3.தன் நிலையைத் தான் உணர்ந்து
4.எந்த நிலையான கர்ம காரிய சஞ்சலங்கள் ஏற்பட்டாலும்
5.தன்னை அது தாக்காமல் தன்னைத்தான் பாதுகாத்துத் தன் வலுவைக் கூட்டி
6.ஆத்ம ஞானத்தால் – இரு விழியால் பார்க்கும் படர் ஒளியின் பார்க்கும் இவ்வுடல் உறுப்பின் பார்வை நிலையையே
7.இவ்வுடலின் ஒவ்வொரு உயிரணுக்களையும் “ஒளி நிலை காணும்… விழி நிலை ஆக்கலாம்…!”

உடல் கோளத்தின் ஜீவ சரீரம் செயல் கொள்ள சுவை மிக்க உணவை உண்டு உணர்கின்றோம். உண்ணும் பொழுதும்… சுவைக்கும் பொழுதும்… ஏற்படும் உணர்வு உண்ட பின்… கழிவு நிலையாகச் சென்று விடுகின்றது.

மீண்டும் பசியெடுத்து அதன் சுவை கொண்டு அந்தந்தக் காலத்தின் நிலையில் உணவைச் சுவைப்படுத்தி உண்கின்றோம்.

உண்ணும் பொழுதோ… சுவை உணரும் பொழுதோ… அவ்வின்பத்தின் உணர்வு தவிர உடலைப் பற்றியோ… உண்ணும் உணவு உடலில் செயல்பட்டு உடல் வலுவை வளர்க்க வழி பெறுகின்றது… என்ற எவ்வெண்ணத்தையும் நாம் கூட்டுவதில்லை.

ஆசையின் உந்தலுக்குகந்த சுவையை மட்டும் தான் அந்தந்தத் தருணத்தில் நாடுகின்றோம்.
1.உடலின் தேவை நிலை உந்தலின் செயலை நாம் அறியாமல்
2.எண்ணத்தில் உணர்வு மோதலைக் கொண்டு ஆசை உணர்வால் செயல்படும் இந்நிலை
3.ஜீவ பிம்ப உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் தன்னிச்சையில் செயல் கொள்கின்றது.

ஆக… ஆத்ம உணர்வின் வேட்கை நிலைக்கு எண்ணத்தின் உணர்வை நாம் யாரும் செயலாக்குவதில்லை.

புற உலக வாழ்க்கையில் ஒன்றை ஒத்து… ஒன்று கண்டு… வளர்த்து… வாழ வேண்டும்…! என்று “எதிர்ப்பலன் எண்ண உணர்வுதான்” செயல்படுகின்றது.

ஒவ்வொன்றின் வளர்ப்பிற்கும் உருவாக… மாற்று நிலை ஏற்பட்ட பிறகு தான் பிறிதொரு செயல் நடக்கின்றது.

தருண காலத்திற்கொப்ப உயிரணுத் தோன்றிக் கருவாகி… உருவாகி… வளர்ச்சி பெற்று… உணர்வின் உந்தலின் இரு நிலை மோதலுக்குப் பிறகு உருவாகும் பிறிதொரு நிலை போன்று… வழித் தொடர் ஒவ்வொன்றிலும் உருவாகின்றது அல்லவா…!

அதைப் போன்று தான்
1.இவ்வுடல் பிம்பச் சரீர கோளத்தின் ஆத்ம ஞானம் பெற
2.சமமான எண்ண உணர்வுகள் ஏற்படும் காலத்தில்
3.பல உணர்வு மோதல்கள் ஏற்படும் செயலிலிருந்து “ஞானம்…” பிறக்க வேண்டும்.

அறிந்த நிலை…
அறிய வேண்டிய நிலை…
அறியும் நிலை… ஆகிய ஒவ்வொரு ஆத்ம நிலையும்
1.தன்னுள் உள்ள உயர் சக்தியான தன் ஞானகுருவான உயிராத்மாவை உயர்வுபடுத்த
2.எண்ணத்தில் ஏற்படும் மோதலைக் கொண்டு பகுத்தறியும் நல் வழியில் தன் ஞானத்தைக் கூட்டி
3.உயர்வு கொள்ளும் ஒளி நிலையாய்
4.சூரியனின் நேர் நிலை பூமியின் மேல் படும்பொழுது பூமி எப்படி தன்னைத்தானே ஒளிப்படுத்திக் கொள்வது போன்று அறியும் நிலைப்படுத்தி
5.அறிந்தோரின் (மகரிஷிகள்) தொடர்பு கொண்டு
6.மனித ஜீவித வாழ்க்கைக் காலத்திலிருந்தே தான் எடுக்கும் அறிவென்ற ஞான வழித் தொடரினால்
7.இச்சரீர பிம்ப கோள உயிரணுக்கள் யாவையுமே விழி நிலைகொள்ளும் ஒளி நிலையை
8.எண்ணத்தின் உணர்வால் நிச்சயம் பெற முடியும்.

நீலவண்ணத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

நீலவண்ணத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

1.எப்படி ஒன்றை ஒத்த முறையில் ஒன்றில்லாமல்
2.ஒவ்வொன்றுமே “வளர் சக்தியில் வளர்கின்றதோ”
3.அதைப் போன்று இவ்வுடல் ஆத்மாவின் வளர் நிலையும் அப்படித்தான்…!

இந்த ஜீவ சரீரக் கலவையில் இப்பூமி எடுக்கும் சத்து அனைத்தும் உள்ளதினால் இச்சரீர பிம்பச் செயலில் கூட்டும் ஞானச் செயலுக்கும் “அந்தந்தக் கலவைக்குகந்த ஒளி பெறலாம்…”

சூரியன் சமைத்த வண்ணம் “ஆறு…” சமைப்பின் சக்தி ஒளியாய் “ஏழாம்…” அதாவது ஒளி பெறும் அந்தப் பூமியின் “வெளிச்சம்” என்பது
1.சூரியனின் சமைப்பு அமில வண்ணம் மோதியவுடன் தான்
2.பூமிக்கு வெளிச்சமே ஏற்படுகின்றது

ஆக… ஏழாம் நிலையாகச் சூரிய சமைப்பின் கலவையைப் பூமி பெறும் ஒளியில் பிரகாச நிலை கொண்டு… அந்தந்த இடங்களுக்கு ஏற்படும் வண்ணக் கலவையின் விகிதாச்சார படிவத்திற்கொப்ப… பூமியின் நில வள உலோக வளர்ச்சி ஏற்பட்டு… அத்தொடரின் வளர் சக்தி வலுக்கொள்கின்றது.

நாம் சாதாரண அடுப்பை எரிக்கும் பொழுது அதனின் வண்ணம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ பச்சையாகவோ வெண்மையாகவோ எரிகின்றது.

மேலே சொன்ன நிறங்களில் நெருப்பின் ஜுவாலை எரிந்தாலும் அந்த உஷ்ண நிலை அதனுடைய பக்குவ நிலைக்கு ஏற்படாமல்… வைக்கப்படும் பாத்திரத்தில் “கரி” மண்டுகின்றது… ஒரு பக்கமாக எரிகின்றது… அதனால் “தணல் கக்கும் உஷ்ண நிலை” சீராக அமைவதில்லை.
1.ஆனால் எரிவாயுவின் பக்குவ எரி ஒளி நிலை “நீலமாக…!” எரியும் பொழுதுதான்
2.அதனுடைய “உஷ்ணம்” பக்குவ நிலை கொள்கின்றது.

அதைப் போன்று இவ்வொளி வண்ணங்கள் ஆறு நிலை கொண்டதாகச் சூரிய சமைப்பு வெளிப்படுத்துகின்றது.

ஆகவே…
1.ஜோதி நிலையான நீல வண்ணத்தின் ஒளி சமைப்பு நம் ஆத்மாவாக வேண்டும்.
2.காலை சூரிய ஒளியும் மாலை ஒளியும் நீல நிறமாக நம் கண்ணிற்குத் தெரிகின்றது.
3.நம் அருகில் உள்ள நீர் வெண்மை கொண்டதாகத் தெரிந்தாலும்
4.கடல் நீரோ… இப்பூமியின் சமைப்பு அலையின் நிறமாக… நீல வண்ணமுடன் நமக்குத் தெரிகின்றது.

ஆகாயத்தைக் காணும் பொழுது கருமையும்… வெண் புகை நிலையும்… மஞ்சளான ஒளித் திட்டுக்களும் தெரிந்தாலும்… ஆகாயத்தை ஊன்றிப் பார்க்கும் பொழுது “நீல மேகமாகத்தான்” தெரிகின்றது.

அத்தகைய “நீல வண்ண ஒளியை” நம் ஜீவ ஆத்ம ஒளி ஒளி பெற… இச்சரீர கோளத்தில் உள்ள வண்ணங்களை நீல சக்தியாக ஒளி கொள்ள… இங்கே உபதேசித்து வரும் வழி முறையை ஒவ்வொருவரும் செயல் கொண்டிடுங்கள்.

கீதா உபதேசத்தில் கண்ணணைக் காட்டி…
1.கண்ணணின் வாயைத் திறந்தால் உலகமே தெரிந்தது என்றும்
2.கண்ணனின் விளையாட்டுத் தரத்தை உலக மாய கர்ம காரியத்தில் இவ்வாத்மா விளையாடிச் சத்து பெறும் வழியையும்
3.”நீலவண்ணக் கண்ணன்” என்று நாமமிட்டனர் அன்றைய ஞானிகள்.

நம் உருவத்திற்கே “நீல நிற ஒளி…!” பெற வேண்டும் என்றும்… கீதையில் பல உன்னத உயர்ந்த சக்தி நிலை பெற
1.ஒவ்வொரு சரீரத்தையும் மாயக் கண்ணனாக்கி
2.அச்சரீரத்தில் வளர்க்கும் நீல வண்ண ஒளித்தன்மை பெற
2.பல வழி சூட்சுமங்கள் அந்தக் கீதையில் உண்டு.

இக்கலியில் செயற்கை விஞ்ஞான வார்ப்பு உடலாக இச் சரீர வார்ப்பு செயல் கொள்ளும் செயல் முறையை… உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞானத்தால் “ஜோதி நிலை பெற்று” வளர் தொடர் வளர்ப்பில் நம் வளர்ப்பு செல்லும்.

இங்கே காட்டப்படும் வழித் தொடரில் ஒவ்வொருவரின் ஞானத்தையும் கூட்டி… எண்ணத்தின் செயலை “ரிஷித் தொடர்புடன் தொடர்புபடுத்தியே” ஆத்ம சொத்தாக வழி பெறும் “ஒளி நிலைக்கு” உயர முடியும்..

1.கர்ம காரிய சரீர ஜீவ பிம்பத்திலிருந்து “ஆத்ம உயர்வுக்கு”
2.ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் உயர் ஞானம் பெற்று
3.சித்து நிலை கொண்டு ரிஷித் தொடர்புடன் “ரிஷியாகலாம்…!”

உணர்வின் எண்ணப் பகுத்தறியும் செயல் வலுவை மனிதன் விரயப்படுத்தாமல் “தன் ஞானம் கொண்டு… ஆத்ம ஞானத்தால் ஒளி ஞானம்..” பெற வேண்டும்.

ஒளி ஞானத்தின் நிலை பெற்றால்… ஒளியின் வழி செயல் “என்றுமே வளர்ச்சி கொள்ளும்…!”

மேல் நோக்கிய சுவாசம் அவசியம் நமக்கு வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மேல் நோக்கிய சுவாசம் அவசியம் நமக்கு வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்று நாமுள்ள நிலை பூமிப் பிடிப்பில் சிக்குண்டு சுழலும் நிலைதான்.

உருளுகின்ற உலகினிலே உதித்த உயிரணுக்கள்… அவற்றின் பிடிப்புச் சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பில் தான் சுழற்சியுடன் சிக்குண்ட நிலையில் சுழலுகின்றோம்.

1.உணர்வில் குளிரும் வெயிலும் ஏற்படுத்து.ம் உணர்வு எண்ணமுடனும்
2.சுவை உணர்வு… உடல் இச்சையின் தேவை… உணர்வு எண்ணத்தில் மோதும் எண்ண அலை உணர்வுடனும்…
3.இதைப் போன்ற விழியெடுக்கும் பட உணர்வும்… செவி கேட்கும் நாத ஒலியின் உணர்வுடனும் நாமெடுத்து
4.அவற்றின் பிடிப்புத் தொடரில் பூமியில் சிக்குண்டு தான் உருளுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பூமியின் இயக்கத்தில் வளரும் தாவர கனி வள திரவ நீர் இவைகள் “பிடிப்பு” நிலையிலும்…
2.ஊர்வன பிடிப்பில் “ஊரும்” தன்மையிலும்…
3.ஜீவராசிகள் “ஓடவும் நடக்கவும்” இடம் விட்டு மாறிச் செல்லவும் வளர்ச்சி பெற்றும்
4.ஜீவ சரீரம் கொண்ட பட்சிகள் “பறக்கும்” நிலை பெற்றிருந்தாலும் அதன் தொடரிலும் வந்து அமரக்கூடிய பூமி ஈர்ப்புடன் தான் வளம் பெற்று வாழ்கிறது.

இருளான இப்பூமி… தன் சுழற்சி வட்டத்தால் ஒளி பெறும் தன்மையை சூரியன் பூமிக்கு எத்திசையில் சந்திப்பு கொள்கின்றதோ அந்நிலைக்குப் பூமி ஒளி பெறுகின்றது.

அதைப் போன்று பூமிக்கு மேல் எண்ண செயல் கொண்ட இம்மனித ஞானத்தால் எண்ண உணர்வைச் சமமானதாக்கி “இருளிலிருந்து ஒளி பெறும் வலுவை” நாம் கூட்ட வேண்டும்.

சூரியன்… பூமியின் நேர் பார்வையில் வரும்போது தன்னைத்தானே சுழன்று ஓடும். ஓட்டத்தில் சூரியனின் தொடர்பு கொண்டவுடன்… “ஒளி பெற்று” பூமியின் அந்தந்த இடங்களில் வளரும் வளர் சக்திக்கு வலு கூட்டிக் கொள்கின்றது.

அதைப் போன்று
1.சம உணர்வு தொடர்பு எண்ணத்தை இச்சரீர இயக்கம் செயல் கொண்டவுடன்
2.நற்சக்தியின் வலுத் திறமையைப் பகுத்தறியும் ஞான எண்ணமுடன் விண்ணிலே எண்ணத்தைச் செலுத்தி
3.இவ்வுடல் பிம்பத்தில் பூமி எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தைக் கீழ் நோக்கி எடுக்காமல்
4.மகரிஷிகளின் அருள் அலையை நேராக மேல் நோக்கிய சுவாசமாக
5.இச்சரீர இயக்கச் சுவாசத்திற்கு எடுக்கும் பழக்கம் வருதல் வேண்டும்

இருளான இப்பூமி சூரியனின் நேர் சந்திப்பு பெற்றவுடன் ஒளி பெறுவதைப் போன்று ஒளி வளர்ப்புச் சரீரமாய் இச் சரீர அணுக்கள் வலுக்கொண்டு “நம் உயிராத்மா ஜோதி நிலை பெற்றவுடன்” உடலின் இயக்கத் தொடர்புடன் ஆத்ம ஒளி எத்தன்மையையும் அறியும் ஆற்றலையும்… வளர்க்கும் வலுத்தன்மையும் பெற்று விடுகின்றது.

பாம்பின் சுவாசம் மேல் நோக்கிய தன்மை கொண்டது,

விஷமான உடலைக் கொண்ட பாம்பு அது எடுக்கும் சுவாச அலை உணர்வு கொண்டு மனிதனை ஒத்த பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் இல்லா விட்டாலும் அதன் சுவாச இயக்கத்தில் எடுக்கும் அலை உணர்வினால் விஷமான உடலில் பல காலங்களுக்கு அவை உயிர் வாழும்,
1.தன் உடலிலேயே மாணிக்கக் கல்லை வளர்க்கும் வலுவைப் பெற்று
2.ஒளி கொண்ட கல்லைப் பாம்பு தருகின்றதல்லவா…!

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வை ஜீவ காந்த சரீர இயக்கத்தில் சமமான நிலைபடுத்தி… சாந்தமுடன் கூடிய வலுத் தன்மை கொண்டு ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை இஜ்ஜீவ காந்த சரீரம் வளர்த்ததென்றல்
1.இச்சரீரமே மண்டல சக்திக்கு உருவாகும் ஒளி சக்தியாக
2.ஒளி கொண்ட சக்தி நிலையாய் அழியா ஆனந்த நிலை பெற முடியும்.

மனித உருக் கருவை உருப் பெறச் செய்யும் சக்தி – ஈஸ்வரபட்டர்

மனித உருக் கருவை உருப் பெறச் செய்யும் சக்தி – ஈஸ்வரபட்டர்

 

ஓர் பொருளைச் செய்யவோ ஓர் பொருளை வளர்க்கவோ பலமான செயல் வலுக்கூடிய பிறகு தான் அந்தப் பொருள் உருப் பெற்று உபயோகமாகின்றது… அதன் பலனையும் பெற முடிகின்றது.

அதே போல இவ்வுயிரான ஆத்மா உருப் பெறவும் பலவற்றில் மோதி பல சக்திகள் பெற்று இப்பிம்ப நிலை பெறுகிறது.

1.தந்தை உடலின் அமிலம்… தாய் தரும் உயிர்த் துடிப்பு… இவற்றுள் கருவாகி வளர
2.தாயின் சத்து நிலையை உணவாகப் பல கோடி உயிரணுக்களை ஜீவ வளர்ச்சி தந்து
3.கர்ப்ப காலத்தில் எடுக்கவல்ல அறு சுவையின் உயிரணுவின் வளர்ப்புக்கு உணவு தந்து
4.கரு தோன்றி வளர்ந்து பிறப்பில் தன் உணர்வின் உயர்வை உணர்வுக்குகந்த உணவூட்டி
5.இவ்வுயிராத்மாவை வளம் பெற வலுத் தரும் இந்த உடலின் கோடானு கோடி அணுக்களுக்கும்
6.உயிராத்மாவின் சேவை நிலை செய்திடல் வேண்டும்.

உடலின் உயிரணுக்களுக்கொப்ப உணர்வு நிலை தோன்றி… உணர்வின் உந்தலில் எண்ணத்தைச் செலுத்தி… அதனதன் தேவைக்குகந்த உணவை அது அது பெறுகின்றது.

உடல் என்ற உருவக் கூட்டில் நமக்கு நண்பனும் உண்டு… எதிரியும் உண்டு.
1.உடலில் உள்ள உயிரணுக்களில் உணர்வுக்கொத்த சேவை நிலையை நம் உயிராத்மா தந்துதான்
2.தான் குடியிருக்கும் ஆலயத்தைப் பேணி வணங்குகின்றது.

உடலில் ஏற்படும் உபாதைகள் உணர்வில் மோதியவுடன்… இவ்வெண்ணம் மாற்று நிலையில் செல்லாமல்… உணர்வின் வேதனையை உணர்ந்தே உயிரின் ஆத்மாவும் செயல் கொள்ள வேண்டியுள்ளது. அதே போன்று உடலில் ஏற்படும் இன்ப உனர்விற்கும் இவ்வுயிராத்மாவின் செயல் நடக்கின்றது.

உடலின் உணர்வும் உடலில் வளரும் கோடானு கோடி அணுக்களும் உள்ளதென்றால் அவ்வணுக்களில் பல நிலைகள் உண்டு. இந்த உடல் திடம் கொள்ள… ஆறு நிலையான அமிலச் சேர்க்கையின் வளர்ச்சி கூடி ஏழாம் உருவ திடச் செயல் தான் “இப்பிம்பக் கூடு…!”

இந்த உடல் கலவையில் எல்லாமே உண்டு…!

இந்தப் பூமியில் பல இரசாயண அமிலத் தன்மைகள் வளர்ந்துள்ளனவோ அவற்றின் சீரிய குணம் கொண்ட ரசச் சக்தியும் தங்கச் சத்தும் இரும்பின் கருமை நிற அமில சத்தும் காந்த மின் ஒளி நிலையும் இதன் தொடர்பில் பல இரசாயண அமிலங்களும் உண்டு.

நீர் வாயு குண்டு… அணு குண்டு (HYDROGEN AND NUCLEAR BOMBS) போன்றவற்றைச் செய்விக்க பல உலோக மண் கலவைகளில் இருந்து அதனுடைய சத்தை நுண்ணிய அளவில் எடுத்துச் செய்விக்கின்றனர்.

அந்த நுண்ணிய பொருளினால் உலக்த்தையே அழிக்கவல்ல சத்து நிலை எப்படிச் சேர்க்கபப்டுகின்றதோ அதைப் போன்று இந்த உடல் சேர்த்த அமிலத்தில் சில விஷத் தன்மை கொண்ட அமிலச் சத்துகளும் உண்டு.

மனிதன் இட்ட பெயரில் அவ்வமிலத்தின் செயல் இல்லை. (விஞ்ஞானம் இன்னும் அதைக் காணவில்லை).

உயிரணுக்கள் ஜீவ சரீர ஞானச் செயல்… சொல்லாற்றல் கொண்ட… உருவ உணர்வு எண்ணச் சரீரம் அமைய… அதற்கு வேண்டிய அமிலக் கூறுகள் இந்தப் பூமியில் குறிப்பிட்ட சில இடங்களில் உண்டு.

கடலில் மலைப் பிரேதசங்கள் சிலவற்றிலும்… ஆழ் கிணறுகளிலும்… மனிதக் கரு உருப் பெற வேண்டிய அந்த அமிலச் சத்தை இந்தப் பூமி எடுத்து வெளிக்கக்கும் காற்றின் தொடர்பலைக்குச் செயல்பட
1.பல தெய்வத் தொடர்பு கொண்ட சப்தரிஷிகள் செயல் உருவிலேயே
2.பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே செயல்படுத்தியுள்ளனர்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எலும்புக்குள் உள்ள ஊனிலே வலுவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளின் அருள் சக்திகளை எலும்புக்குள் உள்ள ஊனிலே வலுவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது.
1.சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்…
2.“அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீர்த்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச் சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வலு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பாற்கடலில் பள்ளி கொண்ட மூலவன் யார் – ஈஸ்வரபட்டர்

பாற்கடலில் பள்ளி கொண்ட மூலவன் யார் – ஈஸ்வரபட்டர்

 

“இம்மனிதச் சரீர அமைப்பு” உருவாகும் வளர்ச்சியே… இப்பூமியின் சத்து நிலையின் உயர் குணமாய் இப்பூமி வளர்த்த வலுவின் முற்றல் தான்…!

1.பலவாக மோதுண்டு… பல பல கோடி மாற்றங்களுக்குப் பிறகு
2.உயர்ந்த சத்தாய் உருவகம் பெற்ற நரம்போட்ட உப்பின் சுவை உணர்வில்
4.உரு வளர்ச்சி தரவல்ல உருவம் இது.

மனிதச் சுவை ஆறு…! பல சுவையை உண்டு உரமாக உடலெடுக்கும் சத்து வளர்ச்சியை… வளர்ச்சியின் ஓட்டத் தொடரில்…
1.நாவின் சுவைக்கொப்ப உணவுண்டு வாழுகின்ற வழித் தொடரில் உள்ள நாம்
2.இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கும் நிலை என்ன…? என்று நாம் உணரவில்லை.

மனிதச் சுவை இப்பூமியின் ஆறு வண்ணத்தைப் போன்று அறு சுவையை உண்டு உணரும், எண்ண நிலை பெறத்தக்க வளர்ப்பில் நீர், கனி வளங்கள், திரவங்கள், தாவரங்கள், புழு பூச்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் வார்ப்பு கொண்டு வார்ப்பு கொண்டு ஒவ்வொரு முலாமையும் இப்பூமியிலுள்ள அனைத்து அமிலத் தொடர்புடனும் இச்சரீரக் கோளம் உராய்வு பெற்று…
1.எண்ணம் சுவை குணம் என்ற வார்ப்பில் வடிவம் கொண்டுள்ள
2.மனித வளர்ச்சியை வளர்க்கும் நிலைக்கு வடிகாலாய் அமைந்துள்ள எண்ணத்தின் உணர்வு வழித் தொடர்பை
3.உயர்வு வழியினால் இவ்வுடல் கோளத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் வலுவை வளர்க்கும் நிலை யாது…?

ஒவ்வொரு செயலிலும் அச்செயலுக்குப் பிறகு “வளரும் நிலை” ஒன்று உண்டு. மாறி மாறி உருவாகும்… உருண்டோடும்… இப்பூமியின் வளர்ச்சிக்கே வலுத் தந்து கொண்டுள்ளவைகள் தான் “வட துருவ தென் துருவங்கள்…”

அதிலே மையம் கொண்டுள்ளது தான் “இப்பூமியின் பொக்கிஷமான கடல் நீர்…!” அந்தக் கடலில் ஏற்படும் உப்பின் சுவையினால் தான் இப்பூமி வளர்க்கும் வளர் செயலின் உயிரணுவின் ஜீவித வளர்ச்சி நிலை உள்ளது.

கடலில் உப்புத் தன்மை இல்லாவிட்டால் ஜீவ சக்திக்கு ஜீவித வாழ்க்கையில்லை. “கடல் நீர் உப்புக் கரிக்கின்றது” என்ற சாதாரண எண்ணத்தில்தான் நம் எண்ணம் செல்கின்றது.

ஆனால் இப்பூமியில் வளர்ச்சி கொள்ளும் வளர்ச்சி வார்ப்பகங்கள் எல்லாவற்றுக்குமே மூலப் பொருளை அளிப்பது நம் கடல்தான்.

1.வட துருவமும் தென் துருவமும் எதிர்கொள்ளும்
2.எதிர் எதிர் செயலினால் உருவாகும் உருவகங்கள்தான்
3.ஜீவ பிம்ப சரீரமும் மற்றெல்லா உயிர் வளர்ப்பின் வளர்ச்சியும்.
4.பாற்கடலில் பள்ளி கொண்டான் “மூலவன்…!” என்று
5.சூட்சமத்தில் மறைக்கப்பட்ட புராண காவியத்தின் உண்மையும் இதுவே…!

கடலின் உண்மை நிலையை உணர்த்தும் செயலின் பொருள் யாது…? என்ற வினா எழும்பலாம்.

உண்மை நடை முறையை உணர்த்தி… ஆத்ம உயிரை வலுவாக்க வேண்டிய வழியை முறைப்படுத்தி…
1.விளக்கிடும் இந்த உண்மை நிலையிலிருந்து
2.ஒவ்வொருவரும் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள
3.இச்சரீர இயக்கத்தின் வலுவை வளர்த்துக் கொள்ள வழி காட்டுகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

கலி புருஷனின் உண்மையான வலு – ஈஸ்வரபட்டர்

கலி புருஷனின் உண்மையான வலு – ஈஸ்வரபட்டர்

 

நடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..!

இந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.

கல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று
ஒலி…
ஒளி…
நீர்…
தாவரம்…
ஜீவ சக்தி… (உயிரினங்கள்)
ஞான சக்தி (தற்போதைய மனிதன்)
இத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.

அத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.

பூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…
1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த
2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா
3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.

ஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.

“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்
1.இக்கலியையே செயற்கைக் கலியாக்கி
2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே
3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.

கணவன் மனைவி இணைந்த நிலையில் இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் ஓட்டத்தையும் காணலாம் – ஈஸ்வரபட்டர்

கணவன் மனைவி இணைந்த நிலையில் இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் ஓட்டத்தையும் காணலாம் – ஈஸ்வரபட்டர்

 

உருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது

இச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.

இவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை
1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்
2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு
3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்
4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.

அதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத்தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.

மண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.

வளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.

ஆகவே…
1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…
2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற
3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள
4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு
5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை
6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து
7.தன் ஆத்மாவின் வித்தை – தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு
8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.

உயிரான்மாவின் (நம்முடைய) வளர்ச்சி எது…? – ஈஸ்வரபட்டர்

உயிரான்மாவின் (நம்முடைய) வளர்ச்சி எது…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுக்கும் பலதரப்பட்ட குணங்களில் புளிப்பு இனிப்பு துவர்ப்பு கரிப்பு கசப்பு எரிப்பு போன்ற ஆறு வகைச் சுவையை உடல் சமைக்கும் ஏழாம் சுவை அமில வளர்ப்பைக் கொண்டு… உடல் அணுக்கள் வளர்ச்சியில் வளரும் வலுவை… உடலை இயக்கும் ஆத்மாவானது அச்சுவையின் அலையை எடுத்து இயங்குகிறது… இயக்குகிறது… வலுப் பெறுகின்றது.

அலை என்பது… என்ன…?

1.உடல் சமைக்கும் ஆவி உணர்வை ஆத்மா இழுத்து ஆத்மாவின் உடல் இயக்க உயிர் செயல் கொள்ள
2.நாம் எடுத்த உணர்வு நிலைக்கொப்ப… உடல் என்ற சட்டியில் அது சமைக்கப்பட்டு… உடல் வெளிப்படுத்தும் வெக்கை நிலைக்கொப்ப
3.எச்சுவையின் வார்ப்பகத் தன்மையில் இந்த உடலின் இயக்கம் செயல் கொள்கின்றதோ
4.அதற்குகந்த அலை காற்றுடன் கலந்துள்ள அமிலம் காந்த ஜீவத் துடிப்பு கொண்ட ஆத்ம ஈர்ப்பிற்கு வலுக்கூட்டி
5.எச்சுவையின் தன்மையை உடலின் இயக்கம் அதிகப்படுத்தி (முன்னணியில் உள்ள குணம்) வளர்ச்சி கொள்கின்றதோ
6.அத்தொடருக்குகந்த வலுத் தொடரைத் தான்
7.உடல் வளர்க்கும் அணு வளர்ச்சியின் ஈர்ப்பிற்கு இந்தக் காற்றலையின் தொடரிலிருந்தும் பெறுகின்றோம்.

உதாரணமாக மிளகாய்ச் செடியின் வித்து நீர் சக்தியைக் கொண்டு உயிர் சக்தி ஜீவ வளர்ப்பு சக்தியை எப்படிப் பெற்றதோ… அத் தொடரின் வலுவைக் கூட்டி அச்செடி வளர்ந்து… அது எடுத்த கார உணர்வின் வளர்ப்பு நிலை கூடி… வித்து நிலையில் காரமுடன் கூடிய “மிளகாயின் பலன்” கிடைக்கின்றது.

இதைப் போன்று…
1.எந்தச் சுவையில் எந்த உயிரணு ஜீவன் கொண்டதோ…
2.அதற்குகந்த வளர்ப்புத் தொடரில் பல மாற்றத்திற்குப் பிறகு
3.வலுக்கூடிய வளர்ச்சி உன்னத உயிர் ஆத்ம நிலையில்
4.எண்ண உணர்வுடன் இயங்கக்கூடிய இவ்வுடல் கோளத்தின் சமைப்பில்
5.குணங்களைக் கொண்ட உணர்வு… உணர்வுக்குகந்த சுவை… சுவைக்குகந்த செயலாக… மனித வாழ்க்கை நிலை ஓடும் வழித் தொடரை…
6.நம் எண்ணத்தால் குண நிலையை நல்வழிப்படுத்தி
7.சாந்தமுடன் கூடிய வீரமான ஞானத்தைக் கொண்டு
8.இதுகாறும் இந்த உடல் இயக்கத்தில் நம்மை அறியாமல் நாம் வளர்த்துக் கொண்ட
9.குணமும் சுவையும் செயலும் வழித் தொடர் கொள்ளும் வழி நிலையைச் சமமான குணம் கொண்டு
10.நமக்கு மேல் வலுவாகத் தெய்வ நிலை பெற்ற… தெய்வ சக்தி பெற்ற “மகரிஷிகளின் தொடர்புடன்”
11.மேல் நோக்கிய காந்த மின் அலைத் தொடர்பினை நம் சுவாசத்தால் எடுக்க
12.நாம் இந்த உடலின் இயக்கத்தை உட்படுத்தினோம் என்றால்
13.மனித சக்தியின் உயர்ந்த உன்னத சக்தியை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற முடியும்.