யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டுமென்று யாரும் விரும்பவும் இல்லை…! விளக்கம்

யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டுமென்று யாரும் விரும்பவும் இல்லை…! விளக்கம்

 

நீங்கள் ஒரு குழம்பை வைக்கப் போகும்போது சமமாக நிலைகள் கொண்டு சுவையாக சமைத்து விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே சந்தர்ப்பவசத்தால் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் உணவாக உட்கொள்ளும் அனைவருமே மயக்க நிலை பெற்று சிந்தனை இழந்து விடுகின்றார்கள்.

அதே சமயம் ஞாபகக் குறைவாக சிறிதளவு மிளகாய்த் தூளை அதிகமாகச் சேர்த்து விட்டால் சாப்பிடும்போது வாயில் காரம் அதிகமாகின்றது. அதிலே உணவு உட்கொள்வது கணவராக இருந்தால் “குழம்பு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்…!” என்று கோபமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் நாம் நன்றாகத் தானே வைத்துள்ளோம்… என்ற எண்ணத்தால் “சந்தர்ப்பத்தால் நாம் ஒரு மிளகாய் அதிகமாகச் சேர்த்தோமா…! என்ற நினைவு இருக்காது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும்…!

அப்பொழுது கணவன் இவ்வாறு கோபமாகப் பேசிவிட்டாரே…! என்ற அந்த வேதனை வரும்போது…
1.விஷத்தை ஒரு துளி நுகர்ந்து விட்டால் நம் சிந்தனை குலைந்து விடுவது போன்று
2.சிந்தித்து பதில் சொல்வதை விட்டுக் கண்ணை கசக்க அழுகத் தொடங்கிவிடுவோம்.

நான் இப்பொழுது என்ன செய்தேன்…? இப்பொழுது என்னைக் கணவர் இப்படிக் கோபித்துப் பேசுகின்றார்…! நான் நன்றாகத் தான் குழம்பை வைத்துள்ளேன்…! என்று எண்ணுவார் மனைவி.

கணவரோ… நான் என்ன செய்து விட்டேன்…? என்று நீ கண்ணைக் கசக்குகின்றாய்…! என்று சொன்னால் போதும்.

மீண்டும் அந்த உணர்வின் தன்மை விளையச் செய்து இங்கே காரத்தின் உணர்வுகள் மனைவிக்குள் அதிகமாகும்.

ஏனென்றால் இந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகள் இங்கே இருக்கப்படும்போது அதே உணர்வுகள் தூண்டப்பட்டு எதைச் சொன்னாலும் இப்படித் தான் அழுகும் என்ற நிலைகள் வரும்.
1.கணவரைப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்ச்சிகள் அந்த மனைவிக்கு ஏற்பட்டுவிடுகின்றது.
2.இங்கே மனைவியைப் பார்க்கும்போது கோபத்தின் தன்மை கணவனுக்கு வந்துவிடுகின்றது.

மாமியாருக்கோ… நம் பிள்ளை சொல்கின்றான் ஆனால் பார்..! எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள். இப்பொழுது வர…வர… வர..வர… மருமகளுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது என்று அதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்…!

இப்பொழுது என்ன சொன்னோம்…? என்று நீ அழுது கொண்டிருக்கின்றாய். இப்படியே அழுது கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆகும்…? என்று கேட்கத் தொடங்குவார்கள்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகளை (அவரவருக்குத் தக்க) நமது உயிர் நம்மை இயக்கிக் காட்டுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் இயக்கி
1.இந்த உணர்வுகளை உயிர் உணர்த்துகின்றது… உணரச் செய்கின்றது.
2.உணர்ந்ததை ஜீவனாக்குகின்றது… ஜீவ அணுவாக மாற்றுகின்றது
3.நம் உடலாக மாற்றிவிடுகின்றது உயிர்…!

Leave a Reply