மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாக நான் இருக்கின்றேன் – ஞானகுரு

மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாக நான் இருக்கின்றேன் – ஞானகுரு

 

தியானம் செய்யும்போது எப்போதுமே புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரைத் தான் எண்ணி தியானிக்க வேண்டும். “என் (ஞானகுரு) உயிரை எண்ணுவதனால் பயனில்லை…”

சாமி (ஞானகுரு) உயிரால் உருவாக்கப்பட்ட அருள் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் பொழுது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்

குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.

அது மிகவும் வலிமைக்க சக்தி…!

யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.

எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும் ஆனால்
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.

ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆசைகள் எல்லாம் குரு வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது

உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்று தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.

குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும் ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும். ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்.

அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.

“சாமி செய்து கொடுப்பார்…” என்றால்
1.குருவின் வழியை நமக்குக் காட்டினார்
2.அந்த ஞானத்தின் வழியினைப் பதிவாக்கப்படும் பொழுது இதுவே குருவாக அமைந்து
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அருள் வழியாகக் கிடைக்கும்
4.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியும் நீங்கள் பெறுவீர்கள்.

இதிலே இன்னும் விளக்கம் தெரிய வேண்டுமா…?

வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்

வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்

 

தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி… எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்து தன் ஒளியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒளியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளை சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.

வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.

அதாவது யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும்… அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்…
1.அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்…
2.வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்…
3.பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் போது அதற்குத் தக்க உழைப்பைத் தருகின்றதோ
4அந்தந்த நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன்… தன் செயலுக்காக…!

இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?

மனிதன்… இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும்தான் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழுகின்றான்… அத்தகைய வாழ்க்கை உடலுடன் மடியும் நிலை…!

ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தில் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.

புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.

எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி அமைதிப்படுத்தும் ஞானி… மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.

மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.

மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்கு செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.

வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீத செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவ செயலுக்காக சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.

மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்ப சொந்த பந்த செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.

பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும் உணர்வுடன் உடல் சொந்தம். மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும் சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.

1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியை குற்றம் குறைகளை குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்கு சொந்தமாக்கும் செயலாய் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.

மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

 

பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத் தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.

ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.

ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.

அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.

எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார் சும்மாவா கொடுப்பார்…
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைப் போன்ற மற்றவரின் உணர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”

இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்து தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.

அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.

அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.

இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!

தேவரிஷியாகச் செயலாக்குவதற்கு இந்த உடலைப் பயன்படுத்த வேண்டும்

தேவரிஷியாகச் செயலாக்குவதற்கு இந்த உடலைப் பயன்படுத்த வேண்டும்

 

இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி… மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து… அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள… மீண்டும் மழை வர… பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற… இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.

இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு… ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்…
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்…! என்றுதான் ஒதுக்கி விடுகின்றான்.

மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.

இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தை பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா சரீர இயக்கத்தில் செயல்படும்.

1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி
2.இச்சரீரம் மண்ணாக நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாகச் சத்தாகும் அமைப்பாய்
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து… பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளைப் பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்… பல கனி வளங்களிலும்… அபூர்வ இயற்கைத் தன்மைகளும்… இயற்கை சக்திகளும் வளருகின்றது.

இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்…
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.

நம் ஜீவ உடல் உண்மையல்ல…! இயற்கையின் சதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்… ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்… சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்குச் செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.

ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவில் “உடல்” இயக்கக் கோளம்.

உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மா மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.

வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்… என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாக செயலாக்கும் செயலுக்கு… மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.

நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

 

மூன்று லட்சம் பேரைச் சந்தித்து குருநாதர் காட்டிய வழியில் பல வருட காலமாக அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்பொழுது நல்ல உணவை உட்கொள்கின்றேன்… ஆனால் அன்று அப்படி அல்ல. என் இரண்டு காலிலேயும் 28 ஆணி இருந்தது. ஆனால் நீ செருப்பு போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.

ஒரு சின்னக் கல் மீது காலை வைத்தால் போதும்… அ…ஆ…! என்று தலை உச்சி மயிர் நட்டமாக நிற்கும் பாத்ரூமில் சிறிது நேரம் அதிகமாக உட்கார்ந்திருக்க முடியாது… எரிச்சலாகும்.

கால் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும் என்ன வலி வேதனை எப்படி இருக்கிறது என்று…!

இத்தனையும் பொறுத்துக் கொண்டு
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று குருநாதர் சொல்லி விட்டார்
2.ஒவ்வொரு குடும்பமும் எத்தனை பாடு படுகின்றது
3.குடும்பத்தில் உள்ளவர் யாராவது இறந்தால் அங்கே என்ன நிகழ்கின்றது…?
4.இறந்தவரின் ஆன்மாக்கள் எங்கே… எப்படி… என்ன செய்கின்றது…? என்று அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டுத் தான் nhaan எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்தேன். ஆனால்
1.உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நான் சொல்லும் முறைப்படி செய்து அதை நீக்கிக் கொள்ளுங்கள்
2.உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றேன்
3.அதற்குண்டான முறைகளையும் சொல்லி… வழிகளையும் காட்டி சக்திகளைப் பெறும்படி செய்தாலும் “ஏற்பதற்கு ஆள் இல்லை…!”

“தியானத்தைக் கடைபிடிக்கிறோம்… என்று தியான வழியில் வருகின்றார்கள்…! சக்திகளைக் கொடுத்து… உங்களுக்கு வரக்கூடிய தீமைகளை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்… யாரும் எடுப்பதில்லை.

1.”சாமி (ஞானகுரு) எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்…” என்ற இந்த உணர்வுடன் தான் இருக்கிறார்கள்
2.சாமி சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்று (சாதாரணமாக) கேட்கின்றார்கள்.

ஆக மொத்தம் நான் சொல்வதை… “நீங்கள் எடுத்தால் தானே” அது நடக்கும். உணவைக் கொடுத்த பின் அதைச் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படித் தீரும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்குச் சத்துதான். ஆனால்
1.சாப்பிட வேண்டும் என்று ஆசையை மட்டும் பட்டுக் கொண்டு
2.சாப்பிட முடியாதபடி (சாப்பிடாதபடி) வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்…?
3.அந்தச் சத்து உங்களுக்குக் கிடைக்காது… விஷம் தான் வளரும்…!

ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த உயர்ந்த சக்தி நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

யாம் சொன்ன முறைப்படி செய்து ஒரு சமயம் நல்லதாக ஆன பின் மீண்டும் (இன்னொரு) சிக்கல் வந்தால் அதே முறைப்படி செய்து அதிலிருந்து மீண்டு கரையேறுவதற்கு ஆள் இல்லை.

காரணம் அந்தப் பழக்கம் வரவேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

எத்தனையோ பேருக்குத் துயரங்களும் துன்பங்களும் வரும் பொழுது… அதிலிருந்து மீட்டி விடுகின்றோம்… அவர்கள் எப்படியும் தெளிந்து வருவார்கள் என்று…! அந்த எண்ணத்தில் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்

ஆனால் அதற்காக வேண்டி
1.என்னுடைய சக்தியை நான் எல்லா நேரத்திலும் விரயம் செய்ய முடியாது
2.உங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தாலும் கரை ஏறி வருவதற்குண்டான தன்னுடைய சுய பலம் வேண்டும் அல்லவா
3.”எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்” என்றால் சாமி எதைப் பாப்பார்…?

நீங்கள் கஷ்டப்படுவது துன்பப்படுவது இதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால்… அந்தத் தீமையிலிருந்து தப்புவதற்குத்தான் நான் பார்க்க முடியும். உங்களை எப்படிக் காப்பது…?

யாம் இப்பொழுது கொடுக்கக்கூடிய வாக்கின் பிரகாரம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து… அந்தந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தித் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையுங்கள்
2.இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை
3.சிறிது காலம் செய்து பழகிக் கொண்டாலே போதுமானது.

தொழிலிலே ஆசை மற்றதில் ஆசை என்று அதை எண்ணி ஏங்கி… கடைசியில் அது நிராசையாகி விட்டால் வேதனை தான் வருகிறது வேதனை வளர்ந்தால் சிந்தனை இழக்கப்படுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண்டிப்பாக யாம் சொன்ன முறைப்படி நீங்கள் ஆத்ம சக்தி செய்ய வேண்டும். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திவிட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…? என்று சிந்தனை செய்ய வேண்டும்.

அதற்குண்டான உபாயங்கள் நிச்சயம் வரும். அந்த உயர்ந்த சிந்தனைகள் வருவதற்குத் தான் மணிக்கணக்காக உங்களுக்கு உபதேசிக்கிறோம்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய வழி முறைகளை எல்லாம்
2.உங்களுக்குப் பல வகைகளிலும் எடுத்துக் காட்டிக் கொண்டே வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் காப்பாற்ற நினைக்கும் கௌரவம் உடலுடன் மறையக்கூடியது

நாம் காப்பாற்ற நினைக்கும் கௌரவம் உடலுடன் மறையக்கூடியது

 

1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.

மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.

உற்றார் உறவினர் எதிரி நண்பன் தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.

கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய்ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.

வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்…! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்துதான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.

உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.

அதைப் போன்று…
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு – ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.

சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.

1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது

1.ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
2.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை…!

சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்…!”

உடல் இச்சை என்ற “கௌரவப் பிரச்சினை”

உடல் இச்சை என்ற “கௌரவப் பிரச்சினை”

 

ஒருவர் கோபமாக இருக்கின்றார்… சங்கடமாகப் பேசுகின்றார்… சலிப்பாக இருக்கின்றார்… அந்த நேரத்தில் நல்லதைப் பற்றி நாம் உபதேசம் செய்தால் எப்படி இருக்கும்…?

ஏற்றுக் கொள்வார்களா…! நம் மீது வெறுப்பு தான் அதிகமாகும்.

தோசையைச் சுடுகின்றோம் என்றால் முதலில் நெருப்பைச் சரியான பக்குவத்தில் வைத்துத் தோசையை வார்த்தால் அது சரியாக… சீராக வரும். நானும் தோசை சுடுகின்றேன் என்று சொல்லிவிட்டு… சட்டி சூடாகாமல் மாவை வார்த்தால் என்ன ஆகும்…?

அது போலத் தான் ஒரு மனிதனுக்கு நாம் உபதேசிக்க வேண்டும் என்றால்
1.அந்தப் பக்குவமும் கேட்கும் பருவமும் அது எப்படி இருக்கின்றது…? என்று
2.அதை நாம் அனுசரித்துப் பார்த்து நல்லதைச் சொல்ல வேண்டும்
3.அப்போது தான் கேட்பார்கள்…!

இல்லை என்றால்… நல்லதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அவர் கேட்கவில்லை… மோசமான ஆள்…! என்று நாம் எண்ணி விடுகின்றோம்.
1.நல்லதைச் சொல்கிறோம் என்ற பேரில்.. நல்ல குணத்தை வளர்ப்பதற்கு மாறாக
2.”மோசமான ஆள்…” என்ற அந்த உணர்வை நமக்குள் கவர்ந்து விடுகிறோம்.

அவருக்கு நல்லதாக வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் நாம் சொல்கின்றோம். இருந்தாலும் நம் சொல்லைக் கேட்கவில்லை என்றால் நாம் என்ன செய்யப் போகின்றோம்…!

1.வேதனை என்ற உணர்வு வருகின்றது
2.வேதனை என்ற விஷம் வரப்படும் பொழுது நாம் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்
3.சிந்திக்கும் தன்மை இழந்தால் அவர் மீது குற்றங்களைத் தான் சொல்ல வேண்டியிருக்கும்
4.அவரை எண்ணி நமக்குள் குறை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது
5.அவரை நாம் குறையாக சொல்ல நேருகின்றது
6.அவரைத் தான் குறையாகச் சொல்கிறோம் என்று நாம் நினைக்கின்றோம்
7.ஆனால் நமக்குள் முதலில் குறையை வளர்த்துக் கொள்கின்றோம் என்று நமக்குத் தெரியவில்லை.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவ்வாறு தான் இயக்கிக் காட்டும்.

தீமை என்று தெரிகின்றது… அதை அகற்ற பழக வேண்டும். அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவ பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது

ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்… இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.

ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் – ஆறாவது அறிவு முருகன்)

தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?

சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.

உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்

அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.

உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.

அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!

அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.

கௌரவம் அழியக் கூடியது… ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்

கௌரவம் அழியக் கூடியது… ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்

 

கோபம் என்ற கார நெடி உணர்வில் மோதியவுடன் நம் சரீர உணர்வில் இயக்கம் தாங்காமல் துரித கதியாகிறது. அப்பொழுது… “சாந்தம்…” என்ற நல் ஒலியை நாம் எடுக்கும் பொழுது அக்காரத்தின் நெடி வீரமாகின்றது

1.அந்த வீரத்தை முலாம் படுத்தும்
2.ஆத்மாவின் ஆத்ம வளர்ச்சிக்கு… வீரியத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் ஆயுதம் தான்
3.நமக்கு ஏற்படும் எதிர்நிலையின் கோப நிலையின் “காரம்”
4.வீரம் என்ற வீரிய சக்திக்கு “முலாம்…”

இதைப் போன்றே சலிப்பு சோர்வு என்ற ஒவ்வொரு குண நிலைகளுக்கும் உணர்வின் எண்ணத்தை உப்பு புளிப்பு காரத்தை எதில் எத்தன்மை கொண்டு சேர்த்துச் சுவையாக்கிச் சமைத்து சரீரத்திற்கு உட்கொள்ளும் உணவைப் போன்று இந்த ஆத்மாவிற்கு வாழ்க்கையை ஒட்டிய எதிர்நிலைகளைச் சமைக்கக்கூடிய நல் குணங்களாக்கிச் சத்தாக்க வேண்டும்.

தனி உப்பையும் தனிக் காரத்தையும் தனிப் புளிப்பையும் உடல் ஏற்பதில்லை. அறுசுவையும் உண்டு பழகிய உடலுக்கு எப்படி அவ்வெண்ணத்தில் தன் சுவைக்கொப்ப ஆகாரத்தைச் சரீர உணர்வு நாடுகின்றதோ அதைப் போன்று
1.நாம் மனிதனிலிருந்து மகானாகும் சக்தி எடுக்க
2.ஆத்மாவைப் புனிதப்படுத்தும் சுவையான நற்குணத்தைச் சமைக்கும் ஆலயமாக
3.இந்த உடலில் உயிர் என்ற தெய்வம் குடி கொண்ட நிலையில்
4.நாம் எண்ணத்தை உயர்த்தி நம் ஆத்மாவை ஒளியாக்கிக் கொண்டோமானால்
5.பல கோடி ஆண்டுகளாகப் பிறப்பின் தொடரில் பிறப்பெடுத்த நம் உயிர் ஆண்டவனை
6.”ஒளி ஆண்டவனாகச் செயல்படுத்துவது” இவ்வெண்ணம் தான்…!

எண்ணம் என்ற பகுத்தறிவின் நிலையைப் படைப்பின் உயர்வில் பெற்ற இத்தருணத்தைத் தவறவிடாமல்… சேவை என்பதன் பொருளே உயர் தன்மையை வளர்க்ககூடிய சேவை தான் என்பதை இயற்கையின் உண்மையில் உணர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால்
1.சரீர கௌரவம் அழியக் கூடியது
2.ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்.

இதன் தொடரில் சூரியனைப் போன்ற ஒளி ஈர்ப்பாக உயிராத்மாவை வைரமாக்குங்கள்.. என்றுமே அழிவில்லா “ஜொலிப்பாக…!”

தியானத்தின் மூலம் நாம் பெறும் சக்தி “எல்லோருக்கும் பொதுவானது”

தியானத்தின் மூலம் நாம் பெறும் சக்தி “எல்லோருக்கும் பொதுவானது”

 

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அற்புதங்களையும் காட்டினார்.
1.என் கையை நீட்டியவுடன் ஒரு மரம் சட…சட… என்று முறிந்து விழுகிறது
2.கையை நீட்டியவுடன் மேலே பறந்து போகும் காகம் இறக்கை தன்னாலே ஒடிந்து விழுகிறது
3.ஒருவன் கெடுதல் செய்கிறான் என்றால்… இப்படி என்று ஒன்றைச் சொன்னால் போதும்… அவனை உருட்டிக் இங்கே கொண்டு வந்துவிடும்.
4.பெரிய பெரிய கல்களையும் பறக்கச் செய்து காட்டுகின்றார்.

இந்தச் சக்திகளைக் காட்டி விட்டு “இது எல்லாம் எதற்காக ஆகும்…?” என்று விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

இப்படி எல்லாம் செய்தாய் என்றால் நீ அதுவாகத்தான் ஆவாய்…! மந்திர சக்திகளை எடுத்தால் இந்த நிலைக்குத்தான் ஆகும் என்றார்.

மிலிட்டரியில் இறந்தவர்கள் பழி தீர்க்கும் உணர்வோடுதான் இறக்கின்றார்கள். “அந்தக் கூலிப்படைகள் எவ்வாறு இருக்கின்றார்கள்…? என்பதை நீ பார்…!” என்று அதையும் காட்டுகின்றார்.

லெப்ட்…ரைட்… லெப்ட்…ரைட்… மார்ச்… அபௌட்…டர்ன்…! என்று என்னென்னமோ சொல்கின்றார். பார்த்தால் பூட்ஸ் அடி சத்தம் பயங்கரமாகக் கேட்கின்றது.

ஏனென்றால் “இந்த உணர்வின் ஒலி அலைகள்” அவர்கள் எடுத்துக் கொண்டது இங்கே அலைகளாகப் பரவி உள்ளது. குவித்து எடுத்து அந்த உணர்வின் ஒலியைப் பாய்ச்சினால் பெரிய கல்லையும் தூக்கி எறிகின்றது

என்றோ இறந்தவர்கள் என்று இருந்தாலும் அது மறைந்து விடவில்லை அவர்கள் உடலில் விளைந்தது யாருக்குள் சென்றாலும் இந்த உணர்வின் (பழி தீர்க்கும்) தன்மை தான் இயக்கும்.

ஆக அதை அதிகமாக நுகர்ந்தால் அடுத்தவர்களைக் கொலை செய்வதற்குக் கூலிப்படையாகப் போகலாம். இது எல்லாம் இயற்கை நிலைகள்.

ஆனால் மனிதனாக ஆனபின் நீ முழு முதல் கடவுளாக ஆகின்றாய் நான் சொன்ன முறைப்படி அருள் ஞானத்தை உனக்குள் (ஞானகுரு) உருவாக்குகின்றாய். அனைவருக்குள்ளும் அதை உருவாக்கு…!

1.இந்த உலகம் உனக்குச் சொந்தமில்லை
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமில்லை
3.நீ எடுக்கும் அருள் ஞான உணர்வே உனக்குச் சொந்தமாகின்றது
4.அந்த அருள் ஒளியின் உணர்வையே சொந்தமாக்க முற்பட வேண்டும்

அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் தான் நீ அதைப் பெறுகின்றாய்
1.”நான் பெற்றுவிட்டேன்” என்று நீ அகம் கொண்டால் அந்த விஷம் தான் உனக்குள் கூடும்
2.பெற்ற சக்திகளையும் உயர்ந்த உணர்வையும் அது அழித்துவிடும்… நீ போவது எங்கே…?
3.இருளுக்குள் தான் செல்ல வேண்டி இருக்குமே தவிர ஒளிக்குள் வர முடியாது என்று
4.இத்தனை உண்மைகளையும் காட்டிய பிற்பாடு நான் என்ன செய்ய முடியும்…!

பல பேர் எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… நான் அதைப்பற்றி எண்ணுவதில்லை “எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… என்று நான் (ஞானகுரு) எண்ணினால் தானே…!”

ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய பல பெரியவர்களும் சாமியார்களும் நூற்றுக்கு 90% அறியாமல் தவறுகள் செய்தே வாழ்கின்றார்கள். ஆண்டவனையே நாங்கள் கைக்குள் வைத்திருக்கிறோம் என்று மக்களை ஏமாற்றப் பழகி வைத்திருக்கிறார்கள்.

அது அவர்களுடைய உணர்வு…! இருந்தாலும் எங்கே செல்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது

அந்த உணர்வை வைத்து எம்மை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே எண்ணம் என்னையும் திருடனாகத்தான் அவர்களுக்குத் தெரிய வரும் அவர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள்.

ஆனால்
1.என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் ஞானிகளின் அருள் கிடைக்க வேண்டும் என்று
2.நான் பிரார்த்தனை செய்கிறேனே தவிர யாரையும் குற்றவாளியாக எண்ணுவதில்லை.

காரணம் குற்றம் என்று பார்க்கப்படும் பொழுது அந்தக் குற்றத்தின் உணர்வுகள் தான் விளையும்… குற்றவாளியாக நம்மையும் மாற்றிவிடும்.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொன்னது போன்று
1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் அதுவாகின்றேன்
2.தவறு செய்கின்றார்கள் என்று எண்ணினால் நான் எதைச் செய்தாலும் அது தவறாகத்தான் வந்து சேரும்.
3.ஏமாற்றுகின்றான்… ஏமாற்றுகின்றான்… என்று தான் வரும்… அது அவருடைய குற்றம் அல்ல.

ஆனால் அதே சமயத்தில் தவறு செய்கின்றார்கள் என்று கோபப்பட்டுக் கடுமையான ஆயுதத்தை வைத்து அவர்களை நான் வீழ்த்த எண்ணினால் அவர்கள் உடலைத் தான் வீழ்த்த முடியும். இந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக எனக்குள் விளைந்து விடும்.

அதனால் தான் யார் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும்
1.“என்னிடம் சக்தி இருக்கிறது…” என்று அந்த வகையிலே அடக்கியாளும் உணர்வைச் செயல்படுத்துவதில்லை.
2.“ரோசப்பட்டு நான் அவ்வாறு செய்ய முடியாது…!”

அவர்களை உருட்ட வேண்டும் என்றால் உருட்டி விட்டுப் போகலாம்…! அத்தகைய அகம் வந்தால் நான் போகும் பாதையை அது தடையாக்கி விடும்.

இந்த உடலில் எத்தனை நாள் நாம் இருக்கப் போகின்றோம்…? இந்தப் புகழ் எவ்வளவு நாள் இருக்கும்…?

மற்றொருவரைக் கொன்று வீழ்த்தி… என்னைப் பார்த்தாலே அனைவரையும் அஞ்சும்படி செய்யலாம். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் அழிந்து விடுமே…! நல்ல குணங்கள் வீழ்த்த பின் நான் எங்கே செல்வது…?

ஆகையினால் மற்றவரின் போற்றுதலுக்காக யாம் எதையும் செயல்படுத்துவதில்லை

அந்த அருள் ஒளி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… ஒவ்வொரு உயிரும் ஒளியாக வேண்டும் என்று எண்ணுவது தான் என்னுடைய வேலை…!

நீங்களும் அதே வழிகளில் செயல்படும் பொழுது இருளை அகற்றலாம் உயிருடன் ஒன்றி ஒளியாகவும் முடியும். ஆகவே…
1.எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் வரவேண்டும்
2.இதை எல்லாம் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

மனிதன் ஒளி நிலை பெறுவது தான் “இயற்கையின் கதி (வளர்ச்சி)”

மனிதன் ஒளி நிலை பெறுவது தான் “இயற்கையின் கதி (வளர்ச்சி)”

 

இயற்கையின் கதியை… இறைசக்தியின் இறைத்தன்மையை வளர்க்கும் நிலைதான் பிறவா நிலை பெறும் நிலை.

உணர்வின் எண்ணமற்ற இயற்கையின் செயலில் சில மரங்கள் அம்மரத்தின் வீரியத்தில் வைரத்தின் ஒளி பாய்ந்து அவ்வைர ஒளியின் முதிர்வின் மூலம் தானப்பா “மண்டலங்களின் ஜீவ நாடி…!”

ஜீவராசிகளில் பாம்பு தன்னுடைய ஒளி சக்தியின் மாணிக்கத்தைப் பெறுகின்றது. வயது முதிர்ந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யானைகளுக்கு அதனுடைய உடலில் “யானை முத்து” என்ற முதிர்வின் அபூர்வப் பொருள் வளர்கின்றது.

பூமியின் இயற்கையில் முதிர்வின் நிலை பல நிகழும் பொழுது உணர்வின் எண்ணம் கொண்ட மனித நிலையில்… பிறவா நிலை பெறும் வழியை நாம் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஏனென்றால் வாழக்கூடிய காலம் குறுகியது.

யானை மனிதனைக் காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றது. ஆனால்
1.மனிதனின் தேவையின் குணம் அதிகப்பட்டு
2.மனிதன் வாழக்கூடிய காலத்தையே குறுக்கக்கூடிய வளர்ச்சி நிலைதான் இன்றைய நிலை.

இக்குறுகிய மனித ஜீவித வாழ்க்கை நிலையில் தத்துவ ஞானிகள் பிறவாநிலை பெற அறிந்துணர்ந்தனர்.

மிருகங்களில் சில இனங்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் மனிதனைப் போன்று பிறவாநிலை பெறும் நிலை அதற்கில்லை. ஆகவே மனிதன் தன்னுடைய இஜ்ஜீவ சரீரத்தின் உண்மை நிலையை உணரல் வேண்டும்.

நல்லொழுக்கத்தில் உயர் நிலை அடைய வேண்டும் என்பவர்கள் முதலில் இவ்வுடலின் சொந்தமான நிலை யாது…? என்பதை அறிந்திடல் வேண்டும்.

இச்சரீரத்தில் எடுக்கக்கூடிய உணர்வின் ஓட்டத்தை…
1.எம்மகானாலும் வாழ்க்கைத் தொடரில் உணர்வின் ஓட்டத்தை
2.சம நிலையில் வாழ்க்கைத் தொடரில் செயல்படுத்த முடியாது.
3.அதைச் செயல்படுத்தக் கூடிய நிலை பிறவாநிலை
4.அது இவ்வுடலில் இருந்துதான் செயலாக்கக் கூடிய நிலை,.. இயற்கையின் நிலை.

வாழ்க்கையில் நிகழக்கூடிய உணர்வின் மோதல் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேதான் இருக்கும். மாறக்கூடிய உணர்வின் சமைப்பை இவ்வுயிரின் செயல் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஜோதி நிலையான ஒளித்தன்மை பெறுவதுதான்…!

ஜீவகாந்த சரீரத்தில் விண்ணிலிருந்து எடுக்கக் கூடிய ஒளி சக்தியை… மின் காந்த ஒளியாய் நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வால் ஆத்மாவின் ஒளிசக்தி வலு கூடக் கூட
1.வாழ்க்கையில் மோதக் கூடிய எதிரொலியின் ஈர்ப்பிற்கு உணர்வின் எண்ணத்தை அடகு வைக்காமல்
2.ஆத்மாவின் செயலாய் உணர்வின் எண்ணத்தை ஈர்ப்புப்படுத்தும் பக்குவத்தில்
3.மனித குணம் ஞானம் செயல்படல் வேண்டும்.

விருப்பு வெறுப்பு வாழ்க்கையில் தான் நடக்கும். தியானத்தில் மின் காந்த ஒளியை எக்குணத்தில் நாம் முலாமாக்குகின்றோமோ… அதற்கொத்த இப்பூமியின் சமைப்பான ஏழு வண்ணத்தில்… ஒளியில்… இச்சரீர குணத்திற்கொப்ப நாம் எடுக்கும் தியானத்தால் ஆத்மாவின் ஒளித்தன்மையின் வண்ண நிலை வலுக்கொள்ளும்.

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு காலங்களுக்குப் பிறகு பாம்பு கக்கும் மாணிக்கம் ஒளி வீசுகின்றது. ஆகவே…
1.உயிராத்மாவை திடப்பொருளாக ஆக்குவதில்லை
2.ஆத்மாவை வலுப்படுத்தும் நிலை என்பது…!

இஜ்ஜீவ சரீர ஆத்மாவை சூட்சும ஆத்மாவாய் ஒளியாக்கும் வழியை இத்தியான வழியில் மனித குணத்திலிருந்து… சம குணத்தில் சரீரத்தில் ஓடக் கூடிய எண்ண நிலை ஆத்மாவின் உந்தலில் எண்ணம் செயலாகும் பொழுதுதான்… சரீர உணர்வில் பிறவாநிலையை இவ்வாத்மா பெற முடியும்.

1.தன் சரீரத்தை எந்த நிலைக்கும் பிரித்துக் கூட்டும் ஆத்ம ஒளி சக்தி பெற்ற ரிஷி சக்தியின் வலுவாய்
2.நம் சரீரத்தில் எடுக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு தான்
3.பிறவாநிலைப் படுத்த முடியும்.