
கருவித்தை.. குட்டிச் சாத்தான்…! இவைகள் மூலம் ஜோதிடம் சொல்பவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!
பல சாமியார்கள் பல வழிச் சாமியார்கள் ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உலகம் முழுவதுமே உள்ளார்கள்.
அவர்களின் நிலையெல்லாம் ஆண்டவனை அடைவதற்கு… ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கிட்டால்.. “தானே ஆண்டவன்…!” என்ற எண்ணத்தில் வாழ்கின்றார்கள்.
பல வழிகளில் அவர்களுக்கும் பொருளும் புகழும் வருகின்து. பல ஜெபத்தைச் சொல்கிறார்கள். செய்கிறார்கள்…! ஆண்டவனை வணங்கப் பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கின்றார்கள்.
அவர்கள் நிலையெல்லாம் என்னப்பா…? இச்சாமியார்கள் தான் பூஜிக்கும் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை. இவ்வுலகம் முழுவதுமே இந்நிலை உள்ளதப்பா.
கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் “கரு வித்தை… என்னும் ஆவி நிலைதான்…!”
அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அவ்வாவி காட்சி தருகிறது. அவ்வாவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்திட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அவ்வாவிகளை இவர்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… எதை எதையெல்லாம் வேண்டுகின்றார்களோ… அவைகளையெல்லாம் அவ்வாவிகள் அறிந்து இவர்களுக்குச் சொல்கின்றது.
அவற்றை வைத்துத்தான் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் மூலமாகப் பொருள் சம்பாதித்து வருகின்றார்கள்.
1.நடந்த நிலையைத்தான் இவ்வாவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அவ்வாவிகளினால் அறிந்திட முடியாது
3.எந்த ஜோதிடனும் எந்தச் சாமியாரும் நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடியாதப்பா.
4.ஆனால் நடந்தவைகளை முழுவதுமே உண்மையாகச் சொல்லிவிடுவார்கள். எல்லாம் இக்கருவித்தை வேலைதான்.
பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இவ்வாவிகளின் வேலைதான். அருள் இல்லையப்பா.. மருள் அது…!
1.ஆண்டவனின் அருள் வருபவன்…
2.தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
3.பெரும் அமைதியில் தான் அமர்ந்திருப்பான்.
4.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான் அவன் வழியில்.
மருள் வந்தவன் வேலையெல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இக்குட்டிச்சாத்தான் வேலையில்தான் இவ்வுலகமே உள்ளதப்பா. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.