மெய்… உண்மை… சத்தியம்…! – ஈஸ்வரபட்டர்

மெய்… உண்மை… சத்தியம்…! – ஈஸ்வரபட்டர்

 

தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.

இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளியினைத் தருகின்றது.

ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.

இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்பு தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால் வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகிப் பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே நாளை கனவாகி விடுகின்றது.

இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?

சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?

ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!

உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!

உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!

உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!

பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கும் வழி – ஈஸ்வரபட்டர்

பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கும் வழி – ஈஸ்வரபட்டர்

 

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!

உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அண்டத்தின் தன்மையை நாம் மனிதர்கள் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்

அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”

தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!

அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.

1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.

சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.

ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.

ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்காத ஒளித் தன்மையைப் பெற முடியும்.

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி நிலை பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? – ஈஸ்வரபட்டர்

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி நிலை பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது… மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.

சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.

விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.

பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.

பூமிக்கு பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.

சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.

வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.

சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.

இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! – ஈஸ்வரபட்டர்

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! – ஈஸ்வரபட்டர்

இச்சரீரக் கோளம் ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.

எத்தன்மையின் செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும் தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்… பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.

ஆண் இன அமிலச் சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில் இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.

பெண் சரீரத்தில் ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின் ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ நிலை ஜீவிதம் பெறுகின்றது.

ஆண் பெண் அமிலச் சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப் பெறும்
1.ஆண் அமில… பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில் எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.

மூலத்தின்… ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி… ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண் இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண் எல்லாமே ஒன்றுதான்…!

இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின் உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.

படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.

உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”

சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம் தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச் சரீர உரு நிலை அமைகின்றது.

மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில் தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.

அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட
2.உயிரணுவின்… வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத் தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின் வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால் (தான்) வளர்க்க முடியும்.

உயிராத்மாவைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டிய முறை – ஈஸ்வரபட்டர்

உயிராத்மாவைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டிய முறை – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில்…
1.தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் எப்படி வளருகின்றது…?
2.வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?

பூமீயின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.

அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!

அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.

பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால் இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
4.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!

எப்படி…?

உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெப நிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.

அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.

பாம்பு… தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.

சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!

இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!

எலும்புக்குள் இருக்கும் ஊனில் மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கினால் தான் உயிராத்மாவிற்கு வலுக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்

எலும்புக்குள் இருக்கும் ஊனில் மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கினால் தான் உயிராத்மாவிற்கு வலுக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்

 

எல்லாமில் எல்லாமாய் உள்ள “இறை சக்தி” பொதுவான சக்தியாய்ச் செயல் கொள்ளும் தன்மைக்கு அவரவர்களின் எண்ணச் செயலை ஒவ்வொரு சாராரும் தன் எண்ணத்திற்குகந்த செயலைச் செய்விக்கத் தெய்வத்தின் துணையை நாடுகின்றனர்.

தெய்வத்தின் துணையை எப்படி அவரவர்கள் பெறுகின்றனர்…?

மருத்துவர் தன் மருத்துவத்தில் கற்ற செயலுக்காகவும்… தன் ஜீவாதாரப் பொருளுக்காகவும்… தான் கற்ற மருத்துவத் தொழிலுக்காக “வியாதியஸ்தன் வரவேண்டும்” என்று எண்ணுபவனும் உண்டு.

தன் தொழில் நடக்க வேண்டும் என்று எண்ணுவதே தன் சுயநல வளர்ப்பிற்காகத்தான்…!

வியாதியஸ்தன் தன் வியாதியைக் குணமாக்க தெய்வத்திடம் எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
1.வைத்தியனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வருவாய்க்காக)
2.வியாதியஸ்தனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வியாதி நீங்க)

இந்த இரு சாரரில் யாருக்கு அந்த இறைவன் சொந்தம்…?

வைத்தியன் மற்றவர்களுக்கு வியாதி வந்து அவதிப்பட வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் தன் ஜீவாதாரத் தேவைக்காகவும் தான் வளர்த்துக் கொண்ட… வழி முறை செயல் வளரவும் தெய்வத்தை வேண்டுகின்றான்.

வைத்தியனின் வைத்திய முறையில் அவன் கற்ற திறமை கொண்டு அந்தத் திறமைக்குகந்த ஜீவ ஆத்மாக்கள் அவனை நாடி வருகின்றன.

நோயாளியின் தன்மையிலும்…
1.தன் வியாதி குணமாக வேண்டுமென்ற உந்தலில் எடுக்கப்படும் எண்ணத்தால் ஆத்ம செயல் உருவாகி
2.அவனுள் உள்ள இறை சக்தியே அவனுக்கு அவன் வியாதியை சொஸ்தப்படுத்துகின்றது.

ஆகவே தெய்வத்தின் செயல்… நன்மை தீமை பார்த்துச் செயல்படவில்லை…!

உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு… சாதாரணத் தலைவலி போன்றவைகளுக்கு தலையில் மட்டும் மருந்தைத் தேய்க்கின்றோம்.

அதுவே நிற்காமல் அதிகப்படும் பொழுது… மாத்திரைகளாக உட்கொள்கின்றோம். அது ஆகாரமாகி… ஆவியாகி.. அதன் செயலைச் செய்கின்றது.

அதற்கும் முற்றிய நோய்களுக்கு… உதிரமுடன் கலக்கச் செய்யும் வீரிய மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றுகின்றார்கள். அதற்கும் அடுத்தநிலை நரம்புகளிலேயே மருந்துகளைச் செலுத்துகின்றார்கள்.

அதற்கும் முற்றிய நிலையில்… எலும்புகளில் துவாரமிட்டு அதன் தொடரில் வைத்திய நிலை முற்றியுள்ள விஞ்ஞானச் செயலில் உடல் உபாதையை அகற்ற மருத்துவம் செயல்படுகின்றது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்…!)

இவைகளைப் போன்றே
1.இவ்வுடலில் நாமெடுக்கக் கூடிய மகரிஷிகளின் மின் அலைத் தொடர்பினால்
2.ஊடுருவல் நிலை கொண்டு அதைச் சுவாசமாக்கி
3.அதன் வளர்ச்சியில் உதிரமாகி… நரம்புக் கோளங்கள் வலுப் பெற்று
4.உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊன் நிலையில் வலுவாகும் வழி முறையில் தான்
5.உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்ட முடியும்…!

ஆத்ம வலுவினால் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியும் – ஈஸ்வரபட்டர்

ஆத்ம வலுவினால் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று; புகை வண்டியின் போக்குவரத்தின் தண்டவாளமுடன் தெரிகின்றது.

அதிவேகமாய் ஒரு புகை வண்டி வருவதைப் போன்றும்… வரும் வேகத்தில் ஓடக்கூடிய நிலையில் அப்பாலத்தின் நடு மையம் சரிந்து… புகைவண்டிப் பெட்டிகள் எல்லாம் பாலத்துடன் ஆற்றில் விழுவதைப் போன்றும்… இரண்டு பெட்டிகள் மட்டும் பாலத்தின் இக்கரையில் உடையப் பெற்று நிற்கும் பாலத்தில் நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

இதன் பொருள் என்ன…?

இயற்கையில் தன் இச்சையுடன் சுழலத்தக்க மண்டலங்களின் கால நிலை… அவைகளின் சந்திப்புத் தன்மை… சீதோஷ்ண நிலை… வரப் போகும் மாற்றத்தின் முன் அறிவிப்பு… நிகழ் இயற்கைத் தன்மை… பூகம்பம்… கடல் கொந்தளிப்பு… காற்று… மழை…
1.பூமியில் அந்தந்த இடங்களில் எந்தெந்தக் காலத்தில் உஷ்ண நிலை மாறும் கொள்ளும் செயல்
2.இப்படி இயற்கையில் வரும் தன்மை வருவதற்கு முதலிலேயே
3.இன்றைய மனித விஞ்ஞானத்தில் அறியும் ஆற்றலைச் செயல்படுத்தி அறியும் விஞ்ஞானத்தின் செயலைப் போன்று
4.தன் ஞானத்தினாலேயே… அன்றையக் கால நிலையை அறியும் ஜோதிடத் தன்மையில்… இவ் ஒலி ஒளித் தன்மையை உணர்த்தினர் ஞானியர்.

கால ஜோதிட விஞ்ஞான கால சாஸ்திர செயல் முறையிலும் இயற்கையில் நிகழப்போகும் நிலையை அறியும் நிலையுண்டு.

காட்சியில் கண்ட செயற்கையின் விபத்துகளை உணர முடியுமா…?

காட்சியில் கண்ட செயற்கை நிலையில் நிகழும் விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மை எப்படி ஏற்படுகின்றது…?

சில பொருட்களின் உறுதியையும் தேய்மானத்தையும் கணக்கில் கொண்டு… பார்க்கும் பொருளின்… அதன் உறுதியான உழைக்கும் காலத்தைக் கணக்கிடுகின்றோம்.

எதிர்பாராமல் நடக்கும் செயற்கை விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மைகளை…
1.இச்சரீர உணர்வு எடுக்கும் ஒலியைக் கொண்டு ஒளி அலையை…
2.இக்காற்றின் அமிலத் தன்மைக்கும்… இச்சரீரத்தில் வளர்த்துக் கொண்ட காந்தமின் அலையின் வீரிய நிலையான அமிலத் தன்மைக்கும்
3.இரசத்தன்மையின் (அதாவது பாதரசம்) உணர்வின் எண்ணமுடன் ஜீவ சரீர இயக்கத்தில் மோதும் பொழுது
4.இச்சரீர உணர்வு எண்ண ஒலி கொண்டு ஒளி நிலை பெற்ற தன்மையினால்
5.இப்பூமியின் வளர்ச்சித் தன்மையின் மாற்று நிலை நிகழப் போகக் கூடிய இடங்களின் செயலை அறியலாம்.

இச்சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒளி சக்தியில்… ஆத்ம வலுவின் ஒளி கூடிய தன்மையில்… சூரிய ஒளிக்கும் பூமியின் ஒளிக்கும் இடையில் மாறு கொள்ளும் தன்மையில்… பூமி எடுத்து வெளிப்படுத்தும் அலைத் தன்மையை “இச்சரீர இயக்கம் ஒளி கொண்டு காண முடியும்…!”

புகைவண்டி விபத்துக்குள்ளாகின்றதென்றால்…
1.விபத்து நடக்கக்கூடிய காலத்திற்கு முன்பாகவே
2.பூமியின் அலையில் பூமி வெளிப்படுத்தும் ஆவித்தன்மையில்
3.அந்தந்த இடங்களில் நடக்கும் செயல் நிலை “தடுமாற்றம் கொள்ளும்…”

பூமியில் சில இடங்களில் மட்டும் எப்படிச் சூறாவளி என்ற சுழல் காற்று சுழல்கின்றதோ… அதைப் போன்று பூமியின் உள் நிலையிலிருந்து வெளிக்கக்கும் ஆவி அமிலத் தன்மையிலும் சில நிலைகள் வெளிப்படும்.

அத்தகைய காலத்தில்… அந்த இடங்களில் செயல் கொள்ளும் மனித உணர்வே… புகைவண்டியில் பலர் சென்றாலும்
1.ஜீவ சரீர உணர்வின் அலையுடன் அத்தொடர்பலை மோதியவுடன்
2.திகில் கொண்ட தடுமாற்றம் ஏற்பட்டு… அதனால் செயல்கள் மாறி விபத்துக்கள் ஏற்படும்.

மனித செயலினால் செயல்படுத்தப்பட்ட தண்டவாளத்திலும்… பாலத்தின் வலுத் தன்மை குறைந்திருந்தாலும்… இப்பூமியின் இயக்கமும் ஒன்றி… இப்பூமியின் வளர்ப்பில் சரீர இயக்கத்தில் ஒளி சக்தி பெற்ற தன்மையினால் செயல் தன்மை வலுக் குன்றி… விபத்துக்கள் உண்டாகும்.

இப்படி நடக்கக்கூடிய தன்மையை… உணர்வின் ஒலி சக்தி கொண்டு ஒளித் தன்மையால்
1.அணுவுக்குள் அணு ஊடுருவும் செயல் தன்மையில்
2.மாற்றுத் தன்மையினால் நிகழும் விபரீதங்களையும் ஞான ஒளியினால் அறிய முடியும்.

இச்சரீரமே ஒளி நிலை கொண்ட ஞான ஜோதியாய் ஒளித் தன்மை கொள்ளும் வளர்ப்பினால்
1.இயற்கை மாற்றம்…
2.செயற்கை வழி… செயற்கை மாற்றம்…! ஒவ்வொன்றையும் அறிய முடியும்.

ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் செயல் முறையில் இயற்கை செயற்கை எல்லாமே இவ்வொலித் தன்மையின் ஒளி நிலை பெற்ற ஆத்ம சரீரத்தில் அறிய முடியும்.

ஜெபம் கொண்டு தியானத்தால் தன் உணர்வைச் சமப்படுத்தி அறியும் நிலை இது.
1.சரீர இயக்கச் செயலுடனும்
2.சரீரமற்ற ஆத்ம உயிரின் தொடர்புடனும்
3.சித்து விளையாட்டின் சித்துச் செயலிலும் நிகழும் நிலையை அறிய முடியும்.

ஆனால்… பலனற்ற தன்மை தான் சரீரமற்ற உயிராத்மாவின் (ஆவி…. ஏவல்… மந்திரம்) தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முறை

ஆகவே… ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குள் உள்ள குருவான தன்னுயிரைத் தெய்வமாக்கி…
1.ஒலி கொண்டு ஒளி பெறும்
2.எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும்… அறியும் ஞானத் தொடர் கொண்டு
3.தன் ஜீவ ஆத்மாவில் இருந்தே “வளர்ச்சி நிலை” ஒவ்வொன்றையும் அறியலாம்.

மனித வளர்ப்பின் பலன் “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” – ஈஸ்வரபட்டர்

மனித வளர்ப்பின் பலன் “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” – ஈஸ்வரபட்டர்

 

கடலைக் காயை நாம் பயிரிடும் பொழுது தனி விதையாகத் தான் பயிரிடுகின்றோம். ஆனால்… செடி வளர்ந்து பலன் தரும்போது அக்கடலைக்காய் “இரண்டு விதையுடன்… பெட்டி போன்ற அமைப்பு பெற்று…” தன் வளர்ப்பின் வளர்ப்புப் பலனாக… அது எடுத்த சத்தின் ஊட்டப்பலனைப் “பலவாய்த் தருகின்றது…”\

அப்பலனின் தொடர்பலன் அதன் பயிர் நிலை ஒரே தன்மையில்தான் வளர்ந்து கொண்டுள்ளது. அது எடுத்த அமிலத் தன்மைக்கொப்ப சத்தின் வித்து பலன் தருகின்றது.

அந்தக் கடலையை நம் தேவைக்கொப்ப உணவாகவும்… எண்ணையாகவும்… எடுத்துக் கொள்கின்றோம்…

அதே போல அச்செடியிலிருந்து வெளிப்பட்ட வளர்ப்புத் தன்மை யாவையும் பல நிலைகளில் கலக்கப்படுகின்றன.
1.கடலைச் செடியை மாடுகள் உட்கொண்டாலும்…
2.மாட்டின் சத்தான பாலைத் தான் அது தருகின்றது.

அதே கடலைச் செடியை உரமாக வேறு பயிர்களுக்குச் செலுத்தினோமானால்… எந்தப் பயிருக்கு கடலைச் செடியின் சக்கையை உரமாக இட்டாலும்…
1.நெல்லுக்கோ மற்ற பயிர்களுக்கோ இவ்வுரத்தைத் தந்தாலும்
2அதனுடைய சத்தை எடுத்து நெற் பயிர் தன் பலனைத்தான் தருகின்றது.

அதாவது… ஒரு பொருளின் தன்மை பலவாகப் பலவற்றில் கலக்கப் பெற்றாலும்… பலவற்றில் சேர்ந்தாலும் சேர்க்கப்படும் செயலினால் தன்னுடைய உண்மை நிலையைத் தான் பெறுவதில்லை…! பிற செயலுக்குச் சத்தாய்த்தான் அது அமைகிறது. ஆனால்…
1.தன் வித்தின் பலன்
2.தான் வளரும் பொழுது
2.தன் சக்தின் உண்மை வளர்ச்சியை வளர்த்துக் கொண்டே உள்ளது.

இத்தன்மையைப் போன்றுதான் பூமியின் வளர்ப்பின் வளர்ப்புகளுக்கு மற்றெல்லா வளர் தன்மைகளும்,..!

இதன் தொடரைப் போன்று… மனித ஆத்ம ஞானத்தில் பெறப் பெற்ற ஒலித்தன்மையின் ஒளி ஞானத்தைப் “பிற ஈர்ப்பில் எண்ணத்தைப் பலவாகக் கூட்டப்படும் உணர்வினால்” தன்னுடைய உண்மைத் தன்மையின் சத்து நிலை வளர்க்கும் வளர் தன்மை இழக்கப்படுகின்றது.

கடலைக் காயின் வித்தை மீண்டும் ஊன்றி வளர்க்காது அதை உணவாகவும் எண்ணையாகவும் மற்றவைகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி தடைப்படுவது போல்
1.மனிதன் உணர்வின் எண்ணத்தைப் பலவாக மோதச் செய்து விட்டால்
2.“ஞானம் என்ற உயர்வின் வளர்ச்சி” தடைப்படுகின்றது.

ஆகவே ஞானம் என்ற உண்மை வித்தை மனிதன் ஊன்றச் செய்து தனக்குள் உள்ள சத்தின் பலனை வளர்ச்சி கொள்ளும் பலனினால்தான்
1.மனித உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவுமே வித்தாகிப்…. பலவாகி…
2.பல ஞான வளர்ப்புகளைத் தன் வளர்ப்பால் வளர்க்க முடியும்.

தன் உணர்வின் எண்ணத்தில் கலக்கப்படும் ஒவ்வொரு சத்திற்கும் இவ்வுடலே செயல் கொள்கின்றது. எண்ணமுடன் மோதும் எவ்வெண்ணமும் உணர்வாகி… இவ்வுடல் தன்மையின் செயலுடன்… அதற்குகந்த வளர்ப்புத் தன்மையில் உருவாகிறது.

இத்தொடரிலிருந்து தன் ஞானத்தை அறியக் கூடிய உருவாக எண்ணத்தில் மோதும் செயலைச் சமமாக்கி…
1.இவ்வாத்ம பிம்ப சரீரக் கோளமெடுத்த ஒலி சக்தியின் ஒளியை…
2.எண்ணமும் பகுத்தறியும் ஆற்றலும் செயல் திறமையும் கொண்ட ஒளி சக்தியை
3.ஞான சக்தியாக உயர் ஞானச் சக்தியாக வளர்க்க வேண்டும்

சூரியனைச் சுற்றி அதனின் குடும்பக் கோளங்கள் சுழன்று ஓடினாலும்… அதன் சத்தைத் தானெடுத்துத் தன் சமைப்பின் ஒளியாகச் சூரியன் தன்னைத்தானே ஒளிப்படுத்தி… தன் ஒளியின் பலனாய்த் தன் தொடர்பில் வளரும் மண்டலங்களை வளர்த்து… தன் ஒளியைக் கொண்டு பிறவற்றையும் வளர்க்கின்றது.

அதைப் போன்று
1.தன்னுள் உள்ள நாத விந்துவை “குருவாக… ஒளி பெறும் ஜோதி நிலையாக்க…”
2.எண்ணத்தின் உணர்வைத் தனக்கேற்ற சத்தாக எடுத்து
3.தான் பெற்ற நாத ஒலியின் உண்மை வளர்ப்பின்… நாத விந்துகள் வளரும் வளர்ப்பில்தான்
4.எண்ணத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

தாவரங்களுக்கோ… கனிவளங்களுக்கோ… எண்ணத்தின் உணர்வு பகுத்தறியும் செயல் நிலை இல்லாததினால் தன் தன் சத்தின் வளர்ப்பு ஜீவநிலையுடன்… அது அது வளர்ச்சி கொண்ட அமிலத் தொடர்புக்கொப்ப தொடர் வளர்ச்சி வளர்கின்றது.

இதை எல்லாம் “இயற்கை” என்கின்றோம்.

ஆனால்… எல்லாவற்றையும் பார்த்து… உணர்ந்து… செயல் கொண்டு அறியும் மனிதன்… தன் எண்ணத்தின் உணர்வை இயற்கையின் தொடர்பற்ற “செயற்கையின் நிலையைப் பெறுகின்றான்..”

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து… தன்னுள் உள்ள ஜீவகாந்த நாத விந்துவை வளர்க்கும் உயர் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செலுத்துவதே மனித வளர்ப்பின் உண்மையான பலன்…!

செயற்கை மின் காந்த அலையில் தான் உலகம் இன்று அடிமைப்பட்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

செயற்கை மின் காந்த அலையில் தான் உலகம் இன்று அடிமைப்பட்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

எறும்பிலிருந்து யானை வரை ஊர்வன… பறப்பன… நடப்பன… எல்லா ஜீவ சரீரத்திற்கும் அவை பெற்ற “ஆத்ம உயிரின் ஒளி” ஒன்று போல் தான் இருக்கின்றது.

ஆனால் ஜீவ காந்த சரீர உணர்வின் நாத ஒலி கொண்ட செயல்… இம்மனித சரீரத்தின் இயக்கத்தில் அதிகம் உள்ளது.

உணர்வின் எண்ணச் செயலை இச்சரீர இயக்கம் செயல்படுத்தக் கூடிய அங்கக்கூறுகள் பெற்ற ஜீவ காந்த சரீரத்தைப் பக்குவப்படுத்தி… அதன் பக்குவத்திற்குகதந்த ஆகாரத்தை நாம் செலுத்த ஜீவ இயக்கத் தொடர் தேவை.

மின்சாரத்தின் மூலம் விளக்கின் ஒளியைப் பெற அவ்வொளியின் செயலுக்குகந்த காந்தமின் அலை தொடர்பைச் செலுத்திக் கொண்டே இருப்பதால் தான் விளக்கின் மூலம் ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.. தொடர்பு அற்றால் ஒளி பெறும் தன்மையும் தடைப்படுகின்றது.

அதைப் போன்றே…
1.ஜீவ காந்த மின் அலையின் தொடர்பிற்கு
2.தன் ஒளி என்றுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் வளர் ஒளியை வளர்க்க
3.ரிஷிகள் தம் வட்டத்தின் வளர்ப்பின் தொடருக்கு
4.உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்பங்களின் ஜீவ காந்தத் தொடர்புடன்
5.தான் பெற்ற வலுத் தன்மையின் தொடரை இப்பூமியிலே பதியச் செய்து
6.அத்தொடரின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து தன் வலுவை வலுவாக்கிக் கொண்டே
7.தொடர் ஜீவ சத்தைத் தன் தொடர் வட்டத்தின் சுழற்சி கொண்டு எடுத்துக் கொண்டே
8.அத்தொடர் அலை பிரியா வண்ணம் உணர்வின் எண்ண ஜீவித தொடர்பில்
9.தன் நினைவைப் பதிய வைத்த நிலையிலேயே செயல் கொள்கின்றனர்.

அதைப் போன்றே… எண்ணத்தின் உணர்வு கொண்ட தொடர்பானது ஜீவகாந்த மின் அலை செலுத்தும் உணர்வினால் எந்த ரிஷி பெற்ற தொடர்பிலும் எண்ணத்தைச் செலுத்திட முடியும்.

அவ்வாறு செலுத்தித் தன் ஞானத்தை வளர்க்கும் வலுவை… அறிய வேண்டிய எண்ணமுடன் தொடர்பைக் கொண்டு செலுத்தக் கூடிய எண்ணத்தின் தொடர்பினால்…
1.ரிஷித் தொடர்பின் அலையை வளர்க்க
2.அந்த காந்த மின் அலைத் தொடர்பை எண்ணத்தின் பால் எடுக்கப்படும் வலுவைக் கொண்டு
3.நம் வளர்ப்பின் தொடர் சுழற்சி வலு கூடிக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் ஒருவர்பால் ஒருவர் செலுத்தக்கூடிய உணர்வின் எண்ணத் தொடர்பில் தொடர் கொள்ளக் கூடிய மின் காந்த ஜீவ இயக்க வலுத் தன்மை நம் வளர்ப்பின் வலுவிற்கு மிகச் சக்தி வாய்ந்ததாக அமைகின்றது.

இதே ஜீவ காந்த வலுவை பிராணிகளிடத்திலிருந்தும் பட்சிகளிடத்திலுருந்தும் நம் உணர்வைச் செலுத்தத்தக்க வழி முறைக்கொப்ப வலுத் தன்மை பெற முடியும்.

ஜீவ காந்த சரீர எண்ண உணர்வின் செயலை…
1.நமக்குள் உள்ள உயர்ந்த தெய்வத் தன்மையை வளர்க்கும் ஞான வலுவைக் கொண்டுதான்
2.வளர வேண்டிய வலுவிற்கே சக்தி கூடுகின்றது.

விஞ்ஞானத்தால் மின் காந்த தொடர்பில் இன்று நாம் சிக்குண்டு… நாத ஒளி ஈர்ப்பை மின் அலைத் தொடர்புடன் அதிகமாகப் பெற்று… அவ்வலையின் செயலையே இப்பூமியின் காற்று மண்டல அலைத் தொடர்பில் அதிகமாய்ச் சுழல விட்டுக் கொண்டுள்ளோம்.

அதிலேயே சிக்குண்டு அதன் பிடியிலேயே எண்ணத்தைச் செலுத்தி அந்த ஒலி நாதங்களையே பெறுவதினால்
1.செயற்கை மின் காந்த செயலுக்கு…
2.இச்சரீர இயக்கமே அடிமைப்பட்டு… அதன் செயலாக ஆகிவிடுகின்றது.

ஆக.. ஒரு ரேடியோ… காற்றில் கலக்கப்படும் செயற்கைப் பதிவின் ஒலிகளை ஏரியல் மூலம் எடுப்பதைப் போன்று இச்சரீர இயக்கத்தின் ஒலி நாதத்தால்… நாதத்தின் ஒலித் தொடர்பை…
1.எண்ணத்தின் உணர்வு அறியும் தொடர்பு கொண்ட
2.எத்தொடர் அலையையும்… பதிவு கொண்ட ஒலி அலை யாவையும்… கேட்க முடியும்.
3.ஒலி பாய்ச்சிக் கேட்கும் ஒலியையும் காட்சியாகப் பார்க்க முடியும்.

இச்சரீர உணர்வின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பைச் செயல்படுத்தும் ஜெப சக்தியினால் நம்மையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

பின்… நம் வலுவைக் கொண்டு பிறருக்கும் அந்த அலைத் தொடர்பை ஊட்டி…
1.அத்தொடர்பின் வலுவை நாம் பெற்று
2.நம் வலுவை வளர்த்தோரின் (ரிஷி சக்திகள்) வலுவுடன் செலுத்தி
3.அறிவோம்…! என்ற நிலை பெற்றுத் தன்னுள் இருக்கும் தெய்வத்தின் செயலை உணர முடியும்.

படைப்பின் படைப்பாகப் பலவற்றையும் படைக்க… ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வத்தின் செயல் தன்மை செயல்படுத்துவதை செயலாக்க கூடியது இவ்வெண்ணம் தான்…!

எண்ணத்தின் உணர்வைக் கர்ம காரியத்தில் உள்ள இருளில் உள்ள உண்மையை… “ஒளி கொண்டு அறிந்து…!” ஆத்ம உயிரை வலுவாக்கி… வளர்ச்சி கொள்ளும் “தெய்வ வளர்ப்பாய்…” ஒவ்வொருவரும் வளரலாம்.