மனிதனாகப் பிறந்த நாம் செலுத்த வேண்டிய காணிக்கை…

Siva family.jpg

மனிதனாகப் பிறந்த நாம் செலுத்த வேண்டிய காணிக்கை…

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை  நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

1.அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்?
2.அவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை என்ன” என்பதை ஞானிகள் விநாகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்,

என்னை வளர்ப்பதற்காக அவர்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகளால் உருவான நஞ்சுகள் அனைத்தும் நீங்க வேண்டும். அவர்கள் உடல்களில் உள்ள தீய வினைகள் அனைத்தும் அகல வேண்டும்.

என் அன்னை தந்தையர் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வின் தன்மையை ஓங்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.விநாயகர் சிலையை நாம் பார்த்து
2.இத்தகையை வினைகளை நமக்குள் சேர்த்து
3.இதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
4.தாய் தந்தைருக்குக் காணிக்கையாகச் சேர்க்கும்படி விநாயகர் தத்துவத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.

எங்கள் அன்னை தந்தையர் குருவாக இருந்து காட்டிய நல் வழியில் நாங்கள் செயல்பட வேண்டும்.

அவர்கள் காட்டிய பாதையில் மகிழ்ந்திடும் நிலைகள் நாங்கள் பெறும்போது “எங்கள் செயலைக் கண்டு…, என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட வேண்டும்.., ஈஸ்வரா” என்று உயிரை வேண்டுதல் வேண்டும்.

நம் அன்னை தந்தையருக்கு இதைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.
1.குருவின் காணிக்கை அதுதான்.
2.தெய்வத்திற்குப் பணிந்து செய்வதும் அது தான்.
3.கடவுளுக்குச் செய்யும் சேவையும் அது தான்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையர் மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா…! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

Leave a Reply