விரதம்

விரதம்

 

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும். காலை ஐந்து ஆறு மணிக்குள் இந்த உணர்வினைப் பெறலாம்.

1.தியான வழியில் அன்பர்களில் சிலரை எடுத்துக் கொண்டால் இந்தக் காலங்களில் தான் (அதிகாலை) ஆன்மா பிரியும்.
2.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் நேரடியாகச் செல்லும் நிலை வரும்.

அங்கே சென்றால் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது. சூரிய ஒளிக்கதிர் உடல் பெறும் உணர்வை அது கவர்ந்து எடுத்துச் செல்கின்றது. உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

1.ஆகவே நாம் பெறுவது அழியா ஒளிச் சரீரமாக இருக்க வேண்டும்.
2.அழியும் இந்த உடல் நமக்கு தேவையில்லை.
3.உயிருடன் ஒன்றி வேகா நிலை அடைதல் வேண்டும்.

அகண்ட அண்டத்தில் உள்ள எந்த நஞ்சும் நம்மை வென்றிடக் கூடாது. அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிட வேண்டும்.

உதாரணமாக ஒரு பாம்பினம் நஞ்சினைப் பிற உயிரினங்களில் பாய்ச்சி அதை உட்கொண்டு தனக்குள் மகிழ்ச்சி ஆகின்றது. அதில் உறைந்த நிலைகள் தான் இங்கே நாகரத்தினமாக மாறுகின்றது. பாம்பிற்குள் உறையும் கல்லாக இருக்கின்றது. இது ஜீவனற்றது.

ஆனால் நமக்குள் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் ஜீவ அணுவாக இருக்க வேண்டும். ஜீவனுள்ளதாக கணவனும் மனைவியும் ஈருயிரும் ஒன்றாகி என்றும் ஒளியின் சுடராக மாறுதல் வேண்டும்.

இதைத்தான் ஏகாந்த நிலை “ஏகாதசி…!” என்று சொல்வார்கள். அந்த ஏகாந்த நிலைகள் நாம் பெற வேண்டும்.

ஆனால் ஏகாதசி அன்று “ஆண்டவனுக்கு விரதம் இருந்து சாப்பிட்டால் ஏகாந்த நிலை பெறலாம்…” என்று இப்படி நம்மை அறிவிலிகளாக மாற்றிவிட்டனர்.

ஏகாந்த நிலைகளில் நாம் எப்படி இருக்க வேண்டும்….? விரதம் என்பது எது…?

யாருடன் எல்லாம் பகைமை கொண்டோமோ அவர்களின் பகைமையை மறந்துவிட்டு
1.நான் பார்த்த குடும்பங்களில் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர் குடும்பங்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ வேண்டும்
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவர்கள் குடும்பங்களில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும்
6.எங்களைப் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று
7.இந்த விரதத்தைத் தான் எடுக்கச் சொன்னார்கள்.

ஏகாதசி அன்று விரதம் இருப்போர்கள் சமையல் செய்து படைப்பார்கள். அன்றைய தினம் சங்கடம் எல்லாவற்றையும் கேட்பார்கள். கேட்டுவிட்டு கடைசியில் இந்த உணர்வின் எண்ணங்கள் கொண்டு சாப்பிட்டால் என்ன நடக்கிறது…?

பசியாக இருந்து சாப்பிட்டாலும் அன்றைக்கு ஜீரணம் சரியாக இருக்காது. அரிசி சாதம் சாப்பிட்டால் கோதுமை சாப்பிடுகிறோம் என்றும் கோதுமை சாப்பிட்டால் அரிசி சாதம் சாப்பிடுகின்றோம் இது ஒரு விரதம். அல்லது வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிடுகிறேன் என்பார்கள்.

விரதம் என்று இப்ப்டிக் குறைத்துக் சாப்பிட்டால் என்ன ஆகின்றது…?

இவர்கள் உடலிலே வேதனை என்ற உணர்வான பின் குடலில் இருக்கும் ஜீரணிக்கும் அணுக்கள் அப்படியே படுத்துவிடும்…! ஏனென்றால் திடீரென்று உணவைப் (நேரம் கழித்து) போட்டவுடன் ஜீரணிக்கும் சக்தி இல்லை.

இரவு ஆனதும் பார்த்தால் நெஞ்சைக் கரிக்கின்றது… மேல் வலிக்கின்றது… என்று இதைத்தான் நாம் பார்க்கின்றோம்.

நம் உடலில் இருக்கும் உறுப்புகள் அது சீராக இயக்க வேண்டுமென்றால் ஏகாந்த நிலைகள் கொண்டு எப்படி இருக்க வேண்டும்…?
1.அனைவரும் நலம் பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் மலரைப் போல் மணம் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வை எப்பொழுது சேர்க்கின்றனரோ
4.அப்பொழுது தான் பகைமை இல்லாது “ஏகாந்த நிலை” அடைகின்றோம்.

நமக்குள் வரும் நோயைத் தடுக்கும் நிலையும் உடல் ஆரோக்கியமும் வருகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும்… அருள் மகரிஷிகளின் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எண்ணினால் ஏகாந்த நிலை. இது தான் உண்மையான ஏகாதசி விரதம்…!

நம் சூரியக் குடும்பத்தில் பூமியின் சுழற்சி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் சூரியக் குடும்பத்தில் பூமியின் சுழற்சி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனைச் சுழன்று தானும் சுழன்று கொண்டே உள்ளது.

நம் சூரியன் சுற்றும் வேகமும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருடம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலையுணர்ந்து இவ் வான சாஸ்திரத்தில் வருடம் நாள் வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.

இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை பகல் இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியை போல் இல்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.

1.உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும்
2.பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது
3.உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பை விட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும்
4.பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்பு பெரியதாகவும் காண்கின்றோம்.

எந்த நிலை கொண்டு…?

உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலையுள்ளது.

ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள் நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில் நாம் உள்ள இடத்தில் சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் நம் பூமிக்கு சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகின்றது.

உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால் நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக் கதிர்களின் வெப்ப நிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டு பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்.

உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம். பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.

1.ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையிலுள்ள சூரியனின் வெப்ப நிலை நமக்குக் குறைந்தும்
2.பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில்
3.வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்…!

எந்நிலை கொண்டு…?

நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என்ற நிலையில் வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாக நிறைந்துள்ளது நம் பூமியின் பொக்கிஷமான கடல்கள்.

கடல்களான அந்நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்திதான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.

1.நம் பூமியின் இவ்வடதுருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான்
2.நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது. நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் நாம் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.

சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களிலிருந்து நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம் வசந்த காலம் இளவேனிற் காலம் குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.

நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர் நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையிலுள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ தென் துருவ நீர் நிலைகளின் மேல் அம் மண்டலங்களிலிருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்கின்றன.

ஒவ்வொரு நொடியும் இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.

1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியே தான்
2.இன்றளவும் இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும்
4.ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.

நுண்ணிய வேலைகளைச் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?

நுண்ணிய வேலைகளைச் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?

 

எதிர்நிலையான நட்சத்திரங்களின் மோதலினால் மின்னல்கள் உருவாகின்றது. மின்னல் பாயும் பொழுது மரத்தின் மேல் பட்டால் மரத்திற்குள் ஊடுருவி அது தன் இனத்தை எடுத்துக் கருகி விடுகின்றது.

மின்னல்கள் நிலத்தில் பட்டால் பூமியின் நடு மையமான நிலைகள் சென்றடைகின்றது. இப்படி அதீதமான நிலைகள் உள் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையமானால் “எந்தப் பகுதியில் ஆகின்றதோ… அங்கு கொதிகலனாக மாறி… பாறைகள் எல்லாம் இளகுகின்றது…”

உள்ளே இருக்கும் பாறைகள் இளகும் போது பூமி வெடிக்கின்றது. மேலிருக்கும் பாறைகள் கீழே இறங்குகின்றது. “நில நடுக்கம்” என்று அடிபாகத்திற்குள் போகின்றது. அதற்குள் அடக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் மின்னல்கள் கடலில் பாய்ந்தால் அந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலுக்குள் படியப்படும்போது மணலாக மாறுகின்றது.

கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… அந்த உப்பின் சத்து மின்னலின் வீரியத்தைத் தணிக்கின்றது.

கடலிலே பாயும் இத்தகைய நிலைகள் எல்லாம் மணலாக மாறி அந்த மின் அணுக்களின் துகள்களாக வரப்படும்போது கடலில் வரக்கூடிய மணல் அத்தகைய ஆற்றல்கள் பெறுகிறது.

இதைத்தான் யுரேனியம் என்று பிரித்தெடுக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாகின்றதோ அதற்குத் தக்க கனிமங்களாக உருவாகிறது.

இந்த மணலின் தன்மையை எடுத்துப் பிரித்து அதை வைத்துத் தான் அணுவைப் பிளக்கின்றனர் விஞ்ஞானிகள்.
1.இந்த அணுவின் தன்மை மற்றொன்றை அடக்கும் போது
2.வரும் அணுவின் தன்மையைப் பிளந்து உணர்வை எடுக்கின்றான்.
3.இதில் சிதைந்த உணர்வின் தன்மையைத் தான் இன்றைக்கு கம்ப்யூட்டரிலும் ஃபோனிலும் (SMART PHONE) உபயோகப்படுத்துகின்றனர்.

அதாவது அந்த உணர்வைப் பாய்ச்சி… ஒளி அதிர்வுகளைக் கண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு (COMMAND)
1.அந்த நுண்ணிய “கதிரியக்கப் பொறிகளை” மாற்றும் போதுதான் கம்ப்யூட்டர் என்னும் நிலைகள் வருகின்றது
2.இப்படி மின் அணுவின் கதிரியக்கங்களுடைய நிலைகள் ஒரு காந்தப் புலனறிவில் கவரப்பட்டு
3.கம்ப்யூட்டரில் – ஒரு காந்தத்தை கவரும் ஒரு உணர்வின் தன்மையைப் பதிவு செய்து… அந்த உணர்வின் அறிவாக ஆன பின்
4.எதிர் ஒலியின் தன்மை மின் அணு போன்ற இந்த உணர்வின் தன்மை தோன்றும்.
5.அந்த உணர்வின் தன்மை எதுவாகின்றதோ மோதும் ஒவ்வொரு உணர்வுக்கொப்ப அதனின் உருவத்தையும் காட்ட முடியும்.

ஆக… ஒவ்வொருவரும் அவரவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகின்றது…? என்ற நிலையும்… ஒரு மனிதன் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்றால் அவர்கள் வம்ச வழியில் வந்தவனின் ரூபங்கள் எப்படி இருக்கின்றது…? என்றும் காணலாம்.

ஒரு உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அந்தக் கம்ப்யூட்டர் எதிர் நிலைகளை (0 1) எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது.

“ஆயிரம் மடங்கு” அதைக் கூட்டுகின்றான். மீண்டும் அந்த உணர்வின் எதிர் ஒலிகள் வரப்படும்போது… வாழ்ந்த உணர்வை… பூமியில் பதிந்ததை எடுத்து… மனித ரூபத்தைக் கொடுக்கின்றது.

இன்று விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

அதைப் போலத் தான் அன்று வாழ்ந்த மெய் ஞானியின் உணர்வை நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாக்கப்படும் போது
2.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து (நுகரப்பட்டு)
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் ஒளியாக முடியும்.

சில பேர் என்ன சொல்வார்கள்…? விஞ்ஞஞான அறிவு எங்கேயோ போகின்றது… சாமி (ஞானகுரு) எங்கேயோ மூலையில் இருக்கிறார் என்று…!

ஏனென்றால் விஞ்ஞானத்தின் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? என்று குருநாதர் எல்லாவற்றையும் காட்டினார்.

1.இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கத்தை எப்படி…? என்று
2.கற்றுணர்ந்த பின் தான் அதை உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

காலம் வரும் போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப இதை நுகரும் போது… அந்தந்த உணர்ச்சிகள் அது கவரப்பட்டு உங்களுக்குள் பதிவு செய்யும் நிலையாக இது வரும்.

1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு விதமாக இருக்கும்.
2.அந்த உணர்வின் வளர்ச்சிக்கு நீங்கள் வரப்படும்போது
3.இந்த இயற்கையின் தன்மை… உங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

இந்த உடலிலே எத்தனை காலம் நாம் வாழப் போகின்றோம்…? நம் உடல் சதமற்றது…!
1.ஆனால் என்றைக்கும் நிலையானது உயிர்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக்கப்பட வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைய வேண்டும். பிறவியில்லா நிலை அடையச் செய்யும் அந்த அருள் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிப்பதற்குத் தான் இது போன்ற உபதேசங்கள்.

“நம்முள் ஈசனே குடி கொண்டுள்ளான்…” என்று உணர்ந்து அவன் வழியில் நாம் வாழ்ந்திட வேண்டும்

“நம்முள் ஈசனே குடி கொண்டுள்ளான்…” என்று உணர்ந்து அவன் வழியில் நாம் வாழ்ந்திட வேண்டும்

 

பாம்பின் விஷத்தையும் போக்கி விடலாம் மற்றத் தீய சக்திகளையும் நம்முள் அண்டவிடாமல் போக்கி விடலாம்.
1.ஆனால் நம்முள்ளே நாம் ஏற்றிக் கொண்ட இவ்வெண்ணத்தின் சுமையை
2.ஒரு நிலைப்படுத்தி ஜெபம் பெறுவதுதான் நம் சக்திக்கும் மேம்பட்ட சக்தி.

இவ்வுலகச் சூழ்ச்சியிலிருந்தும் மற்றவர்களின் நிலையின் தாக்குதலிலிருந்தும் இன்றுள்ள இவ்விஷமான இவ்வுலக நிலையிலிருந்து மீண்டு செயல் கொள்ளுவது மிகவும் கடினம்…!

ஆத்மீக நெறியின் வழிமுறைக்கு நம் வழி அமைந்த பிறகு…
1.நாமே தான் நமக்குகந்த நெறி முறையை அமைத்துக் கொண்டு செயல்படல் வேண்டும்
2.அச்செயல் வழியில்தான் நம் சக்தி நிலையே கூடி வழி வந்திடும்.

இந்நிலையின் தொடர் நிலை வந்த பிறகு பிறரின் எண்ண நிலையை நம்முடன் மோதவிட்டு ஆத்மீக நெறி முறையில் செல்லுவதும் அழகல்ல. “போற்றலும் தூற்றலும்…” ஒரு நிலை போன்ற சம நெறியின் வழியாக்கிடல் வேண்டும்.

இவ்வெண்ணத் தொடரின் வழி பெற்ற பிறகு ஞானத்தின் சக்தி நிலை கூடும் நிலையில் நம் உடலில் உள்ள முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளும் செயலற்றதாய் நற்சக்திகளின் நிலை வளர்ந்து கொண்டே வரும்.

இந்த நிலையின் வழித் தொடரில் வந்த பிறகு..
1.வாழ்க்கையுடன் உள்ள நம் நிலையில் ஏற்படும் சிக்கலை நம் எண்ணத்தில் ஏற்றிக் கொண்டு
2.அந்தக் கவலையை வளரவிடும் பொழுது நம் உடலில் உள்ள தீய சக்திகளுக்கு நாம் உரம் இட்ட நிலை போல் வளர்ந்து விடும்.

நற்சக்தியின் நிலை கூடுவதற்குப் பல காலம் ஜெபம் பெற்று ஞானத் தொடரை வழிபெற்ற பிறகு ஒரு சில நொடியில் இவ்வெண்ண மோதலினால் அதை விரையப்படுத்தலாகாது.
1.பக்திமானாக சக்திமானாக ஆண்டவனின் சக்தியில் ஒளிர
2.ஒரு நாளில் இரண்டு நாளில் அந்த ஞானத் தொடரும் சக்தி தொடரும் வந்திடாது.

உயிரணுவாய்… உயிராத்மாவாகப் பிறப்பெடுத்து… நாம் நம் உடலுடன் சேமிக்கும் அமில சக்தி அனைத்தையுமே நற்சக்தியாகக் கலந்து ஒளி பெறும் நிலையில் தான் நம் நிலையும் உயர்ந்திடும்.

இவ்வாத்மீக நெறிக்கு வழி பெற்றிட…
1.தீய சக்திக்கு நாம் அடி பணியாமல் நம்முள் தீய சக்தியை அகற்றினால் அன்றி
2.நூறாண்டு காலமல்ல நூறு கோடி ஆண்டானாலும் நம் ஆத்மாவை
3.ஆண்டவனின் சக்தியின் சக்தியாய் ஒளிரச் செய்வது கடினமே.

சொத்தும் சுகமும் அல்ல சக்தியின் செல்வம். இது போன்ற அல்ப ஆசைகளை நம் எண்ணத்தில் துறக்கும் நிலை பெற வேண்டும்.

துறவியாய் ஆண்டிக் கோலம் பூண்டு செல்லும் துறவறம் அல்ல…!

1.ஒன்றை எண்ணிய நிலையில் “அடைந்தே தீருவோம்…!” என்ற பேராசையின் பிடியில் சிக்கிடாமல்
2.வாழ்க்கைக்குகந்த அன்புச் செல்வங்களைத் தன்னிறைவு பெற ஆசையுடன் செயல் கொள்ளுங்கள்.

உண்ணும் எவ்வுணவையும் அமுதமாக உண்டிடும் பக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள். உண்ணும் உணவே ஒவ்வோர் உடலையும் எண்ண நிலைக்கொப்ப அமில சக்தியின் சேமிப்பையும் நம் உடல் பெறுகின்றது.

எண்ணத்தையே அமுதாக்கி உண்டிடுங்கள். எவ்வுணவை உண்டாலும் அமிர்தமாய்… நம் உடலில் செயல் கொள்ளும் வழி முறையும் செயல் நிலையும் நாமாய் வழி வகுத்துத்தான் நம் ஆத்மா செயல் கொண்டிடும்.

நாம் வாழ்ந்திடும் இனி வரப்போகும் ஒவ்வொரு நொடியையுமே இவ்வழித் தொடரின் ஜெப சக்தியை வளரவிட்டே நம்முள் நம் ஆத்மாவாய் நம் ஈஸ்வரனே குடிகொண்டுள்ளான் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாம் எடுத்திடும்… நாம் விட்டிடும்.. சுவாசமே
1.அவ் ஈஸ்வரனின் ஜெபத்துடனே ஓ…ம் ஈஸ்வரா…! என்ற நிலையிலேயே
2.எந்நிலையில் எச்செயலில் இருந்திட்டாலும்
3.நம் எண்ண ஜெபம் முழுவதுமே அவ் ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்
4.மற்றத் தீய சக்தியின் நிலை நம்மை எப்படித் தாக்கும்…?

ஏனென்றால் நம்மை அத் தீய சக்தியில் இருந்து காக்கத்தான் அவ் ஈசனே ஜெபம் கொண்டு நம்முள் உள்ளானே…!

1.நம் ஆத்மாவே ஈசன் தான்… ஈசனின் சக்தியில்லாமல் எச்சக்தியுமில்லை.
2.ஈசனே குடி கொண்டு உள்ள நம் ஆலய ஆத்மா கொண்ட நம் உடலை
3.ஈசனின் சக்தியாய் வாழ்ந்திடும் நெறி முறையின் வழித்தொடர் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…!

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…!

 

நம்மைத் திட்டியவரை நினைத்தால் நாம் கணக்குகள் பார்த்துக் கொண்டிருந்தால் அது தப்பாகும். வேறு எந்த வேலை செய்தாலும் நம்மால் அதைச் சீராகச் செய்ய முடியாது.

அந்தத் திட்டியவனை எண்ணி… நமக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று அவனை எண்ணும் போது அவனுக்குள்ளும் இது சென்று அவன் காரியங்களுக்கும் இடைஞ்சலாகும்.

அதே போல் ஒரு வேதனைப்படுவோரை நாம் நுகர்ந்தால் அது ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது. நமக்கும் அதே வேதனை வருகிறது.

ஆனால் இது போன்ற தீய வினைகளை எல்லாம் வேக வைத்து விட்டால் முளைக்காது.

பண்புடன் பரிவுடன் தான் அந்த வேதனைப்படுவோரிடம் கேட்டறிகின்றோம். அவனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்கின்றோம்.

ஆனால் உதவி செய்தாலும்… ஈஸ்வரா… என்று உயிரை வேண்டி நம் நினைவுகள் அனைத்தும் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இவ்வாறு புருவ மத்தியில் தடைப்படுத்திய பின்
2.அந்த வேதனைப்பட்ட உணர்வு நமக்குள் புகாது தடைப்படுகின்றது.

அங்கே நிறுத்திய பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது…
1.அந்த வேதனை உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி
2.துருவ நட்சத்த்திரத்தின் உணர்வு வலு பெற்ற பின் தடுக்கப்படுகின்றது.
3.அப்பொழுது நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வேதனைப்படுவோர் உடல் முழுவதும் படர வேண்டும். அந்த வேதனையிலிருந்து அவர் மீண்டு சிந்தித்துச் செயல்படும் திறன் பெற்று பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வை நாம் எண்ணி அதை அவர் மேல் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது அவர் உடலில் உள்ள வேதனைகளை மாற்றிட இந்த உணர்வை எடுத்துக் கொண்டால் பரவாயில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தியால் “நீ உடல் நலம் பெறுவாய்…!” என்று நாம் சொல்லும் உணர்வுகள்
1.அவர் செவிகளில் மோதி அந்த உணர்வுகள் அங்கே பாயும் போது சிறிதளவாவது பாயும்.
2.அதே சமயத்தில் அவரின் வேதனையான உணர்வுகளை நமக்குள் வராதபடி தடுத்து விடுகின்றோம்.

துருவ நட்சத்திரம் என்பதை “சுக்ரீவன்” என்று காரணப் பெயர் வைத்துள்ளனர்.

பல கோடிச் சரீரங்களைக் கடந்த அகஸ்தியன்… கணவன் மனைவி என்று இரு உணர்வுகளையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சுக்ரீவன்.

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…! ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்த பின் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற ஏங்கினால் அந்தத் தீயது உடலுக்குள் போகாதபடி தடுக்கின்றது.

அந்த உணர்வின் தன்மை நம் உடலில் பெருக்கிய பின் அந்தத் தீமை என்ற உணர்வுகளைத் தள்ளிவிடுகின்றது. நாம் உடல் நலம் மன நலம் பெறுகின்றோம். மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெறுகின்றோம்.

யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டுமென்று யாரும் விரும்பவும் இல்லை…! விளக்கம்

யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டுமென்று யாரும் விரும்பவும் இல்லை…! விளக்கம்

 

நீங்கள் ஒரு குழம்பை வைக்கப் போகும்போது சமமாக நிலைகள் கொண்டு சுவையாக சமைத்து விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே சந்தர்ப்பவசத்தால் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் உணவாக உட்கொள்ளும் அனைவருமே மயக்க நிலை பெற்று சிந்தனை இழந்து விடுகின்றார்கள்.

அதே சமயம் ஞாபகக் குறைவாக சிறிதளவு மிளகாய்த் தூளை அதிகமாகச் சேர்த்து விட்டால் சாப்பிடும்போது வாயில் காரம் அதிகமாகின்றது. அதிலே உணவு உட்கொள்வது கணவராக இருந்தால் “குழம்பு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்…!” என்று கோபமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் நாம் நன்றாகத் தானே வைத்துள்ளோம்… என்ற எண்ணத்தால் “சந்தர்ப்பத்தால் நாம் ஒரு மிளகாய் அதிகமாகச் சேர்த்தோமா…! என்ற நினைவு இருக்காது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும்…!

அப்பொழுது கணவன் இவ்வாறு கோபமாகப் பேசிவிட்டாரே…! என்ற அந்த வேதனை வரும்போது…
1.விஷத்தை ஒரு துளி நுகர்ந்து விட்டால் நம் சிந்தனை குலைந்து விடுவது போன்று
2.சிந்தித்து பதில் சொல்வதை விட்டுக் கண்ணை கசக்க அழுகத் தொடங்கிவிடுவோம்.

நான் இப்பொழுது என்ன செய்தேன்…? இப்பொழுது என்னைக் கணவர் இப்படிக் கோபித்துப் பேசுகின்றார்…! நான் நன்றாகத் தான் குழம்பை வைத்துள்ளேன்…! என்று எண்ணுவார் மனைவி.

கணவரோ… நான் என்ன செய்து விட்டேன்…? என்று நீ கண்ணைக் கசக்குகின்றாய்…! என்று சொன்னால் போதும்.

மீண்டும் அந்த உணர்வின் தன்மை விளையச் செய்து இங்கே காரத்தின் உணர்வுகள் மனைவிக்குள் அதிகமாகும்.

ஏனென்றால் இந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகள் இங்கே இருக்கப்படும்போது அதே உணர்வுகள் தூண்டப்பட்டு எதைச் சொன்னாலும் இப்படித் தான் அழுகும் என்ற நிலைகள் வரும்.
1.கணவரைப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்ச்சிகள் அந்த மனைவிக்கு ஏற்பட்டுவிடுகின்றது.
2.இங்கே மனைவியைப் பார்க்கும்போது கோபத்தின் தன்மை கணவனுக்கு வந்துவிடுகின்றது.

மாமியாருக்கோ… நம் பிள்ளை சொல்கின்றான் ஆனால் பார்..! எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள். இப்பொழுது வர…வர… வர..வர… மருமகளுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது என்று அதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்…!

இப்பொழுது என்ன சொன்னோம்…? என்று நீ அழுது கொண்டிருக்கின்றாய். இப்படியே அழுது கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆகும்…? என்று கேட்கத் தொடங்குவார்கள்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகளை (அவரவருக்குத் தக்க) நமது உயிர் நம்மை இயக்கிக் காட்டுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் இயக்கி
1.இந்த உணர்வுகளை உயிர் உணர்த்துகின்றது… உணரச் செய்கின்றது.
2.உணர்ந்ததை ஜீவனாக்குகின்றது… ஜீவ அணுவாக மாற்றுகின்றது
3.நம் உடலாக மாற்றிவிடுகின்றது உயிர்…!

“நான்…!” என்று நிலைப்பட்டால் வளர்ச்சியே இருக்காது – ஈஸ்வரபட்டர்

“நான்…!” என்று நிலைப்பட்டால் வளர்ச்சியே இருக்காது – ஈஸ்வரபட்டர்

 

இன்றளவும் நம்மில் தோன்றி சப்தரிஷி நிலை கொண்ட ஒவ்வொரு ஜோதிகளும்…
1.தனக்கு மேல் உள்ள உயர்ந்த சக்தியான இயற்கையின் ஆதி சக்தியையே ஜெபப்படுத்தி
2.நான் என்ற நிலைப்படாமல் மென்மேலும் அவ் இயற்கை ஜெபத்துடன் தான் செயலாற்றுகின்றார்கள்.

அனைவருக்கும் முருகனாய் ஜெபப்படுத்தி வணங்கிடும் அப்போகநாதரும் இன்றளவும் ஜெபத்தின் மூலம் சக்தியைப் பெருக்கி வளர்த்துக் கொண்டுள்ளார்.

பழனியில் உள்ள முருக ஸ்தலமே… அம் முருகரின் சிலையே அவர் ஜெபிக்கும் ஜெபத்தை ஈர்த்து… அருள் சக்தியை வளர்த்துக் கொண்டே அருள் புரிகின்றது.

இவ்வுலகில் வளர்ந்த கனி வளங்களை இப்பூமியிலிருந்து பிரித்த பிறகு ஜீவனற்றுப் போகின்றது என்று இதற்கு முன் உணர்த்தியுள்ளோம்.

ஆனால் போகர் ஸ்தாபிதம் செய்த அம்முருகரின் சிலைக்கு அப்போகர் ஜெபித்த ஜெபத்தினால் “அம்முருகரின் சிலையே… ஜீவன் கொண்ட நிலையில்… அந்த மலையில் ஐக்கியப்பட்டு விட்டது…”

ரிஷிகளும் சப்தரிஷிகளும் அவர்களின் நிலையினால் நட்ட கல்லையும் ஜீவன் கொண்டிட முடிந்திடும்.

சப்தரிஷியின் நிலை என்பது…
1.எந்த அண்டத்தையும் எந்தப் பிண்டத்தையும் சுழலிலிருந்து நிறுத்திடவும் முடியும்
2.பிண்டத்தையே அண்டமாக்கிச் செயல்படுத்திடவும் முடியும்.
3.அனைத்து உலக சக்தியையுமே செயலாக்கிடும் நிலை கொண்டுதான் அவர்கள் செயல் புரிகின்றனர்.

உயிரணுவாய் உயிராத்மாவாய் வளர்ச்சி கொண்டவர்களே சப்தரிஷியாய் சகலத்தையும் அறிந்திடும் சக்தி கொண்ட நிலையிலும்
1.இயற்கையின் சக்தியை பூஜித்தே
2.அவ் ஆதி சக்தியின் சக்திக்கு அடிபணிந்தே செயலாக்குகின்றனர்.

ஆகவே வாழ்ந்திடும் இக்குறுகிய கால வாழ்க்கையை…
1.ஞானத்தொடர் வழியை செயல்படுத்திடும் வழிக்கு ஒவ்வொருவரும் வந்து
2.நம் சக்திக்கும் அனைத்து சக்தியையும் ஈர்க்கும் சக்தியுண்டு…! என்ற
3.ஒரு நிலை கொண்ட எண்ண நிலை கொண்ட வழித்தொடர் பெற்றிடுங்கள்.

சப்தரிஷிகளின் வழித் தொடரில் ஐக்கியமாகுங்கள்…!

விஞ்ஞான அறிவால் பேரழிவை நோக்கி இருக்கும் காலம் இன்றையது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…!

விஞ்ஞான அறிவால் பேரழிவை நோக்கி இருக்கும் காலம் இன்றையது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…!

 

உலக ரீதியில் எடுத்துக் கொண்டால் அன்று எப்படி பிரிட்டிஷ் ஆட்சி செய்து கொண்டிருக்கும்போது அவன் கடுமையான ஆயுதங்கள் கொண்டு உலகை அடக்கிவிட வேண்டும்…! என்றும் அவன் எண்ணினான்.

ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் கிளர்ந்து எழும்போது அதிலிருந்து அவனால் மீட்க முடியவில்லை. பின் தன் பிடிப்பில் இருந்து உலகம் அனைத்தையும் விடுவித்தான் பிரிட்டன்.

ஆனால் அதே சமயம் அணு ஆயுதங்களை எல்லாம் இன்று பெருகிக்கொண்டு ஐக்கிய நாடு சபை என்ற நிலைகள் ஒன்றைத் தன் அடிப்படை திட்டமாக அமைத்துக் கொண்டு
1.தன் உளவாளிகளின் தன்மை கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் ஊடுருவி
2.இவன் கண்டுபிடுத்த நஞ்சின் தன்மைகளைத் தூவி
3.அதனின் நிலைகள் கொண்டு மனிதனை மிருகமாக்கும் நிலைகள் கொண்டு
4.மதம் இனம் பேதம் என்ற நிலைகளில் தூண்டிவிட்டு… மனிதனைச் செயலிழக்கும் நிலைகள் செய்துவிட்டு
5.நானே தான் உலகிற்கு ராஜா…! என்று இன்று அமெரிக்காவின் செயல்கள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் நம் இந்தியாவின் எல்லைகளில் அசுர குணங்கள் கொண்டு தாக்குபவனை அந்த அசுரனை முழுமையாக அழிக்கச் செல்ல முடியவில்லை.

சாதாரண மக்களை அழித்துக் கொண்டிருக்கும் அந்தத் தீய நிலைகளை சட்டப்பிரகாரம் அவனை அடக்கி அவன் செயலில் இருந்து மீட்டி நற்குணங்களை ஊட்ட வேண்டுமென்று அரசு முயற்சி செய்தாலும்… அவனைக் கைது செய்து அவனுடைய அறிவீனத்திலிருந்து தெளிந்த உணர்வு வர வேண்டும் என்று செய்தாலும்… இதை அங்கிருந்தே கொக்கரித்து கொண்டிருக்கின்றான் அமெரிக்கா…!

மனிதாபிமானம் அற்ற நிலையில் நீ அவனுக்குத் (அசுரனுக்கு) தீமை செய்கின்றாய் என்ற நிலையில்… அங்கிருந்து “நீ மனிதாபிமானம் அற்றவன்…” என்று இந்தியச் சர்க்காரைப் பழி சுமத்தும் நிலைகள் வருகின்றது.

எல்லைப்புறங்களில் எல்லாம் இன்றைய நிலைகளில் பல சாதாரண பொது மக்களை அவன் கொன்று குவிக்கின்றான். இரக்கமற்ற செயல்களை செய்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அவனைத் தட்டிக் கேட்டு அந்தத் தீயவனை ஒடுக்க இடமில்லாது அவன் நேரடியாக அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கின்றான்.

1.அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசும் நிலைகள் கொண்டு
2.தன் உளவாளிகளைக் கொண்டு அவன் எந்த மதத்தை உருவாக்கினானோ
3.அந்த மதத்தின் அடிப்படை கொண்டு இன்றும் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்து
4.நஞ்சினைத் தூவித் தன் இனத்தை பெருக்கும் நிலைகளை இன்று நிலைகள் போய் கொண்டிருக்கின்றது.

தத்துவ ஞானிகள் காட்டிய உண்மையின் நிலைகள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த உலக நிலைகள் கொண்டு
1.மதம் நமக்குச் சொந்தமல்ல…
2.அருள் ஞானியின் உணர்வே நமக்குச் சொந்தம் என்ற நிலைகளில் நாம் அந்த அருளை எடுத்துப் பழக வேண்டும்.

குறுகிய காலத்தில் தீமைகளில் இருந்து மீள வேண்டுமென்றால் சகோதர உணர்வுகளை நாம் வளர்த்தே ஆக வேண்டும். குறைகளை அகற்றும் நிலைகள் வர வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டாலும் விண்ணை நோக்கி நாம் ஏகி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டுமென்றும்
2.தீமைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டுமென்றும்
3.ஒருவருக்கொருவர் இந்த அருள் வழியில் நேசித்து கொண்டால்தான்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியை நாம் பெற முடியும்.

எந்த விஷத் தன்மை வந்தாலும் தப்ப முடியும்…!

நற்குணத்திலும் நற்பண்பிலும் உள்ளோரைப் பார்த்து அந்தப் பாக்கியம் பெற நாம் ஏங்கினாலே அவர்களின் நற்சக்தி நம் ஆன்மாவிலும் பெருகும் – ஈஸ்வரபட்டர்

நற்குணத்திலும் நற்பண்பிலும் உள்ளோரைப் பார்த்து அந்தப் பாக்கியம் பெற நாம் ஏங்கினாலே அவர்களின் நற்சக்தி நம் ஆன்மாவிலும் பெருகும் – ஈஸ்வரபட்டர்

 

நல்லோருடனே பழகியும்… நற்பயன் கொண்ட காரியத்தைச் செய்தும்… பக்திமானாய் அன்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்தும்… இவ்வாழ்ந்திடும் வழித்தொடரில் நம்மைக் காட்டிலும் நம் வழித்தொடர் பெறாமல்… இருக்கும் பிறரின் வாழ்க்கை நிலை நெறி முறைகளை ஒப்பிடக்கூடாது.

நம்முடன் ஒட்டாமல்…
1.சத்துரு மித்திரு கொண்டவரின் தீய சக்தியின் பிடியில் சிக்கி
2.அப்பழக்கத்திற்கு அடிமை கொண்டவரின் நிலையையும் நம் உயர்ந்த நிலையையும் ஒப்பிட்டு
3.நம் நிலையின் பெருமையை நாம் எண்ணினாலே
4.“நான்…” என்ற நிலையினால் நாம் வளர்ந்த இந்நற்சக்திகள் கரைபடுகின்றது.

அதே சமயத்தில் பல தீய வழிகளில் அடிமை கொண்டோர்… அந்நிலையிலிருந்து மீள வழியில்லாதோர்…
1.அந்தத் தீய நிலையில் உள்ளவரின் எண்ணம்… “அன்புபடுத்தி பக்திப்படுத்தி இருக்கும் நல்லுணர்வு கொண்டோரை எண்ணி…”
2.இந்த நல்லவர்களைப் போல் நமக்கும் அப்பாக்கிய வழி சென்றிடும் வழித் தொடர் இல்லாமல் இந்நிலையில் உள்ளோமே…! என்ற எண்ணத்திலேயே
3.அவர்களின் ஆத்மாவில் நற்சக்தி பெற்றோரை எண்ணத்தில் ஈர்த்த சக்தி கூடி வலுப்பெறுகின்றது… தீமையின் பிடியில் சிக்கியுள்ள அவ்வாத்மாக்களுக்குமே…!

இன்றைய நம் வாழ்க்கையில் நம் நினைவுடன் கலந்திடும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அவற்றுக்குண்டான சக்தி நிலை நம்முள் சேமிக்கப்படுகின்றது.

இவற்றை உணர்ந்திடாமல்…
1.வாழ்ந்தோம்…! என்ற நிலை கொண்ட சாதாரண நிலையில் வாழ்ந்து
2.மனித ஆத்மா கொண்ட உடலைப் பெற்று வாழ்ந்திடும் இந்த நல்ல பாக்கியத்தைச் சிதற விடாதீர்கள்.

நம் குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் நல்லாசி நமக்கு மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

நம் குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் நல்லாசி நமக்கு மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

 

உடலை விட்டு ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவ பதவி அடைந்து விட்டார்… தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார்…! என்றெல்லாம் சொல்கிறார்கள்.

1.இது எல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகு நம்முடன் வாழ்ந்தவர்கள் நமக்களிக்கும் பதவி தானே தவிர
2.எப்பதவியும் அந்தச் சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி உலகில் அல்லல்படும் நிலை மிக மிகக் கொடிய நிலை (இது மிகவும் முக்கியமானது).

நல் ஆத்மாவாய்… நற்செயலைச் செய்வித்து… நல்லுணர்வு கொண்டு… அமைதி கொண்டு… இவ் உலக வாழ்க்கையில் உள்ள பற்று பாசம் ஆசை அனைத்து நிலைகளையுமே வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்படைந்து…
1.சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப்போல் எண்ணாமல்
2.அமைதியுடனே இவ்வுலக பற்றற்றுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களினால் தான்
3.ஆண்டவனாக அக்குடும்பத்தின் தெய்வமாகவும் தான் வாழ்ந்த குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.

குடும்பத்தில் உள்ளோரும் அந்தக் குடும்பத்தில் வாழ்ந்திடும் பெரியோர்களை அன்புடன் வணங்கும் போது
1.அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக் காப்பார்.
2.அவ்வழியின் தொடர்தான்… குடும்பத் தொடராக… பெரியோரை தாய் தந்தையரை…
3.பக்தி கொண்டு வணங்கிடும் பக்குவ நிலை என்பதனை உணர்ந்து
5.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த் திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.

பல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்து பக்தியை வளர்த்து… வணங்கி வேண்டும் முறையைக் காட்டிலும்… நம் இல்லக் கோயிலை அன்பு கொண்டதாய்… இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய்… இல்லத்தில் உள்ளோர் அனைவரின் எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.

1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும் தெளிவு பெறும் பக்குவத்தில்
2.ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.
3.செல்வமும் செழிப்பும் தானாக வளரும்.