ஏகாந்த நிலை

ஏகாந்த நிலை

 

நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியான நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அந்த சக்தி மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டும் என்றும் தங்கள் தாய் தந்தையருக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்றும் இப்படி யாரெல்லாம் தியானிக்கின்றீர்களோ அப்பொழுது பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்…!

இந்த மனித உடல் கிடைத்த பின் இந்த உடலிலிருந்தே சொர்க்க பூமி என்றும்
1.நம் உயிர் சொர்க்கவாசல் என்றும்
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதன் வழி (உயிர்) சென்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நமக்கு எதுவுமே சொந்தமானது இல்லை… நிரந்தரமானது என்று எதுவும் இல்லை.

உயிருடன் ஒன்றிய இந்த உணர்வை ஒளியாக மாற்றுவதுதான் நமக்குச் சொந்தம். பேரின்பப் பெருவாழ்வு என்ற பேரானந்த நிலை கிடைக்கின்றது. அதுவே ஏகாந்த நிலை என்று ஆகின்றது.

இதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

நாம் அனைவரிடமும் பழகுகின்றோம். பழகும் போது ஒவ்வொருவர் உடலிலும் பகைமை உணர்வுகள் சலிப்பு உணர்வுகள் குரோத உணர்வுகள் கோப உணர்வுகள் கொதித்தெழும் உணர்வுகள் இதைப் போன்று எத்தனையோ உணர்வுகளை நாம் கேட்டறிகின்றோம்.

இந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுப்பதற்காக துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.நாம் பார்ப்போர் உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும்.
4.அவர் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5.எங்கள் பார்வையில் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
7.எங்களைப் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
8.இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஏகாதசி விரதம்…!

எத்தகைய பகைமை உணர்வும் நமக்குள் உருவாகாதபடி அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கி அனைவருடைய எண்ணங்களையும் நமக்குள் ஒன்றாகச் சேர்த்து பகைமையற்ற வாழ்க்கை வாழும் இந்த விரதம் தான் விரதம்.

ஆக.. எந்தத் தவறும் நமக்குள் உட்புகாதபடி பாதுகாத்துக் கொள்வதே ஏகாதசி விரதம்.

Leave a Reply