கலி மாற்றத்தில் மனிதன் சந்திரனில் வாழப் போகின்றானா…! – ஈஸ்வரபட்டர்

கலி மாற்றத்தில் மனிதன் சந்திரனில் வாழப் போகின்றானா…! – ஈஸ்வரபட்டர்

 

கிருஸ்து பிறந்த நாளில் வான மண்டலத்திலிருந்து புதிய நட்சத்திரங்கள் தோன்றி பிரகாசமான ஒளி தந்ததை அன்று வாழ்ந்தவர்கள் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.

வான மண்டலத்தில் தோன்றிய அந்த நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்த நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இந்தப் பூமியின் மேல் எப்படிப் படிந்தது…?

பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்கி இந்தப் பூமியுடன் வந்து சேர்கின்றது.

நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவது தான்.

நட்சத்திர மண்டலத்திற்கும்… பால்வெளி மண்டலத்திற்கும்… நம் பூமியின் சக்திக்கும்…
1.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில்
2.பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாக இருந்திட்டால் இப்பூமியின் பிடிப்புடன்
4.அந்த நட்சத்திர மண்டலத்தை இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ்ஈர்ப்பு சக்தியில் அந்த நட்சத்திர மண்டலம இச்சுழலும் வேகத்தில் பட்டு
6.ஒன்றுக்கொன்று திடமாக உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்த நட்சத்திர மண்டலமே இந்தப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன்
7.”கரைந்த அமிலமாக…” இந்தப் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.

இந்நிலை போல் தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும் பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில்… அதனதன் அமில சக்தியின் தொடர் நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் எல்லாம் அது ஈர்த்து செயல் கொண்ட சக்தி இழந்து… அந்த நட்சத்திர மண்டலத்தின் ஆன்மாவும் பிரிந்து… அதன் சக்தி அமிலம் மற்ற பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாகக் கலந்து விடுகின்றது.

இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம்மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திரங்கள் சுழன்று கொண்டுள்ளன.

இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்… இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும் நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் “சத்துரு மித்திரு நிலையாக இருந்தால்…” இந்த மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாக எரிந்து… அந்த நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.

இந்த வான் மண்டலத்தில் இந்தப் பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை “எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன…”

1.இப்பூமியில் வாழ்ந்து சாதாரண வாழ்க்கையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே
2.இப்பூமியிலிருந்து… இப்பூமியைச் சுற்றிப் படர்ந்துள்ள இந்தக் காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேதான்
3.இந்த அனைத்து ஆத்மாக்களும் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான்… உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.

.மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ இந்தப் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ செல்ல முடியாது.

இந்தப் பூமியில் உயிரணுவாக உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

வான் மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாக மின்னும் சக்திக்குக் கூட இந்தப் பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாக மின்ன முடியாது.

1.ஆனால் இந்தப் பூமியிலேயே பிறப்பில் வந்து இந்தப் பிறப்பின் பயனைப் பெற்று
2.சூட்சம நிலை கொண்ட ஆத்மாக்கள் இன்று நட்சத்திர மண்டலமாக ஒளிர்ந்து வாழ்கின்றன.

இன்று இந்தப் பூமியில் உள்ள நிலை போல மனித ஆத்மாக்களாக வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இந்தப் பூமியைச் சார்ந்த இந்தச் சக மண்டலத்தில் இல்லை என்று உனர்த்தினேன்.

இதுவே இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குள் இந்தப் பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் ஆன்மாக்களே… இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்கள்… வரப் போகும் இந்தக் கலியின் மாற்றத்தினால் இன்று இந்தப் பூமியில் உள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற “சந்திரனில் வாழத்தான் போகின்றான்…!”

இன்று நாம் வாழும் இந்தப் பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சியின் நிலையினால் வரப் போகும் கல்கியின் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகிறது.

நடக்கப் போகும் மாற்றத்தின் அசைவினால்… இந்தப் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.

மனித ஆத்மாக்களினால்… இந்தக் கலியின் கொடுமையினால்…
1.இவ்வியற்கையின் சக்தி கொண்ட இந்தப் பூமியின் ஆத்மாவே
2.இந்த மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத்தான் நம் பூமி சுழலப் போகின்றது.

இந்தப் பூமியில் உதித்த ஆத்மாக்களினால் தான் இந்தக் கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது…!

Leave a Reply