இன்றைய உலகச் சூழ்நிலையிலிருந்து தப்ப முடியுமா…!

இன்றைய உலகச் சூழ்நிலையிலிருந்து தப்ப முடியுமா…!

 

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம். கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது. உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான் இதைச் செய்வான் என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெறவேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் என்றால் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால்…
1.அதைத் தணியச் செய்யும் சக்தியான அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
2.நமக்குள் இருள் சூழும் அந்த நிலைகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று
4.அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் செல்வோம் என்றால் இனி தப்பலாம்…!

முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சொல்லும் இந்தப் பாத நிலை என்றால் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சொல்லும் இந்தப் பாத நிலை என்றால் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதியிலிருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்களெல்லாம்
1.சூட்சமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவ நிலையை மக்களுக்குப் புரியும் நிலையில்
2.கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட ஞானிகளின் ரிஷிகளின் நிலையையே
3.காலப் போக்கில் பல வடிவங்களைச் (திரிபு) சேர்த்து இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்.

அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு, முதல் பாதம்… இரண்டாம் பாதம்… என்று இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றுக்கும் மேல் பாதம் சென்ற பிறகு தான் “அந்த ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம்…” என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.

இப்பாத நிலை பெறும் நிலை என்ன…?

ஒவ்வொரு பாதத்திலிருந்தும் முதல் படி இரண்டாம் படி மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப “கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போல் அல்ல…!” அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.

எங்கும் நிறைந்துள்ள… நம்முள்ளும் கலந்துள்ள… நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்களித்த இந்த ஏழு பிறவியில் நாம் பெறுதல் வேண்டும்.

ஆனால் வாழ்ந்த நிலை கொண்டு நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இந்த ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் மேம்படுத்திடாவிட்டால் நம் ஆத்மாவிற்கு இந்த மனித உடலை ஏற்கும் சக்தி இழந்துவிடுகின்றோம்.

இந்த ஏழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை… இந்த ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால்… இந்த ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து…
1.இந்த ஏழாம் பிறப்பில் நம ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
2.நம் எண்ண சக்தியே தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில்
3.நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதால் அந்நிலையில்…
4.அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடல்களில் ஏறியும் அங்ககீனமுற்ற பிறப்புக்குத் தான் அடுத்து வருகிறோம்.

நாமாகச் சேமித்த வழி சென்றிடும் நிலை தான் இந்த நிலை…!

முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பதெல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அந்த உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.

ஞான சக்தியின் தொடர்பு நிலைகொண்டு இவ்வுலக நிலையில் பற்றற்ற நிலைப்படுத்தி பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான் சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.

இவ்வாத்மாவுடன் கூடிய இந்த உடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழக வேண்டும்.

கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளரவிட்டு ஜெபம் கொண்டால் அதிலே எந்தப் பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.

நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல் உணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.

1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து.. நற்சக்திகளின் வழித் தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அந்தத் தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியுடன் ஒளியாகக் கலந்து செயல்படும் நிலை தான் ஆண்டவன் நிலை பெறுவது.

இந்நிலையை உணர்த்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனே தான் நாம்… அவனே தான் மற்ற எல்லாமுமே…
2.யாரும் நமக்கு அப்பதவியை அளிப்பதல்ல… நாமே தான் நம் பதவியை அடைந்திட வேண்டும்.

ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால் தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடியாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திட முடியும்.

ஆகவே ஆவி உலகிற்குச் சென்று அல்லல்படும் நிலை இல்லாதபடி இன்று உடலுடன்… நல் நினைவுடன் இருக்கும் பொழுதே.. ஞானத்தின் வழி கொண்டு செயல்பட வேண்டும்.

புற்று நோய் வரக் காரணம்

புற்று நோய் வரக் காரணம்

 

இன்று நாம் விவசாயம் செய்யும் போது பயிரினங்களைத் தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம்.

பூச்சி மருந்தைத் தூவிய பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது. அனால் அந்தப் பூச்சிகள் இடும் முட்டைகளிலும் இந்த மருந்து ஊடுருவுகின்றது. முட்டையில் இருக்கும் அந்த மேல் ஓடு அந்த விஷத்தைக் கவர்கின்றது.

1.மேல் பகுதியிலிருந்து இந்த விஷம் அந்த முட்டைக்குள் ஊடுருவி
2.இதிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மை… உருவாகும் அந்தப் பூச்சிக்குள் இணைந்து
3.இதற்குச் சமமாக ஏற்றுக் கொள்ளும் நிலை வருகின்றது..!
4.அதாவது முட்டைக்குள் இருக்கும் இதே பூச்சியை உருவாக்கும் அந்த உயிரணுவிற்கு விஷம் கூடி
4.அதன் வழி புதிதாக பூச்சி உருவாகிறது வலு கொண்டதாக…!

இதைப் போல் நாம் தூவும் பூச்சி மருந்துகள் தாவர இனத்துடன் கலந்து நெல்லிலோ கத்தரிக்காயிலோ திராட்சையிலோ மாம்பழத்திலோ எல்லாவற்றிலும் இது இருக்கத் தான் செய்கிறது.

இப்படிக் கலந்து வரும் உணவைத்தான் நாம் தினமும் உட்கொள்கிறோம். அப்போது விஷம் கொண்ட அணுவாக நமக்குள் மாற்றுகின்றது.

பின் அது ஜீவ அணுவாக மாற்றிய பின் அதனுடைய மலம் வெளிப்படும் போது நம்முடைய தசைகளுக்குள்ளும் விஷம் ஊடுருவுகின்றது.

உடல் எல்லாம் நன்றாக இருக்கிற மாதிரித்தான் தெரியும்.
1.ஆனாலும் கை கால் கடு கடு என்று இருக்கிறது…
2.கண் வலிக்கிறது தலை வலிக்கிறது நெஞ்சு வலிக்கிறது பிடரி வலிக்கிறது என்றெல்லாம் நாம் சொல்வோம்.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே நம் உணர்வுக்குள் இது கலந்து விடுகின்றது. மனிதனின் சிந்தனைகளையும் குறைக்கச் செய்கிறது.
1.அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
2.நம் உடலில் இந்த வேதனையையே அனுபவிக்கும் நிலை வருகிறது “இந்தப் பூச்சிகளைக் கொல்லும் நஞ்சால்…”

அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்து அது சிறுகச் சிறுகக் “கேன்சராக” முளைக்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணு இதைப் போல் அதிகமான விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்துக் கொள்ளும் நிலை வரும் பொழுது தன் அருகிலே இருக்கும் தசைகளில் இருக்கும் அணுக்களும் மடியத் தொடங்குகின்றது.

பின் இதனின் இனப் பெருக்கமாகி வந்து விட்டால் இதைப் புற்று நோய் என்று சொல்வார்கள். தன் இனத்தின் தன்மை பெருகிப் பெருகி மற்றதுக்கு இடமில்லாது கலைத்துக் கொண்டே போகும்.

“புற்று” தனக்குள் எப்படிப் பல கண்களாக விளைகின்றதோ… அதைப் போல் தன் இன அணுக்கள் பெருகிப் பெருகி… நம் உடல் தசைகளில் இருக்கும் அணுக்களைக் கொன்று கொன்று… இது உணவாக உட்கொண்டு தன் பெருக்கமாக நல்ல தசைகளிலும் இதனின் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படிக் கொடூரத் தன்மைகள் விளைகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆக… விஞ்ஞான அறிவால் மனிதனுக்காக எத்தனையோ வசதிகள் செய்து
1.உணவுக்கு என்று அந்தப் பூச்சிகளைக் கொன்றால் தான் உணவும் பற்றாக்குறை இல்லாது கிடைக்கின்றது.
2.ஆனால் மனிதனுக்குள் இந்த நஞ்சின் முடிவு இப்படி எல்லாம் மனிதனுக்குப் பாதகமாக வருகின்றது.

“அபிராமிப்பட்டர்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“அபிராமிப்பட்டர்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இக்கலியில் ஏற்படும் கால மாற்றத்தின் உண்மைகளை இங்கே உணர்த்துகின்றோம். ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலையில் ஒளிர்ந்திடலாம் என்பதனை உணர்ந்து செயல்படும் வழிமுறைகளை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிந்த வழியில் உணர்த்துகின்றோம்.

இப்பூமியிலே உயிரணுவாகத் தோன்றி உயிராத்மாவான இன்றும் தன் உடலை அழியா வண்ணம் ஒளியுடனே நினைத்த நேரத்தில் கலந்து செயல் கொள்ளும் கொங்கணரும் போகரும் இவ்வழித் தொடரை எந்நிலையில் பெற்றார்கள்…?

அபிராமி அந்தாதி இயற்றிய அபிராமிப்பட்டர் அம்மாவாசை நாளில் பௌர்ணமி நிலவாகக் காண முடியும் என்று பூரணச் சந்திரனைக் காணச் செய்தது எந்த நிலையில்…?

சந்திர நிலவா அன்று காட்சி அளித்தது…?

அபிராமிப்பட்டராக வாழ்ந்த அந்த ஆத்மா தன் எண்ணத்தைத் தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் அச்சக்தி மாதாவின் செயல் கக்தியின் உண்மைக்கே அடிபணியச் செய்து… அவ்வுண்மையின் சக்தியையே அன்பு கொண்டு பூஜித்து…
1.தன் எண்ணத்திலும் உணர்விலும் எவ்வணுவின் சக்திக்கும் அடிபணிய வைத்திடாமல்
2.ஒரே சக்தி ஜெபத்தை ஈர்த்து வந்த நிலையில் அம்மாவாசையில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று
3.சரபோஜியின் (அரசன்) எண்ண நிலையில் தெய்வ சக்தியை ஓங்கிக் காட்டிடல் வேண்டும் என்ற ஒரு நிலை கொண்ட தீவிர ஜெப சக்தியினால்
4.அவரின் ஒரு நிலை கொண்ட எண்ண சக்தியே அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் பிரிந்து ஒளியாகி கூடி
5.பௌர்ணமி நிலவாக அனைவரும் காணும் சந்திர பிம்பமாகக் காட்சி தந்தது.

அபிராமிப்பட்டரின் ஆத்மா பெற்ற சக்தி தான் அவ்வாத்மாவே நிலவாக ஒளிர்ந்தது. அவரின் கூடு தான் பிம்ப நிலையில் இருந்தது. சக்தியின் தேவியையே தன் ஆத்மாவில் ஐக்கியப்படுத்திக் காட்டினார்.

இன்று போகரின் நிலை ஒளியுடன் முருகா என்று உள்ளம் உருக ஒலிக்கும் நிலைக்கெல்லாம் ஒளியாக நல்லருளைச் செலுத்தும் நிலையும் இதுவே. கொங்கணவரின் நிலையும் இந்நிலைக்குகந்ததே.

தன் ஆத்மாவின் சக்தியையே ஒளியுடன் கலந்து ஒளிரும் சக்தி இவர்களுக்கெல்லாம் உண்டு.

ரிஷிகளும் ஞானிகளும் மந்திரம் செய்யவும் தந்திடம் செய்யவும் தன் நிலையில் சக்தி கொண்டு செயலின் பயனைப் பெறுவதாகவும் மக்களின் எண்ணத்தில் உள்ளது.

ஆனால் அச்சப்தரிஷிகளின் நிலையினால் தான் இந்தப் பூமியின் சக்தி நிலையே பெருகி வருகிறது.

இன்றளவும் மனித் ஆத்மாக்கள் இந்நிலை கொண்டு வாழ்வதற்கே நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இப்பூமியின் நிலையே இன்றுள்ளது.

1.அவர்களும் நம்மைப் போல் வாழ்ந்தவர்கள் தான்..!
2.நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் தான்.

ஆனால் நம் நிலையில் வழி வந்த நிலை தான் இன்று வாழ்ந்திடும் நிலை. அவர்களின் தொடர்பை ஏற்றே இனி வழி நடந்திடுவோம்.

ஆத்ம சுத்தி செய்தால் தீமை எப்படி அகல்கிறது..? தீமை நீக்கும் சக்தி எப்படி நமக்குள் பெருகுகிறது…?

ஆத்ம சுத்தி செய்தால் தீமை எப்படி அகல்கிறது..? தீமை நீக்கும் சக்தி எப்படி நமக்குள் பெருகுகிறது…?

 

உதாரணமாக இரண்டு பேர் கோபத்துடன் சண்டை போடுகின்றார்கள். அவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே ஈஸ்வரா… என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கல்க்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை நம் உடலில் திருப்பி விட வேண்டும்.

இப்படிச் செய்யும் போது அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தக் கார உணர்வுகள் செல்வதைத் தடுத்து விடுகின்றோம்.

ஏனென்றால் அங்கே உற்றுப் பார்க்கும்போது இங்கே ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது நம் கருவிழி.

ஆனால் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்து
1.நம் கண்ணின் நினைவினை உள்ளே செலுத்தும் போது இங்கேயும் அடைத்து விடுகின்றது
2.நம் உயிரிலே மோதும் நிலையையும் தடுத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் பரவும் போது அந்தக் கார உணர்ச்சிகள் அனாதையாகின்றது… உள்ளே புகாதபடி..!

இப்படி ஒரு சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்தோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

சுத்தமான பின்… சண்டை போட்டவர்கள் இருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ணி அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தத் நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து துருவ நம் உடலுக்குள் பரவுகின்றது. இரத்தத்தின் வழி எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பாய்கிறது.

1.ஆகவே நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும்
2.தீமைகளை நீக்கும் உணர்வுகளை இவ்வாறு கிடைக்கச் செய்ய வேண்டும்.

இது தான் ஆத்ம சுத்தி என்பது…!

என்றுமே ஏகாந்தமான நிலைகளில் மகிழ்ச்சியாக நாம் வாழ வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நம் உடலில் உள்ள இரத்தங்களில் அதிகமாக இப்படிச் சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

உலகைக் காக்கும் ஆசையில் பல ஆத்மாக்களை தியானத்தின் ஈர்ப்பில் பல சித்தர்களும் ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர் – ஈஸ்வரபட்டர்

உலகைக் காக்கும் ஆசையில் பல ஆத்மாக்களை தியானத்தின் ஈர்ப்பில் பல சித்தர்களும் ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

இன்றளவும் இப்பூமியின் நியதியையும்… இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும்… ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும்… இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித் தொடரையும்… சிறுகச் சிறுக உணர்த்தி வந்தேன்.

இனி நாம் எந்த நிலை கொண்ட ஜெபத்தினால் இந்தக் கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிட வேண்டும்.

இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாக வாழ்ந்திட
1.நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெபத்தினால் தான்
2.இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே..!

இந்தப் பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாக மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.

இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களில் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்று போல் இல்லாமல்…
1.இந்த ஞான வளர்ச்சி கொண்டு வாழ்ந்த ஆத்மாக்களே
2.இந்தப் பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.

நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள் தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுள் காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.
1.நாம் அறிந்திடாமல் நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட
2.ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இந்தப் பூமியில் பலர் உள்ளனர்.

ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல் ஒரே உடலில் வாழ்ந்திடும் எண்ண வளர்ச்சி இல்லாத ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

இங்கிருக்கும் நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.

இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இங்கே இந்த மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது. ஆனால் இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக வளர்ச்சி அற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறு கொண்டதாக உள்ளது மிருகங்களின் நிலைக்கொப்ப.
2.ஆனால் அந்த உடல்களில் எந்த விஷத் தன்மையும் பாய்ந்திடாது.

காடுகளில் பாம்பு நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ… அப்படியே தன் இன வர்க்கத்தை வெளி உலகப் பிடிப்புக்குச் சிக்காவண்ணம் அந்த உடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித் தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்ற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும் இவ் இயற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டு மாளப் போகின்றன.

இவ்வெளி உலகப் பார்வையில் சிக்கமல் இப்பூமியில் மனித ஆத்மாவாக பல ஆயிரம் ஆண்டுகள் உள்ள மனித இன வர்க்கமெல்லாம் இக்கலியிலும்… ஜீவன் பிரியாமல் வரப் போகும் கல்கியிலும் வழித் தொடர் பிடித்தே தான் வாழப் போகின்றனர்.

அவர்களின் எண்ணத்தில் இந்த மாற்றமும் இவ் இயற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது. இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அந்த உடல்களைப் பாதிக்காது.

எண்ண நிலையே இல்லாமல்… குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழி வந்த ஆத்மாக்களுக்கு “நம்மைக் காட்டிலும் விரிய சக்தி பெற்றுள்ள போது…”
1.ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம் நம் ஆத்மாவை இன்றைய விஷக் காற்றிலிருந்தும்
2.விஷமாக இந்த உலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ் எண்ண நிலையின் தாக்குதலிலிருந்தும்
3.எந்த அணு வெடிகள் நம் மீது பாய்ந்தாலும் நம் உடல் அந்தத் தீய சக்தியை ஏற்காத வண்ணம்
4.நம்மை நாம் இவ்வொளியின் ஒளியாக ஒளிர்ந்திடும் சக்தியில்
5.நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியில் நம்மைப் போன்றே ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தியுணர்ந்து சூட்சம நிலை கொண்ட
1.பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை
2.நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட “அவர்களின் வழித் தொடர் நமக்கும் கிட்டும்…”

இந்த உலகில் தோன்றிய ஆசை நிலையினால்… “இந்த உலகைக் காத்திடும் ஆசையில்”
1.பல ஆத்மாக்களை இந்தத் தியானத்தின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.
2.நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி அவர்களுடன் கலந்து ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து
3.ஒளி பெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித் தொடர் அவர்களின் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.

எழுத்தறிவில்லாத அக்காலத்தில் அகஸ்தியன் வெளிப்படுத்திய சொல் வாக்குகள்

எழுத்தறிவில்லாத அக்காலத்தில் அகஸ்தியன் வெளிப்படுத்திய சொல் வாக்குகள்

 

விஷத் தன்மையால் உருவாகும் தன்மையை நம் பூமியின் துருவத்தின் ஆற்றல் அது எப்படி…? என்று அறிந்து அந்தத் துருவத்தின் ஆற்றலைப் பெற்று தன் உடலில் வந்த விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அதாவது நாகரத்தினம் என்று சொல்கிறோம் அல்லவா…! ஒரு நாகம் தன் உடலில் இருக்கும் விஷத்தை வைரமாக மாற்றுகின்றது.
1.பல விஷத்தின் தன்மை கொண்ட உயிரணுவை ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெற்றது தான் அத்தகைய பாம்புகள்
2.அந்த விஷம் பாம்பின் உடலிலே உறையும் போது வைரமாகின்றது..

இது இயற்கையிலே நாகரத்தினமாக மாறுகின்றது. அதற்கு ஜீவனில்லை. ஆனால் “இருளில் ஒளி…!” என்ற நிலையில் தான் அது இருக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பெயிண்டைத் தயார் செய்கின்றனர். அதைப் பூசிய பின் அதிலே வெளிச்சம் பட்டால் அதில் உள்ள எதிர் ஒளியை (FLUORESCENT) நமக்குக் கொடுக்கின்றது.

ஆனால் அதிலே சூரியனின் ஒளி பட்டால் அது சாதாரண பெயிண்டாகத் தான் தெரியும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதே மாதிரித் தான் இந்த இயற்கையின் நியதிகள்.

1.எதையோ புரியாததைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்…!
2.முதலில் பதிந்தால் தான்… பிறகு எண்ணினால் புரிகிறது.

புரிய வைப்பது என்றால் எப்படி…?

குழந்தைகள் ஆரம்பத்தில் பள்ளிக்குச் செல்லும் போது எழுத்துக்களைப் பார்த்தால் அதை என்ன சொல்வது…? என்று தெரியாது. ஆ… ஊ… ஏ… என்று அந்த ஒலிகளை எழுப்புவதற்கு எழுத்தைச் சொல்லி ஆசிரியர் உணர்த்துகின்றார்.

ஊ.. என்பதை ஆ… என்று சொன்னால் சரியாகுமா…? அப்படிச் சொன்னால் அந்த எழுத்திற்கும் ஒலிக்கும் வித்தியாசம் ஆகிவிடும் அல்லவா…?

எந்த மொழியை எடுத்தாலும் முதலில் ஒலியின் சப்தங்களைக் கூட்டுகின்றனர். அடுத்து அந்த நாதங்களை எழுப்புகின்றனர். அப்பொழுது அந்தச் சொல்லின் வன்மை எப்படி இயங்குகிறது…?

சொல்லால் சொன்ன பின் புரிந்து (தாய் தன் குழந்தைக்குச் சொல்வது போல்) கொள்ளும் நிலை வருகின்றது. இதன் வழி கொண்டு அன்று தத்துவ ஞானிகள் இந்த எழுத்து வடிவினைக் கொண்டு வந்தனர்.

1.இதைப் போன்று தான் இயற்கையின் நியதிகளை அகஸ்தியன் அன்று கண்டு இந்த உணர்வினை வெளிப்படுத்தினான்
2.ஆனால் அவன் காலத்தில் எழுத்து வடிவில்லை.. திருப்பிப் பார்ப்பதற்கு (REFERENCE).

அவன் காலத்தில் “உணர்வின் ஒலியைப் பதிவாக்கி… மற்றவர்களை ஈர்க்கச் செய்து…
1.“உன் உடல் நலமாகும் போ…!” என்று சொல்லப்படும் போது
2.அவன் எடுத்துக் கொண்ட உணர்வு பதிவான பின் அது நல்லதாகின்றது.
3.விஷத்தை முறித்த நிலைகள் – அவன் சொல் அதற்குள் சென்று அந்த நோயை நீக்கும் வல்லமை பெறுகின்றது.

ஏனென்றால்… “அவன் சொல்லைக் கேட்டு உணர்ந்திருந்தால் தான்…” அது வருகின்றது. ஆகையினால் நஞ்சை வெல்லும் உணர்வு அங்கே வருகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற சக்தியின் துணை கொண்டு விஷத்தை வென்று பழகியவன்.
1.அக்காலத்தில் அவன் பார்வையில் பலருடைய நோய்கள் இப்படித் தான் நீங்கியது.
2.அதே உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்கும் வாக்காகக் கொடுக்கின்றோம்.

ஆகவே அகஸ்தியன் உணர்வைப் பெற்று நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றும் பழக்கத்திற்கு வாருங்கள்.

காற்று மண்டல நச்சுத் தன்மை அதிகமாக அதிகமாக எண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு மனிதன் பைத்தியமாகும் நிலை வந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

காற்று மண்டல நச்சுத் தன்மை அதிகமாக அதிகமாக எண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு மனிதன் பைத்தியமாகும் நிலை வந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

உயிரணுவாக உதித்திட்ட இவ்வுயிரணுக்களே… வளர்ச்சியின் வழி சக்தி நிலை கொண்ட உயிராத்மாவாக இந்த மனித உடல் பெற்று… எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து… ஆத்ம சக்தியை எண்ன சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்தது தான் ஆதியிலிருந்து வந்த நிலை.

அப்படி இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த “அந்த ஞானத்தின் வழித் தொடர் சக்தி நிலையே…” கிருஷ்ணாவாதர கால முதல் கொண்டு வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

நல் ஒழுக்கம் நல் ஞானம் சத்தியம் தர்மம் நியாயம் என்ற நற்சக்திகளின் வழித் தொடரில் சென்றிட இன்று இந்தக் கலியில் பிறபெய்தி வாழும் இந்த மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.

இந்தக் கலியில் மனிதர்களாக இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும்…
1.இக்கலிக்கு முற்பட்ட காலத்திலே வாழ்ந்தவரின் எண்ண சக்தியின் தொடர் நிலையில்
2.அதே வழியில் வந்திட்ட ஆத்மாக்களாக இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்
3.இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியே அன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைச் செயலாக உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை… “இன்றைய இக்கலியின் பேராசை நிலை…!”
1.நாமாக இந்த நிலையை வளரவிடவில்லை…
2.வளர்ச்சியின் தொடர் நிலை தான் இந்நிலை.

ஒவ்வோர் உடலுக்குள்ளும் அந்த உடலுக்குகந்த ஆத்மா ஒன்று தான். ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் “மற்ற அணுக்களின் நிலை அதிகம்…”

தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இந்தப் பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.

தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள் பூச்சிகள் வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில்… நிலத்தில்… நீரில்… இப்பால்வெளி மண்டலத்தில்… மற்ற பிராணிகள்… பட்சிகள்… மனிதர்கள்… எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.

அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக் கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன.

ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல…
1.நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையில் எல்லாம்
2.பல உயிரணுக்களின் நிலை நம் உடலிலும் ஏறுகின்றது.

இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும் நம் சுவாசத்துடன்… நம் உடலுடன் ஏறுகின்றன.

நம் உயிராத்மாவும்… உயிரணுவாகத் தோன்றி பல நிலைகள் பெற்ற பிறகு இந்த மனித ஆத்மாவாக உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு இன்று வாழ்ந்திடும் நிலையில் உள்ளோம்.

ஆனாலும்…
1.இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும்
2.இன்றைய வாழ்க்கை நெறி முறையிலிருந்தும் தப்பி…
3.ஞான சக்தியின் வழித் தொடரை அறிய நம் எண்ணத்தையே கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய
4.இன்றைய இப்பிடிப்பிலிருந்து மீள்வது கடினம் தான்…!

இன்றுள்ள இந்த வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச் செயற்கையின் ஆசையினால் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையே சூனிய நிலை போல் சக்தி இழந்துவிடும்.

ஆக… செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத் தான் இக்கலியின் பிடிப்பில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.

இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியிலிருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்களை ஒன்றுபடுத்தி விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினாலும் அணு ஆயுதங்களை அடிக்கடி வெடிப்பதினாலும் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி செயலற்றதாகி விட்டது.

அதனால் மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு… இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு… “சூனிய நிலை கொண்ட பைத்தியங்களாகத் தான் மனித ஆத்மாகளின் நிலையும் செயல்படப் போகின்றது…”

அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்த நிலை என்றால் இந்த மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?

1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்புபடுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி
3.இந்தக் கலியின் பிடிப்பிலிருந்து தப்புவது கடினம் தான்…!

உடலைக் காக்க முற்படும் விஞ்ஞானத்தால் உடல் நோய் குறைந்தாலும் நஞ்சு அதிகரிக்கின்றது..!

உடலைக் காக்க முற்படும் விஞ்ஞானத்தால் உடல் நோய் குறைந்தாலும் நஞ்சு அதிகரிக்கின்றது..!

 

நாம் காளானைச் சாப்பிடுகின்றோம். ஆனால் மருத்துவத்திற்காக என்று பல விதமான கெமிக்கலைக் கலந்து காளானை உற்பத்தி செய்கின்றார்கள்.

அதை ஊறலில் போட்டபின் அணுக்கள் உருவாகின்றது. எல்லாவற்றையும் உட்கொண்ட பின் அணுக்கள் கூட்டமாகின்றது. அப்படிப்பட்ட அணுக்கள் ஆனபின் அதை வடிகட்டி பெனிசிலின் மருந்தாக மாற்றுகின்றனர்.

அது கடுமையான விஷம் கொண்டது.

அந்த மருந்தை இரத்தத்தில் செலுத்திய பின் அந்த வீரிய உணர்வு உள்ளே சென்று ஒரு கடுமையான ஜுரமாகவோ அது நம்மைப் பாதிக்கக்கூடிய நிலை இருப்பதை இது ஊடுருவி அதை உணவாக உட்கொள்கிறது.

இவர்கள் கண்டுபிடித்த நிலையில் அந்த ஜுரம் அதிகமாக இருக்கிறது என்று மருந்தினைக் கொடுத்தாலும்…
1.நோயாளியின் உடலில் வேறு ஒரு மாற்று அணுவின் தன்மை வரும் போது மோதலில் இந்தக் காய்ச்சலும் விடாது இருக்கும்.
2.அதற்கு இந்தப் பெனிசிலின் என்ற மருந்தைச் செலுத்தினால் இது அதைக் (கிருமியை) கொல்வதற்கு மாறாக
3.நல்ல அணுக்களைப் புசிக்கும் தன்மையாகி அலர்ஜியாகின்றது.

சிலர் உடலில் எல்லாம் இந்த மருந்தைச் செலுத்திய பின் கொப்புளித்து விடும்.

விஞ்ஞான அறிவு கொண்டு குணப்படுத்த இவ்வாறு செய்தாலும் அதிலே ஒரு பங்கு அதிகமாகி விட்டால் மற்ற நல்ல வீரியத் தன்மைகளைக் கொன்று விடுகின்றது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் வெளிப்படுத்துகின்றேன்.

துவாராக யுகத்தில் தீமையின் நிலைகளைத் தெரிந்து கொள்ளப்படும் போது இது போன்ற தீமையின் உணர்வை வென்ற அருள் உணர்வைப் பெற வேண்டும் என்பதற்காகவே உணர்த்துகின்றேன்.

ஏனென்றால் வாழ்க்கையில் வந்த சர்வ தீமைகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து வரும் சக்திகளை நீங்கள் கவரும் வழிக்கு உபதேசித்து…
1.இதையும் சொல்லி அதையும் சொல்லும் போது
2.உங்கள் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலவையாக்கி வரும் போது
3.நீங்களும் அந்த அகஸ்தியன் நீக்கிய நஞ்சை நீக்க முடியும்.

எத்தகைய நோயிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

கலி மாற்றத்தில் மனிதன் சந்திரனில் வாழப் போகின்றானா…! – ஈஸ்வரபட்டர்

கலி மாற்றத்தில் மனிதன் சந்திரனில் வாழப் போகின்றானா…! – ஈஸ்வரபட்டர்

 

கிருஸ்து பிறந்த நாளில் வான மண்டலத்திலிருந்து புதிய நட்சத்திரங்கள் தோன்றி பிரகாசமான ஒளி தந்ததை அன்று வாழ்ந்தவர்கள் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.

வான மண்டலத்தில் தோன்றிய அந்த நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்த நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இந்தப் பூமியின் மேல் எப்படிப் படிந்தது…?

பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்கி இந்தப் பூமியுடன் வந்து சேர்கின்றது.

நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவது தான்.

நட்சத்திர மண்டலத்திற்கும்… பால்வெளி மண்டலத்திற்கும்… நம் பூமியின் சக்திக்கும்…
1.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில்
2.பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாக இருந்திட்டால் இப்பூமியின் பிடிப்புடன்
4.அந்த நட்சத்திர மண்டலத்தை இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ்ஈர்ப்பு சக்தியில் அந்த நட்சத்திர மண்டலம இச்சுழலும் வேகத்தில் பட்டு
6.ஒன்றுக்கொன்று திடமாக உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்த நட்சத்திர மண்டலமே இந்தப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன்
7.”கரைந்த அமிலமாக…” இந்தப் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.

இந்நிலை போல் தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும் பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில்… அதனதன் அமில சக்தியின் தொடர் நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் எல்லாம் அது ஈர்த்து செயல் கொண்ட சக்தி இழந்து… அந்த நட்சத்திர மண்டலத்தின் ஆன்மாவும் பிரிந்து… அதன் சக்தி அமிலம் மற்ற பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாகக் கலந்து விடுகின்றது.

இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம்மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திரங்கள் சுழன்று கொண்டுள்ளன.

இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்… இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும் நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் “சத்துரு மித்திரு நிலையாக இருந்தால்…” இந்த மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாக எரிந்து… அந்த நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.

இந்த வான் மண்டலத்தில் இந்தப் பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை “எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன…”

1.இப்பூமியில் வாழ்ந்து சாதாரண வாழ்க்கையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே
2.இப்பூமியிலிருந்து… இப்பூமியைச் சுற்றிப் படர்ந்துள்ள இந்தக் காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேதான்
3.இந்த அனைத்து ஆத்மாக்களும் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான்… உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.

.மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ இந்தப் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ செல்ல முடியாது.

இந்தப் பூமியில் உயிரணுவாக உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

வான் மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாக மின்னும் சக்திக்குக் கூட இந்தப் பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாக மின்ன முடியாது.

1.ஆனால் இந்தப் பூமியிலேயே பிறப்பில் வந்து இந்தப் பிறப்பின் பயனைப் பெற்று
2.சூட்சம நிலை கொண்ட ஆத்மாக்கள் இன்று நட்சத்திர மண்டலமாக ஒளிர்ந்து வாழ்கின்றன.

இன்று இந்தப் பூமியில் உள்ள நிலை போல மனித ஆத்மாக்களாக வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இந்தப் பூமியைச் சார்ந்த இந்தச் சக மண்டலத்தில் இல்லை என்று உனர்த்தினேன்.

இதுவே இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குள் இந்தப் பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் ஆன்மாக்களே… இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்கள்… வரப் போகும் இந்தக் கலியின் மாற்றத்தினால் இன்று இந்தப் பூமியில் உள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற “சந்திரனில் வாழத்தான் போகின்றான்…!”

இன்று நாம் வாழும் இந்தப் பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சியின் நிலையினால் வரப் போகும் கல்கியின் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகிறது.

நடக்கப் போகும் மாற்றத்தின் அசைவினால்… இந்தப் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.

மனித ஆத்மாக்களினால்… இந்தக் கலியின் கொடுமையினால்…
1.இவ்வியற்கையின் சக்தி கொண்ட இந்தப் பூமியின் ஆத்மாவே
2.இந்த மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத்தான் நம் பூமி சுழலப் போகின்றது.

இந்தப் பூமியில் உதித்த ஆத்மாக்களினால் தான் இந்தக் கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது…!