ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

 

கௌரவர்கள் 100 பேர் என்று மகாபாரதத்தில் காட்டுவார்கள். 100 விதமான கௌரவர்கள் நமக்குள் உண்டு. ஒன்றுடன் ஒன்று என்ன செய்யும்…?
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதைத்தான் அது இயக்கும்… கௌரவர்கள்.
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வு… தனக்குள் ஏற்கனவே இருப்பதற்கு மாறாக வந்தால் அது விடாது.

மந்திரத்தைக் கற்றுக் கொண்டவர்களிடம் நல்லதைச் சொன்னால் மந்திரக்காரன் ஏற்றுக் கொள்வானா…? கௌரவம் என்ற நிலை வருகின்றது.

நல்ல சத்தின் தன்மை எடுத்துக் கொண்டால் நல்லது என்று வராதபடி கௌரவர்கள் அதனதன் வளர்ச்சிக்குத் தான் இயக்கும்.

இப்படி ஒரு மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அவனில் அந்த உடலில் எப்படி 100 குணங்கள் எப்படி இயக்குகின்றது…?

கோவில்களில் நாமாவளி சொல்வார்கள். கடவுளின் அவதாரம் 10 என்றால் தெய்வத்தின் அவதாரம் 10 என்ற நிலை வருகிறது. அது எதனதன் நிலைகள் வளர்ந்தது என்று நிலையும் வரும்.

அன்ன வாகனம் யானை வாகனம் சர்ப்ப வாகனம் மயில்வாகனம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் வைப்பார்கள் 10 வாகனங்களை. அந்த வாகனங்கள் எதற்கு…?

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றது. மயிலும் தனக்குள் மற்றதை உட்கொண்டு விஷத்தை மாற்றுகின்றது. இப்படி
1.பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று தின்று
2.பத்தும் சேர்த்து ஒன்றாக ஒரு குணமாக மாறுகின்றது.

அதனால் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்களை வைத்து எதனதன் நிலையில் வளர்ச்சி அடைந்தது…? என்று ஒவ்வொரு சாமிக்கும் இவ்வாறு வைத்திருப்பார்கள்.

இப்படி நூறு விதமான குணங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் பத்து. இந்த நூறும் சேர்த்தால் ஆயிரம் ஆகும். அஷ்டதிக்கும் அறியும் உணர்வு வரப்படும் போது எட்டு…! அதாவது
1.ஆயிரெத்தெட்டு என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள்… அதே போல நூற்றியெட்டு…
2.எதன் உணர்வின் தன்மையோ இதன் உணர்வுக்கொப்ப அஷ்டதிக்கும் அது உணர்வின் தன்மை எப்படி எடுக்கிறது…? என்று
3.இந்த உணர்வின் குணங்கள் மாறுவது எப்படி…? இந்த உணர்ச்சியின் செயல்கள் எப்படி மாறுகின்றது…?
4.இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றோமா… உதாரணமாக சர்க்கரைச் சத்து என்ற குணத்தை வைத்துக் கொண்டு சர்க்கரையைச் சாப்பிட்டால் எதிர்நிலையாகின்றது.

சர்க்கரை அதிகமாகி விட்டால் அனைத்தையும் வெள்ளணுக்களாக மாற்றி விடுகின்றது. கோப உணர்வு அதிகமாகி கார உணர்வானால் அந்த உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது… பின்னாடி இரத்தக் கொதிப்பால் வாத நோயாகி கை கால்களைச் சுண்டி விடுகிறது.

1.இப்படி ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு எதிர் நிலையாகும் பொழுது உடலுக்குள் எப்படிப் போர்கள் நடக்கின்றது…?
2.மனிதனுடைய நிலை எப்படி இருக்கின்றது…? எதன் வழியில் அது வருகிறது…? என்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களாக வாழக்கூடிய நாம்…
1.பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடலை வளர்த்த உணர்வுகள்
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு மேலே சொன்ன உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது இது அனைத்திலும் கலந்து
3.எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டோமோ அதற்குள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து சர்வ தீமைகளையும் அகற்ற உதவும்.

தீமைகள் வரப்படும் பொழுது… அது எப்படி நமக்குள் கலக்கின்றதோ… அந்தத் தீமை எப்படி இயக்குகின்றதோ… இதைப் போன்றே
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.மழை மேகங்களுக்குள் அருள் சக்திகளைப் பரப்பப்படும் போது அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றன.

அதே சமயத்தில் ஆங்காங்கு கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன…?

ஒருவர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் தியானமிருப்போர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து… அவரை அறியாது தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்கி… அவர் உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்று “பல முறை சொல்லுங்கள்…”

1.இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வு எல்லோருடைய செவிகளிலும் பட்டு…
2.இந்த உணர்வை அவரும் நுகரப்படும் பொழுது அவர் நோயின் கடுமை குறைவதைப் பார்க்கலாம்.

இதை மீண்டும் மீண்டும் அவர் எண்ணத் தொடங்கினால்… அனைவரும் சேர்ந்து அவர் உடல் நலம் பெற செய்ய வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருக்குள் ஓங்கி வளர்ந்து அந்த கடுமையான நோயைத் தணிக்க இது உதவும்.

இதையெல்லாம் நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.

தியானம் செய்து கொண்டிருந்தாலும்… ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ சாப அலைகள் உண்டு. நாம் தியானத்திற்குச் செல்லும் போது
1.அங்குள்ள சாப அலைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்க வேண்டும்.
2.நாம் இப்படி வலுவான நிலைகள் கொண்டு பதிவாக்கும் இந்த உணர்வலைகளை வீடுகளில் உள்ள காந்தப்புலனறிவு கவர்ந்து கொள்ளும்.
3.இந்த உணர்வுகள் அந்த வீட்டில் உள்ளோருக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்….
4.தீமை அகற்றும் எண்ணங்கள் அங்கே தோன்றுகின்றது.

அ\ந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது “ஒவ்வொரு நிமிடத்திலும் நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது…”

ஒரு குடும்பத்தில் அதிகமான சிரமம் என்று கேள்விப்பட்டால் தியானம் செய்யும் இருபது பேர் அங்கே சென்று அமர்ந்து தியானித்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்போது அவர்கள் தொழில் வளம் பெறவும் கடும் பிணிகளில் இருந்து மீளவும் அருள் ஞானம் பெருகவும் ஞானத்தின் வழியில் அவர்கள் வழி நடக்கவும் இது உதவும்.

அந்த வலிமையான உணர்வுகளை நாம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். “குடும்பம் நலம் பெற வேண்டும்…” என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு ஆங்காங்கு கூட்டமைப்பாகச் செயல்படுத்துங்கள்… நன்மை பயக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செயல்படுத்தி… அவர்கள் மகிழ்ந்து வாழ்வதைக் கண்டு “மகிழ்ச்சியான உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்…”

1.இதை அனைவரும் செயல்படுத்துங்கள்
2.அருள் ஞானம் பெறுங்கள்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள்.
3.அருள் வழிகளிலே இந்த வாழ்க்கையை வழிநடத்துங்கள்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்
5.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து அந்த மகரிஷிகள் சென்ற அந்த இடத்திற்கு நாமும் செல்வோம்.

அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

“பத்து மைல் சுற்றளவிற்கு…” துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொருவரும் பரவச் செய்ய முடியும்

“பத்து மைல் சுற்றளவிற்கு…” துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொருவரும் பரவச் செய்ய முடியும்

 

விஷத்தன்மைகள் பரவி புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது அது நமது சுவாசத்திலும் கலந்து உடலுக்குள் செல்வதால்… உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீமடைகின்றது.

ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால் நமது உடல் எப்படிப் பலவீனமடைகின்றதோ அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது.

இது இயற்கையின் செயல்களில் ஒன்று..

ஆனால்…
1.விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள்
2.இத்தகைய நஞ்சுகளை அடக்கி ஒளியின் சுடராக அதை மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

தியான வழியில் உள்ளவர்கள் அனைவரும் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால் அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை.

ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “நாம் அனைவருமே ஒருங்கிணைந்து…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.

ஏனென்றால்
1.ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
2.நாம் விடும் மூச்சலைகளால் இந்தப் பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.

இந்தப் பூமியில் மனிதர்கள் சங்கடத்தாலும் வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வலைகள் பரவிப் படர்ந்துள்ளன.

நாம் கூட்டமைப்பாக இருந்து நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால் நமது மூச்சலைகள் காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

ஒரு முறை செய்துவிட்டு அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால் கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும்.

அதாவது கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

இதைப் போன்று அல்லாது “நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி…” இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம் இதனின் வலு அதிகமாகின்றது. இதனால் புறத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.

1.நாம் அனைவரும் கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்துக் கவர்ந்து
2.மூச்சலைகளாக நாம் வெளிப்படுத்தும் பொழுது அந்த அலைகள்
3.நமது காற்று மண்டலத்தில் குறைந்த பட்சம் “10 மைல்” சுற்றளவிற்கு மேலேயும் அகலமாகவும் பரவுகின்றது.
4.அந்த மூச்சலைகள் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.

ஏனென்றால் ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்துக் கயிறாகத் திரித்து ஒரு கனமான பொருளைத் தூக்குவது போன்று
1.நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
2.அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து மூச்சலைகளாக நாம் வெளிப்படுத்தும் பொழுது அது இந்தக் காற்று மண்டலத்தில் பரவும்.

சூரியனுடைய கதிரியக்கங்களில் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும் நாம் வெளியிடும் மூச்சலைகள்
1.அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக “10 மைல்” அளவுக்காவது இது பரவும்.
2.அப்போது இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்குத் தீங்குகள் இல்லாத நிலைகளும்
3.அவர்கள் சுவாசத்தில் நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன… நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.

ஆகவே நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து உடலுக்குள் பரவச் செய்து நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம்.

அவ்வாறு அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை மூச்சலைகளை நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்.

1.நம் ஊர் மக்கள் அனைவரையும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறச் செய்து
2.இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து மகிழ்ந்து வாழச் செய்து
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரையும் நாம் இணைந்து வாழச் செய்வோம்.

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்

 

இன்று கெமிக்கல் கலந்த அணுக்களை… “செல்கள்… அதாவது சிலிகன்களைப் போன்று…” நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து விட்டனர்.

1.விஞ்ஞான அறிவு கொண்ட கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல்
2.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இன்று அதிகமாகப் பதிந்து விட்டது.
3.அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.
4.மனிதன் என்ற எண்ணமே இங்கே போய்விட்டது,
5.இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு இன்று நாம் வந்து விட்டோம்.

சிலிகனைப் போன்று நமக்குள் பதிவு செய்த நிலைகளில் “இருந்த இடத்திலே இருந்து கொண்டே… ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்து விட்டது இன்றைய விஞ்ஞானம்…! (இதை யாரும் மறுக்க முடியாது)

மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும் சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும் இந்தப் பூமியினுடைய நிலைகளும் பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.

பூமியில் அணுகுண்டுகள் வெடித்தால் இவன் நீருக்குள்ளும் நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற லேசர் கதிரியக்கங்கள் அணுக்கள் வெடிக்கும். அதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.

அவ்வாறு எடுத்தாலும் அணு நீர் மூழ்கியின் தன்மையில் அந்த இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அந்த அணுக் கதிரியக்கங்கள் தாக்கிடாதபடி அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்.

அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும் பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.

அணு உலைகள்… அது போன்ற மற்ற இடங்களிலிருந்து வருவதை
1.அந்தக் கசிவுகளை… கழிவுகளை எல்லாம் மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று இவன் எண்ணுவான்.
2.ஆனால் இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்றவுடன்
3.இயற்கையின் துடிப்பு கொண்டு கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும்.
4.எதிர்நிலையான நிலை வரப்படும்போது பூமியில் நிலநடுக்கம் ஏற்படும்… எல்லாமே போய்விடும்.

இந்த அளவுக்குத்தான் இன்றைய உலகின் நிலை இருக்கின்றது.

இயற்கையின் நிலைகளை அசுத்தப்படுத்திக் கொண்டு… மனித உணர்வுக்குள்ளும் அதைப் பதியச் செய்து… இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.

ஏகக் காலத்தில் குண்டுகள் வெடித்தாலும்… வெடித்த நிலையில் புகை மண்டலங்களாகக் குவியப்பட்டுச் சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி
1.பூமியில் இருக்கக்கூடிய நீர் வளங்கள் அனைத்துமே உறையும் தன்மை பெறும்.
2.இங்கே நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே உறையும் தன்மை வருகின்றது.

இதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன் இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி இதே உணர்வின் தன்மைகள் சூரியனே மாறுபடும் காலம் வருகிறது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே சூனியமாகும் காலம் வந்துவிட்டது.

1.யாம் சொல்வது உங்களுக்குப் புதிராக இருக்கலாம்.
2.ஆனால் விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு நாளைக்கு இப்படி வரப்போகிறது என்று சொல்வார்கள்.
3.எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.

நமது குருநாதர் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது…? அதிலே நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று எமக்கு உபதேசித்தார்.

ஆகையினாலே இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து “இது சரி… இது தப்பு…!” என்று வரவேண்டாம். குறைகளைக் காண வேண்டாம்.

நாம் அனைவரும் மெய் ஒளியைக் காண வேண்டும். மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் “ஓரே குடும்பம்… ஓரே நிலை தான்…”

எத்தகைய இருள் வந்தாலும் உடனடியாக அதை மாற்ற வேண்டும். அதாவது மகரிஷிகளின் அருளாலே அந்த இருள் நீங்க வேண்டும்… நாம் அனைவரும் ஒளி நிலை பெற வேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்குத் தான் குருநாதர் ஆணையை யாம் செயல்படுத்துகிறோம்.

நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உணர்வின் ஒளிகள் நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.

1.நாம் இடும் மூச்சலைகள் மழை நீராகக் கொட்ட வேண்டும்.
2.அப்படிப் பெய்யும் மழை நீரால் விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்.
3.அத்தகைய விஷத் தன்மைகளை நீக்கும் ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெற வேண்டும்
4.அந்த மெய் உணர்வைத் தூண்டும் நிலைகளுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

தியானம் செய்பவரின் கடமைகள்

தியானம் செய்பவரின் கடமைகள்

 

நாம் எதைச் சொந்தமாக்க வேண்டும்…?
1.நமது உயிருடன் ஒன்றி வாழ்ந்து
2.இந்த உயிருடன் ஒன்றி வாழும் அந்த ஒளியின் சரீரத்தை நாம் நமக்கு சொந்தமாக்க வேண்டும்.

ஆகையால் தியான வழி அன்பர்கள் ஒவ்வொருவரும் “உலகுக்கு எடுத்துக்காட்டாக…” இருக்க வேண்டும். நமது கடமைகளிலிருந்து தவறக் கூடாது.

அருள் ஒளி என்ற உணர்வுகளை நமது உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி அதைக் கடமையாக அமைத்து
2.அந்த அருள் வழியில் ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிர்தான் நமக்குச் சொந்தம். உணர்வை எல்லாமே ஒளியாக மாற்றி விட்டால் “தனுஷ்கோடி…”

இதை நமக்குள் எடுத்து லட்சம் என்கிற பொழுது அந்த லட்சம் இந்த லட்சம் என்றும் ஒன்று இரண்டு மூன்று என்ற நிலைகள் வரும்போது, பல லட்சம் ஆகிறது.

அப்பொழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்கும் போது “கோடி என்ற நிலைகளில் தனுஷ்கோடி ஆகின்றது…” எவ்வளவு அழகாக இராமாயாணத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையால் நாம் அனைவரும் இதனுடைய உணர்வுகளை வளர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து… அதனுடன் சேர்த்த உணர்வின் தன்மை ஒன்றாக இணைத்துக் காற்றில் வரும் விஷ உணர்வுகளை நீங்கள் விடும் மூச்சலைகளால் மாற்றியமைத்து நாளை வரும் விஞ்ஞான அழிவிலிருந்து எல்லோரையும் காக்க வேண்டும்.

1.நியூட்ரான் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அது எப்படி எல்லாவற்றையும் விரட்டுகின்றதோ இதே போல்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நீங்கள் அனைவரும் பரப்பித் தீமைகளை எல்லாம் விரட்ட வேண்டும்.

ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் என்றால் அங்கே நோயோ, கலவரங்களோ இதைப் போன்ற சில நிலைகள் இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகளைக் கவர்ந்து அந்த மூச்சலைகளை அங்கே பரப்புங்கள். அப்பொழுது அந்தக் கிராமத்தில் உள்ள தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.

சில ஊர்களில் விவசாயம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருந்து
2.பயிரினங்களில் அந்தச் சக்தி படர வேண்டும் என்றும்
3.இதில் உருவாகும் அணுக்கள் தாவர இனத்தை வளர்க்கும் அணுவாக வளர வேண்டும் என்று
4.அந்த அருள் உணர்வுகளைப் பரப்ப வேண்டும்.

எனென்றால் காற்றிலிருந்து விஷத்தின் தன்மையை நுகர்ந்து அது அணுவாகி அதைச் சாப்பிடுகிறது. அதே சமயத்தில் நாம் எடுக்கும் உணர்வு கொண்டு அந்த விஷத்தன்மையை எடுத்தாலும் இது காற்றிலிருந்து வெளிப்படும் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் மலத்தை இடும்போது அது உரச் சத்தாக மாறும். அந்த அணுவும் வளரும்…! சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

நீங்கள் விடும் மூச்சலைகள் நல்ல அணுக்களாகின்றது. எனவே இதைப் போன்ற நிலைகளில் நாம்
1.நம்மைக் காக்க வேண்டும்.
2.நம் குடும்பத்தைக் காக்க வேண்டும்
3.நம் ஊரைக் காக்க வேண்டும்

இதைப் போல் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

“உலகுக்கு எடுத்துக் காட்டும் நிலைகளில்…” நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளைப் பெறச் செய்து இதற்கு முன்னால் அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கினாலும் அதையெல்லாம் தடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் ஒரு பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால் மறுபடியும் அதை திருப்பிச் செய்கிறோம். ஒரு கட்டத்தில் குறையானால் அதை நிறுத்தி நாம் செயல்பட வேண்டும்.

ஒரு செடியின் வளர்ச்சி குன்றினால் அதற்கு என்ன பக்குவம் வேண்டும்…? என்று மீண்டும் வளர்க்கச் செய்கின்றோம். இதைப் போல நாம் ஒவ்வொன்றிலும் பக்குவப்பட வேண்டும்.

வாழ்க்கையில் இப்படிச் செய்தேனே… இப்படி இருந்தேனே…! என்பதையெல்லாம் மறந்து விடுங்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும்…?
1.நல்ல உணர்வுகளை வளர்க்க வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும்.
3.நம் குரு அருளால் அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலை நமக்குள் வரவேண்டும்.
4.அனைவரும் அந்த மெய்ப்பொருள் கண்டு அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.

இதை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை நாம் காண… சுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான அறிவால் உலகைக் காக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் தன்னைக் காக்கத் தன் நாட்டைக் காக்க என்று பிழை கொண்ட உணர்வுகளைத்தான் இன்று செய்கின்றார்கள்.

ஆகவே இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும் நாம் நல்லதை எண்ணும் போது இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம் நல்ல குணங்களைச் சிந்திக்கும்படி செய்வதோ… நல்ல குணங்களைச் செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளைத் தூண்டும் நல்ல அணுக்களின் செயலைத் தடைப்படுத்தும்.

இதை மாற்ற வேண்டுமென்றால்
1.திசை திருப்புவது போல…
2.சக்தி வாய்ந்த நிலைகளில் குருநாதர் எமக்குக் கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை
3.அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் அதை வளர்க்க வேண்டும்,..! எமது அருளாசிகள்.

கூட்டுத் தியானத்தின் மூலம் தான் மகரிஷிகள் சக்தியைப் பெற முடியும்

கூட்டுத் தியானத்தின் மூலம் தான் மகரிஷிகள் சக்தியைப் பெற முடியும்

 

நாம் தனித்து ஒருவர் தியானமிருந்து இந்த சக்திகள் அனைத்தையும் பெறுவோம் என்றால் அது சாதாரண மனிதனுக்கு “அத்தகைய வலு இல்லை…” மகரிஷிகளின் அருள்சக்தி பெறும் தகுதியில்லை.

நாம் தனி மனிதனாக அமைந்தாலும்
1.நாம் கூட்டுத் தியானங்களில் இருந்து அதன் துணை கொண்டு எண்ணத்தின் உணர்வு வலுவான பின்பு தான்
2.நாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
3.”அந்த நிமிடமே அதைக் கவரும் தன்மை வருகின்றது…”

ஆகவே ஒரு சமயம் கூட்டுத் தியானத்தில் இருந்து அடுத்து நாம் பெறுவோம் என்ற நிலைகள் இல்லாதவாறு “அடுத்தடுத்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானங்கள் செய்து…” ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அதைச் செருகேற்றும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“தனித்து நாம் எல்லாச் சக்தியும் பெறுவோம்…” என்று விலகிச் செல்லாது ஒவ்வொரு வாரத்திலும் ஆங்காங்கு ஒரு பத்துப் பேரானாலும், இருபது பேரானாலும் கூட்டுத் தியானங்கள் செய்து பழகிக் கொள்ளுங்கள்.

அதே சமயத்தில் மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி அன்று இங்கே தபோவனம் வருபவர்கள் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளலாம்.

இங்கே வர இயலாதவர்கள் தன் அருகிலே பத்து நூறு பேர் இருந்தாலும் பௌர்ணமியன்று ஒரு கூட்டமைப்பாக இருந்து இதே போல் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டுத் தியானமிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை உங்கள் வலுக் கொண்ட எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு, விண் செலுத்த முடியும்,

1.அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தினால் தான் உங்கள் எண்ணம் துரித நிலைகள் கொண்டு விண்ணை அடைந்து
2.விண் சென்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் பூமியில் படர்ந்திருப்பதை எளிதில் கவர்ந்து
3.உங்களுக்குள் அதை உரமாகச் சேர்த்துக் கொள்ள முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளை அகற்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நமக்குள் செலுத்துவோம் என்றால் அந்தத் தீமைகள் அகலுகின்றது.

அதே சமயம் நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்கின்றது. அப்பொழுது நமது உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உரமாக வலுப் பெறுகின்றது.

இவ்வாறு நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திலேயே
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை உடலுக்குள் வலுவாக்கிக் கொண்டால்
2.இந்த உடலை விட்டு இந்த உயிரன்மா எப்பொழுது சென்றாலும்
3.எந்த மகரிஷியின் எண்ணங்களை நாம் அடிக்கடி எடுத்தோமோ
4.அவர் ஒளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் நம் உயிரான்மா இணைந்து
5.இன்னொரு உடல் பெறும் உணர்வலைகள் கரைந்து
6.அந்த ஒளியுடன் ஒளியாக நாம் என்றும் நிலைத்து நின்று
7.பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையை அடைகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளை “உயிரில் அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் அருளை “உயிரில் அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்

 

நம் உயிரான ஈசனை வணங்கி… தாய் தந்தையரை வணங்கி… ஞானகுரு சற்குரு சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி
1.ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கிச் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்…”

அவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் “ஊடுருவிச் செலுத்தி…”
1.நமது கண்களின் காந்தப் புலனறிவால்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
3.”உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்.

“இப்பதிவின் துணை கொண்டு…” மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி
1.நம் உடலுக்குள் “அலை அலையாகப் படரச் செய்ய வேண்டும்…”
2.இதுவே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் கொண்டு வரச் செய்யும் தியானம்… மற்றும் ஆத்ம சுத்தி.

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

 

உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது உள் புகுந்த விஷமான சக்திகளை… அதனுடைய வலுவை இழக்கச் செய்வதற்குத் தான் கூட்டு தியானங்களில் யாம் உங்கள் எல்லோர் குரல்களையும் எழுப்பச் சொல்லியது.

அவ்வாறு வெளிப்படும் அந்த குரலின் தன்மைகளைக் காந்த புலன்கள் கவர்ந்தாலும்
1.வீட்டிற்குள் புவியின் ஈர்ப்புக்குள் அந்தக் காந்தப் புலன்கள் சங்கடம் சலிப்பு வேதனை இவைகள் பதிந்திருப்பதை
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு கூட்டு தியானத்தில் எல்லோரும் குரல்களை எழுப்பப்படும் பொழுது
3.அந்தத் துன்ப அலைகளை இது வீழ்த்தி நல்ல உணர்வுகளைப் படரச் செய்வதும்
4.நாம் எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த உணர்வுகள் வீட்டுச் சுவர்களில் இருக்கும் காந்தப் புலன்கள் கவர்ந்து
5.வீட்டிற்குள் எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியூட்டும் உணர்வாகப் பெறச் செய்யும்.

அதற்குத்தான் வீடுகள் தோறும் கூட்டுக் குடும்பத் தியானங்களைச் செயல்படுத்தும் படிச் சொல்வது.

சூரியன் எப்படிப் பிரபஞ்சத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியின் தன்மையாகத் தனக்குள் எடுத்துச் செயல்படுத்துகின்றதோ அதைப் போல நாம் ஒருங்கிணைந்த நிலையில் செயல்படுத்துவதற்கு அன்றைய ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி குரலை எழுப்பிக் கூட்டுத் தியானத்தைச் செயல்படுத்தும் படிச் சொல்கின்றோம்.

காரணம்
1.தனி ஒரு மனிதன் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.
2.பல அலைகளை உணரும்படி செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு தான்
3.நாம் கூட்டுத் தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் மூலமாக ஒலிகளைப் பரப்பச் செய்து
4.வரக்கூடிய விஞ்ஞான நச்சுத்தன்மைகள் நம்மை அணுகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

பூமிக்குள் பிற விஷத்தின் தன்மைகள் உள்ளே புகாது ஓசோன் திரை எப்படி அமைகின்றதோ அதைப் போன்று
1.எத்தகைய நிலைகள் வந்தாலும் உங்களுக்குள்ளும் உங்கள் குடும்பத்திற்குள்ளும் அந்தத் தீமை புகாது பாதுகாப்புக் கவசமாக
2.ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்கள் ஆன்மாவிலே பெருக்கச் செய்வதற்கே இதைச் செய்கின்றோம்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ சாதாரணமாக இது கிடைக்கின்றது சாதாரணமாக விளக்கம் சொல்கின்றார் சாதாரண நிலைகள் பெறுகிறோம் என்று சாதாரணமாக எண்ணி விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் எவ்வளவோ பணத்தைச் செலவழித்துப் பெற முடியாத சக்தியை இவர் சாதாரணமாகச் சொல்கின்றார் நாம் அப்படிப் பெற்றுவிட முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் இதைக் கொண்டு வருகின்றேன். ஆகவே கூட்டுக் குடும்பத் தியானத்தினுடைய அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாகத் தியானியுங்கள்.

நாள் முழுவதற்கும் உழைக்கின்றோம்.
1.ஒரு பத்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துப் பெருக்கி உங்கள் வீடுகளிலும் பெருக்கி
2.எல்லோரும் அதே போல் கூட்டமைப்பாகப் பெருக்கப்படும் பொழுது மிக உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
3.உங்களைக் காக்கின்றீர்கள்… குடும்பத்தைக் காக்கின்றீர்கள்

இப்படி ஒவ்வொரு குடும்பமும் தங்களைக் காத்துக் கொள்ளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

 

எனக்குக் காட்சி கொடுத்தார்… வந்தார்… நல்லதானது…! என்று சொல்வார்கள். காட்சி கொடுத்தார் நல்லதாகும் என்ற நிலை அது சில நாளைக்குத் தான் இருக்கும். மீண்டும் காட்சி கொடுத்தார் என்று நிறையப் பேர் சொல்லலாம்.

நானும் ஆரம்பத்தில் இவ்வாறு தான் நிறையக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
1.இவைகள் எல்லாம் கூடாது…! என்று நிறுத்தி விட்டேன்
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர இந்த உடலில் விளைந்த உணர்வை நீங்கள் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நமது குருநாதர் காட்டிய வழிகளை எடுத்து இங்கே வளர வேண்டுமே தவிர இந்த உடல் என்றுமே மடிவது என்று அறிதல் வேண்டும்.

இந்த உடலில்… மெய் ஞானியின் உணர்வைப் பெற்றதை வலுப்படுத்தி அதை எடுக்கத் தொடர வேண்டுமே தவிர… “இவர் தான்…” என்ற நிலைகளுக்கு இந்த உடலின் உணர்வை எடுக்கக் கூடாது. இந்த உடலில் வரக்கூடியது அனைத்துமே வரும்… புவியின் ஆசைதான் வரும்.

உருவங்களைக் காட்சியாகக் கொடுத்தாலும்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்
2.அந்த ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்று அந்த மெய் ஒளியுடன் இணைத்து அந்த வலுவைப் பெற வேண்டுமே தவிர
3.சாமி வந்தார்… எனக்குக் காட்சி கொடுத்தார்…!
4.எனக்கு உடல் நலமானது… அது நல்லதானது… இது நல்லதானது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாகக் கண்டிப்பது. அந்த நிலையில் இருந்து நாம் மாறுபட வேண்டும். அந்த மெய் ஒளியை நாம் பெற வேண்டும். நம்முடைய பார்வையால் மற்றவர்கள் தீமைகள் நீங்க வேண்டும்.

சாமி செய்தார்…! என்பதற்குப் பதில்
1.சாமி பார்வை பிறருக்குப் பட்டு மற்றவருடைய தீமைகள் எப்படி அகன்றதோ…?
2.அதே உணர்வு உங்களால்… நீங்கள் அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக பெற வேண்டும்.
3.அதைப் பெற்றால் தான் சாமி சக்தி பெற்றதாக அர்த்தம்…!
4.இல்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

ஏனென்றால் அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமைகளை அது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் அவருக்குள் நுழையப்படும் பொழுது அவருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நமது வாழ்க்கையில் பிறர்படும் துயரத்தைக் கேட்கும் பொழுது நமக்குள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதைத்தான் நாம் உருவாக்குகின்றோம்.

ஆனால் எதை உருவாக்க வேண்டும்…?

பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகள்… நாம் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் நம் பார்வையால் அங்கே வித்தாகப் பதிய வேண்டும்.

யாராவது தீமைகளைச் செய்தார்கள் என்றால் அதை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே… ஈஸ்வரா என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.
1.என் பார்வை அவரைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
2.அவர்களும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் படைத்து அங்கே அனுப்ப வேண்டும்.
3.நமக்குள் அது வராதபடி அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்தந்த நிமிடத்தில் எந்தத் தீமை வந்தாலும் அது வேலை செய்யாது. இந்த உணர்வை நம் பார்வையால் அங்கே செலுத்தும் பொழுது
1.நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

இந்த இரு நிலையும் வேண்டும்.

துப்பாக்கியை எடுத்து அதிலே மருந்தினைக் கெட்டிக்கப்படும் பொழுது எங்கேயாவது உராய்ந்து விட்டால் வெடித்து விடும். அப்போது யார் அதைச் செய்கின்றாரோ அவரை அல்லவா அது காலி செய்து விடும்.

அப்பொழுது அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்திக் குறி வைத்துத் தாக்கும் போது அங்கே வெடிக்கும் நிலை கொண்டாருகின்றார்கள்.

அதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.நம்முடைய எண்ணப் பார்வையில் அவருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்.
2.அவர்களைக் காக்கும் உணர்வு தான் நமக்குள் விளைய வேண்டும்.

நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் விளைந்தால் அவர்களைக் காக்கும் உணர்வு நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வு நமக்குள் வளரும்.

ஒவ்வொரு நொடியிலும் இதை நாம் செய்தாக வேண்டும்…!

கடலில் போகிறோம் என்றால் எத்தனையோ அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. நாம் எந்தத் தீவுக்குப் போக வேண்டுமா அதை எல்லையாக வைக்கின்றோம்.

இடைப்பட்ட அலைகள் அனைத்தையும் விலக்குகின்றோம். பெரிய அலை சிறிய அலை இதையெல்லாம் விலக்கிச் சென்று தான் அந்த எல்லையை அடைகின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நமது எல்லை எது…?

1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான எல்லை தான்… முடிவான நிலைகள் பேரானந்தப் பெரு நிலையான எல்லை.
2.அதை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையிலே பாச அலை வருகின்றது… வெறுப்பு அலை வந்து மோதுகிறது… கோப அலைகள் வருகிறது… பகைமை அலைகள் வந்து தாக்குகிறது. இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது.

இந்த மோதலில் பாசத்தினால் நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போகிறான்…? என்ற இந்த உணர்வு வந்தால் இந்த அலையிலேயே மூழ்கி விடுகின்றோம்.

பையனின் நினைவாற்றலே வருகின்றது. அவனுக்குள் சென்று விடுகின்றோம்.

ஒருவன் மீது வெறுப்படைந்து… எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்… அவனை அப்படியே விடலாமா…? என்று எண்ணினால் நாம் போக வேண்டிய எல்லையை மறந்து விடுகின்றோம்.

இப்படியே இடைஞ்சல் செய்கின்றான் என்று அவனுடைய எண்ணத்திலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
1.அவனைத் திருத்தும் நிலைகளுக்கு நாம் அங்கே சென்றுவிட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்
2.அவனுடைய உணர்வு வளர்ந்த பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்கிறோம்.

வாழ்க்கையில் பல விதமான அலைகளில் சிக்குண்டு மீள முடியாத நிலை வருகிறது. ஆகவே அந்த அலைகள் வரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுத்து அந்த அலைகளைப் பிளக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும். அவன் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும்.. அவன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது அவன் பாச அலையைப் பிளக்கிறது.
1.இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2.உயர்ந்த எண்ணம் கொண்டு கண்ணிலே நாம் பார்க்கும் போது அவனை ஒழுக்கமாக்குகிறது.

இதைப் போல் பலர் பகைமை கொண்டு பேசுவார்கள். நாம் நல்லதைச் செய்தாலும் இன்னொரு கெடுதல் செய்த ஆவி அந்த உடலுக்குள் இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது. நம்மைக் கண்டாலே எதிரியாகக் கருதி இல்லாததை எல்லாம் சொல்வார்கள்.

தியானம் செய்கிறீர்கள்…! என்றாலே “என்னை ஏதோ செய்கிறான்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் ஒன்றுமே சொல்லவில்லை… என்னை இப்படிச் சொல்கிறான்…! என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் ஆவி இருக்கப்படும் போது அது செயல்பட்டால்
1.நான் எதுவுமே சொல்லாதபடி “என்னைக் குறையாகச் சொல்கிறான் பாவிப்பயல்…” என்ற இந்த அலையில் சிக்கிவிடுகிறோம்.
2.அந்த அலைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.அவனுக்குள் இருக்கும் ஆவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அங்கிருந்தே நன்மை செய்யும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதிலே நமக்குத் துணிவு வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்பது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா. அந்த இடத்தில் துணிவு இருந்தால் தான் செய்ய முடியும்.

குருநாதர் கொடுத்த நிலைகளில் ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1.நன்மை செய்ய வேண்டும்
2.நன்மைகள் வளர வேண்டும் என்றால் “அதற்குத் துணிவு வேண்டும்…”

நன்மைகள் செய்யப் போகும் நிலையில் அவருக்கு (உடலில் ஆவி உள்ளவருக்கு) உதவி செய்ய வேண்டும் என்று செல்லும் பொழுது… ஐய்யய்யோ…! பாவிப் பயல் எனக்கு ஏதோ செய்கின்றான் மருந்து வைக்கின்றான் விஷம் வைக்கின்றான்…! என்று சொல்வார்கள் பார்க்கலாம்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அவர் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவருக்குள் இருந்தே நன்மைகள் செய்யும் நிலை வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

நல்லது செய்கின்றோம்… ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலிலே இன்னொரு ஆன்மா இருக்கும்.

ஆன்மா இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம்மைக் கண்டவுடனே வெறுப்பாக இருக்கும். உடலிலே எரிச்சல் ஆகும்.

சிலருடைய வீடுகளுக்குள் சென்றால் அந்த எதிர்ப்பு நிலைகள் வரும். நம்முடைய மணம் பட்ட உடனே அங்கே எதிரியாக மாறுகின்றது.
1.அதற்குக் காரணம் அந்த மனிதன் அல்ல.
2.அந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு இதைக் கண்ட பின் எரிச்சல் ஆகிறது.

நாம் இவ்வளவு தியானம் செய்கின்றோம்… நம்மை ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள்…? என்று நினைக்கின்றோம்.

அந்த இடத்தில் தான் நமக்குத் துணிவு வேண்டும் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வினை அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால்
1.அவர் செயலைப் பார்த்த பின் இது வளர்ந்து விடுகின்றது.
2.ஆன்மாவிலே அது முன்னாடி அதிகமாகப் பெருகி விடும்.
3.இது பெருகி விட்டால் இதைச் சுவாசித்து அந்த உணர்வு இயக்க ஆரம்பித்து விடும்.

உயிரிலே பட்டவுடன் அதை வெளிப்படுத்துவது இந்த உயிர் தான். அது போன்ற நிலைகள் வந்தாலும்… “இடைமறித்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று இங்கே கொண்டு வர வேண்டும்.

எங்கே…?

1.நம் கண்ணின் நினைவைப் பல முறை உயிருடன் ஒன்றச் செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைத்து அவர்களுக்கு அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும். இந்த இடத்திலே இதைச் செய்ய துணிவு ஜாஸ்தி வேண்டி இருக்கின்றது.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…? சாதாரணமாக நாம் ஒன்றுமே செய்யவில்லை…! ஆனால் நம்மை கண்டாலே அவர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ…? ஏன்னை இந்த மாதிரி எல்லாம் சொல்கின்றார்களே…!

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாமலே அது இயக்கும்.

இந்தத் தியான வழியில் நாம் செல்லும் பொழுது இதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான்… அவ்வப்போது கொடுத்த இந்தச் சக்திகளை வலுப்பெறச் பயன்ன்படுத்த முடியும்.

1.நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கிறது… அதனால் உருவான அணுக்களும் இருக்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் செலுத்தினோம் என்றால் அதைத் தடைப்படுத்திவிடும். வளர்ந்த பின் இதை நீக்கிவிடும். அதற்குச் சத்து கிடைக்காதபடி மகரிஷிகள் உணர்வு வலுப்பெற்ற பின் தீமைகளைக் குறைக்கும்.

உங்கள் அனுபவத்தில் நன்றாக இதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.

1.முதலில் சிரமமாகத் தெரியும்… சிறிது நாள் சென்றால் அதை நீக்கிவிடும்.
2.இப்படி நாம் வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

 

இந்த வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட நிலையில் எப்படியும் பொறாமை வெறுப்பு வேதனை அன்பால் பண்பால் கவர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருப்பினும்
1.அந்தப் பதிவுகள் நமக்குள் நிலைக்காது அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்து
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் வெளிப்படுத்தும் போது
3.எத்தனை பேரின் உணர்வுகளை நாம் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ
4.அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது… அந்த மனிதரின் உணர்வை சந்தர்ப்பத்தால் நாம் சேர்த்த…
5.நமக்குள் உருப்பெற்ற அந்த அணுக்களுக்குள் மகரிஷிகள் உணர்வை இணைத்துப் பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுவது தான் தியானம்.

ஒரு மனிதன் நோயாக இருக்கின்றான் என்றால் அந்த நோயைக் கவர்ந்த பின் நல்ல உணர்வுடன் அது கலந்து நல்ல உணர்வுகளால் உருப்பெற்ற அணுக்கள் மாற்றமடைகின்றது.

நல்ல உணர்ச்சியை வளர்க்கும் அந்த அணுக்கள் குன்றும் பொழுது நல்ல உடலை உருவாக்கிய அணுவின் தன்மை பலவீனம் அடைகின்றது.

பலவீனமடையாது காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்கள்… அதாவது எத்தனை பேரை நாம் எண்ணினோமோ அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எத்தனை பேருடைய நல்லதை எண்ணி அவர்களின் வேதனையை கவர்ந்தோமோ… அது நம் நல்ல உணர்வுடன் கலந்து நம் நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்துவதை
1.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் எண்ணி அந்த உணர்வினை நமக்குள் இணைக்கப்படும் பொழுது
2.இன்னொரு மனிதனில் விளைந்த தீமையின் உணர்வு “நமக்குள் விளையாது” அதை குறைக்கச் செய்யும்.

அதைத் தான் இந்நேரம் வரை உங்களுக்குள் உபதேசித்து அருள் மகரிஷிகள் உணர்வைச் சிறுகச் சிறுக அவர்கள் வளர்ச்சி பெற்றதை உங்களுக்குள்ளும் சேர்ப்பிக்கச் செய்த்து.

1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்திலிருந்து வளர்ச்சி பெற்ற உணர்வை
2.அந்தக் காலப்பருவத்தின் வயதை (துருவன் – ஒரு வயதிலிருந்து ஐந்தாவது வயது வரை பெற்றதை) உங்களுக்குள் சொல்லி
3.அவர் உடலில் விளைந்த உணவுகள் இங்கே பரவி இருப்பதை
4.அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும்5. வானியல் தத்துவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும் உங்களுக்குள் இணைத்து உபதேசித்து
5.இந்த உணர்வின் ஆற்றலை ஈர்க்கும் தன்மையாக தியானிக்கப் போகின்றோம்.

அந்த வானியல் உணர்வுகள் தனக்குள் அறிவாக எப்படி அகஸ்தியனுக்குள் இணைந்ததோ… துருவத்தை நுகர்ந்தறிந்து ஒளியின் சிகரமாக எப்படி மாற்றி அமைத்தாரோ…
1.அந்தத் துருவனின் வளர்ச்சியின் தன்மையை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்குத் தியானிப்போம்.
2.குருநாதர் எனக்குள் படிப்படியாக அதை எப்படிக் கொண்டு வந்தாரோ…
3.அதை வைத்து நீங்கள் தியானிக்கும் போதெல்லாம் அந்தச் சக்தி உங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

உங்கள் கண்ணின் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்துங்கள்.
1.நம் பூமி “துருவத்தில் கவரும் அந்தச் சக்தி” நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது உங்களுக்குள் மிதக்கின்ற மாதிரி அந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து துருவ நிலைகள் ஈர்க்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி “ஏங்கிச் சுவாசியுங்கள்…”

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று “உங்களை மிதக்கும்படி செய்யும்…” உடல்கள் இலகுவாகும்.
1.துருவத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது… “இது அதிகமாக அதிகமாக…”
2.இந்த உணர்வுகள் வலுப்பெற்றால் “புவியின் ஈர்ப்புக்குள் வராது…”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்.
4.அந்த ஈர்ப்பு வட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணையச் செய்யும்.

ஏனென்றால் மனிதர்களாக இங்கே வாழ்ந்தவர்கள் தான் அங்கே சென்றது. அதனால் “இடைமறித்து அந்த உணர்வுகளை உங்களுக்குக் கொடுத்து” அதைப் பெறும்படி செய்தது.

1.துரித நிலையில் அந்தச் சக்திகளை எல்லாம் உங்களைப் பெறச் செய்வதற்கும்
2.அதன் மூலம் நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.