“நல்லது நடக்கவில்லையே” என்று உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை – “திறமைசாலிகளாக… ஞானிகளாக” ஆக முடியும்

 

competent.jpg

“நல்லது நடக்கவில்லையே” என்று உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை – “திறமைசாலிகளாக… ஞானிகளாக” ஆக முடியும்

1.ஒரு இயந்திரத்தை இயக்கப்படும்பொழுது
2.சந்தர்ப்பம் வரும்பொழுது எது எதை எந்தந்தக் காலத்தில் இணைத்தால் அது வலுப்பெறும் என்ற நிலையை
3.மனிதன் இன்று அனுபவ ரீதியில்தான் அதைக் காணுகின்றான்.

இதைப்போன்றுதான் ஒரு உணர்வின் தன்மை தாக்குகின்றது என்றால் அந்த உணர்வின் தன்மை நினைவிற்கு கொண்டு வருகின்றோம்.

ஒருவர் திரும்பத் திரும்பச் செய்கின்றார். ஆனால் “அது முடியாது” போகின்றது.

ஒரு இயந்திரம் ஒரு நூல் (ALIGNMENT) சாய்ந்திருக்கும். நமக்குப் புரியாது. அதில் பேரிங் (BEARING) போட்டிருப்போம். எந்தப் பக்கம் அழுத்தமாகின்றதோ அங்கு வெப்பம் ஆகின்றது நாம் அதைத் தொட்டுப் பார்த்தாலும் அது தெரியவில்லை.

மனிதனில் இது செயல்படும் பொழுது
1.“என்ன செய்தாலும் ஆகவில்லை” என்ற உணர்வுகளை  எடுத்துக் கொண்டு “அளவுகோல்” பார்த்தால்
2.நம் உணர்வுக்குத் தக்க சரியாகத்தான் இருக்கின்றது என்று நினைப்போம்.

இதைப் போன்று உணர்வின் அழுத்தத்திற்கொப்ப…, “சரி” என்று ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.

1.சிறிது சிந்தித்து
2.இதனுடைய நிலைகளை “எப்படியும் கண்டுணர வேண்டும்” என்ற உணர்வினைக் கூட்டினால்,
3.அந்தச் “சிறு தவறை” கண்டுகொள்ள முடிகின்றது.

அந்த இயந்திரத்தில் பேரிங் (BEARING) ஓடும் இடத்தில் எந்த பக்கம் வெப்பம் அதிகமாக இருக்கின்றது…? எந்த பக்கம் வெப்பம் குறைவாக இருக்கின்றது…? என்று சிந்தனை வரும்.

அப்பொழுது இந்தப் பக்கம் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது, இதை மாற்றி அமைத்தால்…, “சரியாக வரும்” என்ற சிந்தனை வரும்.

மனிதனின் வாழ்க்கையில் நுண்ணிய நிலைகள் உண்டு.

இதைத் தெரிந்து கொண்டபின் வாழ்க்கையில் தன் வலிமையின் எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றனர்.  சந்தர்ப்பத்தில், உணர்வின் வலிமை கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றனர்.

தியான வழிகளில் உள்ள அன்பர்கள் சில சந்தர்ப்பங்களில்
1.எண்ண வலுவைக் கூட்டும் பொழுது
2.உண்மையின் நிலையையும்
3.வாழ்க்கையில் எது வந்தது…? என்றும் சிந்தித்துக் கண்டுணர முடியும்.
4.மாறாக…. “உணர்ச்சி வயப்படுவதில்லை…”

இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால்.., பள்ளியில் பாடங்களைப் பயின்றாலும் அளவுகோலைக் காட்டி அனுபவத்தைக் கொண்டு வருகின்றனர்.

பாட நிலையை மட்டும் படித்துவிட்டுச் செயல்படுத்துவதில்லை.

சோப்பு செய்ய இன்னென்னவைகளைக் கலந்தால் சோப்புக் கட்டி உருவாக்கலாம் என்று சொல்லுவார்கள்… புத்தகங்களிலும் போட்டிருக்கும்.

அதையெல்லாம் படித்தபின்… நான் எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று சரக்குகளை வாங்கி வந்து நாம் செய்தால் எப்படி இருக்கும்.

அதில்,
1.எதை முதலில் சேர்ப்பது…?
2.எதை இடையில் சேர்ப்பது…? என்று இருக்கும்.
3.அப்படிக் கரைத்தாலும் அதனைக் காய்ச்சும் முறை ஒன்று உண்டு.
4.காய்ச்சும் போது வெப்பத்தைக் கொடுக்கும் நிலைகள் உண்டு. அந்த விறகை வைத்து எரித்து வெப்பத்தைக் கொடுப்பதிலும் சில பக்குவம் உண்டு.

அதிலும் கேவன் விறகிலும் நெருப்பு தெரியும். ஆனால், அழுத்தம் குறைவு சீக்கிரம் வேகாது. முருங்கை மரத்தின் விறகில் வெப்பத்தின் தன்மை குறைவு.

சோப்பு உருவாக்குவதென்று இதிலே போனால் அழுத்தம் குறையும், சோப்பின் தன்மை பதம் கெட்டுவிடும். நீண்ட நேரம் ஆகும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்துச் செயல்படும் நிலைகள் இல்லாது கட்டி உறையாது.

இதெல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய நிலைகள்.

ஏனென்றால் இதைப்போல சந்தர்ப்பத்தை உருவாக்கி வாழ்க்கையில் வரும் தன்மையை
1.நீங்கள் திறமைசாலியாக வரக்கூடிய அனுபவத்தை உங்களுக்குள் நினைவாக்கும் பொழுது,
2.”உற்றுப் பார்த்தால்” நினைவு வருகின்றது.
3.பிழைகளிலிருந்து மீளச் செய்கின்றது.

தீமைகளிலிருந்து… கஷ்டங்களிலிருந்து… வேதனைகளிலிருந்து… சிக்கல்களிலிருந்து… வரும் அபாயங்களிலிருந்து… மீளக்கூடிய சந்தர்ப்பமாக
1.மறைந்த நிலைகளை அறியும் நுண்ணறிவாக
2.ஞானத்தை ஊட்டும் நிலைகள் வருகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட “சந்தர்ப்பம்…,” தான் சந்தித்த அந்தக் கடுமையான நிலைகளிலிருந்து எப்படியும் மீள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரும் பொழுது தான் எல்லாவற்றையும் அறிந்துணரும் அறிவாக அவர்களுக்குள் வருகின்றது.

அவர்களைப் போன்றே நாமும் பேருண்மைகளை அறிய முடியும் “அறிய வேண்டும்” என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

மனிதனாகப் பிறந்த நாம் செலுத்த வேண்டிய காணிக்கை…

Siva family.jpg

மனிதனாகப் பிறந்த நாம் செலுத்த வேண்டிய காணிக்கை…

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை  நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

1.அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்?
2.அவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை என்ன” என்பதை ஞானிகள் விநாகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்,

என்னை வளர்ப்பதற்காக அவர்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகளால் உருவான நஞ்சுகள் அனைத்தும் நீங்க வேண்டும். அவர்கள் உடல்களில் உள்ள தீய வினைகள் அனைத்தும் அகல வேண்டும்.

என் அன்னை தந்தையர் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வின் தன்மையை ஓங்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.விநாயகர் சிலையை நாம் பார்த்து
2.இத்தகையை வினைகளை நமக்குள் சேர்த்து
3.இதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
4.தாய் தந்தைருக்குக் காணிக்கையாகச் சேர்க்கும்படி விநாயகர் தத்துவத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.

எங்கள் அன்னை தந்தையர் குருவாக இருந்து காட்டிய நல் வழியில் நாங்கள் செயல்பட வேண்டும்.

அவர்கள் காட்டிய பாதையில் மகிழ்ந்திடும் நிலைகள் நாங்கள் பெறும்போது “எங்கள் செயலைக் கண்டு…, என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட வேண்டும்.., ஈஸ்வரா” என்று உயிரை வேண்டுதல் வேண்டும்.

நம் அன்னை தந்தையருக்கு இதைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.
1.குருவின் காணிக்கை அதுதான்.
2.தெய்வத்திற்குப் பணிந்து செய்வதும் அது தான்.
3.கடவுளுக்குச் செய்யும் சேவையும் அது தான்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையர் மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா…! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வெறும் கல்வி “ஏட்டுச் சுரைக்காய் தான்” – தயவு செய்து ஞானத்துடன் ஒன்றிய கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்

Divine education.jpg

வெறும் கல்வி “ஏட்டுச் சுரைக்காய் தான்” – தயவு செய்து ஞானத்துடன் ஒன்றிய கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்

நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. கற்கும் கல்வியில் நாம் எதைக் கற்றாலும் கல்வி நமக்கு இந்த உலகை அறிந்திட உதவும். இந்த ஆறாவது அறிவல்ல.

மெய்ஞானத்தின் உணர்வு கொண்டுதான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும். ஏனென்றால்
1.கல்வி கற்றுணர்ந்தோர் அனைவரும் “கரையேறியது இல்லை”.
2.அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையைச் “சீர்படுத்தும் நிலையும் இல்லை”
3.கற்றவர்கள் அனைவருமே பெரும்பகுதி “மனக் குழப்பம்” என்ற இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.
4.உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதனால் “பொருள் தேடும்” நிலைகளுக்குத்தான் கற்கும் கல்வியைப் பயன்படுத்துகிறார்கள்.

அதே சமயத்தில், அந்தக் கல்வியின் நிலைகளில் தேடிய செல்வம் செழிப்பாக இருப்பினும் பக்குவத்துடன் பற்று கொண்ட நிலைகளில் “குடும்பத்தில் வாழாது” வேதனை கொண்ட நிலையில் வாழ்கின்றனர்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் தீமையான உணர்வுகளை அறிந்திடும் நிலையும் அதை நீக்கிடும் அருள் ஞானமும் அங்கில்லை.

தனக்குள் தீமைகள் விளையாது நல்ல உணர்வுகளை வளர்க்கச் செய்யும் ஆற்றலைப் பெறவேண்டும். அதற்கு அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகவேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
2.பகைமை என்ற உணர்வு நம் உடலுக்குள் சேராது
3.ஒற்றுமையுடன் இணைந்து வாழும்
4.இணைந்து வாழச் செய்யும் அருள் உணர்வுகளை” நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வெறும் கல்வி ஏட்டுச்சுரைக்காய் தான். ஆகவே கல்வி கற்றாலும் மெய்ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.

ஏனென்றால், மனிதனாக ஆக்கியது “உயிர் தான்”. மனிதனான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் “உயிர் தான்”. இந்த ஆறாவது அறிவின் தன்மைதான் “உயிரைப் போல.., உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக” வளர்க்கும் நிலை பெற்றது.

நாளை வரும் எதிர்காலத்தில் நம்மைக் காக்க நமது குழந்தைகளை அருள் உணர்வுகளைப் பெறும்படி செய்தல் வேண்டும். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் இதைப் போன்றே அறிவுரைகளைக் கூறிடல் வேண்டும்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்
2.நீ தெளிந்த மனம் பெறுவாய்
3.நீ தெளிவான வாழ்க்கை வாழ்வாய்
4.கல்வியில் உயர்வு பெறுவாய்
5.உலக ஞானம் பெறுவாய் உலகைக் காத்திடுவாய்
6.உலகைக் காத்திடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை நம் குழந்தைகளுக்குப் பாய்ச்சிட வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் வழி செல்வோம்.

“அன்றைய மெய் ஞானிகள்” எப்படி வாழ்ந்தார்களோ…, அவர்களைப் போன்றே மெய் ஞான வாழ்க்கையை நாம் அனைவரும் வாழ்ந்திடும் நிலையாக இதனைச் சீராகப் பயன்படுத்துவோம்.

பராசக்தி குளிக்கும் குளத்தில் ஆண்கள் குளித்தால் “பெண்ணாக மாறுவார்கள்” என்ற சாபத்தின் விளக்கம்

Goddess Parasakthi.jpg

பராசக்தி குளிக்கும் குளத்தில் ஆண்கள் குளித்தால் “பெண்ணாக மாறுவார்கள்” என்ற சாபத்தின் விளக்கம்

பாராசக்தி – பார்வதி ஒரு குளத்தில் குளி்த்து வருவது வழக்கம்.

ஆனால் அவர் குளித்த அந்தக் குளத்தில் வேறு யாராவது ஆண்கள் குளித்தால் அது பெண்களாக மாறிவிடுவார்கள் என்று சாபமிட்டதனால் “அந்தக் குளத்தில் யாரும் ஆண்கள் குளிப்பதில்லை”.

இப்படிக் காவியப் படைப்பைப் படைத்து அந்தக் கருத்தினை நாம் தெரிந்து கொள்வதற்காகத் தெளிவாக்குகின்றனர்.

குரங்கு அது தாவிச் செல்லும் நிலையானாலும் அந்தக் குளத்தில் விழுந்து விட்டது. இது ஆண் குரங்காக இருப்பதனால் அந்தக் குளத்தின் உணர்வுகள் இதன் மேல் பட்டுப் பெண்ணாக மாறி விடுகின்றது.

ஏனென்றால் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம்.

அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

இப்படி விழுந்த குரங்கு பெண்ணாக மாறிவிடுகின்றது. பெண் என்றால் சக்தி என்று பொருள். ஆகவே அது தனக்குள் கருவாக்கும் தன்மை பெற்றது என்பதனை உணர்த்துகின்றனர்.

நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத்தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.

நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது?

நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.

இப்படிப் பெண்ணாக மாறியபின் அதைக் கண்டு ரசிக்கின்றனர். யார்? வாயு. அதைக் கண்ட பின் எப்படியும் அதனின் அழகைக் கண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனை அணைத்துக் கொள்ள வேணடும் எனறு விரும்புகின்றது.

வாயு என்பது நாம் நுகர்வது வாயு (சுவாசக் காற்று), அதன் உணர்வின் தன்மை இங்கே நம் உடலுக்குள் சென்றபின் உமிழ் நீராக மாறுகின்றது.

வாயுவுனுடைய நிலைகள் எந்த குணத்தின் உணர்வோ அதனை எண்ணும்போது “அதிலே உருவான கரு தான்” என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

வேதனைப்படுபர்களைப் பார்த்து அந்த வேதனையான உணர்வை நாம் சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வுகள் வேதனை என்ற உணர்வைக் “கருவாக்கும்” உமிழ் நீராக மாறுகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்காக “இந்திரன்..,” இரண்டாவது வருகின்றான். இந்த அழகைக் கண்டு தானும் ஆசைப்பட்டு அதை அடைய விரும்புகின்றான்.

1.“இந்திரன்… என்றால் உருவாகும் உணர்வுகள்”
2.உமிழ் நீராக மாறி அது இந்திரீகமாக மாறுகின்றது.
3.இந்திரீகமாக மாறப்படும் போது அந்த வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது? என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளில் தெளிவாக்கியுள்ளார்கள்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கின்றேன்? நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை எல்லாம் நேராக துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்லுகின்றேன்.

இந்த உணர்வை எடுத்து எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடலில் எளிதில் சேர்த்துக் கொள்ள இது உதவும்.

உமிழ் நீராக ஆனதால் இந்திரன் என்றால் அவனுக்கும் இரண்டு பேருக்கும் (வாயு, இந்திரன்) சேர்த்துப் பிறந்தது தான்.

ஆகவே வேதனைப்பட்ட உணர்வுகள் வாய்வு. நமக்குள் நுகர்ந்த பின் அது உமிழ் நீராக மாறுகின்றது.

பின் இந்திரன் என்ன செய்தான்…? அதன் உணர்வு கொண்டு அதன் ஆசையிலேயே தான் (உடலாக) உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது என்பதனைக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்து விரும்பித்தான் எடுக்கின்றோம். ஆகவே.., அப்பொழுது நாம் ஆசைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறவேண்டும் என்று அதை ஆசைப்படுதல் வேண்டும்.

ஏனென்றால் வேதனையை நுகருகின்றோம். வாயுவாகின்றது. நம் உடலுக்குள் வரும்போது வாலியாகிவிடுன்றது. அந்த வலுவின் தன்மை உமிழ் நீராக மாறுகின்றது.

அந்த வலிமையான நிலைகளை மாற்றியமைப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்.

இதைப் போல் அந்தத் தீமைகளை நீக்கிய உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அது பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும். அது நமக்குள் கலந்து நம் உயிரிலே படுகின்றது.

நாம் குழம்பு வைக்கும் போது உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக மாற்றுவது போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இப்படி அதை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.

இப்படி நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேருளைப் பெறவேண்டும் என்று செலுத்தப்படும் போது
1.இங்கே புருவ மத்தியில் அந்த உயிரின் நிலைகளில் உள்ளே செல்லாது தடுப்பதும்
2.நம் உடலுக்குள் இரத்தத்தில் கலந்தபின் அந்த விஷத்தின் தன்மை நுகராது தடுப்பது தான் இந்த உண்மையான நிலைகள்.
3.தியானம் என்பது முறைப்படி இது தான்.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். பார்த்தபின் அவர்களை நல்லதாக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்குப் பொருளால் உடலால் வேண்டிய உதவிகளைச் செய்து நல்லதாக்கி விடுகின்றோம்.

ஆனால் நாம் நுகர்ந்த தீய உணர்வுகள் அதனுடைய வலிமையான நிலைகள் நமக்குள் நோயாக வந்து விடுகின்றது. அந்தத் தீமைகளை நுகர நேர்ந்தாலும் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது தடைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளில் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் சேரும் தீமைகளை “நாம் தடைப்படுத்துவதற்குத் தான்” ஞானிகள் இப்படி காவியங்களைக் கொடுத்துள்ளார்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்

Agastiya rishi.png

உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்

உங்கள் நண்பருக்கோ உறவினர்களுக்கோ நோய் என்று கேள்விப்பட்டால்.., “ஐயோ.., உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று வேதனைப்படாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள். உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த நோயால் வேதனைப்படுபவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெறும் ஆற்றல் அவருக்குள் வரவேண்டும். அருள் வழியில் அவர் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

ஒருவருக்குக் கடுமையான தலைவலியே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டு.., “ஒரு மரத்தில் அவர்களைக் கையை வைக்கச் சொல்லி.., உங்கள் தலைவலி நீங்கிப் போகும்..” என்று சொல்லுங்கள்.

தலைவலி நீங்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் “தீமையை நீக்கக்கூடிய.., சக்திவான்களாக” மாறவேண்டும்.

நான் (ஞானகுரு) சொன்னால் உங்கள் தீமைகள் போகின்றது. ஏன் நீங்கள் சொன்னால் மற்றவர்கள் தீமைகள் போகக் கூடாதா..,? நான் தான் செய்ய வேண்டுமா…?

நாம் அனைவருமே ஞானிகளாக உருவானால் “உலகிலேயே ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக.., நமது தமிழ்நாடு.., அந்த உயர்ந்த நிலையாகப் பெறும்”.

உலகைக் காக்கும் அந்த “அகஸ்தியன்” பெற்ற உணர்வை நாம் மீண்டும் வளர்த்து உலகில் உள்ள மக்களுக்குத் தெளிவான உணர்வுகளை ஊட்டும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

விஞ்ஞான நிலைகளால் இன்று இந்த உலகமே திசை திரும்பும் நிலைகள் வந்து கொண்டு வருகின்றது.

முன்பு ஒரு காலத்தில் இந்தப் பூமி ஒரு பக்கம் உறைபனியாக நீள வடிவாக வரப்படும் பொழுது தலை கீழாகக் கவிழும் தன்மை வந்தது.

அப்பொழுது அகஸ்தியன் தன் சக்தியினால் அந்த இடத்தைத் திருப்பி அது வரக்கூடிய திசையை மாற்றி அதன் உணர்வை உறையும் இடமாக்கி இதைக் கரைக்கச் செய்து கடலாக மாற்றி இன்றும் பூமியில் அவன் மாற்றி வைத்த நிலைகள் தான் நாமும் வாழ்கின்றோம்.

அன்று இந்தப் பூமி கவிழாது சமப்படுத்தியவன் அந்த அகஸ்தியனே. அதனால் தான் பின் வந்த ஞானியர்கள் அகஸ்தியனைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

1.அகஸ்தியன் உடல் வலிமையைக் காட்டவில்லை.
2.அவன் தன் “எண்ணத்தின் உணர்வின் ஆற்றலால்”
3.அகண்ட அண்டத்தையும் “எட்டிப் பிடிக்கும்..,” ஆற்றல் கொண்டவன் என்றும்
4.மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பதற்கே கூழையாகக் காட்டினார்கள்.

இப்பொழுது விஞ்ஞான அறிவால் உலகமே நச்சுத் தன்மை பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மனிதனின் சிந்தனை குறைந்து உருக்குலையும் நேரம் வரும் இந்த நிலையில் அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்த ஆற்றலின் துணை கொண்டு இந்தப் பூமியில் மக்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்தல் வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலைகளில் அன்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் ஆற்றலை எந்நாட்டவரும் பெறும்படி நாம் செய்ய முடியும்.

அப்பொழுது இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் ஆன்மாவும் தூய்மையாகின்றது. இந்தக் குறுகிய காலத்தில் நாம் இந்த வளர்ச்சி பெறமுடியும்.

1.இந்தப் பூமியையும் நம் உயிராத்மாவையும்
2.அந்த அகஸ்தியன் துணை கொண்டு
3.அவன் சென்ற வழியில் நாமும் சென்று
4.இந்த உடலுக்குப் பின் அனைவரும் ஒளியின் உடலாகப் பெறும் சக்தியை நாம் பெறுவோம்.

காணாமல் போகும் அல்லது காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்கும் உபாயம்…!

Lord krishna

காணாமல் போகும் அல்லது காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்கும் உபாயம்…!

ஒரு பொருளைக் காணாமல் போட்டால் என்ன செய்கிறோம்? எங்கே வைத்தேனோ..,? என்று தலையைச் சொறிகின்றோம்.

“எங்கே தான் வைத்தனோ..,?” என்று எண்ணினால் சங்கடம் தான் வரும்.

“கீழே பார்த்தீர்கள்..,” என்றால் என்ன நடக்கும்?

ஆன்மாவில் இருக்கும் அந்த உணர்வை அதை நுகரப்படும்போது நமக்கு என்ன செய்கிறது? அப்பொழுது சங்கடம்தான் வருகிறது.

ஆனால் அதே சமயம், “எங்கே வைத்தோம்?” என்று சிறிது நேரம் நம் சிந்தனையைச் செலுத்தினோம் என்றால் இந்த ஆன்மாவை விட்டு அகன்று புற நிலைகளில் நுகரும்.

இந்தச் சிந்தனையின் தன்மை வரப்படும்போது நாம் பொருளை வைத்த உணர்வின் தன்மை அங்கே படர்ந்திருக்கும்.

அந்த உணர்வை நாம் நுகர்வோம். அதை நுகரப்படும்போது.., “பொருளை நாம் இந்த இடத்தில் வைத்தோம்..,?” என்று உணர்ச்சி கொண்டு அதை அறியலாம்.

ஆனால், பொருளை எங்கே வைத்தோம் என்று “தெரியவில்லையே..!” என்று சங்கடமாக எண்ணிணீர்கள் என்றால் உங்களுக்குள் அந்த உணர்ச்சியே வராது. உணர்வை அறியவே முடியாது.

தலையைச் சொறிந்து கொண்டே இருப்போம்.

அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டால் “என்ன…, எதைத் தேடுகிறீர்கள்?” என்பார்.

ஒரு பொருளை வைத்தேன்.., எங்கே வைத்தேன் என்றே இப்பொழுது தெரியவில்லை..! என்போம்.

அவரும் நம்மிடம்.., எங்கே வைத்தீர்கள் என்பார்?

“இங்கே தான்.., வைத்தேன்” என்று வெறுப்பாகத் தான் சொல்ல முடியுமே தவிர.., தேடும் நிலையை ஞாபகப்படுத்தினாலும்.., “காணோம்…!” என்ற உணர்வே இயக்கும், சிந்திக்கும் திறன் இருக்காது.

பொருளை எங்கே வைத்தீர்கள்? வைத்துவிட்டு எங்கிருந்து (எந்த வழியாக) வந்தீர்கள் என்று சிறிது யோசனை செய்து பாருங்கள்..,! என்று சொன்னவுடன் அந்தச் சிந்தனை வரும்.

அங்கே படர்ந்த உணர்வலைகள்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வும்
2.கையிலிருந்து போன அந்த இரண்டு உணர்வும் கலந்து
3.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

அப்பொழுது அந்த உணர்வு வரப்படும்போது அந்த எண்ணங்கள் வரும்.

“ஆஹா.., இந்த இடத்தில் தான் வைத்தேன்..,” என்ற நினைவு வரும். “பொருளைத் தேடி எடுத்து விட்டேன்” என்று சொல்ல முடியும்.

ஆகவே, இதைத்தான் வியாசகர் கண்ணனைக் காட்டி “அதோ வருகிறான்..,” நாரதன்.., ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமான புத்திரன்.

அவனிடம் கேட்டால்.., “தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை அவன் காட்டுவான்” என்று கண்ணன் சொல்வதாகக் காவியப் படைப்புகளாகக் காட்டினார்.

“சாதாரண படிக்காத மக்களுக்கும்.., புரியும் விதமாகக் காட்டியுள்ளார்”.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளை சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி பரவச் செய்கிறது.

அதைத்தான் ரிஷியின் மகனாக நாராயணனின் (நாராயணன் என்றால் சூரியன்) அபிமான புத்திரனாக வியாசகர் காட்டியுள்ளார்.

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகி அகண்ட அண்டத்தில் வரும் எத்தகையை நஞ்சினையும் உணவாக எடுத்து ஒளியின் சுடராக பேரொளியாக மாற்றி என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டுள்ளது.

“நம் வாழ்க்கையில் தீமைகள் வரும்போழுதெல்லாம்..,”
1.நம் கண்ணின் நினைவுகள் எங்கே செல்ல வேண்டும்..?
2.எதை எண்ண வேண்டும்..?
3.எதை நுகர வேண்டும்..?
4.தீமையை நீக்கிடும் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்..,? என்று
5.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்க்கும் மார்க்கத்தைக் காட்டினார் “வியாசகர்”.

ஒவ்வொரு கால கட்டத்திலும்.., “நம் பூமியில் தோன்றிய ஞானிகள்” அனைவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்துத் தான் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அடைந்த நிலையை அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானியாக நாம் ஆகும் மார்க்கத்தைத்தான் வியாசகர் இவ்வாறு காட்டியுள்ளார்.

உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது…?

Image

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலில் எல்லா அணுக்களிலும் இணைகின்றது

நாம் சுவாசித்த அந்த அணுக்களின் தன்மை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் போய்விட்டுத்தான் வரும்.

ஆக, நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ, இவை அனைத்தும் நம் உடலுக்குள் அது உருவாகின்றது.

தீய உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால், அவை நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் மோதும் பொழுது, அதற்கு பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

நாம் அடிக்கடி கெட்டதையே சுவாசித்துக் கொண்டிருந்தால் உடலில் நோய் வருகின்றது.

சலிப்படையும் பொழுது நாம் மனம் சோர்வடைந்து பேசுகிறோம். ஒரு நெடியான வாசனையைக் கண்டவுடன் உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான், நாம் சுவாசிப்பது ஒவ்வொன்றும் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடன் அது நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது, சிறுகச் சிறுக மாசுபடும் நிலை வருகின்றது.

நாம் வாழ்க்கையிலே பல அசிங்கமான நிலைகளைச் சந்திக்கிறோம், அடித்தவனைப் பார்க்கிறோ, அடி வாங்கியவனைப் பார்க்கிறோம். அடிக்கடி சண்டை போடுபவர்களைப் பார்த்தால், நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகின்றோம்.

ஒருவன் பயத்தினுடைய நிலைகளில் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்தால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்..

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே போன்று காரம் அதிகமாகிவிட்டால் அதையும் நாம் வெறுக்கின்றோம். இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஆயிரம் கோடி நமக்குள் இருக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும். பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்கமுடியாது. நாம் நல்லது கெட்டது என்று பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துசேர்ந்துவிடும்.

அவ்வாறு நம் உடலுக்குள் சேரும் பொழுது, அன்றைய தினத்தில் எதையெல்லாம் பார்த்தோமோ அதற்குத் தகுந்த மாதிரித்தான் அன்றைய தினம் நமது செயலும் இருக்கும்.

உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது?

இரவிலே கண் வலி, காதில் வலி போன்ற நிலைகள் வரக் காரணமாகின்றது. ஒரு மோட்டாரில் கரண்ட் அதிகமாகிவிட்டால் அது சூடாகின்றது.

அதைப் போல கோபம், ஆத்திரம், பயம் போன்ற இந்த உணர்வுகளை நாம் அடிக்கடி இழுக்கும் பொழுது, ஒலிகளை சமமாக ஊட்டக் கூடிய அந்தக் காதுகளும் சூடாகி தேய்மானமாகி விடுகின்றது. அதனுடைய காந்தசக்தி குறைந்துவிடுகின்றது.

இதைப் போல சோர்வு, சஞ்சலம் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுக்கும் பொழுது கண்களில் இருக்கக்கூடிய கருவிழிகள் பலவீனமாகி, அதனுடைய இயக்கச் சக்தியினுடைய நிலைகள் குறைவாகும்.

நம் உடலில் நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகள் நம் உடலைச் சுற்றி இருக்கும் மேக்னட், அதாவது எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளில் நம் உடலுக்குள் கரண்டை உற்பத்தி செய்யக்கூடிய காந்தம் இருந்தால்தான் அந்த உயிரே துடிக்கும்.

காந்தம் குறைவாகிவிட்டால், இந்த உயிருக்குள் இருக்கக்கூடிய துடிப்பு கொண்டு உடலை விட்டு வெளியிலே இருக்கக்கூடிய காந்தத்தை இழுத்துக் கொள்ளும். இந்த உடலிலே விளைய. வைத்துவிடும். அதுதான் மரணம் என்பது.

உடலில் அந்தத் துடிப்பின் நிலைகள் காந்தம் என்று குறைவாகின்றதோ அன்று உயிராத்மா வெளியிலே சென்றுவிடும்.

“எல்லாமே அவன் செயல் தான்…!”

God exists

1.கோவிலுனுடைய தத்துவம் என்ன?

1.வெளிச்சத்தைக் காட்டும் பொழுதுதான் பொருள் தெரிகின்றது. ஆகவே, தெரிந்து உணர்வது வெளிச்சம். அதுதான் தீப ஆராதனை.
2.அந்த மணத்தை நுகரவேண்டும் என்பது துவைதம்.
3.சுவாசிப்பது அத்வைதம்.
4.பார்ப்பது சிவம்.
5.நாம் அதிலிருந்து எடுப்பது சக்தி.
6.சுவாசிக்கும் பொழுது சக்தியின் இயக்கம்.
7.என் உடலுடன் சேர்க்கும் பொழுது சிவம். இதுதான் “ஓம் நமசிவாய, சிவாய நம் ஓம்”.

ஓ…ம் என்பது சக்தி

சக்தியின் உணர்வின் வேகம் எதுவோ, அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஆகும் பொழுது, அந்த சக்தியின் நிலைகள் எனக்குள் உடலாக மாறுகின்றது – சிவம், “ஓம் நமச் சிவாய” நமதாக மாறுகின்றது.

நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அது உயிரிலே பட்டவுடன் “ஓங்காரம்” இயக்கம். அந்த உணர்வின் அலைகள் நமக்குள் சேர்ந்து, அது உமிழ்நீராக மாறி, நம் உடலுடன் சேர்க்கப்படும் பொழுது, “ஐக்கிய சிவம்” என்று இவ்வாறு பொருள்பட, அன்று சிவ சக்தியின் தன்மையை மெய்ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துவைதம் என்பது, பொருள் எதுவோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் கூட்ட வேண்டும். கோவிலிலே, அந்த மலரின் மணத்தை நாம் நுகரும் .பொழுது, அந்த மலரின் உணர்வின் மணம் “ஈசன்”.

அந்த மலரின் உணர்வின் சத்து உடலுடன் சேர்க்கப்படும் பொழுது, சிவனுக்கு “அமுது”. ஆக, ஈசனுக்கு மணம், இங்கே சிவனுக்கு அமுது.

கண் புலனறிவுக்கு, உடல், மற்றவைகளுக்கும் அந்த உணர்வின் இயக்கமே, நாம் அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைகள்.

இதைத்தான் ஒவ்வொரு பாகமாகப் பிரிக்கப்பட்டு உடலின் உறுப்பின் தன்மை செயலாக்கும் பொழுது அதற்கு தெய்வ வடிவைக் கொடுத்து, ஆற்றல்மிக்க பெயரைக் கொடுத்து வைத்தான் ஞானி.

ஒரு இயந்திரத்தை நாம் பார்க்கும் பொழுது, இது பல் சக்கரம், (gear, pinion, sprocket, chain) இது இன்னென்ன என்று பெயர் வைக்கிறோம். இதைப் போன்று, நம் உடலின் உறுப்பின் தன்மையின் செயலாக்கத்திற்கு, சக்தியின் நிலையும், ஒவ்வொரு குணத்தின் ஆற்றலினுடைய நிலைகளுக்கு அன்று மெய்ஞானிகள் பெயர் வைத்தார்கள்.

2. ஆண்டவன் காணிக்கை கேட்கின்றானா?

ஆனால், இதை விடுத்துவிட்டு தெய்வம் எங்கேயோ இருக்கிறது என்ற நிலைகளில், மொட்டை போடுகின்றேன், அதைக் கொடுக்கின்றேன், இதைக் கொடுக்கின்றேன் என்று நமக்குள் வேண்டி வருத்தி, நம்மையறியாத நிலைகளில் நம்மைத் தாழ்த்திக் கொள்கின்றோம்.

முடிகொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, முடி கொடுக்கப் போக முடியவில்லை என்றால், ஜோசியக்காரனிடம் செல்கிறார்கள்.
1.“ஆண்டவனுக்கு நீ வேண்டியிருக்கின்றாய்… காணிக்கையைச் செலுத்தவில்லை,
2.அதனால்தான் துன்பம்” என்பார்.
3.ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தாதினால், துன்பத்தை உண்டாக்கி உன்னை வரவழைக்கின்றார் என்பார்.

இவைகளெல்லாம், நமக்கு வேண்டாத வேலைகள். ஆக, ஆண்டவன் என்பது யார்?

3.“எல்லாமே அவன் செயல் தான்” என்றால் என்ன அர்த்தம்?

நம் உயிர்தான் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றது. ஆனால், அவனன்றி ஒரு அணுவும் அசையாது. இந்த “உயிர்” உடலில் இல்லையென்றால் எது அசையும்?

நாம் என்ன செய்கின்றோம்? அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று விண்ணைக் காட்டுகின்றோம்.

“அவனன்றி அணுவும் அசையாது” என்று சுருக்கமாகச் சொற்றொடர்களைச் சொன்னால், நாம் வானத்தைக் காட்டி, “எல்லாமே அவன்தான்” என்கிறோம்.

அவன் உடலுக்குள் இருக்கின்றான். இங்கே உடலை இயக்குகின்றான் என்ற நிலையை, அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

அன்று அண்டத்தினுடைய நிலைகள் செயலாக்கினாலும், அண்டத்தினுடைய நிலைகள் பிண்டத்திலிருந்து உணர்வின் இயக்கமாக இயங்குகின்றது. நினைவு கொண்டு அது இயக்குகின்றது.

அந்த உணர்வு சந்தர்ப்பத்தாலே இயங்குகின்றது. அதைச் சந்தர்ப்பத்தாலேதான் இயக்க முடியும். அதே சமயத்தில், சந்தர்ப்பத்தை ஊட்டும் தன்மை மனிதனுக்கு உண்டு. சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அது (அண்டம்) சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. அது போகும் பாதையில் சந்தர்ப்பங்கள், சந்திக்கும் நிலையில்தான் உருமாற்றம், இன மாற்றம், மற்ற மாற்றம் எல்லாமே.

நம்முடைய ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் நமக்கு வேண்டியதை நம் உடலுக்குள் மாற்றிக் கொள்ள முடியும். ஆக, இத்தகைய ஆற்றல், இந்தப் பிண்டத்திற்குள் (நம் உடலுக்குள்) இருக்கின்றது.

அன்று மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை, தெய்வச் சிலையாகக் காட்டி, அந்த மணத்தை எடு என்று, அந்த குணத்தைக் கதையாகக் காட்டி உன் உணர்வுக்குள் சேர்த்துக் கொள் என்றார்கள். இந்தத் தெய்வம் நல்லது செய்கிறதென்றால், அந்த குணத்தை நுகர்ந்து, நல்லது செய்யக்கூடிய நிலைகளை எடு என்றார்கள்.

ஆகவே, அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி, நாம் அனைவருமே அந்த தெய்வ குணத்தைப் பெறுவோம், தெய்வ சக்தியை வளர்ப்போம்,