மகரிஷிகளின் நேரடி வலுவில் நாம் இருந்தால் எந்த நச்சுக் காற்றும் நம்மைப் பாதிக்காது – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளின் நேரடி வலுவில் நாம் இருந்தால் எந்த நச்சுக் காற்றும் நம்மைப் பாதிக்காது – ஈஸ்வரபட்டர்

 

இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்…”

இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி… ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்…”

சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்… நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி… அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.

1.இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு… இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்… அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை… சப்தரிஷிகளால் பாதுகாத்து பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை… நம் உணர்வின் எண்ணத்தை சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது…
1.நாம் வேறல்ல…
2.அந்த ரிஷிகள் வேறல்ல…! என்ற நிலையை எய்துகின்றோம்.

அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்… தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்… தான் பெற்ற உயர் ஞானத்தால்… சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது… எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.

இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.

மனித வாழ்க்கையில் இருந்தே…
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்…!

பல கோடி வருடங்களாய்… உயிர் பெற்று உருவாகி உருவாகி… உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்… ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்… தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை… தனக்குள் வளரும் இறை அணுக்களை… “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக…!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்… நிச்சயம் செயல் கொள்ள முடியும்.

மனிதப் பிறவியின் பலன் – ஈஸ்வரபட்டர்

மனிதப் பிறவியின் பலன் – ஈஸ்வரபட்டர்

 

கார்மேகக் கண்ணன் அகிலத்தையும் தன் வாயில் காட்டியதாகவும்… பெண்களிடம் தான் லீலா விளையாட்டுகளை நிகழ்த்தியதாகவும்.. கிருஷ்ணாவதாரம் வியாசரால் எழுதப்பட்டுள்ளது.

அந்தத் தத்துவத்தில் பல உண்மைகள் உண்டு… கதை ரூபத்தில் நாம் அதை கேட்கின்றோம்… படிக்கின்றோம்…!

இம்மனிதக்கரு எண்ணத்தின் உணர்வு ஒவ்வொன்றையும் கிருஷ்ணனாகக் கண்டு… அக்கிருஷ்ணனின் பிம்பம் பெற்று… அப்பிம்பத்தின் தொடர் கொண்டு நிகழும் வழித் தொடர் ஒவ்வொன்றுமே
1.உயிர் ஆத்மா உயரும் பரமாத்மாவின் தொடர்பைக் குறிக்க
2.கீதையில் சூட்சும ரூபங்கள் பல உண்டு.

தன் உயிர் ஆத்மாவின் உண்மை ஜெனிப்பை நாம் உணர்ந்து நம்முள்ளுள்ள வீரிய சக்தியை இக்கர்ம காரியத்தில் மோதும் உணர்வுகளுக்கு ஞானத்தைக் கூட்டி தன் உயர் ஞானத்தின் உண்மை எது…? என்ற பகுத்தறியும் எண்ண வாதத்தால்… எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கக் கூடிய வீரத்தின் ஞானமுடன் ஒவ்வொரு ஆத்மாவும் செயல்பட்டதென்றால்…
1.அன்று ரிஷிகளினால் உணர்த்தப்பட்ட…
2.இன்று கதையாய் உருவம் தந்துள்ள வழி ஒவ்வொன்றையுமே
3.நம் உயிர் ஆத்மாவின் சித்தில் நாமும் பெற முடியும்.

இவ்வெண்ணத்தின் பகுத்தறியும் உயர் ஞானத்தைக் கொண்டு அறிவின் வளர்ச்சியைச் சாந்த குண உணர்வுடன் அறியக் கூடிய தொடர்புக்குச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சில தாவரங்கள் விதைக்கப்பட்டு அதனுடைய சத்து நிலை உள்ள காலம் வரை பலன் தந்து ஒரு மாதம்… மூன்று மாதங்கள்… இப்படித் தன் சத்தின் பலனைத் தந்துவிட்டு மக்கி விடுகின்றன.

ஆனால் சில மரங்கள்…
1.“பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தான் எடுத்த சத்தின் தொடரினால்”
2.அம்மரமே வைரம் பாயும் தன்மைக்கு வளர்ந்து…
3.மரமே மலையாகிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பூமியின் சுழற்சியில் வலுக் கொள்கின்றது…!

காற்றலையின் சுழற்சியில்தான் எல்லா அமிலங்களும் சுழல் கொள்கின்றன.

மரத்தின் வலுவான வளர்ச்சி முற்றலில் அவ் ஈர்ப்பின் பிடிப்பிற்கு வைரத்தை வளர்க்கவல்ல அமிலத்தைத் தன் ஈர்ப்பில் பெற்று அது வளருகின்றது.

சிறு விதையான மிளகாய் விதை இக்காற்றலையில் கலந்துள்ள கார உணர்வின் சத்தைத் தன் வளர்ப்பிற்கு வலுக் கூட்டித் தன் வளர்ப்பின் பலனாய்ப் பலவற்றைத் தருகின்றது.

எண்ணத்தின் உணர்வை….
1.சிறு விதை எடுத்த பலனைப் போல்… வளர்ச்சியைப் போல்… பலன் தன்மை பெறத்தக்க செயலும் உண்டு…
2.வைரத்தின் ஈர்ப்பாக… மலையாகும்… மரத்தின் தொடர்பைப் பெறும் செயலும் உண்டு…!
3.மனிதன் எடுக்கும் அறிவின் ஞானத்திற்கு…!

எண்ணத்தின் மனோ வலிமை எப்படி இருக்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

எண்ணத்தின் மனோ வலிமை எப்படி இருக்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

மண்டலங்களில் நம் சூரியனின் சக்தி பல மண்டலத்தின் அமிலத்தைப் பெற்று தன் சமைப்பின் சத்தான உயர் அலை ஒளியை வெளிக்கக்கி ஒன்றின் தொடர் சுழற்சி ஓட்டத்தில்யே தன் வட்ட ஓட்ட மையச் சுழற்சியுடன் சுழன்று கொண்டே உள்ளது.

சனி மண்டலம் தன் தொடர்பில் சந்திக்கின்ற அமிலங்களின் தொடர்பைத் தான் எடுத்துத் தனக்கு வேண்டிய சத்தை வளர்ச்சிக்கு எடுத்து வேண்டாத் தன்மையை கரையக்கூடிய நிலைக்கு வெளிக்கக்கிக் கொண்டேயுள்ளது.

எல்லாத் தொடர்பின் வலுவின் மோதலினால் உருப்பெறுவதுதான் ஆதிசக்தி நீர்.
1.ஆதிசக்தியின் அமிலம் சிவனாய் உணர்த்தி
2.சிவனான பரப்பிரம்மமாகி பிரம்மமாய் சக்தி பெற்று
3.ஜீவித தொடர் சக்திக்கு எண்ணத்தின் உணர்வு செயல் நிலை கொண்ட இம்மனித பிரம்மம்தான் “உயர்ந்த பிரம்மத் தன்மை….”

“ஒரு சுழற்சி ஓட்டத்தில்” பலவற்றையும் வளர்க்கும் சூரியனே செயல் கொள்கின்றது. பலவாக ஓடும் எண்ணத்தின் ஓட்டத்தில்… பலவற்றையும் அறியக்கூடிய உணர்வின் எண்ணச் செயல்… மனித ஞானத்தில் செயல் கொள்ள…
1.மனிதன் தன்னுள் ஓடும் எண்ணத்தின் உணர்வை
2.சமமான சாந்தத்திற்குச் செயல் கொள்ள
3.கர்ம காரியத்தில் ஞானம் பெறல் வேண்டும்.

காட்டிற்குச் சென்று தனித்து ஜெபம் பெறும் காலத்தில்… மனித உணர்வுகள் மோதும் தருணமோ மற்ற எதிர்மறை செயல் எதுவாகிலும் மோதும் பொழுது “உணர்வுகள் மோதலினால்… உணர்வுகளினால் சாந்தத்தின் உயர் வலுவை மாற்றிக் கொள்ளும் பொழுது…” எதிர் நிலையின் பாதிப்பால்…
1.எடுத்த பலனின் செயல் விரையப்பட்டு
2.மீண்டும் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வலுவாகச் சிக்க வேண்டி உள்ளது.

ஆகவே… கர்ம காரியத்தில் மோதப் பெறும் எச்செயலானாலும் தன் ஞானத்தினால் உயர் ஞானத்தைச் செலுத்தி… ஏற்படக் கூடிய மாறு கொண்ட உணர்வுகளுக்கு வாழ்க்கைச் செயல்… தன் குடும்பம்.. ஆரோக்கியம்… தொழில்… சமுதாயம்…. எதுவாகிலும்… “அதிலிருந்து ஒதுங்குவதல்ல உயர் ஞானம் பெறுதல் என்பது…!”

வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதப் பெறும்…
1.ஒவ்வொரு செயலையும் ஒதுக்கப்படாத தன்மையிலும்
2.தன் ஈர்ப்பின் சுழற்சியில் அதே எண்ணத்தின் ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள நிலைக்கும்… எண்ணத்தைச் செலுத்திடாமல்
3.ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தன் எண்ணத்தில் உயர்வைக் கூட்டி
4.அதற்குகந்த வழி நிலைகளை வகுத்துச் செயல்படுத்தக் கூடிய அறிவினால்
5.இக்கர்ம காரிய வாழ்க்கையில் தன் உயர் ஞானத்தைக் கொண்டு
6.உயர்ந்தோரின் ரிஷித் தொடர்பைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

ஆனால்… முதன் முதலில் ஜெபத்தில் அமர்ந்தால் உடலுடன் கூடிய வாழ்க்கையில் எடுத்த அலைச் சமைப்பின் தொடர்பு வாசனை எண்ணம்தான் ஏற்படும்.

ஆகவே… உயர்வின் ஞானத்தை நாம் பெற வேண்டும் என்றால் கர்ம காரியத்தில் தன் வாழ்க்கையில் செயல் கொள்ளும் எந்தச் செயலையும் அறிவின் உயர்வால் அதற்குகந்த வழி நிலைகளைத் தான் பெற்ற ஜெப உணர்வு அலையினாலேயே கொண்டு வர வேண்டும்.

1.எண்ணத்தில் சஞ்சலத்தையும் சலிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்
2.“இது தான் நடக்கும்…!” என்ற எண்ணத்தின் வலுவைச் செலுத்தி
3.அதற்குகந்த தீர்வுகளைச் செயல்படுத்தி
4.எண்ணத்தின் மனோ வலிமையினால்…
5.ஜெபத்தில் ரிஷித் தொடர்புடன் – எவ்வெண்ணத்தை நாம் செலுத்தி ஜெபம் இருக்கின்றோமோ
6.அதற்குகந்த வலுவின் மின் காந்த வண்ண ஒளித் தன்மையை இச்சரீர ஆத்மா “நிச்சயம் பெற முடியும்…!”

இன்னல் வரும் நேரத்தை எல்லாம் உயர் ஞானம் பெறும் படிக்கட்டாக அதை மாற்றிக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

இன்னல் வரும் நேரத்தை எல்லாம் உயர் ஞானம் பெறும் படிக்கட்டாக அதை மாற்றிக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

1.பிரம்மத்தின் பிரம்மாவாய்… ஒவ்வொருவரும் தன் எண்ணத்தின் கர்ம காரியத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தில்
2.மாற்றம் கொள்ளக்கூடிய செயல் நிலை ஒவ்வொன்றிலுமே
3.இன்னலில் இருந்து தன் ஞானத்தைக் கூட்டி உயர் ஞானமாக்கும் சித்தம் கொண்டால்
4.பரப்பிரம்மத்தில் பிரம்மாவாய்ப் படைப்பில் பிம்பம் பெற்ற நாம்
5.வாழ்க்கை நிலையிலிருந்து செயல் கொள்ளக்கூடிய எண்ணத்தின் உணர்வை
6.தடைப்படக்கூடிய கர்ம காரியத்தில் சலிப்பு சோர்வு என்ற சஞ்சல உணர்வை வளர்க்காமல்
7.தடைப்படும் காரியங்கள் ஒவ்வொன்றையுமே உயர் ஞானத்தைக் கூட்டி மாற்றியமைத்து
8.வளரும் தொடருக்கு வாழ்க்கையின் நிறைவை வளர்த்து
9.எண்ணத்தின் உணர்வைச் சமமான குண நிலைக்கு
10.சாந்தமான ஞானத்தின் வீரத்தை வளர்த்துக் கொண்டோமேயானால்
11.யாம் வழிகாட்டியபடி மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கவல்ல காந்த மின் நுண் அலைகள் மூலம்
12.இச்சரீரம் முழுமைக்குமே வலுக்கொள்ள வழி அமையும்.

எப்போது ஆறு வண்ணங்களின் முலாம் கொண்ட இஜ்ஜீவ ஜடபிம்ப பிரம்ம உடல் பெற்றோமோ… அப்போதே அதற்கடுத்த வான்மீகியாரால் சுட்டிக் காட்டப்பட்ட ஒளிப் பிம்பமான… நீர் மூர்த்தி உருவங்களைத் தெய்வ குணாம்ச வித்தகராய்ப் படைத்த… காவிய ரூபத்திற்கொத்த கருத்தின் ரூபமாய் இராமனைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும்
1.இச்சரீரத்தின் ஆத்ம ஒளியைச் விண்ணிலிருந்து எடுக்கும் உயர் காந்தமின் அணு வளர்ப்பினால்
2.நீல வண்ண ஒளி சரீரமாய் இச்சரீர ஆத்மாவையே ஒளிப் பிழம்பாக ஆக்கி
3.இச்சரீரத்தில் இருந்து கொண்டே அந்த (நம்) ஆத்மாவின் ஒளியை நாம் காண முடியும்.

அப்படிப்பட்ட ஒளியால் ஒளிரக் கூடிய வலுப்பெறும் சித்துத் தன்மையினால் எதனையும் ஊடுருவும் செயல் தன்மை இம்மனித சரீர வாழ்க்கை உணர்வு எண்ணத்திலேயே நாம் பெற முடியும்.

இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாக ஏன் காட்டினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாக ஏன் காட்டினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரகாசிக்கும் தருணத்தில்… நம் பூமியில் மழை பெய்யும் தருணத்தில் மேகக் கூட்டங்கள் விலகி மப்பும் மந்தாரமுமாய் மழைத் துளிகள் விழும் தருணத்தில் சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் பட்டுப் பிரகாசிக்கும் சமைப்பு அலையினால் “வானவில்” ஒளியின் வண்ணத்தை நாம் காண்கின்றோம்.

இராமாவதார காலத்தில் வான்மீகி எழுதிய காவியத்தில் வண்ணத்தின் ஒளியில் வளரும் குண உருவ இராமனை “நீல உருவாக” காவியத்தில் காட்டினார்.

சூரியனுக்கும் பூமிக்கும் வான மண்டலப் பால்வெளியில் சமைக்கப்படும்
1.பூமி எடுக்கும் சத்தின் வளர்ச்சி வண்ண ஒளியின் தொடர் வளர்ச்சியை
2.வான்மீகி மகரிஷி பெற்ற ஜெபத்தின் தத்துவக் காவியத்தில்
3.உருவக நிலை உருவாகும் வண்ணத்தின் சேர்க்கையின்… ஆத்ம குணத்தின்… வளர்க்க வேண்டிய ஜீவ சரீரத்தைப் பற்றி…
4.இராமாயணத்தின் மூலம் அன்றே நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார்.

வானவில்லில் எப்படி வண்ணங்களைக் காணுகின்றோமோ அதற்கொத்த வண்ணத் தன்மை ஆறு வண்ணங்கள்… வலுக்கூடிய ஏழாம் வண்ணமான உருவக வண்ணம் கொண்ட செயல் நிலையில் தான்… மனித ஜீவனும் பிறக்கின்றது.

இச்சரீரத்தை இயக்கும் ஆத்மாவின் வண்ணம் ஆறு. வானவில்லின் ஒத்த வண்ணத்தின் வலு ஒளி பெற வேண்டும் என்றால்…
1.ஆத்மாவின் இயக்கத்தால் ஜீவ சரீரத்தின் உருவகத்தின் மூலம்
2.பகுத்தறியும் ஞான மனிதனை ஒளிச் சரீரமாக (வெண்மை நிறம்) வளர்க்க முடியும்.

ஆறு வண்ணத்தின் திரு உருவாய் ஆறுகுணத்தின் அறுசுவை உண்டு செயல் நிலைக்கு மனிதக்கரு உரு வளர வளர்ச்சி பெற்ற அடுத்தநிலை தான் இராமனும்… கிருஷ்ணனும்…!

அதாவது… ஆத்ம வலுவின் ஒளியைப் பெற்ற… அடுத்த தெய்வ நிலை பெற்ற…
1.அடுத்த தெய்வ நிலை பெறும் ஒளியைக் குறிக்க
2.ஜீவ உடலின் ஆத்ம வலுவின் மனிதனுக்கடுத்த வளர்ச்சி ஒளி நிலையான
3.தெய்வ நிலை பெறும் வண்ணத்தைக் குறிக்கும் ஒளி தானப்பா “நீல ஜோதி ஒளி நிலை…!” (இராமனும்… கிருஷ்ணனும்)

இராமரையும் கிருஷ்ணரையும் நீல வண்ணத்தில் உருவகம் தந்து தெய்வங்களாகக் குறிப்பு காட்டிய வான்மீகியார் தந்த காவியத்தில் இப்படிப் பல உண்மைகள் உண்டு.
1.ஜீவ சரீரத்தின் அடுத்த நிலை பெறும் சூட்சும மார்க்கங்கள் அனைத்தையும் குறிப்புகளாக
2.காவிய உருவத்தில் ரூப கர்ண நாமங்களைச் சூட்டி வடித்துள்ளார் வான்மீகியார்.

மிளகாயின் விதையை விதைத்தால் அதிலுள்ள காரத் தன்மைக்கு ஜீவ நீர் சேர்த்து வளரும் தருணத்தில் அதன் உணர்வின் நிலைக்கொப்ப இக்காற்று மண்டலத்திலுள்ள தனக்குகந்த கார அமில உணவைத் தன் வளர்ப்பின் சத்திற்கு எடுத்து வளர்கிறது.

மிளகாய்ச் செடி அதன் ஊன் நிலை வெளிக்கக்கும் ஆவி உஷ்ணத்தினால் இலைகள் எல்லாம் முதிர்ச்சியுற்றுப் பூவாகிக் காயாகி முற்றிய பிறகுதான் மிளகாயாகவும் வித்தாகவும் பலனைத் தருகின்றது.

இப்படி அந்த வித்தின் தொடர் வளர்ச்சியில் மிளகாயின் பலனை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்றுதான் நம் ஆத்ம உயிர் வித்தின் பலனும்.

இச்சரீரக் காலத்தின் முதிர்வில் சரீரத்திலுள்ள எலும்புகளின் ஊன் நிலை அது வெளிக்கக்கும் அலை உணர்வின் வளர்ப்பு நிலை வளரும் குழந்தைப் பிராயத்தில் பருவ நிலையில் சரீர மாற்று உணர்வு வளர்ச்சி முற்றுகின்றல்லவா..?

ஏனென்றால் உணர்வின் வளர்ச்சி முற்றல் ஜீவ வளர்ச்சி வளர்க்கும் பக்குவ காலமே… “பருவ காலம்…”

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வால் ஆத்மாவின் வளர்ச்சி முற்றும் வலு நிலை கூட வேண்டும் என்றால்…
1.ஆத்ம ஜெபத்தால் பெறும் வீரியத் தன்மையால்
2.சமமான குண வலுவைக் கொண்டு
3;ஆறு வண்ணங்களின் உரு வண்ணத்தைப் பெற்ற சரீரத்தை
4.ஒளி வண்ணத்தின் ஒரு வண்ணமாய் நீல வண்ண ஒளி ஆத்மாவாய்
5.இவ்வுயிராத்மா வலுப்பெறும் அந்த வளர்ச்சியின் உண்மையை
6.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

(குறிப்பு:- சரீர ஜீவ உருவக வாழ்க்கையிலேயே சாதாரண பிறப்பு இறப்புக்கு… அடுத்து ஜென்மத் தொடர் பெறுவதற்கும்… ஆத்ம வலு நிலை கூடியிருந்தால் தான் பிறப்பிற்கு வர முடியும்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் “ஓ…ம்” என்று பிரணவமாக்கி இயக்குகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையை ஜீவனாக்கி ஜீவனின் மலமாக நம் உடலை ஆக்கிக் கொண்டேயிருக்கின்றது.

“ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம்
1.எனக்குள் எண்ணியதைச் சிருஷ்டித்து அதனின் இயக்கமாக இயக்கி
2.ஈசனாக எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறாய் என்று
3.நம் உயிரை ஈசனாக மதிக்கும்படிச் சொன்னார்கள் ஞானிகள்.

நாம் எண்ணியதை இயக்கி எண்ணியதைப் பிரம்மமாக்கி நமக்குள் உடலாக்கி அந்த உணர்வின் செயலை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கின்றான் உயிரான ஈசன்.

அந்த உயிரே ஆண்டவன்.

1.நம் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
2.பெருமாளாக வீற்றிருப்பதும் உயிரே.
3.பெருமானாக இருப்பதும் உயிரே.

மனிதனின் நிலைகள் உருபெற்ற நிலைகளை உங்களுக்குள் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவு என்பது “முருகு…”. அதாவது மாற்றி அமைக்கும் பெருமானாக இருப்பது நமது ஆறாவது அறிவு.

1.உடலின் இயக்க உணர்வுகள் அனைத்திற்கும் பெருமாளாக இருப்பது உயிரானாலும்
2.இயக்கத்தின் தன்மை ஈசனாக இருப்பினும்
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பினும்
4.ஆறாவது அறிவின் தன்மையை “முருகப் பெருமான்…!” என்றனர் ஞானிகள்.

அதாவது இந்த உடலை ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது ஈசனாக இருப்பினும் அவனின் நிலைகள் கொண்டு மாற்றியமைக்கும் பெருமானாக இந்த ஆறாவது உணர்வின் துணை கொண்டே இந்த உயிர் நம்மை ஆட்சி புரிகின்றான்.

இது அனைத்தையும் ஆட்சி புரியும் நிலைகளை நாம் நினைவு கொண்டு நாம் அல்ல என்ற நிலைகளுக்கு வருதல் வேண்டும்.
1.நம் உடலை அவனின் உடல் என்றும்
2.அவனின் உணர்வு என்றும்
3.அவனின் கண் என்றும் உணர்தல் வேண்டும்.

எல்லாமே அவனின் நிலைதான் என்று அறிந்து கொண்ட பின் ஒருவன் என்னைக் கேவலமாகப் பேசி விட்டான்… நான் அவனை விடுவேனா…! என்ன செய்கிறேன் பார்…” என்ற நிலைகளில் சொல்லி “ரோசப்படுவது…” என்பது தேவையற்றது.

ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளை எடுக்காது உத்தராயணம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

அதாவது மகாமகம் என்று சொல்வார்கள். நாம் சமையல் செய்யும் போது எப்படிப் பொங்கி வடிக்கின்றோமோ இதைப் போல இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “உத்தராயணம்…” தீமைகளை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நிலை வரும் போது தான் பங்குனி உத்திரத்தை நாம் தெளிவாகக் கொண்டாட முடியும். தெளிந்திடும் உணர்வு கொண்டு நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதற்குத் தான் மாதத்திற்கு நாள் என்று விழாக் கோலம் வைத்தனர் ஞானிகள். பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

பன்னிரண்டு ராசி என்று சொல்லும் போது நமக்குள் எந்த ராசி அதிகரிக்கின்றமோ அதனின் விளைவின் தன்மை தான் நமக்குள் வருகின்றது.

“முருகப் பெருமான்” – நாம் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு அது உயர்ந்த நிலைகள் கொண்டு நமக்குள் பெருமாள் ஆக இருந்து ஆட்சி புரியும் உயிருடன் அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆகும் நிலையே மகரிஷிகள் அன்று உணர்த்திய தியானம்.

தியானம் என்பது என்ன…?

நம்மை மாற்றி அமைக்கும் முருகப் பெருமானின் உறு துணை கொண்டு மெய் ஞானி உணர்வை நமக்குள் இணைத்து உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பெருமானுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளியின் சுடராக வாழ்வதே தியானம்.

நமது எல்லை எது…? இனி உடல் பெறாத நிலை தான் உத்தராயணம்.

இந்த மனித உடலை விட்டு நாம் அகன்ற பின் ஒளியின் சிகரமாக நாம் ஆவதற்கே இந்தத் தியானம்.

மனிதனின் எல்லை செயற்கையை வளர்க்கும் விஞ்ஞானம் அல்ல… இயற்கையை வளர்க்கும் மெய் ஞானம்…! – ஈஸ்வரபட்டர்

மனிதனின் எல்லை செயற்கையை வளர்க்கும் விஞ்ஞானம் அல்ல… இயற்கையை வளர்க்கும் மெய் ஞானம்…! – ஈஸ்வரபட்டர்

 

சூரியன் எத்தன்மை கொண்டெல்லாம் மற்ற மண்டலங்களில் இருந்து வெளிக் கக்கும் அமிலத்தைத் தனக்காக ஒளியாக்கி… அவ்வொளியின் வளர் சத்தில் தானும் வளர்ந்து… தன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள மற்ற கோளங்களையும் வளரச் செய்து செயல் கொள்கின்றதோ…
1.அத்தொடர்பின் வளர்ச்சியில் முதிர்ந்த வித்து நிலை தான்
2.மனித உரு எண்ண உணர்வின் பகுத்தறிவின் வளர் ஞான நிலை…!

ஒவ்வொன்றின் சத்தில் முதிர்ந்த வித்தைக் கொண்டு தான் பிறிதொரு வளர்ப்பின் செயல் நடக்கின்றது.

அதைப் போன்று தான் சூரியனின் சமைப்பில் பலவற்றின் மூலம் கொண்டு உயர்ந்த வளர்ச்சியில்… முதிர்வின் வித்துத் தன்மையான… “இப்பூமியின் மனித கரு உருவிலிருந்து” வளர்ச்சியின் வளர் தன்மை வித்தைச் செயல்படுத்துகின்றனர் ரிஷி சக்திகள்.

“மாவிதை” வளர்ந்து மரமாகிப் பல இலைகள் பூக்கள் கனிகளாக வளரும் தருணத்தில் எல்லாப் பூக்களும் கனியாகிப் பலன் தருவதில்லை. பூவிலும் பிஞ்சிலும் உதிர்ந்து விடுகின்றது.

வித்தின் சத்தெடுத்துக் கனி பெறும் நிலை அம்மரத்தின் தருண நிலைக்கொப்ப முற்றிய தன்மை வளர்ப்பு தன்மையைக் காட்டிலும் குறைவாய்த்தான் உள்ளது.

அதைப் போன்று…
1.மனித உருக் கருவின் எண்ணத்தில் உணர்வு நிலை பெற்று வாழ்க்கைத் தொடரில் வாழ்ந்தாலும்
2.வாழ்க்கையின் முதிர்வான உயர் ஞானம் பெறும் ஆத்மாக்கள்
3.குறைவாய்த்தான் செயல் கொள்கின்றன.

உண்மையின் வழித் தொடர் மாமரத்தின் பூவும் பிஞ்சும் அதிகமாய் வளர்ந்தாலும் அது எடுக்க வேண்டிய சத்து நிலை குறையும் பொழுது பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சான நிலையில் கரடு தட்டி உதிர்ந்து விடுகின்றன. அப்பிஞ்சுகள் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில்லை.

“முற்றிய கொட்டைகள்” கொண்ட கனிகள் தான் வளர்ச்சி நிலை பெறுகின்றன…!

அதைப் போன்றே இம் மனிதக் கரு உரு பிறப்பிற்கு வரும் நிலையும்… ஞானமுடன் கூடிய எண்ண உணர்வும்… செயல் அங்க அவயங்களின் அழகும் பொலிவும் பெற்ற நிலையில் வாழ… சூரியனின் வளர்ச்சியின் முற்றிய நிலையில் வித்தாய்ப் பெற்ற சக்தியில் வளரப் பெற்ற நிலை மனிதக் கரு உரு நிலை.

மனித ஜீவ எண்ணத்தின் உயர் ஞான ஒளியின் உயர் ஆத்மாவின் வளர்ச்சியைக் கொண்டுதான்…
1.சகலத்தையும் அறியவல்ல சித்துத் தன்மையின் ரிஷி சக்தியால்
2.எவ் ஈர்ப்பு வட்டத்திலும் வீரிய சக்தி பெற்ற இவ்வொளி ஆத்மா சிக்காமல்
3.வளர்ச்சியின் வித்தைப் பிறப்பு நிலை வளர்க்க வழி அமைக்கும் வித்தின் மனிதக் கரு உரு ஜீவ உடலுக்கு உண்டு.

ஆனால்… தான் பெற்ற “மகத்தான உண்மை” நிலை அறியாத மனிதன் தன் உணர்வின் எண்ணத்தை விஞ்ஞான செயற்கை மின் காந்த அலையில் அடகு வைத்த “குறுகிய நிலையில்” இன்று வாழுகின்றான்.

ஆத்ம ஜீவ உடலிலும் எடுக்கும் உணர்வின் எண்ணத்திற்கு ஒப்ப எவ்வலையின் உணர்வின் எண்ணம் செல்லுகின்றதோ அதற்குகந்த அணுக்கள் தான் உடலின் அமிலத்தில் வளர்க்கும் நிலைக்கொப்ப ஆத்ம வலு வலுக்கூடும்.

இன்று காற்றலையில் ஒலிப்பரப்பு ஆகியுள்ள மின் காந்த ஒளி அலையின் ஈர்ப்பில் மனித உணர்வு சிக்குண்டுள்ளது.

இக்காற்றலையில் மின்காந்த ஒலி பரப்பில் (வானொலி டி.வி. அலை) அவ் ஈர்ப்பின் வட்டத்தில் மனிதன் அதைக் கேட்டும் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அதே படத்தை இச்சரீரம் உணர்வின் படமாக எடுத்துணரும் வழித்தொடரிலேயே உள்ளான்.

அதாவது காற்றலையிலுள்ள இயற்கைச் சத்தெடுத்து வளரும் வலுவைக் காட்டிலும் மின்காந்த ஒலியலையில் கேட்டும் பார்த்தும் செயல் கொள்ளும் மனிதனின் உணர்வு அதே அலை உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

ஆக…
1.தன் ஆத்மாவின் வளர்ச்சிக்கு இயற்கையின் வித்தின் சத்தை உரமாக செலுத்துவதைக் காட்டிலும்
2.சமைக்கப்பட்ட வலுவிழந்த மின் காந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அளிக்கும் சத்தாகவே உள்ளது.

செடி கொடிகளுக்கு நீரை நாம் ஊற்றி வளர்த்தால் நீரின் சத்தில் அது வளர்ந்து பலன் தருகின்றது. அதே செடிக்குக் “காய வைத்து ஆறிய நீரை ஊற்றினால்…” செடிக்குகந்த சத்து பெற முடியாமல் செடியும் கருகி வளர்வதில்லை.

அதைப் போன்று உடலிலுள்ள இவ்வுடலை இயக்கும் உயிராத்மாவை மீண்டும் இதே நிலை கொண்ட பகுத்தறியும் ஞானக் கரு உரு மனித ஜீவ வளர்ச்சியை வளர்க்க முடியாத நிலை இன்றுள்ளது.

1.இயற்கையின் சத்து உரத்தை ஆத்ம வலுப் பெற்று வளரும் நிலையை
2.செற்கை மின் காந்த சமைப்பின் சத்தை நாம் செலுத்தி
3.கரடு தட்டிய பிஞ்சின் உதிரும் மாம்பிஞ்சுகளைப் போன்று
4.இஜ்ஜீவ சரீரத்தில் வலுப் பெறும் ஆத்மாவை வலுவற்ற நிலைக்கு
5.செயற்கை மின் காந்த ஈர்ப்பையே இஜ்ஜீவ காந்த சரீரத்தில் வளர்க்கும் செயல் இக்கலியின் கடைசியில் வளர்ந்தோங்கி விட்டது.

இத்தகைய விஞ்ஞானச் செயற்கைப் பிடியில் இருந்து ஒவ்வொரு மனிதனும் உயர வேண்டுமென்றால்… எண்ணத்தின் உணர்வைச் சஞ்சலத்திலும் செயற்கையின் ஆசைப் பிடியிலும் செயல்படுத்தாமல்…
1.அன்று மகரிஷிகள் நமக்கு காட்டிய உன்னத குண வழிகள் கொண்டு
2.நம் உணர்வின் எண்ணத்தால் நமக்குள் பெற்றுள்ள சூரியனின் வளர்ப்பின் வித்தை மீண்டும் மங்காமல்
3.சூரியனுக்கு மேல் உயர்ந்த ஜோதி நிலை பெறத்தக்க வழியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

மனித உயிராத்மா பெற வேண்டிய “வீரியத் தன்மை” எது…? – ஈஸ்வரபட்டர்

மனித உயிராத்மா பெற வேண்டிய “வீரியத் தன்மை” எது…? – ஈஸ்வரபட்டர்

 

கரடு முரடான காடுகளில் புல் பூண்டே இல்லாத இடத்திலும் மழை நீர் பட்டவுடன் பூமி எடுத்த அந்தந்த இடங்களின் அமில நிலைக்கொப்ப ஜீவ வளர்ச்சி புல் பூண்டுகள் வளருகின்றன.

வளர்ந்தாலும் நீர்ச்சத்துக்குகந்த அமிலத் தன்மை கொண்டு காற்றின் உராய்வு வளர்ச்சிக் காலம் முற்றிய பிறகு அதன் நிலை மீண்டும் மக்கி விடுகின்றது.

அதன் நிலை மக்கினாலும்…
1.அவ்வமிலக்கூறு ஜீவன் பெற்று மக்கிய தன்மை
2.எவ்வுணர்வு கொண்டு ஜீவ வித்து பிறந்து வளர்ச்சியுற்று மாற்றம் கொண்டதோ
3.அம்முலாமுடன் கூடிய உயிரணு காற்று மண்டலத் தொடர்ச்சியில்
4.தனக்குகந்த அமில உயிர் வித்தாய்ச் சுழற்சி பெற்று
5.மீண்டும் தன் பிறப்பிற்கு ஏற்ற கால அமிலத் தொடர்புடன் பிறிதொரு வீரிய வளர்ச்சிக்கு வருகின்றது

ஒன்று உயிர் பெற்று… கரைந்து… மீண்டும் ஜீவிதம் பெற்று… மாறி… மாறி… வரும் தொடர்பின் வீரியத்தால்… செயல் நிலை கூடுகின்றது.

அதைப் போன்று மனித சரீரப் பிம்பத்தில் எல்லா நிலைகளையும் அறிந்து… சொல்லாற்றிச் செயலாற்றும் உயர் வளர்ச்சியை… உணர்வின் எண்ணத்தைக் கொண்டு… மனித உயிர் ஆத்மாவை வீரிய நிலைப்படுத்த “இரண்டு நிலை மார்க்கங்கள் உண்டு…!”

மனித எண்ணத்தின் உணர்வை எதில் வீரியத் தன்மை காட்டுகின்றோமோ அதனுடைய வளர்ச்சியின் வேகம் நிச்சயம் வளருகின்றது.

வழி 1: (தெய்வீகம்)
வளரும் வேகத்தை… தெய்வமான உயர்வு நிலைக்கு உணர்வின் எண்ணத்தில் ஏற்படக்கூடிய குணநிலைக்கொப்ப நற்குணத்தின் சமைப்பாய்ச் சரீர பிம்பத்தையே வளர்த்துக் கொள்ளலாம்.

அந்த உயர் ஞானத்தின் வழியில்
1.இப்பூமியின் பிடிப்பிலிருந்து விடுபடும் நிலையாக
2.விண்ணிலிருந்து வரும் உயர் காந்த மின் சக்திகளை
3.சரீர பிம்பத்தின் எண்ண உணர்விற்கு வீரிய உரமாய் செலுத்தி
4.அதில் வளரும் வளர்ச்சியின் பலனாகத் தெய்வ நிலை பெற்ற
5.இறைத்தன்மை கொண்ட வளர்ப்பின் வளர்ப்பான ஒளி நிலை பெறலாம்.

வழி 2: (மீண்டும் பிறவி)
உணர்வின் எண்ணத்தை வீரியத்தன்மையில் செலுத்தினாலும்… “அறியாமல் செய்யும் மாற்றுத் தன்மையில் சிக்கும் நிலையினால்” எவ்வொலி கொண்டு எண்ணம் பிறந்து உணர்வின் செயல் வெளிப்படுகின்றதோ… அதற்குகந்த ஒலி வட்டத்தில் சிக்க நேரலாம்.

அதே ஒலி நிலைக்கொப்ப
1.பூமியின் பிடிப்பில் ஜீவனற்ற வலு நிலை வளர்த்த உயிர் ஆத்மாக்களின் ஒலி ஈர்ப்பும் (ஆவி உலக ஆன்மாக்கள்)
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலியுடன் செலுத்தப்படும் உணர்வு வட்டத்தில் சிக்கிய தன்மையினால்
3.எண்ணத்தினால் எவ்வீரியத் தன்மை கொண்ட செயல் உணர்வில் மனிதன் செல்கின்றானோ
4.அவ்வீரிய முலாமும் காற்றலையின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள ஒத்த நிலையும் கூடி இத்தொடர்பு வலுப் பெறுகின்றது.

இப்படி… மனிதன் செய்யும் எச்செயலாய் இருந்தாலும்… உணர்வின் நிலைக்கொப்ப வீரியத் தன்மை… இஜ்ஜீவ காந்த சரீரத்தில் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப… அச்செயலின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருக்கும்.

மாந்திரீக மார்க்கமும்… பக்தி மார்க்கமும்… வாழ்க்கைச் செயல் தொழில் எம்மார்க்கமாயினும்… ஜீவ ஆத்மாவின் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அதற்குகந்த வலுத் தன்மையினால் மீண்டும் மீண்டும் வலுவாக்கினால் “இன்றைய உலக நிலை போல் தான் இருந்திடும்…!”

அதனால்… பல மோதலில் பல கோடி ஆண்டுகளாய் வளர்ச்சியுற்று…
1.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்த உயர் ஞான வாழ்க்கையை
2.உயர் சக்தியின் தெய்வ நிலை பெறும் வழித்தொடரை உண்மையின் வழி அறியாமல்
3.வர இருக்கும் பூமியின் மாற்றத்திற்கொப்ப இச்சரீரத்தை அடகு வைக்கும் நிலை தான் முடிவாகும்.

இதிலிருந்து மீண்டு மனித நிலை உயர வேண்டுமானால்… தன்னைத் தான் உணர்ந்து… தான் பெற்ற இம்மகத்துவமான உயர் ஞானத்தை அறியவல்ல எண்ணத்தின் உணர்வை…
1.நற்குண வழியில் செலுத்திடல் வேண்டும்
2.இறை நிலை பெற்ற ரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்

தன்னுள் உள்ள உயர் ஆத்ம உயிர் இறை சக்தியின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் சக்திகளை வளர்த்துத் தன் ஞானத்தின் உயர்வைக் கொண்டு…
2.சலிப்பு சோர்வு சங்கடம் போன்ற நிலைகளையும்
3.வாழ்க்கையில் மோதும் எத்தகைய மாற்றுத் தன்மைகளையும்
4.தன் உணர்வின் எண்ணத்தைப் பாதிக்காத வண்ணம்…
5.சாந்தமான வீரத்தைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

தன்னிச்சையாகப் பெற வேண்டிய உயர் ஞானம் – ஈஸ்வரபட்டர்

தன்னிச்சையாகப் பெற வேண்டிய உயர் ஞானம் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.

முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது…
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி…
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்
4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை… உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ… எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ…
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.

உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்… அச்சம்… நாணம்… என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.

எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ… அவ்வுணர்வின் குணமும்… செயலும்… கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.

அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக…
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்… வாழ்க்கையின் செயலுக்கும்…
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.

முக்காலத்தையும் அறிய முடியுமா…! – ஈஸ்வரபட்டர்

முக்காலத்தையும் அறிய முடியுமா…! – ஈஸ்வரபட்டர்

 

இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.

மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.

அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியை கேட்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.

இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.

அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.

இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.

ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.

அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.

இமயமலையில் சப்தரிஷிகளின் செயல்பாடுகள் – ஈஸ்வரபட்டர் 

இமயமலையில் சப்தரிஷிகளின் செயல்பாடுகள் – ஈஸ்வரபட்டர் 

 

போகர் தன் உயிராத்மாவின் வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை… இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி… முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து வைத்துள்ளார்.

1.எச்சிலையை நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில் அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால் இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.

இப்பூமியின் இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!

“ரிஷிகளின் ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில் இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின் பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.

அந்நீர் கொப்பளிக்கும் தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

1.போகர் எப்படி நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம் ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.

அதற்குச் சுற்றிலும் அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆக சப்தரிஷிகள் செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!

1.இயற்கையின் மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த சரீரத்தில் ஒளிக் காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப் படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.