ஞான சக்தி

ஞான சக்தி

 

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். தியானம் எடுத்தவர்கள் “தொழிலில் நஷ்டம்…” என்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
1.சிறிது நேரம் இப்படி எடுத்துச் சிந்தித்தீர்கள் என்றால் “நஷ்டம் எதனால்…?” என்ற அந்த ஞானம் வரும்.
2.அதிலே எந்தக் குறைபாடு இருக்கின்றதோ அதைத் திருத்தி அமைக்கக்கூடிய சக்தி வரும்.

ஐயோ… நஷ்டமாகி விட்டது நாளை என்ன செய்யப் போகின்றோம்…! என்று பதட்டத்தை அங்கே கொடுத்து விட்டால் நல்ல சிந்தனை வராது.

தொழில் வகையில் நாம் வளர்கின்றோம் என்றாலும் கூட சிறிது நஷ்டம் ஆனால் தியானத்தில் வளர்ந்து வரும் பொழுது நஷ்டத்திற்காக நாம் இந்த தியானத்தைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால் அந்த உயர்ந்த உணர்வு வலுவாகும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்கிற பொழுது அது வலுவாகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்கி அனைத்தையும் சீர்படுத்தும்.

1.எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
2.தீமைகளைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.

கண்ணிலே தான் பார்க்கின்றோம்… நினைக்கின்றோம்… இழுத்து மூக்கு வழி சுவாசித்து உயிரிலே படுகின்றது. இதே கண்ணின் நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும்படிச் சொல்கின்றோம்.

அதே கண்ணின் நினைவு கொண்டு கவர்ந்த சக்தியை உயிரிலே இணைக்கின்றோம். இணைத்தவுடனே அங்கே வலுப்பெறுகின்றது.

1.மற்றவர்கள் சங்கடமான வெறுப்பான இந்த உணர்வுகள் பதிவாகி இருந்தாலும் உள்ளே செல்லாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.
2.இப்படி அதை முதலில் நிறுத்திப் பழக வேண்டும்… அது நம்மை இயக்கிவிடக் கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே நிலை நிறுத்திப் பழக வேண்டும். கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளே கொண்டு போக வேண்டும்.

தியானத்தில் உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி நாம் நாம் பழக்கத்தைச் செய்து வைத்திருக்க வேண்டும்.

சந்தர்ப்பங்களில் அதை எடுத்து வரிசைப்படுத்தி நம் உடலில் எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று வலு கொடுக்க வேண்டும்.
1.அதாவது அந்த நேரத்திலே எச்சரிக்கை செய்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே வலுவை ஏற்றும் பொழுது
3.நமக்குள் எந்தத் தீமையும் உள்ளே புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் வேதனையோ வெறுப்போ நஷ்டமோ கஷ்டமோ இது எல்லாம் வாலி… சக்தி வாய்ந்தது…! ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.

தீமை வருகிறது என்று அதன் மேல் இச்சைப் பட்டால் அது வலிமை கூடி விடுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக வேதனையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்பட்டால் உயிரில் இணைகின்றது. அந்த உணர்வு கிரியை.

உயிரிலே பட்டவுடன் உடல் முழுவதும் சென்று அந்தச் சக்தி கிரியை ஆகிறது.
1.அகஸ்தியன் எப்படித் தீமையை நீக்கித் துருவ நட்சத்திரமாக ஆனானோ அந்த உணர்வின் ஞானமாக நம்மை இயக்கத் தொடங்கும்.
2.அது தான் ஞான சக்தி… ஆகவே தீமை புகாது தடுத்துக் கொள்கிறோம்.

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் சர்வ சாதாரணமாகச் செயல்படுத்தலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் இரத்தத்தில் வலுவாக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் இரத்தத்தில் வலுவாக்க வேண்டும்

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியிலும் தியானம் என்பது பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால் “அதை நாம் திரும்ப எண்ணுவது தியானம் தான்…”

ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று அதை ஏங்கித் திரும்பத் திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.

பிறர் கஷ்டப்படும் உணர்வை நமக்குள் வராமல் தடுக்கலாம்.

வேதனைப்படுவோரைக் கேட்டு உணர்ந்தபின் நமக்குள் வராது தடுக்க வேண்டுமென்றால் இதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை இதே போல முறைப்படுத்தி நம் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்தி விட்டால் “உண்மையான தியானம் இது தான்…”
1.வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும்
2.தீமையைப் புகாது தடுத்தல் வேண்டும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்
4.நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அதைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.

காரணம் ஒருவர் கோபப்படுகிறார் என்ற உணர்வை நாம் அடிக்கடி நுகர்ந்தால் நமது உடலிலே இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது.

இரத்தக் கொதிப்பு ஆவதற்குக் காரணமே சந்தர்ப்பத்திலே நாம் நுகர்ந்த உணர்வுகள்… அந்தக் காரமான உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அணுவாக உருவாகி விடுகின்றது.

ஒரு அணு உருவாகி விட்டால் அது மீண்டும் தன் உடலிலே பல அணுக்களை உருவாக்கி நமக்குள் இரத்தக் கொதிப்பின் தன்மையைக் கொண்டு வந்து விடுகின்றது.

இப்படி ஆகாதபடி ஒருவர் கோபப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்றும் எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தத்திற்குள் காரமான உணர்ச்சியை இயக்கும் அணுவாக உருவாவதற்கு முன்
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முந்திச் செலுத்தி விட்டால்
2.நம் இரத்தத்தில் உள்ள அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்கிறது
3.அந்தக் காரமான உணர்வுகள் வந்தாலும் அதைத் தணித்து விடுகின்றது.

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அதை நாம் குழம்பிலே கலக்கப்படும் பொழுது அது எல்லாவற்றுடன் கலந்து சுவையாக மாற்றுகின்றது.

இதைப் போல நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிந்து கொண்டாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி இத்தனையும் விஷத்தை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய அதனின்று வரும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமது இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வீரியமடைகின்றது… தீமைகள் வராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்தத் தியானத்தின் அருளை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் இதையே தியானமாக்கிக் கொள்ளுங்கள்.

1.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்து அறிய நேர்ந்தாலும்
2.அந்தக் கொடிய உணர்வுகள் உங்களிலே வளராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களை அந்த வலுவான அணுக்களாக மாற்றி அமைக்க முடியும்.

மனிதன் ஒருவனால்தான் இதைச் செய்ய முடியும்…!

நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நமது சகஜ வாழ்க்கையில் ஒருவன் தீய செயலைச் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது அதனின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் பதிவாக்கி விட்டால் பின் “அவன் தீய செயல்களைச் செய்கின்றான் செய்கின்றான்…” என்று அடிக்கடி எண்ணும்போது அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அவன் எந்தத் தீய செயலைச் செய்தானோ அதையே நாமும் செய்யக் கூடிய தன்மை வந்து விடுகின்றது.

அப்போது தியானத்தில் உட்கார்ந்தால்
1.இது முடியலே… அது முடியலே… உட்கார முடியலே…! என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதான் வளரும்.
2.எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள்.
3.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப் பெறும் பொழுது உங்களைச் சும்மா இருக்க விடாது.
4.அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும்.
5.இந்த உணர்வு வரும்போது பிறர் தீமைகளை அகற்றும் வலிமை பெறுகின்றோம்… தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப்பின் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையில் முழுமை பெற வேண்டும்.

நமது குருநாதர் காண்பித்த அருள் வழியில் “துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும்” என்ற உணர்வை மட்டும் நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும்,
1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்தையும் இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும் அறியும் தன்மை வரும்.
2.தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ அதன் உணர்வை வளர்த்து அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான் இந்த உடலை இயக்குகின்றது.

சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளை நாம் நுகரப்படும்போது தீமையான அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

ஆனால் தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி விட்டால் அதன் தன்மை கொண்டு தீமைகள் வராது காக்கும் நிலையினை நம்முள் உருவாக்குகின்றது.

இன்று ஒரு விஞ்ஞானி ஒரு உயிரினத்தின் செல்களை எடுத்து மற்றவைகளுடன் இணைக்கும் நிலையாகக் கட்டாயப்படுத்தித்தான் திணிக்கின்றான்.

1.இதன்படி இந்த உயிருடன் இணைத்துக் கொண்டபின் இதனின் ரூபமே மாறுகின்றது.
2.இப்படி ஆட்டை மாடாக்குகின்றான்… மாட்டை ஆடாக்குகின்றான்… எத்தனையோ வகைகளில் செயல்படுத்துகிறான்.
3.இப்படி ஒவ்வொன்றிலும் “கட்டாயப்படுத்தியே திணிக்கின்றான்…”

நாம் பள்ளிக்குச் செல்கின்றோம்… டாக்டருக்குப் படிக்கின்றோம். அங்கே எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்திக் காண்பிக்கின்றனர்.

ஆனால்… தானே கட்டாயப்படுத்திப் படிக்க வேண்டும்… பார்க்க வேண்டும் என்ற உந்துதல் கொண்டு எவர் செயல்படுகின்றனரோ அவரே உயர்ந்த டாக்டர்களாக ஆகின்றார்கள்.

ஆனால் படிக்கும் பொழுது “இது என்னடா… சங்கடமாக இருக்கிறது…?” என்ற உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நிச்சயம் சங்கட டாக்டராகத் தான் வருவார்.

டாக்டரான பின் முதல் இரண்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தபின் மூன்றாவது நோயாளியைப் பார்க்கும் பொழுது இவரை அறியாமலேயே சலிப்பு வந்துவிடும். இந்த உணர்வு கலந்தபின இவர் பார்க்கும் வைத்தியமெல்லாம் சீராக இருக்காது.
1.எனவே நாம் கட்டாயப்படுத்தித்தான்
2.அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் தியானித்தல் வேண்டும்.

ஒரு விஞ்ஞானியோ இன்ஜினியரோ ஆராய்ச்சி என்ற தத்துவத்தில் வரப்படும்போது “இதைப் பெற வேண்டும்” என்று கட்டாயப்படுத்தி ஆராய்ச்சி செய்து உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருகின்றனர்.

இப்படி வலுகொண்ட உணர்வு கொண்டு ஆராய்ச்சிகளைச் செய்யும் பொழுது தான் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறுகின்றது. இதன் வழி கொண்டு அகண்ட அண்டத்தையும் ஆய்ந்தறியும் நிலைகள் வருகின்றது.

ஒரு விஞ்ஞானி ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான் என்றால் அவருடைய மாணவன் அதைவிட ஒன்றைப் பெற வேண்டும் என்று தன் உணர்வை வலுபெறச் செய்யும் பொழுது அவன் குரு கண்டறிந்ததை விட அதிகமான ஒன்றைக் கண்டறியும் நிலை வருகின்றது.

இப்படி வளர்ந்ததுதான் விஞ்ஞானம்.

இதைப் போன்று நமது குரு காண்பித்த அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நாம் நமக்குள் பெறும் பொழுது
2.அகண்ட அண்டத்தின் பேருண்மையின் தன்மைகளை அறியும் ஆற்றல் பெறுகின்றோம்.

நமது உணர்வின் தன்மையே நமக்குள் ஒளியாக மாற்றும் பொழுது மிகவும் உயர்ந்த நிலைகளை நாம் பெறுகின்றோம்.

நமது உயிருக்கு என்றும் அழிவில்லை. உணர்வுகள் மட்டுமே மாறிக் கொண்டே உள்ளது. ஆகவே நாம் இன்று மனிதனாக இருக்கிறோம். இந்த மனித உடலில் விஷமான உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால் உயிர் அடுத்த சரீரத்தை விஷப் பாம்பாக மாற்றிவிடுகின்றது.

அருள் ஒளி என்ற உணர்வினை நம் இந்திரலோகத்திற்குள் உருவாக்கி நம்முள் ஏகாந்த நிலை கொண்டு சொர்க்கலோகத்தை உருவாக்கலாம்.

இதை நாம் நம்முள் கட்டாயப்படுத்திச் செயலாக்க முடியும். மனிதரால் இது சாத்தியமாகக் கூடியதே…!
1.சிறிது காலம் இந்த உணர்வின் தன்மையை நம்முள் வளர்த்தால் இந்த உணர்வுகள் நமக்குள் சொர்க்கபூமியாக மாற்றும்.
2.நம் உயிரைச் சொர்க்க வாசலாக அமைக்கலாம்.
3.உயிருடன் ஒன்றி உயிரின் வழி கொண்டு நமக்குள் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்கி
4.என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையை அடையலாம்.

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

 

சிவ சக்தியாகக் கணவன் மனைவியாக எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருகின்றீர்கள்… உபதேசத்தையும் கேட்கின்றீர்கள்… தியானமும் இருக்கின்றீர்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால்… தனித்த நிலைகள் வருவோர் சிலர் எம்முடைய நுண்ணிய உபதேசங்களைக் கேட்கப்படும் பொழுது
1.மனைவி தன் அருகில் இல்லை என்றாலும்
2.இந்த உபதேசக் கருத்துக்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணினீர்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

ஆனால் யாம் உங்களிடம் இதை முதலில் சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்ன…?

மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இந்தச் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தன் மனைவி பெற வேண்டும்… தன் தாய் தந்தையர் அது பெற வேண்டும்… அவர்கள் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…? யாரும் நினைத்திருக்க மாட்டீர்கள்…!

மற்ற நேரங்களில் எல்லாம் எண்ணுகின்றோம். இருந்தாலும் சாமி இங்கே வந்திருக்கின்றார் அவருடைய உபதேசத்தை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்திலே சாமியை எண்ணும் பொழுது அதை மறந்து விடுகின்றீர்கள்.
1.சாமி மேலே ஞாபகம் இருக்கின்றது.
2.ஆனால் தன் மனைவி தாய் தந்தையர் பற்றி எண்ணம் இல்லாது போய் விடுகின்றது.

சாதாரணமாகத் தியானிக்கும் போது எல்லோரையும் எண்ணுவீர்கள். ஆனால் “சாமி இங்கே உபதேசிக்கின்றார்…” என்று அதை மட்டும் தான் எண்ணுகின்றீர்கள்.
1.ஆனால் இந்த மாதிரி நேரங்களில் இதை மாற்றிப் பழக வேண்டும்.
2.நீங்கள் தனியாகக் கேட்டாலும் உபதேசத்தைக் கேட்டுத் தியானிக்கும் பொழுது
3.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் என்ன வேண்டும்.
4.அந்த அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
5.அந்த அருள் ஞானத்தை எனக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.

இதே போல மனைவி மட்டும் எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானித்தால் அவர்களும் இதே போன்று கணவனுக்கு எண்ண வேண்டும். அவர்களும் இதைப் போன்ற பழக்கத்திற்கு வந்தால் “எங்கிருந்தாலும் இந்த சக்தி உங்களுக்கு உறுதுணையாக அமையும்…”

சாமி என்ற நிலை வரும் போது சாமியை மட்டும் தானே நினைவு கொண்டு எண்ணுகின்றீர்கள்… அதை உங்களுக்குள் பதிவு செய்கிறீர்கள்.

இப்பொழுது சொல்லி உங்கள் நினைவாற்றலைத் தூண்டி அதைப் பதிவு செய்கின்றோம்.
1.ஆகவே எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இச்சைப்பட்டு அவசியம் அதை இணைத்துப் பழக வேண்டும்.
2.இச்சா சக்தி கிரியா சக்தி என்ற நிலைகளுக்கு வளர்ச்சிக்குக் கொண்டு வர வேண்டும்.

மனைவி பெற வேண்டும் என்றும் கணவன் பெற வேண்டும் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் “உயர்ந்த உணர்வுகள் கிடைக்கும் போதெல்லாம் இச்சைப்பட்டு வர வேண்டும்…”

ஆக இணைந்த நிலைகளிலேயே கிரியை ஆக்கிச் செயல்பட்டு கொண்டு வர வேண்டும். இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்குத் தான் இதை இப்பொழுது ஞாபகப்படுத்தி உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

 

ஒரு பயிற்சி:-
ஆறாவது அறிவின் உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட “முருகனின் காட்சியைக் காண வேண்டும்…” என்று வானை நோக்கி உற்றுப் பார்த்து உங்கள் நினைவினைச் செலுத்துங்கள். சிறிது நேரம் மேல் நோக்கிப் பாருங்கள்

அந்த அலைகள் குவிந்து உங்களுக்கு முருகனாகக் காட்சி தெரியும்..

பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்குள்
1.எந்தெந்த முருகன் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாகப் பரவப்பட்டதோ
2.அதை மீண்டும் நாம் குவிக்கப்படும் பொழுது இந்த உருவத்தை நாம் காண முடியும்.

அதாவது… டிவிக்களில் எப்படிப் படக்காட்சிகளைக் காணுகின்றோமோ… அதே போல்… மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது அலைகள் குவிந்து முருகனாகக் காட்டும்.

எதற்காக இதைச் சொல்கிறோம்…?

அன்று வாழ்ந்த அகஸ்தியரும் வியாசகரும் வானுலக ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து உடலில் அதைப் பெருக்கப்பட்டு அந்த உண்மையின் உணர்வுகள் அருள் ஞான ஒளியாகப் படர்ந்திருப்பதை
1அதை எண்ணி நுகரப்படும் பொழுது வியாசகர் கண்டதை நாம் காண முடியும்.
2.விஷத் தன்மையால் நம் பூமி சுழல்வதும்
3.துருவப் பகுதி வழி விண்ணுலக ஆற்றலைக் கவர்வதும் அதனால் தனக்குள் மாற்றம் அடைவதையும்
4.தாவர இனங்களாக உருப்பெற்றதையும் அதை எடுத்து உயிரினங்கள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதையும் நீங்கள் காண முடியும்.
5.மேரு என்ற மலையை மத்தாக வைக்கப்பட்டு என்று சொல்லும் பொழுது
6.மேலே சொன்ன பூமியின் இயக்கத்தைக் காட்சியாகத் தியானம் செய்யும் பொழுது பார்த்திருக்கலாம்.

இவையெல்லாம் அன்று வியாசகரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள்.

காரணம்… அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகளை வியாசகர் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களை உணர்ந்ததை
1.அக்கால மொழி கொண்டு அதனை வெளிப்படுத்திய உணர்வுகள்
2.அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி உணர்வினை ஒளிச் சரீரமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

துருவ மகரிஷியாகும் பொழுது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பாய்ச்சி இருவரும் அதைப் பரிமாறிக் கொண்ட நிலையை அவர்கள் உடலில் விளைந்த அலைகள் இங்கே பாய்ந்து கொண்டிருப்பதை நாம் காண்போம்.

மீண்டும் வானை நோக்கி உற்றுப் பாருங்கள்..!

அகஸ்தியன் துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில்
1.கணவனும் மனைவியும் துருவத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
2.ஒருவருக்கொருவர் என்று ஏங்கிய உணர்வுகள் அது பரவி வரும் பொழுது
3.அந்தக் காலத்தில் வாழ்ந்த “அவர்கள் இருவரின் உடல் அமைப்பு…” அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக இருவருக்குள்ளும் இணைந்து இந்த உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாகி எந்த எல்லையில் நிலை கொண்டார்களோ
1.அங்கே சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்ற உணர்வை நீங்கள் காணலாம்.
2.அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி ஒளி சரீரமாக இணைந்து துருவப் பகுதிக்குச் சென்றதை நீங்கள் காணலாம்
3.துருவ நட்சத்திரமாக ஒளியாக இருப்பதையும் காணலாம்.

இப்பொழுது இதைக் கண்டவர்களும் சரி… மற்றவர்களுக்குள் பதிவானதும் சரி… அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற நினைவுடன் இரவிலே நீங்கள் படுத்து உறங்கினால்
1.அந்த உணர்வுகள் கிளர்ந்து உயிருடன் ஒன்றி உங்களுக்குள் பெருகி
2.அதனின் ஆற்றலை உங்கள் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி என்ற நிலையில் அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு அதைக் கவர்ந்து வீட்டிலேயே அதைக் காணும்படிச் செய்கின்றார்கள்.

அதைப் போலத் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலிலிருந்து வெளி வந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வினை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவினை எடுக்கும்படிச் சொல்லி
2.அதனின் அருள் ஞான வித்தாக இதைக் கேட்போர் உணர்வுகளில் ஊழ் வினையாகப் பதிவு செய்து
3.வினைக்கு நாயகனாக வளர்ந்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.காற்றில் படர்ந்திருப்பதை அதன் வளர்ச்சியாகக் கவர்ந்து அந்த உணர்வினை கண் புலனறிவிலே காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக்காட்சிகளாக உங்களுக்குத் தெரிய ஆரம்பித்தால்
1.திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது
2.அந்த உருவங்கள் தெரிந்தால் அதைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களும் பலர் உண்டு… பயந்து விடுவார்கள்.

ஆகையினால்… அந்த உணர்வின் தன்மை “அப்படிக் காட்சியாகக் கிடைக்கக் கூடாது…” என்பதற்கும் ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வை “ஒளியின் உணர்வாக…” உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைச் செயல்படுத்துவது.

சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எண்ணவே வேண்டியதில்லை. “நாம் காண வேண்டியது அந்த ஒளியான உணர்வுகள் தான்…”

அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் திறன் பெறுவது தான் நம்முடைய கடைசிக் கடமை. இதை எல்லாம் நீங்கள் அனைவரும் பெறுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

முந்தி எல்லோருக்கும் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில உண்மைகளை அறியும்படியும் செய்தேன் புவியின் ஈர்ப்புக்குள்.
1.ஆனால் அதனுடைய பலன் மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது.
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

அவ்வாறு ஆகாதபடி உங்களுக்குள் மெய் ஒளியைப் பெறும் ஆற்றலாகத் தான் அதை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலம் கடும் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது… அதை மனிதன் நுகர்ந்து சிந்தனையற்றவனாக ஆக்கும் நிலைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… அதிலிருந்து நம்மை மீட்டி நம் சிந்தனையை விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது நம் அருகிலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் வரும் போது மனிதன் தீமைகளிலிருந்து விடுபட
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் தன்னைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இது உதவும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தது.

போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது… “ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது…”

போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது… “ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது…”

 

பல செடிகளின் உணர்வுகள் காற்றிலே படர்ந்து வரப்படும் பொழுது… சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எதன் அளவுகோல் அதிகமாக ஏற்கின்றதோ அது கருவாகி ஒரு வித்தாகிறது.

மனிதனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் கொண்டு மற்றவர்கள் தீமை விளைவிக்கும் செயல்களை உற்றுப் பார்க்கப்படும் போது
1.அது நம் நல்ல குணத்துடன் இணைந்து விட்டால் அடுத்து இந்த உணர்வின் இயக்கம்
2.எங்கே சண்டை போடுகின்றார்களோ அதை எல்லாம் பார்க்கும்படி செய்யும்.
3.அடிக்கடி அதனை எண்ணினால் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அது விளையும்.

ஒருவன் கொடூரமான செயல்களைச் செய்கின்றான் என்று பார்த்து அவனை வெறுக்கின்றோம். நல்லதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் இருந்தாலும் அந்தக் கொடூர உணர்வுகள் அந்த நல்லதுடன் இணைந்த பின் “நல்ல உணர்வைக் காக்கக் கொடூரச் செயலைச் செயல்படும் உணர்வுகள்” நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஆன்மாவிலே இது அதிகமாகப் பரவப்படும் பொழுது இந்த உணர்வின் செயலாக்கமாக இது உருவாக்கப்பட்டு அதனின் உணர்வின் குணங்கள் நமக்குள் விளைகின்றது.

இதைப் போலத் தான்
1.தினந்தோறும் அடிக்கடி… மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களைக் காத்திடும் உணர்வுகளில் இணைத்துக் கொண்டே வருகின்றோம்.
2.உங்கள் வாழ்க்கையில் இடர்படும் உணர்வுடன் எமது உபதேச உணர்வுகள் இடைமறித்து இணைக்கப்பட்டு
3.அந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு அதிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைத்து இணைத்து
4.தாவர இனங்களுக்கு உரமிடுவது போல உங்கள் நல்ல எண்ணங்களைக் காத்திட… அதை இணைத்து இணைத்துப் பதிவு செய்கின்றேன்.

அப்படிப் பதிவு செய்த நிலைகள் கொண்டு உங்களுக்குள் அது வளர்ச்சியாகும்.

ஒரு செடி தழைத்து வளர்ந்தாலும் அது குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றது. ஆனால் அதற்குள் விளைந்த வித்துக்கள் அந்தச் செடி மடிந்தாலும் விளைந்த வித்து காற்றிலே கலந்திருக்கும் தன் இனமான சத்தைக் கவர்ந்து இனத்தை மீண்டும் பெருக்குகின்றது. அது மடிவதில்லை…!

ஆனால் வித்து முழுமையாக மடிந்து விட்டால் செடியை மீண்டும் நாம் கொண்டுவர முடியாது.

இதைப்போல நமக்குள் இருக்கும் தீமையான உணர்வின் சத்தை முழுமையாக மடியச் செய்ய முடியும். அருள் ஞானிகள் உணர்வை இணைத்து விட்டால் தீமைகள் மறைகின்றது. முளைக்காத நிலைகள் தடைப்படுத்த முடியும்.
1.தடைப்படுத்தும் அந்த அருள் ஞானிகள் உணர்வைத் தான் உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.
2.அவ்வாறு இணைத்திடும் நிலைகள் கொண்டு தீமைகளுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்திக் கொண்டிருந்தால் அது விளையாது.

ஒரு மனிதன் நம் மீது கோபப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். இரு நான் உன்னை என்ன செய்கின்றேன்…? என்ற நிலையில் அந்த உணர்வினை எனக்குள் இணைத்து விட்டால் என்னை இப்படிச் சொன்னான்… சொன்னான்…! என்று அதுவும் சேர்ந்து வளர்கின்றது.

அவனை அழித்திடும் உணர்வே செல்கிறது. நம்மைக் காத்திடும் நினைவுகள் நமக்குள் வளர்வதில்லை. அவ்வாறு காத்திடும் நிலைகளை இழந்து அழித்திடும் நிலையாகச் சென்று விட்டால் தனக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கு ஊட்டம் கொடுக்காது அதைத் தடைப்படுத்தி விடும்.

அழித்திடும் உணர்வுகளே மேலோங்கி மற்றொன்றை அழித்து உணவாக உட்கொள்ளும் மிருக உணர்வுகள் இங்கே விளைந்து விடும். உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்க நேரும்.

அதே சமயம் மகரிஷிகள் மனித உடலிலேயே இருளைப் போக்கி ஒளியின் தன்மையாகச் சேர்த்து வளர்த்துக் கொண்டவர்கள். அதை இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.

சிறிது காலத்திற்கு உங்களுடைய நினைவை
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி
2.பதிவான உணர்வின் சக்திக்கு ஊட்டம் கொடுத்து அதனை நாம் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
3.அவ்வாறு சேர்த்தால் சிறிது காலத்தில் கவரும் சக்தியை அது பெற்றுவிடும்.
4.அவ்வாறு பெற்று விட்டால் நமது ஞானம் அதன் வழியிலேயே செயல்படுத்தும்.

செடிக்கு… அதற்குண்டான சத்தான நிலைகள் கொடுத்து உரமிட்டு அந்த வித்தினைத் திறன்பட உருவாக்கி விட்டால் அதை ஊன்றினால் மீண்டும் அதனுடைய இனமாக அது வளரத் தொடங்குகிறது.

இதைப் போலத்தான் அருள் ஞானிகளுடைய வித்தினை உரமாக உங்களுக்குள் இடப்பட்டு… உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் இணைக்கச் செய்து வளர்க்கின்றோம்.

அதிலே உங்கள் நினைவு கூர்மையாக இருந்தால் தான் அது நன்றாக முளைத்து வளரும்.

மேலெழுந்த வாரியாகப் போட்டுவிட்டால் எறும்புகளோ மற்ற பறவைகளோ தின்றுவிடும்.
1.கேட்ட உபதேசங்களை மேல் மட்டத்தில் மட்டும் ஆகா…! என்று போற்றி விட்டால் அது முளைக்காது.
2.போற்றுதலை விடுத்து விட்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தினைக் கொண்டு வந்தால் அது நன்கு வளர்ச்சி பெறும்.

போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது. ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது.

இதைக் கேட்டுணர்ந்தோர் எந்த அளவுகோல் கொண்டு நீங்கள் இதை ஏற்றுக் கொள்கின்றீர்களோ அந்த அருள் ஞானிகளின் வித்துக்கள் உங்களுக்குள் இணைந்து அதன் சத்தைக் கவரும் நிலையாக வளர்ச்சி பெற்று… உங்களுக்குள் நல்ல முறையில் இது பலன் தரும்.

சாமியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் புகழ்ந்த நிலைகள் கொண்டு ஏற்றுக் கொள்ளும்… கவர்ந்திடும் நிலையற்றுப் போய்விடும்.

1.தனக்குள் கவர்ந்திடும் அந்த நிலை இருந்தால்தான் அது ஆழப் பதியும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அந்த ஞானிகள் உணர்வினைக் கவர முடியும்.

இந்த உடலின் ஈர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதன் நிலைகளில் இது விளையச் செய்யும். அதன் வழி செல்வது தான் சிறந்த நிலைகள்.

மகரிஷிகள் உணர்வை இணைத்து இணைத்துச் சிறிது காலம் செயல்படுத்தினால் தன்னிச்சையாக வளரும் தன்மையும் உடலை விட்டு அகன்ற பின் அந்த உணர்வின் வித்துக்கள் தீமை அகற்றி மெய் ஒளியின் உணர்வாக நம்மை அடையச் செய்யும்.

இந்த உடலில் இருந்து தான் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

யாம் உபதேசித்ததை
1.நாள் முழுவதற்கும் உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.சந்தர்ப்பத்தால் கேட்டறிந்த தீமைகள் விலக வேண்டும்
3.தூய்மையான நிலைகள் நமக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வேலை செய்யும் போது அழுக்குப்பட்டால் எப்படி உடனுக்குடன் அதைக் கழுவுகின்றோமோ அதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தச் சத்தைக் கூட்டினால் தான் இது விளையும்.

ஒரு தரம் எண்ணினேன் பதிவாக்கிக் கொண்டேன் என்று தன்னிச்சையாக விளைவது வேறு. அதற்குப் பதில் எண்ணத்தால் நாம் கவர்ந்து அதை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உணர்வின் இயக்கமாக செடியில் கலந்த பின் (உரங்கள் இணைந்த பின்) அது எப்படி வளர்ச்சிக்கு வருகின்றதோ அதைப்போல
1.நம் உடலில் அது முழுமையாக விளையும் பருவம் எட்டும் வரையிலும்
2.எண்ணத்தால் நாம் மகரிஷிகளின் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
3.அதற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு தன் இனமாக அது பெருக்கி விட்டால் அதற்குப் பின் உங்கள் எண்ணம் தேவையில்லை… தன்னிச்சையாக வளரத் தொடங்கும். தூய்மையான ஒளியின் உணர்வாக நமக்குள் அது விளைந்து விடும்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து சொல்வதற்கும் உண்டான வித்தியாசம்

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து சொல்வதற்கும் உண்டான வித்தியாசம்

 

தியானத்தில் வீற்றிருக்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் சேர்ந்து சொல்கின்றோம். ஒருவருக்கொருவர் பண்பட்ட நிலைகளில்
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்
2.அதே போல நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3.உங்கள் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நான் சொல்கின்றேன்.
4.அதே போல என் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்.

இதை அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.செவி வழி இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு…
2.கண்ணிலே ஈர்க்கப்பட்டு ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கச் செய்து
3.ஒன்றுபட்ட உணர்வின் தன்மை உடலுக்குள் கருவாக மாற்றும்.

கூட்டுத் தியானங்களில் இதைப் போல் எடுத்தோம் என்றால் வலிமை கூடுகிறது. தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கின்றது. கூட்டமைப்பாகச் சொல்லும் பொழுது இருளைப் போக்கும்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்று
1.ஏகோபித்த வலு கொண்டு சொல்லும் பொழுது கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளை உடலுக்குள் ஊட்டுகிறது… இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது
3.உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கருவாக மாற்றுகின்றது.

ஒவ்வொரு குடும்பதிற்கும் நாம் சென்று கூட்டுத் தியானங்களை அமைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் தொழில் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்.

நமக்குள் அந்த வலிமை பெருகுகிறது. அந்தக் குடும்பத்திலும் இந்த உணர்வலைகள் அங்கே பதிவாகும் போது அவர்களுக்கு அது நன்மையாகின்றது.

ஒருவரால் தூக்க முடியாத பொருளை நான்கு பேர் சேர்ந்து அதைத் தூக்குகின்றோம் அல்லவா…! அதே போன்று அந்த அருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்த வலுவைக் கூட்டி
1.எல்லோரும் சேர்ந்து மகரிஷிகளின் ஒலிகளை வீட்டிற்குள் பரவச் செய்தோம் என்றால்
2.அந்த வீட்டிற்குள் ஏற்கனவே பதிவாகியுள்ள சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் அது ஒடுங்கும்.

இந்த உடலுக்குள் மட்டுமல்ல…! எந்த வீட்டில் நாம் வாழுகின்றோமோ நமக்குள் விளைந்த உணர்வுகள் (எல்லா விதமான உணர்வுகள்) வீட்டிற்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

அந்தப் பதிவை நாம் மாற்ற வேண்டும்.
1.அதை மாற்றுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களை இல்லம் தோறும் வைக்க வேண்டும் என்று சொல்வது.
2.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

தபோவனத்திலும் இது போன்று தான் கூட்டுத் தியானம் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகள் அங்கே ஒன்று குவிக்கப்பட்டு எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லிப் பதிவாக்குகின்றோம்.

அந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது, எல்லோரும் வெளிவிட்ட அந்த மூச்சலைகள் அங்கே படர்ந்திருக்கப்படும் பொழுது
1.அதை எப்பொழுது எண்ணினாலும் அந்த உணர்வலைகள் நமக்கு உடனே கிடைக்கிறது
2.அதை நுகர்ந்து உடலுக்குள் இயக்க சக்தியாக மாற்றும் போது தீமையிலிருந்து நம்மை அது விடுபடச் செய்யும்.

அந்தக் கூட்டமைப்பை அவசியம் உருவாக்க வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து இந்த உணர்வின் தன்மை நமக்குள் விளைய வைத்து நம் உடலுக்குள் கலக்கப்படும் பொழுது அனைத்தும் ஒன்றாகச் சேர்கிறது.
1.ஒன்றுபட்ட இயக்கமும் தெளிவான நிலைகள் பெறுவதற்கும் உதவுகிறது
2.தீமையை அகற்றிடும் சக்தியும் நமக்குக் கிடைக்கிறது.

குரு பூஜை அன்றும் பௌர்ணமி நாட்களிலும் மற்ற கூட்டுத் தியானம் இருக்கும் போதெல்லாம் துன்பங்களைப் போக்குவதற்கும்… பேரின்பம் பெறும் அந்த உணர்வை வளர்ப்பதற்கும்… அந்த அணுக்களைப் பெருக்குவதற்கும்… தீமையான அணுக்களைக் குறைப்பதற்கும் அது உதவும்.

தீமையான உணர்வுகள் ஒரு பத்து அணுக்கள் இருக்கிறது என்றால்
1.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்து அதைக் கூட்டிப் பெருக்க வேண்டும்.
2.இதனின் வலு கூடும் பொழுது அது குறையும்.

தியானம் தான் செய்கிறேன்… “எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் வருகிறது…? என்ற எண்ணம் சரியா…!”

தியானம் தான் செய்கிறேன்… “எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் வருகிறது…? என்ற எண்ணம் சரியா…!”

 

நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார்.

நானும் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன். கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான் என்று விட்டுவிட்டால் என்ன்வாகும்…? இது எல்லாம் சவாரி பண்ணி விடும்.

தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… நோய் வந்துவிட்டது என்று நினைத்தால் இதை (சக்தி எடுப்பதை விட்டுவிட்டு அதை (நோயை) எடுத்துக் கொள்கிறீர்கள்.
1.கெட்டதுக்குத்தான் நீங்கள் சக்தி வளர்க்கின்றீர்கள்.
2.ஆக எதற்கு ஜீவன் ஊட்டுக்கின்றீர்கள்…? எண்ணங்கள் எதில் வருகின்றது…?

நம்முள் உள்ள அணுக்கள் அதற்குண்டான பசியைத் தூண்டும் பொழுது நல்லதை எடுக்க விடாமல் தடுக்கின்றது.

அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். என் உடல் முழுவதும் படர வேண்டும். என் ஜீவான்மா பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல உரமாகக் கொடுத்து
2.அந்த ஞானத்தை நாம் பெருக்க வேண்டும்.
3.அப்போது தீமையான உணர்வு நமக்குள் போகாமல் தடுக்க முடியும்.

இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்.

தியானத்தில் சக்தி கூட்ட வேண்டிய சரியான முறை

தியானத்தில் சக்தி கூட்ட வேண்டிய சரியான முறை

 

குருவின் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை பெற எண்ணி ஏங்கித் தியானிப்போம். உணர்வுடன் எண்ணி ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியைத் தாண்டித்தான் உயிருக்குள் மோத நேரும்.
1.காலையிலிருந்து நாம் எடுத்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் இதெல்லாம் முன்னாடி இருக்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் புருவ மத்தியில் இணைத்து விட்டால் இது முகப்பிலே வந்து விடுகிறது.
3.நம் உடலுக்குள் அந்த்த் தீமைகள் புக விடாதபடி நாம் தடுத்துக் கொள்கிறோம்.

புருவ மத்தியில் இவ்வாறு தடுத்துப் பழகிய பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று உணர்வை வேகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

நாம் புருவ மத்தியில் தடுத்து உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து வலுவாக்கப்படும் பொழுது…
1.அவன் இப்படிச் செய்தான் இவன் இப்படிப் பண்ணுகின்றான் தொழிலில் இப்படி ஆனது குடும்பத்தில் இப்படியானது என்ற
2.இந்த உணர்வுகள் எல்லாமே அனாதை ஆகி விடுகிறது.
3.அனாதையான பின் சூரியனுடைய காந்த சக்தி அவைகளை இழுத்துக் கொள்கின்றது. நம் ஆன்மா சுத்தமாகிறது…!
4.ஆன்மாவைச் சுத்தமாக்கும் முறை தான் இது… இப்படித் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி என் பையன் நோயாக இருக்கின்றான் உடல் நலம் பெற வேண்டும் என்ற “இந்த ராகம் பாடினால்…” நோய் தான் அங்கேயும் வளரும் இங்கேயும் வரும். இதை நீக்க முடியாது.

சில பேர் இப்படித்தான்… என் பையன் நோய் நீங்க வேண்டும்… நோய் நீங்க வேண்டும்…! என்று தான் தியானித்தேன் என்பார்கள். ஏனென்றால் இந்த உணர்வை எண்ணும் பொழுது அந்த வேதனை தான் இங்கேயும் வரும். அதை மாற்ற முடியாது.

அவன் படிக்கவில்லை… படிக்கவில்லை என்று சொல்லிவிட்டு… படிக்காமல் இருக்கின்றானே… படிக்காமல் இருக்கின்றானே…! என்று இதைத்தான் தியானம் செய்வார்கள்.
1.அப்பொழுது அவன் மீது வெறுப்பு தான் வருகின்றது… அந்த வெறுப்பு தான் இங்கு தியானம் ஆகின்றது.
2.இது எல்லாம் முறையற்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். அவன் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் இப்படித்தான் எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யாதபடி அந்தப் பையனுடைய உணர்வுகள் இப்படி இருக்கின்றானே என்று குறுக்கே வந்தால் தியானத்தில் நெளித்துப் பார்ப்பார்கள். ஒன்றும் முடியாது. அந்தப் பையனின் உணர்வு தான் முன்னாடி வரும். தியானத்தில் அருள் உணர்வை எடுக்க முடியாது.

அப்பொழுது அந்த மாதிரி நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

உடனே கண்களைத் திறந்து… “நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்துற்குக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி விட்டுக் கண்களை மூட வேண்டும். உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

இப்படி நமக்குத் தொல்லை கொடுக்கும் வெறுப்பு வேதனை போன்ற பிற உணர்வுகள் வந்தால்
1.கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி கண் வழி கவர்ந்து
2.பின் கண்களை மூடி உயிர் வழி உள்ளுக்கே செலுத்துங்கள்… இந்த உணர்வை வலுவாக்குங்கள்.
3.இதைச் செய்து பாருங்கள்… தியானத்தில் நிச்சயம் சக்தி உங்களுக்குள் கூடும்.

இந்த முறைப்படி செய்ய வேண்டும்.

உங்களுக்குள் அழுக்கு அதிகமாக இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு நாம் இந்த முறையைக் கையாள வேண்டும். உங்களால் முடியும்.

சிறிது நாள் முயற்சி எடுத்துச் செய்தால் அந்தப் பழைய உணர்வுகள் எல்லாம் மாறும். “ஒரு புதுமையான சக்தி கிடைக்கும்…”

நல்ல நிலைகள் கொண்டு நல்ல செயல்களைச் செயல்படுத்தும் போது பிறருடைய தீமையான உணர்வுகளைக் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் புகுந்து நோயாக எப்படி உருவாகின்றதோ அதே போல
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க எடுக்க
2.அது நமக்குள் புகுந்த தீமைகளை மாற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும்.

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!

 

யாம் தெரியாமல் எதையும் உபதேசிக்கவில்லை.

உடலுக்குள் சூட்சமமாக என்னென்ன நடக்கின்றது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான் குருநாதர் பல இடங்களுக்கு எம்மை அனுப்பினார்.

கூடுமான வரையிலும்… குருநாதர் எம்மைப் பல வகைகளிலும் கஷ்டப்படுத்தித் தான் உண்மைகளை எல்லாம் தெரிய வைத்தார்.

ஆனால் நீங்கள் கேட்கலாம்… குருநாதர் ஏன் என்னைக் கஷ்டப்படுத்தினார் என்று…?

1.என் உடலுக்குள் எத்தனை தீமைகள் என்னைக் கஷ்டப்படுத்துகின்றதோ அந்தத் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்.
2.அது போல் ஒவ்வொரு மனித உடலிலும் விளைந்த உணர்வுகள் கஷ்டத்தை எப்படித் தூண்டுகின்றது…? சந்தர்ப்பத்தால் ஏற்படுத்துகின்றது…?
3.அதிலிருந்து அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்குத் தான் அதைச் செய்தார் குருநாதர்.

நான் சிறு வயதில் இருக்கும் பொழுது அறியாத நிலைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கின்றேன். அது பதிவாக்காமல் நினைவு இல்லை.

வளர வளர செய்த தவறுகளை மறந்து மறந்து வருகின்றேன். மறந்து வந்தாலும் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே அதனின் வேலையைத் தான் செய்யும்.

சிறு வயதில் கோலி விளையாண்டிருந்தால் வயதான பின்பும்… இங்கே பையன்கள் கோலி விளையாண்டு கொண்டிருந்தால் “ஏய்… நானும் கோலி விளையாடுகிறேன்…” என்று இந்த உணர்வுகள் தோன்றி அங்கே செல்வோம்.
1.பெரிய மந்திரியாக இருந்தாலும்…
2.பார்த்தால் அது இழுத்துக் கொண்டுதான் போகும்.

பம்பரத்தைச் சுற்றுகிறார்கள் என்று பார்த்தால் என்ன செய்வோம்…?

நானும் சிறு வயதில் பம்பரத்தைச் சுற்றி விளையாண்டேன் என்று அந்த ஆசை தூண்டப்பட்டு… “என்னிடம் கொடு… நானும் சுற்றுகிறேன்…!” என்று இந்த உணர்வுகள் இயக்கத் தான் செய்யும்… நம்மைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.

எது பதிவோ… அந்த நிலை நிச்சயம் வந்தே தான் தீரும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும்…? எதைப் பதிவாக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கூர்மையாக விண்ணிலே செலுத்த வேண்டும்.

1.அகஸ்தியன் ஒளிச் சுடரான உணர்வு உங்களுக்குத் தெரிய வரும்.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கற்றைகள் வந்து கொண்டிருக்கின்றது… இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
3.அதை நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

விஷத்தை ஒடுக்கிய பின் அத்தகைய நீல ஒளியாகத் தான் அது காட்டும். கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்று தான் ஒளி வீசும்.

ஆகையினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும். அதைக் கூர்மையாக எண்ணி எடுக்க வேண்டும்.

1.அதை அதிகமாக எடுத்தால் உயிர் அதன் அவதாரமாக நம்மை ஒளியாக மாற்றும்.
2.இதிலே ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை.