எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வெறும் சொல்லாகச் சொல்வதல்ல.
1.ஓ…ம் என்பது நமது உயிர்… உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது…
2.ஓ…! நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சக்தி ம்…! என்று நம் உடலுடன் ஐக்கியம் ஆகிறது.

அதே போல நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட் அதற்குள் இருக்கும் ஊன் அது ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் “ஜீவன் பெறச் செய்கின்றது…” அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா.

குருதேவா… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்த குணங்களும் நம் உடலில் இயக்கப்பட்டு அதை ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருந்தது நமது உயிர். ஆகவே “குருவாக இருப்பதும்…” நமது உயிரே.

அதைத்தான்…
1.ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும்
2.அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி
3.அந்த ஏக்க உணர்வுடன் தான் அனைவரும் சொல்ல (எண்ண) வேண்டும்.

ஒரு மைக் நாம் பேசுவதை… நாடாக்களில் உள்ள முலாமும் முலாமுக்குள் மறைந்துள்ள காந்தமும் அதைக் கவர்ந்து எப்படிப் பதிவு செய்து கொள்கின்றதோ அதைப் போல நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளில் இருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயம் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் கிளர்ந்து எழுகின்றது. காற்றிலிருந்து அந்த உணர்வினை நம் உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது,

1.தனது ஆன்மாவாக ஆக்க வேண்டும் என்றால் நாம் எண்ணும் எண்ணம் ஊழ் வினையாகப் பதிவாக வேண்டும்.
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊழாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்.
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டி வரும்.
5.நாம் எண்ணிய உணர்வின் தன்மையைச் சுவாசித்து அந்த உணர்வுக்கொப்ப நம் உயிரின் தன்மை இயங்குகின்றது.

ஆகவே… ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அந்த உயிருடன் ஒன்றி எண்ண வேண்டும்.

இப்பொழுது யாம் எதை உபதேசிக்கின்றோமோ அதைக் கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ் வினையாக எலும்புக்குள் பதிவாகிறது. அப்படிப் பதிவாகும் பொழுது நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வலைகளை
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நான் எண்ணி… அதை நான் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாகப் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கூர்ந்து விண்ணின் ஆற்றலைப் பெருக்கி சுவாசித்து
3.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக இப்போது வெளிப்படுவதை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள் என்றால்
4.அந்த உணர்வின் சத்து உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகிறது.

உங்களுக்குள் அப்படிப் பதிவாகும் பொழுது மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த ஞானியின் அருளாற்றல் உங்களுக்குள் பதிவாகின்றதோ அதை நீங்கள் பெற முடியும்.

ஞானிகள் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் தங்களை அறியாது வந்த தீய வினைகளை அவர்கள் மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி இருளை நீக்கி ஒளியின் தன்மையாக வாழ்ந்தார்களோ
2.அதே உணர்வின் ஆற்றலை நாமும் பெற முடியும்… அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகிறோம்.

ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்

ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்

 

நமது உயிர் நட்சத்திரத்தின் தன்மை பெற்றது தான். ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் அதனுடைய தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதி “அதிக அழுத்தமாகும் பொழுது” உயிரணுவாக உருவாகிறது.

அதே போல மின்னல்கள் ஒலிக்கற்றைகளாக வீசப்படும் பொழுது பலவாறு கல் மண் இவைகளில் அது கலந்து விடுகின்றது. அவ்வாறு கலந்து விட்டால் மண்ணிலிருந்து விளையும் தாவர இனங்களிலும் அது கலக்கின்றது.

1.நட்சத்திரங்களின் இயக்கம் எப்படி இந்த உயிரணுவிற்குள் ஒன்றுடன் ஒன்று கலவையாகித் துடிக்கின்றதோ இது போல
2.இரண்டு நட்சத்திரங்களின் துடிப்பின் உணர்வலைகள் படரப்படும் பொழுது
3.தாவர இனங்களில் எதனின் உணர்வு… எதனின் உணர்ச்சி கொண்டு அதிகரிக்கின்றதோ அதன் வலு கொண்டு தான் தாவரங்கள் விளைகின்றது.
4.கல் மண்ணும் இப்படித்தான் விளைகின்றது.

இதை நமது உயிர் இந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து உணவாக உட்கொள்ளும் பொழுது உயிரின் துடிப்பு கொண்டு “மூன்று…” என்ற நிலை வரும்.

இரண்டு நட்சத்திரத்தின் உணர்வலைகள் எதிர்நிலையாகும் பொழுது துடிப்பின் இயக்கச் சக்தி பெறுகின்றது
1.அந்தத் தாவர இனத்தை நுகரப்படும் போது உயிரிலே படும் போது தசைகள் உடலாகின்றது.
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எண்ணம் ஆகின்றது.
3.எண்ணத்தின் உணர்வுகள் அணுத்தன்மையாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

இப்படித்தான் இயற்கையின் இயக்கங்கள்… மாற்றங்கள் வருகின்றது.

1.கடவுள் என்ற தன்மை எதுவும் ஒன்று இல்லை…!
2.அதாவது ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்.

அதாவது… மூன்று நிலைகள் கொண்ட உணர்வின் சத்தாகும் பொழுது அது எந்தச் சத்தைக் கவர்ந்ததோ அதனை… அதே உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

இப்படிப் பல உணர்வுகள் சேர்த்துத் தனக்குள் வருவதை அகஸ்தியன் தன் வாழ்நாளில் அந்த நட்சத்திரங்களின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
1.உயிர் எப்படி உருவானதோ அதே போல
2.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வினைத் தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக ஏற்றி
3.மின்னல்கள் வெளிப்படும்போது அதை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து உடலில் மாற்றினான்.

உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி அமைத்துத் தான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதற்கு உணவு எது…?

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதைத் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது. அதன் வழியில் தான் இன்றைக்கும் நஞ்சினை மாற்றி ஒளிச் சுடராக வீசிக் கொண்டுள்ளது.

சூரியனோ தனக்குள் இருக்கும் பாதரசத்தால் நஞ்சினை மோதிப் பிரித்து விடுகின்றது. மனித உடலோ உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது.

1.நஞ்சினை நீக்கிவிட்டால் நல் உணர்ச்சிகளை ஊட்டும் ஒளியின் உணர்வுகள் நமக்குள் மிஞ்சுகின்றது.
2.சர்வத்தையும் அறிந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது… அது தான் கார்த்திகேயா…!

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

 

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…! இந்த நிலையில்லா உலகத்தில் “எதை நீ சதம் என்று எண்ணுகின்றாய்…?” என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வைத்து குருநாதர் எம்மைக் கேட்கின்றார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் போகும் இடங்களில்… துயரமான நிலைகளைச் சந்திக்கும் போதெல்லாம் இத்தகைய உணர்வை எனக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

ஆகவே நினைவு கொள்ளுங்கள்…! இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நமக்கு நிலையானதா…? இந்த உடல் நமக்கு நிலையானதா…? உடலில் இருக்கும் பொழுது எதைப் பற்ற வேண்டும்…?

1.என்றும் ஏகாந்த நிலை பெற்ற அருள் மகரிஷியின் ஒளியை நான் பெற வேண்டும்
2.என் மனைவி அதைப் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும்
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் பார்வை இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் உன் மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். ஆகவே மனைவிக்கு எது வேண்டும்…?

1.மனைவிக்கு அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என்னுடன் இணைந்த நிலையில் அருள் வழியில் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… அருள் ஒளி பெறும் தகுதி பெற வேண்டும்
4.மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் அருள் சக்தியாக வளர வேண்டும்.
5.அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலை தான் வர வேண்டும்.

அதற்குப் பதிலாகத் துன்ப்ப்படும் நேரத்தில் வேதனையான உணர்வை நுகர்ந்து மனைவி மக்களை நினைத்தால் வேதனைப்படும் உணர்வே வளருகின்றது
1.உன் சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது
2.உயிர் வெளி சென்று விட்டால் உடல் இல்லை. அப்போது நீ எதை நினைக்கப் போகின்றாய்…?

உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வு கொண்டு பாசத்தால் உன் பையனை நீ எண்ணினால் அவன் உடலிலேதான் புக முடியும். வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது “விஷம் என்ற உணர்வுகள்…” உனக்குள்ளும் அந்த உடலிலிருந்து அவனால் நீ மீண்டும் பெறுகின்றாய்.

உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால் நீ அவனுள் செல்கின்றாய்… இந்த உணர்வின் தன்மை அவனை அழிக்கிறது.

அதாவது… உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு அவனையும் காக்க முடியாத நிலையில் நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும். இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின் நீ எந்த வேதனைப்பட்டாயோ வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது… எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட பாம்பாகவோ தேளாகவோ புலியாகவோ நீ பிறக்கப் போகின்றாயா…? உனக்கு எது தேவை…? என்ற நிலையில்
1.அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
2.எதை…?
3.“துன்பத்திலும் இன்பம்” எவ்வாறு காண வேண்டும்…? என்று.

ஆகவே… அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு, துன்பம் என்ற நிலைகள் மறைந்து பேரின்பம் என்ற நிலை பெற்ற அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

1.அப்போது ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம்” அதாவது அழியா ஒளிச் சரீரம் நீ பெறுவாய்.
2.அருள் ஒளி பெறுவாய்… அருள் ஆனந்தம் பெறுவாய்… அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

உனக்குள் இருக்கும் அணுக்களில் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கும் போது அதுவும் ஒளி பெறுகிறது. பகைமையற்ற நிலை வருகிறது.

இந்திரலோகத்தில் வரும் போது ஏகாந்த நிலை என்ற எதுவுமே வெறுப்பில்லாத நிலையில் சொர்க்கலோகத்தை நீ உருவாக்குகின்றாய். பரலோகத்திலிருந்து இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி இந்திரலோகமாக இருந்து சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

ஆனால் வேதனை வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய்.
1.மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா…?
2.அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா…?

பேரொளி பெற்றுப் பேரானந்தம் பெற்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே… “அந்த ஏகாந்த நிலையை நீ பெறுகிறாயா…?” என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெற வேண்டும். உன் குடும்பம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால் நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

1.அந்த அருள் ஒளி பெறுவாய் பேரின்பம் பெறுவாய் பெருவாழ்வு வாழ்வாய்
2.பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும் பெரு வாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய்” என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

நமது குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்றுப் பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்றிச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

எதையுமே சீர்படுத்த “துருவ நட்சத்திர தியானம் மிகவும் அவசியம்…”

எதையுமே சீர்படுத்த “துருவ நட்சத்திர தியானம் மிகவும் அவசியம்…”

 

இன்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவ ரீதியில் மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்துகின்றார்கள்.

இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் என்னென்ன நிலை இருக்கின்றது…? என்று கண்டுபிடித்து அதற்குத் தக்க மருந்துகளைக் கொடுக்கின்றார்கள்.
1.உடலுக்குள் இரத்தத்தின் வழி மருந்து சென்று
2.அந்த நோய்க்குக் காரணமான கிருமிகளை வலு இழக்கச் செய்கின்றது… கொல்கிறது.

ரத்தத்திலே அல்லது உறுப்புகளில் அந்தக் கிருமிகள்… வைரஸ் எவ்வாறு உருவாகின்றது…? எந்த மருந்தினைக் கொடுத்தால் அந்த வைரஸ் செயலிழக்கும்…? என்று அவர்கள் கண்டறிந்து அந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள்… உடலைச் சரி செய்கின்றார்கள்.

மருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்த்து… இதைச் சாப்பிட்டால் சரியாக வரும் என்று இப்படி எல்லாமே கொடுக்கின்றார்கள். ஆனால் இதில் சிறிதளவு எதிர்மறை ஆகிவிட்டால் வேறு நோய் வந்து விடுகின்றது.

அதாவது… மருந்தைச் சாப்பிட்டேன் என் வாய் எல்லாம் புண்ணாகி விட்ட்து. உடலில் சில இடங்களில் கொப்புளித்து விட்டது என்றெல்லாம் சொல்வார்கள்.

வீரிய மருந்தைக் கொடுத்துக் கேன்சரை நீக்குகிறேன் என்பார்கள். ஆனால்
1.அந்த மருந்து உடலுக்குள் சென்ற பின் கேன்சர் அணுக்களைக் கொல்வதைக் காட்டிலும்
2.உடலில் இருக்கக்கூடிய மற்ற நல்ல அணுக்களை எல்லாம் கொன்று விடுகின்றது,

காரணம்… நோய் கடுமையான பின் அதனின் நாடித் துடிப்பு பற்றிச் சரியாகத் தெரியாதபடி மருந்தைக் கொடுக்கப்படும் பொழுது என்ன ஆகிறது…?
1.எந்த நோய் முதலில் உண்டானதோ அதைக் குணமாக்கும்.
2.ஆனால் மற்ற நல்ல அணுக்களுக்கு ரியாக்ஷன்… எதிர் நிலையாகி அதை மாற்றி விடுகின்றது.

ஆக… எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் ஒரு நூல் தவறினால் மறு பக்கம் தீமைகளை உண்டாக்கி விடுகின்றது. உடல் நலம் பெறச் செய்ய இது போன்று நாம் செயல்பட்டாலும் கூட அதைச் சமப்படுத்த வேண்டும்.

அதைச் சமப்படுத்துவதற்கு
1.யாம் சொல்லும் தியானத்தை எடுத்துக் கொண்டு
2.ஆத்ம சுத்தியைச் சரியான முறையில் வலு சேர்த்துக் கொண்டால் சீராக்க முடியும்.
3.எதிர்மறையான நிலைகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

மனிதனாக இருந்து அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்… துருவனானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றினான். ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வரும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.துருவ நட்சத்திரம் பூமியின் துருவத்தின் நேர் பகுதியில் இருப்பதால்
2.முதல் பங்காக இங்கே கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகிறது.
3.அதைத் தான் உங்களை நுகரும்படி அடிக்கடி சொல்கிறோம்.

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்தால்… அது நமக்குள் வந்து விடுகிறது. இருவர் சண்டையிடுகிறார் என்று உற்றுப் பார்த்தால் அதை நுகர்ந்தால் நமக்குள் அது வந்து விடுகின்றது.

ஒரு தடவை வந்து விட்டால் மீண்டும் எண்ணமாகி நினைவாகி அது வரத் தொடங்குகிறது. இப்படி மனிதனுக்கு மனிதன் உற்றுப் பார்த்த உணர்வுகள் கவரப்பட்டு இப்படி நமக்குள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. தீமை செய்யும் அணுக்களாக உடலுக்குள் உருவாகின்றது.

ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்… ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம் ஆன்மா மட்டுமல்ல… நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

1.இந்தக் காற்று மண்டலம் விஷத்தன்மை அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் தீமை புகாது… நோய் வராது… தடுக்க வேண்டும்.

தியானம் தான் செய்கிறேன்… “எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் வருகிறது…? என்ற எண்ணம் சரியா…!”

தியானம் தான் செய்கிறேன்… “எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் வருகிறது…? என்ற எண்ணம் சரியா…!”

 

நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார்.

நானும் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன். கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான் என்று விட்டுவிட்டால் என்ன்வாகும்…? இது எல்லாம் சவாரி பண்ணி விடும்.

தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… நோய் வந்துவிட்டது என்று நினைத்தால் இதை (சக்தி எடுப்பதை விட்டுவிட்டு அதை (நோயை) எடுத்துக் கொள்கிறீர்கள்.
1.கெட்டதுக்குத்தான் நீங்கள் சக்தி வளர்க்கின்றீர்கள்.
2.ஆக எதற்கு ஜீவன் ஊட்டுக்கின்றீர்கள்…? எண்ணங்கள் எதில் வருகின்றது…?

நம்முள் உள்ள அணுக்கள் அதற்குண்டான பசியைத் தூண்டும் பொழுது நல்லதை எடுக்க விடாமல் தடுக்கின்றது.

அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். என் உடல் முழுவதும் படர வேண்டும். என் ஜீவான்மா பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல உரமாகக் கொடுத்து
2.அந்த ஞானத்தை நாம் பெருக்க வேண்டும்.
3.அப்போது தீமையான உணர்வு நமக்குள் போகாமல் தடுக்க முடியும்.

இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்.

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை

 

ஆறறிவு கொண்ட மனிதரான நாம் பல விதமான உடல் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களைப் புதிதாக உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால் இதை நாம் அறிந்து கொண்டோம். இப்படி அறிந்து கொண்ட உணர்விலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும்…? நமக்குள் எப்படிச் சமைத்தல் வேண்டும்…?

ஒருவர் நமக்குத் தீமை செய்தார் என்று அறிகின்றோம். ஆனால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.

அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்” என்று எண்ணி ஏங்கி
2.அந்தத் தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது
3.தீய உணர்வுகளின் வீரியத்தை அது குறைக்கின்றது.

உதாரணமாக மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது “சுவையாக மாறுகின்றது…”

ஒருவர் “தவறு செய்கிறார்” என்று நாம் அறியும் பொழுது நாம் அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து
1.அவருடைய அறியாமை நீங்க வேண்டும்
2.அருள் ஞானம் அவர் பெற வேண்டும்
3.அருள் சக்தி அவர் பெற வேண்டும்
4.தெளிந்த மனம் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதனால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும்… “அவரை இயக்கும் தீய உணர்வுகள்… நமக்குள் விளையாது…”

அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும் அவர் வேகத் துடிப்பாக இருக்கும் பொழுது நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால் அவர் கேட்கமாட்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அதாவது சாந்தமாக இருக்கப்படும் பொழுது “நீங்கள் இப்படிச் செய்தால் உங்களுக்கு நன்மை” என்று நாம் சொல்லும் பொழுது அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.

அப்போது நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள் அவரிடத்தில் உருவாகும் தன்மை வருகின்றது.

எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன் வடையைத் தட்டி எண்ணெயில் போட்டால் என்னவாகும்…? வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும்.

பின்… அது சூடேறச் சூடேற வடையில் சுவையும் மாறிவிடும். ஆனால் எண்ணெய் அதிகமாகக் கொதித்து அதில் வடையைத் தட்டிப் போட்டால் வடையின் மேல் பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.

சமப்படுத்தும் பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான், பதார்த்தங்களை உருவாக்க வேண்டும்.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் குழந்தை ஒன்று தவறு செய்யும் பொழுது… “தருணம் பார்த்துத்தான்…” நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.

1.ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான் நல் உணர்வுகளை ஊட்ட வேண்டும்.
2.ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால் சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது.
3.நல் உணர்வின் தன்மை விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.

ஆனால் தவறைச் சுட்டிக் காட்டி, நல் உணர்வை ஊட்டத் தவறினால் வெறுப்பின் உணர்வே வரும். வெறுப்பின் நிலை வளர்ந்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

ஆகவே நாம் இது போன்ற நிலைகளை எல்லாம் அறிந்து
1.எதனை…
2.எவ்வாறு…
3.எதன் வழியில் நாம் உருவாக்க வேண்டும்…? என்ற நிலையில்
4.“நாம் பக்குவப்படுத்தும் நிலையில்” சமப்படுத்துதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் “மனதைச் சமப்படுத்தினால்… பக்குவப்படுத்தும் பண்பும்…” வருகின்றது.

அருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நம் வாழ்க்கையில் வரும் விஷத் தன்மைகளை கார உணர்ச்சிகளை அடக்கும் தன்மை வருகின்றது.

இப்படி அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை…” வருகின்றது. சிந்திக்கும் தன்மை வந்தால் நம் “செயல் சீராக…” அமைய இது உதவும்.

நாம் நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி பேரின்பப் பெரு வாழ்க்கை என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவரை அங்கேயிருந்து மீட்க நினைக்கின்றோம். அவரைக் கை கொடுத்துத் தூக்குகின்றோம். அவரும் நம்மைக் கட்டித் தாவி மேலே வருகின்றார்.

இதனால் நம் மீதும் அசுத்தம் ஆகிவிடுகின்றது. உடனே அசுத்தத்தை நீரால் நீக்குகின்றோம். இது புறத்தால் நிகழ்வது.

ஆனால் பிறிதொருவரின் வேதனையின் உணர்வை நாம் நுகரும் பொழுது நம் அகத்திற்குள் வந்த அந்த அசுத்தத்தை நீக்க வேண்டுமல்லவா…? (இதைப் பற்றி அதிகமாக நாம் எண்ணுவதில்லை).

யாம் அருள் வாக்கினை வழங்குகின்றோம். எம்மை நீங்கள் பார்க்கின்றீர்கள். யாம் பேசும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தபின் அது உங்களுடைய உயிரினில் பட்டு இதனின் உணர்வை அறிய நேருகின்றது.

இதை உங்களால் பார்க்க முடிகின்றதா…? இல்லை…! ஆனால் உணர முடிகின்றது.

நீங்கள் எம்மைப் பார்க்கின்றீர்கள்… பார்த்து நீங்கள் “எதைப் பெற வேண்டும்…?” என்று எண்ணி ஏங்குகின்றீர்களோ “உயர்ந்த எண்ணங்களை எண்ணும் பொழுது…” அதனின் உணர்வின் தன்மை உங்களுக்குள் இயக்குகின்றது.
1.அப்படி இயக்கப்படும் பொழுது உங்களுக்குள் அறிய முடியாத “சில சலனங்கள் ஏற்பட்டு…”
2.அது எப்படி நம்மை இயக்குகிறது…? என்று அறியும் பருவம் வருகின்றது.

அறியும் பருவம் வந்தாலும் நீங்கள் அதை அடக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அப்போது “தீமைகள் தம்முள் வராது தடுக்க வேண்டும்…” என்ற உணர்வுகள் உங்களிடத்தில் வருகின்றது.

1.அருள் ஞானியின் அருள் உணர்வுகள் வலிமை கொண்டது. அதே சமயத்தில் வேதனையின் உணர்வுகளும் வலிமை கொண்டது.
2.ஆனால் அருள் ஞானியின் உணர்வுகள் சிந்தனையைத் தூண்டும்… வேதனை உணர்வுகள் சிந்தனையை இழக்கச் செய்யும்.

“நல்ல மனிதராக இருந்தார்… இன்று அவருடைய நிலை அவருடைய குடும்பத்தினர்களே அவரை எதிர்க்கும் நிலை ஆகிவிட்டதே…!” என்று உங்களிடத்தில் சிந்தனையின் தன்மை மாற்றப்பட்டு… வேதனை பற்றிய சிந்தனையை உங்களிடத்தில் வளர்க்கச் செய்கின்றது. அப்போது அவரிடத்தில் இருந்த அந்த வேதனையின் வலு உங்களிடத்தில் வளர்கின்றது.

தீமைகளின் உணர்வை அடக்கும் ஆற்றல் கொண்டது துருவ நட்சத்திரம். அதன் உணர்வை எடுத்து உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது தீமைகளை அடக்கும் ஆற்றல் உங்களிடத்தில் வலிமை பெறுகின்றது.

1.தீமை என்று ஒன்றை அறியும் பொழுது… அந்தத் தீமையிலிருந்து விடுபடும் நிலையை நாம் பெற வேண்டும்.
2.தீமையிலிருந்து விடுவிக்கும் உணர்வுகள் எது…? விடுபட்டவர் யார்…? துருவ நட்சத்திரம்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கவரும் பொழுது
4.அது நம்முள் உள்ள தீமைகளை ஒடுக்குகின்றது… தீமைகள் வராது காக்கின்றது.

புழுவிலிருந்து மனிதராகும் வரையிலும் மனிதராக ஆன பின்னும் ஒவ்வொரு சரீரத்திலும் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற்றது கண்கள். கண்களின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் ஆற்றல் பெற்றது துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தால் ஞானிகள் அறிந்த உணர்வின் அறிவு நமக்குள் விளைகின்றது, பகைமை உணர்வுகளை நீக்குகின்றது… தீமைகள் வராது காக்கின்றது.

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…? ஒருவர் வேதனைப்படுகிறார் கஷ்டப்படுகின்றார் என்றால் நாம் அதை நீக்கிடும் நிலையைப் பெற வேண்டும்.

உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவருக்குக் கை கொடுத்து அரவணைத்துச் சாக்கடையிலிருந்து மீட்கிறோம். பின் அவரைக் குளிக்கச் செய்கின்றோம். நாமும் குளித்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்று வேதனையின் உணர்வினை நாம் நுகர்ந்தால் முதலில் நம்முள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர் பெற வேண்டும்… வேதனைகள் அவரிடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அருள் உணர்வின் ஆற்றல் நம்மிடையே பெருகும் நிலை வருகின்றது.

1.இதனைப் பின்பற்றி வரும் அனைத்து அன்பர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சர்வ தீமைகளில் இருந்தும் விடுபட்டு
2.மன பலம் பெற்று உடல் நலம் பெற்று செல்வம் செல்வாக்கு பெற்று
3.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்றிட எமது அருளாசிகள்.

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… ரத்தங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் அடிக்கடி கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அதாவது மற்ற உணர்வுகள் நம் உடலுக்குள் அணுவாக உருவாகாதபடி முந்தி இதைச் செய்ய வேண்டும்.
1.காரணம் உடலுக்குள் உருவான அணுக்கள் அனைத்துமே கண்கள் பதிவானது தான்…
2.கண்கள் வழி நுகர்ந்து தான் உடலில் அணுக்கள் உருவானது.

அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரத்தங்களிலே இணைக்கப்படும் பொழுது அது வலுவாகின்றது.
1.கண்கள் மூலம் எளிதில் அந்த அணுக்களுக்கு அந்த ஆற்றலைப் பாய்ச்ச முடியும்.
2.ரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வட்டமாக வலுவாக அமைத்து விடுகின்றது.

ஞானிகள் கண்ட உண்மைகள் இது.

பின்… தீமையான உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்களும் ஈர்க்க மறுத்தால் தீமைகள் அனாதையாகி விடுகின்றது. அனாதையாகி விட்டால் சூரியன் கவர்ந்து செல்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களில் “ஒதுங்கிய தூசி மண்டலம்” வால் நட்சத்திரமாக ஆவது போன்று நம் உடலில் இந்த மண்டலங்கள் ஏற்பட்டு ஒதுங்குகின்றது… அதைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து கொண்டு சென்று விடுகின்றது.

நம் ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது… ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பரிசுத்தம் அடைகின்றது. ஜீவான்மாக்கள் பரிசுத்தமானால் பரிசுத்தமான ஜீவணுக்களாக உருவாகி உயிரான்மா ஒளியாக ஆகிறது.

உயிருடன் ஒளியான உணர்வுகள் ஆன்மாவாகும் பொழுது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஒளியான அணுக்களாக ஆன்மாவாக மாறியதோ
2.உயிர் வெளியே சென்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பெருக்கினோமோ அது பெருகி
3.துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.

அங்கே சென்றபின் தொக்கியுள்ள விஷத்தைக் கரைக்கின்றது… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலை கொள்ளச் செய்கின்றது.

பிரபஞ்சத்திலும் சரி பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகளும் சரி… பூமியின் துருவத்திற்கு நேராக வரும் அவைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளிமயமாக மாற்றி விடுகிறது. உயிரைப் போன்றே ஜீவணுக்களை உருவாக்கி ஒளியாக மாற்றி விடுகின்றது.

மனிதன் ஒருவன் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க முடியும்.

1.குருநாதர் எனக்குள் இதைப் பதிவு செய்தார்.
2.எனக்குள் எடுக்கப் பழக்கச் செய்தார்… எடுத்து எனக்குள் வளர்க்கச் செய்தார்
3.அதன் உணர்வைத் தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றேன்.

அந்தப் பதிவை நினைவாக்கி உங்களுக்குள் வளர்த்து அந்தப் பேரருள் பேரொளியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”

 

சில பண்பற்ற குடும்பங்களை நாம் பார்க்க நேர்ந்தால் “என்ன இப்படிச் சண்டை போடுகிறார்கள்…?” என்று எண்ணுவோம்… அதைக் கவர்ந்து விடுவோம். ஆக… சந்தர்ப்பத்தால் நாம் எதை இப்படி உற்று நோக்குகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.

இதை இராமாயணத்தில் வசிஷ்டர்… பிரம்ம குரு என்று காட்டுவார்கள்.
1.நாம் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
2.உயிரிலே பட்டால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் பிரம்மமாகிறது… அது அணுவாக மாறுகிறது.
3.அணுவாகிவிட்டால் அது எந்தக் குணமோ அந்த உணர்வின் சக்தியாகத் தான் அது இயக்கும்… அது தான் அருந்ததி.
4.திருப்பி எண்ணும் பொழுது அவர்கள் எதைச் செய்தார்களோ அந்த உணர்வைத் திருப்பிச் செயல்படுத்தும் குரு தான் அது.

அதைத்தான் வசிஷ்டர் பிரம்மகுரு அவரின் மனைவி அருந்ததி என்று சொல்வது.

அதாவது… யார் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் சக்தியை மீண்டும் எண்ணும் போது அதனுடைய இனத்தைப் பெருக்கும் பிரம்மமாகிறது. அந்த அசுத்தத்தை வளர்க்கும் சக்தியாகவே பெறுகின்றது.

ஆகவே… நாம் எதை ஆசைப்படுகின்றோமோ அதுவே வளர்கின்றது. ஆனால் நாம் ஆசைப்பட வேண்டியது எது…?

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதை விடுத்து விட்டு
1.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற ஆசைப்பட்டால்
2.அது நமக்குள் பிரம்மாகி அதன் வளர்ச்சியில் நாம் அதுவாக மாறுகின்றோம்.

அதற்குத் தான் அடிக்கடி யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம் உங்களுக்குள் அதை நினைவுபடுத்துகின்றோம். எந்த அளவுக்கு இதை உற்று நோக்கிக் கவனிக்கின்றீர்களோ
1.உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் இது பதிவாகின்றது… ரெக்கார்ட் செய்கின்றது.
2.முதுகு பக்கம் இருக்கும் எலும்பின் நிலை வேறு… முன்பக்கம் உள்ள எலும்புகளின் இருப்பது வேறு
3.விலா எலும்புகளில் முன்னாடி தான்… அதில் அனைத்தையும் ரெக்கார்ட் செய்கின்றது.
4.அதிலே உள்ள பவர் அதிகமானது… எதைப் பதிவாக்குகின்றதோ அதைக் கவரும் சக்தி பெற்றது.
5.ஆகையினால் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே பதிவாக்குகின்றேன்.
6.அதை நினைவு கூர்ந்து கவரும்… அந்த வலிமை பெறும் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் பெறுவோம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அதைப் பாய்ச்சுவோம்… அந்த ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவோம்.

அதைச் சுத்தப்படுத்தும் போது நம் ஆன்மா தூய்மை அடைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களின் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவோம்.

இப்படித் தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால் வாழ்க்கையில் எந்த நேரம் எது வந்தாலும் “உடனடியாக… ஈஸ்வரா என்று உயிரின்பால் நினைவைச் செலுத்தி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களை அறியாது சேர்ந்த பகைமைகள் அகல வேண்டும் என்று நாம் இதை எண்ணி எடுக்க முடியும்.
1.நமக்குள் பகைமை வராது தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.
2.என்றென்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

 

நாம் இன்று எவ்வாறு கோயிலுக்கோ ஞானியரையோ தேடிச் செல்கின்றோமோ… அதைப் போல ஞானியர் ஒவ்வொருவரும் சாதாரண மக்களைத் தேடி வருகின்றனர்.

அவர்கள் அவ்வாறு வருவதனுடைய உட்போருளே…
1.ஒரு மனிதன் எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றானோ அந்தத் துன்பத்தை நீக்கி
2.அந்தத் துன்பத்தை உருவாக்கிய அந்தக் காரமான தீய உணர்வின் சக்தியை விலக்கச் செய்து
3.ஆற்றல்மிக்க உள் உணர்விலே தோன்றிய நல்ல உணர்வின் அணுவின் ஆற்றலை அவர்களிடம் உருவாக்கச் செய்வதற்குத்தான்.

உதாரணமாக… கருணைக் கிழங்கு விஷத்தின் தன்மை கொண்டிருந்தாலும் அதிலுள்ள விஷத்தை நீக்கிய பின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு நம் சரீரத்திற்குள் சத்தாக ஆகின்றது.

அதைப் போன்று அரிசி உருவாவதற்கு அந்த உமியே பிரதானமாகின்றது. இவ்வாறு கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும் அதே ஆற்றல் உடலுக்குள் சென்று விட்டால் தீயதை விளைவிக்கும்.

கடுமையான அந்தச் சுவாசத்தைச் சுவாசித்தாலும் நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் கலந்து விடுகின்றது.

நெல்லின் உமியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக் கூடிய அரிசியை நாம் எவ்வாறு பெற்றோமோ அதைப் போன்று அந்த மகரிஷிகள்
1.விஷத்தின் ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய “இயக்கும்…”
2.அந்த உணர்வின் ஆற்றலைச் சுவாசிப்பதற்குத்தான் அவர்கள் பெற்று
3.அவர்கள் பெற்ற அந்த உண்மையினுடைய நிலைகளை மனிதன் உடலிலே செலுத்தி
4.அங்கே துன்புறுத்தும் உணர்வலைகளை நீக்கினார்கள்.

ஏனென்றால் அந்த உடலுக்குள் தான் துன்புறுத்தும் உணர்வான அணுக்கள் விளைகின்றது. அந்த விளைந்த அணுவின் தன்மையை அதை நீக்குவதற்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியினை
1.யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ அவர் உடலிலே
2.அந்தச் சுவாசத்தைப் பாய்ச்சி உணரச் செய்தார்கள்.

அங்கே இருக்கக்கூடிய துன்பத்தின் உணர்வலைகளை நெல்லின் உமியை நீக்கி அரிசியை எடுப்பது போன்று
1.மனித உடலுக்குள் துன்புறுத்திக் கொண்டிருக்கும் அந்தத் துன்பத்தை நீக்கி (உமியை நீக்குவது போன்று)
2.நல்ல வித்தான சத்தை அங்கே உருவாக்கினார்கள் மகரிஷிகள்.

உதாரணமாக… தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடன் அதிலே கலந்திருக்கக் கூடிய பித்தளை மற்ற மட்டமான சரக்குகள் எல்லாம் ஆவியாக மாறுகின்றது.

அதைப் போல மகரிஷிகள் அவர்கள் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு
1.ஒரு மனிதன் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய சுவாசத்திலே
2.”இவர்கள் பெற்ற ஆற்றலைச் செலுத்தி…” அங்கே இன்புறச் செய்கின்றார்கள்.

அவ்வாறு அவர்களை இன்புறச் செய்து அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கச் செய்து… அந்த உடலிலிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வலைகளை இவர்கள் சுவாசித்து தன் உடலிலே ஆற்றல் மிக்க சக்திகளாகப் பெற்றார்கள்.

ஆகவே…
1.அந்த மகரிஷிகளைப் போன்றே நாமும் விஷத்தை அடக்கி அதை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி… அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்

 

ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு சக்தி உண்டு. அதைக் காட்டுவதற்குத் தான் காளி மாரி சாமுண்டீஸ்வரி சண்டாளேஸ்வரி என்றார்கள். கொடிய தீமைகளை உருவாக்கும் குணங்களை “சண்டாளேஸ்வரி…” என்று கூட அதற்குக் காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

அதன் இனத்தைப் பெருக்கும் சக்தியைப் பெறுகிறது என்று சிவனுக்குள் சக்தியாக உருவாக்குகின்றது. அதாவது… உடலான சிவத்திற்குள் அணுக்களின் தன்மைகள் கொடூர உணர்வுகளைக் கொடூரம் என்று உணர்ந்து நுகர்ந்தாலும்… நல்ல உணர்வுகள் விலகிச் செல்லக் காட்டினாலும்… அந்த உணர்வு இயக்கி உணர்ச்சியைத் தூண்டி “நம்மை மாற்றும் நிலைக்கு…” உருவாக்கி விடுகிறது.

இப்படி நுகர்ந்த உணர்வுகள் கடினமாக்கப்படும் பொழுது
1.இந்த உடலான சிவத்தையும் நுகர்ந்த அந்தச் சண்டாள உணர்வுகள்… சக்தி சிவனை வீழ்த்தி விடுகின்றது.
2.இதைத்தான் சிவனைத் திரிசூலத்தால் தாக்கிக் கீழே காலில் மிதித்து வைத்திருக்கிறார் என்று கூறுவார்கள்.

நாம் நுகர்ந்த உணர்வே சிவமாகின்றது என்ற நிலையும் செயலற்ற நிலையில் நாம் அதன் கீழ் அடங்கி விடுகின்றோம். அதன் வழி கொண்டு நாம் செயல்பட முடியாதபடி ஒடுங்கப்படும் பொழுது எதன் உணர்வின் தன்மையோ அதனை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஞானிகள் காவியங்களைப் படைத்தாலும் ஒவ்வொரு குணத்திற்கும் உருவத்தைக் கொடுத்து அதற்குண்டான நிறத்தைக் கொடுத்து அதனுடைய செயலாகங்களைக் காவியமாக படைத்து… அதனை உற்று நோக்கப்படும் பொழுது ஒவ்வொன்றையும் நாம் அறியும் வண்ணமாகக் காட்டி உள்ளார்கள்.

1.நம்மை அறியாது நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் என்ன செய்யும்…?
2.அதனுடைய ரூபங்கள் எப்படி மாறும்…?
3.நுகர்ந்த நிறங்கள் எப்படி மாறும்…? என்று அவர்கள் காட்டிய வழிகளில் நாம் நுகர்கின்றோமா…?

பல பல நிறங்கள் சிவப்பு கருப்பு நீலம் மஞ்சள் என்று வந்தாலும் அவைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது அதனுடைய நிறங்கள் மாறுகின்றது. அதிலே உருவாகும் உணர்ச்சிகள் மாறுகின்றது.

வித்தியாசமான நிற ஆடையை அணிந்தால் உடனே சோர்வாகும். நீலக் கலரைப் பார்த்தால் இருட்டடையும் நிலை வருகின்றது. மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் பளிச் என்று இருக்கும் இளம் மஞ்சளைப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் ஆகின்றது. அது ஒளியாகக் காட்டும் போது தெளிவாகின்றது மனம்.

வெள்ளைத்துணி அணிந்து இருப்பவரைப் பார்த்தால் பளிச்சென்று தெளிவாகும். இளம் மஞ்சளைப் போட்டிருந்தால் மகிழ்ச்சியூட்டும் நிலைகள் வரும்.

பளிச் என்று வெள்ளை நிறம் வந்தாலும் கண் கூசும் நிலையும் வருகின்றது.

ஆடையில் கருப்பும் சிவப்பும் வெள்ளையும் கலந்து இருந்தால் உற்றுப் பாருங்கள். அவர் முகத்தையும் பாருங்கள்… இருண்ட நிலை இருக்கும் நுகரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது.

கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்ட பின் திரும்பிப் பார்த்தால் சிந்திக்கும் திறன் இழந்து அந்த உணர்வின் நிலை கொண்டே நம் எண்ணங்களும் செயல்படுவதைப் பார்க்கலாம்.

ஆடைகளின் நிறத்திற்குள் இவைகள் எல்லாம் அடங்கியுள்ளது.

இதைத்தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.கறுப்பு நிறத்தைப் பார்த்தபின் நம் மனதை இருளடையச் செய்யும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனை இழக்க செய்கின்றது.
2.நுகர்ந்ததை இருள் சூழும் உணர்வின் அணுவின் கருவாக உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அணுவின் இயக்கம்… அதனின் வளர்ச்சி எவ்வாறு…? என்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள். இதை எல்லாம் உங்களிடம் இப்போது சொல்கிறேன் என்றால் “எனது பாக்கியம்… குருநாதரால் நான் அறிய முடிந்தது…”
1.அவர் உணர்த்தியதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது
2.உங்களுக்குள் இயக்கும் உணர்ச்சியின் நிலைகள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதை உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.

ஆகவே… ஆறாவது அறிவின் துணை கொண்டு இதையெல்லாம் தெளிவாக்கப்படும் பொழுது “இதைப் பெற வேண்டும்…” என்ற ஏக்கம் கொள்வோருக்குள் இது பதிவாகின்றது.

மீண்டும் நினைவு கொண்டால் அதனுடைய ஞானத்தை உங்களுக்குள் பெருக்க முடிகின்றது.