அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை அருள் ஞானத்தால் பக்குவப்படுத்தும் வழி

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை அருள் ஞானத்தால் பக்குவப்படுத்தும் வழி

 

வியாபாரங்களில் கொடுத்தது வரவில்லை என்றால் “கொடுத்தேன், வரவில்லை…!” என்ற இந்த உணர்வை எடுத்து இந்த உணர்வோடு சேர்த்து இன்னொருவரைச் சேர்த்தால் கடன் வாங்குவார்கள்… பின் போய் விடுவார்கள்.

கடன் கொடுத்தோம்… இன்னும் வரவில்லை என்று எண்ணும்போது அதைச் சமாளிக்க… இருந்த பணத்தைக் கொண்டு சரக்கை வாங்கச் சென்றால் மட்டமான சரக்கை வாங்கி வந்துவிடுவோம்.

அந்த மட்டமான சரக்கு எப்படி விற்கும்…? என் வியாபாரமே நின்று போய்விட்டது என்போம். இது எல்லாம் சந்தர்ப்பங்கள். உணர்வுக்கொப்ப எண்ணங்களை மாற்றி நல்லவை என்றாலும் மறந்துவிட்டுச் செய்து விடுவோம்.

எப்படியும் லாபத்தைப் பெறுவோம்…! என்று செய்தாலும் முதலில் லாபம் வரும். பின்… அது தடை என்ற உணர்வுகளை ஊட்டிவிடுகின்றது. நம் எண்ணம் நமக்கே எதிரியாக உருப்பெற்று நம்முடைய நினைவும் நல்லதைப் பெறாது நமக்குள்ளே எதிரியை உருவாக்கி விடுகின்றது.

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் இந்த அறிவின் தன்மை வளர்கின்றது. தீமைகள் வரும் பொழுது அதை மாற்ற உங்கள் நினைவின் ஆற்றலைத் துருவ நட்சத்திரத்தினுள் செலுத்தி அதை எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள். வியாபாரத்தைச் சீர்படுத்த முடியும்.

ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் “இத்தகைய தியானம் செய்வோரை…” மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்…!

தியானத்தில் சிறிது நேரம் அதிகமாகி விட்டால்
1.“இவனுக்கு வீட்டுக் கவலை இருக்கின்றதா…?
2.”எவனோ சாமியார் சொன்னான்… என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான்…” என்பார்கள்.

இது மாதிரிப் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

சில வீட்டில் ஆண்கள் தியானம் செய்யாது பெண்கள் இந்தத் தியானத்தைச் செய்வார்கள். அப்போது தன் கணவரை எண்ணி… எப்படியோ இவர் தொழிலுக்காகப் பாடுபடுகின்றார்… ஆனால் உணர்வுகள் அவரை அறியாமல் இயக்குகின்றது…!
1.நாம் எப்படியாவது அவருக்கு மன வலிமை பெறச் செய்ய வேண்டும் என்று தியானமிருந்தால்
2.”சும்மா (தியானத்தில்) உட்கார்ந்து கொண்டிருந்தால் கஷ்டத்தை மாற்றிவிட முடியுமா…?” என்ற உணர்வுகளை
3.அந்த வீட்டிலிருக்கும் கொளுந்தியாலோ நாத்தனாரோ யாராவது ஊட்டுவார்கள்.

குடும்பத்தின் நிலை அறிந்து எப்படியும் நல்லதாக மாற்ற வேண்டும் என்று வீட்டிற்குள் சென்றாலும்… அங்கே சுழன்ற இருளுக்குள்… அந்த அடர்த்தியின் நிலைக்குள் சென்றபின் ஒளியின் தன்மை வெளிப்படாதபடி மங்கி விடுகின்றது.

இப்படி… தியான வழியில் நல்வழிப்படுத்த வேண்டுமென்றாலும் கூட… உலக இயல்புகள் விஷத்தன்மை கொண்ட நிலைகளில் மாறி வரும் போது
1.பக்தி கொண்ட உள்ளங்கள் அதைப் பற்றிக் கொண்டு “அந்தப் பக்தி” என்ற ஒன்றையே நம்பும் நிலை இருகின்றது.
2.ஆண்டவன்தான்…! அந்தத் தெய்வம்தான் காக்கும்…! என்ற நிலைகளில் இருக்கின்றனர்.
3.ஆனாலும் “நான் உன்னையே தான் வணங்கினேன்… எனக்கு இந்தத் துன்பம் வருகின்றதே…!” என்ற இதுவும் வருகின்றது.

அப்பொழுது நாம் எதன் மேல் பக்தி கொள்கின்றோம்…?

யாராவது நல்லவர்களைப் பார்த்தால் சந்தோஷம் அடைவதற்குப் பதிலாகப் பெருமூச்சு விடுவார்கள். நாம் இத்தனையும் செய்ய “ஆண்டவன் நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்…!” என்பார்கள்.

இது மாதிரிச் சொல்லி ஒருவரைக் குற்றவாளியாக்குவோம்.

வசதி இருப்போரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.இவர்கள் எதை நினைக்கின்றார்களோ அந்த உணர்வின் தன்மையாகி
2.அவன் அவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்… இவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்… ஏமாற்றிக் கொண்டே உள்ளான்
3.ஆனால் “தெய்வம் அவனுக்குத் தான் கூரையைப் பிய்த்துக் கொட்டிக் கொண்டே இருக்கின்றது…” என்பார்கள்.

இவைகளெல்லாம் சந்தர்ப்பம். இது எதை உருவாக்குகின்றது…? இப்படி மாற்றும் உணர்வுகள் உருப்பெற்று விடுகின்றது.

நாம் நன்மை செய்ய வேண்டும் என்றால் நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழந்து விடுகின்றது. அதற்கு வலுக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…? யாம் வெளியிட்ட அருள் ஞானப் புத்தகங்களைச் சிறிது நேரம் படிக்க வேண்டும்.

மற்றவர்கள் நினைப்பதை மாற்ற வேண்டுமென்றால்… சாமி என்ன சொல்லி இருக்கின்றார்கள்…? தீமைகள் நம்மை எப்படியெல்லாம் தாக்குகின்றது…? என்று சிறிது நேரம் படித்தால் இவர்களின் மாறான உணர்வும் இணைக்கப்படும் பொழுது “அவர்களுக்கும் இந்த நினைவு வரும்…”

என்னடா படிக்கிறாய்…? என்பார்கள். முதலில் “படிக்காதே…” என்று சொல்வார்கள். விடாமல் படிக்கும் பொழுது
1.நல்ல உதாரணங்களைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்பார்கள்.
2.சிறிது சிறிதாக நம் மேல் இருக்கும் வெறுப்புகள் மாறும்.
3.நல்லணவைகளை அவருக்குள் புகுத்தி அந்த நிலையை மாற்ற முடியும்.

இந்தத் தியான வழியில் சில பேர் “வைராக்கியமாக…” சாமி சொன்னதை எடுத்துக் கொள்வார்கள். “என்னை விடமாட்டேன் என்கிறார்களே…” என்று திருப்பிப் படித்தால் “என்னால் புத்தகமும் படிக்கவில்லை… எதுவும் செய்ய முடியவில்லை…” என்ற உணர்வுகள் கலந்து மனச்சோர்வும் மனச்சஞ்சலமும் வந்துவிடுகின்றது.

1.நாம் நல்லவைகளுக்குத் தானே போகின்றோம… இப்படிச் செய்கின்றார்களே என்ற “விஷத்தின் உணர்வுகளை”
2.நமக்குள் மாற்றப்படும் போது நம் செயலாக்கங்களும் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஆகவே… நாம் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். அவர்கள் செயல்களில் உண்மையை உணரும் பருவம் வரவேண்டும் என்ற ஏக்கத்தைச் சிறிது நேரம் எடுத்துவிட்டு அந்த உணர்ச்சியைக் கண்களால் பார்த்து உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.

அப்படிச் செய்யும் பொழுது அவர்களும் அதைக் கேட்க நேருகின்றது. இப்படிச் சில நாள் சிறிது நேரம் மட்டும் படிக்க வேண்டும்.

அதையே படித்துக் கொண்டிருந்தால் அவர் சங்கடமாக இருக்கும் பொழுது அதைச் செய்தால்… “ஏண்டா கத்திக் கொண்டிருக்கிறாய்…? இருக்கிற துன்பத்தில்…!” என்ற நிலைகளில் இதுவும் வந்துவிடும்.
1.அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில் இதனைச் சிறிது வெளிப்படுத்தி
2.படிப்பதை உற்று நோக்கிக் கேட்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நெல் பதரினை நீக்க… “சொளவுகளில்…” எடுத்துத் தூவுவார்கள். காற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் தூவினால் பதர்கள் நீங்கும். காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் தூவினால் போகவே போகாது. திரும்பத் திரும்ப தூவ வேண்டும்.

திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது சுத்தப்படுத்த முடியாதபடி சோர்வடைந்து விடுவோம். பதர் அதிகமாகி பிரியாத நிலையில் அடைப்பட்டுவிடும்.

இவைகளெல்லாம் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தவறுகள் கூடுகின்றது. இதைப் போன்று குடும்பத்தின் நிலைகளில் தவறுகளை நீக்கும் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே தான் உங்களைத் தெளிவாக்க இதை எல்லாம் நினைவுபடுத்துகின்றேன்.
1.சந்தர்ப்பங்கள் நாம் நல்லது பெறாதபடி எப்படித் தடைபடுத்துகின்றது…? என்று
2.அந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலையை உணரச் செய்கின்றது.
3.அதற்குத்தக்க சந்தர்ப்பத்தில் படும் பொழுது செயல்படுத்துகின்றது.
4.ஆக மற்றவர்கள் உடல்களில் உள்ள பதர்களை நீக்கும் சக்தியாக நம் சொல் ஆகின்றது.

மதில் சுவர் மறைத்தால் அப்பகுதியில் பதரை நீக்கினால் என்னவாகும்…? அந்தக் காற்று புகாது. அதே மாதிரி வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றது. கரை ஓரத்தில் பதரை நீக்குகின்றீர்கள். ஆனால் அங்கே வரும் காற்றினைத் தடைப்படுத்தினால் பதர் நீங்காது.

அது போல் தான்
1.பிறருடைய உணர்வுகள் பல வகையிலும் உணர்ச்சிகளைத் தூண்டி வெறுப்பென்ற நிலைகள் வருகின்றது.
2.அந்த வெறுப்பென்ற உணர்வுகளை மாற்ற… புத்தகத்தைப் படித்தால் நல்ல சொற்கள் நமக்குள் பதிவாகாதபடி
3.அவர்கள் உணர்ச்சிகள் நமக்குத் திரை மறைவாகி விடுன்றது.

ஆகவே… திரை மறைவுபடுத்தும் உணர்வினை நீக்க அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நமக்குள் வரும் தீமையின் பதர்களை நீக்க இது உதவும்.

1.தியான வழியில் உள்ள அனைவரும் உங்கள் வாழ்க்கையில் தெரிந்து… தெளிந்து…
2.தெளிவாக வாழச் செய்யும் அந்த அருள் ஞானத்தைப் பெற்று… அருள் சக்தி பெற்று…
3.என்றென்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

துன்பம் வரும் நேரத்தை… மெய் ஒளியை நமக்குள் கூட்டும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற வேண்டும்

துன்பம் வரும் நேரத்தை… மெய் ஒளியை நமக்குள் கூட்டும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள் வழி கொண்டு அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று… அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்குச் “சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்…”

இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1.சாதாராண வாழ்க்கையில் சொல்வது போல “என்னத்த…?” என்ற சோர்வை விடுத்து
2.உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்து விடாதபடி “நாம் நிச்சயம் மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம் என்றும்
3.மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கி விட்டு “நிச்சயம் ஒளி நிலை பெறுவோம்…” என்ற ஏக்க உணர்வுடன் நீங்கள் செயல்படுங்கள்.

அவ்வாறு செயல்படும் பொழுது வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும்
1.துன்பம் வரும் நேரங்களில்தான் “மெய் ஒளியை நாம் கூட்டும் நல்ல சந்தர்ப்பமாக” ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
2..நமக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து… “நாம் மெய் ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்…!” ஏன்று எண்ணுங்கள்.

அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக நம் பேச்சும் மூச்சும் இருக்கும்,

அந்த நிலைகளை நாம் பெறுவோம்.

எத்தகைய துன்பங்கள்… எந்த நேரத்தில் வந்தாலும்… நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு நாம் அருள் சக்திகளைப் பெறுவோம்…! என்று உறுதி கொள்வோம்.

அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்கு…
1.எந்த மகரிஷிகள் அவர்கள் அதை விளைய வைத்தார்களோ
2.அந்த உணர்வலைகளை “சிலிகான்களாக…” உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.

இனி இதைக் கூட்டிப் பெருக்குவது உங்கள் கையில்தான் இருக்கின்றது.

நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. அதை யாம் பதிவு செய்கின்றோம். நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் யாமும் ஒளி நிலை பெறுகின்றோம்.

என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறச் செய்யும். ஆகவே உலகம் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதை யாம் பரப்புகின்றோம்.

இதையே நீங்களும் எடுத்து… உங்கள் உடலுக்குள்ளும் பெருக்கும் போது… உங்கள் பேச்சும் மூச்சும் பிறரை அது நன்மை பெறச் செய்யும்.

தியானத்தில் சக்தி கூட்ட வேண்டிய சரியான முறை

தியானத்தில் சக்தி கூட்ட வேண்டிய சரியான முறை

 

குருவின் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை பெற எண்ணி ஏங்கித் தியானிப்போம். உணர்வுடன் எண்ணி ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியைத் தாண்டித்தான் உயிருக்குள் மோத நேரும்.
1.காலையிலிருந்து நாம் எடுத்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் இதெல்லாம் முன்னாடி இருக்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் புருவ மத்தியில் இணைத்து விட்டால் இது முகப்பிலே வந்து விடுகிறது.
3.நம் உடலுக்குள் அந்த்த் தீமைகள் புக விடாதபடி நாம் தடுத்துக் கொள்கிறோம்.

புருவ மத்தியில் இவ்வாறு தடுத்துப் பழகிய பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று உணர்வை வேகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

நாம் புருவ மத்தியில் தடுத்து உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து வலுவாக்கப்படும் பொழுது…
1.அவன் இப்படிச் செய்தான் இவன் இப்படிப் பண்ணுகின்றான் தொழிலில் இப்படி ஆனது குடும்பத்தில் இப்படியானது என்ற
2.இந்த உணர்வுகள் எல்லாமே அனாதை ஆகி விடுகிறது.
3.அனாதையான பின் சூரியனுடைய காந்த சக்தி அவைகளை இழுத்துக் கொள்கின்றது. நம் ஆன்மா சுத்தமாகிறது…!
4.ஆன்மாவைச் சுத்தமாக்கும் முறை தான் இது… இப்படித் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி என் பையன் நோயாக இருக்கின்றான் உடல் நலம் பெற வேண்டும் என்ற “இந்த ராகம் பாடினால்…” நோய் தான் அங்கேயும் வளரும் இங்கேயும் வரும். இதை நீக்க முடியாது.

சில பேர் இப்படித்தான்… என் பையன் நோய் நீங்க வேண்டும்… நோய் நீங்க வேண்டும்…! என்று தான் தியானித்தேன் என்பார்கள். ஏனென்றால் இந்த உணர்வை எண்ணும் பொழுது அந்த வேதனை தான் இங்கேயும் வரும். அதை மாற்ற முடியாது.

அவன் படிக்கவில்லை… படிக்கவில்லை என்று சொல்லிவிட்டு… படிக்காமல் இருக்கின்றானே… படிக்காமல் இருக்கின்றானே…! என்று இதைத்தான் தியானம் செய்வார்கள்.
1.அப்பொழுது அவன் மீது வெறுப்பு தான் வருகின்றது… அந்த வெறுப்பு தான் இங்கு தியானம் ஆகின்றது.
2.இது எல்லாம் முறையற்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். அவன் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் இப்படித்தான் எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யாதபடி அந்தப் பையனுடைய உணர்வுகள் இப்படி இருக்கின்றானே என்று குறுக்கே வந்தால் தியானத்தில் நெளித்துப் பார்ப்பார்கள். ஒன்றும் முடியாது. அந்தப் பையனின் உணர்வு தான் முன்னாடி வரும். தியானத்தில் அருள் உணர்வை எடுக்க முடியாது.

அப்பொழுது அந்த மாதிரி நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

உடனே கண்களைத் திறந்து… “நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்துற்குக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி விட்டுக் கண்களை மூட வேண்டும். உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

இப்படி நமக்குத் தொல்லை கொடுக்கும் வெறுப்பு வேதனை போன்ற பிற உணர்வுகள் வந்தால்
1.கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி கண் வழி கவர்ந்து
2.பின் கண்களை மூடி உயிர் வழி உள்ளுக்கே செலுத்துங்கள்… இந்த உணர்வை வலுவாக்குங்கள்.
3.இதைச் செய்து பாருங்கள்… தியானத்தில் நிச்சயம் சக்தி உங்களுக்குள் கூடும்.

இந்த முறைப்படி செய்ய வேண்டும்.

உங்களுக்குள் அழுக்கு அதிகமாக இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு நாம் இந்த முறையைக் கையாள வேண்டும். உங்களால் முடியும்.

சிறிது நாள் முயற்சி எடுத்துச் செய்தால் அந்தப் பழைய உணர்வுகள் எல்லாம் மாறும். “ஒரு புதுமையான சக்தி கிடைக்கும்…”

நல்ல நிலைகள் கொண்டு நல்ல செயல்களைச் செயல்படுத்தும் போது பிறருடைய தீமையான உணர்வுகளைக் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் புகுந்து நோயாக எப்படி உருவாகின்றதோ அதே போல
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க எடுக்க
2.அது நமக்குள் புகுந்த தீமைகளை மாற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும்.

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்

 

இப்பொழுது ஊரில் ஆட்டை அறுக்கின்றார்கள்… ஆட்டை அறுப்பவர்கள் ஆட்டினை ஈகையுடனா பார்க்கின்றார்கள்…? அதைக் கொல்ல வேண்டும்…! என்ற உணர்வுடன் பார்க்கின்றார்கள்.

கறிக் கடைக்குச் சென்று கறி வாங்கச் செல்கின்றவர்கள் கடைக்காரர் ஆட்டை அறுப்பதைப் பார்த்தால் கறி வாங்கச் சென்றவர்களுக்கு “எச்சில்…” ஊறிக் கொண்டே இருக்கும்.

ஆடு அறுக்கப்பட்டு ஆட்டின் கறி தமது கைக்கு வருவதற்கு முன்னால் ஆடு அறுக்கப்படுவதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இப்படி ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கின்றது…? என்பதை நேரடியாக அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர்.

கறி சாப்பிடுகின்ற ஆர்வத்தில், ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்கள்.
1.அறுக்கப்படும் ஆடோ கத்திக் கொண்டிருக்கும்.
2.ஆடு அறுக்கின்றவரைப் பார்த்து அவனை ஏங்கி… “இந்த மாதிரிக் கொல்கின்றானே…” என்ற உணர்வோடு வேதனைப்படுகின்றது.

கடைக்காரரோ… ஆட்டை வேதனைப்படுத்திக் கொன்று, தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்றிருக்கும் பொழுது இதனின் உணர்வுகள் அவருக்குள் கவர்ந்தபின் இந்த ஆன்மா அடுத்தவரின் உடலில் எப்படிச் செல்கின்றது…? என்பதனைக் காண்பித்தார் குருநாதர்.

அதே சமயத்தில் ஆட்டுக் கறி வாங்கப் போன இடத்தில் ஆட்டின் இரத்தத்தை வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பார்கள். ஆட்டை அறுப்பதை இரசித்துக் கொண்டு இரத்தம் எப்பொழுது கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள். ஆட்டை அறுத்து முடித்தவுடனே, இரத்தத்தை “தான் தான் முதலில் வாங்க வேண்டும்” என்று காத்திருப்பார்கள்.

ஆட்டை அறுக்கும் பொழுது ஆட்டினிடத்தில் உருவான வேதனையை நாம் இரசித்து பார்க்கும் பொழுது
1.நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நமது உயிரில் பட்டு நம்முள் உமிழ் நீராக மாறி நமது சிறுகுடலில் கலக்கின்றது.
2.நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறினாலும் அந்த உமிழ் நீருடன் இயக்க அணுக்கள் கலந்து
3.இரத்தமாக மாறும் பொழுது இயக்க அணு “ஜீவ அணுவாக” மாறுகின்றது.
4.ஆடு எத்தகைய வேதனைகளை அனுபவித்ததோ அந்த வேதனையின் உணர்ச்சியின் அணுக்கள் உடல் முழுவதும் படர்கின்றது.
5.அந்த உறுப்புகளில் எந்த வேதனை வருகின்றது…? என்பதைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர்

நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும் கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலிமைகளைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தோம் என்பதைப் பார்த்தோம்.

இப்போது மனிதரானபின் இரக்கமற்ற நிலைகளில் ஆட்டைக் கொல்லும் பொழுது அப்படிக் கொன்று, ஆட்டின் உயிரான்மா வெளி வரும் பொழுது கொன்றவரின் உடலிலோ அல்லது கொல்லத் தூண்டியவரின் உடலிலோ ஆட்டின் உயிரான்மா இணைந்து விடுகின்றது.

ஏனென்றால்…
1.ஆட்டினுடைய எண்ணங்கள் இன்னார்தான் நம்மைக் கொல்லச் சொல்லித் தூண்டினர் என்றும்
2.இவர்தான் நம்மைக் கொன்றார் என்றும் அந்த உணர்வுகள் அங்கே வந்து
3.அவருடைய உடலுக்குள் ஆட்டின் உயிரான்மா புகுந்து விடுகின்றது.

ஆனால் ஆட்டைக் கொன்றவரிடத்தில் இரக்கம் ஈகை சிறிதும் இல்லை. ஆகவே அவரிடத்தில் இரக்கமற்றுக் கொல்லும் உணர்வின் வலிமை அதிகமாகின்றது. அந்த மனிதரிடத்தில் பரிவு பண்பு என்பது துளியும் இல்லை.

இத்தகைய நிலை வரும் பொழுது
1.இந்த மனித உடலின் முதுமைக் காலத்தில் மிருக உணர்வின் தன்மையே மிஞ்சும்.
2.மனித உடலின் உணர்வுகள் அனைத்தும் அழுகிவிடும்.
3.பின் மனித உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா மிருகப் பிறவிக்கே போகின்றது.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப இன்று மனிதராக இருக்கின்றார்… நாளை மனிதரல்லாத நிலைகளில் எப்படிச் சேர்கின்றார்…? என்பதனையும், இது காண்பிக்கின்றது.

1.நீ வேடிக்கை பார்க்கின்றாய்… நுகர்ந்த உணர்வு உமிழ்நீராக மாறுகின்றது.
2.உமிழ்நீர் ஆகாரத்துடன் கலந்து சிறு குடலில் கலந்தபின் அந்தச் சிறு குடலின் அணுக்கள் எப்படி இயக்கமாகின்றது.
3.பின் பெருங்குடலுக்குப் போகும் பொழுது வேதனை உணர்வுகள் ஆகாரத்தை ஜீரணிக்க மறுக்கின்றது.
4.நாம் சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடியாத நிலை எப்படி ஆகின்றது…?
5.ஆகாரம் இரத்தமாக மாறி கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து சேரும் பொழுது இரத்தத்துடன் எப்படி ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
6.முதலில் இயக்க அணுவாக இருக்கின்றது… உடலுக்குள் போனவுடன் ஜீவ அணுவாக மாறுவதும்
7.அதனுடைய மலம் உடலில் சேரும் பொழுது ஏற்கனவே நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட மலங்களில் பட்டபின்,
8.அது நல்ல அணுக்களின் தசைகளை… உறுப்புகளை எப்படிக் குறைக்கின்றது…? என்பதை அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர்.

உடலில் சிறிய புண்ணாக உருவாக்கி சீழ் பிடித்ததென்றால் வட்டமாக அப்படியே கரைத்துக் கொண்டே போகும்.

அதாவது வேதனை உணர்வால் விளைந்த அணுக்கள் தசைகளைக் கரைத்து எப்படிச் சீழாக மாற்றுகின்றது என்பதனையும் நமது உடலின் உறுப்புகள் தேய்ந்து மறுபடியும், நம்முள் விஷத்தன்மைகள் எப்படி வளர்ச்சி அடைகின்றது…? என்பதனையும் குருநாதர் அங்கே அனுபவபூர்வமாக அறியச் செய்தார்.

ஏனென்றால் எத்தனயோ கோடி உடல்களைக் கடந்து மனிதராகப் பிறந்தபின் இரக்கமற்ற செயல்கள் செய்து மற்றவர்களைத் துன்புறுத்தி வாழ்கின்றார் என்ற நிலையும் பார்க்கின்றோம்.

தெய்வங்களின் பெயரைச் சொல்லி ஒன்றுமறியாத ஜீவன்களைப் பலியிட்டு எனக்குச் சுகம் வேண்டும் என்று வேண்டி பிழைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் பார்க்கின்றோம்.

1.இது போன்ற பிழைகளைச் செய்து
2.தம்முள் தீமைகளையும் விஷத்தையும் வளர்க்கும் நிலையைத் தவிர்த்து
3.நம்முள் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்த்தோம் என்றால்
4.இதற்கு முன் அறியாது சேர்த்த இருளை அகற்ற முடியும்…. தீமைகள் வராது காக்க முடியும்.

நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

(1)

ஒரு முறை யாம் குருதேவருடன் சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் உறவினர்களிடம் “தண்ணீர் கொடு… அது கொடு… இது கொடு…!” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி “உணவோ தண்ணீரோ ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது” என்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… “அடப்பாவிகளா…! எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா…?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அங்கே இரயிலில் உடன் வந்தவர்கள்… அந்த நோயான பெண்மணியைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள் “ஏனம்மா…! என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா…? நீ ஏன் கேட்கிறாய்…?” என்று சொன்னவுடன் நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட திட்டுகிறார்களே…” என்று எண்ணுகின்றார்.

சந்தர்ப்பம்… இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது. குருநாதர் இதைக் காண்பித்தார்.

ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

1.மருத்துவர் கூறிய அறிவுரையை உறவினர்கள் கடைபிடிக்கிறார்கள்
2.எதற்காக…? நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று…!

ஆனால் நோயான பெண்மணியோ “இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே…! கொஞ்சம்கூட இரக்கம் இல்லையே…?” என்று எண்ணுகின்றார்.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி… “நாம் இவர்களுக்கு எத்தனை செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே…!” என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன் நோயான பெண்மணியின் வீடு வரை எம்மை சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

இரயிலில் வரும் பொழுது…
1.நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்களுடைய நினைவு
2.இந்த நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வருகிறது… “மகராசி…! எனக்கு உதவி செய்தாளே…” என்ற எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு “துரோகம் செய்தார்களே…” என்று சாபமிட்டது.

இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில் சாப உணர்வுகள் விளைந்து பெருகி அவர்கள் குடும்பத் தொழில் நசுங்கியது.. குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.

இதையெல்லாம் பார்க்கும்படியாக…
1.குருநாதர் எம்மை “48 நாட்கள்” அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார்.
2.ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணிக்கு யார் பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தவுடனே நோயான பெண்மணியின் உயிராத்மா, இவருடைய உடலுக்குள் புகுந்து விட்டது.

புகுந்த பின்… தான் அது எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ அதே வேதனையின் உணர்ச்சிகளை புகுந்து கொண்ட உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்…! ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது… இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது என்று…!

தொடர்ந்து அவருடைய வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகி வியாபார மந்தம் தங்களை அறியாமலே குழந்தைகளிடம் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது சங்கடங்கள் போன்ற பல இயக்கங்க நடப்பதை எல்லாம் அங்கே எம்மைக் கண்டுணரும்படி செய்தார்.

இயற்கையின் இயக்கத்தில்…
1.சந்தர்ப்பம், மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நோய் எப்படி விளைகின்றது…? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

(2)

கோலமாமகரிஷி… ரிஷி நிலை எப்படிப் பெற்றார்…? என்று அறிவதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் தியானமிருந்து வந்தோம்.

அதற்காக மங்களூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்பொழுது அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பா இறந்து போனார். அப்பா இறந்தவுடன் பையனுடைய அம்மா வேதனை கொள்கின்றார்.

பையனுக்கு ஏற்கனவே மூத்த சகோதரி இருக்கிறார். அந்த “இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டுத் தன் கணவர் இறந்து விட்டாரே… இரண்டு குழந்தைகளையும் என்ன செய்வது…?” என்று அம்மா எண்ணினார்கள்.

இப்படித் தன் கணவருடைய உணர்வையே எடுத்துக் கொண்டபின் சிறிது நாட்களில் பையனுடைய அம்மாவும் இறந்து போனார்கள்.

இந்தப் பையனுடைய அம்மாவின் அம்மா… அதாவது பையனுடைய பாட்டி தான் தொழில் செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பாட்டி தன் பேரனைப் பார்த்து, “நாசமாகப் போகிறவன்…! இவன் பிறந்தான் இரண்டு பேரைக் கொன்று விட்டான்…! தொலைந்து போடா நாசமாகப் போகிறவனே…!” என்று பேரனைக் கண்டாலே விரட்டினார்கள்.

பையனுடைய அக்காவோ… “அவன் என்ன செய்வான் பாட்டி…? அவர்கள் இறந்து போனால் இவன் என்ன செய்வான்…! இவனா அவர்களைக் கொன்றான்…?” என்று பையனுடைய சகோதரி தன் சகோதரனை அரவணைத்துப் பேசினாள்.

ஆனால் பாட்டி… “அவனுக்குச் சோறு போடாதே…! வெளியே தள்ளிவிடு… எங்கேயாவது பிச்சையெடுத்துச் சாப்பிடட்டும்…!” என்று சொல்கிறது.

ஆனால் பையனுடைய அக்கா “தம்பி என்ன செய்வான்…?” என்று கூடுமான வரையில் தன் தம்பியைப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

பாட்டியோ… “பையன் பிறந்தவுடன் அப்பா இறந்தார், மூன்று வருடங்களில் அம்மாவும் இறந்தார். வியாபாரமும் கெட்டது… இருக்கின்ற சொத்தும் போனது…!” என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தன் பேரனை “வெடுக்…வெடுக்…” என்று கடுமையாகத் திட்டிப் பேசினார்கள்.

1.தன் பேரன் மேல் பாட்டிக்கு வெறுப்பு அதிகமான அதே நேரத்தில் தன் பேத்தி மீது அதிகமான பாசத்தைக் காண்பித்தார்கள்.
2.இதனின் தொடர் கொண்டு பாட்டி இறந்த பின்… பாட்டியின் உயிராத்மா அந்தப் பேத்தியின் உடலுக்குள் சென்றுவிட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் என்ன நடக்கிறது…?

பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் சகோதரியும்…
1.தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில்
2.தம்பியைப் பார்த்து, “தோலைந்து போடா… நாசமாகப் போடா…” என்று சொன்னாள்.

அதன்படியே தம்பியையும் விரட்டினாள்.

ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்கு மாறுவதும் இதனின் உணர்ச்சிகள் வந்ததும் செயலாக்கங்கள் எப்படி அமைகின்றதென்றும் யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை மங்களூருக்கு அனுப்பினார்.

அதற்கான இடத்தைக் காண்பித்து
1.“இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… அதனை நீ பார்…” என்று சொல்லியிருந்தார் குருநாதர்.
2.அவர் சொன்னது போன்றே நடந்தது.

இதன் தொடர் கொண்டு பெண் பிள்ளையின் உடலில் வேதனை உணர்வுகள் வளர்ந்து நோய் வந்து பையனின் சகோதரியும் மடிந்து விட்டது.

பையனோ… ஒதுக்கப்பட்ட நிலைகளிலிருந்து மற்றவர்களால் காக்கப்பட்டு அவன் தொழிலில் பெரியவனாக வளர்ந்து விட்டான்.

ஒதுக்கப்பட்டாலும்
1.தன் மீது பற்று கொண்டு தான் எப்படியும் வளர வேண்டும் என்று மற்றவர்களின் அன்பைப் பெற ஆரம்பித்தான்.
2.‘பாவம் பையன் என்ன செய்வான்…!” என்று எண்ணிய உணர்வு கொண்டு மற்றவர்கள் அவனுக்கு உதவிகள் செய்தனர்.

அவன் சிறந்த விஞ்ஞானியாகவே ஆகிவிட்டான்…. அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் அனாதையாக இருந்தாலும் தன் உணர்வின் வேகத்தைக் கூட்டித் தன்னைக் காக்க வேண்டுமென்ற உணர்வை எடுத்து விஞ்ஞானி என்ற நிலை பெற்று விட்டான்…!

இது நடந்த நிகழ்ச்சி…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

 

பொங்கல் நாளில் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

இருளை நீக்கிடும் அருள் நாளாக அது அமைந்து அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலில் சேர்த்து அருள் உணர்வுகளை பொங்கச் செய்து இருளை அகற்றி… நம் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாகவும்… நமது குடும்பங்களில் அருள் உணர்வுகளைப் பொங்கி அருள் வழி வாழ்ந்து… மகிழ்ந்து வாழும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்ப்போம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இருளை நீக்கிடும் நிலையாக எப்படி வளர்க்கின்றதோ இதைப் போல்
1.நம் உடலுக்குள் இருக்கும் எத்தனையோ கோடி உணர்வுகளையும் (அணுக்களில்)
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு நமக்குள் சுவைமிக்க உணர்வின் ஞானத்தைப் பொங்கும்படி செய்து
3.அருள் வழி வாழும் பிறவி இல்லா நிலை அடையும் அருள் உணர்வுகளை நாம் பொங்குவோம்.

இன்றிலிருந்து…
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்
2.அருள் வழியில் வாழ்வோம்
3.இருளை அகற்றுவோம்
4.மெய்ப்பொருளைக் காண்போம் மெய் வழி வாழ்வோம்
5.அனைவரையும் அரவணைத்து வாழ்வோம்
6.அன்புடன் வாழ்வோம்… பண்புடன் வாழ்வோம்
7.பரிவுடன் வாழ்வோம் என்ற இந்த உணர்வுடன் நம் மனதை நிறைவுபடுத்தி அருள் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.

இந்த நாளை அருள் ஞான நாளாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பொங்கும் மங்களமாக… என்றும் நமக்குள் அது வளர்ந்து அருள் மணம் தவழும் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

நம் பேச்சும் மூச்சும் கேட்போரை மகிழ்ந்து வாழச் செய்வோம்.
1.நமது குரு அருள் நமக்குள் பரவி
2.அந்த உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.

உலக மக்கள் அருள் ஞான வழியில் அருள் வழியில் வாழ்ந்திடும்… மலரைப் போன்ற மன மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தியை நாமும் பெறுவோம்.

நம் உடலில் அதை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரையும் அதைப் பெறச் செய்வோம். அவர்களை மகிழச் செய்வோம் உலக மக்களை மகிழ்ந்து வாழச் செய்வோம் என்று உறுதிப்படுத்துவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்குவோம்… பொங்கச் செய்வோம்.
1.எல்லோருக்குள்ளும் அதைப் பொங்கச் செய்வோம்
2.அந்த அருள் மணத்தை எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்வோம்.

நாம் இதையே தியானிப்போம் தவமிருப்போம்…!

சதுர்த்தி

சதுர்த்தி

 

சதுர்த்தி என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள். ஒரு தவறு நடக்கின்றது என்று பார்த்து என்ன… ஏது…? என்று அதை நுகர்கிறோம் என்றால் உடலுக்குள் அணுவாக உருவாகதபடி அதை நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்தி விட வேண்டும்.

1.இந்த ரத்தம் தான் உடலில் உள்ள எல்லா உறுப்புகள் முழுவதும் சுற்றி வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் முன்னக்கூடியே செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுவின் முகப்பிலும் அந்தக் காந்தப்புலன் இருக்கும். இதன் துணை கொண்டு அங்கே எண்ணப்படும் பொழுது ரத்தத்தில் இந்தச் சக்தி கலக்கின்றது.

உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் ரத்தத்தின் வழி தான் உணவை எடுத்து வாழ்கிறது.
1.காற்றில் இருக்கும் தன் இனமான சத்தைச் செடி கொடிகள் எப்படி எடுத்துக் கொள்கிறதோ
2.அதே மாதிரி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் இரத்தத்தின் வழி தன் உணவை எடுத்துக் கொள்கின்றது.

இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் முன்னக்கூடியே அந்த அணுக்களுக்குச் செலுத்தி விடுகின்றோம்.

நாம் முதலில் நுகர்ந்த தீமை சிறிதளவு தான் உள்ளே சென்றிருக்கும். அதே சமயத்தில்
1.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லும் பொழுது…
2.முதலில் புருவ மத்தியில் தடுத்தது போல உள்ளேயும் நாம் தடுத்துக் கொள்கின்றோம்.

அதற்குப்பின் கண் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கருமணி தான் நாம் பார்ப்பதையெல்லாம் படமாகப் பதிவாக்குகின்றது.

அதனுடன் இணைந்த நிலையில் தான் நரம்பு மண்டலம் உள்ளது அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் செய்திகள் கண் கருமணி வழி… அதனுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் வழி தான் எல்லா அணுக்களுக்கும் செல்கின்றது.

1.அந்தக் கண் கருமணியுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் முழுவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி இணைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை எல்லோரும் நீங்கள் எடுக்க முடியும். ஒன்றும் சிரமம் இல்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திரும்ப எண்ணுகின்றோம் அதே போல இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் தீமை நமக்குள் வராது தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து… அதை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதை நீங்கள் செய்து பழகுங்கள்… தீமைகள் வராதபடி நாம் தடுக்கின்றோம்… அது தான் விநாயகர் சதுர்த்தி.

ஒவ்வொரு நிம்டமும் நாம் நுகர்வது உடலுக்குள் வினையாகின்றது. ஆனால் தீயவினை உருவாக்காதபடி அதை நாம் நிறுத்திப் பழக வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. அறியாமல் தான் அத்தகைய உணர்வுகள் தீயவினைகள் நம் உடலுக்குள் நுழைந்து எத்தனையோ கலாட்டா செய்கின்றது.

அதை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. சுண்ணாம்புச் சத்தை எல்லாம் எடுத்து எலும்பாக மாற்றிக் கொள்கின்றது. அதற்குள் இருக்கக்கூடிய அணுக்கள் ஆகாரமாக எடுக்கிறது.

ஆனால் வேதனை அதிகமானால் அந்த விஷம் எலும்பை உருவாக்கிய அணுக்களை உணவாக எடுக்கத் தொடங்குகிறது. டி.பி. என்று சொல்வார்கள்.

அந்த விஷமான உணர்வுகள் எலும்புகளைத் தாக்கி விடாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு இணைத்து விட வேண்டும்.

இவ்வாறு…
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களிலும் நாம் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைச் சேர்த்து
2.தீமைகள் புகாத வண்ணம் ஒரு அடைப்பாக… அணைப்பாக… நாம் போட்டுக் கொள்ள வேண்டும்.

நம் உடலில் நம்மை அறியாமல் புகும் ஜீவான்மாக்கள்

நம் உடலில் நம்மை அறியாமல் புகும் ஜீவான்மாக்கள்

 

பிறிதொருவர் வேதனைப்படுவதை நாம் உற்றுக் கவனிக்கும் பொழுது அவ்வேதனையின் உணர்வுகள் நமக்குள் “ஜீவ அணுக்களாக” விளைகின்றது.

இதன் தொடர்வரிசையில் எதனின் உணர்வை நமக்குள் வலுவாக்கினோமோ இதே நிலை கொண்ட மற்றொருவர் இதே வேதனை கொண்டு இறந்தார் என்றால்
1.அவர் மீது நாம் பற்று கொண்டிருப்போம் என்றால்
2.அவருடைய உயிரான்மா நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
3.இது தான் “ஜீவான்மா” என்பது.

தேள்களை பாம்புகளை எறும்புகளை நாம் அடித்துக் கொல்கின்றோம். இவைகளின் உயிரான்மாக்கள் எல்லாம் நம்முள் வந்து விடுகின்றன. நமது உடலின் உணர்வை நுகர்கின்றன. மனிதனாக உருப்பெற்றுக் கருவாகின்றன.

ஜீவான்மாக்கள் மனித இரத்த நாளங்களில் குடிபுகுந்து இரத்த நாளங்களிலே சுழன்று கொண்டே வரும். ஆனால் வளர்ச்சியில்லாத உணர்வின் தன்மை நமக்குள் கருவுறும் கருவுக்குள் இணைந்துவிடும். இந்த உணர்வின் தன்மை கொண்டு அது மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது.

அந்த ஜீவான்மாக்கள் நமது இரத்தத்தில் கலந்து சுழன்று வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

டிரான்ஸாக்சன் (transaction) அதாவது நமது உயிரின் தன்மை உணர்வின் ஒலிகளை உடல் முழுவதும் பரவச் செய்து அதன் வழி கொண்டு நம்மை இயக்குகின்றது.
1.உயிரில் இதன் நுண் உணர்வுகள் சென்றபின்
2.உடலை விட்டுப் பிரியும் பொழுது அந்த ஆன்மா எத்தனை வேதனைப்பட்டதோ
3.அதே உணர்வினை உயிர் வழி நுகரச் செய்கின்றது,

கண் என்ன செய்கின்றதென்றால் அதே உருவத்தைக் காட்டுகின்றது. “ஐயோ… பிசாசு வருகின்றது எதிரி வருகின்றான்…!” போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

பிறிதொரு ஆன்மா புகுந்து கொண்ட உடலில் இவையெல்லாம் தெரியும், ஆனால் நமக்குத் தெரியாது.

மைக்கில் வரும் அலைகளை டிரான்ஸிஸ்டர் (transistor) கவர்ந்து விரிவாக்கி ஒலிக்கற்றைகளை ஸ்பீக்கர் (speaker) மூலமாக எப்படி வெளிப்படுத்துகின்றதோ இதைப் போன்று அந்த ஆன்மாக்கள்
1.நம்முள் ஒளி அதிர்வுகளைக் கண் வழி பாய்ச்சுவதும் உணர்வின் ரூபங்களைக் காட்டுவதும்
2.சொல் வழியாக ஒலிக்கற்றைகளையும் வெளிப்படுத்துகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. பிறிதொரு ஆன்மா நம்முள் வந்து விட்டால் இவ்வாறு இயக்குகின்றது.

அதை விட்டு (உயிரின் பாகம்) நகர்ந்து விட்டால் இரத்த நாளங்களில் எந்தப் பாகத்தில் செல்கின்றதோ அந்த பாகத்தில் வலியும் குடைச்சலும் ஏற்பட்டு… “ஐயோ கை வலிக்கின்றதே… கால் குடைச்சலாக இருக்கின்றதே…” என்பது போன்ற வேதனைகளைத் தூண்டும்.

இது போன்ற பிற ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி பெண்களுக்கே உள்ளது. ஏனெனில் பெண்களிடம் அன்பும் பரிவும் பாசமும் அதிகமாக இருப்பதனால் பெண்களிடம் கவரும் ஆற்றலும் அதிகமாக உள்ளது.

உதாரணமாக குடும்பத்தில் பெண்கள் மிகப் பாசமாக இருப்பார்கள். ஒருவர் இறந்து விட்டால் “ஐயோ… பாவமே…! குடும்பத்தில் இத்தனை பேரையும் விட்டு விட்டுச் சென்று விட்டாரே…!” என்று எண்ணினால் இவர்களுடைய உடலில் அந்த ஆன்மா வந்துவிடும்.

இப்படிப் பிறிதொரு ஆன்மா இவர்களுடைய உடலில் வந்து விட்டால்…
1.தான் மனித உடலில் வாழ்ந்த காலத்தில் என்னென்ன துயரத்தை அந்த ஆன்மா அனுபவித்ததோ
2.அவைகளையெல்லாம் இங்கே விளைவித்து இவர்களுடைய உடலில் கை வலி கால் வலி போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

இப்படிப் பெண்களிடம் பாசத்தின் தன்மை இருப்பதனால் பிற ஆன்மாக்களைக் கவர்ந்து அதன் வழி செல்லப்படும் பொழுது குடும்பத்தில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றன.

இதைப் போன்று நம்மை அறியாமலே துயர் கொள்ளும் நிலைகள் வருகின்றன. இப்படி நம்மை அறியாது வரும் துயரங்களை நீக்குவதற்கு ஜோசியமும் வாஸ்து சாஸ்திரங்களும் பார்த்தால் போய்விடுமா…?

வாஸ்து சாஸ்திரம் பார்த்து வீட்டின் நிலையையும் வாசல்படியையும் மாற்றி வைத்து விட்டால் அனைத்தும் சரியாகி விடுமா…? உங்களைக் காக்குமா…? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

1.மனிதர்களுக்கு ஜாதகமில்லை…!
2.எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவர்கள் தான் ”மனிதர்கள்…”

இன்று வாழும் வாழ்க்கையில் விஞ்ஞான அறிவு கொண்டு, எத்தனையோ சாதனைகளைச் செய்கின்றனர்… எவ்வளவோ மாற்றங்களைச் செய்துள்ளனர்.

விமானம் பறப்பதற்கு ஜாதகமா பார்க்கின்றனர்…?

விஞ்ஞான அறிவு கொண்டு மேகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமானால் விமானத்தை விடவேண்டாம் என்று உணர்கின்றனர். இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு மனிதர் தம்மைக் காத்துக் கொள்கின்றனர்.

ஆனால் மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முள் பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.

நாம் உடல் அழுக்கைப் போக்கச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம். இதே போன்று நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நம்முள் இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நம்முள் செலுத்தும் பொழுது நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து… ஆன்மாவில் பட்ட அழுக்கை அது நீக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்.

எனது வாழ்க்கையில் நான் யார் யாரையெல்லாம் பார்த்தேனோ அவர்களுடைய குடும்பமெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும். அவர்களின் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வின் எண்ணங்களை நமது உடலில் பதிவாக்குதல் வேண்டும்.

அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்.

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது நம் உடலில் அறியாது சேர்ந்த தீய உணர்வின் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது.

இப்படித் தீமைகளை நம்முள் புகாது தடைப்படுத்தி விட்டால் அவைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும்.

ஆகவே
1.துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்.
2.உடலின் பற்றைப் பற்றற்றதாக்குங்கள்… அருள் ஞானத்தைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.பகைமையற்ற வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
4.இருளான உணர்வுகளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்… மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள்.

இதன் வழி அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஏங்கி இருப்போர் அனைவருக்கும் “எமது குரு அருளும் எமது அருளும்… என்றும் உறுதுணையாக இருக்கும்…”

ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் – விளக்கம்

ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் – விளக்கம்

 

தயவு செய்து பிறருக்கு ஏற்படும் துன்பங்களையோ வேதனைகளையோ பார்த்துச் சந்தோஷப்படாதீர்கள்.
1.பிறரின் துன்பத்தைப் பார்த்து “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்று சந்தோஷப்படுவீர்களானால்
2.அதனின் உணர்வுகள் உங்களில் விளைந்து நோயாக உருவாகிவிடும்.

விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளைச் செய்து மனித உணர்வின் செயல்களை அறிகின்றனர். விஞ்ஞானி ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார் பெண்ணை ஆணாக மாற்றுகின்றார்.

அதே சமயத்தில் மனித உடலில் வருகின்ற நோய்களைப் போக்குவதற்குப் பாம்பு தேள் மாடு போன்றவைகளில் பல இரசாயனங்களைக் கலந்து அதில் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.

நமது நுரையீரல் கெட்டுப் போய்விட்டது… இருதயம் கெட்டுப் போய்விட்டது என்றால் இப்பொழுது அஞ்ச வேண்டியதில்லை. பல நவீனக் கருவிகளின் துணை கொண்டு செயற்கை உறுப்புகளை நமது உடலில் பொருத்திப் பழுதுபட்ட உடல் பாகங்கள் மேலும் சிறிது நாளைக்கு வேலை செய்யும்படியாக அமைத்து விடுகின்றார்கள்.

இத்தகைய விஞ்ஞான நிலைகள் இருந்தாலும் இந்த உடலில் எத்தனை நாள் வாழப் போகின்றோம்…? மேலும் சிறிது காலம் வாழுவதற்கே இதைச் செய்கின்றனர்.

இப்படி மாற்று உறுப்புகளை பொருத்திக் கொண்டவர்கள் மற்றவர்கள் மாதிரிச் சந்தோஷமாக இருக்க முடியாது.

ஏனென்றால் மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொண்டபின் முன் போன்று நமது பணிகளைச் செய்ய முடியாது. டாக்டர்கள் சில விதிகளைக் கொடுத்து இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கூறிவிடுவார்கள். இப்படித்தான் நமக்கு மருந்துகளையும் மற்ற நிலைகளையும் கொடுத்துச் சமப்படுத்துகின்றனர்.

இப்படிச் சமப்படுத்தி வாழும் நாம் மற்றொருவர் கடுமையான காய்ச்சலில் இருக்கும் பொழுது அவரை உற்றுப் பார்த்து அவருடைய வேதனையைக் கேட்டறிந்தால் உடனடியாக நமக்குள் பல நிலைகள் வரும்.
1.ஆகவே நாம் எல்லாவற்றிற்கும் அஞ்சி வாழ்ந்து
2.நம்முடைய நிலைகளில் சோர்வடைந்து நிம்மதி என்பதை இழந்திருப்போம்.

சர்க்கரைச் சத்து வியாதிக்கு இனிப்பைச் சாப்பிடக்கூடாது மற்றும் அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால் நாம் விரும்பியதைச் சாப்பிட முடியாமல் நமக்குள் வேதனை வளர்ந்து கொண்டே வரும்.

ஆகவே எவ்வளவு நிலையானாலும்
1.மனிதர் துரித நிலையில் மடியும் தன்மைதான் வருகின்றதே தவிர மனிதர் நீடித்த நாள் வாழும் சக்தி உள்ளதா…?
2.இந்த மனித உடலில் நாம் முழுமையாக இருக்க முடிகின்றதா…? இல்லை.

குறுகிய காலம் வாழ்வதற்காகப் பல உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டேதான் வாழுகின்றோம்.

இதே போன்று ஆஸ்த்மா உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிட்டால், உடனே அவர்களுக்கு ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிடும். குளிர்ந்த பானத்தைச் சாப்பிட்டாலும் இதே போன்று வந்துவிடும்.

ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் தண்ணீரைச் சாப்பிட்டால் எதிர் நிலையான கிருமிகள் உண்டாகி ஆஸ்துமா தொல்லை அதிகமாகி விடுகின்றது. ஆகவே மனிதருக்குள் இத்தகைய வினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.

குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறதென்றால் அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் பேசும் பேச்சின் உணர்வுகளை அவர்களது குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண் உற்றுக் கேட்டு நுகர்கிறதென்றால் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் வளரும் சிசுவினிடத்தில் ஆஸ்துமாவை உருவாக்கும் அணுக் கிருமிகள் உருவாகி விடுகின்றன.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை.

இதே போன்று ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து உள்ளவரை ஒரு கர்ப்பிணிப் பெண் அதிகமாகக் கவனித்து அவருடைய சொல்லைக் கேட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.

இதனைப் பரம்பரை நோய் என்று சொல்லுகின்றார்கள்.

இன்று உலகில் எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் ஆஸ்துமாவில் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் சர்க்கரை வியாதியால் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் இரத்தக் கொதிப்பால் வாடுகின்றனர்.

இப்படி… குடும்பத்தில் ஒருவருக்கு நோய் இருந்தும் உணர்வின் வழி மற்றவருக்கும் பரவுகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் என்று கூறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் நிலையாக நமது குருநாதர்
1.ஒரு மனித உடலுக்குள் வேதனை என்ற நிலை உருவாகி
2.அந்த அசுர உணர்வுகளால் அந்த மனிதர் மடிந்தார் என்றால்
3.அந்த உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நுகர்ந்தவர்கள் எவர் எவரோ
4.அந்த உடல்களைக் கொல்கின்றது…! என்பதை எமக்கு உணர்த்தினார்.

மனித உடலில் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகளுக்கொப்ப தேள் பாம்பு கொசு போன்ற நிலைகள் மனித உடலில் இருந்து பிறக்கும் தன்மை வருகின்றது.

மனிதரை முழுமுதல் கடவுள் என்று விநாயகரை வைத்து ஞானிகளால் காண்பிக்கப்படுகின்றது. மனித உடலில் இருந்து வெளிப்படக் கூடிய உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க ஒவ்வொரு உடலிலும் சேர்க்கப்படும் பொழுது இந்த நிலை ஏற்படும்.

சலிப்பும் சஞ்சலமும் ஒருவரிடம் அதிகமானால் அவர்களுடைய தலையில் பேன்கள் உருவாகும். பேன்கள் தலையில் அதிகமாக உள்ளவர்கள் பத்து நாளைக்குத் தொடர்ந்து சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்கள் தலையிலுள்ள பேன்கள் தன்னால் மறைந்து போகும்.

இது போன்று சலிப்பு சஞ்சலம் வேதனை உணர்வுகளால் உருவாகும் தீமைகளில் இருந்து மீள்வது எப்படி…?

மனிதராகப் பிறந்து நஞ்சை வென்றவர் அகஸ்தியர்
1.அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானார்.
2.நமது பிரபஞ்சத்திலிருந்து மட்டுமல்ல… அகண்ட அண்டத்திலிருந்து எங்கிருந்து நஞ்சு வந்தாலும்
3.அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து நமது உடலில் உருவாக்கி விட்டால்
5.இந்த உடலில் தீமையை நீக்கிடும் சக்தியினை நாம் பெறுகின்றோம்.

மனித உணர்வுகளின் இயக்க உண்மைகளை அறிந்து மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் செயல்பட்டுத் தம்மிடத்தில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி இருளான உணர்வுகளை நீக்கி… மெய்பொருள் காணும் நிலையாக வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும் இருளினை வென்று பேரருள் பெற்று பேரொளி பெற்று… உங்கள் பேச்சால் மூச்சால் பார்வையால் மற்றவர்களின் தீமைகளை நோய்களை நீக்கும் அருளாற்றல் பெற்று… இந்த வாழ்க்கையில் பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட… எமது அருளாசிகள்.

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!

 

யாம் தெரியாமல் எதையும் உபதேசிக்கவில்லை.

உடலுக்குள் சூட்சமமாக என்னென்ன நடக்கின்றது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான் குருநாதர் பல இடங்களுக்கு எம்மை அனுப்பினார்.

கூடுமான வரையிலும்… குருநாதர் எம்மைப் பல வகைகளிலும் கஷ்டப்படுத்தித் தான் உண்மைகளை எல்லாம் தெரிய வைத்தார்.

ஆனால் நீங்கள் கேட்கலாம்… குருநாதர் ஏன் என்னைக் கஷ்டப்படுத்தினார் என்று…?

1.என் உடலுக்குள் எத்தனை தீமைகள் என்னைக் கஷ்டப்படுத்துகின்றதோ அந்தத் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்.
2.அது போல் ஒவ்வொரு மனித உடலிலும் விளைந்த உணர்வுகள் கஷ்டத்தை எப்படித் தூண்டுகின்றது…? சந்தர்ப்பத்தால் ஏற்படுத்துகின்றது…?
3.அதிலிருந்து அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்குத் தான் அதைச் செய்தார் குருநாதர்.

நான் சிறு வயதில் இருக்கும் பொழுது அறியாத நிலைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கின்றேன். அது பதிவாக்காமல் நினைவு இல்லை.

வளர வளர செய்த தவறுகளை மறந்து மறந்து வருகின்றேன். மறந்து வந்தாலும் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே அதனின் வேலையைத் தான் செய்யும்.

சிறு வயதில் கோலி விளையாண்டிருந்தால் வயதான பின்பும்… இங்கே பையன்கள் கோலி விளையாண்டு கொண்டிருந்தால் “ஏய்… நானும் கோலி விளையாடுகிறேன்…” என்று இந்த உணர்வுகள் தோன்றி அங்கே செல்வோம்.
1.பெரிய மந்திரியாக இருந்தாலும்…
2.பார்த்தால் அது இழுத்துக் கொண்டுதான் போகும்.

பம்பரத்தைச் சுற்றுகிறார்கள் என்று பார்த்தால் என்ன செய்வோம்…?

நானும் சிறு வயதில் பம்பரத்தைச் சுற்றி விளையாண்டேன் என்று அந்த ஆசை தூண்டப்பட்டு… “என்னிடம் கொடு… நானும் சுற்றுகிறேன்…!” என்று இந்த உணர்வுகள் இயக்கத் தான் செய்யும்… நம்மைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.

எது பதிவோ… அந்த நிலை நிச்சயம் வந்தே தான் தீரும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும்…? எதைப் பதிவாக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கூர்மையாக விண்ணிலே செலுத்த வேண்டும்.

1.அகஸ்தியன் ஒளிச் சுடரான உணர்வு உங்களுக்குத் தெரிய வரும்.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கற்றைகள் வந்து கொண்டிருக்கின்றது… இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
3.அதை நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

விஷத்தை ஒடுக்கிய பின் அத்தகைய நீல ஒளியாகத் தான் அது காட்டும். கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்று தான் ஒளி வீசும்.

ஆகையினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும். அதைக் கூர்மையாக எண்ணி எடுக்க வேண்டும்.

1.அதை அதிகமாக எடுத்தால் உயிர் அதன் அவதாரமாக நம்மை ஒளியாக மாற்றும்.
2.இதிலே ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை.